Jump to content

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்


Recommended Posts

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்

dhoni_21432.jpg

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art

ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல்

 

 
தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா.
தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா.
 
 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரராக, விக்கெட் கீப்பராக அணித்தேர்வுக்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் அணித்தேர்வுக்குழுவினர் ஜனவரி 6-ம் தேதி கூடி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளைத் தேர்வு செய்யவுள்ள நிலையில் தோனி விலகுவதாக அறிவித்துள்லார்.

தோனி விலகல் குறித்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமைச் செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறும்போது, “ஒவ்வொரு இந்திய ரசிகர் மற்றும் பிசிசிஐ சார்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தோனியின் தலைமையில் இந்திய அணி புதிய உச்சங்களை எட்டியது, இவரது சாதனைகள் இந்திய கிரிக்கெட்டில் எந்நாளும் நீக்கமற நிறைந்திருக்கும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஒருநாள்-டி20-கேப்டன்-பொறுப்பிலிருந்து-எம்எஸ்தோனி-திடீர்-விலகல்/article9459536.ece?homepage=true

Link to comment
Share on other sites

கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகி உள்ளார்.

 
கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார்.

இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
B739B350-9A20-45F9-91D2-CC1E535B510D_L_s
இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் தோனி இடம்பெறுவார்.

டோனியின் விலகலை தொடர்ந்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/04213426/1060157/Mahendra-Singh-Dhoni-steps-down-as-captain-of-the.vpf

Bild könnte enthalten: 1 Person, Sonnenbrille und Text

Link to comment
Share on other sites

கேப்டன் தோனியின் மகத்தான சாதனைகள்!

 

 
dhoni2

 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இம்மாதம் விளையாடவுள்ள நிலையில் இம்முடிவை தோனி எடுத்துள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக உள்ள தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 

கேப்டன் தோனியின் மகத்தான சாதனைகள்!

199 ஒருநாள் போட்டிகளிலும் (110 வெற்றிகள்) 72 டி20 போட்டிகளிலும் (42 வெற்றிகள்) தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல 60 டெஸ்டுகளிலும் (27 வெற்றிகள்).

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி. 

ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை கேப்டனாக இருந்தவர் - ரிக்கி பாண்டிங். 230 போட்டிகள். 218 போட்டிகளுடன் பிளெமிங் அடுத்த இடத்தில். 199 போட்டிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார் தோனி. அதேபோல 60 டெஸ்டுகளுடன் 6-ம் இடத்திலும் 72 டி20 போட்டிகளுடன் முதல் இடத்திலும் உள்ளார். 

ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை என மூன்று முக்கியமான போட்டிகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி. அதேபோல தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய டெஸ்ட் அணி நெ.1 இடத்தைப் பிடித்தது. 

அதிக சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர் - தோனி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து 331 போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங். 324 போட்டிகள்.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

தோனியின் முடிவை மதிக்கிறேன் - சச்சின்

தோனி பதவி விலகுவதாக அறிவித்ததை முன்னிட்டு 'கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் தோனியின் முடிவை மதிக்கிறேன். அவரின் தலைமையில் கிடைத்த வெற்றிகளை கொண்டாட வேண்டிய தருணமிது. அதிரடி ஆட்டக்காரராய் அணிக்குள் நுழைந்து நிலையான கேப்டனாய் மாறிய அவரின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு வீரராய் களத்தில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். 

C1V7S2VW8AEEyDD.jpg

http://www.vikatan.com/news/sports/76893-i-respect-sachins-decision---says-sachin.art

Link to comment
Share on other sites

தோனியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? #Dhoni

b4_00080.jpg

ந்திய அணியின் கேப்டன் 'மிஸ்டர் கூல்' தோனி, இந்தியா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த காலத்தின் இணையற்ற கேப்டன்களில் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. மிகச் சுமாரான பின்னணியில் இருந்தும், மிகவும் பின் தங்கிய மாநிலத்தில் இருந்தும் வந்தவர் தோனி. பிரம்மாண்ட வெற்றியையும், மிகப்பெரிய உயரத்தையும் எட்டியவர். வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் கேப்டன் இவர் தான். இவரது வெற்றிக்கான காரணமும் இது தான்.

முணுமுணுப்புகளை நிறுத்த இவர் செய்த காரியம்

2014ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றி இது. இந்த வெற்றியை பெற்றுத்தந்தவர் தோனி. ஆனால் அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது இந்தியா. அப்போது தோனிக்கு எதிராக பேச்சுகள் எழ... தோனி செய்த அந்த ஒற்றை காரியம், அத்தனை பேரையும் வாயடைக்க வைத்தது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. இத்தனைக்கும் இந்திய அணியின் சார்பில் அதிக டெஸ்ட் வென்ற கேப்டன் தோனி தான். கிரிக்கெட் வரலாற்றில் 60 டெஸ்ட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த 6 கேப்டன்களில் தோனி ஒருவர்.

b6_00334.jpg

செய்தியாளரை பேட்டி எடுத்த அந்த தருணம்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி யில் இந்தியா தோற்ற நேரம். இந்த அதிர்ச்சி தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கேப்டன் தோனி. அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு தோனி கோபப்படவில்லை. மிகவும் நிதானமாக பதில் அளித்தார். செய்தியாளரை தன் அருகில் அமர வைத்துக்கொண்டு, செய்தியாளரின் தோளில் கை போட்டு 'நான் ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். 'இல்லை' என்றார் செய்தியாளர். தொடர்ச்சியாக 'நான் நல்ல உடல் கட்டமைப்புடன் இருக்கிறேனா?' 'வேகமாக ஓடுகிறேனா?' என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். அதற்கெல்லாம் செய்தியாளர் ஆம் என்றார். இறுதியாக 'நான் 2019 உலகக் கோப்பை தொடர் வரை நான் நல்ல முறையில் விளையாட முடியுமா?' என கேட்டார். 'நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்' என்றார்.  நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் இது தான் என்றார் கேப்டன் கூல்.

b7_00006.jpg

சத்தமில்லாமல் நிகழ்த்திய சாதனை

2015ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியா தோல்வியை தழுவி வெளியேறிய நேரம். தோல்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார் தோனி. ஆனால் சத்தமில்லாமல் அப்போது ஒரு சாதனையை செய்திருந்தார் அவர். காலிறுதி போட்டியில் பங்களாதேஷை வென்றதன் மூலம் அவரது தலைமையிலான 100வது ஒருநாள் போட்டியை வென்றிருந்தது இந்தியா.

ஆனால் அந்த சூழலில் அதை அவர் கொண்டாடவில்லை. உலகில் 100 ஒருநாள் போட்டிகளை வெல்வது என்பது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை. 100 ஒரு நாள் போட்டிகளை வெல்லும் அளவுக்கு தாக்குப்பிடித்த கேப்டன்கள் 3 பேர் தான். ஆனால் இதை அவர் தலையில் வைத்துக் கொண்டாடவும் இல்லை. அதேநேரம் உலக கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வியால் துவண்டு விடவும் இல்லை.

b5_00257.jpg

சச்சினும், தோனியின் ஆசையும்:

முதல்முறையாக துலீப் கோப்பைக்காக கிழக்கு மண்டல அணியில் தோனி இடம்பெற்றிருந்த போது, அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 12வது வீரராகத்தான் இடம் கிடைத்தது. அப்போது தான் சச்சினை பார்த்தார். அந்த போட்டியில் 199 ரன் எடுத்த சச்சினுடன் எப்படியாவது ஒரு ஆட்டமாவது ஆட வேண்டும் என நினைத்தார் தோனி.

2010ம் ஆண்டு சச்சின் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்த போதும்... சச்சின் டெஸ்ட் போட்டியில் 50வது சதத்தை பூர்த்தி செய்த போதும், சச்சினுக்கு எதிர்முனையில் இருந்தவர் தோனி. 'எனக்கு கேப்டனாக இருந்தவர்களிலேயே சிறந்தவர் தோனி தான்' - இது பின்னாளில் சச்சின் சொன்னது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சச்சினின் ஆசையை நிறைவேற்றி, அவரிடம் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார் மிஸ்டர் கூல் தோனி.

டி 20 உலக கோப்பை வெற்றி, 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையை கைப்பற்றியது, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு சென்றது. இந்தியா வெல்ல முடியாது என கணிக்கப்பட்ட இடங்களில், போட்டிகளில் வென்று சாதித்தது என இந்திய அணியை உயரத்துக்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு தோனிக்கு உண்டு.

b8_00377.jpg

தோனி ஒரு 'பைக் பிரியர்'

அவர் சார்ந்த ஜார்கண்டில் மிக அதிக வருமான வரி கட்டும் நபர் தோனி தான். இவரது ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய். தோனி ஒரு பைக் பிரியர். 35 பைக்குகள் வைத்திருக்கிறார். கூடவே ரேஸிங் டீமும் வைத்திருக்கிறார். கிரிக்கெட் வீரரான இவர், கால்பந்து மற்றும் ஹாக்கி அணியின் இணை உரிமையாளர், உரிமையாளராகவும் இருந்தவர் ஆவார்.

சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர்... அதே நேரத்தில் சிறந்த கேப்டன். இப்படி 3 பொறுப்புகளையும் திறம்பட கையாண்டவர் தோனி தான். இதற்கு முன்னர் இந்திய அணிக்கு இப்படி ஒருவர் கிடைக்கவில்லை. இனி கிடைப்பார்களா என தெரியவில்லை.

b3_00052.jpg

மீடியாக்கள் என்றால் ஏன் அலர்ஜி தெரியுமா?

மீடியாக்கள் என்றால் தோனிக்கு கொஞ்சம் அலர்ஜி தான். 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றில் இந்தியா வெளியேற... தோனியின் வீட்டு முன்னால் அவரது கொடும்பாவியை எரித்தனர் ரசிகர்கள். அப்போது மீடியாக்களுடன் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனுபவமுமே அலர்ஜிக்கு காரணம்.  அதனால் மீடியாக்களுடன் பேசும் போது தோனி மிக கவனத்துடனே பேசுவார். இதற்கு உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

அது 2014ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோற்ற நேரம். அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது இந்தியா. தோனியிடம் கேள்வியை முன்வைக்கிறார்கள் செய்தியாளர்கள். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்த உலக கோப்பை விளையாடுவீர்களா? என கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு தோனி கோபப்படவில்லை. தோல்வியின் விரக்தியில் பேசி விடவில்லை. மிக பொறுமையாக பதில் அளித்தார்.

"நான் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பதில் சொல்கிறேன். நீங்கள் தான் அதை முடிவெடுக்க வேண்டும். நன்றாக ஆராயுங்கள். சில நாட்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.  ஆனால் எழுதும் போது நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நேரெதிராய் எழுதுங்கள். அதுதான் சரியாக இருக்கும். இப்போது நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார். அது தான் தோனி.  வெற்றியோ, தோல்வியோ அதை தன் மேல் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பவர்.

b1_00293.jpg

வெற்றியோ, தோல்வியோ... தோனி எப்போதும் கூல் தான் !

கிரிக்கெட் வரலாற்றில் 60 டெஸ்ட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த கேப்டன்கள் மொத்தம் 6 பேர். அவர்களில் ஒருவர் தோனி. இதில் 27 டெஸ்ட்களில் வெற்றியை பெற்றுத்தந்தவர் தோனி. 27 தானா என கேட்பவர்கள், இதையும் கவனிக்க வேண்டும். 1932க்கு பின்னர் ஆசியாவுக்கு வெளியே வென்ற டெஸ்ட் போட்டிகள் என்பது 30க்கும் குறைவு.

தோனியின் வெற்றிக்கு என்ன காரணம் என கேட்டபோது சக வீரர்களால சொல்லப்படுவது இது தான். "போட்டியில் மிக மோசமாய் தோற்றாலும், மைதானத்தில் இருந்து டிரஸ்ஸிங் அறைக்கு வந்து விட்டால், வீரர்களை இயல்பாக வைத்திருப்பார். அதிகாரத்தின் முகத்தை அவர் காட்டியதில்லை. ஆட்டக்களத்தில் அசைக்க முடியாத மன உறுதியுடன் ஆடுவார். வெளியே இயல்பாக, மகிழ்வுடனே இருப்பார்".

