Jump to content

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

Recommended Posts

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

DSC_0639_1_.JPG

கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

DSC_0691_1_.JPG

இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விதிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

unnamed__3_.jpg

முல்லை நகரில் இந்த சிலை அமைக்க வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும் முன்வைப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

unnamed__4_.jpg

http://www.virakesari.lk/article/14772

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் நடந்திருக்கிறது ....அவர்கள் விஷமிகள் அல்ல  முதுகெலும்பு உள்ளவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unnamed__4_.jpg

இப்படியே.... சிலை  இருப்பதும், வடிவாய்த் தான்  இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

DSC_0639_1_.JPG

மக்களுக்காக ஒதுக்கயி பணத்தில்

அவர்களுக்கு எல்லாம் செய்து முடித்து விட்டாரோ இந்த வைத்திய.........???

மீண்டும் மீண்டும்

இந்தியாவையும் தமிழரையும் முரண்படவைத்து

குளிர் காயப்போகிறது சிங்களம்.

Link to comment
Share on other sites

நாடு படுற பாட்டுக்கு நாரி ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்டுதாம். எண்ட மாதிரி  கிடக்குது சிவமோகன் அவர்களின் செயற்பாடு. உந்த சிலை வைக்குற காசுக்கு நாலு கஷ்டப்பட்ட சனத்துக்கு ஏதாவது உதவி செய்யலாம். ஆனால் அதுக்கு மனம்வராதே.  அப்படி சிலை வைக்க ஆசைப்படால், ஈழத் தமிழ் பெரியவர்கள் யாராவது ஒருவரது சிலையை, பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கைவைக்காமல் வைக்கலாம். அதை விட்டிட்டு சும்மா காந்தி சிலை வைப்பதால் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லை (கிந்த்யாக்கு செம்பு தூக்க உதவியா இருக்கும்). 
இதுதான் இவர் தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.  காந்தி சிலை வைப்பதால் நாட்டில் பாலும் தேனும் ஓடுது எண்டு எல்லோரும் நம்புவினம் எண்டு ஒரு நினைப்போ.

உந்த சிலை உடைப்பு மிக நல்ல விடையம். செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் அரசியலுக்கு வரும்வரைதான் மக்களுக்கு அது செய்வம் இது செய்வம் எண்டு தொண்டை கிழிய கத்துவினம். பதவிக்கு வந்தவுடன் நீ யாரோ நான் யாரோ. மாமனும் மச்சானும் தான் முக்கியம். அதைவிட முக்கியம் செம்பு தூக்குற வேலை. பிணம் திண்ணை கூட்டம் .

Link to comment
Share on other sites

29 minutes ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில்

இலங்கையின் மிகவும் வறிய மாவட்டங்களாக முல்லைத்தீவும் மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதேமாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பாஉ ஒருவரினால்வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை அமைக்கும் கேவலத்தை என்ன வென்று சொல்வது.

சுனாமி நினைவு நாளில் ஒரு விடயத்தை நினைத்து பார்க்கிறேன்.......
சுனாமி ஏற்பட்ட அடுத்த நாளில்  எமது  Gemeinde (council)இல் ஒரு அறிவிப்பு வருகிறது ஆசியவில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது நாம் அணைவரும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டுமன..... டிவிகளில் சுனாமி அவலத்தினைப் பார்த்த் மக்கள் பதை பதைக்கிறார்கள் உடனடியாக அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள் அந்த வருடப்பிறப்பிற்கு தாம் வெடிகொழுத்துவதினை தவிர்த்து அந்தப் பணத்தினை சுனாமி உதவியாக வழங்குவதென.....
(சுமார் இருபது ஆயிரம் பிராங்குகள் வரை அவர்களால் சேர்த்து வழங்கப்பட்டது) உலகில் ஏதோ ஒரு மூலையில் நடந்த அவலத்திற்கு துடிதுடித்து தமது களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து உதவிகளை வழங்கிய இந்நாட்டினர் மத்தியில்.... தனது சொந்த மக்கள் பேரவலத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியில் காந்தி எனும் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் அதே மக்களின் பிரதிநிதியினை நினைத்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ச்சுபுட்டாங்கள்  
அடேய் முதலில் கேளுங்கோடா ஈழ மக்களுக்கு காந்தி தேவையா இல்லைய என்று அதை விட்டுட்டு ........வச்சா செய்வாங்கதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Athavan CH said:

இலங்கையின் மிகவும் வறிய மாவட்டங்களாக முல்லைத்தீவும் மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதேமாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பாஉ ஒருவரினால்வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை அமைக்கும் கேவலத்தை என்ன வென்று சொல்வது.

