Jump to content

ஜெயலலிதா


Recommended Posts

அரசியல் அரங்கில் ஜெயலலிதா | சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

 
 
JayaPaper1_3099676f.jpg
 
 
 

30_3099673a.jpg

காவிரி பிரச்சினைக்காக 1993-ம் ஆண்டு சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது

31_3099672a.jpg

தொண்டர்களைப் பார்த்து வெற்றிச் சின்னத்தை காட்டுகிறார்

32_3099671a.jpg

அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா

33_3099670a.jpg

தனக்கு பரிசளிக்கப்பட்ட வீர வாளுடன் ஜெயலலிதா

34_3099669a.jpg

டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபோது பட்டமளிப்பு விழாவில் ஜெயலலிதா

35_3099668a.jpg

அரசுப் பணியில் தீவிரமாக

36_3099667a.jpg

கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்

37_3099666a.jpg

போயர் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார்

http://tamil.thehindu.com/tamilnadu/அரசியல்-அரங்கில்-ஜெயலலிதா-சிறப்பு-புகைப்படத்-தொகுப்பு/article9412346.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

இனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா?

ஜெயலலிதா

ற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும்? முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்...! சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம்.

பொதுக்குழு கூட்டங்கள்:

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள். தன் தலைமையில் நடக்கும் கூட்டத்திலேயே தான் மனதளவில் தனியாள்தான் என்பதை உருக்கமாக வெளிப்படுத்திய தலைவர் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கும். அவருக்கு யாருமில்லை என்ற எண்ணம்தான் 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என கோடிக்கணக்கான பேரை அவர் பின்னால் திரள வைத்தது. இனி யார் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த?

சினிமா:

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்கள் சினிமா ராஜ்ஜியத்தை கட்டியாண்ட காலம். வெண்ணிற ஆடை படத்தில் துறுதுறு பெண்ணாய் அறிமுகமாகிறார் ஜெ. அப்போது யாருக்கும் தெரியாது அடுத்த ஐம்பது ஆண்டுகள் சினிமாவுலகை மட்டுமல்ல, மொத்தத் தமிழகத்தையும் ஆளப் போகும் ராணி அவர் என. சினிமாவில் அவரின் இடம் சும்மா கிடைத்துவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாய் பத்து படங்கள். 1968-ல் மட்டும் 21 படங்கள். இது பட்டி தொட்டி எல்லாம் கல்லா கட்டிய ஹீரோக்களுக்கே கஷ்டம்தான். வேகம், அதிவேகம் எல்லாம் தாண்டி மின்னல் வேக உழைப்பு. பெரும்பாலும் சில்வர் ஜுப்ளி படங்கள். தொடவே முடியாத ரெக்கார்ட் இது. ஜெ. தமிழ் சினிமாவின் சகாப்தம்.

n1_15341.jpg

சட்டமன்றம்:

எதிர்க்கட்சி ஆட்களால் சூழப்பட்ட அரங்கில் தனியொரு ஆளாக உங்களால் தைரியமாக செயலாற்ற முடியுமா? ஜெ.வால் முடியும். அந்த கெத்துதான் அவரின் சொத்து. 'நீங்கள் கஷ்டப்பட்டு காவலர்களை அனுப்பி, அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்குப் பின் கூச்சலிடும் எதிர்க்கட்சியினரை வெளியே தூக்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களை வெளியே அனுப்ப எனக்கு 'கச்சத்தீவு, மதுவிலக்கு' என இரு வார்த்தைகள் போதும். உங்கள் வேலையை நான் சிம்பிளாக்குகிறேன்' என நகையாடுவதாகட்டும், 'நான் இருக்கும் வரை இந்த இயக்கம் தமிழர் வாழ்வு செழிக்க பாடுபடும்' என கம்பீரக் குரலில் உரக்கச் சொன்னதாகட்டும் ஜெ. ஜெ.தான். அவரில்லாத சட்டமன்றம் எதிரி இல்லாத போர்க்களம் போல. இதை பரம வைரியான தி.மு.கவே ஒப்புக்கொள்ளும்.

தேர்தல் பிரசாரம்:

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தென் தமிழகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது அ.தி.மு.க. 'இந்தக் கூட்டமே வெற்றிக்கூட்டமாகிவிடுமோ' என ஆளுங்கட்சி தரப்பில் அத்தனை நெருக்கடிகள். அத்தனையையும் தாண்டி திரண்டார்கள் லட்சக்கணக்கான மக்கள். மேடையில் தோன்றிய ஜெ. கக்கிய அனல் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். அது இந்தத் தலைமுறை பார்த்திராத எழுச்சி. 2014. மக்களவை தேர்தல் சமயம். மொத்த இந்தியாவும் மோடி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தன. ஒற்றையாளாய் களத்தில் நின்று 'மோடியா இந்த லேடியா என பார்த்துவிடுவோம்' என வாளைச் சுழற்றினார். 'செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?' - காற்றில் இன்னமும் இருக்கிறது இந்த கர்ஜனை. விழுந்தன ஓட்டுகள். பின் நிகழ்ந்தது வரலாறு. இத்தனை ஆவேசமாக களமாடும் தலைவரை இனி தமிழகக் களம் காணுமா? 

துணிச்சல் முடிவுகள்:

அரசியலுக்கென சில வரைமுறைகள் உண்டு. தலைவர்களுக்கே உண்டான சில தயக்கங்கள் உண்டு. ஆனால் ஜெ. விஷயத்தில் இவை செல்லுபடியாகாது. ஒற்றை முடிவை எடுத்து மொத்த தமிழகத்தையும் அதிரடிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் போதும். இதற்கு சாட்சியாய் வரலாறு முழுக்க விரவியிருக்கின்றன சம்பவங்கள். உண்மைதான். அவற்றில் சில சம்பவங்களின் மேல் கடுமையான விமர்சனங்கள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதற்கும் துணிந்தவர் என்ற அடையாளத்தை கடைசிவரை ஜெ. விட்டுத்தரவே இல்லை. மீடியாக்கள் சித்தரிக்கும் 'அதிரடி' என்ற வார்த்தைக்கு ஆல்டைம் சொந்தக்காரர் இவர். இப்படியான 'அதிரடிகள்' இனி தமிழக மக்கள் காணக் கிடைப்பது சந்தேகமே.

n4_15536.jpg

தனியே தன்னந்தனியே:

இந்திய அளவில் செல்வாக்கு இருக்கும் ஒரு தலைவரை சுற்றி கண்ணுக்குத் தெரிந்த அதிகார வட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஆனால் ஜெ. எப்போதுமே தனித்துதான் இருந்தார் 'மனதளவில்'. டெல்லியோ, தமிழகமோ அவர் எடுப்பதுதான் முடிவு. 'வாழ்க்கையில் எது நடந்தாலும் நானே தனியாக அதை சந்தித்து, தனியாகவே முடிவு செய்து வந்திருக்கிறேன்' என தன் கட்சிப் பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. ஆட்சி, அதிகாரம், வசதி என அத்தனை இருந்தும் மனதளவில் தனிமைப்பட்ட தலைவரை இனி வரும் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும்! 

சவால்:

சவால்கள் ஜெ.விற்கு மிகவும் பிடிக்கும். அவர் இறுதியாக வீற்றிருந்த இதே ராஜாஜி ஹாலில்தான் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவமானப்படுத்தப்பட்டார். உள்ளே நுழையக்கூட அனுமதி மறுத்தார்கள். அவமானம் அவருக்கு வைராக்கியத்தைக் கற்றுக்கொடுத்தது. வைராக்கியம் அவரை சவால்களை சந்திக்கக் கற்றுக்கொடுத்தது. பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. 'ஆடம்பரச் செலவுகள் செய்வார்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது நகைகளைத் துறந்தவர்தான். அதன்பின் இறுதிக்காலத்தில்தான் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப சின்னதாக நகை அணியத் தொடங்கினார். இப்படி எக்கச்சக்க வைராக்கிய நிகழ்வுகள் அவர் சுயசரிதை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. 

n3_15081.jpg

இந்திய அரசியல் அரங்கு:

1991-ல் தேசிய அளவில் கிடைக்கப் பெற்ற முக்கியத்துவம். அவரின் இறுதிக்காலம் வரை இம்மிக் குறையவில்லை. தேசியக் கட்சிகள் தேடி வந்து கூட்டணி வைப்பதாகட்டும், மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என பிற மாநிலக் கட்சிகள் கைகோர்ப்பதாகட்டும், ஜெ.வின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2014 தேர்தலின்போது மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார் ஜெ. தமிழகம் போன்றே பிற மாநிலங்களிலும் முடிவுகள் வந்திருந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இந்திய அரசியலில் இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. 

நேர்காணல்கள்:

ஜெ. அரசியலுக்கு வந்தபின் நிறைய பேட்டிகள் அளிப்பதில்லை. அதுவே அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியையும் ஸ்பெஷலாக்கியது. 'எனக்கு நாரி கான்ட்ராக்டர் மேல் க்ரஷ் இருந்தது' என கன்னம் சிவக்கக் கூறியது, ஆ ஜா ஷனம் பாடலை மெல்லிய குரலில் பாடியது என சிமி கேர்வாலுடனான நேர்காணல் அவரின் மென்மையான பக்கத்தைக் காட்டியது. அதே சமயம், 'எனக்கு உங்களோடு பேசியதில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை' என கரன் தாப்பரிடம் சிடுசிடுத்துவிட்டு மைக்கை வீசிவிட்டுப் போன நேர்காணல் அவரின் கோப முகத்தை காட்டியது. ஒளிவு மறைவில்லாமல் தோன்றியவற்றை பேசும் அவரின் நேர்காணல்களை இனி எக்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை.

n5_15254.jpg

சர்வதேச தொடர்புகள்:

ஜெ.வின் மொழி வளமை அசாத்தியமானது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் சிக்ஸர் அடிக்கும் தில் லேடி. எதிர்கருத்துக்களை வலுவாக வைப்பார் ஜெ. ஆனால், அதையும் குறுக்கிடாமல் கேட்பார்கள் எதிராளி. இந்த ஆளுமைதான் சர்வதேச தலைவர்களையும் அவரைத் தேடி வர வைத்தது. உலகத்தின் பெரியண்ணனான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியையே இந்தியாவின் தென்கோடி தமிழகத்தில் கால் வைக்கச் செய்தது அவரின் ஆளுமைதான்!

இத்தனையையும் தாண்டி அவர் வெற்றிடத்தை உணர்வதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஏனென்றால்... அவர் ஜெயலலிதா! இவரைப் போல முன்னரும் ஒருவர் இல்லை... இனியும் ஒருவர் இருக்கப் போவது இல்லை!    

ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவரின் முதல் வசனம், 'கடவுளே நீ எங்க இருக்க? எப்படி இருக்க? ஏன் இருக்க?' என்பதுதான். 51 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றிருக்கிறார் ஜெ. மிஸ் யூ மேடம்!

http://www.vikatan.com/news/tamilnadu/74310-some-instances-where-we-will-miss-jayalalithaa.art

Link to comment
Share on other sites

 

ஜெயலலிதா: நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய சகாப்தம்

1965ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் திரையுலக நட்சத்திரமாக பிரகாசிக்க தொடங்கியவர் பின்பு தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி செய்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர், ஜெயலலிதா.

Link to comment
Share on other sites

விடைபெற்ற சகாப்தம்!

 

 
 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ
 
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் - வழிபடப்பட்டவர் என்றும்கூடச் சொல்லலாம் - எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை 'அம்மா' என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். 'ஒரு மரணம் யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது' என்ற வார்த்தைகள் ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் முழுக்கப் பொருந்தக் கூடியது. 1948, பிப்ரவரி 24 அன்று மைசூர், மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா, தன்னுடைய 68-வது வயதில் 2016 டிசம்பர் 5 அன்று விடைபெற்றுக்கொண்டார்.

எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரையும் வசீகரிக்கக் கூடிய வாழ்க்கை ஜெயலலிதாவினுடையது. கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு இணையான ஏற்ற இறக்கங்களையும் துயரங்களையும் சவால்களையும் ஆச்சரியங்களையும் விசித்திரங்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் சுவாரசியங்களையும் கொண்டது. பிரத்யேகமானது. இன்றைய கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை, அவருடைய சிறுவயதிலேயே தமிழகத்தோடு பிணைந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதா, குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலையிலிருந்த ஒரு தாயால் வளர்க்கப்பட்டவர். படிப்பிலும் பன்மொழித் திறனிலும் சிறந்து விளங்கியவர், விருப்பமே இல்லாமல்தான் திரைத் துறையில் காலடி எடுத்துவைத்தார். ஆனால், அவர் அளவுக்கு வெற்றிகளைக் குவித்த நடிகை இன்றளவும் தென்னிந்திய சினிமாவில் கிடையாது. அடுத்து, அரசியலிலும் அப்படியே நடந்தது.

திரைத் துறையில் அவருக்குப் பக்க பலமாக இருந்த எம்ஜிஆரின் அதிமுகவில் 1982-ல் உறுப்பினரானார் ஜெயலலிதா. அதே ஆண்டு, அக்கட்சியின் மாநாட்டில் 'பெண்ணின் பெருமை'என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வரவேற்பு அடுத்த ஆண்டே அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் அவரை அமர்த்தியது. அடுத்த ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினரானார். 1984 முதல் 1989 வரை அப்பதவியில் இருந்தவரை இடையில் நேரிட்ட எம்ஜிஆரின் மரணம் அடுத்த கட்டம் நோக்கித் தள்ளியது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமசந்திரன் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்த கட்சி, அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. தொடர் விளைவாக, ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள அதிமுக ஜெயலலிதாவின் கைக்குள் முழுமையாக வந்தது. ஜெயலலிதாவையும் அரசியலிலிருந்து விலக்கும் முயற்சிகள் அரசியல் களத்தில் தொடங்கியபோதுதான் விஸ்வரூபம் எடுத்தார் அவர். 1989 மார்ச் 25 அன்று தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவத்துக்குப் பின் பெருத்த அவமானத்தோடு "இனி இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்" என்று சபதமிட்டுப் புறப்பட்ட ஜெயலலிதா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சபதத்தை நிறைவேற்றினார். தன்னுடைய 43-வது வயதில் 1991-ல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரே தமிழகத்தின் இளவயது முதல்வர்.

அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் வென்றார், தோற்றார், மீண்டும் வென்றார், மீண்டும் தோற்றார்; ஊழல் வழக்குகளை எதிர்கொண்டார்; சிறை சென்றார்; பதவி விலகினார்; வழக்கில் வென்று மீண்டும் பதவியில் அமர்ந்தார்; தொடர்ந்து வழக்குகளை எதிர்கொண்டார். ஒருவிஷயம், தமிழகத்தின் அரசியலிலிருந்து விலக்க முடியாத பெரும் மக்கள் சக்தியாக அவர் விளங்கினார். 2014 மக்களவைத் தேர்தலில் பெருமளவில் தனித்து நின்று, மாநிலத்தின் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களவையில் அதிமுகவை அமர்த்தியது, அவருடைய வெற்றிகளிலேயே மகத்துவமானது. குடும்ப அரசியலுக்கு எதிரானவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய குடும்ப உறவுகளிடமிருந்து முற்றிலுமாக விலகியே இருந்தார். ஆனால், 'நிழல் அதிகார மையங்கள்' அவருடைய ஆட்சிக் காலம் முழுவதும் நீடித்தன. அவையே கட்சித் தொண்டர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவரை விலக்கியும் வைத்தன. தன் வாழ்நாளில் அவர் எதிர்கொண்ட மிகப் பெரிய விமர்சனம் இது. ஆராதனை வழிபாட்டுக் கலாச்சாரத்தில், ஒரு நபர் ராணுவம் எனச் செயல்பட்ட ஜெயலலிதாவுக்கு அந்தப் பலமே பலவீனமாகவும் ஆனது. அதிமுகவில் செயலூக்கம் நிறைந்த தலைவர்கள் பலர் இருந்தாலும், அடுத்த கட்டத்தில் அவருக்கு இணையான ஒருவரை அவர் உருவாக்கிடவோ, மக்களிடத்தில் வழிகாட்டிச் செல்லவோ இல்லை. ஜெயலலிதா நீங்கலாக எவர் ஒருவரையும் தலைமை இடத்தில் பொருத்திப் பார்த்துப் பழக்கமில்லாத அதிமுகவின் அடுத்த கட்டப் பயணம் எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய சவால்கள் இனிதான் தொடங்குகின்றன.

பிறப்பினால் ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு எதிர் இயக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில் ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில் பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். அந்த வகையில், இந்தியாவின் பன்மைத்துவத்துக்குத் தொடர்ந்து பங்களித்துவந்தவர். வெகுஜனத் திட்டங்கள் என்ற பெயரில் மேட்டிமைவாதிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய சமூகநல அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதல் நகர்ப்புறச் சலுகை விலை அரசு உணவகங்கள், மருந்தகங்கள், மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஏழைகளுக்கான கால்நடைகள் திட்டம் வரை பல திட்டங்கள் புரட்சிகரமானவை. இன்றைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் பிரதியெடுக்கப்படுவது அவருடைய அரசியலின் முக்கியத்துவத்தைச் சொல்லக் கூடியது.

தமிழகத்துக்கு இது பேரிழப்பு. சவாலான இந்தக் காலகட்டத்தையும் நம் மாநிலம் கடந்து வரத்தான் வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/editorial/விடைபெற்ற-சகாப்தம்/article9412066.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்!

 
 
MGR_jayalalith_3100194f.jpg
 
 
 

ஜெயலலிதா என்ற அரசியல் ஆளுமையைத் தவிர்த்துவிட்டுத் தமிழக அரசியல் வரலாற்றுப் பக்கங்களை எழுதிவிட முடியாது. அத்தகைய ஆளுமையை உருவாக்கியதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியமானது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்ஜிஆரின் கதை நாயகியாக நடித்தார் ஜெயலலிதா. அன்று தொடங்கி 28 படங்களுக்கு எம்ஜிஆரின் இணையாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா. பல நாயகிகளுடன் நடித்திருந்தாலும், ஜெயலலிதா மீது எம்ஜிஆருக்குத் தனிப் பாசம் உண்டு. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் அக்கறை செலுத்தினார். கவனம் பாய்ச்சினார். அதை ஜெயலலிதா அனுமதிக்கவே செய்தார்.

ஜெயலலிதாவுக்கே உரித்தான வசீகரத் தோற்றம், சுறுசுறுப்பு, நடிப்புத்திறன், நாட்டியம் ஆகியவற்றோடு எம்ஜிஆரின் கதை நாயகி என்பதும் சேர்ந்துகொள்ள, மக்கள் மனங்களில் வெகுவேகமாக ஊடுருவத் தொடங்கினார் ஜெயலலிதா. உண்மையில், எம்ஜிஆர் மட்டு மின்றி, அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இணையாக நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன், உண்மையில் ‘பில்லா’படத்தில் ரஜினியின் நாயகியாக நடிக்க வேண்டியவர் ஜெயலலிதா. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதை அவரே ஒரு கடித்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரைத் துறையிலிருந்து ஒதுங்கி, எழுத்து, நாட்டியம், நாடகம் என்றிருந்த ஜெயலலிதாவை உலகத் தமிழ் மாநாடு எம்ஜிஆரின் பக்கம் அழைத்துவந்தது. ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகத்தை நடத்தினார். அப்போது எம்ஜிஆரின் கனவுத் திட்டமான சத்துணவுத் திட்டம் அறிமுகமாகியிருந்த புதிது. அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒரு வசீகரமிக்க முகத்தைத் தேடினார் எம்ஜிஆர். அதற்கு ஜெயலலிதா கச்சிதமாகப் பொருந்தினார். அவரை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கினார் எம்ஜிஆர். அதோடு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் எதிரி

திருச்செந்தூர் இடைத் தேர்தலில் ஜெயல லிதா செலுத்திய உழைப்பு எம்ஜிஆரை உற்சாகப்படுத்தியது. அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முக்கியத் துவம் வாய்ந்த பொறுப்பைக் கொடுத்தார். அப்போது ஜெயலலிதாவுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரோடு சேர்ந்து பலரும். அது எம்ஜிஆருக்கும் நன்றாகத் தெரியும்.

கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைப் போயும்போயும் நடிகைக்குக் கொடுப்பதா என்ற கேலி எழுந்தபோது, “அதிமுகவின் கொள்கை அண்ணாயிஸம். அதை உருவாக்கியவர் ஜெயலலிதா அல்ல. அந்தக் கொள்கையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முகம்தான் ஜெயலலிதா” என்று விளக்கம் வந்தது. தந்தவர் எம்ஜிஆர் அல்ல, ஜெயலலிதாவின் பரம வைரி ஆர்.எம்.வீரப்பன். உபயம்: எம்ஜிஆர்.

கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி யோடு அதிமுகவின் மாநிலங்களவை உறுப் பினராகவும் ஜெயலலிதாவை உயர்த்தினார் எம்ஜிஆர். மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்த இருக்கையை அவர் விரும்பியபோது, அதைச் சாத்தியப்படுத்தியது எம்ஜிஆரின் செல்வாக்கு. ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிப் புலமையை வெளிப்படுத்தினார். அது இந்திரா காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் அறிமுகத்துக்கும் நெருக்கத்துக்கும் வழியமைத்துக் கொடுத்தது.

அதிருப்தியை உருவாக்கி நடவடிக்கை

ஒரு கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா எடுத்த சில நடவடிக்கைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. எதிரிகள் அதிகமானார்கள். அது எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்றபோது கடும் பாதிப்பைக் கொடுத்தது. பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை வந்தது. ஜெயலலிதாவுக்குப் பதில் பாக்யராஜ் பிரச்சாரத்தில் இறங்கினார்.

எதிர்ப்புகள் சூழ்ந்தபோதும் தளர்ந்துபோகாமல், எம்ஜிஆர் போட்டியிட்ட ஆண்டிபட்டியில் தடையை மீறிப் பிரச்சாரம் செய்யத் தயாரானார். அவரது பேச்சுக்கு ஆதரவு திரண்டது. ‘ஜெயலலிதா மீண்டும் அதிரடிப் பிரவேசம்’ என்று எழுதியது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யாத அந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்கு ஜெயலலிதாவின் பிரச்சாரம் முக்கியக் காரணம் என்றன பத்திரிகைகள்.

