Jump to content

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது.

 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/14123205/1055950/Australia-vs-Pakistan-first-test-tomorrow-start.vpf

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முன்னோட்டம்
 
 

- ச.விமல்

article_1481739267-InP12---LEAD.jpg

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள். இரண்டு அடிபட்ட அணிகளுக்கிடையிலான தொடராக இந்த தொடர் அமையவுள்ளது. நியூசிலாந்தில் தொடர் தோல்வியுடன் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா கண்டத்துக்கான தொடரை ஆரம்பித்துள்ளது. 7 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் பங்குபற்ற செல்கின்றது. 22 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இவற்றில் 11 தொடர்களில் அவுஸ்திரேலயா அணி வெற்றி பெற்றுள்ளது. 6 தொடர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 6 தொடர்கள் சமநிலை முடிவை தந்துள்ளன. 95 ஆம் ஆண்டு வரை இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபல அணிகளாகவே இருந்துள்ளன. அதன் பின்னர் அவுஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை அள்ளிக்குவித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய அரபு ராடசியத்தில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் 20 வருடத்திற்கு பின்னர் வெற்றியைப் பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இரு அணிகளும் 59 போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டு மடங்கு வெற்றிகளை அதிகமாக அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியைக் காட்டிலும் பெற்றுள்ளது. 28 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 14 போட்டிகளில் பாகிஸ்தான் அணியம் வெற்றி பெற்றுள்ளன. 17 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துளளன. அவுஸ்திரேலியாவுக்கு முதற் தடவை 1964 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி சென்றது. ஒரு போட்டி தொடர் . சமநிலையில் நிறைவடைந்தது. 76 ஆம் ஆண்டு மூன்றாவது தொடரில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 78 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரும் சமநிலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 தொடர்களிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 95 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என்ற தொடர் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் 3-0 என வெள்ளையடிப்பு செய்து வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா அணி தனது நாட்டில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய 32 போட்டிகளில் 21 இல் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்து அவுஸ்திரேலியா அணி. 7 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

அவுஸ்திரேலியா அணி அடுத்தடுத்த தொடர் தோல்விகளினால் தடுமாறியுள்ளது. இலங்கையில் வைத்து வெள்ளையடிப்பு தோல்வி. பின்னர் தென்னாபிரிக்கா அணியுடனான தொடர் தோல்வி. ஆனால் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தமது மீள் வருகையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவர்கள் மீண்டும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக அவுஸ்திரேலியா அணி தோல்விகளில் இருந்து மீண்டு வந்து மீள் வருகையை ஏற்படுத்தினால் அது மிக அபாரமாக அமையும். இது மீள் வருகையா இல்லையா என்பது பாகிஸ்தான் தொடரிலேயே தெரிய வரும். பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியின் இந்த வீழ்ச்சியை சரியாக பாவிக்க வேண்டும். பொதுவாக அவுஸ்திரேலியா அணி என்றால் மனதளவில் உருவாகும் பயத்தை அண்மைக்கால தோல்விகள் இல்லமால் செய்துள்ளன. பாகிஸ்தான் அணி இதனை சரியாக பாவித்து திடமாக விளையாடினாள் குறைந்தது தொடரை சமநிலை செய்ய முடியும். நீண்ட நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணி பலமான அணியாக மாறி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பம் அவர்களுக்கான நல்ல சந்தர்ப்பம். ஆனால் பாகிஸ்தான் அணியின் ஏறுமுகம் நிறைவுக்கு வந்து இறங்கு முகத்தின் ஆரம்பமா என்பது இந்த தொடர் நிறைவிலேயே தெரிய வரும். பாகிஸ்தான் அணியை எதிர்வு கூறுவதும், கணிப்பதும் ஒன்றும் அவ்வளவு இலகுவானது அல்ல. 

இரு அணிகளிலும் யூனுஸ் கானை தவிர்த்து வேற எந்த வீரரும் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரில் அவுஸ்திரேலியாவில் வைத்து விளையாடியதில்லை. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். பழக்கமில்லாத ஆடுகளங்கள். அவுஸ்திரேலியா அணியின் வீரரக்ள் என்றாலும் தங்கள் சொந்த ஆடுகளங்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இரு அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவர்கள்

கிரேக் சப்பல்                              1972-1984            14           22           1200       201         60.00     5              4             

ஷாகிர் அபாஸ்                         1972-1984            15           28           1097       101         40.62     1              10          

ஜாவிட் மியான்டாட்           1976-1990            16           28           1028       131         38.07     2              7             

ரிக்கி பொன்டிங்                       1999-2010            9              16           978         209         69.85     3              4             

அலன் போடர்                           1979-1990            13           20           923         118         57.68     3              5             

இம்ரான் கான்                            1976-1990            13           23           733         136         36.65     1              4             

மார்க் ரெய்லர்                           1990-1995            6              10           728         123         80.88     3              5             

ஜஸ்டின் லங்கர்                      1999-2005            6              10           721         191         72.10     3              3             

மஜீட் கான்                                   1972-1981            11           21           716         158         35.80     2              2             

ஆஷிப் இக்பால்                       1964-1979            9              17           681         152*      45.40     3              1             

(வீரர், விளையாடிய காலம், போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, சதங்கள், அரைச்சதங்கள்)

 

இரு அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் கூடுதல் விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்

 

டெனிஸ் லெல்லி                   1972-1984            14           26           3821       1858       68           6/82       10/135  27.32     2.91               

ஷப்ராஸ் அஹமட்              1972-1984            12           22           3854       1573       50           9/86       11/125  31.46     2.44       

கிளன் மக்ரா                           1995-2005            9              18           2177       995         47           8/24       9/68       21.17     2.74               

ஷேன் வோன்                           1995-2005            9              15           2217       970         45           7/23       11/77     21.55     2.62       

இம்ரான் கான்                            1976-1990            13           20           3038       1283       45           6/63       12/165  28.51     2.53       

வசீம் அக்ரம்                               1990-1999            9              15           2091       866         36           6/62       11/160  24.05     2.48       

கால் ரெக்மான்                         1983-1990            5              9              1151       434         26           6/86       11/118  16.69     2.26       

ஜெப் லோவ்சன்                      1983-1984            5              9              1131       580         24           5/49       9/107     24.16     3.07       

தனிஷ் கனேரியா                 2004-2010            5              10           1536       974         24           7/188     8/204     40.58     3.80       

முஷ்டாக் அஹமட்             1990-1999            4              8              1334       739         22           5/95       9/186     33.59     3.32       

(வீரர், விளையாடிய காலம், போட்டிகள், இன்னிங்ஸ், வீசிய பந்துகள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, போட்டி சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ஸ் சராசரி வேகம்)

பாகிஸ்தான் அணி விபரம்

மிஷ்பா உல் ஹக், அஸார் அலி, ஷமி அஸ்லாம், ஷர்ஜீல் கான், யூனுஸ் கான், ஆஷட் ஷபீக், பாபர் அஸாம், சப்ராஸ் அஹமட், மொஹமட் ரிஷ்வான், யசீர் ஷா, மொஹமட் நவாஸ், மொஹமட் அமீர், வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, சொஹைல் கான், இம்ரான் கான்

நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியே இந்த தொடருக்கும் மாற்றமின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளது.  நியூசிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட தெரிவுக்குகுழுவினர் அதே அணி மீது நம்பிக்கையை வைத்துளள்னர். கம்ரன் அக்மல் உள்ளூர்ப்போட்டிகளில் கூடிய ஓட்டங்களை எடுத்த போதும் அவரை அணியில் சேர்க்கவில்லை. மொஹமட் ஹபீஸின் பந்து வீச்சு அனுமதியை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமத்தித்துள்ள போதும் அவரையும் மீண்டும் அணிக்குள் உள் வாங்கவில்லை.

