Sign in to follow this  
நவீனன்

ஊற்று - தேநீர் கவிதை

Recommended Posts

ஊற்று - தேநீர் கவிதை

 

 
oottrukavithai_3093489f.jpg
 
 
 

சக்கையாகிப் போன

ஒரு பழைய நினைவின்

இடுக்கிலிருந்து

உருண்டோடி வருகிறது

*

காடிருந்த நிலத்தின்

வியர்வையாக வழிகிறது

*

புதையுண்ட

தனிமையின் விதையொன்று

மரமாகி உதிர்க்கும்

முத்து முத்துப் பூக்களாக

உதிர்ந்து கொண்டிருக்கிறது

 

மூலம் காண முடியாத

ஆழத் துயரில் ஊற்றெடுத்து

தளும்பிக் கொண்டிருக்கிறது

*

கால வெறுமையின்

ஊதுகுழல்களால் ஊதப்படும்

சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில்

பொங்கிப் பொங்கி வழிகிறது

 

பசி கொண்ட மலைப்பாம்பாக

காதுமடல்களில் நுழைந்தும்

கழுத்துவரை ஊர்ந்தும்

எதையோ தேடித்தேடி

அலைந்து கொண்டேயிருக்கிறது

 

என் கண்ணீர்.

http://tamil.thehindu.com/opinion/blogs/ஊற்று-தேநீர்-கவிதை/article9389356.ece

Share this post


Link to post
Share on other sites
suvy    3,200

நினைவுகள் பசுமையானவை, அது கண்ணிரானாலும் சரி வியர்வையானாலும் சரி இதயத்தை ஈரமாக்கி விடும்.....!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this