Jump to content

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே


Recommended Posts

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே

இலங்கையில் என்னுடைய ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியா, இப்போது அந்நிகழ்வுக்கு அமைதியாக உள்ளது என்று ராஜபக்சே பேசி உள்ளார்.

 
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே
 
கொழும்பு,

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு செய்தியாளருக்கு அளித்து உள்ள பேட்டியில், “இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது, என்னுடைய இந்திய நண்பர்கள் எனக்கு எதிராக எழுந்தனர். ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர்,” என்று கூறிஉள்ளார் ராஜபக்சே.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்புக்கு இந்தியாவே கவலைப்படாத நிலையில் எந்த அடிப்படையில் நீங்கள் இதனை கூறுகிறீகள் என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள ராஜபக்சே, “அவர்கள் வெளிப்படையாகவே இதனை (எதிர்ப்பு) தெரிவித்தனர்.” என்றார்.

மேலும் பேசுகையில் என்னுடைய சொந்த ஊரான ஹம்மன்தோடாவில் தொழில்துறை மையம் அமைக்க சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு எதிராக இருந்தேன். நாங்கள் தொழிற் பூங்கா அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 15 ஆயிரம் ஏக்கர் என்பது மிகவும் அதிகமானது என்று கூறி உள்ளார். மைத்திரிபால சிறிசேனா அரசானது திரிகோணமலை துறைமுகம் அல்லது பலாலி விமான நிலையத்தை அவர்களிடம் கொடுப்பதை இந்தியா காத்திருந்து காணதான் போகிறது என்று நினைப்பதாக ராஜபக்சே கூறி உள்ளார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா எனக்கு உதவிசெய்தது என்ற கூறிய ராஜபக்சே, அமெரிக்காவின் தலையீட்டினால் எனக்கு எதிராக செயல்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

 நான் அவர்கள் (இந்தியா) என்னுடன் வரவேண்டும் என விரும்பினேன் (தீவிரமான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு) ஆனால் அவர்கள் தென் இந்தியாவின் அணுகுமுறை காரணமாக விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் உளவுப்பிரிவு மற்றும் பிறர் எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டது.  அவர்கள் 2015- ஜனவரி அதிபர் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னதாக செயல்பட தொடங்கிவிட்டனர் என்று கூறி உள்ளார் ராஜாபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தலானது இரு வருடங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/29211529/1058958/Increase-China-influence-Sri-Lanka-India-is-silent.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழுவி வைத்தாவது பதவி பெற வேண்டும்.அது தானே.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன், தம்பியா சீனாவுக்குப் போய், சீனாக்காரனோட பிளானைப் போட்டு, இப்ப டெல்லி காரனை மோடர் என்று நினைச்சு, விடுறார் விடுகதை.:cool:

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

அண்ணன், தம்பியா சீனாவுக்குப் போய், சீனாக்காரனோட பிளானைப் போட்டு, இப்ப டெல்லி காரனை மோடர் என்று நினைச்சு, விடுறார் விடுகதை.:cool:

photo.jpg

இலங்கைத்தீவில் குழப்பம் நிலவ வேண்டும் என்பதுதான் சேகரின் கணக்கு. அதுக்காக இவரை மாத்தி அவர்.. பிறகு அவரை மாத்தி இவர் எண்டு விளையாடுவினம்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை சீனாவோடு கோர்த்துவிட்டு அவை வந்த கணக்கா.. இவர் அவையை சீனாவோடு கோர்த்துவிட்டு தான் வரப் பார்க்கிறார். ஹிந்தியன் எல்லாருக்கும் ஒன்னா சேர்த்து ஆப்படிப்பான். நண்பர்களான தமிழருக்கே  அடிச்சானில்ல. சிங்களவனுக்கு........................

Link to comment
Share on other sites

அடுத்த வருடத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன்

 

மஹிந்த அறிவிப்பு : இந்தியா மௌனித்துள்ளது என்கிறார்
தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருப்­பினும் அர­சாங்­கத்தின் தற்­கால செயற்­பா­டு­களை பார்க்­கும்போது நிலைமை மாறி­விடும் வாய்ப்­புள்­ள­தா­கவே தெரி­கின்­றது. எனவே 2017 ஆம் ஆண்­டிற்குள் இந்த ஆட்­சியை மாற்­றி­ய­மை­ப்பதே எனது நோக்­க­மாகும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவித்தார். 

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் தற்­போது முரண்­பா­டுகள் முற்­றி­யுள்­ளன. எனவே இவ்­வாறு ஒரு அர­சாங்­கத்­தினை கொண்டு நடத்த முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இலங்­கை­யி­லுள்ள வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை நேற்று கொழும்பில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி: 19 ஆவது திருத்­தத்தில் ஒருவர் இரு முறைகள் மாத்­தி­ரமே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாக முடியும் என்று கூறப்­ப­டு­கின்­றது அவ்­வா­றாயின் அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­யாது நீங்கள் மீண்டும் அரச தலை­வ­ராக முடி­யாதா?

