Jump to content

க்ரைம் தொடர்கதை.... ஒன் + ஒன் = ஜீரோ


Recommended Posts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 22

 

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது.

 

இனி...

செல்போனின் மறுமுனையில் இருந்த தியோடர் ஒரு மெல்லிய சிரிப்பை வெளியிட்டுக்கு கொண்டே கேட்டார்.

"என்ன மிஸ்டர் விவேக்... பேச்சையே காணோம்?"

"எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை ஸார். நொடிக்கு நொடி இந்த வழக்குல காட்சிகள் மாறிட்டேயிருக்கு.... ஜெயவேல் குற்றவாளி இல்லாத பட்சத்துல அவர் ஏன் ஓடணும்....?"

"ஜெயவேல் குற்றவாளிதான் விவேக்"

"என்ன சார் சொல்றீங்க.... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்கொடியை வெட்டி கொலை செஞ்சவன் ஜெயவேலாய் இருக்க முடியாதுன்னு நீங்கதான் ஸார் சொன்னீங்க?"

"இப்பவும் சொல்றேன் சுடர்கொடியை கொலை பண்ணினவன் அவன் இல்லை."

"பின்னே எப்படி அவன் குற்றவாளி?

"பழங்கால கோயில் சிற்பங்களை திருடற கோஷ்டியை சேர்ந்தவன் இந்த ஜெயவேல். சுடர்கொடி அன்னிக்கு ஸ்டேஷனில் வைத்து கொலை செய்யப்பட்ட போது ஜெயவேல் ஒரு கனமான சூட்கேஸைத் தூக்கிகிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிற காட்சி ஸ்டேஷனுக்கு வெளியே இருக்கிற ஒரு ஹோட்டலின் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த சூட்கேஸில் இருந்தது பழங்கால கோயில் சிலைகள். ஜெயவேலோட வீட்டை போலீஸார் சோதனை போட்டபோது அந்த சூட்கேஸ் அவங்க பார்வையில் படப் போய் சந்தேகப்பட்டு சூட்கேஸைத் திறந்து பார்த்ததில் உண்மை வெளியே வந்திருக்கு. எல்லாமே பஞ்ச உலோகச் சிற்பங்கள். சில மாதங்கள் முன்னாடி கும்பகோணத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஐஸ்வர்யப் பெருமாள் கோயிலில் இருந்து திருடு போன சிலைகள். அவைகளின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்களில் இருக்கும்ன்னு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரியப்படுத்தி இருக்காங்க..."

 

"விவேக் நிம்மதி பெருமூச்சொன்றினை வெளியேற்றிவிட்டு சொன்னான். "எப்படியோ ஜெயவேல் கொலைப்பழியிலிருந்து தப்பிச்சிட்டான்...."

"அதுதான் இல்லை..."

"வாட் டூ யூ மீன் ஸார்... ஜெயவேல் சாமி சிலைகளைத் திருடுகிற பேர்வழின்னு இப்ப கன்ஃபர்ம் ஆயிடுச்சு...?"

"போலிஸுக்கு அதுதான் இப்ப பிளஸ் பாயிண்ட் "

"பிளஸ் பாயிண்டா?"

"போலீஸ் இப்ப ஒரு புதுக்கதையைத் தயார் பண்ணிட்டாங்க. கோயில்களில் இருந்து சாமி சிலைகளைத் திருடி வெளிநாட்டுக்குக் கடத்தற தொழிலில் ஜெயவேல், சுடர்கொடி, திலீபன் மூணு பேருமே பார்ட்னர்ஸ். சிலைகளை விற்று வந்த பணத்தில் பங்கு போட்டுக் கொள்கிற விஷயத்தில் மூணு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பகையாய் மாறி ஜெயவேல், சுடர்கொடியையும் திலீபனையும் போட்டுத் தள்ளிட்டான். கொலைகளுக்கான மோட்டீவும் இப்போ கிடைச்சுட்டதால அந்தப் பக்க போலீஸ் தரப்பு உற்சாகத்துல இருக்காங்க. எல்லாவற்றுக்கும் மேலாய் ஜெயவேலை 'பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளும்' உத்தரவும் கைவசம் இருக்கறதால இந்த கேஸுக்கு சீக்கிரமே மூடுவிழா நடத்தப்பட்டுவிடும் விவேக்....!"

"அப்படீன்னா... உண்மையான குற்றவாளி?"

 

"அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா அந்த ஜென்மத்துல அவனுக்குத் தண்டனை கிடைக்கும்...!"

"ஸார்... யாரைக் காப்பாத்தறதுக்காக இதெல்லாம்?"

"யார்க்குத் தெரியும்....?"

"டி.ஜி.பி. க்குத் தெரியாதா?"

"சர்வ நிச்சயமாய் அவருக்குத் தெரியாது விவேக். அந்த பவர்ஃபுல் ஆசாமி நிச்சயமாய் தமிழ் நாட்டில் இல்லை. மும்பையில்தான் இருக்கணும். அதுவும் இந்திய அளவில் அரசியல் ரீதியாய் ஒரு சக்தி வாய்ந்த மனிதராய் இருக்க வாய்ப்பு அதிகம்...!"

"ஸார் சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம்"

"அது முன்னொரு காலத்துல...," தியோடர் சிரித்து விட்டு பேச்சை தொடர்ந்தார்.

"விவேக், நீங்க இப்போ வளையோசை பத்திரிக்கை ஆசிரியர் மீனலோசினியைப் பார்க்கத்தானே போயிட்டிருக்கிங்க?"

"ஆமா.... ஸார்.... "

"அங்கே போய் மீனலோசினியை விசாரிச்சா எது மாதிரியான உண்மைகள் கிடைக்கும்ன்னு நினைக்கறீங்க?"

"ஜெபமாலை சொன்ன அந்த மூணு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்கிற விபரம் மீனலோசினிக்கு தெரிஞ்சிருக்கலாம் ஸார். அட்லீஸ்ட் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சா கூட போதும் குற்றவாளிக்கும் நமக்கும் இருக்கிற தூரத்தில் பாதி குறைஞ்சிடும்!"

"எனக்கு நம்பிக்கையில்லை மிஸ்டர் விவேக். பட் எனிவே விஷ் யூ ஆல் த பெஸ்ட்.... ஜெயவேலை பார்த்த இடத்திலேயே ஷூட் பண்றதுக்கு நாலு போலீஸ் தனிப்படை போர்க்கால அடிப்படையில் இயங்கிட்டு இருக்கு... எந்த நிமிஷமும் நான் உங்களுக்கு போன் பண்ணி ஒரு மோசமான விஷயத்தை சொல்ல நேரலாம்."

"அதுக்கு அவசியம் இருக்காது ஸார். நீங்க மோசமான விஷயத்தைச் சொல்றதுக்கு முந்தி நான் உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லிடுவேன்....!"

"அயாம் வெயிட்டிங் ஃபார் தட் மொமன்ட்" தியோடர் செல்போனை அணைத்துவிட, விவேக் தன்னுடைய செல்போனை மௌனமாக்கிவிட்டு காரை நகர்த்தினான்.

காரின் வேகம் படிப்படியாய் அதிகரித்தது. சாலையின் இரண்டு பக்க மரங்களும் விருட் விருட்டென்று பின்னோக்கிப் போயிற்று.

விஷ்ணு மிரண்டான்.

"என்ன பாஸ்... ஏதோ 'கிராண்ட் ப்ரிக்ஸ்' கார் ரேஸ் டிராக்கில் ஓட்டற மாதிரி நம்ம ஸ்விப்ட்டை பறக்க விடறீங்க?"

"விஷ்ணு...!"

"எனக்குத் தெரியும் பாஸ்.... இனிமே நமக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்னு சொல்லப் போறீங்க..."

"இல்லை"

"பின்னே?"

"ஒவ்வொரு வினாடியும் முக்கியம்"

............................................

வலையோசை பத்திரிக்கை அலுவலகம்.

 

இரண்டு டன் ஸ்பிலிட் ஏஸி அந்த அறையை சிம்லாவாய் மாற்றியிருக்க, மீனலோசினிக்கு எதிரே விவேக்கும் விஷ்ணுவும் நேர்கோடுகளாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.

மீனலோசனி மூன்றாவது தடவையாய் அந்தக் கேள்வியைக் கேட்டாள். "ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்டே திணறி திணறிச் சொன்ன அந்த மூணு வார்த்தைகள் என்ன.... கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் சொல்லுங்க.

" விஷ்ணு தன் கையில் இருந்த துண்டுச் சீட்டை நீட்டினான்.

"நீங்க ரெண்டாவது தடவை கேட்கும் போதே மறுபடியும் ஒரு தடவை எப்படியும் கேட்பீங்கன்னு நினைச்சு ஒரு துண்டு பேப்பர்ல அந்த மூணு வார்த்தைகளையும் எழுதிட்டேன் மேடம்... இந்தாங்க....!"

மீனலோசனி லேசான முறைப்போடு விஷ்ணுவை முறைத்துக் கொண்டே அந்தத் துண்டுச் சீட்டை வாங்கினான். வெள்ளி பிரேமிட்ட ஸ்பெக்சை லேசாய் சரிப்படுத்தியபடி அந்த மூன்று வார்த்தைகளையும் வாய்விட்டுப் படித்தாள்.

"குர் நோக்கம், ஜெ.சி.ஹச், ஹாசீர்வதம்"


"இப்ப நீங்க சொன்ன மூன்று வார்த்தைகளில் முதல் வார்த்தையான 'குர் நோக்க'த்துக்கு இந்த அறையிலேயே பதில் இருக்கு... மேடம்."

மீனலோசனி அதிர்ந்து போனவளாய் விவேக்கை மெல்ல ஏறிட்டாள். "வாட் டூ யூ மீன்.... இந்த அறையிலேயே பதில் இருக்கா?"

"எஸ்"

"எங்கே?"

"கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருங்க"

மீனலோசனி கலவர விழிகளோடு திரும்பிப் பார்த்தாள்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-22-284762.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 23

 

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும்.

இனி...

விவேக் சொன்னதைக் கேட்டு தனக்கு பின்பக்கம் இருந்த சுவரைத் திரும்பிப் பார்த்தாள் மீனலோசனி.

சுவரில் இருந்த கிராஃப்ட் போர்டில் அந்த போஸ்டர் குண்டூசிகளின் உதவியால் பொருத்தப்பட்டு பார்வைக்குக் கிடைத்தது. அவள் உதட்டில் ஒரு சின்ன புன்னகை அரும்பியது.

"அது ஒரு விளம்பர போஸ்டர். சுடர்கொடி ஒரு கட்டுரைத் தொடரை எழுத ஆசைப்பட்டா. அந்தக் கட்டுரைக்கான விளம்பர மாதிரி போஸ்டர் இது. போஸ்டர்களை பிரிண்ட் பண்ணலை. அதுக்குள்ளே சுடர்கொடிக்கு இப்படியொரு கோர மரணம்."

 

"சுடர்கொடி எழுத இருந்தது எது மாதிரியான கட்டுரை?"

"அது எனக்குத் தெரியாது."

"ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருக்கிற நீங்க சுடர்கொடி எதுமாதிரியான கட்டுரையை எழுதப் போறான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?"

"அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்ன்னு சொல்லியிருந்தா... இஷ்யூ முடிக்கற வேலை இருந்ததால என்னால சுடர்கொடியை மீட் பண்ண முடியலை....!"

"இட்ஸ் ஓகே மேடம்... அந்த விளம்பரத்தில் இருக்கிற வாசகங்கள் எல்லாமே சுடர்கொடியால் எழுதப்பட்டவையா....?"

"ஆமா...!"

"அந்த விளம்பர வாசகங்களை ஒரு தடவை வாய்விட்டு படிங்க மேடம்....!"

மீனலோசனி தன்னுடைய ரிவால்விங் நாற்காலியில் ஒரு அரைவட்டம் சுழன்று அந்த போஸ்டரை மேற்பார்வைப் பார்த்தாள். பிறகு மெதுவாய் வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.

இன்றைய அரும்புகள் நாளை நிச்சயம் பூக்களாய் மாறும்.

இது இயற்கையின் நியதி.

ஆனால்- நம் சமுதாயச் செடியில் உள்ள சில அரும்புகள் அவிழ்ந்து பூக்களாய் மாற அடம் பிடிக்கின்றன.

காரணம்... அவை இரும்பு அரும்புகள். அந்த மென்மையான அரும்புகள் இரும்புகளாய் மாற- யார் காரணம்?

எது காரணம்?

தெரிந்து கொள்ள அடுத்த இதழில் இருந்து.... சுடர்கொடி எழுதப்போகும் 'கோணல் கோடுகள்' கட்டுரைத் தொடரைப் படியுங்கள். இது ஒரு அதிரடி தொடர். சுடர்கொடி எழுதப்போகும் தொடரின் ஒவ்வொரு வார்த்தையும் ஓர் கூர் ஈட்டிக்கு சமம்.

இந்த கூர் ஈட்டிக்கு குறுமதியாளர்களின் நோக்கம் இரையாகி பலியாகும் என்பது சர்வ நிச்சயம்.

மீனலோசனி அந்த விளம்பர வாசகங்களைப் படித்துவிட்டு விவேக்கை ஏறிட்டுப்பார்த்தாள்.

"இந்த போஸ்டரில் எனக்கு எதுவும் அப்நார்மலாய் இருக்கிற மாதிரி தோணலையே? சுடர்கொடி இதுவரைக்கும் வளையோசைப் பத்திரிகையில் நான்கைந்து கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கா. அந்தத் தொடர்களுக்கான விளம்பரங்கள் எல்லாமே இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டதாய்த்தான் இருக்கும்."

 

"அந்தத் தொடர்கள் எழுதும்போது சுடர்கொடிக்கு ஏதாவது மிரட்டல் கடிதங்கள் வந்ததா?"


"இல்லை...?"

"ஆனா.... இந்த 'கோணல் கோடுகள்' தொடரை சுடர்கொடி எழுதவே ஆரம்பிக்கவில்லை. விளம்பர போஸ்டர்க்கான மாதிரி மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் அவள் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இது உங்களுக்கு நெருடலாக இல்லையா...?"

"ஸாரி ஸார்... நீங்க நினைக்கிற மாதிரி சுடர்கொடி கொலை செய்யப்பட்டதற்கும், அவள் எழுத இருந்த இந்த 'கோணல் கோடுகள்' கட்டுரைத் தொடர்க்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காதுன்னுதான் என்னோட மனசுக்குப் படுது!"

"நோ மேடம்... யூ ஆர் ராங்.... சம்பந்தம் இருக்கு. ஜெபமாலை சொன்ன வார்த்தைகளில் முதல் வாக்கியம் என்ன?" "குர் நோக்கம்" "விளம்பர போஸ்டர் மாதிரியில் இருக்கும் கடைசி அந்த நாலு வரிகளை மறுபடியும் படியுங்கள் மேடம்"

 

மீனலோசனி சற்றே எரிச்சலோடு படித்தாள். "சுடர்கொடி எழுதப்போகும் தொடரின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கூர் ஈட்டிக்கு சமம். இந்த கூர் ஈட்டிக்கு குறுமதியாளர்களின் நோக்கம் இரையாகி பலியாகும்....!"

விவேக் குரலைத் தாழ்த்தினான்.

"ஏதாவது பிடிபடுதா மேடம்?"

"லேசா"

"என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்"

"கூர் ஈட்டி, குறுமதியாளர்களின் நோக்கம்.

இந்த இரண்டு வார்த்தைகளோட சுருக்கம்தான் அந்த குர் நோக்கம்"

"அப்படீன்னா குர் நோக்கம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

"ஸாரி ஸார் தெரியலை....!"

"இட்ஸ் ஓ.கே. மேடம்.... இந்த பத்திரிக்கை ஆபீசில் சுடர்கொடிக்குன்னு ஏதாவது ஒரு அறை கொடுத்து இருந்தீங்களா?"

"ஆமா.... முதல் மாடியில் ரெண்டாவது ரூம். ஏதாவது அவசரமாய் கட்டுரை எழுத வேண்டி வந்தால் சுடர்கொடி அந்த அறையைத்தான் 'யூஸ்' பண்ணுவா.... ஆனா பெரும்பாலான நேரம் வெளியில்தான் இருப்பா."

"இட்ஸ் ஓ.கே. மேடம்.... இந்த பத்திரிக்கை ஆபீசில் சுடர்கொடிக்குன்னு ஏதாவது ஒரு அறை கொடுத்து இருந்தீங்களா?" "ஆமா.... முதல் மாடியில் ரெண்டாவது ரூம். ஏதாவது அவசரமாய் கட்டுரை எழுத வேண்டி வந்தால் சுடர்கொடி அந்த அறையைத்தான் 'யூஸ்' பண்ணுவா.... ஆனா பெரும்பாலான நேரம் வெளியில்தான் இருப்பா."

"நான் அந்த ரூமைப் பார்க்கலாமா மேடம்?"

"ப்ளீஸ்....கம்.....!"

மீனலோசனி எழுந்தாள்.

அவள் முன்னால் போய்க் கொண்டிருக்க விஷ்ணு விவேக்கின் காதருகே கிசுகிசுத்தான்.

"பாஸ்" "சொல்லு"

"இந்த மீனலோசனி கிட்டே ஏதோ தப்பு இருக்கு"

"என்ன தப்பு?"

"எதையோ மறைக்கறாங்க.... 'குர் நோக்கம்'ன்னா என்னான்னு இந்த அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா தெரியாத மாதிரி நடிக்கறாங்க....!"

"இல்ல விஷ்ணு உன்னோட கெஸ் ஒர்க் தப்பு. அந்தம்மாவுக்கு எதுவும் தெரியாது. சுடர்கொடி எழுதவிருந்த 'கோணல் கோடுகள்' தொடர் கட்டுரை வெளியே இருக்கிற யாரோ சிலர்க்குப் பிடிக்கவில்லை... நாம கண்டுபிடிக்க வேண்டியது அவங்களைத்தான்...."

"அது எப்படி பாஸ் நான் எதை கெஸ் பண்ணினாலும் அதை தப்புன்னு சொல்லிடறீங்க....."

"நீ எதையுமே சரியாய் கெஸ் பண்ணமாட்டேன்னு உனக்கே தெரியுமே?"

"பாஸ்.... இது இன்ஸல்ட்டின் உச்சபட்சம். நான் இதை மேலிடத்தோட கவனத்துக்கு கொண்டு போறேன்"

"ஏடிஜிபி கிட்டே போறியா.... இல்ல டிஜிபி கிட்டேயே போறியா?"

"அதுக்கும் மேலே"

"அதுக்கும் மேல யாருடா?"

"ரூபலா மேடம்....!" விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீனலோசினி முதல் மாடியில் ஏறி அந்த அறைக்கு முன்பாய் நின்றபடி குரல் கொடுத்தாள்.

"இதான் ஸார் சுடர்கொடியோட ரூம்"

விவேக்கும் விஷ்ணுவும் உள்ளே நுழைந்தார்கள்.

சிறிய அறை. சுவரோரமாய் ஒரு மேஜையும் நாற்காலியும் லேசான தூசு படலத்தோடு தெரிந்தது. மேஜையின் இழுப்பறையைத் திறந்து பார்க்க உள்ளே அடைசலாய் காகிதங்கள். நிறம் நிறமாய் பேனாக்கள்.

மீனலோசனி சொன்னாள்.

"இது எல்லாமே சுடர்கொடி 'வளையோசை' பத்திரிகைக்காக பிரத்யேகமாய் எழுதிய கட்டுரைகளோட நகல்கள் ஸார்"

"விஷ்ணு.... எல்லாத்தையும் கிளறு. ஏதாவது உபயோகப்படற மாதிரி இருந்தா அதை மட்டும் வெளியே எடு!"

விஷ்ணு ட்ராயரை முழுவதுமாய் இழுத்து பரபரவென்று கிளறிப் பார்த்துக் கொண்டிருக்க, விவேக் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த செல்ஃப்பை நோக்கிப் போனான்.

மேல் அடுக்கு முழுவதும் வரிசையாய் புத்தகங்கள்.

ஒவ்வொன்றாய் எடுத்துக் பார்த்தான்.

நானும் என் நிழலும் - கவிதைத் தொகுப்பு. கனவுகள் இங்கே விற்கப்படும் - சிறுகதைத் தொகுப்பு. சூரியன் உதிக்காத நாட்கள் - சட்டர்ஜி நாவலின் தமிழாக்கம். விவேகானந்தரின் சொற்பொழிவுகள். விவேக் ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பார்க்க எல்லாமே இலக்கியம் ததும்பும் புத்தகங்கள்.

விவேக் ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பார்க்க எல்லாமே இலக்கியம் ததும்பும் புத்தகங்கள்.

பத்தாவது புத்தகமாக அந்த கனமான புத்தகம் விவேக்கின் கைக்குக் கிடைத்தது. சிவப்பு நிறத்தில் காலிகோ பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். தலைப்பைப் படித்தான்.

ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி மகா மந்திரம்.

கண்களில் வியப்பு பரவ புத்தகத்தின் முதல் பக்கத்தைப் புரட்டினான் விவேக்.

முதல் பக்கமே எச்சரித்தது. இந்தப் புத்தகத்தை முழுவதுமாய் படிக்கும் முன்பு குளித்து விட்டு சுத்தமாய் வரவும்.

மது அருந்திவிட்டோ, புகை பிடித்துக் கொண்டோ இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் அந்த மூன்று நாட்களில் இந்தப் புத்தகத்தைத் தொடவே கூடாது.

மேற்கண்ட எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துபவர்கள் தங்கள் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு நாட்களை இழப்பார்கள்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டலாமா வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு இரண்டாவது வினாடியில் மெல்லப் புரட்டினான் விவேக்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-23-285481.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 24

l - ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது ஒரு முக்கியத் தடயம் சிக்குகிறது...

 

இனி...

விவேக் அந்த 'ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி மகா மந்திரம்' புத்தகத்தைப் புரட்டினான்.

முதல் இரண்டு பக்கங்களில் துர்க்கையின் திரு உருவப் படமும் கால பைரவரின் படமும் லேமினேஷன் செய்யப்பட்ட தாள்களில் பளபளத்தது. விவேக்கின் விரல்கள் மூன்றாவது பக்கத்தைப் புரட்டியது.

சிவப்பு வண்ண எழுத்துக்களில் வார்த்தைகள் வரிவரியாய் ஓடியது. விவேக் அந்த வார்த்தைகளை மெல்ல வாய்விட்டு படித்தான்.

சகல மந்திர சாப நிவர்த்தி

பிரணாம் பிரதிஷ்டா மந்திரம்

சகல யந்திரங்களுக்கும் மந்திரம்

மந்திர காயத்ரி

யந்திர காயத்ரி ச

கல தேவதா வசிய மந்திரம்

 

இந்த ஆறு மந்திரங்களும் 21 முறை உச்சரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சர்வ தேவாதி தேவர்களும், சர்வ ஜீவராசிகளும் மந்திரத்தை உச்சரிப்பவரின் வசம் அனைத்தும் வசியப்படும்.

விவேக் புத்தகத்தின் மற்றப் பக்கங்களைப் புரட்டிவிட்டு மீனலோசனியிடம் திரும்பினான்.

"இப்படி ஒரு புத்தகம் சுடர்கொடிகிட்டே இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா மேடம்?"

மீனலோசனி அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சோடு தலையாட்டினாள்.

"தெரியாது.... ஆனா ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நெருடலாயிருக்கு...."

"என்ன?"

"சுடர்கொடிக்கு கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. கடவுள் பெயரால் யார் எந்த மோசடியைப் பண்ணினாலும் தீப்பொறி பறக்க ஒரு கட்டுரையை எழுதிடுவா.... ஸோ அவ இப்படியொரு புத்தகத்தை வாங்கி இருக்கவே மாட்டா...."

"ஆர் யூ ஷ்யூர் மேடம்?"

"இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?"

"நோ மேடம்... நீங்க பொய் சொல்றீங்கன்னு நான் சொல்ல வரலை.

ஆனா இந்தப் புத்தகத்தை சுடர்கொடிதான் வாங்கியிருக்கா என்கிற உண்மையை நீங்க நம்பியாகணும். அதுக்கான ஆதாரம் இருக்கு...."

"ஆதாரமா... என்ன ஆதாரம்....?"

 

"இதோ பாருங்க மேடம்... இந்த புக்கை சுடர்க்கொடி வாங்கியதற்கான பில்....!" சொன்ன விவேக் தன் கையில் வைத்து இருந்த அந்த சிறிய தாளை நீட்டினான்.

மீனலோசனி அதை வாங்கிப் பார்த்தாள். அவளுடைய வலது புருவம் மட்டும் சற்றே மேலேறியது.

மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அமராவதி பதிப்பகத்திலிருந்து சென்ற மாதம் ஏழாம் தேதி சுடர்கொடியின் பெயர்க்கு பில் போடப்பட்டு அந்தப் புத்தகம் 150 ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்தது. மீனலோசனி குழப்பத்தோடு கேட்டாள்.

"இந்த பில் உங்களுக்கு எப்படி கிடைச்சது ஸார்?"

"புக்கைப் புரட்டிப் பார்த்துட்டு இருக்கும்போது ரெண்டு பக்கங்களுக்கு நடுவே இந்த பில் இருந்தது."

"சரி..... சுடர்கொடி இந்தப் புத்தகத்தை விலை குடுத்து வாங்கினதாகவே வச்சுக்குவோம்... இந்த விஷயத்துக்கும் அவ கொலை செய்யப்பட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கறீங்களா.....?"

"லேசா...."

"எனக்குப் புரியலை ஸார்.... லேசான்னா எந்த அளவுக்கு?"

"கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத சுடர்கொடி இந்த 'ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி மகா மந்திரம்' புத்தகத்தை விலை குடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன....?"

"எனக்குத் தெரியலை. நீங்க என்ன நினைக்கறீங்க?"

"எனக்கும் தெரியாது மேடம்... ஆனா அதுக்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிச்சுட்டா கொலையாளி இருக்கிற திசையை உறுதிப்படுத்திடலாம்....!" விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு பக்கத்தில் வந்தான்.

