Jump to content

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்!


Recommended Posts

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1

Jayalalithaa%20article.jpg

Jayalalithaa.jpg

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

பெங்களூரு நோக்கி முதல் பயணம்:

jaya.jpgபெரிய வசதியெல்லாம் இல்லைதான். ஆனால், குறையொன்றும் இல்லை என்பதாகத்தான் அம்முவின் (ஜெயலலிதா) வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நிகழும்வரை. அப்போது அம்முவுக்கு இரண்டு வயதுக்கும் குறைவுதான். அவரது அப்பா ஜெயராம், பிணமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார். சோகம் அப்பிய இரவு... எங்கும் அழுகை குரல். அம்முவுக்குத் தன்னைச்சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் குறிப்பாகத் தன் அம்மா வேதவல்லி ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால், ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

ஜெயராமின் அப்பா நரசிம்மன் ரெங்காச்சாரி, மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவ பொறுப்பாளராக பணிபுரிந்தவர். அரண்மனையில் பணியென்றால் கேட்கவா வேண்டும்...? நல்ல ஊதியம் தான்.  நிறைவான வாழ்வு தான். ஆனால், ஜெயராமிற்கு அதை முறையாக நிர்வகிக்க தெரியவில்லை. ஆம், கல்லூரி முடித்தும் வேலைக்கு செல்லாமல், அப்பாவின் சொத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மழையில் கரையும் மண் வீடு போல, சேமிப்பும் கரைந்து கொண்டே போனது.   ஹூம்... உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஜெயராமிற்கு வேதவல்லி முதல் மனைவி அல்ல... இரண்டாம் மனைவி.

வேதவல்லி அன்று தன் கணவருக்காக மட்டும் அழவில்லை. இனி, தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கேள்வி நடுக்கத்தை உண்டாக்கியது. கணவர் இல்லை... இனி தனியாக மைசூரு மாண்டியாவில் வசிக்க முடியாது. இப்போது வேதவல்லிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் தந்தை ரெங்கசாமி வசிக்கும் பெங்களூருவுக்குச் செல்வது மட்டும்தான். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.

சினிமா வாய்ப்பு:

ரெங்கசாமிக்கு, ஹிந்துஸ்தான் ஏவியேசன் லிமிடெட்டில் குமாஸ்தா பணி. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து பெங்களூருவில் வேலைநிமித்தமாக jaya%20sandhiya.jpgசெட்டில் ஆனவர். அவரும், ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அதனால் தன் அப்பாவின் சுமையைக் குறைக்க, அம்முவுக்கு நல்ல கல்வியைத் தர வேதவல்லி பணிக்குச் செல்ல வெரும்பினார். தட்டச்சு தெரியும், சுருக்கெழுத்தும் நன்கு வரும். அப்போது இந்த தகுதிகளே போதுமானதாக இருந்தது. பணி கிடைத்தது.  ஆனால், அதிலிருந்து வந்த ஊதியம் போதுமானதாக இல்லை. வாழ்க்கை, வெயில்பொழுதில் வனாந்திரத்தில் நடப்பதுபோன்று இறுக்கமாகச் சென்றுகொண்டிருந்தது.

அந்த சமயத்தில் தான் , கன்னட சினிமா தாயாரிப்பாளர் கெம்பராஜ், வேதவல்லியைப் பார்த்தார். லட்சணமான முகம் என ஒரு நடிகைக்கான அம்சத்தைக் கண்டு கொண்டார். உடனடியாக ரெங்கசாமியைச் சந்தித்து, “என் படத்துக்கு ஒரு நாயகியை தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார். நடிக்க அனுமதிப்பீர்களா...?” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்... அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்...? என்று அமைதியாக இருந்துவிட்டார்.

ரெங்கசாமி மறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது, அவரது இன்னொரு மகள் அம்புஜா விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தார். ஓர் ஆச்சாரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்வது ரெங்கசாமிக்குப் பிடிக்கவில்லை. அம்புஜாவுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தார். இன்னொரு மகளும் தங்கள் சமூகநெறியை மீறி ஒரு பணிக்குச் செல்வதை ரெங்கசாமி விரும்பவில்லை.

ஆனால், மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே நிகழ்கிறதா என்ன..? அப்போது, விதி வேறு மாதிரி இருந்தது. ஆம், விமானப் பணிப்பெண்ணாக இருந்த அம்புஜா, வித்யாவதி என்று தன் பெயரை மாற்றி சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் அம்முவின் வாழ்க்கை மாறியது.

ஆம்... அம்புஜா, ‘வித்யாவதி’யாக மாறாமல் இருந்திருந்தால்... ஒருவேளை, அம்முவும் ‘அம்மா’வாக மாறாமல் இருந்து இருப்பார்.

வித்யாவதி சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வித்யா தன் சகோதரி வேதவல்லியை, தன்னுடன் சென்னை வந்து தங்குமாறு அழைத்தார். ‘‘அம்முவை, தான் நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன்’’ என்றார். எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த வாய்ப்பை வேதவல்லி ஏற்றுக்கொண்டு சென்னைக்குப் பயணமானார்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69460-from-mysuru-to-81-poes-garden-travel-of-jayalalithaa-episode-1.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பவுமே...சந்தியாவின் கண்களைப் பார்க்கப் பிடிக்கும்!

அதில விவரிக்க இயலாத ஒரு அழகு இருக்கு!tw_dizzy:

Link to comment
Share on other sites

ஜெயலலிதா எழுதிய கட்டுரை...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 2

jayayaya232_15574.jpg

IMG_0962_12342.jpg
 

 

ப்போது மட்டும் அல்ல, அப்போதும் மாநகரத்தின் நெரிசலில் தொலைந்துபோகாமல் இருப்பது என்பது ஒரு கடும் தவம் போன்றதாகத்தான் இருந்தது. தொலைந்துபோவது என்பது எலும்பு மஜ்ஜைகளால் ஆன பூத உடல் தொலைந்துபோவது அல்ல... தன் சுயம், தன் இருப்பு தொலைந்துபோகாமல் இருப்பது. இதற்காக வித்யாவதி போராடிக்கொண்டிருக்கும் போதுதான், விதியோ அல்லது தற்செயலோ...  வேதவல்லியின் சுயத்தையும், இருப்பையும் வேறுவிதமாக வடிவமைக்கக் காத்துக்கொண்டிருந்தது.  

ஆம். வித்யாவதியைச் சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள் வேதவல்லிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கேற்ற தோற்றம் இருப்பதைக் காண்கிறார்கள். தங்கள் படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். வேதவல்லிக்குக் குழப்பம். என்ன முடிவு செய்வது என்று தெரியவில்லை... அவர் சென்னைக்கு வந்தது, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை வழங்க... நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தர... ஆனால், எதிர்பார்க்காத வாய்ப்பு வந்து இருக்கிறது. வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால், இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார். எதைத் தீர்மானிப்பது என்று பல்வேறு யோசனைகளில் இருந்தபோதுதான்,  கன்னடப் படத் தயாரிப்பாளர் கெம்பராஜூவிடமிருந்து மீண்டும் அழைப்பு.

“மீண்டும் கேட்கிறேன். என் படத்தில் நடிக்க சம்மதமா...?” -  கெம்பராஜூ.

“மீண்டும் அதே நபரிடமிருந்து வாய்ப்பு. நிச்சயம் இது ஏதேச்சையானது அல்ல. இதுதான் இறைவன் நமக்குக் காட்டி இருக்கும் பாதை. இதை நிராகரிப்பது, நிச்சயம் முட்டாள்தனமானது.” ஆம்,  அந்தப் பாதையில் பயணிக்கத் தீர்மானிக்கிறார். வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். வேதவல்லி சந்தியாவாக மாறுகிறார்.

சென்னை - பெங்களூரு - சென்னை:

08jayalalithaa5_12596.jpgசந்தியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்குகின்றன. பெரிய வேஷங்கள் எல்லாம் இல்லைதான். ஆனால், சிறு சிறு கதாபாத்திரங்கள் என வாய்ப்புகள் கதவைத் தட்டிய வண்ணம்  இருக்கின்றன. எப்போதும்... எல்லோருக்கும்... விரும்பியது எல்லாம் கிடைக்காது அல்லவா...?  சந்தியாவுக்கும் அது கிடைக்கவில்லை. அவர் சென்னைக்கு வந்தது, தம் குழந்தைகளின் நல் எதிர்காலத்துக்காக. ஆனால், இப்போது அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியாத அளவுக்கு, பரபரப்பான வாழ்க்கை. என்ன செய்யலாம்...? வேறு வழியே இல்லை... மீண்டும் அம்முவையும், பாப்புவையும் பெங்களூருக்குத் தன் தந்தை வீட்டுக்கு  அனுப்பிவைக்கிறார்.

