Jump to content

உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard


Recommended Posts

உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard

ஜி-போர்டு கீ போர்டு

ண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான்.  இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம்.

டைப்பிங் வேகம் மற்றும் துல்லியம்:

ஜி-போர்டு மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுவதால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் டைப் செய்யத் துவங்கியதுமே பரிந்துரைக்கும். எனவே விரைவான சாட்டிங்கிற்கு உதவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், பெயர்கள், இடம் போன்றவற்றை இதன் மூலம் எளிதாக டைப் செய்துவிடலாம். ஆட்டோ கரெக்ஷன் ஆப்ஷனும் இதில் இருக்கிறது. ஆனால் இதனால் நடக்கும் காமெடிகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். தங்கிலீஷ்-ல் டைப் செய்து, சாட் செய்பவர்களுக்கு ஆட்டோ கரெக்ஷன் சரிப்பட்டு வராது.

கூகுள் சர்ச்:

ஜி-போர்டு கீ-போர்டு

ஏதேனும் இடம், செய்திகள் போன்றவற்றை காப்பி செய்து, தனியே கூகுள் சர்ச்சில் போட்டு எல்லாம் இனி தேட வேண்டாம். உங்கள் கீ-போர்டிலேயே கூகுள் சர்ச்க்கான G குறியீடு இருக்கும். நீங்கள் தேட வேண்டிய விஷயங்களை இதிலேயே இனி தேடலாம். செய்தி, பருவநிலை, முகவரிகள் போன்றவற்றைக் கூட இதிலேயே தேடி, அப்படியே ஷேர் செய்ய முடியும். 

உதாரணத்திற்கு வாட்ஸ்அப் சாட்டிங்கில் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, கோலி சதம் அடித்துவிட்டால், அந்த ஸ்கோர் விவரங்களை சர்ச்சில் தேடி, அப்படியே நண்பருடன் பகிர முடியும்.

மொழிகள்:

ஜி-போர்டு கீ-போர்டு

கூகுள் கீ-போர்டில் தற்போது உலகின் பெரும்பாலான மொழிகள் அனைத்துமே டைப் செய்யலாம். தமிழ் உட்பட உங்களுக்கு எந்தெந்த மொழிகள் எல்லாம் வேண்டுமோ, அவை அனைத்தையும் Languages ஆப்ஷன் சென்று தேர்வு செய்து கொள்ளுங்கள். 
கூகுள் கீ-போர்டு (ஜி-போர்டு) செட்டிங்க்ஸ் சென்று, 'Show Language switch key' என்ற பாக்ஸில் டிக் செய்துவிட்டால் போதும். உங்கள் கீ-போர்டில் டைப் செய்யும் போதே, உங்கள் மொழிகள் மாற்றி மாற்றி டைப் செய்து கொள்ள முடியும். பெரும்பாலும் தமிழுக்கு என வேறு ஏதேனும் ஒரு ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருபவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். காரணம் அடிக்கடி, Input method-ஐ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜி-போர்டு தமிழில் டைப் செய்யவும் கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது.

இமொஜி மற்றும் GIF:

கூகுள் ஜி-போர்டில் உங்களுக்குத் தேவையான இமோஜிக்களை தேடித்தேடி பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு "Happy' என அடித்தால், அது தொடர்பான ஸ்மைலிக்கள் உங்களுக்கு கிடைக்கும். எனவே தேவையான இமோஜியை கண்டுபிடிக்க கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆனால் இது கீ-போர்டு இமோஜி மட்டுமே. வாட்ஸ்அப்பில் இருக்கும் இமோஜிக்களை இதன் உதவியுடன் தேட முடியாது.
அதேபோல GIF அனுப்பும் வசதியும் உண்டு. இமொஜி அனுப்புவதற்கு பதிலாக, குறியீடுகளில் அவற்றை அனுப்ப வேண்டுமானால் அதனையும் செய்யலாம். 

கூகுள் அலோவில் GIF ஃபைல்களை அனுப்பவும், தேடவும் முடிகிறது. ஆனால் வாட்ஸ்அப் சாட்டிங்கில் GIF-களை அனுப்ப முடிவதில்லை. இந்த டெக்ஸ்ட் ஃபீல்டில் Gif ஃபைல்களை அனுப்ப முடியாது எனக் கூறுகிறது. 

Glide டைப்பிங்:

ஏற்கனவே இருந்த கீ-போர்டில் இருந்த Sliding வசதிதான். ஆங்கிலத்தில் ஆட்டோ கரெக்ஷன் ஆப்ஷன் எப்படியோ, அதைப் போலவேதான் இதுவும் செயல்படும். எழுத்துக்களை ஒவ்வொன்றாக டைப் செய்யாமல், அவற்றின் மேல் விரல்களை கொண்டு சென்றாலே, முழு வார்த்தையாக டைப் ஆகி விடும். இதனை தமிழிலும் பயன்படுத்த முடிகிறது. 

வண்ணம்:

ஜி-போர்டு கீ-போர்டு

கூகுள் ஜி-போர்டில் மொத்தம் 17 தீம்கள் இருக்கின்றன. எனவே வெள்ளை, கறுப்பு என மட்டும் இல்லாமல் சிவப்பு, பச்சை, நீலம் என எந்த நிறங்களில் வேண்டுமானாலும் உங்கள் கீ-போர்டை மாற்றிக் கொள்ளலாம். கீ-போர்டின் உயரத்தையும் செட்டிங்க்ஸ் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

அதேபோல எண்களை டைப் செய்வது, ஆண்ட்ராய்டு கீ-போர்டில் கொஞ்சம் கஷ்டம். ஜி-போர்டில், நம்பர் ஆப்ஷனை தேர்வு செய்தால், 3X4 கீ-பேட் போலவே எண்கள் தோன்றுகின்றன. எனவே போன் டயலர் போல எளிதாக, வேகமாக எண்களை டைப் செய்யலாம்.
இதன் செட்டிங்க்ஸ் சென்று பார்த்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மேலும் பல மாறுதல்களை செய்ய முடியும். எனவே டைப் செய்வதோடு மட்டுமில்லாமல், கொஞ்சம் அதையும் கவனித்தால், உங்கள் கீ-போர்டை இன்னும் அழகாக, பயனுள்ளதாக மாற்ற முடியும்.

http://www.vikatan.com/news/information-technology/76631-things-you-should-know-about-google’s-gboard-keyboard.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.