Jump to content

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

 
 
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு
 
சிட்னி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மேலும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்து இருந்தது.

தொடக்க வீரர்கள் வார்னர், மேட்ரன்ஷா ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். வார்னர் 113 ரன்னில் ஆடடம் இழந்தார். ரென்ஷா 167 ரன்னிலும், பீட்டர் ஹேன்ட்ஸ்ம் 40 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. அபாரமாக விளையாடி வந்த ரென்ஷா 184 ரன்னில் ஆட்டம் இழந்தார். 293 பந்துகளில் 20 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

பீட்டர்ஹேண்ட்சும் 3-வது வீரராக இந்த டெஸ்டில் சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4-வது டெஸ்டில் விளையாடிய அவருக்கு இது 2-வது சதமாகும். வகாப்ரியாஸ் 3 விக்கெட்டும், இம்ரன்கான், அசார்அலி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.  பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை விளையாடியது. 6 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. ஹாசல்வுட் பந்தில் சர்ஜில்கான் (4 ரன்), பாபர் ஆசம் (0) ஆட்டம் இழந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/04100836/1059984/Sydney-Australia-declare-at-5388-on-day-2-of-3rd-test.vpf

Link to comment
Share on other sites

ஹேண்ட்ஸ்கோம்ப் சதத்துடன் ஆஸி. 538 ரன்கள் டிக்ளேர்; பாகிஸ்தான் 126/2

 

 
அசார் அலிக்கு லெக் ஸ்லிப்பில் கேட்சை விடும் டேவிட் வார்னர். | படம்: ஏ.எஃப்.பி.
அசார் அலிக்கு லெக் ஸ்லிப்பில் கேட்சை விடும் டேவிட் வார்னர். | படம்: ஏ.எஃப்.பி.
 
 

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 538 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

யூனிஸ் கான் 64 ரன்களுடனும், மீண்டும் அசார அலி சிறப்பாக ஆடி 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரே ஓவரில் பாகிஸ்தான் ஷர்ஜீல் கான், பாபர் ஆஸம் ஆகியோரை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். 6/2 என்று தடுமாறிய பாகிஸ்தானை அசார் அலியும், யூனிஸ் கானும் 120 ரன்கள் சேர்த்து நிலை நிறுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் நேற்று வார்னர் பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்து உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் எடுத்ததோடு அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா 184 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 110 ரன்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தன் பீல்டிங் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக அமைந்தது. பந்து வீச்சில் முன்னேற்றம் தெரிந்தாலும் பீல்டிங் மீண்டும் பாகிஸ்தானை கைவிட்டது. இதனால் 21 வயதில் தொடக்க வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோரான 184 ரன்களை அவர் எடுத்தார். இதில் 20 பவுண்டரிகளை அவர் அடித்தார். இம்ரான் கான் நன்றாக வீசிய நிலையில் அவரது பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டு ரென்ஷா ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தி ரன்களை எடுத்தார். 90களில் தடுமாறினாலும் சதத்தைக் கடந்தார். 205 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 110 ரன்களை எடுத்த இவர் மிகவும் விசித்திரமாக ஹிட்விக்கெட் ஆனார். வஹாப் ரியாஸின் வைடு யார்க்கரை ரீச் செய்ய முடிவெடுத்து மட்டையை மேலிருந்து கொண்டு வரும் வழியில் லெக் பைல் கீழே விழுந்தது, ஆனால் அது எப்படி விழுந்தது என்ற மர்மம் நீடித்தது. இருப்பினும் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஹில்டன் கார்ட்ரைட் பொறுமையைக் கடைபிடித்தார். இவருக்கு 2 வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. இதனால் 37 ரன்கள் எடுத்து கடைசியில் இம்ரான் பந்தில் பவுல்டு ஆனார். மேத்யூ வேட் (29), மிட்செல் ஸ்டார்க் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் என்று ஸ்கோர் 538 ரன்களை எட்ட ஸ்மித் டிக்ளேர் செய்தார்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசார் அலி, இம்ரான் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மீண்டும் யாசிர் ஷாவுக்கு சாத்துமுறை நடந்தது, இவர் 167 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடர்ந்த போது ஆஸ்திரேலியா பீல்டிங்கிலும் சில ஓட்டைகள் தென் படத்தொடங்கின. வார்னர் 2 ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டதோடு லெக் ஸ்லிப்பில் ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் லயன் பந்தில் கேட்ச் வாய்ப்பு ஒன்றையும் நழுவ விட்டார். முதல் ரன் அவுட் மிகவும் மோசமான பிழை. அசார் அலி ஓட்டத்தைக் கைவிட்டு நடு பிட்சில் நிற்க, வார்னர் பவுலர் ஸ்டார்க்கிடம் த்ரோ செய்வதற்குப் பதிலாக நேரடியாக ஸ்டம்பை அடிக்கும் முயற்சியில் தோல்வி கண்டார்.

