Jump to content

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையினரிடையே ஏற்பு நிலை அவசியம்


Recommended Posts

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையினரிடையே ஏற்பு நிலை அவசியம்

 

மலை­யக மக்கள் இந்­நாட்டில் தனித்­துவம் மிக்­க­வர்­க­ளாக விளங்­கு­கின்­றனர். இம்­மக்­களின் பிரச்­சி­னைகள் அநே­க­முள்­ளன. இந்­நி­லையில் இப்­பி­ரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும் தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்றும் கருத்­துக்கள் பலவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதனால் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்­கப்­ப­டாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­வ­தா­கவும் தீர்­வினை பெற்றுக் கொடுக்கக் கூடி­ய­வர்கள் அச­மந்தப் போக்கில் செயற்­ப­டு­வ­தா­கவும் பல்­வேறு விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மலை­யக மக்கள் உழைக்கப் பிறந்­த­வர்கள். தனது அர்ப்­ப­ணிப்­பான சேவையின் கார­ண­மாக நாடு உயர தோள் கொடுப்­ப­வர்கள். நாட்டின் தேசிய வரு­மா­னத்தில் இவர்­க­ளது வகி­பாகம் அளப்­ப­ரி­ய­தாகும். என்­னதான் நாடு­யர தோள் கொடுத்த போதும் இம்­மக்­களின் வாழ்க்கை ஏனோ இன்னும் இருளில் தான் மூழ்­கிக்­ கி­டக்­கின்­றது. கால­மாற்றம் வேக­மாக இடம்­பெ­று­கின்ற போதிலும் இம்­மக்­களின் வாழ்வில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் எதுவும் பெரி­தாக நிகழ்ந்து விட­வில்லை என்­பது உண்­மை­யே­ யாகும். சாண் ஏறினால் முழம் சறுக்­கு­கின்ற நிலை­யி­லேயே இவர்­களின் வாழ்க்கை ஓடிக் ­கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டின் அல்­லது உல கின் பல சமூ­கத்­தினர் பின்­தங்­கிய நிலையில் இருந்தும் மீண்­டெ­ழுந்து வேக­மாக முன்­னே­றிக் ­கொண்டு இருக்­கையில் மலை­யக மக்­களின் நிலைமை மோச­மான பாதை­யி­லேயே இன்னும் உள்­ளது. இலங்கைப் பிர­ஜைகள் இவர்கள் என்­ற ­போதும் மாற்­றாந்தாய் மனப்­பான்மை உட­னான செயற்­பா­டு­களே இன்­னு­மின்னும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

மலை­யக மக்­களை பின்­ன­டைவு காணச் செய்­வதில் இன­வா­திகள் மிகவும் உறு­தி­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆண்டான் அடிமை கால சமூக நிலை­மை­களைப் போன்று மலை­யக மக்­களை அடக்­கி­யாள்­வ­தற்கே பெரும்­பா­லா­ன­வர்கள் விருப்பம் கொண்­டுள்­ள­மையும் சொல்லித் தெரிய வேண்­டிய விட­ய­மல்ல. ஆண்டான் அடிமை காலச் சமூக எச்­சங்கள் இன்னும் மலை­யக மக்­களின் வாழ்க்கை நிலை­மையில் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. மலை­யக மக்­க­ளுக்கு இந்த நாட்டில் ஒரு வர­லாறு இருக்­கின்­றது. அந்த வர­லாறு மகிழ்ச்­சி­க­ர­மான வர­லா­றாக இல்லை. துன்ப துய­ரங்கள் சேர்ந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. உழைப்­பிற்கு தம்மை அர்ப்­ப­ணித்த இம்­மக்­களின் அடிப்­படைத் தேவைகள் கூட இது­கா­ல­வரை பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது வருந்­தத்­தக்க விட­ய­மே­யாகும். பல்­வேறு உரி­மை­க­ளையும் அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் இவர்கள் அடைந்து கொள்ள வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. எனினும் இவை­களை பெற்றுக் கொடுக்க வேண்­டி­ய­வர்­களின் கரி­ச­னைகள் எவ்­வாறு அமைந்­தி­ருந்­தது என்­பது தொடர்­பிலும் நாம் ஆழ­மாக சிந்­திக்­க­ வேண்டி இருக்­கின்­றது. இவர்கள் பொறுப்­பு­ணர்ந்து சமூக நேயத்­துடன் செயற்­பட்­டார்­களா? அல்­லது இப்­போ­தேனும் செயற்­ப­டு­கின்­றார்­களா? என்­பது நோக்­கத்­தக்­க­தே­யாகும்.