 

"பாஸ்.... இதை ஒரு செகண்ட பாருங்க" சொன்னவன் தன் கையில் வைத்து இருந்த அந்த வாழ்த்து அட்டையைக் காட்டினான். "இது ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை பாஸ். இதை யார் யார்க்கு அனுப்பி இருக்காங்கன்னு பாருங்க....!"

விவேக் வாங்கிப் பார்த்தான். ஸ்கெட்ச் பேனா வார்த்தைகளைப் பிரசவித்திருந்தது.

1991 பிறக்க ஏழு நிமிஷங்கள் இன்னமும்

உயிரோடு இருந்த போது என்னுடைய தங்கையாய் நீ பிறந்தாய்.

தங்கையாய் வளர்ந்தாய்.

ஆனால் இந்த 2017 ல் நீ ஒரு வீரமங்கையாய் உருவாகிக்கொண்டு இருக்கிறாய்.

உடம்பில் நீ ஒரு பெண்.

ஆனால் உள்ளத்தால் ஆண். இருந்தாலும் உன்னை மணக்கோலத்தில் பார்க்க விரும்புகிறேன்.

2018 பிறப்பதற்குள் என்னுடைய ஆசை நிறைவேறுமா?

 

இனிய பிறந்த தின வாழ்த்துக்களோடு உன்னுடைய அண்ணன் திலீபன்.

 

விவேக் லேசாய் முகம் மாறி விஷ்ணுவைப் பார்த்தான். அவனுடைய காதோரம் மெல்ல குரலைத் தாழ்த்தினான்.

"என்னடா இது?"

"அதான் பாஸ் எனக்கும் குழப்பமாய் இருக்கு. ராஜா அண்ணாமலைப்புரத்தில் இருக்கிற சுடர்கொடியோட வீட்டை நாம சோதனைப் போட்டபோது அங்கே கிடைச்ச பலான விஷயங்கள் அவங்க ரெண்டு பேரோட உறவை சந்தேகப்பட வெச்சது. ஆனா இந்த அட்டை திலீபனும் சுடர்கொடியும் அண்ணன் தங்கைத்தான்னு சத்தியம் பண்ணுதே.... இருக்கிற குழப்பமும் போதாதுன்னு இது வேற. நம்ம மீனா கிட்டே இதைப்பத்தி கேட்டுடலாமா பாஸ்?"

"யார்ரா மீனா?"

"போங்க பாஸ்... பேரைச் சுருக்கி செல்லமாய்க் கூப்பிட்டா உடனே ஆளை மறந்துடறீங்க... பக்கத்துல நிக்கிற மீனலோசனியைச் சொன்னேன் பாஸ்...."

விவேக் விஷ்ணுவை முறைத்து விட்டு மீனலோசனியிடம் திரும்பினான்.

"மேடம்.... அன்னிக்கு உங்ககிட்டே விசாரணை பண்ணும்போது சுடர்கொடிக்கு அப்பா அம்மா இல்லை. அண்ணன் ஒருத்தர் மட்டும் இருக்கிறதாய் சொன்னீங்க....?"

"ஆமா...."

"சுடர்கொடியோட அண்ணனை நீங்க பார்த்து இருக்கீங்களா?"

 

"இல்லை... அவரோட பேர் கூட எனக்குத் தெரியாது.... சுடர்கொடி சொல்லித்தான் அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிற விஷயம் தெரியும்"

மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைவாசல் அருகே அந்தக் குரல் கேட்டது.

"ஸார்"

"விவேக் திரும்பிப் பார்த்தான்.

அந்த இளம் பெண் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் கருப்பு துப்பட்டாவோடு கதவோரமாய் தயக்கத்தோடு நின்றிருந்தாள். மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள்.

"ஸார்... என்னோட பேர் வானதி. இதே பத்திரிக்கை ஆபீஸில் கம்ப்யூட்டர் செக்க்ஷன்ல இருக்கேன். நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்."

மீனலோசனி பதட்டம் அடைந்தவளாய் வானதியை நோக்கிப் போய் அவளுடைய தோளின் மீது கையை வைத்தாள்.

"வானதி... நீ இப்போ எதுக்காக வந்தே... இவங்ககிட்டே என்ன சொல்லப் போறே?"

"ஸாரி மேடம்... உங்களுக்கே தெரியாத சில விஷயங்களை நான் சொல்ல வேண்டிய நேரம் இது....!"

"எனக்கே தெரியாத உண்மைகளா?"

மீனலோசனி கண்களை இமைக்க மறந்து சற்றே பிளந்த வாயோடு திகைத்துக் கொண்டிருக்க வானதி விவேக்கை நெருங்கினாள். தன் கையில் வைத்திருந்த சற்றே பெரிதான ஒரு ப்ரவுன் கவரை நீட்டினாள்.

 

"இதைத் திறந்து பாருங்க ஸார்...!"

விவேக் குழப்பத்தோடு அந்தக் கவரை வாங்கி அதன் வாய்க்குள் இரண்டு விரலை நுழைத்து உள்ளே இருந்ததை வெளியே இழுத்தான்.

அது ஒரு போட்டோ. பார்த்தான்.

ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் ஒரு பெண் வெட்டப்பட்டு ரத்த சகதியில் விழுந்து கிடக்க, போட்டோவோடு இணைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாளில் அந்த வார்த்தைகள் தமிழில் டைப் செய்யப்பட்டு தெரிந்தது.

அன்புள்ள சுடர்கொடிக்கு சித்ரகுப்தன் எழுதிக் கொண்டது.

இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் போட்டோ வடநாட்டில் உள்ள போபால் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வருஷங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இவள் யார், ஏன் எதற்காக இவ்வளவு கோரமாக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள் என்கிற விபரமெல்லாம் உனக்கு வேண்டாம். இந்த போட்டோவை மறுபடியும் ஒரு தடவை நன்றாகப் பார். இதே மாதிரியான ஒரு நிலைமை உனக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாதே. உன்னுடைய பத்திரிக்கையில் சமையல் செய்வது எப்படி, கோலம் போடுவது எப்படி, வித விதமான ரசப் பொடிகள் செய்வது எப்படி போன்ற கட்டுரைகளை மட்டும் எழுதி பெண் குலத்துக்காக பாடு படவும்.

விவேக் படித்துவிட்டு அதிர்ந்து போனவனாய் வானதியைப் பார்த்தான்.

அவள் பயந்த குரலில் சொன்னாள்.

"ஸார்... இந்த கவர் என்னோட கைக்கு எப்படி வந்ததுன்னு உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும்"

"ஆமா" "இதை எனக்குக் கொடுத்தது யார் தெரியுமா ஸார்?

"யாரு?"

"திலீபன்"

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-24-286701.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 25

 

-ராஜேஷ்குமார்

 

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள்...

இனி...

விவேக் உச்சபட்ச வியப்போடு வானதியைப் பார்த்தான்.

"என்னது, இந்த லெட்டரை உன்கிட்ட கொடுத்தது திலீபனா?"

"ஆமா ஸார்"

"திலீபனை உனக்கு எப்படித் தெரியும்?"

வானதி லேசாய் தலை குனிந்தாள்.

"ஸார்.... அது....வந்து......"

 

"என்ன சொல்லு...."

"நானும் அவரும் கடந்த ஆறுமாச காலமாய் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிட்டிருந்தோம். சுடர்கொடி தனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு பிடிவாதமாய் இருந்ததால எங்க கல்யாணமும் தள்ளிப் போயிட்டே இருந்தது. இந்த நிமிஷம் சுடர்கொடியும் உயிரோட இல்லை. திலீபனும் உயிரோடு இல்லை. எங்க காதலும் உயிரோடு இல்லை....," கடைசி வரியை சொல்லும் பொழுது வானதியின் குரல் கம்மிப் போய் கண்களில் நீர் பளபளத்தது.


விவேக் சற்று நேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கேட்டான்.

"இப்படியொரு மிரட்டல் கடிதம் வந்தது சுடர்கொடிக்குத் தெரியுமா....?"

"தெரியும்...... ஆனா இந்த லெட்டரை சுடர்கொடி ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை. திலீபன்தான் பயந்து போனவராய் இந்த லெட்டரை என்கிட்டே கொண்டுவந்து கொடுத்து சுடர்கொடிக்கு புத்திமதி சொல்லும்படியாய் கேட்டுக்கிட்டார்."

"நீ புத்திமதி சொன்னியா?"

"இல்லை... இந்த போட்டோவையும் லெட்டரையும் திலீபன் என்கிட்டே கொடுத்துட்டு போன பின்னாடி சுடர்கொடியை நான் பார்க்கவேயில்லை. அவ யார் யாரையோ பேட்டி எடுக்கவும், பட்டி மன்றங்களில் போய் கலந்துக்கவும் வெளியே போயிட்டு இருந்தா... நான் ஒருதடவை போன்ல கான்டாக்ட் பண்ணி பேச முயற்சித்தேன். அவளோட நெம்பர் ரொம்ப நேரம் பிஸியாய் இருந்தது"

 

"சுடர்கொடி வளையோசை பத்திரிக்கையில் 'கோணல் கோடுகள்' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத இருந்த விஷயத்தைப் பத்தி உன்கிட்ட ஏதாவது பேசியிருந்தாளா....?"

"இல்லை ஸார்..."

"அது என்ன கோணல் கோடுகள்?"

"தெரியாது ஸார்"

"சுடர்கொடி அந்தக் கட்டுரையை எழுதக்கூடாது. மீறி எழுதினால் போபால் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் எப்படி வெட்டி கொலை செய்யப்பட்டாளோ அதே நிலைமைதான் அவளுக்கும் ஏற்படும்ன்னு சுடர்கொடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது இல்லையா?"

 

"ஆமா ஸார்...."

"அந்த எச்சரிக்கையையும் மீறி சுடர்கொடி அந்தக் கட்டுரையை எழுத முற்பட்டதால்தான் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெச்சு படுகொலை செய்யப்பட்டாள். அதாவது கொலையாளியோட நோக்கம் அவளைத் தீர்த்துக் கட்டுவதுதான்.... இல்லையா வானதி?"

"ஆமா.... ஸார்"


"அப்படீன்னா இந்த விவகாரத்தில் திலீபன் ஏன் கொலை செய்யப்படணும்.....?" இப்போது வானதியின் குரலோடு அவளுடைய அழுகையும் சேர்ந்து கொண்டது. விம்மலோடு பேசினாள்.

"எ...எ... என்னோட மனசுக்குள்ளே இருக்கிற கேள்வியும் இதுதான் ஸார்.... நான் சரியா சாப்பிட்டு ஒழுங்கா தூங்கி ஒரு வாரமாச்சு. நான் திலீபனை காதலிக்கற விஷயம் என்னோட பேரண்ட்ஸ் உட்பட வெளியே யார்க்கும் தெரியாது ஸார். ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி ராத்திரி நான் மொட்டை மாடிக்குப் போய் தனியா அழுதிட்டிருந்ததை என்னோட அப்பா பார்த்திட்டு பதறிப்போய் விபரம் கேட்டார். நானும் வேற வழி இல்லாமே திலீபனுக்கு எனக்கும் இருந்த காதல் விவகாரத்தைச் சொல்ல வேண்டியதாயிடுச்சு."

"சுடர்கொடிக்கு வந்த இந்த மிரட்டல் கடிதம்?"

"நான் அதையும் மறைக்கலை.... எல்லாத்தையும் சொல்லிட்டேன்"

"அப்பா என்ன சொன்னார்?"

 

"என்னோட ரெண்டு கையையும் பிடிச்சுட்டு தயவு பண்ணி போலீசுக்கு போயிடாதேம்மா... அப்படி போயிட்டா அதுக்கப்பறம் எல்லா மீடியாஸ் ரிப்போர்ட்டர்ஸும் காமிராவும் மைக்குமாய் நம்ம வீட்டுக்கு முன்னாடி 24 மணி நேரமும் நின்னுட்டு இருப்பாங்க.... நாளைக்கு உனக்கொரு கல்யாணம் நடக்கும்ங்கறதை நினைச்சுப் பார்க்க முடியாத ஒரு விஷயமா போயிடும்ன்னு சொன்னார். அப்பா சொன்னது ஒருவகையில் நியாயமாய் இருந்ததால அப்போதைக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஆனா இன்னிக்கு நீங்க இந்த பத்திரிக்கை ஆபீஸுக்கு வந்து மேடத்தை என்கொயரி பண்ணிட்டிருந்ததைப் பார்த்தேன். ஏதாவது ஒரு தடயம் கிடைக்காதான்னு நீங்க தவிக்கிற தவிப்பு எனக்குப் புரிஞ்சது. சுடர்க்கொடி, திலீபன் இந்த ரெண்டு பேரோட படுகொலைகளுக்கு காரணமான நபர் எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் சட்டத்தோட பிடியிலிருந்து தப்பிச்சுட்டு போயிடக்கூடாதுன்னு நினைச்சேன். இப்ப எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டேன்!"

 

விவேக் மெலிதாய் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"தேங்க்ஸ் வானதி.... நீ இப்ப என்கிட்டே கொடுத்த இந்த லெட்டர் விஷயமும் சரி, உனக்கும் திலீபனுக்கு இருந்த காதல் விவகாரமும் சரி, கொலையாளி பிடிபடுகிற வரை வெளியே தெரியாது. இந்த நேரத்துல நீ தைரியமாய் இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம். நீ என்கிட்டே ஏதாவது பேசணும்னா என்னோட பர்சனல் நெம்பருக்கு எந்த நேரத்திலும் நீ போன் பண்ணலாம்"

வானதி கண்ணீரோடு தலையாட்டினாள்.

விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.

"பாஸ்...'சுடர்கொடியும், திலீபனும் உண்மையிலேயே சிஸ்டர் பிரதர். ஆனா அந்த உறவை கொச்சைப் படுத்தத்தான் சுடர்கொடியோட வீட்டுப் படுக்கையறையில் காண்டத்தையும், கருத்தடை மாத்திரைகளையும் கொலையாளி மறைச்சு வெச்சிருக்கணும்."

"கரெக்ட் விஷ்ணு.... நான்தான் அவசரப்பட்டு அவங்க ரெண்டு பேருமே தப்பானவங்கன்னு முடிவு பண்ணிட்டேன்."

"நீங்க அப்படி முடிவு பண்ணினது 'பிரம்ம ஹத்தி' தோஷத்துக்கு சமம் பாஸ். இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. திருவிடைமருதூர் கோயிலுக்குப் போய் மகாலிங்கேஸ்வரருக்கு வில்வ இலையால அர்ச்சனை பண்ணி....."

 

"டேய்...!"

"ஸாரி பாஸ்.... நேத்திக்கு தந்தி டி.வி.யில் சிவல்புரி சிங்காரம் எது எது பிரம்ம ஹத்தி தோஷம்ன்னு சொல்லி அதுக்கான பரிகாரங்களை சொல்லிட்டு இருந்தார். அது நியாபகத்துக்கு வந்தது....."

விவேக் மீனலோசனியை ஏறிட்டான்.

"மேடம்.... இங்கே வந்து என்கொயரி பண்ணினதுல இந்த கேசுக்குள்ளே இருந்த சில குழப்பங்கள் விலகியிருக்கு. வானதிக்கும் திலீபனுக்கு இருந்த காதல் விவகாரம் இப்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம்....."

மீனலோசனி கலவர விழிகளோடு தலையாட்ட விவேக் அறையினின்றும் வெளிப்பட்டான்.

.........................................

மேற்கு மாம்பலம் கணபதி தெருவின் மையத்தில் இருந்தது அந்த அமராவதி பதிப்பகம்.

அதன் உரிமையாளர் ஜெகந்நாதன் முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் தோற்றம் காட்டி விவேக்கையும் விஷ்ணுவையும் ஒரு புன்னகையோடு வரவேற்றார். விவேக் தன் அடையாள அட்டையைக் காட்டியதும் சற்றே முகம் மாறினார். நெற்றி உடனே ஒரு வியர்வை கோட்டிங்கிற்கு உட்பட்டது.

"ஸ... ஸார்...."

"டென்ஷன் ஆகாதீங்க. ஒரு சின்ன விசாரணை அவ்வளவுதான் "

"உ...உ... உட்காருங்க ஸார்" நாற்காலிகளைக் காட்டி விட்டு அவரும் உட்கார்ந்தார். விஷ்ணு தன் கையில் வைத்து இருந்து புத்தகத்தை நீட்டியபடி கேட்டான்.

"இந்த ஸ்ரீ அஷ்ட வராஹி காலபைரவி மகா மந்திரம் புத்தகத்தை பதிப்பிச்சது நீங்கதானே.....?"

ஜெகந்நாதன் வாங்கிப் பார்த்துவிட்டு மெல்ல தலையாட்டினார்.

"ஆமா... ஸார்"

"இந்த புக் எப்படி ஸேல் ஆகுது?"


 "அவ்வளவா மூவிங் கிடையாது ஸார்... மாசத்துக்கு ரெண்டு இல்லேன்னா மூணு புக் விக்கும்"

"போன மாசம் ஏழாம்தேதி ஒரு பெண் இந்த புத்தகத்தை வாங்கிவிட்டு போயிருக்கா. நீங்க பில் போட்டு கொடுத்து இருக்கீங்க.... இதோ அந்த பில்...!"

ஜெகந்நாதன் அந்த பில்லை வாங்கிப் பார்த்தார். அவர் முகம் மாறுவதை உன்னிப்பாய் கவனித்துவிட்டு விவேக் கேட்டான்.

"சுடர்கொடியை உங்களுக்கு தெரியும் போலிருக்கு?"

"ரெகுலர் கஸ்டமர் ஸார்... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் அந்தப் பெண் கொடூரமாய் வெட்டி கொலை செய்யப்பட்டதை டி.வி.யில் பார்த்துட்டு ஷாக் ஆயிட்டேன் ஸார்..."

"சுடர்கொடிக்கு கடவுள் பக்தி கிடையாது. ஆனா இது மாதிரியான மந்திர வாசகங்கள் உள்ள ஒரு புத்தகத்தை வாங்கியிருக்காங்க. காரணம் என்னவாய் இருக்கும்ன்னு நினைக்கறீங்க....?"

"ஸார்.... நானும் சுடர்கொடிக்கிட்டே என்னம்மா வழக்கமாய் கவிதை புத்தகம், கதை புத்தகம் வாங்குவே, இன்னிக்கு இது மாதிரியான புத்தகம் வாங்கறேன்னு கேட்டேன் ஸார். அதுக்கு அந்தப் பொண்ணு சொன்ன பதில் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது...!"

விவேக்கும் விஷ்ணுவும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

(தொடரும்)

 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-25-287596.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 26

 

- ராஜேஷ்குமார்

 

கதை, இதுவரை...

 

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள்... அதை நோக்கி விசாரணையைத் தொடர்கிறார்கள்.

 


இனி...

 

விவேக்கும் விஷ்ணுவும் அந்தப் புத்தகப் பதிப்பாளர் ஜெகந்நாதனை வியப்பான பார்வைகளால் நனைத்தார்கள்.

விவேக் கேட்டான்.

"நீங்க கேட்ட அந்தக் கேள்விக்கு சுடர்கொடி என்ன பதில் சொன்னா?"

"இந்த மந்திரம் தந்திரம் மூலமாய் ஒருத்தரோட மனசை மாத்தி அவங்களை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டுட்டு வரலாம்ன்னு இது மாதிரியான புத்தகங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது உண்மையா பொய்யான்னு ஒரு ஆராய்ச்சி பண்ணத்தான்னு சொன்னாங்க"

"நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்க?"

"நான் பதில் சொல்றதுக்கு முந்தி சுடர்கொடிக்கு ஏதோ ஒரு போன் வந்தது. அட்டெண்ட் பண்ணிப் பேசினாங்க. பேச பேசவே லேசாய் டென்ஷன். அப்படியா.... அப்படியான்னு ஆச்சர்யமாய் கேட்டாங்க. அந்த சமயத்துல நான் ஒரு விஷயத்தை நோட் பண்ணினேன் ஸார்"

 

"என்ன அது?"

"சுடர்கொடி போன்ல பேசிட்டிருக்கும் போதே என்கிட்டே பேனாவும், ஒரு சின்ன பேப்பர் துண்டும் வேணும்ன்னு கேட்டாங்க. நானும் உடனே கொடுத்தேன். சுடர்கொடி போன்ல 'லேண்ட் மார்க் சொல்லுங்க. நொளம்பூர்க்கு பக்கத்துல 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ்... அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கா... சரி.. இனி நான் பார்த்துக்கறேன்'னு சொல்லிகிட்டே போனை ஆஃப் பண்ணிட்டு பேப்பர்ல எழுதிக்கிட்டாங்க...."

"அப்புறம்...?"

"அதுக்கப்பறம் சுடர்கொடி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கலை. உடனே கிளம்பிப் போய்ட்டாங்க"

விவேக் யோசிப்போடு கேட்டான். "அந்த லேண்ட் மார்க் என்னான்னு இன்னொரு வாட்டி சொல்லுங்க"

ஜெகந்நாதன் சொன்னார்.

"நொளாம்பூர்க்குப் பக்கத்துல 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ். அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கு."

"அதுன்னா... எது?"

"எனக்குத் தெரியலை ஸார்"

இப்போது விஷ்ணு குறுக்கிட்டு கேட்டான்.

"இவ்வளவு நாளைக்கு பின்னும் அந்த லேண்ட் மார்க் விஷயத்தை ஞாபகத்துல வெச்சு இருக்கீங்களே அது எப்படி...?"

"அது என்னமோ தெரியலை ஸார்... அன்னிக்கு சுடர்கொடி எனக்கு முன்னாடி உட்கார்ந்து பேசினது அப்படியே மனசுக்குள்ளே பதிஞ்சு போயிடுச்சு...!"

விவேக் எழுந்தான்.

"ஜெகந்நாதன்"

"ஸார்..."

"நாங்க இந்தப் புத்தகத்தைப் பற்றி உங்க கிட்டே விசாரிக்க வந்தோம். ஆனா இந்த கேஸுக்கு உபயோகப்படற மாதிரி ஒரு முக்கியமான தகவலையும் கொடுத்து இருக்கீங்க... இப்போதைக்கு இதை வெளியே யார்கிட்டயும் சொல்லாதீங்க..."

ஜெகந்நாதன் சரி என்கிற பாவனையோடு சற்றே மிரட்சி பரவிய விழிகளோடு தலையாட்டி வைத்தார்.

........................................................

 

மத்தியானம் ஒரு மணி.

சென்னை வெயில் அமிலமாய் மாறி உச்சந் தலைகளை பொசுக்கிக்கொண்டிருந்தது.

விவேக் காரை ரோட்டோரமாய் நிறுத்திவிட்டு விஷ்ணுவிடம் திரும்பினான்.

"வெஸ்ட் முகப்பேர் வந்துட்டோம்.... இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் போனா நொளாம்பூர் வந்துடும். அந்த 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ் எங்கே இருக்குன்னு அது அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போய் ட்ரைவர்ஸ் கிட்டே கேட்டுட்டு வா...."

"ஒவ்வொரு ஆட்டோ ட்ரைவரும் ஒரு கூகுள் மேப்புக்கு சமம் பாஸ்... அஞ்சு நிமிஷத்துக்குள்ளே தகவலோடு வர்றேன் பாஸ்"

விஷ்ணு காரினின்றும் இறங்கி ரோட்டை கிராஸ் செய்து எதிர்பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்டை நோக்கிப் போனான். விவேக் தன செல்போனை எடுத்து ஓர் எண்ணைத் தேடித் தேய்த்து விட்டு மெல்ல குரல் கொடுத்தான்.

"ஸார்... குட் ஆஃப்டர் நூன்..."

"குட் ஆஃப்டர் நூன் மிஸ்டர் விவேக்.... எனக்கு நீங்களே போன் பண்ணியிருக்கிங்க.... எனிதிங்க்.... இம்பார்ட்டண்ட் ?" மறுமுனையில் தியோடர் ஒரு மெலிதான சிரிப்போடு கேட்டார்.

"எஸ்... ஸார்... ஐ ஹவ் காட் ஏ க்ளூ. அதை நோக்கித்தான் ட்ராவல் பண்ணிட்டிருக்கேன்...."

 

"குட்.... அது இதுமாதிரியான 'க்ளூ'ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா....?"

"எனக்கே இன்னும் அது பிடிபடலை ஸார். ஒரு மணி நேரம் கழிச்சு நானே உங்களுக்கே போன் பன்றேன்"

"இட்ஸ் ஓ.கே.... வெயிட்டிங் ஃபார் யுவர் கால்"

விவேக் குரலைத் தாழ்த்தினான். "ஸார்.. பை..த...பை... அந்த ஜெயவேல் இன்னும் போலீஸ் சர்ச் ஸ்க்வாட் கிட்டே மாட்டலையே?"

"நாட் யெட்.... ஆனா இன்னிக்கு ராத்திரிக்குள்ளே ஜெயவேலை எப்படியும் போட்டுத் தள்ளிடுவாங்க... மொதல்ல சுட்டுத் தள்ளற கமாண்டோ ஆபீஸருக்கு அடுத்த வாரமே புரமோஷன்...."

 

"ஸார்.... இது சரியில்லை....."

 

"சரியில்லைதான்... நீங்களும் நானும் என்ன பண்ணமுடியும்.....? ஜெயவேல் உயிரோட இருக்கணும்ன்னா உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்கணும்.... நம்ம 'போலீஸ் ஸ்க்வாட்' வேகத்தைப் பார்த்தா நாளைக்குக் காலையில் ஜெயவேலோட டெட்பாடி ஜி.ஹெச்சோட மார்ச்சுவரியில் இருக்கும்ன்னு என்னோட மனசுக்குப் படுது"

"அப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது ஸார்"

"நடக்கக் கூடாதுன்னா உண்மையான குற்றவாளி பிடிபடணுமே மிஸ்டர் விவேக்...?" "எனக்கு நம்பிக்கை இருக்கு ஸார்" "ஆல் த பெஸ்ட்.... ஜெயவேல் உயிரோட இருக்கறதும் இல்லாததும் இப்ப உங்க கையில்..." தியோடர் சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட விவேக்கும் ஒரு பெருமூச்சோடு செல்போனின் டிஸ்ப்ளே ஸ்கிரீனை இருட்டாக்கினான்.