சுனாமி நினைவு நாளில் ஒரு விடயத்தை நினைத்து பார்க்கிறேன்.......
சுனாமி ஏற்பட்ட அடுத்த நாளில்  எமது  Gemeinde (council)இல் ஒரு அறிவிப்பு வருகிறது ஆசியவில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது நாம் அணைவரும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டுமன..... டிவிகளில் சுனாமி அவலத்தினைப் பார்த்த் மக்கள் பதை பதைக்கிறார்கள் உடனடியாக அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள் அந்த வருடப்பிறப்பிற்கு தாம் வெடிகொழுத்துவதினை தவிர்த்து அந்தப் பணத்தினை சுனாமி உதவியாக வழங்குவதென.....
(சுமார் இருபது ஆயிரம் பிராங்குகள் வரை அவர்களால் சேர்த்து வழங்கப்பட்டது) உலகில் ஏதோ ஒரு மூலையில் நடந்த அவலத்திற்கு துடிதுடித்து தமது களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து உதவிகளை வழங்கிய இந்நாட்டினர் மத்தியில்.... தனது சொந்த மக்கள் பேரவலத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியில் காந்தி எனும் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் அதே மக்களின் பிரதிநிதியினை நினைத்துப் பார்க்கிறேன்.

இப்ப அரசியல் வாதி ஏதாவது செய்து பிரபலம் ஆகவேண்டும்  

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை காந்தி ஒண்டும் வெட்டிப் புடுங்கவில்லை. அந்தக் காலத்தில் இவர் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் எண்டு எங்கையோ வாசித்த ஞாபகம். உந்த காந்தியை விட நாட்டுக்கும் மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்த எத்தினியோ பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது சிலை வைத்தால் அதை ஓரளவு ஏற்கலாம்அ. அதை விட்டு சும்மா காந்திக்கு சிலை வைப்பது என்பது கிந்தியாக்கு செம்பு தூக்கும் வேலை அன்றி வேறு ஒண்டும் இல்லை.

Link to comment
Share on other sites

உந்த உதவக்கரைக்கு சிலை நிர்மாணித்துதான் காசை செலவழிக்கவேண்டுமெண்டால், சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பலாம். ஆனால் செய்ய மாட்டாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அவரின் சிலையை ஏன் தமிழீழத்தில் நிறுவனும். அநாவசியமானது. அதனை உடைத்தெறிந்த தோழர்களுக்கு நன்றி பல. 

காந்திக்குப் பின்னால்.. பெரிய பள்ளிவாசல் ஒன்றும் எழுந்து நிற்குது..???!. அதுவும் ஆபத்தானது. முல்லைத்தீவும் முஸ்லிம் மயமாகும் காலம் அதிகமில்லைப் போல. tw_angry::rolleyes:

DSC_0691_1_.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபன் சிலையை உடைத்து போட்டு முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறு ஓடவைத்த இந்தியாவின் ஆக்கிரப்பின் சின்னம் தேவையற்றது. மானமுள்ள தமிழர்கள் இன்னும் வாழ்கின்றார்கள் என்பதற்கு இது சாட்சி.யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்திற்கு முன்பு காந்திசிலை இருந்தது.அதுதமிழ்மக்களpன் அனுமதியுடன் வைக்கப்பட்டது. ஆனால் இது ஆக்கிரப்பு நோக்கத்தில் வைக்கப்பபட்டது. ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் அழிவுக்கு;காரணமான இந்திய ஆக்கிரமிப்புச் சின்னம் எமக்குத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

tw_thumbsup:       tw_thumbsup:      tw_thumbsup:

மக்கள் உண்மையை நிதர்சனத்தை உணரத்தொடங்கிவிட்டனர். :)

ஈழத்தமிழர்களுக்கு மகாபாரதமும் கம்பராமாயாணமும் அவசியமற்றது.:cool:
காந்தி , நேரு போன்ற போலிகளின் வரலாறுகளை பாலர் பாடங்களிலிருந்து அகற்ற வேண்டும்.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் கொள்கையைத் தமிழீழத்திலே கொன்றுவிட்ட பின் எதற்காகக் காந்திக்குச் சிலை. முதலில் தனிநாயகம் அடிகளார் போன்ற தமிழுக்குத் தொண்டாற்றியோருக்கு சிலை வையுங்கள்.  இந்தியாவுக்கு வால்பிடித்து எதையும் சாதிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூபதி அம்மா,  திலீபனின் தியாகங்கள்  காந்தியின் அஹிம்சைக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விட்டது ஈழத்தில். இந்திய அரசின் செயலை பார்த்து காந்தி சிலைகள்  ரத்தக்கண்ணீர் விட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. இந்தியாவின் அஹிம்சைக் காந்தி ஆக்கிரமிப்பு காந்தி ஆனது எப்போ?
புத்தரும், காந்தியும் ஈழத்தில் ஆக்கிரமிப்பு செய்வது எதனால்? இந்த இருவரின் கொள்கைகளை பின் பற்றுவார்கள் தான் எம் இனத்திற்கு கொடுமைகள் செய்தார்கள். இதை எம்மக்கள் இலகுவில் மறந்து விடுவார்களா?