அண்மைக்காலமாக வெற்றி பெற்ற தொடரிகளில் இந்த வீரர்களே அதிகம் விளையாடியுளளனர். எனவே அணியை மாற்றுவதும் சிறந்த முடிவு அல்ல. ஒரு தொடர் தோல்விக்காக அணியை மாற்றுவது அணியின் சமநிலையை குழப்பும்.

நியூசிலாந்து தொடரில்  விளையாடிய அணியில் பெரிய மாற்றங்கள் இடப்பெறாது. மிஸ்பா உல் ஹக் நியூசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடாத நிலையில் மொஹமட் ரிஷ்வான் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். முதல் இன்னிங்சில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் 13 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். அவர் மேலதிக சகலதுறை  வீரராக அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது ஒரு துடுப்பாட்ட வீரர் மாற்றப்படுவதாக இருந்தால் அவருக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் இருக்காது. அஸார் அலி, ஷமி அஸ்லாம், பாபர் அஸாம்,  யூனுஸ் கான், மிஷ்பா உல் ஹக், ஆஷட் ஷபீக், சப்ராஸ் அஹமட் ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் மூன்று போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக்களை கொண்டவர்கள். யஸீர் ஷா சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறவேண்டிய வீரர். நியூசிலாந்து தொடரின் முதற் போட்டியில் இவர் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் விக்கெட்களை கைப்பற்றவில்லை. ஆனாலும் வேகமாக விக்கெட்களை அள்ளிக் குவித்து வரும் ஒருவர். நிச்சயம் அணியில் தொடர வேண்டும். வேகப்பந்துவீச்சு இன்னமும் முழுமை பெறவில்லை. மொஹமட் அமீர் மட்டுமே நிரந்தரமானவர். மற்றைய இருவர் அல்லது மூவர் என்று பார்க்கும் வேளையில் இம்ரான் கான் தொடரை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நியூசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி 6 விக்கெட்களை கைபப்ற்றினார். சொஹைல் கான் இரண்டு போட்டிகளிலும் 7 விக்ட்களை கைப்பற்றினார். முதற் போட்டியில் விளையாடிய ரஹாத் அலி 4 விக்கெட்களை கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே வேகப்பந்து வீச்சின் நிலை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் தரும் மைதானங்களில் இவர்கள் சிறப்பாக பந்து வீசினால் அவுஸ்திரேலியா வீரர்களை தடுமாற வைக்கலாம். 

அவுஸ்திரேலியா அணி விபரம்

டேவிட் வோர்னர், மட் ரென்ஷோ, உஸ்மான் காவாஜா, ஸ்டீபன் ஸ்மித், பீட்டர் ஹான்டஸ்கோம்ப், நிக் மட்டின்சன், மத்தியூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹஸ்ல்வூட், நேதன் லயோன், ஜக்ஸன் பேர்ட், சாட் சயேர்ஸ்  

அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடனான தோல்வியுடன் அணியில் அதிரடி மாற்றங்களை செய்தது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் மூன்று வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டது. இன்னும் சில வீரர்களும் கூட மாற்றப்பட்டனர். அவுஸ்திரேலியா அணி வெற்றியைப்பெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற அதேயணி முதற்போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி முதற் போட்டியில் காட்டும் திறமைகளின் அடிப்படையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்குமான அணி தெரிவு செய்யப்படும்.

டேவிட் வோர்னர், மட் ரென்ஷோ ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள். ரென்ஷோ கடந்த போட்டியில் அறிமுகம் மேற்கொண்ட வீரர். மிகச் சிறப்பான ஆரம்பம் இல்லை. முதல் இன்னிங்சில் 10 ஓட்டங்கள். இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள். நிச்சயம் இந்த தொடரின் முதற் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும். உஸ்மான் காவாஜா கடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆரம்ப வீரராக களமிறங்க முடியாத நிலையில் களமிறங்கிய உஸ்மான் காவஜா மிக அபாரமாக துடுப்பாடினார்.  இரண்டாம் இன்னிங்சில் மூன்றாமிலக்கத்தில் துடுப்பாடி ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தார். ஆனால் இவர் தற்போது அவுஸ்திரேலியா அணியின் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரர். அடுத்த இடம் ஸ்டீபன் ஸ்மித். ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகியோர் மிக சிறப்பான போர்மில் உள்ளனர். அவர்களின் துடுப்பாட்டம் அவுஸ்திரேலியா அணிக்கு மிகக்பெரிய பலம். மத்திய வரிசையில் அறிமுகத்தை மேற்கொண்ட பீட்டர் ஹான்டஸ்கோம்ப் அறிமுக இன்னிங்சில் அரைச்சதமடித்து நம்பிக்கையை வழங்கினார்.

விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் 3 1/2 வருடங்களின் பின்னார் மீள் வருகை வாய்ப்பை பெற்றார். ஆனால் துடுப்பாட்டம் சரியாக அமையவில்லை. இந்த தொடரின் முதற்போட்டி வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் அவுஸ்திரேலியாவில் விக்கெட்காப்பு நல்ல முறையில் செய்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க கூடிய நல்ல விக்கெட் காப்பாளர்கள் இல்லை என்பது மிகக்பெரிய குறையாகவே உள்ளது. இயன் ஹீலி விட்டுச் செல்லும் போது அடம் கில்கிறிஸ்ட் சரியான வகையில் இடத்தைப் பிடித்துக்கொண்டார். ஆனால் அவரின் பின்னர் மிக நம்பிக்கை தரும் விக்கெட் காப்பாளர் ஒருவர் அவுஸ்திரேலியா அணிக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை. 

வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹஸ்ல்வூட் ஆகியோர் மிக ந,நம்பிக்கையானவர்கள். மூன்றாமவராக ஜக்சன் போர்ட் கடந்த தென்னாபிரிக்கா போட்டியில் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டார்.   விக்கெட்களை கைபப்ற்றினார். அவர் நிச்சயம் விளையாடுவார் என்பது அறிவிக்கப்பட்டுள்ள அணியிலிருந்து தெளிவாக தென்படுகின்றது. மித வேகப்பந்து வீச்சாளரான சாட் சயேர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்  வது வீரராகவே அணியில் இருக்கப்போகின்றார். சுழற் பந்துவீச்சாளராக நேதன் லயோன். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள். ஒரு சுழற் பந்துவீச்சாளர். நான்கு பந்து வீச்சாளர்களுடன் மாத்திரம் களமிறங்கவுளள்து அவுஸ்திரேலியா அணி. சகலதுறை வீரர் ஒருவர் அணியில் இல்லாமை மாத்திரமே இவர்களுக்கு பின்னடைவு.

