Jump to content

''100 பெண்கள்''


Recommended Posts

இன்று முதல் ''100 பெண்கள்'' தொடர் மீண்டும் ஆரம்பம்

 

பிபிசியின் 100 பெண்கள் தொடர் நவம்பர் 21, திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

''100 பெண்கள்''

''100 பெண்கள்''

அடுத்த மூன்று வாரங்களுக்கு, பெண்கள் சந்தித்துள்ள முன்மாதிரி எதிர்ப்பு தருணங்களையும், கறுப்பு பெண்ணிய ஆராய்ச்சி, இசை, விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் உள்ள புகழ் பெற்ற பெண்களுடன் உரையாடல் என சுவையான பல அம்சங்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அதில், நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டிராத, வியத்தகு அனுபவங்களைப் பெற்ற பல பெண்களின் உணர்வுகளையும் உங்களுக்கு வழங்கவுள்ளோம்.

100 பெண்கள் தொடர் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்கள் பட்டியலை பிபிசி 100 பெண்கள் தொடர் வெளியிடுகிறது.

உலகெங்கும் உள்ள பல பெண்களின் சாதனைகள், அனுபவங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து பல ஆவணப்படங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் நேர்காணல்களை நாங்கள் உருவாக்குகிறோம்.

 

திம்மக்கா

 திம்மக்கா

பிபிசி இதனை செய்வதற்கு காரணம் என்ன?

பிபிசி செய்தி சேவை ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிபிசி பெண் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 100 பெண்கள் தொடர் ஒவ்வொரு வருடமும் உருவாக்கப்படுகிறது.

நாங்கள் தொடர்ந்து கேட்பது இவை தான்:-

  • நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 21-ஆம் நூற்றாண்டில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
  • அரசியல் மற்றும் வணிகத்தில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்களா? அல்லது இத்துறைகளில், பெண்கள் சாதிப்பதற்கு உலக அளவில் ஒரு கண்ணாடி தடுப்பு கூரை உள்ளதா?
  • பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய ஆபத்துக்கள் எவை என்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு உள்ள மிகப் பெரிய வாய்ப்புகள் என்ன?
  • மேலும், முக்கியமான ஊடகங்களில் பெண்களை தவறாக வெளிப்படுத்துகிறோமா? அவர்களின் கதைகளை, அனுபவங்களை நாங்கள் சரியான முறையில் பிரதிபலிக்கிறோமா?

இத்தொடர் குறித்த உங்களின் கருத்துக்கள் , பார்வை மற்றும் ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

இத்தொடர் குறித்த பதிவுகளை காணவும் ,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் எங்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் யூ-டியூபில் வாய்ப்புக்கள் உள்ளன.

#100women என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி உங்களுக்கு மிகவும் விருப்பமான பதிவுகள் மற்றும் உங்களின் சொந்த அனுபவங்கள்/ கட்டுரைகளை பகிரலாம்.

 

''100 பெண்கள்'' தொடர்

 ''100 பெண்கள்'' தொடர்

நான்காவது வருடமாக வெளிவரும் இந்த 100 பெண்கள் தொடர், வழக்கத்தை விட இம்முறை இன்னமும் பெரிய அளவில் வெளிவரவுள்ளது.

பாடகர், பாடலாசியர் மற்றும் இசை தயாரிப்பாளரான அலிசியா கீஸ், அமெரிக்காவில் உள்ள இனங்கள் குறித்தும், டிரம்ப் அதிபராவதற்கு முன்பும், பின்பும் உள்ள சூழல் குறித்தும், பெண்ணியம், ஒப்பனை, புகழ், எதிர்ப்பு, மகன்கள் வளர்ப்பு என பல அம்சங்கள் குறித்து நம்முடன் உரையாற்றவுள்ளார். இவரைப் போலவே இன்னமும் பல பிரபலங்கள், நீங்கள் அறிந்திராத பல பெண்களின் கதைகள் மற்றும் அனுபவங்கள் இம்முறை இடம்பெறவுள்ளன.

அலிசியா கீஸ்

 

 அலிசியா கீஸ்

இணையதளத்தில் பெண்களின் பங்களிப்பு

பெண்களுக்கான இடத்தையும், உரிய அங்கீகாரத்தையும் இணையதளம் அளிக்கிறதா என்ற வினாவுடன் இந்த தொடரை நாங்கள் முடிக்கிறோம். உலகின் 7-வது பிரபல வலைத்தளமாக விக்கிபீடியா உள்ளது. ஆனால், அதன் பதிப்பாசிரியர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் தான் பெண்கள் உள்ளனர்.

மேலும், விக்கிபீடியா வலைத்தளத்தில் உள்ள குறிப்பிடத்தக்க சுயவிவரங்களில் 15 சதவீதம் தான் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களை ஊக்குவிக்க, நாங்கள் விக்கிபீடியாவுடன் இணைந்து எடிட்-எ-தான் என்ற 12 மணி நேர எடிட்டிங் மற்றும் திருத்தும் வாய்ப்பினை வழங்குகிறோம். பெண்கள் குறித்த கட்டுரைகள் மற்றும் சுயவிவரங்களை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

வரும் டிசம்பர் 8-ஆம் தேதியன்று எங்கள் இணையதளத்தில் சேர்ந்து, நீங்கள் பங்களிப்பு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம். #100womenwiki ஹேஸ்டேக்கில் இணைந்து எவ்வாறு கட்டுரைகள் எடிட் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பின் உங்களின் பங்களிப்பும் சேரட்டும்.

http://www.bbc.com/tamil/india-38043284

Link to comment
Share on other sites

திரை நட்சத்திரத்திலிருந்து சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக - ஒரு பெண் கலைஞரின் விஸ்வரூபம்

 

கே.முரளீதரன்

பிபிசி தமிழ் செய்தியாளர்

ஆணாதிக்கம் மிகுந்ததாகக் கருதப்படும் தமிழ்த் திரையுலகிலும், சின்னத் திரையுலகிலும் பெண்கள் வெற்றி பெறுவது அரிதாகவே நடக்கிறது. அதிலும், பெண்களுக்கு என்று ‘ஒதுக்கி வைக்கப்பட்ட’ நடிப்பு , பாடல் போன்ற சில துறைகளை தவிர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற வேலைகளில் பெண்களின் செயல்பாடும் வெற்றி பெறுவதும் குறைவே.

ஆனால் ராதிகா ஒரு விதிவிலக்கான வெற்றிக்கதை.

ராதிகா
 சின்னத்திரையிலும் வெற்றித் தடம் பதித்த ராதிகா

எழுபதுகளின் இறுதியில் இளம் பெண்ணாக திரையுலகில் நுழைந்த ராதிகா சரத்குமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமா, தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் என வலம் வருகிறார்.

1993ல் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்த நேரம். விருமாயியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ராதிகாவுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த. 94ஆம் வருடத்தில் 6 படங்கள்; 95ஆம் வருடத்தில் 8 படங்கள் என நடித்துக் குவித்தார் அவர்.

100 பெண்கள்  

பாதை மாற்றம்

இம்மாதிரியான சூழலில் யாருமே தொடர்ந்து சினிமாவில்தான் தீவிர கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ராதிகா சற்று நிதானமாக யோசித்தார். இப்படியே எவ்வளவு நாள் ஓட முடியும்? முதல் குழந்தையான ரெயான் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ராதிகா.

அந்த யோசனையில் பிறந்ததுதான் ராடன் டிவி. தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஜெயா டீவியின் முந்தைய அவதாரமான ஜேஜே டிவியில் பாலைவனப் புயல் என்ற தொடரைத் தயாரித்தார் ராதிகா. ஏகப்பட்ட இழப்பு. எதிர்பாராத இழப்பு.

"நிறைய பேர் நான் டிவிக்கு செல்லக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், என் தொழில்வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்று தோன்றியது. அப்படித்தான் டிவியில் நுழைந்தேன்" என்று துவங்குகிறார் ராதிகா.

ஆனால், ஒரு நடிகை தொலைக்காட்சி நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக தொடரைத் தயாரித்து அளிப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. வங்கிகள், சேனல்கள் யாரும் நம்பவில்லை.

"ஒரு நடிகையாக என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நீங்கள்ளாம் என்ன செய்ய முடியும் என்று ஆரம்பிப்பார்கள். நடிகைகளால் எதுவும் முடியாது என்று நினைப்பா்கள். என்னால் முடியும் என்று நிரூபிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் ராதிகா.

ராதிகா முதலில் எடுத்த தொலைக்காட்சித் தொடர் தோல்வியில் முடிந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இந்தி மெகா தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மெகா தொடர்களின் முகம் மாறிக்கொண்டிருந்தது.

ராதிகா  தொலைக்காட்சித் தொடர் நாயகி

சித்தியில் தொடங்கிய சின்னத்திரை பயணம்

"கலாநிதி மாறன் என்னுடைய நல்ல நண்பர். ஆனால், என்னால் ஒரு சீரியலை தயாரிக்க முடியும் என்று நம்பவைக்க சில வருடங்கள் பிடித்தன" என்று நினைவுகூர்கிறார் ராதிகா.

அப்படி உருவான தொடர்தான் ’சித்தி’. சன் தொலைக்காட்சியில் தினமும் இரவில் ஒளிபரப்பான இந்தத் தொடர், மூன்று ஆண்டுகள் ஓடியது. இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமையும் இந்தத் தொடருக்கு உண்டு.

தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்தத் தொடர் மொழிமாற்றம்செய்யப்பட்டு ஒளிபரப்பானது. உண்மையில் அந்தத் தொடருக்குப் பிறகு ராடன் நிறுவனம் தொலைக்காட்சித் தொடர்களின் போக்கையே மாற்றியது.

அதற்குப் பிறகு, ராதிகாவுக்கு முன்னோக்கிய பயணம்தான்.

"இந்தப் பயணத்தில் நடிகையாக இருப்பது உதவியிருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால், அதுதான் எனக்கு பெரிய தடையாக இருந்தது. நடிகைகளுக்கு மூளையே இவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள்" என்று நினைவுகூர்கிறார் ராடன் மீடியா ஒர்க்ஸின் நிர்வாக இயக்குனரான ராதிகா.

ராதிகா  `ரெயிலில்` தொடங்கிய வெற்றிப் பயணம் - ‘கிழக்கே போகும் ரெயில்’ படப்படிப்பில் ராதிகா , இயக்குநர் பாரதிராஜாவுடன்

’தொடர்’ வெற்றிகள்

அதற்குப் பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக தமிழ்த் தொலைக்காட்சியில் கோலோச்சிவருகிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸின் கடந்த ஆண்டு விற்று முதல் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்.

1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் 210க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

1994ல் தனிநபர் நிறுவனமாக துவங்கப்பட்ட ராடன் டிவி, 1999ல் கார்ப்பரேட் நிறுவனமானது. இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தொடர்களில் மையப் பாத்திரமாக ஒரு வலிமையான பெண்ணே இருப்பதாக கதைகள் இருக்கும். "பெண்கள்தான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. உண்மையில் எங்கள் தொடர்களை அதிகம் பார்ப்பது ஆண்கள்தான்" என்கிறார் ராதிகா.

ராதிகா  விளையாட்டாய் தொடங்கி வெற்றிச் சிகரத்தை அடைந்தவர்

திட்டமிடலில் ராணி

விளையாட்டுப் பெண்ணாக சினிமாவில் நடிக்கத் துவங்கிய ராதிகா, தற்போது மிகத் திட்டமிட்டு வேலை பார்க்கும் ஒரு நபர். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், அலுவலகம் என்று மிக பரபரப்பாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்ப்பதில்லை.

பல தொடர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நடிகை, ஒரு அரசியல் தலைவரின் மனைவி என பரபரப்பாக இருக்கும் ராதிகா, "ஆண்களைவிடப் பெண்களால் நேரத்தை சிறப்பாக கையாள முடியும்" என்கிறார்.

"என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்ததில்லை. நான் நடிகையானது, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தது, தயாரிக்க ஆரம்பித்தது எல்லாமே அந்த நேரத்தில் முடிவெடுத்து உழைத்ததுதான். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்." என்கிறார் ராதிகா.

உண்மையில் தான் எதிர்கொள்ளும் சவால்கள், தான் தேர்வு செய்த பாதையினால் வந்தவை என்கிறார் அவர். வெறும் நடிகையாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. ஆனால், இந்த உயரத்தையும் எட்டியிருக்க முடியாது என்கிறார் ராதிகா.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவுக்கும் இலங்கைத் தமிழரான கீதாவுக்கும் 1963ல் கொழும்பு நகரில் பிறந்தவர் ராதிகா. 1978ல் நடிக்க ஆரம்பித்து இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா, சின்னத் திரை தொடர்களைத் தயாரிக்கும், டிவி கலை நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸின் தலைவர். இவரது கணவர் சரத்குமார் பிரபல நடிகர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்.

http://www.bbc.com/tamil/india-38042903

 

Link to comment
Share on other sites

 

“பெண் என்பதால் சவால்கள் அதிகம்”

“பெண் என்பதால் சவால்கள் அதிகம்” - நடிகை ராதிகா
Link to comment
Share on other sites

தடைகளைத் தாண்டி தனியே பயணிக்கும் பெண்கள்

 

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகிவரும் நிலையில், ஒரு பெண் தனியாக பயணம் செய்வது என்பது பாதுகாப்பானதல்ல என்பது தான் பலரது கருத்து. எனினும் ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது என்பது புதிய செய்தி.

