Jump to content

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்


Recommended Posts

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா

வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண எதுவும் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும். அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா!

வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-வும் சேர்த்து படித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் வந்து சில நாட்கள் தங்குகிறார். வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே  சிம்புவுக்கு காதல். ஒரே வீடு என்பதால் பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ் பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளியே.." எனப் பயணம் தொடங்குகிறது. திடீரென நடக்கும் விபத்திலிருந்து படத்தின் ரொமான்ஸ் எப்பிசோட் முடிந்து ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சிம்பு - மஞ்சிமா காதல் என்ன ஆகிறது? அந்த விபத்துக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பதே படம்.

மீண்டும் ஒரு காதல்படம் தானா என உட்காரும் போது படத்தின் டோனே மாறும் அந்த இடத்தில் கௌதம் கலக்கல். அதே நேரத்தில் காதலையும்  கைவிடவில்லை. "இது ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் இல்லை, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் இல்லைனு சொல்லணும்னு இருந்துச்சு எனக்கு" எனப் பல மைண்ட் வாய்ஸ்களில் மன்மதன் ரிட்டன்ஸ்.  எல்லாமே மொபைலில் தான் என்ற காலத்தில், லைவான ஒரு காதலை ரசிக்கும்படியாக தருகிறது முதல் பாதி.

படத்தில் சிம்புவின் கதாபாத்திரப் பெயரையே ஒரு சர்ப்ரைஸ் எலிமென்ட்டாக பயன்படுத்தியிருக்கிறார் கௌதம்.''எனக்கு பசங்க பொறந்தாங்கனா, இந்த ஆறு பன்ச் பத்தியும் அந்த நாலு பேர் பத்தியும் சொல்லணும்'' என வசனம் மூலமாக ஆரம்பத்திலேயே நம்மை ஆக்‌ஷனுக்கு தயார்படுத்துவது, தள்ளிப் போகாதே பாடலை ப்ளேஸ் செய்த இடம் எனப் பல காட்சிகளில் பிரமாதமான ஃபிலிம் மேக்கராக தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சியில் சில இடங்களில் பழைய ஸ்லிம், ட்ரிம் சிம்பு ஃபுட்டேஜைப் பயன்படுத்தியிருப்பது அப்படியே தெரிகிறது. எல்லாம் பரபரப்பாக துவங்கி அதே பரபரப்புடன் முடிந்த பின்னும் கூட படம் முடியாமல் கடைசி வில்லனையும் பழி வாங்கும் வரை நீட்ட்ட்ட்ட்டுவதும், அதற்காக சிம்பு சொல்லும் காரணமும்...போங்காட்டம் ட்யூட்.

சிம்பு ரசிக்கும்படியான நடிப்பையே வழங்கியிருக்கிறார். தங்களை எதற்கு கொல்லப் பார்க்கிறார்கள் என குழம்பித் தவிப்பதும், திருப்பி அடிக்கணும் என கிளம்புவதுமாக சீரியஸ் சிம்பு. இரண்டிலுமே சக்ஸஸ் சிம்பு. ஆனால் படம் முழுக்க ஸ்லிம் சிம்பும், பப்ளி சிம்புவும் மாறி மாறி வருகிறார்கள். கொஞ்சம் உடம்பைக் குறையுங்க எஸ்டிஆர். மஞ்சிமா அழகு.சில முகபாவனைகள், வசனங்கள், சிரிப்பு மூலமாகவே கவர்கிறார். ஆனால், நடிப்பு? சிம்பு நடிப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் ஒரு ஆடியன்ஸாகவே திரிந்தால் எப்படி மேடம்? வில்லனா, சைக்கோவா எனக் குழப்பமான ஒரு ரோலில் பாபா சேகல். கெளதம் படத்தின் கலக்கல் காஸ்டிங் இதில் மிஸ்ஸிங்

“வண்டி இடிச்சதும், செத்துருவேனோனு பயந்து ஐ லவ் யூ சொல்லிட்டேன்” என்று சிம்பு சொல்ல, “அந்த நேரம் அம்மாவுக்கு போன் பண்ணி பேசணும், அப்பாவுக்கு குட் பாய் சொல்லனும்னு லாம் தோனாதுல?” என்று கவுண்டரிலும் ரசிக்கவைக்கும் சதீஷ், சிம்புவுடன் நடனத்திலும், நடிப்பிலும் இறுதிவரை தி குட் பர்ஃபார்மர். 