விஷ்ணு இப்போது ஆட்டோ ட்ரைவர்களிடம் விசாரித்துவிட்டு ரோட்டை க்ராஸ் செய்து காருக்குள் ஏறி உட்கார்ந்தான்.

"போலாம் பாஸ்"

"பார்க் வியூ அப்பார்ட்மெண்ட்ஸ் எங்கேன்னு கேட்டியா?"

"கேட்டேன் பாஸ்... இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகணுமாம்.

டார்க் ப்ளூ பெயின்டிங் பூச்சு. ஏழுமாடி கட்டிடம்"

விவேக் காரை நகர்த்தினான். விஷ்ணு மெல்லிய குரலில் கூப்பிட்டான்.

"பாஸ்"

"சொல்லு...."

 

"நொளம்பூர்க்குப் பக்கத்துல பார்க் வியூ அப்பார்ட்மெண்ட்ஸ். அதுக்கு நேர் எதிர் ரோட்ல 'ரெண்டாவது கட்'ல அது இருக்கு. அந்த அதைத் தேடி சுடர்கொடி வந்து இருப்பான்னு நினைக்கறீங்களா?"

"கண்டிப்பாய்...! அது எதுன்னு சுடர்கொடி தெரிஞ்சுக்கிட்டதாலதான் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தை அவளோட ரத்தத்தால குளிப்பாட்டியிருக்காங்க...."

"சுடர்கொடிக்கு அது எதுன்னு தெரியும். நமக்கு அது தெரியாது. அதை நாம எப்படி கண்டுபிடிக்கப் போறோம் பாஸ்?"

"மொதல்ல அந்த ரெண்டாவது கட்டுக்குப் போவோம். அங்கே யார் யார் இருக்காங்க... அது இதுமாதிரியான இடம்ன்னு பாப்போம். ஆனா ஒரு விஷயத்தை நாம மறக்கக்கூடாது விஷ்ணு"

"எதைச் சொல்றீங்க பாஸ்?"

"இப்பவும் எதிரிகள் உன்னையும் என்னையும் ஒவ்வொரு வினாடியும் கண்காணிச்சுட்டுதான் இருக்காங்க...! நாம அவங்களை நெருங்கிட்டோம்ன்னு தெரிய வரும்போது சுடர்கொடிக்கு ஏற்பட்ட நிலைமை உனக்கும் எனக்கும் ஏற்படலாம்...."

"பா.. பாஸ்..."

"என்ன பயமாய் இருக்கா?"

"அந்தக் கடவுளே காவலுக்கு இருக்கும்போது பூசாரிக்கு என்ன பயம் பாஸ்?"

"நீ என்னடா சொல்றே?" "நீங்க பக்கத்துல இருக்கும்போது எனக்கென்ன பயம் பாஸ்....?" விவேக் காரின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே குனிந்து பார்த்தான். சற்றுத் தொலைவில் அடர்த்தியான நீல வண்ண பெயிண்டில் அந்த ஏழு மாடிக் கட்டிடம் தெரிந்தது. கட்டடத்தின் உச்சியில் 'பார்க் வியூ' அப்பார்ட்மெண்ட்ஸ் என்னும் ஆங்கில எழுத்துக்கள் வெய்யிலில் பளிச்சிட்டன.

அடுத்த சில வினாடிகளில் கார் அப்பார்ட்மெண்டை நெருங்கி நின்றது. விவேக்கும், விஷ்ணுவும் எதிர்ப்பக்கமாய் தெரிந்த ரோட்டைத் திரும்பிப் பார்த்தார்கள்

. ஒரு சிதிலமான மண்ரோடு பார்வைக்குத் தட்டுப்பட்டது.

"விஷ்ணு! அந்த ரோடுதான்னு நினைக்கிறேன்"

"ஆமா... பாஸ்"

"போலாமா....?"

"நான் எப்பவோ ரெடி பாஸ்"

விவேக் அந்த மண் ரோட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.

 

(தொடரும்)



 

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-26-289127.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 27

 

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள்... அதை நோக்கி விசாரணையைத் தொடர்கிறார்கள். கிட்டத்தட்ட கொலையாளியை நெருங்குகிறார்கள்...

இனி...

விவேக் அந்த மண் ரோட்டுக்குள் காரைச் செலுத்தினான்.

அது ஒரு புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் குடியிருப்பு என்பதால் சரியாய் முழுமையான அளவில் கட்டி முடிக்கப்படாத வீடுகள் எக்ஸ்ரே ஃபிலிமில் தெரியும் எலும்புகள் போல் காட்சியளித்தன.

விஷ்ணு கேட்டான்.

"இங்கே யாரைப் பார்க்கிறதுக்காக சுடர்கொடி வந்திருப்பான்னு நினைக்கறீங்க பாஸ்.....?"

"நீயே கெஸ் ஒர்க் பண்ணி சொல்லு பார்க்கலாம்"

"உங்க மாதிரி எனக்கு இன்னொரு மூளையெல்லாம் கிடையாது பாஸ்....."

"விஷ்ணு.... இந்த சுடர்கொடியோட கேசைப்பொருத்தவரைக்கும் என்னோட அனுமானங்களே தப்பான திசையில் பயணம் பண்ணியிருக்கு... இப்ப நாம வந்து இருக்கிற இடம்தான் நமக்கு கிடைத்து இருக்கிற கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம பயன்படுத்திக்கிட்டு ஒரு உருப்படியான உண்மையை இங்கிருந்து கொண்டு போகணும். அந்த உண்மையை வெச்சு கொலையாளியைக் கண்டுபிடிக்கணும். இல்லேன்னா இந்த கேஸ்ல நிரபராதியான ஜெயவேலை குற்றவாளின்னு தீர்மானம் பண்ணி 'என்கவுன்டர்' மூலமாய் அவனோட உயிரை எடுத்துட்டு கேஸோட ஃபைலை க்ளோஸ் பண்ணிருவாங்க நம்ப டிபார்ட்மெண்ட்ன்னு மனசுக்குள்ளே சின்னதாய் ஒரு பயம் விஷ்ணு"

"பாஸ்.... அந்த கங்கை நதியே கலங்கி நின்னா கர்நாடகத்துக்கிட்டே கையேந்திட்டு இருக்கிற இந்த காவேரி என்ன பண்ணும்?"

விவேக் விஷ்ணுவை லேசாய் முறைத்துக் கொண்டே அந்த மண் ரோட்டின் 'இரண்டாவது கட்'டில் காரைத் திருப்பினான்.

முழுமையாய் கட்டப்பட்ட சில வீடுகள் நிறம் நிறமாய் பெயிண்ட் பூச்சுக்களோடு பார்வைக்குக் கிடைத்தன. சாலையில் மக்கள் நடமாட்டம் வரவேயில்லை. குண்டும் குழிகளுமாய் இருந்த மண் ரோட்டில் கார் 'பல்லாங்குழி' விளையாட்டை விளையாடிக்கொண்டே முன்னேறியது.

"விஷ்ணு.... யாராவது கண்ணுக்குத் தட்டுப்படறாங்களான்னு பாரு..."

"நான் பார்த்துட்டுதான் வர்றேன் பாஸ். அந்த வேப்ப மரத்துல ரெண்டு காக்கா மட்டும் உட்கார்ந்துட்டு ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கு"

"உனக்கு இடதுகைப் பக்கமாய் ஒரு கடை தெரியுது. அது என்ன கடைன்னு பாரு!"

விஷ்ணு குனிந்து பார்த்தான்.

சிம்ரன் பேக்கரி அண்ட் டீ ஸ்டால் என்கிற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.

"ஆஹா.... பேக்கரி பாஸ்..."

"உள்ளே ஆட்கள் இருக்காங்களான்னு பாரு?"

"கல்லாவில் ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு செல்போனை நோண்டிகிட்டு இருக்கான் பாஸ். அவன்தான் அந்த சிம்ரன் பேக்கரிக்கு எம்.டியாய் இருப்பான்னு நினைக்கிறேன்..."

கார் கடைக்கு முன்பாய் போய் நின்றது.

"என்ன பாஸ்?"

"டீ... சாப்பிடலாம்..."

காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.

அந்தச் சிறிய பேக்கரியின் கல்லாவில் உட்கார்ந்திருந்தவன் விவேக்கையும் விஷ்ணுவையும் பார்த்ததும் எழுந்தான். தூக்கிக் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து வீட்டுக் கொண்டவன் பவ்யமாய் வந்து நின்றான்.

"என்ன சார் வேணும்?"

"ரெண்டு டீ"

"உட்காருங்க சார்"

நாற்காலிகளைக் காட்டிய அவன் பக்கத்தில் இருந்த தடுப்புக்குப் போய் அடுத்த சில நிமிடங்களில் நுரை தள்ளும் டீயை கண்ணாடி டம்ளர்களில் நிரப்பிக் கொண்டு வந்தான். அவற்றை மேசை மீது வைத்தவன், "சால்ட் பிஸ்கெட் இருக்கு... கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான்.

"வேண்டாம்... டீயே போதும்"

ஒரு டீ டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு விவேக் கேட்டான்.

"உம பேர் என்ன?"

"முரளி ஸார்"

விஷ்ணு குறுக்கிட்டான்.

"இங்கே தயாரிப்பு கதை, திரைக்கதை, வசனம், இசை, டைரக்ஷன் எல்லாமே நீதான் போலிருக்கு"

"புரியலை சார்"

"இந்தக் கடைக்கு ஓனர் நீதானே....?"

"ஆமா.... ஸார்..."

"கல்லாவில் உட்கார்ந்திருந்த நீ டீ மாஸ்டராகவும் மாறி டீ போட்டுக்கிட்டு வந்து கொடுத்ததால அப்படிக் கேட்டேன்"

"டீ மாஸ்டர் ஒருத்தர் இருந்தார் ஸார். போன வாரம்தான் வேலையைவிட்டு நின்னுட்டார். முன்ன மாதிரி கடையில் வியாபாரம் இல்லை ஸார். ஆறு மாசத்துக்கு முந்தி வரை இந்த ஏரியாவில் நிறைய கட்டிட வேலை நடந்துட்டு இருந்தது. லேபர்ஸ் நிறைய பேர் வந்து வேலைப் பார்த்ததால வியாபாரம் நல்லாயிருந்தது. இப்ப கட்டிட வேலையெல்லாம் முடிஞ்சுட்டதால கால்வாசி வியாபாரம் கூட இல்லை ஸார்."

"ரோட்ல ஆளுங்களை யாரையுமே பார்க்க முடியலையே....?"

"ஸார்.... இது ஒரு என்.ஜி.ஓ. ஆபீஸர்ஸ் காலனி. சுத்தியும் நூத்தம்பது வீடு இருக்கும். காலையில் பத்து மணிக்குள்ளே எல்லாரும் வேலைக்கு கிளம்பிப் போயிடுவாங்க. சாயந்திரம் ஆறுமணிக்கு மேல்தான் திரும்பி வருவாங்க."

"இந்த ஏரியாவில் எல்லாமே வீடுகள்தானா?"

"ஆமா ஸார்.... ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி இந்த இடத்தை வாங்கி ஒரே மாதிரியான வீடுகளைக் கட்டி சேல் பண்ணினாங்க...."

"இங்கே குடியிருக்கற ஆட்களில் யாராவது வி.ஐ.பி இருக்காங்களா....?

" "அப்படி யாரும் இருக்கிறமாதிரி தெரியலை ஸார்"

"நல்லா யோசனை பண்ணிச் சொல்லு. அந்த நபர் அரசியலிலோ வேறு ஏதாவது துறையிலியோ பெரிய ஆளாய் இருக்கலாம்....."

அந்த முரளி இப்போது இரண்டு பேரையும் மிரட்சியோடு பார்க்க விஷ்ணு டீயைக் குடித்து முடித்து காலி டம்ளரை மேஜையில் வைத்துக் கொண்டே குரலைத் தாழ்த்தினான்.

"நாங்க போலீஸ். ஒரு கொலை விஷயமாய் முக்கியமான நபர் ஒருத்தரை தேடிக்கிட்டு இங்கே வந்து இருக்கோம். அந்த நபர் இந்த ஏரியாவில் இருக்கிறதாய் தகவல்."

முரளியின் நெற்றியில் இப்போது வியர்வை.

"ஸார்! நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எனக்கு இந்த ஏரியாவில் யாரையும் தெரியாது!"

"இது பார் முரளி..... உனக்கு அந்த நபரை தெரியும்ன்னு நாங்க சொல்லல வரலை.... இங்கே இருக்கிற முக்கியமான நபர்கள் யார் யாருன்னு சொல்லு போதும். அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய நபரை நாங்க ஃபில்டர் பண்ணிடுவோம்"

முரளி இருண்ட முகத்தோடு சில வினாடிகள் யோசித்துவிட்டு பிறகு தயக்கமான குரலில் சொன்னான்.

"ஸார்.... நாலு மாசத்துக்கு முன்னாடி இந்த நகரோட ஒன்பதாவது குறுக்குத் தெருவில் குடியிருந்த ஜோதிமாணிக்கம் என்கிற ஒரு பெரிய பணக்காரரோட வீட்ல வருமானவரி ரெய்டு நடந்தது."

"அந்த ஜோதிமாணிக்கம் என்ன தொழில் பண்றார் ?"

"அவர்க்கு தாம்பரத்துல ஒரு பெரிய நகைக்கடை இருக்கிறதாய் பேசிக்கிட்டாங்க"

"அந்த ரெய்டு விவகாரம் என்னாச்சு?"

"தெரியலை சார்...."

"சரி, வேறு எதுமாதிரியான எல்லாம் இந்த ஏரியாவில் நடந்தது?"

"அதுக்கப்பறம் வேறு எதுவும் நடக்கலை ஸார்"

விவேக் விஷ்ணுவுக்கு கண்ணைக் காட்ட அவன் தன் சட்டைப் பாக்கட்டில் வைத்து இருந்த சுடர்கொடியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து முரளியின் முகத்துக்கு நேராய் நீட்டினான்.

"இந்தப் பொண்ணை இதுக்கு முன்னாடி வேற எங்கேயாவது எப்பவாவது பார்த்து இருக்கியா?"

பார்த்துவிட்டு முரளி முகம் மாறினான்.

"ஸார்.... இந்தப் பெண்ணைத்தான் கடந்த ரெண்டு நாளாய் டி.வி.யில் காட்டிகிட்டு இருக்காங்க... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒரு நபரால கொடூரமாய் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண். பேர் கூட சுடர்கொடி."

"இந்தப் பெண்ணை இந்த ஏரியாவில் எப்பவாவது பார்த்து இருக்கியா?"

"இல்ல ஸார்"

"பொய் சொல்லாதே! பின்னாடி நீ சொன்னது பொய்ன்னு தெரிஞ்சா போலீஸ் லாக்கப்புக்குள்ளே நீ உட்கார வேண்டியிருக்கும்!"

"நான் எதுக்காக ஸார் பொய் சொல்லணும்? டி.வி.யில் இந்தப் பொண்ணோட போட்டோவைப் போட்டு போட்டுக் காட்டினதுலதான் நீங்க போட்டோவைக் காட்டினதுமே என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது..."

"சரி.... அந்த நகைக் கடைக்காரரோட பேர் என்னான்னு சொன்னே?"

"ஜோதிமாணிக்கம் ஸார்"

"இந்த நகரோட ஒன்பதாவது குறுக்குத் தெருவில் அவரோட வீடு இருக்கா?"

"ஆமா ஸார்"

விவேக் எழுந்தான்.

"விஷ்ணு கிளம்பு...!"

விஷ்ணு "டீ எவ்வளவு " என்று கேட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்ட அவன் "பரவாயில்லை ஸார்" என்று பின் வாங்கினான்.

"ஓசியில் டீ குடிக்கறதில்லைன்னு இருபது வருட சபதம். அந்த சபதத்தை நாசம் பண்ணிடாதே... பணத்தை வாங்கிக்க..."

முரளி பணத்தை வாங்கிக்கொள்ள இருவரும் பேக்கரியை விட்டு வெளியே காரில் ஏறினார்கள்.

கார் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நகர்ந்தது.

"பாஸ்"

"சொல்லு"

"இப்ப நாம அந்த நகைக்கடைக்காரர் ஜோதிமாணிக்கத்தைப் பார்த்து என்ன பேச போறோம்?"

"நாம இப்ப அவரைப் பார்க்க போகலை?"

"அப்புறம்....?"

"கொஞ்சம் இடது புறம் திரும்பி அந்த மரத்துக்குக் கீழே தெரியற ஒரு இண்டெக்ஸ் போர்ட்டைப் பாரு"

விஷ்ணு திரும்பிப் பார்த்தான்.

இந்த இண்டெக்ஸ் போர்டில் புழுதி அப்பியிருந்தாலும் அதில் எழுதப்பட்டு இருந்த சிவப்பு பெயிண்ட் ஆங்கில எழுத்துக்கள் பார்வைக்குத் தட்டுப்பட்டது.

'WAY TO OBSERVATION HOME'

" 'வே டூ அப்சர்வேஷன் ஹோம்' ன்னு போட்டிருக்கு பாஸ்.

அது ஏதோ அநாதை விடுதி போலிருக்கு. அங்கே எதுக்கு போறோம்?"

"அது அநாதை விடுதியில்லை விஷ்ணு?"

"பின்னே?"

"அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு கீழே தமிழில் என்ன எழுதியிருக்குன்னு பாரு?"

விஷ்ணு பார்த்தான்

"கூர்நோக்கு இல்லத்துக்கு செல்லும் வழி"

"ஏதாவது புரியுதா விஷ்ணு?"

"புரியலை பாஸ்"

"சரி... கூர்நோக்கு இல்லம் என்கிற தமிழ் வார்தையைப் படிக்கும் போது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வார்த்தை ஞாபகத்துக்கு வருதா...?"

விஷ்ணு யோசித்துவிட்டு

"வரலையே பாஸ்" என்றான்.

"ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி திணறித் திணறி பேசின மூணு வார்த்தைகள் என்னான்னு ஞாபகத்துக்கு வருதா பாரு"

"வருது பாஸ் "

"என்னென்ன ?"

"குர்நோக்கம், ஜெ.சி.ஹெச் ஹாசிர்வதம்"

"இந்த மூணுவார்த்தைகளில் முதல் வார்த்தையான 'குர்நோக்கம்' ஏன் கூர்நோக்கு இல்லமாய் இருக்கக்கூடாது?"

"பாஸ்" வியப்பில் வாயைப் பிளந்தான் விஷ்ணு.

(தொடரும்)

 



Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-27-291315.html

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 28

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது.

 

இனி...

விஷ்ணு இன்னமும் வியப்பில் இருந்தான்.

"பாஸ்! எல்லாருக்கும் ரெண்டு கண்ணு, ரெண்டு காது, ரெண்டு கை, ரெண்டு கால், ஒரு மூளைன்னு இருக்கும். உங்களுக்கு மட்டும் ரெண்டு மூளை, பதினாறு கண்ணு... அது எப்படி பாஸ், என்னோட பார்வைக்குப் படாதது எல்லாமே உங்க பார்வைக்கு ஸ்பஷ்டமாய் கிடைக்குது..? அந்த WAY TO ABSERVATION HOME போர்டு ரோடு ஓரத்துல புழுதி அப்பிக் கிடக்குது. அதைப் போய் அல்ட்ராசோனிக் ஸ்கேன் பண்ணி, அதுக்குக் கீழே பொடி எழுத்தில் இருக்கிற கூர்நோக்கு இல்லம் என்கிற தமிழ் மொழிப் பெயர்ப்பையும் படிச்சிட்டீங்க.. கிரேட். நீங்க வாழற காலத்துலதான் நானும் வாழறேன்னு நினைக்கும்போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பாஸ். யார் யாரையோ 'பிக் பாஸ்'னு சொல்றாங்க. உண்மையிலேயே நீங்கதான் 'பிக் பாஸ்'.

"டேய் போதுண்டா... இப்பதான் சுடர்கொடி கொலை கேசுல ஒரு ஹோல்டிங் கிடைச்சிருக்கு. இதைக் கெட்டியாய் பிடிச்சுக்கிட்டுதான் கொலையாளியை நோக்கி அங்குலம் அங்குலமா நகரணும்."

"அப்படி நகர்ந்தா ரொம்ப லேட்டாகும் பாஸ். ஒவ்வொரு அங்குலத்துக்கும் பதிலாய் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கணும்".

"விஷ்ணு... கூர்நோக்கு இல்லம் எது மாதிரியான இல்லம்ன்னு தெரியுமா...?"

"என்ன பாஸ்...! க்ரைம் ப்ராஞ்சில் அதுவும் உங்க கூட சேர்ந்து அல்லும் பகலும் உழைச்சுட்டிருக்கிற என்கிட்ட இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா...?"

"எனக்கும் வேண்டியது பதில்"

"நோட் பண்ணிக்குங்க பாஸ். கூர்நோக்கு இல்லத்துக்கு இன்னொரு பேரு கண்காணிப்பு இல்லம். பதினெட்டு வயசுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்பாம ஒரு விடுதியில் தங்க வெச்சு அவங்களோட நடவடிக்கைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்துகிற ஓர் இல்லம். நான் சொன்னது சரியா பாஸ் ?'

 

"ரொம்பச் சரி...."

"ஆனா பாஸ்.... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒரு நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர்கொடிக்கும் இந்த கூர்நோக்கு இல்லத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"

"சுடர் கொடிக்கும் கூர் நோக்கு இல்லத்துக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை."

"அப்புறம் ?"

'ஹாஸ்பிடலில் இப்போ சுய உணர்வு இல்லாமல் படுத்துட்டிருக்கிற ஜெபமாலைக்கும் கூர்நோக்கு இல்லத்துக்கும்தான் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கு.... அதனால்தான் ஜெபமாலை சுய உணர்வை இழக்கும் தன்னோட கடைசி விநாடிகளில் தான் சொல்ல விரும்பியதை அவசர அவசரமாய் சொல்ல முயற்சி பண்ணி கூர்நோக்கு இல்லத்தை குர்நோக்கும்ன்னு சொல்லியிருக்கணும்....!"

"பாஸ்....! உங்க 'கெஸ் ஒர்க்' படி பார்த்தா சுடர்கொடி கொலை செய்யப்படுவதற்கான முழு காரணமும் ஜெபமாலைக்குத் தெரியும் போலிருக்கே ?'

'"கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்"

 

"அப்படி தெரிஞ்சிருந்தா ஜெபமாலை நேரிடையாவே உங்களை சந்திச்சி எல்லா உண்மைகளையும் சொல்லிருக்கலாமே... பாஸ்..."

"சொல்லிருக்கலாம்தான்.... ஆனா ஜெபமாலை சில விஷயங்களை மட்டும் நம்ம கிட்டே சொல்லி வேற யாரோ ஒரு நபரை இந்த சுடர்கொடி மர்டர் கேஸிலிருந்து காப்பாற்ற நினைச்சிருக்கலாம். இதெல்லாம் இப்போதைக்கு வெறும் கெஸ் வொர்க்தான். இது பொய்யாகவோ உண்மையாகவோ மாற வாய்ப்பு இருக்கு.... அதோ அந்தக் கட்டிடம்தான் கூர்நோக்கு இல்லமாய் இருக்கணும்னு நினைக்கிறேன்."

காரின் வேகத்தை ரோட்டின் குறுக்கே வந்த ஒரு ஸ்பீட் ப்ரேக்கருக்காகக் குறைத்துக் கொண்டே சொன்னான் விவேக். விஷ்ணு குனிந்து பார்த்துவிட்டு சிரித்தான்.

"நிச்சயமாய் அந்த கட்டிடமாய்தான் இருக்கணும் பாஸ் ஏன்னா 1950 களில் அடிச்ச காவி நிற சுண்ணாம்பு பூச்சு இப்படித்தான் இருக்கும்..."

அடுத்த ஒரு நிமிட பயணத்தில் ஓடுகளால் வேயப்பட்ட அந்தச் சிறிய காவி நிற கட்டிடத்தை கார் நெருங்கி ஒரு மரத்தின் கீழ் தன் இயக்கங்களை நிறுத்திக் கொண்டது.

விவேக்கும் விஷ்ணுவும் இறங்கினார்கள்.

கட்டிடத்தின் முகப்பில் காம்பெளண்ட் கேட் என்றம்பெயரில் பெயிண்ட் உதிர்ந்து துருவேறிய தகரத்தாலான கதவு ஒன்று தெரிய அதற்கு பக்கத்திலேயே 45 டிகிரி சாய்ப்பான கோணத்தில் அறிவிப்பு போர்டு ஒன்று பார்வைக்குத் தட்டுப்பட்டது.

தமிழில் வரிவரியாய் எழுதப்பட்டிருந்த அந்த வாசகங்களை விவேக்கும் விஷ்ணுவும் பார்வைகளால் மேய்ந்தார்கள்.

 

குற்றச் சிறுவர் கூர்நோக்கு இல்லம்

(JUVENILE CARE HOME)

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செய்யும்

பல்வேறு வகையான குற்றச் செயல்களுக்காக

மாவட்ட சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க

வைக்கப்பட்டு வரும் காலங்களில் தீயவழிகளில்

மனதைச் செலுத்தாமல் நல்வழியில் மனதைச் செலுத்த

பயிற்சி தரப்படுகிறது. அந்த வகையில் இந்த

கூர்நோக்கு இல்லத்தில் இங்கே

தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு உணவு

உடை, இருப்பிடம் தந்து கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

இந்த சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட சிறுவர்

கூர்நோக்கு இல்லங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின்

நிதிகள் மூலம் மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத்

துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு

(DISTRICT CHILD PROTECTION UNIT) மற்றும் இளைஞர்

நீதிக் குழுமத்தின் (JUVENILE JUSTICE BOARD)

வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

 

விஷ்ணு படித்து விட்டு சின்னதாய் கொட்டாவி ஒன்றை வெளியேற்றியபடி விவேக்கிடம் திரும்பினான். "ஏதோ பரீட்சைக்குப் படிக்கிற பாடம் மாதிரி இருக்கு பாஸ்"

"விஷ்ணு....! இந்த அறிவிப்புப் பலகையில் நாம தேடிகிட்டு இருக்கிற இன்னொரு விஷயம் தெளிவாய் ஒளிஞ்சிட்டிருக்கு"

"என்ன பாஸ் சொல்றீங்க ?"

