Jump to content

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி!


Recommended Posts

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது.

தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் அங்கு மாவீரர்களுக்கான துயிலும் இல்லம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து உணர்வோடு கலந்துகொண்டிருந்தமையும், மாவீரர்களுக்கு துயிலும் இல்லம் அமைய வேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், அதற்காக அவர்கள் எமக்கு அளித்த ஒத்துழைப்பும், உதவிகளும் அளப்பரியது.

உலகத் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றுகின்ற ஒரு தளமாகவும், ஈழத் தமிழர்களின் போரியல் வாழ்வையும், வரலாற்று தொன்மைகளையும் எடுத்தியம்பும் அருங்காட்சியகமாகவும் எதிர்காலத்தில் திகழவுள்ள "உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்" மாவீரர் துயிலும் இல்லத்திற்கான பகுதியில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் சிறந்ததோர் வரலாற்று பதிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையில், அவரது புனித அஸ்தி இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,பொருத்தமான ஒரு நாளில் முன்னறிவித்தலுடன் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உரிய மரியாதையுடன் பாலா அண்ணாவின் புனித அஸ்தி விதைக்கப்படும் நிகழ்வு பிரம்மாண்டமாக இங்கு இடம்பெறும் என்பதை உலகத் தமிழர்களுக்கு தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg


625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/ltte/01/128829?ref=home

Link to comment
Share on other sites

தமிழீழ மக்களுக்கு அடேல் பாலசிங்கம் அவர்களின் ஓர் அவசர அறிவிப்பு

எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி இருப்பதாக கூறி அதற்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் உரிமை கோருவதை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லண்டன், ஐக்கிய இராச்சியம் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ஒன்றில் விதைத்து (புதைத்து), அங்கு அவருக்கான நினைவுத் தூபி ஒன்றைக் கட்டப் போவதாகவும் அந்நபர்கள் அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறான உரிமை கோரல்களும், திட்டங்களும் எனக்கு ஆழமான மன உளைச்சலையும், கவலையையும் அளிக்கின்றன. முதலாவதாக, இவ் அமைப்பினரின் கைகளுக்கு இந்தப் பேழை எவ்வாறு கிட்டியது என்பது பற்றி எந்த விதமான கதைகள் உலாவினாலும், இவர்களின் வசம் உள்ள பேழையில் எனது கணவரின் அஸ்தி இருப்பதாக இவர்கள் மேற்கொள்ளும் உரிமை கோரலை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.

எனது கணவரின் அஸ்தி அவரது ஈம நிகழ்வு நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அதனை அவரது விருப்பத்திற்கு இணங்க பூ மஞ்சங்களின் நடுவேயும், விசாலமான முதிர்ந்த மரங்களின் கீழேயும், மென்மையாக விரிந்தோடும் அருவியிலும், அணில்கள் விளையாடி மகிழ்வுறும் மரங்களின் உதிர்ந்த இலைகளிடையேயும் சங்கமிக்க வைத்தேன்.

தனது அஸ்தி எங்கிருக்க வேண்டும் என்று எனது கணவர் விரும்பினாரோ, அங்கு அது துயில்கின்றது: அவர் ஆழ்ந்த காதல் கொண்டிருந்த இயற்கையான சுற்றுச்சூழலோடு அது ஒன்றித்து அமைதி பூண்டுள்ளது.

இதனையொட்டியுள்ள அடுத்த விடயம் பின்வருமாறு.

தனது ஈமக் கிரியைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று எனது கணவர் விரும்பினார் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தம்மிடம் அவரது அஸ்தியைக் கொண்ட பேழை இருப்பதாக இந்நபர்கள் கூறிக் கொள்வதற்கு காரணமாக இருந்த செய்கைகளும், என்னிடம் எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இப்பொழுது இந்நபர்களால் மேற்கொள்ளப்படும் உரிமை கோரல்களும், வெளியிடப்படும் திட்டங்களும் என்னை மிக மோசமாக நோகடித்திருப்பதோடு, ஒருவரின் மரணம் தொடர்பிலான சமூக ஒழுங்குமுறைகளில் பேணப்படும் நாகரீக நடத்தைக்கான பண்பியல்புகளுக்கு முரணாகவும் உள்ளன.

