Jump to content

கூட்டமைப்பு காலக்கெடு


Recommended Posts

கூட்­ட­மைப்பு காலக்கெடு

Heding-01-5adbf030119215e6e2980c9a59caeeabfeb547e2.jpg

 

ஆர்.ராம்

கேசரி வாரவெளியீட்டிற்கு சுமந்திரன்  எம். பி. பிரத்தியேக தகவல்

ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய முடி­வொன்றை எடுப்­பது என்­ப­தற்­காக தேசிய அர­சாங்­கத்­திற்கு எதிர்­வரும் பெப்­ர­வரி மாத நடுப்­ப­கு­தி­வ­ரையில் கால­ அ­வ­காசம் வழங்­கி­யுள்­ளது.

2017ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடுப்­ப­குதி வரையில் தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­போகும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடி வும் அமையும் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இக்­கூட்டத் ­தொ­டரில்

ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல்­ஹூசைன் இலங்கை அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பது தொடர்­பான அறிக்­கையை மார்ச் மாதம் 22ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

குறிப்­பாக ,கடந்­த­வ­ருடம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது உட்­பட இலங்கை விஜ­யத்தின் போது தான் நேரில் அவ­தா­னித்த மற்றும் ஆராய்ந்த விட­யங்­களின் அடிப்­ப­டையில் ஐ.நா ஆணை­யாளர் செய்ட் அல்­ஹூசைன் எழுத்­து­மூல அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஏகோ­பித்த ஆணை­பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது. அதே­நேரம் தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­களை தீர்ப்­பதில் தேசிய அர­சாங்­கமும் திருப்­தி­க­ர­மா­ன­தாக செயற்­ப­ட­வில்லை எனவும் குற்­றச்­சாட்­டுக்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மறு­பக்­கத்தில் தேசிய அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்கள், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற விட­யங்­களில் அக்­கறை செலுத்தி வரு­கின்­றது.

ஆகவே, தேசிய அர­சாங்கம் இவ்­வா­றான செயற்­பா­டு­களால் பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து தப்­பித்­து­வி­டுமா? மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் தேசிய அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்தும் நழு­விக்­கொள்­ளுமா? புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி என்ற ஒரு விட­யத்தால் அனைத்தும் மூடி மறைக்­கப்­பட்­டு­வி­டுமா? என எழுந்­துள்ள சந்­தே­கங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கேசரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக தக­வலில்

அர­சாங்கம் சரி­யான வேகத்­திலே செயற்­ப­ட­வில்லை என்­பதை பல தரு­ணங்­களில் சுட்­டிக்­காட்­டிக்­கொண்டு வரு­கின்றோம். இல­கு­வாக செய்­யக்­கூ­டிய பல விட­யங்­களை அவர்கள் செய்து முடிக்­க­வில்லை என்­பது எமது நிலைப்­பாடு.

கடந்த ஜுன் மாதம் ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­கரை நேர­டி­யாக சந்­தித்து பேசிய போது இவ்­வி­டயம் குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். அதன்­போதும் நான் அர­சாங்­கத்தின் கால­தா­ம­தங்கள் குறித்து தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருந்தேன். அது­மட்­டு­மன்றி ,இந்த விட­யங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்­கத்­துவம் வகிக்கும் நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­தி­யி­ருக்­கின்றோம்.

இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை அளித்து தனது பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.தமது பொறுப்­புக்­கூ­றலை செய்து முடிப்­ப­தற்கு கால­அ­வ­காசம் போதாமல் போய்­விட்­டது. ஆகவே, எமக்கு மேலும் கால­அ­வ­காசம் தாருங்கள் என ஐ.நா.மனித உரிமை சார்பில் விண்­ணப்­பிக்க வேண்­டிய தேவை தற்­போது அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை நாம் உணர்­கின்றோம்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க பணிகள் சரி­யாக நடக்­கு­மாக இருந்தால் குறிப்­பாக தொடர்ந்தும் தாம­த­மின்றி வரை­வுகள் வெளி­யாகி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற வரை­யி­லான செயற்­பா­டுகள் பெப்­ர­வரி மாத­ம­ள­விலே வரு­மா­க­வி­ருந்தால் அவ்­வா­றான விண்­ணப்­பத்தை ஐ.நா சபையில் அர­சாங்கம் செய்யும் பட்­சத்தில் நாங்கள் ஏற்­றுக்­கொள்வோம்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் செய்­யப்­ப­டு­கின்ற அதே­வே­ளை­யி­லேயே மற்­றைய சில விட­யங்­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்­திற்கு அசௌ­க­ரி­ய­மா­க­வி­ருக்கும் என்­ப­தோடு மட்­டு­மல்ல முடி­யா­மலும் இருக்கும் என்­பதில் சில நியா­யங்கள் இருக்­கலாம்.

ஆனால் ,கைதிகள் விடு­தலை, நிலங்கள் விடு­விப்பு, வடக்கில் இரா­ணு­வத்தை குறைத்தல், மீள்­கு­டி­யேற்றப் பணி­களை நிறை­வுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்­றுதல், பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு முறை­யான வாழ்­வா­தா­ரத்­தினை வழங்­குதல், இளைஞர் யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­குதல் போன்ற உட­ன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய விட­யங்­களை அர­சாங்கம் காலம் தாழ்த்­திக்­கொண்­டி­ருக்­காது மேற்­கொள்ள முடியும்.

ஆகவே, இன்­றி­லி­ருந்து பெப்­ர­வரி நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தி­யினுள் அர­சாங்கம் ஆகக்­கு­றைந்­தது இந்த விட­யங்­க­ளி­லா­வது முற்­போக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு சட்ட உரு­வாக்­கத்­திலே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை ஏற்­றுக்­கொண்டு வரை­வுகள் வெளி­யா­க­வேண்டும். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ரமே அர­சாங்­கத்­திற்கு கால­அ­வ­காசம் கொடுப்­பற்கு இணங்­குவோம். அது நியா­ய­மா­ன­தா­கவும் இருக்கும்.

அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத பட்சத்தில் நாங்கள் வித்தியாசமாக செயற்படவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே ஏற்படும். அதற்காக நாங்கள் பின்னிற்கவும் போவதில்லை. பொறப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலகி நிற்கமுடியாது. அதற்கும் நாமும் இடமளிக்கப்போவதில்லை.

சில விடயங்கள் அரசாங்கத்தினால் மட்டுமே செய்யமுடியும். அதற்காக நாம் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் பலவகைகளில் அழுத்தங்களை வழங்கியவாறே இருப்போம். அவ்வாறான விடயங்களுக்கு வெளிநாட்டுச் சக்திகள் உந்துசக்திகளாகவே இருக்கமுடியும். அந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக உந்து சக்திகளை உந்து சக்திகளாக பயன்படுத்துகின்ற யுக்தியையும் நாம் கையாள்வோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-25#page-1

Link to comment
Share on other sites

2009 ஆம்  ஆண்டு பி டி  எப் ஜெனிவாவில். ஆரம்பித்து வைத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்னும் பொறியே கூட்டமைப்புக்ம் பேரம் பேசும் வல்லமையை வழங்கி உள்ளது. இதனை புலம் பெயர் அமைப்புக்கள் பி டி  எப் என்பவை மீது விமரிச்னம் வைட்தவர்கள் க்வனத்தில் எடுக்க வேணும். ஒன்றும் தன் பாட்டில்நிகழ்வதில்லை. சரியான முலோபாயம், தூர நோக்கு,நடைமுறை சார் செயற்திட்டம், அது சார்ந்து செயற்படும் அமைப்பு, இவை இன்றி எந்த விடுதலையும் சாத்தியப் படாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.