"ஜெபமாலை சொன்ன மூணு வாஅர்த்தைகளில் ரெண்டாவது வார்த்தை என்ன ?"

"ஜே சி எச்"

"அந்த ஜே சி எச் எழுத்துக்களோட விரிவாக்கம் இதே அறிவிப்புப் பலகையில் இருக்கு...."

"எங்கே பாஸ் ?"

"அறிவிப்புப் பலகையில் இருக்கிற ஆரம்ப வரியைப் படி....!"

விஷ்ணு படித்தான்.

"குற்றச் சிறுவர் கூர்நோக்கு இல்லம்"

"அதுக்குக் கீழே இங்கிலீஷ்ல என்ன போட்டிருக்கு ?"

"JUVENILE CARE HOME"

"ஜே சி எச்...." "ஜெபமாலை சொன்ன ஜே சி எச் இதுதான்"

"பாஸ்.... கேஸ்ல வெளிச்சம் அடிக்குது... இந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமாகியிருக்கணும். இனி நமக்கு தெரிய வேண்டியது மூணாவது வார்த்தைக்கான அர்த்தம்."

"அதாவது ஹாசீர்வதம்...?"

"ஆமா பாஸ்... இந்த கூர் நோக்கு இல்லத்துக்குள்ள போய் ஒரு சின்ன என்கொயரியை நடத்தினா அந்த மூணாவது வார்த்தைக்கான அர்த்தம் என்னான்னு தெரிஞ்சுடும்..!"

விவேக்கும் விஷ்ணுவும் அந்த அரதப் பழசான காவி பெயிண்ட் கேட்டை நோக்கிப் போனார்கள். அது உட்பக்கமாய் பூட்டப்பட்டு இருக்கவே விஷ்ணு கேட்டை ஆட்டினான்.

"யாரது ?" என்ற சத்தத்தோடு காம்பெளண்ட் கேட்டின் வலது பக்கமாய் இருந்து ஒரு சின்ன சதுரக் கதவு திறந்து ஒரு நரைத்த தலை எட்டி பார்த்தது.

விஷ்ணு, "போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச். ஒரு என்கொய்ரி விஷயமாய் வந்திருக்கோம்," என்றான்.

அடுத்த சில விநாடிகளில் அந்த தகரத்தாலான காம்பெளண்ட் கதவு ஒரு பேய் திரைப்படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக்கோடு திறந்தது.

தொள தொளப்பான காக்கி பேண்ட் காக்கி சட்டையில் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வாட்ச்மேன் சற்றே பதட்டத்தோடு பார்வைக்குத் தட்டுப்பட்டார்.

விவேக் அவரை நெருங்கி கேட்டான்.

"அப்ஸர்வேட்டிவ் ஆபீஸர் உள்ளே இருக்காரா?"

"இ....இ... இருக்கார் ஸார்"

"அவர் பேர் என்ன ?"

"சச்சிதானந்தம் ஸார்"

"அவரோட ரூம் எது...?"

"அதோ... அந்த வேப்பமரத்தை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரை தெரியுதே அதான் ஸார்"

"நீங்க இங்கே வாட்ச் மேனா...?"

"ஆமா ... ஸார்"

"பேரு..?"

"அய்யப்பன் ஸார்..."

"இந்த கூர்நோக்கு இல்லத்துல எத்தனை இளம் குற்றவாளிகள் இருக்காங்க?"

"ஸார்... அந்த விபரம் எல்லாம் எனக்கு தெரியாது.

பசங்க வெளியே போகாதபடி பார்த்துக்க வேண்டியது மட்டுமே என்னோட வேலை. மத்த விபரம் ஆபீஸர்க்குத்தான் தெரியும்..."

"விவேக்கும் விஷ்ணுவும் சற்று தூரத்தில் தெரிந்த அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறையை நோக்கிப் போனார்கள்."

"விஷ்ணு !"

"பாஸ்"

"அந்த வாட்ச்மேன் அய்யப்பனை நோட் பண்ணியா ?"

"பண்ணாமே இருப்பேனா பாஸ்... அவன்கிட்டே ஒரு பதட்டம் தெரியுது... இந்த கூர்நோக்கு இல்லத்தை பத்தி யாராவது ஏதாவது கேள்வி கேட்டா நேரிடையாய் பதில் சொல்லக்க்கூடாதுன்னு ஏற்கன்வே யாரோ உத்தரவு போட்டு இருக்கிற மாதிரி என்னோட மனசுக்குப் படுது"

"அந்த அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானதம் எப்படிப்பட்டவர்ன்னு இப்பப் பார்த்துடலாம்"

விவேக்கும் விஷ்ணுவும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் அறையை நெருங்கினார்கள்.

அதே விநாடி

- எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று விவேக் விஷ்ணுவுக்கு முன்பாய் வந்து விழுந்தது.

காகிதம் சுற்றப்பட்ட கல்.

"விஷ்ணு... அதை எடு...."

விஷ்ணு எடுத்து பிரித்துக் கொண்டிருக்க விவேக் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"கல் எறிந்தது யார் ?"

'எந்த திசையில் இருந்து வீசியிருப்பார்கள் ?'

விவேக் யோசிப்பில் இருக்க விஷ்ணு ரகசியம் பேசுகிற தினுசில் கூப்பிட்டான்.

"பாஸ் ! இதைக் கொஞ்சம் பாருங்க "

- தொடரும்... 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-plus-one-zero-part-28-294158.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 29

 

 - ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே ஒரு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் விசாரணைக்கு நுழைகிறார்கள்.

இனி...

விஷ்ணு அந்தக் கல்லில் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை மெல்ல கிழித்து விடாமல் பிரித்து விரித்தான்.

அதில் பென்சிலால் எழுதப்பட்ட கோணல் மாணலான தமிழ் எழுத்துக்கள் சின்னச் சின்ன வார்த்தைகளாக மாறியிருந்தன. விவேக்கை ஏறிட்டான் விஷ்ணு, "பாஸ்... ஏதோ லெட்டர் மாதிரி தெரியுது..."

"படி..."

விஷ்ணு படித்தான்.

"எங்களுக்குத் தேவை நீதி விசாரணை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை நான்கைந்து பேர் தப்பித்து போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது?"

கடிதத்தைப் படித்த விஷ்ணு விவேக்கிடம் நீட்டினான். "பாஸ்.. இந்த விடுதியில் சிறைக் கைதியாய் இருக்கிற யாரோ ஒரு பையன் தான் இந்த லெட்டரை எழுதி கல்லில் சுத்தி நம்ம பார்வைக்கு தட்டுப்படும்படியாய் வீசி இருக்கணும்."

விவேக் அந்த சிறை விடுதியை திரும்பிப் பார்த்தான்.

எல்லா ஜன்னல் கதவுகளும் அடைபட்டு இருக்க அந்த சிறைவிடுதி பகல் நேரத்திலேயே கனத்த நிசப்தம் இருந்தது.

"உங்களுக்கு யார் வேணும்?"


பின்பக்க குரல் கேட்டு விவேக்கும் விஷ்ணுவும் திரும்பி பார்த்தார்கள். நடுத்தர வயதில் அந்த மனிதர் வேப்ப மரத்துக்குக் கீழே நின்றிருந்தார். காக்கி பேண்ட், வெள்ளை சர்ட். பெப்பர் சால்ட் தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்தார். மீசைக்கு மட்டும் 'டை' அடித்து இருப்பது தெரிந்தது.

விஷ்ணு அவரை நோக்கிப் போய் தன்னுடைய உத்யோக அட்டையைக் காட்ட, அவர் சட்டென்று அட்டென்ஷனுக்கு வந்து தளர்ந்தார். நெற்றி இன்ஸ்டண்டாய் வியர்வையின் மினுமினுப்புக்கு உட்பட்டது.

"ஸாரி.... ஸார்"

"நீங்கதான் இங்கே அப்சர்வேடிவ் ஆபீஸர், மிஸ்டர் சச்சிதானந்தம்...?"

"ஆமா....ஸார்...."

"கொஞ்சம் பேசணுமே.... ஒரு சின்ன என்கொய்ரி"

"வாங்க ஸார்.... என்னோட ரூமுக்குப் போயிடுவோம்"

சச்சிதானந்தம் சொல்லிவிட்டு பக்கத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் இருந்த அறையை நோக்கிப் போனார். விவேக்கும், விஷ்ணுவும் பின் தொடர்ந்தார்கள். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஒரு சிறிய அறையைப் போல் இருந்தாலும், உள்ளே நான்கைந்து பெரிய பெரிய பீரோக்களோடு அறை விஸ்தாரமாய் தெரிந்தது. பழங்கால தேக்கு மர மேஜையைச் சுற்றி பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.

"ப்ளீஸ்.... பி ஸீட்டட் ஸார்"

"நீங்களும் உட்காருங்க சச்சிதானதம்"

எல்லோரும் உட்கார்ந்தார்கள். விவேக் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு கேட்டான்.

"நீங்க இந்த அப்ஸர்வேடிவ் போஸ்டிங்குக்கு வந்து எத்தனை நாளாச்சு..?"

"ரெண்டு.... வருஷம் முடியப் போகுது ஸார்"

"உங்களுக்கு முனாடி இந்த போஸ்ட்ல யார் இருந்தாங்க...?"

"ரஹீம் கஸாலி ன்னு ஒருத்தர் ஸார்"

"இப்ப அவர் எந்த ஊர்ல இருக்கார்?"

"அவர் ரிடையர்ட் ஆயிட்டார் ஸார்... திருச்சியில் ஃபேமிலியோடு செட்டில் ஆயிட்டார்"

"இட்ஸ் ஒகே.... மிஸ்டர் சச்சிதானந்தம்..!"

"நாங்க இங்கே வந்தது ஒரு என் கொய்ரிக்காக. ப்ளீஸ் கோ-அப்ரே வித் அஸ்"

"ஷ்யூர் ....ஸார்...."

விவேக் விஷ்ணுவைப் பார்க்க, அவன் தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த சுடர்கொடியின் போட்டோவை எடுத்து சச்சிதானந்தத்தின் முகத்துக்கு நேராய் காட்டியபடி கேட்டான்.

"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா...?"

போட்டோவைப் பார்த்ததுமே அவருடைய கண்களில் மின்னல் வெட்டைப் போல் அதிர்ச்சி கோடு ஒன்று ஓடி மரைந்தது.

"தெ....தெரியும் ஸார்"

"எப்படி?"

"பத்து நாளைக்கு முன்னாடி இந்த சுடர்கொடி இந்த சிறைவிடுதிக்கு வந்து இருந்தாங்க...."

"எதுக்கு?"

"இந்த விடுதியில் இருக்கிற குற்றவாளிகளைப் பார்த்துப் பேசி ;வளையோசை' என்கிற பத்திரிக்கையில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத ஆசைப்பட்டாங்க.... தொடர்க்கான தலைப்பு 'அவிழ மறுக்கும் அரும்புகள்'ன்னும் சென்னாங்க....!"

"நீங்க அதுக்கு அனுமதி கொடுத்தீங்களா?"

"இல்லை"

"ஏன்?"

"நான் இங்கே அப்ஸர்வேடிவ் ஆபீஸர் மட்டுமே. தன்னிச்சையாய் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது ஸார். மேலிடத்துக்கு தகவல் தகவல் கொடுத்துத்தான் அனுமதி வாங்க முடியும். இந்த விபரத்தையும் சுடர்கொடி கிட்டே சொன்னேன்."

"எனக்கு எப்படியாவது அனுமதி குடுங்க ஸார். நான் இன்னும் ஒரு வாரத்துல தொடரைத் தொடங்கும்ன்னு சொன்னாங்க"

"நீங்க அதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தீங்களா?"

"ஆமா ஸார் . நான் உடனடியாய் எனக்கு மேல் இருக்கிற விஜிலன்ஸ் அபீஸர்க்கு போன் பண்ணி விபரத்தைச் சொன்னேன். ஆனா, அவர் அனுமதி கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டார்."

"காரணம்?"

 

"விதி முறைகளில் இடம் இல்லைன்னு சொன்னார்"

"உண்மையிலேயே விதிமுறைகளில் இடம் இல்லையா?"

"அப்படினு கிடையாது ஸார்... மேலதிகாரிகள் பார்த்து கோரிக்கை சரியானதாக இருந்தால் அனுமதி தரலாம். சுடர்கொடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் எனக்குத் தெரியாது."

விவேக் இப்போது குறுக்கிட்டான். "சுடர்கொடி உயிரோடு இல்லை என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் ஸார்... டி.வி. யையும் , பேப்பரையும் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். வெரி வெரி ப்ரூட்டல் மர்டல்... பட்டப் பகலில் வேளச்சேர் ரயில்வே ஸ்டேஷனில் அந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை இன்னமும் என்னால் ஜீர்ணிக்க முடியலை. என்னோட மனசுக்குள்ளே இன்னனும் அந்த அதிர்ச்சி இருக்கு."

"சுடர் கொடியின் கொலைக்கும் இந்த கூர்நோக்கு இல்லம் என்கிற ஜுவைனல் கேர் ஹோமுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்னு நீங்க நினைக்கறீங்களா மிஸ்டர் சச்சிதானந்தம்?"

"அப்படியிருக்கும்ன்னு நான் நினைக்கலை ஸார். அந்தப் பெண் சுடர்கொடி ஒரு தைரியமான ப்ரஸ் ரிப்போர்ட்டர் மற்றும் பிரச்சனைக்குரிய கட்டுரைகளை எழுதுவதில் நல்ல ரைட்டர். ஸோ விரோதிகள் நிறையவே உருவாக வாய்ப்பு இருக்கு... அரசியல்வாதிகளோட பகை வேற. அந்தப் பெண்ணின் மரணத்துக்கு இந்த ஹோம் ஒரு காரணமாய் இருக்க முடியாது ஸார்."

"சரி.... ஜெபமாலை என்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?"

"நல்லாவே தெரியும் ஸார்"

"எப்படி ?"

"அந்த பெண் ஜெபமாலை கடந்த ஒரு வருட காலமாய் இந்த ஹோமுக்கு வந்து இங்கே இருக்கிற இளம் குற்றவாளிகளுக்கு கவுன்ஸிலின் கொடுத்துட்டு இருக்கு"

"கவுன்ஸ்லிங்கா.... எதுக்கு....?"

 

"ஸார்... இந்த ஹோம்ல 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மொத்தம் 57 பேர் இருக்காங்க... இந்த 57 பேரும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தகப்பன் குடிகாரனாகவோ, தாய் கூலிவேலை செய்பவளாகவும் உள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிப் படிப்பில் நாட்டம் இன்றி பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் அற்ற சூழலில், மன அழுத்தத்துக்கு ஆளாகி வழித் தவறிப் போய், போதைக்கு அடிமையாகி அதன் காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்கள், அல்லது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலதரப்பட்ட சிறுவர்கள் இது மாதிரியான ஹோம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர்கள் குற்றவாளிகள் இல்லை. இதுமாதிரியான சிறூவர்களுக்கு தேவை மனிதாபிமான அணுகுமுறையுடன் கூடிய உளவியல் ஆலோசனை. இந்த உளவியல் ஆலோசனையைத்தான் ஜெபமாலை இங்கே வந்து வாரா வாரம் பண்ணிட்டு இருக்காங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் சரியாய் பத்து மணிக்கு வந்து ஒரு மணி நேரம் கவுன்சிலிங் கொடுத்துவிட்டு போயிடுவாங்க."

 

"ஜெபமாலையும், சுடர் கொடியும் நெருங்கிய தோழிகள் என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா ?"

"நல்லாவே தெரியும்.... எனக்கு சுடர்கொடியை அறிமுகப்படுத்தியதே ஜெபமாலைதான்!"

"சரி.... இதை கொஞ்ச்ம பாருங்க" சொன்ன விவேக் கல்லில் வீசப்பட்ட அந்த கசங்கிய காகிதத்தை சச்சிதானந்தத்திடம் நீட்டினார். வாங்கிப் பார்த்து படித்த அவர் தன்னுடைய உதடுகளில் ஒரு புன்னகையை உதிக்க வைத்தார்.

"இந்த கல் கடிதத்தை உங்களுக்கும் வீசிட்டாங்களா ?"

"அப்படீன்னா இது வழக்கமான ஒண்ணா?"

"ஆமா ஸார்... இது காம்பெளண்ட்டுக்குள்ளே யார் புதுசாய் வந்தாலும் சரி இப்படியொரு கல் கடிதம் அவர்களுக்கு முன்னாடி வந்து விழும்..."

விவேக் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"வீசறது யாரு...?"

"இங்க இருக்கிற பசங்கள்ல யாரோ ஒருத்தன் இந்த வேலையை பண்ணிட்டிருக்கான்...!"

 

"யார் அந்த பையன் ?"

"கண்டு பிடிக்க முடியலை ஸார்"

"மிஸ்டர் சச்சிதானந்தம் நீங்க சொல்ற விஷயம் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு... இது மாதிரியான கல் கடிதம் எத்தனை முறை வீசப்பட்டுள்ளதுன்னு சொல்ல முடியுமா ?"

"இந்த ஆறுமாசத்துக்குள்ளே ஒரு பத்து தடவையாவது இருக்கும் ஸார்.

ஒரு தடவை மினிஸ்டர் வந்தப்பக் கூட இப்படியொரு கல்லால் சுற்றப்பட்ட கடிதம் வீசப்பட்டிருக்கு..."

"மினிஸ்டர் என்ன சொன்னார் ?"

"அவர் இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கலை, மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருக்கிற பசங்க இப்படித்தான் எதையாவது எழுதி வீசுவாங்க ... நீங்க கண்டுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா என்னால அப்படி இருக்க முடியலை. இது மாதிரியான கடிதங்களை எழுதி கல்லில் சுற்றி எறிகிற பையன் யார்ன்னு கண்டு பிடிக்க முயற்சி எடுத்துகிட்டேன்."

"ரிசல்ட் என்ன ?"

"யார்ன்னு கண்டு பிடிக்க முடியலை ஸார்... பையன்களோட கையெழுத்தை இந்த லெட்டர்ல இருக்கிற கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்த போது யாரோட கையெழுத்தும் ஒத்துப் போகவில்லை."

"இதுக்கு முன்னாடி இப்படி வீசப்பட்ட கடிதங்களை பத்திரமாய் வெச்சு இருக்கீங்களா ?"

"வெச்சிருக்கேன் ஸார்...." சொன்ன சச்சிதானந்தம் மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் கவரில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த அந்தக் கடிதங்களை எடுத்த விநாடி, அவருடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. டயல் ஸ்க்ரீன் வெளிச்சமாய் தெரிய அழைப்பவரின் பெயர் பளிச்சிட்டது.

ஆசீர்வாதம்

விவேக்கின் பார்வைக்கு அந்த பெயர் கிடைக்க, ஜெபமாலை சொன்ன அந்த கடைசி வார்த்தை 'ஹாசீர்வாதம்' ஸ்லோமோஷனில் ஸ்க்ரோலிங் செய்தபடி அவனுடைய மூளையின் ஓரமாய் நகர்ந்தது.

- தொடரும்...



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-29-296674.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 30

 

 -ராஜேஷ்குமார்

 

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணையைத் தொடர்கிறான் விவேக்.

 

இனி...

அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானந்தத்தின் செல்போன் டயல் ஸ்க்ரீனில் ஆசிர்வாதம் என்ற பெயரைப் பார்த்ததும் விவேக் தன் சகல அவயங்களிலும் ஜாக்கிரதையானான்

'ஜெபமாலை சொன்ன அந்த 'ஹாசீர்வாதம்' ஏன் ஆசிர்வாதமாய் இருக்கக் கூடாது...?'

சச்சிதானந்தம் செல்போனை கையில் எடுத்துக் கொண்டே விவேக் ஏறிட்டார். "எக்ஸ்க்யூஸ்மீ... ஒரு போன் கால் வருது !"

"நோ ப்ராப்ளம். பேசுங்க... மிஸ்டர் சச்சிதானந்தம்".

சச்சிதானந்தம் செல்போனின் டயல் ஸ்கிரீனை தேய்த்து விட்டு காதுக்கு ஏற்றி "வணக்கம் ஃபாதர்...," என்றார்.

"..............."

"எல்லாம் நல்லபடியாய் போயிட்டிருக்கு ஃபாதர் பசங்க யாரும் இப்ப பிரச்சனை பண்றது இல்லை...."

"..............."

டகிறிஸ்துமஸ் செலிபரேஷன்தானே.... நல்லபடியாய் பண்ணிடலாம் ஃபாதர். பசங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வி.ஐ.பி கலந்துகிட்டா ஃபங்க்‌ஷன் சிறப்பாய் இருக்கும்....!"

"..............."

"தேங்க்யூ ஃபாதர்..... அந்த பொறுப்பை நான் எடுத்துக்கறேன்....." என்று சொன்ன சச்சிதானந்தம் மேலும் இரண்டு நிமிடங்கள் ஹோமைப் பற்றி பொதுவாய் பேசிவிட்டு செல்போனை அணைத்தார். விவேக்கை ஏறிட்டபடி சொன்னார்.

"ஸாரி ஸார் ... நாம ஏதோ பேசிட்டிருந்தோம். அதுக்குள்ள ஒரு முக்கியமான போன். ஸ்கிப் பண்ண முடியலை...."

"இஃப் யூ டோண்ட் மைண்ட்... நீங்க இப்ப பேசிகிட்டு இருந்த நபர் ஒரு ஃபாதர்தானே ?"

"ஆமா ஸார்"

"அவர் பேரைத் தெரிஞ்சிக்கலாமா..?"

"தாரளமாய்... அவர் பேரு ஞானகடாட்சம்" விவேக் லேசாய் முகம் மாறினான்.

"என்னது ஞானகடாட்சமா...?"

"ஆமா.... ஸார்"

"அப்படீன்னா .... ஆசீர்வாதம் யாரு ?"

சச்சிதானந்தம் புருவங்களை உயர்த்தினார். "என்னோட செல்போனின் டிஸ்ப்ளேயில் 'ஆசீர்வாதம்'ன்னு வந்ததை பார்த்துட்டு கேட்கறீங்கன்னு நினைக்கிறேன்".

"அதே தான்...."

"ஸார் ! 'ஆசீர்வாதம்'ங்கிறது ஒரு ஹாஸ்பிடலோட பேரு.... ஃபாதர் ஞானகடாட்சம்தான் அந்த ஹாஸ்பிடலோட நிர்வாகப் பொறுப்பாளர். நான் அவரோட செல்போன் நம்பரை ஆசிர்வாதம் என்கிற பேர்ல சேவ் பண்ணி வெச்சிருக்கேன்.'

"அந்த ஆசிர்வாதம் ஹாஸ்பிடல் எங்கே இருக்கு?"

"ஈச்சம்பாக்கத்துல இருக்கு ஸார் ...."

"அது எது மாதிரியான ஹாஸ்பிடல் ?"

"ஸார்... அது ஒரு கிறிஸ்டியானிடி ஹாஸ்பிடல். ஏழைகளுக்கு அங்கே இலவசமாய் வைத்தியம் பார்ப்பாங்க".

"ஞானகடாட்சத்துக்கு ஜெபமாலையைத் தெரியுமா ?"

"நல்லாவே தெரியும் ஸார்...."

"நீங்க அந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கீங்களா ?"

"ஒரு தடவை போயிருக்கேன் ஸார்"

"ஜெபமாலை அந்த ஹாஸ்பிடலுக்கு போறது உண்டா ?"

"அது எனக்குத் தெரியாது ஸார்"

"சரி... நீங்க ஒரு தடவை அந்த ஹாஸ்பிடலுக்கு போறதாய் சொன்னீங்க... எதுக்காக போனீங்க...?"

 

"இந்த விடுதியில் ஒரு பையனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருந்தது ஸார். கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் அல்ட்ராசானிக் ஸ்கேன் வசதி இல்லாததால அந்தப் பையனைக் கூட்டிகிட்டு ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்குப் போனேன்...!"

"நீங்க சொல்றதை வெச்சுப் பார்க்கும் போது அந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடல் ஒரு மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலாய் இருக்கும் போலிருக்கே ?"

"ரொம்பவும் பெரிய ஹாஸ்பிடல்ன்னு சொல்ல முடியாது ஸார். ஓரளவுக்கு இருக்கும். பை....த...பை அந்த ஹாஸ்பிடலைப் பற்றி எதுக்காக ஸார் இப்படியொரு விசாரணை..?"

விவேக் தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் மேஜையின் மேல் ஊன்றிக் கொண்டு குரலைத் தாழ்த்தினான்.

விவேக் தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் மேஜையின் மேல் ஊன்றிக் கொண்டு குரலைத் தாழ்த்தினான்.

"இதோ பாருங்க.... சச்சிதானந்தம்....! இன்னிக்குத் தான் உங்களை முதல் தடவையாய் பார்க்கிறேன். என்னோட கணிப்பில் நீங்க ஒரு தப்பான நபராய் இருக்க மாட்டீங்க என்கிற நம்பிக்கையில் உங்க கிட்டே சில விஷயங்களை ஷேர் பண்ணிக்கப் போறேன். ஒருவேளை நீங்க தப்பான நபராய் இருந்துட்டா.... இப்பவே எல்லா உண்மைகளையும் சொல்லிடறது உத்தமம். பின்னாடி நீங்க ஒரு தப்பான நபர்னு தெரிய வந்தா சட்டம் மூலமாய் உங்களுக்கு கிடைக்கப் போகிற தண்டனை ரெண்டு மடங்கு அதிகமாய் இருக்கும்..."

விவேக் இப்படி சொன்னதும் சச்சிதானந்தம் தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பதறினார்.