அநேகமாக, எம்ஜிஆர் மீண்டும் பதவி யேற்றதும் அமைச்சராவார் ஜெயயலலிதா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், கொள்கைப் பரப்புச் செயலாளராகவே அமர்த்தப்பட்டார். ஆனால், கூடுதல் அங்கீகாரத்துடன். அதிமுகவின் முக்கியக் கூட்டங்களை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஏற்பாடு செய்வார். ‘அண்ணா’ நாளிதழில் வெளியான அந்த அறிவிப்பு எம்ஜிஆரின் நம்பிக்கையை ஜெயலலிதா தக்கவைத்திருக்கிறார் என்பதற் கான சாட்சியம். இடையிடையே சின்னதும் பெரியதுமாக உரசல்களும் விரிசல்களும் இருந்தாலும், ஜெயலலிதாவை ஒருபோதும் ஒட்டுமொத்தமாக உதாசீனம் செய்ய எம்ஜிஆர் விரும்பியதில்லை.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் நடந்த தேர்தலில் அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என்ற இரு பிரிவுகள் களம் கண்டபோது, 27 இடங்களை வென்றது ஜெயலலிதா பிரிவு அதிமுக. அதன் மூலம், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்பது உறுதியானது. அது பிரிந்துகிடந்த அதிமுகவை இணைத்துவைத்தது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் திரும்பக் கிடைத்தது. கூடவே, கட்சியின் தலைமை அலுவலகமும்.

எம்ஜிஆர், இரட்டை இலை என்ற இரண்டடுக்கு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஜெயலலிதா, ஒருகட்டத்தில் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தாண்டிச் சென்றார். ஓரிரு செய்திகளைச் சொன்னால் உண்மை புரியும்.

எம்ஜிஆரின் அரசியல் வாரிசு

எம்ஜிஆர் ஆட்சியில் ஏறியது முதல் மறைந்தது வரை சட்டமன்றத் தேர்தலில் தோல்வி என்ற ஒன்றையே பார்க்காதவர். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 1996 படுமோசமான தோல்வியையும் சந்தித்துள்ளது. ஐந்தே ஆண்டுகளில் பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றுள்ளது. இரண்டு மக்களவைத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல் என்று தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், அதற்கடுத்த தேர்தலில் அசாத்திய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

எம்ஜிஆர் கட்சியையும் ஆட்சியையும் நிர்வாகம் செய்தது மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஜெயலலிதாவின் முழுமை யான ஆளுகையில் கால் நூற்றாண்டுகளைக் கடந்திருக்கிறது அதிமுக. அனைத்துத் தேர்தல்களையும் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடனேயே எதிர்கொண்டவர் எம்ஜிஆர். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலைத் தனித்தே சந்தித்து பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் மூன்று முறை முதல்வராகி யிருக்கிறார். ஆனால், வழக்குகள் காரணமாக நடந்த இரண்டு பதவியேற்புகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மொத்தம் நான்கு முறை முதல்வராகியிருக்கிறார் ஜெயலலிதா. அந்த வகையில், எம்ஜிஆர் உருவாக்கிய ஆளுமையான ஜெயலலிதா, அவரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். அத்தனைக்கும் அடித்தளம் எம்ஜிஆர் என்பதை ஜெயலலிதா எப்போதுமே மறுத்ததில்லை!

http://tamil.thehindu.com/opinion/columns/எம்ஜிஆரும்-ஜெயலலிதாவும்/article9414690.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

சின்னத கொம்பே' முதல் 'நீங்க நல்லா இருக்கணும்' வரை... ஜெயலலிதாவின் படங்கள்! #JayaMovies

 

ஜெயலலிதா

கல்லூரியில் சேரும் முதல் நாளில் 'நடிப்பா.. படிப்பா என்ற  கேள்வி ஜெயலலிதா முன் இருந்தது. படிப்பின் மீது ஜெயலலிதாவுக்குப் பேரார்வம் இருந்தது. அதேசமயத்தில், நடனம் மூலமாக கலை மீதும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. தந்தையின் இறப்புக்குப் பிறகு தாய் வேதவல்லி சென்னைக்கு வந்து, சந்தியா என்ற பெயர் மாற்றத்துடன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் வளர்கிறார். அந்த எண்ணம் எப்போதும் தனக்கு இருந்ததில்லை என்பதை அவரே பின்னாளில் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். ஆனாலும் நடிக்க சம்மதம் சொன்னார். 1964-ல் முதல் படம் 'சின்னத கொம்பே' (கன்னடம்) படத்தில் நடிக்கிறார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. 1964 - 1966-க்குள் 23 திரைப்படங்கள் நடித்து முடித்திருந்தார் ஜெயலலிதா. இந்த இடைப்பட்ட காலத்தில்தான், ஜெயலலிதா நடித்த 'வெண்ணிற ஆடை'யின் (முதல் தமிழ்ப் படம்) இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதாவை நடிக்க வைக்கப் பரிந்துரை செய்கிறார். படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆரும் தனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்கிறார். தாய் சந்தியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைக்கூடப் பார்க்க விரும்பாத, வீட்டில் அதைப் பற்றி தன் தாயிடம் பேச ஆர்வம் காட்டாத ஜெயலலிதா, குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியர் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார். 

‘கோமளவல்லி - ஜெயலலிதா ஆன நிகழ்வு’  பற்றி ஜெயலலிதாவே எழுதியது இது...

"பள்ளிக்கூடத்தில் நான் ஆங்கிலத்திலும் சரித்திரப் பாடத்திலும் புலி. புலி என்றால் சாதாரண புலி அல்ல. பதினாறு அடி வேங்கைதான். எங்கள் பள்ளி, வெறுமனே பாடம் சொல்லித் தருவதில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. நடனங்கள், நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் தனிப் பெயர் உண்டு. நாட்டிய நிகழ்ச்சியில் என் ஆட்டமும் இருக்கும். ஜெயா, இன்றைக்கு உன் நாட்டியம் பிரமாதம் என்ற நற்சான்றிதழோடுதான் வீட்டுக்குத் திரும்புவேன். என் தாயார் என்னைக் கட்டி அணைத்துக் கொள்வார், தவறாது கன்னத்தில் ஒரு முத்தமும் விழுந்துவிடும். சர்ச் பார்க்கில் நான் படித்து வந்தபோது, என் தாயார் பல படங்களில் நடித்து வந்தார். காலையில் நான் எழுந்திருப்பதற்கு முன்பே அவர் போய் விடுவார். சில நாட்களில் நான் படுத்துத் தூங்கிய பின்பே படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வருவார். அவர் சினிமாவில் நடிப்பதற்காக ஷூட்டிங் செல்கிறார் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தும், ‘அம்மா இன்று என்ன படப்பிடிப்பு.. என்ன காட்சி.. நானும் ஒரு நாள் உன்கூட ஷூட்டிங் பார்க்க வரட்டுமா’ என்றெல்லாம் ஒருநாள் கூடக் கேட்டதில்லை. எனக்கென்னவோ சினிமா மீது எந்தப் பிடிப்பும் ஏற்படவேயில்லை. அந்த நாட்களில் பள்ளியும் படிப்பும்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. அல்லது வீட்டில் இருக்கும்போது, புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவோ, எழுதவோ ஆரம்பித்துவிடுவது வழக்கம். படிப்பில் என் ஆர்வம் பற்றி முன் சொன்னதுபோல, எழுத்திலும் அதீத ஆர்வம் இருந்தது. ஒரு சமயம் என் ஆங்கிலக் கட்டுரை ஒன்று பம்பாயிலிருந்து வெளியாகும் 'இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிறுவர், சிறுமியர் பகுதியில் பிரசுரமாகி பாராட்டுக் கடிதமும் வந்தது. அந்தக் கடிதம் படித்ததும் என் மனதில் எதிர்காலம் பற்றிய நினைப்பு. அன்றைய தினம் பூராவும் பெர்ல் பெக் மாதிரி ஒரு பெரிய கதாசிரியராகவே என்னை நினைத்துக் கொண்டேன். ஆனால், இப்போதும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நான் மட்டும் சினிமாவில் நடிக்க வராமலிருந்திருந்தால், இலக்கியத்தில் ஒரு டாக்டர் பட்டம் பெறவே முயற்சித்திருப்பேன். இலக்கியத்தில் எனக்கு அலாதியான ஈடுபாடு உண்டு. ஆனால் இப்போது படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தும், நேரமில்லாமல் தவிக்கிறேன். எப்போதும் பட ஷூட்டிங் இருப்பதால், எனக்குப் பதிலாக என் தாயார் புத்தகங்களைப் படித்து வருகிறார். பள்ளியில் நான் படிக்கும்போதே பரதநாட்டியமும், ஓரியன்டல் நடனங்களையும் பயின்று வந்தேன். என்னுடைய பரத நாட்டிய ஆசிரியை கே.ஜே.சரசா, ஓரியன்டல் நடன மாஸ்டர் திரு.சோப்ரா. என் பரத நாட்டிய அரங்கேற்றம் மயிலையில் நடைபெற்றது. அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்து, 'தங்கச் சிலை ஜெயலலிதா’ என்று என்னை அழைத்து ஆசி வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். 

படிப்பு, பள்ளி, நடனம், நாடகம் என்று இருந்த என் வாழ்க்கை மாறிய நாள் - என் குடும்பத்துக்கு வேண்டிய, நெருங்கிய நண்பர் ரூபத்தில் வீட்டிற்கு வந்தது. ஐரோப்பிய படக் கம்பெனி ஒன்றின் கூட்டுறவோடு, இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், டாக்குமென்டரி படம் ஒன்று எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் அவர், ஆங்கிலப் படமான அதில் ஜெயலலிதாவும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று சொல்லி தன்னுடன் அழைத்து வந்திருந்த நண்பரையும் அறிமுகப்படுத்தினார். அவர்தான் திரு.வி.வி.கிரி அவர்களின் குமாரர் திரு.சங்கர் கிரி. அவர்கள் அப்போது கேரளா கவர்னராக இருந்தார். என் தாயாருக்கோ என்னை சினிமாவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ துளிகூட கிடையாது. 'பள்ளிக்கூடம் போகிறாளே... படிப்பு கெட்டுவிடுமே' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், 'நாங்கள் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் படம் எடுத்துக் கொள்கிறோம்; படிப்புக்கு ஒன்றும் தடை ஏற்படாது' என்று உறுதி அளித்தார்கள். அந்தப் படம்தான் 'Epistle' என்ற ஆங்கில படம். போகப் போகத்தான், டாக்குமென்டரி என்ற பெயரில் ஒரு முழு நீளப் படத்தையே அவர்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற உண்மை எங்களுக்குத் தெரிய வந்து. சனி, ஞாயிறு மட்டும், ஒரு சில நாட்கள் போதும் என்ற நிபந்தனைகளுக்கு அர்த்தமே இல்லாமல் பல நாட்கள் நான் சென்று நடிக்க வேண்டியதாயிற்று. அதனால் பரீட்சை சமயத்தில்கூட இதில் போய் நடித்து விட்டு வந்தேன். தவிர, எங்கள் கைச் செலவிலேயே படப்பிடிப்புக்குச் செல்வது, அதில் அணிய வேண்டிய உடைகள், அணிகள் எல்லாவற்றையும் நானே என் சொந்தச் செலவில் வாங்கிக் கொள்ளும்படியாகிவிட்டது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். ஆனால், பாதியில் நிற்கவேண்டாமே என்று என் தாயார் என்னைச் சமாதானப்படுத்தி விட்டார்.

ஒருநாள் நடன மாஸ்டர் சோப்ராஜி எங்களிடம் வந்தார். தனக்கு மிகவும் வேண்டிய தயாரிப்பாளர் படம் எடுத்து வருவதாகவும், என் பெயரையே சிபாரிசு செய்ய நினைத்திருப்பதாகவும் சொன்னார். என் தாயார் வழக்கம்போல் தட்டிக் கழித்தார். 'நடனம்தானே. ஒரே ஒரு நடனம்' என்று சோப்ராஜி சொன்னார். அவர் எனக்கு மாஸ்டர். நான் மாணவி. அந்தப் படம்- லாரி டிரைவர். அது நீண்ட நாட்கள் கழித்து வெளிவந்தது வேறு விஷயம். என் தாயார் கன்னடப் படங்களில் நடித்து வந்தவர். அவருக்குப் பல கன்னடப் படத் தயாரிப்பாளர்களை நன்கு தெரியும். நடன உலகில் எனக்குக் கிடைத்து வரும் வரவேற்பைக் கேள்விப்பட்டு, பல கன்னட படத் தயாரிப்பாளர்கள் என் தாயாரிடம் வந்து, என்னை அவர்களது படங்களில் நடிக்க அனுமதிக்கும்படி கேட்டார்கள். அவர்களில், 'பள்ளிக்கூடம் போகட்டும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் படத்தை எடுத்துக் கொள்கிறேன்' என்று நாகேந்திரராவ் சொன்னார். என் தாயாருக்கு வேண்டாம் என உறுதியாக மறுக்க முடியாத நிலை. சினிமாவில் நடிக்க வேண்டுமென்று பலர் முயற்சித்து வருவதும், பலருக்கு அம்முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போனதும் என் தாயாருக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். அப்படி ஒரு சூழலில் நம்மைத் தேடி வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடுவதா? 'சந்தர்ப்பம் எப்போதும் இரண்டாவது தடவையாக ஒருவரது வீட்டுக் கதவைத் தட்டுவதில்லை' என்று ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. அதுவும் ஞாபகத்துக்கு வந்தது. 

பள்ளிக்கூடமா... பட உலகமா? 'அம்மு, நீ படிச்சது போதும்' என்று என் தாயார் சந்தியா சொல்லிவிட்டார். பள்ளிக்கூடத்தை விட்டுவிடப் போகிறோமே என்று யோசிக்கும்போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. அதேவேளையில், கலை உலகில் பணியாற்றப்போகிறோம் என்ற நினைப்பு வந்தபோது மனதில் ஒரு அமைதி, மகிழ்ச்சி. இன்பம்-துன்பம் இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை? கன்னடப் படவுலகம் என்னைக் கை நீட்டி வரவேற்றது. அதேசமயம் தமிழ்ப் பட உலகமும் என்னை வரவேற்க தன் நேசக் கரங்களை நீட்டியது. 'வெண்ணிற ஆடை' படத்தின் கதாநாயகியாக என்னை ஒப்பந்தம் செய்து கொண்டார், தயாரிப்பாளர்-டைரக்டர் ஸ்ரீதர். அந்த வாய்ப்புக்கு முன்பே ஸ்ரீதரின் படங்களைப் பார்த்து, அவரது ரசிகைகளில் ஒருத்தியாக மாறியிருந்தவள் நான். அவரது படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பேராசையாகக்கூட நினைத்தது கிடையாது. அப்போது என் தாயாருக்கு வேறு முக்கியமான வேலை இருந்ததால், என் சிறிய தாயார் வித்தியாவுடன் படப்பிடிப்புக்குப் போனேன். 

நன்கு அலங்காரம் செய்து, மேக்கப்புடன் நுழைந்த பின்புதான் ஸ்ரீதர் என்னைப் பார்த்தார். 'இந்தப் படத்தில் சித்த சுவாதீனம் இழந்த பெண்ணாக நீ வருகிறாய்' என்று சொன்னார். அதாவது நான் பைத்தியமாக நடிக்க வேண்டும். அதுவும் முதல் நாள் அன்றே முதல் காட்சி, நான் சின்னதாகக்கூட யோசிக்காமல், தயங்காமல். சரி என்றேன். முதல் நாள் படப்பிடிப்பு  நல்ல விதமாக அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது பற்றி என் தாயாரிடம் சொன்னேன். 'உனக்குக் குறை இருக்காது. விக்னமில்லாமல் தமிழ்ப் பட உலக வாழ்க்கை அமைந்துவிட்டது' என்றார். எல்லாவற்றுக்கும் மேல் நான் நேசிக்கும், மதிக்கும் என் தாயை வணங்கி எழுந்தேன். என் தெய்வம் அவர்தானே. 'வெண்ணிற ஆடை' படத்தில் நான் விதவைக் கோலத்தில் வரும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள். 'இனி விதவைக் கோலத்தில் தோன்றாதீர்கள், எங்களால் தாங்க முடியாது' என்று எழுதியிருந்தார்கள். இத்தனை நெக்கமாக நேசிக்கிறார்களே என பிரமிப்பாக இருந்தது." 

19_12280.jpg

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

1964

1.சின்னத கொம்பே (கன்னடம்)

2.மனே அலியா (கன்னடம்)

 

1965

3.வெண்ணிற ஆடை

4.நன்ன கர்த்தவர்யா(க)

5.ஆயிரத்தில் ஒருவன்

6.நீ

7.மனசு மமதாலு(தெ)

8.கன்னித்தாய்

9.மாவன மகளு(க)

 

1966

10.மோட்டார் சுந்தரம்பிள்ளை

11.முகராசி

12.யார் நீ

13.குமரிப்பெண்

14.சந்திரோதயம்

15.தனிப்பிறவி

16.மேஜர் சந்திரகாந்த்

17.கௌரி கல்யாணம்

18.மணி மகுடம்

19.பதுருவதாரி(க)

20.கூடாச்சாரி 116(தெ)

21.ஆமெ எவரு(தெ)

22.ஆஸ்தி பருலு(தெ)

23.எபிசில்(ஆங்கிலம்)

 

1967

24.தாய்க்குத் தலைமகன்

25.கந்தன் கருணை

26.மகராசி

27.அரச கட்டளை

28.மாடி வீட்டு மாப்பிள்ளை

29.ராஜா வீட்டுப்பிள்ளை

30.காவல்காரன்

31.நான்

32.கோபாலுடு பூபாலுடு(தெ)

33.சிக்கடு தொரகடு(தெ)

 

1968

34.ரகசிய போலீஸ் 115

35.அன்று கண்ட முகம்

36.தேர்த்திருவிழா

37.குடியிருந்த கோவில்

38.கலாட்டா கல்யாணம்

39.பணக்காரப்பிள்ளை

40.கண்ணன் என் காதலன்

41.மூன்றெழுத்து

42.பொம்மலாட்டம்

43.புதிய பூமி

44.கணவன்

45.முத்துச்சிப்பி

46.எங்க ஊர் ராஜா

47.ஒளி விளக்கு

48.காதல் வாகனம்

49.சுக துக்காலு(தெ)

50.நிலுவு தோபிடி(தெ)

51.பிரமச்சாரி(தெ)

52.திக்க சங்கரய்யா(தெ)

53.பாக்தாத் கஜ தொங்கா(தெ)

 

1969

54.அடிமைப்பெண்

55.குருதட்சனை

56.தெய்வமகன்

57.நம் நாடு

58.ஸ்ரீராம் கதா(தெ)

59.அதிர்ஷ்ட வந்துலு(தெ)

60.காதநாயகுரு(தெ)

61.கண்டி கோட்ட ரகசியம்(தெ)

62.ஆதர்ச குடும்பம்(தெ)

63.கதலடு ஒதலுடு(தெ)

 

1970

64.இஸ்ஸத்(ஹிந்தி)

65.எங்க மாமா

66.மாட்டுக்கார வேலன்

67.என் அண்ணன்

68.தேடி வந்த மாப்பிள்ளை

69.எங்கள் தங்கம்

70.எங்கிருந்தோ வந்தாள்

71.அனாதை ஆனந்தன்

72.பாதுகாப்பு

73.அலிபாபா நலபை தொங்கலு(தெ)

 

1971

74.குமரிக்கோட்டம்

75.சுமதி என் சுந்தரி

76.சவாலே சமாளி

77.தங்க கோபுரம்

78.அன்னை வேளாங்கன்னி

79.ஆதி பராசக்தி

80.நீரும் நெருப்பும்

81.ஒரு தாய் மக்கள்

 

1972

82.ஸ்ரீ கிருஷ்ண விஜயமு(தெ)

83.ராஜா

84.திக்கு தெரியாத காட்டில்

85.ராமன் தேடிய சீதை

86.பட்டிக்காடா பட்டணமா

87.தர்மம் எங்கே

88.அன்னமிட்டகை

89.சக்தி லீலை

90.ஸ்ரீ கிருஷ்ண சத்யா(தெ)

91.பார்யா பிட்டலு(தெ)

 

1973

92.நீதி

93.கங்கா கௌரி

94.வந்தாளே மகராசி

95.பட்டிக்காட்டு பொன்னையா

96.சூரியகாந்தி

97.பாக்தாத் பேரழகி

 

1974

98.தேவுடு சேசின மனிசுலு(தெ)

99.டாக்டர் பாபு(தெ)

100.திருமாங்கல்யம்

101.தேவுடு அம்மாயி(தெ)

102.தாய்

103.வைரம்

104.அன்புத் தங்கை

 

1975

105.அன்பைத் தேடி

106.அவன் தான் மனிதன்

 

1976

107.யாருக்கும் வெட்கமில்லை

108.பாட்டும் பரதமும்

 

1977

109.கணவன் மனைவி

110.சித்ரா பௌர்ணமி

111.உன்னைச் சுற்றும் உலகம்

 

1980

112.ஸ்ரீகிருஷ்ண லீலா

 

1992

113.நதியைத் தேடி வந்த கடல்

114.நீங்க நல்லா இருக்கணும்

 

கௌரவ வேடம்

1.ஸ்ரீ சைல மகாத்மியம்(க) - 1961

2.மன்மொளஜ்(ஹிந்தி) - 1962

3.கான்ஸ்டபிள் கூத்ரு(தெ) - 1963

4.மஞ்சி ரோஜீலு ஒஸ்தாயி(தெ) - 1963

5.அமர் சில்பி ஜக்கண்ணா(தெ) - 1964

6.அமர் சில்பி அக்கண்ணாச்சாரி(க) - 1964

7.தாயே உனக்காக - 1966

8.லாரி டிரைவர் - 1966

9.ஜீசஸ் (மலையாளம்) - 1977

10.நாடோடி மன்னன் - 1995

 

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள் - 115

வண்ணப்படங்கள் - 14

மொழி மாற்றுப் படங்கள் - 48

தமிழ் படங்கள் - 83

தெலுங்குப் படங்கள்- 25

கன்னடப் படங்கள்- 5

இந்திப் படம்- 1

Link to comment
Share on other sites

'கடுங் குளிர் நள்ளிரவு... வீதியில் நான்!' ஜெயலலிதா பகிர்ந்த நினைவுகள்

 

ஜெயலலிதா

திராவிட இயக்கத்தில் வேரூன்றிய வெற்றிகரமான ஒரு விழுது அ.தி.மு.க. தமது கட்சியின் தலைவரிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் உருவாக்கிய அக்கட்சி கிட்டத்தட்ட பொன்விழாவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 26 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து, கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்திய முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் சக்திமிக்க தலைவர் மறைந்து விட்டார். அ.தி.மு.க எனும் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்தை, கட்டிக்காக்க, தான் அடைந்த துயரங்களை கடந்த 1997-ம் ஆண்டு அ.தி.மு.க வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது, கட்சியின் வெள்ளிவிழா மலரில் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்...படிப்பவர் அனைவரது கண்களிலும் சில துளி கண்ணீரையாவது கடனாகப் பெற்று விடும் அந்த உருக்கமான கட்டுரை. அதனை இங்கு தருகிறோம்....