 

ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் இளம் பெண் கவிப்பிரியா

 ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் இளம் பெண் கவிப்பிரியா

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் இது போல தனியாகப் பயணம் செய்யும் சில பெண்கள் தமது பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

  100 பெண்கள் சிறப்புச் செய்தி

அவ்வாறு சுற்றுலா செல்லும் பல பெண்களில் சென்னையை சேர்ந்த கவிப்பிரியாவும் ஒருவர். 27 வயதாகும் அவர் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி. தனியாக பயணித்து சுற்றுலா செல்வது நம்மை பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு உதவும் என்கிறார் இளம் எழுத்தாளருமான இவர்.

புதிய அனுபவங்களையும் புதிய இடங்களையும் தேடிச் செல்லும் தனது பயணங்களை கவிப்பிரியாவும் தனது வலைப்பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறார்.

தனியே சுற்றுலா செல்லும் பெண்ணின் அனுபவங்கள் குறித்து காணொளியை காண: புதிய அனுபவங்களை தேடி தனியாக பயணிக்கும் பெண்

முதலில் தான் தனியாக பயணம் செய்வதை தனது குடும்பத்தார் விரும்பவில்லை என்று கூறும் அவர், பிறகு தனது பெற்றோர் தனக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா, தில்லி, லே, லடாக் போன்ற பல இடங்களுக்கு தனியாகவே பயணித்துள்ள இவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பயணிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று இவர் கூறுகிறார். தான் இதுவரை பார்த்த இடங்களில் தாஜ் மஹால் போன்ற ஒரு அழகிய இடத்தை பார்த்ததே இல்லை என்கிறார்.

பெண்கள் தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்கிறார் கவிப்பிரியா.

 

 பெண்கள் தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்கிறார் கவிப்பிரியா.

தனியாகப் பயணிக்கும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால் அவற்றை தைரியமாகவும் மன உறுதியுடனும் கையாண்டால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என்கிறார் கவிப்பிரியா.

ஆக்ராவில் ஒரு முறை, தான் பயணிக்கவேண்டிய ரெயிலைக் கோட்டை விட்ட நிலையில், அடுத்த ரெயிலுக்காக இரவு முழுவது காத்திருக்க வேண்டிய நிலையை அவர் நினைவு கூர்கிறார்.

ஒற்றையாய் செல்லும் சுற்றுலா பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது தனியாக சுற்றுலா சென்று புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்கிறார் கவிப்பிரியா.

கட்டுரை தொகுப்பு: சங்கீதா ராஜன்

http://www.bbc.com/tamil/arts-and-culture-38057331

Link to comment
Share on other sites

திருமண முறிவு, பிள்ளைகள் பிரிவு-இவற்றுக்கு மத்தியில் போர்க்களத்தில் ஒரு தாதி
------------------------------------------------------------------------------------------------------------------------
எச்சரிக்கை: இக்கணொளியில் இடம்பெறும் சில காட்சிகள் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அலெப்போ ஒரு காலத்தில் சிரியாவின் வர்த்தக மற்றும் தொழில் மையமாக இருந்த பகுதி.
ஆனால் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு மற்றும் தீவிரவாதிகளிடையே பிளவுபட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பிடியிலுள்ள நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 250,000 பேர் சிக்கியுள்ளனர். அங்கு தொடர்ச்சியாக அரசின் வான் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
நான்கு குழந்தைகளின் தாயான உம் யெஹ்யா பயிற்சி பெற்ற ஒரு கணக்காளர். ஆனால் தற்போது அலெப்போவில் மருத்துவ தாதியாகப் பணியாற்றுகிறார்.
பிபிசியின் 100 பெண்கள் தொடருக்காக......போர் பகுதியில் வாழ்க்கை எப்படியுள்ளது. அது தனது தனிப்பட்ட வாழ்வை எப்படி புரட்டிப்போட்டுள்ளது என்பது குறித்து பேசினார்.

 

 

BBC

Link to comment
Share on other sites

பிபிசி 100 பெண்கள் தொடர் - இந்தியாவின் "டிராக்டர் ராணி" (காணொளி)

100 பெண்கள் தொடர்

டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்விப்மென்ட் ( TAFE) நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் தனது குடும்ப நிறுவனத்தை கையில் எடுத்து அதனை உலகின் மூன்றாவது டிராக்டர் தயாரிக்கும் நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.

தனது திறன்பட்ட செயல்பாட்டால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய வளர்ந்த நாடுகள் உட்பட 85 நாடுகளில் இவரின் நிறுவனம் காலூன்றியுள்ளது.

பெண்கள் எந்த துறையை கையில் எடுத்தாலும் அதில் தன்னிறைவு பெற்று ஆண்களை விட கூடுதலாக இரண்டு படிகள் அதிகமாகவே தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார் மல்லிகா ஸ்ரீனிவாசன்.

பிபிசியின் 100 பெண்கள் தொடரில் ஒன்றாக, இந்தியாவின் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படும் மல்லிகா ஸ்ரீனிவாசன் தனது அனுபவத்தை பிபிசியிடன் பகிர்ந்து கொள்ளும் காணொளி.

 

BBC

Link to comment
Share on other sites

நீண்ட துப்பாக்கிகளைக் கண்டும் நிலைகுலையாத பெண்
-------------------------------------------------------------------------------------------------------

இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் இனவாத நோக்கில் ஒரே பாணியிலான காவல்துறை தாக்குதலுக்கு எதிராக துணிச்சலாக நின்றவர் அயீஷியா எவான்ஸ்.
ஆயுதமேந்திய அதிகாரிகள் முன் நிராயுதபாணியாக நீண்ட ஆடையுடன், கைகளை கட்டி நிற்கும் அவரது படம் பல ஊடகங்களிலும் தீயாகப் பரவியது.
அத்தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அவரே பிபிசியிடம் விளக்குகிறார்.

 

Link to comment
Share on other sites

கீதா ராமகிருஷ்ணன்: குரலற்றவர்களின் குரல்

 

சமூகத்தின் விளிம்பு நிலையில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.

கீதா ராமகிருஷ்ணன்
 தொழிலாளர்களுக்காகப் போராடுவதே கீதாவின் இலட்சியம்

யார் இந்த கீதா ராமகிருஷ்ணன்?

1974 - மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம். 17 லட்சம் பணியாளர்கள் பங்குபெற்று, இருபது நாட்களுக்கு நடந்த வேலை நிறுத்தம். தில்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது.

அந்தப் போராட்டம் மட்டுமல்ல, இந்தியாவே போராட்டங்களின் மூலமாக ஓர் எழுச்சியை சந்திக்க விரும்பிக் கொண்டிருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், ஜெயப்பிரகாஷ் நராயணன் என பல தலைவர்கள் உத்வேகமூட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் தன் ஆய்வுப் படிப்பைக் கைவிட்டுவிட்டு சென்னை திரும்பினார் அந்தப் பெண். அவர் கீதா ராமகிருஷ்ணன். மருத்துவரான தாய் கமலா ராமகிருஷ்ணனுக்கு மகளின் முடிவு பெரும் அதிர்ச்சி தான். சுதந்திரப் போராட்ட வீரரான தந்தை ராமகிருஷ்ணன், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

"தில்லிப் பல்கலைக்கழக சூழல் என்னை அம்மாதிரி மாற்றியிருக்கலாம். அந்த காலகட்டத்தில் எல்லா மாணவர்களுமே அரசியல் மயமாகியிருந்தோம். பல்கலைக்கழகங்களை விட்டு வெளியில் வாருங்கள் என ஜெயப்பிரகாஷ் விடுத்த அழைப்பு மிகவும் என்னை ஈர்த்தது" என்கிறார் கீதா.

சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருந்த உழைக்கும் மக்கள் மாமன்றத்தைச் சேர்ந்த குசேலர், சுதந்திரப் போராட்ட வீரரான எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது அறிமுகம் கீதாவுக்குக் கிடைக்கிறது. இந்த அறிமுகங்கள் அவரது வாழ்க்கையையே மாற்ற ஆரம்பித்தன.

கீதாவின் ஆரம்ப கால போராட்டங்கள்

கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து பணி நிரந்தரமற்ற சூழலில் பணியாற்றும் தொழிலாளர்களின் மத்தியில் பணியாற்ற ஆரம்பிக்கிறார் கீதா. அதற்குப் பிறகு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பேராசிரியர் என பணிகள் கிடைத்தாலும், 1979ல் இவை எல்லாவற்றையும் துறந்துவிட்டு, குடிசைப் பகுதி மக்களின் பிரச்சனைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறார் கீதா.

"என் அம்மாவை கடைசி வரை சமாதானப்படுத்த முடியவில்லை. என் தந்தையைப் பொறுத்தவரை நான் ஒரு வேலையில் இருந்தபடி, நான் இதையெல்லாம் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால், என் சகோதரர்கள் எனக்கு பெரும் ஆதரவாக நின்றார்கள். இல்லையென்றால் நான் இதையெல்லாம் செய்திருக்க முடியாது" என்று நினைவுகூர்கிறார் கீதா.

"எப்போதெல்லாம் குடிசைப் பகுதி மக்களுக்கு பிரச்சனைகள் வருகிறதோ, அப்போதெல்லாம் பெண்கள் தான் போராட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள். இவர்களோடு சேர்ந்து ஏன் பணியாற்றக்கூடாது என நினைத்தேன்" என்று கீதா நினைவுகூர்கிறார்.

கீதா ராமகிருஷ்ணன்:  அமைப்பு சாரா தொழிலாளர்களின் நம்பிக்கையான கீதா ராமகிருஷ்ணன்

வாழ்க்கைப் பாதையை முடிவு செய்த கீதா

அதற்குப் பிறகு, இந்தியன் கவுன்சில் ஃபார் சோஷியல் சயின்ஸ் ரிசர்ச் அமைப்பிற்கான ஒரு ஆய்வுக்காக பெண் கட்டுமானத் தொழிலாளர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தபோதுதான், இனி தன் வழி இதுதான் என்று புரிந்துகொண்டார் கீதா.

அந்த சமயத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கென எந்த சலுகையும் கிடையாது. மிக மோசமான நிலையில் அவர்கள் பணியாற்றி வந்தனர். "அவர்களிடம் இயல்பாகவே ஒரு போராட்ட உணர்வு இருந்தது. அப்படி உணர்வு இருப்பவர்களை வைத்து தான் ஏதாவது செய்யமுடியும். புதிதாக தயார் செய்வது கடினம்" என்று நினைத்த கீதா, அவர்களை ஒரு இயக்கமாக்கி, போராடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதற்குப் பிறகு, சென்னையில் கட்டுமானத் தொழிலாளர்களை வைத்து அவர் நடத்திய போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. அடுத்த கட்டமாக தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை பிற ஆர்வலர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் கீதா.

தொடர் போராட்டங்களால் பணிந்தது அரசு

இதற்குப் பிறகு, 1981-இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வீடு முற்றுகை, ராஜ்பவன் முற்றுகை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை என பல போராட்டங்கள். இதன் விளைவாக தமிழக அரசு இறங்கி வந்து, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான சட்டத்தை உருவாக்கியது.

ஆனால், சட்டத்தை செயல்படுத்த அடுத்து பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியிருந்தது. "என்னதான் போராட்டம் நடத்தினாலும் எதுவும் நடக்கவில்லை. கட்டடத் தொழிலாளர்கள் இறந்தால் பத்தாயிரம் தரும் அறிவிப்பு 1988-இல் வெளிவந்தது. அதற்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை" என்கிறார் கீதா.

அதன் பிறகு, 1992-இல் ஜெயலலிதா ஆட்சியில் நடத்திய சாலை மறியல், கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு படிப்படியாக நலவாரியத்திற்கான பணிகள் துவக்கப்பட்டு, 1995-இல் நலவாரியம் அமைக்கப்பட்டது.

கீதாவின் போராட்டங்களுக்கு துணை நின்ற நீதிபதி கிருஷ்ணய்யர்

"தனி நபர் சாகசங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாமே தொழிலாளர்கள் அளித்த பலம்தான். அவர்களுடைய போராட்டம்தான் இதை சாதித்தது. முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த போராட்டங்களில் மிகவும் துணை நின்றார். அவரில்லா விட்டால் தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்க எங்களால் அழுத்தம் கொடுத்திருக்க முடியாது" என்கிறார் கீதா.

முதலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு என ஆரம்பித்த இவரது செயல்பாடுகள், பிறகு அமைப்பு சாராமல் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக மாறியது.

கட்டடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஊரை விட்டு வந்து வெளியூரில் பணியாற்றுபவர்கள், தெருவோரம் கடை வைத்திருப்பவர்கள், சூளையில் வேலை பார்ப்பவர்கள் என பலரது பிரச்சனைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் கீதா.

"உலக மயமாக்கலுக்குப் பிறகு சுரண்டல் வேறு வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இப்போது கொத்தடிமைத் தொழிலாளர்கள் வேலைபார்க்கிறார்கள். அரச கட்டமைப்பின் வழியாக இதில் போராடுவது சிரமம்தான். ஆனால், அதைச் செய்துதான் ஆக வேண்டும்" என்று கீதா தெரிவித்தார்.

1995-இல் கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, பல்வேறு தொழிலாளர்களும் தங்களுக்கான உரிமைகளையும் கோரி போராட ஆரம்பித்தனர். ஆனால், இருந்தபோதும், 2006 -07-இல் இது ஒரு கூட்டமைப்பாக உருவெடுத்தது என்று கீதா குறிப்பிட்டார்.

100 பெண்கள்  

சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காகப் போராடுவதே கீதாவின் இலட்சியம்

எல்லாக் கட்சிகளிலுமே தொழிலாளர்களுக்கு என தனியான அமைப்புகள் இருந்தாலும் அமைப்புச்சாரா தொழிலாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. "அரசியல் கட்சிகளுக்கு ஏகப்பட்ட நிர்பந்தங்கள், கூட்டணி - தேர்தல் என. ஆகவே தொழிலாளர்களுடன் பணியாற்றுவது என முடிவுசெய்தேன்" என்கிறார் கீதா.

இப்போது அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, பெண்கள் போராட்டக் குழு, கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் என பல அமைப்புகளின் மூலம் தொழிலாளர்கள், பெண்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறார் கீதா.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசுக் கொள்கைகளை வகுக்கவைப்பது, உரிமைகளைப் பெற்றுத்தருவது, சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காகப் போராடுவது என பலமுனைகளில் இவரது செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

http://www.bbc.com/tamil/india-38087980

Link to comment
Share on other sites

வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்

 

விபத்தில் கால் சேதமடைந்த மகனின் விளையாட்டு சாதனைக் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜாவை பிபிசி தமிழுக்காக சந்தித்தார் பிரமிளா கிருஷ்ணன்

பரபரப்பான சேலம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அமைதியான தீவட்டிப்பட்டி கிராமத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஒரு அடையாளத்தைத் தந்தார் பாரலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.

மாரியப்பனின் தாய் சரோஜா
 

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் பாரலிம்பிக் போட்டிகளில் அவர் உயரம் தாண்டுதல் போட்டியில் விளையாடியபோது, அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தவர் அவரது தாய் சரோஜா. மாரியப்பன் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தருணத்தில், சரோஜா அவரது வாழக்கையில் வென்று விட்டதை தீவட்டிப்பட்டி கிராமம் ஒப்புக்கொண்டது.

  பிபிசியின் ''100 பெண்கள் '' சிறப்பு தொகுப்பு

மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண்.

தனது இளம் வயதில் வாழ்வதற்கான போராட்டம், தனது மூன்று ஆண் குழந்தைகளையும் வளர்க்க எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.

''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை,''' என்றார்.

ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை இருந்ததால் வாடகை வீடு கிடைப்பதில் கூடச் சிரமப்பட்டதாக அவர் கூறுகின்றார். ''உறவினர்கள் பலரும் ஒதுக்கி வைத்தனர். செங்கல் சுமக்கும் வேலை, விவசாய கூலி வேலையில் கிடைத்த காசு, எனக்கும் எனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தது. அவர்கள் என்னிடம் எதையும் வாங்கித் தர கேட்டதில்லை,'' என்றார் சரோஜா.

  மாரியப்பனின் தாய் சரோஜா

மாரியப்பனின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் அவரது வலது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட தனது மகனுக்கு உற்சாகம் மட்டுமே அளிக்கமுடிந்தது என்றார் சரோஜா. ''மாரியப்பன் மற்றும் அவனது தம்பிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும் தான் என்னால் தர கூடிய ஒன்றாக இருந்தது. வளரும் போது, அவன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,'' என்கிறார்.

மாரியப்பன் பெற்ற பரிசுகள்  

கடந்த சில மாதங்களில் தனது உடல் பலம் முழுவதையும் இழந்து, மன வலிமையையும் இழந்த சரோஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ''தற்கொலை தான் தீர்வு என நினைத்தேன். எனது மகன் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் பரிசுகளை குவித்திருந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த ஒலிம்பிக் பரிசு எங்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது,'' என்றார் சரோஜா.

மாரியப்பன் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்ற பிறகு மாரியப்பன் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்ற பிறகு

தமிழக அரசு கொடுத்த இரண்டு கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ள 75 லட்சம், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நிதி எனப் பல பரிசுகள் சரோஜாவின் இல்லத்தில் குவிந்துள்ளன. ஆனால் சரோஜாவுக்கு, அடுத்தமுறை தனது மகன் விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது, கை நிறைய பணம் தர முடியும் என்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

http://www.bbc.com/tamil/india-38105493

Link to comment
Share on other sites

புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

 

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து பெண்களுக்கென "பெண்நலம்" என்னும் புற்றுநோய் சேவை அமைப்பை தொடங்கி அதனைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ராதிகா சந்தான கிருஷ்ணன். இந்த அமைப்பு குறித்து ராதிகாவுடன் உரையாடினார் பிபிசி தமி்ழோசையின் விஷ்ணுப்ரியா

ராதிகா சந்தான கிருஷ்ணன்
 ராதிகா சந்தான கிருஷ்ணன்

புற்றுநோயிலிருந்த மீண்ட ராதிகாவின் தொடக்கம்

பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த புற்று நோய்களுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட புற்றுநோய் மையம் தான் "பெண்நலம்" என்னும் அரசு சாரா அமைப்பு.

அதன் நிறுவனர் ராதிகா சந்தான கிருஷ்ணன், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்தவர்.

எனவே புற்றுநோயால் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மனரீதியான ஆதரவு ஆகியவற்றின் தேவைகளை அறிந்திருந்த ராதிகா சந்தான கிருஷ்ணனன், புற்றுநோய் குறித்து தன்னால் முடிந்த வேவையை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்நலம் என்னும் அமைப்பை தொடங்கியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

2009 ஆம் ஆண்டு ’பெண்நலம்’ சிறியதொரு மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. பின்பு அந்த சிறிய குழு விழிப்புணர்வு மற்றும் மருத்துவக் குழு என்று பிரிக்கப்பட்டு பணியாற்றத் தொடங்கியது.

எதிர்கொண்ட சவால்கள்

பெண்கள் குழுக்களை இலக்கு வைத்து பணியாற்றிய ’பெண்நலம்’, முதல் இரண்டு வருடங்களுக்கு பெண்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு உருவாக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கிறார் ராதிகா சந்தான கிருஷ்ணன்.

படிக்காதவர்களிடம் மட்டுமின்றி படித்த பெண்களுக்கும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது ராதிகா சந்தான கிருஷ்ணன்

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 7-லிருந்து 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்; முக்கியமாக பெண்களை பாதிக்க கூடிய கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக பெண்களை பாதித்து வருகிறது, இருப்பினும் அது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை என்று கூறுகிறார் ராதிகா.

முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டால், கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் ; மேலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இருப்பினும் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இதை அறியாதவர்களாகவே உள்ளனர் என்றும் பலர் காலம் கடந்து கவனிப்பதால் அதிக ஆபத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்று கூறும் ’பெண்நலம்’ அமைப்பு, கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வரும் முன் பெண்களை பாதுகாப்பதே அதன் முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளது.

மேலும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதுடன், மக்களை கவரும் வகையில் பொம்மலாட்டம், நாடகம், ஆவணப்படம் என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் ’பெண்நலம்’ அமைப்பினர்.

நடமாடும் விழிப்புணர்வு பிரச்சாரம்

நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புற்றுநோய்க்கான விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்த 2014 ஆம் ஆண்டு நடமாடும் பேருந்து ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பேருந்து பெண்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் பகுதிகளுக்கே சென்று, பெண்களுக்கு புற்றுநோய் வரும்முன் காப்பதற்காக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுகிறது.

பெண்கள்

அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் பெண்நலம்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகச்சைகள் தனியார் மருத்துமனைகளில் பெரும் செலவுகளுக்கு வித்திடுவதால் சமூகத்தில் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த நிலைகளில் உள்ள பெண்களுக்கு, ’பெண்நலம்’ குறைந்த செலவில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இதுவரை சுமார் 2 லட்சம் பெண்களுக்கு மத்தியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள ’பெண்நலம்’, 6000 பெண்களுக்கு புற்றுநோய்க்கான சோதனையை நடத்தியுள்ளது . இது அனைத்தும் ராதிகா சந்தான கிருஷ்ணனின் முன் முயற்சியால் நிகழ்ந்தவை; தற்போது ’பெண்நலம்’ அமைப்பு அடுத்த கட்டமாக சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் தனது முயற்சிகளை மேலும் விரிவுப்படுத்தவுள்ளது.

http://www.bbc.com/tamil/india-38078432

Link to comment
Share on other sites

பூப்பெய்தினால் சைக்கிள் ஓட்டக் கூடாதா? தடையை மீறும் காசாப் பெண்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்கள் பூப்பெய்திய பிறகு சைக்கிள் ஓட்டக்கூடாது என காசாப் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரபூர்வமற்ற தடையை பெண்ணொருவர் மீறியுள்ளார்.
முப்பது வயதைத் தாண்டியுள்ள அம்னா சுலைமான், தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளது மட்டுமன்றி சிறிய குழுவொன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
இருந்தாலும் ஏன் இப்படியான முயற்சியில் ஈடுபட பல பெண்கள் முன்வரவில்லை என்பது குறித்து அவர் பிபிசியிடம் பேசினார்.
தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் அம்னா சுலைமான்.

 

 

BBC

Link to comment
Share on other sites

சமையல் கலையில் வணிகரீதியாக வெற்றி கண்ட குடும்ப தலைவி ஹேமா சுப்பிரமணியன்

 

திருமணத்துக்கு முன் சமையலறையையே பார்க்காத பெண்கள் , திருமணத்துக்கு பின் நன்கு சமைக்கக்கூடிய குடும்பத் தலைவிகளாவது சகஜமாக காணக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் , திருமணத்துக்கு பின் சமையலைக் கற்றுக்கொண்டு, வீட்டில் சமைப்பதுடன், அந்தக் கலையை ஒரு வணிக ரீதியில் தொடர் ஆரம்பித்து வெற்றி கண்டிருக்கும் சம்பவங்கள் குறைவாகவே இருக்கும்.

அப்படி சமையலை ஒரு பொழுதுபோக்காக துவங்கி, இணையத்திலும், வணிக ரீதியிலும் வெற்றி கண்டிருப்பவர் ஹேமா சுப்பிரமணியன். அவர் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயக்குமார்.

ஹேமா சுப்பிரமணியன்
 வணிக ரீதியில் சமையல் கலை

ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் கிடைக்கும் உணவு வகைகளை கூட வீட்டிலேயே எளிதாக சமைக்க கூடிய செயல் முறை விளக்கங்கள் தொடர்ந்து அளித்து வருகிறார் ஹேமா சுப்பிரமணியன்.

சமையல் செய்முறை விளக்க காணொளி காட்சிகளில் இவர் தோன்ற ஆரம்பித்தது கடந்த 2008 ஆம் ஆண்டில். தனது கணவரின் இணையதள நிறுவனத்திற்காக இந்த காணொளி காட்சிகளில் தோன்றிய இவருக்கு, தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அளவுக்கு இவரைப் பின்தொடர்பவர்கள் உள்ளார்கள்.

ஹோம் குக்கிங்  சமூக வலைத்தளங்கள் வாயிலாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அளவுக்கு இவரைப் பின்தொடர்பவர்கள் உள்ளார்கள்.

திருமணத்திற்கு முன்பு வரை பெரும்பாலான பெண்களை போல, தனக்கும் சமைக்கவே தெரியாது என கூறும் ஹேமா சுப்ரமணியன், பின்பு அமெரிக்காவில் கணவருடன் தனி குடித்தனம் நடத்திய காலத்தில் தான் சமையல் கலையில் ஆர்வம் காட்ட தொடங்கியதாக கூறுகிறார்.