 

"ஸார்.... நீங்க இங்கே வந்ததிலிருந்தே என்னோட மனசுக்குள்ளே ஒரு பயம். ஏதேதோ கேள்விகளைக் கேட்டு விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க... இதெல்லாம் எதுக்காகன்னும் எனக்குத் தெரியாது. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க 'நான் ஒரு தப்பான நபராய் இருக்க மாட்டேன்னு' சொன்னீங்க. அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. நான் தஞ்சாவூக்குப் பக்கத்தில் இருக்கிற நற்குடி கிராமத்தில் பிறந்தவன். ஆச்சாரமான குடும்பம். விளையாட்டுக்கு பொய் பேசினா கூட என்னோட அம்மா அப்பாவுக்கு பிடிக்காது. எண்ணெய் போட்டு தடவின பிரம்பை எடுத்து அப்பா விளாசி தள்ளிடுவார். எம்.ஏ. சோசியாலஜியையும், சைக்காலஜியையும் எடுத்து படிச்சு முதல் வகுப்பில் பாஸ் பண்ணி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி இந்த ஜுவனைல் அப்சர்வேடிவ் போஸ்டிங்குக்கு வந்தேன். இருபது வருஷ சர்வீஸ், இதுவரைக்கும் மூணு ஊரு மாறிட்டேன். என்மேல எந்த ஒரு ரிமார்க்கும் கிடையாது. நான் இப்போ பார்த்துட்டிருக்கிறது வேலை இல்லை ஸார். ஒரு மகத்தான சமுதாயப் பணி. தெரிஞ்சோ தெரியாமலோ குற்றங்களை பண்ணிட்டு இந்த சிறார் விடுதிக்கு வர்ற பையன்களை நல்வழிப்படுத்துறதுதான் என்னோட வேலை..."

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த விஷ்ணு கேட்டான்.

"அப்படி உங்களால அவங்களை நல்வழிப்படுத்த முடியுதா ?"

"ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை அப்படியொரு பாஸிட்டிவ்வான நிலைமை இருந்தது. ஆனா, இப்போ அப்படியில்லை"

"காரணம் ?"

"இன்றைய தலைமுறை தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகி சிந்திக்கும் திறனை இழந்து தவறான வழிக்குப் போய் குற்றவாளிகளாய் மாறிகிட்டு இருக்காங்க. இந்த விடுதிக்கு வரும்போதே கடுமையான குற்றங்களை பண்ணிட்டுத்தான் வர்றாங்க. அப்படி பட்டவங்களையெல்லாம் திருத்தறது அவ்வளவு சுலபம் இல்லை."

"இப்போ இந்த விடுதியில் எத்த்னை பேர் இளம் குற்றவாளிகளாய் இருக்காங்கன்னு சொன்னீங்க?"

"மொத்தம் 57 பேர்"

 

"நாங்க இந்த விடுதிக்குள்ளே வந்த போது கல்லில் சுற்றப்பட்ட காகிதம் ஒண்ணு எங்க முன்னாடி வந்து விழுந்தது. அந்த காகிதம் ஒரு கடிதம். அதை வீசியது யார்ன்னு தெரியாது. உங்ககிட்டே கேட்டபோது இது மாதிரியான கல்லால் சுற்றப்பட்ட கடிதங்கள் கடந்த ஆறூமாச காலத்தில் முக்கியமான பிரமுகர்கள் அந்த விடுதிக்கு வரும்போது வீசப்பட்டிருந்ததாய் சொன்னீங்க இல்லையா?"

"ஆமா ஸார்"

"அதை ஏன் நீங்க ஒரு பெரிய விஷயமாய் எடுத்துக்கலை?"

"நான் அப்த விஷயத்தை சீரியஸாய் எடுத்துட்டு ஒரு விசாரணையை மேற்கொண்டேன் ஸார். ஆனா அந்த விசாரணைக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கலை."

விவேக் இப்போது குறுக்கிட்டான்.

"சரி..... அந்த கல்கடிதத்தை எடுத்து மறூபடியும் ஒரு தடவை படிச்சுப் பாருங்க"

"படிச்சுப் பார்க்கவே வேண்டியது இல்லை ஸார். எனக்கு அந்த வாசகங்கள் மனப்பாடமாகவே இருக்கு . சொல்லட்டுமா?"

"சொல்லுங்க...."

"எங்களுக்கத் தேவை நீதி விசாரணை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கைந்து பேர் தப்பித்துப் போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது."

"இந்த கடிதத்தை வீசினது யார்ன்னு உங்களுக்கு தெரியலை. அதாவது கண்டுபிடிக்க முடிலை..?"

"ஆமா ஸார்..."

"அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு இருப்பது உண்மையான வாசகங்கள்தானா?"

"உண்மைதான் ஸார். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இந்த விடுதியிலிருந்து நாலைஞ்சு பசங்களாவது தப்பிச்சுப் போயிடறாங்க. ஆனா அவங்கள்ள யாருமே பிடிபடறது இல்லை..."

"ஒருத்தர் கூடவா பிடிபடலை ...?"

"பிடிபடலை ஸார்..., எனக்கும் அதுதான் ஆச்சர்யம்"

"அது ஆச்சர்யம் இல்லை சச்சிதானந்தம். அது ஓரு அசாதரணமான ஆபத்தான விஷயம்"

"ஸார் ! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை....!"

"வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனுல் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர்கொடியின் மரணத்துக்கும், இந்த ஜுவைனல் இளம் சிறார் குற்றவியல் விடுதிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கு"

சச்சிதானந்தத்தின் முகம் மாறியது.

"அ.... அ அது..... எப்படி ஸார்....?"

"இந்த கல் கடிதத்தை வீசியது யார் என்று உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லைதானே ?"

"ஆமாம் ஸார்"

"இன்னும் பத்தே நிமிஷத்தில் அது யார் என்று உங்களுக்கு தெரியும்,"

சொன்ன விவேக்கை சச்சிதானந்தம் மட்டுமல்ல விஷ்ணுவும் ஒரு மெகா வியப்போடு பார்த்தான்.

(தொடரும்..)



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-plus-one-zero-part-30-297735.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 31

 

ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

 

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணையைத் தொடர்கிறான் விவேக்.

 

இனி...

சச்சிதானந்தம் வியப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் மறுபடியும் கேட்டார்.

"அது எப்படி ஸார்.... இன்னும் பத்தே நிமிஷத்தில் கல் கடிதத்தை வீசியது யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியும்? இத்தனை நாட்களாய் இங்கே இருக்கிற என்னாலேயே அது யார்ன்னு கண்டு பிடிக்க முடியலையே ..?"

விவேக் எழுந்தான்.

"அது எப்படின்னு இப்ப பார்த்துடலாம் வாங்க..?"


அறையை விட்டு வெளியே வந்தான் விவேக். விஷ்ணு அவனைப் பின் தொடர்ந்தபடியே கேட்டான். "எப்படி பாஸ் கானாடுகாத்தான் குட்டிச் சாத்தான் கோயிலுக்கு போய் ஏதாவது நடுராத்திரி பூஜை பண்ணி தாயத்து கீயத்து கயிறுன்னு கட்டிட்டு வந்து இருக்கீங்களா..?ட

"பேசாம வந்து வேடிக்கையை பாரு ?"

"பாஸ் மொத்தம் 57 பசங்க.... இந்த இடத்துக்கு இப்பத்தான் வர்றோம். அந்தப் பசங்களையும் முதல் தடவையாய் இப்பத்தான் பார்க்கப் போறோம்.

எவன் கல்லை வீசினான்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்...?"

"உன்னோட மூளைக்கு எதுவுமே தோனலையா ?" "என் கழுத்துக்குக் கீழே இருக்கிற எந்த உறுப்பும் கொஞ்ச நாளா சரியாய் வேலை செய்யறதில்லை பாஸ். ஒரு நல்ல மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலுக்குப் போய்..."

விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே சச்சிதானந்தம் விவேக்கிடம் திரும்பி, "ஸார்... பசங்க இருக்கிற கட்டிடம் இந்தப் பக்கம்.. நீங்க அந்த பக்கமாய் போய்ட்டு இருக்கீங்க...," என்றார்.

விவேக் புன்னகைத்தான்.

"நான் சரியான வழியில்தான் போயிட்டிருக்கேன். என் பின்னாடி வாங்க...!"

சச்சிதானந்தமும் விஷ்ணுவும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே விவேக்கின் இருபுறமும் நடந்தார்கள்.

அடுத்த இரண்டு நிமிட நடையில் விவேக் விடுதியின் நுழைவு வாயில் அருகே இருந்தான். மர நிழலின் கீழே ஸ்டூலில் உட்கார்ந்து கேட்டுக்குள் நுழைய முயன்ற ஒரு நாயை விரட்டிக் கொண்டிருந்த வாட்ச்மேன் அய்யப்பன் மூன்று பேரையும் பார்த்ததும் தயக்கமாய் எழுந்து நின்றான்.

விவேக் அவனை ஒரு புன்னகையில் நனைத்தபடி கேட்டான்.

"என்ன அய்யப்பன்... நாய் உள்ளே வரப் பார்க்குதா ?"

 

"ஆமாங்க ஸார்...."

வாட்ச்மேன் அய்யப்பன் அவ்வளவு இயல்பாய் இல்லை என்பது அவனுடைய மிரட்சியான பார்வையிலேயே தெரிந்தது.

"உனக்கு ரிடையர்மெண்ட் எப்போ...?"

"இன்னும் ஆறுமாசம் இருக்கு ஸார்..."

"இங்கே எத்தனை வருஷமா வேலை பார்க்கிற?"

"இருபது வருஷமாய்"

"உனக்கு இங்கே என்ன பிரச்சனை?"

"ஒரு பிரச்சனையும் இல்ல ஸார்"

"அப்புறம் எதுக்காக இந்த கல் கடிதம் ?"

விவேக் தன் கையில் இருந்த கசங்கிய அந்த தாளைக் காட்டினான்.

"க.... க... கல் கடிதமா...?"

"ம்.... இது நீ எழுதினதுதானே....? ஒரு கல்லில் இதைச் சுற்றி எங்களுக்கு முன்னாடி விழும்படியாய் வீசினது நீதானே?"

அய்யப்பனின் முகம் அடியோடு மாறியது.

"ஸ... ஸ.... ஸார்! நான் எதுக்காக அப்படி பண்ணனும். அதோ.... அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கிற பசங்கள்ல யாரோ ஒருத்தன்தான் வீசியிருக்கணும்..."

"பசங்க யாரும் வீசின மாதிரி தெரியலையே. ஏன்னா இந்த காகிதத்துல இருக்கிற கையெழுத்து ஒத்துப் போகலைன்னு உங்க ஆபீஸர் சொல்றாரே ?"

"ஸார்.... எனக்கு எழுதப் படிக்கவே தெரியாதப்ப நான் எப்படி ஸார் இந்த கடிதத்தை எழுதியிருக்க முடியும் ?"

விவேக் அப்ஸர்வேடிவ் ஆபீஸரிடம் திரும்பினான்.

"என்ன மிஸ்டர் சச்சிதானந்தம் வாட்ச்மேன் அய்யப்பனுக்கு எழுதப் படிக்க தெரியாதா ?"

"அவன் சொல்றது உண்மைதான் ஸார். மாசா மாசம் ரெஜிஸ்டர்ல கைநாட்டு போட்டுத்தான் சம்பளம் வாங்குவான்."


"அப்படீன்னா அய்யப்பன் கடிதம் எழுத வாய்ப்பு இல்லை... ஆனா வேற யாராவது ஒருத்தர் எழுதி கொடுத்து இருக்கலாமே. அதை அய்யப்பன் வாங்கிட்டு வந்து ரெடிமேடா வெச்சுகிட்டு வெளியில் இருந்து முக்கியமான நபர்கள் யாராவது இந்த விடுதிக்குள்ளே வந்தா அவங்க கைகளுக்கு சிக்கும்படியாய் ஒரு கல்லில் காகிதத்தைச் சுற்றி வீசியிருக்கலாமே ?"

அய்யப்பன் இப்போது பயத்தை உதறிவிட்டு லேசாய் வெகுண்டான். "ஸார்... எதுக்காக என் மேல இப்படியொரு பழியைப் போடறீங்க. பசங்கள்ல எவனாவது ஒருத்தன் வீசியிருப்பான். அங்கே போய் விசாரிங்க.

" விவேக் அய்யப்பனையே சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு ஏற்ற இறக்கமான குரலில் கேட்டான்.

"அப்ப... நீ... வீசலை ?"

"இல்லை.... ஸார்"

"சரி... உன்னோட செல்போனைக் குடு"

"செ...செல்போனா... என்கிட்டே செல்போன் இல்ல ஸார்... நான் போன் பண்ணி பேசற அளவுக்கு சொந்த பந்தமோ, சிநேகிதமோ எனக்குக் கிடையாது ஸார். நான் ஒண்டிக்கட்டை....!"

விவேக் திரும்பினான்.

 

"விஷ்ணு..." "பாஸ்"

"அதோ அந்த காம்பெளண்ட் கேட் ஓரமாய் ஒரு அடர்த்தியான மஞ்சள் நிற க்ரோட்டன்ஸ் செடி தெரியுதா ?"

"தெரியுது பாஸ் ..."

"அதுக்குப் பின்னாடி போய் என்ன இருக்குன்னு பாரு"

 

விஷ்ணு நகர முயல அய்யப்பன் பதட்டமானான்.

இரண்டு கைகளாலும் வழி மறித்தான்.

"அ... அ... அங்கே ஒண்ணும் இல்ல ஸார்"

தன்னுடைய சுட்டு விரலை உயர்த்தினான் விஷ்ணு.

"இதோ பார்... உன்னோட வயசுக்கு மரியாதை வேணும்ன்னா தள்ளி நில்லு...."

அய்யப்பன் அரண்டு போனவனாய் தள்ளி நின்றான். விஷ்ணு காம்பெளண்ட் சுவரோரமாய் போய் அந்த க்ரோட்டன்ஸ் செடிக்கு பின்னால் எட்டிப் பார்த்தான்.

"பாஸ் ! ஒரு மஞ்சள் பை இருக்கு!"

"அந்த பைக்குள்ளே என்ன இருக்குன்னு பாரு"

விஷ்ணு அந்த பையைப் பிரித்து உள்ளே பார்த்தான்.

ஒரு ஸ்மார்ட் செல்போன் பார்வைக்குக் கிடைத்தது.

"பாஸ்! செல்போன் இருக்கு"

"அதைக் கொண்டா"

விஷ்ணு செல்போனோடு வந்தான்.

விவேக் அந்த செல்போனை அய்யப்பனின் முகத்துக்கு நேராய் நீட்டினான்.

"இது செல்போனா இல்லை சோப்பு டப்பாவா ?"

அய்யப்பன் இப்போது வியர்வையில் இருந்தான்.

முகம் வெகுவாய் மாறி கண்களில் நீர் பளபளத்தது. விவேக் செல்போனை இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு மெல்லச் சிரித்தான்.

"லேட்டஸ்ட் செல்போன். மைக்ரோமேக்ஸ் ப்ளாக் 64 ஜி.பி. விலை பதினஞ்சாயிரம் ரூபாய். அது என்னோட செல்போன் இல்லேன்னு சொல்லிடாதே அய்யப்பன். ஏன்னா இந்த போன்ல நீ மறைவா நின்னு திருட்டுத்தனமாய் சுத்தும் முத்தும் பார்த்துட்டு பேசிட்டு இருந்ததை நான் பார்த்துட்டேன். பார்த்தது மட்டும் இல்லை, அதை என்னோட சூப்பர் மேக் செல்போன் வழியாய் வீடியோவும் எடுத்துட்டேன், நீ கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்து இருக்கலாம். ஏன்னா அப்சர்வேடிவ் ஆபீஸ் ரூமிலிருந்து பார்த்தா நீ உட்கார்ந்து இருக்கிற இடம் தெரியுது. வீடியோ ரேஞ்ச் சரியான தூரத்தில் இருந்தது. படம் துல்லியம்."


அய்யப்பன் முகம் வெளிறிப் போனவனாய் குரல் குழறினான்.

"ஸ....ஸ.....ஸார்... அது வந்து ....!"

"இனி உன்னோட வாயிலிருந்து ஒரு பொய் கூட வரக்கூடாது அய்யப்பன். கல் கடிதம் உன்னோட வேலைதானே ?"

"ஆ....ஆ.... ஆமா ஸார்.."

"எதுக்காக இப்படி....?"

"மனசு பொறுக்கலை ஸார்"

"எதனால..?"

சந்தர்ப்ப வசத்தால் பல்வேறு வகையான குற்றங்களைப் பண்ணிட்டு இங்கே வர்ற பசங்களை திருத்தி நல்வழிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்லை பொது மக்களுக்கும் இருக்குன்னு நான் நினைச்சதால என்னோட பங்குக்கு நான் இதை பண்ணினேன்...!"

விவேக் அந்தக் கல் கடிதத்தை எடுத்து ஒரு தடவை படித்தான். 'எங்களுக்குத் தேவை நீதி விசாரணை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கைந்து பேர் தப்பித்துப் போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது என்கிற இந்த வாசகங்களை உனக்கு எழுதிக் கொடுத்தது யாரு..?'

"அது... அது.... வந்து..."

"இந்த இழுத்துப் பேசற வேலையெல்லாம் வேண்டாம்.

உண்மையிலேயே உன்னோட நோக்கம் நல்லதாய் இருந்தா நீ யார்க்கும் பயப்பட வேண்டியதில்லை... உண்மையைச் சொல்...!"

அய்யப்பன் கண்களில் மின்னும் நீரோடு பேசினான்.

 

"ஸார்... இந்த விடுதியில் பல வருடமாய் நான் வாட்ச்மேனாய் இருந்துட்டு வர்றேன். இளம் குற்றவாளிகளாய் இங்கே வர்ற சிறுவர்கள் தண்டனைக் காலம் முடிஞ்சு வெளியே போகும்போது மனம் திருந்தி இருப்பாங்க. ஆனா சமீப காலமாய் நடக்கிற சில விஷயங்கள் என்னோட மனசை ரணமாக்கியிருக்கு. இப்ப இருக்கிற அப்சர்வேடிவ் ஆபீஸர் ரொம்பவும் நல்லவர். அவர்க்கும் தெரியாமே வெளியே இருக்கிற யாரோ சிலர் இங்கே இருக்கிற இளம் குற்றவாளிகளை இனம் பிரிச்சு அதில் இருந்து நாலைஞ்சு பேரை தப்ப வெச்சு வேற சில தப்பான வேலைகளுக்குப் பயன்படுத்திக்கிறாங்க. அதைக் கண்டு பிடிக்க இங்கே இதுக்கு முன்னாடி அப்சர்வேடிவ் ஆபீஸராய் இருந்த ரஹீம் கஸாலி அவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தார். அவரால் முடியலை. அதுக்குள்ளே அவர் ரிடையர்ட் ஆயிட்டார். ரிடையர்ட் ஆகி ஒரு மாசமானதும் என்னை ஒருநாள் வந்து இங்கே பார்த்து ரஹீம் கஸாலி சொன்ன விஷயம் 'பகீர்'ன்னு இருந்துச்சு.' -

தொடரும்


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-31-298036.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 32

 

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணையைத் தொடர்கிறான் விவேக்.

 

இனி...

விவேக் கேட்டான்.

"ரஹீம் கஸாலி உன்கிட்டே அப்படி என்ன சொன்னார் அய்யப்பன் ..?"

வாட்ச்மேன் அய்யப்பன் பக்கத்தில் நின்றிருந்த அப்சர்வேடிவ் ஆபிஸர் சச்சிதானந்தை சற்றே தயக்கத்துடன் பார்க்க, அவர் நெருங்கி வந்து அவன் தோள் மீது கையை வைத்தார்.

"இதோ பார் அய்யப்பன்.....! நான் இந்த சிறை விடுதிக்கு ஒரு அதிகாரியாய் இருந்தாலும் என்னை விட உனக்குத்தான் பல விஷயங்கள் தெரிஞ்சிருக்கு. உனக்கு என்னென்ன தெரியுமோ அதையெல்லாம் இவங்ககிட்டே நீ தாராளமாய் சொல்லலாம். உன் பேர்ல துறை ரீதியாய் எந்த ஒரு நடவடிக்கையும் வராமே பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..."

அய்யப்பன் மேலும் சில விநாடிகள் மெளனமாய் இருந்துட்டு கம்மிப் போன குரலில் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

"ஸார்... ரிடையர்ட் ஆபீஸர் ரஹீம் கஸாலி என்கிட்ட சொன்ன பகீர் தகவல் இதுதான். வெளியே இருக்கிற யாரோ ஒரு முக்கிய புள்ளி இந்த சிறை விடுதியில் இருக்கிற சில சிறுவர்களை இங்கிருந்து தப்பிக்க வெச்சு, அவங்க வெளியே வந்ததும் தன்னோட இடத்துக்கு கூட்டிப் போய் சில நாட்கள் தங்க வெச்சு ஒரு டாக்டர் மூலமாய் மூளைச் சலவைப் பண்ணி மிகப் பெரிய சட்டவிரோதமான வேலைகளுக்கு பயன்படுத்திகிட்டு அதுக்கப்புறம் அந்த சிறுவர்களை தீர்த்துக்கட்டி எரிச்சுடறாங்களாம். இந்த விஷயத்தை ரஹீம் கஸாலி ஸார் சொன்ன நாளில் இருந்து எனக்கு சரியான தூக்கமில்லை.... எனக்கு பசி எடுத்து சாப்பிட்டு பல நாளாச்சு."

விவேக் குறுக்கிட்டு கேட்டான்

"இப்ப நீ போன்ல பேசினது யார் கூட ?"

"ரஹீம் கஸாலி ஸார் கிட்டே.... இந்த விடுதிக்கு உங்களை மாதிரியான முக்கியமான ஆட்கள் வந்தா அவர்க்கு உடனே போன் பண்ணி விஷயத்தை சொல்லிருவேன். கல்லில் சுற்றப்பட்ட கடிதத்தை எடுத்து படிச்சிட்டு யாராவது நடவடிக்கை எடுக்கமாட்டாங்களாங்கிற எதிர்பார்ப்பு எங்க ரெண்டு பேர்க்கும் இருந்தது."

"சரி.... ரஹீம் கஸாலிக்கு போன் பண்ணி குடு, நான் பேசறேன்.....!" விவேக் தன் கையில் இருந்த சற்று முன்பு அய்யப்பனிடம் இருந்து வாங்கிய செல்போனை நீட்ட, அவன் அதை தயக்கத்தோடு வாங்கி டயல் செய்து மறுமுனையில் இருந்த ரஹீம் கஸாலியுடன் பேசி விபரத்தைச் சொல்லிவிட்டு விவேக்கிடம் நீட்டினான். விவேக் போனை வாங்கி காதுக்கு ஏற்றினான்.

 

"வணக்கம் சார்"

"வணக்கம் மிஸ்டர் கஸாலி"

"ஸார்... உங்க கூட பேசறதுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். இப்படியொரு சந்தர்ப்பத்தை நான் எதிர்பார்க்கலை!"

"எனக்கு சந்தோஷமில்லை கஸாலி.... வாட்ச்மேன் அய்யப்பன் மூலமாய் நான் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டேன். நீங்க இந்த கூர்நோக்கு இல்லத்தில் அப்ஸர்வேடிவ் ஆபிஸராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இல்லத்தில் ஏதாவது சட்ட விரோதமா நடந்திருந்தா அதை முறைப்படி எந்தத் துறைக்கு தெரியப்படுத்தணுமோ அந்தத் துறைக்கு தெரியப்படுத்தலாமே. அதை விட்டுட்டு ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ?"

 

"ஸாரி ஸார்..... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிரோடு இருந்த நியாயம், நேர்மை, வாய்மை போன்ற வார்த்தைகள் இப்போது வெறும் வார்த்தைகளே.... இந்த அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் நல்லவங்களும் இருக்காங்க... கெட்டவங்களும் இருக்காங்க... ஆனா அதில் யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு இனம் பிரிக்கிறதுதான் கஷ்டம். யாரையும் நம்பி எதையும் சொல்ல முடியலை. நான் வேலையிலிருந்து ரிடையர்ட் ஆயிட்டாலும் என்னோட அம்மாவும் அப்பாவும் இன்னமும் இருக்காங்க. அப்பாவுக்கு எண்பத்தேழு வயசு, அம்மாவுக்கு எண்பது வயசு. எனக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. ரெண்டு பேர்க்கும் கல்யாணமாகிடுச்சு. ஒரு பேரன் ஒரு பேத்தி. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாய் போயிட்டிருக்கு. இருந்தாலும் என்னோட மனசுக்குள்ளே ஒரு குற்ற உணர்ச்சி."

 

"என்ன குற்ற உணர்ச்சி?"

"ஸார்....! நான் அந்த கூர்நோக்கு இல்லத்தில் நன்னடத்தை அதிகாரியாய் இருந்து வேலை பார்த்த போது, விடுதியிலிருந்து சில சிறுவர்கள் தப்பிச்சுப் போறதும், சில நாட்களுக்குப் பிறகு பிடிபட்டு திரும்பி வர்றதும் வாடிக்கையா இருந்தது. ஆனா நான் ரிட்டயர் ஆன பிறகு, அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்துப் போகிற சிறுவர்கள் பற்றிய செய்தி மூணு மாசத்துக்கு ஒரு தடவையாவது பேப்பரில் படிக்கும் போது மனசு வலிக்கும். தப்பித்துப் போன சிறுவர்கள் அடுத்த சில நாட்களில் போலீஸாரின் கையில் எப்படியாவது மாட்டிக் கொள்வார்கள். ஆனால் தப்பித்துப் போன சிறுவர்கள் மறுபடியும் விடுதிக்கு திரும்புவது இல்லை என்கிற செய்தி என்னை ரொம்பவே பாதித்தது. சம்பந்தப்பட்ட மேலிடத்துறை தலைவர்க்கு வாரம் ஒரு அனானிமஸ் லெட்டர்ஸ் எழுதிப் போட்டேன். வேறு வேறு பெயர்களில் கடிதங்கள் டைப் செய்து அனுப்பி வைத்தேன். பதில் இல்லை. சி.எம். செல்லுக்கும் அதன் நகல்களை அனுப்பி வைத்தேன். எல்லாமே கிணற்றில் போட்ட கற்களாயிற்று. அதற்குப் பிறகுதான் ஒருநாள் வாட்ச்மேன் அய்யப்பனை அங்கே வந்து பார்த்தேன். விஷயத்தைச் சொல்லி அந்த கூர்நோக்கு இல்லத்தில் என்ன நடக்கிறது என்று கவனித்து எனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். செல்போனும் வாங்கிக் கொடுத்தேன். விடுதிக்கு யாராவது வி.ஐ.பி.க்கள் வந்தால் கல் கடிதம் வீசச் சொன்னதும் நான்தான். நானோ அய்யப்பனோ இந்த காரியத்தை வெளிப்படையாய் பண்ணியிருந்தா இந்த உண்மைகளை எல்லாம் இப்ப உங்க கிட்டே சொல்ல நாங்க உயிரோடு இருந்திருக்க மாட்டோம்."

