Sign in to follow this  
நவீனன்

குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

Recommended Posts

குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

888-5fe554db45a4469adc380bcee188002bb29d942d.jpg

 

யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார்.

 தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­மை­க­ளுக்­காக உரத்துக் குரல் கொடுத்து ஓயாது இயங்­கி­வரும் அருட்­திரு. எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­க­ளாரை வாழ்த்­துவோம். அவ­ரு­டைய நற்­ப­ணி­க­ளுக்­காக அவ­ருக்கும் இறை­வ­னுக்கும் நன்றி கூறுவோம்.

இன்று இலங்­கையில் குறிப்­பாக, தமிழ் மறை­மா­வட்­டங்­களில் பணி­யாற்றும் பெரும்­பா­லான குருக்கள் இவ­ரிடம் இறை­யியல் கற்றும், இவ­ரு­டைய உரு­வாக்­கத்தில் பயிற்சி பெற்றும் வெளிவந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சிறந்த இறை­யியல் அறி­ஞ­ராகத் திகழும் அடி­களார் ஆசிய இறை­யி­ய­லா­ளர்­களில் ஒரு­வ­ராகக் கணிக்­கப்­ப­டு­கின்றார்.

1934ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த இவர் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பாட­சாலைக் கல்­வியைக் கற்றார். பின்னர் 1958இல் கொழும்­பி­லுள்ள இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று விஞ்­ஞானப் பட்­ட­தா­ரி­யாக வெளியே­றினார். தனது பட்­டப்­ப­டிப்­புக்குப் பின்னர் குருத்­துவ வாழ்வைத் தேர்வுசெய்யும் முன் சில காலம் ஆசி­ரி­ய­ரா­கவும், ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் உரோ­மையில் உள்ள ஊர்­பா­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் மெய்­யியல் மற்றும் இறை­யியல் கல்­வியைக் கற்று 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி உரோ­மில் உள்ள புனித பேதுரு பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

குரு­வாகி நாடுதிரும்­பிய அவர் சில ஆண்­டுகள் யாழ். மறை­மா­வட்­டத்தில் பணி­யாற்­றினார். பின்னர் 1976ஆம் ஆண்டு மீண்டும் உரோம் சென்று தனது உயர் கல்­வியைக் கற்று இறை­யி­யலில் கலா­நிதிப் பட்­டத்தைப் பெற்­றுக்­கொண்டார். நாடுதிரும்­பிய அவர் கண்டி தேசிய குருத்­துவக் கல்­லூ­ரியில் 1976 1986 வரை இறை­யியல் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் இறை­யியல் பீடத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் யாழ்ப்­பாணம் திரும்­பிய அவர் 10 வரு­டங்­க­ளாக யாழ். கொழும்­புத்­து­றையில் அமைந்­துள்ள புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் அதி­ப­ராகப் பணி­யாற்­றினார். 1997 வரை அவர் யாழ். மறை­மா­வட்­டத்தின் குரு­மு­தல்­வ­ரா­கவும் பணி­யாற்­றினார்.

1995இல் யாழ். குடா­நாட்டை விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து திரும்பக் கைப்­பற்றும் இலங்கை அரச படை­களின் படை­ந­கர்வு நட­வ­டிக்கை கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளியே­றிய ஐந்து இலட்சம் மக்­க­ளோடு இவரும் வெளியேறி வன்­னியில் மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்தார். 1997இல் அவர் தமிழர் தாய­கத்­தி­லி­ருந்து வெளியேற வேண்­டிய சூழ்­நி­லைக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலையில் வெளிநாட்டில் புக­லிடம் தேடினார். இங்­கி­லாந்தில் ஒரு வருடம் பணி­யாற்­றிய பின் ஜேர்மன் நாட்­டிற்குச் சென்றார். முன்ஸ்ரர் மறை­மா­வட்­டத்தில் சமயப் பணி­யாற்­றிக்­கொண்டு ஈழத்­த­மி­ழரின் உரி­மை­க­ளுக்­கான பணி­யையும் சர்­வ­தேச அரங்கில் முன்­னெ­டுத்தார்.

தமிழ் மக்­களின் நியா­ய­மான உரி­மைகள் குறித்து சர்­வ­தே­சத்தின் மனச்­சாட்­சியை உலுக்­கி­ய­வ­ராக பேசியும் எழு­தியும் வந்த அடி­களார் 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ராகத் தெரிவு­செய்­யப்­பட்டார். இன்று 82 வய­திலும் அவர் துடிப்­புள்ள ஒரு குரு­வாக இன்றும் மக்கள் பணி­யாற்றிக்கொண்­டி­ருக்­கிறார்.