எனது கணவரின் அஸ்தியை வைத்திருப்பதற்கும், கையாள்வதற்குமான உரிமை எனது கணவரின் ஒரேயொரு உரித்துனராகிய எனக்கு மட்டும் உள்ளதே தவிர, அவ் உரிமை வேறு எவருக்கும், அவர்கள் எவராக இருந்தாலும், எந்தவிதமான அதிகார நிலைகளில் அமர்ந்திருந்தவர்களாக அல்லது அமர்ந்திருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கிடையாது.

அதுதான் நாகரீகமான நடத்தைக்கான பண்பியல்பாகும். பாலசிங்கம் அவர்களின் நினைவாக ஒரு கற்தூபி கட்டப்பட வேண்டும் என்று எவராவது பரிந்துரை செய்வதென்பது அவரது கொள்கையைக் காலில் போட்டு மிதிக்கும் செயல் என்பதோடு, அதனிலும் அதிர்ச்சியூட்டுவதும், மன உளைச்சலை அளிப்பதும், வேடிக்கையானதும் அவருக்கான நினைவுத் தூபி இங்கிலாந்தில் கட்டப்பட வேண்டும் என்று கூறப்படுவதுதான்.

இந்த வகையில் இவ்வாறான திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் பாலசிங்கம் அவர்களின் நினைவுகளைக் கேலிக்கூத்தாக சிறுமைப்படுத்தியுள்ளார்கள் என்பேன். பாலசிங்கம் அவர்களின் அஸ்திப் பேழை தம்வசம் இருப்பதாக உரிமை கோரியவாறு அவருக்கு நினைவுத் தூபியைக் கட்டப் போவதாகக் கூறுபவர்கள், அவர் தனது வாழ்க்கையை அணுகிய விதத்திற்கும், அவரது தனிமனித தத்துவத்திற்கும் முரணாக நடந்து கொள்ளாது, அந்த மனிதனைப் பற்றியும், அவர் எவ்வாறான கொள்கையுடன் வாழ்ந்தார் என்பதைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து, கடின உழைப்பின் மூலம் மக்கள் வழங்கிய பணத்தை உயிரற்ற, உறைந்து போன கற்களில் செலவழிக்காது, தமது கரிசனைகளை அவதியுறும் தமிழீழ மக்களின் தேவைகளுக்காகவும், அவர்களின் வாழ்வுக்காகவும் செலவிடுவதே பொருத்தமானது.

கடந்து போன மூன்று தசாப்தங்களில் பிரபாகரனுடன் நான் பேணிய உறவின் பொழுது எவ்வாறு எனது கருத்துக்களையும், விருப்பங்களையும் அவர் மதித்து நடந்தாரோ, அவ்வாறே இப்பொழுதும் அவர் நடந்திருப்பார் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

எனது கணவர் மரணமுற்றதன் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் அவர் மீது ஆழமான மதிப்பையும், அன்பையும் தமிழீழத்தின் பெரும்பான்மையான மக்கள் கொண்டிருப்பதையிட்டு நான் நன்றிகூறுகின்றேன்.

அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உண்மையான, அதிகாரபூர்வ பிரதிநிதிகள் என்றும், பேச்சாளர்கள் என்றும் தான்தோன்றித்தனமாக உரிமை கோருபவர்களைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாது, அவர்களை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுமாறு உங்களை நான் வேண்டிக் கொள்கின்றேன்.

எனது கணவரின் அஸ்தி என்று கூறப்படும் ஒன்று தம்மிடம் இருப்பதாக கூறுபவர்கள், அது விடயத்தில் தமக்கு அதிகாரமும், நியாயமும் இருப்பதாக உரிமை கோருவதையும், அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளையும் நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.