கல்வி, சுகா­தாரம், மருத்­துவம், வீட­மைப்பு, சமூக நிலை­மைகள் என்­ற­வாறு சகல துறை­க­ளிலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றன. தொழில்­வாய்ப்பும் இதில் உள்­ள­டங்கும். மலை­யக மக்­களின் சம­கால நிலை­மைகள் தொடர்­பிலும் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுர­கு­மார திசா­நா­யக்க அண்­மையில் தனது நிலைப்­பாட்­டினை பாரா­ளு­மன்­றத்தில் தெளி­வு­ப­டுத்தி இருந்தார். 1873 இல் இருந்து 180 க்கும் மேற்­பட்ட வரு­டங்­க­ளாக மலை­யக தோட்­டப்­புற மக்கள் எமது நாட்டின் தேசிய வரு­மா­னத்தின் வளர்ச்­சிக்­காக பாரிய சேவை­யாற்­றி­யுள்­ளனர். ஆடை கைத்­தொழில் துறை முன்­னேற்­ற­ம­டை­வ­தற்கு முன்னர் தேயிலை பெருந்­தோட்டத் துறை­யா­னது எமது நாட்டின் ஏற்­று­மதி வர்த்­த­கத்தில் பெரும் பங்­கினை வகித்­தி­ருக்­கின்­றது. எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு அவர்கள் ஆற்­றி ­யுள்ள சேவை­யா­னது கணக்­கிட்டு அள­விட முடி­யாத ஒன்­றாகும். எனினும் அந்த மக்­களை இந்த நாட்டின் பிர­ஜை­யாக கருதி அவர்­களின் அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கு நாம் செயற்­பட்­டுள்­ளோமா?

நாட்டின் ஏனைய பகு­தி­யினர் சொகு­சான வாழ்க்­கையை வாழாத போதிலும் அந்த மக்கள் அனு­ப­விக்கும் குறைந்­த­பட்ச வாழ்க்கைத் தரத்­தை­யேனும் தோட்­டப்­ப­குதி மக்­க­ளுக்கு நாம் வழங்கத் தவ­றி­யுள்ளோம். யாழ். நூலகம் தீ வைத்து எரி­யூட்­டப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார். தோட்­டப்­புற மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் இந்த நிலைமை குறித்தும் அந்தப் பகுதி மக்­க­ளிடம் நீங்கள் மன்­னிப்புக் கோர வேண்டும் .180 வரு­டங்கள் அந்த மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் பேர­னர்த்­தங்­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்கள் பொறுப்புக் கூற வேண்டும். தோட்­டப்­ப­குதி மக்­களின் வாழ்க்கைத் தரத்­தினை உயர்த்­து­வ­தற்கு தோட்டப் பகுதி தலை­வர்­களே எதிர்த்­தனர். அந்த மக்­களின் வாழ்க்­கைத்­தரம் உயர்­வ­தா­னது தங்­க­ளுக்கு கிடைக்­கின்ற வாக்­கு­களில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என்­ப­த­னா­லேயே அவர்கள் அவ்­வாறு செய்­தனர். அந்த மக்கள் வாழ்க்­கையில் எவ்­வ­ளவு தூரம் கீழ் இருக்­கின்­றார்கள் என்­பதை வைத்தே அவர்­களை வைத்து வியா­பாரம் நடத்­து­வ­தற்கு தோட்­டப்­புற தமிழ் தலை­வர்­க­ளுக்கு முடிந்­தி­ருந்தது. இதுதான் வர­லாறு என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார தனது உள் ளக் குமு­றலை வெளிப்­ப­டுத்தி இருந்தார்.

