Jump to content

உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு


Recommended Posts

உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு

 

மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது.

ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்தும் பழக்கம் அதிகரிப்பு (கோப்புப்படம்)
 

கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது.

ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அருந்துவதில் தோன்றும் ஆண் பெண் சமத்துவத்தை ஓரளவு விளக்கலாம்.

1900களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள் ,

பெண்களைவிட இரட்டிப்பு மடங்குக்கும் மேல் ( 2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது.

ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம்

கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம்

ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்த்து. எனவே 20ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள்:

பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்

பிரச்சனைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம்

குடிப் பழக்கத்தால் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுவது என்பது 1.3 மடங்கு மட்டுமே அதிகம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக்க் குழு உலகெங்கிலிருந்தும் வந்த இந்த்த் தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்த தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தே கிடைத்த தகவல்களையே சார்ந்திருந்தன.

``மது அருந்துவது மற்றும் மதுவருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை வரலாற்றுரீதியாகப் பார்க்கையில் ஆண்கள் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டன``, என்று இந்த குழு முடிவு செய்தது.

``இந்த தற்போதைய ஆய்வு அந்த அனுமானத்தை கேள்விக்குள்ளாக்கி, இளம்பெண்கள் குறிப்பாக, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க எடுக்கப்படும் தொடர்முயற்சிகளின் இலக்காக இருக்கவேண்டும்``, என்று அது கூறுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றிவரும் பங்கு கடந்த பல தசாப்தங்களாகவே மாறி வருகிறது. இது இந்தப் போக்குகள் அனைத்துக்கும் இல்லாவிட்டாலும், சிலவற்றுக்காவது காரணம் எனலாம் , என்கிறார் லண்டன் பொதுச்சுகாதரம் மற்றும் வெப்பநிலைப் பிரதேச மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மார்க் பெட்டிக்ரூ.

``மது அதிக அளவில் தாராளமாக கிடைப்பதும், மது விற்பனை விளம்பரங்கள் பெண்களை, அதிலும் குறிப்பாக இளம் பெண்களை இலக்குவைப்பது போன்றவையும் இதில் ஒரு பங்காற்றுகின்றன``, என்கிறார் அவர்.

``சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளைப் பற்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புரிய வைக்கவும், அந்த ஆபத்துகளை குறைப்பது எப்படி என்பதை விளங்கவைக்கவும் உதவ வேண்டும்`` என்கிறார் அவர்.

http://www.bbc.com/tamil/science-37759400?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.