Jump to content

800 மாணவர்களுக்கு ஒரு வாத்தியார்!


Recommended Posts

பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார்.

அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார்.

கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறார். காலை 9 மணிக்கு பாடம் நடத்த ஆரம்பிக்கும் இவர் இரவு 9 மணி வரை கல்லூரியிலேயே இருந்து பாடம் நடத்துகிறார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிமுறைப்படி, ஒரு கல்லூ>யில் 800 மாணவர்கள் இருந்தால், குறைந்தது 50 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் விஸ்வேரய்யா பொறியியல் கல்லூரியில் ஏன் இந்த அவல நிலை?

மிகக் குறைவான சம்பளம் கொடுப்பதால்தான் இங்கு பணியாற்ற யாரும் வருவதில்லையாம். சமீபத்தில் இந்தக் கல்லூரிக்கு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க பெங்களூர் பல்கலைக்கழகம் ஒரு விளம்பரம் கொடுத்தது.

அதில், முழு நேர விரிவுரையாளர்கள் 30 பேர் தேவை, மாத சம்பளம் ரூ. 10 ஆயிரம்; ரூ. 5 ஆயிரம் சம்பளத்துக்கு பகுதி நேர விரிவுரையாளர்கள் 10 பேர் தேவை என கூறப்பட்டிருந்தது. இப்படி அடிமாட்டு சம்பளத்திற்கு யாராவது காலை முதல் இரவு வரை வேலை பார்க்க வருவார்களா என்று பொறியியல் படித்த மாணவர்கள் ஏளனமாக கேட்கிறார்கள்.

பொறியியல், கம்ப்யூட்டர் அறிவியல் படித்த மாணவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளில் நல்ல சம்பளம் கொடுக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக கொடுத்தால் யார்தான் வருவார்கள்?

வேணுகோபாலுக்கு உதவுவதற்காக தற்காலிக 2 பேர் நியமிக்கப்பட்டனராம். அதில் ஒருவர்தான் ஒழுங்காக பணிக்கு வருகிறார். இன்னொருவர் கடந்த 6 மாதங்களாக ஆளையே காணோமாம்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆள் கிடைக்காமல், இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களை அணுகி விடைத்தாள்களை திருத்தக் கோருகிறார்களாம்.

இந்தக் கல்லூரியில்தான் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரையும் விடைத்தாள் திருத்த அணுகினார்களா என்று தெரியவில்லை!

http://thatstamil.oneindia.in/news/2007/01/28/college.html

Link to comment
Share on other sites

இப்படியான வினோதமான செய்திகளை இந்தியாவில் தான் பார்க்கமுடியும். உலகில் ஒரு வல்லரசு நாடாக உருவாகிக்கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லி எங்களுக்குப் படங்காட்டிக்கொண்டு சொந்த மக்களின் அன்றாட தேவைகளில் அக்கறையின்றி இருப்பது இந்தியாவிற்கு வெட்கக்கேடு. நல்லகாலம் 800 மாணவர்களிற்கு ஒரு மலசலகூடம் என்று செய்திவரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.