ஆரம்ப காலகட்டம் முதலே தனக்கு உணவு மீது அலாதி பிரியம் இருந்ததாகவும், சமையல் கலை மீதும் ஆர்வம் காட்ட தொடங்கிய பின்னர், இதையே தனது தொழிலாக மாற்றிக்கொள்ள முன்வந்ததாகவும் ஹேமா சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

ஹேமா சுப்பிரமணியன்.  பிரௌனிஸ் என அழைக்கப்படும் கேக் வகைகளை மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார்

தொடர்ந்து பேக்கரி தொழிலும் ஈடுப்பட துவங்கியுள்ளதாகவும், பிரௌனிஸ் என அழைக்கப்படும் கேக் வகைகளை மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக விற்பனை செய்து வருவதாக கூறும் ஹேமா சுப்பிரமணியன், பிடித்தமான தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக அவசியம் என்கிறார்.

100 பெண்கள் தொடர்  

மகளிர் மேம்பாடு என்றாலே சமையல் துறையை தேர்ந்தெடுக்க கூடாது என்பது போன்ற மனநிலை பல்வேறு பெண்களுக்கும் உள்ளதாக குறிப்பிடும் ஹேமா சுப்பிரமணியன், அதன் காரணமாகவே 'செஃப்' என அழைக்கப்படும் சமையல் கலைஞர் துறையை தேர்ந்தெடுக்க பெண்கள் தயங்குவதாகவும் கூறுகிறார்.

ஹேமா சுப்பிரமணியன்.  பிடித்த பொழுதுபோக்கையே தொழிலாக தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலி தனம் என்கிறார் ஹேமா

முன்னேற்றம் காண்பதற்கு, பிடித்த பொழுதுபோக்கையே தொழிலாக தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலி தனம் என்கிறார் ஹேமா சுப்பிரமணியன்.

http://www.bbc.com/tamil/india-38130746

Link to comment
Share on other sites

 

பொழுதுபோக்காக சமையல்கலை - வணிக ரீதியாக மாற்றிய சென்னை இல்லத்தரசி

திருமணத்துக்கு முன் சமையலறையையே பார்க்காத பெண்கள் , திருமணத்துக்கு பின் நன்கு சமைக்கக்கூடிய குடும்பத் தலைவிகளாவது சகஜமாக காணக்கூடிய ஒன்றுதான். அப்படி சமையலை ஒரு பொழுதுபோக்காக துவங்கி, இணையத்திலும், வணிக ரீதியிலும் வெற்றி கண்டிருப்பவர் ஹேமா சுப்பிரமணியன்.

Link to comment
Share on other sites

அழகுக்கு புது அர்த்தம்-பார்வையற்றோரின் நடையில்
----------------------------------------------------------------------------------------------
ஆப்ரிக்க நாடான கானாவில் த்டைகளைக் கடந்து மாடலிங் துறையில் இறங்கியுள்ள பார்வையற்ற பெண்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அங்குள்ள பார்வையற்றோருக்கான பள்ளி ஒன்றில் பயின்று வரும் மாணவிகளை மாடலிங் துறையில் ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அழகு பார்வையில் மட்டுமல்ல என்பதை இப்பெண்கள் உணர்த்தியுள்ளனர்.

 

 

http://www.bbc.com/tamil

Link to comment
Share on other sites

அரபு நாடுகளில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கார்ட்டூன்களாக வெளிப்படுத்திய பெண் கார்ட்டூனிஸ்டுகள்

 

சில அரபு நாடுகளில் தற்போதும் கூட பெண்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் அல்லது நாட்டை விட்டு செல்வதற்கும், தங்களின் ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

"ஆண்களால் பாதுகாக்கப்படுவது" சட்ட ரீதியானதல்ல என்ற போதும் பல குடும்பங்களுக்குள் அது தினமும் பழகிப் போன ஒரு செயலாகவே உள்ளது.

பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு அங்கமாக, வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மூன்று பெண் கார்ட்டூனிஸ்டுகளை, அங்கு நிலவும் வழக்கம் எவ்வாறு பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை கார்ட்டூனாக வரையும்படி கேட்கப்பட்டது.

எகிப்து

பணக்கார வளைகுடா ஆண்கள் ஏழ்மையான எகிப்திய கிராமப் பகுதிகளுக்குச் சென்று இளவயதுப் பெண்களை தற்காலிக திருமணம் செய்வது வழக்கமாக மாறிவிட்டது என்று தெரிவிக்கிறார் விருது பெற்ற எகிப்திய கார்ட்டூனிஸ்ட் டோவா அல் எட்.

பெண்ணுறுப்பு அழித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற விலக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து கார்ட்டூன் வரைந்து வசைக்கு ஆளாகிறார் அல் எட்.

பெண்கள் திருமண வயதான 18 வயதை அடைந்தவுடன் பெண்களை மிகப்பணக்கார வெளிநாட்டு ஆணிற்கு திருமணம் செய்துக் கொடுக்கின்றனர்.
 

எகிப்தில் திருமண வயதான 18 வயதை அடைந்தவுடன் பெண்களை மிகப் பணக்கார வெளிநாட்டு ஆணிற்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

ஆனால் பல சமயங்களில் இந்த திருமணங்கள் குறுகிய கால ஏற்பாடுகளாகவே இருக்கின்றன; ஏனெனில் சிறிது காலத்திற்கு பிறகு அப்பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் அவர்களை நிராகரித்து விடுகின்றனர்.

ஒரு வெளிநாட்டு நபர் தன்னுடைய வயதைவிட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அதற்கு பதிலாக அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு சுமார் 6000 அமெரிக்க டாலர்களை அவர் தர வேண்டும்.

பெண்கள் தொடர்  

ஒரு பணக்கார நபருக்கு இந்த தொகை சிறியதாக இருந்தாலும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கப் போராடும் ஒரு எகிப்திய குடும்பத்திற்கு இது ஒரு ஊக்கத் தொகையாகவே உள்ளது.

இந்த சமுதாயத்தின் ஆண்கள் தங்களது பெண்களை விற்று வருகின்றனர் ஆனால் அரசும் அதை தட்டிக்கேட்க மறந்துவிட்டது என தன் ஆதங்கத்தை தெரிவிக்கிறார் அல் எட்.

துனிஷியா

தான் முதலில் கோட்டோவியம் (கார்ட்டூன்) வரையத் தொடங்கும்போது தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வரைந்ததாகவும் எனவே தன்னை ஒரு ஆண் என்றே பலர் கருதினர் என்றும் கூறுகிறார் நடியா கிராரி

அவர்களால் ஒரு பெண் ஓவியம் தீட்ட முடியும் என்றும் நகைச்சுவையான கதாப்பாத்திரங்களை படைக்க முடியும் என்றும் நம்ப முடியவில்லை என தெரிவிக்கிறார் கிராரி.

நடியா கிராரியின் ஓவியம் 

கிராரியால் வடிவமைக்கப்பட்ட "வில்லிஸ்" என்னும் பூனை கதாபாத்திரம் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு வரும் இழிவை தடுப்பதற்கு தன்னை தாக்கியவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதை கிண்டல் செய்கிறது.

மொராக்கோ

ரிஹாம் எல்ஹவுர், மொராக்கோ நாட்டு செய்தித்தாளில் இடம் பெற்ற முதல் பெண் கார்ட்டூனிஸ்ட்.

அவர் பெண்கள் தினமான மார்ச் 8ல் பிறந்ததால் தான் பிறக்கும்போதே பெண்ணியவாதியாக பிறந்ததாகக் கூறுகிறார்.

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பல ஆண்கள் சட்டத்தை பயன்படுத்தி தங்களது மனைவியை வெளிநாடுகளுக்குச் செல்ல விடாமல் தடுப்பதை கருத்தாக கொண்டு இவர் சித்திரம் தீட்டியுள்ளார். 

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பல ஆண்கள் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களது மனைவியை வெளிநாடுகளுக்குச் செல்ல விடாமல் தடுப்பதை கருத்தாக கொண்டு இவர் சித்திரம் தீட்டியுள்ளார்.

மொரோக்கோவில் ஆண்களால் பெண்கள் பாதுகாக்கப்படும் சட்டம் 2004 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சீர்திருத்தத்தில் மாற்றப்பட்டாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்ல ஆண்களிடம் சட்டபூர்வ அனுமதி பெற வேண்டும்.

http://www.bbc.com/tamil/global-38130615

Link to comment
Share on other sites

ஊழலை ஒழிக்க பெண் அதிகாரிகள் நியமனம்-இது மெக்ஸிகோவில்
-----------------------------------------------------------------------------------------------------------------------

மெக்ஸிகோவில் ஊழல் என்பது மாபெரும் பிரச்சனை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கிறது.
ஊழல் மலிந்த மாநிலம் ஒன்றில் பெண்களை தற்போது பணியமர்த்துகின்றனர்.
பிபிசியின் நூறு பெண்கள் சிறப்புத் தொடரின் ஒரு பகுதியாக, லஞ்ச பிரச்சனையை ஒழிக்க அங்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் காவல் அதிகாரிகள் குறித்த செய்தித் தொகுப்பு.

 

Link to comment
Share on other sites

இந்தியாவில் ஒரு பெண், அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் எது?

 
 

இந்தியாவில் ஒரு பெண் அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் இதுதானா?

 
மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்ததில் மோகன்லால்கன்ஜ் என்ற நாடாளுமன்ற தொகுதி தான் அதிக முறை பெண் உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த கடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தத் தொகுதியில் எட்டு தேர்தல்களில் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மோகன்லால்கன்ஞ் தொகுதிதான் இந்தியாவில் பெண்கள் அரசியல்வாதியாக இருக்கச் சிறந்த இடமா என்று கண்டறிய பிபிசி ஹிந்தி சேவையின் செய்தியாளர் திவ்யா ஆர்யா அங்கு சென்றார்.

மோகன்லால்கன்ஞ் தொகுதி பெரிய அளவில் கிராமங்களைக் கொண்டது. வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பல கிராமங்களைக் கடந்து மோகன்லால்கன்ஜுக்கு செல்ல வேண்டும்.

ஆச்சரியப்படும் வகையில், சாலைகள் நல்ல நிலையில் இருந்ததால், அந்தப் பயணம் மிக வசதியான ஒன்றாகத்தான் இருந்தது. நெடுஞ்சாலையை அடுத்து ஒரு பெரிய சாலைவழியாக பிலையா கேதா என்ற கிராமத்திற்கு சென்றோம்.

அந்தச் சாலைகளில் சிறிய செங்கல் மற்றும் மண் வீடுகள், ஆங்காங்கே காய்ந்த விளைநிலங்களைக் கடந்து வந்தோம்.

அந்தப் பகுதியில் வறுமை இருப்பதும், தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பதும், அது வர்த்தகம் நடக்கும் சுறுசுறுப்பான பகுதியோ அல்ல அது என்பதும் கண்கூடாகத் தெரிந்தது.

  100WOMEN

இறுதியாக அங்கு சில பெண்கள் குடிநீர் எடுப்பதற்காக ஒரு கைபம்ப் அருகில் இருப்பதைப் பார்த்தோம். அவர்களிடம் வழி கேட்க நின்றோம்.

அங்கு உள்ளூர் கவுன்சில் தலைவரான லட்சுமி ராவத் என்பவரின் இல்லம் எங்குள்ளது என்று கேட்டபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த நேஹா ராவத் என்ற ஒரு பதின்ம வயது பெண் சிரித்தார். ''பெயருக்கு தான் லட்சுமி ராவத் கவுன்சில் தலைவர். அவரது கணவரின் முதலாளி சங்கர் யாதவ் தான் உண்மையில் தலைவர்,'' என்றார் நேஹா.

''கடந்த ஆண்டு வரை சங்கர் யாதவ் தான் கிராமத் தலைவராக இருந்தார். இந்த கவுன்சில் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதால், சங்கர் யாதவ் அவரின் ஓட்டுநரின் மனைவியான லட்சுமி ராவத்தை தேர்தலில் போட்டியிட வைத்தார். லட்சுமி ராவத் வெற்றி பெற்றார்,'' என்றார் நேஹாவின் தாய்.

நேஹா ராவத் மற்றும் அவரது தாய்

 

 நேஹா ராவத் மற்றும் அவரது தாய்

கிராமப் பஞ்சாயத்து தலைமைப் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசு 1992ல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. கிராம பஞ்சாயத்துத் தேர்தல்தான் அரசியல் தளத்தில் முன்னேற முதல் படி.

ஆனால், காலப்போக்கில், ஆண்கள் தங்களது மனைவிகள், உறவுக்கார பெண்கள் அல்லது தங்களிடம் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் போன்றவர்களைத் தேர்தலில் போட்டியிட வைத்து, அவர்கள் வெற்றி பெற்றதும், அவர்களை பொம்மையாக்கி, பதவிக்கு உரிய அதிகாரம், நிர்வாக பொறுப்புகள் போன்றவற்றின் மீது தங்களது கட்டுப்பாட்டைச் செலுத்திய சம்பவங்கள் அடிக்கடி வெளியாகின.

மற்ற எந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் காட்டிலும், மோகன்லால்கன்ஜ் தான் அதிக முறை பெண்களை தேர்வு செய்த சாதனை படைத்த நாடாளுமன்ற தொகுதியாக உள்ள நிலையில், நான் மோகன்லால்கன்ஜின் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணினேன்.

