• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

நவீன சாதனங்களின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது - பழைய புத்தக நிலைய உரிமையாளர் கோவை கணேஷ்

Recommended Posts

நவீன சாத­னங்­களின் வரு­கையால் வாசிப்புப் பழக்கம் அருகி வரு­கி­றது - பழைய புத்­தக நிலைய உரி­மை­­யாளர் கோவை கணேஷ்
 

(சிலாபம் திண்­ண­னூரான்)


“முயற்­சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனி­த­னுக்கு எப்­போதும் இன்­பத்தைத் தந்து கொண்­டி­ருக்­கின்­றன. சிறு வயது முதல் புத்­தக வாசிப்பில் பெரும் ஈடு­பா­டு­களைக் கொண்­டி­ருந்தேன்.

 

இதன் வளர்ச்சி எனக்குள் வேர்­விட்டு மர­மாகி படர்ந்து நல்ல கனி­களைக் கொடுத்­தது. அதன் அறு­வ­டை­யாக என் இரு­பத்தி மூன்­றா­வது வயதில் கோவை புத்­தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்­கிய புத்­த­கங்­களை விற்­பனை செய்யும் வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன்.

 

171DSCF4248.jpg

 

விளை­யாட்டுப் பருவ காலத்தில் பழைய இலக்­கிய புத்­த­கங்­களை கொள்­முதல் செய்து மிகவும் சிறு இலா­பத்­துடன் எனது வியா­பா­ரத்தைக் கட்டி எழுப்­பினேன்.

 

மிகவும் குறு­கிய கால எல்­லையில் இப் ­ப­ழைய புத்­தக வியா­பாரம் இந் ­நாடு முழு­வ­து­மாக என்னை தமிழ் பேசும் சமூ­கத்­தினர் மத்­தியில் அறி­முகம் செய்து வைத்­தது” என்­கிறார் பழைய புத்­தக வியா­பா­ரத்தில் பெயர் பெற்ற கோவை கணேஷ்.

 

கொழும்பு சென்ரல் வீதி­யி­லுள்ள கோவை புத்தக சாலையின் உரி­மை­யா­ளர் இவர். “எனது பள்­ளிக்­காலம் முதல் கவிதை, கட்­டுரை, பட்­டி­மன்றம், இலக்­கிய மேடைப்­பேச்­சாளர் என பல முகங்­களில் இலக்­கிய உல­குடன் வாழ்­வ­தற்கு பழ­கிக்­கொண்டேன்.

 

எம்.தர்­ம­லிங்கம் என்ற எனது இயற்­பெ­யரை கைவிட்டு கோவை கணேஷ் என்ற புனை பெயரில் இலக்­கியக் களத்தில் நுழைந்தேன். எனது புத்­தகத் தொழிலில் புதுப்­புது நுணுக்­கங்­களைக் கையாள சிந்­திக்கத் தொடர்ந்தேன்.

 

அத்­தோடு பெரும் பணத்தைக் கொட்டி தமி­ழ­கத்­தி­லி­ருந்து புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்­வோ­ருடன் தொழில் ரீதி­யாக மல்­லுக்­கட்ட வேண்­டிய நிலை உரு­வா­னது. நான் எனது பழைய புத்­தக வர்த்­த­கத்­திற்கு வெறும் முந்­நூறு ரூபா­வையே முத­லீ­டாகக் கொண்டிருந்தேன்.

 

அக்­ கா­லத்தில் இப்­ பணம் பெரும்­பலம் கொண்ட தொகை­யாகும். இருந்தும் துணி­வுடன் களத்தில் நின்றேன். பழைய ஆனந்த விகடன், குமுதம், கல்­கண்டு, அம்­பு­லி­மாமா என பல­த­ரப்­பட்ட சஞ்­சி­கை­களை மக்­க­ளுக்குக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­காக நூல்­கட்டி அதில் தொங்க விடுவேன்.

