Jump to content

நமது மொழியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்


Recommended Posts

நமது மொழி­யு­ரி­மையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்

 

நாட்­டிலே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காகக் காலத்­திற்கு காலம் பல சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­பவை சில­வா­க­வுள்ள நிலையில் கணி­ச­மா­னவை கண்­டு­கொள்­ளப்­ப­டா­த­வை­யாக கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன என்று அண்­மை­யில ஜனா­தி­ப­தி கவலை தெரி­வித்த­தாக செய்­திகள் வெளி­யா­கின. சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­வது நாட்டின் நலன்­க­ருதி நாட்டு மக்­களின் தேவைக்­காக என்­பது புரிந்து கொள்­ளா­மை­யி­னா­லேயே இந்­நி­லை­யேற்­பட்­டுள்­ளது.

இவற்றில் மிக முக்­கிய ஒன்­றாக இருப்­பது மொழி தொடர்­பான சட்­டங்­க­ளாகும். நமது நாட்டின் தேசிய பிரச்­சினை. அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு அடி­கோ­லி­யது. இந்­நாட்டின் ஆதிக் குடி­க­ளான தமி­ழர்­களின் தாய் மொழிப் புறக்­க­ணிப்பே என்­பது ஏற்­கப்­பட்ட பகி­ரங்க உண்மை. அர­சியல் ஆதா­யத்­திற்­காக நாடாண்­ட­வர்­களால் நிகழ்த்­தப்­ப­டட இச் செயலால் நாடு இன்றும் பல்­வேறு பின்­ன­டை­வு­க­ளுக்­காட்­பட்டு அவ­திப்­ப­டு­கின்­றது. தவ­றான இச் செயற்­பாட்டால் இன்று சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்கும் இலக்­கா­கி­யுள்­ளது.

தமிழ் மொழிப் புறக்­க­ணிப்­பா­னது நாட்டைப் பிரி­வி­னை­வா­தத்­திற்கு இட்டுச் செல்லும் என்­பதைத் தமி­ழர்கள் பிரி­வி­னை­வாதச் சிந்­த­னைக்கு எள்­ளளவும் உட்­ப­டாத காலத்தில் அதா­வது 1956 ஜூன் மாதம் ஐந்தாம் திக­தி­யன்று சிங்­களத் தலை­வ­ரான கலா­நிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மாகக் கூறி எச்­ச­ரித்­தி­ருந்­தமை வர­லாற்றுப் பதி­வாகும்.

நாட்­டி­லே பிரி­வி­னை­வாத ஊற்று எங்­கி­ருந்து ஆரம்­பித்­தது என்­பதை கலா­நிதி கொல்­வினின் கூற்­றி­லி­ருந்து புரிந்­து­கொள்ள முடியும். ஆனால் ஆய்ந்து, உணர்ந்து அறியும் ஆற்றல் இழந்­த­வர்கள் நிறைந்த நாடாக நம் நாடு உள்ளது.

காலத்தின் கட்­டா­யத்தால் பல்­வேறு நிர்­ப்பந்­தங்­களால் அன்­று­விட்ட தவ­றுகள் திருத்­தப்­பட்­ட­தாகக் காட்­டப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தின் 18 (1) மற்றும் 18 (2) ஆம் உறுப்­பு­ரை­களின் படி "சிங்­க­ளமும் தமிழும் இலங்­கையின் அரச கரும மொழி­க­ளாதல் வேண்டும்” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் 19 ஆம் உறுப்­பு­ரையில் இலங்­கையின் தேசிய மொழிகள் சிங்­க­ளமும் தமிழும் ஆதல் வேண்­டு­மென்றும் கூறப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் தேசிய மொழிகள் சிங்­க­ளமும் தமிழும் என்று ஏற்­கப்­பட்­டுள்ள நிலையில் அம் மொழி­களைத் தாய் மொழியாக் கொண்ட சிங்­க­ள­வரும் தமி­ழரும் இந்­நாட்டின் தேசிய இனத்­த­வர்கள், சம­வு­ரிமை உள்­ள­வர்கள் என்­பதும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இலங்­கையின் அரசகரும மொழி­க­ளாக இவ்­விரு மொழி­களும் அங்­கீ­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ்­விரு மொழி­களும் நாட்டின் எக்­குடி மக­னுக்கும் எப்­ப­கு­தி­யி­லு­முள்ள அர­சாங்க அலு­வ­ல­க­மொன்றில் தனது தாய் மொழியில் தனது அன்­றாடக் கட­மை­க­ளையும் தொடர்­பு­க­ளையும் எது­வித தடையோ, தாம­தமோ, தயக்­கமோ இன்றி ஆற்றிக் கொள்­ள­மு­டியும் என்ற உத்­த­ர­வாதம் அர­சி­ய­ல­மைப்­பி­லேயே வழங்­கப்­பட்­டுள்­ளது என்று கொள்­ள­மு­டியும்.