லட்சுமி ராவத்லட்சுமி ராவத்

கடைசியாக 2009ல் மோகன்லால்கன்ஜில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீலா சரோஜ். இவரது பதவிக் காலம் 2014ல் நிறைவு பெற்றது. கிராம பஞ்சாயத்துகளில்உண்மையான தலைமை பொறுப்பை பெண்கள் வகிப்பது பெரிய சவாலான ஒன்று தான் என சுஷீலா சரோஜ் ஒப்புக்கொள்கிறார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீலா சரோஜ்.

 

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீலா சரோஜ்.

''தங்களது மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பின், அந்த வெற்றிக்கான பேரணியை கணவர்கள் தங்களது தலைமையில், தாங்கள் வெற்றி பெற்றது போல நடத்திச் செல்வதை நான் பார்த்துள்ளேன். அந்த நேரங்களில் அவர்களை தனியே அழைத்து, அவர்களுக்குப் பதிலாக வெற்றி பெற்ற பெண்களுக்கு மலர்மாலையை அவர்கள் கையாலே தர வைத்திருக்கிறேன்,'' என்றார் சுஷீலா சரோஜ்.

இந்தப் பகுதியில் உள்ள 1.8 மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள், விவசாயத்தின் மூலம் தான் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர்.

குறிப்பாகப் பெண்கள் மத்தியில், கல்வியறிவு குறைவாக உள்ளது. நேஹா ராவத் அதிர்ஷ்டசாலி. ராவத்தின் பெற்றோர் அவரைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

இங்கு மக்களின் வாழ்க்கை மிகக் கடினமானது. ராவத்தின் தாய் இங்கு வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் கிடைக்கும் வேலைகளின் மூலம் கிடைக்கும் கூலி அவர்களின் அன்றைய நாளுக்கான முழு செலவுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் குறைவானதாக இருக்கும்.

மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி  

''எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள். நகரத்தில் உள்ள கல்லூரி தொலைவில் உள்ளது. மேலும் அது தனியார் கல்லுரி. எனது பெற்றோரால் அங்கு விதிக்கப்படும் கட்டணத்தையோ, அங்குச் சென்ற வர போக்குவரத்து செலவையோ செலுத்த முடியாது,'' என்று ராவத் கூறினார்.

மோகன்லால்கன்ஜில் பெண்களுக்கான அரசு கல்லூரியோ அல்லது அரசால் நடத்தப்படும் மருத்துவமனையோ இல்லை. ஆனால் இது போன்ற வசதிகள் இல்லாமல் இருப்பது நேஹா ராவதின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை.

''லட்சுமி ராவத் போல இல்லாமல், எதிர்காலத்தில் நான் இந்தக் கிராமத்தின் தலைவராக ஆக விரும்புகிறேன். நான் சங்கர் யாதவாக இருக்க விரும்புகிறேன். இங்குள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல உண்மையான அதிகாரத்துடன் இருக்க விரும்புகிறேன்,'' என்றார்.

லட்சுமி ராவதின் வீட்டிற்குச் செல்லும் வழியில், தனது இலட்சியத்தை அடைய விரும்பும் நேஹாவின் உறுதியை எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒரு கிராமத்தின் தலைவர் பதவியை அளித்த பிறகும், அவருக்கு உண்மையில் அதிகாரம் அளிக்கப்படாமல் இருக்கும் நிலை எவ்வாறு இருக்கும்?

லட்சுமி ராவத் மிக அழகான இளம் பெண். அவர் அணிந்துள்ள ஆபரணங்கள் மற்றும் உடைகள் அவரை மற்ற பெண்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. ஆனால் நான் இதுவரை சந்தித்த கிராம தலைவர்களின் வீடுகளைப் போல அல்லாமல், அவரது வீடு ஒரு அறை கொண்ட மிக சிறிய வீடாக இருந்தது.

மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி  

''இது நல்ல ஏற்பாடுதான். நான் வெறும் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். கிராம நிர்வாகம் பற்றி எனக்குத் தெரியாது. சங்கர் யாதவை நான் நம்புகிறேன். அவர் சொல்லும் சொல்வதைப் பின்பற்றி அவர் சொல்வதை செய்கிறேன்,'' என்று விவரித்தார். '' ''ஆனால் சில சமயம் நான் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் எனது நேரத்தை அங்கு கழிக்கிறேன்,'' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

ராவத் தனது வரம்புகள் ஒப்புக்கொள்கிறார். ஆனால் தனது ஒரு வயது மகளின் எதிர்காலம் வித்தியாசமானதாக இருக்கும் என்று கனவு காண்கிறார்.

''எனது மகள் சீக்கிரம் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போது தான் அவளை நான் பள்ளிக்கு அனுப்ப முடியும். அதன் மூலம் அவளது வாழ்க்கையில் அவள் சாதனைகளை செய்யமுடியும்,''

அடுத்து, 2013ல் முதல் முறையாக மின்சாரம் அளிக்கப்பட்ட செபாவ் கெடா என்ற கிராமத்திற்கு நான் பயணித்தேன். இன்னும் கூட மின்சார வசதி இல்லாத சில கிராமங்கள் மோகன்லால்கன்ஜில் உள்ளன.

தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கும், செல்பேசிகளை சார்ஜ் செய்வதற்கும், கார்களில் உள்ள பேட்டரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒரு தற்காலிக வசதி செய்யப்படுகிறது.

பிரியங்கா யாதவ் மற்றும் அவரது தாய்

 பிரியங்கா யாதவ் மற்றும் அவரது தாய்

சுமார் 100 வளமான குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய பகுதி தான் செபாவ் கெரா கிராமம்.

இங்குள்ள பலரிடம் எருமைகள் உள்ளன. இன்னும் சிலர் தங்களது வீடுகளைப் புதிதாக வர்ணம் பூசியுள்ளனர்.

ஆனால் அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு சுகாதார பணியாளர் மற்றும் அவரது உதவியாளர் தவிர இங்குள்ள எந்தப் பெண்களும் எந்த விதமான பணியிலோ, தொழில் நடத்துவதிலோ ஈடுபடவில்லை.

இந்தக் கிராமத்தில் பட்டமேற்படிப்பு பயிலும் இரண்டு பெண்களில் ஒருவர் பிரியங்கா யாதவ் .

''நான் பட்டப்படிப்பு முடித்தவுடன் எனது 'எனது பெற்றோர் மேலே படிக்க வைக்க மறுத்தனர். நகரத்திற்குத் தனியாக சென்று வருவது பாதுகாப்பு அற்றது என்று வாதிட்டனர்,'' என்றார்.

இறுதியில் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால், நான் பட்டமேற்படிப்பு படிப்பதால் எந்த பயனும் இல்லை என்று அவர்கள் எண்ணினர்,'' என்றார். ஆனால் அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி  மோகன்லால்கன்ஜ் தொகுதியில் ஒரு பகுதி

அவரது தோழி சசி ஒரு ஆண்டுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்தவர். ஆனால் சசி ஒரு ஆண்டு பிரியங்கா படிப்பை முடிப்பதற்காகக் காத்திருந்தார். பின் கல்லூரிக்கு இருவரும் ஒன்றாகச் சென்று வருவதாகப் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றனர்.

நான் எண்ணியது போல் அல்லாமல், மோகன்லால்கன்ஞ் தொகுதிக்கு தொடர்ந்து பெண்கள் தேர்தெடுக்கப்படுவதால், சமூக முன்னேற்றம், மகளிர் மேம்பாடு போன்றவற்றில் ஒரு எடுத்துக்காட்டான தொகுதியாக இது மாறவில்லை.

ஆனாலும் இங்குள்ள இளம் பெண்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்கள். நான் அங்கிருந்து கிளம்பும் போது, பிரியங்கா, ''நாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று யாருக்குத் தெரியும்,'' என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டே !

http://www.bbc.com/tamil/india-38156533

Link to comment
Share on other sites

குத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் `அழகி'

 
 

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் ஒன்பது வயது சிறுமி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.

தாஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி, நவம்பர் மாதம் இத்தாலியில் சப் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

கடந்த ஆண்டில் அவர் உள்ளூர் அளவில் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆர்வத்தோடு உள்ளார்.

புகைப்பட கலைஞர் அபித் பாத், கலவரம் நிறைந்த காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தச் சிறுமியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை படம் பிடித்துள்ளார்.

குத்துச்சண்டை வீராங்கனை தாஜாமுல் இஸ்லாம்
 

ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில், பந்திபூரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்வதன் மூலம், இந்திய பணத்தில் ரூ.10,000 த்தை (146அமெரிக்க டாலர்; 117 பிரிட்டன் பவுண்டு) மாத சம்பளம் பெறுகிறார்.

இந்தச் சிறுமி தனது சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை பயிற்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

    குத்துச்சண்டை வீராங்கனை தாஜாமுல் இஸ்லாம்

2015ல் இந்திய தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தாஜீமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

''என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் நான் சிறிது பயந்தேன். ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் மிகக் கவனமாக இருப்பேன். எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவேன் என்று எண்ணினேன்,'' என்றர் தாஜாமுல்

தாஜாமுல் 2014ல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்பு கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார்.

100womenseries  

''நான் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தேன். பல இளவயது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் குஸ்தி சண்டை போடுவதை நான் பார்த்தேன். எனது தந்தையிடம் கூறி, நானும் அங்கு சேர வேண்டும் என்றேன், அவர் அனுமதித்தார்,'' என தாஜாமுல் பத்திரிகையாளரிடம் கூறினார்.

தினமும் தாஜாமுல் தனது குத்துச்சண்டை கையுறைகளை அணிந்து கொள்கிறார், மணல் மூட்டைகளைக் குத்துகிறார். தனது பயிற்சியாளர் ஃபைசல் அலியின் முன்னிலையில், பயிற்சிகளைச் செய்கிறார். சில சமயம் தாஜாமுல் ஒரு வாரத்தில் 25 மணி நேரம் பயிற்சி செய்வதாகப் பயிற்சியாளர் ஃபைசல் அலி கூறினார்.

குத்துச்சண்டை வீராங்கனை தாஜாமுல் இஸ்லாம் 

இந்த மாத முற்பகுதியில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கபம பதக்கம் வென்றார். ஐந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார். சுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்றார்.

தாஜாமுல் இத்தாலியில் இருந்து திரும்பிய பின், அவருக்கு வாழ்த்து சொல்ல, அவரது அண்டைவீடுகளில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பலர் அவருக்கு மலர்மாலைகளை சூட்டினர், பரிசுப்பொருட்களைக் கொடுத்தனர் மற்றும் அவரைக் கிராமத்தில் ஊர்வலமாக கூடிச் சென்றனர்.

தாஜாமுல்

 

தாஜாமுல் அவரது சுற்றுவட்டாரத்தில் பிரபலமானவராக மாறியுள்ளார். மக்கள் அவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவரோடு செலஃபி எடுத்துக்கொள்கின்றனர்.

அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளவயதினருக்கு உத்வேகம்அளிப்பவராக, ஓர் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தாஜாமுல்லின் சகோதரர் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளும் குத்துச்சண்டை பழகி வருகின்றனர்.

''இது அவர்களின் மரபணுவில் உள்ளது. தாஜாமுல்லின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சாம்பியன்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட பல படி முன்னே நிற்கிறார் தாஜாமுல்,'' என்று பள்ளி முதல்வர் ஷப்னம் கொன்சர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தாஜாமுல் பார்ப்பதற்கு மென்மையானவராக, அழகானவராக இருந்தாலும், அவரிடம் போராடும் குணம் உள்ளது. பார்ப்பதற்குப் பாவம் போல இருந்தாலும் அதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்,'' என்றார் அவர்.

தாஜாமுல் அவரது இளம் சகோதரர் மற்றும் அவரது தாய் 

அவரது தாய் மகளின் முயற்சிகளுக்கு மிக ஆதரவாக இருக்கிறார். தாஜாமுல் அவரது இளம் சகோதரர் அத்நன் உல் இஸ்லாமுடன் மிக நெருக்கமாக உள்ளவர். அவரது அடிச்சுவடுகளை இந்தச் சகோதரரும் பின்பற்றுகிறார். அத்நனுடன் விளையாடும் போது தாஜாமுல் தோற்பது போல நடிக்கிறார்.

இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியின் மாணவியான தாஜாமுல் அடிக்கடி தனது வகுப்பில் முதல் மாணவியாக திகழ்கிறார். கூடுதல் திறன் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

''அவர் சிறப்பாக நடனமாடுவார். தனக்கென ஒரு குழுவை வைத்துள்ளார் அவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பார். தாஜாமுல் சிறந்த மாணவி. படிப்பிலும் சுட்டி,'' என கௌன்சர் தெரிவித்தார்.