 

பலர் எனது புத்­தக அலங்­கா­ரத்தைப் பார்த்து விட்டு நக்­க­லாகச் சிரித்து விட்டுச் செல்­வார்கள். இதைப் பார்த்து நான் ஆத்­திரம் கொள்­வ­தில்லை. அமைதி காப் பேன்.

 

சஞ்­ச­ல­மற்ற மனத்தின் மௌன­மாக வீதியில் நின்று அவர்­களை வேடிக்கை பார்ப்பேன். நான், கொழும்பு சென்ட்ரல் வீதியில் வியா­பாரம் ஆரம்­பித்த காலத்தில் இவ் ­வீதி முழு­வதும் குடி­யி­ருப்­புகள் பர­வி­யி­ருந்­தன.

 

அக் ­காலம் ஒரு இனிப்­பான கால­மாகும். சிறிது சிறி­தாக வியா­பாரம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­த­போது, தமி­ழ­கத்­தி­லி­ருந்து வார, மாத, இதழ்­களை இறக்­கு­மதி செய்யும் வர்த்­த­க­ரிடம் விற்­ப­னை­யா­காமல் தேங்கி நிற்கும் புத்­த­கங்­களை குறைந்த விலைக்குக் கொள்­முதல் செய்து சொற்ப ஆதா­யத்­தோடு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்வேன்.

 

இந்­நி­லையில், தமிழ் சினிமா பாடல் புத்­த­கங்­க­ளுக்கு பெரும் கிராக்கி நில­வி­யது. தனி சினிமாப் படத்தின் பாடல் புத்­தகம் ஒன்றின் விலை அன்று வெறும் ஐம்­பது சத­மே­யாகும்.

 

சினிமா பாடல் புத்­த­கங்­க­ளையும் பழைய புத்­தக விற்­ப­னை­யோடு இணைத்துக் கொண்டேன். சினிமாப் பாடல் புத்­த­கங்கள் மள­ம­ள­வென விற்கத் தொடங்­கின. அக்­கா­லத்து வரு­மானம் எனக்கு பெரும் நிறைவைக் கொடுத்­தது.” என தக­வல்­களை வழங்­கிய கோவை கணேஷின் பேச்சை நிறுத்தி கேள்வி வலையை வீசினோம்.

 

“மிகப் பழைய புத்­த­கங்கள் உங்­க­ளுக்கு எங்கு கிடைக்கும்? என கேள்­வியை நாம் எழுப்ப அவரே தனது தொழில் இர­க­சி­யத்தை வெளிப்­ப­டுத்­தினார். “சிலர் தாம் படித்த புத்­த­கங்­களை என்­னிடம் கொடுத்­து­விட்டு வேறு புத்­த­கங்­களைப் பெற்­றுக்­கொள்­வார்கள்.

 

புத்­த­கத்தின் தரத்­திற்­கேற்ற வகையில் விலை மதிப்­பீடு செய்­யப்­பட்டு கொடுக் கல் வாங்கல் இடம்­பெறும். கொழும்பு பகு­தியில் உள்ள பழைய போத்­தல்­களைக் கொள்­முதல் செய்யும் வர்த்­த­கர்­க­ளி­டமும் புத்­த­கங்­களைக் கொள்­முதல் செய்வேன்.

 

போத்தல் கடை­களில் பெறு­ம­தி­யான தமிழ், சிங்­கள, ஆங்­கில மொழி, சமய, சோதிட, மாந்­தி­ரிக, வைத்­திய, சட்டப் புத்­த­கங்கள் கிடைக்கும். சிலநேரங்­களில் எங்­குமே கிடைக்கப் பெற இய­லாத அரும்­பெரும் புத்­த­கங்­களும் கிடைக்கும்.
வார இதழ்­களில் தொட­ராக வெளி­வந்த தொடர்­க­தைகள் கட்­டப்­பட்ட (பைண்டிங்) நிலையில் பலர் எமக்குக் கொண்டு வந்து தரு­வார்கள்.

