Jump to content

இந்தியா எதிர் இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு

 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

 
 
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு
 
மும்பை:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது.

இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டியும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு முடிவு செய்து இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வுடன் டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று கருதி தேர்வுக் குழு முடிவு செய்து இருக்கிறது.

இதனால் ஒரு நாள் போட்டி தொடரில் ஜெய்ந்த் யாதவ், குல்கர்னி ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் போட்டி தொடரில் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/03115322/1054187/One-day-match-against-England-rest-to-ashwin-jadeja.vpf

Link to comment
Share on other sites

நீண்ட நாள் இடைவெளிக்கு பின் பயிற்சியின்றி களமிறங்க இருக்கும் டோனி

இரண்டு மாத இடைவெளியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டியில் டோனி பயிற்சியின்றி களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

 
 
நீண்ட நாள் இடைவெளிக்கு பின் பயிற்சியின்றி களமிறங்க இருக்கும் டோனி
 
ஜார்க்கண்ட்:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி அக்டோபர் 29ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை மாத இடைவெளி கழித்து தனது முதல் ஒருநாள் போட்டியில் டோனி களமிறங்க இருக்கிறார்.

ஜனவரி 15 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கியதைத் தொடர்ந்து அவர் களமிறங்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியாக இது அமைகிறது.

தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வாக, காயமடைந்த வீரர்கள் ஒரு முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும் என்ற நெறிமுறை இருக்கிறது, என்றாலும் ஏற்கனவே ஓய்வை அறிவித்த டோனிக்கு இது பொருந்தாது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 இல் நடைபெற்ற போட்டிகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக விஜய் ஹசாரே போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

அடுத்த ஹசாரே போட்டிகள் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளிடையே ஒரு நாள் போட்டிகள் நிறைவுற்று நான்கு வாரங்கள் கழித்தே ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளுக்கான பல்வேறு முக்கிய வீரர்கள் தங்களது அணிகளுக்காக களமிறங்க இருக்கும் நிலையில் டோனி, இது குறித்த தனது முடிவினை இதுவரை அறிவிக்காமலே இருக்கிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/05202324/1054579/MS-Dhoni-likely-to-play-first-international-game-in.vpf

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், 20 ஓவர் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு

டெஸ்ட் தொடரையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், 20 ஓவர் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி தொடர் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது.

முதல் 20 ஓவர் போட்டி 26-ந்தேதியும் 2-வது போட்டி 29-ந்தேதியும், 3-வது போட்டி பிப் 1-ந்தேதியும் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேப்டன் இயன் மோர்கன் அணிக்கு திரும்பி உள்ளார். வங்காள தேசத்தில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில் பாதுகாப்பை காரணம் காட்டி மோர்கன், ஹால்ஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை.

தற்போது இருவரும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பெண் டக்கெட், ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் வின்சி ஆகியோர் இடம் பெறவில்லை.

ஒரு நாள் அணி: இயன் மோர்கன் (கேப்டன்), ஹால்ஸ், மொயின் அலி, ஜோரூட் பேர்ஸ்டோவ், ஐக்பால் சாம் பில்லிங்கிஸ், பென் ஸ்டோக்ஸ் ஜோஸ் பட்லர், டவ்சன், புளுகெட், அதில் ரஷித், ஜேசன்ராய், டேவிட் வில்லி, கிறிஸ்வோக்ஸ்.

20 ஓவர் அணி:- இயன் மோர்கன் (கேப்டன்) ஜோரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், ஹால்ஸ், ஐக்பால், சாம் பில்லிங்ஸ், டவ்சன், கிறிஸ்ஜோர்டன், மில்ஸ், புளுஸ்கெட் அதில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/06131202/1054642/India-vs-England-Eoin-Morgan-to-lead-England-in-ODI.vpf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஜோ ரூட் விலக வாய்ப்பு

ஜோ ரூட்டின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஜோ ரூட் விலக வாய்ப்பு
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சில நாட்களுக்கு முன் சென்னையில் முடிவடைந்தது. அதன்பின் இங்கிலாந்து அணி சொந்த நாடு சென்றது.