முதன்முதலாக அம்மு, தன் அம்மாவைப் பிரிகிறார்.  கனத்த இதயத்துடன் பெங்களூரு பயணம் ஆகிறார்.  ரெங்கசாமியும், கமலம்மாவும், சந்தியாவின் தங்கை பத்மா எனக் குடும்பமே அம்மு  மீது பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொண்டாலும், அந்த வயதில் அம்முவுக்குத் தேவைப்பட்டது, அம்மாவின் அரவணைப்பு...  ஆம். அம்மாவுக்காக அம்மு எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.

சந்தியாவுக்கும் இது புரியாமல் இல்லை. இந்தப் பாதையில் செல்லத் தீர்மானித்ததே தம் பிள்ளைகளுக்காகத்தானே...?  அவரும் ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும், பெங்களூரு சென்று அம்முவைப் பார்த்துக்கொள்கிறார். அம்முவுக்குப் பிடித்தமான அனைத்தும் வாங்கித் தருகிறார். அம்முவை மகிழ்வாக வைத்துக்கொள்ள, என்னவெல்லாம் வாங்கித் தர முடியுமோ... அதையெல்லாம் செய்கிறார். ஆனால், பாவம்.. சந்தியாவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை... அம்முவின் சந்தோஷம் உயிரற்ற பொம்மையில் இல்லை... இனிப்பு தின்பண்டங்களில் இல்லை...   அம்முவின் சந்தோஷமும், சுவையும் தன் அம்மாவின் அருகாமை மட்டும்தான்.  சந்தியாவும், அம்முவை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், சென்னைக்கு அழைத்துக்கொள்கிறார்.

அம்முவின் அந்த விருப்பமும் விரைவில் நிகழ்கிறது. அம்முவைக் கவனித்துக்கொண்ட சந்தியாவின் இன்னொரு தங்கை பத்மாவுக்குத் திருமணமாகிறது.  வயதான  ரெங்கசாமி, கமலம்மாவால்,  குழந்தைகள் இருவரையும் கவனித்துக்கொள்ள முடியவில்லை. பத்மாவுடனும் அனுப்ப முடியாது...  வேறு வழியில்லை, மீண்டும் சென்னைக்குத்தான் அனுப்பியாக வேண்டும்.  ரெங்காமிக்கு அவர்களைச் சென்னைக்கு அனுப்பவது கவலையளித்திருக்கக் கூடும்... ஆனால்,  அம்முவுக்கு இதைவிட வேறு என்ன  மகிழ்ச்சி இருக்க முடியும்?  பறவை தன் தாய் இருக்கும் கூட்டுக்கு எவ்வளவு சந்தோஷமாக கிளம்புமோ.... அதைவிட பலமடங்கு மகிழ்ச்சியாக மீண்டும் தன் கூட்டுக்குத் திரும்புகிறார் அம்மு.

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...!

சென்னை திரும்பியதும் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்கப்படுகிறார். படிப்பில் படு சுட்டி. பள்ளியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே ஆசிரியர்களின் செல்ல மாணவியாக மாறுகிறார்.  பள்ளியில் பாராட்டு, ஆசிரியரின் அன்பு.. எல்லாம் இருந்தும் அவர் பெங்களூருவில் எப்படித் தனிமையை உணர்ந்தாரோ அதே தனிமைதான் அம்முவை சென்னையிலும் வாட்டுகிறது.  ஆம், சென்னை வந்தபின்னும் அம்மாவின் அருகாமை அவருக்கு கிட்டவே இல்லை.

எப்போதும் படப்பிடிப்பிலேயே இருக்கும் அம்மாவைப் பார்க்க ஏங்குகிறார். அன்பின் கதகதப்பை உணர விரும்புகிறார்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்ல விரும்புகிறார்... ஒரு நாள், அம்மு தன் அன்பைக் கடிதமாக மாற்றி,  ‘என் அம்மா’ என்ற தலைப்பில் கடிதமாக எழுதுகிறார். தன் அம்மாவுக்கு அந்தக் கடிதத்தைக் காட்ட ஓர் இரவு முழுக்க விழித்து இருக்கிறார். ஆனால், சந்தியா அந்த இரவு முழுவதும் வரவே இல்லை. அடுத்த நாள் பள்ளியில் அந்தக் கடிதத்தைப் பார்த்த ஆசிரியர்கள், உச்சிமுகர்ந்து அம்முவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அம்மு எதிர்பார்த்தது அதுவல்லதானே...? அம்மு விரும்பியது, அந்தக் கடிதத்தைத் தன் அம்மாவிடம் காட்டி, அவரை அணைத்து... ‘ உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...’ என்று அழ வேண்டும் என்பதைத்தான்.


அது இரண்டு நாட்கள் கழித்து நிகழ்ந்தது. ஆம், இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த சந்தியா, அம்மு ஒரு புத்தகத்தை அணைத்துக்கொண்டு தூங்குவதைப் பார்க்கிறார். அந்தப் புத்தகத்தை மெதுவாக எடுத்தபோது அம்மு விழித்துவிடுகிறார். பின் அழுதே விடுகிறார். கடிதத்தைப் படித்த சந்தியா, அம்முவை இறுக அணைத்து, “ இனி உன்னிடம் அதிக நேரம் செலவிடுகிறேன் அம்மு... இனி எப்போதும் இதுபோல் நிகழாது...” என்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக, அதுதான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது.  அம்மு தன் அம்மாவுக்காகக் காத்திருப்பது தொடர்கதை ஆனது.  பள்ளியில் அவர் பரிசு பெறும் நிகழ்வில்கூட சந்தியா கலந்துகொள்ளவில்லை.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69593-from-mysuru-to-81-poes-gardentravel-of-jayalalithaa--ammu-waits-for-amma--episode-2.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா சந்தித்த முதல் துரோகம்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 3

 

27990d98f5c5e8e25d53212dbcbb02f7_11524.j

(இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்)

ரிகாசம் செய்பவர்களை, என்ன செய்யலாம்...? வாக்குவாதம் செய்யலாம்; மெளனமாக கடந்துசெல்லலாம் அல்லது அவர்கள் புருவம் உயர்த்தும் வண்ணம் வெற்றியைப் பரிசளிக்கலாம். ஆம், வெற்றி வாள் மட்டுமல்ல... அது கேடயமும்கூட. கிண்டல்கள், பரிகாசங்கள் எல்லாவற்றையும் தன்னில் உள்வாங்கிக்கொண்டு, கரையச் செய்யும் தன்மைகொண்டது அது. தத்துவார்த்தமாக ஆராய்ந்தால், ஆப்ரகாம் லிங்கன் தொடங்கி பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வரை வெற்றியில்தான் கிண்டல் சொற்களைக் கரைத்து இருக்கிறார்கள்.

இந்தத் தத்துவங்கள் எல்லாம் அந்தச் சிறு வயதில் அம்முவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவரும்  கிண்டல்களைக் கரைக்க இந்த வெற்றியைத்தான் தேர்ந்தெடுத்தார். கண்ணீரைக்கொண்டு கவலைகளைக் கரைக்க முடியாது என்று ஆனபின், அவர் முன்வைத்தது வெற்றியை மட்டும்தான்.
 

கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட அம்மு!

 

அடிப்படையில் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூகம், நாகரிகத்தின் பொற்காலத்தில் இருக்கிறோம் என்று பிதற்றிக்கொள்ளும் இந்தச் சமூகம், இன்றும்கூட நடிகர்களுக்குச் சமமான மரியாதையை நடிகைகளுக்குத் தருவதில்லைதானே. நடிகைகளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம்தானே இன்றும் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஐந்து தசாப்தங்களுக்குமுன் நடிகைகளை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்து இருக்கும்? அதுவும் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் ஒரு பெண் குறித்து சமூக மதிப்பீடுகள் எப்படியானதாக இருந்து இருக்கும்...? நிச்சயம் பரிகாசம் செய்து இருக்கும்தானே... அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கும்தானே... ஆம், இது அனைத்தையும் அந்த நாட்களில் சந்தியா சந்தித்தார். சந்தியா மட்டும் அல்ல... துரதிர்ஷ்டமாக பள்ளி நாட்களில் அம்முவும்கூடதான்.

இதை, ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். “சில பணக்கார வீட்டுப் பெண்கள் என்னைக் கிண்டல் அடித்தார்கள். என் அம்மா சிறுசிறு வேடங்களில்தானே நடித்தார். இதைவைத்து என்னைப் பரிகாசம் செய்தார்கள்.”