இந்த அணியை வைத்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை தகர்க்க வேண்டும். சாத்தியமா? தோல்விகளினால் பின்னடைவை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அணி மிக ஆக்ரோஷமான மீள் வருகை ஒன்றுக்கு முயற்சிக்கும். அதனை பாகிஸ்தான் அணி சரியாக எதிர்கொள்ளுமா அல்லது அவுஸ்திரேலியா அணியிடம் மண்டியிடுமா? இறுக்கமான தொடராக   இந்த தொடர் அமையலாம். பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரை சமன் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சரியாக அவுஸ்திரேலியா அணியின் பின்னடைவை பாவித்து அடித்தால் பாகிஸ்தான் அணிக்கு சார்பான தொடராக இந்த தொடரை மாற்றலாம்.

முதற் போட்டி - டிசம்பரம் 15 - 19 - இலங்கை நேரம் காலை 8.30

பிறிஸ்பேர்ண் கிரிக்கெட் மைதானம், பிறிஸ்பேர்ண்

இரண்டாவது போட்டி - டிசம்பரம் 26 - 30 இலங்கை நேரம் அதிகாலை 5.00

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்பேர்ன் 

மூன்றாவது போட்டி - ஜனவரி 3-7 , இலங்கை நேரம் அதிகாலை 5.00

சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

- See more at: http://www.tamilmirror.lk/188033/அவ-ஸ-த-ர-ல-ய-ப-க-ஸ-த-ன-ட-ஸ-ட-த-டர-ம-ன-ன-ட-டம-#sthash.y4KoVaWz.dpuf
Link to comment
Share on other sites

பிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

 
 
 
 
பிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
 
பிரிஸ்பேன்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இப்போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ரென்சா களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

அணியின் ஸ்கோர் 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது துவக்க ஜோடியை பிரித்தார் முகமது ஆமிர். 24-வது ஓவரில் இவர் வீசிய பந்தில் வார்னர் எல்.பி.டபுள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 70 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 32 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து ரென்சாவுடன் இணைந்த கவாஜா 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

அதன்பின்னர் ரென்சா-கேப்டன் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரென்சா முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஸ்மித் வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய ரென்சா, 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்மித்தும் அரை சதம் கடந்தார். இதனால், 57 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (53), ஹேண்ட்ஸ்காம்ப் (15) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் சிறப்பாக பந்துவீசி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் கலங்கடித்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/15130556/1056180/australian-team-playing-steady-in-brisbane-test.vpf

Link to comment
Share on other sites

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 288/3

பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

 
 
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 288/3
 
மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பகல் - இரவு டெஸ்டாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ரென்சா, டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் மொகமது ஆமிர், ரஹத் அலி ஆகியோரின் பந்து வீச்சில் எக்காரணத்தைக் கொண்டும் அவுட்டாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இதனால் ஆஸ்திரேலியா 17.3 ஓவரில்தான் 50 ரன்னைத் தொட்டது. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருக்கும்போது வார்னர் 32 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஆமிர் பந்தில் எல்.பி.டபி்ள்யூ ஆனார்.

40A3B2D8-2FC7-45AC-A39A-336908A3BE84_L_s

அடுத்து வந்த கவாஜாவை 4 ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் யாசீர் ஷா. 3-வது விக்கெட்டுக்கு ரென்சா உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. அணியின் ஸ்கோர் 151 ரன்னாக இருக்கும்போது ரென்சா 71 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

033DBEAE-897F-435D-9C04-9F8EA33A0869_L_s

அடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த ஸ்மித் அதை சதமாக மாற்ற முயற்சி செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மொகமது ஆமிர் வீசிய ஆட்டத்தின் 87-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 16-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
 
849D1662-74D2-4B73-8739-A35A2A5767D0_L_s


மறுமுனையில் விளையாடிய ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 110 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/15160744/1056234/Brisebane-Day-Night-Test-smith-century-australia-288.vpf

Link to comment
Share on other sites

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 429 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
 
ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 288 ரன் எடுத்தது.

கேப்டன் ஸ்டீவன் சுமித் 110 ரன்னுடனும் ஹேன்ட்ஸ் கோம்ப் 64 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சுமித் 130 ரன்னில் அவுட் ஆனார். ஹேன்ட்ஸ்கோம்ப் சதம் அடித்தார். அவர் 105 ரன்னில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆஸ்திரேலியா 130.1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன் எடுத்திருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16130559/1056401/Australia-scored-429-runs-in-first-innings-against.vpf

Link to comment
Share on other sites

பிரிஸ்பேன் டெஸ்ட்: பாகிஸ்தான் 97 ரன்னுக்குள் 8 விக்கெட்டை இழந்து திணறல்

பிரிஸ்பேன் டெஸ்ட் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 97 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

 
பிரிஸ்பேன் டெஸ்ட்: பாகிஸ்தான் 97 ரன்னுக்குள் 8 விக்கெட்டை இழந்து திணறல்
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பகல் - இரவு டெஸ்டான இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் ஸ்மித் (130), ஹேண்ட்ஸ்காம்ப் (105) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
 
D210D7F6-5568-4E8C-A4D8-BCC715DE6529_L_s


அடுத்து சமி அஸ்லாம் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 43 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. 67 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அஹமது உடன் மொகமது ஆமிர் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

C3F154F1-256D-45E3-B088-0B54AB43823C_L_s

சர்பிராஸ் அஹமது 31 ரன்னுடனும், மொகமது ஆமிர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான், தற்போது வரை 332 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி எப்படியும் பாலோ-ஆன் ஆவது உறுதி. ஆனால், ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்குமா? அல்லது தொடர்ந்து அந்த அணி 2-வது இன்னிங்சை தொடங்குமா? என்பது தெரியவில்லை.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16165806/1056489/Brisbane-Test-pakistan-97-for-8-2nd-stumps-day-2.vpf

Link to comment
Share on other sites

ஆஸி. வேகப்பந்தில் 8 விக்கெட்டுகளை 97 ரன்களுக்குப் பறிகொடுத்து பாக். திணறல்

 
  • விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸ்திரேலியா. | படம்: ஏஎப்பி.
    விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸ்திரேலியா. | படம்: ஏஎப்பி.
  • சதமடித்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப். | படம்: ஏ.பி.
    சதமடித்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப். | படம்: ஏ.பி.
 

