Jump to content

புதிய உலகம்


Recommended Posts

எனோ தெரியாது மட்டக்களப்பு என்னை நிறையவே இந்த முறை பாதித்துவிட்டது. 

அழகுகள் +அவலங்கள்.

இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும்.

இந்தமுறை போனபோது 800 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன் எதனை பதிவது எதனை விடுவது - புரியாத அழகு. 

பலருடன் கதைத்திருப்பேன் - புரியாத அவலங்கள் 

மட்டக்களப்பு வாவியில் சூரியன் உதயம்.

 

IMG_1779.jpg

IMG_1789.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் விடாமல் இணையுங்கள் ....! 

இணைக்கும் போது நாளுக்கு  இரண்டு மூன்று படங்களாக இணைத்தால் உள்வாங்கி ரசிக்க நன்றாய் இருக்கும்....! ( ஜஸ்ட் லைக் தட்,இது எனது கருத்து மட்டுமே.).  tw_blush:

Link to comment
Share on other sites

ஆதரவுக்கு நன்றி.

 

கல்லடிப் பாலத்தின் நுழைவு வாசலில் மீன் வடிவ தேவாலயம் ஒன்று உள்ளது. இது சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டதாக கேள்விப்பட்டேன் - உறவுகளில் யாராவது உறுதி செய்யவும். ஏனெனில் இது நான் சிறு வயதில் பார்த்ததை போன்று இப்போதில்லை.

ஆனால் முக்கியமான விடயம் கீழேயுள்ள இந்த சிலை. இதனை அர்த்தத்துடன் சிற்பி அமைத்திருந்தார். இவர் ஜேசுவா, அல்லது வேறு ஒருவரா என்பதும் எனக்கு தெரியாது. இதற்கான விளக்கத்தை அக்கினி தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஆனாலும் ஜேசுவின் உருவத்தில் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட ஒரு அன்பான மனிதன் எனக்கு தெரிந்தான். இவனது உடலில் ஆணிகள் இல்லை பதிலாக குண்டுகளே இருந்தன.  

(கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டதால் சில படங்கள் தெளிவில்லை.)

IMG_1930.jpg

IMG_1933.jpg

IMG_1934.jpg

IMG_1937.jpg

IMG_1942.jpg

 

 

Link to comment
Share on other sites

மீன் பாடும் தேன் நாட்டில் நண்டைப் பிடித்த காகமும் அழகுதான்.

 

IMG_1725.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்...தொடர்ந்து இணையுங்கள்...இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஔவையார்

நானும் எத்தனையோ ஔவையார் சிலைகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் ஔவையார் எப்படி இருப்பார் என்று இதுவரை புரிந்ததேயில்லை. கையில் தடியுடன் ஒரு கிழவி சிலையாக நின்றால் அது ஔவையார் என்றுதான் எண்ணியிருந்தேன். 

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வைக்கப்பட்டிருந்த ஔவையார் சிலையை பார்த்த பின்னர்தான் புரிந்தது. தமிழையும் சைவத்தையும் உயிராக நினைத்து வாழ்ந்த கர்வம் பிடிச்ச அகங்காரக் கிழவி இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென்று - அவ்வளவு அழகு.

சிற்பிக்கு ஒரு சலாம். 

image.jpg

IMG_1957.jpg


 

Link to comment
Share on other sites

Quote

இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும்.

ஆவலுடன் இத்திரியை பார்க்கிறேன். படங்களுக்கு நன்றிகள், ஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வார்த்தைகளுக்குப் பின்தான் கிழவியின் கர்வத்தையே கவனிக்க முடிஞ்சுது ....!

கொல்லையில் பூத்திருக்கும் குப்பைமேனியில் இருந்து கோலிவுட்டில் குலுங்கி நிக்கும் குஸ்புமேனி வரை கேமராவின் பார்வைகள் விரியட்டும்....! tw_blush:

குஸ்பு என்பது ஒரு ரிச்சான மலர் என குஸ்புவே செப்பியிருப்பதால் கம்பெனி குஸ்பு எனும் மலர் மேனியையே குறிப்பிடுகின்றது....! :unsure:

Link to comment
Share on other sites

37 minutes ago, suvy said:

 

உங்களின் வார்த்தைகளுக்குப் பின்தான் கிழவியின் கர்வத்தையே கவனிக்க முடிஞ்சுது ....!

