Jump to content

தமிழ் சினிமா 2016: யார் நாயகி?


Recommended Posts

தமிழ் சினிமா 2016: யார் நாயகி?

 

heroines_3107473f.jpg
 
 
 

சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்?

2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்?

# சமந்தா

‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து விட்டதையும் சொல்ல வேண்டும்.

# ஏமி ஜாக்சன்

‘கெத்து', ‘தெறி' என இரு படங்களில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வந்து போனார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தமிழ் சினிமாவில் நானும் நாயகி என்று அட்டென்டென்ஸ் போட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

# ஹன்சிகா

அழகு மட்டுமே நடிகைக்கான முழுத் தகுதியாகிவிடாது என்பது ஹன்சிகாவுக்குத் தெரிந்திருக்கும். ‘அரண்மனை2', ‘மனிதன்', ‘போக்கிரி ராஜா', ‘உயிரே உயிரே' என நான்கு படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் நடிக்கத் தெரிந்த நடிகையாக ஹன்சிகா வரவில்லை. வளரவில்லை.

# த்ரிஷா

15 வருட சினிமா அனுபவத்தை நிரூபிப்பதற்கான காலமும், களமும் த்ரிஷாவுக்குக் கனிந்திருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால் த்ரிஷாதான் அதற்குத் தயாராகவில்லை. ‘கொடி' படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு போதிய வலுவும், பலமும் இருந்தும் த்ரிஷா அதைச் சரியாகக் கையாளவில்லை.

# ஸ்ரீதிவ்யா

‘பென்சில்', ‘மாவீரன் கிட்டு', ‘மருது', ‘காஷ்மோரா', ‘பெங்களூர் நாட்கள்' என ஐந்து படங்களில் நடித்தார். இதில் ‘காஷ்மோரா' தவிர மற்ற படங்களில் நடிக்க அவ்வளவு வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பளிச் தோற்றம், சின்ன புன்னகை மட்டுமே நடிப்புக்கான இலக்கணம் அல்ல. கதாபாத்திரத்தை உள்வாங்குவதே முதன்மையானது.

# ஆனந்தி

கண்களால்கூட நடிக்க முடியும் என்று முன்பு அசரவைத்த ஆனந்தி, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு', ‘கடவுள் இருக்கான் குமாரு', ‘விசாரணை' ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ‘விசாரணை' நாயகிக்கான களம் அமைக்கவில்லை என்பதை தவிர்த்துப் பார்த்தால், ஆனந்தி மற்ற இரு படங்களிலும் வெறுமனே கடந்து போகிறார்.

# ஐஸ்வர்யா ராஜேஷ்

‘தர்மதுரை', ‘ஹலோ நான் பேய் பேசறேன்', ‘குற்றமே தண்டனை', ‘பறந்து செல்ல வா', ‘மனிதன்', ‘கடலை' என ஆறு படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதிகப் படங்கள் நடித்த கதாநாயகி என்ற பெருமையைப் பெற்றார். ‘தர்மதுரை'யில் சில காட்சிகளே என்றாலும் ஸ்கோர் செய்தார். ஆனால், மற்ற படங்களில் காமா சோமா பாத்திரம்தான்.

# ராதிகா ஆப்தே

‘கபாலி' படத்தில் ரஜினிக்கு ஈடாக நடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும், கொஞ்சமும் சளைக்காமல் நடித்த ராதிகா ஆப்தேவின் நடிப்பு அருமை! பாண்டிச்சேரி காட்சியில் கண்கள் கசியப் பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பைக் கொடுத்தார்.

# நிவேதா பெத்துராஜ்

‘ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆச்சரிய வரவு. சூழல், நெருக்கடி உணர்ந்து அதற்கேற்ற முகபாவங்களை, உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்தில் பல உணர்வுகளைக் கண்முன் கடத்துகிறார். அப்பா- காதலன் இடையில் தவிப்பது, பிரிவில் வருந்துவது, காதலனை விலகி இன்னொரு வனைக் கைபிடிக்கும் நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பது என நடிப்பில் புருவம் உயர்த்த வைத்தார். அவரின் நடிப்புக்காகவே ஜெயம் ரவி, உதயநிதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