பிரிஸ்பனில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று பாகிஸ்தான் அணி தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானின் வழக்கமான எளிதான கேட்ச்களை விடுவது, எதிரணியினரின் பின்கள வீரர்களை ரன் எடுக்க அனுமதிப்பது, பேட்டிங்கில் கொத்தாக விக்கெட்டுகளை விடுவது ஆகியவை தொடர்ந்தபடியே உள்ளன. யூனிஸ் கானின் ஸ்கோர் இப்படியாக இருக்கிறது: 0, 2, 1, 2, 11, 0, எனவே இவையெல்லாம் மாறாத வகையில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா போல் ஆஸ்திரேலியாவில் சாதிப்பது கடினம், வஹாப் ரியாஸ் வேகம்தான் ஏதோ கிரிக்கெட் உயிர் மூச்சு என்பது போல் பேசினார், ஆனால் முதல் நாளில் ஆஸ்திரேலியா 288/3 என்று வலுவாக இருந்த போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்றுதான் இங்கு என்ன லெந்தில் வீசுவது என்பதை வஹாப் புரிந்து கொண்டார். ஆமீரும், இவரும் அருமையான சில ஓவர்களை இன்று ஆஸ்திரேலிய நடுவரிசை வீரர்களுக்கு வீசினர், பந்தில் வேகம், ஸ்விங் இரண்டும் இருந்ததால் அடிக்கடி பந்து மட்டையின் விளிம்பைத்தட்டிச் சென்றது. பிரிஸ்பன் பிட்சும் முதல்நாளை விட இன்று வேகம் அதிகமாக இருந்தது, இதனையடுத்து தங்களது கடைசி 7 விக்கெட்டுகளை 106 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியில் நேற்று அதிர்ஷ்டத்துடன் அபாரமாக ஆடி கேப்டன் ஸ்மித் 110 ரன்களை எடுத்து இன்று களமிறங்கி 130 ரன்களில் வஹாப் ரியாஸின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்மித்திற்கு நேற்று ஒரு கேட்ச் விடப்பட்டதோடு, ஸ்மித் எட்ஜ் செய்து கேட்சும் பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் அப்பீல் செய்யவேயில்லை. மொகமது ஆமிரும் அப்பீல் செய்யவில்லை. இந்த அதிர்ஷ்டங்களுடன் அவர் மேலும் தொடர்ந்து ஆடி 130 ரன்களில் மோசமான ஷாட் தேர்வில் வெளியேறினார். ‘ஆட்டத்தின் போக்கை விரைவில் மாற்றுவார்’ என்று விதந்தோதப்பட்ட மேடிசன் 1 ரன்னில் வஹாப் ரியாஸிடம் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை மொகமது ஆமிர் வீழ்த்தினார். சமீபத்தில் அறிமுகமான மற்றொரு வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப் அருமையாக ஆடி 10 பவுண்டரிகள், யாசிர் ஷாவை ஒரு சக்தி வாய்ந்த சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸ் ரவுண்ட் த விக்கெட்டில் விசி உள்ளே வந்த பந்தை தேர்ட்மேன் திசையில் ஆட நினைத்து உள்ளே வாங்கி விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

கடைசி விக்கெட்டுகளை அரைபந்திலேயே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இருந்த போது வீழ்த்திவிடுவார்கள், ஆனால் இன்று நேதன் லயன் 24 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும், ஜேக்சன் பேர்ட் 19 ரன்களையும் எடுத்து கடைசி விக்கெட்டுக்காக 49 ரன்களைச் சேர்க்க அனுமதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா 130 ஓவர்களில் 429 ரன்களை எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில் ஆமிர் 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வஹாப் ரியாஸ் 89 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். யாசிர் ஷா 43.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்றாலும் இவரது பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் திருப்திகரமாக ஆடவில்லை. நிச்சயம் இன்னும் உதவிகரமான பிட்சில் 4-5ம் நாள் ஆட்டத்தில் (அதுவரை பாகிஸ்தான் பேட்டிங் கொண்டு சென்றால்) இவரது பந்து வீச்சு ஆஸி.க்கு அச்சுறுத்தலே.

பாக்.விக்கெட்டுகள் மளமள சரிவு:

தங்களது பேட்டிங்கைத் தொடர இறங்கிய பாகிஸ்தான், நல்ல பிட்சில் பிரிஸ்பன் விளக்கொளியில் பந்துகள் வேகம், ஸ்விங், எழுச்சி என்று தன் வேலையைக் காட்ட மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

முதலில் அசார் அலி 5 ரன்களில் ஸ்டார்க் ஒரு பந்தை தனது இடது கை வீச்சாளர்களுக்குரிய கோணத்தில் வீசி எழுப்ப காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் வைத்து பந்தை இடிக்க கவாஜாவிடம் கேட்ச் ஆனது. பாபர் ஆசம், சமி அஸ்லம் இணைந்து போராடி 37 ரன்களை 2-வத் விக்கெட்டுக்காகச் சேர்த்த நிலையில் ஹேசில்வுட்டின் ஆடத்தேவையில்லாத பந்தை ஆடி 19 ரன்களில் பாபர் ஆஸம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். இதே ஓவரின் அடுத்த பந்தில் அனுபவசாலியான யூனிஸ் கான், ஹேசில்வுட் பந்து ஒன்று உள்ளே வந்து லேசாக வெளியே எடுக்க எட்ஜ் ஆகி வெளியேறினார். மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக் ஆகியோரும் முறையே ஜேக்சன் பேர்ட் மற்றும் ஸ்டார்க்கிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற 5 பேட்ஸ்மென்கள் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 48 ரன்களில் வெளியேறினர்.

சமி அஸ்லம் ஒரு முனையில் போராடி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷாட்டை சரியாக ஆடாமல் பேர்ட் பந்தில் லெக் திசையில் வேடிடம் கேட்ச் கொடுத்தார். வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஹேசில்வுட் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யாசிர் ஷாவுக்கு ஸ்டார்க் ஒரு ஏத்து ஏத்தினார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் 66/8 என்று சரிவு கண்ட நிலையில், விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது (31 நாட் அவுட்), மொகமது ஆமிர் (8 நாட் அவுட்) மேலும் சேதமில்லாமல் 97/8 என்ற நிலையில் ஆட்டம் முடிந்தாலும் பாகிஸ்தான் 332 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ ஆன் தவிர்ப்பது கடினமே என்று தெரிகிறது.

ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஜேக்சன் பேர்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

http://tamil.thehindu.com/sports/ஆஸி-வேகப்பந்தில்-8-விக்கெட்டுகளை-97-ரன்களுக்குப்-பறிகொடுத்து-பாக்-திணறல்/article9430678.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 142 ரன்னில் சுருண்டது

பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 142 ரன்னில் சுருண்டது
 
பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31ரன்) களத்தில் இருந்தார். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது.

சர்பிராஸ் அகமது அரை சதம் அடித்தார். முகமது அமீர் 21 ரன்னிலும், ரகத்அலி 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் 55 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் 287 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17122251/1056636/Pakistan-all-out-for-142-runs-in-the-first-Test-against.vpf

Link to comment
Share on other sites

180 ஓவரில் 420 ரன், கைவசம் 8 விக்கெட் - சாதிக்குமா பாகிஸ்தான்?

