• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

நலம் நல்லது!

Recommended Posts

நுரையீரல் புற்­று­நோய்க்கு புரட்­சி­கர சிகிச்சை

 

 

நுரை­யீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு  அபா­ய­க­ர­மான சிக்கல் மிக்க  பாரிய அறுவைச் சிகிச்­சைக்கு பதி­லாக மார்புப் பகு­தியில் ஒரு பக்­க­மாக ஏற்­ப­டுத்­தப்­படும் நெருப்­புக்­குச்சி அள­வான சிறிய கீறல் மூலம் புற்­று­நோய்க்­க­லங்­களை வெற்­றி­க­ர­மாக அகற்றும் புதிய மருத்­துவ தொழில்­நுட்­ப­மொன்றை பிரித்­தா­னிய சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

 மேற்­படி புதிய சிகிச்சை மூலம் நோயா­ளிகள்  நான்கே நாட்­களில் குண­ம­டைந்து வழ­மைக்குத் திரும்ப முடியும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சிகிச்­சையின் போது மருத்­து­வர்கள், மார்பில் விலா எலும்பு இடை­வெ­ளி­யி­னூ­டாக ஏற்­ப­டுத்­தப்­படும் சிறிய துளை­யி­னூ­டாக நுண்­ணிய புகைப்­ப­டக்­க­ருவி இணைக்­கப்­பட்ட நுண் குழா­யொன்றை செலுத்தி அத­னூ­டாக நுரை­யீ­ர­லி­லுள்ள  புற்­றுநோய்க் கலங்­களை  சுற்­றி­யுள்ள ஏனைய இழை­யங்­க­ளுக்கு சேதத்தை ஏற்­ப­டுத்­தாத வகையில் அகற்­றுவர்.  

மேற்­படி அறுவைச் சிகிச்­சையின் போது நோயா­ளிக்கு வலியும் பெரு­ம­ள­வுக்கு  குறை­வா­க­வுள்­ள­தாக மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

பிரித்­தா­னி­யாவில்  ஒவ்­வொரு வரு­டமும் சுமார்  46,000  பேர் நுரை­யீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அடை­யாளம் காணப்­பட்டு வரு­கின்­றனர். மேற்­படி புற்­று­நோ­யா­னது  அந்­நாட்­டி­னரை அதி­க­ளவில் பாதிக்கும் புற்­று­நோய்கள் வரி­சையில் மூன்­றா­வது  இடத்தில் உள்­ளது.

புகை­பி­டிப்­ப­வர்கள் மற்றும் 85  வய­துக்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்கள் நுரை­யீரல் புற்­றுநோய் ஏற்­படும் அபா­யத்தை பெரு­ம­ளவில் எதிர்­கொண்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்­களில் பல­ருக்கு வழக்கமான அறுவைச் சிகிச்­சையை தாங்­கக்கூ­டிய வகையில் உடல் நிலை இல்­லா­ததால் பல சந்­தர்ப்­பங்­களில் அத்­த­கைய அறு வைச் சிகிச்­சைகள் தவிர்க்­கப்­ப­டு­வ­தா­கவும் அதனால்  உரிய சிகிச்சை பெறாத அவர்­களில் பலர் முன்­கூட்­டியே மர­ணத்தைத் தழுவ நேரி­டு­வ­தா­கவும் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு தமது புதிய சிகிச்சை முறைமை வரப்­பி­ர­சா­த­மா­க­வுள்­ள­தா­கவும்  மேற்­படி சத்­த­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

http://www.virakesari.lk/article/26167

Share this post


Link to post
Share on other sites

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்!

 

 
yoga

சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.

sleep.jpg

தூங்குவதில் கூடவா பிரச்னை? ஆம் உலகளாவிய பிரச்னை இது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ஆன்ட்ரூ வீல்  தியானம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். தூக்கமின்மை பிரச்னைக்கான எளிதான ஒரு தீர்வை முன் வைக்கிறார். மூச்சில் கவனம் வைத்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும் என்கிறார் டாக்டர் வீல். உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை விடும் போது மூளையானது தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு அமைதியான நிலைக்கு தானாகவே வரும்.

மேலும் அவர் கூறுகையில், 'மூக்கின் வழியே சுவாசம் நான்கு நிமிடங்களுக்கு உள் எடுக்கவும். ஏழு அல்லது எட்டு நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியே எட்டு நொடிகள் வெளி மூச்சை விட வேண்டும். இப்படி செய்யும் போது மூளை புத்துணர்ச்சி பெறுவதுடன் தூக்கமும் நன்றாக வரும்’. என்கிறார் டாக்டர் வீல்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால், இதயத்துக்கும் மிக நல்லது. தேவையற்ற பதற்றங்கள், ரத்த அழுத்தங்கள் குறைந்து மன அமைதி ஏற்படும். ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தால் தான் இதை நன்கு உணரமுடியும்.

train-brain-to-fall-asleep-in-60-seconds

இவ்வாறு மூக்கின் வழியே உள்மூச்சு எடுத்து, சில நொடிகள் உள்ளே மூச்சை நிறுத்தி அதன் பின் வாய் வழியே வெளிமூச்சை விடும் செயலை நாலு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாகச் செய்யும் போது, மூச்சை கவனித்தபடியே நீங்கள் உறக்கத்தில் விழுவீர்கள். 60 நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தினுள் அமிழ்வீர்கள் என்பது உறுதி.

sleepy.jpg

ஆரம்பக் கட்டத்தில் இது வேலை செய்யாதது போல தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறிய பின் மந்திரம் போட்டது போல், அல்லது ஸ்விட்ச்சை அணைத்தது போல் மூச்சுப் பயிற்சியின் இசையில் தூக்கம் கண்களை சுழற்றும். 

http://www.dinamani.com/health/mental-health/2017/oct/24/you-can-train-your-brain-to-fall-asleep-in-just-60-seconds-heres-the-best-trick-to-fall-asleep-immed-2795177.html

Share this post


Link to post
Share on other sites

ஒழுங்கற்ற மாதவிடாய் என்னென்ன பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?

பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை.

 
 
 
 
ஒழுங்கற்ற மாதவிடாய் என்னென்ன பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?
 
பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை.

 * “பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome - PCOS): ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில்கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்தப் பிரச்னை உருவாகும். உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம்.

* தைராய்டு பிரச்சனைகள் (Thyroid Problems): தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்சனை.  

வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும்.

201710241213322876_1_menstruation._L_styvpf.jpg

* ஹார்மோன்  - இம்பேலன்ஸ் (Hormone imbalance) : புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.

* பெரிமெனோபாஸ் (Perimenopause): பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''

அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தும்.

* அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.

* புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.
 

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/10/24121325/1124688/problems-can-lead-to-irregular-menstruation.vpf

Share this post


Link to post
Share on other sites

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் குருதிக் கசிவு சிசுவை பாதிக்குமா.?

 

பெண்களில் மாதவிடாய் தள்ளிப் போகும் போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளவர்களில் நாம் கர்ப்பம் தரித்ததை பரிசோதித்து உறுதி செய்கிறோம். இவ்வாறு கர்ப்பம் தரித்துவிட்டால் பிரசவக்காலம்வரை மாதவிடாய் வரப் போவதில்லை. அதாவது குருதிக் கசிவு ஏற்படப் போவதில்லை. கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் எதிர்பாராத விதமான திடீர் குருதிக் கசிவை ஏற்பட்டால் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைகின்றனர். இவ்வாறான குருதிக் கசிவால் வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஏதும் பாதிப்பு வந்து விடுமா என்பது தான் முதல் கேள்வியாகும்? அடுத்த  விடயம் தாய்க்கு ஏதும் உயிர் ஆபத்து நேரிடுமா என்ற சந்தேகம் ஏற்படும். இறுதியாக இப்படி கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டவர்களில் பிறக்கும் குழந்தையில் ஏதும் அங்கவீனக் குறைபாடுகள் வருமா என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது.

எனவே கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டால் நாம் இது ஏன் ஏற்படுகின்றது? இதனால் என்ன பாதிப்புகள் வரும்? இதற்கு செய்யப்படும் சிகிச்சைகள் எவை என்பது பற்றிய பொதுவான விளக்கம் மக்கள் மத்தியில் அவசியமாகின்றது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதிக் கசிவை ஆரம்ப கர்ப்ப காலக் குருதிக்கசிவு பிந்திய கர்ப்ப காலகக் குருதிக் கசிவு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்ப கர்ப்பக்காலக் குருதிக் கசிவுக்கான காரணங்கள் எவை?

கருவானது முதல் மாதத்தில் கர்ப்பப்பையில் பொருந்தி வளர ஆரம்பிக்கும்போது ஒருவித குருதிக் கசிவு ஏற்படும். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இது ஒரு சாதாரண நிகழ்வாகும். கரு தொடர்ச்சியாக ஆரோக்கியமாக வளர்க்கின்றது. இதனை ஸ்கான் மூலம் உறுதிப்படுத்தலாம்.

அடுத்ததாக 2 மாத கர்ப்ப காலப் பகுதியில் அடி வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு சற்று விரிவாக பரிசோதிக்க வேண்டிய விடயம். ஏனெனில் சில வேளைகளில் கருவானது கர்ப்பப்பையில் தங்காது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன்குழாயில் தங்குகின்றபோது இவ்வாறான வயிற்று வலியுடன் குருதிக்கசிவும் ஏற்படும். இதனை கால தாமதம் இல்லாமல் சரியான தருணத்தில் கண்டறிந்தால் தான் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற முடியும். இவை கவனிக்கப்படாமல் விட்டால் பலோப்பியன்குழாய் வெடித்து வயிற்றினுள் கூடுதலான குருதி போக்கு ஏற்பட்டு தாய்க்கு சிக்கல் ஏற்படும்.

ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்களில் ஏற்படும் குருதிக்கசிவு சிலவேளைகளில் இயற்கையாக கரு கலைந்து ஏற்படும் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதனை ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தால் இயற்கையாக கருக்கலைவதனை உறுதிப்படுத்தலாம். இதனையடுத்து இயற்கையான கரு கலைவதற்கான சிகிச்சையை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு சிலரில் இப்படி குருதிக்கசிவு ஏற்பட்டாலும் உள்ளே கருவானது எவ்வித ஆபத்தும் இல்லாமல் வளர்கின்றது. ஸ்கான் மூலம் கருவானது ஆரோக்கிமாக  வளர்வதனை உறுதிப்படுத்த முடியும். எனவே ஆரம்ப கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குருதிக்கசிவானது சில சமயங்களில் கருவானது இயற்கையாக கருகலையும் நிலைமையும் சில சமயங்களில் கருவானது எந்தவித ஆபத்தும் இல்லாமல் தொடர்ந்து வளரும் நிலையையும் கொண்டிருக்கும். ஆகையால் ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் உள்ளே வளரும் சிசுவின் ஆரோக்கியம் தொடர்பாக அறிய முடியும். 

பிந்திய கர்ப்ப காலத்தில் ஏற்படும். குருதிக்கசிவுக்கான காரணங்கள் எவை?

பிந்திய கர்ப்ப காலம் என்கின்றபோது ஆறு மாதத்தில் இருந்து ஒன்பது மாதக் கர்ப்ப காலத்தை சொல்லலாம். இதில் பிரதானமாக இரண்டு வகைக் காரணிகள் குருதிக் கசிவை ஏற்படுத்தும். முதலாவது வகை கருவுடன் வளரும் நச்சுக்குடல் (Placenta) கர்ப்பப்பை வாசலை மூடி கீழே வளர்ந்திருந்தால் ஏற்படும் குருதிக்கசிவு. இதன்போது வயிற்றுவலி இருக்காது. குருதிப் போக்கு மட்டும் இருக்கும். அடுத்த காரணி கருவுடன் வளரும நச்சுக்குடல் கர்ப்பப்பையை விட்டு முற்கூட்டியே பிரியத் தொடங்குவதாலும் ஏற்படும் குருதிக் கசிவாகும். இதன்போது தாய்க்கு வயிற்று வலி ஏற்படும். அதாவது வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக் குடல் பிரியத் தொடங்குவதால் ஏற்படும் வயிற்று வலி இல்லாமல் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக்குடல் கர்ப்பப்பை வாசலை மூடி வளர்ந்திருப்தால் ஏற்படும். இவை பிந்திய கர்ப்ப காலத்தின் ஏற்படும் குருதிக்கசிவு வகைகள் இருப்பதால் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதன் மூலம் உரிய காரணிகளை கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். அதாவது சில சமயங்களில் உடனடியாக சிசேரியன் பிரசவம் செய்வதன் மூலம் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு குருதிக்கசிவுகள் தாமதமாகிக் கொண்டுப் போனால் சில சமயங்களில் தாய்க்கு இரத்தம் கொடுக்க வேண்டிய நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாயின் சரியான குருதி வகையையும் தெரிந்திருக்க வேண்டும். இதன் போது தான் பொருத்தமான குருதியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. 

