Jump to content

கமல்ஹாசனை பிரிந்தார் நடிகை கௌதமி: 13 ஆண்டு நட்பு முறிவுக்கு என்ன காரணம்?


Recommended Posts

கமல்ஹாசனை பிரிந்தார் நடிகை கௌதமி: 13 ஆண்டு நட்பு முறிவுக்கு என்ன காரணம்?

Kamal_and_Gautami_Chakpak%201_13118.jpg

நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறை கூறுவதோ, அனுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும், மனித மனம், மாற்றத்தை தந்தே தீரும். எல்லா மாற்றங்களையும், நாம் எதிர்பார்ப்பதில்லை. எந்தவொரு பெண்ணும், அவர் வாழ்நாளில் எடுக்கக்கூடிய கடினமான முடிவு இதுதான். ஆனால், எனக்கு இது தேவையாக இருந்தது. நான் முதலில் ஒரு தாய், எனது மகளுக்கு சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அதில் நான் சிறப்பாக செயல்பட, நான் முதலில் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தமில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடுமையான முடிவு இது. நான் தொடர்ந்து கமல்ஹாசனின் ரசிகையாக தொடர்வேன். அனைத்துக்கும் மேலாக ஒரு தாயாக நான் இருக்க வேண்டிய தருணம் இது.

அவர் வாழ்க்கையின் பல்வேறு கடினமான தருணங்களில் நான் உடன் இருந்து இருக்கிறேன். அதில் பல அற்புத தருணங்களும் அடங்கும். அவர் படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது பல்வேறு விஷயங்களை கற்று இருக்கிறேன். அவரது படங்களுக்கு, நான் நியாயம் செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். அவரது ரசிகர்களுக்காக இன்னும், பல விஷயங்களை அவர் செய்ய இருக்கிறார். அந்த வெற்றிகளுக்காக பாராட்ட, நானும் காத்திருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/71056-kamal-haasan-gautami-separated.art

Link to comment
Share on other sites

'நான் இப்போது கமலுடன் இல்லை!' - கௌதமியின் கடிதம்

Kamal%20Gowthami_14349.jpg

கிட்டத்தட்ட 13 வருடம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் கமலும், கௌதமியும். கமல் நடித்து சமீபத்தில் வெளிவந்த பாபநாசம் படம் உட்பட பல படங்களில் நாயகியாகவும் நடித்த கௌதமி, கமலஹாசனைப் பிரிந்துவிட்டதாக தனது வலைதளத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

”இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கிறது. ஆம்.  நானும் திரு. ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. கிட்டத்தட்ட 13 வருட இணை வாழ்விற்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக்கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமசரம் செய்து கொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிதானதல்ல. மிக அதிக காலம் - கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் - இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்குப் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்தேன்.  

எனது நோக்கம் அனுதாபம் தேடுவதோ குற்றம் சொல்வதோ அல்ல. என் வாழ்வின் மூலம், மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதையும், இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் அந்த மாற்றம் என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததுபோல இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றின் தாக்கம் நமது பிரிவிற்கான முக்கியத்துவங்களை பாதிக்கக்கூடாது. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த மாதிரியான முடிவெடுப்பது மிக சிரமமானதாகத்தான் இருக்கும் என்றாலும் எனக்கு இந்த முடிவெடுப்பது முக்கியமானதாகவும் உள்ளது. நான் ஒரு தாய் என்பதுதான் எனக்கு முதலாவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. நான், என் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பது என் கடமை. அதற்காக என் மன அமைதி எனக்கு முக்கியம்.    

 சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னிருந்தே, நான் திரு. கமலஹாசனின் விசிறி என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அவரது திறமைகளையும், சாதனைகளையும் எப்போதும்போலவே வியந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அவரது உடையலங்கார நிபுணராகப் பணிபுரிந்ததன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது கனவுகளுக்கு நேர்மையாக, வடிவம் கொடுத்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமைதான். இதுவரை அவரது சாதனைகளோடு, இன்னும் பல சாதனைகளையும் அவர் தனது ரசிர்களுக்காக கொடுக்க இருக்கிறார். அவற்றைப் பார்த்துக் கைதட்டி ரசிக்கக் காத்திருக்கிறேன்.    

என் வாழ்வின் இந்த அதிமுக்கியமான நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காரணம், என் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் என்னால் முடிந்தவரை கண்ணியத்தோடு இருந்திருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணத்தின் ஓர் அங்கமாக நீங்களும் பலவிதங்களில் என்னோடு இருந்திருக்கிறீர்கள். கடந்த 29 வருடங்களாக எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் நீங்கள் பல வழிகளில் வழங்கியுள்ளீர்கள். வாழ்க்கையின் மிகக் கடினமான, வலி மிகுந்த காலங்களில் எல்லாம் என்னை மேலும் வழிநடத்தும் உங்கள் அன்பிற்கு என்றென்றும் நன்றி.

அன்புடன்
கௌதமி

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/71067-gowthami-open-letter-about-her-break-up-with-kamal-hassan.art

Link to comment
Share on other sites

'கமல் மகள்களுக்கும் எனக்கும் சண்டை இல்லை!' - கௌதமி #VikatanExclusive

 

 

கடந்த 13 ஆண்டுகளாக தன் மகள் சுப்புலட்சுமியுடன் கமல் வீட்டில் ஒன்றாக வசித்துவந்த கெளதமி திடீரென கமலைவிட்டு பிரிவதாக இன்று அறிவித்தார். இந்த திடீர் முடிவு குறித்து நமக்காக கெளதமி அளித்த பிரத்யேக பேட்டி.

கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக சொல்லி இருக்கிறீர்களே? 

                                 நான் பப்ளிக்கில் முகம் தெரிந்த ஒரு பெண்மணி. என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மனித வாழ்வில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அது தான் இயல்பு.அது என் வாழ்விலும் நடந்து கொண்டே வருகிறது. நான் 16 வயதிலேயே சுயமாக தனியாக சமூகத்தில் வாழ்வதற்கு என்னை தயார் செய்து கொண்டவள். இப்போது எனக்காகவும், என் மகளுக்காகவும் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் பிரிகிறேன். கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இல்லை ஆனால் மாற்றம் பெறும் முயற்சியில் இருந்தேன். 

Shruti-Hassan-Kamal-Hassan-and-Gautami_1

 உங்கள் மகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க வேண்டிய சூழலில் இருப்பதாக சொல்லி இருக்கிறீர்களே?

நான் கஷ்டங்களை சகித்துக்  கொண்டு வாழ்கிறேன் என்பதற்காக என் மகளும் அப்படியே வாழவேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லையே? அவள் விருப்பப்படி தனித்தன்மையோடு வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்பது அவளது உரிமை. அதை அமைத்துக் கொடுக்க வேண்டியது அம்மாவாக என்னுடைய கடமை. நாங்கள் மட்டுமல்ல எங்கள் குடும்பத்தாரும் சில பாதிப்புகளை அனுபவித்தனர் அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். 

கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராவுக்கும் உங்களுக்கும் இடையே மனவருத்தம் உண்டானதால் பிரிந்தீர்களா?

நான் எப்போதும் அவர்களுக்கு எதிராக நின்றதே இல்லை. ஆதரவாக இருந்து இருக்கிறேன். பின்புலமாக இருந்துள்ளேன். எங்களுக்கு இடையில் வேறு எந்தவித  மனஸ்தாபமும் இருந்ததே இல்லை.

மோடியை சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தது ஏன்?

நான்  பிரிவது என்பது ஏற்கெனவே எடுத்துவிட்ட முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க தேதி கேட்டு இருந்தேன்.  அதற்கும் நான் இப்போது எடுத்துள்ள பிரிவு  முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/71097-i-have-no-issues-with-kamal-daughters-says-gautami.art

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வைச்ச மனுஷன் .............!

