Jump to content

அம்பாறை மாவட்ட புத்தர் சிலை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி


Recommended Posts

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு இன்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்திலும் தீர்வு காணப்படவில்லை.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை
இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாரை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் , இந்து ஆலய நிர்வாகிகளுடன் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது.

இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வராய்ச்சிக்குரிய 19 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாக பௌத்த பிக்குகளினால் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

இரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றை காண்பதற்கு தமிழ் , முஸ்லிம் , பௌத்த துறவிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு வொன்று இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழு வியாழக்கிழமை கூடவிருக்கின்றது

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.எம் மன்சூர் , கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ. உதுமான்லெப்பை ஆகியோரும் கலந்து கொண்டனர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தில் மாணிக்கமடு கிராமம் மட்டும் தான் தமிழ் கிராமம் ஆகும்.

அந்த கிராமத்தை அண்டியதாக மாயக்கல்லி மலை அமைந்துள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37845789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் மீனோடைக்கட்டு  திராய்க்கேணி அட்டப்பள்ளம் மடத்தடி சம்மாந்துந்துறை கல்முனை  அக்கரைப்பற்று தெற்கு என்று பல ஊர்கள் முஸ்லிம்களிடம் பறிபோய்விட்டன.   தற்போது மாணிக்க மலையும் பறிபோகப் பார்க்கிறது.   முன்பு ஒரு தடவை காரைதீவுச்சந்தியில் புத்தர் சிலையை வைத்துத்தான் காரைதீவையும் பாதுகாக்க வேண்டியேற்பட்டது.   நிதானமாக யோசித்து புத்தர் சிலையை அனுமதிப்பதா வேண்டாமா என்ற முடிவுக்குத் தமிழர்கள் வரவேண்டும்.  அல்லாவிடில்  கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதையாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, karu said:

அம்பாறை மாவட்டத்தில் மீனோடைக்கட்டு  திராய்க்கேணி அட்டப்பள்ளம் மடத்தடி சம்மாந்துந்துறை கல்முனை  அக்கரைப்பற்று தெற்கு என்று பல ஊர்கள் முஸ்லிம்களிடம் பறிபோய்விட்டன.   தற்போது மாணிக்க மலையும் பறிபோகப் பார்க்கிறது.   முன்பு ஒரு தடவை காரைதீவுச்சந்தியில் புத்தர் சிலையை வைத்துத்தான் காரைதீவையும் பாதுகாக்க வேண்டியேற்பட்டது.   நிதானமாக யோசித்து புத்தர் சிலையை அனுமதிப்பதா வேண்டாமா என்ற முடிவுக்குத் தமிழர்கள் வரவேண்டும்.  அல்லாவிடில்  கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதையாகிவிடும்.

எனக்கு என்னமோ புத்தர் சிலை இருப்பது நல்லது போல தெரிகின்றது,பக்கத்தில் விஸ்னுவையும்,காளி தெய்யோவையும் வைத்து,  புத்தர்ருக்கு பாலாபிசேகம்  செய்தால் நல்லம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.