திலீபன் உண்ணாவிரதத்தை பாரதத்தின் காந்தியம் தோற்றுப்போகாது என்ற நம்பிக்கையோடு ஆயுதமாக எடுத்திருந்தார் என்பது உண்மை. ஆனால் பாரதம் திலீபனிடம் தோற்று விட்டது. அகிம்சை ஆயுதத்தை விட வலியதாக இருக்க வேண்டும் என்றால் எதிரிகள் அகிம்சையை மதிக்கின்ற பண்புடையவர்களாக இருக்க வேண்டும்.
மகாத்மா காந்தி கூட நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாநோன்பு இருக்கவில்லை. அப்போது ஆட்சி செய்தவர்கள் அவரை சாக விட மாட்டார்கள் என்று காந்தி நம்பினார். அவர் உண்ணாநோன்பிருந்த பொழுது வெள்ளையர்கள் மனமிறங்கினர். 

ஆனால் திலீபன் உண்ணாவிரதம் இருந்த பொழுது காந்தி தேசம் இரங்கவில்லை. சாக விட்டு மகிழ்ந்தது. தோற்று போன அகிம்சையை குருதி கறை பிடித்த பாரதமாக வரலாற்றில் திலீபனிடம் தோற்றது இந்தியா.

காந்தி உத்தமராகவே இருக்கட்டும். எங்கள் மண்ணில் அவருக்கு எதுக்கு சிலை? எங்கள் உண்மையான அகிம்சைக்காக உயிர் கொடுத்த மகாத்மா தியாகி திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்த அன்னை பூபதி இவர்கள் சிலை அல்லவா எம் மண்ணில் வேண்டும்.
தமிழகத்தில் இருந்து எமக்காக தீக்குளித்த எம் இனஉணர்வு கொண்ட ஈகியர்களுக்கு எங்கள் மண்ணில் இல்லாத சிலை ஈழத்திற்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத இந்தியத்தின் அடையாளமான காந்தி சிலை எதற்காக?

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

காந்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அவரின் சிலையை ஏன் தமிழீழத்தில் நிறுவனும். அநாவசியமானது. அதனை உடைத்தெறிந்த தோழர்களுக்கு நன்றி பல. 

காந்திக்குப் பின்னால்.. பெரிய பள்ளிவாசல் ஒன்றும் எழுந்து நிற்குது. அதுவும் ஆபத்தானது. முல்லைத்தீவும் முஸ்லிம் மயமாகும் காலம் அதிகமில்லைப் போல. tw_angry::rolleyes:

DSC_0691_1_.JPG

சிறு திருத்தம் நெடுக்ஸ்!

காந்தி சிலை அமைக்கப்பட்ட இடத்துக்கு பின்னால் இருப்பது / தெரிவது முல்லை மாவட்ட செயலகம் (District Secretariat). அது பள்ளிவாசல் இல்லை!

தமிழர் கட்டடக் கலைகளில் இது போன்ற 'விமானமும்' அடங்கும். 

Link to comment
Share on other sites

18 hours ago, நவீனன் said:

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை

சிவமோகன் மக்கள் பணத்தை இப்படி விரயப்படுத்துவது  கடும் கண்டனத்துக்கு உரியது!
சிலை வைக்க விரும்பினால் எல்லாளன் நினைவாக ஒரு சிலையை வைத்திருக்கலாம். அல்லது வன்னி மன்னன் பண்டார வன்னியனின் சிலையை வைத்திருக்கலாம். பண்டார வன்னியனுக்கு பல இடங்களில் சிலை வைப்பது நல்லதே.

இவை முல்லைக்கு சுற்றுலா வரும் சிங்களவர்களுக்கு தேவையான சில செய்திகளை சொல்லியிருக்கும். 