தோற்றால் முடங்கிப்போகவோ, மற்றவர்களை மிதித்தோ பழக்கம் இல்லாதவர் தோனி. அதே நேரம் வென்றால் ஆட்டம் போடாதவர். வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாக பார்க்கத்தெரிந்தவர்.  உலகக் கோப்பையை வென்ற போது, கோப்பையையும், உற்சாகத்தருணத்தையும் சச்சினிடம் கொடுத்து விட்டு, ஒதுங்கியே நின்றவர். அரிய வெற்றியை பெறும் போதும், எதிர்பாராத தோல்வியை சந்திக்கும் போதும் தோனியின் முகம் ஒரே மாதிரி தான் இருக்கும். அது தான் தோனி.

http://www.vikatan.com/news/coverstory/76896-reasons-why-dhoni-is-everyones-favourite.art

Link to comment
Share on other sites

ஈடு இணையற்ற சாம்பியன் பட்டங்கள்: கேப்டனாக தோனியின் சாதனைத் துளிகள்

 
தோனி | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி.
தோனி | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி.
 
 

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீரென விலகினார். ஆனால் தோனியின் சாதனைகள் அவரிடமிருந்து விலக்க முடியாதவை.

> ஐசிசி-யின் 3 முக்கிய ஒருநாள் போட்டித் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனி. 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய முக்கிய ஐசிசி தொடர்களில் கோப்பையை வென்ற ஒரே கேப்டன். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையையும் இந்திய அணி தோனியின் தலைமையில் வென்றது. மேலும் குறைந்தது 5 அணிகள் பங்கேற்கும் குறைந்த ஓவர் தொடர்களில் 4 முறை இறுதியில் வென்றதன் மூலம் இம்ரான் கான், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார் தோனி.

> 199 போட்டிகளில் கேப்டன்சி செய்ததில் 110 ஒருநாள் போட்டிகளில் வென்றதன் மூலம் ரிக்கி பான்டிங்கிற்கு அடுத்த (165 வெற்றிகள்) இடத்தைப் பிடித்துள்ளார் தோனி.

> ஆலன் பார்டர் 100 ஒருநாள் வெற்றிகளைச் சாதித்துள்ளார். அசாருதீனைக் காட்டிலும் அதிகமாக 20 ஒருநாள் வெற்றிகளை கேப்டனாக தோனி பெற்றுள்ளார்.

> டி20 போட்டிகளில் 41 வெற்றிகளுடன் தோனிக்கு முதலிடம். இவருக்கு அடுத்த இடத்தில் டேரன் சாமி 27 டி20 வெற்றிகளுடன் உள்ளார். அதே போல் 72 டி20 போட்டிகளில் கேப்டன்சி என்பது கேப்டனாக அதிக போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

> 199 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியது இந்திய கேப்டனாக அதிக போட்டிகளாகும், உலக அளவில் 3-வது இடத்தில் தோனி உள்ளார். ரிக்கி பாண்டிங், நியூஸிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் தோனியை விட அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை தோனிக்கு அடுத்தபடியாக அசாருதீன் 174 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

> ஒருநாள் போட்டிகளில் தோனியின் வெற்றி தோல்வி விகிதம் 110-74. ராகுல் திராவிடின் ஒருநாள் வெற்றி தோல்வி விகிதம் 42-33.

> கீப்பர்/கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 6633 ரன்கள். இதில் இவருக்கு அருகில் ஒருவரும் இல்லை. சற்று தொலைவில் சங்கக்காரா கீப்பர்/கேப்டனாக 1756 ரன்களை எடுத்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் கீப்பர்/கேப்டனாக 1,000 ரன்களை எடுத்த ஒரே வீர்ர் தோனிதான். குறைந்த ஓவர் போட்டிகளில் மொத்தம் 271 போட்டிகளில் கீப்பர்/கேப்டனாக அவர் இருந்துள்ளார். இவருக்கு அருகில் வேறு கீப்பர்/கேப்டன் இல்லை.

> ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சராசரி 53.92. 1000 ரன்கள் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டால் கேப்டனாக 2-வது பெரிய சராசரியாகும் இது. ஏ.பி.டிவில்லியர்ஸ் சராசரி 65.92. குறைந்தது 5,000 ரன்கள் எடுத்த 7 கேப்டன்களில் பாண்டிங்கிற்கு அடுத்த சிறந்த சராசரி தோனியினுடையது.

> முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் தோனியின் வெற்றி-தோல்வி விகிதம் 7-4.

> இந்திய அணியின் ஒருநாள் போட்டி வெற்றிகளில் தோனியின் பேட்டிங் சராசரி 70.83. இதில் டிவில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர் அதிக சராசரி வைத்துள்ளனர். இந்திய வெற்றிகளில் தோனி 3,754 ரன்களை அடித்துள்ளார், இதில் 3 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும்.

> கேப்டனாக டி20 ஆட்டங்களில் வெற்றிபெறும் விரட்டல்களில் தோனி ஆட்டமிழக்காமல் 12 முறை இருந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தோனி வெற்றிபெற்ற விரட்டல்களில் 26 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதில் தோனிக்கே முதலிடம், 2-வது இடத்தில் அர்ஜுனா ரணதுங்கா, பிறகு அசாருதீன், ரிக்கி பாண்டிங் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ஈடு-இணையற்ற-சாம்பியன்-பட்டங்கள்-கேப்டனாக-தோனியின்-சாதனைத்-துளிகள்/article9460606.ece?homepage=true

Link to comment
Share on other sites

அனைத்து கால சிறந்த கேப்டன்: தோனிக்குக் குவியும் புகழாரங்கள்

 

 
தோனி | கோப்புப் படம்: ஏஎஃப்பி.
தோனி | கோப்புப் படம்: ஏஎஃப்பி.
 
 

2015 தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு என்று குண்டைத் தூக்கிப் போட்ட தோனி 2017 தொடக்கத்தில் கேப்டன்சியை துறந்து இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது முடிவை மதித்தும், வரவேற்றும், அவரது சாதனைகளைப் புகழ்ந்தும் ட்விட்டரில் முன்னாள், இந்நாள் வீரர்கள் பதிவிட்டுள்ளான்ர்

சச்சின் டெண்டுல்கர்: ஒருநாள், டி20 உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன் தோனிக்கு என் வாழ்த்துக்கள். ஒரு ஆக்ரோஷ வீரர் என்ற நிலையிலிருந்து நிதானமும் உறுதியும் மிக்க ஒரு தலைவராக அவர் உருவெடுத்தது வரை நான் அவரை பார்த்து வருகிறேன். அவரது வெற்றிகரமான கேப்டன்சியை கொண்டாடும் தருணம் இது, அவரது முடிவை மதிக்க வேண்டிய தருணம் இது. களத்தில் அவர் மேலும் நம்மை உற்சாகப்படுத்தப் போகிறார், தோனி சிறப்புற எனது வாழ்த்துகள்.

நரேந்திர மோடி: தோனியின் எதிர்கால இலக்குகளுக்கு எனது வாழ்த்துக்கள். கேப்டனாக இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புகளுக்கு நன்றி. வெல் பிளேய்ட்.

ஹர்திக் பாண்டியா: லட்சக்கணக்கானோருக்கு தோனி நீங்கள் ஒரு உத்வேகம். உங்கள் தலைமையின் கீழ் நான் ஆடிய ஒவ்வொரு கணத்தையும் பெரிய புதையலாகக் கருதுகிறேன்.

சுரேஷ் ரெய்னா: இந்திய அணியின் வெற்றிகரமான தலைவர். தனது தொலைநோக்கை நிஜமாக மாற்றியவர். அனைவரையும் மேலும் கனவு காண உத்வேகமாகத் திகழ்ந்தவர்.

மைக்கேல் வான்: உண்மையில் ஒரு கிரேட்டஸ்ட் கேப்டனே போதுமென்ற மனமே பொன் செய்யும் விருந்து என்று முடிவெடுத்து விட்டார். ஈடு இணையற்ற தலைமைத்துவத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

ரோஹித் சர்மா: உண்மையான வழிகாட்டி, தலைவர், நிறைய வீர்ர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியவர். என்னை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறக்கியதன் மூலம் என்னிலும் தோனி தாக்கம் செலுத்தினார்.

இர்பான் பத்தான்: கேப்டனாக அவரது வழிமுறையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெல் டன் மாஹி.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: கேப்டன்சியை அடுத்தவருக்கு கொடுக்கும் தருணத்தை அறிந்த ஒரு உண்மையான தலைவரின் அடையாளமே அவரது விலகல். எங்களை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி கேப்டன்.

ஹர்ஷா போக்ளே: ஒரு அருமையான சேவகரை எழுந்து நின்று கரகோஷம் செய்து வாழ்த்தும் தருணம். ஆனால் இவர் இந்திய கிரிகெட்டின் ஈடு இணையற்ற தலைவர்.

மொகமது கயீப்: 9 ஆண்டுகளாக வெற்றிகளுடன் தலைமைப்பொறுப்பாற்றிய தோனிக்கு சிரம் தாழ்த்துகிறேன். உங்களை கேப்டனாக அடைய இந்திய அணி பெற்ற பேறு என்னவோ!

http://tamil.thehindu.com/sports/அனைத்து-கால-சிறந்த-கேப்டன்-தோனிக்குக்-குவியும்-புகழாரங்கள்/article9460621.ece?homepage=true

Link to comment
Share on other sites

தலைமைப் பண்பால் அணிக்கு வெற்றிகளை ஈட்டித் தந்த மிஸ்டர் கூல் கேப்டன் ( புகைப்படத் தொகுப்பு)

  •  
 

இந்தியாவின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். தோனியின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

'ஹெலிகாப்டர் ஷாட்' போன்ற பல அதிரடி ஷாட்களால் விளாசல் மன்னன் என்ற புகழ்பெற்ற தோனி

ஹெலிகாப்டர் ஷாட்' போன்ற பல அதிரடி ஷாட்களால் விளாசல் மன்னன் என்ற புகழ்பெற்ற தோனி

அணிக்கு தேவைப்படும் வெற்றி இலக்கினை அடைந்து ஆட்டத்தை முடித்து வைப்பவர் என்று பெயர் பெற்றவர் மகேந்திர சிங் தோனி. எண்ணற்ற போட்டிகளில் தனது நிதானமான மற்றும் அதிரடி ஆட்டத்தால் இறுதி வரை போராடி வெற்றியை தேடித் தந்துள்ளார்

அணிக்கு தேவைப்படும் வெற்றி இலக்கினை அடைந்து ஆட்டத்தை முடித்து வைப்பவர் என்று பெயர் பெற்றவர் மகேந்திர சிங் தோனி. எண்ணற்ற போட்டிகளில் தனது நிதானமான மற்றும் அதிரடி ஆட்டத்தால் இறுதி வரை போராடி வெற்றியை தேடித் தந்துள்ளார்

களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், மாற்று அணி வீரர்களுடன் தோனி நட்புறவுடன் இருந்தார்

களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், மாற்று அணி வீரர்களுடன் தோனி நட்புறவுடன் இருந்தார்

2011 உலக கோப்பையுடன் தோனி

2011 உலக கோப்பையுடன் தோனி

கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டுமல்ல, விக்கெட் கீப்பராகவும் தோனி சிறப்பாக பங்களித்ததால் பல ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது.

கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டுமல்ல, விக்கெட் கீப்பராகவும் தோனி சிறப்பாக பங்களித்ததால், பல ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது.

அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு மகிழ்வான தருணத்தில்

அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு மகிழ்வான தருணத்தில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை ஈட்டுத் தந்துள்ளனர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை ஈட்டுத் தந்துள்ளனர்

2011 ஒருநாள் போட்டிகள் உலக கோப்பையை வென்ற தோனி, சச்சினுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தருணம்

2011 ஒருநாள் போட்டிகள் உலக கோப்பையை வென்ற தோனி, சச்சினுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தருணம்

பாகிஸ்தானுடன் பல போட்டிகளில் இந்தியா வெற்றியடைந்ததற்கு தோனியின் ஆட்டமும், தலைமையும் பெரும் பங்கு வகித்தது

பாகிஸ்தானுடன் பல போட்டிகளில் இந்தியா வெற்றியடைந்ததற்கு தோனியின் ஆட்டமும், தலைமையும் பெரும் பங்கு வகித்தது

2011 உலக கோப்பை போட்டிகளின் போது சக அணித் தலைவர்களுடன் தோனி

2011 உலக கோப்பை போட்டிகளின் போது சக அணித் தலைவர்களுடன் தோனி

http://www.bbc.com/tamil/sport-38515230

Link to comment
Share on other sites

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக... செங்கல்பட்டும் தஞ்சாவூரும் கதிகலங்கியது ஏன்?