இந்தக் கிண்டல் சொற்களால், அம்மு முடங்கிப் போய்விடவில்லை; யாரிடமும் தர்க்கமும் செய்யவில்லை; அதை மெளனமாகவும் கடந்துசெல்லவில்லை. அவர் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தார். அனைத்துப் பாடங்களிலும் முதல் இடம்பிடித்தார்; பள்ளியில் மிகவும் ஒழுக்கமான மாணவியாக இருந்து, அனைத்து ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக ஆனார். தன்னைத்தானே அந்த வயதிலேயே வெற்றியின் மூலம் ஒரு வலுவானவராக வடிவமைத்துக்கொண்டார். ஆம், இப்போது நீங்கள் அம்முவை பரிகாசம் செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல... அவர், உங்களுக்குமுன் ஒரு வெற்றியை வைத்திருக்கிறார். அவரை, கிண்டல் செய்ய வேண்டுமானால்... நீங்கள் அதைக் கடந்துசெல்ல வேண்டும். அந்த வயதில் அவருக்கு வெற்றி மட்டும்தான் அரணாக இருந்தது.

இந்தக் கிண்டல்களினால், அவருக்கென்று அந்த வயதில் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லை. பள்ளிக் காலங்கள் பெரும்பாலும் தனிமையில்தான் அவருக்குச் சென்றன. கிடைத்த ஒரே நண்பரும் அவருக்குத் துரோகத்தைப் பரிசளித்துச் சென்றார். அரசியலில், பல துரோகங்களை ஜெயலலிதாவாக சந்தித்து இருக்கிறார். ஆனால், அம்முவாக 13 வயதில் அவர் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம், அவர் பல நாட்கள் தனிமையில் அழ காரணமானது.

முதல் துரோகம்!

அப்போது அவரது வீடு தி.நகர், சிவஞானம் தெருவில் இருந்தது. அவர் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி இருந்த, இவரைவிட இரண்டு வயது மூத்த பெண் ஒருவர், அம்முவுக்குத் தோழியாகிறார். அதுவரை அவருக்குப் பெரிதாக  தோழிகள் என்று யாருமில்லை. இந்த நட்பு, உண்மையில் அம்முவுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது. சந்தோஷமாக தன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண் தன்னுடன் நட்பானதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பது, அம்முவுக்குச் சில நாட்கள் கழித்துத்தான் தெரிகிறது.

14627765_10202262591081679_938769075_n_1ஆம், அந்தப் பெண் அம்மு வீட்டின் அருகே இருந்த ஒரு ஜெயின் பையனை நேசித்தார். அம்முவீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்தான், அந்தப் பையன் வீடு தெரியும். அதனால், தினமும் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியிலிருந்து நின்றுகொண்டு அந்தப் பையனிடம் சைகையில் பேசுவார். இதைச் சில நாட்கள் கழித்துத்தான் அம்மு கண்டுபிடித்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் அம்மு கேட்க, இதை அவரும் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எனக்காக அந்தப் பையனிடம், தூது செல்ல முடியுமா? தான் வராத நாட்களில், அந்தப் பையனிடம் தான் வராத காரணத்தை சைகையில் சொல்ல முடியுமா?” என்று அந்தப் பெண், அம்முவிடம் தங்கள் காதலுக்கு உதவி கேட்கிறார்.

உண்மையில், இது அம்முவுக்குச் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தன்னைவிட இரண்டு வயது மூத்த பெண் தன்னிடம் உதவி கேட்பதே, அவருக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. இதன் விளைவுகள் எதனையும் யோசிக்காமல், அந்தப் பதின்பருவ காதலுக்குத் தூது செல்ல அம்மு சம்மதம் தெரிவிக்கிறார். சொல்லப்போனால், அந்த வயதில் அவர் தெரிவித்த இந்தச் சம்மதம்தான், துரோகச் சூழ் இவ்வுலகு குறித்து அவருக்கொரு புரிதல் உண்டாகக் காரணமாக அமைகிறது.

அந்தத் தோழி, சில நாட்கள் அம்மு வீட்டுக்கு வரவில்லை. தான் வராத காரணத்தை அந்தப் பையனிடம் தெரிவித்துவிடும்படி அம்முவிடம் சொல்கிறார். அம்முவும் இதை அந்தப் பையனிடம் மொட்டை மாடியில் நின்று சைகையில் தெரிவிக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக இதை அம்மு வீட்டுக்கு வரும் பால்காரர் பார்த்துவிடுகிறார்.

இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்லி இருந்தால்கூட, அம்மு உண்மையைச் சொல்லிச் சமாளித்து இருப்பார். ஆனால் பால்காரர், அம்முவின் தோழி வீட்டுக்குச் சென்று, “இனி உங்கள் பெண்ணை அந்த நடிகை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். அம்முவின் நடவடிக்கை சரியில்லை... அவர் மாடியில் நின்றுகொண்டு ஒரு பையனிடம் தினமும் சைகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வருவது நின்றுவிடுகிறது.

தோழி பல நாட்கள் வீட்டுக்கு வராததால்... அம்மு, அந்தத் தோழியின் வீட்டுக்குச் செல்கிறார். அந்தத் தோழியின் பெற்றோர், அந்த பால்காரர் சொன்னதை அப்படியே சொல்லி அம்முவை சரமாரியாகத் திட்டிவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில், தோழி உண்மையைச் சொல்லித் தன்னைக் காப்பார் என்று அம்மு தன் தோழியையே பார்க்கிறார். ஆனால், அந்தத் தோழி அம்முவின் பார்வையைச் சந்திக்கத் திராணியின்றி அமைதியாகத் தலைகுனிந்து நிற்கிறார்.

வசைச் சொற்கள் தன்னை வந்து தாக்கிய அந்தச் சமயத்திலும்கூட அம்மு, தன் தோழியைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் செய்தது வீட்டுக்குச் சென்று, தனிமையில் வெகுநேரம் அழுதது மட்டும்தான். நம்பிக்கை துரோகம் என்ற பதத்துக்கான அர்த்தத்தை, முதன்முதலாக அம்மு உணர்ந்தது அப்போதுதான். ‘‘துரோகம் இவ்வளவு வலியைத் தருமா? என்று வெகுநாட்கள் இதை நினைத்து அழுதிருக்கிறேன்’’ என்று இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அம்மு.

ஏன் ஜெயலலிதா மற்ற தலைவர்களைப்போல் அதிகம் பேச மாட்டேன் என்கிறார்... ஏன் அவர் யாரையும் நம்புவது இல்லை... ஏன் எப்போதும் அவர் தனக்குத்தானே ஓர் அரணை அமைத்துக்கொண்டு அதன் உள்ளேயே இருக்கிறார்... என்ற நம் பல கேள்விகளுக்கான விடை, இந்தச் சம்பவத்தால்கூட இருக்கலாம்.

ஆம், மனிதர்களின் ஆளுமையைத் தீர்மானிப்பதில், வடிவமைத்ததில்... சிறு வயதில் அவர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளும் இருக்கிறதுதானே...?

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69797-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-3-pain-of-betrayal.art

Link to comment
Share on other sites

உயிர்த்தெழுந்த சிவாஜி வார்த்தைகள்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 4

1018181_vc1_16128.jpg

 

 

14800903_10202268440307906_522267440_n_1

லகிலுள்ள அனைத்துத் துன்பங்களையும், வேதனைகளையும் ஓர் இடத்தில் கொட்டிக் குவித்து, அதிலிருந்து உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் சமப் பங்கை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினால், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு மட்டும் உரிய, தங்களுக்கு ஏற்கெனவே இருந்த துன்பங்களை மட்டுமே எடுத்துச் செல்வார்கள்” - கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ். இது, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த மேற்கோள். இதன் உட்பொருள், யாரும் பிறரின் துன்பங்களை, கவலைகளை பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதுதான்.

மன அழுத்தத்தில், பெரும் கவலையில் உழன்றுக்கொண்டு இருக்கும்போது, நமக்குத் தேவைப்படுவது பெரும் பணமோ, நகைகளோ இல்லை. அந்தச் சமயத்தில், நமக்குத் தேவையாக இருப்பது அன்பானவர்களின் அரவணைப்பு... உன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள, என் இருப்பால் உன் தனிமையை விரட்ட ‘நான் இருக்கிறேன்’ என்று வருடிக்கொடுக்கும் ஒரு சொல். ஆனால், பொருள்வயப்பட்ட இந்த லெளகீக வாழ்க்கையில், அப்படியான ஒரு சொல், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பதே இல்லை. அப்படிக் கிடைத்திருந்தால், நிச்சயம் வரலாற்றின் பக்கங்கள் வேறு மாதிரியானதாகத்தானே இருந்திருக்கும்.