உண்­மையில் காலத்­துக்கு காலம் ஆட்சி மாறிய போதும் மலை­யக மக்­களின் காட்சி மாற­வில்லை. ஆட்­சியில் அமர்­வ­தற்கு அர­சுகள் வந்து போயின. ஆனால் மலை­யக மக்கள் அதே இடத்­தி­லேயே இன்­னு­மின்னும் நின்­று­ கொண்­டி­ருக்­கின்­றனர். வாழ்வு வளம்­ பெ­ற­வில்லை. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பாட்டுச் சூழ்­நி­லை­களும் விட்­டுக்­கொ­டுப்பு இல்­லாத நிலையும் மலை­யக மக்­களின் உரி­மைகள் பலவும் பறி­போ­வ­தற்கு உந்து சக்­தி­யா­கி­யது என்­ப­தையும் எவரும் மறந்­து­வி­ட­மு­டி­யாது. ஊர் இரண்டு பட்­டதால் கூத்­தா­டி­களின் பாடு கொண்­டாட்­ட­மா­யிற்று. கடந்த கால அர­சு­களைப் போலவே அர­சியல் யாப்­பு­களும் எம்­ம­வர்­க­ளுக்கு கைகொ­டுப்­ப­தாக இல்லை. ஒற்­று­மைக்கு பதி­லாக எழுச்சி தொடர்பில் கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­த­வில்லை. இதற்­கி­டையில் நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சியல் யாப்­பினை விரைவில் அறி­முகம் செய்ய உள்­ளது. இந்த யாப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய மலை­யக மக்­களின் நலன்­ சார்ந்த பல்­வேறு விட­யங்கள் பொது­மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. தனி­யான அதி­கார அலகு, பின்­தங்­கிய சமூ­கத்­திற்­கான உத­விகள்,தொழில் வாய்ப்பில் முக்­கி­யத்­துவம், உப ஜனா­தி­பதி பதவி என்­பன அவற்றுள் சில­வாகும். இந்­நி­லையில் புதிய அர­சியல் யாப்பு மலை­யக மக்­களின் கோரிக்­கை­களை செவி­சாய்த்­துள்­ளதா? மலை­யக மக்­க­ளுக்கு உரிய அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளதா? இல்­லையேல் மீண்டும் ஒரு தடவை எமது மக்கள் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­ற­னரா? என்­ப­தனை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் ஏற்­க­னவே கூறி­ய­தனைப் போன்று நாளுக்­குநாள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் தீர்வு என்­பது எட்­டாக்­க­னி­யா­கவே பெரும்­பாலும் இருந்து வரு­கின்­றமை தெரிந்த விட­ய­மாகும். இதற்­கி­டையில் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்­பிலும் தேசிய பிரச்­சி­னைக்குள் உள்­வாங்­கப்­ப­டாமை தொடர்­பிலும் விச­னங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஒரு­வேளை இது சாத்­தி­ய­மாகி இருந்தால் மலை­யக மக்­களின் பல பிரச்­சி­னை­க­ளுக்கும் அழுத்­தங்­களின் ஊடாக உரிய தீர்­வினை பெற்றுக் கொண்­டி­ருக்கக் கூடும் என்றும் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மலை­யக மக்­களும் அவர்­களின் பிரச்­சி­னை­களும் தேசியப் பிரச்­சி­னைக்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்ற கருத்­தினை நுவ­ரெ­லியா மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் தில­கராஜ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தில­கராஜ் இக்­க­ருத்தை வலி­யு­றுத்தி இருந்தார். தற்­போ­தைய நிலை­மையில் தோட்­டப்­புற மக்­களின் சம்­பளம் கூட நாட்டின் சட்­டத்­திற்கு அமை­வாக இல்லை. கூட்டு ஒப்­பந்­த­மொன்றின் பிர­கா­ரமே அவர்­க­ளுக்­கான சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. அதுவும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தோட்­டப்­ப­குதி சமூ­கத்­தினர் தங்­க­ளது சம்­ப­ளத்­துக்­காக வீதி­களில் இறங்கிப் போராட வேண்டி இருக்­கின்­றது. இந்த நிலைமை மாற்­றப்­பட வேண்டும். குறை­பா­டு­களை அடை­யாளம் காண்­பதில் இருக்கும் ஒற்­று­மை­யா­னது குறை­பா­டு­களை தீர்ப்­பதில் இருப்­ப­தில்லை என்­பதே தோட்­டப்­புற மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் காணப்­ப­டு­கின்ற பிர­தா­ன­மான சிக்­க­லாக இருக்­கின்­றது. வீதிகள், சுகா­தாரம் என அனைத்து துறை­க­ளிலும் தோட்­டப்­பு­றங்­களும் அதன் மக்­களும் தனித்து வித்­தி­யா­சப்­பட்டே காணப்­ப­டு­கின்­றனர். எமது அந்த மக்­களும் அவர்­களின் பிரச்­சி­னை­களும் தேசிய மட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­பது தான் இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். தோட்டப் பகு­தி­களில் அபி­வி­ருத்தி அவ­சி­ய­மாக உள்­ளது என்று தில­கராஜ் மேலும் வலி­யு­றுத்தி இருந்தார்.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் தேசிய மட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை. இத­னா­லேயே இம்­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு சாத்­தி­ய­மில்­லாமல் குறை­வாக உள்­ளது என்­கிற கருத்து முன்­வைப்­பு­க­ளுக்கு மத்­தியில் இது­ பற்றி மேலும் தெரிந்து கொள்ள முக்­கி­யஸ்­தர்கள் சில­ரிடம் கருத்து வின­வினேன். அவர்கள் தெரி­வித்த பல்­வேறு கருத்­து­க்க­ளையும் எமது கேச­ரியின் வாச­கர்­க­ளுக்­காக தொகுத்து தரு­கின்றேன்.