 

தமக்குப் பின்னர் இப்­புத்­த­கங்­களை பிள்­ளைகள் பாது­காக்க மாட்­டார்கள் என்ற எண்­ணத்தில் பல முதி­யோர்கள் பெரும் கவ­லை­யுடன் எம்­மிடம் கைய­ளித்து பணம் பெற்றுச் செல்­வார்கள்.

 

பல வரு­டங்கள் தூசி தட்டி கட்டிக் காத்த புத்­த­கங்கள் யாரோ ஒருவர் பயனடை­யட்டும் என்ற பெரும் சிந்­த­னை­யுடன் எம்­மிடம் வரு­கையில் அவர்­களின் முகத்தில் பெரும் சோகத்தின் தளும்­பு­களைக் காணலாம். எதையோ ஒன்றை இழந்­து­விட்ட எண்­ணத்தில் எங்­களின் இடத்­தை­விட்டு வெளி­யே­று­வார்கள். அவர்­களின் முது­மையின் சிந்­த­னையும் சோகமும் என்னை அதட்டும். நானும் கவ­லைக்குள் நுழைந்து விடுவேன்.

 

இவ் ­வி­யா­பா­ரமும் புத்­த­கங்கள் விற்­ப­னையும் எமக்கு தேர்ச்­சி­யான மொழி அறி­வையும் இலக்­கிய வளத்­தையும் பல­த­ரப்­பட்­ட­வர்­களின் சிநே­கி­தத்­தையும் வழங்­கு­கின்­றது. இவ்­வாறு வேக­மாக விப­ரங்­களைத் தொடுத்­த­வரின் பேச்­சுக்கு பிரேக் போட்டு நிறுத்­தினோம்.

 

“உங்­க­ளிடம் என்ன வகை­க­ளி­லான பழைய புத்­த­கங்கள் உள்­ளன” எனக் கேட்டோம். “எம்­மிடம் மனி­தனின் வாழ்­வி­ய­லுக்குத் தேவை­யா­ன அனைத்துக் கூறு­களின் புத்­த­கங்­களும் உள்­ளன. தமிழ் மொழி­யுடன் ஆங்­கில மொழி, சகோ­தர சிங்­கள மொழி மூல­மான புத்­த­கங்­களும் உள்­ளன.

 

ஒரு கால கட்­டத்தில் தமிழ் நாவல் இலக்­கி­யத்­திற்குப் பெரும் பணி­யாற்­றிய வீர­கே­சரி நிறு­வனம் வெளி­யிட்ட பெரும்­பா­லான அரு­மை­யான நாவல்கள் எங்கள் வசம் இன்றும் வாழ்­கின்­றன.

 

ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர்  வெளி­வந்த காதல், கலை­மகள், கல்கி, ஆனந்த விகடன், பேசும் படம், ரசிகன், சீரஞ்­சீவி ஆகிய இதழ்­களின் தீபா­வளி விசேட மலர்கள் எம்­மிடம் உள்­ளன.

 

இவ்­வா­றான மலர்­களை இக்­கா­லத்­திலும் இன, மத, அடை­யா­ளங்­களை அல்­லது ஆய்வு தேவை­க­ளுக்­காக பெரும்­பா­லானோர் தேடி வரு­கின்­றனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் கைப்­பட எழு­திய “நான் ஏன் தற்­கொலை செய்ய வேண்டும்?” என்ற நூலும் எம்மிடம் விற்­ப­னைக்­காகக் காத்­தி­ருக்­கின்­றது.

171DSCF4242.jpg

அதே­போன்று அறிஞர் சித்தி லெப்பை மரைக்கார் எழு­தி­யதும் இலங்கை தமிழ் இலக்­கிய உலகின் முதல் நாவ­லாக கரு­தப்­படும் (1885) இல் ‘அசன்­பேயின் சரித்­திரம்’ நாவலும் உள்­ளது.

