Sign in to follow this  
நவீனன்

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

Recommended Posts

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

newsziland-1.jpg

நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது என கைலேசின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஸ் தனபாலச்ங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குபவர். அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம் இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி எனவும் கைலேசின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/11181

Share this post


Link to post
Share on other sites
நியூஸிலாந்தில் தீவிபத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பம் உயிரிழப்பு
 
 
நியூஸிலாந்தில் தீவிபத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பம்  உயிரிழப்பு
நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்தால் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன.தென் ஒக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்திலேயே ஒரு  குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூ ஸிலாந்து அகதி வழக்கறிஞர் இழந்துள்ளதாக நியூஸிலாந்து ஊடகம்  ஒன்று தெரிவித்துள்ளது.
 
குறித்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கைலாஷ் தனபாலசிங்கம் என்பவரின் ஐந்து வயது மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைலாஷை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகி ன்றனர்.
 
இந்த சம்பவத்தில் மூன்று தலைமுறையினர் உயிரிழந்துள்ளதாக கைலாஷின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்து ள்ளார்.
 
தனபாலசிங்கம் தற்போது நியூஸிலாந்து அகதிகள் சபையின்  நிர்வாக அதிகாரியாக செயற்படுகின்றார். அவர் அந்த நாட்டில் மிக வும் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
 
இதேவேளை  பாடசாலை மாணவரும் 39 மற்றும் 66 வயதுடைய இரண்டு பெண்களும் Flat Bush பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
உயிரிழந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியும் 69 வயதுடைய தாத்தாவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான நிலை யில் வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.
 

http://www.onlineuthayan.com/news/21707

Share this post


Link to post
Share on other sites
Sasi_varnam    654

கைலேஷன் யாழ் இந்தக் கல்லூரியின் 88 (உயர்தரம்) பயின்றவர். என்னுடைய நண்பன்.
கனடாவை விட்டு போகும் போது எங்கள் வீட்டில் தான் கடைசியாக ஒரு பார்ட்டிக்கு வந்து இருந்தான்.
அன்பான, அழகான மனைவி, இரண்டு குழந்தை செல்வங்கள் .... இந்த புதிய வீட்டை 6 மாதங்களுக்கு முன்னர் தான் மனைவியின் விருப்பப்படி வாங்கி குடி புகுந்து இருந்தான்.
மனைவி (பாமினி)யின் அப்பா, அம்மா 8 நாட்களுக்கு முன்னர் தான் கனடாவில் இருந்து பேரக் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார்கள் ....

ஒட்டாவா பல்கலைகழகத்தில் கணனி துறையில் படித்தவன் ... அநேகருக்கு கனடாவில்  கைலேஷனை   தெரிந்திருக்கலாம்..
மனசே வெறுமையாக இருக்கிறது....

Edited by Sasi_varnam

Share this post


Link to post
Share on other sites
nedukkalapoovan    4,631

லண்டனில் கவுன்சில்காரன்களுக்காக சிமக் அலாரம் பழுதுபார்க்கும் அல்லது பொருத்தும் நிலையில் தான் எம்மவர்கள் வீடுகள் உள்ளன. சொந்தப் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்பதை விட.. அலட்சியமும்.. ஒரு வித.. முட்டாள் தனமும் எம்மவர்களிடம் உள்ளது. இப்படியான விபத்துக்கள் சில சரியான வீட்டுப் பாதுகாப்பு முறைமைகள் இன்மையால் நிகழ்வது தான் அதிகம். அந்த அறிவு பெறக் கூடிய ஆர்வமும் பரப்பும் தன்மையும் அல்லது அறிய வைக்கும் தன்மையும் குறைவு.. எம்மவரிடம். எல்லாம் வந்த பின் தான். வரும்... முன் காக்க வேண்டும் என்பது வெறும் ஏட்டுச்சுரக்காய் தான்.

எம்மவர் பலரின் வீடுகள்.. தகுந்த தீ விபத்து சமய பாதுகாப்புக்களைக் கொண்டிருப்பதில்லை. அதில் அக்கறையும் செலுத்தப்படுவதில்லை. பல மின்னியல் உபகரணங்கள் சரியான வகையில் கையாளப்படுவதும் இல்லை. குறிப்பாக மின் குதைகள்.... சமயலறை எரிவாயு.. நீர் சூடாக்கி.. பாவனைகள்... உள்ளடங்க. 

ஆழ்ந்த அனுதாபங்கள். இது தொடராமல்.. அல்லது குறைக்கப்பட எமது சமூகம்  தீ.. மின் ஒழுக்கு... மின் கசிவு.. சமையல் எரிவாயுப் பாவனை.. நீர் சூடாக்கி.. குறித்த.. அறிவூட்டப்பட வேண்டும். பல வீடுகளில்..  ஆபத்தான மின் சுற்றுக்களை எம்மவர்களே மேலதிகமாக எந்த ஆலோசனைகளும்.. இன்றிச் செய்திருப்பதை கண்டிருக்கிறேன். ஊரில செய்வது போல.  மின் உபகரணங்களை சேவைச் சோதனை செய்வதில்லை.

எல்லாம் காசு... மிச்சம் பிடிக்கிறம் என்ற தோறணையின் விளைவு. அடிப்படையில் காசு தான்.. எம்மவருக்கு எமன். அது போராட்டமாக இருந்தாலும் சரி... சாதாரண வாழ்க்கையான இருந்தாலும் சரி. :rolleyes:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Athavan CH    1,240

117311.jpg

திருமதி உமாதேவி தெய்வேந்திரன்

117312.jpg

திருமதி பாமினி கைலேசன்

117313.jpg

செல்வன் பரத் கைலேசன்

 

 

http://www.kallarai.com/ta/obituary-20161224214544.html

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் 

பலரும் தமது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தாதிருப்பதன் விளைவு இது.

இவர்களது இழப்பு

எமக்காவது பாடமாக அமையட்டும்..

Share this post


Link to post
Share on other sites
suvy    3,184

ஆழ்ந்த அனுதாபங்கள்....!

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,598

கைலேசும் இன்று இறந்து விட்டதாக அறிய முடிந்தது. tw_cold_sweat:

Share this post


Link to post
Share on other sites
Sasi_varnam    654
3 hours ago, நிழலி said:

கைலேசும் இன்று இறந்து விட்டதாக அறிய முடிந்தது. tw_cold_sweat:

உண்மை தான் நிழலி, காலையில் கூட அவன்  நலம் வேண்டி நண்பர்கள் மத்தியில் பிரார்த்தனை செய்திகள் வந்து கொண்டு இருந்தது, கைலேஷனின் உள் உறுப்புக்கள் (சுவாசப்பை)  கொஞ்சம் கொஞ்சமாக செயல் பட மறுத்துவிட்டதாக அறிகின்றேன். தீயால் வந்த புண்ணை விட அவன் மனதில் ஏற்றப்பட்ட காயம் தான் அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கும்... கண்முன்னே அன்பு மனைவி, குழந்தைகளை இழப்பதென்பது நினைத்துமே பார்க்க இயலாத விடயம்.. 

நண்பர்கள் நாங்கள் அடுத்த மாதமளவில் அவனிடம் போவதாக தயார் படுத்திக்கொண்டு இருக்கும் போது இந்த செய்தி... நண்பா....உன் ஆத்மா சாந்தியடையட்டும், என்றென்றும் நீங்கா நினைவுகளோடு ...

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Share this post


Link to post
Share on other sites

அகால மரணமடைந்த இரத்த உறவுகளுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன்
மற்றும் உற்றார் உறவினர்களின் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this