பி.பி.தேவராஜ் (முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர்) 

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் அதி­க­முள்­ளன. இந்த பிரச்­சி­னை­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­வதன் கார­ண­மாக உரிய தீர்வு கிடைக்கும் என்று சொல்­வ­தற்­கில்லை. முதலில் எமது பிரச்­சி­னைகள் தொடர்பில் நாம் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு தெளி­வாகப் புரி­ய­ வைத்தல் வேண்டும். இந்த புரி­தலின் ஊடாகத் தீர்­வினை பெற்றுக் கொள்­வதே பொருத்­த­மாக இருக்கும். சர்­வ­தேச ரீதியில் நாம் எமது பிரச்­சி­னை­களை எடுத்துச் செல்­லு­மி­டத்து ஏற்­படும் அழுத்­தங்­களால் இங்­குள்ள பெரும்­பான்மை மக்கள் கிளர்ந்­தெ­ழும்பக் கூடும். இதனால் எமக்கு கிடைக்க இருந்த சில நன்­மைகள் கூட கிடைக்­காது போகின்ற வாய்ப்பே உரு­வாகும் என்­ப­த­னையும் புரிந்து கொள்­ளுதல் வேண்டும்.

மேலும், எந்த ஒரு பிரச்­சி­னைக்கும் உட­ன­டி­யாகத் தீர்வு கிடைக்கும் என்று நாம் எதிர்­பார்க்க முடி­யாது. உட­னடித் தீர்­வினை பெற்றுக் கொடுப்­ப­திலும் சிரமம் இருக்­கின்­றது. எனவே படிப்­ப­டி­யாக தீர்­வினை பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும்.