 


அம்முவும் சிறுவயதில் அப்படியான கவலையில்தான் இருந்து இருக்கிறார். அது, தனிமை தரும் கவலை. போர் வீயூகங்களைக்கூட தந்திரத்தின் துணையால் ஊடறுத்து வென்றுவிடலாம். ஆனால், தனிமையைக் கடப்பது அவ்வளவு எளிதானதா என்ன....? அந்தத் துரோகத்துக்குப் பின் தனிமையில்தான் அம்முவின் பல நாட்கள் கழிந்து இருக்கின்றன. சிறு வயது அம்முவின் மனதில் பதிந்த இந்த ரணங்கள்தான், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு சாக்ரட்டஸீன் மேற்கோள் பிடிக்கக் காரணமாக இருந்ததோ, என்னவோ...?

கலையில் கவலையைக் கரைத்தல்!

 

Jaya%20Dance%20Master_16152.jpgவிருப்பப்பட்டுத்தான் கற்றார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கொடும் தனிமையின் கரங்களிலிருந்து தப்ப அந்த நாட்களில் அவருக்கு நாட்டியம் பேருதவியாக இருந்தது. ஆம், அந்த நாட்களில் பிரபலமான பரத ஆசிரியராக கே.ஜெ.சரசாவிடம், நாட்டியம் பயில அம்முவை அனுப்பினார் சந்தியா. சரசா, அப்போது திரைப்படத் துறையில் பரபரப்பாக இருந்த ராமைய்யா பிள்ளையின் தூரத்து உறவினர். மிகவும் பிரபலமான நாட்டிய ஆசிரியர்.

ஆனால், நிச்சயமாக சந்தியாவுக்கு அப்போது திரைப்படம் குறித்த எந்தத் திட்டமும் இல்லை. நாட்டியம் பயின்றால் சினிமாவில் காலூன்றச் சுலபமாக இருக்கும் என்று எல்லாம் எண்ணவில்லை. சொல்லப்போனால், தொடக்கத்தில் அம்மு திரைப்படத் துறைக்கு வர வேண்டாம் என்றுதான் சந்தியா விரும்பினார். அம்முவின் விருப்பமும் அதுவாகத்தான் அப்போது இருந்தது. அம்முவுக்குத் திரைத்துறையை அப்போது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அம்மாவின் அரவணைப்புத் தனக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு திரைத்துறைதான் காரணம் என்று அம்மு நம்பினார். அது மட்டுமல்ல, திரைத்துறையைச் சார்ந்தவர்களையும் அந்த வயதில் அம்முவுக்குப் பிடிக்கவில்லை. பின்னாளில், இதுகுறித்துத் தன் நெருங்கியத் தோழிகளிடம்... அவர், “சில சமயம் அம்மாவை பார்ப்பதற்காகத் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருவார்கள். குண்டாக, ஒல்லியாக, வளர்த்தியாக, எண்ணெய் வழியும் முகத்துடன் எனப் பலர் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். எனக்கு அவர்களைக் கொஞ்சமும் பிடிக்காது’’ என்று கூறி உள்ளார்.

சரி. மீண்டும் சரசுவின் சரசாலயா நாட்டியப் பள்ளிக்கே வருவோம். அம்முவுக்கு முதலில் நாட்டியத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லைதான். ஆனால், அதே நேரம் எந்த விஷயத்தையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது அல்லவா? அதனால், நாட்டியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். எங்கும் எப்போதும் அனைவரின் செல்லப்பிள்ளையாக இருக்கும் அம்மு, சரசாலயா நடனப் பள்ளியிலும் அனைவரின் மனதையும் வென்றெடுத்தார்.


நிஜமான சிவாஜியின் வார்த்தைகள்!

14797371_10202268440147902_139127597_n_1அது, 1960-ம் ஆண்டு. அப்போது அம்முவுக்கு 12 வயது. மிகவும் கோலாகலமாக அம்முவின் நடன அரங்கேற்றத்துக்கு சந்தியா ஏற்பாடு செய்கிறார். திரைப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. சிவாஜி கணேசன் தலைமையில் கோலாகலமாக அரங்கேற்றம் நடைபெறுகிறது. அம்முவின் நடனத்தைப் பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்துத்தான் போனார்கள். சிவாஜி அம்முவிடம், “நீ தங்க சிலைபோல் இருக்கிறாய்... எதிர்காலத்தில் நீ நிச்சயம் பெரிய நடிகையாக வருவாய்” என்று தன் சிலிர்ப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் செய்தார். இந்த வார்த்தைகளை அவர் மனதின் அடியாழத்திலிருந்து சொல்லி இருந்தாலும்... அவை, உயிர் பெறும் என்று நிச்சயம் அப்போது அவரே நினைத்திருக்கமாட்டார். சந்தியாவுக்கு இந்த வார்த்தைகள் மகிழ்ச்சியைத் தந்தது. மகளைப் பிறர் புகழ்வதை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், அவரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யார் எடுத்துக்கொண்டால் என்ன... எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன...? காலம் இந்த வார்த்தைகளை அப்படியே உள் வாங்கிக்கொண்டது, பிறகொரு நாள் அதற்கு உயிர் கொடுத்தது.

ஆம். வரலாறு மீண்டும் திரும்புகிறது...!

 

 

 

 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69934-from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-episode-4-sivajis-word-came-true.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் வில்லன் சோ...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 5

5_13587.jpg

Jayalalithaa%20004_12237.jpg

 

 

ம் திட்டங்கள் குறித்தெல்லாம் விதிக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்பான் சீனப் பழங்குடி. வைணவ பின்னணியிலிருந்து வந்த அம்முவுக்கு விதி மீது நம்பிக்கை இருந்ததா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அம்முவின் திட்டங்கள் குறித்து காலம் கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை. அது, அவரின் திட்டங்களுக்குச் சம்மந்தமே இல்லாத... சொல்லப்போனால் கொஞ்சமும் விருப்பமே இல்லாத ஒரு வாய்ப்புடன் காத்திருந்தது.  ஆம், அது சினிமா வாய்ப்புதான்!

 

 

ஏற்கெனவே கூறியதுபோல், திரைப்படத் துறை குறித்த விருப்பம் கடுகளவு ஆசைகூட அம்முவுக்கு இருந்ததில்லை. சந்தியாவுக்கும் அப்படித்தான். மருத்துவர் அல்லது இந்திய ஆட்சிப் பணியாளர் ஆக வேண்டும் என்பதுதான் அம்முவின் விருப்பம். நன்றாகப் படிக்கவும் செய்தார். இதுகுறித்து சந்தியாவே பின்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “என் மகள் அம்மு - ஜெயலலிதா - திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும்போதே அம்மு எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. படித்துப் பட்டம்பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்றுதான் நானும் எண்ணினேன்.”

ஆனால், அந்த விருப்பம் இறுதிவரை நிகழாமலேயே போய்விட்டது. கொஞ்சம் உன்னிப்பாகப் பகுத்தாய்ந்தால், அதற்கு சந்தியாவும் ஒரு காரணம்தான். ஆம், அவர் மட்டும் கடுமையாக மறுத்திருந்தால்.... இன்று அம்மு அப்போலோவில் ஒரு மருத்துவராகக்கூட ஆகி இருந்திருக்கலாம்... இல்லையென்றால், தமிழகத்தின் தலைமை ஆலோசகராக இன்று ஷீலா பாலகிருஷ்ணன் இருக்கும் இடத்தில் அம்மு இருந்திருக்கலாம். யார் கண்டது...?  ஹூம்... வாழ்க்கை விசித்திரமானதுதான்!

சரி வாருங்கள். முதல் சினிமா வாய்ப்புக்கு முன்பு... அம்முவுக்கு நடிப்பு சம்பந்தமாக வந்த வேறு வாய்ப்புகளைப் பார்ப்போம்.

வில்லன் ‘சோ’...!