தோனி

திர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார் என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. தோனி தனது ஓய்வு முடிவாக இருந்தாலும் சரி, பதவியிலிருந்து விலகுவதாக இருந்தாலும் சரி திடீரென அறிவித்து ஷாக் தரக்கூடியவர். இந்நிலையில் நேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததும் மொத்த இணையமும் செய்தி காட்டுத்தீயாக பரவியது. அவரது ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை மீம்ஸ்களாகவும், சமூக வலைதள பதிவுகளாகவும் வெளிப்படுத்தினார்கள்

டிசம்பர் 2014ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக தொடர்ந்தார். இந்நிலையில் வரும் இங்கிலாந்து தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலகி கீப்பர் பேட்ஸ்மேனாக நீடிக்கவுள்ளார். இதனை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் தேடத் துவங்கினர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தோனியின் முடிவு பற்றி தேடியுள்ளன. இதில் டாப் இடத்தை பிடித்தது தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் தான். இரண்டாம் இடம் தோனி எப்போதும் கூறுவது போல தமிழ்நாடு தான். அவரது பேட்டிகளில் ''சென்னை எனக்கு இரண்டாவது வீடு போல என அடிக்கடி கூறுவார்''.

இந்தியாவில் தோனியை அதிகம் தேடிய இடங்கள் எது?

சரி தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிக பேர் தேடியுள்ளனர் என்று பார்த்தால் செங்கல்பட்டில் உள்ள செட்டிபுண்ணியத்திலும், தஞ்சாவூரில் உள்ள திருமலை சமுத்திரத்திலும் தான். 

தமிழ்நாட்டில் அதிகம் தேடிய இடங்கள் எது? 


அதேபோல அவரை கூகுளில் தேடும் போது டாப் சர்ச்சில் இருந்தவை இந்த டாபிக்குகள் தான்.

ms dhoni captaincy

dhoni quits

dhoni resigns

dhoni leaving captaincy

ms dhoni quits captaincy

ms dhoni step down

dhoni retirement news

ms dhoni quit captaincy

dhoni stpes down

dhoni retirement from odi

இன்னும் சிலர் தோனி ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என நம்பி ஓய்வு குறித்து தேடியுள்ளனர். கூகுளையே அதிர வைத்த ரசிகர்களால் நேற்றைய இந்தியா ட்ரெண்டும் நம்ம தல தோனி தான்...நம்ம தல தோனிக்கு பெரிய விசில் போடுங்க....

http://www.vikatan.com/news/miscellaneous/76933-why-chengalpattu-and-thanjavur-feels-for-ms-dhonis-step-down-from-captaincy.art

Link to comment
Share on other sites

தோனி இதைச் செய்திருந்தால்... கவாஸ்கர் கலகல

Gav_2_16535.jpg

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாக மகேந்திர சிங் தோனி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 'தோனி மட்டும் கேப்டன் பதவியைத் துறந்ததற்கு பதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டிருப்பேன். அவர் தொடர்ந்து விளையாடுவதற்கு முடிவெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், 'இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் தற்போதே கேப்டன் பதவியை விராட் கோலி ஏற்கும்படி செய்துள்ளார். இந்த காரணத்துக்காக தோனியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்' என்று நெகிழ்ந்தார் கவாஸ்கர்.

http://www.vikatan.com/news/sports/76972-if-dhoni-had-retired-would-have-staged-dharna-says-gavaskar.art

Link to comment
Share on other sites

டிக்கெட் கலெக்டர் முதல் 'தல' வரை ... தோனியின் வாழ்க்கை கிராஃப் #3MinRead #ThankYouDhoni

ஒரு நல்ல தலைவன் உருவாவதில்லை... பிறக்கிறான் எனச் சொல்வார்கள். அது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ தோனிக்கு நிச்சயம் பொருந்தும். அவர் மற்றவர்களால் உருவாக்கப்பட்ட தலைவன் கிடையாது. சுயம்பாக  தலைவனுக்குரிய பண்புகள் அவரிடம் நிறைந்திருந்தன.  

ராஞ்சியில் விளையாடித் திரிந்த அந்தப் பையனுக்கு, கறி வாங்கக் காசில்லாமல் லிட்டர் கணக்கில் பால் குடித்தே புரதச்சத்தை பெற்றுக் கொண்ட அந்தச் சிறுவனுக்கு, கோரக்பூர் ரயில்வே நிலையத்தில் குடும்ப பாரத்தைத் தாங்க 21 வயதில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய  அந்த இளைஞனுக்கு, பைக்கின் மேல் தீரா காதல் கொண்டவனுக்கு,   அடுத்த 14 வருடங்களில் அவர் வாழ்க்கை  எப்படி மாறப்போகிறது? இந்தியா  ஏன் அவரைக் கொண்டாடப்போகிறது, எத்தனைப் பேருக்கு அவர் ரோல்மாடலாக இருக்கப் போகிறார்?  என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ரஞ்சிப் போட்டியில் கூட கேப்டனாக ஆடிய  அனுபவம் இல்லாத ஒரு வீரனுக்கு, அழகான ஷாட் விளையாடத் தெரியாத ஒரு பவர் ஹிட்டருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றோ, இந்திய அணிக்குப் பின்னாளில் அவர் தலைமை தாங்கப் போகிறார் என்பதோ  அந்தப் பதின்ம வயதில் அவருடன் விளையாடியவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் கூட கிஞ்சித்தும்  தெரியாது.  எங்கிருந்தோ வந்தார், கிரிக்கெட் புத்தகத்தில் இல்லாத ஷாட்களை எல்லாம் ஆடினார், எல்லோரும் 'யார்ரா' இவன் என பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இந்திய அணிக்குத் தலைமை பொறுப்பை ஏற்றார், அத்தனை ஜாம்பவான்களுக்கும் அகப்படாத சூத்திரங்களை கண்டுபிடித்து அவர்கள் தோல்வியடைந்த புள்ளியில் இருந்து இவர் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். தோனி கிரிக்கெட்டில்  ஓர் ஆச்சர்யம்! கேப்டன்களில் ஓர் அத்திப் பூ! மகேந்திர சிங் தோனி.  

 

தோனி

2004  டிசம்பரில், தமிழகத்தை சுனாமி தாக்கிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் இந்திய அணிக்குள் தோனி சுனாமி புகுந்தது. முதல் போட்டியிலேயே  ரன் அவுட்டாகி, டக் அவுட் ஆனார்.அடுத்த  மூன்று  போட்டிகளிலும்   சொதப்பல் தான். ஆனால் தோனி மேல் அபார நம்பிக்கை வைத்திருந்தார் கங்குலி. பலத்த சீனியர் பாலிடிக்ஸ்களுக்கு இடையே, தனது இடத்தையும் தியாகம் செய்து அணியில் மூன்றாவது நிலையில்  தோனியை களமிறங்க வைத்தார் அப்போதைய கேப்டன் கங்குலி. 

2005 ஏப்ரலில் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் சச்சின் வெறும் இரண்டு ரன்னில் ரன் அவுட்  ஆக, களம் புகுந்தது இந்தச் சிங்கம். 123 பந்தில் 148 ரன் எடுக்க, இந்திய அணிக்கு ஒரு அரிய வைரம் கிடைத்துவிட்டது எனக் கத்தினான் ரசிகன்.  அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில் நடந்த  இலங்கைக்கு எதிரான போட்டியில் 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை, எதிரணியில் சமிந்தா வாஸ், முரளீதரன் இருந்தார்கள். அன்றும் சச்சின் இரண்டு ரன்களில் அவுட் ஆனார். ஆனால்  தோனி கைவிடவில்லை, சாட்டையைச் சுழற்றினார், சிக்ஸர்களாக வெளுத்தார். தனி ஒருவனாக 183 ரன்களை குவித்தார். அது நாள் வரையில் ஷேவாக் அதிரடியை மட்டுமே பார்த்து வியந்திருந்த இந்திய ரசிகனுக்கு, தோனியின் டிரீட்மென்ட் சுகானுபவத்தைத் தந்தது, அதிரடியும் உண்டு, அதே சமயம் அணியைக் கடைசி வரை நின்று கரை சேர்ப்பார் என்ற தோனியின் டீலிங்  பிசிசிஐக்கும், இந்திய ரசிகனுக்கும் பிடித்திருந்தது. 

DHONI மகேந்திர சிங் தோனி

இப்படி ஒரு சிறந்த  அதிரடி பேட்ஸ்மேனாக கரியரை  தொடங்கிய தோனிக்கு, அடுத்த  இரண்டே ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டன் பதவி  தேடி வந்தது. சச்சின், டிராவிட் என மூத்தவர்கள் எல்லோரும் டி20 உலகக்கோப்பையில் ஒதுங்கினார்கள். யுவராஜா? சேவாக்கா? தோனியா ? யாரை கேப்டனாக நியமிப்பது என பிசிசிஐ கருத்து கேட்ட போது   தோனியை பரிந்துரைத்தது சச்சின் தான். சேவாக்குக்கு ஏன் கொடுக்கல? யுவராஜ் சிங்கை புறக்கணித்து விட்டார்கள் என விமர்சனங்களுக்கு மத்தியில் உலகக் கோப்பை ஆட தென் ஆப்பிரிக்கா  பயணப்பட்டது இந்திய அணி.  

ஈகோ இல்லாமல் அணியை வழிநடத்த ஆரம்பித்தார் தோனி, நன்றாக விளையாடுபவர்களுக்கே அணியில் இடம் எனக் கடுமை காட்டினார், இறுதிப் போட்டியில் அதிரடி மன்னன் ஷேவாக்குக்கே அணியில் இடம் கொடுக்க மறுத்தார். பாகிஸ்தான் ஜெயிக்கப் போகிறது என்ற சூழ்நிலையில் கடைசிக் கட்ட ஓவர்களில் பவுலிங்கில் அபாரமான மாற்றங்களைக் கொண்டு வந்தார்,  ஃபீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார். ஹர்பஜன் சிங் போன்ற மூத்த பந்துவீச்சாளரை தவிர்த்து விட்டு, பெருமை மிகு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், கடைசி ஓவரை ஜோஹீந்தர் சர்மாவிடம் தந்தார். ஆறு பந்தில் 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை, ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸர் வைத்தார் மிஸ்பா. கலவரமானார்கள் இந்திய ரசிகர்கள், சிலர்  வசைபாடி டிவியை அணைத்தார்கள். தோனி டென்ஷனே ஆக வில்லை, நிதானமாக ஜோஹீந்தரிடம் பேசினார்;  ஸ்ரீசாந்தை சரியான இடத்தில் நிறுத்தினார்; மிஸ்பா ஸ்கூப் ஷாட் ஆடினார்; ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தார்;ஜோகிந்தர் துள்ளினார்; ரசிகன் கண்ணீர் பெருக்கோடு எழுந்து நின்று கத்தினான்; அப்போதும் தோனி அமைதியாகப் புன்முறுவலோடு  இருந்தார்.  

அந்தப் போட்டிக்கு பிறகு  தோனிக்கு இன்னொரு பரிமாணம் இருப்பதை உலகம் அறிந்தது. டி20 உலகக்கோப்பையின் வெற்றி, ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த டிராவிட்டிற்கு சிக்கல் உண்டாக்கியது, அவர் கவுரவமாக விலக,  ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் பதவி ஏற்றார் தோனி. 2007 ஒருநாள் உலகக் கோப்பையைத் தோற்ற பிறகு துவண்டு கிடந்த இந்திய அணிக்கும், இந்திய தேசத்துக்கும் பூஸ்ட் ஏற்றியது தோனி  தான். அணிக்கு ஃபிட்டானவர்கள் தான் தேவை, தகுதியற்றவர்கள் மூத்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை எனப் பாரபட்சமின்றி  அணியில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகிர்கான் என நிறைய  திறமையான வீரர்கள் இருக்கும் போதும்  அணி ஏன்  தோற்கிறது  என யோசித்தார், சேஸிங்கில் 45 வது ஓவர் வரை இந்திய அணியின் கையில் இருக்கும் மேட்ச் கடைசி சில  நிமிடங்களில் எதிரணியின் கைகளுக்குச் சென்றுவிடுவதை உணர்ந்தார் அணியில்  நல்ல ஃபினிஷர் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார் தோனி. . 