பின்னர் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வியாழக்கிழமை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இந்தியா புறப்படுகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 15-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன் 10 மற்றும் 12-ந்தேதிகள் இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த சமயத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஜோ ரூட் நினைக்கிறார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 230 ரன்களை இங்கிலாந்து சேஸ் செய்தது. அந்த ஆட்டத்தில் ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் 491 ரன்கள் குவித்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/01183832/1059461/Joe-Root-may-miss-start-of-England-one-day-series.vpf

Link to comment
Share on other sites

இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் கோலி, மீண்டும் யுவராஜ்

yuvraj_singh_long_16480.jpg

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டுக்கும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டிலும் தோனி விக்கெட் கீப்பராக தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவராஜ்சிங்குக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ராகுல், தவான், மணீஷ் பாண்டே, யுவராஜ் சிங், பாண்டியா, ரஹானே, கேதர், ஜடேஜா, அஷ்வின், மிஸ்ரா, பும்ரா, புவனேஷ்வர்குமார், உமேஷ்யாதவ்.

மூன்று  டி-20 போட்டிக்கான அணி விவரம்: கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ராகுல், மணீஷ் பாண்டே, யுவராஜ் சிங், ரெய்னா, மந்தீப், பாண்டியா, ரிஷப், ஜடேஜா, அஷ்வின், சஹால், பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹ்ரா.

இதில் டி-20 அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப்க்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/77094-india-team-announced-for-england-one-day-and-t20-series.art

Link to comment
Share on other sites

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது: மோர்கன்

 

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எங்களுக்கு சவாலானதே என்று இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது: மோர்கன்
 
மும்பை:

கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணியினர் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

டெஸ்ட் அணியில் இடம் பெற்ற 9 இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் போட்டிக்காக மீண்டும் இந்தியா வந்துள்ளனர். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டனாக இயான் மோர்கன் டெஸ்ட் அணியில் இடம்பெற வில்லை.

மும்பை புறநகர் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மோர்கன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எங்களுக்கு சவாலானதே, அதே நேரத்தில் இந்திய அணியுடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

இது ஒரு குறுகிய காலத் தொடர்தான். ஆனாலும் நாங்கள் ஏராளமான பாடங்களை கற்றுள்ளோம். ஒருநாள் தொடருக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதால் எங்களை தயார்படுத்திக் கொள்ள இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து வீரர் பட்லர் கூறும்போது, நாங்கள் டெஸ்ட் தொடரை இழந்தோம். ஆனால் டெஸ்டில் இருந்து ஒருநாள் தொடர் முற்றிலும் மாறுபட்டது என்றார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி வருகிற 15-ந்தேதி புனேயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக அந்த அணி இந்தியா ‘ஏ’ அணியுடன் நாளையும் (10-ந்தேதி), 12-ந் தேதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/09103903/1061012/Eion-Morgan-It-will-be-a-challenge-to-beat-India-at.vpf

Link to comment
Share on other sites

மீண்டும் கேப்டனாக களம் இறங்குகிறார் தோனி..!

MS Dhoni

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சென்ற வாரம் அறிவித்தார் மகேந்திர சிங் தோனி. இந்நிலையில், நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடக்கும் பயிற்சி போட்டியில் 'இந்திய A' அணிக்கு கேப்டனாக களம் இறங்க உள்ளார் தோனி. அநேகமாக சர்வதேச அணி ஒன்றுக்கு எதிராக தோனி கேப்டனாக களம் இறங்கப் போகும் கடைசிப் போட்டி இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

தோனி கேப்டனாக தோன்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என்பதால், ரசிகர்கள் பெருமளவு போட்டியைக் காண வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இது பயிற்சிப் போட்டி என்பதால், ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. தோனி தலைமையில் நாளை ஆடும் இந்திய- A அணியில் யுவராஜ் சிங்கும் விளையாடுகிறார். 

http://www.vikatan.com/news/sports/77336-dhoni-returns-as-captain-again.art

Link to comment
Share on other sites

குழந்தை பிறந்ததால் இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கும் ஜோ ரூட்

 

ஜோ ரூட்டிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அவர் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா புறப்பட இருக்கிறார்.

 
 
குழந்தை பிறந்ததால் இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கும் ஜோ ரூட்
 
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த நாடு புறப்பட்டது.

பின்னர் மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக கடந்த ஐந்தாம் தேதி இங்கிலாந்து அணி இந்தியா புறப்பட்டது. அந்த அணியுடன் முன்னணி வீரரான ஜோ ரூட் புறப்படவில்லை. அவரது மனைவி கேரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதனால் அவர் இங்கிலாந்து அணியுடன் இந்தியா புறப்படவில்லை. ஆகவே முதல் ஒருநாள் போட்டியில் அவர் கலந்து கொள்வாரா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (7-ந்தேதி) கேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆல்பிரெட் வில்லியம் என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்துள்ளதால் வருகிற புதன்கிழமை (11-ந்தேதி) இங்கிலாந்தில் இருந்து புறப்படுவார் என்று கூறப்படுகிறது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/09214606/1061143/Root-to-join-England-squad-after-birth-of-son.vpf

Link to comment
Share on other sites

நாளை 2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்துக்கு இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா?