ஆனால் நடை­மு­றையில் இவை­ய­னைத்தும் செயற்­ப­டு­வதில்லை. செயற்­ப­டுத்த வழி­வகை எதுவும் உருப்­ப­டி­யாகச் செய்­யப்­ப­டவும் இல்லை. அதற்­கான நோக்கம் உள்­ள­தா­கவும் இல்லை.

நாம் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். 13 ஆம் அர­ச­மைப்புத் திருத்­தத்தின் 18 (1) மற்றும் 18 (2) ஆகிய உறுப்­பு­ரை­களில் சிங்­க­ளமும் தமிழும் இலங்­கையின் அரச கரும மொழி­க­ளாதல் வேண்டும் என்­பது அர­சி­ய­ல­மைப்பின் 16 ஆவது திருத்­தத்தின் 22 (1) உறுப்­பு­ரையில் சிங்­க­ளமும் தமிழும் இலங்கை முழு­வ­திலும் நிர்­வாக மொழி­க­ளாக இருத்தல் வேண்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. அதா­வது இரு மொழி­களின் உரி­மை­க­ளுக்கும் வலுச் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது ஏட்டில் எழுதி வைத்­துள்ள மொழி­யு­ரிமை தொடர்­பான சட்ட விதிகள் சில­வற்றை தெரிந்து வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மகும். வழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­களில் எவை மறுக்­கப்­ப­டு­கின்­றன. மறைக்­கப்­ப­டு­கின்­றன என்­பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை அனை­வ­ருக்கும் உண்டு.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் முதன்மை நிர்­வாக மொழி தமி­ழா­கவும் ஏனைய மாகா­ணங்­களின் முதன்மை நிர்­வாக மொழி சிங்­க­ள­மா­கவும் இருக்க வேண்­டு­மென்­பது அர­சி­ய­ல­மைப்பின் 16 ஆவது திருத்­தத்தின் 22 (1) உறுப்­பு­ரை­யி­லுள்­ளது.

பிரித்­தா­னி­யரே இலங்­கையை ஏழு மாகா­ணங்­க­ளாகப் பிரித்­தனர். அதை­யிட்டு அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை. மாகா­ணங்­களைக் கட்­டி­யழத் தேவை­யில்லை என்­றொரு கருத்து அண்­மையில் கூறப்­பட்­டதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. பல நாடு­க­ளாகப் பிரிந்து தனித் தனி அர­சு­க­ளா­க­வி­ருந்த இந்தத் தீவை முழு­மை­யாக ஒரு ஆட்­சியின் கீழ் கொண்டு வந்­த­வர்கள் பிரித்­தா­னி­யர்கள் என்­பது வர­லாறு.

பிரித்­தா­னி­யர்கள் இலங்­கையை மாகா­ணங்­க­ளாகப் பிரிக்­கும்­போது மொழி­ய­டிப்­ப­டை­யி­லேயே பிரித்­தனர் என்­பது பதி­வி­லுள்­ளது. அதா­வது தமி­ழர்கள், சிங்­க­ள­வர்கள் எப்­ப­கு­தியில் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்­த­னரோ அவர்­களை உள்­ள­டக்­கியே அவர்கள் மாகா­ணங்­களை உரு­வாக்­கினர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதன்­படி வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தமிழைத் தாய் மொழி­யாகக் கொண்­ட­வர்கள் அடங்­கினர். இந்த உண்மை வர­லாற்றைப் புறந்­தள்ள முடி­யாது.