ஆகையால் கர்ப்ப காலம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இரத்தக்கசிவு  ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு  ஏற்படுத்தும் பல காரணிகளும் பிந்திய கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவை ஏற்படுத்தும் இரு பிரதான காரணிகளும் உள்ளன. இவற்றை உரிய நேரத்தில் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அதற்கேற்ப கால தாமதம் இல்லாமல் சிகிச்சைகளும் மேற்கொள்ள முடியும். 

http://www.virakesari.lk/article/25894

Share this post


Link to post
Share on other sites

அதிகரித்து வரும் குண்டு சிறார்கள்.!

உடற்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு பில்லியனைத் தொட்டிருக்கிறது. இதில் பெரியவர்களைக் காட்டிலும் சிறார்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தில் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்பிற்கும் ஆளாகுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

news_image_health_26_10_17.jpg

இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுப் பொருள்கள், சுவைக்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட துரித வகை உணவுகள், பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் என அவர்கள் விரும்பி கேட்பதையெல்லாம் கேட்கும் நேரத்தில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அத்துடன் அந்த பிள்ளைகள் இந்த வகையினதான உணவுகள் ஜீரணமாவதற்கான உடற்பயிற்சியையோ அல்லது உடல் உழைப்பையோ செய்ய வற்புறுத்துவதில்லை. குழந்தைகளும் டிவி, ரிமோட், மொபைல் கேம், இன்டர்நெட் என உடலுழைப்பே தேவைப்படாதவைகளில் நேரங்களை கடத்துகிறார்கள். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்து உடற்பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய பிள்ளைகள் ஆரோக்கியமான உணவை, சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தினமும் ஒரு மணித்தியாலமாவது திறந்த வெளியில் உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள தூண்டுகோலாக இருக்கவேண்டும். அவர்கள் ஆசைப்படும் உணவுப் பொருள்களை ஒரு எல்லை வகுத்து வழங்கவேண்டும். அவர்களை எப்போதும் உற்சாகமாக வலம் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதனை தற்போது பின்பற்றத் தொடங்கினால் தான் அவர்கள் எதிர்காலத்தில் உடற்பருமன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

டொக்டர் பழனியப்பன்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26335

Share this post


Link to post
Share on other sites

கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ்... எது பெஸ்ட்? #EyeCare

 

கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. கண்ணாடி அணிவதைவிடவும் லென்ஸ் அணிவது எளிதா? நிச்சயம் இல்லை. பெரும்பாலும் கண்ணாடி அணிந்தால் முக அழகு கெட்டுவிடும் என யோசிப்பவர்கள்தான் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த விரும்புகிறார்கள். சரி... லென்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது, கண்ணாடி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, இவை இரண்டில் எது சிறந்தது... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் கண் மருத்துவர் நவீன்.

பார்வை குறைபாடு

 

ஒளிவிலகல் பிழை (Refractive error) என்ற பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காக அணியப்படுவதுதான் கண்ணாடி (Specs) மற்றும் லென்ஸ் (Lens). பார்வைக் குறைபாடுகளில், தூரப்பார்வை (Hyperopia) கிட்டப்பார்வை (Myopia) என இருவகைகள் உள்ளன.டாக்டர். நவீன் நரேந்திரநாத்

கண்ணாடி வகைகள்:

கண்ணாடியில் பல வகைகள் வந்துவிட்டன. சூரிய வெளிச்சத்தை அதிகமாக பார்ப்பவர்களுக்காக போட்டோகுரோமிக் (Photochromic) கண்ணாடி, விளையாட்டு ஆர்வலர்களுக்காக போலரைஸ்டு (Polarized sunglasses) கண்ணாடி மற்றும் கோடேட் லென்ஸ் (Coated lens), அதிகமாகக் கம்ப்யூட்டர் பார்ப்பவர்கள் கண் சார்ந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க கம்ப்யூட்டர் கண்ணாடிகள் (Computer Glasses) என ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்றவாறு பலவகையான கண்ணாடிகள் வந்துவிட்டன. 

லென்ஸ் வகைகள்:

* வருடத்துக்கு ஒருமுறை பயன்படுத்தும் லென்ஸ் (Yearly disposable lenses): 

ஒரு வருடம் வரை இதனை பயன்படுத்தலாம். இதன் ஆயுள் காலம் ஒரு வருடம் என்பதால், சற்று தடிமனாக செய்யப்பட்டிருக்கும். முறையாகப் பராமரிக்கப்படாத பட்சத்தில், கண்களில் பாதிப்பு ஏற்படலாம். தடிமனாக இருப்பதால், கருவிழிகளில் ஆக்ஸிஜன் ஊடுருவது (oxygen permeation) பாதிக்கப்படும். இது, கண் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

* மாதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் லென்ஸ் (Monthly Disposable Lens): 

இதன் ஆயுள்காலம், ஒரு மாதம் மட்டுமே. அதற்குள் அது தன் தன்மையை இழந்துவிடும். இது மெலிதாக இருக்கும் என்பதால், கண் சார்ந்த எந்த பாதிப்புகளும் வராது. சிலர் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் இதனைப் பயன்படுத்திவருவார்கள். அப்படிச் செய்வது, கண் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். 

* ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் லென்ஸ் (Daily Disposable Lens): 

குறிப்பிட்ட காரணத்துக்காக, இது ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். ஆயுள்காலம் குறைவு என்பதால், கண் சார்ந்த எந்தப் பாதிப்புகளும் ஏற்படாது.

* மேற்கூறிய அனைத்து லென்ஸ்களிலும், பல்வேறு நிறங்கள் கொண்டு உருவாக்கப்படும் லென்ஸ், வகைகள் உண்டு (Cosmetic Color contact lens). அழகு தொடர்பாக அதிக அக்கறை எடுத்துக்கொள்பவர்களுக்காக செய்யப்பட்டது இது.

லெண்ஸ்

லென்ஸ் ஆர்வம் முன்பைவிட அதிகரித்துள்ளதா?

இளைஞர்களிடையே லென்ஸ் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது. `கண்ணாடி அணிவது சங்கடமாக இருக்கிறது’, `பிடிக்கவில்லை’, `கண்ணாடி அணிந்தால் கிண்டல் செய்கின்றனர்’, `கண்களில் வெளிச்சம் படும்போது கண்களில் ஃப்ளாஷ் அடிக்கிறது’ போன்றவைதான் பெரும்பாலானவர்கள் கூறும் காரணங்கள். மேலும், மூக்குக்கண்ணாடி அணிவதால் புற அழகு கெடுகிறது என்பது இவர்கள் சொல்லும் இன்னொரு காரணம். 

சில துறையைச் சேர்ந்தவர்களுக்கு லென்ஸ் பயன்பாடு அவசியம். குறிப்பாக புகைப்படக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒரு கண்ணில் மட்டும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள். கண்ணாடி பயன்படுத்துவதால் பக்கவாட்டில் இருப்பவற்றை உன்னிப்பாக காண முடியாமல் போகலாம் என்பதால், அந்த நேரங்களில் லென்ஸ் பயன்படுத்துவார்கள்.

நிறம் சார்ந்த லெண்ஸ் வகைகள்

லென்ஸ் பயன்படுத்துவோர் கவனத்துக்கு...

* லென்ஸ் பயன்படுத்துபவர்கள், 8 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே லென்ஸ் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில், பாதிப்பு ஏற்படும். `Bandage contact lens’ எனப்படும் ஒருவகை லென்ஸ் வகையை மட்டும் இரண்டு மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

* லென்ஸின் ஆயுள்காலம் அறிந்து, அந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* லென்ஸ் அணியும்போதும், கழற்றும்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.

* லென்ஸ் கிளீனரைக் (lens cleaner, lens solution) கொண்டு தினமும் லென்ஸைச் சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீரில் சுத்தப்படுத்துவது ஆபத்தானது. லென்ஸ் மட்டுமன்றி, லென்ஸ் பாக்ஸையும் (lens case) சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* சிலர் நகங்களைக் கொண்டு லென்ஸைக் கழற்றுவார்கள். அது, தவறான பழக்கம். கை விரல்களால் மட்டுமே லென்ஸைக் கழற்ற வேண்டும். 

கண்ணாடி அணிவதன் பயன்கள்:

* இளைஞர்கள் மட்டுமன்றி சிறு குழந்தைகள், வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் கண்ணாடி பயன்படுத்தலாம். பொதுவாக பெரியவர்களும் குழந்தைகளும் அக்கறையின்றி செயல்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் கீழே விழுந்தும் உடையாத கண்ணாடிகள், கயிற்றுடன் சேர்த்துக் கட்டிய கண்ணாடி வகைகள் என அவர்களுக்காகவே ஸ்பெஷல் கண்ணாடிகள் வடிவமைக்கப்படும். ஒரு வயது குழந்தை தொடங்கி, முதியவர்களும்கூட இதைப் பயன்படுத்தலாம்.

* பொருளாதாரரீதியாக கண்ணாடியுடன் ஒப்பிட்டால், லென்ஸ் பயன்படுத்தினால் செலவு அதிகமாகும். இதற்கு முக்கியமான காரணம், அவற்றின் ஆயுள்காலமே. கண்ணாடி மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உழைக்கும். ஆனால், லென்ஸ் அப்படி நீடித்த உழைப்பைத் தருவதில்லை. 

கண்ணாடி

எது பெஸ்ட்?

 

கண்ணாடிதான் பெஸ்ட். குறிப்பாக, அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களால், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆகவே, `கம்ப்யூட்டரால் ஏற்படும் குறைபாடு’ (Computer vision syndrome) என்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க, கண்ணாடிதான் சிறந்த வழி. மேலும், ஸ்பெஷல் லென்ஸ்களை அணியும்போது, கண்கள் குளிர்வான நிலையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், லென்ஸ் சரியாக கண்களில் பொருந்தாது. எனவே, குளிர்சாதன இயந்திரங்கள் சூழ அமர்ந்திருப்பவர்கள், இந்தப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, கண்ணாடி பயன்படுத்துவது நல்லது. தொடர்ந்து லென்ஸ் மட்டுமே பயன்படுத்துபவர்களும்கூட கண்ணாடி ஒன்றை துணைக்கு வைத்திருக்கவேண்டியது அவசியம்.

http://www.vikatan.com/news/health/106038-contacts-or-glasses-which-are-best-for-you.html

Share this post


Link to post
Share on other sites

வேதனை தரும் 'புதையுண்ட நகம்" நகம் வெட்டுவதில் அவதானம்

 

 

இவ­ரது கால் பெரு­விரல் நகத்தைப் பார்த்து இது என்ன அசிங்­க­மாக இருக்­கி­றது என்று கேட்­கா­தீர்கள்.  பாவம் அவ­ரது வேதனை அவ­ருக்­குத்தான் தெரியும்.  

toe.jpg

நகக் கரை ஓர­மாகப் புண். நீண்ட கால­மாக இருக்­கி­றது. அருகில் எங்கோ மருந்து கட்டிக் கொண்டு திரி­கிறார்.  

புண்ணும் மாற­வில்லை  வேத­னையும் குறை­ய­வில்லை  புண்ணில் சதை­வ­ளர்ந்து நக ஓரத்தை மூடிக் கிடக்­கி­றது  உற்றுப் பார்த்தால் நோயுற்ற பகு­தியில் உள்ள நகத்தின் நுனிப் பகுதி சதைக்குள் ஆழப் புதைந்து கிடப்­பது தெரியும்.  

மாறாக, நகத்தின் மறு கரை ஓரத்தை அவர் சற்று ஆழ­மாக வெட்­டி­யி­ருப்­பதை அவ­தா­னித்து இருப்­பீர்கள். ஆனால் நல்ல கால­மாக அது புண்­ப­ட­வில்லை.  

நகத்தின் நுனி­யா­னது சதைக்குள் புதை­யுண்டு கிடந்து, அதன் மேல் தசை வளர்­வ­தையே புதை­யுண்ட நகம் (Ingrown Toe nail) என்று சொல்­லு­வார்கள்.  