பிரிஸ்பேன் பகல் - இரவு (பிங்க் பந்து) டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

 
 
180 ஓவரில் 420 ரன், கைவசம் 8 விக்கெட் - சாதிக்குமா பாகிஸ்தான்?
 
பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்- இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31 ரன்னுடனும், மொகமது ஆமிர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. சர்பிராஸ் அகமது அரைசதம் அடித்தார். முகமது அமீர் 21 ரன்னிலும், ரஹத் அலி 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் 55 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்- அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. சர்பிராஸ் அகமது 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் 287 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 39 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கும்போது டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

சுமார் இரண்டேகால் நாட்கள் இருந்தாலும் பாகிஸ்தான் அவ்வளவு நேரம் நிலைத்து நின்று விளையாடுவது சாத்தியம் இல்லை. இந்த கடுமையான இலக்கை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, சமி அஸ்லாம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருக்கும்போது சிம அஸ்லாம் 15 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.

C2A7266A-ECFF-43C1-BFDE-C05F1C767006_L_s

அடுத்து வந்த பாபர் ஆசம் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 41 ரன்னுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

தற்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. சுமார் 180 ஓவருக்கு மேல் ஆஸ்திரேலியா வீச வேண்டும். 180 ஓவரில் 420 ரன்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் நிலையாக நிற்க வேண்டும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/17164747/1056722/Brisbane-test-490-runs-target-to-pakistan-won.vpf

Link to comment
Share on other sites

பிரிஸ்பேன் டெஸ்ட்: கடைசி நாளில் பாக்.வெற்றிக்கு 108 ரன்கள்; கைவசம் 2 விக்கெட்

பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 108 ரன்கள்தான் தேவை. ஆனால், கைவசம் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது.

 
பிரிஸ்பேன் டெஸ்ட்: கடைசி நாளில் பாக்.வெற்றிக்கு 108 ரன்கள்; கைவசம் 2 விக்கெட்
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பகல்- இரவு பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 429 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 142 ரன்னில் சுருண்டது.

287 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 5 வி்க்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நி்ர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

அசார் அலி 41 ரன்னுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று தொடர்ந்து விளையாடிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அசார் அலி 71 ரன்களும், யூனிஸ்கான் 65 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். ஆனால் அடுத்த வந்த மிஸ்பா உல் ஹக் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

6-வது வீரராக களம் இறங்கிய ஆசாத் ஷபிக் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆமிர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது சதத்தால் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆசாத் ஷபிக் 100 ரன்னுடனும், யாசீர் ஷா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 108 ரன்கள் தேவை. ஆனால், ஒருநாள் முழுவதும் இருக்கையில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே வைத்துள்ளது. இதனால் என்ன ஆகும்? என்பதை நாளை பார்ப்போம்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/18183504/1056860/Asad-Shafiq-and-tail-make-Australia-toil.vpf

Link to comment
Share on other sites

6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆசாத் ஷபிக் பெற்றுள்ளார்.

 
6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்ததுள்ளது. பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய ஆசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
 
9D507E97-8598-4543-95CB-7B1B7C0A1E51_L_s


இந்த சதம் மூலம் 6-வது நபராக களம் இறங்கி அதிக சதங்கள் (9) அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால், டோனி கிரேக், ரிக்கி பாண்டிங், திலகரத்னே ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/18212434/1056877/Asad-Shafiq-sets-a-record-at-No-6.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுடனான டெஸ்ட்டில் 39 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி
2016-12-19 10:10:55

பாகிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

21290australia-600.jpg


புpறிஸ்பேன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 490 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


கடுமையாகப் போராடிய பாகிஸ்தான் அணி, போட்டியின் இறுதி நாளான இன்று 450 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21290#sthash.5fPVEXhr.dpuf
Link to comment
Share on other sites

‘பாக்சிங் டே’ டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை

நாளை தொடங்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாக்சிங் டே’ டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை
 
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற இருக்கிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் யாரொல்லாம் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நின் மேடின்சன் குறைந்த அளவே ரன்கள் சேர்த்தார். அவர் கடந்த மூன்று இன்னிங்சில் 0, 1 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர ஹில்டன் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதனால் மேடின்சன் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய அதே வீரர்கள் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் அணியில் இடம்பெற்றிருந்தாலும் கார்ட்ரைட்டுக்கு ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. ரென்ஷா, 3. உஸ்மான் கவாஜா, 4. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 5. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 6. நிக் மேடின்சன், 7. மேத்யூ வடே, 8. மிட்செல் ஸ்டார்க், 9. ஜோஸ் ஹசில்வுட், 10. நாதன் லயன், 11. ஜேக்சன் பேர்ட்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/25151633/1058222/Australia-vs-Pakistan-Hosts-name-unchanged-team-for.vpf

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட் போட்டி: ஆஸியை பழிதீர்க்க பாகிஸ்தான் தீவிரம்

 

 
 
2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக்குடன் ஆலோசனை நடத்தும் அந்நாட்டின் பயிற்சியாளர் மிக்கி அர்தர். படம்:ஏஎப்பி
2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக்குடன் ஆலோசனை நடத்தும் அந்நாட்டின் பயிற்சியாளர் மிக்கி அர்தர். படம்:ஏஎப்பி
 
 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்க பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக ஆடி 450 ரன்களைக் குவித்தது, பாகிஸ் தான் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், 2-வது டெஸ்ட்டில் அதற்கு பழிதீர்க்கும் எண்ணத்துடன் களத்தில் இறங்குகிறது.

இந்த போட்டி குறித்து நிருபர் களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தா னின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், “முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் களின் தன்னம்பிக்கை அதிகரித்துள் ளது. மெல்போர்ன் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் களுக்கு அவர்கள் கடும் சவாலாக விளங்குவார்கள்” என்றார்.

மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக், அசார் அலி, யூனிஸ் கான், சர்பிராஸ் அகமது என்ற வலிமையான பேட் டிங் வரிசையை கொண்டிருப்பது பாகிஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், ஸ்டார்க் - ஹசல்வுட்டின் பந்துவீச்சு கூட்டணி அதைச் சிதறடிக்கும் என்று ஆஸ்திரேலியா தைரியமாக உள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணி ஆஸ்தி ரேலிய மண்ணில் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் அந்த அணி கடைசியாக கடந்த 1981-ம் ஆண்டுதான் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு இந்த மைதானத்தில் வெற்றி பெற்றதில்லை. இந்நிலை யில் இந்த டெஸ்ட் போட்டியில் வென்று ஆஸ்திரேலியாவில் மீண் டும் வெற்றிக்கணக்கை தொடங்க பாகிஸ்தான் அணி ஆர்வமாக உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி குறித்து நேற்று நிருபர்களிடம் கூறிய பாகிஸ் தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச் சாளர்கள் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை சரிசெய்ய இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான சோகைல் கான் அணியில் சேர்க்கப்படுவார். அணியின் பந்துவீச்சை அவரது வருகை பலப்படுத்தும் என்று நம்பு கிறேன். பந்துவீச்சாளர்கள் மட்டு மின்றி பேட்ஸ்மேன்களுக்கும் இந்த தொடர் சவாலாக இருக்கும். முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள் கிறோம். இப்போட்டிக்காக நாங்கள் கடுமையாக பயிற்சி செய்துள்ளோம்” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் 2-வது டெஸ்ட் போட்டியை சந்திக்கவுள்ளோம். ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருப் பதால், அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக் கிறேன். டாஸில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்கும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/2வது-டெஸ்ட்-போட்டி-ஆஸியை-பழிதீர்க்க-பாகிஸ்தான்-தீவிரம்/article9443812.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

