Jump to content

தாயிடம் தப்பி வந்த


Recommended Posts

    வாழைத்தோட்டத்திற்குள் 
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..
எல்லா மரங்களும் 
எதாவது... 
ஒரு கனி கொடுக்க 
எதுக்கும் உதவாத...
முள்மரம் நான்...
தாயும் நல்லவள்... 
தகப்பனும் நல்லவன்... 
தறிகெட்டு போனதென்னவோ 
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பை பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன்...
பிஞ்சிலே பழுத்ததென்று...
பெற்றவரிடம் துப்பிப்போக ...
எல்லாம் தலையெழுத்தென்று 
எட்டி மிதிப்பான்...
பத்துவயதில் திருட்டு... 
பனிரெண்டில் பீடி... 
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்... 
பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு... 
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்...
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... 
நூறு தருவார்கள்... 
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்... 
எச்சிப்பிழைப்பு பிழைக்க ...
கைமீறிப்போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..! 
வேசிக்கு காசுவேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்ட தின்னவும்... 
முந்தானை விரிக்கவும்... 
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடுவந்தாள்...
வயிற்றில் பசித்தாலும்... 
வயிற்றுக்கு கீழ் பசித்தாலும்... 
வக்கனையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன்போட...
முட்டாப்பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ...
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி ...
கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்... 
சொந்தம் விட்டுப்போகாமல்... 
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்... 
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்...
சிறுக்கிமவ 
இருக்கும் சனி...
போதாதென்று 
இன்னொரு சனியா..? 
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொருமுறை வாந்தி.., 
வயிற்றை காரணம்காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தில்... 
சண்டையிட்டு வெளியே அனுப்ப.., 
தெருவில் பார்த்தவரெல்லாம் 
சாபம் விட்டு... 
போவார்கள்_கடைசி மூன்று மாதம்...
அப்பன்வீட்டுக்கு அவள் போக.., 
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்துபோனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப.., 
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப்பார்த்தேன்... 
கருகருவென 
என் நிறத்திலே... 
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... 
கள்ளிப்பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ... 
ஒத்தையாக வருவதானால் ...
ஒருவாரத்தில் வந்துவிடு 
என்றேன்...,
ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்... 
கிடைக்குமென்று
கையெழுத்துக்காக...
பார்க்கப்போனேன் ...
கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்... 
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல் 
எழுந்து ...
தூக்கினேன்_பெண்குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு...
கைகளில் சிக்கிக்கொண்டது.., 
வந்தகோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது... 
தூக்கிய நொடிமுதல்... 
சிரித்துக்கொண்டே இருந்தது,
என்னைப்போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப்போலவே
சப்பைமூக்கு,
என்னைப்போலவே
ஆணாக.., 
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ....
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்... 
பெருவிரலை தின்கிறது,
கண்களை மட்டும்.., 
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்... 
உதைத்துக்கொண்டு அழுகிறது, 
எட்டி விரல்பிடித்து...
தொண்டைவரை வைக்கிறது, 
தூரத்தில் வருவது கண்டு...
தூரமாய் வைத்துவிட்டேன்... 
கையெழுத்து வாங்கிக்கொண்டு... 
கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டேன், 
முன்சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப்பிடிக்க 
நெருங்கியும்... 
விலகியும் நெடுநேரம்... 
விளையாடிக்கொண்டு இருந்தேன்! 
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட 
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்து பொருந்தவில்லை... 
என_இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன், 
அதே கருப்பு, 
அதே சிரிப்பு, 
கண்ணில் மச்சம், 
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில் 
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட 
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை, 
வீடு நோக்கி நடந்தேன்,
பாதிவழியில் கறிவேப்பிலைகாரி...
கைப்பிடித்தாள் 
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை 
நெடுநேரம்... 
பெருவிரல் 
ஈரம் பட்டதால் ...
மென்மையாக இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்... 
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு வரச்சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டேன், 
பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி...
குழந்தையை கொடு என்றேன்,
பல்லில்லா வாயில் பெருவிரல்! 
இந்தமுறை பெருவிரலை தாண்டி... 
ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள், 
அழுக்கிலிருந்து 
அவளை காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டுவிட்டது விட்டுவிட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டேன், 
ஒரு வயதானது உறவுகளெல்லாம்... 
கூடி நின்று 
அத்தை சொல்லு..,
மாமா சொல்லு 
பாட்டி சொல்லு ...
அம்மா சொல்லு என்று...
சொல்லிக்கொண்டு இருந்தார்கள்... 
எனக்கும் ஆசையாக இருந்தது,
அப்பா சொல்லு 
என்று சொல்ல, 
முடியவில்லை ஏதோ என்னை தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே... 
அப்பாதான்! 
அவளுக்காக எல்லாவற்றையும்... 
விட்ட நான் அப்பா என்ற 
அந்த வார்த்தைக்காக...
உயிரைகூட விடலாம் என்று தோன்றியது, 
அவள் வாயில் இருந்து வந்த.., 
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன், 
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்... 
அம்மா சொல்லி திருந்தவில்லை, 
அப்பா சொல்லி திருந்தவில்லை ,
ஆசான் சொல்லி திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை, 
முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்.. 
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்... 
படித்தாள், 
என்னையும் படிப்பித்தாள்... 
திருமணம் செய்துவைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள், 
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள், 
நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த... 
அந்த தாய்க்காக காத்திருக்கிறது ...
‪இந்த_கடைசி_மூச்சு‬ 
ஊரே ஒன்று கூடி..,
உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத்தெரியாதா என்ன,
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு, 
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்.., 
என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,
அது அவள்தான், 
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப்போலவே...
கண்களில் மச்சம்,
சப்பைமூக்கு, 
கருப்பு நிறம், 
நரைத்த தலைமுடி
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு, 
அப்பா அப்பா என்று அழுகிறாள், 
அவள் எச்சில் 
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
‪அடங்குகிறது‬. 
.......................
தாயிடம் தப்பிவந்த
மண்ணும்... 
கல்லும் கூட 
மகளின் ..,
கைப்பட்டால் சிலையாகும்!