இறுதியாக உங்கள் அனைவரும் எனது அன்பையும், பண்டிகைக் கால வாழ்த்துக்களையும் உரித்தாக்குவதோடு, வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்வாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைய வாழ்த்துகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள,

அடேல் பாலசிங்கம்.”

என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/ltte/01/128939?ref=right_featured

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர், அவர்களின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். ஆனால் இது அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியை வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு கேவலமாக மாறியுள்ளது மிகவும் மோசமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் வரலாற்று மையம்: வடை போச்சே!tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர், அவர்களின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். ஆனால் இது அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியை வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு கேவலமாக மாறியுள்ளது மிகவும் மோசமானது.

ம் முகநூலிலும் கன பேர் பகிர்ந்துள்ளனர்  என்ன  தான் இவர்களின் இலக்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர், அவர்களின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். ஆனால் இது அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியை வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு கேவலமாக மாறியுள்ளது மிகவும் மோசமானது.

முடிவுக்கு வந்த பின் என்பது தவறு .............
அல்லது இப்போதான் அது பலருக்கு தெரிகிறது என்று நினைக்கிறேன்!

போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே 
தனி தனியாகவும் குழுவாகவும் கூட்டாகவும் கோஸ்ட்டியாகவும் 
இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழனின் ஒரு பகுதி இரத்தத்தில் இது ஒட்டி இருக்கிறது.
பிரபாகரன் என்ற ஒருவனால் பலரை கட்டிவைக்க முடிந்தது 
என்பதுதான் உண்மை.

நாம் தமிழர் என்ற கோணத்தில் உணர்வில் நோக்கினால் 
இது எமக்குத்தான் இழுக்கு.
இதையும் பார்த்து பரிசகித்து பல் இளிக்க ஒரு கூட்டம் இருக்கும்போது 

இப்படி ஒரு கூட்டம் இருப்பதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் இப்படி ஒரு கள்வர் கூட்டம் இருப்பதில் இல்லை! அந்தக் கூட்டத்தையும் பகிரங்கமாக நக்கலடியதேயுங்கோ! என்று மறைமுகமாக வேண்டுகோள் விடுக்கும் ஒரு கூட்டம் இருப்பது தான் ஆச்சரியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா ? அல்லது பாலாண்ணையின் அஸ்தியா?

உலகத்தமிழர் வரலாற்று மையம் நேற்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணையின் புனித அஸ்தியின் ஒருபகுதி தம்மிடம் வந்திருப்பதாகவும், தாம் உரிய தருணம் வரும்வரை தாம் பாதுகாப்பாகவும் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அடேல் பாலசிங்கம் அன்ரியின் கையெழுத்துடனான கண்டன அறிக்கையும் கூடவே வந்திருந்து. இதைத்தொடர்ந்து பல முகநூல் போராளிகள் களமிறங்கி தங்களுக்குத் தெரிந்த தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் என்ன இது என்று பார்த்தால் 2006 டிசம்பர் 14 பாலா அண்ணை சாவடைந்ததனால் அவர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி அதாவது தான் இறந்தபின் தன்னுடலை எரிக்கவேண்டும் எண்டும், தன்னுடைய உடலுக்கு ஒரு போராளிதான் தீயிடவேண்டும் என்ற வேண்டுகோளை விடுதலைப்புலிகள் இயக்கம் நிறைவேற்ற சகல ஏற்பாடுகளையும் வன்னியிலிருந்து கட்டளை வழங்கி செய்தது.