 
 
ஆஸ்திரேலியா பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்
 
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது. சமிஅஸ்லம் (9 ரன்) லயன் பந்திலும், பாபர் ஆசம் (23 ரன்) ஹாசல்வுட் பந்திலும், யூனுஸ்கான் (21 ரன்), கேப்டன் மிஸ்பா (11 ரன்) போர்டு பந்திலும் ஆட்டம் இழந்தனர். அசார்அலி ஒருவரே பொறுப்புடன் ஆடி வருகிறார். பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
 
Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்

 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்
 
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.

அசார் அலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 218 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.

56-வது டெஸ்டில் விளையாடும் அசார்அலிக்கு இது 12-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2-வது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளை வரை மழை பாதிப்பு இருந்தது.

அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது. அசார்அலி 112 ரன்னும், ஆசாத்சபீக் 48 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/27123130/1058551/Pakistan-batsman-Azhar-Ali-century-Against-Australia.vpf

Link to comment
Share on other sites

மெல்போர்ன் டெஸ்டில் அசார் அலி இரட்டை சதம்: வார்னர் பதிலடி

மெல்போர்ன் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய வார்னர் 144 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தார்.

 
 
 
மெல்போர்ன் டெஸ்டில் அசார் அலி இரட்டை சதம்: வார்னர் பதிலடி
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் கடந்த 26-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இரண்டு நாட்களில் பெரும்பாலான நேரம் மழையினால் பாதிக்கப்பட்டது.

நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 139 ரன்னுடனும், மொகமது ஆமிர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆமிர் மேலும் ஒரு ரன்கள் எடுத்து 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோகைல் கான் அசார் அலியுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. சோகைல் கான் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அசார் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். கடைசியாக வந்த வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

A2DBD78B-703E-44F4-89A7-D09712730DBA_L_s

அசார் அலி 205 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் பேர்டு மற்றும் ஹசில்வுட் ஆகியோர் அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரென்ஷா மற்றும் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரென்ஷா 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், வார்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 113 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் அடித்த அவர் 143 பந்தில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார்.

689A9282-A8D8-4FC8-8ECC-1FA66AEE51B4_L_s

இவரது அதிரடியால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்துள்ளது. கவாஜா 95 ரன்னுடனும், கேப்டன் ஸ்மித் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஆஸ்திரேலியா 165 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளதால் நாளை அதிரடியாக விளையாடி 250 ரன்கள் முன்னிலைப் பெற்றால் மெல்போர்ன் டெஸ்டில் முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/28150900/1058782/Warner-and-Khawaja-lead-strong-Australia-reply.vpf

Link to comment
Share on other sites

3 ரன்னில் மிஸ் ஆன 32 வருட சாதனை!

 

256813.3_00235.jpg

பாக்ஸிங் டே போட்டியில் முதலில் பேட் செய்த பாக். 443/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் அஸார் அலி 205 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 3 ரன்கள் குவித்து இருந்தால் ஆஸி மண்ணில் அதிக ரன் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற 32 வருட சாதனை உடைத்திருப்பார். வார்னர் (144) சதத்துடன் ஆஸி பதிலடி கொடுத்து வருகிறது.

வார்னர் 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவாஜா 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 2003 ஆண்டு சேவக்-ஹைடன் இருவரும் முதல் இன்னிங்ஸில் சதமடித்தனர். அதன் பின் இப்போது தான் அஸார்-வார்னர் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

ஸ்மித் சதம்; அசார் அலி வாங்கிய அடி: ஆஸ்திரேலியா 465/6

 

 
மேல்போர்ன் டெஸ்ட்டில் சதம் அடித்து நாட் அவுட்டாக உள்ள ஸ்மித். | படம்.| ஏஎப்பி.
மேல்போர்ன் டெஸ்ட்டில் சதம் அடித்து நாட் அவுட்டாக உள்ள ஸ்மித். | படம்.| ஏஎப்பி.
 
 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 465 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்க வாய்ப்பில்லாமல் போன போது ஸ்மித் 100 ரன்களுடனும், ஸ்டார்க் ஒரு 103 மீ சிக்சருடன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வஹாப் ரியாஸ் தனது நோ-பால் பிரச்சினையிலிருந்து விடுபடவில்லை. 27 ஓவர்களில் அவர் 12 நோ-பால்களை வீசியுள்ளார். இதனால் வார்னர் விக்கெட்டையும் அவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

278/2 என்று ஆஸ்திரேலியா வலுவான நிலையில் தொடங்கிய போது உஸ்மான் கவாஜா தனது 95 ரன்களுடன் மேலும் 2 ரன்களை மட்டுமே சேர்த்து இன்று காலை வஹாப் ரியாஸ் பந்தில் எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் சர்பராசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 97 என்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் எண்ணாகி வருகிறது, வார்னர் ஒரு முறை 97 ரன்களில் ஆட்டமிழக்க, கவாஜா இருமுறை இதே ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார்.

கவாஜா ஆட்டமிழந்தவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஸ்மித்துடன் இணைய இருவரும் சேர்ந்து 141 பந்துகளில் 92 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஹேண்ட்ஸ்கோம்ப் மட்டும் 8 பவுண்டரிகள் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து சொஹைல் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணியில் கொண்டு வரப்பட்ட 3 இளம் வீரர்களில் ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப் தேற, மேடிசன் சோபிக்கவில்லை, இன்று அவர் 22 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தை மேலேறி வந்து ஆட முயன்றார், பந்து அவரை ஏமாற்றி ஸ்டம்பைத்தாக்கியது.

இவர் இதுவரை 0,1,4, 22 என்று தனது டெஸ்ட் இடத்தை இழக்கும் வாய்ப்பை தானே உருவாக்கிக் கொண்டுள்ளார், அதே போல் மேத்யூ வேட் 9 ரன்கள் எடுத்து சொஹைல் கான் வீசிய ஆடாமல் விட வேண்டிய பந்தை கட் செய்ய முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆசாத் ஷபிக் கையில் ஸ்லிப்பில் அமர்ந்தது. இவரும் 4,7,1, தற்போது 9 என்று சோபிக்கவில்லை.

இவர் ஆடும்போதுதான் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த இரட்டைச்சத சாதனை நாயகன் அசார் அலி அடி வாங்கி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார். வேட் ஆடிய சக்தி வாய்ந்த புல் ஷாட் அசார் அலியின் ஹெல்மெட்டை பயங்கரமாகத் தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சோதனைக்காகவும் உடனடியாக அசார் அலி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார்.

கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி தனது 17-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். சொஹைல் கான் பந்தை கட் செய்து 3 ரன்கள் ஓடி துரதிர்ஷ்ட 97 ரன்களிலிருந்து சதம் கண்டார் ஸ்மித். 168 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் இதுவரை 9 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

மிட்செல் ஸ்டார்க், யாசிர் ஷா பந்தை மைதானத்தின் நீண்ட தொலைவில் உள்ள பகுதியில் சிக்சருக்கு விரட்டினார். 103மீ சிக்சராகும் இது. நாளை முழு ஆட்டம் சாத்தியமானால் பாகிஸ்தானை விரைவில் ஆல் அவுட் ஆக்க ஆஸ்திரேலியா முயற்சி செய்யும். நிச்சயம் ஸ்மித் டிக்ளேர் செய்து விடுவார் என்று நம்ப இடமுண்டு.

http://tamil.thehindu.com/sports/ஸ்மித்-சதம்-அசார்-அலி-வாங்கிய-அடி-ஆஸ்திரேலியா-4656/article9449266.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஸ்டீவ் ஸ்மித் ஹாட்ரிக் சாதனை!

 

256892_05400.jpg

ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிரான் பாக்ஸிங் டே டெஸ்டில் சதமடித்தார். மேலும் இந்த ஆண்டில் 1000 ரன்களையும் கடந்தார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று வருடங்களாக ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸி வீரர்களில் ஹெய்டன்  மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார்.

ஐந்தாவது நாள் ஆட்டம் துவங்கி சிறிது நேரத்தில் 500 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸி ஆடி வருகிறது. இன்னும் முதல் இன்னிங்ஸே இரு அணிகளுக்கும் முடிவடையாத நிலையில் இந்த டெஸ்ட் ட்ரா ஆவது உறுதியாகியுள்ளது. 41-வது பாக்ஸிங் டே டெஸ்ட் ட்ராவை நோக்கி செல்கிறது. 

Link to comment
Share on other sites

ஸ்மித், வோர்னர் அபாரம் ; பாக். அணியை வீழ்த்தியது ஆஸி

 

 

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

256954.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுகளை இழந்து 443 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை சதத்தை பூர்த்திசெய்த அஷார் அலி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

256952.jpg

இந்நிலையில் 2 ஆலது இன்னிங்ஸை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வோர்னரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன், 624 ஓட்டங்களை பெற்றுக்ககொண்டது.

ஸ்மித் 164 ஓட்டங்களையும், வோர்னர் 144 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

256947.jpg

இந்நிலையில் 181 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்து ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிசார்பில் சப்ராஸ் அஹமட் மற்றும் அஷார் அலி தலா 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

256944.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14911

Link to comment
Share on other sites

141 ஓவர்களை மழையால் இழந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் பாக். இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

 

 
 
 
  • வஹாப் ரியாஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க் மற்றும் ஆஸி. அணியினர். | படம். ஏ.பி.
    வஹாப் ரியாஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க் மற்றும் ஆஸி. அணியினர். | படம். ஏ.பி.
  • சிக்சர் விளாசும் மிட்செல் ஸ்டார்க். | படம்.| ஏ.எஃப்.பி.
    சிக்சர் விளாசும் மிட்செல் ஸ்டார்க். | படம்.| ஏ.எஃப்.பி.
 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்றுள்ளது. இத்தனைக்கும் பிட்ச் கான்க்ரீட் தரை போல் இருந்ததே தவிர விக்கெட்டுகள் இப்படி சரியும் அளவுக்கு அதில் ஒன்றுமில்லை.

பிரிஸ்பனில் சாத்தியமற்ற வெற்றி இலக்கை விரட்டி நெருக்கமான தோல்வி, மெல்போர்னில் 68 ஓவர்கள் ஆடியிருந்தால் டிரா செய்திருக்கலாம் ஆனால் இங்கு இன்னிங்ஸ் தோல்வி. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாறாத ‘கணிக்கவியலாத் தன்மை’. அதாவது எங்கிருந்து வேண்டுமானாலும் வெற்றிபெறும் அதே போல் தோல்வி சாத்தியமில்லாத நிலையிலிருந்தும் தோல்வி அடையும், இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சாராம்சம்!

5-ம் நாளான இன்று 465/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 142 ஓவர்களில் ஓவருக்கு 4.39 என்ற ரன்விகிதத்தில் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 624 ரன்கள் குவித்தது, கேப்டன் ஸ்மித் 13 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 165 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, மிட்செல் ஸ்டார்க் 91 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களை விளாசித்தள்ளினார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 154 அதிரடி ரன்களைச் சேர்த்தனர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆட களமிறங்கிய பாகிஸ்தான் 53.2 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்களில் தோல்வி தழுவி தொடரை இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மீண்டும் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

அசார் அலி இரட்டைச் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த பாகிஸ்தான் அணி சுமார் 141 ஓவர்கள் மழையால் விரயமான டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தலையில் அடிபட்டாலும் 2-வது இன்னிங்சிலும் அசார் அலி 112 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களை எடுத்து ஹேசில்வுட் பந்தில் எல்.பி. ஆனார். இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் சர்பராஸ் அகமது இவரும் 43 ரன்கள். கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஸ்கோரரை தொந்தரவு செய்யவில்லை, யூனிஸ் கான் 24 ரன்களுக்கு நேதன் லயனிடம் ஆட்டமிழந்தார்.

நேதன் லயன் இன்னிங்ஸின் 20-வது ஓவரில் யூனிஸ் கான், மிஸ்பாவை வீழ்த்த பிறகு முக்கிய விக்கெட்டான ஆசாத் ஷபிக்கையும் வீழ்த்த அசார் அலி 6-வது விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் 101/6 என்று ஆனது. யூனிஸ்கான், ஆசாத் ஷபிக் இருவரும் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து லயனிடம் வீழ்ந்தனர். மிஸ்பா உல் ஹக் அதிர்ச்சி ஸ்வீப் ஷாட்டில் மேடிசனிடம் கேட்ச் கொடுத்து லயனிடம் அவுட் ஆனார்.

தொடக்கம் முதலே பாகிஸ்தான் பந்து வீச்சும், பீல்டிங்கும் தோல்வி பயத்தில் இருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது, ஆனால் தோல்வி பயத்தை ஏற்படுத்தியது ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் பேட்டிங். லாங் ஆஃபில் ஸ்டார்க்கிற்கு சொஹைல் கான் கேட்சை விட்டார். மிஸ்பா தடுப்பு உத்தியில் வீரர்களை தள்ளி நிறுத்தினாலும் ஸ்டார்க், ஸ்மித் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று பாக். வீசிய 28 ஓவர்களில் 159 ரன்கள் விளாசப்பட்டது. யாசிர் ஷா சிமெண்ட் பிட்சில் சரியாகச் சிக்கினார், இவர் 41 ஓவர்களில் 207 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஸ்மித் 624/8-ல் டிக்ளேர் செய்ய பாகிஸ்தான் களமிறங்கியது.