இந்திய ‘ஏ’- இங்கிலாந்து லெவன் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நாளை நடக்கிறது. முதல் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
நாளை 2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்துக்கு இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா?
 
மும்பை:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

தற்போது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 15-ந்தேதி புனேயில் நடக்கிறது.

ஒருநாள் தொடருக்கு முன்பு இங்கிலாந்து லெவன் இந்திய ‘ஏ’ அணியின் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இதன்படி நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய ‘ஏ’ அணி 304 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது பரிதாபமே. அம்பதி ராயுடு 100 ரன்னும், டோனி 68 ரன்னும் அதிரடியாக விளையாடி எடுத்தனர். இதற்கு பலன் இல்லாமல் போனது.

இந்திய ‘ஏ’- இங்கிலாந்து லெவன் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நாளை நடக்கிறது. முதல் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு டோனி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் டோனியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் மும்பை மைதானத்துக்கு அதிக அளவில் வந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/11113816/1061456/India-v-England-tomorrow-2nd-practice-match.vpf

Link to comment
Share on other sites

2-வது பயிற்சி ஆட்டம்: இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
2-வது பயிற்சி ஆட்டம்: இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி
 
இங்கிலாந்து லெவன் - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று பகல் ஆட்டமாக மும்பையில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ராய் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேல்ஸ் 53 பந்தில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் நதீப் பந்தில் பெவிலியின் திரும்பினார்.

5FDD9758-FA8D-4372-8EB2-FED129A56680_L_s

அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 64 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் சுழற்பந்தில் சிக்கித் திணறினார்கள். நதீம் மற்றும் ரசூல் ஆகியோரின் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பர்வேஸ் ரசூல் 3 விக்கெட்டும், சங்வான், டின்டா, நதீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

16627A52-858C-4BC6-B545-987636FB4DB7_L_s

பின்னர் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ரகானே, ஷெல்டன் ஜாக்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 119 ரன்கள் சேர்த்தது. ஜாக்சன் 59 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார்.

4201F60A-3758-425C-AF37-A242DBEE34E6_L_s

அடுத்து இளம் வீரரான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களம் இறங்கினார். 19 வயதே ஆன அவர், இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு சற்றும் அஞ்சாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 83 பந்தில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

BA733E25-7D39-48FB-8881-A29382E17503_L_s

அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா ஏ அணி 39.4 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 283 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12184211/1061822/2nd-warm-up-match-india-a-beats-england-by-6-wickets.vpf

Link to comment
Share on other sites

இந்தியா-இங்கிலாந்து மோதல்: முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) புனேவில் நடக்கிறது.

 
இந்தியா-இங்கிலாந்து மோதல்: முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது
 
புனே:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) புனேவில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக களம் காணுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கோலி, டோனி, யுவராஜ்சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

மிடில் ஆர்டர் வரிசையில் ரகானே, மணிஷ் பாண்டே கேதர் யாதவ் ஆகியோர் உள்ளனர். இதனால் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். டெஸ்டில் அசத்திய சுழற் பந்து கூட்டணியான அஸ்வின், ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

தொடக்க வீரர்களாக தவான், லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் டோனி, யுவராஜ்சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், சாம்பில்லிங் கிஸ், மொய்ன் அலி, ஜோஸ் பட்லர் போன்ற சிறந்த பேஸ்ட் மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, புளுங்கெட், டவ்சன், ஜேக் பால் ஆதில்ரஷித் போன்றோர் உள்ளனர்.

டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா:- கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரகானே, டோனி, யுவராஜ்சிங் கேதர் யாதவ், மனீஷ் பாண்டே, அஸ்வின், ஜடேஜா, உமேஷ், யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரீத் பும்ரா.

இங்கிலாந்து:- இயன் மோர்கன் (கேப்டன்) ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், சாம் பில்லிங்கிஸ் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் கிறிஸ்வோக்ஸ் டவ்சன், ஜேக் பால், ஆதில் ரஷீத், புளுங்கெட், டேவிட் வில்லி.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13100813/1061901/India-vs-England-1st-ODI-January-15-first-match.vpf

Link to comment
Share on other sites

புனேவில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்: ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறும் புனேயில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்ற ஆடுகள தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 
புனேவில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்: ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளைமறுநாள் (15-ந்தேதி) பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இதே மைதானத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான ஆடுகளம் இங்கிலாந்தில் காணப்படும் ஆடுகளங்கள் போல் காணப்பட்டது. அதிக புற்கள் உள்ள ஆடுகளத்தில் பந்து வேகமாகவும், பவுன்சராகவும் சென்றது. இதனால் இந்தியா 101 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