அந்தவகையில் அவரின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் அவரின் உடலுக்கு தீயிட லண்டனில் அப்போது போராளியைத் தேடினர் அனைத்துலக தொடர்பகத்தில் அது கானல்நீராக தலைவரின் பணிப்பின் பெயரில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர் ரெஜி அவர்களை பாலாண்ணையின் உடலுக்கு தீயிடுமாறு அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்

அந்தவகையில் பாலாண்ணையின் உடலுக்கு TRO ரெஜி அவர்களே தீயிட்டார் அடேல் அன்ரியல்ல. எனவே தீயிட்டவரிடம் அவரின் அஸ்தியும் கொடுக்கப்பட்டது. அப்போது தமிழ்ச்செல்வன் அண்ணையால் ரெஜி அண்ணையிடம் பாலாண்ணையின் குடும்ப மரபின் படி இறுதிக்கிரியைகளை செய்வதற்கு அஸ்தியின் ஒருபகுதியை கொடுத்து விட்டு ஒருபகுதியை பாதுகாப்பாக வன்னிக்கு அனுப்புமாறும் பணிக்கப்பட்டது. அந்தடிப்படையில் அடேல் அன்ரியிடம் கையளிக்கப்பட்ட அஸ்தி உரிய மரியாதையுடனும் இறுதிக்கிரியைகளுடனும் நீரில் கலக்கப்பட்டது.

மீதமுள்ள ஒருதொகுதி அஸ்தி விடுதலைப்புலிகளின் மரபுக்கு ஏற்ப வன்னிக்கு எடுத்துச்செல்லப்பட்டு விதைகுழியில் விதைக்கப்பட்டு கல்லறையாக அமைய இருந்தது. இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் பாலாண்ணைக்கு வன்னியில நினைவுக்கல் நாட்டவில்லையே என்று சில மேதாவிகள் எழுதியுள்ளனர். ஒரு மாவீரனின் அஸ்தியோ, உடலோ வேறொரு நாட்டில் இருந்தால் தமிழீழத்தில் நினைவுக்கல் நாட்டமாட்டார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும். அத்துடன் 2007 மாவீரர் நாளில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பிரத்தியேகமாக பாலாண்ணைக்கு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டதும், அப்போது ஊடகங்களில் வந்திருந்தன

இனி அஸ்தி பற்றிய விடயத்திற்கு வருவோம். வன்னிக்கு அனுப்ப வேண்டிய அஸ்தி 2007 அனுப்ப முயன்று முடியாமல் போக அது அப்போதைய பொறுப்பாளராக இருந்த சாந்தன் அவர்களின் பாதுகாப்பில் இருந்தது அவரும் கைது செய்யப்பட அவை பாதுகாப்பாக இவ்வளவு காலமும் பராமரிக்கப்பட்டு தற்போது வரலாற்று மையத்திடம் கையளிக்கப்பட அவர்களும் அறிக்கையாக அச்செய்தியை வெளியிடவே பிரச்சனை ஆரம்பமாகியது.

இங்கு அறிக்கை வெளியிட்ட அடேல் அன்ரிக்கு பாலாண்ணையின் அஸ்தி பத்திரமாக பாதுகாக்கப்பட்ட விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவரின் அஸ்தியை வன்னிக்கு எடுத்துச் சென்று கல்லறை கட்டுவது இயக்க விடயம் அதை அவர்கள் நிச்சயமாக அடேல் அன்ரிக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்.

அத்துடன் அடேல் அன்ரியை கையாண்டவர்களுக்கும் அனைத்துலக தொடர்பகத்தைச் சேர்ந்த கமல் முதலானவர்களுக்கும் இவ்விடயம் பற்றி அறிவிக்கப்படவில்லை ஏனெனில் இது வன்னி சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் எனவே இச்செய்தி பலரைக் குழப்பியிருக்கிறது. இதனால் அதிர்ந்து போனவர்கள் அவசர அவசரமாக அறிக்கையை தயாரித்து அடேல் அன்ரியிடம் கையெழுத்தை வாங்கி உண்மையை ஆராயாமல் ஊடகங்களுக்கும், இணையப் போராளிகளுக்கும் அனுப்ப அவர்களுக்கு இது சோழன் பெரியானது