Jayalalithaa_12421.jpg

சந்தியா எப்போதாவது அம்முவைத் திரைப்படப் படப்பிடிப்புக்குச் அழைத்துச் செல்வது உண்டு. ஒரு முறை, எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்று இருக்கிறார். அப்போது, அம்முவுக்கு 10 வயதுக்குள்தான் இருக்கும். சுட்டியாக விளையாடிக்கொண்டிருந்த அம்முவைப் பார்த்து, எம்.ஜி.ஆர்., “உன் பெயர் என்னம்மா...?” என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மு, ஆங்கிலத்திலேயே சரளமாகப் பதில் கூறியுள்ளார். ‘‘ஏன் உனக்குத் தமிழ் தெரியாதா’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, அதற்கும் அம்மு, ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி உள்ளார். சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர் அந்த இடத்தைக் கடந்திருக்கிறார். அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே... இந்த அம்முவைத்தான், பின்னாளில் இதே ஆங்கிலப் புலமைக்காக ராஜ்ய சபா உறுப்பினராக, டெல்லிக்கு அனுப்பப்போகிறோம் என்று.

ஏன்...? இப்போது இந்தச் சம்பவம் என்றால்... இதே ஆங்கிலப் புலமைதான், அம்முவுக்கு நாடகத்தில் வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்தது.

அப்போது, சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படித்துக்கொண்டிருந்தார். ஒய்.ஜி.பார்த்தசாரதி,  ஆங்கில நாடகம் போடுவதற்கான வேலைகளில் இருந்தார். ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் கிடைக்காமல் இருந்தது. எங்கெங்கெல்லாமோ தேடிப் பார்த்தார். அமையவே இல்லை. பின், நண்பர்கள் மூலமாக அம்மு குறித்து கேள்விப்பட்டு, சந்தியாவை அணுகுகிறார்கள். நாடகம் என்பதால் சந்தியாவும் சம்மதிக்கிறார்.  ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு, அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.

ஆங்கிலப் பட வாய்ப்பு!

Jayalalithaa%20003_12040.jpgஇதே காலகட்டத்தில்தான் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி தான் தயாரிக்கப்போகும் ஆங்கில ஆவணப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து ஒய்.ஜி.பார்த்தசாரதியிடமும் சொல்ல... ஒய்.ஜி.பி சற்றும் யோசிக்காமல், அம்முவைப் பரிந்துரைத்து இருக்கிறார். சோ-வும் அம்முவின் நடிப்பை சங்கர் கிரியிடம் புகழ்ந்து கூறி, ‘‘உங்கள் ஆவணப் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

சங்கர் சற்றும் தாமதிக்காமல், உடனே சந்தியாவைச் சந்தித்து, அம்முவை நடிக்கக் கேட்டு இருக்கிறார். ஆங்கிலப் பட வாய்ப்பு. அதுவும் ஜனாதிபதியின் மகன் தயாரிக்கும் படம். ஆக, சிறந்த வாய்ப்புதான். இருந்தாலும், அம்முவுக்குத் தயக்கம். “இல்லை... அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை... அவளும் விரும்பமாட்டாள்...’’ என்று நாசூக்காக மறுக்க, சங்கர் விடுவதாக இல்லை. “படிப்புத்தான் முக்கியம். அது எனக்கும் புரிகிறது. உங்கள் மகளின் படிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக்கொள்கிறேன். நிச்சயம்... உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்’’ என்று கேட்க, அரை மனதுடனே சம்மதிக்கிறார் சந்தியா.

‘எபிசில்’ (Epistle) படப்பிடிப்புத் தொடங்குகிறது.

கொஞ்சம் கொஞ்மாகத் திரைத்துறை, அம்மு வாழ்வை வியாபிக்கத் தொடங்கியது!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70003-from-mysuru-to-81-poes-garden-travel-of-jayalalithaa---cho-villain-for-jayalalithaa.art

Link to comment
Share on other sites

கர்ணன் சிவாஜியும், கபாலி ரஜினியும்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 6

newssssammu1_12161.jpg

Jayalalithaa_11069.jpg

 

“இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்துகொள்வேன்.” - இது நடிகையாக புகழ்பெற்றபின் ஜெயலலிதா சொன்னது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அவர் அப்படியான மனநிலையில்தான் இருந்திருக்கிறார். நடிக்க விருப்பமில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அதை அம்மு விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. படிப்பில், நாட்டியத்தில் எப்படித் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, உச்சங்களைத் தொட்டாரோ அதுபோலத்தான் நடிப்பையும் கையாண்டார். விடுமுறை நாட்களில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடியவில்லையே என்ற எந்த ஆயாசமும் அவருக்கு இல்லை. தன் ஆன்மாவிலிருந்து சிறந்ததை எடுத்து வழங்கினார். அதனால்தான் என்னவோ... அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவருக்கு வாய்ப்பு வந்துகொண்டே இருந்தது.

ஆம், ‘எபிசில்’ ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே... அவருக்கு அடுத்த வாய்ப்பு வந்தது. வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. அது, வரும்போது இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், அவருக்காக வாய்ப்புக் காத்திருந்தது. நாட்கள் கணக்கில் அல்ல... மாதக்கணக்கில். அமெரிக்க நகைச்சுவை நடிகர் மில்டன், “வாய்ப்புகள் கதவைத் தட்டவில்லை என்றால், கதவுகளை நீங்களே உருவாக்குங்கள்...” என்றார். அம்முவுக்கு ஏறத்தாழ ஒன்பது மாதக்காலம், வாய்ப்பு கதவைத் தட்டிவிட்டு, அவர் திறப்பார் என்று வாசலிலேயே காத்துக்கிடந்தது.

காத்திருந்த வாய்ப்பு!

Jayalalithaa%20002_11222.jpgசந்தியா அப்போது, ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதில், அவருக்கு மாமியார் வேடம். படத்தின் நாயகி, ஒரு பால்ய விதவை. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நபர் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் ராகவய்யா இதற்காக ஒரு நெடிய தேடுதல் வேட்டையையே நடத்திவிட்டார். ஆனால், பொருத்தமான நபர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, அந்தக் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட்டுவைத்துவிட்டு, மற்ற காட்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் மீண்டும் காலம், தன் விளையாட்டைத் தொடங்கியது. ஆம், ஒருநாள் வேறொரு வேலையாக சந்தியாவின் வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள், அம்முவைப் பார்க்கிறார்கள். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்குக் கடத்த அலை, பறவைகள் எல்லாம் சில நொடிகளுக்கு உறைந்து நிற்குமே.... அதுபோல நின்றதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தத் தயாரிப்பாளர்கள் இருவரும் திகைத்துத்தான் போய்விட்டார்கள். அதில், ஒருவர் வாய்விட்டே கூறிவிட்டார். “நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே... உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாகப் போடப் போகிறோம்” என்றார், ஒரு வாய்ப்பை வழங்கிய மனநிலையில். ஆனால், அதற்கு சந்தியா சம்மதிக்கவில்லை.

“முடியாது. அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கும் கூடத்தான்... அவள் படிக்க விரும்புகிறாள். தயவுசெய்து வேறொரு நபரை தேடிக்கொள்ளுங்கள்” என்றார் மென்மையான மொழியில். வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரை மனதுடன் கிளம்புகிறார்கள்.

ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. முக்கியக் கதாபாத்திரம் இல்லாததால், நத்தை வேகத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. அந்தச் சமயத்தில் மீண்டும் அந்தத் தயாரிப்பாளர்கள் சந்தியாவைச் சந்தித்து, “இன்னும் எங்கள் படத்துக்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்கிறார்கள். மீண்டும்... மீண்டும் கேட்கிறார்கள். இவர்களை உதாசீனப்படுத்தவும் முடியாது. அதே சமயத்தில், அம்முவை நடிக்க அனுப்பவும் முடியாது. சரி... இன்னும் கொஞ்சம் காலத்தைக் கடத்திப் பார்ப்போம். ஒருவேளை,
அதற்குள் இவர்கள் வேறொரு நாயகியைக் கண்டடையலாம் என்று சமயோஜிதமாக யோசித்து இப்படியாகச் சொல்கிறார். “அம்முவின் படிப்புக் கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும்வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்கிறார். முடியாது என்று சொல்லிவிட்டால் சந்தோஷம்... காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் பிழை இல்லை. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. இதுதான் அப்போதைக்கு சந்தியாவின் எண்ணம்.

“சரி காத்திருக்கிறோம்...” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வாய்ப்பு மூன்று மாதக்காலம், காதலிக்கு காத்திருக்கும் காதலன்போல, அம்முவின் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறது. கோடை விடுமுறை வருகிறது. அந்தத் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள். ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்கிறார்கள். சந்தியாவுக்கு பலமான யோசனை. நிலைமை கையை மீறிப் போய்விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. அம்முவை நடிக்க அனுமதித்துவிட வேண்டியதுதானா... என்ற எண்ணம் எழுகிறது. சரி, அம்முவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்.