தற்போதும் அதேபோல் ஆடுகளம்தான் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புனே ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆடுகளம் குறித்து எம்.சி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஆடுகளம் பார்வையாளர்களுக்கு தகுந்த வகையில் இருக்கும். ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போன்று தற்போது இருக்குமா? என்று ஆடுகள பராமரிப்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பராமரிப்பாளர் பாண்டுரங் கசல்கயோகார் கூறுகையில் ‘‘அப்படி இருக்கப்போவதில்லை. தற்போது நடக்க இருப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. ஸ்கோர்போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்பது என் கணிப்பு. ஆகவே, முதலில் விளையாடும் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், சேஸிங் செய்ய கடினமாக இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13213226/1062084/India-vs-England-Pune-ODI-wicket-likely-to-be-full.vpf

Link to comment
Share on other sites

புனேவில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்: ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறும் புனேயில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்ற ஆடுகள தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 
புனேவில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்: ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளைமறுநாள் (15-ந்தேதி) பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இதே மைதானத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான ஆடுகளம் இங்கிலாந்தில் காணப்படும் ஆடுகளங்கள் போல் காணப்பட்டது. அதிக புற்கள் உள்ள ஆடுகளத்தில் பந்து வேகமாகவும், பவுன்சராகவும் சென்றது. இதனால் இந்தியா 101 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

தற்போதும் அதேபோல் ஆடுகளம்தான் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புனே ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆடுகளம் குறித்து எம்.சி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஆடுகளம் பார்வையாளர்களுக்கு தகுந்த வகையில் இருக்கும். ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போன்று தற்போது இருக்குமா? என்று ஆடுகள பராமரிப்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பராமரிப்பாளர் பாண்டுரங் கசல்கயோகார் கூறுகையில் ‘‘அப்படி இருக்கப்போவதில்லை. தற்போது நடக்க இருப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. ஸ்கோர்போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்பது என் கணிப்பு. ஆகவே, முதலில் விளையாடும் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், சேஸிங் செய்ய கடினமாக இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13213226/1062084/India-vs-England-Pune-ODI-wicket-likely-to-be-full.vpf

Link to comment
Share on other sites

#CricketUpdate - டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது...

India vs England 1st ODI

இங்கிலாந்து - இந்தியாவுக்கு இடையேயான தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில், யுவராஜ் சிங் விளையாடுகிறார். தோனி ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபின் ஆடும் முதல் சர்வதேச போட்டி இதுதான். 

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம் - 77/1 (12 ஓவர்)

புனேயில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் குவித்துள்ளது.

 
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம் - 77/1 (12 ஓவர்)
 
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் அதிரடியாக விளையாடினார். ஹேல்ஸ் 18 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.

ராய் 10-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார். அவர் 36 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15142900/1062198/Pune-ODI-england-77-for-1.vpf

Link to comment
Share on other sites

#CricketUpdates: இங்கிலாந்து 350/7

ஜோ ரூட்

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ரூட் 78, ராய் 73 ரன்கள் எடுத்தனர், இந்திய அணியில் பாண்டியா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 351 ரன்கள் என்ற மெகா இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.

Link to comment
Share on other sites

கோலி, ஜாதவ் சதம்: இங்கிலாந்தை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

 
 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

 

சதமடித்த கோலி மற்றும் ஜாதவ் ஜோடி

 சதமடித்த கோலி மற்றும் ஜாதவ் ஜோடி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் தொடரை கடந்த மாதத்தில் 4-0 என்று இந்தியா வென்றுள்ள சூழலில், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கியது.

பகல் இரவு ஆட்டமான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே நன்கு அடித்தாடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 61 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 78 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 40 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கபப்ட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தது.

351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி, தொடக்க அடக்கக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் கே. எல். ராகுல் ஆகியோரது விக்கெட்டுக்களை 24 ரன்களுக்குள் இழந்தது.

சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஷிகர் தவான்

 

 சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஷிகர் தவான்

நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற யுவராஜ் சிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ், அணித் தலைவர் விராட் கோலியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை இருவரும் விளாச ஆரம்பிக்க, இந்திய அணியின் ரன் விகிதம் வெகுவாக உயர்ந்தது. தனது 27-வது ஒருநாள் போட்டி சதத்தை எடுத்த விராட் கோலி 122 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    கோலி, ஜாதவ் சதம்

இளம் ஆட்டக்காரரான கேதார் ஜாதவ் 65 பந்துகளில் சதமடித்தார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், பரபரப்பான இறுதி நிமிடங்களில் ஹர்திக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தால் இந்தியா 3 விக்கெட்டுக்களை வித்த்யாசத்தில் வெற்றி பெற்றது.