உண்மையை ஆராயாது அடேல் அன்ரியின் கையெழுத்துடன் வெளிவந்த அறிக்கையானது அவரைக் களங்கப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேனிசை செல்லப்பா லண்டன் வந்து இசைநிகழ்ச்சி நடாத்தியபோதும் அடேல் அன்ரியை அறிக்கை வெளியிட வைத்தவர்களல்லவா இவர்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக, கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளுக்காக அல்லது நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் போராளிகளுக்காக அதேபோல் விச ஊசி ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போராளிகளுக்காக அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்ட போராளிகளுக்காக அல்லது அங்கவீனமுற்று ஒருவேளை உணவுக்காக அல்லல்படும் போராளிகளுக்காகவும், மக்களுக்காகவும் அடேல் அன்ரி ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது வரவேற்கத் தக்கதாக தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கும்

மக்கள் இவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியிருப்பர் அதை விடுத்து மக்கள் கட்டமைப்புக்களுக்கு எதிராக சில தனி நபர்களுடைய தனி நலன்களுக்காக அறிக்கை விடுவது இவருடைய பெருமைக்கும் நன் மதிப்புக்கும இழுக்கு. இது தமிழ் மக்களின் மத்தியில் அடேல் அன்ரி தவறாக வழிநடத்தப்படுகிறாரா அல்லது சதி நடவடிக்கை வலைக்குள் சிக்குண்டுள்ளாரா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

போற்றிப் பாதுகாக்க வேண்டிய அடேல் பாலசிங்கம் அன்ரியை தங்களின் பிழைப்பு அரசியலுக்கு துருப்புச் சீட்டாக அடேல் அன்ரியை அவர்கள் பயன்படுத்தியதன் மூலம் அடேல் அன்ரி தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியடைந்து தூக்கி வீசப்படும் துர்ப்பாக்கிய நிலை தோன்றுவதற்கான ஏதுநிலைகள் தென்படுகிறது இது வேதனைக்குரியது.

இவ்வறிக்கையை தயாரித்து வெளியிடப்பட்ட சின்ன ரஞ்சித் கமல் போன்றவர்கள் எப்போதுதான் உணர்ந்து கொள்வார்களோ யானறியேன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேல் அன்ரியையும் துரோகி ஆக்கியாச்சு.

ரிசிசியில் எத்தனையோ முன்னாள் போராளிகள் இருந்தார்கள். பாலா அண்ணருக்கு மாற்று சிறுநீரகம் வழங்கியதும் முன்னாள் போராளி. இவற்றைவிட புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ போராளிகள் இருந்தார்கள்.

TS ற்கு பந்தம் பிடித்து முன் வந்தவர்கள் பலர், அவ்வாறானவர்களில் ஒருவர் தான் தீயிட்டவர்.

அது சரி உந்த சங்கீதன் என்பவருக்கு 2011 இல் தனது Chrysler வாகனத்தையும் ( மக்களின்/ TRO அமைப்பின் பணத்தில் வாங்கப்பட்டது) தனது ட்ரைவர் "கே......வரன்" என்பவரையும் கொடுத்து எல்லாவற்றையும் பின்னால் இருந்து இயக்கியவர் 2016 வரை ஏன் அஸ்தியை இரகசியமாக வைத்திருந்தார்?

 

Quote

மக்கள் இவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியிருப்பர் அதை விடுத்து மக்கள் கட்டமைப்புக்களுக்கு எதிராக சில தனி நபர்களுடைய தனி நலன்களுக்காக அறிக்கை விடுவது இவருடைய பெருமைக்கும் நன் மதிப்புக்கும இழுக்கு. இது தமிழ் மக்களின் மத்தியில் அடேல் அன்ரி தவறாக வழிநடத்தப்படுகிறாரா அல்லது சதி நடவடிக்கை வலைக்குள் சிக்குண்டுள்ளாரா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அட புண்ணாக்கு பயலே அடேல் அன்ரி தனது கணவருக்காக அறிக்கை விடுகிறார். 

 

இயக்கவிடயம் அன்ரிக்கு தெரியாதாம்???? அடங்கொக்கமக்கா.....