 

எங்­க­ளுக்­கென ஒரு வாடிக்­கை­யாளர் குழுவை வைத்­துள்ளோம். எம்­மிடம் பாமர மக்கள் முதல் எழுத்­தா­ளர்கள், வைத்­தி­யர்கள், மாந்­தி­ரீ­கர்கள், சட்­டத்­த­ர­ணிகள், சோதி­டர்கள், அர­சி­யல்­வா­திகள் என பல தரப்­பி­னரும் வருகை தரு­கின்­றனர்.

 

இட­து­சாரி அர­சியல் கொள்­கையைக் கொண்ட பலர் எம்­மிடம் இட­து­சாரி கொள்கை கொண்ட தலை­வர்­களின் சரித்­திர தக­வல்­களைப் பெற அவ்­வா­றான புத்­த­கங்­களைப் பெற வருகை தரு­வார்கள்” எனக் கூறிய கோவை கணேஷ், சட்­டென விட்ட மழை போல தன் பேச்சை நிறுத்தி, தான் கலங்கித் தவிக்கும் தகவல் ஒன்றை எம்­மிடம் கூறத் தொடங்­கினார்.

 

நாமும் கலங்கிப் போய்­விட்டோம். “எழுத்­தா­ளர்கள் அனை­வ­ரி­டமும் ஒரு அரு­மை­யான பழக்கம் உண்டு. இன, மத, மொழி பாராது அனைத்து எழுத்­தா­ளர்­களின் புத்­த­கங்­க­ளையும் பெரும் பாது­காப்­புடன் தன் வீட்டில் சேக­ரித்து வைத்­தி­ருப்­பார்கள்.

 

இதில் ஏதோ ஒருவித சந்­தோஷமும் ஊக்­கமும் அவர்­க­ளுக்குக் கிடைக்­கின்­றன.
இவ்­வா­றான ஒரு எழுத்­தாளர் கால­மா­னதும் அவரின் குடும்ப அங்­கத்­த­வர்கள் எங்­க­ளிடம் வந்து மறைந்த எழுத்­தா­ளரின் சேமிப்­பான புத்­த­கங்­களை விலை கொடுத்து பெற்றுச் செல்­லு­மாறு தகவல் கொடுத்­தனர்.

 

ஒரு மாலை நேரத்தில் மறைந்த எழுத்­தா­ளரின் வீடு தேடிச் சென்றோம். அவ்­வீட்டார் எங்­களை வர­வேற்று வீட்டின் பின்­பு­றத்­திற்கு அழைத்துச் சென்­றனர்.

 

அங்கே நாம் கண்ட காட்சி எங்­களை ஆத்­தி­ரப்­பட வைத்­தது. ஒரு கொலைக்­க­ளத்தில் ஒரு மனித உடல் வாளால் வெட்டி சேதா­ரப்­ப­டுத்தி அங்கும் இங்கும் சதைகள் வீசப்­பட்டுக் கிடப்­பது போன்று, மேற்­படி எழுத்­தா­ளரின் உழைப்பால் சேமிக்­கப்­பட்ட புத்­த­கங்கள் கேட்பார், பார்ப்பார் இன்றி அநா­த­ர­வாக அங்கும் இங்கும் வீசப்­பட்டுக் கிடந்­தன.

 

கோபம் எமக்குள் கொப்­ப­ளித்­தது. வீசப்­பட்டுக் கிடந்த புத்­த­கங்கள் மீது கையை வைத்து புத்­த­கங்­களை வரி­சைப்­ப­டுத்த முனைந்­த­போது மழையில் தொப்பை தொப்­பை­யாக நனைந்து, வெயிலில் காய்ந்து அனைத்து புத்­த­கங்­களும் சுருங்­கிய நிலையில் துர்­நாற்­றமும் புழு­தியின் வாச­னையும் எம் மூக்­குக்குள் நுழைந்து எமக்கு தும்­மலை ஏற்­ப­டுத்­தி­யது.