அம்முவிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். “என்ன சொல்கிறாய் அம்மு...? எனக்கும் விருப்பம் இல்லைதான். தொடர்ந்து கேட்கிறார்கள், புறந்தள்ள முடியவில்லை... என்ன செய்யலாம்” என்று கேட்கிறார்.   அம்மு இதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்பதுதான் சந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால், அன்று அம்மு என்ன மனநிலையில் இருந்தார் என்று தெரியவில்லை, “நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்கிறார்.

வாசலில் ஒன்பது மாத காலமாகக் காத்திருந்த வாய்ப்பு, அம்முவை உற்சாகமாகத் தழுவிக்கொள்கிறது.

கேட்காததையும் கொடுத்த கர்ணன்!

Jayalalithaa%20001_11511.jpg‘‘தேடுவதை நிறுத்து... விரும்பியது கிடைக்கும்’’ என்பார் ஓஷோ. ஆனால், அம்முவுக்குத் தொடர்ந்து விரும்பாதது எல்லாம் கிடைத்தது. ஆம், அம்முவுக்கு மீண்டும் இன்னொரு வாய்ப்பு வருகிறது. ‘கர்ணன்’ திரைப்படத்தின் 100 நாள் கொண்டாட்ட விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. அந்தப் படத்தில் சந்தியாவும் நடித்து இருந்தார் என்பதால், அவரும் விழாவுக்குச் செல்கிறார், கூடவே அம்முவும்.

அந்த நிகழ்ச்சியில் அம்முவைக் கண்ட இயக்குநர் - தயாரிப்பாளர் பி.ஆர்.பந்தலு, அம்முவை தான் எடுக்கப்போகும் கன்னடப் படத்தில் நடிக்கக் கேட்கிறார். மிக முக்கிய இயக்குநரிடமிருந்து வாய்ப்பு... மீண்டும் சந்தியாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தயக்கத்துடன் மறுத்துப் பார்க்கிறார். ஆனால், பந்தலுவும் இந்தக் கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக்கொள்வதாகக் கூறுகிறார். அம்மு, ‘சின்னட கோம்பே’ படத்தில் ஒப்பந்தமாகிறார்.

பரபரப்பான சினிமா வாழ்வில் அம்மு அடி எடுத்துவைத்தது... சொல்லப்போனால், இந்தப் புள்ளியில்தான். கேட்பதைக் கொடுப்பவன்தான் கர்ணன். அந்த ராசிதானோ என்னவோ...? அதன் வெற்றி விழாவில் கலந்துகொண்ட அம்முவுக்குக் கேட்காததெல்லாம் கிடைத்தது.

ஒருவேளை, அன்று அந்தத் தயாரிப்பாளர்கள் வந்தபோது, அம்மு விளையாடப் போயிருந்தால் அல்லது நாட்டிய வகுப்புக்குச் சென்றிருந்தால்... சந்தியா, அம்முவை ‘கர்ணன்’ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்...? இன்று, தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், எதுவெல்லாம் இருந்திருக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கமாட்டார். ‘கபாலி’ படத்தை ஜாஸ் சினிமாஸ் வெளியிட்டு இருக்காது. இதுக்கெல்லாம் மேலாக நீங்கள், இப்போது இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள்.

 (தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70097-from-mysuru-to-81-poes-garden-travel-of-jayalalithaa-karnan-sivaji-and-kabali-rajini---episode-6.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை திட்டிய பேராசிரியை...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 7

7cs_11384.jpg

Jayalalithaa%2007%2003_09348.jpg

 

''நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது'' என்பார் ரூமி. ஆனால், அம்மு விஷயத்தில் அவர் தேடாதது எல்லாம்  வாழ்க்கை முழுவதும் அவரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தது.  இதற்கு என்ன காரணம்...  ஏன் வேண்டாமென்றாலும், அவரை வாய்ப்புத் துரத்தியது...? சந்தியாவின் பதில் இப்படியானதாக இருக்கிறது. “அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?” என்றார் சந்தியா ஒரு நேர்காணலில்.  அவர் வேண்டுமானால், விதி மீதி பழிபோட்டுக் கொள்ளட்டும். ஆனால், விதி மட்டும் அம்முவின் வாழ்வை வடிவமைக்கவில்லை, சந்தியாவும் சேர்ந்துதான் வடிவமைத்திருக்கிறார்.  தன் உள்ளுணர்வு சொல்லும்  பாதையில்  அம்மு செல்லவில்லை... அவர் சென்றது சந்தியா காட்டிய வழியில் தான்.

எதிர்ப்புத்  தெரிவித்த தாத்தா... அடம்பிடித்த அம்மு!

Jayalalithaa%2007_09453.jpg’சின்னட கொம்பே’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சில காட்சிகளைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர். நாடகத் துறையில் கோலோச்சிய ஒய்.ஜி.பார்த்தசாரதியை,  ஜனாதிபதியின் மகன் சங்கர் கிரியை, பிரம்மாண்ட இயக்குநர் பந்தலுவைக் கவர்ந்த  அம்முவின் நடிப்பு  ஸ்ரீதரையும் கவர்ந்திருக்கிறது. ஹூம்... கவராமல் போனால்தானே ஆச்சர்யம். ஆன்மாவிலிருந்து கலையை வெளிப்படுத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காமல்போகும்...? சந்தியாவை அணுகுகிறார்.  “நான் எடுக்கப்போகும், ’வெண்ணிற ஆடை’ படத்தில் அம்முவை கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்புகிறேன்... உங்களுக்குச் சம்மதமா?” அந்தச் சமயத்தில் உச்சத்தில் இருந்த ஓர் இயக்குநர் கேட்கிறார். மறுக்க விருப்பமில்லைதான்... இருந்தாலும் ஒரு  சிறு குழப்பம்.  தனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேட்கிறார். இறுதியாகத் தன் அப்பாவிடமும்.

 “அம்முவை நடிக்கவைக்க வாய்ப்புத் தொடர்ந்து வருகிறது... நான் என்ன செய்யட்டும்...?” என்று கம்மியக் குரலில் கேட்கிறார் சந்தியா. அவருக்குத் தெரியும்தானே, தான் நடிப்பதே அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பது!

சந்தியாவை நடிக்க கேட்டபோது தயாரிப்பாளர் கெம்ப்ராஜுவுக்கு ரெங்கசாமி, என்ன பதிலைச் சொன்னாரோ... அதையேதான் இன்னும் உரிமையாக... இன்னும் கோபமாகச் சொல்கிறார். “அம்மு நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவையும் ஏன் சினிமாத் துறைக்கு இழுக்கிறாய்?” என்கிறார் காட்டமாக.

ஆனால், சந்தியா முன் முடிவுடன்தான் இந்தக் கேள்வியையே கேட்டார். ஆம், அவர் முன்பே முடிவு செய்துவிட்டார், அம்முவைத் தொடர்ந்து நடிக்கவைப்பது என்று.

சந்தியா முடிவு செய்தால் மட்டும் போதுமா...? அம்முவின் முடிவுதானே முக்கியம்...! ரெங்கசாமியின் வார்த்தைகளை வேண்டுமானால் புறந்தள்ளலாம். ஆனால், அம்மு முடியாது என்று சொல்லிவிட்டால்... என்ன செய்வது? குழப்பத்துடனே அம்முவிடம் தேன் தடவிய வார்த்தைகளில் கேட்கிறார் சந்தியா, “அம்மு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது... எனக்கு நன்கு புரிகிறது உனக்குப் படிப்பின் மீதுதான் விருப்பம் என்று... ஆனால், தொடர்ந்து வரும் வாய்ப்பை நாம் அவமதிப்பது துரதிர்ஷ்டத்தை நாமே அழைப்பதுபோல்... என்ன சொல்கிறாய்?”

அம்மு, அந்தச் சமயத்தில் அழுது அடம்பிடித்துத்தான் விட்டார். ஆம், எப்போதும் அம்மாவை எதிர்த்துப் பேசாத அம்மு, முதன்முறையாக கோபமாக எதிர்த்துப் பேசுகிறார்.  ’‘முடியாது... என்னால் முடியவே முடியாது...’’ என்று வீட்டில் ஒரு சூறாவளியையே உண்டாக்கிவிட்டார். அப்போது அவர் அந்த அளவுக்குப் பிடிவாதமாக இருந்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆம், அந்தச் சமயத்தில்தான் மெட்ரிக் பள்ளி ரிசல்ட்டும் வந்து இருந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்குச் சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்து இருந்தது. அம்மு இந்த வாய்ப்பைவிடத் தயாராக இல்லை. சந்தியாவும் விட்டுத் தர தயாராக இல்லை.