இறுதிப்போட்டியில் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த தோனி

மூன்றாவது, நான்காவது நிலையில் களமிறங்கத் தகுதியான மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த தோனி, அணியின் நலன் கருதி 6,7 இடங்களில் பேட்டிங் பிடிக்கச் சென்றார், அணியின் ஃபினிஷர் பொறுப்பையும் ஏற்றார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்த பிறகு ஃபினிஷர் ரோலுக்கு இறங்கி வந்த தோனியின் பெருந்தன்மை மகத்தானது.  எதைச் செய்தாலும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்ற தோனியின் தொலைநோக்கு பார்வை அபாரமானது.  யுவராஜும், தோனியும் இணைந்து ஃபினிஷிங்கில் கலக்க இந்தியா எழுந்து நின்றது. 2007 - 2011 வரை கிரிக்கெட் உலகை ஆண்டது.  டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து மண்ணில் தொடரை ஜெயித்து மாஸ்  காட்டியது.  

இந்தப் படையை இப்போதைக்கு எவரும் அசைக்கவே முடியாது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். ஃபார்ம் அவுட்டில் இருந்த யுவராஜை பரிந்துரை செய்து இந்தியாவில் நடந்த 2011 உலகக்கோப்பைக்கு அணியில் சேர்ந்ததே தோனி தான். இறுதிப்போட்டியில்  ஷேவாக், சச்சின், கோஹ்லி என ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, கம்பீருடன் விளையாட எஞ்சியிருக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் தோனியும், யுவராஜும் மட்டும் தான். அந்த உலகக் கோப்பையில் அதுவரை தோனி பெரிய ஃபார்மில்  ஆட வில்லை. என்ன நினைத்தாரோ தெரியவில்லை, யுவராஜை களமிறக்காமல் இவர் களம் கண்டார். 

கம்பீர் சோர்வு கண்டபோதெல்லாம், இவர் பவுண்டரிகளாக விளாசினார். கம்பீர் தேவையில்லாமல் அவுட் ஆன பிறகும் யுவராஜோடு சேர்ந்து இந்திய அணியைக் கரை சேர்த்தார். யுவராஜ் உலகக் கோப்பையின் தொடர் நாயகனாக  ஜெயித்தார், தோனி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். 28 ஆண்டுக் கால இந்திய ரசிகர்களின் கனவை நிறைவேற்றிய போதும் கூட ஒரு புண் சிரிப்போடு இடத்தை விட்டு நகர்ந்தார். மைதானத்தில் சச்சினை கொண்டாடினார். அவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்த பிறகும், அந்த கிரெடிட்டுகளை தனதாக்கிக் கொள்ளாமல் இளம் வீரர்களுக்கு வழி விட்டு நின்றார். அது தான் தோனி. எந்தச் சூழ்நிலையிலும் என்னால் தான், என்னால் மட்டும் தான் என எந்த வித அகங்காரம் தோனியிடம் இருந்ததே கிடையாது. நன்றாகக் கவனித்தால் அவரது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் கூட அவர்  ஜெயித்த விஷயங்களைப் பற்றி எப்போதும் தோனி பகிர்ந்திருக்கவே மாட்டார், பெர்சனல் விஷயங்கள் மட்டும் தான் இருக்கும். 

சரி உலகக் கோப்பையை ஜெயித்தாயிற்று இனி என்ன?  இப்படி ஒரு கேள்வி தோனி முன் இருந்தது. 2007 காலகட்டத்தில் எப்படி ஒரு கட்ட மூத்தவர்களை கழட்டி விட்டாரோ, அதே போல 2011 உலகக் கோப்பைக்கு பிறகு அணிக்கு முழுமையாகப் பங்களிக்க முடியாத மூத்தவர்களை ஓரங்கட்டினார், சில மூத்தவர்கள் கவுரமாக ஓய்வு பெற்றனர்.  அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, முரளி விஜய், முகமது  சமி, புவனேஷ்வர் குமார் என இளம் படையை அணிக்குள் கொண்டு வந்தார்.  சீனியர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியேறி விட, இந்திய அணிக்கு 2011 - 2014 காலகட்டத்தில் கடினமான அயல்நாட்டுச் சுற்றுப்பயணங்கள் இருந்தன. பெரும் தோல்விகளை இந்தியா சந்தித்த போதும், அவ்வளவு வசவுகளை வாங்கிக் கொண்டு, இளம் வீரர்களை அணியில் வார்த்தெடுத்தார். அவர்களுக்கு போதிய அனுபவம் கிடைக்க வழிவகை செய்தார்.அவருக்கு நன்றாகத் தெரியும், அந்த அணியை வைத்துக் கொண்டு வெளிநாட்டில் வெற்றியைப் பற்றி யோசிக்கவே முடியாது என, எனினும், தொலைநோக்கு பார்வை  தோனியிடம் இருந்தது.  

dhoni with worldcup

கங்குலி விதைத்ததை, தோனி அறுவடை செய்தார் எனச் சிலர் சொல்வதுண்டு. நிச்சயம் அது தவறானது. தோனி  தலைமை தாங்கிய காலத்தில் அவருக்கு தேனிலவுக்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை.  துவண்டு கிடந்த அணியை எழுந்து ஓட வைத்து கோப்பை  ஜெயிக்க வைத்ததில் அவரின் பங்கு அபாரமானது. சிறந்த கேப்டன் எனப் பெயர் எடுத்தார். 2007-2011  வரை புகழ் மாலையில் நனைந்த தோனிக்கு எதிரிகள் அதிகமானார்கள். 

2011 க்கு பிறகு அணி தள்ளாடிய போது, பதின் பருவத்தில் இருக்கும் சிறுவனை அரவணைத்துச் செல்லும் தாயுமானவனாக  தோனி இருக்க, அணி தோற்கும் ஒவ்வொரு போட்டியிலும் தோனி மீது கல் எறிந்தார்கள்.  'Dhoni - The Era Ends'  எனப் பக்கம் பக்கமாக எழுதினார்கள், விவாதித்தார்கள். ஆனால் தோனி அவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை, அலட்சியம் செய்துவிட்டு அணியுடன் பயணப்பட்டார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை ஜெயித்தார், 2014  டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்தினார். தொடர் தோல்விகள் அவரை அழுத்த, பிசிசிஐ அவரை பலிகடா ஆக்க  நினைத்தது. ஆஸ்திரேலியாவில் இருந்தபடியாக அதிரடியாக ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் முந்தைய நாள் அந்த வெள்ளை ஜெர்ஸியை கட்டியணைத்துக் கொண்டே தூங்கியதும், மெல்போர்ன் டெஸ்ட் டிரா ஆன போது ஸ்டம்புகளை எடுத்துக்கொண்டு போன போதும் தோனியின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என எளிதாக எழுதிவிட முடியாது.  

ஆஸ்திரேலியாவில்  2015 உலகக்கோப்பை வந்தது. அங்கேயும் தோனி டாப் நட்சத்திரமாக இருந்தார், அரையிறுதியில் ஆஸி மண்ணில் அந்த வேகப்பந்துகளைச் சந்திக்க முடியாமல் விராட் கோஹ்லி உட்பட அத்தனை வீரர்களும் அரள, துணைக்குக் கூட யாருமின்றி அணிக்காகப் போராடினார் தோனி.  அந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச ரன் அடித்ததும் தோனி தான். சரி இப்போது நீங்கள் ஓய்வு பெற்றுவிடுவீர்களா என  பத்திரிகையாளர்கள் கேட்ட போது, நீங்கள் கணித்த ஒரு முடிவை எழுதுங்கள்,  நான் அதற்கு நேர்மாறான முடிவை எடுப்பேன்  என்றார் தோனி. அதனால்  தான் அவரை  எல்லோருக்கும் பிடிக்கிறது.  

ஒருநாள்  போட்டியில்  அணி பலவீனமாக இருந்த போது, பொறுமை காத்தார்.  2015 இறுதியில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு வந்து இந்தியாவைப் பந்தாடியது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா கடுமையாக போராடிய போதும் 1-4 என ஒருநாள் தொடரை தோற்றது. அந்தத் தொடரில் இருந்து தோனியின் பொறுப்புகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தார் கோஹ்லி.டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா வாஷ் அவுட் செய்தது. ஆசிய கோப்பையை ஜெயித்தது. 2016 உலகக்கோப்பையோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எல்லோரும் சொன்னார்கள். இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் தொங்கியது, தோல்வியுடன் தொடரை ஆரம்பித்தது இந்தியா.  வங்கதேசத்துக்கு எதிராகத் தோல்வியின்  விளிம்பில் இருந்த இந்தியாவை, தோனியின் தலைமையே காப்பாற்றியது. எனினும் அரையிறுதியில் இந்தியா தோற்றது. தோனி விலகுவாரா என ஊடகங்கள் அவரிடம் மைக் நீட்டியபோது சிரித்தபடியே அங்கிருந்து அகன்றார்.

Dhoni retired

கடந்த ஆண்டு மத்தியில் மூத்த வீரர்கள் எல்லோரும் ரெஸ்ட் எடுக்க, அவரது கரியரில் நான்காவது செட் வீரர்களுடன் ஜிம்பாப்வே சென்றார். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் அவ்வளவு பெருமை அடைந்தனர் அந்த இளம் வீரர்கள். ஜிம்பாப்வே தொடர் முடிந்த பிறகு, நியூசிலாந்து தொடரிலும் சிறப்பாக ஆடினார் தோனி, கோப்பையை ஜெயித்ததும் இந்தியா தான். இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்தியாவை வழிநடத்துவார் என எதிர்பார்த்த நிலையில், சத்தமே இல்லாமல் நேற்று கேப்டன்சியில் இருந்து விலகிவிட்டார். இந்த முடிவு ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  

உலகின் தலைசிறந்த லிமிட்டட் ஓவர்ஸ் கேப்டனை இழப்பது இந்திய அணிக்குப் பேரிழப்பு தான். எனினும் இந்த அறிவிப்பின் பின் ஒரு நியாயமும் இருக்கத் தான் செய்கிறது.  தோனிக்கு தற்போது  35 வயதாகிறது. 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டே தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். தவிர கோஹ்லியின் அபார பார்ம் மற்றும் டெஸ்ட்போட்டியில்  அவரின் அட்டகாசமான  கேப்டன்ஷிப் போன்றவை தோனிக்கு ஒரு அழுத்தம்  ஏற்படுத்தியிருப்பதை மறுக்கவே முடியாது.  28 வயதாகும் கோஹ்லி, அபார பார்மில் இருக்கும்போதே கேப்டன் பதவியை கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கமும், உலகக் கோப்பையை தயார் செய்வதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனுக்கு இரண்டு அனுபவமாவது தேவை  எனும் தொலைநோக்குப் பார்வையும் தோனியிடம்  இருக்கிறது. இந்திய அணியில் ஃபினிஷர் ரோலுக்கும், விக்கெட் கீப்பிங்க்கும் இன்னமும் தோனியை விட பெட்டாரான ஆள் இல்லை. அதைக் கருத்தில் கொண்டு அணியில் பேட்ஸ்மேனாக தொடருவதன்  மூலம் ரசிகர்களின் இதயத்தில்  இடம் பிடித்திருக்கிறார் தோனி.   

சச்சினை பார்க்க வேண்டும் என்பதையும், சச்சினுடன்  சேர்ந்து பேட்டிங் பிடிக்க வேண்டும் என்பதையும் கனவாக நினைத்த ஒருவனுக்கு சச்சின் இருக்கும்போதே இந்திய அணிக்குத் தலைவனாக பொறுப்பேற்று சச்சினுக்கு  கோப்பையை பெற்றுத் தந்தது அசாதாரண நிகழ்வு. தன்னை அறிமுகப்படுத்தி, தட்டிக்கொடுத்த, கங்குலிக்கு கடைசி டெஸ்டில் கவுரவம் செய்ததும் தோனி தான். தனிப்பட்ட சாதனைகளுக்காக ஒருநாளும் தோனி ஆடியதே கிடையாது, அணி ஜெயிக்க வேண்டும் என்பது தான் அவரின் குறிக்கோள். ஒரு கேப்டனாக அவர் கையாண்ட உத்திகள் உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம், பிடித்திருக்கலாம். ஆனால் எந்த உத்தியைக் கையாள வேண்டும் என்ற உரிமை அவருக்கு இருப்பதை மறுக்க முடியாது, வெற்றியின் போது கும்மாளமிட்டுவிட்டு, தோல்வியின் போது அவருக்கு டிப்ஸ் தருவது அருவருக்கத் தக்கது. ஒருவகையில் சச்சின் நூறாவது சதம் அடிக்கத் திணறிய போது அவருக்கே  ஏகப்பட்ட அறிவுரை வழங்கியவர்கள் தான் நம்மவர்கள்.  

