Jump to content

Recommended Posts

kaanthal8.JPG

தியாகம்.. 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 

கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! 
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! 
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! 
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? 
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! 
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். 
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் 
ஆணிவேரான ஆலமரங்களே..! 

வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... 
வீழ்ந்தாலும் விதையாக 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதில்லை 

ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் 
இல்லை 
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். 
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் 
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். 
மணியோசை கேட்டால் மனமுருகும்... 
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்... 
கண்களிலே கண்ணீர் கவி எழுதும் 
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும். 


கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில் 
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள். 
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த 
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர். 
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர் 
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர். 
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த 
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர். 
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின் 
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர். 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன். 

சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்' 
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு' 
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்' 
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்' 
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை' 
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 

தாயகமே தாயாக 
தலைவனே உயிராக 
தமிழ் மானம் பெரிதாக 
தம் உயிர் தந்தவர்கள் 

எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும் 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதுமில்லை 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது. 
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது. 
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..! 
எவருக்குமே விளங்கவில்லை..! 
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..! 
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறார்கள் 
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய் 
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான். 

கண்மணிகளே..! 
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள் 
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு... 
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று? 
எவனுக்குமே விளங்கவில்லை..! 
யார் சொன்னது? 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.! 
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.! 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..! 

'முடியும்' என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம் 
விதைத்து முடிந்ததும் 'அறுவடை' கிடைக்காது. 
விடிந்து எழுந்ததும் 'கனவு' பலிக்காது. 
விடுதலை என்பது 'உயிர்விலை' கொடுத்துப்பெறுவது. 
விடுதலை என்பது 'நீண்ட நெருப்பாறு' 
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.! 
விழுவது என்பது வெட்கமல்ல.! 
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.! 
எழுவது பெரிதல்ல.! 
எழுந்து அடிப்பதுதான் பெரிது.! 
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம் 
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.! 
எங்கள் வயல் செழிக்கும்.! 
காய்ந்து கிடக்கும் எங்கள் 'பூவரசு' பூப்பூக்கும்.! 
நம்பு உன்னை நம்பு 
உன் தேசத்தை நம்பு 
தேசத்தின் புயல்களை நம்பு... 
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு 
நாளை பிறக்கும் நம் தேசத்தில் 
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.! 

இது கார்திகைமாதம்..! 
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்...!!! 
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்...!!! 

எத்தனை 'வலி' சுமந்தோம்? 
எத்தனை 'உயிர்' கொடுத்தோம்? 
எல்லாமே வீண்தானா? 
இல்லை 
கல்லறைகளுக்குள் தமிழனின் 'கனவுகள்' கருக்கொண்டு கிடக்கின்றன.! 
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.! 
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.! 
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.! 
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!யுகங்களும் ஆகலாம்..!!! 
ஆனால் 
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச் 
சரித்திரம் சொல்கிறது. 

அதுவரை.... 
நீ 
கார்த்திகை பூ எடுத்து வா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..! 

தமிழ்ப்பொடியன்

http://www.vaarppu.com/padam_varikal.php?id=64

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.