இயக்கவிடயம், வன்னி சம்பந்தப்பட விடயம் என்கிறீர்களே சாந்தன் கைதுசெய்யப்படும் வரை, அஸ்தி அவரது பாதுகாப்பில் இருந்ததை கமலுக்கோ அன்ரிக்கோ சொல்லாமல் விட்டிருப்பாரா? 

TCC க்கும் இயக்கத்திற்கும் தொடர்பே இல்லாத எழுதியிருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கல் ஏறி மூலம் இவ்வளவுகாலமும் சும்மா இருந்தவர்களையும் தலைமை செயலகம் TCC என்று அடிபடவைத்தாயிர்று வழக்கமாக மாவிரர்நாள் முடிந்தவுடன் புடுங்குபாடு நின்றுவிடும் இம்முறை இந்த பிரச்சினை பெரிதாகிறது இங்கிலாந்தில் இங்கு பிரச்சினை பெரிதாக்கினால் யாருக்கு லாபம் ?

இவ்வளவு காலமும் ஆஸ்த்திக்கு என்ன நடந்தது ? தெளிவா ஒரு பகுதிக்கு வெளிவந்துவிட்டது அடேல் இடத்தை சொல்லவில்லை

அடேலையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாயிற்று இந்த பிரச்சினை அதுவும் கிறிஸ்மஸ் வருடபிறப்பு நேரம் அதிக மதுபாவனை புழங்கும் நேரம் சும்மா ஜெகஜோதியாய் கொழுந்துவிட்டு எரியும் முக்கியமாய் முகநூலில் தொடங்கி வீதி சண்டைக்கு உருமாற நிறைய வாய்ப்புள்ளது இதனால் எங்களுக்கு நிறைய கட்டுபாடுகள் வரும் முக்கியமாய் ஐரோப்பிய தடை விலகும் நேரம் நீட்டிக்கப்படும் சாத்தியம் நிறைய உண்டு இதனால் பாதிக்கபடுவது எல்லோருமே (முக்கியமாய் புலம்பெயர் மக்களை எப்படி சமாளிப்பது என்று தெரியும்  நக்கலாய் சிரித்தபடி சொன்னவன் சகுனி ரணில் கிட்டடியில் ) இது விளங்குபவர்களுக்கு விளங்கினால் சரி

 

(விசுகு மேல் உள்ளது உங்கள் பதிலா ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா எந்த தலைமைச் செயலக அநாமேதயப் பேர்வழியின் முகநூல் பதிவை வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என்று தெரியாது. இந்த அறிக்கைகள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் இயங்குபவர்களின் சீரழிவுகளைத்தான் அப்பட்டமாகக் காட்டுகின்றது. இரண்டு பகுதியினரும் தடுப்புக்குப் போய்வந்தவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர்களை வைத்து தமது பிழைப்புவாத அரசியலை செய்ய எதுவித கூச்சமும் இல்லாமல் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

(விசுகு மேல் உள்ளது உங்கள் பதிலா ?)

இல்லை

முகநூலில் அடிபடுகுது

இங்கும்  போட்டுவிட்டேன்

உண்மைகள் வெளி வரட்டும்....

Link to comment
Share on other sites

இது போன்ற பகிரங்க குழாயடிச் சண்டையில் இறங்கும் அடேல் பாலசிங்கம் தரப்பு ஆகட்டும், உலகத் தமிழர் வரலாற்று மையம் என்னும் மறுதரப்பு ஆகட்டும் - இருதரப்பும் பாலசிங்கம் அண்ணர் அவர்களின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்.

இந்த சகதியில் இருந்து தமிழினம் வெளிவர வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

இது போன்ற பகிரங்க குழாயடிச் சண்டையில் இறங்கும் அடேல் பாலசிங்கம் தரப்பு ஆகட்டும், உலகத் தமிழர் வரலாற்று மையம் என்னும் மறுதரப்பு ஆகட்டும் - இருதரப்பும் பாலசிங்கம் அண்ணர் அவர்களின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்.

இந்த சகதியில் இருந்து தமிழினம் வெளிவர வேண்டும்!