இது ஏன் ஏற்­ப­டு­கி­றது?  

முக்­கிய காரணம் நகங்­களை சரி­யான முறையில் வெட்­டா­மைதான்.  

நகத்தின் ஓரங்­களை நேராக வெட்­டாமல் பிறை போல வளைத்து வெட்­டும்­போது நக ஓரத்தில் உள்ள சதையும் வெட்­டுப்­படும் அபாயம் உண்டு.  

அவ்­வாறு வெட்­டினால் நக­மா­னது வெளி நோக்கி வள­ராது தசைப் பகு­தியை ஊடறுத்து வளர முயல்­வ­தால்தான் இந்தப் பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது.  நுனிப் பகு­தியில் இறுக்­க­மான சப்­பாத்­துக்­களை அணி­வதும்,. குதி உயர்ந்த சப்­பாத்­துக்­களை அணி­வதும் கார­ண­மா­கலாம்.  

அடிக்­கடி விரல் நுனியில் காயங்கள் ஏற்­ப­டு­வதும் கார­ண­மா­கலாம். உதா­ர­ண­மாக கால்­பந்து விளை­யாட்டின் போது அவ்­வா­றான காயங்கள் ஏற்­ப­டு­வ­துண்டு.  

என்­னிடம் வந்த ஒரு நோயளி தனது கவ­ன­யீனம் கார­ண­மாக தனது விரல்  நுனியை மேசை கதி­ரை­களில் அடி­ப­டவி ட்ட காயங்­களால் தான்­அவ்­வாறு ஆனது என்றார்.  ஒரே குடும்­பத்தை சேர்ந்­த­வர்­க­ளிடம் வரு­வதும் அவ­தா­னிக்கப்­பட்­டுள்­ளது.  

இது பரம்­பரை நோயல்ல. அவர்­க­ளது விரல், எலும்பு, நகம் ஆகி­ய­வற்றின் வளைவு சற்று அதி­க­மாக இருப்­பது காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.  இவ்­வாறு நகம் புதை­யுண்டு போனால் வெறு­மனே மருந்து கட்­டு­வ­தாலோ அன்­ரி­ப­யோடிக் மருந்­து­களை உப­யோ­கிப்­ப­தாலோ சுகம் கிடைக்­காது.  

விரலை மரக்கச் செய்­வ­தற்கு ஊசி போட்டு சதை வளர்ந்­துள்ள  பகு­தியில் உள்ள நகத்தை வெட்டி எடுத்­து­விட்டு மருந்து கட்­டு­வார்கள். முழு  நகத்­தையும் அகற்ற வேண்­டிய தேவை இல்லை.  

நகத்தின் அப் பகுதி மீண்டும் வளர்ந்து வரும் போது மீண்டும் நகம் பாதிப்பு அடை­யாமல் இருக்­கு­மாறு கவ­ன­மாக இருங்கள்.  

நகம் வெட்­டும்­போது வளைத்து வெட்டி நகக் கரை­யோர விரல் நுனி  காயமடையாமல் பாதுகாப்பாக வெட்ட வேண்டும். அதாவது நகத்தை வளைத்து வெட்டாமல்  நேராக வெட்டுங்கள்.   நுனிப் பகுதி இறுக்கமாக சப்பாத்து அணிய வேண்டாம்.   குதி உயர்ந்ததும் வேண்டாம்.  

http://www.virakesari.lk/article/26413

Share this post


Link to post
Share on other sites

சிறார்களுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை தடுப்பது எப்படி.?

 

 

டைப் 1 எனப்படும் சர்க்கரை நோயிற்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மூன்றிலிருந்து 5 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீதத்தினர் விற்றமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. விற்றமின் டி சத்து போதிய அளவிற்கு எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த வகையான பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும் தெரியவருகிறது. இந்த விற்றமின் டி சத்து, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மிக சரியாக தூண்டிவிட்டு, டைப் 1 எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

news_image_health_30_10_17.jpg

கணையம் தன்னிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களான இஸ்லெட் என்ற செல்களின் உதவியுடன் இன்சுலீனை சுரக்கச் செய்கிறது. மரபணு கோளாறு மற்றும் புறச்சூழல் காரணிகளால் இந்த நோயெதிர்ப்பு செல்கள் பாதிப்பிற்குள்ளாகி, கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலீன் சுரப்பில் மாறுபாட்டையும் சமச்சிரின்மையையும் ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகமெடுப்பதாக கூறுவது, சோர்வு பார்வைத்திறனில் மாற்றம், அதிகப் பசி, வாசனைகளை நுகரும் திறன் அதிகரிப்பு, காரணமற்ற உடல் எடை குறைவு, அவதானிக்க முடியா திடீர் நடத்தை மாற்றம், இயல்பை விட அதிகளவிலான பதற்றம் அல்லது பேரமைதி இது போன்ற அறிகுறிகள் உங்களுடைய பிள்ளைகளிடத்தில் இருந்தால் முதலில் அவர்களின் இரத்த சர்க்கரையளவை பரிசோதனை செய்யுங்கள். அவர்கள் டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு சத்தான உணவு, உடற்பயிற்சி, விற்றமின் டி சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும் போது அவர்கள் நாளடைவில் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறுவார்கள்.

டொக்டர் விஜய் விஸ்வநாதன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26478

Share this post


Link to post
Share on other sites

உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் டயாபடீஸை விரட்டியடிக்க முடியுமா..!

 

 

சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருத்துவர்களின் எச்சரிக்கை அதனை வருமுன் காப்பது தான் சிறந்தது என்பர். ஆனால் அந்த பாதிப்பு வந்துவிட்டால் ஒரு பிரிவினர் அதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் குணப்படுத்த இயலாது என்றும், மற்றொரு பிரிவினர் அதனை குணப்படுத்த இயலும் என்று சொல்வர். ஆனால் டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் உணவுக் கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.

news_image_health_2810.jpg

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றும் பலருக்கும் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு எதிர்பார்ப்பது போல் குறைவதில்லை. ஆனால் அவர்கள் செய்யும் தவறு அதிக கலோரிகளை உடைய உணவு பொருள் எது என்பதை இனங்கண்டறிந்து சாப்பிடுவதில்லை. 

குறைந்த கலோரிகள் கொண்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் 800 கலோரி அளவிற்கு எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவைப்படும் அதிகப்படியான சத்தை ஏற்கனவே கொழுப்பாக சேகரிப்பட்டிருப்பவைகள் சிதைக்கப்பட்டு அதிலிருந்து சர்க்கரை சத்து எடுத்துக் கொள்ளப்படும். இதன் காரணமாக சர்க்கரையின் அளவு குறையத் தொடங்கும். அதே சமயத்தில் ஒரு நாளைக்கு 3 லீற்றருக்கு மிகாமல் தண்ணீரும் அருந்தவேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றினால் ஆச்சரியப்படும் வகையில் டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு குறைந்து அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவர்.

இதனை புறகணித்தால் சர்க்கரையின் அளவு அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உருவாகும். அதனால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உணவுக்கட்டுப்பாட்டை தொடரவேண்டும். அதனை மருத்துவர் கண்காணிப்பார். மீண்டும் பரிசோதனை செய்து சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்வை தொடரலாம்.

டொக்டர் ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26456

Share this post


Link to post
Share on other sites

குறட்டை வெறும் ஒலி அல்ல, உடல்நல பாதிப்பைக் காட்டும் அறிகுறி... கவனம்!

 

டுத்தவுடனே நல்லா குறட்டைவிட்டுத் தூங்குறேனு மனைவி சொல்றாங்க டாக்டர்… நல்லாத் தூங்கினாலும் அடுத்த நாள் முழுக்க சோர்வாகவே இருக்கு... தூக்கத்துல எந்தக் குறையும் இல்லை. நல்லாத்தான் தூங்குறேன். மறுநாள் சோர்வுக்கு என்ன காரணமா இருக்கும்?’ என்று மருத்துவரிடம் குறட்டைவிட்டு உறங்குவதைப் பெருமையாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மறுநாள் சோர்வுக்கான காரணமே, அவர்கள் பெருமையாகப் பேசும் குறட்டைதான். குறட்டை என்பது தூக்கத்தின் ஆழத்தை உணர்த்தும் அளவுகோள் அல்ல.

குறட்டை ஒலி

 


இது `சவுண்ட் ஸ்லீப்’ அல்ல!

குறட்டைவிட்டு உறங்கினால், ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவர் இருக்கிறார் என்று எண்ணுவது தவறு. உண்மையில், குறட்டைவிட்டு உறங்குவது ஆரோக்கியமானது அல்ல. ஆங்கிலத்தில் ஆழ்ந்த உறக்கத்தைச் சுட்டிக்காட்ட, ‘சவுண்ட் ஸ்லீப்’ எனும் பதத்தை உபயோகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் குறட்டைவிட்டு உறங்குவது, ‘சவுண்ட் ஸ்லீப் அல்ல, சவுண்ட் உண்டாக்கும் ஸ்லீப்’ என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பாதிப்பின் அறிகுறி!

குறட்டை ஒலி அடுத்தவரின் தூக்கத்தைக் கெடுப்பதால், அதை நிறுத்த வேண்டும் என்ற பெருந்தன்மையோடு சிகிச்சைக்கு வருபவர்களும் சிலர் உண்டு. குறட்டை ஒலி அடுத்தவரின் தூக்கத்தை மட்டுமல்ல, குறட்டைவிடுபவர்களின் உடல்நிலையையும் பாதிக்கும். குறட்டையில் வெளிப்படும் ஒலி, சுவாசப் பாதையின் தொடக்கத்தில் இருக்கும் பாதிப்பைக் கோடிட்டுக் காட்டும் அறிகுறி. 

சவுண்ட் ஸ்லீப்


காரணங்கள்...

சிலருக்கு மெல்லிய அன்னம் (Soft palate) மற்றும் உள்நாக்கு (Uvula) பகுதிகள், உறக்கத்தின்போது அதிகளவில் நெகிழ்வதால், மூச்சுக்காற்று உட்செல்லும்போது, அவற்றில் உண்டாகும் அதிர்வுகளால் குறட்டை உண்டாகும். ஒவ்வாமை, மூக்கடைப்பு, நாசித் தண்டின் அமைப்பு வளைந்திருக்கும் (Deviated nasal septum) போதும் குறட்டை ஏற்படலாம். நீண்ட நாள்கள் சைனஸ் அழற்சியால் அவதிப்படுபவர்கள், ஆஸ்துமா நோயாளிகளுக்குக் குறட்டைச் சத்தம் வெளிப்படலாம். சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இயல்பாக சுவாசம் நடைபெற முடியாமல் போகும் காரணிகள் குறட்டையை உண்டாக்கும். குழந்தைகள் உறங்கும்போது குறட்டைச் சத்தம் கேட்டால், டான்சிலைடிஸ் (Tonsillitis) தொந்தரவு இருக்கிறதா என்பதை அறிந்து சிகிச்சையளிக்க வேண்டும். அடிக்கடி சளித் தொந்தரவு, மூக்கடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொண்டைத் திசுக்கள் தடித்திருந்தாலும் குறட்டை ஏற்படலாம். சுவாசப்பாதை சார்ந்த தொற்றுகள் ஏற்படாத வண்ணம் தூதுவளைத் துவையல், கற்பூரவல்லி ரசம், தும்பைப் பூ நசியம், துளசிச் சாறு போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்தலாம். 

புகையும் மதுவும்!

நீண்ட நாள்கள் புகைப்பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் குறட்டைத் தொந்தரவு நிச்சயம் இருக்கும். சில வகை தூக்க மாத்திரைகளும் குறட்டையை உண்டாக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் குறட்டை அதிகமாக இருக்கும். சமீபத்தில் மெலிந்த தேகம் இருப்பவர்களுக்கும் இந்தத் தொந்தரவு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதிகரிக்கும் வயதும் குறட்டையை உண்டாக்குவதற்கான முக்கியமான காரணம். பெண்களைவிட ஆண்களுக்கு அதிகளவில் குறட்டை உண்டாகிறது.

குறட்டையின் தீவிரத்தை அறிய...

குறட்டை விடுவதை ஒப்புக்கொள்ள மறுப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு, அவர்கள் குறட்டைவிடுவதை செல்போனில் படம்பிடித்து / ஒலியைச் சேமித்து அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்கலாம். மருத்துவரிடம் காண்பிக்கும் பட்சத்தில், குறட்டையின் தீவிரத்தை அவர் அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். வெறும் குறட்டை ஒலி மட்டும் வெளிப்படுகிறதா, இல்லை மூச்சுவிடுவதில் தடை (Sleep apnea) ஏற்படுத்துகிறதா என்பதையும் கண்டறிய உதவும்.