பதில்: இந்­நாட்டில் மீண்டும் ஒரு அரச தலை­வ­ராக மாற­வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இருப்­பினும் அரச தலை­வ­ரா­க­வி­டினும் என்னாள் நாட்­டினை ஆட்சி செய்ய முடியும்.

கேள்வி: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சேவை­யாற்ற வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கினால் அதற்கு உங்­களால் முகம்­கொ­டுக்க முடி­யுமா?

பதில்: தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் 1970 ஆம் ஆண்­டி­லி­ருந்து நன்­க­றிந்த ஒரு­வ­ருடன் சேவை­யாற்­று­வதில் எனக்கு எந்த சிக்­கலும் இல்லை. அவ்­வாறு இணைந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைமை வந்தால் நான் முன்­வைக்கும் நிபந்­த­னை­களை அவர் ஏற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே இணைந்து செயற்­ப­டுவேன்.

அதேபோல் அடுத்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் போது சுதந்­திர கட்சி பிள­வு­பட்டு போட்­டி­யிட்டால் வாக்­குகள் பிரிந்து செல்லும். எனவே அதன் பலனை ஐக்­கிய தேசிய கட்­சியே அடையும்.

கேள்வி: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து உங்கள் நிலைப்­பாடு?

பதில்: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்க குழுவின் செயற்­பா­டுகள் பற்றி மாத்­தி­ரம்தான் தற்­போது வரையில் பேசப்­ப­டு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சாங்கம் தெளி­வான தக­வல்கள் எவற்­றையும் வெளி­யி­ட­வில்லை.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சி­ல­மைப்பு குறித்து கருத்து வெளி­யிட்டால் மாத்­தி­ரமே அது தொடர்பில் பேச முடியும். எவ்­வா­றா­யினும் அர­சி­ல­மைப்பு மாற்றம் ஏற்­ப­டுமா என­்பது சந்­தே­கத்­திற்கு இட­மா­கவே உள்­ளது.

கேள்வி: சீனா­விற்கு காணி வழங்­கி­யுள்­ளமை தொடர்பில் என்ன நிலைப்­பாடு?

பதில்: சீனா­விற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்­கு­வது தொடர்பில் எனக்கு உடன்­பா­டுகள் இல்லை. அது தொடர்பில் குறித்த சீன நிறு­வ­னத்­திற்கும் நான் தெரி­வித்­துள்ளேன். எனது காலத்தில் வழங்­க உடன்பட்ட 750 ஏக்கர் காணியை மாத்­தி­ரமே வழங்­கு­வதே சிறந்­தாகும்.

மேலும் எமது அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் சீன நீர்­மூழ்கி கப்பல் இலங்­கைக்கு வந்­த­தை­யிட்டு அதிருப்தி வெளி­யிட்ட இந்­தியா தற்­போது மெள­னித்­துள்­ளது. எனது ஆட்­சியில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக குரல் எழுப்­பிய இந்­தியா தற்­போது மெளனம் சாதிப்­பதன் பின்­னணி திரு­கோ­ண­மலை துறை­முகம் அவர்கள் வசா­மா­கி­யுள்­ள­மை­யாகும்.

கேள்வி: இந்­திய பாது­காப்பு ஆலோ­சகர் இறுதி யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­ய­தாக கூறி­யுள்ளார். அது குறித்து கூறுங்கள்?

பதில்: இந்­தியா யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­யி­ருந்­தமை தொடர்பில் பல­முறை குறிப்­பிட்­டுள்ளேன். இருப்­பினும் தமிழ் நாட்டில் குழப்பம் ஏற்­ப­டக்­கூடும் என்­பனால் இந்­தியா இது குறித்து பேசு­வதை குறைத்­தி­ருந்­தது.

கேள்வி: அவ்­வாறு உங்­க­ளுக்கு உத­விய இந்­தியா பிற்­கா­லத்தில் தமது நிலைப்­பாட்­டினை ஏன் மாற்­றிக்­கொண்­டது?

பதில்: சில தவ­றான புரி­தல்கள் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லாவிடின் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகியிருக்கலாம்

கேள்வி: 2015 ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் தோல்விக்கு காரணம் யாது?