48.1 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.

http://www.bbc.com/tamil/sport-38630195

Link to comment
Share on other sites

பரபரப்பான ஆட்டத்தில் 351 ரன்னை சேஸிங் செய்து இந்தியா அசத்தல் வெற்றி

 

351 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி இந்தியா 3 விக்கெட் வித்தயாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கேதர் ஜாதவ் சதம் அடித்து உதவி புரிந்தனர்.

 
 
பரபரப்பான ஆட்டத்தில் 351 ரன்னை சேஸிங் செய்து இந்தியா அசத்தல் வெற்றி
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.

பின்னர் 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க இருவரும் திணறினார்கள்.

இந்தியா 4-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்கோர் 13 ரன்னாக இருக்கும்போது 1 ரன் எடுத்த நிலையில் தவான் வில்லே பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வில்லே பந்தில் க்ளீன் போல்டானார்.

4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டோனி 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 11.5 ஓவரில் 63 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி நிதானமாக விளையாட கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் சதம் அடித்தனர். விராட் கோலி 93 பந்தில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் தனது 27-வது சதத்தை பதிவு செய்தார். கேதர் ஜாதவ் 65 பந்தில் 11 பவுண்டரிகள், 2 சிக்சருடன் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தியாவின் ஸ்கோர் 36.2 ஓவரில் 263 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 122 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். கோலி அவுட்டாகிய சிறிது நேரத்தில் கேதர் ஜாதவ் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் 76 பந்தில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த ரன்னைக் குவித்தார்.

இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அவுட்டாகும்போது இந்தியா 39.5 ஓவரில் 291 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 61 பந்தில் 60 ரன்கள் தேவைப்பட்டது.

7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் கவனமாக விளையாடினார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா தனது அதிரடியை மறந்து ஒன்றிரண்டு ரன்கள் என ஓடி ஓடி ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 44.1 ஓவரில் 318 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 35 பந்தில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

03BF2757-3F4A-4FF4-8EA2-275E2125CB5F_L_s

ஹர்திக் பாண்டியாவுடன் அஸ்வின் இணைந்தார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அனுபவம் இருந்ததால் அஸ்வின் சிறப்பாக விளையாடினார். அதேசமயம் ஹர்திக் பாண்டியாவிடம் ஒவ்வொரு ரன்னாக எடுத்தால் போதும் என்று அறிவுரை கூறி அவருக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் இந்தியா வெற்றியை நோக்கி சென்றது.

48-வது ஓவரை ரஷித் வீசினார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்தில் 12 ரன்கள் தேவையிருந்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா இமாலய சிக்ஸ் விளாச இந்தியாவின் வெற்றி உறுதியானது.

A852AC38-3EA4-4887-AA71-9253B93123F1_L_s
76 பந்தில் 120 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜாதவ்

அடுத்த ஓவரின் முதல் பந்தை அஸ்வின் சிக்சருக்கு தூக்க இந்தியா 48.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 37 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்களுடனும், அஸ்வின் 10 பந்தில் 1 சிக்சருடன் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 19-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/15215732/1062271/Pune-ODI-india-beats-england-by-3-wickets.vpf

Link to comment
Share on other sites

ஓரிரு முறை 350 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளோம், ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல: விராட் கோலி

 

 
படம்.| ராய்ட்டர்ஸ்.
படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

கேதர் ஜாதவ் நேற்று 76 பந்துகளில் நொறுக்கிய 120 ரன்களில் ஆச்சரியகரமான சில ஷாட்கள் இருந்தது, அந்த ஷாட்களை தன்னால் நம்ப முடியவில்லை என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஆட்டம் முடிந்து விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இந்த இன்னிங்ச் தனித்துவமானது. எந்த ஒருநிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை இன்னொரு வீரரிடம் (ஜாதவ்) இருப்பது எனக்குமே உத்வேகமூட்டுவதாக உள்ளது. யாராவது ஒருவருக்கு வெற்றிக்கான பாராட்டை அளிக்க வேண்டுமென்றால் என்னைப் பொறுத்தவரை அது கேதர் ஜாதவ்வுக்குத்தான்.