 

"உங்க நிலைமை எனக்கு புரியுது கஸாலி. இனிமேல் இந்த விஷயத்தில் நீங்களோ அய்யப்பனோ பயப்பட வேண்டியதில்லை. நான் இப்போ கேட்கப் போகிற கேள்விகளுக்கு மட்டும் நீங்க உண்மையான பதில்களைச் சொன்னா போதும் இது எதுமாதிரியான குற்றம், குற்றவாளி யார் என்கிற உண்மையைக் கண்டுபிடிக்க நாங்க இனி முயற்சி எடுத்துக்குவோம்."

"ஸார்.... நீங்க எது மாதிரியான கேள்விகளைக் கேட்டாலும் சரி அதற்கான பதில்கள் உண்மை நிரம்பினதாகவே இருக்கும். கேளுங்க ஸார்....!"

"என்னோட முதல்கேள்வி இதுதான். இந்த கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்களை தப்பித்து போக வைக்கிற நபர் யார் ?"

"அந்த நபர் யார்ன்னு எனக்குத் தெரியாது ஸார். ஆனா அந்த நபர் வடநாட்டு அரசியல் பிரமுகர். சில க்ரிமினல் வழக்குகள் அவர் பேர்ல நிலுவையில் இருக்கு. அமைச்சர்களுக்கு வேண்டியவர்."

"இவ்வளவு விபரங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா அவர் பெயர் தெரியாதுன்னு சொல்றது கொஞ்சம் முரண்பாடாய் இருக்கே...?"

"ஸார்... இந்த விபரங்கள் எல்லாம் தெரியக் காரணமே நம்ம உளவுத்துறையில் இருக்கிற என்னுடைய நண்பர் ஒருவர்தான். அவரோட பெயரைச் சொல்ல எனக்கு அனுமதியில்லை," என்று சொன்னவர் விவேக்கிடம் கேட்டார், "மும்பையில் ஒரு கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற கோடீஸ்வர இளைஞனை ஒரு சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்த விபரம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்."

 

"தெரியும்"

"அந்தப் பையன் யார்ன்னு தெரியுமா ஸார் ?"

"தெரியாது"

"அந்தப் பையன் பேரு அன்பரசன். திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில செம்மேடு என்கிற கிராமத்தைச் சேர்ந்த பையன். அப்பா குடிகாரன். தினமும் குடிச்சுட்டு வந்து அம்மாவை அடிக்கிறதைப் பார்த்து பொறுக்க முடியாமே தூங்கிட்டிருந்த அப்பா தலையில் கல்லைப் போட்டுக் கொன்னுட்டான். பெத்த மகனே அப்பாவைக் கொன்னுட்ட அதிர்ச்சியில் அம்மாகாரியும் இறந்துட்டா. கொலையைப் பண்ணிட்டு அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த போது அவனுக்கு வயசு பதினாலு. கொஞ்சம் மூர்க்கமான பையன். நான் அவனை ஹேண்டில் பண்ணியிருக்கேன். போன வருஷம் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிச்ச நாலு பசங்கள்ல இந்த அன்பரசனும் ஒருத்தன். மும்பை கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ராவை கொலை பண்ணினது அன்பரசன்தான்."

"அதாவது கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்ச சிறுவர்களை யாரோ ஒரு நபர் கடத்திக் கொண்டு போய் மூளைச் சலவை செய்து அந்த நபர்க்கு வேண்டாத அல்லது எதிரிகளைக் கொலை செய்யப் பயன்படுத்திக்கிறார். இதுதானே உங்க உளவுத்துறை நண்பர் உங்ககிடே சொன்னது ?"

"ஆமா ஸார்."

"அந்த உளவுத்துறை நண்பர் நம்பிக்கைக்கு உரிய நபர்தானா?"

"மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் ஸார். நாட்ல எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாமே என் கூட ஷேர் பண்ணிக்குவார். அந்த அநியாயத்தை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டுட்டு வரலாம்னு என்கிட்டே யோசனை கேட்பார். நானும் சொல்வேன். எல்லாமே மறைமுகத் தாக்குதல்தான்."

"கஸாலி! இந்த மறைமுகத் தாக்குதல் எல்லாம் நிழலோடு யுத்தம் செய்யற மாதிரி. இந்த நிழல் யுத்தம் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவாது. இனி நேரடி யுத்தம்தான். கிட்டத்தட்ட குற்றவாளிக்குப் பக்கத்துல வந்திட்டோம். அடுத்த 24 மணிநேரத்துக்குள்ளே எல்லா டி.வி,சானல்களிலும் யாருமே நம்ப முடியாத செய்தி ஒண்ணு பிரேக்கிங் நியூஸாய் இடம் பெறலாம்.....!" விவேக் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தான்.

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-32-299170.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 33

 

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை வரை நீள்கிறது.

 

இனி...

காரை விவேக் ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்திருந்த விஷ்ணு புலம்பிக் கொண்டே வந்தான்.

"பாஸ்! அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருக்கிற நபர்கள் ஏன் இப்படி கொலை வெறியோடு இருக்காங்கன்னு தெரியலை. 500 கோடி, 1000 கோடின்னு பணம் சம்பாதிச்சு என்னதான் பண்ணுவாங்க? காலையில நாலு இட்லிக்கு மேல் சாப்பிட்டா நம்ம வயிறு அதுக்கு மேல் சாப்பிடாதே நான் தாங்க மாட்டேன்னு 'நோ எண்ட்ரி' போர்டு போட்டுடுது. ஒரு சாண் வயித்துக்கு இருக்கிற அறிவு கூட ஆறடி மனுஷனுக்கு இல்லையே?"

 

"விஷ்ணு...! அவங்க கோடிக் கணக்கில் கொள்ளை அடிச்சது கூட எனக்கு ஒரு அதிச்சிகரமான விஷயமாய் தெரியலை. ஆனா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சந்தர்ப்பவசத்தால் குற்றங்களைப் பண்ணிட்டு சீர்த்திருத்த சிறைச்சாலைக்கு வர்ற சிறுவர்களை விடுதியிலிருந்து தப்பிக்க வைக்கிறதும், அப்படி தப்பிச்சவங்களையே கடத்திகிட்டு போய் மூளைச் சலவை பண்ணி தனக்கு வேண்டாத நபர்கள் மேல் ஏவி விட்டு கொலை செய்ய வைக்கிறதும், அதுக்குப் பிறகு அந்த சிறுவர்களை எரிச்சு கொல்றதும் எவ்வளவு கொடூரமான செயல், இதுக்கு காரணமானவங்க யாராய் இருந்தாலும் சரி, கண்டுபிடிச்சு நெஞ்சில ஏறி கொண்டு மிதி மிதி மிதிக்கணும்..."

"பாஸ்... அந்த ஆள் யார்ன்னு எப்படி கண்டுபிடிக்கப் போறோம்..?" "விஷ்ணு! இந்த சுடர்கொடி கேஸ்ல நாம தொண்ணூறு சதவீதம் க்ராஸ் பண்ணி வந்துட்டோம். இன்னும் பத்து சதவீதம்தான் குற்றவாளிக்குப் பக்கத்துல வந்துட்டோம்.....!"

"எனக்குத் தெரியலையே பாஸ்..." "கூடிய சீக்கிரம் தெரியும்", விவேக் சொல்லிக் கொண்டே அந்த ஆசிர்வாதம் ஹாஸ்பிடலின் காம்பெளண்ட் கேட்டுக்குள் நுழைந்து 'Way to Parking' என்று இண்டக்ஸ் போர்டு வழிகாட்டிய சிமெண்ட் பாதையில் சென்று ஒரு மரத்துக் கீழே நிறுத்தினான்.

 

இருவரும் இறங்கி நடந்தார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான அந்த ஹாஸ்பிடல் நவீனமாக முயன்று தோற்றுப் போயிருந்தது.

"பாஸ்.... இந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலைப் பார்த்தா ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல வர்ற சர்ச் மாதிரி தெரியுது"

"1942க்கு முன்னாடி வரைக்கும் இது ஒரு சர்ச்தான். அதுக்கப்புறமாய்த்தான் இதை ஹாஸ்பிடலாய் கன்வர்ட் பண்ணியிருக்காங்க....!"

"இதெல்லாம் எப்படி பாஸ் உங்களுக்குத் தெரியுது.

நானும் உங்க கூடவேதான் இருக்கேன்.

இந்த விபரத்தை உங்களுக்கு யாரும் சொன்ன மாதிரி தெரியலையே."

"நீ உச்சா அடிக்க டாய்லட் போயிருந்தப்ப நான் கூகுள்ள போய் 'ஆசீர்வாதம்' ஹாஸ்பிடலோட சரித்திரத்தைப் படிச்சுட்டேன்"

"நான் எல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் பாஸ்...."

"பேசாமே வாடா....."

இருவரும் ஹாஸ்பிடலின் பிரதான வாசல்படி ஏறி உள்ளே போய் ரிசப்ஷன் செண்டரில் இருந்த பெண்ணை நெருங்கினார்கள்.

"ஃபாதர் ஞானகடாட்சத்தைப் பார்க்கணும்"

"நீங்க..?"

"போலீஸ்....?"

"என்ன விஷயமாய் அவரை பார்க்கணும்?"

"அதை அவர்கிட்டதான் சொல்லணும்"

"ஒரு நிமிஷம்,"

சொன்ன அந்த பெண் இண்டர்காம் போனின் ரிஸீவரை எடுத்த விநாடி பின்பக்கம் குரல் கேட்டது. "அயாம் ஃபாதர் ஞானகடாட்சம்," அபாரமான உயரத்தில் திடகாத்ர உடம்போடு வெள்ளை அங்கியில் நின்றிருந்தார். சுத்தமாய் மழிக்கப்பட்ட முகம். முன் மண்டையில் ரோமம் கொட்டியிருந்தது.

விவேக் அவரை நெருங்கி தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவருடைய இரண்டு புருவங்களுமே சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறின.

"போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச் ?"

 

"எஸ்"

"என்னிடம் என்ன விசாரணை ?"

"ஒரு அரைமணி நேரம் ஒரு அறையில் உட்கார்ந்து நிதானமாய் பேச வேண்டிய விஷயம் ஃபாதர்....!"

"ப்ளீஸ்.... கம் வித் மீ...," சொன்ன ஞானகடாட்சம் அந்த நீளமான வராந்தாவில் நடக்க ஆரம்பித்துவிட விவேக்கும் விஷ்ணுவும் பின் தொடர்ந்தார்கள்.

"பாஸ்"

விவேக்கின் காதருகே கிசுகிசுத்தான்.

"என்ன?"

"கவனிச்சீங்களா?"

"எதை ?"

"ஃபாதர்க்கு ஜிம் பாடி...." ஃபாதர் ஞானகடாட்சத்தின் அறை. மெலிதான ஏ.சி. காற்றை சுவாசித்துக் கொண்டே விவேக்கும், விஷ்ணுவும் மாறி மாறி சொன்னதைக் கேட்ட ஃபாதர் அவ்வப்போது லேசாய் முகம் மாறி வியப்புகளை வெளிப்படுத்தினார்.

எல்லாவற்றையும் செவிமடுத்து விட்டு நிதானமான குரலில் கேட்டார். "இப்ப நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்னு நினைக்கறீங்க?"

 

"ஃபாதர் ! ஜெபமாலை சுய உணர்வை இழப்பதற்கு முன்னால் சொன்ன மூணு வார்த்தைகளில் ஒன்னு இந்த ஹாஸ்பிடலோட பெயரான ஆசீர்வாதம். ஸோ இந்த ஹாஸ்பிடலுக்கும், வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர் கொடிக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கு. உங்களுக்கு சுடர்கொடியத் தெரியுமா?"

 

"தெரியாது.... அந்தப் பொண்ணை நான் பார்த்தது கூட இல்லை. டி.வி.யில் செய்தி வெளிவந்தபோதுதான் சுடர்கொடி என்கிற பேரே எனக்குத் தெரியும். ஆனா ஜெபமாலையை எனக்கு நல்லாத் தெரியும். வாரந்தோறும் சில குறிப்பிட்ட நாட்கள் கூர்நோக்கு இல்லத்துக்குப் போய் அங்கே இருக்கிற குற்றவாளிச் சிறுவர்களுக்கு ஜெபமாலை கவுன்ஸிலிங் பண்றதும் எனக்கு தெரியும்."

"இட்ஸ் ஓ.கே.... இன்னொரு விஷயம் ஃபாதர்"

"எஸ்"

"கூர்நோக்கு இல்லத்தில் இருக்கிற குற்றவாளிச் சிறுவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏதாவது ஏற்பட்டால் இந்த ஹாஸ்பிடலுக்குத்தான் ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றதாய் அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானந்தம் சொன்னார். அது உண்மையா ?"

"உண்மைதான். ஜி. ஹெச்.சில் சில வசதிகள் இல்லாதபோது அந்த சிறுவர்கள் இங்கே வருவாங்க..."

"கடந்த ரெண்டு வருட காலத்துல அந்த கூர்நோக்கு இல்லத்திலிருந்து எத்தனை பேர் ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தாங்க என்கிற விபரங்களை எனக்குத் தர முடியுமா ஃபாதர்?"

"உங்களுக்கு எதுக்காக அந்த விபரங்கள் ?"

"ஃபாதர் ! நான் உங்ககிட்டே ஏற்கனவே சொன்னது போல் சமீபகாலங்களில் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பித்து போகிற சிறுவர்கள் போலீஸாரால் திரும்பவும் பிடிபடுவது இல்லை. அவர்கள் கடத்தப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது உளவுத்துறையின் செய்தி. இந்தச் செய்தி உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அந்த விடுதியிலிருந்து தப்பிய அன்பரசன் என்கிற சிறுவன் மும்பையில் ஒரு கோயிலின் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞனைக் குத்தி கொலை செய்த சம்பவம் ஒரு வீடியோ ஆதாரமாக கிடைத்து இருக்கிறது."

"ஃபாதர் குறுக்கிட்டார். 'அந்தச் சிறுவன் அன்பரசன் இந்த ஹாஸ்பிடலுக்கு சமீபத்துல ஏதாவது ட்ரீட்மெண்டுக்கு வந்திருக்கானான்னு தெரிஞ்சுக்க விரும்பறீங்க இல்லையா ?"

 

"எஸ்.... ஃபாதர் .... அந்தச் சிறுவன் அன்பரசனுக்கூ எது மாதிரியான நோய் இருந்தது. அந்த நோய்க்கு எது மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டது என்கிற விபரம் எனக்கு வேணும்."

"நோ... ப்ராப்ளம் பத்து நிமிஷத்துல அந்தத் தகவல்கள் கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்"

 

ஃபாதர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு மெல்ல நெளிந்தபடி, "எக்ஸ்க்யூஸ்மீ ஃபாதர்" என்றான்.

"எஸ்...."

"இங்கே ரெஸ்ட் ரூம் எங்கேயிருக்கு ?"

"வெளியே லெஃப்ட் சைட்ல இருக்கு. போய்ட்டு வாங்க...!" விஷ்ணு எழுந்தான்.

விவேக்கை ஒரு சின்னப் புன்னகையால் நனைத்து விட்டு கதவை நோக்கி போனான்.

விஷ்ணுவின் நடத்தையைப் பார்த்த விவேக்கின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது.

"இந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலில் விஷ்ணுவுக்கு ஏதோ 'க்ளூ' கிடைத்து விட்டது...!"

- தொடரும்...



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-33-299235.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 34

 

ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை வரை நீள்கிறது.

இனி...

அறையினின்றும் வெளிப்பட்ட விஷ்ணு நிதான நடை போட்டபடி ஹாஸ்பிடலின் ரிசப்ஷன் கெளண்டரை நோக்கிப் போனான்.

கெளண்டர்க்குள் உட்கார்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் விஷ்ணு வருவதைப் பார்த்துவிட்டு தயக்கமாய் எழுந்து நின்றாள்.

"ஸார்..."

"உன் பேர் என்ன....?"

"மரியா ஸார்"

"எத்தனை வருஷமாய் இங்கே வேலை பார்க்கிறே ?"

"அஞ்சு வருஷமாய்"

"இந்த ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் கூட்டம் அவ்வளவாக இல்லையே ஏன்....?"

"அது வந்து ஸார்.. இது ஒரு பழங்கால ஹாஸ்பிடல். மருத்துவ வசதிகள் அதிகம் இருக்காதுன்னு என்கிற எண்ணம் இந்த ஏரியாவில் இருக்கிற மக்கள் மனசுல இருக்கு..."

"அது மட்டும்தான் காரணமா ?"

"இன்னொரு காரணமும் இருக்கு ஸார்"

"என்ன...?"

"இங்கே வேலைக்கு வர்ற டாக்டர்ஸ் ஒரு ஆறுமாசம் ஒரு வருஷம்தான் வேலைப் பார்க்கிறாங்க... அப்புறம் ரிசைன் பண்ணிட்டுப் போயிருவாங்க. அதுக்கப்புறம் பேப்பர்ல விளம்பரம் பண்ணி இன்னொரு டாக்டர் வந்து வேலையில் ஜாய்ன் பண்ண மேற்கொண்டு ஒரு ஆறுமாத காலமாயிடும்... போதுமான டாக்டர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் அதிகமாய் வர்றது இல்லை....!"

"நோயாளிகள் யாரும் சரியானபடி வராத காரணத்தால டாக்டர்களும் இங்கே வேலை செய்ய விரும்பறது இல்லை... சரியா...?"

அந்த மரியா மென்மையாய் புன்னகைத்தாள்

"நீங்க சொல்றதும் சரிதான் ஸார்.."

"இப்ப இந்த ஹாஸ்பிடலில் எத்தனை டாக்டர்ஸ் வேலைப் பார்க்கிறாங்க ?"

"பதினாலு பேர் ஸார். அதுல மூணு பேர் லேடி டாக்டர்ஸ்....!"

விஷ்ணு சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கேட்டான்.

"நோயாளிகள் அதிகம் வராததினால உனக்கும் இந்த ரிசப்ஷன் கெளண்டர்ல அதிக நேரம் உட்கார்ந்துட்டு இருக்கிறதும் போர்தான்."

"அது மாதிரியான சமயங்களில் நீ என்ன பண்ணுவே..."

"செல்போன் கையில் இருக்கும்போது என்ன ஸார் பிரச்சனை..? ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு பார்த்தா டைம் பாஸாயிடும்"

"புத்தகம் படிக்கிறதுண்டா ?"

"உண்டு ஸார்"

"என்ன புத்தகம்...?"

 

"இந்த ஹாஸ்பிடலுக்கு வர்ற ஒரே புத்தகம் 'வளையோசைதான்'. அது பெண்கள் சம்பந்தப்பட்ட இதழ்..... இங்கே வேலை செய்யற எல்லா பெண்களும் படிப்பாங்க ஸார்"

"அந்த புத்தகத்தை மட்டும் வாங்கறதுக்கு என்ன காரணம்?"

"அந்த வளையோசைப் புத்தகத்தை நாங்க காசு குடுத்து வாங்கறது இல்லை ஸார்... அது காம்ப்ளிமெண்ட்ரி காப்பி. டாக்டர் ரஞ்சித்குமார்தான் எங்களுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்".

"டாக்டர் ரஞ்சித்குமாரா...?"

"எஸ்.... இந்த ஹாஸ்பிடலில் அவர் ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்..."

"அவர் எதுக்காக ஒரு பெண்கள் வார இதழான வளையோசை பத்திரிக்கையை உங்களுக்கெல்லாம் கொண்டு வந்து தர்றார்?"

விஷ்ணு இப்படி கேட்டதும் முதல் முறையாக மரியா லேசாய் முகம் மாறினான்.

"ஸார்..... எதுக்காக இந்த விசாரணை தெரியலை.... நான் தெரிஞ்சிக்கலாமா ?"

"கண்டிப்பாய்......! இதோ பார் மரியா....! நானும் என்னோட பாஸும் இந்த ஹாஸ்பிடலுக்குள்ளே நுழைந்ததும் முதல் முதலாய் உன்னைத்தான் பார்த்தோம். உன்கிட்டதான் ஃபாதரைப் பத்தி விசாரிச்சோம் இல்லையா ?"

"ஆமா ஸார்..! நீங்க ஃபாதரைப் பற்றி விசாரிச்சுட்டு இருக்கும் போதே அவரே வந்து தன்னை உங்ககிட்டே அறிமுகப்படுத்திகிட்டு அவரோட ரூமுக்கு கூட்டிட்டுப் போனார்."

"கரெக்ட்..... நானும் என்னோட பாஸும் ஃபாதர் கூட உட்கார்ந்து அவரோட அறையில் பேசிட்டிருக்கும்போது அவர்க்குப் பின்னாடி இருந்த செல்ஃப்பில் சில 'வளையோசை' இதழ்களைப் பார்த்தேன். அப்பத்தான் என்னோட மூளைக்குள் ஒரு ப்ளாஷ் வெளிச்சம் அடிச்சது."

 

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை ஸார்."

"புரியும்படியாவே சொல்றேன். நானும் பாஸும் உன்கிட்டே விசாரிக்க வரும்போது நீயும் உன்னோட கையில் வளையோசை புத்தகத்தை வெச்சுகிட்டு புரட்டிப் பார்த்துட்டிருந்த. ஆனா பத்திரிக்கையோட முழுபேரும் என்னோட பார்வைக்கு கிடைக்காமே கடைசி 'சை' மட்டுமே தெரிஞ்சுது. ஆனா ஃபாதரோட அறைக்குப் போன பின்னாடிதான் அவரோட அறையில் செல்ஃப்பில் இருந்த புத்தகங்களைப் பார்த்த பிறகுதான் நீ படிச்சுட்டு இருந்த புத்தகமும் 'வளையோசை'யாகத்தான் இருக்கனும்ன்னு நினைச்சு உன்னை விசாரிக்கிறதுக்காக வெளியே வந்தேன்."

"ஸார்.... நீங்க சொல்றதை பார்த்தா அந்த 'வளையோசை' புத்தகத்தைப் படிக்கிறதுல ஏதோ தப்பு இருக்கிற மாதிரி தெரியுது."

"தப்பு இருக்கா இல்லையான்னு இனிமேல்தான் கண்டுபிடிக்கனும். இந்த வளையோசை வார இதழ்களை காம்ப்ளிமெண்ட்டா கொண்டுவந்து கொடுத்து டாக்டர் ரஞ்சித்குமார்ன்னு சொன்னே இல்லையா ?"

"ஆமா.... ஸார்"

"அவர் எதுக்காக இந்த புத்தகத்தை காம்ப்ளிமெண்ட்டா கொண்டு வந்து உங்களுக்கெல்லாம் படிக்கக் கொடுக்கணும் ?"

"காரணம் இருக்கு ஸார்"

"என்ன காரணம் ?"

"டாக்டர் ரஞ்சித்குமார் அந்த வளையோசை பத்திரிக்கைக்கு ஆசிரியையாய் இருக்கிற மீனலோசனிக்கு தம்பி ஸார். ஒரு நாள் ஃபாதர் விளையாட்டாய் டாக்டர் ரஞ்சித்குமார்கிட்டே 'உங்க சிஸ்டரோட மேகஸீன்தானே...? நம்ம ஹாஸ்பிடலுக்கு வாரா வாரம் காம்ப்ளிமெண்ட் காப்பி தரக் கூடாதான்னு கேட்டுட்டார். டாக்டரும் அதை சீரியஸாய் எடுத்துகிட்டு வாராவாரம் அஞ்சு காப்பி கொண்டு வந்து ரிசப்ஷன்ல கொடுத்துடுவார். இந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்யற எல்லா ஸ்டாஃப்பும் வாங்கிப் படிப்பாங்க. ஃபாதரும் சில சமயங்களில் வாங்கிட்டுப் படிப்பார்...."

"வளையோசை பத்திரிக்கையின் ஆசிரியை மீனலோசனியை உனக்குத் தெரியுமா ?"


"தெரியாது ஸார்... நான் நேர்ல பார்த்தது இல்லை. ஆனா இந்த ஹாஸ்பிடலுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கிறதாய் கேள்விப்பட்டு இருக்கேன்."

"அவங்க எப்ப வந்தாங்க ?"

"ஆறு மாசத்துக்கு முன்னாடி"

"எதுக்கு வந்தாங்கன்னு தெரியுமா ?"

"தெரியாது ஸார்...."

விஷ்ணு மேற்கொண்டு மரியாவிடம் கேள்வி கேட்கும் முன்பு விவேக் ஃபாதரின் அறையிலிருந்து வெளிப்பட்டான். விஷ்ணுவைப் பார்த்து 'வா' என்பது போல கையசைத்தான்.

விஷ்ணு பக்கத்தில் வந்தான்.

"என்ன பாஸ் ?"

"வா... போலாம்.... ஃபாதர்கிட்டே விசாரணை முடிஞ்சுது."

விஷ்ணு குரலைத் தாழ்த்தினான்.