பள்ளிகூடத்தில் படு சுட்டி தாஜாமுல்

 

 பள்ளிகூடத்தில் படு சுட்டி தாஜாமுல்

தாஜாமுல் எதிர்காலத்தில் மருத்துவராக வரவேண்டும் என்று விரும்புகிறார். ''மருத்துவராக இருப்பதில் பயன் உள்ளது. முதலில் எனது எதிரிகளின் எலும்புகளை முறிப்பேன். பின் மருத்துவராக அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பேன்,'' என நகைப்புடன் சொல்கிறாள் இந்தச் சிறுமி.

http://www.bbc.com/tamil/india-38168575

Link to comment
Share on other sites

100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி
=================================
பிபிசி நூறு பெண்கள் தொடரின் இன்னுமொரு பெண் குறித்த கவலை.

ஹாங்காங்கின் பாடகரும் செயற்பாட்டாளருமான டெனைஸ் ஹோவை நாம் இங்கு சந்திப்போம்.

இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு ஆயிரக்கணக்கானோர் முழுமையான ஹாங்காங்குக்கு சுதந்திர தேர்தல் கோரிய சீன எதிர்ப்பு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்ட முதலாவது பிரபலம் இவராவார்.

இவரைப்பற்றிய பிபிசியின் காணொளி.

 

BBC

Link to comment
Share on other sites

சமூக உரிமைக்காகப் போராடும் `உச்சியும் பாதமும்'

 
 

பிபிசி-யின் 100 பெண்கள் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை - உரிமைப் போராளிகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இருவருமே, சமுதாயத்துக்காகப் போராடுபவர்கள். ஆனால், அந்த இருவரின் போராட்டக் களங்கள் வேறுபட்டவை. அவர்கள் நிற்கும் தளங்கள் மாறுபட்டவை. ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் வித்தியாசமானவை. அவர்கள் தங்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்த அலசல்.

விஜயதாரணி
 விஜயதாரணி

நாம் பார்க்க இருக்கும் பெண்களில் ஒருவர், அரசியல்வாதி. பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏ.க்களில் ஒரே பெண். எஸ். விஜயதாரணி.

குடும்பமே காங்கிரஸ் பின்னணி கொண்டது. வழக்கறிஞர் பட்டமும் பெற்ற விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,

பெற்றோர் இருவருமே மருத்துவர்களாக இருந்தாலும், அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டிலேயே மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

அவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மூவரும் பெண்கள். 9 வயதாக இருக்கும்போதே விஜயதாரணியின் தந்தை இறந்துவிட்டார். தாயார்தான், சவால்களைக் கடந்து மூன்று பெண் குழந்தைகளையும் ஆளாக்கினார்.

சோனியா காந்தியுடன் விஜயதாரணி  சோனியா காந்தியுடன் விஜயதாரணி

சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டார். அதன்பிறகு பிரதான காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார்.

1999-ஆம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவராக விஜயதாரணியை நியமித்தார். தேசிய அளவிலும் மகளிர் காங்கிரஸ், பிரதான கட்சி நடவடிக்கைகள் என பல பொறுப்புக்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

2011-ஆம் ஆண்டு முதன் முதலாக விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

"நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்கு, 23 ஆண்டு கட்சிக்காக உழைத்த பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. வருத்தமாக இருந்தாலும் வாய்ப்பை இழக்கக் கூடாது என ஏற்றுக் கொண்டேன். மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சி வசம் இருந்த அந்தத் தொகுதியில் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினேன்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் விஜயதாரணி.

விஜயதாரணி ஆதரவாளர்களுடன்

2015-ஆம் ஆண்டு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

"2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வந்தபோது, எனக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கக்கூடாது என்பதற்காக, பல்வேறு நபர்கள், பல விதமான தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் மீறி எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை, கடந்த தேர்தலை விட அதிகமாக, அதாவது 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினேன். மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக, எனது தொகுதியில் மட்டும்தான் டெபாசிட்டை இழந்த்து என்பதை நான் சாதனையாகக் கருதுகிறேன்'' என்று பெருமைப்பட்டார் விஜயதாரணி.

"ஆனால், அந்தப் பெருமையை அடைவதற்குள், எனது கட்சிக்காரர்கள் எனக்குக் கொடுத்த மன உளைச்சல்கள், சகிக்க முடியாதவை. தேர்தல் பிரசாரத்தின்போது என்னை எவ்வளவு முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் கேவலப்படுத்தினார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல், மிக மிக மோசமான வார்த்தைகளால் என்னை சித்தரித்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு எனது கணவரையும் இழந்த மன வேதனையில் இருந்த என் மனதை அவர்கள் மீண்டும் மீண்டும் காயப்படுத்தினார்கள். இருந்தாலும் என் மன உறுதியும், ஆதரவாளர்களின் அன்பும், அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு எனக்கு உதவியாக இருந்தன" என்றார்.

சோனியா, ராகுல் ஊக்கம்

விஜயதாரணி  பெண்கள் பக்கம்

"அதைவிட, எனது தலைவி சோனியா காந்தி ஒரு முறை என்னிடம், `நீ போராளி. எளிதில் தளர்ந்துவிடாதே. போராடு' என்று சொன்னது என் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அத்துடன், எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தியும், எனது உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அங்கீகரிப்பவர். அவரது ஆதரவும் எனக்கு பலமாக இருக்கிறது" என்கிறார் விஜயதாரணி.

மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் கூட, மாநில காங்கிரஸ் தலைவர்களால் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். உண்மைகள் தலைமைக்குத் தெரியும் என்றாலும் கூட, ஒரு சில நிர்பந்தங்களால் கட்சி சில நேரம் பொறுமை காக்க வேண்டிய நிலை இருந்த உண்மை நிலவரத்தை உணர்ந்தவராகவும் அவர் இருந்தார்.

"எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம், அனுபவம் இருந்தாலும், ஒரு பெண் என்று வந்துவிட்டால், இன்னும் பல இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது கசப்பான உண்மை. ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்தில், குறிப்பாக அரசியலில் இந்த சவால்கள் பலமடங்கு அதிகம். எந்த ஒரு நிலையிலாவது நாம் சோர்ந்துபோய், விலகி நின்றுவிடுவோம் என்று எதிர்பார்ப்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்ட சவாலை நாம் எதிர்கொள்ளப் பழகிவிட்டால் படிப்படியாக வெற்றிகளைப் பெற முடியும். அப்போது நம்மை எதிர்ப்பவர்கள் விலகிவிடுவார்கள் என்பது எனது ஆழமான நம்பிக்கை" என்கிறார் விஜயதாரணி.

விஜயதாரணி  

மூத்த வழக்கறிஞராகவும் உள்ள அவர், நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற தனது இலக்கை இன்னும் கைவிட்டுவிடவில்லை. "சோதனை என்ற வாசற்படியை மிதிக்காமல் சாதனைக் கோட்டைக்குள் நுழைய முடியாது. மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியின் வரிகள், எந்த நேரமும் நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்கிறார் ஒளிபடைத்த கண்களுடன் விஜயதாரணி.

100 பெண்கள் தொடர்  

அவரைப் போன்றே, இன்னொரு உரிமைப் போராளியைச் சந்திக்க சென்னையில் இருந்து மதுரைக்குப் பயணமானோம்.

மதுரை நகரில் கே.புதூர் பகுதியில் உள்ள சிறிய தெருவில் சென்று விசாரித்தோம். அந்தப் பெண்ணின் பெயரைச் சொன்னதும், ஒரு சிறுவன் குறுகலான சந்து வழியாக நம்மை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெண், நம்மை கைகூப்பி வரவேற்றார்.

நந்தினி

நந்தினி  நந்தினி - இலக்கு பெரிது

சமூகத்துக்காகப் போராடும் ஓர் இளம் பெண். எந்த ஆரவாரமும் இல்லாமல், சாந்தமான முகத்துடன் நம்மை வரவேற்றது நந்தினி ஆனந்தன். தமிழகம், சமீப ஆண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கும் அவர், குறைந்தபட்ச, அடிப்படை வசதிகள் கொண்ட தனது வீட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

சிறிய வீடாக இருந்தாலும், உரிமைக்குக் குரல் கொடுக்கும் பதாகைகளும், துண்டுப்பிரசுரங்களும் பாதி வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

நந்தினி  இலக்கு ஒன்றே: தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனாவுடன்

சட்டக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு நடத்தும் மதுபானக் கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார் நந்தினி. 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மதுரை வைகை ஆற்றில், பொங்கல் வைத்து மது அரக்கன் ஒழியட்டும் என தனது போராட்டத்தைத் துவக்கினார்.

அப்போது முதல், காவல் துறையினராலும் ஆட்சியாளர்களாலும் அவர் சந்தித்து வரும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

"தமிழ்நாட்டில், சுமார் ஒரு கோடி பேர் கல்லீரல் பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குடியால் ஆண்மையிழப்பு ஏற்பட்டு, பெண்கள் தவறான பாதையில் செல்ல வழிவகுக்கிறது சாதாரணமாக, ஒரு பள்ளியில் 15 முதல் 20 மாணவ, மாணவிகள், குடியால் தந்தையை இழந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, அடித்தட்டு மக்கள் இதில் அதிகம்", என்கிறார் நந்தினி.

"இந்திய குற்றவியல் சட்டம் 328-ஆவது பிரிவின்படி, உடல் நலனைக் கெடுக்கக் கூடிய, போதை தரக்கூடி, மதிமயக்கம் தரக்கூடிய பொருட்களை தனி நபர் கொடுத்தால் 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்க முடியும். அப்படியானால், அரசாங்கம் மட்டும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எப்படி செயல்பட முடியும். அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதும் இந்த வகையில் சட்டவிரோதம்தான்" என்று வாதிடுகிறார் சட்டம் படித்த நந்தினி,

துவக்கத்தில், சக மாணவ, மாணவிகள் தன்னுடைய போராட்டத்துக்கு ஆதரவாக துணை நின்றார்கள். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக, அந்த மாணவர்களின் பெற்றோர் மிரட்டப்பட்டதால், அவர்களது நேரடி ஆதரவு நின்றுபோனது. ஆனால், அவர்களின் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கிறது என்கிறார் நந்தினி.

நந்தினிஓயாத பயணம்

அரசு மதுக்கடைகளை மூடக்கோரி தனது தந்தை ஆனந்தனுடன் திடீரென பொது இடத்தில் போராட்டத்தில் அமர்ந்துவிடுவார் நந்தினி. மற்றவர்களைப் போருத்தவரை, கூட்டம் சேர்த்து போராட்டம் நடத்துவார்கள். ஆனால், நந்தினியைப் பொருத்தவரை, அவர் போராடத் துவங்கிய பிறகுதான் கூட்டம் வரும். பொதுமக்கள் கூட்டம் வருகிறதோ இல்லையோ, போலீசாரின் கூட்டம் முதலில் வந்துவிடும், அவரை அப்புறப்படுத்துவதற்காக.

சமூக வலைத்தளங்கள் பிரசாரக் களமாகப் பயன்படும் இந்தக் கால கட்டத்தில், நந்தினியும் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார். 2015 முதல் அவரது சமூக வலைத்தளக் கணக்கையும் செயல்படாமல் முடக்கிவிட்டதாக புகார் கூறுகிறார். தற்போது, நட்புக்களின் சமூக வலைத்தளங்கள்தான் அவரது போராட்டக் களத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகங்கள்.

அரசு மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதால், வாடகை வீட்டில் குடியிருப்பதற்குக் கூட பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார் நந்தினி. வீட்டு உரிமையாளரை மிரட்டி, எங்களை காலி செய்ய வைப்பார்கள் என காவல்துறை மீது புகார் கூறினார். தற்போதிருக்கும் வீட்டில் கூட அப்படிப்பட்ட நிர்பந்தம் ஏற்படுவதாகக் கூறினார்.

"திடீரென போலீசார் எங்கள் வீட்டு முன் வந்து அமர்ந்துவிடுவார்கள். நாங்கள் எங்கும் செல்ல முடியாது. பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். முதலில் எங்களை மிரட்டிய அவர்கள், பின்னர் அடிக்கவே தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மதுக்கடைக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தபோதும் ரத்தம் சொட்டச் சொட்ட போலீசார் தன்னை அடித்ததாக ஆதங்கப்பட்டார் நந்தினி.

நந்தினி  சட்ட ஆதாரத்துடன்

2013-ஆம் ஆண்டு, ஏழு நாட்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

"குடிகாரக் கணவர்களைக் கொன்றுவிட்டு சிறைக்கு வந்த பல பெண்களை அங்கு சந்தித்தேன். அவர்களது குழந்தைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களின் வேதனைகள், எனது போராட்ட எண்ணத்தை மேலும் வலுவடையச் செய்தது" என்றார் நந்தினி.

இதுவரை, 63 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் நந்தினி. அவரது தந்தை ஆனந்தன் 67 முறையும், சட்டம் படிக்கும் சகோதரி மூன்று முறையும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 51 வயதான ஆனந்தன், சிவில் என்ஜினியராக இருந்தார். சமுதாயப் பணிக்காக, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டார். கிடைக்கும் ஓய்வூதியத்தில், பாதித் தொகை குடும்பத்துக்கு, மீதித் தொகை சமூகப் போராட்டத்துக்காக.