எஸ்.விஜ­ய­சந்­திரன் (சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம்)

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற கருத்­தினை ஏற்­றுக் ­கொள்­வ­தற்­கில்லை. மலை­யக மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­யாக பிர­ஜா­வு­ரிமை பிரச்­சினை விளங்­கி­யமை உங்­க­ளுக்கு நினை­வி­ருக்­கலாம். இந்த பிரச்­சி­னை­யா­னது அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் ஏனைய அமைப்­பு­களின் ஊடாக ஐக்­கிய நாடுகள் சபை வரைக்கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது. சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் என்­பன வழங்­கிய அழுத்­தத்தின் கார­ண­மா­கவே மலை­யக மக்­களின் பிர­ஜா­வு­ரிமை பிரச்­சி­னைக்கு தீர்வு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டது. எனவே தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் தேவை­யான பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­ப­தையும் கூறி­யாக வேண்டும். வடக்கு கிழக்கில் யுத்த காலத்தின் போது பல்­வேறு உயி­ரி­ழப்­புக்­களும் ஆக்­கி­ர­மிப்­பு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால் மலை­ய­கத்தில் இத்­த­கைய ஒரு நிலைமை காணப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் வடக்கு கிழக்கு பிரச்­சி­னை­க­ளுக்கு சம­மான ஒரு சர்­வ­தேச மயப்­ப­டுத்தல் எவ்­வாறு சாத்­தி­யப்­படும் என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யே­யாகும். எனினும் இன்னும் மலை­யக மக்­களின் பிரச்­சினை சர்­வ­தேச ரீதியில் கதைக்­கப்­ப­டு­கின்­றது. அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், தனி நபர்கள், அமைப்­புக்கள் என்று பல தரப்­பி­னர்­களும் இது குறித்த நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர். மலையக மக்­களின் பிரச்­சி­னை­களில் அடிப்­படை தேவைகள் குறித்த பிரச்­சினை அடிப்­படை பிரச்­சி­னை­யாக கரு­தப்­ப­டு­கின்­றது. என்­னதான் இருந்­தாலும் ஒரு நாட்டின் பிரச்­சி­னையில், சர்­வ­தேசம் சம்­பந்­தப்­பட்ட நாட்­டுக்கு அழுத்தம் கொடுக்க முடி­யுமே தவிர கட்­டளை இட முடி­யாது. எனவே குறித்த நாட்டின் அர­சாங்கம், பாரா­ளு­மன்றம், மக்கள் என்­ப­வற்றின் ஊடா­கவே குறித்த பிரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள வேண்­டியும் உள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் குறித்த பிரச்­சினை தொடர்­பான ஒரு தீர்க்­க­மான முடிவு உள்­நாட்­டிலே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். உள்நாட்டில் உள்ள அர­சியல் கட்­சிகள், அமைப்­புகள் வேறு­பட்ட சமூ­கத்தைச் சார்ந்த அர­சியல் தலை­வர்­களின் மனப்­பாங்­குகள் அறி­யப்­பட்டு இது சாத்­தி­யப்­ப­டாத பட்­சத்தில் சர்­வ­தேசம் வரை செல்­வதால் ஒருவேளை சாத­க­மான விளை­வுகள் ஏற்­ப­டுதல் கூடும். படி­மு­றையின் அடிப்­ப­டையில் பிரச்­சி­னை­களை நோக்­குதல் வேண்டும். முதலில் எமது பிரச்­சினை தேசிய மயப்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். இதன் மூலம் தீர்வு கிடைக்­கா­விடின் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டு­வதில் தப்­பி­ருக்­காது. சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­கையில் வெறு­மனே தமி­ழர்கள் என்­கிற ரீதியில் பிரச்­சினை நோக்­கப்­ப­டு­மானால் மலை­யக மக்­க­ளுக்கு அது பாதிப்­பையே ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும். உள்­நாட்டில் இலங்கை தமி­ழர்­க­ளையும் இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்­க­ளையும் தனித்து நோக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இதனால் உள்­நாட்டில் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும் வாய்ப்­புள்­ளது? ஒரு நாட்டில் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் எந்த அளவு உருப்­ப­டி­யான அணு­கு­மு­றைகள் கையா­ளப்­ப­டு­கின்­றன? இன­வாதம் எத்­தனை தாக்கம் செலுத்­து­கின்­றது? என்­பன குறித்­தெல்லாம் நோக்­குதல் வேண்டும். அபி­வி­ருத்தி பிரச்­சி­னை­களை சர்­வ­தே­ச ­ம­யப்­ப­டுத்­தலாம். எனினும் ஏனைய பல பிரச்­சி­னை­க­ளையும் உள்­நாட்டில் தீர்த்­துக் ­கொள்­வதே சிறந்­தது.