அம்மு ஒரு முடிவுக்கு வருகிறார். ‘ஏன் இரண்டு குதிரைகளிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்யக் கூடாது... செய்துதான் பார்ப்போமே...?’.

மேற்படிப்பைத் தொடர்ந்துகொண்டே, சினிமாவில் நடிக்க முடிவு செய்கிறார். அதற்கு, சந்தியாவும் சம்மதிக்கிறார்.

 

Jayalalithaa%2007%2005_09057.jpg

இப்படியாகத்தான் மேற்படிப்பைக் கைகழுவினார்!

அந்தச் சமயத்தில் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது, சர்ச் பார்க் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவிகளும்  ஸ்டெல்லா மேரீஸ் Jayalalithaa%2007%2002_09279.jpgகல்லூரியிலேயே சேர்வார்களாம். ஜெயலலிதாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர விரும்பியிருக்கிறார். விரும்பினால் மட்டும் போதுமா...? என்னதான் பெரிய அந்தஸ்த்தில் இருந்தாலும், கல்லூரியில் சேர்வதென்றால் அடிப்படையான சில விஷயங்களைச் செய்ய வேண்டும் அல்லவா...? விண்ணப்பம் வாங்க வேண்டும், விருப்பமான படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும், குறிபிட்ட நாளில் விண்ணப்பத்தை கல்லூரித் தேர்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும்... இந்தக் காலத்து மந்திரிகளின் பினாமிகள் நடத்தும் கல்லூரிகளில் வேண்டுமானால், இதுவெல்லாம் தேவையில்லாமல், பணமே மட்டுமே பிரதானமானதாக இருக்கலாம். ஆனால், அப்போது அப்படி இல்லை.  கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. அம்முவோ தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து இருக்கிறார். அவரால்  கல்லூரிக்குச் சென்ற விண்ணப்பத்தை வாங்கி, பிடித்த பாடத்தை அதில் தேர்வு செய்வது என்பது  இயலாத காரணமாக இருந்திருக்கிறது.  அந்தச் சமயத்தில் அவருக்கு உதவியர், அவரின் பள்ளித் தோழி ஸ்ரீமதி.

அம்மு அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ அதே பாடத்தை எனக்கும் தேர்வு செய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா...” என்று கேட்டு இருக்கிறார். ஸ்ரீமதியும் அவ்வாறே செய்திருக்கிறார்.

கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆமாம், முதல் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு எந்தக் கல்லூரிதான் இடம் தர மறுக்கும்...?

கல்லூரி திறக்கிறது. ஒரு நாள் சுசிலா மேரி என்ற பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து நேராகக் கல்லூரிக்கு வந்த அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லை. அந்தப் பேராசிரியைக்கு அம்மு குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பான பேராசிரியையான அவர், அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லாததைப் பார்த்துக் கடும் கோபம் அடைந்து,  சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார். அம்மு அமைதியாக நிற்க, அந்தப் பேராசிரியை அம்முவைப் பார்த்து, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...?” என்று கடும் கோபமாக எரிந்து விழுந்து இருக்கிறார்.  அம்முவுக்கு சங்கடமாகிவிட்டது. அமைதியாக வகுப்பில் அமருகிறார். நல்லவேளையாக, சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் சென்றவர், பின் எப்போதும் கல்லூரி திரும்பவேயில்லை...!

ஸ்ரீமதி அம்முவை சந்தித்து, “ என்ன ஆனது... ஏன் கல்லூரிக்கு அதன்பின் வரவில்லை” என்று கேட்டதற்கு, “என்னால் அதுபோன்ற ஓர் இறுக்கமான இடத்தைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார் அம்மு. ’’சரி... வேறு ஏதாவது கல்லூரியில் சேர்’’ என்று ஆலோசனை வழங்கிய ஸ்ரீமதியிடம்,  “இல்லை... எந்த வேலையையும் என்னால் அரை மனதுடன் செய்ய முடியாது.  இனி நடிப்புத்தான் என்று முடிவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அவர் ஜெயலலிதாவாகப் புகழ்பெற்ற பின், அவர் அளித்த ஒரு பேட்டியிலும் இதை நினைவுகூர்ந்து, “சிறு விஷயத்துக்கும் முழுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்... அது என் வீட்டு நாய்க்குட்டியைக் குளிப்பாட்டுவதாக இருந்தாலும்கூட... அங்கு பாதி, இங்கு பாதி என்று என்னால் பயணிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

 இப்படியாகத்தான் மேற்படிப்பு குறித்த அவரது கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.  ரூமியிடம் தொடங்கினேன்... அவரிடமே இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்... “உங்கள் ஆன்மா சொல்வதன்படி நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் வாழ்வின் மொத்த விஷயமும் இருக்கிறது” என்பார் ரூமி. ஆனால், அம்மு சந்தியாவின் ஆன்மா  சொல்வதன்படி செயல்பட்டுக்கொண்டிருந்தார்.  

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70172-from-mysuru-to-81-poes-garden-travel-of-jayalalithaa-professor-scolds-student--episode-7.art

Link to comment
Share on other sites

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8

 

Episode%208_14162.jpg

 

Jayalalithaa_13127.jpg

சிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு  விட்டுக்கொண்டிருந்தவர்...  அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...?

இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

செய்ந்நன்றி கொல்லாத அம்மு...!

அம்மு, பள்ளி நாட்களில் வெகுநேரம் தன்னை அழைக்கவரும் வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆம், அது எப்போதும் தாமதமாகத்தான் வந்து இருக்கிறது. அம்முவுக்கு மெட்ரிக் தேர்வுகள் தொடங்கிவிட்டன. சர்ச் பார்க் பள்ளியில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, லேடி வெல்லிங்டன் பள்ளிக்குத் தேர்வு எழுத போகவேண்டும். ஹால் டிக்கெட் வாங்கியாகிவிட்டது. ஆனால், அவரை அழைத்துச்செல்ல வாகனம் வரவில்லை. அனைத்து மாணவிகளும் சென்றுவிட்டார்கள். அம்முவும், அவர் தோழி ஸ்ரீமதியும் மட்டும் பள்ளியில் காத்திருக்கிறார்கள். வாகனம் வரவில்லை. பிடித்தமானவர்களுடன் இருக்கும்போது, கடிகார முட்களுக்கு றெக்கை முளைத்துவிடும் அல்லவா...? அதுபோல றெக்கை முளைத்துக் காலம் பறக்கிறது... அந்தச் சமயத்தில் ஸ்ரீமதியை அழைத்துச் செல்ல... அவரின் தந்தை வருகிறார். ஸ்ரீமதியின் தந்தையும் பிரபலமான புகைப்படக்காரர். அவருக்கு சந்தியாவை நன்றாகத் தெரியும். அம்முவுக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவர், “அம்மு உன் வாகனம் வருவதுபோல் தெரியவில்லை... எங்களுடன் வா, உன்னைப் பள்ளியில் விட்டுவிடுகிறேன்...” என்கிறார். அம்முவுக்குத் தயக்கம். அவர் எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்த்ததும் இல்லை... பெற்றதும் இல்லை. தயங்கி நிற்கிறார். ஸ்ரீமதியும், “இப்படியே நின்றுகொண்டிருந்தால், தேர்வைக் கோட்டைவிட்டுவிடுவாய். வா... அப்பாவுடன் செல்லலாம்” என்று வற்புறுத்துகிறார்.

Jayalalithaa%20001_13340.jpgஅம்மு உணர்கிறார். இந்தத் தேர்வுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். அதைவிட்டால் எல்லாம் வீணாகிவிடுமே...! வேறு வழியில்லை... வாகனம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. “அம்மாவின் வேலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவருக்கு என் படிப்பு குறித்தும், என் தேர்வு குறித்தும் எந்தக் கவலையும் இல்லையா...?” என்று கண்ணீர் சிந்தியபடி, ஸ்ரீமதியின் அப்பாவுடன் தேர்வெழுதச் செல்கிறார்.

கவலையுடன்தான் அந்தத் தேர்வை எழுதினார். நடுவே கண்ணீரும் சிந்தத்தான் செய்தார். ஆனால், இது எதுவும் அவர் வெற்றிக்குத் தடையாக இல்லை. ஆம், இந்தத் தேர்வில்தான் அதிக அளவில் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சாதனை படைத்தார்.

அவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதோ அல்லது அதற்காக விருது வாங்கியதோ மட்டும் செய்தி இல்லை. அதற்குப் பின்னால் இன்னொரு செய்தி இருக்கிறது. அதை ஸ்ரீமதியே சொல்கிறார், “அன்று நாங்கள் செய்தது சிறு உதவிதான். ஆனால், என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘உன் அப்பா மட்டும் என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால், என்னால் தேர்வெழுதி இருக்கவே முடியாது’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். சிறு உதவியையும் மறவாதவர் அம்மு.”