விமர்சிப்பதை விட, விமர்சிக்கப்படும் இடத்தில் இருந்து நல்ல விஷயங்களைச் செய்வது மிகக் கடினமானது. கடினமான நேரத்தில், அணியை ஒன்றிணைத்து, அத்தனை ஐ.சி.சி கோப்பைகளை நாட்டுக்குப் பெற்றுத்தந்து, டெஸ்ட் அரங்கில் இந்தியாவை நம்பர் 1 இடத்துக்கு உயர்த்தி, அயல் மண்ணில் தொடர்களை வென்று காட்டிய தோனி, பெரும் பாராட்டுக்குரியவர். கேப்டன் பதவியில் இருந்து செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்துவிட்டு சத்தமில்லாமல் பேட்ஸ்மேனாக தொடரப்போகிறார் தோனி. இனி எவ்வளவு காலம் தோனி ஆடப் போகிறார், இங்கிலாந்து தொடரோடு விலகிவிடுவாரா அல்லது சாம்பியன்ஸ் டிராஃபி வரை தொடருவாரா, உலகக் கோப்பையில் ஆடுவாரா எனப் பல கேள்விகள் துரத்துகின்றன. தோனி என்றாலே பல கேள்விகள் துரத்துவது சகஜம் தானே,  ஆனால் எந்த நேரத்தில், எப்படி முடிவு எடுப்பார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே!  

http://www.vikatan.com/news/sports/76956-from-ticket-collector-to-captain---mahendra-singh-dhonis-life-graph.art

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: 'தோனி'- மக்களின் கேப்டன்!

 

 
தோனி | படம்: கெட்டி இமேஜஸ்
தோனி | படம்: கெட்டி இமேஜஸ்
 
 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தோனியின் முடிவு குறித்து ரசிகர்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

P Kathir Velu

தோனி பதவி விலகியதால் தோனிக்கு எப்போதும் உதவியாக இருந்த உதவியாளர்தான் பதவியேற்க வேண்டுமென கோடிக்கணக்கான ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம் மற்றும் தீக்குளிப்பு முயற்சி...

Asalt Anand

தோனி பதவி விலகிய காரணத்தால் எங்கள் பகுதி ஏடிஎம்மில் கூட்டம் குறைந்தது.

Sethu Pathi

நல்ல வேளை அந்த மேட்ச்ல தோனி மட்டும் நாலு கோல் அடிக்கலைனா இந்தியா மானம் கப்பல் ஏறிருக்கும்..!!

Abilash Chandran

எம்.எஸ் தோனி தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலகின் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவர், ஒரு தலைமுறைக்கே நவீன பேட்டிங்கை கற்றுத் தந்தவர், எப்போதும் முக்கியமான தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு சொதப்பும் இந்திய அணியினருக்கு முடிவை பற்றி அஞ்சாது ஆடினால் வெற்றி எவ்வளவு சுலபமாய் கிடைக்கும் என புரிய வைத்தவர்.

தோற்கும் வேளையிலும் அதை அலட்டாமல் கடந்து போக கற்றுத் தந்தவர்.

Ilayaraja Irk

வெற்றியை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாலும், தோல்வியை தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளும் வீரன் கேப்டன் தோனி..

Aadvik Min Deen

இனி வரும் காலத்திலும் 2011 உலக கோப்பை பைனலில் நீங்கள் அடித்த சிக்சரை என்றும் மறக்கவே மாட்டோம். #தோனி

dhoni1_3113431a.jpg

RoÇket Rajã

அதிக ஹேட்டர்ஸும், அதை விட அதிக ரசிகர்களும் கொண்ட பிரபலங்கள். #விஜய் #தோனி

K Vimalavelan

தோனி கேப்டன்சி இல்லா இந்திய அணி, ஜெயலலிதா இல்லா அதிமுக போன்றது.. #Dhoni

Edison Thomas

உன் தலைமை இல்லாத ஆடுகளம்- வெறும் ஆடாகளம். #MissuMSD

Machan Nandha Da

இதுவரை எந்த இந்திய கேப்டனும் கைப்பற்ற முடியாமல் விட்ட எல்லா கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் #தோனி.

கருவை சதிஷ்

உலக கிரிக்கெட்டின் கடவுளாக வேண்டுமானால் சச்சின் இருக்கலாம்,

அந்த கடவுளோட உலகக் கோப்பை கனவையே நினைவாக்கி குடுத்தவர்யா தோனி!

Ãrúñ Dë Dàîvā

தோனி போனா என்ன...

சின்ன தோனி வராமயா போய்ருவார்?

Kesaven Guptha

தோனியை பொறுத்தவரை பார்ம்ல இல்லாத யாரும் டீம்ல இருக்க கூடாது..

அது கங்குலியோ, சேவாக்கோ ஏன் தோனியா இருந்தாலும் அவர் அத தான் செய்வார்..

Karthik Cheran

தோனி சார்...தோனி சார்..உங்க தோட்டத்து வீட்ல வேலை செய்யறவர், உடன்பிறவா சகோதரன் அப்படின்னு யாராவது இருக்காய்ங்களா? அடுத்த ஆள கேப்டன் பதவிக்கு நிரப்பணும்...

Antony Abishek

கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல் - செய்தி

தோனியின் மேனேஜர் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் - பொன்னையன்

தல உயிர் ரசிகன்

28 வருஷமா கனவுலயே வாழ்ந்துட்டு இருந்தோம். அந்த கனவை 2011-ல் நினைவாக மாற்றியவர். நீங்க கேப்டன்ஷிப்ப விட்டு போறதை இன்னும் என்னால நம்ப முடியல. இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் உங்கள் பெயர்தான் இந்தியாவில் கேட்டுகிட்டே இருக்கும்.

உங்களோட அந்த கடைசி சிக்ஸ் அப்போ கண்ணீரோட ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டாடுனத இன்னும் மறக்க முடியல. #miss_u_MSD

dhoni_3113430a.jpg

Boopathy Murugesh

நாளைக்கு கோலி ஜெயிச்சா தோனி ரசிகன் சந்தோசப்படுவான். உன்னாலதான் தோனி டீமை விட்டு போனாருன்னு பொலம்ப மாட்டான்..

தனிப்பட்ட யாரும் முக்கியமில்ல. டீம் தான் முக்கியம். அதான் தோனிகிட்ட நாங்க கத்துகிட்டது.. #Dhoni

Deepak Master

வெற்றினா பின்னால நிப்பார்.

தோல்வினா முன்னால நிப்பார்..

Praveen Kumar

மக்களின் கேப்டனானார் தோனி !

Mohamed Safi

கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல். சின்ன கேப்டன் எங்கிருந்தாலும் வந்துருயா.. வந்துருயா..

நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan

நட்டாற்றில் விட்டு ஓடியவரல்ல,

முழுமையாக அத்தனையும் சாதித்துக்காட்டியபின், நிகழ்கால நிலையறிந்து அடுத்தவருக்கு மனமுவந்து வழிவிட்டவர்! #MSDhoni

அம்மு ‏@itsNayagi

தோனி டூ கோலி:

தம்பி வா

தலைமை ஏற்க வா

உன் ஆணைக்கு கட்டுபட்டு நிற்போமப்பா, இது சத்தியம்

புகழ் ‏@mekalapugazh

பதவியை கடைசி நொடிவரை அனுபவிக்கத் துடிக்கும் உலகில்...தோனி தனி ஒருவன்தான்..

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-தோனி-மக்களின்-கேப்டன்/article9460659.ece?homepage=true

Link to comment
Share on other sites

மறக்க முடியாத தோனியின் அதிரடி ஆட்டங்கள்

  •  

இந்தியாவின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

2011 உலக கோப்பையுடன் தோனி

2011 உலக கோப்பையுடன் தோனி

இது வரை 199 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், 72 டி-20 சர்வதேச போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி செயலாற்றியுள்ளார்.

கோலியுடன் தோனிகோலியுடன் தோனி

283 ஒருநாள் போட்டிகளிலும், 73 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ள தோனி , எண்ணற்ற போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு துணை புரிந்துள்ளார். தோனியின் மிகச் சிறப்பான பேட்டிங், கேப்டன்ஷிப் அடங்கிய சில போட்டிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • கடந்த 2005-இல் பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் போட்டியில், முதல் முறையாக மூன்றாவதாக களமிறங்கிய தோனி 148 ரன்களை விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இது தான் ஆரம்பம். இதன் பின்னர் பல சர்வதேச ஒருநாள், டி-20 போட்டிகளில் தோனியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது.
விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி அடித்த சதம்  விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி அடித்த சதம்
  • அதே 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜெய்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த 3-ஆவது ஒருநாள் போட்டியில், இந்தியா 299 என்ற மிகப் பெரிய இலக்கை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 145 பந்துகளில், 10 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசி தோனி 183 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிக்கு பிறகு தோனி என்றாலே இலங்கை அணிக்கு சிம்மசொப்பனமாக ஆகிவிட்டது.
ஜெய்ப்பூரில் தோனி நடத்திய அதகளம் ஜெய்பூரில் தோனி நடத்திய அதகளம்
  • 2006-இல் பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு தோனி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இளம் வீரர்களின் ஆட்டமே பெரும் காரணமாக அமைந்தது. அடுத்த வந்த ஆண்டுகளில், இவ்விருவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.
அபார ஜோடியான தோனி மற்றும் யுவராஜ் அபார ஜோடியான தோனி மற்றும் யுவராஜ்
  • தென்னாப்பிரிக்காவில் 2007-ஆம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பையில் இளம் அணித்தலைவராக தோனி எடுத்த சில முடிவுகள், இந்தியா கோப்பையை வெல்ல பெரிதும் உதவியது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதியாட்டத்தில், பரபரப்பான தருணங்களில் மிகவும் பக்குவப்பட்ட அணித் தலைவராக நடந்து கொண்ட தோனியின் தலைமைப் பண்பு , அதற்கு பிறகு பல ஆண்டுகள் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்தியா 2007 டி-20 உலக கோப்பையை வெல்ல பெரிதும் உதவியது தோனியின் தலைமை  இந்தியா 2007 டி-20 உலக கோப்பையை வெல்ல பெரிதும் உதவியது தோனியின் தலைமை
  • ஆஸ்திரேலியாவில் 2008-ல் நடந்த சிபி ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு தோனியின் பேட்டிங் மற்றும் அணி வீரர்களை அரவணைத்து செல்லும் அவரது தலைமைப் பண்பு ஆகியவை காரணங்களாக அமைந்தன. சிபி தொடரில் இறுதியாட்டங்களில் தோனியின் விக்கெட் கீப்பிங் பாராட்டுக்களை பெற்றது.

2008 சிபி தொடரில் தோனி

 2008 சிபி தொடரில் தோனி
  • யாருமே மறக்க முடியாத போட்டி, 2011 ஒருநாள் உலக கோப்பை இறுதியாட்டம் தான். இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 274 ரன்கள் எடுக்க, ஆட்ட வரிசையில் ஐந்தாவது களமிறங்கிய தோனி சற்றும் நிதானம் இழக்காமல் இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளித்தார். முத்தையா முரளிதரனின் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடிய தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவர் அடித்த சிக்ஸர் இந்தியாவுக்கு வெற்றியையும், உலக கோப்பையும் பெற்றுத் தந்தது.
2011 உலக கோப்பை இறுதியாட்டத்தில் 91 ரன்கள் எடுத்த தோனி  2011 உலக கோப்பை இறுதியாட்டத்தில் 91 ரன்கள் எடுத்த தோனி
  • இங்கிலாந்தில் 2013-இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது. இந்த தொடரில் தோனியின் பேட்டிங் மற்றும் தலைமை பண்பு ஆகிய இரண்டுமே சிறப்பாக இருந்தது.

 

2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையுடன் தோனி

 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையுடன் தோனி

  • இந்திய அணிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளை ஈட்டியது போல சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியின் தலைவராக பல வெற்றிகளை தோனி குவித்துள்ளார். 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகள் ஐபிஎல் கோப்பையையும், 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி வென்றது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணித் தலைவராக தோனி

 சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்

 

http://www.bbc.com/tamil/sport-38515234

Link to comment
Share on other sites

டிசம்பர் 23 2004ல் இருந்து ஜனவரி 04 2017 வரை.. தோனியின் கேப்டன் பயணம்! #MSD #ThankYouDhoni

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் மக்களின் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இந்திய அணிக்காக அவர் விளையாடிய முதல் போட்டியிலிருந்து கிரிக்கெட்டில் அவர் கடந்து வந்த பாதையில் மிகமுக்கியமான தருணங்களைத்  திரும்பிப் பார்க்கலாம் வாங்க...