இவர் எழு­திய பல ஆங்­கில மற்றும் தமிழ் நூல்­களில் தனது சிந்­த­னை­களை தெளிவாக முன்­வைத்­துள்ளார். தமிழ் மக்­களின் போராட்­டத்­திற்­கான நியா­யங்கள், திருச்­ச­பையின் பங்­க­ளிப்பு, இலங்கை அர­சாங்­கத்தின் கடி­னப்­போக்கு போன்ற விட­யங்­களை விரி­வாக ஆராய்ந்­துள்ளார்.

மனச்­சாட்­சிக்கு ஏற்ப உண்­மை­களை உரக்கச் சொல்லும் அவர் ஒரு காலத்தில் விடு­த­லைப்­புலி­களின் ஆத­ர­வாளர் எனவும், இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னவர் என்றும் முத்­திரை குத்­தப்­பட்டார். அவர் என்­றுமே யாருக்­குமே ஆத­ர­வா­ள­ரா­கவோ, எதி­ரா­ன­வ­ரா­கவோ இருந்­த­தில்லை. உண்­மைக்கும் நீதிக்கும் ஏற்­பவே அவர் பேசினார்; எழு­தினார்; செய­லாற்­றினார். அது அவரை சில­ருக்கு ஆத­ர­வா­ன­வ­ரா­கவும் சில­ருக்கு எதி­ரா­ன­வ­ரா­கவும் இனங்­காட்­டி­யது.

தனிப்­பட்ட முறையில் அவர் ஏழைப் பிள்­ளை­களின் கல்­விக்­காக குறிப்­பாக மலை­யகப் பிள்­ளை­களின் கல்வி வளர்ச்­சிக்­காக பல ஆண்­டு­க­ளாக யாருக்கும் தெரியாமல் உதவி வரு­கின்றார். இவ­ரு­டைய உத­வி­யினால் பல மலை­யகப் பிள்­ளைகள் கல்வி கற்று இன்று வள­மான வாழ்க்­கையை அமைத்­துள்­ளனர்.

அண்மைக்காலங்­களில் அவர் வழங்­கிய செய்­தி­களில், நேர்காணல்­களில் இன்­றைய சம­காலச் சூழ்­நி­லையில் தனது நிலைப்­பாட்­டையும் உல­கத்­த­மிழர் பேர­வையின் நிலைப்­பாட்­டையும் தெளிவாக்­கி­யுள்ளார். போருக்குப் பின்­ன­ரான இன்­றைய யதார்த்­தத்தைப் புரிந்­து­கொண்டு தேர்ந்தெடுக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளோடு இணைந்து செய­லாற்ற வேண்டும் எனக் கூறும் இவர், இன்­றைய இலங்­கையின் அர­சாங்­க­த­்துக்கு விமர்­சன ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார். தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காகச் செய­லாற்றும் அமைப்­பு­க­்களி­டையே ஒற்­றுமை நிலவ வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­து­கின்றார்.

இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி தனது குருத்­துவப் பொன்­விழா நாளில் இவர் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அவர்­க­ளுடன் இணைந்து திருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கின்றார்.

ஒரு பிர­மா­ணிக்­க­முள்ள கத்­தோ­லிக்கக் குரு­வாக, இனப்­பற்று மிக்க ஈழத்­தமிழ்க் குடி­ம­க­னாக, மனச்­சாட்­சி­யுள்ள ஓர் உலகக் குடி­ம­க­னாக நின்­று­கொண்டே அவர் தனது கருத்­து­களைத் தெரிவிக்­கின்றார்; பணி­களை முன்­னெ­டுக்­கின்றார். இயேசு கிறிஸ்துவில் அவர் கொண்ட ஆழமான விசுவாசமே அவரை இப்பணிகளில் உந்தித்தள்ளுகிறது.

முதிர்ந்த வயதிலும், நோயின் பிடியிலும் உள்ளத்து உறுதி தளராது, எம் மக்களின் உரிமைக்காகக் கண்டங்கள் கடந்து பயணம் செய்தும், ஓயாது பேசியும் எழுதியும் வரும் அடிகளாரை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். சிறப்பாக அவரிடம் இறையியல் கல்வி பயின்றும், குருத்துவ உருவாக்கம் பெற்றும் குருக்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் குருக்கள் சார்பாகவும் அடிகளாரை வாழ்த்துகின்றோம்.

ஈழத்தமிழர் உரிமை வரலாற்றில் அடிக­ளாரின் பணி என்றென்றும் நினைவு கூரப்படும்.

அருட்­திரு. தமிழ்நேசன் அடி­களார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-4

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this