இங்கிலாந்து அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர், அனைவரையுமே அவர் சிறப்பாக எதிர்கொண்டார். அதே போல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடமளிக்காமல் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தார். ஜாதவ் ஆடிய சில ஷாட்களை என்னால் நம்ப முடியவில்லை. அவர் தனது இயல்பூக்கமான ஷாட்கள் என்று அதை வர்ணித்தார், ஆனால் அதுதான் அவரது திறமை என்றே நான் கூறுவேன்.

150% ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பது, அதுவும் அனைத்துமே தெளிவான ஷாட்கள் என்பது தனித்துவமானது. அவர் காட்டடி சுழற்றல் செய்யவில்லை. அவர் ஒரு அசாதாரண வீரர், அதனால்தான் 6-ம் நிலையில் அவரை அணி நம்பிக் களமிறக்குகிறது. நான் கூட்டணி சேர்ந்து ஆடிய ஆட்டங்களில் இது சிறப்பான கூட்டணி ஆட்டமாகும். எதிர்த்தாக்குதல் ஆட்டம் என்பது சரிவரக் கைகூடியது. விழுந்த எந்த விக்கெட்டும் நல்ல பந்துகளில் விழவில்லை என்பதே என் கருத்து. நம் பிழையால் விழுந்த விக்கெட்டுகளாகும் அது.

150-160 ரன்களை இணைந்து கடந்து விட்டால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற உள்ளுணர்வு எங்கள் இருவருக்குமே இருந்தது. 2-வது இன்னிங்சில் பேட் செய்ய பிட்ச் இன்னும் நன்றாக இருந்தது. பந்தும் சீறிக் கொண்டு பவுண்டரிக்குச் செல்லும் வகையிலான அவுட் பீல்ட் அமைந்தது. அவ்வப்போது சிக்ஸர்கள் அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. 350 ரன்கள் இலக்கை இதற்கு முன்பும் ஓரிருமுறை விரட்டியுள்ளோம் ஆனால் 63/4 என்ற நிலையிலிருந்து அல்ல.

இது உண்மையில் சிறப்பு வாய்ந்தது, இந்த இன்னிங்ஸ், வெற்றி, கூட்டணி ஆகியவை நீண்ட காலம் என் எண்ணத்தில் நீடிக்கும்.

நான் கேதர் ஜாதவ்வுடன் களத்தில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது, காரணம் நான் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருந்தேன். நியூஸிலாந்துக்கு எதிராக அவர் வெற்றி பெற வைக்க முடியாமல் போனதற்காக வருந்திக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் கூறியதெல்லாம், களத்தில்தான் கற்க முடியும் என்பதையே. வெளியே உட்கார்ந்து கொண்டு அப்படிச் செய்திருக்கலாம், இப்படி ஆடியிருக்கலாம் என்பதி அர்த்தமில்லை என்று அவருக்கு அறிவுறுத்தினேன். நம்மை நாம் இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நிலைக்குத் தள்ளிக் கொள்ள வேண்டும் அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட இன்னிங்ஸை எப்படி ஆடுவது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறினேன்.

அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவரிடம் எதிர்மறை எண்ணங்கள் துளிர்விடும் வாய்ப்பு உள்ளது, எனவே அப்போதுதான் ஜாதவ்விடம் நான் இவ்வாறு கூறினேன்.

ஒருவர் இத்தகைய நெருக்கடி சூழலை எதிர்கொண்டு ஆட அதிகப் போட்டிகளை ஆடியிருக்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் கடினமான சூழலில் நம் மூளையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். நாம் அனைவருமே பந்துகளை அடிப்பதில் வல்லவர்கள், சிக்சர்கல், பவுண்டரிகள் நமக்குப் பிரச்சினையல்ல. ஆனால் ‘நாம் இதனை எப்படி செய்யப்போகிறோம், எனக்கு இது தெரியவில்லையோ என்று ஐயம் கொள்வதை விட பந்தை கவனித்து தங்களிடம் உள்ள உத்தியைக் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் போட்டியை வெல்ல முடியும்.

அதிகமான போட்டிகள் ஆடினால்தான் ஆட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற விதியெல்லாம் ஒன்றுமில்லை. 10 ஒருநாள் போட்டிகளிலேயே ஒருவருக்கு தேவையான புரிதல் ஏற்படும், அதற்கு 60, 70, 80 போட்டிகள் தேவைப்படாது.

நானும் கேதரும் பேட் செய்த போது 5-6 வீரர்கள் பெவிலியனில் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை அறிந்து கொண்டோம். ஓய்வறையில் இத்தகைய நம்பிக்கை வளர்ந்துள்ளது. அதாவது சிறப்பாக ஒன்றை சாதிப்போம் என்று நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது.