# நயன்தாரா

பெரிய பட்ஜெட் படங்களின் தவிர்க்க முடியாத நாயகி நயன்தாரா. நான்கு படங்கள் நடித்தாலும் அதில் நயனுக்கான இடம் குறைவாகவே இருந்தது. 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவுடன் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைத்தார். இருமுகனில் கொஞ்சமே வந்தாலும் கெத்து காட்டினார். ‘காஷ்மோரா' படத்தில் கம்பீர முகம் காட்ட நயனைத் தவிர வேறு ஆள் இல்லை என்ற அளவுக்கு வியக்க வைத்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரத்தையும், வசீகரத்தையும் அள்ளி வழங்குவதால் நயன் இப்போதும் இளமையின் வசீகர அடையாளம்.

# மற்றும் சிலர்...

பூஜா தேவ்ரியா, நித்யா மேனன், மடோனா செபாஸ்டியன், மஞ்சிமா மோகன், அமலாபால். ரம்யா பாண்டியன் ஆகியோரும் இந்த ஆண்டில் கவனம் பெற்றார்கள்.

கவனிக்க வைத்த 3 நாயகிகள்

# வரலட்சுமி சரத்குமார்

‘தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமி காதலனின் அப்பாவுடன் மது அருந்துவது, உட லைக் கேட்கும் ஆண்களைப் புரட்டி எடுப்பது, சசிகுமார் ‘இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்' என லாகவமாகப் பேசும்போது அவரை எட்டி உதைப்பது, பெயர் கேட்டால் ‘மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுவது என அசாத்திய நடிப்பில் கவனம் ஈர்த்தார்.

# தமன்னா

பார்பி பொம்மையாகவே வந்து போன தமன்னாவுக்கு ‘தோழா', ‘தர்மதுரை', ‘தேவி' மூன்றும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட படங்கள். கிராமத்துப் பெண், நடிகை, லிவிங் டு கெதர் வாழ்வைப் பின்பற்றும் துணிச்சலான பெண் எனச் சகலத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார் தமன்னா. ‘தர்மதுரை' படத்தில் சிக்கலான, கனமான பாத்திரத்தையும் மிகச் சரியாகக் கையாண்டார். உடல் மொழி, உடைகள் உட்பட எல்லாவற்றிலும் தமன்னா முன்பைவிட மெருகேறி இருக்கிறார்.

# கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்', ‘ரெமோ', தனுஷுடன் ‘தொடரி' என கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஸ்டார். சாதாரண ஹோம்லி லுக்கில் வந்து போனாலும் கீர்த்தியின் புன்னகையும், விழி மொழியும் ரொம்பவே ஈர்க்கின்றன. ‘தொடரி'யில் அளவாக நடித்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். அடுத்தடுத்து ஓவர் ஆக்டிங் நடிப்பைப் பின் தொடர்ந்தது சிக்கல். ‘ரெமோ'வில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தார்.

சிறப்பிடம்: ரித்திகா சிங்

‘இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அறிமுகப் படலத்திலேயே ஆஹா எனச் சொல்ல வைத்தார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையின் கதை என்பதால் நிஜ வீராங்கனை ரித்திகா நடித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், நடிப்பு ரீதியாகவும் அது மிகச் சிறந்த தேர்வாக இருந்ததுதான் பலம். கோபம், சண்டை, ஆவேசம் எனப் பன்முக உணர்வுகளை வெளிப்படுத்திய ரித்திகாவின் நடிப்பு அபாரம். யாருக்கும் அடங்காமல் வெடிப்பதும், நிலைமை உணர்ந்து துடிப்பதுமாக நடிப்பில் முழு ஆதிக்கம் செலுத்தினார்.

விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை' படத்திலும் ரித்திகா மிக அழகாக முத்திரை பதித்தார். பாஸ்போர்ட் அலுவலத்தில் நின்றுகொண்டு விஜய் சேதுபதி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதும், வெட்கமும் தயக்கமும் பூரிப்பும் புன்னகையுமாக அவர் சம்மதம் சொல்லும் அழகுக்காகவே ரித்திகாவை ரசிக்கலாம். இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகை ரித்திகா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/தமிழ்-சினிமா-2016-யார்-நாயகி/article9440271.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.