 

அத்­துடன், புத்­த­கங்­களின் நிலைமை எம்மை ஆத்­திரம் கொள்ள வைத்­தது. அப்­போது எம் கண்­களில் கண்ணீர் முட்­டி­யது. மிக அரு­மை­யான அப்­ புத்­த­கங்­களின் பெருமை அக் குடும்­பத்­தா­ருக்குத் தெரி­யாமல் போனமை பெரும் கவலை தரும் விட­ய­மாகும்.

 

இதற்கு எதிர்­மா­றாக இன்­னு­மொரு சம்­பவம் இடம்­பெற்­றது. இவை­யெல்லாம் எம் வாழ்­வோடு இணைந்த சம்­ப­வங்­க­ளாகும். இச் சம்­ப­வங்­களே எமக்­கான அனு­ப­வமும் ஏனை­யோ­ரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்­க­ளுக்­கான பாட­மு­மாக மாற்றம் பெறு­கி­றது.

 

வெல்­லம்­பிட்டி பகு­தியில் வாடகை வீடொன்றில் தற்­கா­லி­க­மாக வசித்த வட பகுதி தமிழ்க் குடும்­பத்­தினர் 1983 கல­வ­ரத்தின் பின்னர் வெளி­நாடு சென்­று­விட்­டனர். அனைத்து தள­பா­டங்­க­ளையும் சொற்ப விலைக்கு விற்ற அக்­ கு­டும்­பத்­தினர், பெருந்­தொ­கை­யான தமிழ்­மொழி புத்­த­கங்­களை தனி­யா­னதோர் அறையில் பாது­காப்­பாக பொதி செய்து கைவிட்­டு­விட்டு சென்று விட்­டனர்.

 

அவ்­ வீட்டு உரி­மை­யாளர் அப்­புத்­த­கங்­களை பல வரு­டங்கள் பாது­காப்­பாக பாது­காத்து வாட­கைக்கு இருந்­த­வர்­களின் உற­வி­னர்கள் கேட்டு வந்தால் கொடுப்­ப­தற்­காக வைத்­தி­ருந்­துள்ளார்.

 

நாட்கள், மாதங்கள், வருடம் என காலம் வளர எவ­ருமே உரிமை கோராத நிலையில் எங்கள் வர்த்­தக நிலைய விலா­சத்தை எந்த வகை­யிலோ பெற்று எம்­மிடம் விற்று பணத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

 

புத்­த­கங்­களை மற்­று­மொ­ருவர் பயன்­ப­டக்­கூ­டிய வகையில் பாது­காத்து எங்­க­ளிடம் கொடுத்­தவர் ஒரு சகோ­தார சிங்­கள மொழி அன்­ப­ராவார். மாற்று மொழி புத்­த­கங்­க­ளுக்கும் கௌர­வமும் கண்­ணி­யமும் வழங்கும் மாற்று சிந்­த­னை யைக் கொண்­டோரும் எங்கோ ஒரு கிரா­மத்து மூலையில் எம்­மோ­டு தான் வாழ்­கின்­றனர்.

 

சத்தம் இல்­லாது என்­பது வெளியே வராத வெளிச்­ச­மாகும்” என்று சொல்லி கோவை கணேஷ் கண் சிலிர்த்து எம்மை ஆச்­சரியப்­பட வைக்­கிறார். “பழைய புத்­த­கங்­களை கொள்­முதல் செய்­கையில் பல்­வேறு ஆவ­ணங்கள் அதற்குள் முடங்கிக் கிடக்கும்.