எஸ். ஜீ. கே. சந்­தி­ர­குமார் (கோட்டக் கல்வி பணிப்­பாளர், கொத்­மலை) 

எல்லா சமூ­கத்­தி­ன­ருக்கும் ஏதோ ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது. பல பிரச்­சி­னை­களும் காணப்­ப­டு­கின்­றன. எடுத்த எடுப்பில் எல்லா பிரச்­சி­னை­களும் சர்­வ­தே­ச­ ம­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­கிற கருத்து பொருத்­த­மா­ன­தாக தெரி­ய­வில்லை. சர்­வ­தே­சத்தால் எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் சாத­க­மான விளை­வு­களை பெற்றுக் கொடுக்க முடி­யாது. அதே­வேளை சர்­வ­தே­ச­மா­னது எல்லா உள்நாட்டு பிரச்­சி­னை­க­ளிலும் மூக்கை நுழைக்­கவும் இய­லாது. நுழைக்­கவும் கூடாது. மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பல்­வேறு வடி­வங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு உரிய தீர்­வினை உட­ன­டி­யாக பெற்றுக் கொடுக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். எனினும் உட­னடித் தீர்வின் சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் நாம் ஆழ­மாக சிந்­திக்க வேண்டும். பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து ஒரு முறை­யான திட்­ட­மி­ட­லையும் மேற்­கொள்ள வேண்டும். எந்த பிரச்­சி­னைக்கும் தீர்வு என்­பது பெரும்­பாலும் உள்­நாட்டின் மூல­மா­கவே பெற்றுக் கொடுக்­கப்­படும். இத­ன­டிப்­ப­டையில் உள்­நாட்­டி­ன­ருடன் புரிந்­து­ணர்­வு­டனும், விட்டுக் கொடுப்­பு­டனும் செயற்­பட்டு பிரச்­சி­னைக்­கான தீர்­வினை பெற்றுக் கொள்ள முயற்­சித்தல் வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்­கிற நோக்கில் செயற்­பட்­டு­விட முடி­யாது. உள்­நாட்டை உதா­சீனம் செய்து விட்டு சர்­வ­தேசம் செல்­வதால் இரு சாரா­ரி­டை­யேயும் வக்­கி­ர­மான எண்­ணங்­களும் முரண்­பா­டு­க­ளுமே மேலோங்கும். இதனால் ஒற்­று­மைக்கும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் குந்­த­கமே ஏற்­படும். எனவே பேச்­சு­வார்த்தை, கலந்­து­ரை­யாடல் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை உள்­நாட்­டி­லேயே பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும்.