டான் மெஹ்தார் ஒளிப்பதிவு சில இடங்களில் மட்டுமே வாவ். நீண்ட நாட்களுக்குப் பிறகு, பின்னணியிலும், பாடலிலும் வித்தியாசமான காம்போவாக எதிர்பார்த்தற்கு மேலேயே ஆச்சரியப்படுத்துகிறார் ஏ.ஆர். தள்ளிப் போகாதே, அவளும் நானும், ராசாளி, சோக்கலி எனப் படம் முழுக்க ஏகப்பட்ட காதல் ராகங்கள்! ஆண்டனியின் எடிட்டிங் படத்தின் ப்ளஸ். கதையைச் சொல்வதும், பாதியிலேயே காட்சியை விளக்குவதும் பின்னர் அதே காட்சியில் கதை சொல்வதும் என ப்ளாஷ்பேக்சீன்களை படத்தின் நேர்க்கோட்டுடன் ஒன்றுவதுபோலவும் அமைந்திருக்கும் எடிட்டிங் கொஞ்சம் புதுசு. எமோஷனல் காட்சிகளிலும் ஆக்‌ஷனிலும் நம்மை பதபதைக்கவைக்கிறது ஆண்டனியின் கத்திரி.

படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். 5 நாள் ட்ரிப் போயிட்டு வர்றேன்னு வீட்டில் சொல்லும் சிம்பு, பைக் எடுத்துக்கொண்டு மகாராஷ்டிரா வரைப்போகிறார். சாகக்கிடக்கும் தருணத்திலும் பீட்டரில் ஃபீல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.அந்த கமர்ஷியல் கிளைமேக்ஸும் நம்பும்படியாக இல்லை. 

 

அப்பா-மகன் சென்ட்டிமெண்ட், போலீஸ் கதையை எல்லாம் கொஞ்சம் தாண்டி வாங்க  கெளதம்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/72183-acham-enbathu-madamaiyada-review.art

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: அச்சம் என்பது மடமையடா

 

 
aymreview_3079005f.jpg
 

படித்துவிட்டு வெட்டியாக நண்பர்களுடன் சுற்றிக் கொண் டிருக்கும் சிம்பு, தென்னிந்தியா முழுக்க பைக்கில் பயணிக்கத் திட்டமிடுகிறார். அப்போது, அவரது தங்கையின் தோழி லீலா ராமன் (மஞ்சிமா மோகன்) அவரது வீட்டுக்கு வந்து சில காலம் தங்குகிறார். இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப்படுகிறார்கள்.

சிம்பு தன் பயணத்துக்குத் தயாராகும் நாளில் அவருடன் மஞ்சிமாவும் சேர்ந்துகொள்கிறார். வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தின் விளைவுகள், அதன் காரணங்கள், அது அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் அடுக்கடுக் கான பாதிப்புகள் ஆகியவைதான் ‘அச்சம் என்பது மடமையடா’.

‘விண்ணைத் தாண்டி வரு வாயா' படத்துக்கு பிறகு மீண்டும் கவுதம் - சிம்புவின் கூட்டணி. ஒரு பைக்கரின் பயணத் தில் அவன் எதிர்பாராது சந்திக் கிற வன்முறைகளால் நிகழும் விபரீதங்கள் என்ற ஒருவரிக் கதைக்கு, திரைக்கதையை அமைத்ததில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் கவுதம் மேனன். நண்பர்கள், காதல் என்று வழக்கமாகப் போய்க்கொண்டிருக் கும் கதையில், விபத்துக்குப் பிறகு ஊகிக்கவே முடியாதபடி திரைக்கதை வேகமெடுக்கிறது.

மஞ்சிமாவின் குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிப்பது, வில்லன் களைத் தேடிச் சென்று பழிவாங்கு வது என்பதெல்லாம் சரிதான். ஆனால் சிம்பு போலீஸ்காரர்களை அடித்து மண்டையை உடைக் கிறார். தாக்க வருபவர்களைச் சுட்டுக் கொல்கிறார். ஆனால், உள்ளதிலேயே ஆபத்தான கிரிமினலை மட்டும் அவர் போலீஸ் என்பதால் சுட மாட்டாராம்.