சமி அஸ்லம், ஹேசில்வுட் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். பாபர் ஆஸம், ஸ்டார்க் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். அதன் பிறகுதான் லயன் ஓவரில் யூனிஸ் கான், மிஸ்பா இருவரும் ஆட்டமிழந்தனர். பின்கள வீரர்களை ஒர்க் அவுட் செய்து மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார். சர்பராஸ் அகமதுவுக்கு 4 பந்துகளை வெளியில் வீசி ஒரு யார்க்கரையும் வீசி குழப்பி கடைசியில் ஒரு அதிவேக இன்ஸ்விங்கரை வீச பவுல்டு ஆனார். மொகமது ஆமிரும் ஜேக்சன் பேர்டின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். வஹாப் ரியாஸும் ஸ்டார்க் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆக, கடைசியாக யாசிர் ஷா, ஸ்டார்க்கின் வேகமாக வந்த பந்தை திருப்பி விட நினைத்து கொடியேற்ற பேர்ட் கேட்ச் பிடித்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி கண்டது. தொடரை வென்ற ஆஸ்திரேலியா மைதானத்தில் கொண்டாடியது.

http://tamil.thehindu.com/sports/141-ஓவர்களை-மழையால்-இழந்த-மெல்போர்ன்-டெஸ்ட்டில்-பாக்-இன்னிங்ஸ்-தோல்வி-தொடரை-வென்றது-ஆஸ்திரேலியா/article9451031.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆஸியை தொடரும் பாக்ஸிங் டே ராசி

 

256955_00523.jpg

ஒரு கட்டத்தில் ட்ரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட பாக்ஸிங் டே டெஸ்ட் இறுதி நாளில் ஸ்டார்க் வேகத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பாக்ஸிங் டே டெஸ்ட்டை தனதாக்கியது ஆஸி. இதுவரை நடந்த 41 பாக்ஸிங் டே டெஸ்ட்களில் 24 பாக்ஸிங் டே டெஸ்ட்களை வென்றுள்ளது ஆஸி. ஸ்டீவ் ஸ்மித் பாக்ஸிங் டே டெஸ்ட்களில் மொத்தமாக 575 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/76417-aussie-sets-record-win-in-boxing-day-test.art

Link to comment
Share on other sites

மெல்போர்ன் டெஸ்ட்: மிஸ்பாவிற்கு 40 சதவீதம் அபராதம்

 

மெல்போர்ன் டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கிற்கு 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
 
மெல்போர்ன் டெஸ்ட்: மிஸ்பாவிற்கு 40 சதவீதம் அபராதம்
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மேல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 624 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 165 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.

ஐ.சி.சி. விதிமுறையின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களை குறைவாக வீசியிருந்தார்கள். இதனால் அந்த அணியின் கேப்டன் மிஸ்பாவிற்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. விதிப்படி குறைவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/30201820/1059150/Pakistan-captain-Misbah-ul-Haq-fined-for-slow-overs.vpf

Link to comment
Share on other sites

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம்; வார்னர் சாதனை: ரன்குவிப்பில் ஆஸ்திரேலியா

 
முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன்னதாக சாதனை சதம் அடித்த டேவிட் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ்.
முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன்னதாக சாதனை சதம் அடித்த டேவிட் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார் டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. டேவிட் வார்னர் உணவு இடைவேளைக்கு முன் 78 பந்துகளில் சதம் கண்டு சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 87 ஆண்டுகளுக்கு முன் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் கண்டார். 1930-ம் ஆண்டு தனது அதிகபட்ச ஸ்கோரான 334 ரன்களை எட்டிய இன்னிங்ஸில் பிராட்மேன் உணவு இடைவேளைக்கு முன் 105 ரன்கள் விளாசினார். 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ட்ரம்பர் என்பவர் உணவு இடைவேளைக்கு முன் 103 ரன்களையும் 1926-ம் ஆண்டு லீட்ஸில் ஆஸி.வீரர் மெக்கார்ட்னி உணவு இடைவேளைக்கு முன் 112 ரன்களையும் எடுத்ததையடுத்து அந்த சிறப்புக் குழுவில் வார்னர் இணைந்துள்ளார்.

கடைசியாக உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த வீரர் என்றால் பாகிஸ்தானின் தொடக்க வீரர் மாஜித் கானைக் குறிப்பிடலாம், இவர் நியூஸிலாந்துக்கு எதிராக 1976-77-ல் இதேசாதனையை நிகழ்த்தினார். ஒருமுறை சேவாக் உணவு இடைவேளைக்கு முன் முதல்நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகளில் சதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார், சேவாக் 99 ரன்களை எடுத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

வார்னர் இதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக 69 பந்துகளில் சதமடித்ததுதான் அவரது விரைவு டெஸ்ட் சதமாகும், பிறகு மே.இ.தீவுகளுக்கு எதிராக வார்னர் 82 பந்துகளில் இதே சிட்னியில் சதம் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்று வார்னர் அடித்தது அவரது 18-வது டெஸ்ட் சதமாகும்.

‘பிளே’ என்று நடுவர் கூறியவுடன் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார் வார்னர், 6 ஓவர்கள் முடிவில் 8 பவுண்டரிகளை வெளுத்துக் கட்டியிருந்தார் வார்னர். 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு தனது 78-வது பந்தை பாயிண்டில் திருப்பி விட்டு சாதனை சதம் கண்டார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியாவின் 126/0-வில் வார்னர் 100 ரன்கள் என்று இருந்தார். உணவு இடைவேளை முடிந்து 95பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்த வார்னரின் எட்ஜை அயராத ஆற்றல் நிரம்பிய வஹாப் ரியாஸ் பிடித்தார், சர்பராசிடம் கேட்ச் ஆனது. புல்ஷாட்கள், பேக்ஃபுட் பஞ்ச் என்று அவர் ஆதிக்கம் செலுத்தியது பாகிஸ்தான் பவுலர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் லெந்தை அறிவுறுத்துகிறது. தற்போது வார்னர் 60 டெஸ்ட் போட்டிகளில் 49 ரன்கள் சராசரியுடன் 5,206 ரன்களை எடுத்துள்ளார்.

மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா 167 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார், இவருடன் ஹேண்ட்ஸ்கோம்ப் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 365/3 என்று உள்ளது. ரென்ஷா 91 ரன்களில் இருந்த போது ஆமீரின் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். யாசிர் ஷா ஒரு முறை எல்.பி. தீர்ப்பை பெற ரென்ஷா 137 ரன்களில் இருந்த போது ரிவியூ செய்தார், பந்து மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டது தெரியவந்தது.

உஸ்மான் கவாஜா (13) தனக்கு விட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் வஹாப் ரியாஸ் பந்தில் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் ஸ்மித் 24 ரன்களில் யாசிர் ஷா பந்தை கட் செய்ய முயன்று சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக இதுவரை 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/முதல்-நாள்-உணவு-இடைவேளைக்கு-முன்-சதம்-வார்னர்-சாதனை-ரன்குவிப்பில்-ஆஸ்திரேலியா/article9456932.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.