கோப்பைகளுடன் தோனி

டிசம்பர் 23, 2004 : தனது முதல் சர்வதேசப் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக களமிறங்கினார் மகேந்திர சிங் தோனி. முதல் போட்டியிலேயே அவர் பெற்ற பரிசு 'கோல்டன் டக்'.

ஏப்ரல் 5, 2005 : விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தார் தோனி.

அக்டோபர் 31, 2005 : இலங்கைக்கு எதிரான போட்டியில் வெறும் 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடினார் தோனி. அவர் செய்த தரமான சம்பவங்களில் முக்கியமான சம்பவம்.

செப்டம்பர் 13, 2007 : இளைஞர்கள் நிறைந்த இந்திய டி20 அணிக்கு முதல்முறையாகத் தலைமை தாங்கினார் மஹி.

செப்டம்பர் 24, 2007 : ஐசிசியின் முதல் டி20 உலகக்கோப்பையை கெத்தாய் வென்று காட்டியது கேப்டன் கூல் தலைமையிலான இந்திய அணி. கோப்பையைக் கையில் தூக்கிக்கொண்டு தோனி சிரிக்கும் அந்த போட்டோ நம் நினைவிலிருந்து அழியாத ஒன்று.

டி20 உலகக்கோப்பை பெற்றுத்தந்த தோனி

செப்டம்பர் 29, 2007 : இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் கேப்டன் ஆனார். வாவ்...!

அக்டோபர் 2, 2007 : கேப்டனாக தோனி தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

நவம்பர் 15, 2007 : எம்.எஸ்.டி தலைமையில் முதல் ஒருநாள் போட்டித்தொடரை வென்றது இந்திய அணி.

மார்ச் 4, 2008 : ஆஸ்திரேலியா மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி. 

நவம்பர் 26, 2008 : தோனியின் அணி அடித்த முதல் ஒயிட் வாஷ்.  5-0 என்ற கணக்கில் 'தி இன்வின்ஸிப்ள்ஸ்' இங்கிலாந்தைத் தெறிக்கவிட்டது.

நவம்பர் 8, 2009 : முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் போட்டித்தொடரை இழந்தார் தோனி. 2-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அந்த தொடரை வென்றது.

ஜூன் 24, 2010 : தனது முதல் ஆசியக்கோப்பையை வென்றார்.

ஏப்ரல் 2,2011 : 28 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றனர் மென் இன் ப்ளூ. இறுதிப்போட்டியில் 79 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்து கலக்கி 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருதையும் தட்டி சென்றார். அதே போட்டியில் கவுதம் காம்பீர் அடித்த 97 ரன்களும் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகும்.

உலகக்கோப்பையுடன் தோனி

ஜூன் 23, 2013 : தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபியையும் வென்றது. அதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய ஐசிசியின் மூன்று மிகப்பெரிய கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற மிகப்பெரும் சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி.

மார்ச் 26, 2015 : ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடந்து போட்டியில் இருந்து வெளியேறியது அப்போதைய நடப்பு சாம்பியனான இந்திய அணி.

ஜூன் 21, 2015 : வங்காளதேச அணியிடம் வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி.

ஜனவரி 31, 2016 : ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி  1 - 4 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. அதற்கு பழிவாங்கும் விதமாக 3-0 என டி20 தொடரில் வெச்சு செய்து விட்டு வீடு திரும்பியது இந்திய அணி.

மார்ச் 6, 2016 :  இரண்டாவது முறையாக ஆசியக்கோப்பையை வென்று தந்தார்.

மார்ச் 31, 2016 : டி20 உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது தோனி தலைமையிலான அணி.

அக்டோபர் 29, 2016 : நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.

ஜனவரி 4, 2017 : லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் தோனி.

http://www.vikatan.com/news/sports/76989-timeline-of-dhonis-limited-over-career.art

Link to comment
Share on other sites

'கணவரை முழு நேர கேப்டனாக தந்தீர்கள்!' - சாக்‌ஷி தோனிக்கு நன்றி

கேப்டன் தோனி மற்றும் சாக்‌ஷி

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி அவரது ரசிகர்களை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். இதுதான் நேற்றைய ஹாட் ட்ரெண்டிங் டாப்பிக். அவருடைய இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பல பிரபல ஜாம்பவான்கள் வரை ட்விட்டரில்  தோனியின் புகழைப் பாட, தோனியின் மனைவி சாக்‌ஷி, அழகான, கம்பீரமான ட்வீட்டை ட்வீட்டி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார்.

'நீங்கள் உயரே செல்வதை, எவ்வளவு பெரிய மலை சிகரங்களாலும் ஈடுகட்ட முடியாது' என, பல இதய வடிவ எமோடிகான்களுடன் சொல்லும் அவரின் ட்வீட் அத்தனை அழகு. தோனியின்  பல வெற்றிகளிலும், சர்ச்சைகளின்போது உடன் இருந்து வந்தவர் சாக்‌ஷி.

சாக்‌ஷி, தோனியை போல செம்ம கூல் என்பார்கள். 2015 உலகக் கோப்பையின்போது சாக்‌ஷிக்கு குழந்தை பிறக்க, தோனியோ ஆஸியில் பிஸியான பேட்ஸ்மேனாக பந்தாடிக் கொண்டிருந்தார். 'ஐயம் ஆன் நேஷனல் டியூட்டி' என்று தோனி கூற, அவரின் அந்தப் பொறுப்பை உணர்ந்து, சூழலை சாக்‌ஷி அழகாக உள்வாங்கிக்கொண்டது, அவர்களுக்கு இடையேயான புரிதலை உலகுக்கு சொன்ன தருணம்.

p30c_15349.jpg

பொதுவாக, பிரசவ நேரத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சொந்தங்களைவிடவும், தன் கணவரின் கைகளைப் பற்றிக்கொள்ளதான் ஒவ்வொரு பெண்ணும் துடிப்பாள். அப்படி ஒரு பெண்ணாக சாக்‌ஷி இருந்திருந்தால், நாம் அருமையான கேப்டனை மிஸ் செய்திருப்போம், கூடவே பல வெற்றிகளை. ஆனால் தோனியின் கனவுகளுக்காக தன் சந்தோஷங்களை, கனவுகளை கரையவிட்டார் சாக்‌ஷி. தன் கணவரை, அந்த ஸ்தானத்துக்குரிய பொறுப்புகளால் இறுக்காமல், ரசிகர்களுக்கு முழுநேர கேப்டனாகத் தந்தார்.

2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தன் எண்ணத்தை, சக வீரர்களுக்கு அறிவிக்கத் தயங்கிய தோனியின் பின்னால் பலத்தோடு நின்றது சாக்‌ஷி மட்டுமே. அதன் பிறகே தன் சக வீரர்களுக்கு தன் ஓய்வை அறிவித்தார் தோனி. இக்கட்டான சூழ்நிலைகளில் கணவருடன் இருந்ததுடன், தோனிக்குக் கிடைத்த கொஞ்சமே கொஞ்சம் 'ஃபேமிலி டைம்'களில் தன் குடும்பத்தின் சந்தோஷத்தை குறையாத காதலோடு தக்கவைத்துக் கொண்டார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, அதில் சாக்‌ஷியின் கேரக்டரை அப்படியே பிரபதிலிக்க வைக்க அதிக சிரமப்பட்டார்களாம். காரணம், உண்மையான சாக்‌ஷியை திரையில் பிரதிபலிப்பது அத்தனை கடினம் என்பதுதானாம்.

தோனியின் மனைவியாக இருக்கும்போது லைம்லட்டில்தான் இருந்தாக வேண்டும். தன்னுடைய ப்ரைவசிகளையோ, ஆசாபாசங்களையோ பொதுவெளிகளில் காட்டிக்கொள்ள முடியாது. ஆனால் அதையெல்லாம் புன்னகையோடு, குட்டிக் கண்களோடு எதிர்கொண்ட சாக்‌ஷி, சிறந்த தாயாகவும், மிகச் சிறந்த மனைவியாகவும் பரிமளித்தார்.

தோனிக்களின் பலம் சாக்‌ஷிகளும்தான்!

 

http://www.vikatan.com/news/womens/76971-sakshi-gave-us-dhoni-a-full-time-captain.art

Link to comment
Share on other sites

உங்களுக்குக் கோபமே வராதா தோனி? சொல்லுங்க நீங்க ராஞ்சில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

'மகேந்திர சிங் தோனி' என வீட்டில் இவரைப் பெயரிட்டு அழைத்தாலும் ரசிகர்கள் இவரை 'தல', 'கூல் கேப்டன்', 'மகி', 'எம்.எஸ்.டி' என்று பல பெயரிட்டு செல்லமாக அழைத்தனர். இவர் விளையாடும்போது மைதானத்தில் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதை மிகவும் எளிமையான முறையில் கையாளுவார். அதனால் இவரைச் செல்லமாக 'கூல் கேப்டன்' என்றும் அழைத்தனர். சமீபத்தில் இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தகவல், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. சில வருடங்களுக்கு முன் சச்சினின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே சிலர் கிரிக்கெட் பார்த்தனர். அதேபோல் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கிக்கொண்டார் 'மகி'. 

தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் வேற மாறி :

தோனி

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு முனையில் ரோகித் ஷர்மாவும் மறுமுனையில் எம். எஸ். தோனியும் ஆடிக்கொண்டிருந்தனர். ரோகித் ஷர்மா அருகே அடித்துவிட்டு சிங்கிள் ஓடி வந்தபோது, வழியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் 'முஸ்தாபிஸர் ரஹ்மான்' குறுக்கே நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து எச்சரித்தார் ரோகித் ஷர்மா. சிறிதுநேரம் ஏற்பட்ட சலசலப்பை நடுவர்கள் தீர்த்துவைத்தனர். அடுத்த பந்தில், தோனியும் அதே போல் அடித்துவிட்டு சிங்கிள் ஓடி வர முயற்சித்தார். குறுக்கே நின்ற பவுலரை முட்டித் தள்ளிவிட்டு தனது ரன்னை எடுத்தார். அப்படி நடந்துகொண்டதற்காக அபராதமும் கட்டினார் தோனி. 

இறுக்கிப் பிடி முறுக்கி அடி :

ஹெலிகாப்டர் ஷாட்

தோனியின் தனித்துவத்தில் இதுவும் ஒன்று. ஏன் அவரது முத்திரை என்றுகூட சொல்லாம். அதுதான் 'ஹெலிகாப்டர் ஷாட்'. ஹெலிகாப்டரின் ரெக்கைகள் எப்படிச் சுற்றுமோ அதே முறையை கிரிக்கெட்டில் பந்தை அடிப்பதற்குப் பயன்படுத்தினார் தோனி. அது அவரின் நண்பரான 'லால்' சொல்லிக் கொடுத்த முறை. சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 'லால்'. செலவு முழுவதையும் தோனியே பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 2013-ல் இறந்துவிட்டார் லால்.

28 வருடங்களுக்குப் பிறகு :

 உலகக் கோப்பை

வெற்றியோ தோல்வியோ தோனியின் ஆட்டத்தில் சிறிதளவுகூட வித்தியாசம் இருக்காது. கடைசிப் பந்துவரை போராடக்கூடிய மனிதர்தான் தோனி. அப்படி இவர் போராடி வென்ற மேட்ச்சில் ஒன்றுதான் 2011 உலகக் கோப்பை. ஓப்பனிங் பேட்ஸ்மேன் சச்சின், சேவாக் இருவரும் ஏமாற்றிவிட... கவுதம் கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 ரன்களில் அவுட்டானார். ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க யுவராஜ் சிங்கிற்குப் பதில் களமிறங்கினார் தோனி. ஆச்சரியம் கலந்த பயத்தில் ரசிகர்கள் ரியாக்ட் செய்தனர். ஒவ்வொரு பந்தையும் மிகவும் பொறுப்பான முறையில் கையாண்டார் தோனி. மெதுவாக இலக்கை நோக்கிப் பாயத் தொடங்கியது இந்தியா. பந்தும் ரன்னும் ஒரே நிலையில் இருப்பதை அறிந்த ரசிகர்களுக்குப் பயம் குறையத் தொடங்கியது. முடிவில் 11 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. தோனி பேட்டிங் சைடில் இருக்க குலசேகரா பந்து வீசத் தயார் நிலையில் இருந்தார். பந்து தோனியை நோக்கி வீசப்பட்டது. அதைத் தன் ஸ்டைலில் சிக்ஸிற்கு விரட்டி, இந்தியாவின் வெற்றியை சரித்திரத்தில் இடம் பெறச் செய்தார் தோனி. வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்களும் இந்திய வீரர்களும். பெவிலியனிலிருந்து ஓடிவந்து தோனியைத் தழுவி கட்டியணைத்தார் ஒரு மனிதர் அவர் தான் 'சச்சின் டென்டுல்கர்'. அதைப் பார்த்த ஒவ்வொரு இந்தியரின் கண்ணும் கண்ணீரில் மிதக்கத் தொடங்கியது. சச்சினின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியதோடு, உலகக்கோப்பையை சச்சின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தார் தோனி.