 

http://alagappanarumugam.blogspot.ca/2016/07/blog-post_10.html?expref=next-blog
                   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயிடம் தப்பிவந்த மண்ணும்... கல்லும் கூட 
மகளின்.இகைப்பட்டால் சிலையாகும்!

வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த...காட்டுமரம் நான்..
எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க 
எதுக்கும் உதவாத...முள்மரம் நான்...
தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... 
தறிகெட்டு போனதென்னவோ 
நான்...
படிப்பு வரவில்லை...படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்இடுப்பை பார்க்க...
இரண்டு மைல் நடந்துபள்ளிக்கு போவேன்...
பிஞ்சிலே பழுத்ததென்று...பெற்றவரிடம் துப்பிப்போக ...
எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்...
பத்துவயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... 
பதிமூன்றில் சாராயம்...பதினாலில் பலான படம்... 
பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ...பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு... 
எட்டாவது பெயிலுக்கு...ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்...
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள்... 
வாங்கும் பணத்துக்கு...குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப்பிழைப்பு பிழைக்க ...
கைமீறிப்போனதென்று...கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..! 
வேசிக்கு காசுவேணும் ...வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்ட தின்னவும்... முந்தானை விரிக்கவும்... மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...விளக்கேற்ற வீடுவந்தாள்...
வயிற்றில் பசித்தாலும்... வயிற்றுக்கு கீழ் பசித்தாலும்... 
வக்கனையாய் பறிமாறினாள்...தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...மூன்று பவுன்போட...முட்டாப்பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ...இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி ...கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்... 
சொந்தம் விட்டுப்போகாமல்... மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்... பசிக்கிறதென்று கைப்பிடிக்க..
தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்...சிறுக்கிமவ 
இருக்கும் சனி...போதாதென்று இன்னொரு சனியா..? 
மசக்கை என்று சொல்லி...மணிக்கொருமுறை வாந்தி.. 
வயிற்றை காரணம்காட்டி...வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..
சாராயத்தின் வீரியத்தில்... சண்டையிட்டு வெளியே அனுப்ப. 
தெருவில் பார்த்தவரெல்லாம் சாபம் விட்டு... 
போவார்கள்_கடைசி மூன்று மாதம்...அப்பன்வீட்டுக்கு அவள் போக.. 
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...வாசனையாய் வந்துபோனாள்..
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...தகவல் சொல்லியனுப்ப.. 
ரெண்டு நாள் கழித்து...கடமைக்கு எட்டிப்பார்த்தேன்... 
கருகருவென என் நிறத்திலே... பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... கள்ளிப்பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ... ஒத்தையாக வருவதானால் ...
ஒருவாரத்தில் வந்துவிடு என்றேன்...

ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை...அரசாங்க மானியம்
ஐயாயிரம்... கிடைக்குமென்றுகையெழுத்துக்காக...
பார்க்கப்போனேன் ...
கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி..
.பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்... அழுகுரல் கேட்டது..
சகிக்க முடியாமல் எழுந்து ...தூக்கினேன்_
பெண்குழந்தை..!அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு...
கைகளில் சிக்கிக்கொண்டது..இ வந்தகோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது... தூக்கிய நொடிமுதல்... 
சிரித்துக்கொண்டே இருந்தது

என்னைப்போலவே...கண்களில் மச்சம்இ
என்னைப்போலவேசப்பைமூக்கு
என்னைப்போலவேஆணாக.. 
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ....
வேண்டியதில்லை...
பல்லில்லா வாயில்... பெருவிரலை தின்கிறது
கண்களை மட்டும்..இ ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது
ஒரு கணம் விரல் எடுத்தால்... 
உதைத்துக்கொண்டு அழுகிறது 

எட்டி விரல்பிடித்து...தொண்டைவரை வைக்கிறது 
தூரத்தில் வருவது கண்டு...தூரமாய் வைத்துவிட்டேன்... 
கையெழுத்து வாங்கிக்கொண்டு... கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டே
முன்சீட்டில் இருந்த குழந்தை...மூக்கை எட்டிப்பிடிக்க 
நெருங்கியும்... விலகியும் நெடுநேரம்... 
விளையாடிக்கொண்டு இருந்தேன்! 

