Sign in to follow this  
Athavan CH

மீண்டும் உயிர் பெறும் மாவீரம்

Recommended Posts

Athavan CH    1,262

மீண்டும் உயிர் பெறும் மாவீரம்

n263-696x505.png

மீண்டும்
உயிர் பெறும் மாவீரம்
“”””””””””””””””,,,””””””””””””””””

உறங்கிக் கிடந்த
உறவுகளே உங்கள் வீரம்
ஓய்ந்து போகவில்லை
உயிர்பெறத் துடிக்கின்றது “””

எங்கள்
கண்மணிகள்
கல்லறை எங்கும்
பகைவன் பாதங்களின்
சிதைவு கண்டு
முட்புதர்கள் கூட
மூடிக்கொண்டது ”

கல்லறை எங்கோ
ஓரமாய் விழியிளந்து
விசும்பும் சத்தங்கள்
உறவுகளின் உள்மனதை
உரமூட்டியதோ,,

வீரம் மெருகேறிய
கைகளில் வீச்சருவாள்,
புனிதம் கொள்கின்றது
மாவீரர் துயிலும் இல்லம் ”

இன்று மிளிரும்
மாவீரர் நாள்
மிடுக்குடன் எழுந்து
கொள்ளட்டும் ”

கார்த்திகை 27
கண்மணிகளின்
புனித நாள் ”

மாற்றம் வேண்டும்
நாளை ஈழம் மலரவேண்டும் ”

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஈழவன் தாசன்

http://www.velichaveedu.com/n263-png/

 

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

n245-696x357.png

சாவினை தோள் மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ !

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய
தந்தையின் கையை நினைத்தீரோ!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்

Thurairatnam Thayalan

http://www.velichaveedu.com/n245-png/

 

இது மாவீரர் காலம்! – செந்தமிழினி பிரபாகரன்

 

np-201115-03-696x339.png

எழுத முடியாத வார்த்தைகளுக்குள்
அழுகை பொங்கும்
உணர்வுகளுள்
ஈரம் காயாத வீர ஈகங்களின்
தீரம் போற்றும் உயிர்ப்போடு..
மாவீரம்..
தீ மூட்டும் கார்த்திகை காலமிது!

நெஞ்சுக்குள் நேர்கொண்டு
அஞ்சுதல் மிரண்டோட
எஞ்சிய காலமெல்லாம்
தொழுது போற்றி
எழுகை பாடி
மொழி வணங்கும்
தெய்வங்களாக
வழி காட்டும்
வரலாறாக
நித்தமும் நெருப்பேற்றி
பொறுப்பேற்க
நீங்களே
உயிரோரம் தீ மூட்டி
தமிழர்
எம்முள் உருவேற்றுகிறீர்கள்..

காலத்தை வடமிழுக்கும்..
கால சூரியர் தம்மை
கல்லறை வாசலில்
கண்ணீரில் கரைந்து
தொழுதெழும் காலம்…
ஆம்.. இது
கார்த்திகை காலம் 1

நெக்குருகி எழும்
உணர்வுகள்
விழியோரம்
நீரில்
தீபம்
ஏற்றும்
நிமிர்வுக்
காலம்!

இவர்கள் காலமானவர்கள் அல்ல!
காலமாய் …ஆனவர்கள்!

இனி வரும்
சந்ததியும்
மாவீரம்
போற்றும்
மா வீரம்
படைக்கும்!

இது மாவீரர்
காலம்!

 

http://www.velichaveedu.com/இது-மா/

Share this post


Link to post
Share on other sites
Athavan CH    1,262

எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்…!!

n184-696x373.png

தியாக சரித்திரங்களின் நாயகர்கள்
தாயக மண்ணின் காவலர்கள்
தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத்
தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்!

கந்தகக் காற்றைச் சுவாசித்து…
விடுதலை ஒன்றையே யாசித்து…
அவர்கள் புரிந்தது பெருந்தவம்
தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த
காவல் தெய்வங்கள் !
மண்ணின் நிரந்தர விடியலுக்காய்,
நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும்
வீரத் தமிழ்ச் செல்வங்கள் !

எதிரியின் தோட்டாக்கள் கூட
இவர்களைப் பார்த்து அஞ்சும்!
மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்!
இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!!
புன்னகைத்தபடியே போர்க்களம் புக
இவர்களால் மட்டுமே முடிந்தது!
எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!!

தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன்
விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார்கள்
இவர்களின் கல்லறைத் தீபங்களின் ஒளியில்தான்
எம் தேசம் ஒளி கொண்டது…!
இவர்களின் பாதத் தடங்களில்தான்
எம் இனம் வழி கண்டது…!

மாவீரர்களே…!
உங்களை விதைத்த இடத்தையெல்லாம்
எதிரி சிதைக்கிறான்!
நீங்கள் இல்லாத எங்களையெல்லாம்
தினமும் வதைக்கிறான்!!
எங்கே போனீர்கள் எங்கள் செல்வங்களே ?
மீண்டும் வாருங்கள் காவல் தெய்வங்களே !

“உண்மையான தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை”
அதுவே நீதியும் நியதியுமாகும்…!!!
பட்டமரங்களெல்லாம் ஒருநாள் துளிர்விடும்… !
கார்த்திகைப் பூக்கள் ஊரெல்லாம் மலரும்…!
ஈழ தேசமெங்கும் உங்களுக்காய் …அகல் விளக்கெரியும்…!
தோட்டாக்கள் துளைத்த சுவர்களிலெல்லாம்
உங்கள் திருமுகம் ஒளிரும்…!

உங்கள் கல்லறைகள் வெறும் கல் _ அறைகளல்ல ,
ஈழத் தாயின் கருவறைகள் !
இலட்சியத்தீ கருக்கொள்ளும் நெருப்பறைகள்!
நாம் உங்களை புதைக்கவில்லை…
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்!

விழ விழ எழுவோம்!
வெட்ட வெட்டத் தழைப்போம்!
உங்கள் தியாகங்களை இலட்சியமாய்ச் சுமப்போம்…!
எம் தேசத்தின் விடியலுக்காய்… இறுதிவரை உழைப்போம்…!!

மாவீரர்களே…
நாம் உங்களைப் புதைக்கவில்லை…!
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்…!!

Tamil women – தமிழ் மகளிர் நோர்வே

http://www.velichaveedu.com/n184-png/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this