புகை


சமிக்ஞைகள்...

தொடக்கத்தில் ஒலியை மட்டும் வெளிப்படுத்தும் குறட்டை, போகப் போக மேலும் சில சமிக்ஞைகளை நமக்குக் காட்டத் தொடங்கும். நா வறண்டு போதல், தொண்டையில் லேசான புண்கள் தோன்றுதல், தூக்கம் தடைப்படுதல், மூச்சுவிடுவதில் சிரமம், பகலில் மிகுந்த சோர்வு, தலைவலி ஆகிய குறிகுணங்கள் குறட்டையால் உண்டாகும் பாதிப்புகள். 

குறட்டையைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், ரத்த அழுத்தம், இதயநோய் வரை இது கொண்டு சென்றுவிடும் அபாயம் உண்டு. உறக்கத்தின்போது ’மூச்சு விடுவதில் தடை’ (Sleep apnea) என்ற நிலையையும் குறட்டை உண்டாக்கும். போதிய அளவு பிராண வாயு செறிவு இல்லாமல், உடலில் சோர்வு அதிகரிக்கும். மூளைக்குக் கிடைக்கவேண்டிய பிராண வாயுவின் அளவு குறைவுபடும். அரிதாக, சுவாசம் தடைப்பட்டு மரணம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. இரவில் எவ்வளவு நேரம் உறங்கினாலும் பகலில் சோர்வாக இருந்தால் அதற்கு குறட்டையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

என்ன செய்யலாம்?

குறட்டைவிடுவதைப் பிறர் சுட்டிக்காட்டத் தொடங்கிவிட்டால், உங்கள் உடலை செப்பனிடவேண்டியது மிக அவசியம். அதிக எடை இருந்தால், அதைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் கருணையின்றி தடை போடுங்கள். தேவையில்லாமல் மருத்துவர் அனுமதியின்றி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். இடது புறமாகப் படுத்து உறங்குவது குறட்டைக்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கு எதிரி. தலையணையைச் சற்று உயர்த்திக்கொள்ளலாம். நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கும் சவுரிப் பழத்தை நல்லெண்ணெவிட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும் நசிய சிகிச்சைகள், சுவாசப் பாதையின் குறைபாடுகளை நிவர்த்திசெய்து குறட்டையைக் குறைக்கும். குறட்டையின் காரணமாக உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க சில உபகரணங்களும் இப்போது இருக்கின்றன.

பயிற்சிகள்...

கழுத்துப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலிமையாக்கும் எளிய கழுத்துப் பயிற்சிகளைச் செய்யலாம். ‘ஆம்’ என்று சொல்லும் செய்கையில், தலையை மெதுவாக மேலும் கீழும் அசைப்பது, ’இல்லை’ என்று சொல்லும் சாயலில் வலது புறமும் இடது புறமும் மெதுவாகத் தலையை அசைப்பது போன்ற பயிற்சிகள் உதவும். பக்கவாட்டிலும் கழுத்தை அசைத்து, அவ்வப்போது அந்தப் பகுதியிலுள்ள தசைகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். 

ஆசன வகைகளில் புஜங்காசனம், தனுராசனம் போன்றவற்றைச் செய்து வரலாம். பிராணாயாம வகைகளில் ’ஓங்கார பிராணாயாமம்’ மிகுந்த நன்மை அளிக்கும். நாடிசுத்தி பிராணாயாமம் செய்து, ஆக்சிஜன் செறிவை அதிகரித்துக்கொள்வதும் நல்லது. குறிகுணங்களைக் குறைக்க சீந்தில் சூரணம், திரிபலா சூரணம் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடல் அமைப்புக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ எண்ணெய்களை (சுக்குத் தைலம், பீனசத் தைலம், நொச்சித் தைலம்), வாரத்துக்கு இரு முறை தலைக்குத் தேய்ந்து முழுகுவது பயன் அளிக்கும். 

தூக்கம்

 

குறட்டைவிடுவதை இகழ்ச்சியாகப் பார்ப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கே தெரியாமல் நடக்கும் மாறுபட்ட செயல்பாட்டை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்ய வழிவகை செய்வதுதான் நாம் செய்யவேண்டிய நல்ல காரியம். குறட்டைப் பிரச்னையால் விவாகரத்து கோரும் மேல்நாட்டு மக்களின் மனநிலை நமது பாரம்பர்யத்துக்கு இல்லை. தங்கள் துணைக்கு இருக்கும் பிரச்னையை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வை நாடச் செய்வதே நமது பாரம்பர்யம். குறட்டைப் பிரச்னையால் உண்டாகும் சத்தத்தை வெறும் ஒலி மாசாக (Sound pollution) மட்டும் நினைத்துக் கடந்து சென்றுவிடாமல், உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மாசு என்பதைத் தெரிந்துகொண்டு தடுக்க முயற்சி செய்வோம்!

http://www.vikatan.com/news/health/106144-what-are-the-symptoms-of-snoring.html

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ஹெட் மசாஜ் செய்துகொள்ளப் போகிறீர்களா? கவனம்!

 

சிகையலங்காரம்... நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அம்சம். மாதத்துக்கு ஒரு முறை அல்லது இருமுறை, ஹேர் கட்டிங்குக்காகவோ, ஷேவிங் செய்யவோ சலூன் கடைக்குப் போகிறோம். அங்கிருக்கும் சுழல் நாற்காலியில் சரிந்து, சாய்ந்து அமரும் கணம் உண்மையில் கொஞ்சம் ரிலாக்ஸான நேரமே. இன்னும் கூடுதலாக, நாம் போன காரியம் முடியும் வரை மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தால் அது சுகானுபவம். பல சலூன் கடைகளில் சிகையலங்காரம் முடித்து, ஃபேஸ் மசாஜ் செய்வார்கள். சிலர் தலையில் மென்மையாகப் படபடவெனத் தட்டி, ஹெட் மசாஜ் செய்து, நம் மோவாயைப் பிடித்து, தலையை `படக் படக்’ எனத் திருப்பி சொடக்கெடுத்து விடுவார்கள். அது, பலருக்கும் ஒரு நிறைவைத்தரும் நல்ல அனுபவம். ஆனால், `சலூன் கடைகளில் ஹெட் மசாஜ் செய்துகொள்வது ஆபத்து’ என்றும் எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள்.

"மசாஜ் என்பது சாதாரணமான விஷயமல்ல. விஷயம் தெரியாத ஒருவரிடமோ, அதில் நிபுணத்துவம் பெறாத ஒருவரிடமோ சென்று பாலமுருகன் நரம்பியல் நிபுணர்ஹெட் மசாஜ் செய்துகொள்வது மற்றும் தலையில் சொடக்கெடுப்பது போன்ற சிகிச்சைகளைச் செய்துகொண்டால், நரம்பு விலகிக்கொள்ளும். இதன் காரணமாக, `பாரலிஸிஸ்’ எனப்படும் வாதம் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. சமீபத்தில் டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இன்றைக்கு மருத்துவ உலகம் சந்தித்துவரும் பிரச்னைகளில் இது முக்கியமானது" என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.

 

கவனம்..!

``மசாஜ் செய்யும் நாள்களில் உடல் ஆரோக்கியமும் முக்கியமாகிறது. மசாஜ் செய்ய நன்கு கற்றவர்கள், புரொஃபஷனல் மசாஜ் சென்டர்களில் இருப்பவர்களும் மசாஜைப் பொறுத்தவரை சில விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு அவை தெரிந்திருக்காது. எனவே, மசாஜ் செய்யப்போகிறவர்கள் தங்கள் உடலில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சளி, இருமல் போன்ற ஜலதோஷ பாதிப்பு உள்ளவர்கள், சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள், அஜீரணம் மற்றும் செரிமானக் கோளாறு இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருப்பவர்கள் அதுபோன்ற நேரங்களில் மசாஜ் செய்துகொள்ளக் கூடாது. மேலும், கைகால்களில் நீவிவிடுதல், சுளுக்கெடுத்தல், உருவிவிடுதல் போன்ற நரம்பு சார்ந்த எந்தச் சிகிச்சையையும் அந்தச் சமயங்களில் மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற நேரங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும்கூட தவறு" என்று எச்சரிக்கிறார் பாலமுருகன். 

நெக் மசாஜ்

"ஹெட் மசாஜ் செய்யப் போகிறவர்கள் இதையெல்லாம் கருத்தில்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். கடந்த சில வருடங்களாக சலூன் கடைகளில், தாமாகவே முன்வந்து சிலர் ஹெட் மசாஜைப் பரிந்துரைக்கிறார்கள். மனஅழுத்தம் காரணமாக தலைவலி ஏற்பட்டிருப்பது, கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருப்பது, ரிலாக்சேஷனை விரும்புபவர்கள் எளிதில் மசாஜ் செய்ய ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள். சிலர், தாமாகவே சுயசிகிச்சை மாதிரி இவற்றைச் செய்துகொள்வதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக வேலைக்கு நடுவே அவ்வப்போது கழுத்தில் நெட்டி முறிப்பது, கழுத்துக்கு எண்ணெய் தடவி நீவிவிடுவது போன்றவற்றைத் தாமாகவே சிலர் செய்துகொள்வார்கள். மசாஜ் குறித்த சரியான அறிமுகமில்லாத நபர்களிடம் அதனைச் செய்துகொள்ளும்போது, மோசமான விளைவுகள் உருவாகும். குறிப்பாகக் கழுத்துப் பகுதியில் எந்த ரிஸ்கையும் எடுக்க வேண்டாம். உடலையும் தலையையும் இணைக்கும் கழுத்து, பல்வேறு நரம்புகளையும் எலும்புகளையும் கொண்டது. எனவே, கழுத்தில் ஏற்படும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தேர்ந்த மருத்துவர்களை அணுகுவதுதான் சிறந்த தீர்வைத் தரும்’’ என்கிறார் நரம்பியல் நிபுணர் பாலமுருகன். 

கழுத்து

மருத்துவர் பாலமுருகன்ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனோ "தலை, காது, பாதம்...  இந்த மூன்று பகுதிகளிலும் தினமும் இரவில் லேசாக எண்ணெயை வைத்துவிட்டு, காலையில் குளித்துவிட்டாலே போதும். கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். மசாஜ் எல்லாம் செய்யவேண்டிய அவசியமே இல்லை.  அதோடு, மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இது உதவும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். இரவுத் தூக்கம் சீராகும். இடுப்புவலி தீரும். ரத்த நாளங்கள் நன்கு இயங்கும். பாதவெடிப்பு தொடர்பான எந்தப் பிரச்னையும் வராது’’ என்கிறார்.

இது தொடர்பாக மருத்துவர் சமுதாயப் பேரவையின் மாநிலத் தலைவர் வே.பழனியிடம் பேசினோம் ``தமிழ்நாட்டில் இதுவரை ஹெட் மசாஜ் தொடர்பாக எந்தப் புகாரும் வந்தது இல்லை. சலூன் கடைகளில் மசாஜ் செய்பவர்கள் அனைவரும் முறையாகப் பயிற்சி எடுத்துதான் அதைச் செய்துவருகிறார்கள். எந்த இடத்தில் பிரஷர் கொடுக்கவேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் செய்கிறார்கள். பயிற்சி எடுக்காமல் ஹெட் மசாஜ் போன்ற  சிகிச்சைகளை எங்களில் யாரும் செய்வதில்லை. கிராமங்களில், ஊர்களிலிருந்து வருபவர்களில் சிலர்தான் சுளுக்கு எடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களே.  

இந்த விஷயத்தில் அவர்கள் பயிற்சி எடுத்தற்கான சான்றிதழ்கள் கடைகளிலேயே இருக்கும். சான்றிதழ்கள் பெற அதிகமான பணம் செழவழிக்க வேண்டும். அதனால் பயிற்சிகள் எடுத்தும் சிலர் சான்றிதழ் இல்லாமல் இருப்பார்கள். எங்கள் சங்கத்தின் மூலமாகவே வெளியிலிருந்து ஆள்களை வரவழைத்து இது தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறோம். 