 

171DSCF4250.jpg

வெளி­நாட்டுக் காசு, முத்­தி­ரைகள், குடும்பப் புகைப்­ப­டங்கள், தேசிய அடை­யாள அட்டை என பல வகை­க­ளி­லான ஆவ­ணங்­களும் புத்­த­கங்­களின் உள்ளே காணப்­படும்” எனவும் அவர் கூறினார்.

 

ஒரு காலத்தில் பழைய புத்­தக விற்­பனை சிறப்­பாக இருந்­தது. அன்று புத்­த­கங்­களை கொள்­முதல் செய்தால் ஐந்து நாட்­களில் அவைகள் விற்­ப­னை­யா­கி­விடும். இதனால் எமக்கும் பழைய புத்­த­கங்­களைத் தேடி கொள்­முதல் செய்­வதில் பெரும் ஊக்கம் இருந்­தது.

 

குடும்­பத்தை கொண்டு நடத்த நிர்­வ­கிக்­கக்­கூ­டிய பொரு­ளா­தாரம் இருந்­தது.
ஆனால், இன்று நிலை தலை­கீ­ழா­கி­விட்­டது. 2000 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் பழைய புத்­தக விற்­ப­னையில் பெரும் வீழ்ச்சி ஏற்­பட்டுவிட்­டது.

 

கை விரித்து செலவு செய்­யக்­கூ­டிய வகை­யி­லான வரு­மானம் இல்லை. இங்கு பலகை அடுக்குத் தட்­டு­களில் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான புத்­த­கங்கள் உள்­ளன. பல மாதங்­க­ளாக வைத்த இடத்­தி­லேயே சோம்­பே­றி­க­ளாக அப்­ புத்­த­கங்கள் அனைத்தும் தூசி­யோடு தூங்­கு­கின்­றன.

 

இதற்­கான காரணம் கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் கண­னியின் வரு­கை­யாகும். இவை அறிவை வளர்க்கும் சாதனங்களாக இல்லாது ஆடம்பரமான வாழ்க்கைக்கே இழுத்துச் செல்கின்றன.

 

இச் சாதனங்களின் வருகையினால் பல குடும்பங்கள் சீர்கெட்டுப் போய்விட்ட செய்திகளை பத்திரிகைகளில் கண்டுள்ளோம். இவ்­வா­றான சாத­னங்­களின் வரு­கை­யினால் இளம் சமூ­கத்தினரின் வாசிப்­புத்­தன்மை அரு­கி­விட்­டது.

 

டிஜிட்டல் அச்சு இயந்­திர வரு­கை­யினால் அன்று விளம்­பரப் பல­கைகள், வர்த்­தகப் பெயர் பல­கைகள், சுவ­ரொட்­டிகள் எழு­தி­ய­வர்கள் பிழைப்பை இழந்து, வாழ்­வ­தற்குப் பெரும் போராட்­டத்தை நடத்­து­கின்­றனர். அவ்­வாறே இன்று பழைய புத்­தக விற்பனை பூஜ்­ஜி­யத்தில் உள்­ளது.

 

புத்­தகம் என்­பது ஒரு மனி­தனை முழு மனி­த­னாக்கும் கரு­வி­யாகும். அவன் புத்­த­கங்­களைப் படிக்கப் படிக்க, மொழி­வளம் பெறு­வ­துடன் அவன் ஒரு அறி­வா­ளி­யாக பரி­ணாமம் பெறு­கிறான்.

 

சமூ­கத்தில் நல்ல கருத்­துக்­களை விதைக்­கிறான். இன்­றைய இளம் சமூகம் புத்­தக வாசிப்பில் இணை­ய­வேண்டும். அப்­போது நல்­லதோர் சிந்­தனைக்களம் உரு­வாகும்” என்­றவர், வாசிப்பு செழிக்கும் காலம் எப்­போது உருவாகும்? என எம்மிடம் கேடகிறார் கோவை கணேஷ் ஆதங்கத்தோடு.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=171&display=0#sthash.OqVtBx1F.dpuf
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this