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். நிறுவி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. 1972 அக்டோபர் 17-ல் தொடங்கி, 1987 வரையில் ஒரு பதினைந்தாண்டு காலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொதுச்செயலாளராக இருந்து, கழகத்தை வழிநடத்தினார் ஜெயலலிதா. தொடர்ந்து தலைவர் நிறுவிய இயக்கத்தைப் பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தும் வாய்ப்பை, கழக உடன்பிறப்புகள் எனக்கு வழங்கிக் கொண்டிருப்பது நான் பெற்ற நற்பேறாகவே கருதுகிறேன்.

நினைவுபடுத்த விரும்பும் நிகழ்வுகள்! 

கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கழகமும் சந்தித்த தடைகள், தடங்கல்கள் பலவற்றையும், அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து வீறுநடை போட்டு வந்த வரலாற்றைக் குறித்து என் நினைவில் நிற்கும் சில உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கட்டிக்காக்க இயக்கம் தொடங்கிச் சிறப்புற நடத்திய தலைவருக்குப் பிறகு, இயக்கத்தைக் கட்டிக் காக்கவும், ஆட்சிக் கட்டிலில் ஏற்றவும் நான் சந்தித்த இடர்பாடுகளையும், இன்னல்களையும் ஒருவாறு இக்கட்டுரையில் ஆராயவும் முற்பட்டிருக்கிறேன்.

2_12186.jpg

அன்னை இந்திரா காந்தி அவர்கள் தனக்குப் பிறகு ராஜீவ்காந்தி அவர்களை கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க இலகுவாக வழிவகுத்துப் போனார். ஆனால் எனது நிலையோ அப்படிப்பட்டது அல்ல. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு தலைமைப் பதவியை நான் எளிதாக அடையவில்லை. உள்ளும் புறமும் எனக்கெதிராகத் துரோகமும், பகை உணர்வுகளும் ஒரு சிலர் வளர்த்து விட்டதைப்போல அரசியலில் வேறொருவருக்கும் எதிராக உருவாக்கப்பட்டதில்லை. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிய நான் நடத்திய போராட்ட வரலாற்றையும் இதில் நினைவு கூர்ந்திட உள்ளேன்.

பிற்பட்ட மக்களுக்குக் கல்விச் சலுகையும், வேலை ஒதுக்கீடும் வேண்டுமென்ற கொள்கையை நிலைநிறுத்த 1916-ல் சர்.பிட்டி தியாகராயரும், டி.எம்.நாயரும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். 1925-ல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் முப்பதுகளில் நீதிக் கட்சியோடு இணைந்து செயலாற்ற முன்வந்தார். 1938 மற்றும் 1940-ல் பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர், அண்ணாவின் உறுதுணையோடு 1944-ல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். 1949-ல் செப்டம்பர் 17-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். 1949-ல் இயக்கம் கண்டாலும் 1958-ல் தான் திருச்சியில் நடந்த கழக மாநாட்டில்தான் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்தலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற அண்ணா முடிவெடுத்தார். காரணம் 1953-ல் இயக்கத்தில் இணைந்த அண்ணாவின் இதயக்கனியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வருகையால், அன்றைய தி.மு.கழகம் ஓர் வெகுஜன இயக்கமாக உருவெடுக்க வாய்ப்புப் பெற்றமையே ஆகும். 

1967-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஈடுபாட்டோடு செயற்படுத்த தொடங்கினார். மக்கள் நல்லன்பைத் தனது ஆட்சித் திறன் மூலம் பெறத் தொடங்கிய அண்ணா அவர்களின் திடீர் மறைவு மக்களுக்குப் பேரிழப்பாக அமைந்தது. 1969-ல் அண்ணாவுக்குப் பின் அண்ணாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டு எல்லா நிலைகளிலும் தனிமனிதர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆதிக்க மனப்பான்மை உருவானது. 

1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பெற்ற இடங்களைவிட 1971 சட்டமன்றத் தேர்தலில் 45 இடங்கள் அதிகம் கிடைத்தது. அந்தக் கூடுதலான இடங்கள், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் செல்வாக்கினால் பெற்றவை என்பதை தலைமை மறந்து விட்டது. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் புறக்கணிக்கப்பட்டனர், அண்ணாவின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் ஒருவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உதாசீனப்படுத்தப்பட்டார். 

ஜெயலலிதா

அ.தி.மு.க உதயம் 

அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பட்ட சிலரின் குடும்பச் சொத்தாக மாறுவதை மக்கள் விரும்பவில்லை. அண்ணாவின் உண்மைத் தம்பிகள் மனங்கொதித்தார்கள். அண்ணாவின் கொள்கைகளைக் கட்டிக் காக்க எம்.ஜி.ஆர். உறுதிகொண்டார். கழகத்தின் வரவு, செலவுக் கணக்கைக் கேட்டார். எம்.ஜி.ஆர். எழுப்பிய போர்க்குரல் பொதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் ஆதரவு வளர்வது பிடிக்காமல், அவர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1972-ல் தொடங்கி எண்ணற்ற வழக்குகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீதும், கழக உடன்பிறப்புகள் மீதும் தொடுத்து, அப்போதுதான் அரும்பிய இயக்கத்தைத் துவண்டுவிடச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடக்கு முறைகளை எதிர்த்து நின்று, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரு வெற்றிபெற்று அண்ணாவின் உண்மையான இயக்கம் தனது தலைமையில் இயங்குவதுதான் என்பதை நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

மூன்று முறை (1977, 1980, 1984) தேர்தல்களில் நின்று வெற்றிபெற்ற முதலமைச்சர் என்று நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை உற்பத்தி செய்த அமுதசுரபியாக விளங்கினார். 1982-ம் ஆண்டு ஜூலை முதல் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

ஜெயலலிதா

கட்சியில் இணைந்தேன்...

புரட்சித்தலைவர் ஆணைக்கிணங்க, 4.6.1982 அன்று கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைப் பொதுத்தொண்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஈடுபடுத்தினார். என்னை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கி அகம் மகிழ்ந்தார். சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் செல்லும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்னைச் சந்திப்பார்கள், அவர்கள் மூலம் ஆட்சி நிலவரம் குறித்து அறிந்து கொள்வேன், கழக  முன்னணியினர் சந்திப்பார்கள். அவர்கள் மூலம் கழகப் பணிகள் குறித்து அறிந்து, பொதுமக்கள் கோரிக்கைகளையும் பெற்றுக் கொள்வேன்.

சென்னை திரும்பியதும் கட்சியிலும், ஆட்சியிலும் நிகழ்த்த வேண்டிய பணிகள் குறித்து புரட்சித்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன், அவற்றை ஏற்றுக்கொண்டு, புரட்சித்தலைவர் உடனடியாக அமல்படுத்தினார், நடவடிக்கை மேற்கொண்டார். 1982-ல் நடைபெற்ற கடலூர் மாநாட்டில் என்னை ‘பெண்ணின் பெருமை’ என்ற சீரிய தலைப்பில் பேசச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அரசியல் அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். 

5_12139.jpg

கொள்கைப் பரப்புச் செயலாளர் 

1983-ம் ஆணடு ஜனவரி திங்கள் 28-ஆம் நாள், எம்.ஜி.ஆர்., என்னை கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்தார். அப்போது நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்தான் புரட்சித்தலைவர் முதன்முதலாக என்னை நேரிடையாக ஈடுபடுத்தினார். திருச்செந்தூர் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கப் பணித்தார்.

திருச்செந்தூர் கோயில் அலுவலர் சுப்பிரமணியப் பிள்ளை சாவு குறித்து எதிர்கட்சிகள் பெரும் போராட்டமே நடத்தி முடித்திருந்தன. ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்று கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை சென்று, சுப்பிரமணிய பிள்ளை படுகொலை குறித்து பெரும் கொந்தளிப்பே ஏற்படுத்தி வைத்திருந்தார். ‘வைரவேல் திருடனென்று’ ஒரு அமைச்சரைக் குற்றம்சாட்டி சுப்பிரமணியப் பிள்ளை சாவில் தொடர்புபடுத்தி பெரும் அமர்க்களமே படுத்தினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. தொகுதி மக்களும் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவரிடம் அந்த அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரை அனுப்பாதீர்கள்!’ என்றும் ‘அம்மாவை (என்னை) அனுப்பி வையுங்கள்!’ என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அந்த அமைச்சர் தொகுதிப் பக்கமே தலைக்காட்டி விடக்கூடாது எனப் புரட்சித்தலைவரே உத்தரவிட்டிருந்தார்.

புரட்சித்தலைவர் ஆணையைச் சிரமேற்கொண்டு இரவு பகலாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன், போகுமிடமெல்லாம் மக்கள் பேராதரவு தந்தார்கள். புரட்சித்தலைவரோடு இணைந்து பிரச்சாரம் செய்தேன், கழகம் வெற்றிவாகை சூடியது.

6_12283.jpg

கழகப் பணி

தினமும் காலை பத்துமணிக்கு தலைமைக் கழகம் வருகை தந்து, கழகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டேன், கழகப் பிரச்சாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் கட்டாயம் கழகப் பொதுக்கூட்டங்களில் பங்குபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கழகப் பணி என்று வரும்போது யார் அலட்சியம் காட்டினாலும் நான் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தலைமைக் கழகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள், அவர்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினேன். தலைமைக் கழகத்திற்குச் சென்றால் கொள்கை பரப்புச் செயலாளரைக் கண்டு, தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல முடியும் என்ற நிலையினை உருவாக்கியது தொண்டர்களுக்கு மன நிறைவைத் தந்தது.

கழகப் பணியிலும், ஆட்சிப் பணியிலும் கழகத் தொண்டர்களுக்கும் புரட்சித்தலைவருக்கும் இணைப்புப் பாலமாக நின்று, தொண்டர்களின் உணர்வுகளைத் தலைவருக்குத் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான பணிகள் நிகழ என்னால் முடிந்ததை உளத்தூய்மையோடு செய்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 23.4.1984-ல் புரட்சித்தலைவர் என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே இருக்கை எண் 185 எனக்கு ஒதுக்கப்பட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாத கிடைத்ததற்கரிய பேறாகவே கருதுகிறேன். நாடே வியக்கும்வகையில் அண்ணா முழங்கிய அதே இருக்கையில் நின்று, மாநிலங்களவையில் மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட மசோதா குறித்த விவாதத்தில் எனது உரையை முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்தேன். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்மீது பேரன்பு காட்டினார். எனது நடவடிக்கைகளில் சிலர் அதிர்ந்து போனார்கள். 

தலைவருக்கு ஏற்பட்ட இக்கட்டைச் சமாளிக்க நான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலக எடுத்த முடிவை, தலைவரும தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், நான் பதவி விலகிய பின்னரும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. 

7_12514.jpg

1984-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாள் தலைவரின் உடல் நலம் குறைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 13-ஆம் தேதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்ற வேதனைச் செய்தியால் தமிழ்நாடே துயரத்தில் வீழ்ந்தது.

5.11.1984-ல் தலைவர், அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோவில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து, என் கண்கள் குளமாயின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த இருவரில் இந்திரா காந்தி மறைந்தார். தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார்.

1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கழகம் கூட்டணி சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார். 

ஆண்டிப்பட்டியில் எனது பிரச்சாரத்தைத் தொடங்கினேன். போகும் இடமெல்லாம் என்னை ஆரவாரத்தோடு மக்கள் வரவேற்றார்கள். எதிர்க்கட்சிகளின்  பொய்ப் புகார்களுக்கு ஆங்காங்கே பதிலுரைத்தேன். ‘புரட்சித் தலைவர் திரும்ப வருவார், பூரண நலம் பெற்று வருவார், நல்லாட்சி தருவார், என ஆணித்தரமாக எடுத்துரைத்தேன், ‘புரட்சித்தலைவரை மீண்டும் முதல்வராக்கி வரவேற்றிட நல்லாதரவு தாருங்கள்’ என சென்ற இடமெல்லாம் வேண்டுகோள் வைத்தேன். பொதுமக்கள் எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இயக்கம் காப்பதற்குத் துணை நின்றதிலும் கழகம் பெற்றிபெற பிரச்சாரம் செய்ததிலும் நான் மிகுந்த மனநிறைவு பெற்றேன். ‘தலைவர் தமிழ்நாட்டில் இல்லாத குறையை அம்மா தீர்த்து வைத்தார்கள்’ என்று பலரும் சொன்னதை என் காது குளிரக் கேட்டேன்.

8_12024.jpg

1985 பிப்ரவரித் திங்கள் 12-ஆம் நாள் புரட்சித்தலைவர் தாயகம் திரும்பினார். செப்டம்பர் ஆறாம் நாள் மீண்டும் என்னைக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். 1986 ஜுலை 14, 15-இல் மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடத்த ஆணையிட்டார். மாபெரும் மன்றப் பேரணியை தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் புரட்சித்தலைவர் எனக்கு அளித்தார். மாநாட்டில் முத்தாய்ப்பாக புரட்சித்தலைவருக்கு ஆறடி உயர வெள்ளிச் செங்கோல் ஒன்றினை தலைமைக் கழகத்தின் சார்பில், அவரிடம் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். செங்கோலினைப் தலைவர் கரங்களில் அளித்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன், அந்த வெள்ளிச் செங்கோலை புரட்சித் தலைவர் என்னிடமே திருப்பி அளித்த போது மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் அச்செய்கையை வரவேற்றுச் செய்த கரவொலி இன்றும் என் உள்ளத்தில் பசுமை மாறாத மகிழ்ச்சி நினைவாக உள்ளது. 

அந்நிகழ்ச்சியினைத் தான் தமிழ்நாட்டு மக்கள் தனக்குப் பின் தான் வகித்த பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டியது யார் எனப் புரட்சித்தலைவர் அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக கருதினர். 1986 செப்டம்பரில் தலைவர் உடல் நலம் மீண்டும் சீர்கெட்டது, எதிர்பாராத நேரத்தில் தமிழக ஒளிவிளக்கு அணைந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24-ம் நாள் மறைந்தார். தலைவர் மறைந்த துயரச் செய்தி என் காதுகளில் பேரிடியாக விழுந்தது.

இராமாவரம் தோட்டத்தில் தலைவர் திருமுகத்தைப் பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. இராஜாஜி மண்டபத்தில் தலைவர் திருவுடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் தலைவர் தலைமாட்டிலேயே நின்றிருந்தேன். தலைவர் மறைவில் தளர்ந்து போன என் மீது இராஜாஜி மண்டபத்தில் பழிச் சொற்கள் என்னும் தேள் கொண்டு கொட்டினார்கள், இராணுவ வண்டியில் ஏறிய என்னை பிடித்திழுத்து கீழே தள்ளியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

என் உள்ளத்தில் புதிய உறுதிப்பாடு பூத்தது. கழக வரலாற்றில் ஓர் புத்தெழுச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிறுவிய இயக்கத்தையும் கழகத் தொண்டர்களையும் காப்பாற்ற எந்தத் தொல்லையையும் எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதென்று முடிவெடுத்தேன். ‘தற்காலிக முதல்வரான நாவலர் அந்தப் பொறுப்பில் தொடரட்டும், புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அப்படியே நீடிக்கட்டும், கட்சியில் யார், யார், எந்ததெந்தப் பொறுப்புகள் வகித்தனரோ அதே பொறுப்புகளில் அவர்களும் இருக்கட்டும்’ என்று தலைவர் நிறுவிய இயக்கத்தைக் கட்டிக்காக்க முயன்ற என் முயற்சியைக் கழகத்தில் சிலர் ஏற்கவில்லை.

9_12513.jpg

1987 டிசம்பர் 31-ஆம் நாள் நாவலர் முதலான மூத்த தலைவர்கள் கூடி முடிவு எடுத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக நான் பெறுப்பேற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் நள்ளிரவு 12 மணிக்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப்பட்டேன். அதே வேகத்தோடு 1988 ஜனவரி முதல் நாள் காலையில் தலைமைக் கழகத்தில் கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என் பெயரை பொதுச்செயலாளர் என முடிவெடுத்து அறிவித்தனர்.

1988 ஜனவரி இரண்டாம் நாள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். கவர்னர் குரானா, ஜானகி அம்மையாரை அமைச்சரவை அமைக்க அழைத்தார், ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில் தான் என்னையும் கழக நிர்வாகிகளையும் தலைமைக் கழகத்தை விட்டு வெளியேற்றி தலைமைக் கழகம் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது.

தலைமைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய என்னைக் கைது செய்து வேனில் ஏற்றினார்கள், சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்ததற்கு நேர்மாறாக என் இல்லத்திலே கொண்டு வந்து விட்டு விட்டு காவல் துறையினர் சென்றனர். புரட்சித்தலைவர் இயக்கத்தைக் காக்க நான் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘நால்வர் அணி’ என்ற பெயரில் சிலர் நம்மிடமிருந்து பிரிந்தனர்.  பூட்டிச் சீல் வைக்கப்பட்ட தலைமைக் கழகம் என் தலைமையில் அமைந்த கழகத்துக்கே சொந்தமென்ற தீர்ப்பு கிடைததது. தொண்டர்களிடம் புதிய உற்சாகம் பிறந்தது. தமிழ்நாட்டில் 1989-ம் ஆண்டு தேர்தலில், நான்கு முனைப் போட்டி நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நான் மக்களைச் சந்தித்து வந்த நிலையில், போடி நாயக்கனூரில் வெற்றி பெற்ற எனக்குப் பொது மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிரக்கட்சித் தலைவரான முதல் பெண் என்ற பெருமையைத் தந்தார்கள். 

10_12310.jpg

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுப் பொலிவு பெற்றது. 1989-ல் இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமான முறையில் இணைந்து விட்டதால் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு பெண்ணென்றும் பாராமல் என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார். 

‘என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, இனிமேல் இந்த ஆட்சி கலைக்கப்பட்ட பின்னால் தான் சட்டமன்றத்திற்கு வருவேன், அதுவும் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று சபதம் செய்து வெளியேறினேன். 

1989 நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு. கழகத்திற்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் கழகக் கூட்டணி போட்டியிட்ட பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39-ஐ வென்றது. என்னைக் கொல்ல மேற்கொண்ட சதி வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையால் மே 24-ஆம் நாள் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் ஜுன் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பெற்றது. மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கழகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுப் புதிய வரலாறு படைத்தது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இலட்சியத்தையும் கட்சியையும் கட்டிக்க காக்க என் மீது பகைவர்களும், ஏன்? சில நேரங்களில் கழகத்திலிருந்து வெளியேறியவர்களும் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொண்டுள்ளேன்.

ஜானகி அம்மையார் அணி என்றும், ‘நால்வர் அணி’ என்றும் ‘எம்.ஜி.ஆர். முனனேற்றக் கழகம்’ என்றும், ‘போட்டி அண்ணா தி.மு.க.’ என்றும் வேறுபட்டவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் திரும்பிக் கழகத்தில் இணைய விரும்பிய போது இன்று வரை பெரிய உள்ளத்தோடு நடந்து கொண்டுள்ளேன் என்பது கழக வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும். 

இப்படிக்கு உங்களின் அன்புச் சகோதரி,

செல்வி ஜெ. ஜெயலலிதா.

http://www.vikatan.com/news/tamilnadu/74365-emotional-memories-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்குப் பிடித்த காரும், மாதுளை மரமும்! - கொடநாட்டில் நெகிழ்ச்சி

 

ஜெயலலிதா

 

நடிகையாக பல கதாபாத்திரங்களில் பார்த்திருப்போம், ஒரு முதல்வராக கம்பீரமாக பார்த்திருப்போம், சோதனைகளை உறுதியாக எதிர்கொண்ட இரும்பு மனுஷியாக  பார்த்திருப்போம். ஆனால், இந்த இரும்பு முகமூடிகளுக்குப் பின்னால் ஒரு மென்மையான முகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. மிக நெருங்கிய வட்டத்துக்கு மட்டுமே அது தெரியும் . ஜெயலலிதாவுக்கு சமீப காலங்களில் பிடித்த கார், கொடநாட்டில் அவருக்குப் பிடித்த இடங்கள், அவருக்கு விருப்பமான மாதுளை மரம்... உலகம் அறிந்திராத இந்த ரகசியங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கோவையைச் சேர்ந்த செந்தில் குமார். 

"2012-ம் ஆண்டு. நான் அப்போது மஹிந்திரா ஷோரூமில் சர்வீஸ் மேனேஜராக இருந்தேன். ஒரு நாள் அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது. அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் உங்களோடு பேசுவார் என்று சொன்னார்கள். அழைப்பு வந்தது. அப்போது புதிதாக அறிமுகமாகியிருந்த மஹிந்திரா XUV 500 என்ற வண்டியை எடுத்துக் கொண்டு கொடநாடு வர சொன்னார்கள். சில்வர் கலர் வண்டி வேண்டுமென்றார்கள். ஜூலை, 16-ம் தேதி இரண்டு வண்டிகளில் கொடநாடு சென்றோம்.

பொதுவாகவே கொடநாட்டில் பனிமூட்டம் அதிகமாகத் தான் இருக்கும். அன்றும் அப்படித் தான்.  4-ம் நம்பர் கேட்டின் வழியாக எஸ்டேட்டிற்குள் சென்றோம். அந்த பங்களா கண்ணில்பட்டது. அதற்கு இரண்டு கேட்கள் இருந்தன. கிழக்கு மற்றும் தெற்கில். கிழக்கு வாசலை ஏனோ அவர்கள் பயன்படுத்துவதில்லை. தெற்கு வாசலின் வழியாக உள் நுழைந்தோம். முதல்வரின் பெர்சனல் டிரைவர்கள் இரண்டு பேர் வந்தனர். நான் அவர்களுக்கு வண்டி குறித்த டெக்னிக்கல் விஷயங்களை சொன்னேன். பின்பு, வண்டியின் "ரன்னிங் போர்ட்" என்று சொல்லக் கூடிய , அந்த கால் வைத்து காரில் ஏறும் பகுதியின் அளவுகளை எடுத்தனர். வண்டியை முழுமையாக பரிசோதித்தனர். அதில் ஏறுவதற்கு வசதியாக ஒரு ஸ்டூல் கொண்டு வந்து போட்டனர். எல்லாம் தயாரான பின், அமைதியாக ஒதுங்கி நின்றார்கள். பூங்குன்றன் யாருக்கோ போனில் பேசினார். அநேகமாக சசிகலாவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..." என்றபடி தன் போனில் அந்தக் குறிப்பிட்ட காரின் போட்டோவைத் தேடி எடுக்க முயற்சித்தார். " பங்களாவிற்குள் போகும் போதே போனை வாங்கி வைத்துவிட்டார்கள். ஆனால், வெளியில் வந்து காரை மட்டும் போட்டோ எடுத்திருந்தேன். அது ஏதும் பழைய போனில் போய்விட்டது என்று நினைக்கிறேன்..." என்றவர், ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தொடர்ந்தார். 