 

அகங்காரமும் கர்வமும் எமது தமிழ் புலவர்களுக்கே சொந்தமானது. காளமேகம் முதல் பாரதியார்வரை மட்டுமில்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் கண்ணதாசன் வரையும் இருந்தது. வைரமுத்து கொஞ்சம் ஓவர், நா.முத்துக்குமார் விதிவிலக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2016 at 11:42 PM, ஜீவன் சிவா said:

ஆதரவுக்கு நன்றி.

 

கல்லடிப் பாலத்தின் நுழைவு வாசலில் மீன் வடிவ தேவாலயம் ஒன்று உள்ளது. இது சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டதாக கேள்விப்பட்டேன் - உறவுகளில் யாராவது உறுதி செய்யவும். ஏனெனில் இது நான் சிறு வயதில் பார்த்ததை போன்று இப்போதில்லை.

ஆனால் முக்கியமான விடயம் கீழேயுள்ள இந்த சிலை. இதனை அர்த்தத்துடன் சிற்பி அமைத்திருந்தார். இவர் ஜேசுவா, அல்லது வேறு ஒருவரா என்பதும் எனக்கு தெரியாது. இதற்கான விளக்கத்தை அக்கினி தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஆனாலும் ஜேசுவின் உருவத்தில் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட ஒரு அன்பான மனிதன் எனக்கு தெரிந்தான். இவனது உடலில் ஆணிகள் இல்லை பதிலாக குண்டுகளே இருந்தன.  

(கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டதால் சில படங்கள் தெளிவில்லை.)

IMG_1930.jpg

IMG_1933.jpg

IMG_1934.jpg

IMG_1937.jpg

IMG_1942.jpg

 

 

தங்களுடையா யாழ்  களத்தின்  ஆக்கங்களுக்கு என்பணிவான நன்றி .... படங்கள் கட்டுரைகள்  மிகவும்
 பா ராட்டுக்கு உரியவை  ஐப்பசி 30 தங்கள் பதிந்த படம் ... அம்புகள் எய்யப்பட்ட் ஒரு சிலை ...புனித செபஸ்தியார் என் அழைக்கப்படும் ஒரு புனிதர்  வேதத்துக்காக  தியோக்கிளேசியன் ..எனும் அரசினால் அம்ம்புகளால் துளைக்கப்படடவர் ...என் கிராமத்திலும் இவர் புனிதராக  வேதத்துக்காக உயிரைக் கொடுத்தவர் ... (கடவுள் அல்ல ) வைத்து வழிபடுகிறார்கள். தொடர்ந்து   தங்கள் ஆக்கங்கள்  வரவேண்டும் .

..நட் ப்புடன் சகோதரி நிலாமதி 

 

Saint Sebastian was an early Christian saint and martyr. According to Christian belief, he was killed during the Roman emperor Diocletian's persecution of Christians.Wikipedia
 
Died: January 20, 287 AD, Rome, Italy
Nicknames: Sebastian of Milan, St Sebastian, the martyr
Link to comment
Share on other sites

7 minutes ago, நிலாமதி said:

புனித செபஸ்தியார் என் அழைக்கப்படும் ஒரு புனிதர்

தகவலுக்கு நன்றி சகோதரி

Link to comment
Share on other sites

  • 1 month later...

மட்டுவினிலும் இலையுதிர் காலமோ!

இத்தனை அழகழகான நிறங்களை இலங்கையின் இயற்கையில் கண்டபோது நோர்வேயின் இலையுதிர் காலம் மனதை நெருடுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

முகத்துவாரம் - மட்டக்களப்பு.

Image may contain: outdoor, nature and water

 

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: sky, tree, outdoor, nature and water

 

Image may contain: sky, tree, ocean, outdoor, nature and water

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நிற்கிறியள் போல  நன்றாக இருக்கிறது tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.