பதில்: அமெரிக்கா,இந்தியா மற்றும் அந்நாட்டு ரோ உளவுச் சேவை மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் வந்த சக்திகளுக்கு என்னால் முகம்கொடுக்க முடியாது போனது. 2011 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தை மாற்றும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-30#page-1

Link to comment
Share on other sites

ஆட்சி மாற்ற பின்னணியில் அமெரிக்கா,புலம்பெயர்ந்த தமிழர்கள் -மகிந்த குற்றச்சாட்டு
 
 
ஆட்சி மாற்ற பின்னணியில் அமெரிக்கா,புலம்பெயர்ந்த தமிழர்கள் -மகிந்த குற்றச்சாட்டு
கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்க வில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாக வும்,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று  வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர்   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரதான பங்கை இந்தியா வகிக்கவில்லை. அமெரிக்காவும், புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கு வகித்தனர். இந்தியா துணைப் பங்கையே ஆற்றியிருந்தது.
 
இலங்கை, மியான்மார், நைஜீரியாவில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, 648 மில்லி யன் டொலரைச் செலவிட்டுள்ளதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
 
இப்போதும் கூட இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்திக்காக ஒரு பில்லி யன் ரூபாவை செலவிடுகிறது
 
தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் நேசம் பாராட்டி வருகிறது இலங்கை.அதிகாரி களுக்கு அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.
 
அமெரிக்கர்கள் வந்து நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச கோபத்துடன் குறிப்பிட்டார்.

http://www.onlineuthayan.com/news/22031

Link to comment
Share on other sites


சீனாவுக்கு எதிராகத் திரும்புகிறாரா மஹிந்தா?
 

article_1483172399-hampan-new.jpg- கே.சஞ்சயன்  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்துக்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.  

ஜே.வி.பியினர், துறைமுகத் தொழிலாளர்கள், கூட்டு எதிரணியினர் என்று பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்த ஆரம்பித்துள்ளனர்.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அதற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பத்தினரதும் கூட்டு எதிரணியினதும் பின்புல ஆதரவு இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.  

கடந்த 24ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மூலம், சீனாவின் திட்டங்களுக்கு எதிராக, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக களமிறங்கியுள்ளார்.  

சீனாவின் உண்மையான நண்பன் என்று போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.  

இன்னொரு பக்கத்தில், சீனாவின் எல்லா நகர்வுகளையும் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாகக் கருதும் இந்தியாவும் இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.  

இந்த இரண்டுமே இலங்கை அரசியலில் ஆச்சரியத்துக்குரிய விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன.  
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.   

ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் மாத்திரமே இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதே சீன அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.  

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் சீனா அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை.   
2015ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராகக் கொழும்பு வந்த உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், மஹிந்த ராஜபக்ஷவை தனியாகச் சந்தித்துப் பேசியதும், அண்மையில் சீன அரசாங்கமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்து, அவருடன் சந்திப்புகளை நடத்தியதும் சீனாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தை காட்டப் போதுமான நிகழ்வுகளாகும்.  

போர்க்காலத்தில் செய்த இராணுவ உதவிகளையும், போருக்குப் பின்னர் செய்த பொருளாதார உதவிகளையும் காரணம் காட்டி, இலங்கையில் சீனாவின் தலையீடுகள் வலுப்பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாக இருந்தார்.  

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா இன்று குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளது என்றால், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், இலங்கையில் அளிக்கப்பட்ட வாய்ப்புகளால் தான் என்பதில் சந்தேகமில்லை.  

எனவே, மஹிந்த ராஜபக்ஷவை கைவிட சீனா ஒருபோதும் தயாராக இல்லை. அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் ஆட்சியை இழந்த பின்னர் சீனாவுக்காகவே பரிந்து பேசி வந்தவர்.  

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் முடக்கப்பட்ட போது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த மஹிந்த ராஜபக்ஷ, தம்மை ஆதரித்ததால், தற்போதைய அரசாங்கம் சீனாவைப் பழிவாங்குவதாகவும் கூட முன்னர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.  

சீனா என்றால் மஹிந்த என்றும் மஹிந்த என்றால் சீனா என்றும், ஒரு விம்பம் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய ஒருவர் தான் இப்போது, ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீடுகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்.  

கடந்த நொவம்பர் மாதம் மேற்கொண்ட சீனப் பயணத்துக்கு முன்னதாகவே, மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை, சீனாவுக்கு வழங்கும் திட்டத்தையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கி விட்டார். இப்போது அவரது எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. 

இதுவரையில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தமது எதிர்ப்பை ஊடகங்களிடம் தான் வெளிப்படையாகக் காண்பித்து வந்தது. மறைமுகமாகச் சில போராட்டங்களையும் ஒழுங்கு செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.  

எனினும், தற்போது ஹம்பாந்தோட்டையில் சீன முதலீடுகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டிருக்கிறார். இது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் திட்டங்களை எதிர்த்துப் பகிரங்கமாகப் போராட்டத்தில் இறங்கியுள்ள முதல் சந்தர்ப்பமாகும்.  