இரா.ரமேஷ் (விரி­வு­ரை­யாளர், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகம்) 

  மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் என்­பது சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும், பின்­னரும் என்று இன்­னு­மின்னும் தொடர்ந்து உண்­மை­யா­கவே உள்­ளன. இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் அர­சியல் தொழிற்­சங்­க­வா­திகள் அவ்­வப்­போது பேசி வரு­கின்­ற­மையும் தெரிந்த ஒரு விட­ய­மாகும். ஆயினும் தேசிய அர­சி­யலில் ஒரு தாக்­க­க­ர­மான பலமும் அதி­கா­ரமும் இல்­லாத ஒரு கார­ணத்­தினால் இது பெரி­ய­ளவில் எடு­ப­டாத விட­ய­மாக நீண்ட கால­மா­கவே இருந்து வரு­கின்­றது. குறிப்­பாக மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை கொள்கை ரீதி­யாக தீர்ப்­ப­தற்கு ஏற்ற வழி­வ­கைகள் அவ்­வப்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பது இதில் முக்­கி­ய­மா­ன­தாகும். இதற்கு பல உதா­ர­ணங்­க­ளையும் எம்மால் கூற முடியும்.

பிர­ஜா­வு­ரிமை பிரச்­சினை தீர்த்து வைக்­கப்­பட்­டது. இது ஒரு நல்ல உதா­ர­ண­மாகும். மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை தேசிய மயப்­ப­டுத்­து­வ­தற்கும், தேசிய ரீதி­யான கொள்கை உரு­வாக்­கத்தின் மூல­மாக அதனை தீர்ப்­ப­தற்கும் நட­வ­டிக்­கை­களும் முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதனை நாம் ஒரு­போதும் மறுத்து விடவும் முடி­யாது. ஆயினும் அந்த மக்­களை தாக்­கு­கின்ற அல்­லது பாதிக்­கின்ற ஏனைய சமூக, பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கேற்ற கொள்­கை­யாக்க செயன்­முறை, கொள்கை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் என்­ப­வற்றில் மலை­யக சமூகம் தொடர்­பான பிரச்­சி­னைகள் பெரிதும் பிர­தி­ப­லிக்­காத ஒரு தன்­மை­யி­னையே இன்றும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதுவே உண்மை நிலை­யாகும்.

அண்மைக் காலத்தில் மலை­ய­கத்தில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றங்கள் அல்­லது தலை­மைத்­துவ மாற்­றங்கள் தொடர்ந்து, அதற்­கான ஒரு ஏற்­பா­டுகள், முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றமை குறித்தும் நாம் கூறி­யாதல் வேண்டும். இத­னையும் தாண்டி மிகவும் தாக்­க­க­ர­மான முறையில் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்குக் கொள்கை மாற்­றங்­களை உரு­வாக்க வேண்­டிய தேவையும் இப்­போது காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அர­சியல் மறு­சீ­ர­மைப்பு குறித்த முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­த­செ­யன்­மு­றையில் மலை­யக மக்­களை பாதிக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் வலி­யு­றுத்­து­வதன் ஊடாக தேசிய ரீதியில் கவ­னத்தை ஏற்­ப­டுத்­தலாம். இந்­நி­லை­மை­யா­னது இம்­மக்கள் தொடர்பில் பிரத்தி­யேக கொள்கைத் திட்­டங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் உந்து சக்­தி­யாக அமையும். மலை­யக மக்­களின் சமூக, பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் தொடர்பில் நீண்ட கால­மா­கவே இந்­நாட்டு அர­சி­யல்­வா­தி­களால் உண­ரப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. எனினும் இதற்­கான தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. எனவே இப்­பி­ரச்­சி­னை­களை தேசிய மயப்­ப­டுத்­த­ வேண்டும். சர்­வ­தேச மயப்­ப­டுத்த வேண்டும் என்ற கோஷங்கள் வலு­வ­டை­வ­தற்கு கார­ண­மாக இருந்து வரு­கின்­ற­மையும் குறிப்­பிடக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் தேசிய மயப்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து பெரும்­பான்மை அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் இப்­பி­ரச்­சி­னைகள் குறித்து ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். சட்­டங்­களை பாரா­ளு­மன்­றத்தில் உரு­வாக்கும் போதும் அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களைப் மேற்­கொள்ளும் போதும் பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களே கூடு­த­லான செல்­வாக்­கினை செலுத்­து­கின்­றனர். எனவே இவர்கள் மத்­தியில் இம்­மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்த ஏற்­பு­டைமை என்­பது முக்­கி­ய­மாக இருத்தல் வேண்டும். இல்­லையேல் எமது மக்­களின் பிரச்­சி­னை­களை தேசிய மய­மாக்­கு­வதால் சாத­க­ வி­ளை­வுகள் கிடைக்­குமா? என்­பது சந்­தே­கமே. மேலும் சிங்­கள ஊட­கங்­களின் ஊடாக மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை பெரும்­பான்­மை­யி­னர்­களின் மத்­தியில் தெளி­வு­ப­டுத்­து­கின்ற ஒரு வேலைத்­திட்­டமும் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். மலை­யகப் பிர­தி­நி­திகள் எம்­ம­வர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேசு­கின்­ற­ போது பெரும்­பான்­மை­யினர் ஆத­ரவு தெரி­விக்­கின்ற வகையில் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெ­றுதல் வேண்டும்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நாக­ரி­க­மான தீர்­வினைப் பெற்­றுக் ­கொள்­வதில் இன்னும் இழு­ப­றி­நி­லையே காணப்­ப­டு­கின்­றது. பெரி­ய­ள­வி­லான சர்­வ­தேச ஆத­ரவு மற்றும் அழுத்தம் என்­பன இருந்­த­ போ­திலும் இந்த நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக மக்­களின் பிரச்­சி­னையை சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­தலின் ஊடாக ஒரு கரி­ச­னையை பெற்றுக் கொள்ளலாம். அழுத்தத்தையும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் சாத்தியப்பாடு மிக்க ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கத்தின் சட்டதிட்டத்தின் ஊடாகவே எந்த ஒரு தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.