நந்தினி  மகளின் சமூகப்பணிக்காக பணியைத் துறந்த தந்தையுடன்

நந்தினிக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அவரை முடக்கிப் போடும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 2015-ம் ஆண்டு சட்டப்படிப்படை முடித்த நந்தினியால், முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியவில்லை. காரணம், கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் அவ்வாறு பதிவு செய்ய முடியாது என்கிறார் நந்தினி. அந்த வழக்குகள் எப்போது முடியும், தான் எப்போது வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும் என்பது அவருக்குத் தெரியாது.

24 வயதான அந்த இளம் பெண்ணின் கண்களில், தன் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்கள் தெரியவில்லை, சமுதாயத்தைப் பற்றிய கவலைகள்தான் தெரிந்தன.

சராசரி பெண்களைப் போல தானும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை, வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இல்லை. ஆனால், தனது போராட்டக் களத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற வேட்கை மட்டுமே தெரிகிறது.

குடும்பத்தாரைத் தவிர, தனது போராட்டத்துக்கு பின்புலம் யாரும் இல்லை என்ற வருத்தம் நந்தினிக்கு இல்லை.

பின்புலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், போராட்டக் களத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு, தளராத மனமும், ஓயாத போர்க்குணமும் மட்டுமே உந்து சக்தி என்பதை உணர்த்திக் கொண்டிருப்பவர்கள், விஜயதாரணியும், நந்தினியும்!

http://www.bbc.com/tamil/india-38189715

Link to comment
Share on other sites

உலகின் ஆபத்தான ஆஃப்கான் பெண் போலிஸ்
=================================
போலீஸ் அதிகாரியாக இருப்பதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று ஆஃப்கானிஸ்தான்.

ளர்ந்து வரும் தலிபான் கிளர்ச்சி, நெரிசல் மிகுந்த சாலைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் போக்குவரத்து கடினமான இடமும் இதுதான்.

இவை ஆண் போலீசாருக்கே கஷ்டமாக இருக்குமானால் பெண்களின் நிலைமை என்ன?

அத்துடன், இந்த நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இந்தப் பிரச்சனையை எவ்வாறு இவர்கள் கையாளுகிறார்கள் என்பதை அறிய காபூலின் மிகவும் ஆபத்தான சோதனைச் சாவடி ஒன்றுக்கு பிபிசி சென்றது.

 

BBC

Link to comment
Share on other sites

சோதனைகளைக் கடந்து உயிர் தப்பி வாழும் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஸோலெகா மண்டேலா

  •  

தன்னுடைய தாத்தா நெல்சன் மண்டேலாவின் சர்வதேச பிரபல்யத்தின் நிழலில், ஸோலெகா மண்டேலா வளர்ந்தார், இருந்தாலும் அவருடைய வாழ்க்கை சொகுசானது என்ற நிலையில் இருந்து வெகுதொலைவில் அமைந்து விட்டது.

ஸோலெகா மண்டேலா
 

36 வயதே ஆகியிருக்கும் அவர், பாலியல் தாக்குதல் ஒன்றிலிருந்து தப்பித்திருக்கிறார், போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி திரும்பியிருக்கிறார். அவருடைய இரண்டு குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால், இவை எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்து இப்போது பிறரின் நல்வாழ்வுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் தன்னுடைய வாழ்க்கை கதையை பிபிசியின் 100 பெண்கள் தொடரில் பகிர்ந்து கொண்டார்.

ஸோலெகாவுக்கு பத்து வயதாக இருந்தபோது, அவருடைய தாத்தா நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதராக மட்டுமே ஸோலெகாவுக்கு அவரை பற்றி அதுவரை தெரியும். அவர் வீட்டுக்கு வர இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.

உலகத்திற்கு, எப்போதுமே மறக்க முடியாத தருணமாக நெல்சன் மண்டேலாவின் விடுதலை அமைந்தது. சுதந்திர போராட்ட வீரரான நெல்சன் மண்டேலா, மனைவியான வின்னி அவருடைய பக்கத்தில் சேர்ந்து வர, கையை அசைத்து கொண்டே கேப் டவுனிலுள்ள விக்டர் வெர்ஸ்டெர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

தாத்தா என்று அவர் அழைத்து வந்தவர், நாட்டின் நலனுக்காக மாபெரும் தியாகத்தை செய்தவர் என்பதை ஸோலெகா மெதுவாகத்தான் உணர்ந்து கொண்டார்.

தாத்தாவின் கடும் விதிகளும், தடைகளும் இடம்பெற்றதால் வீட்டு வாழ்க்கைச்சூழல் மாறிப்போனது. வீட்டிற்கு வெளியே இனவெறி காலம் முடிவுக்கு வந்து தென்னாப்ரிக்காவும் மாறிபோனது. சில ஆண்டுகளில் ஸோலெகாவின் தாத்தா நாட்டின் முதலாவது கறுப்பின அதிபராக ஆட்சிசெய்ய தொட்ங்கினார்.

    நெல்சன் மண்டேலா

இந்நேரத்தில் தான் தென் ஆப்ரிக்காவில் அசாதாரண நம்பிக்கையும் மாற்றமும் ஏற்பட்டன.

ஆனால் ஸோலெகாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தும் வேறுபட்டவையாக இருந்தன. அவர் சிறுமியாக இருந்தபோது, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அது முதல் அவருடைய வாழ்க்கையில் கடினமாக நிகழ்வுகள் சங்கிலி போல தொடர்ந்தன.

மதுப் பழக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவர் போதை மருந்துக்கும் அடிமையானார். அவருடைய இரண்டு குழந்தைகள் இறந்து போய்விட்டன. இவருக்கு புற்றுநோய் என்று இரண்டுமுறை நோய் அறியப்பட்டது.

இப்போது போதை பழக்கத்தில் இருந்து திருந்தியிருக்கும் அவர், அவரது வாழ்க்கையை பாதித்த இந்நிலைமைகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்ற நபராக சமூகத்தில் உலா வருகிறார்.

பிறரின் நல்வாழ்க்கைக்கு உதவும் முயற்சியாக, அவருடைய உண்மையான வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார்.

பிபிசி அவரை சந்தித்தபோது, 2013 ஆம் ஆண்டு காலமான நெல்சன் மண்டேலா, இப்போதைய ஸோலெகாவை பார்த்து, இந்நேரத்தில் தான் சரியான வாழ்வை பெற்றிருப்பதை தெரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு பரப்புரையின்போது ஸோலெகா  சாலை பாதுகாப்பு பரப்புரையின்போது ஸோலெகா

இருண்ட நாட்கள்

குழந்தையாக இருந்தபோதே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வது என்பது ஸோலெகாவுக்கும், அவருடைய முழு குடும்பத்தினருக்கும் மிகவும் கடுமையானதாக இருந்தது.

தன்னைத் தானே குற்றஞ்சாட்டிக் கொண்ட ஸோலெகா, உள்ளத்து வலியை மரத்துப் போக செய்யும் முயற்சிக்கான வழிகளை தேடும் நோக்கில் தள்ளப்பட்டார்.

9 வயது குழந்தையாக இருந்தபோது, முதல்முறையாக மது அருந்த தொடங்கினார். 13 வயது சிறுமியாக இருந்தபோது, போதை மருந்து உட்கொள்வது மற்றும் மது அருந்துவதை யதார்த்த நிலைமையில் இருந்து தப்பித்துகொள்ளும் வழிமுறையாக கண்டார்.

21 வயதானபோதுதான், போதை மருந்துக்கு தான் அடிமையாகி இருப்பதை குடும்பத்தில் ஸோலெகா தெரிவித்தார்.

அந்நேரத்தில் அவர் ஸெனானி என்ற பெண் குழந்தையின் தாயாக இருந்தார். ஸெனாமி என்கிற மகன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தான்.

"நான் சரியான தாயாக இருக்கவில்லை. என்னுடைய குழந்தைக்கு ஏற்ற தாயாக நான் இருக்கவில்லை" என்று ஸோலெகா கூறுகிறார்.

2009 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா உயிரோடு இருந்தபோது, ஸோலெகா (மேல் வரிசை, வலது) மற்றும் அவருடைய மகள் ஸெனானி (கீழ் வரிசை, இடது)  2009 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா உயிரோடு இருந்தபோது, ஸோலெகா (மேல் வரிசை, வலது) மற்றும் அவருடைய மகள் ஸெனானி (கீழ் வரிசை, இடது)

ஸோலெகா தன்னுடைய வாழ்க்கையின் இருண்ட நாட்களிலும், மன அழுத்தத்திலும் தத்தளித்துக் கொண்டிருந்தபோது தான், அந்த நேரத்தில் 13 வயதாகியிருந்த மகள் ஸெனானி, ஜொகனெஸ்பர்க்கில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது, நிகழ்ந்த கார் விபத்தில் சோகமான முடிவை சந்தித்தார்.

மது மயக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர், சாலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பணில் காரை மோத, காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஸெனானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்த அதே நாள் இரவில் ஸோலெகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் இருந்து தப்பித்திருந்த அவர், ஏற்கெனவே 10 நாள்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்தார்.

அதுதான், அவருடைய வாழ்க்கையின் மிகவும் இருண்ட மற்றும் வலிமிகுந்த காலமாக இருந்தது.

"கடவுளே என்னை ஏன் எடுத்துகொள்ளவில்லை? நான் தான் போக வேண்டியவள்" என்று கடவுளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

"என்னுடைய குழந்தைகளுக்கு என்னைப் போன்ற ஒரு தாய் வேண்டாம்" என்பதுதான் அவருடைய வேண்டுதலாக இருந்துள்ளது.

அவருடைய குழந்தை இறந்த வேளையில், ஸோலெகா தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் மோசமானை நிலையை அடைந்திருந்தார்.

மருத்துவமனைக்கு வருகின்ற ஸோலெகா மண்டேலா (இடது)  2013 ஆம் ஆண்டு பிரிட்டோரியாவிலுள்ள மெடிகிளினிக் இதய மருதத்துவமனையில் தென் ஆப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்க்க வரும் ஸோலெகா மண்டேலா (இடது)

புதிய கட்டம்

இந்த விபத்து நடந்து இரண்டு மாதத்திற்கு பிறகு, ஸோலெகா தன்னை மறுவாழ்வு மையத்தில் சோதனை செய்தார். அதுதான் அவருடைய வாழ்வின் புதிய காலக்கட்டத்தின் தொடக்கமாக இருந்தது. ஆனால் இதுவும் சாவல்கள் இல்லாமல் அமைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.

32 வயதான ஸோலெகாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த்து. பல முறை உயிர் தப்பி பிழைத்திருக்கும் இவருக்கு பெரும் பாதிப்பை தரக்கூடிய நோய் அறிதலாக இந்த தருணம் பார்க்கப்பட்டது.

முதலில், இந்த புற்றுநோயை எதிர்கொள்ள மிகவும் பயந்து, சிகிச்சை பெற அவர் மறுத்துவிட்டார். ஆனால், நாளடைவில் இருமுறை மார்பக அகற்று சிகிச்சையும், கிமோதெரபி எனப்படும் வேதிமுறையில் நோய் அகற்றும் சிகிச்சையும் மேற்கொண்டார்.

சிகிச்சை முடிந்த சிறிது காலத்தில் அவர் கருத்தரித்தார், புற்றுநோய்க்கு பிறகு, குழந்தை பிறக்காது என்று எண்ணியிருந்தவருக்கு, இந்த செய்தி தேனாக இனித்தது.

ஆனால், அவருக்கு பிறந்த மகன் ஸெனாவி குறைமாதத்தில் பிறந்து, சில நாட்களே உயிர்வாழ்ந்தான். மீண்டும் தன்னுடைய ஒரு குழந்தையை அடக்கம் செய்ய வேண்டிய அந்த தருணம் ஸோலெகாவுக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

100 பெண்கள்  

போதை மருந்து மறுவழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தபோது, தனக்கு மணவுறுதி செய்யப்பட்டிருந்த காங்கோவை சேர்ந்த தியெர்ரி பாஷாலாவை, ஜொகனெஸ்பர்க்கில் ஸோலெகா சந்தித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கையை சற்று நன்றாக உணரத் தொடங்கினார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அவருடைய மார்பகத்தில் புதிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது முன்பைவிட மிகவும் தீவிரமாக புற்றுநோய் வந்திருந்தது. ஸோலெகா மனம் நொறுங்கி்ப் போனார். அவரும், தியேர்ரி பாஷாலாவும் இன்னொரு குழந்தை பெற்றெடுக்கலாம் என்று திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது, மீண்டும் வேதியியல் முறையில் நோய் அகற்றும் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

இந்த முறை, அவருடைய இந்த வாழ்க்கை பயணத்தை சமூக ஊடகங்களில் ஸோலெகா பகிரத் தொடங்கினார். அதன் மூலம் பிறருக்கு தூண்டுதல் கிடைக்கும் என்றும், தன்னை பார்த்து பிறர் கற்றுக்கொள்வர் என்றும் அவர் நம்பினார்.