வேறு என்னத்த சொல்ல ?
இனி என்ன ..... நாயன் தாராவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

கொடுத்து வைச்ச மனுஷன் .............!

வேறு என்னத்த சொல்ல ?
இனி என்ன ..... நாயன் தாராவா ?

வெற்றிடத்தை நிரப்புவது  இயற்கையான ஒன்று அதிலும் கூத்தாடிகளை டிரேஸ் பண்ணுவது மிக எளிது .. விஸ்வரூப வெற்றியில் இருந்து யாருக்கு தொடர்ச்சியாக கூத்தாட வாய்ப்பு அளிக்கபடுகிறதோ!! அவர்கள்தான் இந்த கூத்தாட்டித்திற்கு காரணம்!!

Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:

என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

 

 

நாளைக்கி எனக்கு GP யிட்ட ஒரு அப்பொயின்ட்மெமென்ட் இருக்கு.... நமக்கும் பொறுப்பு இருக்குப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஃ......நாங்கள் என்னத்துக்கு மண்டையை போட்டு உடைப்பான்......கொஞ்ச நாளையாலை  படத்தோடை நியூஸ் வந்துட்டு போவுது....:)

Link to comment
Share on other sites

அறிக்கை விளையாட்டு அநாகரீகச் செயல்: கமல்ஹாசன் காட்டம் 

kamal%20200d_15396.jpg

எனது பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது  விவேகமற்ற அநாகரிகச் செயல் என்று நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கூறியுள்ளார்.

13 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகை கெளதமி, இருவரும் பிரிவதாக அறிவித்தார். தனது மகளின் நலனுக்காக இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் பெயரில் நேற்றிரவு அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிக்கை நான் வெளியிட வில்லை என்று நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், "இத்தருணத்தில் என் பெயரால்  யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது  விவேகமற்ற அநாகரிகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/71165-it-is-completely-unethical-says-kamal.art

கெளதமியின் திடீர் விலகல்... நீலாங்கரை வீட்டில் குவிந்த கமல் உறவினர்கள்...

kamal640_13255.jpg

 

‘கமலிடம் இருந்து பிரிகிறேன்...’ என்று கெளதமி நேற்று சொன்னது முதல் உலகம் முழுக்க வைரல். கமல் பதில் சொல்வார் அல்லது அறிக்கைவிடுவார் என்று எதிர்பார்ப்பு எகிறியது. இதுமாதிரி சூழ்நிலையில்  'கெளதமி குறித்து கமல் அறிக்கை' என்று கமல் தமிழ் நடையில் ஒரு பொய்யான செய்தி வாட்ஸ் - அப், இன்டர்நெட்டில் பரவியது. இது கமலின் அறிக்கை அல்ல என்று உடனடியாக கமல் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த நிமிடம்வரை நோ ரெஸ்பான்ஸ். என்னதான் நடந்தது? நடக்கிறது, என்பது குறித்து விசாரித்தோம்.’ கடந்த ஒரு வருடமாக கமல் கெளதமி இருவருக்கும் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பித்துவிட்டது. நெருங்கிய நண்பர்களுக்குகூட தெரியாமல் சாமார்த்தியமாக இருவரும் மறைத்து விட்டனர்.

கடந்த ஒரு மாசத்துக்கு முன்பு புகைச்சல் வெளிவர அதிர்ந்து போன கமலின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகரிடம் பேசினோம்.

