Jump to content

ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழும் சக்குனி


Recommended Posts

ஆணா­கப் பிறந்து பெண்­ணாக வாழும் சக்­கு­னி
 

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

170_DSCF4224.jpg“எனது அப்பா எனது பதி­னான்கு வயதில் கால­மானார். அவரின் திடீர் மறைவின் கவலை என்னை கலக்­கி­விட்­டது.

 

பாட­சா­லை­யில கல்வி கற்ற காலம் அது. என் அப்பா என்­னோடு உயி­ருக்கு உயி­ராக இருந் தார்.

 

அவரின் பிரிவு எனக்குள் பெரும் சோகத்தை வளர்த்­து­விட்­டது. இந்­
நி­லை­யில் தான் எனது பதி­னைந்து வயதில் காதல் உணர்வு ஏற்­பட்­டது.

 

எங்கள் பாட­சா­லையில் கல்வி கற்ற இரு­பது வயது மாண­வனை காத­லித்தேன். அவன் க.பொ.த. உயர்­தர வகுப்பு மாணவன். இது எனது முத­லா­வது காதல்” இவ்­வாறு தன்னைப் பற்றி கூற ஆரம்­பித்தார் எம். சக்­குனி.

 

“எங்­களின் காதல் வெளி­யு­ல­குக்கு வெளிச்சம் போட்டு காட்­டி­யது. எதிர் அலைகள் எழும்ப எங்­களின் காதல் சில மாதங்­க­ளி­லேயே முறிந்து விட்­டது.

 

எனது நடத்­தையில் வீட்டில் எதிர்ப்பு வெடித்­தது. நான் ஒரு பெண் என்­பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்­தனர். எனது உடல், உள்ளம், அனைத்தும் பெண் என்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தை பெற பெரும் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டி ஏற்­பட்­டது.

 

எனது குடும்­பத்தில் நான் மட்­டுமே ஆண் உரு­வத்தில் பிறந்­தவள் என சிரித்­தப்­ப­டியே கூறு­கி­றார் 36 வய­தான சக்­குனி. எனது இளம் பருவம் முதல் சிறு­மி­க­ளுடன் விளை­யா­டு­வது, சண்டை பிடிப்­பது வழக்­க­மாக இருந்­தது.

 

ஒன்­பது வயதில் பெண்­களின் உடை­களை அணிய ஆரம்­பித்தேன். பெண் பிள்­ளை­க­ளுடன் இணைந்து பெண் உருவ பொம்­மை­க­ளுடன் பேசு­வது, மண் சட்டி சமையல் செய்­வது என வேறு உலக வாழ்க்­கை க்குள் நுழைந்தேன்.

 

ஆண் பிள்­ளை­க­ளுடன் விளை­யாட விருப்பம் இல்­லாது இருந்த காலம் அது. பாட­சா­லையில் என் வகுப்பில் என்னைப் போன்று இருவர் கல்வி கற்­றனர். நாங்கள் மூவரும் ஏனைய மாண­வி­க­ளுடன் விளை­யா­டுவோம்.

 

என் கனவில் ஒரு நாள் நான் பெண்­ணாக மாற்றம் பெறு­வது தெரிந்­தது. எனது மாற்றம் பற்றி வீட்டில் பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன. என் அப்பா என அம்­மா­விடம் என்­னைப்­பற்றி தெரி­விப்­பது எனது காதில் விழுந்­தது.

 

நான் பெண்­ணாக உடை உடுத்தி திரு­நங்­கை­யாக மாறி­ரு­வது எமக்கு சரி­யல்ல, சமு­தாயம் ஏற்றுக் கொள்­ளாது என அம்­மா­விடம் தெரி­விப்­பது எனது காதில் விழுந்­தது. பயம் கொண்டேன். எனக்கு புத்தி சொன்­னார்கள்.

 

அது செவிடன் காதில் ஊதிய சங்­கா­னது. என்னால் ஆணாக உடை உடுத்தி செயல்­பட இய­ல­வில்லை. நாள­டைவில் வீட்டில் பச்சைக் கொடி காட்ட நான் என் பாதையில் பய­ணிக்கத் தொடங்­கினேன்.