ஏ. லோரன்ஸ் (செயலாளர் நாயகம், ம.ம.முன்னணி) 

உலகில் உள்ள மக்கள் பலர் இன்று உரிமைகளுக்காக போராடுகின்றனர். இது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் சிலரது போராட்டங்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது இன்று முன்னணியில் திகழ்கின்றது. சர்வதேசமும் பேசுகின்றது. எனினும் மலையக மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்துக்கு போகவில்லை. எனினும் சர்வதேச மயப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகள் இன்று உள்நாட்டில் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன. இதனால் சில விடயங்கள் சாத்தியமாகியும் உள்ளன. குறிப்பாக 7 பேர்ச்சஸ் காணி விடயத்தை குறிப்பிடலாம். 7 பேர்ச்சஸ் காணியானது போதாவிட்டாலும் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைமை அமைச்சரவைக்கு ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்காவிடினும் சர்வதேச மயப்படுத்தலின் ஊடாக உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தி இதனை செய்து கொள்ள முடியும். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஆதரவு, அழுத்தம் என்பன மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

சர்வதேச ரீதியான கவனத்தை ஏற்படுத்துவதற்கு மலையக தலைமைகள் முன்னின்று செயற்படல் வேண்டும். மக்கள் மத்தியில் இருந்தும் இது குறித்த குரல்கள் ஓங்கி ஒலிப்பதும் அவசியமாகவுள்ளது. மக்களின் குரல்கள் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு பெரிதும் உந்து சக்தியாக அமையும் என்பதனையும் நன்றாகப் புரிந்து செயற்படுதல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்திருந்தனர். உள்ளூர் ஆட்சியாளர்கள் மலையக மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்கான அழுத்தத்தையும் கொடுத்தல் வேண்டும். ஜே.வி.பி. போன்ற கட்சிகள் மலையக மக்கள் தொடர்பில் பேசுகின்ற படியால் சிங்களவர்கள் மத்தியில் இம்மக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிலை காணப்படும். மலையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் உள்நாட்டில் தீர்த்துக் கொள்வதற்கு இது உந்து சக்தியாக அமையும் என்பதையும் மறந்துவிடலாகாது. பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்துகையில் தீர்வுகளை அழுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு வித்திடப்படும்.

துரை­சாமி நட­ராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.