போல் அவ அடேல் தன்னுடைய கணவனின் அஸ்த்தி பற்றியே சொல்லுகின்றா அடேல் பாலசிங்கம் தரப்பு என்று சொல்லி அடேல்ஐ சிறுமைபடுத்தவேண்டாம்

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

போல் அவ அடேல் தன்னுடைய கணவனின் அஸ்த்தி பற்றியே சொல்லுகின்றா அடேல் பாலசிங்கம் தரப்பு என்று சொல்லி அடேல்ஐ சிறுமைபடுத்தவேண்டாம்

கணவரின் விருப்பங்களை மீறி பகிரங்க குழாயடி சண்டையில் இறங்கிய அடேல் தான் தன்னைத் தானே சிறுமைப் படுத்துகிறா! அவரை சிறுமைப்படுத்த வேறு யாரும் தேவையில்லை!

இந்த சகதியில் இருந்து தமிழினம் வெளிவர வேண்டும்!

எந்த நாட்டிலும் பொது வாழ்க்கையில் முக்கிய பங்கை வகித்த ஒருவரின் மீது மனைவிக்கு / கணவனுக்கு இருக்கும் உரிமை வரையறுக்கப்பட்டதே! சம்பந்தப்பட்ட சமூகத்துக்கும் அத்தகைய ஒருவர் மீதான உரிமை உண்டு!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, போல் said:

இது போன்ற பகிரங்க குழாயடிச் சண்டையில் இறங்கும் அடேல் பாலசிங்கம் தரப்பு ஆகட்டும், உலகத் தமிழர் வரலாற்று மையம் என்னும் மறுதரப்பு ஆகட்டும் - இருதரப்பும் பாலசிங்கம் அண்ணர் அவர்களின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்.

இந்த சகதியில் இருந்து தமிழினம் வெளிவர வேண்டும்!

கள்வர் கூட்டம் ஒன்று ஒரு குடுவையில் சாம்பலை வைத்துக்கொண்டு இது உங்கள் இறந்து போன தாயினதோ தந்தையினதோ என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? 

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

கள்வர் கூட்டம் ஒன்று ஒரு குடுவையில் சாம்பலை வைத்துக்கொண்டு இது உங்கள் இறந்து போன தாயினதோ தந்தையினதோ என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? 

அர்த்தமற்ற விதண்டாவாதக் கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனும் மனைவியுமாக போராட்டத்தினுள், பொதுவாழ்க்கையுள் உள்நுளைந்து இறுதிவரை பயணித்தவர்கள். 

Just now, போல் said:

அர்த்தமற்ற விதண்டாவாதக் கேள்வி?

உங்களுக்கு என்றவுடன் சுடுகிறது

4 minutes ago, போல் said:

எந்த நாட்டிலும் பொது வாழ்க்கையில் முக்கிய பங்கை வகித்த ஒருவரின் மீது மனைவிக்கு / கணவனுக்கு இருக்கும் உரிமை வரையறுக்கப்பட்டதே! சம்பந்தப்பட்ட சமூகத்துக்கும் அத்தகைய ஒருவர் மீதான உரிமை உண்டு!

 

இன்று அஸ்தியை வைத்திருக்கிறோம் என்பவர்கள் அரைக் காற்சட்டையுடன் திரிந்த போதுஅந்த பொதுவாழ்க்கையுள் தன்னை ஈடுபடுத்தியவர்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

கணவரின் விருப்பங்களை மீறி பகிரங்க குழாயடி சண்டையில் இறங்கிய அடேல் தான் தன்னைத் தானே சிறுமைப் படுத்துகிறா! அவரை சிறுமைப்படுத்த வேறு யாரும் தேவையில்லை!

இந்த சகதியில் இருந்து தமிழினம் வெளிவர வேண்டும்!

எந்த நாட்டிலும் பொது வாழ்க்கையில் முக்கிய பங்கை வகித்த ஒருவரின் மீது மனைவிக்கு / கணவனுக்கு இருக்கும் உரிமை வரையறுக்கப்பட்டதே! சம்பந்தப்பட்ட சமூகத்துக்கும் அத்தகைய ஒருவர் மீதான உரிமை உண்டு!