 

எம். எஸ். தோனி தி அன்டோல்டு ஸ்டோரி :

எம். எஸ். டி

தோனியின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கூடும் என்ற கேள்விக்கு இந்தப் படம்தான் சிறந்த பதில். இவரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை. இவர் எப்படி கிரிக்கெட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார், இவர் சிறு வயதில் கிரிக்கெட்டிற்குள் நுழைய இவர் செய்த தியாகங்கள், கஷ்டங்கள், இவரின் குடும்ப நிலை, காதல், நண்பர்கள் என அனைத்தும் படத்தில் கலவையாக இடம்பெற்றிருந்தன. என்னதான் மூன்றுமணி நேரம் தியேட்டரில் படம் ஓடினாலும் கடைசி ஐந்து நிமிடங்கள்தான் ரசிகர்களுக்குச் சிறந்த விருந்தாக அமைந்தது. படம் முழுவதும் ரீல் தோனி நடித்துவந்த நிலையில் கடைசி ஐந்து நிமிடங்கள் ரியல் தோனியின் என்ட்ரி. திரையில் தோனியைக் கண்ட ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் குழந்தை போல் துள்ளிக் குதித்தது. மைதானத்தில் அவர் சிக்ஸர் அடித்தால் அரங்கம் எப்படி அதிருமோ அதேபோல் தியேட்டரே அதிர்ந்தது.

பின்னாடியும் கண்ணு :

27Dhoni-run-out_17359.jpg

இவரது சிறப்பம்சத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதும் ஒன்று. இவர் விக்கட் கீப்பராக நின்றுகொண்டிருந்தால் எதிர் அணியில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு அல்லுதான். ஏனென்றால் ஒரு செகண்ட் க்ரீஸை விட்டுத் தள்ளிப்போனாலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். நேருக்கு நேர் மட்டுமில்லாமல் ஸ்டம்பைப் பார்க்காமலே ரன் அவுட் ஆக்குவதிலும் கெட்டிக்காரர். நியூஸுலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 'ராஸ் டெய்லர்' அடித்த பந்தை 'குல்கர்னி' தூரத்தில் இருந்து தோனியை நோக்கி எறிய அதை திரும்பிப் பார்க்காமலேயே ஸ்டம்பில் அடித்து கெத்து காட்டினார் நம்ம தல தோனி.

http://www.vikatan.com/news/miscellaneous/76984-dont-you-lose-your-temper-mrcool-dhoni-.art

Link to comment
Share on other sites

டோனி தான் எப்போதும் என்னுடைய கேப்டன்: கோலி

நீங்கள் தான் எப்போதும் என்னுடைய கேப்டனாக இருக்கிறீர்கள் என வீராட்கோலி டுவிட்டரில் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

 
டோனி தான் எப்போதும் என்னுடைய கேப்டன்: கோலி
 
மும்பை:

இந்திய கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டோனி திடீரென அறிவித்தார்.

இது ரசிகர்களுக்கு பேரும் அதிர்ச்சியை அளித்தது. கேப்டன் பதவியில் அவர் செய்த சாதனைகளை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். டோனி விலகலால் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு வீராட்கோலி கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

இந்த நிலையில் வீராட்கோலி டுவிட்டரில் டோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் தான் எப்போதும் என்னுடைய கேப்டனாக இருக்கிறீர்கள். எப்போதும் இளம் வீரர்களுக்கு தலைவராக இருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று புகழ்ந்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/06120808/1060452/Youll-always-be-my-captain-Virat-Kohli.vpf

Link to comment
Share on other sites

தோனியின் 5 புத்திசாலித்தனமான முடிவுகள்! (வீடியோ இணைப்பு)

 

 
drs11

 

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஒரு கேப்டனாக தோனியின் மகத்தான 5 தருணங்கள்!

2007 டி20 உலகக்கோப்பை இறுதிச்சுற்று

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக ஜொகிந்தர் சர்மாவை அழைத்தார் தோனி. முதல் 2 பந்துகளில் 7 ரன்கள். பதற்றத்தில் இருந்தார்கள் இந்திய ரசிகர்கள். ஆனாலும் மிஸ்பா வீழ்ந்தார். இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. தோனி என்கிற மகத்தான தலைவன் பிறந்தான் அந்த நொடியில்.

2011 உலகக்கோப்பை இறுதிச்சுற்று

275 ரன்கள் இலக்கு. சச்சினும் சேவாக்கும் அதிக ரன்கள் குவிக்கவில்லை. யுவ்ராஜ் சிங்குக்கு முன்பாக களமிறங்கினார் தோனி. 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அந்தக் கடைசி சிக்ஸர்! ஆ! மறக்கமுடியுமா?

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிச்சுற்று

18 பந்துகளில் 28 ரன்கள். 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இங்கிலாந்து அணி நிச்சயம் ஜெயிக்கும் என்கிற நிலைமை. 18-வது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தார் தோனி. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த். கோப்பையை வென்றது இந்தியா. 

2013 முத்தரப்புப் போட்டி

இறுதிச்சுற்றில் இலங்கையுடன் மோதியது இந்தியா. இலங்கை 201 ரன்கள் எடுத்தது. ஆனால் 182 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கடைசியாக தோனியும் இஷாந்த் சர்மாவும் மட்டுமே. 18 பந்துகளில் 19 ரன்கள் தேவை. 48-வது ஓவரை மலிங்கா வீசினார். சிங்கிள் ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் இஷாந்த் சர்மா, மலிங்கா பந்துவீச்சை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தார் தோனி. இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. எரங்கா வீசியா அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார் கேப்டன் கூல். 


2016 டி20 உலகக்கோப்பை

ரசிகர்களால் இந்த ஆட்டத்தையும் கடைசிப் பந்தையும் மறக்கவேமுடியாது. வங்கதேசத்துக்கு மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை. ஆனால் அடுத்த இரு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. கடைசிப் பந்தின்போது கையுறைக் கழற்றினார் தோனி. இதுதான் நடக்கும் என்பதை அவர் முன்பே கணித்திருந்தார். பேட்ஸ்மேனால் அந்தப் பந்தை எதிர்கொள்ளமுடியவில்லை. கடைசிப் பந்து அவரிடமே சென்றது. ஆனாலும் ரன் எடுக்க முயன்றார்கள் வங்கதேச வீரர்கள். ஆனால் பாய்ந்துவந்து ஸ்டம்பை வீழ்த்தினார் தோனி. அடடா! என்ன ஒரு காட்சி!

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

டோனியின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது எளிதான காரியம் அல்ல: அஸ்வின் பேட்டி

 

‘வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனியின் சாதனைகளை மற்றவர்கள் எட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல’ என்று இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 
 
டோனியின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது எளிதான காரியம் அல்ல: அஸ்வின் பேட்டி
 
சென்னை :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வினை, ஐ.டி.டபிள்யூ என்ற விளையாட்டு ஆலோசனை நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து அந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர் பைரவ் ஷாந்த் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பெற்ற அஸ்வினுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அவரை விளம்பர தூதராக நியமிக்க பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இந்த ஆண்டுக்குள் அவர் சுமார் 15 நிறுவனங்களின் விளம்பர தூதராக நியமிக்கப்படுவார். வரும் காலங்களில் அவர் அதிக விளம்பரங்களில் தோன்றும் வீரராக இருப்பார்’ என்றார்.

பின்னர் அஸ்வின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய விளம்பர ஒப்பந்தத்தில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் அகாடமியை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வரும் நான் எனது பெயரில் புதிய அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். இந்த அறக்கட்டளை மூலம் ரத்ததானம், கண்தானம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு உள்ளிட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இது தவிர எங்களது கவனத்துக்கு வரும் சமூக பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்.

கடந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. அதேபோல் இந்த ஆண்டும் நன்றாக விளையாட கடினமாக உழைப்பேன். அதற்கான திட்டம் வகுத்து இருக்கிறேன். அதன்படி செயல்பட்டு என்னுடைய இலக்குகளை அடைய முயற்சிப்பேன். எனது பேட்டிங் முன்னேற்றத்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அளித்த ஆலோசனை உதவிகரமாக இருந்தது. தற்போது நான் சிறப்பாக பந்து வீசி வந்தாலும், இதை என்னுடைய சிறந்த பந்து வீச்சு என்று சொல்லமாட்டேன். என்னுடைய மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும் தருணம் விரைவில் வரலாம்.

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக டோனி தொடருவார். டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமானது, ஒப்பிடமுடியாதது. கேப்டன் பதவியில் அவர் தலைசிறந்து விளங்கினார். மற்ற துறையை சேர்ந்த தலைவர்கள் கூட டோனியிடம் இருந்து கற்றுகொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. டோனிக்கு சமமாக யாரும் செயல்பட முடியுமா?, அவரை போல் கேப்டன் பதவியில் சாதனைகள் படைக்க முடியுமா? என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் அவரை போன்று சாதிப்பது என்பது இமாலய இலக்காகும். நிச்சயமாக அதனை எட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல.

டோனியின் இடத்தை நிரப்ப யாராவது ஒருவர் வருவார்கள். விராட் கோலியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஒரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விராட்கோலியின் செயல்பாடுகளை பார்த்தால் அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியின் கேப்டன் பதவியையும் ஏற்க தகுதியான நபர் என்பது தெரியும். இதனை அறிந்து தான் டோனியும் கேப்டன் பதவியை துறந்து இருப்பார் என்று கருதுகிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகியது டோனியின் தனிப்பட்ட முடிவு. தனிப்பட்ட முடிவுகளில் நாம் எப்பொழுதும் அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். டோனியின் தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

டுவிட்டரில் நீங்கள் நன்றாக கலாய்க்கிறீர்களே? அதற்காக பிரத்யேக பயிற்சி எதுவும் எடுத்து இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு அஸ்வின் பதிலளிக்கையில், ‘நான் கொஞ்சம் குசும்புக்காரன். படங்களில் காமெடி காட்சிகளை ரசித்து பார்க்கும் பழக்கம் உடையவன். என்னை யாரும் சீண்டினால் அவர்களுக்கு நக்கலாக பதில் சொல்வது எனது பாணியாகும். அதனை தான் டுவிட்டரிலும் கடைப்பிடிக்கிறேன்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/07092053/1060637/not-an-easy-break-Dhoni-record-Ashwin-Interview.vpf

Link to comment
Share on other sites

தோனி என்னும் தன்நிகரில்லா தலைவன்

 

 
dhoni_3114554f.jpg
 
 
 

மகேந்திர சிங் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்திய கிரிக்கெட் நெருக்கடியில் இருந்தது. 2007 உலகக் கோப்பையில் படுதோல்வி பெற்றிருந்த இந்திய அணி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்த நிலையில் தோனி பொறுப்பேற்றார். உலகக் கோப்பைக்குப் பின்னரும் ராகுல் திராவிடே தலைவராக நீடித்தாலும் 2007-ல் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தலைவர் யார் என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்தது. சச்சின் டெண்டுல்கர், திராவிட், சவுரவ் கங்கூலி ஆகிய மூவரும் இதில் ஆடப்போவதில்லை என்று சொல்லிவிட்ட நிலையில் இந்தப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்தது. திராவிடிடமும் சச்சினிடமும் இது குறித்துத் தனித்தனியே கருத்து கேட்கப்பட்டது. இருவரும் சொன்ன ஒரே பெயர் தோனி.

யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் ஆகிய மூத்த வீரர்கள், தங்கள் திறனைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருந்தார்கள். என்றாலும் இந்தியாவின் இரு பெரும் மட்டையாளர்கள் இளம் வீரர் தோனியைச் சிபாரிசு செய்தார்கள் என்றால் அந்த வயதிலேயே தோனியிடம் வெளிப்பட்ட தலைமைப் பண்புதான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சிபாரிசு சரியானது என்பதை தோனி நிரூபித்தார். காலமும் நிரூபித்தது. ஐ.பி.எல். போட்டிகளில் ஒரே சமயத்தில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், தோனி ஆகியோர் தலைவர்களாக இருந்தபோது அவர்களுடைய தலைமைப் பண்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்பைக் காலம் வழங்கியது. இவர்களில் யார் சிறந்த தலைவராக உருவெடுத்தார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புதிய தலைமை புதிய பயணம்

உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய அவமானம் என்னும் சிக்கலான காலகட்டத்தில் இருந்த இந்திய அணி, தோனியின் தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துத் தலை நிமிர ஆரம்பித்தது. 2007 டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடங்கிய அந்த வெற்றி ஒருநாள் போட்டிகளுக்கான 2011 உலகக் கோப்பை வெற்றியில் உச்சம் தொட்டது. இன்னொரு புறம் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தது. 2012-ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலும் அணி வெற்றி வாகை சூடியது.

அணி விளையாட்டுகளில் வெற்றி, தோல்வியை முறையே ஒரு தலைவரின் தோள்களின் மீது மாலையாக அல்லது பாறாங்கல்லாக மாற்றிவிடுவது முறையல்ல. அணி எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவே தலைவரும் நல்ல தலைவராக அடையாளம் காணப்படுவார் என்று சொல்லப்படுவது ஆழ்ந்த பொருள் கொண்டது. தோனியின் அணிகளில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் சிறப்பாகவும் ஆடினார்கள். சச்சின், திராவிட், சேவாக், ஹர்பஜன், யுவராஜ், காம்பீர், ஜாகீர் கான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். எனினும், தோனியின் தலைமைப் பண்புகள் வெற்றி, தோல்விகளைத் தாண்டியும் பிரகாசிப்பவை.

தோனியின் தனித்தன்மை

வெற்றி, தோல்வியை மட்டும் வைத்து ஒருவரது தலைமைப் பண்பை மதிப்பிட்டுவிடக் கூடாது. 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இறுதி ஓவரை ஜோகீந்தர் சிங்கை வீசச்செய்தது, 2011 இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்பு களம் இறங்கியது, 2012 இறுதிப் போட்டியில் சேவாகை நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நம்பியது ஆகிய முடிவுகள் தோனியின் தலைமைச் சிறப்பின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், இந்த மூன்று முடிவுகளுமே வெற்றிபெற்றதால்தான் பாராட்டப்படுகின்றன. ஆட்டத்தில் எந்த உத்தியும் வெற்றிக்கு உத்தரவாதமானதல்ல. ஜோகீந்தரின் பந்தை மிஸ்பா உல் ஹக் ஆடிய விதம் மிகவும் தவறானது.

அவர் வேறு மாதிரி ஆடியிருந்தால் முடிவும் வேறு மாதிரி ஆகியிருக்கலாம். அதுபோலவே யுவரா சிறந்த ஃபார்மில் இருந்தபோது, முத்தையா முரளிதரனின் பந்தைத் தன்னால் யுவராஜைக் காட்டிலும் நன்றாக எதிர்கொள்ள முடியும் என்ற கணக்கில் யுவராஜுக்கு முன்னால் இறங்கிய முடிவும் வெற்றிபெற்றதாலேயே பாராட்டப்படுகிறது. எந்த ஒரு மட்டையாளரும் எதிர்பாராத விதத்தில் ஆட்டமிழந்துவிடலாம். தோனிக்கும் அது நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனாலேயே அந்த முடிவு தவறு என்று ஆகிவிடாது.

தோனி எடுத்து துணிச்சலான சில முடிவுகள் வெற்றிதேடித் தந்ததால் அதிகம் நினைவுகூரப்படுகின்றன. அவர் எடுத்த முடிவுகள் வெற்றி தேடித் தராதபோது அதிகம் விமர்சிக்கப்பட்டன. இவை இரண்டுமே பிழையான அணுகுமுறை. கடைசியில் என்ன நடந்தது எனபதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு செயல்பாட்டை எடைபோட முடியாது. எனில், தோனியின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்னும் கேள்வி எழுகிறது.

தோனி வித்தியாசமாகச் சிந்திக்கிறார். ஒரு நெருக்கடிக்கு ஆகிவந்த தீர்வுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் புதிய தீர்வுகளை அவர் மனம் எப்போதும் நாடுகிறது. இந்த அணுகுமுறைதான் அவரது சிறப்பு. தான் எடுத்த முடிவு எதிர்பார்த்த பலனைத் தந்தபோதும் தராதபோதும் அவர் நிதானம் தவறுவதில்லை. சறுக்கல்களையும் மீறிப் பரிசோதனை செய்துகொண்டே இருந்தார்.

பதறாத மனமும் பக்குவமும்

நெருக்கடிகளின்போது பதற்றத்துக்கு ஆளாகும் தலைவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். சிறப்பான அணியை வைத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருந்த ஸ்டீவ் வா, ரிக்கி பான்டிங் ஆகியோரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அந்த அளவுக்கு வலுவான அணி இல்லாத நிலையிலும் தோனி பொதுவாகப் பதற்றமடைந்ததில்லை. நம்பிக்கையை இழந்ததில்லை.

தன்னை விடவும் பல ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தலைமை தாங்கும் பக்குவம் தோனிக்கு இருந்தது. மூத்தோருக்கான மரியாதையை வழங்குவதில் குறை வைக்காத அவர், களத்தில் முடிவுகளை எடுக்கவும் தயங்கியதில்லை. அவரது இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் சச்சின், திராவிட் போன்ற யாரேனும் நிழல் தலைவராகச் செயல்படும் நிலை வந்திருக்கலாம். ஆனால், தோனி, ஒவ்வொரு கட்டத்திலும் தானே தலைவன் என்பதைக் காட்டினார். அதே சமயம் அடக்கமாகவும் நடந்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் 2007-08-ல் நடந்த முத்தரப்புப் போட்டியின்போது, தொடர்ந்து மூன்று போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடாதபோது அவரைப் பற்றி தோனியிடம் கேட்கப்பட்டது. “அவர் 16000 ரன் அடித்திருக்கிறார். நான் இன்னமும் 16000 பந்துகளைக்கூட எதிர்கொண்டதில்லை” என்றார் தோனி. அடுத்த ஆட்டங்களில் சச்சின் ஆடிய ஆட்டம்தான் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தது.

அணியிலிருந்து மூத்த வீரர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை இன்றளவிலும்பேசப்படுகிறது. அதில் தோனிக்கு இருந்திருக்கக்கூடிய பங்கை மறுக்க முடியாது. அதே சமயம், பழைய சாதனைகளைப் பாதுகாப்புக் கவசமாக யாரும் கொள்ள முடியாது என்பதையும் உணர்த்த வேண்டியபொறுப்பு அணித் தலைமைக்கு உண்டு. மூத்த வீரர்களின் ஆட்டத் திறனும், உடல் திறனும் குறைந்துவந்தாலும் அவர்களது சாதனைகளால் ரசிகர்களின் மனதில் அவர்களுக்கு நீங்காத இடம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்னும் அணுகுமுறையில் இத்தகைய சலுகைகளுக்கு ஒரு அளவுக்கு மேல் இடமிருக்க முடியாது. தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல் தலைவராக இருப்பதில் என்ன பொருள் இருக்கிறது?

அணி வெற்றி பெறும்போது ஆனந்தக் கூத்தாடுவது, தோற்கும்போது உலகமே கைவிட்டுப்போனதுபோல நடந்துகொள்வது ஆகிய இரண்டும் தோனியிடம் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் கிட்டத்தட்டச் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கிறது. வெற்றிக்கான பெருமையைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் பெருந்தன்மையும் தோல்வியின்போது பழையைப் பிறர் மீது போடாத குணமும் இருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின்போது தோனி அனேகமாகச் சற்று ஒதுங்கியே இருப்பார். தோல்வியின்போது முன்னால் வந்து நிற்பார்.

தோனியின் போதாமைகள்

தோனியின் தலைமை குறைகள் அற்றதல்ல. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் விழாத நிலையில் அவர் அதீதமான தற்காப்பு வியூகத்துக்குள் சென்றுவிடுவார். பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதத்தில் பல முறை அவரது முடிவுகள் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒரு நாள் போட்டிகளில் செய்ததுபோல டெஸ்ட் போட்டிகளில் அவர் மட்டை தீர்மானமாகப் பேசியது மிகவும் அரிது. 20 ஓவர் போட்டிகளில் சில சமயம் மட்டையாளர்களைக் களமிறக்கிய விதம் கேள்விக்குள்ளானது. மட்டை வீச்சிலோ பந்து வீச்சிலோ யாரையும் மெருகேற்ற அவர் பெரிதாக எந்தப் பங்களிப்பையும் ஆற்றியதாகத் தெரியவில்லை.

தோனிக்குத் தன்னுடைய வரையறைகள் தெரியும். குறிப்பாக மட்டை வீச்சில். எனவே எப்போது, எங்கே தன்னுடைய ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் மிகவும் துல்லியமாகச் செயல்படுவார். அதனால்தான் 2011-ல் செய்த சாகசத்தைப் போல அடிக்கடி அவர் செய்வதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்த உத்தி என்பதுதான் அவரது தாரக மந்திரம். இதில் தனிநபர்கள் – அவர் உள்பட – முக்கியமில்லை. இதுவே அவரது அணுகுமுறை. இந்த அணுகுமுறை ஆட்டத்தின் போக்கை அடியொற்றி இருக்கும். ஆளுமைகளை அல்ல. டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் முடிவையும் ஆட்டத்தின் குறு வடிவங்களுக்கான அணிகளின் தலைமைப் பொறுப்பைத் துறக்கும் முடிவையும் மிகச் சரியான நேரத்தில் அவர் எடுத்திருப்தைக் கவனிக்க வேண்டும். தன்னுடைய நிலையையும் அணியின் நிலையையும் ஆட்டத்தின் போக்கையும் காலத்தின் கட்டளையையும் நன்கு உணர்ந்த ஒருவராலேயே இவ்வளவு துல்லியமாக இத்தகைய முடிவுகளை எடுக்க முடியும்.

பதறாத பாங்கு, வித்தியாசமான, துணிச்சலான முடிவுகள், பொறுப்பேற்கும் தன்மை, சூழலுக்கேற்ற உத்திகள், ஆகியவற்றை தோனியின் தலைமைப் பண்பின் முத்திரைகளாகச் சொல்லலாம். இந்தியா கண்ட சிறந்த தலைவர் யார் என்பதற்கான விவாதம் அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடியதல்ல. இந்தக் களத்தில் டைகர் நவாப் கான் பட்டோடி, கபில்தேவ், சவுரவ் கங்கூலி ஆகியோர் தோனிக்கும் பலத்த போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால், தோனியின் தலைமை இவர்கள் அனைவரைக் காட்டிலும் வசீகரம் மிக்கது. காரணம், அதில் வியப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை. தோனியின் நிதானமும் அவரைத் தனித்துக் காட்டுகிறது. “அவர் பதறாதவர். ஆட்டத்தைப் பற்றிச் சிந்திப்பவர்” என்று 2007-ல் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரிடம் சச்சின் சொன்னார். சச்சினின் வாக்கை தோனியின் செயல்பாடுகள் மெய்ப்பித்திருக்கின்றன.

அண்மையில் இந்தியா 500-வது டெஸ்ட் போட்டியை ஆடியபோது பலரும் இந்தியாவின் கனவு அணியைத் தேர்ந்தெடுத்தார்கள். இதில் பெரும்பாலான நிபுணர்கள் தோனியைக் கனவு அணியின் தலைவராக மகுடம் சூட்டினார்கள். தோனி என்னும் தலைவரின் தகுதியைப் பறைசாற்ற இது ஒன்றே போதுமானது.

http://tamil.thehindu.com/sports/தோனி-என்னும்-தன்நிகரில்லா-தலைவன்/article9464775.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்..?

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்..?

கடந்த ஜனவரி 4- ஆம் தேதி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார்.அவர் விலகியதை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் கோலி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தோனி பதவி விலகியது அவரது சொந்த முடிவு அல்ல என்றும் பிசிசிஐ கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என்றும் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா கூறியுள்ளார். பிசிசிஐயின் இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தோனி இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/77285-reason-behind-quit-of-dhoni-from-capitaincy.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.