ஹேசில்வுட் ஒரே ஓவரில் ஷர்ஜீல் கான், மற்றும் பாபர் ஆஸமை வீழ்த்தினார். 6/2 என்ற நிலையிலிருந்து 126/2 என்று கொண்டு சென்றனர். சில அருமையான பவுண்டரிகளை அடித்தனர், பிட்சில் நிறைய ரன்கள் உள்ளதாகவே தெரிகிறது, ஆனால் மெல்பர்ன் ஆவி பாகிஸ்தானை நாளை பீடித்தால் மீண்டும் ஒரு சரிவைச் சந்திக்கலாம், இல்லையெனில் ஆஸ்திரேலியா ஸ்கோருக்கு அருகில் பாகிஸ்தானால் வர முடியும் அளவுக்குத்தான் பிட்ச் உள்ளது

http://tamil.thehindu.com/sports/ஹேண்ட்ஸ்கோம்ப்-சதத்துடன்-ஆஸி-538-ரன்கள்-டிக்ளேர்-பாகிஸ்தான்-1262/article9459243.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய அணியின் ரென்ஷா பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது பந்து ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் அவர் ஓய்விற்காக வெளியே சென்றார்.

 
பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 77-வது ஓவரை ஓ'கீபே வீசினார். அப்போது சர்பிராஸ் அஹமது பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் அடித்த பந்து ஷார்ட் லெக் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரென்ஷாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் தொடர்ந்து பீல்டிங் செய்தார். இரண்டு ஓவர்களுக்குப் பிறகு தலைவலி இருப்பதுபோல் ரென்ஷா உணர்ந்தார். இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

முதல் இன்னிங்சில் ரென்ஷா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது மொகமது ஆமிர் வீசிய பவுன்சர் ரென்ஷாவை பலமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/05190702/1060342/Renshaw-complains-of-headache-after-helmet-blow.vpf

Link to comment
Share on other sites

டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம்: வார்னர் சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வார்னர் சாதனை படைத்துள்ளார்.

 
 
 
 
டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம்: வார்னர் சாதனை
 
பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 78 பந்தில் சதம் அடித்தார். 2-வது இன்னிங்சிலும் அவர் அதிரடி காட்டினார்.

பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுங்கிய வார்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதில் 7 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வார்னர் சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் 24 பந்தில் அரை சதம் அடித்து 2-வது இடத்தில் (ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2005-ம் ஆண்டு) இருந்தார். அதை வார்னர் முறியடித்தார்.

முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா- உல்- ஹக் உள்ளார். அவர் 21 பந்தில் அரை சதம் (ஆஸ்திரேலியாவுக்கு எதராக, 2015) அடித்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/06120400/1060450/Warner-registers-second-fastest-Test-fifty.vpf

Link to comment
Share on other sites

சிட்னி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் வெற்றி

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 220 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

 
சிட்னி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் வெற்றி
 
சிட்னி:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ரன் எடுத்தது. 223 ரன்கள் முன்னிலையில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 465 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 80.2 ஓவரில் 244 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது.

இதனால் ஆஸ்திரேலியா 220 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்பிராஸ் அகமது அதிக பட்சமாக 72 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். ஹாசல் வுட், ஸ்டீவ் ஒகிபி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா பெற்ற ‘ஹாட்ரிக்‘ வெற்றியாகும். அந்த அணி முதல் டெஸ்டில் (பிரிஸ்பேன்), 39 ரன்னிலும், 2-வது டெஸ்டில் (மெல்போர்ன்) இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்தது. மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 டெஸ்டிலும் தோற்றது. பரிதாபமானதே. டேவிட் வார்ணர் ஆட்ட நாயகள் விருதையும், ஸ்டீவ் சுமித் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 13-ந்தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/07114624/1060682/Sydney-Test-Australia-team-hat-trick-win.vpf

Link to comment
Share on other sites

சிட்னி டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் படுதோல்வி; தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

 

 
 
 
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். படம்: ஏஎப்பி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். படம்: ஏஎப்பி
 
 

கடைசி டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்தி ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமை யாக கைப்பற்றியது.

சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 538 ரன்களும் பாகிஸ்தான் அணி 315 ரன்களும் எடுத்தன.

223 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 79, டேவிட் வார்னர் 55, ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 465 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.

ஷர்ஜீல்கான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அசார் அலி 11, யாஷிர் ஷா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு 410 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி விளையாடியது.

அசார் அலி 11, பாபர் அசாம் 9, யூனுஸ்கான் 13, யாஷிர் ஷா 9, ஆஷாத் ஷபிக் 30, மிஸ்பா உல்-ஹக் 38, வகாப் ரியாஸ் 12, முகமது அமீர் 5, இம்ரான் கான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 80.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சர்ப்ராஸ் அகமது 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசல்வுட், ஓ கெபி ஆகியோர் தலா 3 விக்கெட்களும், நாதன் லயன் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 3-0 என வென்றது. முதல் டெஸ்ட்டில் 39 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றி ருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக வார்னரும், தொடர் நாயகனாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வானார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்திப்பது இது 12-வது முறையாகும். அந்த அணி கடைசியாக 22 வருடங்களுக்கு முன் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் சேர்த்த, 39 வயதாகும் யூனுஸ்கான் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்கள் மைல் கல் சாதனை படைக்கத் தவறினார். இதுவரை அவர் 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,977 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 13-ம் தேதி பிரிஸ்பனில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/சிட்னி-டெஸ்ட்-போட்டி-பாகிஸ்தான்-படுதோல்வி-தொடரை-30-என-முழுமையாக-வென்றது-ஆஸ்திரேலியா/article9466464.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.