" எல்லோரும் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். முதலில் சசிகலா வந்தார். அவருக்குப் பின்னால், முழு கருப்பு கலர் சல்வாரில், ஃப்ரீ ஹேரில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்தார்கள். பொது மேடைகளில், போட்டோக்களில் அவரை வேறொரு பிம்பத்தில் பார்த்துப் பழகி, அவ்வளவு கேஷ்வலாக பார்ப்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. அவருக்கு கதவு திறந்து வைக்கப்பட்டது. ஏறி உட்கார்ந்தார். நான் கொஞ்சம் உயரம் என்பதால், கூட்டத்தின் பின்னால் நின்றிருந்தாலும், அவரின் பார்வைக்கு நான் நன்றாகவே தெரிந்தேன். என்னைக் கூப்பிட்டார். வந்து வண்டியை எடுங்கள் என்றார். எனக்கா... ஒரே பதட்டமாகிவிட்டது. "மேம்... எனக்கு ப்ரோட்டோகால் ஏதும் தெரியாது. அதுமட்டுமில்லாமல், வழியும் எனக்குத் தெரியாது" என்றேன். "No Problem. I will direct you, Just Drive..." என்று சொன்னார். அதற்கு மேல் என்ன பேச... ஏறி உட்கார்ந்தேன். பின்னால், சசிகலாவும், இளவரசியும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். உடன் வந்த பாதுகாவலர்களையும் வேண்டாம் எனத் தடுத்துவிட்டார் " என்று சிறிய இடைவெளிக்குப் பின்னர், அந்தப் பயணக் கதையை தொடங்குகிறார்.

collage_02_Compressed_12073.jpg

" படபடப்புடன் தான் அந்த பயணத்தைத் தொடங்கினேன். என்னிடம் வண்டியின் டெக்னிக்கல் விஷயங்களைக் கேட்டுக் கொண்டார். டீசல் ஃபுல் டேங்க் அடித்தால் எத்தனை கிலோமீட்டர் போகும் என்பது வரை உன்னிப்பாக அத்தனை விஷயங்களையும் கேட்டபடியே வந்தார். முதலில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியவர் எனக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டார். 'தெரியும்' என்றதும், தமிழிலேயே பேசத் தொடங்கினார். ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னார். அங்கு எஸ்டேட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களிடம் நலம் விசாரித்தார். சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்தார். ரொம்ப சீரியசாகவே இதுவரை  பார்த்திருந்த அவர், இவ்வளவு மென்மையாகப் பேசக் கூடியவரா என்று ஆச்சர்யப்பட்டு போனேன்.

பின்பு, கொஞ்ச தூரத்தில் மற்றுமொரு சின்ன பங்களா இருந்தது. அங்கு போகச் சொன்னார். அங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 'இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கிருந்து காலையில சன்ரைஸ் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும்" என்று அவ்வளவு சந்தோஷத்தோடு சொன்னார். பின்பு, ஒரு இடத்தை சுட்டிக் காட்டி " சசி... இங்க ஒரு ஆர்ச் மாதிரி மாதுளை மரம் இருந்ததே. எங்கே அது?' என்று கேட்டார். அது வெட்டப்பட்டது என்று அறிந்து ரொம்பவே வருத்தப்பட்டார். பின்பு, அவர்களுக்குள் சில பெர்சனல் விஷயங்களைப் பேசிக் கொண்டார்கள். இப்படியாகத் தொடர்ந்த அந்தப் பயணம் முடிந்தது. வண்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்ளச் சொன்னார். இறுதியாக, " அவ்வளவு தானே, நான் இறங்கிக் கொள்ளலாமா? வண்டி குறித்து நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டுவிட்டு எனக்கு நன்றியை சொல்லிவிட்டுத் தான் வண்டியை விட்டு இறங்கினார். அந்த நாளை இன்று நினைத்தாலும் குழந்தைகளுக்கு வரும் "சின்ட்ரெல்லா" கனவு போலிருக்கிறது எனக்கு... " என்று உணர்வின் வார்த்தைகளோடு முடிக்கிறார். 

இந்த ஒருவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்கள் ஜெயலலிதாவுடனான ஏதோ ஓர் நினைவுகளில் உணர்ச்சிவயப்பட்டிருக்கும் சமயமாக இது இருக்கிறது. ஒரு பேட்டியில் ஜெயலலிதாவிடம் கேட்டார்கள்... " பேரன்பை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?". " இதுவரை இல்லை. எதிர்ப்பார்ப்பில்லா பேரன்பு என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. இருந்தாலும் அதை நான் அனுபவித்ததில்லை..." என்று சொன்னார். அப்படியான ஒரு பேரன்பை வாழும்போது அவர் உணரும் வாய்ப்பே வாய்க்காமல் போனது வரலாற்று சோகம்.

http://www.vikatan.com/news/tamilnadu/74368-jayalalithaas-favourite-car-and-pomo-tree.art

Link to comment
Share on other sites

அம்மு முதல் அம்மா வரை : எத்தனை பெயர்கள், அடைமொழிகள்?

  •  
     

காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவரது மற்றொரு பெயர் கோமளவல்லி. இது அவரது பாட்டியின் பெயராகும். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதா என்ற பெயரே நிலைத்தது.

ஜெயலலிதா
காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவரை 'அம்மு' என்றழைப்பார். ஜெயலலிதாவின் பல திரையுலக நண்பர்களும், அவரது தாயார் அழைப்பதை போலவே 'அம்மு' என்றே அழைத்தனர். 'அம்மு' என்று அவரை அழைப்பவர்கள் அக்காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கியவர்களாக விளங்கினார்கள்.

எம்ஜிஆர் , ஜெயலலிதா

 

 திரையுலக காலகட்டத்தில் 'அம்மு' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா

ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலும், அவர் அதிமுகவின் ஒரு பிரிவை வழிநடத்த ஆரம்பித்த 1989-ஆம் ஆண்டு காலட்டத்திலும் பல அதிமுகவினரும் அவரை 'மேடம்' என்றே அழைத்தார்கள். தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவரும், 1989 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக விளங்கிய திருநாவுக்கரசர் போன்றோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து உரையாடும் போதும், பேட்டிகளிலும், 'மேடம்' என்றே குறிப்பிட்டனர்.

ஆரம்பத்தில் ஜெயலலிதா குறித்து குறிப்பிடும் போது, அன்றைய அதிமுக தலைவர்களில் ஒருவரும், பின்னாட்களில் திமுக அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் ' செல்வி ஜெயலலிதா' என்று கூறினார். ஜெயலலிதா திருமணமாகதவர் என்பதால் நாஞ்சில் மனோகரன் கூறியது போல பல தலைவர்களும், குறிப்பாக வட இந்திய தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் ஜெயலலிதாவை 'செல்வி' என்றோ 'செல்வி ஜெயலலிதா' என்றோ குறிப்பிட்டு வந்தனர்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆர் 'புரட்சித் தலைவர்' என்றே அவரது கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து கட்சியை வழிநடத்தியவரும் , கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாவை 'புரட்சித் தலைவி' என்ற அழைக்க ஆரம்பித்தனர்.

 

எண்ணற்ற அடைமொழிகள், பெயர்கள் ஜெயலலிதாவுக்கு உண்டு

 எண்ணற்ற அடைமொழிகள், பெயர்கள் ஜெயலலிதாவுக்கு உண்டு

'தங்க தாரகை' , 'ஜான்சி ராணி' - இவையெல்லாம் அதிமுகவினரும், அவரின் நலன் விரும்பிகளும் ஜெயலலிதாவுக்கு அளித்த பட்டங்களாகும்.

பின் வந்த ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவரின் செயல்பாடுகளால், அவரது கட்சியினர் மற்றும் பிற கட்சியினர், சமூக இயக்கத்தினர் 'சமூக நீதி காத்த வீராங்கனை' , 'காவிரி தந்த கலைச்செல்வி' என்று பல அடைமொழிகளை வழங்கினர்.

 

அம்மா என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா

 அம்மா என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா

ஆனால், இவற்றை எல்லாம் விட அவருக்கு நிலைத்து நின்ற அடைமொழி அல்லது பெயர் 'அம்மா' என்பது மட்டுமே. ஆரம்பத்தில் அதிமுகவினரால் மட்டும் 'அம்மா' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, பிற்காலங்களில் கூட்டணிக் கட்சிகள், மாற்றுக் கட்சியினர், திரையுலகினர் என்று பலராலும் அவ்வாறே அழைக்கப்பட்டார்.

'அம்மா' என்பது ஜெயலலிதாவின் சொந்த பெயர் போல பலரின் மனதில் தங்கிவிட்டது.

அரசு நலத்திட்டங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகங்கள் தொடங்கப்பட்டபோது, அந்த கேண்டீன்களுக்கும் அம்மா உணவகம் என்ற பெயர் சூட்டப்பட்டு, பின்னர் அவரது அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ’அம்மா’ என்ற அடைமொழி தரப்பட்டது. இது போல அரசு திட்டங்களுக்கு தனது புனை பெயரை சூட்டி, தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எண்ணற்ற அடைமொழிகள் மற்றும் பெயர்கள் இருந்தாலும், அம்மு மற்றும் அம்மா ஆகியவை ஜெயலலிதாவை அவரின் நலன்விரும்பிகள் மற்றும் மக்களிடமும் வெகுவாக இணைத்த பெயர்களாகும்.

http://www.bbc.com/tamil/india-38232634

Link to comment
Share on other sites

’ஆரம்பத்தில் அழுதேன். பிறகு 10 மடங்காகத் திருப்பிக் கொடுத்தேன்!’ - இது ஜெயலலிதா பெர்சனல்

 


ஜெயலலிதா

ரும்புப் பெண்மணி, இவர் பார்த்தாலே பயப்படுபவர்கள்தான் அதிகம் என்றுதான் ஜெயலலிதா பற்றிய பிம்பம் எல்லார் மனதிலும். ஆனால் அவருக்கும் மறுபக்கம் உண்டுதானே? பாலிவுட் நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சிமி கரேவலுக்கு 1999ல் கொடுத்த பேட்டி. அதைக் கண்டவர்கள் அந்த மறுபக்கத்தைக் கொஞ்சமாவது பார்த்திருப்பார்கள்.

க்ளோஸப்பில், உதடுகள் மட்டுமின்றி  கண்களும் சிரிக்க பேசியிருப்பார் அதில். பேட்டி எடுக்கப்போன சிமியிடம் ஜெயலலிதாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ’ரொம்ப கோவப்படுவாங்க.. டென்ஷனாலும் ஆவாங்க. பார்த்து பேசுங்க’ என்றெல்லாம். ஆனால் பேட்டி எடுக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இருவருமாக ‘ஆஜா சனம்’ என்று பாடுவதைக் காணலாம். 

பேட்டி ஒளிபரப்பான தினம் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் சிமியை அழைத்தவண்ணமே இருந்தனர். ‘ஜெயாஜியின் இந்த முகம் நாங்கள் அறியாதது. ஒரு குழந்தை போல, மனம் திறந்து இத்தனை புன்னகையுடன் அவர் பேசுவதைப் பார்க்கப் பார்க்க அழகாய் பிரமிப்பாய் இருக்கிறது.’ - இதுதான் அனைவர் சொன்னதும். ஜெயலலிதாவே சிமியை அழைத்து, பேட்டி குறித்து பாராட்டியிருக்கிறார்.

இன்று நாட்டு மக்களெல்லாம் அம்மா என்றழைக்கும் ஜெயலலிதா, தனது அம்மாவின் அருகிலிருக்க ஏங்கியிருக்கிறார். இவரது 6 வயது முதல் 10 வயது வரை, தாய் சந்தியா சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் இருக்க, இவர் பெங்களூரில் இருந்திருக்கிறார். அவ்வப்போது ஜெயலலிதாவைப் பார்க்கவரும் அம்மா, கிளம்பும்போதெல்லாம் கதறி அழுதிருக்கிறார் ஜெ. தூங்கும்போது அம்மா கிளம்பிவிடுவார் என்று அவரது முந்தானையை கையில் சுற்றிக் கொண்டு தூங்குவார். அம்மாவோ இவர் கையை விடுவித்து, சித்தியின் புடவையைத் திணித்து சொல்லாமல் கிளம்பிவிடுவார். “அம்மாவுடன் நிறைய நேரம் செலவிட ஆசைப்பட்டதுண்டு. அது நடக்கவே இல்லை. ஒருமுறை ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருந்தேன். அதை அம்மாவிடம் காண்பிக்கவேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், அம்மா மிகவும் தாமதமாக வந்தார். அதற்குள் நான் உறங்கிவிட்டிருந்தேன்” என்கிறார் பேட்டியில்.

`நான் எல்லாரையும்போல உணர்ச்சி மிகுந்த ஒரு பெண்தான். ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை, கட்டுப்படுத்திக் கொண்டிருப்பேன்’ என்கிறார். ஒரு தலைவியாக உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தார் அவர்.   பொதுமேடைகளில் அவர் அழுது பார்த்ததில்லை. உணர்வுகள் காட்சிப்படுத்துவதற்கு அல்ல என்பது அவரது திண்ணமான எண்ணம்.

சிறுவயதில், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கியவராகவே அவர் இருந்திருக்கிறார். நடிகை, அரசியல், முதல்வர் என்று எல்லாமே அவருக்கு காலம் திணித்த ஒன்றுதான். 

ஜெயலலிதாவின் முன்னால் நின்று பேசவே எல்லாரும் பயப்படுவார்கள் என்ற பரவலான ஸ்டேட்மெண்டுக்கு ஒரு எதிர்மாறான ஃப்ளாஷ்பேக் உண்டு. பள்ளி காலங்களில் சக மாணவர்கள், இவரது தாயார் ஒரு நடிகை என்பதால் இவரை கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள். 

‘என் தாயார் ஒரு குணச்சித்திர நடிகை என்பதால்தான் அதெல்லாம் நடந்தது. ஒருவேளை அவர் ஒரு முன்னணி நடிகையாக இருந்தால் என்னைப் பொறாமைக் கண்ணோடு பார்த்து கடந்திருப்பார்கள்’ என்கிறார் ஜெயலலிதா. பின்னாளில் இவர் நம்பர் ஒன் நடிகையானது சரித்திரம். அப்படி பிறர் கிண்டல் செய்தபோதெல்லாம் வீட்டிற்கு வந்து அழுதிருக்கிறார். ‘இப்போது அப்படியில்லை. யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், இரண்டு மடங்காக திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’. ஆனால் அப்போதும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். பள்ளிப்படிப்பில் நம்பர் ஒன் இவர்தான். `Best outgoing student of the year’ பட்டத்தோடுதான் பள்ளியில் இருந்து வெளியில் வந்திருக்கிறார். கிண்டல் செய்தவர்களுக்கு அதைவிட பெரிய பதிலடி என்னவாக இருந்திருக்க முடியும்?

Jayalalitha

பள்ளி செல்லும் காலத்தில் யார் மீதாவது ‘க்ரஷ்’ இருந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது அவரது சிரிப்பைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. இரண்டு பெயர்களை அவர் குறிப்பிடுகிறார். 

கிரிக்கெட் வீரர் நாரி கண்ட்ராக்டர், நடிகர் ஷம்மி கபூர். இவர்கள்தான் ஜெயலலிதாவின் ஃபேவரைட். நாரி கண்ட்ராக்டரைப் பார்ப்பதற்கென்றே டெஸ்ட் மேட்ச் பார்க்க இவர் செல்வதுண்டு.

நடிகையானதும், குடும்ப சூழல் காரணமாகத்தான் என்கிறார். 

‘வீட்டில் நான் கேட்டதெல்லாம் கிடைத்தது. பணக்காரர்களாகத்தான் எங்களை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மா - நடிகையாக எனக்கு வரும் வாய்ப்புகளைச் சொல்லி - நடிக்கச் சொன்னார்கள். மேல் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் எல்லாம் கிடைத்தது. நடிப்பா, படிப்பா என்று குழப்பம். அம்மா, குடும்பச்சூழலை எனக்கு விளக்கினார்கள். தம்பி படித்துக் கொண்டிருந்தான். தாத்தா ஓய்வு பெற்றுவிட்டார். பாட்டி, தாத்தாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சித்தி குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மாவுக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் அவர் விளக்கும்போதுதான் எனக்கு குடும்ப நிலை புரிந்தது. அம்மாவுக்காக அந்த முடிவை நான் ஒப்புக்கொண்டேன்.  அம்மாவின் பொறுப்புகளை நான் எடுத்துக் கொள்ள தீர்மானித்தேன். ஸ்காலர்ஷிப்பை திருப்பிக் கொடுத்து நடிகையாக முடிவெடுத்தேன்”   

தமிழகத்தையே கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் முதல்வராக ஆண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக நடிகையாக அவதாரம் எடுத்த போது, இன்கம்டாக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. காசோலை எழுதுவது எப்படி என்று தெரியாது. வீட்டில் உள்ள பணியாளர்கள் சம்பளம் என்ன என்று தெரியாது, வங்கிக் கணக்கு பற்றி தெரியாது. கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டது போல இருந்திருக்கிறார். 23 வயதில் தாயாரும் இறந்துவிட, வாழ்க்கையே முடிந்ததுபோல இருந்திருக்கிறது ஜெயலலிதாவிற்கு. ‘அதற்குப் பின், இருப்பேன் என்றே நினைத்ததில்லை. ஆனால் மீண்டு வந்து இந்த நிலை வரை வந்திருக்கிறேன்’ என்கிறார் ஜெயலலிதா.

 Unconditional Love பற்றி கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு ஜெயலலிதாவின் பதிலும் மிக முக்கியமான ஒன்று:

`இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதெல்லாம்  புத்தகம், நாவல், கவிதைகள், திரைப்படங்களில்தான் இருக்கிறது. அப்படி ஒன்றை நான் கடந்துவந்ததில்லை

அரசியலுக்கு இவர் வந்த பாதையும் கடினமானதாகத்தான் குறிப்பிடுகிறார். ’அவருக்குப் பிறகு நான் பொறுப்புகளை எடுத்துக்கொண்டாலும் எனக்கு அது இலகுவாக அமைத்துக் கொடுக்கப்படவில்லை. ராஜிவ் காந்திக்கு இந்திரா காந்தி அமைத்துக் கொடுத்ததைப் போல அல்ல எனது விஷயத்தில். தெற்காசியாவில் பார்த்தீர்களானால்,  அரசியலில் பதவியில் அமரும் பெண்ணாக இருந்தால், மகளாக, மனைவியாக இருந்திருப்பார்கள். மனைவியாக இருந்தால், மரியாதையாக நடத்துவார்கள்.  எனது விஷயத்தில் அப்படி இல்லையே.. நான் கடினமாக பயணப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்’

 ‘என்னைப் போல விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள் இருக்க முடியாது. ஆண்கள் என்னைப் பார்த்தால் பயப்படுகிறார்கள், நான் ஆண்களை வெறுப்பவர் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. என்னை மிக மோசமாக விமர்சித்ததில் பெண்களும் உண்டு. பழைய ஜெயலலிதாவாக இருந்தால் அமைதியாக மட்டுமே இருந்திருப்பேன். அழுவேன். அதெல்லாம் ஆரம்பத்தில்தான். இன்றைக்கு பத்து மடங்கு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். எனக்கே, நான் இப்படி மாறிவிட்டதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது’ என்றிருக்கிறார்.

சிமிஒரு பேட்டி, முழுமையடைவது அல்லது நல்ல பேட்டியாக பார்க்கப்படுவது பதில் சொல்பவரின் கையில்தான் இருக்கிறது. ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு, ‘அடுத்து?’ என்று பார்க்கும் சிலரும் இருக்கிறார்கள். அந்த மாதிரிப் பேட்டிகளில் எந்த விஷயமும் இருக்காது.  இந்தப் பேட்டியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், வழக்கமான கேள்விகளாகத் தோன்றினாலும், மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டசபையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் பற்றி, சசிகலா பற்றி என்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். அதேசமயம், பேட்டி எடுத்த சிமியும் அவரை அமைதியாகப் பார்த்தபடி, புன்னகைத்தபடியே அவரது பதிலுக்குக் காத்திருந்து மனம் திறந்து அவரைப் பேசவிட்டிருக்கிறார். குறுக்கிடாமல், பொறுமையாக கண்ணோடு கண் பார்த்து அவரை பழைய நினைவுகளுக்குள் உலவ விட்டு, சரியான நேரத்தில் சரியான கேள்விகளை ஜெயலலிதாவிடம் கேட்டு என்று மிகச் சிறப்பாக இந்தப் பேட்டியைக் கொண்டு சென்றிருக்கிறார்.  

‘திருமணம் ஆகவில்லை என்று நான் வருந்தவில்லை. என்னுடைய சுதந்திரம், தனித்தன்மை ஆகியவற்றை விரும்புகிறேன். யாருக்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாத இந்த நிலை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றிருக்கிறார் ஜெ.

நிறுத்தி, நிதானமாக  - அதே சமயம் செயற்கையாக யோசித்துச் சொன்னது போல அல்லாமல் - தெள்ளத்தெளிவாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து ஜெயலலிதா பேசும் இந்தப் பேட்டி அவரது வாழ்வைச் சொல்லும் மிக  முக்கியமான ஓர் ஆவணம் என்றே சொல்லவேண்டும்.

பேட்டியின் இரண்டு பாகங்கள்: https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg&t=530s  & https://www.youtube.com/watch?v=Cf2bU9xD-3E&t=1s

http://www.vikatan.com/news/coverstory/74402-jayalalithaa-special-interview-by-simi-garewal.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின் 360 டிகிரி (வீடியோ..)!