புறநிலையில் இருந்து பார்க்கும் போது, இது சீனாவுக்கு எதிரான போராட்டம் போலத் தென்பட்டாலும், உண்மையில் ராஜபக்ஷக்களின் திட்டம் அரசாங்கத்தை வீழ்த்துவது தான்.  

ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதையும் தான் ராஜபக்ஷவினர் எதிர்க்கின்றனர்.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் நாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி விட்டார் மஹிந்த என்ற கறை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது சீனாவின் கைக்கு மாற்றப்பட்டால், மஹிந்தவின் மீதான கறை நிரந்தரமானதாகி விடும்.  

தனது பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், விமான நிலையம் எல்லாவற்றுக்கும் தனது பெயரைச் சூட்டியவர் மஹிந்த. அப்படிப்பட்ட ஒருவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் நாட்டுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தியவர் என்ற களங்கம் ஏற்படுத்தப்படுவதை விரும்பவில்லை.  

சீனாவுக்கு 80 வீத உரிமை வழங்கப்பட்டாலும், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அரசுடமையாக்குவோம் என்று மஹிந்த எச்சரித்திருக்கிறார்.  

அப்படிச் செய்யும் துணிச்சல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால், தற்போதைய அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளையே அவரும் சந்திக்க நேரிடும்.  

அண்மையில், நடத்திய சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நிலையான கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சிமாற்றங்களால் அவை பாதிக்கப்படக் கூடாது என்றும் சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் கூறியிருந்தார்.  

அவ்வாறான நிலையான கொள்கை அறிமுகப்படுத்தப்படாது போனால், வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.  

இப்படியான ஒரு நிலையில் தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவிடம் கையளிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மீண்டும் அரசுடமையாக்குவோம் என்ற மஹிந்தவின் எச்சரிக்கையை, சீனா அவ்வளவாக இரசித்திருக்காது என்பது உண்மை.  
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இந்தத் தருணத்தில் சீனாவை விடவும் அவரது அரசியலே முக்கியமானது. அதுவே நிலையானதும் நிரந்தரமானதுமாகும். சீனாவை, கையில் பிடித்துக் கொண்டு, உள்நாட்டு அரசியலில் வெற்றியைப் பெறுவது கடினமானது.   

ஹம்பாந்தோட்டை, மொனராகல, இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக 15 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தில் ஒரு பாரிய கைத்தொழில் வலயத்தை சீனா உருவாக்க முனைகிறது.  

இதற்கான நிலங்களை ஒதுக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய கட்டத்தில் பாரியளவில் நிலங்களை இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கும் போது, உள்ளூர் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் ஏற்படும். அது இயல்பான விடயம்.  

உள்ளூர் மக்களிடம், அந்த எதிர்ப்பை தூண்டி விட்டு, தமது அரசியல் பயணத்தை வலுப்படுத்துவதே மஹிந்த ராஜபக்ஷவின் இப்போதைய நகர்வாக உள்ளது. சீனாவை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கருதுகிறார்.  

ஏனென்றால், உள்ளூர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் வரை தான், அரசியல் நடத்த முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ள தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டால், சீனாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ளலாம் என்பது மஹிந்தவின் திட்டமாக இருக்கக் கூடும்.  

இதனால்தான் சீனத் திட்டங்களுக்கு எதிரான ஒரு தற்காலிக நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.  
இதனைச் சீனா எப்படிப் பார்க்கப் போகிறது? இந்த விடயத்தில் சீனாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் உள்ளுக்குள் ஏதேனும் உடன்பாடுகள் இருக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன.  

ஹம்பாந்தோட்டையில் கால் பதிப்பது சீனாவின் ஒரு பெருங்கனவு, இதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் இராணுவ ரீதியாக இல்லாவிடினும் பொருளாதார ரீதியாகவேனும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று சீனா எதிர்பார்க்கும். 

அத்தகையதொரு வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவினால், அவரது அரசியல் நலன் பேணும் நிலைப்பாட்டினால் கைநழுவிப் போவதை சீனா விரும்புமா என்ற கேள்வி இருக்கிறது.  

ஆட்சிக்கு வந்ததும், அரவணைப்போம் என்று கூறும் மஹிந்தவுக்கு ஆதரவு அளித்தால், ஹம்பாந்தோட்டையில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு சீனா இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரலாம்.  

இப்போதே அரவணைக்கத் தயாராக உள்ள மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் இணைந்தால் ஹம்பாந்தோட்டையில் உடனடியாகவே கால் பதிக்கலாம்.  

இந்தத் தெரிவுகளில் எதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/188967/ச-ன-வ-க-க-எத-ர-கத-த-ர-ம-ப-க-ற-ர-மஹ-ந-த-#sthash.GPb7qpw8.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.