"ஒரு நிமிஷம் பாஸ்... அந்த ரிசப்ஷன் மரியாகிட்டே விசாரணை பண்ண வேண்டியிருக்கு"

"அந்த வளையோசைப் பத்திரிக்கையைப் பற்றியும் பத்திரிக்கை ஆசிரியை மீனலோசனியின் தம்பியான சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமாரைப் பற்றியும்தானே அந்த பொண்ணுகிட்டே கேட்கப்போறே...."

விஷ்ணுவின் வாய் அவனையும் அறியாமல் சில மில்லிமீட்டர் விட்டத்துக்கு பிளந்து கொண்டது.

"எ.....எ.... எப்படி பாஸ்.... நான் மரியா கிட்ட பேசிட்டிருந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?"

விவேக் சின்னதாய் சிரிப்பொன்றை சிந்தியபடி சொன்னான். "ஃபாதரோட அறையில் நீயும் நானும் உட்கார்ந்து அவர்கிட்டே பேசிட்டிருக்கும்போதே அவர்க்குப் பின்னாடி செல்ஃப்பில் இருந்த 'வளையோசை' இதழ்களை நீ பார்த்த மாதிரியே நானும் பார்த்துட்டேன். ஆனா உன்னால அந்த இடத்துல உட்கார முடியலை. ஃபாதர்கிட்டே ரெஸ்ட் ரூம் எங்கே இருக்குன்னு கேட்டுகிட்டு நீ வெளியே போகும்போதே எனக்குத் தெரியும் நீ நேரா இந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்டேதான் போய் என்கொயர் பண்ணுவேன்னு..."

 

"பா....பாஸ்"

"நீ இங்கே ரிசப்னிஷ்டை 'என்கொயர்' பண்ணும் போதே நான் ஃபாதர்கிட்டே 'வளையோசை' பத்திரிக்கைப் பற்றியும், ஆசிரியை மீனலோசனியைப் பற்றியும் விசாரிச்சுட்டேன். மீனலோசனியின் தம்பியான சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார் பற்றியும் சொன்னார். ஆனா...."

"ஆனா... என்ன பாஸ்...?"

"ரஞ்சித்குமார் கடந்த ஒரு வார காலமாய் ஹாஸ்பிடலுக்கு வர்றது இல்லை. எங்கே இருக்கார்ன்னும் தெரியலை. அவரோட செல்போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. ரஞ்சித்குமாரோட அட்ரஸை ஃபாதர் கொடுத்து இருக்கார்."

"இப்ப அங்கதான் போகப் போறோமோ பாஸ்?"

"இல்ல" "பின்னே..?"

"வேற ஒரு இடத்துக்கு...." சொன்ன விவேக வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட விஷ்ணு பிரமிப்பினின்றும் மீளாமல் விவேக்கை அதே வேகத்தோடு பின் தொடர்ந்தான்...

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-34-299507.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 35

 

ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே குற்றவாளி குறித்த முக்கிய தடயம் கிடைக்கிறது.


இனி...

விவேக் காரை வேகமாய் விரட்டிக் கொண்டிருக்க விஷ்ணு பதட்டம் தணியாத குரலில் மூன்றாவது தடவையாய் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

"பாஸ்...! மீன லோசனியோட தம்பி அந்த ரஞ்சித்குமார் ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர். அந்த டாக்டர்தான் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக வர்ற சிறுவர்களுக்கு ஏதோ ஒரு வகையான மருந்தைப் பயன்படுத்தி மூளைச் சலவை பண்ணியிருக்கணும். இப்ப அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் அவனை மடக்கினா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும். ஆனா அந்த ஆள் வீட்டுக்குப் போகாமே நீங்க வேற யாரையோ பார்க்க போய்ட்டு இருக்கீங்க...?"

 

விவேக் விஷ்ணுவைப் பார்க்காமல் சாலையில் கவனமாய் இருந்தபடி சொன்னான்.

"விஷ்ணு... அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்கு நம்ம டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நெப்போலியன் போயிருக்கார். ரஞ்சித்குமாரை அவர் ஹேண்டில் பண்ணிக்குவார்."

"சரி... இப்ப நாம எங்கே போயிட்டிருக்கோம் பாஸ்"

"மீனலோசனியின் வீட்டுக்கு"

"அவங்க தப்பானவங்களாய் இருப்பாங்கன்னு நினைக்கறீங்களா பாஸ்?"

"அக்காவும் தம்பியும் இந்த விவகாரத்துல ஏன் பார்ட்னர்களாய் இருக்கக் கூடாது...?"

"நீங்க என்ன சொல்றீங்க பாஸ்...?" விஷ்ணு விழிகள் விரித்து திகைத்துக் கொண்டிருக்கும் போதே விவேக்கின் செல்போன் டயல் டோனை வெளியிட்டது.

விவேக் செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். செல்போனின் மறுமுனையில் டி.ஜி.பி.யின் பர்சனல் செக்ரட்ரி தியோடர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

"ஸாரி ஸார்.... நானே உங்களுக்கு போன் பண்ணி பேசலாம்ன்னு இருந்தேன்"

"ஸாரி இருக்கட்டும்... இன்வெஸ்டிகேஷன் எந்த அளவில் இருக்கு...?"

"ஸார்... கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கிட்டோம். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே ஆளை மடக்கிடுவோம் ஸார்"

"ஆர் யூ ஷ்யூர் விவேக்?"

"ஷ்யூர் ஸார்.... அங்கே நிலைமை எப்படியிருக்கு ஸார்...?"

"ஸீம்ஸ்... டு... பி...வொர்ஸ்ட். சுடர்கொடியோட கொலைக்கு காரணம் அந்த ஜெயவேல்தான்னு செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு பிரிவு மும்முரமாய் இயங்கிட்டிருக்கு. அதே நேரத்துல ஜெயவேலை கோர்ட்டுக்குக் கொண்டு போய் ஆஜர்படுத்த வேண்டிய சமயத்துல அவன் தப்பிக்க முயற்சி செஞ்சான்னு என்கவுண்டர்ல போட்டுத் தள்ளவும் ஒரு டீம் தயாராயிட்டிருக்கு. எனக்குக் கிடைத்த தகவல்படி என்கவுண்டர் பண்ணி ஜெயவேலுவோட கதையை முடிச்சு சுடர்கொடியோட கொலை வழக்கை 'ஜீரோ'வாய் மாத்துறதுதான். நம்ம டிபார்ட்மெண்ட்க்கு மேலிடம் கொடுத்துள்ள வாய்மொழி உத்தரவு."

"அப்படி நடக்கக் கூடாது ஸார்... சுடர் கொடியும் அவளுடைய அண்ணணையும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய விபரீதம் இருக்கு. அதுக்குக் காரணமான நபர்கள் யாராக இருக்கும்ன்னு ஓரளவு யூகம் பண்ணிட்டோம்.

அவங்களை நோக்கித்தான் இப்போ ட்ராவல் பண்ணிட்டிருக்கோம்...." "மிஸ்டர் விவேக்....! அந்த ஜெயவேல் எந்த நிமிஷமும் கோர்ட்டுக்கு கொண்டு போகப்படலாம். வழியில் என்கவுண்டர் செய்யப்படலாம். அதுக்கு முன்னாடி நீங்க கொலையாளிகளைக் கண்டுபிடிச்சு கோர்ட்ல கொண்டு வந்து நிறுத்த முடியுமா ?"

"முடியும் ஸார்... இன்னும் ஒரு மணி நேரத்துல நானே உங்களுக்கு போன் பண்றேன்"

"ப்ளீஸ் டூ இட் வித்வுட் எனி ஃபர்தர் டிலே"

"வீ வில் டூ இட் ஸார்"

"ஆல் த பெஸ்ட்"

விவேக் செல்போனை அணைத்துவிட்டு அனலாய் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

"விஷ்ணு !"

"பாஸ்"

"அந்த அப்பாவி ஜெயவேலுவோட என்கவுண்டர் பண்றதுக்கு முந்தி நாம அந்த சைக்யாட்ரிஸ்ட் ரஞ்சித்குமாரை மடக்கியாகனும். நெப்போலியன் ஸ்பாட்டுக்குப் போயிருக்கார். அங்கே நிலவரம் என்னான்னு தெரியலை....!"

"நான் வேணும்ன்னா 'நெப்ஸ்'க்குப் போன் பண்ணிப் பார்க்கட்டுமா பாஸ்"

"ம்... பண்ணு.... ஸ்பீக்கர் 'ஆன்'ல இருக்கட்டும்."

விஷ்ணு தன் செல்போனைத் தேய்த்து நெப்போலியனை தொடர்பு கொண்டான். "என்ன நெப்ஸ்.... ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் சேர்ந்தாச்சா...?"

"ம்.... அஞ்சு நிமிஷமாச்சு...."

"என்ன டாக்டர் ரஞ்சித்குமார் வீட்ல இருக்காரா ?"

"இல்லை... வீடு பூட்டியிருக்கு.... பக்கத்து வீட்ல விசாரிச்சுப் பார்த்தேன். டாக்டரோட வீடு ஒரு வாரமாய் பூட்டிக் கிடக்கிறதாய் சொன்னாங்க"

"எங்கே போயிருப்பார்ன்னு அவங்ககிட்டே கேட்டுப் பார்த்தீங்களா?"

"ம்... கேட்டுப் பார்த்தேன்...அவர் அடிக்கடி இது மாதிரி வீட்டைப் பூட்டிக்கிட்டு வாரக் கணக்குல வெளியூர் போயிடுவார்ன்னு பக்கத்து வீட்ல இருக்கிற ஒருத்தர் சொன்னார்."

"அவர்க்கு மனைவி குழந்தைங்கன்னு யாரும் கிடையாதா ....?"

"அவர் ஒருத்தர் மட்டும்தான் வீட்ல இருந்து இருக்கார். வேற யாரும் வீட்டுக்குள்ளே இருந்த மாதிரி தெரியலைன்னு சொல்றார்."

"போர்டிகோவில் கார் இருக்கா ?"


"வெளியே இருந்து பார்த்தா எதுவும் தெரியலை"

"வீட்டுக்குள்ளே போய் பார்க்க ஒரு வழி ஏதாவது இருக்கா....?"

"இல்லை.... கேட் பூட்டியிருக்கு. ஆனா சுவர் ஏறி குதிக்கிற அளவுக்குத்தான் காப்பெளண்ட் சுவரோட உயரம் இருக்கு. நான் சுவர் ஏறி குதிச்சு உள்ளே போய்ப் பார்த்துடறேன். பின்பக்கக் கதவு ஏதாவது திறந்திருந்தாலும் திறந்து இருக்கும்.... ஒருவேளை பூட்டியிருந்தால் மாஸ்டர் 'கீ பன்ச்'சை யூஸ் பண்ணி பூட்டை திறந்துகிட்டு உள்ளே போயிட வேண்டியதுதான்."

"ஓ.கே. நெப்ஸ்... நீங்க வீட்டோட லாக்கை பிரேக் பண்ணி உள்ளே புகுந்து பார்த்துடுங்க.... உள்ளே நமக்குத் தேவையான தகவல்களோ, தடயங்களோ இருந்தா உடனடியாக என்னை போன்ல காண்டக்ட் பண்ணுங்க....!"

"இதோ... அரம்பிச்சுட்டேன் என்னோட வேலையை"

நெப்போலியன் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தான். விஷ்ணு பெருமூச்சுவிட்டான்.

"பாஸ்.... இந்த சுடர்கொடி, திலீபன் கேஸ்ல எல்லா குழப்பமும் விலகி ஒரு தெளிவான நிலைமைக்கு வந்த மாதிரி இருந்தது. ஆனா இப்போ மறுபடியும் குழப்பம்."

"இந்த குழப்பங்கள் தெரிய ஒரு நிவாரணி மீனலோசனிதான்...," சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை அதிகரித்தான் விவேக்.

***************

அழைப்பு மணியின் 'ம்யூஸிக் ட்யூன்' கேட்டு கதவைத் திறந்த மீனலோசனி வெளியே நின்றிருந்த விவேக்கையும், விஷ்ணுவையும் பார்த்ததும் ஒரு மைக்ரோ விநாடி முகம் மாறி இயல்புக்குத் திரும்பி செயற்கை புன்னகை ஒன்றை தன் உதடுகளுக்குக் கொடுத்தாள்.

 

"வ.... வாங்க.... வாங்க மிஸ்டர் விவேக்"

"ஸாரி மேடம்... ஒரு சின்ன என்கொய்ரிக்காக உங்க வீட்டுக்கே வர வேண்டியதாயிடுச்சு."

"நோ... ப்ராப்ளம்... ப்ளீஸ் கம்..."

விவேக் விஷ்ணு உள்ளே வர மீனலோசணி கதவைச் சாத்தினாள். உட்பக்கமாய் தாழிட்டாள்.

விவேக்கின் கண்கள் ஒரு சி.சி.டி.வி காமிரா யூனிட்டாய் மாறி வீட்டின் எல்லாத் திசைகளையும் நோக்கிப் பயணித்தன.

பெரிய வீடு. சீலிங்கிலிருந்து ஏதோ திராட்சை குலைகள் போல் லஸ்தர் விளக்குகள் சரம் சரமாய் நிறம் நிறமாய் தொங்கிக் கொண்டிருந்தன. ஹாலின் இரண்டு பக்கங்களிலிருந்து மாடிப்படிகள் பாலீஷ் செய்யப்பட்ட தேக்கு மர கைப்பிடிகளின் உதவியோடு லாவகமாய் வளைந்து தெரிந்தது. உயர்தர லெதர்களை தைத்துப் போட்டுக் கொண்ட சோபாக்கள் ஹாலின் மையத்தில் சிவப்பு வண்ணத்தில் கண்களைப் பறித்தன.

"உட்கார்ங்க மிஸ்டர் விவேக்..."

விவேக்கும் விஷ்ணுவும் சோபாவுக்குள் புதைய எதிரே இருந்த சோபாவில் மீனலோசனி உட்கார்ந்தாள். முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.

"சுடர்கொடி விவகாரத்தில் ஏதாவது க்ளு கிடைத்ததா..?'

"இனிமேல்தான் கிடைக்கப் போகுது மேடம்"

"எனக்குப் புரியலை..."

"மேடம்.... நான் இப்போ கேட்கப் போகிற கேள்விகளுக்கு மட்டும் பதில்களைச் சொல்லுங்க.... அதுல எந்த பொய்க் கலப்பும் வேண்டாம்".

மீனலோசனி லேசாய் முகம் சிவந்தாள்.

"எனக்கு பொய் பழக்கமில்லை.... என்கிட்டே என்ன கேட்கப் போறீங்க...?"

இவ்வளவு பெரிய வீட்ல நீங்கதான் இருக்கீங்களா?'

"ஆமா..."

"உங்க கணவர்...?"

"அதோ அந்த போட்டோவில்....." பக்கவாட்டு சுவரில் மாட்டிருந்த போட்டோவைக் காட்டினான். ஒரு வாடிய மாலைக்குள் அந்த வழுக்கைத் தலை மனிதரின் முகம் குங்குமப் பொட்டோடு தெரிந்தது. "

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே போயிட்டார்.

இப்ப நான் மட்டும்தான் இந்த வீட்ல தனியாய்."

மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியில் அந்த சத்தம் கேட்டது.

- தொடரும்...

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-35-300100.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 36

 

 ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை போய், மீண்டும் மீனலோசனியிடம் வந்து நிற்கிறது.

இனி...

மாடியினின்றும் எழுந்த அந்தச் சத்தத்தைக் கேட்டதும் விவேக்கின் செவித் திறன் கூர்மையாகி பார்வை மேலே போயிற்று.

நாற்காலியையோ மேஜையையோ நகர்த்திய தினுசில் ஒரு சத்தம்.

"வேலைக்காரிதான்... ரூமை சுத்தம் பண்ணிட்டிருப்பா" என்று சொன்ன மீனலோசனி மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

"சரோஜா! நீயா என்னோட ரூம்ல இருக்கே ?"

அடுத்த விநாடியே மாடி வராந்தாவின் கோடியில் இருந்து ஒரு பெண்ணின் முகம் நெற்றியில் பெரிய பொட்டோடு எட்டிப் பார்த்தது.

"அம்மா... நான் பாக்யம். சரோஜா சமையல்கட்ல இருக்கா.. ஏதாவது வேணுமாம்மா ?"

"ஒண்ணும் வேண்டாம். ரூம்ல இருக்கிற எதையும் நகர்த்திப் போடாமே சுத்தம் பண்ணு...!"

"சரிங்கம்மா"

வேலைக்காரியின் தலை மறைந்தது. விவேக்கிடம் திரும்பினாள் மீனலோசனி.

"என்னோட கணவர் இறந்த பின்னாடி இந்த வீட்ல நான் மட்டும்தான். வீட்டு வேலைகளை பண்றதுக்கும் சமையல் வேலையை கவனிக்கிறதுக்கும் ரெண்டு வேலைக்காரிகள் இருக்காங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் செக்யூரிட்டி வருவார். காலை ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டுப் போயிடுவார். சரி... இப்ப எதுக்காக இந்த விசாரணை எல்லாம்.?'

விவேக் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு நிதானமான குரலில் மீனலோசனியிடம் கேட்டான்.

"டாக்டர் ரஞ்சித்குமாரை உங்களுக்குத் தெரியுமா ?"

சட்டென்று அவளுடைய முகம் மாறியது.

"யூ மீன் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்?"

"ஆமா..." "ஹி ஈஸ் மை ப்ரதர்."

"அவர் இப்போ எந்த ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்றார்ன்னு தெரியுமா ?"

"தெரியும். ஃபாதர் ஞானகடாட்சத்தோட நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிற ஆசீர்வாதம் என்கிற ஹாஸ்பிடலில்."

"நீங்க அந்த ஹாஸ்பிடலுக்கு போயிருக்கீங்களா?"

"போயிருக்கேன்... ஒரே ஒரு தடவை..."

"எதுக்காக போனீங்கன்னு சொல்ல முடியுமா ?"

மீனலோசனியின் முகத்தில் இப்போது அதிகப்படியான ரத்தம் கோபத்தோடு பாய்ந்தது. ஆத்திரத்தில் வார்த்தைகள் தெறித்தது.

"மிஸ்டர் விவேக் ஐ வில் நாட் டாலரேட் இட் எனி மோர். ஏதோ ஒரு குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி என்னை விசாரிக்கறீங்க? இப்ப எதுக்காக திடீர்ன்னு என் வீட்டுக்கு வந்து இப்படியெல்லாம் விசாரிக்கறீங்க..? அதிலும் என்னோட தம்பி ரஞ்சித்குமாரைப் பற்றின விசாரணை எதுக்காக?"

விவேக் மெலிதாய் புன்னகைத்தான்.

"காரணம் இருக்கு மேடம்"

"என்ன காரணம்?"

"சுடர்கொடியின் ஃப்ரண்ட் ஜெபமாலையை ஒரு ஹோட்டல் பேரர் விஷ குளிர்பானம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்ததும், ஆனா அதிர்ஷ்டவசமாய் ஜெபமாலை உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லாமல் சுய உணர்வற்ற நிலைக்கு போய் இப்ப ஹாஸ்பிடலில் இருக்கிற விஷயமும் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்."

"நல்லாவே தெரியும்"

"ஆனா ஜெபமாலை சுய உணர்வு அற்ற நிலைக்கு போறதுக்கு முன்பு என்கிட்டே மூணு வார்த்தைகளைத் திணறித் திணறி சொன்னா. அந்த மூணு வார்த்தைகள் எது எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?"

"தெரியாது"

"அந்த மூணு வார்த்தைகள் இதுதான் கூர்நோக்கு, ஜே.சி.எச், ஆசீர்வாதம்.. சுடர்கொடியின் மரணத்துக்கும் ஜெபமாலை சொன்ன மூணு வார்த்தைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கணும் என்கிற எண்ணத்தில் நானும் விஷ்ணுவும் விசாரணையை ஆரம்பிச்சோம். இப்போ விசாரணையோட இறுதிக்கு வந்துட்டோம்.... அதாவது உண்மையைக் கண்டுபிடிச்சுட்டோம்."

 

"என்ன உண்மை?"

"அதாவது ஜூவைனல் கேர் ஹோம் என்கிற கூர்நோக்கு இல்லத்திலிருந்து இளம் குற்றவாளிகளைத் தப்பிக்க வெச்சு அவங்களை கடத்துகிற ஒரு கும்பல் மூளைச் சலவை பண்ணி பல்வேறு விதமான சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிற உண்மைதான்."

"நீங்க சொல்றது எனக்குப் புரியலை...." என்று மீனலோசனி தன்னுடைய முக வியர்வையை சேலைத் தலைப்பில் ஒற்றிக் கொண்டே சொல்ல விவேக் விஷ்ணுவைப் பார்த்தான்.

 

"விஷ்ணு....! இது வரைக்கும் நடந்த எல்லா விபரங்களையும் மேடத்துக்கு சொல்லு....!"

விஷ்ணு தலையசைத்து விட்டு மீனலோசனியை ஏறிட்டு "மேடம்" என்று ஆரம்பித்து காலையில் இருந்து போன நிமிஷம் வரைக்கும் நடந்த எல்லா சம்பவங்களையும் நிதானமான குரலில் கோர்வையாய் சொல்லி முடித்தான்.

மீனலோசனி உன்னிப்பாய் செவிமடுத்துவிட்டு மெளனமானாள். விவேக் அவளுடைய முகபாவத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டான்.

"என்ன மேடம்.... அமைதியாயிட்டீங்க ?"

மீனலோசனி அனலாய் பெருமூச்சொன்றை விட்டாள். "நான் சந்தேகப்பட்டது சரிதான்." "என்ன சந்தேகப்பட்டீங்க?"

"என்னோட தம்பி ரஞ்சித்குமார் கடந்த ஒரு வருஷ காலமாகவே இயல்பாய் இல்லை. வாரத்துக்கு ரெண்டு தடவையாவது என்னைப் பார்க்க வருவான். ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சினிமா, அரசியல், பத்திரிக்கைன்னு கலகலப்பாய் பேசிட்டு போவான். கொஞ்ச நாளாய் அவன் சரி இல்லை. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வந்து ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போறதோடு சரி, அந்த பத்து நிமிஷத்துக்குள்ளேயும் ஒரு நாலைஞ்சு போன் கால்ஸ் வந்துடும்"

"போன்ல யார் கூட பேசுவார்?"

"நான் நோட் பண்ணினது இல்லை.... அப்படியே போன் வந்தாலும் வெளியே எந்திரிச்சு போய் பேசிட்டு வருவான். பேசிட்டு வந்ததும் அவனுடைய முகம் இறுக்கத்துக்கு உட்பட்டிருக்கும். ரஞ்சித்குமார் இயல்பாய் இல்லை. அதுதவிர அடிக்கடி மும்பை, டெல்லி, புனேன்னு ஃப்ளைட்ல போயிட்டு வருவான். காரணம் கேட்டா மெடிக்கல் செமினார், டாக்டர்ஸ் மீட் ன்னு ஏதாவது காரணம் சொல்லுவான். அப்போ அவன் அப்படி நடந்துகிட்டதுக்கும், நீங்க இப்போ சொல்கிற விஷயங்களுக்கும் ஏதோ ஒரு 'டை-அப்' இருக்குன்னு நினைக்கிறேன்."

 

"பார்த்தீங்களா மேடம்.... உங்களுக்கே இப்போ ஒரு சந்தேகம் உங்க ப்ரதர் மேல ஏற்பட்டிருச்சு..."

"நோ.... நோ... மிஸ்டர் விவேக்... என்னோட தம்பி ரொம்பவும் நல்ல டைப்."

"மேடம்... நல்லவங்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாய் கெட்டவங்களாய் உருமாற வாய்ப்பு இருக்கு. ரஞ்சித்குமார் மேல எந்த ஒரு தப்பும் இல்லைன்னா அவர் ஏன் தலைமறைவாய் இருக்கணும்."

"இட்ஸ் ஓ.கே.... இப்ப நான் என்ன பண்ணனும்..?"

 

"உங்க ப்ரதர் ரஞ்சித்குமார் பற்றி நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லணும்"

"ம்... கேளுங்க..."

"ரஞ்சித்குமார் கல்யாணம் பண்ணீக்கலைன்னு ஃபாதர் ஞானகடாட்சம் சொன்னார். அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொல்ல முடியுமா..?"

"காலேஜ் டேஸ்ல அவன் ஒரு பொண்ணை சின்சியராய் லவ் பண்ணியிருக்கான். ஆனா அந்தப் பெண் ஒரு கோடீஸ்வர இளைஞனை கல்யாணம் பண்ணிகிட்டு அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிட்டா. இவனால அவளை மறக்க முடியலை. வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கவும் விருப்பப்படலை... பணம்தானே அவளுக்கு பெரிசா போச்சு. நானும் கோடி கோடியாய் சம்பாதிச்சு நாம் யார்ங்கிறதை அவளுக்கு காட்டப் போறேன்னு கொஞ்சநாள் பொருமிட்டிருந்தான்.."

 

"சரி... ரஞ்சித்குமாருக்கு சுடர்கொடியைத் தெரியுமா?"

"ம்... தெரியும்.....சுடர்கொடி வளையோசையில் எழுதிய சில கட்டுரைகளைப் படிச்சுப் பாராட்டியிருக்கான்."

"அவர்க்கு நண்பர்கள் யாராவது?"

"அவனோட ஃப்ரண்ட்ஸ் யார் யார்ன்னு எனக்குத் தெரியாது... ஆனா போன மாசம் பத்தாம் தேதி ரஞ்சித் என்னைப் பார்க்க வந்து இருந்தப்ப கையில் ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் இருந்தது. அது ஒரு ஜுவல்லரி பாக்ஸ். அந்த பாக்ஸை எனக்குத் திறந்து காட்டினான். உள்ளே ஒரு வைர நெக்லஸ் டாலடித்தது. யார்க்கு இதை ப்ரசண்ட் பண்ணப் போறன்னு கேட்டேன்."

 

விவேக்கும் விஷ்ணுவும் நேர்கோடுகளாய் மாறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

"பேர் சொன்னாரா?"