 

360_17431.jpg

சென்னை ராஜாஜி அரங்கத்தில் ஜெயலலிதாவின் முகத்தை கடைசியாக பார்க்க வந்தவர்களில் ஒரு பகுதியினரை பார்த்தாலே நமக்கு தலை சுற்றிவிடும். அதனை 360 டிகிரி கோணத்தில் பார்த்தால் எப்படியிருக்கும்?. தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கமுடியாத காட்சிகளை இந்த 360 டிகிரி வீடியோ காட்டுகிறது. சென்னை ராஜாஜி அரங்கத்தையும், ஜெ இறுதி ஊர்வலத்தையும் அதனை சுற்றியிருந்த மக்கள் வெள்ளத்தையும் நேரில் இருந்து பார்த்தால் நமக்கு எப்படிப்பட்ட உணர்வு ஏற்படுமோ அதை கொடுக்கிறது இந்த வீடியோ.

 

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/74407-jayalalithaas-funeral-procession-in-360-degrees-video.art

Link to comment
Share on other sites

துறுதுறு கோமளவல்லி அதிரடி ஜெயலலிதா ஆன கதை! 

 

“நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்!” - சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டபின், பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தன் பொதுவாழ்க்கை பற்றி கூறிய வரிகள் இவை.

16 வயதில் சினிமாத்துறையில் நுழைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதுமே கிட்டத்தட்ட பொதுவாழ்க்கைதான். மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது கூட அந்த அதிரடிகள் தொடர்ந்தன. ஆம், முதல் இரண்டு நாட்கள் உடல்நிலைபற்றி பலவிதமான தகவல்கள் பரவிக்கொண்டிருந்த சூழலில்... உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு அதிரடியாக வெளிவந்து அரசியல்வாதிகளின் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பிவிட்டது.

“சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக ஆகவேண்டும், நல்ல பணவசதி படைத்த ஒரு பெண்மணியாக வாழவேண்டும்” இவைதான் சினிமாவுத்துறைக்குள் நுழைவதற்கு முன்னர் ஜெயலலிதாவின் எதிர்காலக் கனவாக இருந்தது.
தான் மேக்அப் போட்டதற்காக வருத்தப்பட்டு, ‘சினிமா என்னோடு போகட்டும்... என் மகளுக்கு அதுவேண்டாம்’’ எனக்கூறி வந்த தாய் சந்தியா, திடீரென சினிமாவில் நடிக்கச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்திய போதுதான் தனது கனவு உடையப்போகிறது என்பதை ஜெயலலலிதா முதன்முதலாக உணர்ந்தார். அம்மாவின் முடிவை எதிர்த்து வாதம் செய்திருக்கிறார். ஆனால், சூழல்... அம்மாவின் முடிவையே ஏற்கவைத்தது.

ஜெயவிலாஸ்... லலிதவிலாஸ்!

ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த ரங்கசாமி ஐயங்கார் ஒரு பொறியாளர். பல்வேறு இடங்களில் குறுகிய காலங்கள் பணியாற்றியவர் கடைசியாக, (அப்போதைய) மைசூர் மாநிலத்தில் இருந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தவுடன் குடும்பத்தோடு மைசூரில் செட்டில் ஆனார். இவருக்கு அம்புஜவல்லி, வேதவல்லி, பத்மவல்லி என்ற மூன்று மகள்கள், ஒரு மகன்.

Jaya_2_15017.jpg

மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவர் பணி கிடைக்கப்பெற்று அங்கேயே குடிபெயர்ந்த நரசிம்மன் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமன். இந்த ஜெயராமனுக்கும் ரங்கசாமி ஐயங்காரின் மகள் வேதவல்லிக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஜெயக்குமார் மற்றும் கோமளவல்லி.

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், பாண்டவபுராவில் உள்ள மேலுகோடே (மேல்கோட்டை) என்ற ஊரில் பிறந்த கோமளவல்லி, அம்மாவழி, அப்பாவழித் தாத்தாக்கள் இரண்டு பேரின் ’ஜெயவிலாஸ்’, ’லலிதவிலாஸ்’ ஆகிய பெயர்கள் கொண்ட வீடுகளில் மாறிமாறி வளர்ந்ததால் இரு குடும்பத்தின் அன்பின் நினைவாக ஜெயலலிதா என அழைக்கப்பட்டார். செல்லப்பெயர்... அம்மு. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அம்மு என்றுதான் அழைப்பார்.

1960-ல் ஆரம்பமான வாட்டாள் வம்பு!

1960-ல் முதல் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய ஜெயலலிதா, மைசூர் தசரா விழாவில் நாட்டியமாட 70-ம் ஆண்டு அழைக்கப்பட்டார். மைசூர் மாநிலம், கர்நாடக மாநிலம் என்று பெயர் மாற்றப்படுவதற்குக் கடும்எதிர்ப்புக் கிளம்பியிருந்த தருணம் அது. இந்த நேரத்தில் தசராவில் கலந்து கொள்வது சரியானது அல்ல என்று ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள் அறிவுறுத்தினர்.

60_15213.jpg

அந்தத்தருணத்தில் அவர், விகடன் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து கன்னடம் நன்றாகப் பேசினாலும்கூட, நான் ஒரு தமிழர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக்கருத்துக்கு, வாட்டாள் நாகராஜின் ‘கன்னட சாலுவாலி’ கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ’கர்நாடகாவில் பிறந்து வளர்ந்துவிட்டு இப்படி பேசுவதா... இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!’ என்ற மிரட்டல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு, கருத்துக்குக் கிடைத்த கடுமையான முதல் எதிர்ப்பு என்றே சொல்லலாம். எதிர்ப்புக்குப் பதில் எதுவும் சொல்லாத ஜெயலலிதா, உடல்நலன் காரணமாக தசரா விழாவில் பங்கேற்க இயலாது என்று மறுத்துவிட்டார்.

சுற்றி வளைத்த வாட்டாள்! 

இந்நிலையில் கன்னட திரைப்பட இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான ‘கங்கா கவுரி’ படத்தில் நடிக்க ஜெயலலிதாவை அழைத்தார். சென்னையில் நடத்துவதைவிட மைசூருவில் நடத்தினால் செலவு குறையும் என்பதற்காக அங்கே சூட்டிங் நடத்தப்பட்டது. அதேசமயத்தில்தான் தசரா விழாவும் நடைபெறுகிறது என்பதை ஜெயலலிதா மறந்துவிட்டார்.

Jaya_7_15003.jpg

சூட்டிங் கவர் செய்ய திரைத்துறையின் பிரபல செய்தித்தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட செய்தியாளர் குழுவும் மைசூர் சென்றது. சூட்டிங் தொடங்கும் நேரத்தில் 100 பேர் கொண்ட படையோடு வந்த வாட்டாள் நாகராஜ்... ஜெயலலிதா , பந்துலு மற்றும் பத்திரிகையாளர்கள் இருந்த அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து கதவைப்பூட்டிக் கொண்டு, ஜெயலலிதா முற்றுகையிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். பந்துலுவும் அதையே வலியுறுத்தினார்.

ஆனால், அப்போது ஜெயலலிதா சொன்னது இதுதான், “நான் தமிழ் பெண், கன்னடப் பெண் அல்ல. மன்னிப்பும் கேட்க முடியாது!” என்று சத்தமாகக் கூறிவிட்டார். அவர் அப்போது தமிழில் பேசியதால் அந்தக் கும்பலுக்கு புரியவில்லை. இயக்குனர் சாமி, வாட்டாள் நாகராஜ் குழுவினரைப் பார்த்து, மைசூருவுக்கு வந்துள்ள தமிழர்களைத் தாக்குவது வெட்ககரமானது என்று எடுத்துக்கூற கூட்டம் கலைந்து சென்றுவிட்டது.

மாறாத தைரியம்!

தனது தீர்மானமான முடிவை மாற்றிக்கொள்ள மறுப்பதும், மிரட்டலுக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்பதும் ஜெயலலிதாவின் உடன்பிறந்த குணம் என்பதை நேரில் பார்த்ததாக பத்திரிகையாளர்கள் நினைவுகூர்கின்றனர். இளைமையின் வலிமையும், புதிதாக பொதுவெளியில் வந்த உத்வேகமும் ஒருங்கே இருந்தபோது இருந்த அந்தக் குணம் கடைசிவரை அவரிடம் மாறவில்லை என்றே சொல்லலாம்.
தந்தை ஜெயராமன், பட்டப்படிப்பு முடித்தவராக இருந்தாலும்கூட சம்பாத்தியமோ, குடும்பத்தின் வளர்ச்சி குறித்தோ அக்கறை கொண்டவராக இல்லாமல் இருந்ததுடன், குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் சிறிது சிறிதாகக் கரைத்தார். ஜெயலலிதா இரண்டு வயதாக இருக்கும்போதே ஜெயராமன் இறந்தும் போனார்.

Jaya_14_15289.jpg

வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாய், திரைத்துறையில் சந்தியா என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த வருவாயைக் கொண்டே தனக்கும், குடும்பத்துக்கும் வருவாய் ஈட்டிக்கொண்டிருந்தார். ஆனால், போதுமானதாக இல்லை.

நெருப்பை வளர்த்த தனிமை!

இரண்டு தாத்தாக்கள் வீட்டிலும் செல்லமாக வளர்ந்து, எதிர்காலக் கனவுளைச் சுமந்து கொண்டு பட்டாம்பூச்சிபோல சுற்றித்திரிந்த ஜெயலலிதாவுக்கு, பொறுப்புக்களைச் சுமக்க மறந்த தந்தை, தாயிடமிருந்து சரியான தருணங்களில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும், 16 வயதில் திரைத்துறைக்குள் நுழையவேண்டிய நிர்ப்பந்தம் உட்பட பல காரணங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தங்களைக் கொடுக்க, அவருக்குள் ஒரு நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்ளவும், வேகமெடுக்கவும் தொடங்கியது. இதையெல்லாத்தையும்விட தனிமை என்பது அவருக்கு உடன்பிறந்த ஒன்றாகவே ஆகிப்போனதும் அந்த நெருப்புக்கு மேலும் வலு சேர்க்கத் தொடங்கியது.
இந்த உத்வேகம் அனைத்தும் வெற்றிகளை நோக்கியே அவரை தொடர்ந்து கொண்டு சென்றன. அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட்தான். ‘இஜ்ஜத்’ என்ற ஹிந்திப் படத்தில் தர்மேந்திராவுடன் நடித்தார், அதுவும் ஹிட். ‘Epistle’ என்னும் ஓர் ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

Jaya_3_15331.jpg

வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதா, திரைத்துறையில் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார். 

ஒரு வட்டம்... ஒளிவட்டம்!

அவரது வளர்ச்சிப் பாதையைக் கூர்ந்து கவனித்தால், சோதனைகளைக் கண்டு முடங்கிக் கிடப்பதல்ல பெண்ணினம் என்பதை உணர்த்துவதாகவே உள்ளதைக்காண முடியும். தனக்கு சரி என்று பட்டதைத் துணிச்சலோடு பேசுவதற்கும், செய்து முடிக்கவும் தயங்கியதே இல்லை. ஆனால், இந்தக் குணம் அவருக்கு மேலும் பல துன்பங்களைக் கொடுத்தன. அதேசமயம், அடுத்தக்கட்ட வெற்றிக்கான தூண்டுகோலாக, உத்வேகமாக அந்தத் துன்பங்களை எடுத்துக்கொள்வதில் ஜெயலலிதா தனித்துவமாகவே இருந்து வந்திருக்கிறார். வெற்றிப்பாதைக்கு இடையூறாகக் குறுக்கே நிற்பவர்கள் பற்றியெல்லாம் அவர் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் அடித்துக் கிளப்பி முன்னேறிச் செல்லவும் தயங்கியதே இல்லை.

61_15250.jpg

ஒவ்வொரு தருணத்திலும் அவருடன் அவரின் தனிமையும் பயணித்துக்கொண்டே இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அந்தத் தனிமை அவரது ஆளுமையைச் சுற்றி ஒரு வலுவான யாரும் உள்ளே நுழைய முடியாத ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டதையும் பார்க்கமுடிகிறது. அதுவே ஒளிவட்டமாகவும் தொடர்கிறது.

எரிமலை வெடித்தது!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சோபன்பாபுவின் நட்பு கிடைத்தது. திருமணம் செய்து கொண்டு குடும்பம் அமைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் எம்.ஜி.ஆரோடு அரசியல் நட்பு ஏற்பட அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்தார். எம்.ஜி.ஆரோடு 28 படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு, அந்த நெருக்கமே அரசியலிலும் கால்பதிக்க வைத்தது. கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற புதிய பதவியையே உருவாக்கிக் கொடுக்கப்பட, திரை நட்சத்திரம் என்ற தளத்தில் இருந்து அரசியல் பொறுப்புக்கு மாறினார் ஜெயலலிதா. மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜெயலலிதாவை உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அதேசமயம் தான் மிகவும் கட்டுப்படுத்தப்படுவதாகவும், கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதாகவும் ஜெயலலிதா உணர்ந்தார். சுதந்திரமாகச் சிந்தித்தும், செயல்பட்டும் பழகிய அவருக்கு இது அழுத்தங்களைக் கொடுத்தது. இதுதான் தீவிர அரசியலைக் கையில் எடுக்க வைத்தது.

Jaya_12_15226.jpg

எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக அவர் கருதிக் கொண்டிருந்த நிலையில், எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் உறவினர் தீபனால் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) கீழே தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா. தமிழகம் மட்டுமல்ல உலகமே நேரடி ஒளிபரப்பில் அந்த அவமான நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்க... அதுவே ஜெயலலிதாவுக்கு பாசிட்டிவ் நிகழ்வாக மாறிப்போனது. அவரின் உள்ளிருந்த நெருப்பு எரிமலையாக மாறியது.

ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே!

அதிமுக-வானது ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, சொல்லத்தக்க அளவில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று எதிர்க்கட்சி தலைவராக வந்தமர்ந்தார். இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுகவையும் கைப்பற்றி முதல்வராகவே ஆனார். இதனால், எம்.ஜி.ஆரா... கருணாநிதியா... என்றிருந்த தமிழக அரசியலை ஜெயலலிதாவா...! கருணாநிதியா...! என மாற்றியமைத்தார். தமிழகத்தின் முதல்வராக 6-முறை அரியணை ஏறிய ஜெயலலிதா, முதல்வராகவே நம்மிடமிருந்து விடைபெற்றார்.

Jaya_15_15462.jpg

தனக்கே உரித்தான ஆக்ரோஷ குணம், எதிர்த்து நிற்கும் துணிச்சல், அவமானங்களை அடுத்த வெற்றிக்கான ஊக்கமாக எடுத்துக்கொள்ளும் திறன் ஆகியவை திரையுலகம், பொதுவுலகம், அரசியல் உலகம் என்ற அனைத்திலும் ஜெயலிதாவின் வெற்றிக்கு துணையாக அமைந்தன.
ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை!

http://www.vikatan.com/news/jayalalithaa/74388-how-komalavalli-became-lady-icon-of-tamilnadu.art

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரைப் போல வாட்ச் உடன் ஜெ. அடக்கம்

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், எம்.ஜி.ஆர் சமாதி அருகே 60 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சந்தனப்பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரைப் போல வைரகற்கள் பதித்த வாட்சுடன் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15319444_1336480539698239_2020618873_n_2

முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக போயஸ்கார்டனிலிருந்து இன்று காலை ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 4.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராணுவ பீரங்கி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் அண்ணாசாலை, வாலாஜாசாலை வழியாக எம்.ஜி.ஆர் சமாதியை அடைந்தது. அந்த வாகனத்தில் முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம், சசிகலா, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், டாக்டர் சிவகுமாரின் மனைவி உள்பட 5 பேர் அமர்ந்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் சமாதி அருகே இறுதி ஊர்வலம் வந்தபோது முதல் அமைச்சர் அகிலேஷ்யாதவ்வும் ஏறிக் கொண்டார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையடுத்து ஜெயலலிதாவின் உடல், சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. அந்த பேழையில் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா என்ற வாசகம் தமிழ், ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

60 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மாலை 6.06 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வாட்சுடன் சேர்த்து எம்.ஜி.ஆரின் உடல் புதைக்கப்பட்டது போல ஜெயலலிதாவுடன் அவர் அணிந்திருக்கும் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வாட்ச், கிரீன் எம்ரால்டு மோதிரம், தங்க வளையல் ஆகியவற்றுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா அணியும் ஃப்ராங் முல்லர், கேலட் என்ற அந்த வாட்ச்சின் விலை பல லட்சம் என்கிறார்கள். விலை உயர்ந்த அந்த வாட்சை அவர் வாங்கும்போது தன்னுடைய தோழியான சசிகலாவுக்கும் சேர்த்தே வாங்குவாராம். இறுதி அஞ்சலியில் ஜெயலலிதாவைப் பிரிந்த துக்கத்தில் கவலை தொய்ந்த முகத்தில் சசிகலா நின்று கொண்டு இருந்தார்.

http://www.vikatan.com/news/jayalalithaa/74334-jayalalithaa-buried-with-her-wrist-watch-like-mgr.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல் இதுதான்!

ஜெயலலிதா

‘சந்தியாவின் மகளாய் பிறந்தார்... இந்தியாவின் மகளாய் மறைந்தார்’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர், மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும்... அவர் செயல்படுத்திய திட்டங்களும், சாதனைகளும் என்றும் மக்கள் மனதைவிட்டு அகலாதவை. அவர், திரை மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டும் கோலோச்சவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் புலமை வாய்ந்த பெண்மணியாக ஜொலித்த ஜெயலலிதாவுக்கு எழுத்துகள் என்றால் உயிர். தன்னுடைய சிறு வயதிலேயே ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் புத்தகம் படித்தவர் அவர். இலக்கியத்தின் மீதும், எழுத்துகளின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த ஜெ-வின் இன்னொரு பயணம்தான் இந்தக் கட்டுரை. 

jayalalitha83546-600-06-1481007438_13389

‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல!''

சென்னையில் பள்ளியில் படிக்கும்போதே ஜெயலலிதா ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்தார். தன் மகள் படிப்பதற்காக தாய் சந்தியா ஏராளமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ஒரே மூச்சில் பல காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தமிழில் வெளியான மூதறிஞர் ராஜாஜி எழுதிய, ‘சக்கரவர்த்தி திருமகன்’ நாவலை அவர் படித்தார். ஜெயலலிதாவுக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். அதுகுறித்து அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்று ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜெ-வை மிகவும் கவர்ந்த நாவல்!

pp_13135.jpgபடப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு தயாராகும் முன்பு, ஆங்கில நாவல்களுடன் மூழ்கியிருப்பார். சார்லன்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டேன், ஷிட்னி ஷெல்டன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை ஜெயலலிதா விரும்பிப் படிப்பார். நாவல்களைப் போலவே கவிதைகளைப் படிப்பதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சாமர்ஸெட்டின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கமாட்டார். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் ஏதாவது ஓர் ஆங்கில நாவலைப் படிக்க ஆரம்பித்துவிடுவார். ‘1960-70-ம் ஆண்டுகளில் அவ்வப்போது வெளிவந்த ஆங்கில நாவல்களைப் படிக்கும் ஒருசில திரை நட்சத்திரங்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அன்றைய சமயத்தில், ஆங்கிலத்தில் வெளியான திரில்லர், சமூகம், குடும்ப உறவுகள் கலந்த உணர்வு சம்பந்தமான நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். ‘‘புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஜங் சாங் (jung chang) எழுதிய ‘வைல்டு ஸ்வான்ஸ்: த்ரி டாட்டர்ஸ் ஆஃப் சைனா’ (Wild Swans: Three Daughters of china) என்கிற நாவல்தான் தன்னை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று’’ என ஓர் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. அதில், பெரும்பாலான புத்தகங்கள் எல்லாமே நாவல்கள்தான். அதிலும் ஆங்கில நாவல்கள்தான் அதிகம். அதேபோன்று, கொடநாடு எஸ்டேட்டிலும் ஒரு பெரிய நூலகம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தனக்கு வேண்டிய ஆங்கில நாவல்களை வாங்கிவந்திருக்கிறார் ஜெயலலிதா.

khushwant-singh_%281%29_13427.jpg

‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள்!'' 

ஒருமுறை ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸுக்கு, ஜெயலலிதாவே நேரில் சென்று புத்தகங்கள் வாங்கிய நினைவலைகளை அந்த நிறுவனத்தாரிடம் பேட்டியெடுத்து ஒரு பத்திரிகை வெளியிட்டது. அவருடைய காரில் உடைகள், பொருட்கள் போன்றவற்றோடு புத்தகங்களும் அதிகம் இருக்கும். ‘‘தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் குஷ்வந்த் சிங்கும் ஒருவர்’’ என்று ஜெயலலிதா ஒருமுறை கூறியிருந்தார். 1992-ம் ஆண்டில் சட்டசபை நடவடிக்கைகளை விமர்சித்த ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ (illustrated weekly) இதழ் குறித்து பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘‘ ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ இதழில் குஷ்வந்த் சிங் பணியாற்றிய வரை தரமானதாக இருந்தது. தற்போது தரம் குறைந்துள்ளதாக எண்ணுகிறேன்’’ என்று விமர்சனம் செய்தார். ஜெயலலிதா எம்.பி-யாக இருந்த காலத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவர், ‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உங்களைப் (ஜெயலலிதாவை) பார்த்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன்’’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

எழுத்துகள் உயிரானவை! 

ஜெயலலிதா எழுத்தாளராகவும் கோலோச்சினார். ‘துக்ளக்’ இதழில், ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கட்டுரையை எழுதத் தொடங்கி, பின்னர் இந்திய அரசியல், சர்வதேச விவகாரங்கள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுத ஆரம்பித்தார். ‘இந்திய மருத்துவர்களின் அலட்சியம்’, ‘கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம்’, ‘ஜோஸ்யத்தின் சாத்தியம்’ என அவர் ஆழமான கட்டுரைகள் எழுதினார். இது தவிர, ‘குமுதம்’ வார இதழிலும் எழுத ஆரம்பித்தார். ‘தாய்’ பத்திரிகையில், ‘எனக்குப் பிடித்தவை’ என்ற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை, ஓராண்டு காலம் எழுதினார். தாய் இதழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயலலிதா இருந்தார். ‘பொம்மை’ இதழில் ‘அழகுக்கலை’ பற்றி எழுதினார். 1980-ம் ஆண்டு ‘கல்கி’ இதழில், ‘உறவின் கைதிகள்’ என்ற தொடரை எழுதினார்.