வின்னி மண்டேலாவும் (நடுவில்), ஸோலெகாவும் (வலது) 2010 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் மகள் ஸெனானியின் இறுதிச்சடங்கின்போது வின்னி மண்டேலாவும் (நடுவில்), ஸோலெகாவும் (வலது)

"இந்த முறை அனைத்தையும் மிக எளிதாக கையாளலாம் என்பது போன்று உணர்கிறேன். இந்த போராட்டத்தை ஏற்கெனவே வென்று விட்ட உணர்வை பெறுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளவும், தன்னுடைய மகளுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் அறக்கட்டளை ஒன்றை ஸோலெகா தன்னுடைய பெயரில் நிறுவியிருக்கிறார்.

புற்றுநோய்க்கு விழிப்புணர்வு அளிக்கும் தூதராகவும் அவர் இப்போது செயல்பட்டு வருகிறார்.

"பெண்கள் வெளிப்படையாக பேசுவதும், பரிசோதனை செய்து கொள்வதும், அவர்களுக்கு தேவையான சோதனைகளை மேற்கொள்வதும் முக்கியமானது. உங்களை சாகடிக்கும் முன்னர் புற்றுநோயை சாகடித்துவிடுங்கள்" என்று அவர் கூறுகிறார்.

நெல்சன் மண்டேலா

 

 கடைசியில் சரியான பாதையை தான் பெற்றிருப்பதாக தன்னுடைய தாத்தா எண்ணுவார் என்று ஸோலெகா நம்புகிறார்

தன்னுடைய தாத்தா நெல்சன் மண்டேலா உயிரோடு இருந்தபோது, தன்னுடைய வாழ்க்கை மூலம் அவரை பெருமைப்படுத்த முடியாமல் போனதை நினைத்து ஸோலெகா வருந்துகிறார்.

"போதை மருந்துகளையும், மதுபானங்களையும் எதிர்ப்பதிலும், என்னுடைய குடும்பத்தினர் மற்றும் மனதிற்கு நெருங்கியோருடன் அதிக நேரத்தை இப்போது செலவிடுகிறேன்.

இறந்த என்னுடைய மகளோடு எனது தாத்தா எங்கிருந்தாலும், வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை பார்ப்பார் என்றும், கடைசியாக சரியான பாதையை நான் பெற்றிருப்பதாக எண்ணுவார் என்றும் நம்புகிறேன்" என்பது ஸோலெகா நம்மிடம் சொன்ன கடைசி சொற்களாகும்.

http://www.bbc.com/tamil/global-38200729

Link to comment
Share on other sites

ஆண்களை வெற்றியடையச் செய்த பெண் சாதனையாளர்
------------------------------------------------------------------------------------------------------
உலக கால்பந்து வட்டாரத்தில் ஹாங் காங் கால்பந்து லீக் பிரபலமானது அல்ல. ஆனாலும் இந்த ஆண்டு உலகளவில் ஹாங் காங் லீக் சலசலப்பை ஏற்படுத்தியது.
காரணம் சான் யுயென் டிங் எனும் பெண் பயிற்சியாளராக இருக்கும் ஈஸ்டர்ண் அணி ஆடவருக்கான சம்பியன் பட்டத்தை வென்றது.
பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு பகுதியாக சான் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

 

 

BBC

Link to comment
Share on other sites

ரூபா தேவி: விளையாட்டை வேடிக்கை பார்த்த சிறுமி வீராங்கனையாகவும், சர்வதேச நடுவராகவும் உருவெடுத்த கதை

 

  •  

திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகளில் பாதியளவு கூட இந்தியாவில்,கிரிக்கெட் தவிர, பிற துறைவிளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. வீராங்கனைகள் நிலை இன்னமும் பரிதாபம். எந்த பின்புலமும் இல்லாமல், எல்லாத் தடைகளையும் தாண்டி சர்வதேச அளவில் சாதித்த ரூபா தேவியின் சாதனைகள் அசாத்தியமானவை.

ரூபா தேவி
 ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் ரூபா தேவி

தமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது ஒரு வியப்பளிக்கும் அம்சமாகும். அவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றுள்ளார். இது வரை, ஃ பிஃ பா அமைப்பின் பெண் நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர் மட்டுமே தேந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ரூபா தேவி, சிறுமியாக இருந்த போது, தன் வீட்டின் அருகேயிருந்த கால்பந்து மைதானத்துக்கு வேடிக்கை பார்க்க சென்ற போது, அங்கு விளையாடுபவர்களை பார்த்து தானும் கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால போராட்டங்கள்

ஆரம்பத்தில், கால்பந்து வீராங்கனைக்கு தேவையான உடல் வலு, பயிற்சி, வசதிகள் என்று எதுவுமில்லாத ரூபாவுக்கு, பெரும் உதவியாக இருந்தது திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சம்மேளனம் தான்.

''கால்பந்து விளையாட்டில் நான் வீராங்கனையாகவும், தற்போது ஃபிஃ பா நடுவராகவும் ஆக முடிந்ததற்கு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சம்மேளனம் பெரும் உதவியாக இருந்தது ஒரு முக்கிய காரணம்'' என்று ரூபா தேவி தெரிவித்தார்.

வீராங்கனை நடுவராக மாறியது ஏன்?

விளையாட்டு வீராங்கனை கனவு நடுவராக திசை மாறியது ஏன் என்று கேட்டதற்கு, ''கால்பந்து விளையாட்டு எனக்கு மிகவும் விருப்பமானது. கால்பந்து வீராங்கனையாக தொடர்ந்து தாக்குப் பிடிப்பது இயலாத காரியம் போல ஒரு கட்டத்தில் தோன்றியது. போட்டிகள் நடக்காமல் நான் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் நிலைத்திருக்க முடியும்?'' என்று வினவிய ரூபா தேவி, '' அது தான், என்னை கால்பந்து நடுவராக மாற தூண்டியது'' என்று விளக்கமளித்தார்.

சக நடுவர்களுடன் ரூபா தேவி  சக நடுவர்களுடன் ரூபா தேவி (வலப்புறம் இரண்டாவது)

ஆரம்பத்தில் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிய போது, தனக்கு பதற்றமாக இருந்ததாக தெரிவித்த ரூபா தேவி, நாளடைவில் தனது திறமை மற்றும் பங்களிப்புக்கு கிடைத்த பாராட்டுக்கள் தனக்கு பெரும் நம்பிக்கையளித்தாக குறிப்பிட்டார்.

தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டிகள், தாய்லந்தில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டிகள் என பல போட்டிகளில் நடுவராக செயலாற்றியுள்ள ரூபா, '' இன்னமும் நான் அதிக சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்தாலேதான் மேலும் பிரகாசிக்க முடியும் '' என்று தெரிவித்தார்.

பிஎஸ்சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'சக்தி விருது' , ரெயின் டிராப்ஸ் நிறுவன விருது உள்பட பல விருதுகளை, தனது விளையாட்டு சாதனைகளுக்காக பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மகளிர் கால்பந்து அணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மகளிர் கால்பந்து அணி, அண்ணாமலை பல்கலைக்கழக அணி, தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி என தான் விளையாடிய அனைத்து அணிகளின் வெற்றிக்கும் கடுமையாக போராடியுள்ளார் ரூபா.

100 பெண்கள் தொடர்  100 பெண்கள் தொடர்

குடும்பத்தினர் அளித்த உற்சாகம்

பெண்கள் விளையாட்டு துறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ரூபா, ''நமக்கு ஒரு துறையில் முயற்சி , கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால், அதனை யாரெல்லாம் தடுக்க முடியாது'' என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

 

ரூபா தேவி

தனது கடும் முயற்சியால் கால்பந்து வீராங்கனையாகவும், நடுவராகவும் உருவெடுத்த ரூபா தேவி

''கால்பந்து விளையாட்டில் நான் ஜொலிக்க, என் குடும்பம் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. நான் வீட்டில் ஓய்வாக இருந்தால், ஏன் விளையாட போகவில்லை? என்று கேட்குமளவுக்கு என் வீட்டில் உள்ளோர் என்னை ஊக்குவித்தது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. சில உறவினர்கள் நான் கால்பந்து விளையாடுவதை பரிகாசம் செய்தாலும், என் பெற்றோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்'' என்று தன் சிறு வயது போராட்டங்களை ரூபா நினைவு கூர்ந்தார்.

சர்வதேச கால்பந்து நடுவரின் சவால்கள்

மற்ற விளையாட்டுகளில் நடுவராக இருப்பதை விட கால்பந்து விளையாயத்தில் நடுவராக இருப்பது மிகவும் சவால் மிக்கது என்று தெரிவித்த ரூபா தேவி, '' மற்ற விளையாட்டுகளில் நடுவராக இருப்பதை விட கால்பந்து விளையாட்டில் நடுவர்களின் பணி சிரமமானது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு இணையாக நடுவர்கள் களத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஓவ்வொரு போட்டி மற்றும் தொடருக்கு முன்பும், கால்பந்து நடுவர்கள் வீரர்களை போல தங்கள் உடல் தகுதியை கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும்'' என்று கூறினார்.

 

சவால் மிக்கது கால்பந்து நடுவர் பணி

 சவால் மிக்கது கால்பந்து நடுவர் பணி

ஃபிஃபா நடுவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தனக்கு முதலில் அறிவிக்கப்பட்ட நெகிழ்வான தருணம் குறித்து ரூபா தேவி நினைவு கூறுகையில்,'' ஜனவரி 1, 2016-யன்று நான் ரெயிலில் ஒரு கால்பந்து போட்டிக்காக ஜபல்பூருக்கு சென்ற போது, என் நண்பர்கள் தொடர்ந்து என் மொபைலில் அழைப்பு விடுத்தனர். ஆனால், என் மொபைலில் 'சார்ஜ்' குறைவாக இருந்ததால் நான் அந்த அழைப்புகளை எடுக்கவில்லை.'' என்று ரூபா தேவி தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், '' பிறகு ஜபல்பூரில் நாங்கள் தங்கும் விடுதிக்குள் நான் சென்றடைந்தவுடன், அனைவரும் உற்சாக கரகோஷம் எழுப்பினர். அப்போதும் எனக்குப் புரியவில்லை. பிறகு தான், நான் ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். அது எனக்கு புத்தாண்டு பரிசாக உணர்ந்தேன்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன்.

நாங்கள் தங்கும் விடுதிக்குள் நான் சென்றடைந்தவுடன், அனைவரும் உற்சாக கரகோஷம் எழுப்பினர். அப்போதும் எனக்குப் புரியவில்லை. பிறகு தான், நான் ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். அது எனக்கு புத்தாண்டு பரிசாக உணர்ந்தேன்''

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?

கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை ஊடகங்கள் கால்பந்து விளையாட்டுக்கு தருவதில்லை என்று குறிப்பிட்ட ஃ பிஃபாவின் முதல் தமிழக பெண் நடுவரான ரூபா, ''போதுமான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் கால்பந்து விளையாட்டை எவ்வாறு மேம்படுத்த முடியும்?'' என்று வினவினார்.

ரூபா தேவி

 

கால்பந்து விளையாட்டு தனக்கு எல்லாம் என தெரிவித்த ரூபா தேவி

''என் குடும்பத்தினரின் வருமானம் மிகவும் குறைவு. பொருளாதார சிக்கல்கள் மற்றும் எண்ணற்ற சிரமங்களை மறக்கவே நான் ஆரம்பத்தில் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டில் ஏதாவது சாதித்தால், அது என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் உற்சாகம் தரும் என்பது என் சிறு வயதில் ஆழமாக என் மனதில் பதிந்தது. அதனை நோக்கியே நான் பயணித்தேன். அதையும் பொருட்படுத்தாமல் என் இலக்கை நோக்கி சென்றேன்'' என்று கூறிய ரூபா '' ஏரளாமான இடையூறுகளை நான் சந்தித்துள்ளேன். இனியும் என் பாதையில் தடைகள் வரும். ஆனால், நான் அவற்றை தாண்டி செல்லும் திடமுண்டு'' என்று உறுதியாக ரூபா தேவி தெரிவித்தார்.

ஏரளாமான இடையூறுகளை நான் சந்தித்துள்ளேன். இனியும் என் பாதையில் தடைகள் வரும். ஆனால், நான் அவற்றை தாண்டி செல்லும் திடமுண்டு''

''இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் ஒழுக்கம் மற்றும் பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும். தனக்கு விருப்பமானதை செய்யும் போது மற்றவர்களை, மூத்தவர்களை மதிப்பதும் மிக அவசியம்'' என்று வருங்கால விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனது ஆலோசனைகளாக ரூபா தேவி குறிப்பிட்டார்.

 

http://www.bbc.com/tamil/sport-38261855

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.