Jump to content

கனடாவிற்குச் செல்லவேண்டாமென வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்!

Recommended Posts

கனடாவிற்குச் செல்லவேண்டாமென வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக்கப்படாதநிலையில், குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளும் செயலானது கூட்டமைப்பினரைப் பலவீனப்படுத்தும் செயல் என்பதால் அங்கு செல்லவேண்டாமெனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் பிரித்தானிய நகரில் கையொப்பமிட்ட இரட்டை நகர ஒப்பந்தத்தினால் யாழ்ப்பான நகருக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=53605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்ய..உங்கடை ஆட்கள் இங்கை மைத்திரி வந்தால் சந்திக்கிறதுக்கு சண்டை பிடிக்கினம்....நல்லாட்சிக்கு முட்டுக்குடுக்கிற ஆட்களள்ளேஏ.... பிறகேன் விக்கிஅய்யாவை சந்திப்பான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T.N.T ..என்ற சைனீஸ் கடை எனக்கு கிட்ட இருக்கண்ணா...அது முழுக்க சீ னா மிக்ஸ்தான் ....அதுபோலை..

Link to comment
Share on other sites

கனடாவில் இருக்கும் சம்சும் கும்பலின் சுயநல போசகர்களுக்கு முதலமைச்சரின் விஜயம் பற்றி உதறல் எடுத்துவிட்டது.  

தங்கள் குடும்பத்தினருக்கு ஹிந்திய விசா எடுப்பதற்கும் பிள்ளைகளுக்கு ஹிந்திய பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கும் தடைகள் வருமோ அவர்கள் எனப் பயப்படுவது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி வேறு ஏதும் தளங்களில் வந்திருக்கா மகா ஜனங்களே/?

சைக்கிளுக்கு சப்போர்ட் பண்ணி அது காத்துப் போன பிறகு

ரிரிசி யின் அடுத்த கட்ட நடவடிக்கையில் உதித்தது தான் துளியம் இணையம்.

ஊடக தர்மம் எதுவுமின்றி த.தே.கூ பற்றி பொய் பேசும் போலி இணையம்.

இதில் ஜெரா என்று வன்னியில் இருந்து சைக்கிளுக்கு ஆதரவு கொடுத்து தோற்ற ஊடகவியலாளரும் அடக்கம்

த,தே,கூ வும் சம்பந்தனும் இன்று கையறு நிலையில் தான் இருக்கின்றார்கள் 

என்பதில் வேறு கருத்து இல்லை. ஆனால் இதை தவிர அவர்களுக்கு வேறு தெரிவும் இல்லை

தமிழ் மக்களுக்கும் வேறு தெரிவு இல்லை

சைக்கிள் கோஷ்டியும் அதற்காக பொய்யுரைக்கும் துளியமும் மக்களை விரோதிக்கின்றனர் 

மகிந்தவை வெல்ல வைக்க முயன்ற சைக்கிள் கோஷ்டியை விட த,தே,கூ நல்லம் என்றுதான் சனம் 

ஆதரிக்குது,அடுத்த முறையும் ஆதரிக்கும்.

ஆனால் சைக்கிள் கோஷ்டியை ஒருக்காலும் ஆதரிக்க போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உள்  காச்சல் போல கிடக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்ப ந்தன்..... 
விக்கி ஐயாவை, கனடாவுக்கு போக வேண்டாம் என்று  சொன்னதற்காக ஆவது,
விக்கி ஐயா... கனடாவுக்கு கட் டாயம்  போக வேணும்.
கனடாவில்  வைத்து, விக்கி ஐயாவுக்கு.... "நிரந்தர  வாழ்நாள் சாதனையாளர்"  போன்ற  விருது ஒன்று கொடுத்து....  
சம்பந்தனுக்கு.... கடுப்பு ஏத்தி விட வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
வெளிநாடு செல்ல வேண்டாம் என இரா.சம்பந்தன் கோரவில்லை : வடக்கு முதல்வர்
 
வெளிநாடு செல்ல வேண்டாம்  என  இரா.சம்பந்தன் கோரவில்லை : வடக்கு முதல்வர்
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தன்னிடம் கோரவில்லையென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு விஜயத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுமாறே இரா. சம்பந்தன் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவ் விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
 
இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக கூறிய வடமாகாண முதலமைச்சர், 
தான் இரா.சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுடன் இணங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டார். 
 
அதனை ஏற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு

 சென்றதும் அவர்களை அழைத்து இணைந்து செயலாற்றுமாறு கோரியிருந்தேன்.
 
ஆனால் தனது அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை. 
 
தாம் நாடு திரும்பும்போதும் அவர்களை அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என வலியுறுத்தியிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/23008

Link to comment
Share on other sites

கேள்வி செவிடன்கள் ஊரை கெடுத்த கதையாகத்தான் சிலரது கருத்துக்கள் .

On 4 janvier 2017 at 2:36 AM, போல் said:

கனடாவில் இருக்கும் சம்சும் கும்பலின் சுயநல போசகர்களுக்கு முதலமைச்சரின் விஜயம் பற்றி உதறல் எடுத்துவிட்டது.  