DSC03399_13317.JPG

 

இதுதவிர, இன்னும் பல... தன் கைவண்ணத்தில் உருவான எழுத்துகளை எல்லாம் பத்திரிகை உலகுக்கு எழுதி, தன்னை ஓர் எழுத்தாளராய் பறைசாற்றிக் கொண்டார் ஜெயலலிதா. அவர், இன்னும் பலவற்றை எழுத நினைத்திருக்கலாம் அல்லது படிக்க நினைத்திருக்கலாம். ஆனால், காலனுக்குத்தான் அவசரம் பொறுக்கவில்லை போலும். அவருடைய மூச்சுக்காற்றை நிறுத்தி... மெரினா கடற்கரைக் காற்றைச் சுவாசிக்க வைத்துவிட்டான் அந்தக் கல்நெஞ்சக்காரன். உயிரைப் பறித்த அவனுக்குத் தெரியாது. அவருடைய எழுத்துகள் உயிரானவை என்று.

http://www.vikatan.com/news/tamilnadu/74437-do-you-know-which-novel-jayalalithaa-likes.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா ரசித்து பார்த்த சீரியல்

Jai_2_13278.JPG

முதல்வர் ஜெயலலிதா தினமும் மாலை நேரங்களில் விரும்பிப்பார்க்கும் சீரியல் 'ஜெய் வீர ஹனுமான'. இதை பார்க்கும்போது மிகவும் பயபக்தியுடன் செருப்பை கழட்டிவிட்டு, வெறுங்காலுடன் சேரில் அமர்ந்தபடி பார்ப்பாராம். அந்த சீரியல் பார்க்கும் அரை மணி நேரத்தில் போன் எதுவும் எடுக்கமாட்டாராம். ஏதாவது முக்கிய ஃபைல்களில் கையெழுத்து என்றாலும் கூட, அவரது உதவியாளர்கள் அருகில் போக மாட்டார்கள்.

இடையில் அவர் அப்போலோவுக்கு போனபிறகு, அவரால் அந்த சீரியல் பார்க்கமுடியவில்லை. கடைசி சில நாட்களில் அவர் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டதும், நல்ல நினைவுடன் இருந்தார். அவர் அறையில் டி.வி. ஒன்றை வைக்கச் சொன்னார். மாலை நேரங்களில் சீரியல் பார்க்கும் நேரத்தில் யாரும் அருகில் வரவேண்டாம் என்று முன்கூட்டியே ஜெயலலிதா உத்தரவிட்டாராம். சீரியல் ஆரம்பமாகும் முன், பெட்டை விட்டு எழுந்து சேரில் அமர்ந்தபடி மிகவும் பயபக்தியுடன் பார்த்தாராம். சில நேரங்களில் எழுந்து நின்று வணங்கினாராம். சீரியல் முடிந்த பிறகு, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு பெட்டில் படுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

http://www.vikatan.com/news/jayalalithaa/74462-this-is-the-last-seen-serial-by-jayalalithaa.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் ஜீவகாருண்யம்!

 

 
jayalalithaa

விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப் பிரியம் உண்டு.
ஒரே சமயம் போயஸ் தோட்ட இல்லத்தில் மொத்தம் 14 நாய்களை அவர் வளர்த்து வந்துள்ளார். நாய்களை எப்போதும் அவர் செல்லமாக குட்டி என்றே அழைப்பாராம். அவர் வெளியூர் செல்லும்போது கால்நடை மருத்துவரை அழைத்து, "நான் இத்தனை நாள்கள் வெளியூர் போகிறேன். என் செல்லக் குட்டிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பாதுகாத்துவிட்டுத்தான் அவர் வெளியூர் போவது வழக்கம்.
கால்நடை மருத்துவத் துறையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பணியாற்றியவர் டாக்டர் பலராமன். இவர் 1988 -ஆம் ஆண்டிலிருந்து 2011 -ஆம் ஆண்டு வரை சுமார் 23 ஆண்டுகள், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்புப் பிராணிகளான நாய்களுக்கு மருத்துவம் பார்த்து, அவற்றைப் பராமரித்தவர்.
ஜெயலலிதாவின் ஜீவகாருண்யத்தையும், பிராணிகள் மீதான அன்பையும் விவரிக்கும் அவர், தனக்கும், தன் குடும்பத்துக்கும் பல்வேறு உதவிகளை ஜெயலலிதா செய்துள்ளார் என்று நன்றியுடன் நினைவு கூருகிறார்.
ஜெயலலிதாவின் வளர்ப்புப் பிராணிகளைப் பேணியது குறித்த பலராமனின் அனுபவங்கள்:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் ஒரு சமயத்தில் உமா என்ற நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் இருந்தது. அந்த நாய் ஒரே நேரத்தில் 14 குட்டிகளை ஈன்றது. அனைத்து நாய்க்குட்டிகளும் அதே வீட்டில் தான் வளர்க்கப்பட்டன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தான் வளர்க்கும் நாய்களைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அத்தனை நாய்களையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தி வீட்டின் மாடிக்கும் அனுப்புவோம். அங்கு அவற்றுக்கு பிஸ்கெட், சாக்லெட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, மனிதர்களோடு பேசுவது போல அவற்றோடும் பேசி நேரம் செலவிடுவார் ஜெயலலிதா.
அதில் ஏதாவது ஒரு நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, முடி கொட்டுகிறது என்றாலோ என்னை அழைத்து விவரம் தெரிவித்து, உடனே கவனிக்கச் சொல்லுவார்.
பிரதமர் சந்திப்பை தவிர்த்தார்: ஹைதராபாத்திலுள்ள பண்ணை வீட்டுக்குச் செல்லும்போது எல்லாம் தனக்கு பிடித்தமான ஏதாவது நாயை உடன் அழைத்துச் செல்ல விரும்புவார். அவர் விமானத்தில் செல்வார், நாங்கள் நாயை அழைத்துக் கொண்டு ரயிலில் செல்வோம். அங்கு தங்கியிருக்கும் நாள்கள் வரை தினமும் காலை, மாலை வேளைகளில் அதனோடு விளையாடவும், நேரம் செலவழிக்கவும் செய்வார். மனிதர்களிடம் கனிவு காட்டுவதுபோலவே பிராணிகளிடத்திலும் அன்பாகவும் பழகுவார்.
முதல்வராக இருந்த சமயத்தில் ஒருமுறை ஜெயலலிதா ஹைதராபாத்துக்குச் சென்றார். அங்கிருந்து தில்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்திப்பதாகத் திட்டம். அதற்காக பிரதமரிடம் அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த முறை ஹைதராபாத்துக்குச் செல்லும்போது ஜூலி என்ற பொமேரியன் நாயை அழைத்து வர பணியாளர்களிடம் சொல்லியிருந்தார். அந்த நேரம் நான் உடன் செல்லவில்லை.
ஜூலி சற்று வயதான நாய் என்பதாலும், கோடைக்காலம் என்பதாலும் ரயிலில் கொண்டு செல்லும்போது, அதிக வெப்பத்தின் காரணமாக ஹைதராபாத் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டது. ஹைதராபாத் சென்று ஊழியர்கள் இதனைத் தெரிவித்ததும், மிகவும் கவலைக்குள்ளாகி பிரதமரின் சந்திப்பை ரத்து செய்துவிட்டு உடனே சென்னை திரும்பினார். அவரோடு விமானத்திலேயே இறந்த நாயின் உடலும் கொண்டு வரப்பட்டு, போயஸ் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் நாய்கள் அனைத்தும் வயதாகி ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்தது. அதன் பின்பு ஜெயலலிதாவிடம் புதிய நாய்க்குட்டிகள் வாங்குவோமா என்று கேட்டதற்கு, "வேண்டாம்' என்று மறுத்துவிட்டார். 2011 -ஆம் ஆண்டுக்குப் பின்பு போயஸ் தோட்டத்தில் நாய்கள் எதுவும் இல்லை.
குருவாயூருக்கு யானை அன்பளிப்பு: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கோயிலுக்கு யானையை அன்பளிப்பாக வழங்குவதாக ஜெயலலிதா வாக்களித்த பின்னர், அதற்கான யானையைத் தேர்வு செய்தவற்காக நான் கேரளத்துக்கு அனுப்பப்பட்டேன். ஒரு வாரம் தங்கியிருந்து 10 யானைகளைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்து வந்து கொடுத்தேன். அதிலிருந்து கிருஷ்ணா என்ற 16 வயது யானையைத் தேர்வு செய்து அன்பளிப்பாக அளித்தார் என்றார் அவர்.
மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் டாக்டர் பலராமன், கடந்த செப்டம்பர் 22 -ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் குணமாக வேண்டும் என்று 2 முறை மொட்டை போட்டுக் கொண்டதாகத் தெரிவித்தா

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

‘எதிர்த்துதான் நின்றேன்; எதிரியாக அல்ல!’ ஜெயலலிதாவின் முதல் போட்டியாளர் நெகிழ்ச்சி!

 

ஜெயலலிதா

 

''இதெல்லாம் நடக்கும்னு நான் எப்படி நினைச்சுப் பார்க்கலையோ, அதேபோலதான் அன்னைக்கும் அதெல்லாம் நடந்ததை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அ.தி.மு.க. கட்சி ரெண்டா உடைஞ்சது. ஜானகி அம்மாவும் ஜெயலலிதா அம்மாவும் ரெண்டு அணிகளா பிரிஞ்சாங்க. 1989-ல முதன் முதலா ஜெயலலிதா அம்மா போடி சட்டமன்றத் தொகுதியில போட்டியிட்டாங்க. அவங்களை எதிர்த்து ஜானகி அம்மா என்னைத் தேர்தல்ல போட்டியிட வெச்சாங்க. வெற்றி அம்மாவுக்கு தான். என்னதான் நான் அன்னைக்கு ஜெயா அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எப்பவும் அவங்க எனக்கு நல்ல தோழிதான்'' கண்ணீர் மல்கப் பேசுகிறார் 'வெண்ணிற ஆடை' நிர்மலா.

1965-ம் ஆண்டில் வெளியான 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா இருவருமே அறிமுகம் ஆனார்கள். எம்.ஜி.ஆரின் 'ரகசிய போலிஸ் 115' உள்ளிட்ட 5 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர்  இருந்த காலகட்டத்தில்  அவருடன் கட்சியில் உறுப்பினராக இருந்த நிர்மலா, பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். திரைத்துறையில் ஆரம்பித்து அரசியல் களம் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை இணைத்துக்கொண்டிருந்தவரிடம், மலரும் நினைவுகளைப் பகிரக் கேட்டோம்.

''தனி ஒரு பெண்ணா இருந்துகொண்டு அரசியலில் சாதித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான அன்பாலும் மரியாதையின் காரணமாவும்தான், நான் திரும்பவும் அவங்க முன்னிலையில அ.தி.மு.க-வுல இணைஞ்சேன். எனக்கு அவங்க நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பை கொடுத்தாங்க. மறைந்த தலைவர் எம்.ஜி.ஆரும் எனக்கு அதே பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

 

j2_11430.png

ஜெயலலிதா அம்மா ரொம்ப தைரியமானவங்க. எம்.ஜி. ஆர் இறந்த சமயத்துல ராஜாஜி மஹால்ல, பீரங்கி வண்டியில் அமர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கீழ தள்ளப்பட்டாங்கன்னு, அந்தப் பழைய செய்தியை எல்லாரும் நினைவுல கொண்டு வர்றாங்க. அந்த ஒரு சம்பவம் மட்டுமில்ல... இதுபோல அவங்க வாழ்க்கையில பல கஷ்டங்களை அனுபவிச்சு இருக்காங்க.

ஒருமுறை தேர்தல் நடந்து முடிஞ்ச சமயத்துல அவங்களுக்கு ஒரு விபத்து நடந்துச்சு. வேகமா வந்த லாரி அவங்க போன வாகனத்தில் மோதி, கால்ல அடிபட்டுருச்சு. ஆனாலும் மனம் தளராம அதுல இருந்து குணமாகி மீண்டு வந்தாங்க. அந்த தைரியமும் p20d_11141.jpgதன்னம்பிக்கையும்தான் பல சோதனைகளையும் தாண்டி அவங்களை முதல்வராக்கி அழகுப் பார்த்துச்சு.

ஜெயலலிதா அம்மாவோட பழகின நாட்களை இப்ப நினைச்சாலும் சந்தோஷம்தான். எங்க ரெண்டு பேருக்குமே ஷூட்டிங் சமயத்துல சேலை கட்டிக்கத் தெரியாது. ஒருத்தருக்கு கட்டி முடிக்குற வரைக்கும் இன்னொருத்தர் காத்திருப்போம். ஹேர் ஸ்டைல், மேக்கப் பத்தியெல்லாம் நிறையப் பேசுவோம். எங்க ரெண்டு பேருக்குமே பரதநாட்டியத்துல ஈடுபாடு இருந்ததால நாட்டியம் பத்தியும், எங்க குருநாதர்களைப் பத்தியும் நிறையப் பேசுவோம். என்னதான் நெருங்கிப் பழகினாலும் 'வாங்க', 'போங்க'னு மரியாதையாதான் பழகுவாங்க. தேவையில்லாம பெர்சனல் விஷயங்களைப் பேச மாட்டாங்க. நாகரிகமா பழகுற பக்குவத்தை அவங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.

ஜெயலலிதா அம்மாவுக்கும் எனக்கும் தயிர்சாதம் ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் டைம்ல பெரும்பாலும் அதுதான் எங்களுக்கு லன்ச். உடல் எடை கூடாம இருக்க என்ன பண்ணனும்னு  நாங்க ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அதெல்லாம் ஒரு நிலாக்காலம். அவங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம். பல மொழிகள் பேசக்கூடியவங்க. கடைசி காலம் வரை கட்சிக்காகவும் மக்களுக்காகவுமே தங்களை அர்ப்பணிச்சவங்க.

கடைசியா அவங்களை நான் ஒரு தருணத்துல சந்திச்சப்போ, 'உங்ககிட்ட நான் நிறையப் பேசணும், நேர்ல வந்து பாருங்க'னு சொல்லி இருந்தாங்க. ஆனா கடைசி வரைக்கும் அவங்களைப் பார்க்க முடியாம இந்தக் கோலத்துல பார்ப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கல!"

கண்ணீர் பெருக நிறுத்துகிறார் நிர்மலா!

ஜெயலலிதா இன்னும் பலரின் நினைவுகளில் நீங்காமல் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்!

http://www.vikatan.com/news/tamilnadu/74449-emotional-view-of-jayalalithaas-first-competitor.art

Link to comment
Share on other sites

நிலம்... நீர்... நீதி! நீர்நிலைகள் மீது ஜெயலலிதா காட்டிய அக்கறை! #NilamNeerNeedhi

 

needhi_19503.jpg

மிழகத்தின் பல பாகங்களை உலுக்கி எடுத்தது, கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழை. இதில் சிக்கி சின்னாபின்னமானது சென்னை. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளத்தால் தத்தளித்தன மாநகரமும், அதைச் சுற்றியிருக்கும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளும். ஆனால், அடுத்த ஓரிரு வாரங்களிலேயே இந்த மழையின் பாதிப்பு துளியும் இல்லாதவாறு இப்பகுதிகள் மாறிப்போயின. ஏரிகள் உள்ளிட்ட பல நீர்நிலைகளும் வறண்டுபோயின. தாறுமாறான வெள்ளம் வந்ததற்கும், அதைத் தொடர்ந்த நாட்களில் ஏரிகள் வறண்டு போனதற்கும் காரணம், நீர்நிலைகளை நாம் சரிவர பராமரிக்காததே என்கிற உண்மை உறைத்தபோது உருவானதுதான் விகடனின் நிலம்... நீர்... நீதி எனும் திட்டம்! அறத்திட்டப்பணிகளுக்காக விகடன் நடத்திவரும் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக விகடன் வாசகர்களையும் கைகோத்துக் கொண்டு ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நீரியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, சென்னையை அடுத்த வண்டலூர்-ஒரகடம் பகுதியில் உள்ள ஏரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் திட்டம் தயாரானது. பெரும்பாலான ஏரிகள், மாநில அரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.

ஜெயலலிதா


இந்நிலையில் தேர்தல் குறுக்கிடவே, நாம் காத்திருந்தோம். மே மாதம் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றது. மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு நிலம் நீர் நீதி திட்டம் குறித்தும், இதன் மூலமாக ஏரிகளைச் சீரமைக்க விரும்புவது குறித்தும் விளக்கமாக ஒரு கடிதத்தைத் தயாரித்து, முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில், அவருடைய உதவியாளர்களிடம் நேரடியாகக் கொண்டு போய்க் கொடுத்தோம்.

அடுத்த சில நாட்களிலேயே தன்னுடைய தனிச் செயலாளர் மூலமாக பொதுப்பணித்துறையின் செயலாளர் எஸ்.கே. பிரபாகருக்கு நம்முடைய கடிதம் குறித்தத் தகவல்களை அளித்து, விகடன் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு உரிய உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரின் தனிச் செயலாளர் மூலமாக இந்தத் தகவல் நமக்கும் வந்துசேர, பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம். ஆர்வத்துடன் வரவேற்றவர்கள், நாம் செய்யவிருக்கும் பணிகள் குறித்து விவரமாகக் கேட்டறிந்தனர். பிறகு, பொதுப்பணித்துறையின் பாலாறு வடிநிலப் பகுதி அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

nilam_19500.jpg


அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட ஏரிகளை, துறை அதிகாரிகள் நமக்குக் காட்டினார்கள். ஏரிகளின் தன்மை, தூர்வாரப்பட வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விவரங்களையும் நமக்குக் கொடுத்தனர். முடிவாக, 103 ஏக்கர் பரப்பளவில் உள்ள சாலமங்கலம் ஏரி தேர்ந்தெடுக்கப்பட்டது. கூடவே, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி மற்றும் சிறு குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கையில் எடுத்தோம். ஏரிகளுக்குள் இருந்த வேலிகாத்தான் மரங்கள், செடி கொடிகள் முழுவதும் அகற்றப்பட்டன.

கடந்தாண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்டிருந்த கரைப் பகுதிகள் சரிசெய்யப்பட்டதோடு, முழு கரையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்கால்வாய்களும் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக நீர்ப்பள்ளங்களும் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. மதகு உள்ளிட்ட சில பணிகளே மீதம் உள்ளன.

nid_19168.jpg

 


முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது, எதிர்மறை விமர்சனங்களை முழுமையாக விகடன் குழும இதழ்களில் எடுத்து வைத்துக் கொண்டே இருந்தோம். குறிப்பாக, ஜெயலலிதா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்டவை குறித்தும் மிக விரிவாகவே விகடன் குழும இதழ்களில் எழுதி வந்தோம். இத்தகைய சூழலிலும், நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக  விகடன் முன்னெடுத்த நிலம் நீர் நீதி திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். தன்மீது விகடன் வைக்கும் விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், பொதுநலன் கருதி விகடன் எடுக்கும் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்கிற அவருடைய அக்கறையை வெளிப்படுத்துவதாகவே இருந்தது அவருடைய இந்த நடவடிக்கை!
தூர்வாரப்பட்ட சில ஏரிகளில் தற்போது பெய்துள்ள மழைக்கே நீர் நிரம்பி வருகிறது. இந்த ஏரிகள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கின்றது!

இந்த நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அக்கறை மிகுந்த வழிகாட்டுதலையும் நடவடிக்கையையும் நன்றியுடனும் நெகிழ்வுடனும் நினைவுகூர்கிறோம்.

http://www.vikatan.com/news/coverstory/74513-jayalalithaas-care-on-chennai-water-bodies-nilamneerneedhi.art

Link to comment
Share on other sites

‘அந்த கடைசிப் பார்வையில் எந்த அசைவுமில்லை..!’ #ஜெயலலிதா பாதுகாவலர் பெருமாள்சாமி

பெருமாள்சாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அதைத் தவிர மாநில போலீசார் என 36 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சுற்றியே எப்போதும் வலம் வருவார்கள். இவர்களை மீறி யாரும் அவரை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. ஒவ்வொரு முதல்வரும், தங்களுக்கு பிடித்த பாதுகாவலர்களேயே தேர்வு செய்வார்கள். பொதுக் கூட்டம் நடந்தால் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் கூட சற்றுத் தள்ளிதான் நிற்பார்கள். மேடையை சுற்றிலும்தான் அவர்களது கண்காணிப்பு இருக்கும். ஆனால் மேடையில் முதல்வரின் இருபுறமும் சாதாரண சபாரி உடையில் கையில் ஆயுதம் ஏதுமில்லாத பாதுகாவலர்கள் இருவர் நிற்பார்கள். இவர்கள்தான் ஆந்தை போல அதீத விழிப்புடன் செயல்படுவார்கள்.

சமயத்திற்கு ஏற்ப சமயோசிதமாக அதீத புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிது இவர்களது பொறுப்பு. முக்கியமாக தேர்தல் பிரசாரக் காலக்கட்டங்களில் தலைவர்களை பாதுகாப்பதில் இவர்களது பங்கு அளப்பறியது. நீண்ட நாள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக இருந்தவர் பெருமாள்சாமி.

சில நேரங்களில் முதல்வர் கான்வாயை நிறுத்தி விட்டு, ரோட்டில் நிற்பவர்களிடம் மனு வாங்க ஆரம்பித்து விடுவார். அடுத்த விநாடி பெருமாள்சாமி மின்னல்வேகத்தில் முதல்வரின் இருக்கை அருகே ஆஜராகி விடுவார். அந்த சமயத்தில் இவரது கண்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன்தான் நோக்கும். முதல்வர் முகத்தை பார்த்தே எதிரே நிற்பவர்களை அப்புறப்படுத்தி விடுவார். எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் பெருமாள்சாமியின் ஒரு கண் முதல்வரின் மீதும் மற்றொரு கண் எதிரில் நிற்பவர்கள் மீது இருக்கும். முதல்வரின் குறிப்பறிந்து பெருமாள்சாமி செயல்பட்டால், இவரது குறிப்பறிந்து இவருக்கு கீழ் பணியாற்றும் பாதுகாவலர்களும் செயல்படுவார்கள்.

ele-1_17183.jpg

பெருமாள்சாமி முதல்வரை பாதுகாத்த சம்பவங்களுக்கு உதராணமாக ஒன்றை சொல்லலாம்.  ஜெயலலிதாவுக்கு யானைகள் மீதான பாசம் அதிகம். யானைகளுக்கு மிகவும் பிடித்த சீதோஷ்ண நிலை நிலவும் முதுமலையில் கோயில் யானைகளுக்கும் முகாம் நடத்தி வெக்கையில் கிடந்த அவற்றை ஓரளவுக்கு குதூகலிக்க வைத்தவர் ஜெயலலிதா. முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாமும் இருக்கிறது. அங்கு, காவிரி என்ற குட்டி யானை இருந்தது. முதுமலைக்கு ஒரு முறை சென்ற ஜெயலலிதா காவிரி  யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார். முதல்வரை சுற்றி கூடியக் கூட்டதைப் பார்த்து மிரண்ட குட்டி யானை, தும்பிக்கையால் முதல்வரை தள்ளி விட முயன்றது. ஜெயலலிதா திணறி விட, அருகில் நின்ற பெருமாள்சாமிதான் அரணவணைத்து முதல்வரை குட்டியானையிடம் இருந்து பாதுகாத்தார். 

