Jump to content

30.11.16  ஆனந்த விகடனில்  எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30.11.16  ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை  யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

மாநகரத்தின் அகதிகள்

தேசத்தின் வல்லசுரக் கனவினால்

தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட

ஒரு மாநகரத்தின் அகதிகள்

அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட

தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள்

வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட

சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு.

அங்குள்ள வங்கிக் கணக்கையும்

அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள்.

கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு

அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும்

அதில் ஜீவிக்கிறார்கள்

பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு

பிதுங்கி வழியும் பேருந்துகளிலும்

ரயில்களின் கழிவறை அருகிலும்

பயணிக்க முடியும் என்பது

இம்மாநகரத்தின் அகதிகளுக்கு

இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம்.

-சேயோன் யாழ்வேந்தன்

(ஆனந்த விகடன் 30.11.16)

(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)

(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)

Link to comment
Share on other sites

97p1.jpg

மிக சாதாரணமாக இணைக்கலாம் படத்தை...

உங்கள் கவிதையை தனிபக்கத்திலும் பார்த்தேன்... சந்தோசம் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

97p1.jpg

மிக சாதாரணமாக இணைக்கலாம் படத்தை...

உங்கள் கவிதையை தனிபக்கத்திலும் பார்த்தேன்... சந்தோசம் வாழ்த்துக்கள்.

நன்றி தோழர்!

நான் இணைக்க முடியவில்லை.   There was a problem processing the uploaded file. Please contact us for assistance.  என்று வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேயோன்.... இன்று,  25.11.2016 . உங்கள் கவிதை 30.11.2016. ஆனந்த விகடனில் எப்படி வெளிவந்தது  என்று, கூறுகின்றீர்கள்.

பல நாடுகள்... விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் போது,
இந்தியாவில் மட்டும் ஆற்றில் மணல் கொள்ளை, இயற்கையில் உருவான நதியை மறித்து அணை கட்டி மற்ற மாநிலத்தவனுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் செயல்களால்... விவசாயம் செய்ய விரும்பாத விவசாயி, நகரத்தை நோக்கி... வரும் பிரச்சினையை, ஏக்கமான  கவிதையாக வடித்து... அது ஆனந்த விகடனில் வெளி வந்தமைக்கு பாராட்டுக்கள்... சேயோன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/25/2016 at 8:48 PM, தமிழ் சிறி said:

சேயோன்.... இன்று,  25.11.2016 . உங்கள் கவிதை 30.11.2016. ஆனந்த விகடனில் எப்படி வெளிவந்தது  என்று, கூறுகின்றீர்கள்.

பல நாடுகள்... விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் போது,
இந்தியாவில் மட்டும் ஆற்றில் மணல் கொள்ளை, இயற்கையில் உருவான நதியை மறித்து அணை கட்டி மற்ற மாநிலத்தவனுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் செயல்களால்... விவசாயம் செய்ய விரும்பாத விவசாயி, நகரத்தை நோக்கி... வரும் பிரச்சினையை, ஏக்கமான  கவிதையாக வடித்து... அது ஆனந்த விகடனில் வெளி வந்தமைக்கு பாராட்டுக்கள்... சேயோன். :)

தங்களின் பாராட்டுக்கு நன்றி தோழர்!

30.11.16 தேதியிட்ட ஆனந்த விகடன்  24.11.16 அன்று வெளியாகிறது.  இப்படி வார இதழ்களில் இடப்பட்டிருக்கும் தேதி அந்த இதழ் நடப்பு இதழா என்று அறிந்துகொள்ள உதவுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.