Jump to content

உலகின் அதிக வயது முதியவர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிக வயது முதியவர் மரணம்

26 - January - 2007

போர்ட்டோ ரிகோவில் இஸ்பெல்லா நகரத்தில் உலகின் அதிக வயதுடைய நபர் என்ற சாதனை படைத்த முதியவர் எமிலியானோ மெர்காடோ டெல் டோரா, தனது 115 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

சில நாட்களுக்கு முன் உலகின் அதிக வயதுடைய பெண் எலிசபெத், தனது 116 ஆம் வயதில் மரணம் அடைந்ததை அடுத்து எமிலியானோ மெர்காடோ தான் 115 வயதுடைய சாதனையாளராக கருதப்பட்டார். இந் நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின் போர்டோரிகோவில் கரும்புற தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது எம்மா பாஸ்ட் தில்மா என்ற பெண்மணி 114 வயதை கடந்து அதிக வயதுடையோர் என்ற சாதனையாளராக கருதப்படுகிறார்.

Link to comment
Share on other sites

எங்கட பிள்ளைகள் குண்டடிபட்டு 03 மாதம், 06 மாதத்திலேயே உலகத்தை விட்டு போய்டுதுகள். இதுகள் 115 வருசம் இருந்து உலகத்தை நல்லா என் ஜோய் பண்ணிப்போட்டு போகிதுகள். ஏன் இதுக்குப் போய் அழுறியள். விட்டுத் தள்ளுங்கோ. சைபரிலிருந்து ஆகக் கூடியது ஒரு 99 வயது இடைக்கில யாராவது செத்தா கண்ணில சொட்டு விட்டு மனந்திறந்து அழுவதில் பிழையில்லை. செஞ்சரி அடிச்சவங்களுக்கெல்லாம் போய் செத்துப் போனாங்கலென்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறியள்! விட்டுத் தள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.