இது இவ்­வா­றி­ருக்க, முதன்மை நிர்­வாக மொழி­யாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மாகா­ணத்­தி­லுள்ள எப்­பி­ர­தேச செய­லகப் பிரி­வி­லா­வது கணி­ச­மான எண்­ணிக்­கை­யான மாற்று மொழி­யினர் வாழ்ந்தால் அப்­பி­ர­தேச செய­லகப் பிரி­வு­களை இரு மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்த ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் வழங்­கு­வ­தாக அர­சி­ய­ல­மைப்பின் 16 ஆவது திருத்­தத்தின் 22 (1) ஆம் உறுப்­பு­ரையில் கூறப்­பட்­டுள்­ளது.

அதன் அடிப்­ப­டையில் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் பல பிர­தேச செய­லகப் பிரி­வு­களை இரு மொழி நிர்­வாக உரி­மை­யுள்ள பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவற்­றையும் நாம் தெரிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும்.

ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்­டத்­தி­லுள்ள பண்­டா­ர­வளை, பதுளை, எல்ல, ஹல்­து­முல்லை, அப்­புத்­தளை, ஹாலி­எல, லுணு­கல, மீகா­கி­வுல, பசறை, வெலி­மடை, சொர­ண­தோட்ட ஆகிய பதி­னொரு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தின் திம்­பி­ரி­கஸ்­யாய, கொழும்பு தெஹி­வளை, இரத்­ம­லானை ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளுடன் களுத்­துறை மாவட்­டத்தின் பேரு­வளை பிர­தேச செய­லகப் பிரி­வுடன் ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இரு மொழிப் பிர­தேச செய­ல­கங்கள் என்ற அந்­தஸ்தைப் பெற்­றுள்­ளன.

அதேபோல் மத்­திய மாக­ணத்­தி­லுள்ள நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளான வலப்­பனை, கொத்­மலை, ஹங்­கு­ரங்­கெத்த, நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ ஆகி­ய­வையும் கண்டி மாவட்­டத்தின் தெல்­தோட்டை, அக்­கு­றணை, பன்­வில, பஸ்­பாகே கோறளை, உட­ப­லாத்த, கங்க இஹல கோறளை, கண்டி, நகர் சூழ் பிர­தேசம், மாத்­தளை மாவட்­டத்தின் மாத்­தளை பிர­தேச செய­லகப் பிரிவு உட்­பட மத்­திய மாகா­ணத்தில் பதின் மூன்று பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் தென் மாகா­ணத்தின் காலி நகர் சூழ் பிர­தேச செய­லகப் பிரிவும் இரு­மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளா­கி­யுள்­ளன.

வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் மாவட்­டத்­திற்­குட்­பட்ட கல்­பிட்டி, முந்தல், புத்­தளம், வண்­ணாத்­த­ிவில்லு ஆகிய நான்கு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் வட மத்­திய மாகா­ணத்தின் பொல­ந­றுவை மாவட்­டத்தின் வெலி­கந்த, லங்­கா­புர ஆகி­ய­வையும் அநு­ரா­த­புர மாவட்­டத்தின் கெக்­கி­ராவ பிர­தேச செய­லகப் பிரிவும் தமி­ழுக்கும் நிர்­வாக உரிமை கொண்­ட­வை­யா­யுள்­ளன.

சப்­ர­க­முவ மாகா­ணத்தின் கேகாலை மாவட்­டத்தின் மாவ­னெல்லை பிர­தேச செய­லகப் பிரிவும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் இரத்­தி­ன­புரி மற்றும் பலாங்­கொடை பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இரு மொழிப் பயன்­பாட்­டுக்­கு­ரிய பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகும்.