இக்கட்டான நேரத்தில் நாயகர் களுக்கு மட்டும் எப்படித்தான் சாவி போட்ட‌ பைக் கிடைக்கிறதோ தெரியவில்லை. அதேபோல, மஞ்சிமாவின் பிறப்பு குறித்த பின் னணி, அரசியல்வாதியின் திட்டம், கை ஒடிந்த சிம்பு சண்டை போடு வது, க்ளைமாக்ஸில் சிம்புவின் புதிய அவதாரம் போன்ற விஷயங் கள் எல்லாம் 'அட... இதுவும் வழக்க மான கமர்ஷியல் படம்தானா' என்று சொல்ல வைக்கின்றன.

அழுத்தமான‌ தொடுதல்கூட இல்லாமல் சிம்புவுக்கும் மஞ்சிமா வுக்கும் இடையிலான காதலை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியதில் தன் முத்திரையைப் பதிக்கிறார் கவுதம். முன் பாதி முழுவதும் கவித்துவமான காதல் ரசனை காற்றில் கலந்திருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும், வசனங்களும் நடிப் பும், பாடல் வரிகளும் திரையில் அருமையான காதல் அனுபவத்தை மலரச் செய்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் உள்ள தீவிரம் அழுத்த மாக உள்ளது. இருவரும் தத்தமது காதலைச் சொல்லும் தருணங்கள் மனதைத் தொடுகின்றன.

படம் முழுக்க தாடியுடன் வரு கிறார் சிம்பு. ‘விடிவி’யில் பார்த்த அதே உற்சாகம் இதிலும் உள்ளது. ‘கூட வந்தா நல்லாயிருக்கும்ல’ என்று காதலில் உருகும்போதும், நண்பனைப் பறிகொடுத்த பின் அழும் காட்சியிலும் ரொம்பவும் பக்குவமான நடிப்பை சிம்பு வெளிப்படுத்துகிறார்.

மஞ்சிமா மோகன் திரையில் தோன்றினாலே அவ்வளவு கவிதை யாக இருக்கிறது. “உன்கூட வரலாம்னு பார்த்தேன். பைக்ல‌” என்று தயங்கித் தயங்கி சிம்புவிடம் சொல்லும்போதும், “சரி, இதுக்குமேல நான் ஏன் உன்கூட வரணும்” என்று கொஞ்சம் தெனாவட்டாகக் கேட்கும்போதும் ரசிக்க வைக்கிறார்.

போலீஸ் வில்லனாக வரும் பாபா செகல், சிம்புவின் நண்பனாக வரும் சதீஷ் கிருஷ்ணன் ஆகி யோர் கச்சிதம். டேனியல் பாலாஜி சிறிய வேடத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.

“செத்துருவேன்ற பயத்துல தான் ‘ஐ லவ் யூ’ ன்னு சொன் னேன்”, “டைமிங் வேணுன்னா தப்பா இருக்கலாம். ஆனா மேட்டர் கரெக்ட்தான்”, “லைஃப்ல எது வேணுன்னா நடக்கலாம். அதுக்கு நாம ரெடியா இருக்கோமாங் கிறதுதான் கேள்வி” எனப் பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘தள்ளிப் போகாதே’ பாடலைத் தவிர மற்ற‌ எல்லாப் பாடல்களும் கதையுடன் பயணிப்பதால், அவற்றைத் தனியே பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடலும் அது எடுக்கப்பட்ட விதமும் அருமை. அருமையான ஒளிப்பதிவும், தாமரையின் வரிகளும் சித் ராமின் குரலும் நடன அமைப்பும் சேர்ந்து பாடலை அசாதாரணமான அனுபவமாக்குகின்றன. முதல் பாதியில் சிம்பு, மஞ்சிமாவைத் திரையில் காட்டிய விதத்துக்கும் இரண்டாம் பாதியில் காட்டிய விதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்து கிறது. முதல் பாதி முழுக்க முழுக்க ரசனையோடு அமைதியாக நகர, இரண்டாம் பாதி முழுக்க வெறும் டமால் டுமீல்!

டான் மெக்கார்தர், தேனி ஈஸ்வர் ஆகியோரின் ஒளிப்பதிவும், யதார்த்தம் மீறாத‌ ஆக்‌ஷன் காட்சிகளும், ஆண்டனியின் எடிட்டிங்கும் கவுதமின் திரைக் கதைக்குக் கைகொடுக்கின்றன.

நாயகனின் பெயரை இறுதிக் காட்சி வரை வெளிப்படுத்தாமல் இருப்பதில் காட்டிய கவனத்தை, இறுதிக் காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் முழுத் திருப்தியை அளித்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-அச்சம்-என்பது-மடமையடா/article9340548.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.