Jump to content

இலக்கியம்mmmmmம்ம்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது.

எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே    அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம் சரியாக இருக்கவே ,அலுமாரியிலிருந்த பிஸ்கட்  டப்பாவையும் ,தேனீர் கோப்பையையும் எடுத்து கொண்டு கணனிக்கு முன்னால் போய் குந்தினான்.

"வேலயால வந்து உவ்வளவு நேரமும் ஊதுலய குந்திகொண்டிருக்கிறீயள்"

"அடி ஆத்தே நான் சும்மா விடுப்பு பார்த்து கொண்டிருக்கிறன் என்று நினைச்சிறோ? ஒன் கொல் அப்பா,அமெரிக்கா,கனடா ,லண்டன் லொக்கல் எல்லாம் நான் தான் கான்டில் பண்ண வேணும்"

"எப்ப தொடக்கம் தமிழ் பிஸ்னஸ் லன்குஜ் ஆனது,எனக்கு தெரியும் நீங்கள் என்ன எழுதிகொண்டிருக்கிறீயள் என்று,ஒரு சதத்திற்கு பிரயோசனம் இல்லாத வேலை பார்க்கிறீயள்"

"அப்படி சொல்லாதையும் ஒரு நாளைக்கு  உம்மை 'எழுத்தாளனின் மனைவியோ'? என்று அடையாளப்படுத்தி  கேட்பினம்."

" ....அது வேற நினைப்பு......சும்மா விசர் கதையைவிட்டிட்டு

எனக்கு ஒரு தேத்தண்ணி போட்டுதாங்கோ"

"போட்டு தரலாம் ஆனால் லிப்டன் இல்லை,டில்மா தான் இருக்கு ,டில்மா டி குடிக்கவும் மாட்டேன் போடவும் மாட்டேன்"என்று கூறிய படியே கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ்.

இறுக்கி கதவை சாத்திவிட்டு  சென்ற சுதா சிறிது நேரம் கழித்து இரு தேனீர் கோப்பைகளுடனும் மைக்ரோவேவில் சூடாக்கின சமோசவுடன் உள்ளே வந்தாள்.

தேனீரையும் சமோசாவையும் சுவைத்தபடியே அன்று அவன் எழுதிய கிறுக்கலை வாசிக்கும்படி அவளிடம் கேட்டுகொண்டான்.அவளும் வாசித்து சுமாராக இருக்கு என சொல்வே இணையத்தில் பதிவிட்ட பின்,. எத்தனை லைக்,எத்தனை கொமண்ட்ஸ் வருகின்றது என்றஎதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பான்.

. "கிறுக்கலை இணைச்சாச்சோ ?இனி என்ன உதுல இருந்து அசையமாட்டியள்,எத்தனை லைக்,கொமண்ட்ஸ் என்று பார்த்துகொண்டு இருங்கோ"

"ஒரு எழுத்தாளன் என்றால் அப்படித்தான்"

" எப்பகல்லெறி நடக்குதோ"

"அதுதான் நான் என்னை அடையாளப்படுத்தாமல் கிறுக்கிறேன்"

வாசகர்கள் லைக்கை போட்டு கருத்துக்களை எழுதியவுடன் அவனை அறியமாலயே அவனுக்கு தான் ஒரு படைப்பாளி என்ற எண்ணம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கிவிட்டது

இணையத்தில் எழுதிய கிறுக்களுக்கு ஆயிரம்  வாசகர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை தானே இலக்கியவாதி என்று அடையாளப்படுத்தி. கொண்டு புத்தக வெளியீடுகள்,இலக்கிய சந்திப்புகள் போன்றவற்றுக்கு செல்ல தொடங்கினான்.

புத்தக வெளியீடுகளுக்கு செல்வது அவனுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை பின்வரிசையில் போயிருந்து கைதட்டி போட்டு சிற்றுண்டிகளை சுவைத்து வீடு வரும் பொழுது ஒரு  புத்தகத்தை  வாங்கி வந்து நானும் ஒரு எழுத்தாளன் ,இலக்கியவாதி என வீட்டிலுள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் பெருமையடிப்பது அவனது வழக்கம்.

கம்பரமாயணம்,ஐம்பெரும் காப்பியங்கள் இவைகள்பற்றி தெரிந்திருந்திருப்பவன் இலக்கியவாதி என அவன் எண்ணியிருந்தான்.இவற்றில் ஒன்றைப்பற்றியும் அறியாதவன் எப்படி ஒரு இலக்கிய சந்திப்புக்கு போவது என்ற மனக்குழப்பத்திலிருந்தவனுக்கு எட்டாம் வகுப்பில் படித்த இராமயணக்கதை ஞாபத்திற்கு வர கூடவே இந்திய தொலைக்காட்சிகள் ராமாயண அறிவை அள்ளிவழங்க ,இது போதுமே ஒரு இலக்கிய கூட்டத்தில் பங்கு பற்ற என்ற துணிவுடன் இலக்கிய கூட்டங்களுக்கும்  செல்ல தொடங்கினான்.இடக்கு முடக்காக யாரவது இலக்கிய விவாத்திற்கு வந்தால் "நான் ஒரு சிவபக்தன் ,ராமரைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை "என்று சொல்லி சமாளிக்கலாம் என தன்னைத்தானே சாமாதானப்படுத்திக்கொள்வான்.