 

எனது காதல் முறி­வுடன் சில வரு­டங்கள் படிப்பைத் தொடர்ந்­ததன் பின்னர் வேலை தேடி அலைந்தேன். பொர­ளையில் பெண்கள் சிகை அலங்­கார நிலை­யத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

 

அங்கு சிகை அலங்­கா­ரத்­துடன் மண­மகள் அலங்­க­ரிப்பு போன்ற பல அலங்­கார வேலை­களை கற்­றுக்­கொண்ட நிலையில் அங்கு இருந்து விலகி சில தினங்கள் வீட்­டோடு இருந்­தேன்.

 

எனது பதி­னெட்டு வயதில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் இணைந் தேன். அங்கு எச்.ஐ.வி. தொற்று விட­ய­மான பிர­சார பணி பயிற்­சியை மேற்­கொண்டேன்.

 

அங்கு எனக்கு எச்.ஐ.வி. தொற்று பரவும் விதம், அதனால் ஏற்­படும் பாதிப்பு என அனைத்து பயிற்­சியும் பேச்சுப் பயிற்­சியும் வழங்­கப்­பட்­டது.

 

எனது வாழ்க்கை தனி வழி. என் வாழ்க்கை உலகம் ஏனை­ய­வர்­க­ளி­லி­ருந்து பிள­வு­பட்ட வாழ்க்கை. திரு­நங்­கை­க­ளுக்­கான உல­கத்­துக்குள் வாழவே நான் விரும்­பினேன்.

 

எனது மன உளைச்சல், அதன் வலி என்னை விட்டு வில­க­வில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தேன். எனது முடிவு அம்­மாவை உண்­மை­யி­லேயே தொந்­த­ரவு செய்­தி­ருக்கும். அவர் பெரும் கவ­லை­ய­டைந்த பின்னர் தெரிந்து கொண்டேன்.

 

170_DSCF4222.jpg

 

பெரும் வலி­களை சுமந்­த­வாறு தனி­யாக அறை வாட­கைக்கு எடுத்து தங்­கினேன். இன்றும் என் அம்­மாவை  நினைக்­கையில் எனது மனது ஆட்டம் காணும்.

 

என்ன இருந்­தாலும் என் அம்­மாவின் கரு­வ­றையில் எனக்கு இடம் கொடுத்து எனக்கு தன் இரத்­தத்­தத்தை பாலாக கொடுத்­தவர் தானே என்ற போது சக்­கு­னியின் ஒவ்­வொரு வார்த்­தை­யிலும் போர்த்­தி­யி­ருந்­தது அம்­மாவின் பாசம்.

 

எச்.ஐ.வி. தொற்று விட­ய­மாக விப­சார தொழி­லா­ளிகள், தன்னிச் சேர்க்­கை­யா­ளர்கள் மத்­தியில் தீவி­ர­மாக எனது பிர­சாரப் பணியை மேற்­கொண்டேன்.

 

இவ்­ வி­ழிப்­பு­ணர்ச்சி பணியின் மூல­மாக எனக்கு முதன் முதலில் பதி­னைந்­தா­யிரம் ரூபா சம்­ப­ள­மாக கிடைத்­தது. அத் ­தினம் என் வாழ்க்­கையில் மறக்க இய­லாத தின­மாகும்.

 

கை நிறைந்த பணத்­துடன் எனது வாடகை அறைக்குள் நுழைந்தேன். எனக்கே தெரி­யாத உணர்வு எனது உடலில் மின்­சாரம் பாய்ந்­தி­ருந்­தது. பெரு­மைப்­பட்டேன்.

 

உண்­மை­யான பெருமை வெறும் சந்­தர்ப்ப முயற்­சி­களால் உரு­வாக்­கப்­ப­டு­வது அல்ல. அதற்கு மாறாக ஒரு மனி­த­னு­டைய உயர் தகு­திகள் தரம் அவை வெளி­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்ப சூழ்­நி­லை­களைத் தாமா­கவே உரு­வாக்கிக் கொள்­கின்­றன.

 

அதற்கு இலட்­சி­யமும் பாதையும் வேண்டும் என்­பதை அன்று உணர்ந் தேன். அன்­றைய தினம் எனக்கு சந்­தோ­சத்தின் தாக்­கத்தால் தூக்­கமும் தொலைந்­தி­ருந்­தது.

 

சில வரு­டங்­களில் அந் நிறு­வ­னமும் மூடப்­பட்­டது. அப்­போது நான் முழு­மை­யான பெண்­ணாக மாறி­விட்டேன். எனக்­கென ஒரு வாழ்க்கை வலை­ய­மைப்பை அமைத்துக் கொண்டேன்.

