• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை!

Recommended Posts

ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை!

 

ஆப்பிள் நிறுவனம்

கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர்.

FACE TIME in APPLE MOBILE

இது நடந்தது அமெரிக்காவில். டெக்ஸாஸ் நெடுஞ்சாலையில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் தனது டொயோட்டா கேம்ரி செடான் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் ஜேம்ஸ். அப்போது, போலீஸ் சோதனைக்காக கேம்ரியை நிறுத்த சைகை காட்டினார்கள் காவல்துறை அதிகாரிகள். பேரிகாடைத் தாண்டி மெதுவாக காரை நிறுத்தி ஜேம்ஸ் இறங்க முற்படுகையில், தடாலென பின் பக்கம் வெடிகுண்டு வெடித்ததுபோல் சத்தம். பின்னால் அதிவேகத்தில் வந்த எஸ்யூவி வாகனம் ஒன்று, நேராக ஜேம்ஸ் காரின் பின் பக்கம் மோத... க்ஷண நேரத்தில் கேம்ரி நசுங்கிப் போனது. இதில் முன்னால் அமர்ந்திருந்த ஜேம்ஸும் அவரது மனைவியும் இன்னொரு மகளும் லேசான காயங்களுடன் தப்பித்து காரில் இருந்து இறங்கி விட்டார்கள். ‘இடது பக்கம் சைல்டு சீட்டில் உட்கார்ந்திருந்த 5 வயது மோரியா எங்கே?’ என்று தேடும்போதுதான், பார்க்கக் கூடாத அந்தக் கொடூரத்தைப் பார்த்தனர் அந்தப் பெற்றோர்!

ஆப்பிள் ஐ போன்  பயன்படுத்தியதால் கார் விபத்து.

105 கி.மீ வேகத்தில் பின்னால் இருந்து வந்த எஸ்யூவி மோதியதில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார் 5 வயது மோரியா. ‘டிரங்க் அண்ட் டிரைவா... பிரேக் ஃபெய்லியரா’ என்று போலீஸார் சோதனையிட்டபோதுதான் தெரிந்தது - பின்னாலிருந்து மோதிய டிரைவர் ஆப்பிள் ஐபோனின் ‘ஃபேஸ்டைம்’ எனும் ஆப் பயன்படுத்தி இருக்கிறார். ‘ஃபேஸ்டைம்’ என்பது ஸ்கைப், கூகுள் அலோ போன்ற வீடியோ சாட்கள் போல பிரபலமான வீடியோ மற்றும் ஆடியோ சாட். ஃபேஸ்டைமில் யாருடனோ வீடியோ சாட் செய்து கொண்டே வந்த டிரைவர், கவனக்குறைவாக ஜேம்ஸின் காரில் மோதியதுதான் விபரீதமானது.

MORIA

விபத்து ஏற்படுத்திய டிரைவர் கேர்ரெட் வில்ஹெல்ம் என்பவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டாலும், பிரச்னை இப்போது ஆப்பிள் மேல் திரும்பியிருக்கிறது. மொபைல் இன்டர்ஃபேஸ் கொண்ட சில கார்களில், வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் GPS தவிர, பாடல், வீடியோ போன்ற ஆப்ஷன்களைக் கொண்ட டச் ஸ்க்ரீன் ஆஃப் பொசிஷனில் பிளாங்க் ஆகிவிடும். ‘‘ஆனால் ஆப்பிள் போன்ற மிகப் பெரிய கேட்ஜெட் நிறுவனங்கள் இதை எவ்வாறு அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை? கார் ஓட்டும்போது வீடியோ சாட் வேலை செய்யக்கூடாது என்ற எந்த அறிவிப்பு கொண்ட சாஃப்ட்வேரும் இதில் இன்ஸ்டால் செய்யப்படவில்லை. அதிலும் பின்னால் வந்த எஸ்யூவி 105 கி.மீ வேகத்தில் வரும்போதும், ஒருவர் வீடியோ சாட் செய்யலாம் என்கிறதா ஆப்பிள்? அதிக வேகங்களில் ஃபேஸ்டைம் வீடியோ சாட் தானாக லாக்-அவுட் ஆகியிருக்க வேண்டும். அட்லீஸ்ட் வார்னிங் சிம்பலாவது வந்திருக்க வேண்டும். இப்போது நான் என் செல்ல மகளை இழந்து நிற்கிறேன். இதற்கு ஆப்பிள்தான் பொறுப்பேற்க வேண்டும்!’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார் ஜேம்ஸ். 

விபத்து ஏற்பட்டு கார் கடுமையான பாதிப்புக்கு உட்பட்ட பிறகும், அந்த காரில் ஃபேஸ்டைம் ஆப் ஆக்டிவாக இருந்ததாம்!

http://www.vikatan.com/news/miscellaneous/76863-apples-facetime-claims-the-life-of-a-child-in-an-accident.art

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this