Sign in to follow this  
kayshan

அகதிக் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கை பெண்ணின் பரிதாப நிலை

Recommended Posts

அகதிக் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கை பெண்ணின் பரிதாப நிலை

2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர் எனவும் தெரியவந்துள்ளது. இத்தம்பதியினருக்கு என இரு குழந்தைகள். குழந்தைகளையும் கணவரையும் விட்டு குறித்த பெண் நாடுகடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குழந்தைகளுக்கும், பெண்ணின் கணவருக்கும் கனேடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.

அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

http://athavannews.com/?p=399221

 

Share this post


Link to post
Share on other sites

நாங்க என்ன யோசிக்கிறம் என்றால்.. இலங்கையில் இருந்து அகதின்னு வந்திட்டு அங்க கொலிடேக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் வாற எல்லாரின்ர பிரஜா உரிமைகள்.. அகதி அந்தஸ்துகளை எல்லாம் பறிச்சிட்டு.. கூண்டோட திருப்பி அனுப்ப உந்த உலக நாடுகள் ஒரு திட்டம் போடனும். அப்ப தான் உண்மையான அகதிகளை உள்வாங்க வசதியா இருக்கும். tw_blush:

சொறீலங்காவில தானே இப்ப எங்கட ஆக்களுக்கு பாலும் தேனும் ஓடுதே.. கொடுமை உங்க லண்டனில.. ரெஸ்ரோரண்ட் வழிய தண்ணி உள்ள இறங்கின உடன எங்கட ஆக்களுக்கு ஊர் போய் வந்த கதை கதையை சுவாரசியமா அடுத்தவனுக்கு கேட்க சொல்லாட்டி.. அதில என்ன பெருமை அப்பா. அப்படி இருக்கேக்க...இதெல்லாம்.. யு யு பி.

 கொலிடேக்கு போனதென்று நினைச்சுக்கிறது. :rolleyes:

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By akootha
   இலங்கைப் படையினர் மீதான பாரதூர குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை: கனடா

   இலங்கைப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

   இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த கனடா, ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

   இது தொடர்பாக இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு கூறுகையில், டிசெம்பர் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது மிக அவசியமான அரசியல் நல்லிணக்கத்துக்கு முக்கிய பங்களிப்பாகும். அதேவேளை, அறிக்கை மீதான எமது ஆரம்ப, வாசிப்பின்படி, இலங்கைப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும்; பாரதூரமான சர்வதேச "பிழையான செயல்கள்" தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற பார்வைக்கு ஆதரவளிக்கின்றன.

   'இந்த அறிக்கை தொடர்பான பதிலளிப்பை துரிதப்படுத்துமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். முக்கியமான பொறுப்புடைமை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது' என்றார்.

   http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/33073-2011-12-21-16-11-20.html