சலூன் கடை

அதுபோல, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே மசாஜ் செய்கிறோம். வாடிக்கையாளர்களை வற்புறுத்துவது இல்லை. விரும்பும் வாடிக்கையாளர்களிடமும் அவர்களின் உடல்நிலையைக் கேட்டறிந்த பின்னரே மசாஜ் செய்கிறோம். பணத்துக்காக வற்புறுத்தி யாரும் இதைச் செய்வதில்லை’’ என்கிறார் பழனி.

http://www.vikatan.com/news/health/106421-hairdressers-head-massage-is-good-or-bad.html

Share this post


Link to post
Share on other sites

SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பை தடுப்பது எப்படி?

 

 

சுகபிரசவத்திலோ அல்லது சிசேரியனிலோ, பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதத்தற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் குழந்தைகள் SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாதிப்பு வராமல இருக்கவேண்டும் எனில் பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் குழந்தை ஆஸ்துமா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், தாயின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதனால் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு பெண்களும், குழந்தை பிரசவித்த பின்னர் குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் புகட்டவேண்டும் என்ற விழிப்புணர்வை முன்னெடுக்கிறது.

news_image_health_1_11_17.jpg

தாய்ப்பால் கிடைக்காத அல்லது போதிய அளவிற்கு கிடைக்காத குழந்தைகள் தான் தூக்கத்தில் எதிர்பாராமல் காரணமற்ற வகையில் இறக்கவும் நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக பிறந்து ஒரு மாதத்திலிருந்து ஒராண்டு வரையிலான குழந்தைகள் தான் இந்த பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பு குழந்தைகளை தாக்கியவுடன், தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளையின் செயல்பாட்டை தவறுதலாக தூண்டிவிடுகிறதாம்.

பொதுவாக பிறந்த குழந்தையின் பசி மற்றும் சுவாசிப்பதற்கான தேவையான ஓக்ஸிஜன் குறித்து மூளை கட்டளை பிறப்பிக்கும். குழந்தை அழும், அப்போது அதற்கு தேவையான விடயங்கள் கிடைத்துவிடும். ஆனால் SIDS பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த தொடர்பில் மாறுபாடு ஏற்பட்டு, குழந்தைக்கு தேவையான ஓக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகவே அந்த குழந்தை அபாய கட்டத்தை எட்டுகிறது.

இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிலும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.  குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தை பெற்றோர்களின் ஆரோக்கியமான பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் இருக்கவேண்டும். அதனுடைய தூக்கத்தை ஆரோக்கியமான சூழலில் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்காக டயாபரை அணிவித்து விடுகிறார்கள். இதுவும் தவிர்க்கப்படவேண்டும். 

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26617

Share this post


Link to post
Share on other sites

காய்கறி சூப், மிளகுக் குழம்பு, தூதுவளை ரசம்... மழைக்கால நோய்களைத் தவிர்க்க எளிய உணவுகள்!

 
 

ழைக்காலங்களில் காலையில் கண் விழிப்பதில் தொடங்கி உறங்கும் வரையிலான அன்றாட நடவடிக்கைகளில் குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் நோய்கள் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுமுறையைக் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொள்வது நல்லது. அதை எப்படி, எப்போது உண்ணலாம் என்பது பற்றிச் சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.

மழை உணவுகள்

 

“குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்துத் தூங்குவது, ஜில்லென்று ஏ.சி-யை ஆன் பண்ணி உறங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை எனப் பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். அப்படிப்பட்டச் சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்; சூடான பானங்களையே அருந்த வேண்டும். காபி, டீ அருந்துவதற்குப் பதில் இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து அருந்தலாம். வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு, ஹோமியோபதி டாக்டர் எட்வர்டுதேன் கலந்து குடிக்கலாம்.  

சளிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.

மழைக்காலங்களில் தலைக்குக் குளிப்பதைப் பலரும் தவிர்த்துவிடுவது உண்டு. சிலர் சைனஸ், தலைபாரம், ஒற்றைத் தலைவலி எனச் சில காரணங்களைச் சொல்லி தலைக்குக் குளிக்காமல் தவிர்ப்பதுண்டு. இப்படிச் செய்வதால் தலையில் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தலைக்குக் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகைகாட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நொச்சி, யூகலிப்டஸ் போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குளிப்பதும் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். இரவு உறங்கும்போது தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்குவதும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுதலை தரும்.

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது. அவற்றுக்கு இணை உணவாக தூதுவளைச் சட்னி, இஞ்சி சட்னி செய்து சாப்பிடலாம். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து தோசை சுட்டுச் சாப்பிட்டால் சளித்தொல்லை காணாமல் போகும். கல்யாண முருங்கை இலையையும் இதேபோல் தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடலாம்.

மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அதிக அளவில் நீர்ச்சத்து வெளியேறும் என்பதால் உடல் சோர்வு, நடக்க முடியாமை ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீராலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க, சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவது, வெந்நீர் அருந்துவது போன்றவை வயிற்றுப்போக்கு ஏற்படாமலிருக்கச் செய்யும். மேலும், காலரா, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகள் அசுத்தமான, சுகாதாரமற்ற தண்ணீரால் வர வாய்ப்பு உள்ளது என்பதால் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது.

மழை நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை அருந்தலாம். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் விலகும். 10 மிளகை வெறும் வாணலியில் வறுத்து அதில் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்து வந்தாலும் காய்ச்சல் கட்டுக்குள் வரும்.

மணத்தக்காளி


காபி, டீக்குப் பதிலாக காய்கறி சூப் அருந்தலாம். முற்றிய வெண்டைக்காயில் சூப் செய்து அருந்தினாலும் தக்காளியில் சூப் செய்து அருந்தினாலும் இருமல், ஜலதோஷம் விலகும். மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அது போன்ற சூழலில் மணத்தக்காளிக்கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அதை சூப் வடிவில் செய்து சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும். இதேபோல்  நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் `நறுக்குமூலம்’ எனப்படும் கண்டதிப்பிலியிலும் சூப் செய்து அருந்தலாம்.

சளி, இருமல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வைட்டமின் - சி சத்து சிலருக்கு ஒத்துப்போகாது. ஆனால், வைட்டமின் - சி சத்து உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் ஜூஸ் செய்து அருந்தினால் எதுவும் செய்யாது. சிலர் தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்வார்கள்; அவர்கள் அவற்றைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்றபடி பால் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால் மோர் சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இவை மழை மற்றும் குளிருக்கு இதமான குழம்புகள்... அனைவரும் சாப்பிடலாம். சுண்ட வற்றலைத் தனியாக வறுத்துப் பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து முதல் மற்றும் இரண்டாவது கவளம் உணவுடன் சாப்பிட்டாலும் சளித் தொந்தரவுகள் விலகும். இதேபோல் சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் சளியை விலகச் செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமலிருக்க வேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாகக் கீரை சாப்பிடக் கூடாது.

மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம். என்றாலும் அவை செரிமானம் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும். மாலை வேளைகளில் சுக்கு காபி அருந்துவது நல்லது. சுக்கு காபி என்றதும் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து குடிப்பதல்ல. மிளகு அதைவிட இரண்டு மடங்கு சுக்கு, சுக்கைப்போல் இரண்டு மடங்கு அதிகமாகக் கொத்தமல்லி (தனியா), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடித்து தண்ணீரில் சேர்த்துக்கொதிக்கவைத்து பனைவெல்லம் சேர்த்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். இந்தக் கலவையைக் கொதிக்க வைக்கும்போது துளசி, தூதுவளை, ஓமவல்லி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாவுக்கு ருசியாக இருக்கிறது என்பதற்காக மாலை நேரச் சிற்றுண்டியாக வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. இரவு உணவும் ஆவியில் வேகவைத்த உணவுகளாகவோ, அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிளகுத்தூளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. 

மழை

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பூண்டுப்பால் அருந்தலாம். அதாவது, 10, 12 பூண்டுப்பற்களைத் தோலுரித்து பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால்வாசி வேக்காட்டின்போது மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி நன்றாகக் கடைந்தால் அது பூண்டுப்பால். இதைச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும். மழைக்காலங்களில் பலருக்குப் பழம் சாப்பிடப் பிடிக்காது. சில பழங்கள் சிலருக்குச் சேராது. ஆனால், எல்லாச் சூழல்களிலும் சாப்பிடக்கூடிய பழம் வாழைப்பழம். இதைச் சாப்பிடுவதால் எந்தவிதமான பிரச்னைகளும் வராது. 

மழைக்காலங்களில் கொசு, பூரான், வண்டு மற்றும் சிறுபூச்சிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். நொச்சி, வேம்பு போன்ற இலைகளை வீட்டுக்கு வெளியே தீயிட்டு கொளுத்தி புகைமூட்டம் போட்டால், கொசுக்களின் தொல்லை இருக்காது. வீட்டின் உள்ளே கற்பூரம் கொளுத்துவது, படுக்கையைச் சுற்றி பூண்டுப் பற்களை நசுக்கிவைப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை பூச்சிகளின் தொந்தரவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 

 

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தலையணையின் அடியில் வெள்ளைப்பூண்டை உரித்து வைத்து தூங்கினால் நிம்மதியான உறக்கம் வரும். அதேபோல் இரவு உணவு முதல் கவளம் எடுக்கும்போது உப்பு சேர்த்து வேகவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். பகல் வேளைகளில் சப்போட்டா பழங்களைச் சாப்பிட்டாலும் இரவில் நிம்மதியான தூக்கம் வரும். மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக அருந்துவதில்லை. இதனால் மலச்சிக்கல் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். மலச்சிக்கல் வந்தாலும் அவ்வப்போது காய்ந்த திராட்சைப்பழங்கள், கொய்யாப்பழம், பப்பாளி போன்றவற்றைச் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.''

http://www.vikatan.com/news/health/106460-best-foods-for-rainy-season.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

முழு உடல் பரிசோதனை... யாருக்கு, எப்போது, ஏன் செய்ய வேண்டும்? #HealthAlert

லேசாகத் தலைவலிக்கிறது’ என்று சொன்னால்கூட, 'ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோடா' என்று அட்வைஸ் செய்கிறார்கள் நண்பர்கள். அந்த அளவுக்குப் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை எல்லோரின் மூளையிலும் பதிவாகிவிட்ட வார்த்தையாகிவிட்டது 'ஃபுல் பாடி செக்கப்’ என்கிற முழு உடல் பரிசோதனை.

பரிசோதனை

 

எங்கு பார்த்தாலும் ஹெல்த் செக்கப் விளம்பரங்கள். வீதிகளில் நடந்து செல்லும்போது, "சார் உங்க வெயிட் செக் பண்ணிக்கோங்க" என்று அழைத்து, உங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, "கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு", "வெயிட் அதிகமா இருக்கு" என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்பி, "ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோங்க... 15 சதவிகிதத் தள்ளுபடியோடு" என்று ஆசை காட்டுவதும் நடக்கிறது.

"உண்மையில்,  'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' என்பது ஆரோக்கியமாக இருப்பவர்களையும் நோய் பயம் காட்டி, மருத்துவமனை வாடிக்கையாளராக மாற்றக்கூடிய கார்ப்பரேட் தந்திரம்" என்றும் சிலர் சொல்கிறார்கள். இதைத்தான் சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' டாக்டர் விஜய் சக்கரவர்த்திபடத்திலும் பேசினார்கள்.

இன்னொரு பக்கம், முழு உடல் பரிசோதனை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்டணங்கள் மட்டும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல... ஒரு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனை மற்ற மருத்துவமனையின் சோதனையோடு பொருந்திப்போவதும் இல்லை.

உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்..? பொதுநல மருத்துவர் விஜய சக்கரவர்த்தியிடம் கேட்டோம்...

“நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) அதற்குப் பெரிதும் உதவும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, உடல்நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரமிருப்பதில்லை. `நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையே இன்றைய தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது. இதனால், நோய் அறிகுறிகள் வெளிப்படும் வரை பலரும் கண்டுகொள்வதில்லை. நோய் முற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல லட்ச ரூபாய்களை இழந்தும் பலன் கிடைக்காமல் போய்விடவும்  அது காரணமாகிறது. இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.

முழு உடல் பரிசோதனை

என்னென்ன பரிசோதனைகள்?

கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள், மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி ரத்த வகை, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு,  யூரியா, கிரியேட்டினின் போன்ற அளவுகள், வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தைராய்டு சுரப்புப் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை போன்ற அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மாறுபாடு இருக்கும்.

பரிசோதனைகள்

யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?

பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு  இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

பரிசோதனைகள்

நன்மைகள் என்னென்ன?

பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.

சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

 

இது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் நோயைக் குணப்படுத்துவதை எளிமையாகும்" என்கிறார் விஜய சக்கரவர்த்தி.

http://www.vikatan.com/news/health/106370-importance-of-master-health-check-up.html

Share this post


Link to post
Share on other sites

இந்த 10 பழகிய அறிகுறிகள் இருந்தால்.... அலட்சியம் வேண்டாம்...! #HealthAlert

சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். அதைப் பொருட்படுத்தாமல், தைலத்தைத் தேய்த்துக்கொண்டோ, ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டோ வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். சிலர் எல்லாப் பருவநிலைகளிலும் சளி, இருமலால் பாதிக்கப்படுவார்கள். மருந்துக்கடையில் ஏதாவது ஒரு மாத்திரையை வாங்கிச் சாப்பிடுவதோடு விட்டுவிடுவார்கள். சிலருக்கு நெஞ்சுப்பகுதியில் அடிக்கடி வலி எடுக்கும். வாய்வுக் கோளாறு என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொண்டு வீட்டு வைத்தியமாக எதையாவது செய்துவிட்டு விட்டுவிடுவார்கள். `இப்படித் தொடர்ச்சியாக சில உடல் உபாதைகள் ஏற்பட்டால், கவனக்குறைவாக இருக்கக் கூடாது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

நெஞ்செரிச்சல்

 

எந்த நோயும் அறிகுறிகள் இல்லாமல் ஒருவரை பாதிப்பதில்லை. அறிகுறி ஏற்படும்போதே அலெர்ட்டாகிவிட்டால், பெரிய பிரச்னைகள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளலாம். எனவே, சில குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், அதை உதாசினப்படுத்திவிடக் கூடாது; ஒதுக்கக் கூடாது. அப்படியான சில முக்கியமான அறிகுறிகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் சுந்தர்ராமன்.சுந்தர்ராமன்

* நெஞ்சுப் பகுதியில் அழுத்தமாக உணர்வது, இதயம் இறுகுவதுபோல உணர்வது, தாங்க முடியாத தொடர்வலி... முதலியவை உடனே கவனிக்கப்பட வேண்டியவை. இவை இதயம் தொடர்பான கோளாறுகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும்.

* வழக்கத்தைவிட வேகமாக மூச்சுவிடுவது, திடீரென்று மூச்சு அதிகரிப்பது அல்லது திணறுவது. குறிப்பாக மூச்சிரைப்பு (Wheezing) ஆகியவை மிக ஆபத்தானவை. இவை, நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்பதால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* திடீரென்று தாங்க முடியாத தலைவலி ஏற்படுவது, மூளை தொடர்பான பிரச்னைகளுக்கான முக்கியமான அறிகுறி. தலைவலியுடன் சேர்த்து கண்களில் பாதிப்பு ஏற்படுவது, இன்னும் ஆபத்தானது. குறிப்பாக, கண்களின் பின்பகுதியில் வலிப்பது, பார்வை மங்கலாகத் தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* குறிப்பிட்ட சில காலங்களுக்குள் உடல் எடை அதிகம் குறைவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே. சர்க்கரைநோய், நாளமில்லாச் சுரப்பி பாதிப்புகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான அறிகுறிகளாகவும் இவை இருக்கலாம்.

* நவ துவாரங்களில் (நம் உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்கள்) எந்த துவாரத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலும் ஆபத்து. வாந்தி, சளி, காது, கழிவுகள் என எதன் மூலம் ரத்தம் வெளியேறினாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவற்றைக் கண்டுக்கொள்ளாமல் தொடரவிடுவது புற்றுநோய், நிமோனியா, காசநோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கக்கூடும்.

*உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து கட்டிகள் வருவதும் ஆபத்தே. பெரும்பாலும் இவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கும்.

அடிவயிற்றில் வலி

* சிலருக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி எடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பலர், அது செரிமானக் கோளாறாக இருக்கலாம் என்று சுய மருத்துவம் செய்துகொள்வதைக் காணலாம். உண்மையில் நீர்க்கட்டி, அல்சர், குடல்வால் அழற்சி, குடல் பாதிப்புகள் போன்றவற்றின் அறிகுறிகளாகவும் அடிவயிற்றில் வலி இருக்கக்கூடும்.

* தொடர் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் (இரண்டு வாரங்களுக்கும் மேலாக) மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

* வாந்தி, தொடர் வயிற்றுப்போக்கு, அதிகளவு காய்ச்சல்... இவை மூன்றும் ஏற்பட்டு, இரண்டு நாள்களுக்கும் மேலாக உடல் வலுவின்றி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பார்வை குறைப்பாட்டின் அறிகுறிகள்

* பார்வையில் பிரச்னை. கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வைக் குறைபாடுகள் இருப்பது பிரச்னை இல்லை. மாறாக, அதிக வெளிச்சம்பட்டது போன்ற உணர்வு ஏற்படுவது, கண்களில் ஃப்ளாஷ் அடித்தது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுவது, கண் சிவப்பாக மாறுவது, பொருள்கள் இரட்டையாகத் தெரிவது, கண்களின் உள்ளே வலி எடுப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

http://www.vikatan.com/news/health/107183-dont-just-treat-symptoms-prevent-illness.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தலையணைகள் சொல்லும் ரகசியங்கள்

 

சரியான தலையணையை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. அதை பயன்படுத்தி சரியாக படுக்கவும் வேண்டும்.

தலையணைகள் சொல்லும் ரகசியங்கள்
 
தலையணைகள் இப்போது தலையாய வேலைகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றன. படுக்கையறையில் தூங்குவதற்காக பயன்பட்ட அவைகள் இப்போது சாய்வதற்கும், உடலை சவுகரியமாக வைத்துக்கொள்ள பலவிதங்களிலும் தேவைப்படுகின்றன. வேலைசெய்து அலுத்துக் களைத்துப்போகிறவர்கள், அப்பாடா என்று தலையணையில் சாய்ந்துதான் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள். உடலை மட்டுமல்ல, மனதையும் தலையணைகள் ‘ரிலாக்ஸ்’ ஆக்குகின்றன.

தலையணையில் தலைசாய்த்து உடலை நேர்வாக்கில் வைத்துப் படுக்கும்போது உடல் ரிலாக்ஸாகும். அந்த ரிலாக்ஸ் நேரத்தில் எதை கேட்டாலும் அது வேகமாக மூளைக்குச் செல்லும். நன்றாக மூளையில் பதிந்துவிடவும் செய்யும். அதனால்தான் குழந்தைகளை தூங்கச்செய்யும்போது கருத்தாழமிக்க கதைகளை அவர்களுக்கு சொல்வார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணத்திற்கு பிறகு தலையணையின் பங்கு பலவிதமாக பேசப்படும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. திருமணமாகிவிட்டால் தலையணையோடு சேர்ந்து மனைவியும் இருப்பாள். கணவர் நிம்மதியாக தலையணையில் தலை சாய்த்திருக்கும்போது, மனைவி தனக்கு சாதகமான விஷயங்களை எல்லாம் அவரது காதுகளில் போட்டுவைத்துவிடுவாளாம். அதனால்தான் மனைவி சொற்படி நடக்கும் ஆண்களைப் பார்த்து ‘தலையணை மந்திரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது’ என்று சொல்வார்கள்.

அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நிம்மதியான, முறையான உறக்கத்திற்கு தலையணை அவசியம். தலையணை தலைக்கு மட்டுமல்ல, உடலின் பல பாகங்களுக்கும் உத்வேகம் தருகிறது. முதுகு, கழுத்து, வயிறு, கால், கை என எல்லாவற்றிற்கும் இதம் வழங்கி நன்றாக தூங்குவதற்கு துணைபுரிகிறது.

எல்லோருக்கும் ஒரே மாதிரி தலையணை ஒத்துவராது. அவரவர் உடலுக்கு ஏற்ப, வசதியானதை தேர்வு செய்யவேண்டும். இரவில் வெகுநேரம் தூக்கம் வராதவர்கள், தங்கள் தலையணை அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான தலையணையை வைத்து படுத்தால்தான் தூக்கம் வரும். மறுநாளுக்கு தேவையான புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

201711061041298925_1_pillow1._L_styvpf.jpg

பெரும்பாலான வீடுகளில் நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அதற்காக ஏதாவது மாத்திரைகளை சாப்பிட்டு விட்டுதான் தூங்குகிறார்கள். சாப்பிடும் மாத்திரைகள் பலவும், நாம் தூங்கும்போதுதான் வேலை செய்கிறது. மருந்தின் முழு பலனை அடைய நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியம். அதற்கு தலையணை மிகவும் அவசியம்.

சரியான தலையணையை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. அதை பயன்படுத்தி சரியாக படுக்கவும் வேண்டும்.

சரியாக படுப்பது எப்படி தெரியுமா?

* நேராக முதுகுத் தண்டு தரையில் அல்லது கட்டிலில் படும்படி படுக்கவேண்டும்.

* படுக்கையில் தலையின் பின்புறமும், முதுகெலும்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

* அதிக உயரம் இல்லாத தலையணையை பயன்படுத்துங்கள். தூக்கத்தில் தலையணை நழுவி விடக்கூடாது.

* ஒருக்களித்து படுக்கும் வழக்கமிருந்தால் காது, தோள்பட்டைக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்கு மென்மையான தலையணையை பயன்படுத்தி படுக்கவேண்டும்.

* கைகால், வலி உள்ளவர்கள் மென்மையற்ற, படுக்கும்போது உள்ளே அழுத்தம் ஏற்பட்டு குழிவிழாத தலையணையை வைத்து படுக்கவேண்டும். அப்போதுதான் ரத்தஓட்டம் அதிகரித்து வலிக்கு இதமாக இருக்கும்.

* மிக மென்மையான இறகு போன்ற தலையணைகள், உடலின் அழுத்தத்திற்கேற்ப செயல்பட்டு உடலை மென்மையாக வைத்திருக்கும் ‘மெமரி போம்’ தலையணைகள் தூக்கத்தில் உருண்டு படுக்கும்போது ஏற்படும் அழுத்தத்திற்கேற்ப மாறும் வடிவமைப்பைக் கொண்டது.

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காகவும் தனித்துவமான தலையணைகள் தயாரிக்கப்படுகின்றன. அவை அழகு, மென்மை, வண்ணமயமானவை. அவைகளில் மிக்கி மவுஸ், சின்ட்ரெல்லா படங்களும், இயற்கை காட்சிகளும், வளர்ப்பு பிராணிகளும், வண்ணத்துப்பூச்சிகளும் வரையப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கான தலையணைகளை வாங்கும்போது, அவர்களையே தேர்ந்தெடுக்கச் செய்யவேண்டும்.

உடலுக்கு குளிர்ச்சியை தரும் பிரம்பு நார் தலையணை, அக்குப்பிரஷர் தலையணைகளும் இருக்கின்றன. வலிகளால் அவஸ்தைப்படுகிறவர்கள், அதற்கு ஏற்ற தலையணைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். ஏற்கனவே வாங்கியது சவுகரியமாக அமையாவிட்டால், அதை ஒதுக்கிவிட்டு சவுகரியமானதை தேர்வு செய்துகொள்ளவேண்டும்.

வீட்டில் நமக்கு ஏற்ற தலையணையை தேர்வு செய்து பயன்படுத்துவோம். ஆனால் ஓட்டல்களில் தங்கும்போது அவர்கள் தரும் ஒரே மாதிரியான தலையணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியதிருக்கும். அது சிலருக்கு அசவுகரியத்தை ஏற் படுத்தும். அதை போக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்களிடம் நிறைய தலையணைகளை காட்டுகிறார்கள். படுத்துப்பார்த்து, இதமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள். வெகுநேரம் சாய்ந்து கொண்டு படிக்க, கால்வலி, முதுகு வலிக்கு முட்டுக்கொடுக்க என்று தனித்தனி தலையணை வைத்திருக்கிறார்கள். ஓட்டலில் தங்க பெற்றோரோடு வரும் குழந்தைகளிடமும் விதவிதமான தலையணைகளை கொடுத்து, பிடித்ததை எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறார்கள்.

கர்ப்பிணிகளுக்காகவும், கைக் குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியாக தலையணைகள் வடிவமைக்கப்படுகின்றன. பெண்கள் எப்போதும் மென்மையான தலையணைகளைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் இலவம் பஞ்சு தலையணைகளே அவர்களை கவர்கிறது.