கிறிஸ் வோக்ஸை அடித்த வாழ்விலே ஒருமுறை ஷாட் பற்றி...

நான் இந்த ஷாட்டை ஆடவில்லை அது எப்படி அடிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என்று பல தருணங்களில் நான் உணர்ந்ததை இப்போது மீண்டும் நினைக்கிறேன், அதாவது குறிக்கோள் வெற்றி என்று வரும் போது ஆட்டத்தை பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றுதான் நான் அனைவரிடமும் பேசி வருகிறேன். அதாவது ஆட்டத்தில் நாம் எங்கு இருக்கிறோம் நம் சொந்த ஸ்கோர் எவ்வளவு போன்ற எண்ணங்கள் தேவையில்லை.

எப்போதும் அணி... அணி.. என்று மனனம் செய்து கொண்டிருந்தால் நாம் நம்ப முடியாத ஷாட்களே நமக்குக் கைகூடும். உத்வேகத்திலும், குறிக்கோளை எட்டுவதில் தீவிர கவனமும் இருந்தால் அத்தகைய ஷாட்கள் கைகூடும்.

பவுலிங்கில் 35 ஓவர்கள் வரை நன்றாக வீசினோம், கடைசி 15 ஓவர்களில் இங்குமங்குமாக வீசினோம், இதைப் பேசி விரைவில் தீர்வு காண்போம்” என்றார் கோலி.

http://tamil.thehindu.com/sports/ஓரிரு-முறை-350-ரன்கள்-இலக்கை-வெற்றிகரமாக-விரட்டியுள்ளோம்-ஆனால்-634-என்ற-நிலையிலிருந்து-அல்ல-விராட்-கோலி/article9482867.ece?homepage=true

Link to comment
Share on other sites

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பாண்டேவை களமிறக்க கோலி விருப்பம்- யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 

 
யுவராஜ் சிங். | படம்: ஏ.எஃப்.பி.
யுவராஜ் சிங். | படம்: ஏ.எஃப்.பி.
 
 

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மணிஷ் பாண்டேவை களம் இறக்க கேப்டன் விராட் கோலி விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் யுவராஜ் சிங் நீடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே புனேயில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதிலும் இந்திய அணியின் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணியின் கேப்டன் விராட் கோலியை கவலை யடையச் செய்துள்ளது. குறிப்பாக மூத்த வீரர்களான தோனி, யுவராஜ் சிங், ஷிகர் தவண் ஆகியோர் அவுட் ஆன விதம் அவரை அதிருப்தி யடைய வைத்துள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து புனேயில் நிருபர்களிடம் கூறிய கோலி, “புனே ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவுட் ஆகவில்லை. மோசமான ஷாட்களை ஆடியதாலேயே அவுட் ஆனார்கள்” என்றார்.

மூத்த வீரர்கள் சறுக்கிய நிலை யில் கடந்த காலங்களில் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக ஆடிய மணிஷ் பாண்டே, ரஹானே ஆகியோரில் ஒருவருக்காவது கட்டாக் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து புனே போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறிய கேப்டன் விராட் கோலி, “6-வது வரிசையில் கேதார் ஜாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 4 அல்லது 5-வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ய மணிஷ் பாண்டே தயார் நிலையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மணிஷ் பாண்டே, சராசரியாக 43 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் கைவிட்ட நிலையில் தனியாக போராடி 104 ரன்களைக் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். அவரைப் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்று விராட் கோலி கருதுவதால் கட்டாக்கில் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மணிஷ் பாண்டேவை அணியில் சேர்க்கவேண்டும் என்றால் யுவராஜ் சிங்கை நீக்கவேண்டிய இக்கட்டான நிலையில் விராட் கோலி இருக்கிறார். எதிர்காலத்துக்கான இந்திய அணியை உருவாக்க தனது கனவு நாயகனான யுவராஜ் சிங்கை கோலி கழற்றி விடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பிவரும் ஷிகர் தவணுக்கு பதிலாக கட்டாக்கில் ரஹானே களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-கிரிக்கெட்-போட்டி-பாண்டேவை-களமிறக்க-கோலி-விருப்பம்-யுவராஜ்-சிங்குக்கு-வாய்ப்பு-கிடைக்குமா/article9486579.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

 
 
 
இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இங்கிலாந்து கேப்டன் மோர்கன் - இந்திய கேப்டன் விராட் கோலி.
கட்டாக் :

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பரபாதி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஓட்டலில் அறைகள் கிடைக்காததால் 2 நாட்கள் புனேயிலேயே தங்கி இருந்த இவ்விரு அணி வீரர்களும் நேற்று தான் கட்டாக்குக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 351 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 63 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய போதிலும் எந்த ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தும் தங்களால் ஜெயிக்க முடியும் என்பதை நமது வீரர்கள் நிரூபித்து காட்டினர். கேப்டன் விராட் கோலியும் (122 ரன்), கேதர் ஜாதவும் (120 ரன்) செஞ்சுரி அடித்து அணியை கரைசேர்த்தனர். குறிப்பாக 65 பந்துகளில் சதத்தை எட்டிய ஜாதவின் அதிரடி, வெகுவாக கவர்ந்தது. இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்ப்புக்குரிய வீரராக ஜாதவ் இருக்கிறார்.