Link to comment
Share on other sites

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

முல்லைத்தீவுக்கும், காந்திக்கும்  என்ன சம்பந்தம்... எண்டு, ஒருக்கா  சொல்லுவீங்களா..... :grin:

Link to comment
Share on other sites

14 minutes ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

பின்நவீனத்தில் தமிழன் பொல்லை கொடுத்து அடிவாங்க வேண்டும் என்று நியோ செப்புகிறார்.tw_yum:

Link to comment
Share on other sites

32 minutes ago, nunavilan said:

பின்நவீனத்தில் தமிழன் பொல்லை கொடுத்து அடிவாங்க வேண்டும் என்று நியோ செப்புகிறார்.tw_yum:

சிறு திருத்தம்.
பின் நவீனத்தில் தமிழன் பொல்லு கொடுத்து அடி வாங்குகிறான் என நியோ விளம்புகிறார்:215_cow:

45 minutes ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவுக்கும், காந்திக்கும்  என்ன சம்பந்தம்... எண்டு, ஒருக்கா  சொல்லுவீங்களா..... :grin:

நிட்கின் காட்க்காரேக்கும் மன்னாருக்குமான சம்பந்தம்.:215_cow:

Link to comment
Share on other sites

Just now, நியோ_நக்கீரன் said:

சிறு திருத்தம்.
பின் நவீனத்தில் தமிழன் பொல்லு கொடுத்து அடி வாங்குகிறான் என நியோ விளம்புகிறார்:215_cow:

காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். அவரின் சிலை வன்னியில் அவசியமற்றது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிலையை வைப்பது ஏற்க முடியாது. அதனால் மக்கள் அதனை உடைத்தனர்.
 புத்தர் சிலை மதம் சம்பந்தப்பட்டது. தமிழர்களை உசுப்பேற்றல். ஆத்திரமடைய வைத்தல், கேட்க ஆட்டகள் இல்லாதவர்கள் போன்ற காரணங்களால் ப்ஹ்டினுத்தர் சிலையை வைத்துக்கொண்டே போகிறார்கள்.தமிழர்கள் இவற்றை உடைப்பதால் சிங்கள இனவாதிகளுக்கும் இனவாத ஊடகங்களுக்கும் தீனி போட விரும்பவில்லை. அத்தோடு இராணுவத்தின் கெடுபிடிக்கும் ஆளாக விருப்மவில்லை. இதனால் தமிழன் பொல்லை கொடுத்து அடி வாங்க விரும்பவில்லை என்கிறேன். இனி உங்களின் விளக்கத்தை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நியோ_நக்கீரன் said:

நிட்கின் காட்க்காரேக்கும் மன்னாருக்குமான சம்பந்தம்.:215_cow:

unnamed__4_.jpg

நியோ - நக்கீரன்,  நிட்கின் காட்க்காரே.... சத்தியமாக யார் என்றே தெரியாது.
மன்னாரில், அவருக்கு சிலை வைத்த செய்தியையும், நான் படிக்க வில்லை. அதனால் அது சம்பந்தமாக கருத்துக் கூற  முடியாதுள்ளது. :)

சிலை வைக்கிறது தான்... வைக்கிறீர்கள்....
சுபாஷ் சந்திர போஸின் சிலையையாவது வையுங்களேன்....  வீரத்தின் அடையாளமாக இருக்கும்.
காந்தியை... உடைத்த மாதிரி,  சுபாஷின் சிலையை  ஒருத்தரும் .... உடைக்க மாட்டார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

புத்தர்  சிலையை.... உடைத்தால்,  "சாமிக்  குற்றம்  ஆகி, கண்ணைக் குத்தினால்"  என்ன செய்வது? :rolleyes:
சும்மா... தமாசு...  :grin:

Link to comment
Share on other sites

20 minutes ago, nunavilan said:

காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். அவரின் சிலை வன்னியில் அவசியமற்றது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிலையை வைப்பது ஏற்க முடியாது. அதனால் மக்கள் அதனை உடைத்தனர்.
 புத்தர் சிலை மதம் சம்பந்தப்பட்டது. தமிழர்களை உசுப்பேற்றல். ஆத்திரமடைய வைத்தல், கேட்க ஆட்டகள் இல்லாதவர்கள் போன்ற காரணங்களால் ப்ஹ்டினுத்தர் சிலையை வைத்துக்கொண்டே போகிறார்கள்.தமிழர்கள் இவற்றை உடைப்பதால் சிங்கள இனவாதிகளுக்கும் இனவாத ஊடகங்களுக்கும் தீனி போட விரும்பவில்லை. அத்தோடு இராணுவத்தின் கெடுபிடிக்கும் ஆளாக விருப்மவில்லை. இதனால் தமிழன் பொல்லை கொடுத்து அடி வாங்க விரும்பவில்லை என்கிறேன். இனி உங்களின் விளக்கத்தை பார்க்கலாம்.

சீனா  - புதிய பட்டுப் பாதை (one belt one road ). 
இந்தியா - ராமேஸ்வரம் மன்னார் பாலம்.
வடக்கில் பரவலாக காந்தி சிலை அமைப்பு.
சில சிலைகள் உடைப்பு.

மேலே உள்ள செற்பாடுகளில் தமிழ் தரப்புக்கு நேரும் இலாப நட்டங்களை பகுப்பு ஆராய்ந்து செய்து கொள்ளுமாறு உங்களை தயவு கூர்ந்து வேண்டுகிறேன்.
நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.