அத்தனை விசுவாசம் மிகுந்த பெருமாள்சாமி மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வரின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை தந்திருக்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலக்கட்சியின் தலைவியின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக விளங்கிய அவரால், அவரின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் ராணுவ பயிற்சி பெற்ற இதயம். எந்த வேதனையையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. முதல்வர் உயிருடன் இருந்தால் எப்படி யாரும் அவரை நெருங்க விடாமல் பாதுகாப்பாரோ அதைப் போலவே ஜெயலலிதா உடலுக்கும் பாதுகாவலை பெருமாள்சாமியின் டீம் வழங்கியது. அப்பலோவில் இருந்து போயஸ் கார்டன். பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹால். தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி வரை பெருமாள்சாமிக் குழுவினர் பாதுகாப்பு வழங்கினார்.

ஜெயலலிதாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, சந்தனபேழையில் வைத்து மூடப்படும் கடைசிக் கட்டத்தில் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள்சாமி.அந்தப் பெட்டியின் மீது கையை வைத்து கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக முதல்வரின் கண் அசைவைக் கண்டு பெருமாள் சாமி செயல்படுவார். அந்தக் கடைசிப் பார்வையில், முதல்வரின் கண்களில் எந்த அசைவுமில்லை!

http://www.vikatan.com/news/tamilnadu/74499-about-perumalsamy-chief-security-officer-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

தமிழ்த் திரையின் சூரியகாந்தி: ஜெ.ஜெயலலிதாவுக்கு ஓர் அஞ்சலி

 

 
 
jayalalitha_collag_3101015f.jpg
 
 
 

தமிழ்த் திரையில் தனித்துத் தடம் பதித்த இயக்குநர் ஸ்ரீதர். காதலையும் அதன் புனிதத்தையும் காட்சிமொழியால் ஆராதித்த அவர், முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் படம் என்று அறிவித்து எடுத்த திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. முதன்மைக் கதாநாயகியாக நடிக்க முதலில் நிர்மலாவைத் தேர்வு செய்திருந்தார் இயக்குநர். என்ன நினைத்தாரோ பிறகு ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்துவிட்டார். சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் அவரது நடிப்பில் ஸ்ரீதருக்கு திருப்தியில்லாததால் ஜெயலலிதாவைக் கதாநாயகி ஆக்கினார். இரண்டு பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் தலையில் ஏற்றப்பட்ட சுமை அபரிமிதமானது. ஆனால், அற்புதமாகச் செய்திருந்தார். படத்தின் டைட்டில் கார்டில்கூட ‘ஜயலலிதா’ என்று அவர் பெயரைத்தான் முதலில் போடுவார்கள். அப்புறம்தான் நாயகன் ஸ்ரீகாந்த் பெயரே வரும்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை போன்ற பேதைக் காதலியின் கதாபாத்திரம். என்னவொரு நடிப்பு! அந்தப் படம் வயது வந்தவர்களுக்கான முத்திரையுடன் வந்த படம். ஜெயலலிதா முதிர்ந்த குழந்தை போல டாக்டரைக் கலாட்டா செய்து பாடும் ‘நீ என்பது என்ன?’ பாடலுக்கு அவர் ஆடியிருந்த நடனமும், அந்தக் காட்சிகளில் அவரது மழலைப் பேச்சும் எங்களையெல்லாம் வாயடைக்கவைத்தன. அப்போது எங்களுக்கு 16, 17 வயதுதான் இருக்கும். எங்களின் சமவயது கொண்ட ஜெயலலிதா 1965 மார்ச் மாதத்திலிருந்து எங்கள் கனவுக் கன்னியானதில் வியப்பில்லை.

இரண்டாவது படத்திலேயே ஈர்த்தார்

‘வெண்ணிற ஆடை’க்கு அடுத்து வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தன்னைவிட பலவயது மூத்தவரான எம்.ஜி.ஆருடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடித்தார். அந்தப் படத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கெமிஸ்ட்ரி மிக இயல்பாக உருவாகிவிட்டது. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இள வயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள்.

1961 வாக்கில் நடித்து 1966 வாக்கில் வெளிவந்த Epistle என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விமர்சனம் வந்ததாக நினைவு. 1966 பொங்கலுக்கு வந்த ‘அன்பே வா’ நன்கு ஓடியபோதும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ அளவுக்கு ஓடவில்லை. இதில் சரோஜா தேவிக்குப் பதிலாக ஜெயலலிதா நடித்திருந்தால் வெள்ளி விழாதான், தலைவர் கெடுத்துட்டாரே என்று அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.

முகராசி

அடுத்து வந்த ‘முகராசி’ அந்தக் கவலையைப் போக்கிற்று. அதில் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சிலம்பம் கற்கும் காட்சியை யாரும் மறக்க முடியது, அதற்கேற்ற உடல்வாகு கொண்ட நடிகை அன்று அவர்தான். முகராசி என்ற தலைப்பு ஏற்ப அவரது முகம் காந்தமாய்க் கவரத் தொடங்கியது. அதேபோல் நளினம், அழகு, வேகம் ஆகிய மூன்று அம்சங்களையும் நடனத்தில் இலகுவாக வெளிப்படுத்திய திறமை அவரிடம் குடிகொண்டிருந்தது. அவருக்கு அதிகப் படங்களில் நடனம் அமைத்தவர் தங்கப்பன் மாஸ்டர். அது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தங்கப்பன் செவ்வியல், நவீன நடனத்தின் சரியான கலவை. அதற்காக அவரது ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் ஜெயலலிதா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

அவரது நடனத்திறனுக்கு இன்னொரு சம்பவம். ‘புதிய பூமி’ படத்தில் இடம்பெற்ற ‘நெத்தியிலே பொட்டு வைச்சேன், நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்’ என்ற பாடலுக்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தினார்கள். அது எடிட் ஆகி முடிந்ததும், “ கால் முட்டியை ஒடைச்சிட்டீங்க மாஸ்டர், என் மீது கோபமோ?” என்றாராம் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே. ஆனாலும், படத்தில் அந்தச் சிரமம் தெரியாமல் அபாரமாக ஆடியிருப்பார்.

நடிகர் திலகத்துடன் மின்னியவர்

சின்ன பாத்திரமே செய்திருந்தாலும் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சுந்தரராஜன், நாகேஷ் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம் அது. அதில் அந்த இருவரையும் விட தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அவர்களையே ஓரங்கட்டியிருப்பார். அதன் பிறகு ஜெயலலிதா பாலசந்தர் படம் எதிலும் நடிக்கவில்லை.

‘கண்ணன் என் காதலன்’ படத்தில் அவர் நடிப்பு அபாரமானது. ‘குமுதம்’ பத்திரிகை, தன் விமர்சனத்தில், “வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். மட்டும்தான் இருப்பார். ஆனால் இதில் கதையும் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, ஜெயலலிதா நடிப்பையும் பாராட்டியிருந்தது.

‘கிலோனா’ என்னும் இந்திப் படத்தின் தழுவலான ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில், முதல் பகுதியில் சிவாஜி கணேசனின் மிகையான நடிப்பைத் தன் இயல்பான நடிப்பால் ஜெயலலிதா வென்றிருப்பார். பிற்பகுதியில் சிவாஜி ரொம்பவும் அடக்கி வாசிப்பார். படம் முழுதும் ஜெயலலிதாவின் நடிப்பு, கதாபாத்திரத்தை மட்டுமே முன்னிறுத்துவதாக இருக்கும்.

வாழ்வின் பிரதிபலிப்பு

1970-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ‘மாட்டுக்கார வேலன்’, ‘எங்க மாமா’ ஆகிய இரண்டு படங்களில் ‘எங்க மாமா’ படத்தில் அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தது. ‘மாட்டுக்கார வேலன்’ படம் வெள்ளி விழா கண்டதற்கு அவர் அந்தப் படத்தில் அவ்வளவு அழகாக இருந்ததும் ஒரு முக்கிய காரணம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. ‘தங்கக் கோபுரம்’, ‘முத்துச் சிப்பி’ படங்கள் இரண்டுமே அவரை மையமாக வைத்துச் சுழலும் படங்கள். அந்தப் படங்களுக்கு முழு நியாயம் செய்திருப்பார்.

‘சுமதி என் சுந்தரி’ படத்தின் கதையை அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட கதை என்றுகூடச் சொல்லலாம். படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போலவே அவர் தனது அபிலாஷைகளுக்கு எதிராகவே சினிமாத் துறைக்கு வந்தார். பொற்கூண்டு வாழ்க்கையிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு நடிகையின் கதையில் பிரமாதமாக நடித்திருந்தார். அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமான அன்றையப் பிரபல நடிகை அவர்.

அரசியல் வாழ்வின் ஆரம்பம்

‘குமரிக் கோட்டம்’ படத்தில் அவரது இரட்டை வேட நடிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை, அதற்காகவே அது நன்றாக ஓடியது. அவர் காலத்தின் இளம் நடிகர்களான ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோ ருடன் நடித்த காதல் காட்சிகளைப் பெண்களும் விரும்பி ரசித்தனர்.

சோவின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அதில் நடித்ததின் மூலம் சோவுடனான நட்பு பலப்பட்டது. ஏற்கெனவே ‘அடிமைப் பெண்’ சோவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதே நேரத்தில் துக்ளக்கில் ஒரு கட்டுரைத் தொடர் அப்போது வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. ‘அது யார் என்று கண்டுபிடியுங்கள்’ என்று வாசகர்களுக்குப் போட்டி அறிவித்தார் சோ. கடைசியில் அது ஜெயலலிதாதான் என்று அறிவித்தார். ஜெயலலிதாவின் வாசிப்பு ஆளுமையை உணர்த்திய கட்டுரைகள் அவை. அதன் மூலமே தன் அரசியல் வாழ்க்கைக்கும் ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம்.

தன்னை நோக்கித் திரும்ப வைத்தவர்

புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார். அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. ‘அபிமான்’ இந்திப் படத்தின் தழுவல் என்றபோதும் தமிழுக்கு ஏற்ப மாற்றியிருந்தார் முக்தா சீனிவாசன். கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் இடம்பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

தனது திரையுலக வாழ்க்கையில் தான் எடுத்துக்கொண்ட எந்தப் பாத்திரத்திலும், தமிழ்த் திரையுலகையே ஒரு சூரியகாந்தியாகத் தன்னை நோக்கித் திரும்ப வைத்தவர் ஜெயலலிதா என்றால் மிகையில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/தமிழ்த்-திரையின்-சூரியகாந்தி-ஜெஜெயலலிதாவுக்கு-ஓர்-அஞ்சலி/article9417905.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

நேற்று... இன்று... நாளை!

 

ப.திருமாவேலன், படம்: ஸ்டில்ஸ் ரவி

 

னவு தேசமாம் சினிமாவில் நளினமாகவும், கனல் தேசமாம் அரசியலில் அச்சுறுத்தலாகவும் நின்று வென்ற ஜெயலலிதா, இதோ படுத்திருக்கிறார். அம்மா சந்தியா இறந்தபோது ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை முடிந்தது. எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இதோ இப்போது எதன் தொடக்கம்... எதன் முடிவு?

p6a.jpg

தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதியான ப்ரியம்கொண்டவர் ‘நடிகை’ ஜெயலலிதா. தினமும் காலையில் எழுந்ததும் சிறிது வெந்நீரில் எலுமிச்சம் பழத்தையும் தேனையும் கலந்து குடிப்பார். வைட்டமின் கிரீமால் முகத்தை மசாஜ் செய்துகொள்வார். முகத்தில் விளக்கெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு, பச்சைப் பயறு மாவைத் தேய்த்துக் கழுவுவார். கண்களுக்கு மேலேயும் விளக்கெண்ணெய் போட்டால், பளபளப்பாக இருக்கும் என்பார். வெண்ணையும் பயத்தமாவையும் சேர்த்து குளியலுக்குப் பயன்படுத்துவார்... இப்படி தனது அழகுக் குறிப்புகளை அடுக்கினார் ஜெயலலிதா. இவை எல்லாம் சினிமா நடிகையாக இருந்தபோது சொன்னவை. அப்போதும் அதற்குப் பின்னாலும் அழகுக்குக் காட்டிய அக்கறையை உடல்நலத்தில் ‘அரசியல்வாதி’ ஜெயலலிதா காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகள் துன்பத்துக்கும் கடந்த இரண்டு மாதத் துயரத்துக்கும் இதுதான் காரணம்!

தனக்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருப்பதையும், தன்னைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர் மகிழ்வதையும் மனதுக்குள் சேகரித்தபடியே செல்வதில் அதீத ஆசைகொண்டவர் ஜெயலலிதா. ஆனால், அவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்வதையும் கண்ணீரால் நனைந்து நிற்பதையும் அவர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைப்பார். இன்று அவர் அறியாமலேயே அனைத்தும் நடக்கின்றன. மருத்துவமனைக்குப் போனால் இமேஜ் போய்விடும் என்று நினைத்தார். உடம்பே போன பிறகு இமேஜ் பற்றி கவலைப்படும் நிலைமையில் ஜெயலலிதா இல்லை.

‘நான் நினைத்தது மாதிரி வாழ்க்கை அமையவில்லை’ என்று ஜெயலலிதா வருந்தியது உண்டு. நினைத்தது மாதிரியான நிம்மதியும் அவருக்கு அமையவில்லை என்பதே செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் நாம் பார்த்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் சொன்னது. போயஸ் கார்டன் வீட்டில்வைத்தே அவருக்கு இதயத் தாக்கு ஏற்பட்ட நிலையில்தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமச்சந்திரா மருத்துவமனையில் தனக்கான உடல் பரிசோதனைகளைச் செய்துவந்த ஜெயலலிதாவை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தது இதனால்தான். ராமச்சந்திரா மருத்துவமனை மிகத் தொலைவில் இருந்ததால், அருகில் இருக்கும் அப்போலோவில் சேர்த்தார்கள்.

p6b.jpg

முதல் இரண்டு நாட்கள் மிகச் சாதாரணப் பரிசோதனைகள்தான் அவருக்குத் தரப்பட்டன. இயல்பாக இருந்தார்; பேசினார். காய்ச்சல் ஓரளவு குறைந்தது. ஆனால், செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்குப் பிறகு உடல்நிலை மோசம் அடையத் தொடங்கியது; அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திடீரென அவரது கை, கால், வாய் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக நீரிழிவு நோய்ச் சிகிச்சை எடுத்துவந்தவர் ஜெயலலிதா. அது அவரது சிறுநீரகத்தைப் படிப்படியாகப் பாதித்தே வந்தது. இந்தச் சூழலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் இயல்பு நிலைமையில் இல்லாமல்போனது. நுரையீரல், இதயம் ஆகிய இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டதன் காரணமாக, அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது. செயற்கை சுவாசம் இல்லாமல் அவரால் இயங்க முடியாத நிலைமை, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதலே இருந்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தேக்கம் அடைந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் அழைத்துவரப்பட்டார். லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரிச்சர்டு பெய்ல், செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அப்போலோ வந்தார். நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகத்தான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அதை நீக்குவதற்காக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவருக்குத் தரப்பட்டன. தொடர்ந்தும் அதிக அளவிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை உட்செலுத்துவதால், உடலில் நிறமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 5-ம் தேதிதான், ‘முதலமைச்சருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை’ என்ற உண்மையை அப்போலோ மருத்துவமனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

ஒரே நேரத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகள், சுவாசத்துக்குத் தேவையான சிகிச்சை, இதய நோய் மருத்துவப் பரிசோதனை, நீரிழிவு நோய் சிகிச்சை... போன்ற பலதரப்பட்ட சிகிச்சைகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கை, கால் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்கான கதிரியக்கப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களையும் தாண்டி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையும் ஜெயலலிதாவுக்கு அவசியமானது. நுரையீரல் மருத்துவர் கில்நானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை துறை நிபுணர் அஞ்சன் டிரிக்‌ஹா, இதய மருத்துவ நிபுணர் நிதிஷ் நாயக் ஆகிய மூவரும், அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதாவைப் பரிசோதனை செய்தனர். இவர்கள் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் இங்கேயே தங்கியிருந்தார்கள். செயற்கை சுவாசம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்தது. அதோடுதான் அனைத்து சிகிச்சைகளையும் இந்த மருத்துவர்கள் செய்தார்கள். இதயத்தின் செயல்பாடு சீராக இருந்தால், மற்ற எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் அதை இதயம் முறைப்படுத்தி வழங்கும். எனவே, செயற்கை சுவாசத்தை லேசாக எடுத்துப் பார்த்து, ஜெயலலிதாவால் இயற்கையாக மூச்சு விட முடிகிறதா என்ற சோதனையை அக்டோபர் மாதம் 9-ம் தேதி, மருத்துவர்கள் செய்து பார்த்தார்கள். திருப்தியான அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதே நாளில் இருந்துதான் முதலமைச்சருக்கு பேஸிவ் பிசியோதெரபி செய்யப்பட்டது. தானாக அசைக்க முடியாத உடல் உறுப்புகளை, இயந்திரம் மூலமாக அசைக்க வைக்கும் பயிற்சி. சுவாசம், உடல் செயல்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையில்தான், ஜெயலலிதா இதுவரை கவனித்துவந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

சுவாசத்துக்கு மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் செய்த சிகிச்சை அக்டோபர் மாதம் 21-ம் தேதிக்குப் பிறகு ஓரளவு பயன்கொடுத்து, சுவாசம் சீரானது; ஆனால், உடல் இயக்கம் சீராகவில்லை. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்ட்கள் வந்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் கை, கால் இயக்கத்துக்குப் பயிற்சி அளித்தார்கள். அதன் பிறகு லேசாக முதலமைச்சர் பேச முயற்சித்தார். ஆனாலும் உடல் இயக்கம் சீராகவில்லை. எனவே, மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியது ஆயிற்று.

இந்த நிலையில் நவம்பர் மாதம் இறுதியில் சிறப்பு வார்டுக்கு முதலமைச்சர் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி, ஜெயலலிதா பற்றி இதுவரை வந்த செய்திகளுக்கு முழு விளக்கம் அளிப்பதாக அமைந்தது. அதுவரை மறைக்கப்பட்ட பல விஷயங்களைத் தெளிவுபடுத்து வதாகவும் அமைந்திருந்தது.

p6c.jpg

‘முதலமைச்சரின் ஒட்டுமொத்த உடலுக்கும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான இயன்முறை சிகிச்சையை நிபுணர்கள் கையாளுகின்றனர். முதலமைச்சர் தாமாகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இயன்முறை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர். அடுத்த கட்டமாக முதலமைச்சர் எழுந்து, நின்று நடக்க வேண்டும்.

சுவாசத்தைச் சீராக்குவதற்காக அறுவைசிகிச்சை  அதாவது ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டு, கழுத்தில் பொருத்தப்பட்ட குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அந்தக் குழாயினால் அவர் அசெளகரியமாக உணரவில்லை. தற்போது தாமாகவே 90 சதவிகிதம் சுவாசிக்கிறார். கழுத்தில் பொருத்தப்படும் குழாயின் காரணமாக நோயாளிகளால் பேச முடியாது. எனவே, அந்தக் குழாயில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அவர் பேசி வருகிறார். மூச்சைப் பிடித்துக்கொண்டு பேச வேண்டும் என்பதால், குழாயில் உள்ள ஒலிபெருக்கி கொண்டுபேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. முதலமைச்சர் தற்போது சில நொடிகள், சில நிமிடங்கள் மட்டுமே பேசுகிறார்’ என நவம்பர் மாதம் 25-ம் தேதி அப்போலோ மருத்துவமனை தலைவர் சொன்னார்.

இந்த நிலைமையில் பார்த்தால், அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு முழுமையாகச் சீரடைய வில்லை. அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. கை, கால்கள் போன்ற உடல் உறுப்பு இயக்கம் சரிவர இல்லை. பேசுவதில் சிரமம் இருந்தது. 70 நாட்களுக்கு மேல் வாட்டர் பெட்டில் படுத்தே இருந்தார். அதுவும் அவரது உடலுக்குச் சுணக்கத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட  நிலையில்தான், ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். சில வாரங்களுக்கு இருந்த நிலைமையைவிட கொஞ்சம் மாறுதல் என்பது சில மணி நேரமாவது அவர் தானாகச் சுவாசித்தார் என்பது மட்டும்தான். இப்படிப்பட்ட நிலையில் பெரிய அளவு உடல்நிலையில் முன்னேற்றம் இருக்காது என்பதால், போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. ஆனால், அதை சசிகலா ஏற்கவில்லை. அதனால், அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளேயே தனி அறையில் ஜெயலலிதா தங்கவைக்கப்பட்டார். p6d.jpg

இந்த நிலையில் டிசம்பர் மாதம் 4-ம் தேதி மாலையில் ஜெயலலிதா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மாலை 6 மணி அளவில் ஜெயலலிதாவுக்குத் திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இது மருத்துவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இதயத்தின் செயல்பாடு தடைபட்டது. உடனடியாக அவர் மீண்டும் ஐ.சி.யூ யூனிட்டுக்குக் கொண்டுசெல்லப் பட்டார். ‘மிகவும் கவலைக்கிடம்’ என்று அப்போலோவே அறிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது!

சரியோ... தவறோ அ.தி.மு.க இப்போது சசிகலா கைக்கு நேரடியாக வந்துள்ளது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரட்டை இலைக் கட்சிக்கு மூன்றாவது இலையாகத் துளிர்த்துள்ளார் சசிகலா. இதுவரை ‘பேக் ஸீட் டிரைவிங்’ செய்பவராகக் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இப்போது முன்னுக்கு வருகிறார். இன்று அ.தி.மு.க-வில் சசிகலாவை எதிர்க்க, ஏன் மூச்சுவிடக்கூட ஆள் இல்லை. அதே நேரத்தில் சசிகலாவின் உடல்நிலையும் அவ்வளவாக ஆரோக்கியமானதாக இல்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தன்னைக் கட்சியைவிட்டு நீக்கிய காலம் முதல் மனரீதியாகவும் உடைந்துபோனவராக சசிகலா இருந்தார். கொட்டிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் முடங்கியே இருந்தார். ஜெயலலிதா இவரை மீண்டும் கார்டனுக்குள் சேர்த்த பிறகும் பெரிய அளவில் எதிலும் ஆர்வம் இல்லாதவராகவே சசிகலா நடந்துகொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் இளவரசி மகன் விவேக்கும் டாக்டர் சிவக்குமாரும் அதீத ஆர்வத்துடன் வலம்வந்தார்கள். ‘நான் அரசியலில் தலையிட மாட்டேன். உங்களுக்கு உதவியாக மட்டுமே இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு கார்டனுக்குள் வந்தவர் சசிகலா. ஆனால், காலம் அவர் கையில் கொடையை வழங்கப்போகிறது.