 

எனக்கு நேரம் கிடைக்­கும்­போ­தெல்லாம் அம்­மாவை பார்க்கச் செல்வேன். என்னை கரு­வ­றையில் பத்­தி­ரமாய் சுமந்த என் தாயின் வீட்டில் எனக்கு ஒரு அறை இல்­லையே என கவ­லைப்­பட்­ட­தில்லை. காரணம் நான் தானே வீம்பு பேசி வீட்டை விட்டு வெளி­யேறி எனக்­கென தனி கட்சி அமைத்துக் கொண்டேன்.

 

அம்மா மீது விரல் நீட்­டு­வது பாவ­மாகும். பின்னர் ‘ஹார்ட் 2 ஹார்ட்’  நிறு­வ­னத்தில் இணைந்தேன். தற்­போது இந் நிறு­வ­னத்தின் வெளிக்­கள அலு­வ­ல­ராக தொழில் புரி­கின்றேன்.

 

இப்­போது நல்ல சம்­பளம் கிடைக்­கின்­றது. நான் முழு­மை­யான பெண்­ணா­கவே வாழ விரும்­பு­கின்றேன். அதற்­கான வைத்­திய சிகிச்­சை­களை பெற்று வரு­கின்றேன். நான் இவ்­வாறு மாற்றம் பெற முயற்­சிப்­ப­தற்கு வீட்டில் அனை­வரும் சம்­ம­தத்தை வழங்கி விட்­டனர்.

 

இன்று நான் அழ­கான பெண் என்­பதில் நான் பெரு­மைப்­ப­டு­கிறேன்” என சக்­குனி தெரி­வித்தார். அதன்பின் எங்­களை குறு­கு­று­வென பார்­வையைச் செலுத்­தி­ய­வாறு மீளவும் நான் ஒரு காதல் வலையில் விழுந்தேன் “ எனக் கூறி அதிர்வை ஏற்­ப­டுத்­தினார்.

 

“அவர் என் மீது காதல் கொண்டார். அக்­காதல் முகநூல் மூல­மாக ஏற்­பட்ட காதல். இரு­வரும் முகநூல் மூல­மாக பல நாட்கள் தொடர்பு கொண்டோம்” என மிக சர்வ சாதா­ர­ண­மாக சொல்லி கல கல­வென சிரித்தார் சக்­குனி.

 

“பல மாதங்­களின் பின் இரு­வரும் புறக்­கோட்டை மெனிங் சந்­தையில் சந்­தித்துக் கொண்டோம். அந்­நாள்­வரை அவர் என்னை முழு­மை­யான பெண் என நினைத்தே காதல் வயப்­பட்டார்.

 

என்னை நேரில் கண்­டதும் எவ்­வித எதிர்ப்­பையும் காட்­ட­வில்லை. காதல் வளர்ச்­சி­யா­னது. அது செம்­மை­யான காத­லாகும். இப்­போது இரு­வரும் ஒன்­றாக வீட்டில் வாழ்­கின்றோம். எங்­க­ளுக்குள் பிரச்­சினை இல்லை. அவர் வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

 

உண்­மை­யி­லேயே ஒரு பெண் தன் கண­வனை கவ­னிப்­பது போன்று எனது கண­வரை கவ­னித்து வரு­கின்றேன். சமைப்­பது, உடை­களை துவைப்­பது என்­ப­தெல்லாம் நானே.

 

என்னை ஒரு பெண்­ணா­கத்தான் எனது கணவர் நோக்­கு­கிறார். என க்கு அன்பு, பாசம் என அனைத்து சுகமும் கிடைக்­கின்­றன” என சக்­குனி தெரி­வித்தார்.

 

“நாம் திரு­நங்­கை­க­ளுக்­கான உரிமைக்காக குரல் எழுப்புகிறோம். அனைத்து மொழி ஊடகங்களும் எமக்கு ஆதரவாக இயங்க வேண்டும். திருநங்கைகளும் மனித சமுதாயத்தின் ஒரு பிரிவினர் என்ற வாதத்தை கைவிட்டு எமக்கு பெண்கள் என்ற அங்கீகாரத்தை வழங்குங்கள்.

 

நாங்களும் வீதியில் சுதந்திரமாக உரிமையோடு பயணிக்க வேண் டும். முழு சமுதாயமும் எங்களை பிரித்துபார்வையிடாது ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என முழு குடும்பமும் எம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களின் மனதை சிதைத்து விடாதீர்கள்’’ என்றார் சக்குனி.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=170&display=0#sthash.lA09FXSC.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.