''கமல், கெளதமி இடையே புரிதல் இல்லை என்கிற விஷயம் கடந்த ஒரு மாசத்துக்கு முன்பு எனக்கு தெரியவந்தது. கமலிடம் பேசினேன். அதன்பின் இருவருக்கும் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். திடீரென நேற்று கெளதமி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

கமல்ஹாசனிடம்  உடனடியாக போனில் தொடர்பு கொண்டேன் 'நீங்க நேர்ல வாங்க பேசுவோம்' என்று நேரில் வரச்சொல்லி விட்டார். தமிழ் சினிமாவின் உயரத்தை உலக தரத்துக்கு உயர்த்த நினைக்கும் உன்னதமான திரைக்கலைஞன் கமல்ஹாசன். அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடக்கிற நிகழ்வுகள் சினிமா வாழ்க்கையை சிறிதளவுகூட பாதிக்காது என்பது நிச்சயம். கமலை நேரில் பார்த்துவிட்டு விரிவாக பேசுகிறேன்' என்று தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

அடுத்து கமலில் நிழல்மனிதர் ஒருவரிடம் கமலின் மனநிலை குறித்து கேட்டோம். ''கடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்தது. சாரிடமும், கெளதமியிடமும் இதுகுறித்து பேசினோம். 'என் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை' என்று கமல்சார் பதில் சொன்னார். கெளதமி நேற்று மீடியாவில் பேசியிருக்கிறார். கமல்சாரும், கெளதமியும் கல்யாணம் செய்து கொண்டு வாழவில்லை. முன்பு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். இனி தனித்தனியாக பிரிந்து வாழப்போகின்றனர் அவ்வ்வளவுதான்.

'கெளதமி கருத்துக்கு பதில் சொல்லுங்கள்' என்று கமல்சாரிடம் கேட்டோம். 'இந்த விஷயத்துக்கு  பதில் சொல்லி பெரிதாக்க விரும்பவில்லை.' என்று சொல்லி விட்டார். இப்போதைக்கு யாருக்கும் பதில் சொல்லும் மனநிலையில் கமல்சார் இல்லை. ஒருவேளை  நாளையோ மறுநாளோ கமல்சார் மனம்மாறி பேசினாலும் பேசலாம். இன்று கமல்சார் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வரவில்லை.  கமல்சாரின் நீலாங்கரை வீட்டில் அவரது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி உள்ளனர் அவர்களோடு கலந்து மனம்விட்டு பேசி ஆலோசித்து வருகிறார், கமல்.

http://www.vikatan.com/news/tamilnadu/71152-gautami-sudden-distortion---relatives-at-kamal-house.art

Link to comment
Share on other sites

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

shruti_hassan_latest_stills_2105120330_0

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அறிக்கை விடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஸ்ருதிஹாசன் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டார்.  அவரைப் பொருத்தவரை அவர் பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும்,  அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம்' என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/cinema/71173-never-commented-in-anyones-personal-says-shruti-hasan.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CwQSFl-XgAATWxZ_zpsomlkvruh.jpg

இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2016 at 10:41 AM, நவீனன் said:

'கமல் மகள்களுக்கும் எனக்கும் சண்டை இல்லை!' - கௌதமி #VikatanExclusive

 

 

கடந்த 13 ஆண்டுகளாக தன் மகள் சுப்புலட்சுமியுடன் கமல் வீட்டில் ஒன்றாக வசித்துவந்த கெளதமி திடீரென கமலைவிட்டு பிரிவதாக இன்று அறிவித்தார். இந்த திடீர் முடிவு குறித்து நமக்காக கெளதமி அளித்த பிரத்யேக பேட்டி.

கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக சொல்லி இருக்கிறீர்களே? 

                                 நான் பப்ளிக்கில் முகம் தெரிந்த ஒரு பெண்மணி. என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மனித வாழ்வில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அது தான் இயல்பு.அது என் வாழ்விலும் நடந்து கொண்டே வருகிறது. நான் 16 வயதிலேயே சுயமாக தனியாக சமூகத்தில் வாழ்வதற்கு என்னை தயார் செய்து கொண்டவள். இப்போது எனக்காகவும், என் மகளுக்காகவும் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் பிரிகிறேன். கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இல்லை ஆனால் மாற்றம் பெறும் முயற்சியில் இருந்தேன். 