கேரளாவில் விதவிதமான ‘ஸ்பா’ தலையணைகள் கிடைக்கும். அங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள். அவர்கள் விடுதிகளில் தங்குகிறார்கள். அவர்களின் வசதிக்கேற்ப தலையணைகளை உருவாக்கி வழங்குகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டதாகும். 

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/11/06104125/1127091/secrets-of-pillow.vpf

Share this post


Link to post
Share on other sites

உங்கள் ஆயுளைக் குறைக்கும் உணவு எதுவென தெரியுமா..?

இன்றைய திகதியில் அனைத்திலும் வேகம் வேகம் தான். உணவு சாப்பிடுவதிலும் வேகம். உணவு தயாரிப்பதிலும் வேகம். இதனால் நாம் சாப்பிடும் உணவு நமக்கே எமனாக வந்துவிடுகிறது. அதிலும் ப்ரென்ச் ப்ரை என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் அல்லது உடனடியாக தயாரித்து வழங்கும் இந்த உணவு தான் எம்முடைய ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்து, ஆயுளையே குறைத்து விடுகிறது.

health_news_image_811.jpg

உருளைக்கிழங்கை வேகவைக்காமல் அப்படியே அதிக சூட்டில் அதிகளவிலான எண்ணெயில் பொரித்து சுவையாக சாப்பிடுகிறார்கள். இதனை தொடர்ச்சியான உணவு பழக்கமாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இது வயிற்றிற்குள் சென்றவுடன் கெட்ட கொழுப்பாக மாறி, செரிமான மண்டலத்தின் பணிகளில் குறுக்கிட்டு, உடல் எடையை அதிகரித்து, உடற் பருமனை உண்டாக்குகிறது. உடற்பருமனை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி இதயத்தை தாக்கி, மரணத்தை பரிசாக அளித்துவிடுகிறது.

ஒர் ஆய்வில் ப்ரென்ச் ப்ரை என்ற உணவை மட்டுமே தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் வரை சாப்பிட்ட ஒரு ஆரோக்கியமானவர், தன்னுடைய ஆயுளில் 8 ஆண்டுகளை இழந்து, மரணத்தைச் சந்தித்திருக்கிறார். ஆகவே சுவையாக இருக்கிறது என்று துரித வகை உணவுகளை அதிகளவில் தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26976

Share this post


Link to post
Share on other sites

சர்க்கரைநோய்... தேவை அக்கறை! உலக சர்க்கரைநோய் தினப் பகிர்வு #WorldDiabetesDay

 
 

’நாம் சாப்பிடும் பாலீஷ் செய்யப்பட்ட சத்தில்லாத அரிசி உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால், வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கும் நாம் வளர்க்கும் செல்ல நாய்களுக்கும் சர்க்கரைநோய் வந்துவிடுகிறது’ என்பது சில வருடங்களாக உலா வரும் செய்தி. நம்மைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணிகளுக்கும் சர்க்கரைநோயைப் பரிசளிக்கும் அளவுக்கு நம் உணவியலும் வாழ்வியலும் தவறான ஓடுதளத்தில் சீறிப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நவம்பர் 14-ம் தேதியை `உலக சர்க்கரை நோய் தின’மாகக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

சர்க்கரைநோய்

 

மணிச்சம்பா என்கிற மணியான அரிசி!

‘அரிசி உணவைச் சாப்பிட்டாலே சர்க்கரைநோய் (மதுமேக நோய்) உண்டாகும்’ என்று அரிசியைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்முடைய பல பாரம்பர்ய அரிசி ரகங்களுக்கு சர்க்கரைநோயைத் தடுக்கக்கூடிய தன்மை இருந்திருக்கிறது. ’நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’ என்று அகத்தியர் குணவாகடம், மணிச்சம்பா அரிசி வகையைப் புகழ்கிறது. ஆனால், இப்போது பெருமளவில் வழக்கத்திலிருக்கும் பட்டை தீட்டப்பட்ட அரிசியை அதிகளவில் சாப்பிடும்போதுதான் ஆபத்தே. முதலில் கைக்குத்தல் அரிசியை அதிகமாகச் சாப்பிட்டோம். பின்னர் அதன் இடத்தை இயந்திரங்களில் அடிவாங்கிய அரிசி வகைகள் இடம்பிடித்தன. இப்போதோ வறுத்த அரிசி வகைகளை (Fried rice) பெருமளவில் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். விளைவு… தொற்றா நோய்க் கூட்டம் நம்மிடம்!... 

மரபியல்ரீதியாக மட்டும்தானா?

‘பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் சர்க்கரைநோய் இருந்தால் நமக்கும் வருமா?’ என்று மரபியல்ரீதியாக ’பெர்முடேஷன் காம்பினேஷன்’ (Permutation Combination) எல்லாம் இப்போதைய ஃபாஸ்ட் ஃபார்வார்டு உலகத்தில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. குடும்பத்தினருக்கு இருக்கிறதோ இல்லையோ, முறையற்ற உணவு முறையையும் தவறான வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் வரலாம். ஐம்பது அறுபதுகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு என எட்டிப்பார்த்த சர்க்கரைநோய், இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல், மிகக் குறைந்த வயதிலேயே இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது. 

அதிக தாகம்

அறிகுறிகள்...

அதிக தாகம் (Polydipsia), அதிகமாகச் சிறுநீர்கழித்தல் (Polyuria), அதிகப்பசி (Polyphagia), விரைவில் சோர்ந்துவிடுதல் ஆகியவை சர்க்கரைநோயின் மிக முக்கிய அறிகுறிகள். இவை அனைத்தும் ஒருவருக்கே இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சர்க்கரையின் அளவு இயல்பைவிட அதிகளவில் இருப்பினும், (உதாரணம், 250mg/dl, உணவுக்குப் பின்) சிலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அதற்காக அவருக்கு சர்க்கரைநோய் இல்லை என்பதல்ல. அறிகுறிகள் இல்லை என்பதால் உணவுக் கட்டுபாடும் இல்லாமல், எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது அநேகம் பேரின் வழக்கமாக இருக்கிறது. 

அதிக தாகம், அதிகமாகச் சிறுநீர் வெளியேறுதல்!

சர்க்கரைநோயாளியின் ரத்தத்தில், சர்க்கரையின் (குளூக்கோஸ்) அளவு அதிகமாக இருக்கும்போது, ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரகங்கள், தன்னிடம் மிதந்துவரும் குளூக்கோஸ் மூலக்கூறுகளை இயன்ற அளவுக்கு உறிஞ்சப் பார்க்கும். ஆனால் அளவுக்கு மீறிய சர்க்கரை, சிறுநீரகத்துக்கே ஆட்டம் காட்டிவிட்டு திசுக்களிலிருந்து நீரை இழுத்துக்கொண்டு, அதிகளவில் சிறுநீரில் வெளியேறும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால், நாவறண்டு போதல், அதிக தாகம் போன்ற அறிகுறிகளும் உண்டாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும்போது, சர்க்கரையை சிறுநீரில் வெளியேற்றாமல் சிறுநீரகங்கள் உறிஞ்சி ரத்தத்தில் கலக்கச் செய்துவிடும். 

இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு

நாம் சாப்பிடும் உணவுகள், செரிமான செயல்பாடுகளின் இறுதியில் குளூக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ், எந்த வேலையையும் செய்யாமல் வெறுமனே சுற்றித்திரிந்தால் எந்தப் பயனும் இல்லை. அது, செல்களுக்கு ஆற்றலாகப் பயன்பட வேண்டும். உடலின் செல்களுக்குப் பயன்படும் வகையில் குளூக்கோஸை ஆற்றலாக மாற்றும் வேலையைத்தான் இன்சுலின் எனும் முக்கியமான ஹார்மோன் செய்கிறது.

இன்சுலின்

கணையத்திலிருந்து சுரக்கும் இந்த இன்சுலின் ஊக்கியின் செயல்பாட்டுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால், குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாமல், பயனற்ற குளுக்கோஸாக ரத்தத்தில் உலவிக்கொண்டிருக்கும். ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸின் அளவைவிட, இன்சுலின் ஊக்கியின் அளவு குறைவாக இருந்தாலும் சரி, இல்லை முற்றிலும் சுரக்காமல் இருந்தாலும் சரி... சர்க்கரைநோய் உறுதி. சில நேரங்களில் இன்சுலின் சுரப்பு அதிகளவில் இருக்கும். ஆனால் செயல்படாமல் இருக்கும். அப்போது ரத்தத்தில் குலூக்கோஸின் அளவும் அதிகமாக இருக்கும். இதனை Hyperinsulinemic hyperglycemia என்று அழைக்கலாம். இப்படிச் சில காரணங்களால் குளூக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாததால், எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கொண்டே (Polyphagia) இருக்கும். சர்க்கரைநோயில் முதல் வகை, இரண்டாம் வகை, கர்ப்ப கால சர்க்கரைநோய் எனப் பொதுவான வகைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இன்றையச் சூழ்நிலையில் முப்பது வயதுக்கு மேல், வருடம் ஒரு முறையாவது உடலில் சர்க்கரையின் அளவைப் பரிசோதனை செய்துகொண்டு கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். சர்க்கரைநோய்க்கான உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளும் என்னென்ன? இனிப்பின்றி பயணிப்போம்...

உணவு

அரிசியே வேண்டாம் என்பதில்லை. பாரம்பர்ய அரிசி ரகங்களைத் தட்டி எழுப்பிப் பயன்படுத்தலாம். மதிய உணவில் சோற்றின் அளவைக்காட்டிலும், காய்களின் அளவு அதிகமிருந்தால் மிகச் சிறப்பு. விரைவாக குளூக்கோஸின் அளவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகள் வேண்டாம். புரதங்கள் நிறைந்த முளைகட்டிய தானியங்கள் மிகவும் பயன்தரக்கூடியவை. டீ, காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வெள்ளைச் சர்க்கரையைச் சிறிதும் சேர்த்துவிடக் கூடாது. தேன் என்று ஏமாற்றும் வெல்லப்பாகும் கூடாது. தற்போது பிரபலமடைந்திருக்கும் சுகர்லெஸ் இனிப்புகள், சுகர்-ஃப்ரீ சர்க்கரைக் கட்டிகளையும் தவிர்த்துவிடுவது சிறந்தது.

சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்

கொய்யா, ஆப்பிள், நெல்லி, ஆரஞ்சு, அத்தி போன்றப் பழ வகைகளை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். அவற்றை முற்றிலுமாக புறந்தள்ள வேண்டும் என்று அவசியமில்லை. சோர்வுற்றிருக்கும்போது சில பழத்துண்டுகளைச் சாப்பிடலாம். மது, புகைப்பழக்கம் இருக்கும் சர்க்கரைநோயாளிகளின் வாழ்நாள் அதிகளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சர்க்கரைநோயை வராமல் தடுப்பதில் சிறுதானியங்களின் பங்கு அளப்பரியது. குருதிச் சுற்றோட்டத்தில் சர்க்கரைச் சத்தை மெதுவாக வெளியிடும் தன்மைகொண்டவை சிறுதானியங்கள் (Low glycemic foods). ஆவாரைக் குடிநீர் சூரணம், சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், சிறுகுறிஞ்சான் பொடி, நாவல் கொட்டை சூரணம், மதுமேக சூரணம்... எனப் பல சித்த மருந்துகள் சர்க்கரைநோயில் பயன்படுகின்றன. 

நடைப்பயிற்சி, யோகப்பயிற்சி!

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்துவருவதால், ரத்தத்தில் இருக்கும் பயன்படுத்தப்படாத குளூக்கோஸ், தசைகளுக்கு உணவாக மாறும். அதே நேரத்தில் தாழ்சர்க்கரை அளவையும் (Low blood sugar level due to strenuous exercise) கவனத்தில் கொண்டு, மருத்துவர் ஆலோசனையோடு தினமும் நடக்கவேண்டிய தூரத்தைக் கணக்கிட்டுக்கொள்ளலாம். பொதுவாக தினமும் அரை மணி நேர நடைப்பயணம் போதுமானது. கலப்பையாசனம், வில்லாசனம், பவனமுக்தாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசன வகைகளை தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரைநோய் எட்டிப் பார்க்காது. இவ்வகை ஆசனங்கள் கணையத்தின் செயல்பாட்டைத் தூண்டி, இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். 

நடைபயிற்சி

மனஅழுத்தம் உண்டாகும்போது சுரக்கும் சில ஹார்மோன்கள், சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. தொடர்ந்து மனஅழுத்தம் உண்டாகும்போது, அதிகரிக்கும் சர்க்கரையின் அளவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு உண்டாகும். பிறகு சர்க்கரைநோய் நிரந்தரமாகும். எனவே, மனதை அமைதியாக வைத்துக்கொள்வோமே! 