வார இறுதி சிட்னியில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று முகப்புத்தகத்தையும்,அவுஸ்ரேலியா இணைய பத்திரிகைகளையும் தட்டி பார்த்துகொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது "இலக்கிய சந்திப்பும் கருத்து பகிர்வும்" என்ற விளம்பரம், விளம்பரத்தை பார்த்தவன் வார இறுதியன்று போக தீர்மானித்துக்கொண்டான். இரண்டு மூன்று அவனைப்போன்ற இளசுகளும் ஐந்தாறு முதியோரும் கலந்து கொள்ளவந்திருந்தனர்.

ஒவ்வொருத்தரும் தங்களது பெயர்களையும் படைப்புக்களையும் சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.அவனும் தன்னை இணையஎழுத்தாளன் ,வலைப்பூ கிறுக்கன் என அறிமுகப்படுத்தி கொண்டான்.

செங்கைஆழியன்,சுஜாதா போன்ற ஒரு சில பிரபல எழுத்தாளர்களை மட்டும் அறிந்திருந்த அவனுக்கு ஒரு இளம்படைப்பாளி ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை கூறி கருத்துக்களை பகிர்ந்ததை கேட்டு சிறிது நேரம் தடுமாறிபோய்விட்டான்.சுதாகரித்து நிமிர்ந்த பொழுது அவனுக்கு பரிச்சமான டக்கிளஸ் என்ற பெயரை அந்த இளம் எழுத்தாளர் சொல்ல மீண்டும்தடுமாறிபோனான்.இலக்கியகூட்டத்தினுள் என்ன நாசமறுப்புக்கு இந்த பெடியன் அரசியல்வாதிகளை இழுக்கிறார் என்று மனதினுள் எண்ணியபடி தொடர்ந்து டக்கிளஸின் அரசியல் கதைத்தால் வெளிநடப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்துடன் அமர்ந்திருந்தான்.

டக்கிளஸ் ஒரு ஏதிஸ்ட் ரைட்டர் அவரின் கதைகளை வாசிக்கும் பொழுது மிகவும் சுவார்சியமாக இருக்கும் என்று அந்த இளைஞர் சொன்ன பின்புதான் ,ஓஓ உவர் எங்கன்ட டக்கிளஸ் இல்லை வெள்ளைகார எழுத்தாள டக்கிளஸ் என்று புரிந்துகொண்டான். "இலக்கியத்தின் லெபனான்" என்று பரிஸ் தலைநகரத்தை சொல்லுவார்கள் அவ்வளவுக்கு வன்முறைகள் இலக்கியகூட்டங்களில் நடக்கும் என்று ஒரு அன்பர் கருத்து பரிமாறினார்.உடனே அவன் அங்கிருந்த படைப்பாளிகளை ஒரு நோட்டம் விட்டான் சகலரும் புத்தபெருமானின் சாந்தமே சொருபமாக காட்சியளித்தனர்.நிச்சயம் இவர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள் என சமாதானம் அடைந்தான்.இருந்தாலும் சிட்னி முருகனை நினைத்து பையா நான் உன் அப்பனின் தீவிர பக்தன்  நினைவில் வைத்துகொள் என்று சிட்னிமுருகனுக்கு ஒரு சின்ன ரிக்குயஸ்ட்டை வைத்து விட்டு  தொடர்ந்து, கருத்து பரிமாறலில் ஈடுபட்டோரின் கருத்தை உள்வாங்கிகொண்டிருந்தான்.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் .மண்டபத்தில் இருப்பதற்கு இருக்கைகள் காணமல் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மேடையில் நடுநாயகமாக அவன் அமர்ந்திருந்தான்.அவனை புகழ்ந்து பேச ஆறு பேர் அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