ஷிகர் தவான், விக்கெட் கீப்பர் டோனி, யுவராஜ்சிங் தொடக்க ஆட்டத்தில் சொதப்பினர். அவர்கள் 2-வது ஆட்டத்தில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். அதே சமயம் பேட்டிங்குக்கு உகந்த கட்டாக் ஆடுகளத்திலும் பந்து வீச்சு எடுபடுவது சந்தேகம் தான். முந்தைய ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ராவை சேர்க்கலாமா என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த மோதலிலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி வியூகங்களை தீட்டியுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் 350 ரன்கள் குவித்தும் தோல்விபாதைக்கு தள்ளப்பட்டதை இங்கிலாந்து வீரர்களால் ஜீரணிக் கவே முடியவில்லை. பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்.

புனே போன்றே இந்த மைதானத்தின் எல்லை தூரமும் சற்று குறைவானது தான். அத்துடன் ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் எப்போதும் போல் ரன்குவிப்புக்கு சாதகமாகவே இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார். கடைசியாக இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் (2014-ம் ஆண்டு) இந்தியா 363 ரன்கள் திரட்டி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே ரசிகர்களுக்கு ரன் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். மாலை 5.30 மணியில் இருந்தே இங்கு பனிபொழிய தொடங்கி விடுகிறது. பனிப்பொழிவின் தாக்கத்தின் மத்தியில் இரவில் பந்து வீசுவது லேசுப்பட்ட காரியம் அல்ல. பந்தை வசமாக பிடித்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்காது என்பதால் அவ்வாறான பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் குவிக்க முடியும். அதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி தயக்கமின்றி 2-வது பேட்டிங்கை தான் தேர்வு செய்யும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இங்கு நேருக்கு நேர் சந்தித்த 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டதை கண்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி ஆட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்திற்குள் பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எதையாவது தூக்கி வீசினால், உடனடியாக பிடித்து போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

ரசிகர்களின் நடவடிக்கையை கண்காணிக்க மைதானம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித் அல்லது பிளங்கெட், ஜாக் பால்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/19100740/1062969/India-England-2nd-one-day-cricket-match-on-today.vpf

Link to comment
Share on other sites

இங்கி.யுடன் 2வது ஒருநாள் போட்டி! யுவராஜ் சிங், தோனி சதம்!

யுவராஜ் சிங்

கட்டாக்கில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். தோனியும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம், கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுல் 5 ரன்னிலும், தவான் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கோலி 8 ரன்னில் வெளியேற, யுவராஜ் சிங் களம் கண்டார். இவர் தோனியுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். அரைசதம் அடித்த யுவராஜ், தொடர்ந்து அபாரமாக விளையாடி 98 பந்தில் சதம் விளாசினார்.

2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங், ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசினார். தற்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து மீண்டும் மிரட்டியுள்ளார்.

தோனி அதிரடி சதம்

மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த தோனி, 106 பந்தில் சதம் அடித்தார். தோனிக்கு இது 10வது சதம் ஆகும்.

தற்போது, இந்திய அணி 43 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 100 ரன்னிலும், யுவராஜ் சிங் 150 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்த ஜாேடி 4வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/78162-yuvraj-hundred-leads-indias-revival.art

Link to comment
Share on other sites

150 ஓட்டங்களை முதன்முறையாக தொட்ட யுவராஜ் ; சதம் அடித்த டோனி ; துடுப்பாட்டத்தில் மிரட்டிய இந்தியா

இந்திய அணியின் யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

257969.jpg

யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 139 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று தனது முதலாவது 150 ஓட்டத்தினை பூர்த்திசெய்துள்ளார்.

அதுமாத்திரமின்றி யுவராஜ் சிங் 6 வருடங்களுக்கு பிறகு சதமடித்து அசத்தியுள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி தலைமை பதவியிலிருந்து விலகிய பிறகு தனது முதலாவது சதத்தினை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

டோனி 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 381 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15584

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.