 

 

 

கடந்த 13 ஆண்டுகளாக தன் மகள் சுப்புலட்சுமியுடன் கமல் வீட்டில் ஒன்றாக வசித்துவந்த

, என் மகளுக்காகவும் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

 

இவன் கமல் பயலை நம்ப முடியாது .....
காரணம் அதுவா இருக்குமோ ??? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் சொக்கிப் போன கமல்…!! கௌதமி..?

 


 
Ramya.jpg
பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது..!! கமல் எதிலும் வித்தியாசமாக சிந்திப்பவர். வித்தியாசமாக எதிர் பார்ப்பவர்…! அந்த ‘வித்தியாசம் எங்கு கிடைக்கிறதோ..அங்கு போய் கொஞ்ச காலம் ஒட்டிக் கொள்வார்.!  அப்படி ஒரு வித்தியாசக் கோணத்தில் கமலைக் கட்டிப் போட்டவர் ரம்யாகிருஷ்ணன்.

அதாவது ரம்யாவின் ஸ்பெஷலே எதிராளிக்கு என்ன பிடிக்கும்  என்று தெரிந்து கொள்வார் அதை வைத்து வீழ்த்தி விடுவார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்..

முன்பு ஒரு புகழ் பெற்ற  இயக்குனர்   ரம்யாவிடம்  மாட்டிக் கொண்டு படாதபாடு பட்டுதான் மீண்டு வெளியே  வந்தார். பொண்ணு உயிரை உறிஞ்சிடும்பா என்பாராம்..! அது போலவே கமலையும் அசரடித்தவர் இவர் என்கிறார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில் தான்  கௌதமி பிரிக்கப் பட்ட சம்பவம் நடந்தது என்கிறார்கள்..!

ரைட் அண்ட் ராயலாக வீட்டிற்கே வந்து விடும் அளவிற்கு அப்படி ஒரு வித்தியாசமான அப்ரோச் அது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் ..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல்களை வெளிவிட்டு என்னையும் வளைச்சு போட 
ரம்யா சில முயறசிகளை செய்துவந்தார் 

Image result for katrina kaif

கத்ரீனாவின் ஆசி எனக்கு எப்போதும் இருந்ததால்.
ரம்யாவிடம் மாட்டாமல் தப்பி கொண்டேன்.

இப்போ கமல் மாட்டி விடடார் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,இது சுத்த அயோக்கியதனமான கருத்து...கமல் பொறுக்கி தான்,ஆனால் சொந்த மகளையே******* ************ அளவிற்கு கேவலமானவராக இருக்க மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

மருதர்,இது சுத்த அயோக்கியதனமான கருத்து...கமல் பொறுக்கி தான்,ஆனால் சொந்த மகளையே ******* ************அளவிற்கு கேவலமானவராக இருக்க மாட்டார்

கௌதமியின் மகளை மருதர் குறிப்பிடுகிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

கௌதமியின் மகளை மருதர் குறிப்பிடுகிறார் 

கமலகாசன் அந்த அளவுக்கு காய்ஞ்சவர் இல்லை எண்டு நான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

மருதர்,இது சுத்த அயோக்கியதனமான கருத்து...கமல் பொறுக்கி தான்,ஆனால் சொந்த மகளையே******* ************ அளவிற்கு கேவலமானவராக இருக்க மாட்டார்

ஆனந்த கூத்து ஆடினாலும் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருங்கோ 


என்னை நிர்வாகத்திடம் மாட்டிவிட திட்டமோ ? 

நான் ஒன்றுமே சொல்லவில்லை 
கௌதமி சொன்னைதை திருப்பி சொல்கிறேன் அவ்வளவே!

"தன் மக்களுக்காக கௌதமி கமலை பிரிந்தார்" 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.