தங்கள் குடும்பத்தினருக்கு ஹிந்திய விசா எடுப்பதற்கும் பிள்ளைகளுக்கு ஹிந்திய பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கும் தடைகள் வருமோ அவர்கள் எனப் பயப்படுவது தெரிகிறது.

உங்களுக்குத் துணிவிருந்தால் ஆதாரத்தை போடவும் ,உங்களுடைய like க்கு சும்மா எழுதாதீர்கள் .இப்படித்தான் முதலிலும் ஒருவர் எழுதி ,நான் ஆதாரம் கேட்க அதட்கு பின்பு ஆளையே காணவில்லை .நிர்வாகம் பின்பு பதிவை நீக்கியது .முதலமைச்சர் சொல்லுவதில் உண்மைகள் கிடையாது ,அவர் கனடா வந்து TNA யை சார்ந்த எவரையும் தொடர்பு கொள்ளவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முதலமைச்சரை கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் இணங்கி செயற்படு என்பதே சுத்த கேனைத்தனம் அதுக்குள்ள இவர் தங்களை தொடர்பு கொள்ளவில்லையாம்.

48 minutes ago, Gari said:

கேள்வி செவிடன்கள் ஊரை கெடுத்த கதையாகத்தான் சிலரது கருத்துக்கள் .

உங்களுக்குத் துணிவிருந்தால் ஆதாரத்தை போடவும் ,உங்களுடைய like க்கு சும்மா எழுதாதீர்கள் .இப்படித்தான் முதலிலும் ஒருவர் எழுதி ,நான் ஆதாரம் கேட்க அதட்கு பின்பு ஆளையே காணவில்லை .நிர்வாகம் பின்பு பதிவை நீக்கியது .முதலமைச்சர் சொல்லுவதில் உண்மைகள் கிடையாது ,அவர் கனடா வந்து TNA யை சார்ந்த எவரையும் தொடர்பு கொள்ளவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்  இவர்களால்  என்னதான் நடந்து இருக்கு  ஆனால் இவர்கள் நல்லா நடத்துகிறார்கள் tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்  இவர்களால்  என்னதான் நடந்து இருக்கு  ஆனால் இவர்கள் நல்லா நடத்துகிறார்கள் tw_confused:

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்

என்னத்தை சொல்ல மீரா இவர்கள் பொங்கள் விழாவுக்கு மக்கள் செல்ல வில்லை  பஸ்ஸில ஏற்றி வந்ததாக கேள்விப்பட்டேன்  மக்களை  இவர்கள் மேல்  இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுகிறது    இலங்கை அரசாங்கத்தின் அரசியலுக்கு இவர்கள் சிங்சக் அவ்வளவுதான் 

இவர்களின் இப்படியான செயற்பாடுகள் மக்கள் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய, சுதந்திர கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்தப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இவர்களின் இப்படியான செயற்பாடுகள் மக்கள் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய, சுதந்திர கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்தப் போகிறது.

ஒரு சாதரண குடிமகனின் கருத்து கூட அப்படியே :104_point_left:

Link to comment
Share on other sites

Quote

பஸ்ஸில ஏற்றி வந்ததாக கேள்விப்பட்டேன்  

மகிந்தவை பிரதி பண்ணியதை மென்மையாக கண்டிக்கிறேன்.tw_blush:tw_yum:

Link to comment
Share on other sites

5 hours ago, Gari said:

கேள்வி செவிடன்கள் ஊரை கெடுத்த கதையாகத்தான் சிலரது கருத்துக்கள் .

உங்களுக்குத் துணிவிருந்தால் ஆதாரத்தை போடவும் ,உங்களுடைய like க்கு சும்மா எழுதாதீர்கள் .இப்படித்தான் முதலிலும் ஒருவர் எழுதி ,நான் ஆதாரம் கேட்க அதட்கு பின்பு ஆளையே காணவில்லை .நிர்வாகம் பின்பு பதிவை நீக்கியது .முதலமைச்சர் சொல்லுவதில் உண்மைகள் கிடையாது ,அவர் கனடா வந்து TNA யை சார்ந்த எவரையும் தொடர்பு கொள்ளவில்லை .

உங்களுக்குத் துணிவிருந்தால் சம்பந்தனை பகிரங்க களத்துக்கு நேரடியாக வரச் சொல்லுங்கள்! ஆதாரங்கள் முன்வைக்கப்படும் அப்போது.  ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதையும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இந்த நிபந்தனையுடன் தைரியம் இருந்தால் சம்பந்தனை பகிரங்க களத்துக்கு நேரடியாக வரச் சொல்லுங்கள்! நாம் தயார்.  

முதலமைச்சர் சொல்லுவதில் உண்மைகள் கிடையாது என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? அவர் கனடா வந்து TNA யை சார்ந்த எவரையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?
எதனை நாளைக்கு பழைய திரிவுசெய்யப்பட செய்திகளைக் காவிக்கொண்டு, ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட செய்திகளை காவிக்கொண்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.