Jump to content

இப்படியொரு நாசகாரத் திட்டத்தை எம்மக்கள்மீது இந்த அரசாங்கம் திணிக்கும் என எதிர்பார்க்கவில்லை!


Recommended Posts

இப்படியொரு நாசகாரத் திட்டத்தை எம்மக்கள்மீது இந்த அரசாங்கம் திணிக்கும் என எதிர்பார்க்கவில்லை!

வடக்கு மாகாண மக்களுக்கு பொருந்தாத பொருத்து வீட்டினை மக்கள் மீது திணிக்கும் நாசகார வேலையை இந்த அரசாங்கம் முன்னெடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருபற்றி அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்காத ஒரு வீட்டினை மக்களுக்குத் திணிப்பது தொடர்பாக கூறவேண்டிய கட்டாய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எமது மக்களுக்கு வீடு வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். அது கல்வீடாக இருக்கவேண்டுமே தவிர தொங்கும் வீடாக இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

பொருத்து வீடு தொடர்பாக தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று அதாவது தனிநபர் விருப்பு மற்றும் தனிநபர் அரசியல் என்பவற்றிலிருந்து விலகி அவர்களின் விருப்பத்தை நிறைவுசெய்ய முன்வரவேண்டும்.

மீள் குடியேற்ற அமைச்சரை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பின்னரே தாம் இந்தத் திட்டம் மக்களுக்குப் பொருந்தாது என முடிவெடுத்தோம் என்பதை அவர் உணரவேண்டும்.

அதற்குமப்பால் இந்த வீட்டுத்திட்டத்திற்காக கூறும் விலையும் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்பதுடன், இவ்வீட்டுத் திட்டத்தினால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஏன் இந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இத்திட்டத்தினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தில் பல அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் விரும்பாத திட்டத்தினை மக்களுக்கு திணிக்கவேண்டாம் எனக் கூறியதும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

அரசாங்கம் இப்படியானதொரு நாசகார வேலைத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிக்குமென நான் நினைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் கூறுவோம் எமது மக்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை, அதற்கு பொருத்து வீடு உசிதமானதல்ல எனவும் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=52982

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.