அத்­துடன் வவு­னியா மாவட்­டத்தின் வவு­னியா தெற்கு, அம்­பாறை மாவட்­டத்­தின தெஹி­யத்த கண்­டிய ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இரு மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி வடக்கு, கிழக்கு மாகா­ணங்களில் இரு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் ஏனைய ஏழு மாகா­ணங்­களில் முப்­பத்­தொன்­பது பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இரு மொழிப் பிர­தேச சபைக்­கென்ற உரிமை பெற்­றவை.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு உட்­ப­டாத பத்­தொன்­பது பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் கிழக்கு மாகா­ணத்தின் பன்­னி­ரண்டு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இரு மொழிப் பிர­தேச செய­ல­கங்­க­ளாக்கும் தகைமை கொண்­ட­வை­யாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

கொழும்பு மாவட்­டத்தின் கொலன்­னாவை, கம்­பஹா மாவட்­டத்தின் வத்­தளை, நீர்­கொழும்பு, கண்டி மாவட்­டத்தின் தொழுவை, மெத­தும்­பறை பாத்­த­தும்­பறை, உடு­நு­வர மாத்­தளை மாவட்­டத்தின் இறத்­தோட்டை, அம்­பன்­கங்கை கோறளை, உக்­கு­வளை, மாத்­தறை மாவட்­டத்தின் கொட­பொல, குரு­ணாகல் மாவட்­டத்தின் குளி­யாப்­பிட்டி கிழக்கு, இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் கஹ­வத்த, கொட­க­வெல, கேகாலை மாவட்­டத்தின் எட்­டி­யாந்­தோட்டை, தெர­ணி­ய­கலை, அநு­ரா­த­புரம் மாவட்­டத்தின் ஹொர­வப்­பொத்­தானை, கஹட்­ட­கஸ்­தி­கி­லிய ஆகி­ய­வற்­றுடன் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் கந்­தளாய், கோம­ரங்­க­ட­வெல, மொற­வெவ, பத­வி­சி­ரி­புர, சேரு­வில, தம்­ப­ல­காமம், திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லகப் பிரிவு ஆகி­ய­வையே இரு மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வ­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களின் முதன்மை நிர்­வாக மொழி­யாகத் தமிழ் மொழி­யுள்ள போதிலும் இரு மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­வற்றில் சிங்­கள மொழியில் கட­மை­களை நிறை­வேற்றிக் கொள்ள எது­வித தடை­களும் இல்­லா­த­போதும் அவற்றில் தமிழ் மொழியில் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்ள முடியாத நிலையே பெரும்பாலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இது போன்ற பல சட்ட விதிமுறைகள் அதாவது மொழியுரிமை தொடர்பானவை அரசிலயமைப்பிலுள்ளன. அவற்றைச் செயற்படுத்தவும் பல சுற்றுநிருபங்கள், வர்த்தமானிகள், அதி விசேட வர்த்தமானிகள், அறிவித்தல்கள், அறிவுறுத்தல்கள் என்று பல அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அவை யாவும் பொதுவாகவே வெறும் காகிதக் குறிப்புகளாகவே மட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசில் நமக்கும் நல்லதே நடக்கும். நாமும் இந்நாட்டில் சமத்துவமாக வாழ வழி கிட்டும் என்ற நமது நம்பிக்கையைத் தகர்த்தெறியும் நிலைமை தொடரக்கூடாது. அது தமிழ் மக்களுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. காலவோட்டத்தில் நாடும் சிக்கி அவலப்படும் நிலை மீளவும் எழ வழிவகுக்கக் கூடாது. உரிமை, உரிமையென்று பேசிக் கொண்டிராது நமது உரிமையை உறுதிப்படுத்த சட்டம் கூறும் வழியில் அவற்றைப் பெற்றுக் கொள்ள எத்தனிக்க வேண்டும்.

அதற்குத் தடையாயிருப்பவற்றை தகர்க்க, அழிக்க, நமது வழிகாட்டிகள் முன்னின்று செயற்பட வேண்டும். காலத்தே பயிர் செய் என்பார்கள். அதை உணர்ந்து இப்போதே செய்ய வேண்டும். செய்வார்களா?

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-13#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.