மேடையில் பாரதியின் கவிவரிகளை பேசி அவனைப்பற்றி புகழ்ந்தனர் சிலர்.வேறு சிலர் கம்பனின் வரிகளை சொல்லி ஒப்பிட்டனர் .கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து என சகல படைப்பாளிகளின் பெயர்களும் மேடையில் ஒலித்து கொண்டிருந்தன அவனுக்கோ புல்லரிப்பு தாங்கமுடியவில்லை. நன்றியுரை முடிவடைய மேடையை விட்டு இறங்கி நடக்கின்றான்.மைதானம் நிறைய வாசகர்கள் அவன் எழுதிய நாவல்களுடன் காத்திருந்தனர் ,கையொப்பத்தையிட்டபடி சென்றவனுக்கு சில பெண்கள் தங்களது கன்னத்தை காட்டினர் முத்தமிடுவதா ஒப்பமிடுவாத என திகைத்து ஒப்பமிட்டு சென்றான்.அடுத்த பெண் ....... ரிங்க் ரிங்க் அலாரம் அலற திடுக்கிட்டு எழுந்தான் .....நாசமபோன கனவுக்கு ஒரு எல்லையில்லை ......கண்ணா இலக்கியம் என்பது வேறு விளையாட்டு என்பது  வேறு..... வேலைக்கு செல்லும் பொழுது சுரேஸ் ,கனவுக்கும் கற்பனைக்கும் ஆண்டவன் ஒரு எல்லை வைக்காதது நல்லதுதான் என நினைத்தபடியே புன்முறுவலுடன் காரை செலுத்தினான்...

 

 

 

 

 

 

 

 

                                       

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கற்பனை கனவில் கலைந்த தா ...?:)  அப்துல் கலாம் சொன்னார் கனவு காணுங்கள் என்று .. ஒரு இலக்கியவாதியாக வர வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், 

அண்மைய சிட்னி இலக்கியச் சந்திப்புக்கு போனபோது அங்கு பேசியவர்களின் தாலாட்டுப் பேச்சினால் அங்கேயே தூங்கிக்தானே கடைசிப் பந்தியிலுள்ள கனவைக் கண்டீர்கள். இல்லையா!:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக்கும் ஒரு அளவே இல்லையா?

இது நீங்க கண்ட கனவில்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் கூட கனவு வருமா? சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

செங்கைஆழியன்,சுஜாதா போன்ற ஒரு சில பிரபல எழுத்தாளர்களை மட்டும் அறிந்திருந்த அவனுக்கு ஒரு இளம்படைப்பாளி ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை கூறி கருத்துக்களை பகிர்ந்ததை கேட்டு சிறிது நேரம் தடுமாறி போய்விட்டான்சுதாகரித்து நிமிர்ந்த பொழுது அவனுக்கு பரிச்சமான டக்கிளஸ் என்ற பெயரை அந்த இளம் எழுத்தாளர் சொல்ல மீண்டும்  தடுமாறிபோனான். இலக்கிய கூட்டத்தினுள் என்ன நாசமறுப்புக்கு இந்த பெடியன் அரசியல்வாதிகளை இழுக்கிறார் என்று மனதினுள் எண்ணியபடி தொடர்ந்து டக்கிளஸின் அரசியல் கதைத்தால் வெளிநடப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்துடன் அமர்ந்திருந்தான்.

ஹா... ஹா... ஹா.....   நல்ல  பகிடி,   புத்தன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2016 at 0:25 AM, நிலாமதி said:

உங்கள் கற்பனை கனவில் கலைந்த தா ...?:)  அப்துல் கலாம் சொன்னார் கனவு காணுங்கள் என்று .. ஒரு இலக்கியவாதியாக வர வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்கு நன்றிகள்....மேடையேறி மைக் பிடிச்சா நானும் இலக்கிவாதி தான்tw_tounge_wink:

On 22/12/2016 at 0:46 AM, கிருபன் said:

புத்தன், 

அண்மைய சிட்னி இலக்கியச் சந்திப்புக்கு போனபோது அங்கு பேசியவர்களின் தாலாட்டுப் பேச்சினால் அங்கேயே தூங்கிக்தானே கடைசிப் பந்தியிலுள்ள கனவைக் கண்டீர்கள். இல்லையா!:rolleyes:tw_blush:

தூக்கம் வந்ததுதான் ஆனாலும் சிற்றூண்டிகளின் வாசனையால் என்னால் தூங்கமுடியவில்லைtw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டில்மாவுக்கு இப்படியான வருவது வழமைதான், நீங்கள் மீண்டும் லிப்டனுக்கு மாறுங்கோ.... ஓரு வீட்டில  ஒருத்தர் மட்டும் கனவு கண்டால் போதும்....! tw_blush:

கதை நல்லாயிருக்கு....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2016 at 0:48 AM, ஈழப்பிரியன் said:

கனவுக்கும் ஒரு அளவே இல்லையா?

இது நீங்க கண்ட கனவில்லைத் தானே?

இலவசமாக கிடைப்பது அதுதானே ......அதனால் பல நல்ல கனவுகள் வருகின்றன...சிலவற்றை எழுதமுடியவில்லை tw_tounge_wink:

On 22/12/2016 at 2:00 PM, Kavallur Kanmani said:

இப்படியெல்லாம் கூட கனவு வருமா? சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்;;;;ஆசைகள் தான் கனவாக வரும் என்று சிலர் சொல்லுகின்றார்கள்tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ உள்குத்தாப்படுது கதை 

வாழ்த்துக்கள் புத்து  இன்னும் பல வெளிவரட்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.