 

முடியல நம்மவர்களின் முக்கிய பிரச்சினை எழுத்தில் இருப்பதை படிக்கும்முன் நாங்களா ஒரு விம்பத்தை சிருஸ்டிக்கும் மன வல்லமை பின்பு அதை விட்டு இறங்கி வரமுடியாமை எனக்குத்தான் சொல்றன் உங்களுக்கு அல்ல போல் (அவ உண்மையை சொன்னதால் குழாய்யடி சண்டை போடும் லெவலுக்கு இறக்கியாச்சு )

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

உங்களுக்கு என்றவுடன் சுடுகிறது

அப்பட்டமான விதண்டாவாதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள்ள வேலை நடக்கும் போதே பகிரங்கமாக , சமகாலத்தில் கேட்டால் "ஐயோ, தடை விலகப் போற நேரம், தமிழர் நலனுக்குப் பாதிப்பு, கேக்காதையுங்கோ!" என்கிறார்கள்!. சம காலத்தில் கேட்காமல் ஒரு வருடம் கழித்து இதைப் பேசினால் "ஏன் பழசைக் கிளறி தமிழர் தரப்பை அசிங்கப் படுத்த வேண்டும்?" என்று கேட்பார்கள்! இது பல வருடங்களாக பல விடயங்களில் நடக்கும் ஜில் மால் போக்குத் தான்! யாரோ வீட்டின் அடுப்பு சாம்பலைப் பார்க்கவும் தூபி கட்டவும் காசு கொடுக்க விரும்புவோர் கொடுப்பது அவர்கள் உரிமை! அதற்காக பாலசிங்கத்தார் யாருக்குக் கூடச் சொந்தம் என்றெல்லாம் சுத்தி வளைச்சு திருட்டுக்கு துணைபோக முயல்வது கொஞ்சம் ஓவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீமையிலும் ஒரு நன்மை என்பார்கள்

 

பாலசிங்கம் அண்ணையை  யாழில்

துவைத்து  எடுத்தவர்கள் எல்லோரும்

இன்று அவரின்  அஸ்திக்காக கண்ணீர் வடிப்பதை பார்க்க சந்தோசமாகத்தானிருக்கு...

 

 

 

 

Link to comment
Share on other sites

புற்றீசல்கள் போல கிளம்பும் கருத்துக்கள் தமிழினத்தின்  தப்புத் தாளங்களைக் களைந்து தமிழினத்தின்  ஈடேற்றத்துக்கு உதவுவதாக அமையும் போது நிச்சயம் மகிழலாம்! வரவேற்கலாம்!

அதே நேரத்தில் தமிழ் சமூகத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே உள்ள புடுங்குப்பாடுகள் தமிழின விரோதிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும் என்பதையும் நாம் கண்டுகொள்ளலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

தீமையிலும் ஒரு நன்மை என்பார்கள்

 

பாலசிங்கம் அண்ணையை  யாழில்

துவைத்து  எடுத்தவர்கள் எல்லோரும்

இன்று அவரின்  அஸ்திக்காக கண்ணீர் வடிப்பதை பார்க்க சந்தோசமாகத்தானிருக்கு...

 

 

 

 

கண்ணீர் மட்டும்தானே வடிக்கின்றார்கள். ஆனால் பாலசிங்கத்தாரின் அஸ்தியை வைத்து பிழைப்பு நடாத்துபவர்களை பாதுகாக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றதையும் பார்க்கமுடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரப்புக்கிடையேயான புடுங்குப் பாடுகள்? :rolleyes:

இவர்கள் செய்ய முற்படுவது கீழ்த்தரமான ஆனால் படைப்புத் திறன் மிக்க ஒரு கள்ள வேலை. இதையும் யாரும் கண்டிக்கக் கூடாது அல்லது நோகாமல் கண்டிக்க வேண்டும் என்பது தான் இங்கே பலரைக் காட்டிக் கொடுக்கிறது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.