Jump to content

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.

 

2016ம் ஆண்டிற்கான திட்டங்களின் செயற்பாட்டு முடிவுகள்

 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.

 
1.     புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள்

வித்தியாலய அதிபர் அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப்பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளரால் நேரடியாகச்சென்று  மதிப்பிடப்பட்ட 3 லட்சத்து 66 ஆயிரத்து 500ரூபாக்களுக்கன மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை எமது ஆதரவில் இயங்கும் தையலகத்தினூடாக செயற்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதனால் அதில் பணிபுரியும் மக்கள் நலமடைவதற்கு உதவுவதுடன் பாடசாலைக்கும் ஓர் உந்துதலை ஏற்படுத்தும் என எண்ணுகின்றோம்
 

 
2.     புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்
   பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்  யா/ புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட மதிலின் இறுதி வேலைகள் வித்தியாமற்றும் அதிபரின் ழப்புக்களால் பின் தங்கியதாலும் சில அதிக வேலைகள் காரணமாகவும் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக கட்டிட ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு அவரது மேலதிக செலவுகளின் தரவு  அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லாமாக இச்சுற்று மதிலுக்கு 6.6மில்லியன் ரூபாக்கள் செலவளிக்கப்பட்டுள்ளது. இம்மதிலை பாதுகாப்பது அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்களின் கடமையாகும். இதன் பராமரிப்பே எம்மை மேலும் மேலும்  மக்களுக்காக செயலாற்றவும் மக்களின்ஆதரவைப்பெற்று மேலும் மேலும் பெரும் திட்டங்களை செய்யவும்உற்சாகப்படுத்தும்.

 
 
3.     புங்குடுதீவு வாணர்அரங்கு 
   வாணர் அவர்களின் நினைவாக புனரமைக்கப்படும் அரங்கு பற்றி வாத பிரதிவாதங்கள் இருந்தபோதும் அவருக்கு மதிப்பளித்தல் மற்றும் அவரை நினைவு கூரல் என்பதில் எமது ஊர் மக்களிடையே எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன்படி வாணர் அரங்க அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒரு மில்லியன் ரூபா உதவியளிப்பதாக அதன் நிர்வாகத்தினால் முடிவெடுக்கப்பட்டது. இதில்   அரைவாசி உடனடியாக அனுப்பிவைக்கப்படுமெனவும். மீதி அரங்கின் வளர்ச்சிப்போக்குக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும்  என்பதை இங்கு அறியத்தருகின்றோம்.

வாணர் அரங்கு திட்டத்தினை பார்ப்பதற்கு >>>>>வாணர்அரங்கு திட்டம்
 
4.     தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும்குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பு உதவி
    பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தாயகம் செக்டா (சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம்) அமைப்புடன் சேர்ந்து தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்புக்காக கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட  சிறு  ஆடைத்தொழிற்சாலையைதற்போது பளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் மற்றும் அதன் தொழில் நுட்பமுன்னேற்றத்துக்காகவும், இதே போல் கிழக்கு மாகாணமக்களுக்கும் உதவும் நோக்குடன் மட்டக்கிளப்பில் செக்டாவினால் நடத்தப்படும் ஆடைத்தொழிற்சாலையினை தொழில்நுட்பரீதியாக முன்னேற்றுவதற்காக செக்டாவால் விடுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை முன்னய எமது நிர்வாகக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு 5 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டடது என்பதனையும் இங்கு அறியத்தருகின்றோம். (கிளிநொச்சியில் இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி, பளை நகரம்,பளை, கிளிநொச்சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து 2வது காணி)

 
              நன்றி.

 
              புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்
 
 
Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

2016ம் ஆண்டிற்கான திட்டங்களின் செயற்பாட்டு முடிவுகள்

நடந்தவைக்கு வாழ்த்துக்கள்.
நடக்கப்போவவைக்கு அதிகமான வாழ்த்துக்கள்.

ஆனாலும் ஒரு வருத்தம் - உங்கள் ஊர் வெறிச்சோடிப்போய் இருக்குதே, நகர் நோக்கி பெயர்ந்த மக்களை ஊர் திருப்பவும் ஏதாவது செய்யணும்.

இது எனது ஆதங்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

நடந்தவைக்கு வாழ்த்துக்கள்.
நடக்கப்போவவைக்கு அதிகமான வாழ்த்துக்கள்.

ஆனாலும் ஒரு வருத்தம் - உங்கள் ஊர் வெறிச்சோடிப்போய் இருக்குதே, நகர் நோக்கி பெயர்ந்த மக்களை ஊர் திருப்பவும் ஏதாவது செய்யணும்.

இது எனது ஆதங்கம் மட்டுமே.

நகரங்களை நோக்கி  நகரத்தொடங்கிய மக்களை

மீண்டும் தீவுகளுக்குள் கொண்டுவருவது மிக மிக சிரமம் சகோதரா.

இன்றைய சூழ்நிலையில்

யாழ்ப்பாணத்திலிருந்து 10 மைல்களுக்கப்பால் மக்கள் செல்வதை விரும்புவதே இல்லை

இருக்கும் மக்களையாவது இடம் மாறாது காப்பதும்

அவர்களுக்கான அத்தியாவசிய விடயங்களை செய்து கொடுக்கவுமே முயல்கிறோம்

இறுப்பிட்டி

குறிகாட்டுவான்

மடத்துவெளி

மற்றும் மத்தியபகுதிகளில் பெரும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன

நம்புங்கள்

குறைந்தது 5 வருடங்களில் பெரும் மாற்றங்களை பார்க்கலாம்.

நன்றி  கருத்துக்கும் வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும்.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

நம்புங்கள்

குறைந்தது 5 வருடங்களில் பெரும் மாற்றங்களை பார்க்கலாம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

மறுபடியும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமையை செய் பலன் தானே வந்து சேரும்.....!

முன்னெடுத்த திட்டங்களை முழுமையாக முடித்து வைத்ததற்கு ஒன்றியத்துக்கு  பாராட்டுக்கள்....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

கடமையை செய் பலன் தானே வந்து சேரும்.....!

முன்னெடுத்த திட்டங்களை முழுமையாக முடித்து வைத்ததற்கு ஒன்றியத்துக்கு  பாராட்டுக்கள்....! 

நன்றி அண்ணா.

புலம் பெயர் தேசங்களிலிருந்தபடி

இவ்வாறான பெரிய திட்டங்களை செய்து

அதனை முழுமையாக முடிப்பது என்பதன் சிரமங்களை எதிர் கொண்டோம்

ஒப்பந்தத்தில் போடப்பட்ட பணம் ஒரு வருடத்துக்கு முன்பே முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்ட போதும்

அங்குள்ளவர்களின் அசிரத்தையாலும்

சில தடங்கலாலும் நீண்டு சென்றபோதும்

அதற்கும் நாமே லட்சங்களை மீண்டும் கொடுத்து முடிக்கவேண்டிய நிலை.....

ஆனாலும்   தொடர்வோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 2016´ம் ஆண்டு திட்டங்கள் நான்கும்...
மாணவர்கள், கலைஞர்கள், பொது மக்கள்.... என்று செய்யும் செயலுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.