ஏனோ அன்றிரவு ...தூக்கம் நெருங்கவில்லை
கனவுகூட கருப்பாய் இருந்தது
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்து பொருந்தவில்லை... 
என_இன்னொரு கையெழுத்துக்கு...மீண்டும் சென்றே

அதே கருப்புஇ அதே சிரிப்புஇ கண்ணில் மச்சம்இ 
சப்பை மூக்கு...பல்லில்லா வாயில் பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...எனக்கும் கூட சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ்இ ஆனால் பேருந்தில்...எந்த குழந்தையும் இல்லை
வீடு நோக்கி நடந்தே

பாதிவழியில் கறிவேப்பிலைகாரி...கைப்பிடித்தாள் உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை நெடுநேரம்... பெருவிரல் ஈரம் பட்டதால் ...மென்மையாக இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....விடிந்தும் விடியாததுமாய்... 
காய்ச்சல் என்று சொல்லி...ஊருக்கு வரச்சொன்னே
பல்கூட விளக்காமல் ...பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டே 
பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி...
குழந்தையை கொடு என்றே

பல்லில்லா வாயில் பெருவிரல்! இந்தமுறை பெருவிரலை தாண்டி... 
ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...பொக்கை வாயில் கடிப்பாள்இ 
அழுக்கிலிருந்து அவளை காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பே
பான்பராக் வாசனைக்கு...மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..இசுட்டுவிட்டது விட்டுவிட்டேன்...
சாராய வாசனைக்கு...வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டே
ஒரு வயதானது உறவுகளெல்லாம்... கூடி நின்று 
அத்தை சொல்லு..இமாமா சொல்லு 
பாட்டி சொல்லு ...அம்மா சொல்லு என்று...
சொல்லிக்கொண்டு இருந்தார்கள்... 

எனக்கும் ஆசையாக இருந்ததுஅப்பா சொல்லு என்று சொல்ல 
முடியவில்லை ஏதோ என்னை தடுத்ததுஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே... அப்பாதான்! 
அவளுக்காக எல்லாவற்றையும்... விட்ட நான் அப்பா என்ற 
அந்த வார்த்தைக்காக...உயிரைகூட விடலாம் என்று தோன்றியது 

அவள் வாயில் இருந்து வந்த..இ அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தே
இந்த சாக்கடையை...அன்பாலேயே கழுவினாள்... 
அம்மா சொல்லி திருந்தவில்லை  அப்பா சொல்லி திருந்தவில்லை 
ஆசான் சொல்லி திருந்தவில்லை  .நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை 
நாடு சொல்லியும் திருந்தவில்லை முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத ..
.இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்.. வளர்ந்தாள்..நானும் 
மனிதனாக வளர்ந்தேன்... படித்தாள்இ என்னையும் படிப்பித்தாள்... 
திருமணம் செய்துவைத்தேன் இரண்டு குழந்தைகளுக்கு தாயானா
இரண்டு குழந்தைகளுமே...பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள்இ 
நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் 

என்னை மனிதனாக்க...எனக்கே மகளாய் பிறந்த... 
அந்த தாய்க்காக காத்திருக்கிறது ...இந்த_கடைசி_மூச்சு‬ 
ஊரே ஒன்று கூடி..இஉயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்இ
எனக்குத்தெரியாதா என்னஇயாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...
..
....................வாசலில் ஏதோ சலசலப்பு 
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..
என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் 
அது அவள்தா மெல்ல சாய்ந்து ...என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப்போலவே...கண்களில் மச்சம்இ  சப்பைமூக்கு 
கருப்பு நிறம்இ நரைத்த தலைமுடிதளர்ந்த கண்க
என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு 
அப்பா அப்பா என்று அழுகிறா

அவள் எச்சில் என் பெருவிரலிட உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...அடங்குகிறது‬. 


 

குறிப்பு .........சற்று நீண்ட பதிவு பொறுமையாக வாசியுங்கள் .....மேலே உள்ள  கவிதையை   ...பதிந்தவர் ...அழகப்பன் ஆறுமுகம் 

வாசிக்க அர்த்தமுள்ளதாக மனதுக்கு பிடித்ததாக இருந்தது .. 

Link to comment
Share on other sites

அருமை ...

அலுவலகத்தில் இருந்து வாசிக்கும் போது  வீட்டுக்கு  ஓடிப் போய் மகளை பார்க்க வேண்டும் போலிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில்  ஈரம் , மகள்களை  பெற்ற  அப்பாக்கள்  புண்ணியவான்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா,

இந்தக் கவிதையை முன்பே முகநூலில் வாசித்திருந்தேன்! எழுதியவர் யாரென்று தேடினேன்!

'யாரோ' என்று தான் போட்டிருந்தார்கள்!

அந்த நேரத்திலும்..இன்றும்..எனது மனதை மீண்டும் பாதித்த கவிதை!

பணம்..பணம்...என்று தினமும் அலையும் மனிதர்களைக்..கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வைக்கும் கவிதை!

பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என உணர்த்தும் கவிதை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.