 

சர்க்கரைநோய் வந்த பிறகுதான், அதைப் பற்றி அக்கறைகொள்கிறோம். சர்க்கரைநோய் வராமல் தடுக்க மற்ற உறுப்புகளைப்போலவே கணையத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க முயற்சிக்க வேண்டும். எப்படி… தேவையான உடல் உழைப்பு மற்றும் முறையான உணவுப் பழக்கம் போதும், கணையம் ஆரோக்கியமாக செயல்படும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நம் நாட்டை வருங்காலத்தில், சர்க்கரை நோயாளிகளே இல்லாத கனவு நாடாக உருமாற்ற, நம் உணவு மற்றும் வாழ்வியல் அக்கறைகளை முறையாக வடிவமைக்கவேண்டியது அவசியம்.

https://www.vikatan.com/news/health/107620-world-diabetes-day-special-article.html

Share this post


Link to post
Share on other sites

கட­லை­களை உண்­பதால் இரு­தய நோய்கள் ஏற்­படும் அபாயம் குறையுமாம் !

 

 

பாதாம் பருப்பு,  வாதுமை, பிஸ்தா பருப்பு,  முந்­திரிப் பருப்பு மற்றும் வேர்க்­க­டலை  போன்ற கடலை வகை­களை  வாரத்­திற்கு இரு தட­வைகள்   உண்­பது  இரு­தய நோய்கள் ஏற்­படும் அபா­யத்தை  25  சத­வீதம் குறைப்­ப­தாக  அமெ­ரிக்க ஹர்வார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­துவ விஞ்­ஞா­னிகள்  தெரி­விக்­கின்­றனர்.

nuts.jpg

இந்த ஆய்­வா­னது 200,000 க்கும் அதி­க­மா­னோ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அவர் ­களில் பலர் 30  வரு­டங்­க­ளுக்கு மேற் ­பட்ட காலம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

அனைத்து வகை­யான கடலை வகை­களும் உலகின் மிக­வும்­ அ­பா­ய­க­ர­மான நோயா­க­வுள்ள இரு­தய நோயைத் தடுக்க உத­வு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக   மேற்­ படி ஆய்­விற்கு தலைமை தாங்­கிய  மருத்­துவ கலா­நிதி மார்தா கவாஸ்ச் பியறி  தெரி­வித்தார்.

அத்­துடன் இந்தக் கடலை வகை­களில் அதி உயர் போஷணை காணப்­ப­டு­கின்ற போதும்  அவற்றை உண்­பதால்  உடல்  நிறை கூடு­வ­தற்­கான சான்றும் தமது ஆய்வில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

மேற்­படி கடலை வகை­களை  வாரத் திற்கு இரண்டு அல்லது 3  தடவை கள் கை நிறைய எடுத்து உண்பது இருதய 

நோய்கள் மற்றும் இருதய குருதிக் குழாய்கள் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை முறையே 23  சதவீதத்தாலும் 19  சதவீதத்தாலும் குறைப்பதாக  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மேற்படி கடலை வகைகள் இருதய நோய்களை மட்டுமல்லாது புற்று நோய்கள்,  நீரிழிவு, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூளைச் சிதைவு  நோய் போன்ற உயிராபத்தான நோய்களுக்கு எதிராகவும் பாதுகாப்பைத் தருவதாக  அவர்கள் கூறு கின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க  இருதயவியல் கல்லூரியின் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/27063

Share this post


Link to post
Share on other sites

இனி, 130/80 இருந்தாலே உயர் ரத்த அழுத்தம்... பீதி கிளப்பும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்!

 
 

முன்பெல்லாம் 50 வயது கடந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும். ரத்த அழுத்தம் என்கிற வார்த்தையே கிலியை ஏற்படுத்தும். இன்று அதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. 30 வயதுக்காரரெல்லாம் பி.பி. என்று 'பெருமை'யாகச் சொல்லிக்கொள்கிறார்.  

உயர் ரத்த அழுத்தம்

 

உடல் சீராக இயங்க ரத்த ஓட்டம் அவசியம். ரத்த ஓட்டத்தை நிர்வகிக்கும் பம்பிங் ஸ்டேஷனாக இதயம் செயல்படுகிறது. இதயம் சுருங்கி விரியும்போது, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தமானது, வழக்கமான அளவை விட குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையே ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக இதயம் சுருங்கும்போது 120 மி.மி மெர்க்குரி அளவும், விரியும்போது 80 மி.மி. மெர்க்குரி அளவும் இருந்தால் நார்மல். ஆனால் இது ஆளாளுக்கு வேறுபடும் என்பதால் பொதுவில் 140 மி.மி மெர்க்குரி அளவுக்கு மேலும் விரியும்போது 80 மி.மி. மெர்க்குரி அளவுக்கு மேலும் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்யப்பட்டது. 

டென்சன்

இந்த நிலையில், 'அமெரிக்கன் ஹார்ட் ஆசோசியேசன்' நிறுவனம் (American Heart Association) ஓர் ஆய்வை நடத்தியது. 140/90 என்ற வரையறுக்கப்பட்ட அளவுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய இதய பாதிப்புகளும் பக்கவாதமும்இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் அதிகரித்து வருவது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தத்துக்கான வரையறையை 130/80 என்று மாற்றியமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது அந்த அமைப்பு. இந்த அறிவிப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 130/80 என்ற அளவே உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவாக வரையறை செய்யப்பட்டதால் சுமார் 32 சதவிகித அமெரிக்கர்கள் ரத்த அழுத்த நோயாளிகளாக மாறும் நிலை? 

இது மருந்து கம்பெனிகளுக்குச் சாதகமான செயல் என்று ஒரு தரப்பு சொல்கிறது. இன்னொரு தரப்பு இது ஆக்கபூர்வமான அறிவிப்பு என்கிறது. 

இந்த ஆய்வு முடிவை எப்படி எடுத்துக்கொள்வது. இதன் பின்னணி என்ன? 

இதய நோய்  சிகிச்சை  நிபுணர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம். 

"அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசனின் அறிவிப்பு இரண்டு விதமான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.  

ரத்த அழுத்த அளவு

உலக சுகாதார நிறுவனம் 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்துள்ளது. இந்த அளவைத்தான் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 130/80 என்று மாற்றியமைக்க பரிந்துரைத்திருக்கிறது. அமெரிக்காவில் இதய நோய்கள் குறித்து ஆய்வுகள் செய்து ஆலோசனை வழங்கும் ஒரு முன்னணி அமைப்பாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேன் நிறுவனம் விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் வழங்கியுள்ள அறிவுரையானது, பிற நாடுகளையும் ஆய்வு செய்ய தூண்டியிருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டிருப்பது வெறும் அறிவுரைதான். பல்வேறு நாடுகளின் மருத்துவ ஆய்வு அமைப்புகளும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவித்தபிறகே  உலக அளவில் இறுதி முடிவெடுக்கப்படும்.  

தற்போது அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையாகும்பட்சத்தில் 140/90 மி.மீ. என்ற அடிப்படையில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள்  இனி, 130/80 என்றளவிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ரத்த அழுத்தமானி

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது, படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒரு முறை மட்டும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து விட்டு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது. இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் எடுப்பதுவே சிறந்தது என்கிறார் அவர். 

https://www.vikatan.com/news/health/107914-new-us-standard-redefines-high-blood-pressure.html

Share this post


Link to post
Share on other sites

உப்பைக் குறைத்தால் அது அதிகரிக்குமாம்.!

‘உப்பை மட்டும் உங்களுடைய உணவிலிருந்து நீங்கள் அப்புறப்படுத்திவிட்டால், உங்களின் ஆரோக்கியத்திற்கு எந்த குறைபாடுகளும் வராது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் உப்பினால் உண்டாகக்கூடிய கெடுதல் தான் அதிகம். 

health_image_13_11.jpg

தற்போதைய சூழலில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 கிராம் அளவிற்கு உப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு புள்ளி 5 அளவிற்கான உப்பே போதுமானது. இன்னும் தெளிவாக குறிப்பிடவேண்டும் என்றால் உப்பேயில்லாமல் சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. 

உப்பைச் சேர்த்து சாப்பிடுவதால் என்ன பாதிப்பு உண்டாகிவிடும் என்று கேட்பவர்களுக்கு, உப்பின் அளவு அதிகரித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக் பாதிப்பு அவசியம் ஏற்படும்.

இன்றைய திகதிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் நூடுல்ஸ் மற்றும் அனைத்து வகையான உணவுப் பொருள்களும் உப்பின் அளவு அதிகம். அதனால் அதனை முற்றாகத் தவிர்க்கவேண்டும். அத்துடன் இது போன்றவைகளின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான விழிப்புணர்வையும் பெறவேண்டும். என்கிறார் டொக்டர் கிரஹாம் மெக்கிரிகோர். இவர் WASH என்ற உப்பு பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைமை நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/27124

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் தண்ணி குடிங்க ப்ளீஸ்..! போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து! #HealthAlert

 
 

னித உடல் 70 முதல் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால் இந்த நீர்ச்சத்து, உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் டீஹைட்ரேஷன் (dehydration) எனப்படும் உடல் வறட்சி. தற்போதைய நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். 

தண்ணீர்

 

உடல் வறட்சிக்கான (டீஹைட்ரேஷன்) காரணங்கள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் என்ன? அதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து விவரிக்கிறார் பொது நல மருத்துவர் சிவராமகண்ணன். 

எது உடல்வறட்சி?

நாம் உட்கொள்ளும் நீர்ச்சத்தைவிட, அதிகளவு வெளியேறுவதே உடல்வறட்சி. அதுபோன்ற நேரங்களில், உடல் மேலும் இயங்க நீர்ச்சத்து தேவைப்படும். இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்யாத பட்சத்தில், நீர்ச்சத்துக்கான தேவை அதிகரித்து பிரச்னை பெரிதாகும்.

தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான மிகமுக்கியமான அறிகுறிகளாகும்.

அறிகுறிகள்

முதல் நிலை உடல் வறட்சி ஏற்படும்போது, பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. கவனிக்காத பட்சத்தில், அடுத்தடுத்த நிலை பாதிப்புகளை அடையத் தொடங்குவர். இது, அதிகளவு சிறுநீர் வெளியேறுவது மற்றும் மயங்கி கீழே விழுவது, தொடர்ச்சியாக/அதிகளவு டாக்டர் சிவராமகண்ணன்வாந்தி எடுப்பது, தொடர் வயிற்றுப்போக்கு, மிகவும் சோர்வடைவது, தலைவலி, மூச்சுவிட திணறுதல், குழப்பமான மனநிலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உடலை எச்சரிக்கும்.  தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டும்.

எதனால் ஏற்படுகிறது நீர்ச்சத்து குறைவு?

உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நீர்ச்சத்து குறைவதற்கான முக்கியமான காரணங்களாகும். 

உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்துக் குறைவதற்கான காரணியாக இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் பாதிப்பு, போதிய அளவு நீர் அருந்தாமை போன்றவைதான் இதற்கான காரணங்களாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், வயதானவர்கள், வெயிலில் வேலை செய்பவர்களைத்தான் இதுபோன்ற பிரச்னைகள் எளிதில் தாக்கும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவை.

கவனிக்காமல் விட்டால், நீர்ச்சத்துக் குறைபாடு முதிர்ச்சி நிலையை (severe dehydration) அடையும். இது சிறுநீரகச் செயலிழப்பு, உணர்விழந்த முழு மயக்க நிலை (coma), அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எப்படித் தவிர்ப்பது?

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காத நிலையிலும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்துவதைப்போல தண்ணீர் குடிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்குப் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்தவர்கள், முதல் நிலையிலேயே உணவுமுறையில் மாற்றத்தைப் பின்பற்றினால், பிரச்னையை சரிசெய்யலாம். உடலின் நீர்ச்சத்து அளவு குறைவதாக உணர்பவர்கள், சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். எலக்ட்ரால் (Electrol powder) அல்லது ஜூஸ் வகைகளையும் அருந்தலாம்.

நீர்ச்சத்து குறைபாட்டினால் எளிதாக தாக்கப்படுவது

 

உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் என்றாலும் கூட, கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது!

https://www.vikatan.com/news/health/107916-its-highly-dangerous-if-you-dont-drink-needed-water.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this