"யார் பேரையோ சொல்லி அவங்க வீட்டு கல்யாணம்ன்னு சொன்னான். பேர் ஞாபகம் இல்லை. வந்த தேதி மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. காரணம் அன்னிக்கு எனக்கு பிறந்தநாள். எனக்குத்தான் அவன் ஏதாவது 'கிஃப்ட்' வாங்கிட்டு வந்து இருக்கானோன்னு மொதல்ல நினைச்சேன்."

"அவர் சொன்ன நண்பரோட பேரைக் கொஞ்சம் 'ரீமெம்பர் பண்ணிப் பாருங்க மேடம்.... யாரோட கல்யாணம்ன்னு கண்டிப்பா சொல்லியிருப்பார்."

சில விநாடிகள் மீனலோசனி யோசித்துவிட்டு தீர்க்கமாய் தலையாட்டினாள்.

"மிஸ்டர் விவேக்... எனக்கு சுத்தமாய் ஞாபகம் இல்லை."

"இட்ஸ்.... ஓகே.... கல்யாணம் எங்கே... எந்த மண்டபம்ன்னு சொன்னாரா?"

"மண்டபம் பேர்...?' மீனலோசனி யோசித்து விட்டு தலையாட்டினாள். "ஞாபகம் இல்லை.... ஏரியா ஞாபகம் இருக்கு"

"எந்த ஏரியா?"

"தரமணி

" "அது போதும் மேடம்..." விவேக் எழுந்து கொண்டான்.

- தொடரும்...


Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-36-300587.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 37

- ராஜேஷ்குமார்

மீனலோசனியின் வீட்டை விட்டு வெளியே வந்த விவேக்கும் விஷ்ணுவும் வேக நடை போட்டு கார்க்குள் நுழைந்தார்கள்.

விவேக் ட்ரைவிங் சீட்டை ஆக்ரமிக்க விஷ்ணு பக்கத்தில் உட்கார்ந்தான். கார் நகர்ந்ததும் பேச ஆரம்பித்தான்.

"பாஸ்" "என்ன?"

"அந்த மீனலோசனியை நீங்க ரொம்பவும் சாஃப்ட்டா என்கொயர் பண்ணிட்டீங்க... இன்னும் கொஞ்சம் நெருக்கி அவங்களை கார்னர் பண்ணியிருந்தா மேலும் சில உண்மைகளை வாங்கியிருக்கலாம். அந்த அம்மாகிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்கு."


"இல்ல விஷ்ணு... அவங்க தப்பானவங்க இல்லை. மீனலோசனி பேசின வார்த்தைகளில் ஒன்று கூட பொய் கிடையாது."

"சரி .... டாக்டர் ரஞ்சித்குமார் கடந்த மாதம் பத்தாம் தேதி தரமணியில் இருக்கிற ஏதோ ஒரு கல்யாணத்துக்குப் போய் வைர நெக்லஸை ப்ரசண்ட் பண்ணியிருக்கார். அந்த நபர் யார்ங்கிறதை எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"

விவேக் காரின் வேகத்தை சிக்னலுக்காகக் குறைத்துக் கொண்டே கேட்டான்.

"நீயே பதில் சொல்லு....!"

"மொதல்ல அந்த பீட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம். இன்ஸ்பெக்டரை மீட் பண்றோம். தரமணி ஏரியாவில் எத்தனை கல்யாண மண்டபங்கள் இருக்குன்னு லிஸ்ட் எடுக்கிறோம். அப்புறம் போன மாசம் 10-ம் தேதி எந்தெந்த மண்டபங்களில் யார் யாரோட கல்யாணம் நடந்ததுன்னு விசாரணை பண்ணி அதுல யார் ரஞ்சித்குமார்க்கு ஃப்ரண்ட்ன்னு கண்டுபிடிச்சு....."

விவேக் குறுக்கிட்டான்.

"விஷ்ணு இவ்வளவு சாவகாசமாய் நாம விசாரணை பண்ணிட்டிருந்தா அந்த அப்பாவி ஜெயவேலுவை என்கவுன்டர் பண்றதிலிருந்து காப்பாத்த முடியாது."

"அப்படீன்னா வேற என்ன பண்ணப் போறோம் பாஸ்?"

"இப்ப நாம நேரடியாய் டாக்டர் ரஞ்சித்குமார் யாருடைய வீட்டு கல்யாணத்துக்குப் போனாரோ அவரையே பார்த்துடப் போறோம்."

"அவர் யார்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும் பாஸ் ?"

"நானும் கோகுல்நாத்தும் அந்த கல்யாணத்துக்குப் போயிருந்தோம்."

"எ...எ.... என்ன பாஸ் சொல்றீங்க?"

"விஷ்ணு ... போன மாசம் என்ன மாசம்?"

"ஆகஸ்ட்"

"ஆகஸ்ட் 10.ம் தேதின்னா தமிழ்ல என்ன மாசம் வரும்?"

"ஆடி மாசம்"

"யாராவது ஆடி மாசத்துல கல்யாணம் பண்ணுவாங்களா?"

"இந்துக்கள் பண்ண மாட்டாங்க... பாஸ்..."

"கரெக்ட்.... போன மாசம் அதாவது ஆடி மாசத்துல தரமணியில் இருக்கிற 'லிட்டில் ப்ளவர்' கல்யாண மண்டபத்தில் ஒரு கல்யாணம் வெகு விமரிசையாய் நடந்தது. அந்தக் கல்யாணத்துக்கான அழைப்பு எனக்கும் கோகுல்நாத்துக்கும் வந்து இருந்தது. நானும் அவரும் போனோம்.'

"பாஸ்... யூ மீன் அது கிறிஸ்தவ நண்பர் வீட்டு கல்யாணம்?"

"அதே அதே....!"

"யார் பாஸ் அது ?"

"அவர் வீட்டுக்குத்தான் போயிட்டிருக்கோம்"

"என்ன பாஸ்.... ஏதோ மாமனார் வீட்டுக்குப் போற மாதிரி சொல்றீங்க?"

"அந்த மாமனார் யார்ன்னு இன்னும் அரைமணி நேரத்துல உனக்குத் தெரியும்.."

"பாஸ்... ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?"

"சொல்லு..."

"ஆக்டோபஸ் க்கு பத்து கை இருக்குன்னு சொல்லுவாங்க. அது மாதிரி...."

"அது மாதிரி?"

"உங்களுக்கு பத்து தலை. பாராட்டி பாராட்டியே டயர்ட் ஆயிட்டேன் பாஸ்"

'சிக்னலில் பச்சை கிடைத்ததும் யார் பறந்தது.'

கார் வேளச்சேரியைத் தாண்டி தில்லை கங்கா நகர்க்குள் மேஃப்ளவர் மரங்கள் அடர்ந்து பகுதிக்குள், நிசப்தமான தெருக்களில் நிதானமான வேகத்தில் பயணித்து, ஒரு குட்டி பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.

"பாஸ்... இது யார் வீடுன்னு தெரியலையே ....?"

விஷ்ணு முனகிக் கொண்டு விவேக்கை பின் தொடர்ந்து காரினின்றும் இறங்கினான்.

விவேக் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போய் காம்பெளண்ட் கேட்டின் மீது கையை வைத்து மெல்லத் தள்ளினான். அது சத்தம் இல்லாமல் உள்ளே போயிற்று. போர்டிகோவில் கார் ஒன்று 'கான்வாஸ்' போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்தது.

விவேக் வாசற்படிகளில் ஏறி அழைப்பு மணியின் பொத்தானின் மேல் கையை வைத்தான். வீட்டுக்குள் ஒரு பத்து விநாடி நேரத்துக்கு மியூஸிக் நோட் கேட்டு அடங்கியது.

இருவரும் மெளனமாய் காத்திருக்க கதவின் தாழ்ப்பாள் விலகியது.

தியோடர் நின்றிருந்தார்.

விவேக் மெலிதாய் புன்னகைத்து, "ஹலோ ஸார்," என்றான். தியோடர் சற்றே அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு, "விவேக்.... நீங்களா.... வாட்.... ஏ...... சர்ப்ரைஸ்.... உள்ளே வாங்க...," என்றார்.

"ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!"

"நத்திங்... உள்ளே வாங்க"

விவேக், விஷ்ணு இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். தியோடர் கேட்டார். "என்ன விவேக்.... சுடர் கொடியோட கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிஞ்சதா..?"

"குற்றவாளிக்குப் பக்கத்திலேயே வந்துட்டோம் ஸார்... பட் ஒரே ஒரு சந்தேகம்." தியோடர் முகம் மாறினார்.

"வாட் டு யூ மீன்?"

"ரெண்டு பேர் மேல சந்தேகப்படறோம் ஸார். ஒருத்தர் நீங்க....! இன்னொருத்தர் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார்... இதுல யார்ன்னு சின்னதாய் ஒரு குழப்பம். அதைத் தெளிவுப்படுத்திக்கத்தான்...."

விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தியோடர் சட்டென்று பின்னுக்கு நகர்ந்து சுவரோட மேஜையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எடுக்க முயல....

விவேக் அதை ஒரு மைக்ரோ விநாடி நேரத்துக்குள் மோப்பம் பிடித்து இருந்த இடத்திலிருந்தே எம்பிக் குதித்து, ஒரு நேர்கோடாய் மாறி தியோடரை நோக்கி அந்தரத்தில் பயணித்து ஷு அணிந்த தனது வலது காலால் அவருடைய மார்பை மூர்க்கமாய் உதைத்தான்.

தியோடர் ஒரு துணி மூட்டையாய் மாறி எகிறிப் போய் ஃபிரிட்ஜ்க்குப் பக்கத்தில் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு விழுந்தார்.

"விஷ்ணு"

"பாஸ்"

"அந்த மேஜையோட இழுப்பறையில் என்ன இருக்குன்னு பாரு...?"

விவேக் பார்த்துவிட்டு மிரட்சியோடு சொன்னான். "பிஸ்டல் பாஸ் ! அதுவும் டேண்டம் மாடல்"

"அதை கையில் எடுத்துக்கோ.... தியோடர் ஸார்கிட்டே நான் இப்போ சின்னதாய் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப் போறேன். அவர் மறுபடியும் இப்படி ஏதாவது வில்லத்தனமாய் நடக்க முயற்சி செஞ்சா என்னோட உத்தரவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காதே. தயவு தாட்சண்யம் பார்க்காமே சுட்டுத் தள்ளிடு. நான் இப்போ என் ரிவால்வரோடு அவர்க்குப் பக்கத்துல போறேன்....!'

"அரசு கெஜட்ல போடாத குறையாய் ஒரு உத்தரவைப் போட்டுட்டீங்க பாஸ்.... இனிமேல் தியோடர் ஸாரோட தலைவிதி என்னோட கையில்...!"

விஷ்ணு அந்த டேண்டம் பிஸ்டலை கையில் எடுத்துக் கொள்ள், விவேக் தன் இடுப்பில் மறைவில் குடியிருந்த அந்த ஸ்பானிஷ் மேட் சின்னஞ்சிறு பிஸ்டலோடு தியோடரை நோக்கி நடந்து போய் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருந்த அவருடைய நெற்றிப் பொட்டில் வைத்தான்.


- தொடரும்...



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-37-300889.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 38

ராஜேஷ்குமார்

விவேக் நிதானமான குரலில் பேச்சைத் தொடர்ந்தான்.

"ஸாரி.... ஸார்.... சட்டத்துக்கு முன்னாடி எப்படி எல்லாரும் சமமோ அதே மாதிரி என்னோட பிஸ்டலுக்கு முன்னாடியும் எல்லோரும் சமம்..... இப்ப நேரா மீனலோசனி வீட்டிலிருந்துதான் வர்றோம். அவங்க கொடுத்த ஒரு தகவல்தான் உங்களை தனியே அடையாளம் காட்டியது. ஆனா அதுக்கு முன்னாடியே உங்க மேல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது. இந்த கேஸ் ஆரம்பிச்ச நாளிலிருந்து நீங்க நாலைஞ்சு தடவை போன் பண்ணி எனக்கு ஏதோ உதவி பண்ற மாதிரி பேசினீங்க. அந்த ஜெயவேல் மேல் கரிசனம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டீங்க. அவனை என்கெளண்டர் பண்ண சதி நடக்கிறதாய் சொன்னீங்க. இது எல்லாமே எனக்கு கொஞ்சம் அதிகப்படியாய் தெரிஞ்சுது... உடனே நான் ரிடையர்ட் போலீஸ் ஆபீஸர் கோகுல்நாத்துக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உங்களை கண்காணிக்கச் சொன்னேன். உங்க செல்போன் பேச்சுக்களை சைபர் க்ரைம் மூலமாய் மானிட்டரிங் பண்ணச் சொன்னேன்.

" தியோடர் வியர்த்து வழிந்து கொண்டே விவேக்கைப் பார்க்க அவன் பிஸ்டலை அழுத்திப் பிடித்தபடி பேச்சைத் தொடர்ந்தான்.

 

உங்க செல்போனை மானிட்டர் பண்ணிப் பார்த்த போது நீங்க கடந்த ரெண்டு நாட்களில் மட்டும் எட்டுத் தடவை மும்பைக்கும் டெல்லிக்கும் பேசியிருக்கீங்க. அந்த செல்போன் நம்பர்களுக்கு உரிமையானவர்கள் எல்லாம் பெரிய பணக்காரர்கள். அந்த பணக்காரர்களிடம் நீங்க ஹிந்தியிலும், மராத்தியிலும் பேசியிருக்கீங்க. அந்த பேச்சை யாரும் முழுமையாய் புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு சங்கேத வார்த்தைகள். உங்ககிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்கு. அந்த தப்புக்கும் சுடர்கொடி, திலீபன் மரணங்களுக்கும் பார்வைக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு இருக்குங்கிறது மட்டும் எங்களுக்கு புரிஞ்சது. ஆனா அதுக்கான வெளிப்படை ஆதாரங்கள் எதுவுமே கோகுல்நாத்துக்குக் கிடைக்கவில்லை. ஆனாம் நானும் விஷ்ணுவும் ஃபாதர் ஞானகடாட்சத்தைப் பார்க்கப் போனபோதுதான் வளையோசை பத்திரிக்கை ஆசிரியர் மீனலோசனியின் தம்பி ரஞ்சித்குமார் ஒரு சைக்யாட்ரிஸ்ட் என்கிற விஷயமும், அவர் கடந்த ஒருவார காலமாய் தலைமறைவாய் இருக்கிற விஷயம் தெரிஞ்சுது."

 

தியோடர் இப்போது உச்சபட்ச வியர்வையில் இருந்தார். முகம் நிமிர திராணியில்லாமல் கவிழ்ந்தே இருந்தது.

விவேக் சில விநாடிகள் அமைதியாய் இருந்து விட்டு பேச்சைத் தொடர்ந்தான்.

"மீனலோசனியிடம் ரஞ்சித்குமாரைப் பற்றி விசாரிக்கப் போகத்தான் ஒரு முக்கியமான விஷயம் வெளியே வந்தது. போன ஆகஸ்ட் மாசம் 10-ஆம் தேதி தரமணியில் இருக்கிற 'லிட்டில் ப்ளவர்' மண்டபத்தில் உங்க மகளின் கல்யாண வரவேற்பு நடந்தது. அந்த ஆடி மாசத்துல நடந்த ஒரே ஒரு கல்யாண வரவேற்பு வைபவம் உங்களோடது மட்டும்தான். அந்த கல்யாணத்துக்கு எனக்கும் கோகுல்நாத்துக்கும் நீங்க அழைப்பிதழ் அனுப்பியிருந்தீங்க. ஸோ நானும் அவரும் அந்த ரிசப்ஷனுக்கு வந்து இருந்தோம். நீங்களும் எங்களைப் பார்த்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டீங்க.... ஆனா நான் ஆச்சர்யப்பட்டேன்."

தியோடரின் முகம் குழப்பத்தோடு நிமிர விவேக் புன்முறுவலோடு பேச ஆரம்பித்தான்.

"எதுக்காக அந்த ஆச்சர்யம்ன்னு கேட்கறீங்களா?

கல்யாண வரவேற்புக்கு வடநாட்டில் இருந்து சில பணக்காரர்களும், தொழிலதிபர்களும் வந்திருந்ததும், நீங்க அவங்களை விழுந்து விழுந்து உபசரிச்சதும்தான். அந்த சமயத்துல எனக்கு அது ஆச்சர்யமாய் இருந்தாலும் எந்த ஒரு சந்தேகமும் உங்க பேர்ல வரலை ஸார். காரணம் நீங்க டி.ஜி.பி.யின் பிரதான செயலாளர் அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கிறது நியாயம்தான் நினைச்சேன். ஆனா இப்பத்தான் தெரியுது. அது எவ்வளவு பெரிய விவகாரம்ன்னு."

தியோடர் ஈனஸ்வரக் குரலில் குறுக்கிட்டார்.

"விவேக்... நீங்க நினைக்கிற மாதிரி இந்த விவகாரத்துக்கு நான் முழுகாரணம் இல்லை. நான் ஒரு அம்பு மட்டுமே.."

"சரி எய்த நபர் யாரு ?"

"அதுவும் எனக்குத் தெரியாது. ஆனா எய்த நபர்க்கும் எனக்கும் இடையே மீடியேட்டர்களை எனக்குத் தெரியும்."

"மீடியேட்டர்கள்ன்னா போன மாசம் நடந்த உங்க மகளுடைய திருமண வரவேற்பில் கலந்து கிட்ட அந்த வடநாட்டு பணக்காரர்கள்தானே....?"

"ஆமா...!"

"சரி.... இது எதுமாதிரியான விவகாரம்ன்னு சொல்ல முடியுமா....?"

தியோடர் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு கம்மிப் போன குரலில் பேச ஆரம்பித்தார்.

"சிறு வயதிலேயே கொலை குற்றத்தைப் பண்ணிட்டு கூர்நோக்கு இல்லம் என்கிற சீர்திருத்தப் பள்ளிகளுக்கு வரும் சிறுவர்களை அந்த இல்லத்திலிருந்து தப்பிக்க வெச்சு, கடத்திக் கொண்டு போய் ஒரு இடத்துல தங்க வெச்சு ஆறு மாத காலம் ஒரு விதமான மெடிக்கல் ட்ரீட்மெண்ட் குடுத்து மூளைச் சலவை செய்வது முதல் கட்டம்."

"சரி, ரெண்டாவது கட்டம்?"

"அந்த சிறுவர்களை வட மாநிலத்தில் முக்கியமான நகரங்களுக்கு அனுப்பி வெச்சு, அங்கே இருக்கிற கூலிப்படை ஆட்களிடம் சேர்ப்பிக்கணும்."

"மூணாவது கட்டம் என்னான்னு நான் சொல்றேன். அந்த கூலிப்படை ஆட்களைத் தொடர்பு கொள்கிற பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத பணக்காரர்களின் வாரிசுகளை மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர்களைப் பயன்படுத்தி கொலை செய்வதும், அதுக்குக் கூலியாய் பெரிய தொகையை வாங்கிக் கொள்வதும்தான்.... இல்லையா ஸார்?"

 

விஷ்ணு குறுக்கிட்டு கேட்டான்.

"இந்த விவாகரத்துல உங்களுக்கு பேமெண்ட் எப்படி தியோடர் ஸார்?"

"அது.... அது.... வந்து...."

"தொப்பல் தொப்பலாய் நனைஞ்சுட்டீங்க ஸார். இனிமே எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க முயற்சி பண்ணாதீங்க. அப்புறம் நிறைய பொய் பேச வேண்டி வரும்."

தியோடர் அனலாய் பெருமூச்சொன்றை விட்டார்.

"இனிமேல் பொய் பேசி என்ன பிரயோஜனம். எல்லா உண்மைகளையும் நான் சொல்லிடறேன்."

"ம்.... சொல்லுங்க.."

"ஒரு பையனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாங்க. அதுல 50 லட்சம் எனக்கும் மீதி அம்பது லட்சம் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார்க்கும்....!"

விவேக் கையில் இருந்த பிஸ்டல் தியோடரின் நெற்றிப் பொட்டை பலமாய் அழுத்தியது.

"சரி..... இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.

சுடர்கொடியை வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனிலும், அவளுடைய அண்ணன் திலீபனை வீட்டில் தூக்கில் தொங்க வைத்தும் கொலை செய்தது யாரு....?"

 

"மும்பையிலிருந்து வந்த 'மானேஷ்' என்கிற கூலிப்படை ஆள். கண்ணிமைக்கிற நேரத்துல வெட்டிட்டு அடுத்த சில விநாடிகளுக்குள்ளே அந்த இடத்தை விட்டு காணாமே போயிடறதுல கெட்டிக்காரன். கூர்நோக்கு இல்லத்தில் நடைபெறுகிற இந்த கடத்தல் விவகாரத்தையும், மூளைச் சலவை பிரச்சனையையும் மையமாய் வைத்து சுடர்கொடி 'கோணல் கோடுகள்' என்கிற தலைப்பில் வளையோசை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதப் போவதாய் எனக்குத் தகவல் கிடைத்தது."

இந்தத் தகவலை உங்களுக்கு கொடுத்தது யாரு?"

"டாக்டர் ரஞ்சித்குமார்"

"சரி....அப்புறம் ?"

"நான் உடனே இந்தத் தகவலை மும்பையில் இருக்கிற என்னோட மீடியேட்டர்களுக்கு அனுப்பினேன். அவங்க உடனே சுடர் கொடியைத் தீர்த்துக்கட்ட மானேஷை சென்னைக்கு அனுப்பிட்டாங்க....!"

"கட்டுரை எழுதவிருந்த சுடர்கொடியைக் கொல்றதுதான் அந்த மீடியேட்டர்களின் நோக்கம்?"

"ஆமா..."

"சுடர்கொடியோட அண்ணன் மேல் என்ன கோபம்?"

"ஒரு கோபமும் இல்லை. சுடர்கொடியை மட்டும் கொலை பண்ணினால் போலீஸாரோட விசாரணைக் கோணம் ஒரே திசையில்தான் பயணிக்கும். அப்படி பயணம் செஞ்சா கொலைக்கான உண்மையான காரணம் பிடிபட வாய்ப்பு அதிகமாய் இருந்தது. அந்த கோணத்தை டைவர்ட் பண்ணத்தான் திலீபனையும் அந்த மானேஷ் முடிச்சான். உண்மையிலேயே அண்ணன் தங்கையாய் இருந்த சுடர்கொடி திலீபன் உறவை கொச்சைப்படுத்தத்தான் சுடர்கொடியோட வீட்டின் படுக்கையறையில் கருத்தடை சாதனங்களை மானேஷ் மறைச்சு வெச்சான்."

 

"ஆனா நீங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை. அதுக்கு மாறாய் போலீஸ் விசாரணை இருந்தது. காரணம் ஜெபமாலை."

 

"ஜெபமாலை உங்களுக்கு உதவ வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவளையும் வெட்டி சாய்க்க மானேஷ் முயற்சி பண்ணினான். ஆனா அதுக்குள்ளே லாட்ஜ் பேரர் கிருஷ்ணன் ஜெபமாலை மேல் இருந்த வேற ஒரு கோபம் காரணமாய் அவளுக்கு குளிர்பானத்துல விஷத்தைக் கலந்து கொடுத்துட்டான். ஜெபமாலை உயிர் உயிர் பிழைக்க மாட்டான்னு நினைச்சோம். ஆனா உயிர் பிழைச்சுட்டா. அவ சுய உணர்வற்ற நிலைமைக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்டே விஷயத்தை சொல்ல விரும்பி முடியாமே மூணு முக்கியமான வார்த்தைகளை மட்டும் சொல்லிட்டு மயக்க நிலைக்குப் போயிட்டா. நீங்களும் விஷ்ணுவும் அந்த மூணு வார்த்தைகளை வெச்சுகிட்டு விசாரணை ஆரம்பிச்சீங்க. உங்களால என்னை ஸ்மெல் பண்ண முடியாதுன்னு நினைச்சு கொஞ்சம் அலட்சியமாய் இருந்துட்டேன். விளைவு....? என்னை நெருங்கிட்டீங்க..."

 


"இதுவரைக்கும் எத்தனை சிறுவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?"

"ஒன்பது பேர்"

"அதுல எத்தனை பேர் இப்போ உயிரோடு இருக்காங்க?"

"ரெண்டு பேர்"

"யார் யாரு?"

"நாமக்கல்லைச் சேர்ந்த மாரியப்பன், வந்தவாசியைச் சேர்ந்த பாண்டியன் இந்த ரெண்டு பேரும் கொல்கத்தாவில் இருக்காங்க."

"யார்கிட்டே?"

"சரத் சட்டர்ஜி என்கிற ஒர் பெரிய பணக்காரர் பொறுப்பில் இருக்காங்க. அவர் தன்னோட எதிரிகளை தொழில் அதிபர்களை தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திட்டிருக்கார்."

"அவரோட அட்ரஸ் தெரியுமா?"

"தெரியும்...."

"கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் தெளிந்த நீரோடை மாதிரி பதில் சொன்ன உங்களுக்கு என்னோட நன்றி ஸார். கடைசியாய் ஒரே ஒரு கேள்வி.... டாக்டர் ரஞ்சித் குமார் சையாட்ரிஸ்ட் ஒரு வாரமாய் ஊர்ல இல்லை. இப்ப அவர் எந்த ஊர்ல தலைமறைவாய் இருக்கார்?"

தியோடர் மெளனமாய் இருந்தார். விவேக் பிஸ்டலை அழுத்தினான். "என்ன ஸார்... கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?"

"ரஞ்சித்குமார் தலைமறைவாக இல்லை"

"பின்னே?"

"தரைக்குக் கீழே இருக்கிறார்"

"எனக்குப் புரியலை..."

"சுடர்கொடியோட இந்த விவகாரத்துல ரஞ்சித்குமார் பிரச்சனை பண்ணினதால மானேஷ் அவரைத் தீர்த்துக்கட்டி உடம்பை நாலு துண்டாய் வெட்டி ஈச்சம்பாக்கம் சவுக்குத் தோப்புக்குள்ளே திசைக்கு ஒரு துண்டாய் புதைச்சுட்டான்..."

"மானேஷ் வாழ்க" என்றான் விஷ்ணு.

- முற்றும்.

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-final-part-38-301194.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.