யாரால் யார் கெட்டது, யாரால் யார் பலன் பெற்றது என்பதைப் பிரிக்க முடியாத வாழ்க்கை ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும். இதுவரை ஜெயலலிதாவின் நாற்காலிக்குக் காவலாக இருந்த சசிகலாவுக்கு, இன்று அதிகாரம் கிடைக்கப் போகிறது. திரை மறைவு ஆலோசனைகள் சொல்வது எளிது. ஆனால், நேரடியாக சிறு காரியம் ஆற்றுவது கடினம். சசிகலா மட்டும் அல்ல, அவரது குடும்ப வட்டம் இதுவரை எதிர்மறை விமர்சனங்களையே வாங்கிப் பழகியவர்கள். தானும் சிக்கி, ஜெயலலிதாவையும் சிக்கவைத்தவர்கள். இந்த வட்டாரத்தின் கைக்கு அ.தி.மு.க போகப்போகிறது. அவர்கள் தகுதிவாய்ந்தவர்களா என்பதும், தகுதிக்கு தங்களை வளர்த்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகத்துக்கு உரியது.

இழப்புகளில் இருந்து எழுந்து வந்தவர் ஜெயலலிதா. ஆனால், இந்த இழப்பில் இருந்து அ.தி.மு.க எழுமா? 

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

அந்த மூவர்...

கே.பாலசுப்ரமணி

 

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்றார் எம்.ஜி.ஆர். மூன்று பேரின் மூச்சுக்காற்றில் கலந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை!

p111a.jpg

‘`எனக்கு எல்லாமே அவர்தான்'’ என்று ஜெயலலிதா சொன்னது, தனது தாய் சந்தியாவை. ‘`எனது வழிகாட்டி’' எனச் சொன்னது, எம்.ஜி.ஆரை. ‘`எனது உடன்பிறவா அன்புச் சகோதரி’' எனக் காட்டியது, சசிகலாவை. இந்த மூன்று பேர் இல்லை என்றால், ஜெயலலிதா இல்லை!

அம்மாவின் அம்மா

ஜெயலலிதாவுக்கு அவருடைய அம்மா சந்தியா எவ்வளவு முக்கியமானவர் என்பதை, ‘ஆனந்த விகடனுக்கு’ அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

‘‘எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் செல்லும் முன்னர் எந்தப் புடவையை உடுத்திக்கொண்டு தயாராவது என்ற குழப்பத்துடன் பீரோவில் இருக்கும் அத்தனை புடவைகளையும் எடுத்து என் முன் விரித்துப் போட்டுவிட்டு, குழப்பத்தில் விழித்தபடி உட்கார்ந்திருப்பேன். அம்மா வருவார், ‘அம்மு... ஏன் இன்னும் கிளம்பாம உட்கார்ந்துட்டு இருக்கே? சரி... சரி, சீக்கிரம் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டுக் கிளம்பு' என்பார். நானும் அதை உடுத்திக்கொண்டு கிளம்புவேன்.

என் அம்மா இல்லாமல் நான் கலந்துகொண்ட முதல் விழா, சென்னை சினிமா ரசிகர்கள் நடத்திய பரிசளிப்பு விழாதான். அந்த விழாவுக்குச் செல்லும் முன்னர், என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு, அம்மாவை மனதில் நினைத்தபடி ஒரு புடவையைத் தொட்டேன். அதை உடுத்திக்கொண்டுதான் அன்றைய நிகழ்வுக்குச் சென்றேன்” என்கிறார்.

 தன் ப்ரியமான அம்மாவைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான பாடல்களை ஜெயலலிதா எழுதிவைத்திருந்தார். அதில் ஒன்று இது...

`என் அன்பான தாய்க்கு
உனக்கொரு அம்மா இருந்தால்
அவளை அன்பாகக் கவனித்துக்கொள்!
அவள் அமர்ந்திருந்த நாற்காலியை
வெறுமையாகப் பார்க்கும் வரை
அவளது அருமை உனக்குப் புரியாதென்பதை
இப்போதே அன்புடன் கவனி!'


அந்த அளவுக்கு ‘அம்மா’ வேதவல்லி (எ) சந்தியாதான் ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தார். கணவர் ஜெயராமின் மறைவுக்குப் பிறகு, ஒரு கம்பெனியில் காரியதரிசியாகப் பணிபுரிந்த சந்தியா, அவரது தங்கையின் அறிமுகத்தால் சினிமாவுக்கு வந்தார். தன் செல்ல மகள் அம்முவுக்கு, மூன்று வயதில் இசை, நடனம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் சந்தியா. ஆளுமைக்கான அஸ்திவாரத்தையும் சந்தியாதான் அவருக்கு விதைத்தார்.

p111b.jpg

சினிமாவில் இருந்தாலும், தன் பிள்ளைக்கு சினிமா வேண்டாம் என முடிவெடுத்து வைத்திருந்தவர் சந்தியா. அவரே ஒருகட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டார். 16-ம் வயதில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘வெண்ணிற ஆடை’ படம் வழியே திரையுலகுக்கு ஜெயலலிதா அறிமுகமானார். அதன் பிறகு சினிமா அவரை விடவில்லை. சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வந்த ஜெயலலிதா, `அரசியலுக்கு வர வேண்டும்' என விரும்பியதே இல்லை. ஒரு பேட்டியில் “என் அம்மா இருந்திருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்; என் அப்பா இருந்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்” எனச் சொல்லியிருக்கிறார்.

1971-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் நடிப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைத்தார் சந்தியா. அந்த வருடம் அக்டோபர் மாதம் இறந்தார் சந்தியா. அதுவரை ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒவ்வொரு கட்டமாகச் செதுக்கிவந்த சந்தியாவின் இன்மை, அவருக்குப் பெருத்த இழப்பாக இருந்தது. அடுத்த கட்டத்தை எப்படி நகர்த்திச் செல்வது எனத் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா.

நீரும் நெருப்பும்

1965-ம் வருடம், `ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படப் படப்பிடிப்புத் தளம். கதாநாயகன் எம்.ஜி.ஆர் வருகிறார் என்பதை முன்னறிவிப்புச் செய்யும்விதமாக,“குழந்தே, சின்னவர் வர்றாரு. கொஞ்சம் எழுந்து நில்லும்மா” என ஜெயலலிதாவின் காதைக் கடித்தார் இயக்குநர்.

அவர் சொன்னதை ஏற்கும் எண்ணம் இருந்தாலும், தன் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்துவதை ஜெயலலிதா விரும்ப வில்லை. இயக்குநரை ஒரு பார்வை பார்த்தபடி அழகிய ஆங்கிலத்தில் சொன்னார்,  “ஏன் எழுந்து நிற்க வேண்டும்? அவர் படத்தின் நாயகன், நான் நாயகி. தொழில்முறையில் இருவரும் நடிகர்கள். வித்தியாசம் என்பது, கதாபாத்திரத்தில்தானே! அவர் என் அருகே வரும்போது எழுந்து வணக்கம் தெரிவிக்கிறேன்” என்றார்.p111e.jpg

இயக்குநர் வாயடைத்துப்போனார். விஷயம், எம்.ஜி.ஆர் கவனத்துக்குச் சென்றது. ‘ஜெயலலிதாவின் எதிர்காலம் அவ்வளவுதான்’ என, படப்பிடிப்புத் தளத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தன்னிடம் ஆதாயம் அடைவதற்காகப் போலியாக வணங்குபவர்களைப் பார்த்துச் சலித்துப்போனவர் எம்.ஜி.ஆர். அப்படிப் பட்டவருடைய உள்ளத்தில், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும் உறுதியும் அழுத்தமாகப் பதிந்தன. `ஆயிரத்தில் ஒருவன்', எம்.ஜி.ஆருக்கு ஒரு புதிய கதாநாயகியை மட்டும் கொடுக்கவில்லை; அரசியல் வாரிசையும் கொடுத்தது.

p111c.jpg

`ஆயிரத்தில் ஒருவன்' படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சக்கைபோடுபோட்டன. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஜோடி, `வெற்றி ஜோடி' என சினிமா விநியோகஸ்தர்களால் கணிக்கப்பட்டது. தாயார் சந்தியா மறைந்த பிறகு, தொழில்முறையைத் தாண்டி, ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அரணாக எம்.ஜி.ஆர் மாறினார்.

தி.மு.க-வில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய சமயம், தனக்கு அடுத்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வை முன்னெடுத்துச் செல்ல மக்களைக் கவரும் பேச்சாளர் தேவைப்பட்டார். இருவருக்கும் இடையே சில காலம் மனஸ்தாபம் இருந்ததால் எம்.ஜி.ஆர் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் பேசவில்லை.

80-களின் தொடக்கத்தில் சற்றே பொருளாதாரச் சிக்கலில் தவித்த ஜெயலலிதா, தன் பெயரில் நாட்டியக் குழு ஒன்றைத் தொடங்கி, சென்னை சபாக்களில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திவந்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர்
ஆர்.எம்.வீரப்பன் கேட்டுக்கொண்டதன் பேரில், ஜெயலலிதாவின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில்கொண்டு, அ.தி.மு.க மேடைகளில் ஜெயலலிதாவின் நாட்டியக் குழுவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு அளித்தார்.

1982-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி, கட்சியின் உறுப்பினராக ஜெயலலிதாவைச் சேர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். அடுத்த 35 ஆண்டுகள் ஜெயலலிதா பரபரப்புமிக்க அரசியல்வாதியாக உருவெடுப்பதற்கான விதை அங்கிருந்துதான் தொடங்கியது.

1982-ம் ஆண்டில் கடலூர் மாநாட்டில் ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் பேசிய ஜெயலலிதாவுக்கு, கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவியை அளித்து, பெருமை கொள்ளவைத்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே ஜெயலலிதாவின் கிடுகிடு வளர்ச்சி தொடங்கியது. அவரின் வளர்ச்சி, பிற கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவை, கட்சி விவகாரங்களில் இருந்து தள்ளிவைக்க முயன்றனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எம்.ஜி.ஆர்.

1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம், எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சட்டமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. பிரசாரத்தில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. எனினும், தானாக வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார். தமிழகம் முழுவதும் தன் ஆதரவாளர்களைக்கொண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்தார். மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. உடல் நலம் தேறி, 1985-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். செப்டம்பரில் மீண்டும் ஜெயலலிதாவை கொள்கைப்பரப்புச் செயலாளராக்கினார் எம்.ஜி.ஆர்.

மதுரையில் `எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு' கூட்டச் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். மாநாட்டுப் பேரணியைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதே மேடையில் எம்.ஜி.ஆருக்கு தலைமைக் கழகம் சார்பில் வெள்ளி செங்கோலை வழங்கி அவரது காலில் விழுந்து வணங்கினார் ஜெயலலிதா. தனக்கு அளிக்கப்பட்ட செங்கோலை ஜெயலலிதாவிடமே திருப்பிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இது யதேச்சையானதா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது, இன்றளவும் புரியாத புதிர். ஆனால், இந்த நிகழ்வை ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு  கழகத்தை ஏற்று நடத்தப்போகும் தன் வாரிசை அடையாளம் காட்டும் முகமாகத்தான்
எம்.ஜி.ஆர் செங்கோலை ஜெயலலிதாவிடமே திருப்பி அளித்ததாக ஜெயலலிதா ஆதரவாளர்கள் இன்றளவும் நம்புகிறார்கள்.

எங்கிருந்தோ வந்தார்...

ஜெயலலிதா யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார். அவருடைய நம்பிக்கையைப் பெற்ற மூன்றாவது நபர், சசிகலா.

வீடியோ கேசட்டுகள் கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்தவர் சசிகலா. அதுதான் ஜெயலலிதா - சசிகலா இடையே நட்பு மலர்வதற்கான தொடக்கப் புள்ளி. தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு, சசிகலாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. ‘வீடியோ கேசட்’ கொடுப்பவர் என்பதைத் தாண்டி இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் நிலைக்கு உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையால் ஜெயலலிதா உடைந்துபோயிருந்தார். இனி அரசியல் வாழ்க்கையே இல்லை என்றிருந்த நேரத்தில், ‘உங்களுக்கு அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. யாருக்கும் பயந்து ஒதுங்க வேண்டாம்’ என்று அரசியல் ஆசையை வளர்த்தவர்கள் சசிகலாவும் நடராசனும்தான் என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதாவுக்கு சசிகலா பல உதவிகளைச் செய்தார். 1991-ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.

p111d.jpg

அதுவரை தனது கணவர் நடராசனோடு பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்து போயஸ் தோட்டத்துக்கு வந்து சென்ற சசிகலா, போயஸ் தோட்டத்திலேயே குடியேறியது அப்போதுதான். அதன் பிறகு சசிகலாவின் வாழ்க்கைப்பாதை வேறு திசையில் நகரத் தொடங்கியது. கட்சி, ஆட்சி என ஜெயலலிதாவின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் சசிகலா தவிர்க்க முடியாத சக்தியானார்.

சசிகலா உடனான இந்த நெருக்கத்தின் காரணமாகவே, சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்தார். திருமணத்து அன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே நிறத்தில் பட்டுடுத்தி ஒட்டியாணம், காசு மாலை, தங்க-வைர நகைகளை அணிந்து வந்த கோலம், அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தை அலங்கரித்தது.

அரசின் எல்லா மட்டங்களிலும் சசிகலா குடும்பத்தின் அத்துமீறல்கள் காரணமாக ஜெயலலிதா அரசு மீது அதிருப்தி எழுந்தது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க அரசு படுதோல்வி அடைந்தது. இது, ஜெயலலிதா-சசிகலா உறவுக்கு தற்காலிகமாக முடிவுகட்டியது. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேற்றினார். தனி நீதிமன்றம் அமைத்து தி.மு.க அரசு தொடுத்த வழக்கு விசாரணைகளுக்கு இடையே, ஒரே மாதத்தில் சசிகலாவை மீண்டும் போயஸ்தோட்டத்தில் இணைத்துக்கொண்டார்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சசிகலா குடும்ப ஆதிக்கம் மீண்டும் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி நில வழக்கில் தண்டனை கிடைத்ததால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக வேறு யாரை முதலமைச்சராக நியமிக்கலாம் என்ற ஆலோசனையில், ஓ.பன்னீர்செல்வம் பெயரை டிக் அடித்தவர் சசிகலா.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் சசிகலா குடும்பம் முக்கியப் பங்கு ஆற்றியது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஜெயலலிதாவிடம் புகைச்சலை ஏற்படுத்தியது. சசிகலா உள்பட அவரது உறவினர்கள் 19 பேரை அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். சசிகலா, போயஸ் கார்டனைவிட்டு வெளியேறினார்.

சில மாதங்களிலேயே அக்காவிடம் மன்னிப்புக் கோருவதாக, ‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். அந்த ஆசையும் எண்ணமும் இல்லை’ என உருக்கமான கடிதம் எழுதினார் சசிகலா. இதன் பின்னர், சில நாட்களில் மீண்டும் கார்டனுக்குள் புகுந்தார் சசிகலா.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, அவரோடு ஜெயிலில் சசிகலாவும் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார வேலைகளை சசிகலாவே முன்னின்று செய்தார்.

1991 தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் நிழலாக, கடைசி 25 ஆண்டுகள் இருந்தவர் `உடன்பிறவா சகோதரி' சசிகலாதான்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

234 நாட்களில் ஒரு ஸ்டேடியம்... ஜெயலலிதாவால் மட்டுமே இது சாத்தியம்!

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுப் பிரியர். விளையாட்டுத் துறைக்கு அவர் எப்போதும் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வந்தார். அவர் புண்ணியத்தில்தான் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு ஓஹோவென இருந்தது. நேரு ஸ்டேடியம் அதற்கு ஒரு சான்று. 

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறியதும், 1993ல் கார்ப்பரேஷன் பூங்கா இருந்த இடத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டினார். நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ரூ. 44 கோடி மதிப்பிலான அந்த ஸ்டேடியம் வெறும் 234 நாட்களில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் உந்துதலால் மட்டுமே இது சாத்தியமானது. வேகமாக கட்டினாலும், சர்வதேச தரத்திலும் அமைந்தது கூடுதல் பெருமை. இதற்கான எல்லா பெருமையும் அவரையே சாரும்.

சென்னையில் சர்வதேச தரத்தில் ஒரு ஸ்டேடியம் அமைய வேண்டும் என்ற, தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் செயலர் சி.ஆர்.விஸ்வநாதன் கனவு நனவானது அப்போதுதான். புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில்தான் நேரு கோல்டு கப் கால்பந்து தொடர் நடந்தது.

அதன்பின், ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 2013ல் சின்தெடிக் டிராக், ஃபுட்பால் டர்ஃப், ஃப்ளட் லைட், வார்ம் அப் கிரவுண்ட் என மொத்தம் ரூ. 33 கோடி செலவில் நேரு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. அன்று முதல் நேரு மைதானத்தில்  இரவு - பகல் என எப்போது வேண்டுமானாலும் போட்டிகளை நடத்தலாம், பயிற்சி செய்யலாம் என்ற சூழல்  உருவானது. இப்போது ஐ.எஸ்.எல். போட்டிகள் நேரு மைதானத்தில் ஜெகஜ்ஜோதியாக நடந்து வருகிறது. 

பல்நோக்கு காரணங்களுக்காக கட்டப்பட்ட சென்னை நேரு மைதானம் இந்தியாவில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்று. விளையாட்டு தவிர்த்து, கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடப்பது உண்டு. தவிர, வாலிபால், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் ஆடுவதற்கேற்ப, 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கவல்ல  உள் விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும்.  பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்கள், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்  அமைத்தது என, அவர் ஏற்படுத்தித் தந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஏராளம்.

சென்னையில் 1995ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா. கிட்டத்தட்ட சென்னையில் நடந்த பெரிய சர்வதேச அளவிலான முதல் போட்டி இதுவே. அப்போதுதான் ஹாக்கி ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இந்தியாவின் தன்ராஜ் பிள்ளை, பாகிஸ்தானின்  ஷபாஸ் அகமது இருவரும் உச்சத்தில் இருந்த சமயம் அது. எனவே  அந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

jayalalitha_%283%29_17028.jpg

சென்னையில் 2013ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. உள்ளூரில் விளையாடியது ஆனந்துக்கு நெருக்கடியை கொடுத்தது என்றாலும், அந்த தொடரை இங்கு கொண்டு வந்ததும், அதற்கு 30 கோடி செலவு செய்ததும், பாராட்ட வேண்டிய விஷயம். சமீபத்தில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில், சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சனுக்கு, அந்தளவு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.

கடந்த 2012ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு  தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இதற்கு விமர்சனம் எழுந்தபோது, ‛ஒலிம்பிக்கில் வெல்லும் தங்கத்தை விட இந்த சாதனை பெரிது. அதனால் ஒலிம்பிக் தங்கத்துக்கு நிகரான பரிசு வழங்கப்படுகிறது’ என காரணம் சொன்னார். அதோடு, செஸ்ஸை பள்ளி அளவில் மேம்படுத்த ஆனந்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகையை  அதிகரித்தது ஜெயலலிதாவின் பெருமை பேசும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 2 கோடி, காமன்வெல்த், ஏசியன் கேம்ஸில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் என, அள்ளி வழங்கினார்.  அதை விட, நேஷனல் கேம்ஸில் முதலிடம் பிடித்தால் ரூ.5 லட்சம் என அறிவித்தது பாராட்ட வேண்டிய விஷயம். 

இன்ஜினனீரிங் கல்லூரிகளில் விளையாட்டுத் துறைக்கான இட ஒதுக்கீட்டை 100ல் இருந்து 500 ஆக உயர்த்தியதும் அவரது  சாதனையே. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்த ஏ.டி.பி. டென்னிஸ் தொடரை, இங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து, ஸ்பான்சர் அளித்ததற்கும் ஜெயலலிதாவே காரணம் என்கின்றனர் டென்னிஸ் பிரியர்கள். 

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களைக் கண்டறித்து,  ஆண்டுதோறும் ஐந்து வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் செலவில், போதிய வசதி வாய்ப்புகளை செய்து தருவதற்காக, உருவாக்கப்பட்ட எலைட் பேனல்’ திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் பயன்பெற்ற யாரும் ஒலிம்பிக் செல்லவில்லை என்பது வேறு விஷயம். 

சி.எம்.டிராபி. இதுதான் விளையாட்டுத் துறைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் அல்டிமேட்.  ஏதோ ஒரு கணத்தில் அவர் கற்பனையில் உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலேயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. 

jayalalitha_%282%29_17323.jpg

சில குறைகளும் உண்டு. 2014ல் செஸ் ஒலிம்பியாட்டில்  2014 வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. வாழ்த்து கூட  சொல்லவில்லை. ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கும் வாழ்த்து இல்லை. ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு  உடனே வழங்குவது போல, நேஷனல் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனடியாக பரிசுத் தொகை வழங்குவதில்லை. 2014ல் ஜெயித்தவர்களுக்கு இன்னமும் பணம் கிடைத்தபாடில்லை. 

ஜெயலலிதாவை  எளிதில் அணுக முடியாத காரணத்தினால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அண்டர் -17 வேர்ல்ட் ஃபுட்பால் கப் சென்னையில் இருந்து நழுவி விட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மெம்பர் செகரட்டரியை மாற்றிக் கொண்டே இருப்பதும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரமே இல்லாமல் இருப்பதும் அவர்  மீதான குறைகள். 

இலங்கைக்கு விளையாட சென்ற இரண்டு வாலிபால் வீரர்களை திரும்ப வரவழைத்தது, ஒரு ஸ்டேடியம் ஆஃபீசரை சஸ்பெண்ட் செய்தது, நேரு மைதானத்தில் உள்ள வாலிபால் அலுவலகத்துக்கு சீ்ல் வைத்தது எல்லாம், அவருக்கு நெகட்டிவ் மார்க் பெற்றுத் தந்தன. 

ஆனாலும், நேரு மைதானம் அவர் பெருமையை நின்று பேசும். 

http://www.vikatan.com/news/sports/74523-nehru-stadium-was-built-by-jayalalithaa-in-234-days.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.