ஆம். சிறு வயதில் அம்முவிடம் இருந்த இந்தப் பழக்கம்தான், சினிமாவில், அரசியலில் ஜெயலலிதாவாக பல உச்சங்களைத் தொட்டபின்னும் தொடர்ந்து இருக்கிறது. அதில் ஒன்றுதான் சசிகலாவுடனான இறுக்கமான நட்பு.

அனைவரும் கைவிட்ட ஒரு கடினமான காலத்தில் சசிகலா உடன் இருந்தார். அந்த நன்றியை என்றும் ஜெயலலிதா மறக்கவில்லை. அதுதான் சசிகலாவை இந்த அளவுக்கு அவரிடம் நெருக்கம் ஆக்கி இருக்கிறது.

ஜெயலலிதாவே சசிகலா குறித்து ஒரு பேட்டியில் இவ்வாறாகச் சொல்கிறார், “என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார்.”

‘‘ஆம்.. நான் தமிழச்சிதான்...!’’

ஜெயலலிதா, நன்றி மறக்காதவர் மட்டும் அல்ல. அசாத்திய தைரியம் கொண்டவரும்தான். சினிமாவில்  பரப்பரப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக கர்வார் பகுதியில் ஒரு சிறு தீவில் நடக்கிறது. அந்தப் பகுதியில் வசதியான அறைகள் எதுவும் இல்லாததால், படப்பிடிப்புக் குழு முழுவதும் மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள கோவாவில் தங்கி இருக்கிறது. ஏதேச்சையாகப் படப்பிடிப்புக் குழு அம்முவை மறந்து கோவாவில் தனியாகவிட்டுச் சென்றுவிடுகிறது. 17 வயது பெண். அப்போது சிகரம் தொட்ட நடிகையும் இல்லை. அதுவும் கோவாவில் அவரை யாருக்கும் தெரியவும் தெரியாது. ஆனால், அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை. தைரியமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறார். தனியாக கர்நாடகா சென்று, அங்கு ஒரு கட்டுமரக்காரர் துணையுடன் படப்பிடிப்பு நடந்த அந்தச் சிறு தீவு பகுதியை அடைகிறார். ஆம், அப்போதிலிருந்து, இப்போது வரை இந்தத் தைரியம்தான் ஜெயலலிதா.

Jayalalithaa%20002_13510.jpgஇன்னோர் உதாரணமும் இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், வார இதழ் ஒன்றுக்கு, “என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி...” என்ற தொனியில் ஒரு பேட்டி தருகிறார். அந்தச் சமயத்தில், கர்நாடகாவில் பலரும், அவரைக் கன்னடப் பெண் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், இவர் அளித்த இந்த பேட்டி அவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கன்னடவெறியர்களுக்கு இது அசெளகர்யத்தைக் கொடுத்தது.  அதே நேரத்தில், ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கர்நாடகாவில் சாமுண்டி ஸ்டூடியோ செல்கிறார். இந்தத் தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட கன்னடவெறியர்கள், அந்த ஸ்டூடியோவை முற்றுகையிடுகிறார்கள். ‘‘ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டால்தான், இந்த இடத்திலிருந்துச் செல்வோம்’’ என்கிறார்கள். படப்பிடிப்புக் குழு எவ்வளவோ பேசிப் பார்க்கிறது. அவர்கள் கலைவதாக இல்லை. ஜெயலலிதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா கொஞ்சமும் அஞ்சாமல், அந்தக் கூட்டத்தைப் பார்த்து, “நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன். நான் தமிழச்சிதான்..!” என்கிறார்.

ஆம். இந்த அசாத்திய தைரியம்தான் ஜெயலலிதா...! அனைவராலும் கைவிடப்பட்டு, எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டபோதும், அரசியல் வாழ்க்கையில் தனித்துவிடப்பட்டபோதும், இந்தத் தைரியம்தான் தனியனாக அனைத்திலிருந்தும் மீண்டு, மீட்டு, கட்சியை, ஆட்சியைப் பிடிக்க அவருக்கு உதவி இருக்கிறது.

 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70375-from-mysuru-to-81-poes-garden-travel---story-of-jayalalithaa--ever-grateful-jayalalithaa-episode--8.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளார் ஜெயின் ஒரு பக்கத்தை மட்டும் எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

புடவை விற்ற ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 9

 

Vikatan%2009_15464.jpg

 ||Jayalalithaa%20600_15308.jpg

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்... அவ்வளவுதான்.  வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்...  ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை... வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்!

ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா...?

Jayalalithaa%20003_15119.jpgகோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இதை முன்வைத்து அப்போது ஒரு வார இதழ், கட்டுரை எழுத முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தைப் புடவை விற்கவைத்து, அந்த அனுபவங்களைக்  கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வுசெய்த பிரபலம் ஜெயலலிதா...!

இதை ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர் திரைஞானி சொன்னவுடன், ஜெ. கேட்ட கேள்வி, “சரி நான் வருகிறேன்... ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காகத் தேர்வுசெய்தீர்கள்...?” என்பதுதான்.

இதுதான் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், திரைஞானி ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். அந்தப் பதில் இதுதான், “ ‘கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்த வேண்டும்’ என்று சொன்னவர் பெயர் சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெருப்பெயர் சிவஞானம் தெரு. அதனால்தான்...!”

ஜெ. சிரித்தப்படி... “சரி... தெருத்தெருவாகத்தான் விற்க வேண்டுமா...” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு திரைஞானி, “தெருத்தெருவாகக் கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யாருக்காவது விற்றால் போதும்” என்றிருக்கிறார்.

ஜெயலலிதா கைத்தறிப் புடவை உடுத்திக்கொள்ள... ஒரு மூட்டை கைத்தறித் துணிகளுடன், அவர்கள் புடவை விற்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடம் அந்தச் சமயத்தில் ஜெ-வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர் சிவசங்கரி வீடு.

ஏதோ ஒரு கட்டுரைக்காகத்தானே செல்கிறோம் என்றில்லாமல்... புடவைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, “இது கோயம்புத்தூர் காட்டன்; இது காஞ்சிபுரம்; இது கந்துவால்; இது வெங்கடகிரி...’’ என்று ஒவ்வொரு புடவையின் சிறப்புக் குறித்தும் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து திரைஞானி, “ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதைப்பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு இண்டலெக்ஸுவலாக நடந்துகொள்வார்...” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் இருக்கிறது. பாலா என்ற பத்திரிகையாளர் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டிகாணச் சென்றிருக்கிறார். இவர் கேட்ட கேள்விகளுக்கு... ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க... அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பாலா தயக்கத்துடன் அங்கிருந்து எழ... அதற்கு ஜெயலலிதா, “ஏன் எழுகிறீர்கள்... இப்போது நீங்கள் என் கெஸ்ட்... யாருக்காகவும் எழுந்திருக்கத் தேவையில்லை” என்றிருக்கிறார். இதைப் பின்னாளில் பாலா, தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.

இதையெல்லாம் படிக்கப்படிக்க உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்ட ஜெயலலிதாவா இது...? 2001-ம் ஆண்டு பத்திரிகையாளர்களை ஓடஓட விரட்டித் தாக்கிய ஜெயலலிதாவா இது...?

ஹூம்... பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலமும், அது தந்த பதவியும்... பதவி தந்த அதிகாரமும் ஒரு மனிதனை இவ்வளவு இறுக்கமாகவா ஆக்கும்...? ஆம்... இவரை ஆக்கி இருக்கிறது! இப்போது புடவை எல்லாம் விற்க வேண்டாம்தான். அது ஒரு முதல்வரின் வேலையும் இல்லைதான். ஆனால், தமிழகத்தின் தலையாயப் பிரச்னைகளின் போதாவது, ஊடகவியலாளர்களைச் சந்தித்து இருக்கலாம்.

சந்தியாவுடனான சண்டை!

சரி வாருங்கள்... விட்டஇடத்துக்கே செல்வோம்....! ஆறாவது அத்தியாத்தில், இனி நடிப்புத்தான் தன் எதிர்காலம் என்று அம்மு முடிவு Jayalalithaa%20001_15416.jpgசெய்துவிட்டார் என்று பார்த்தோம்தானே? என்னதான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாலும், படிப்பின் மீதான காதல் அவரது ஒவ்வோர் அணுவிலும் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதை அவரால் கைவிட முடியவில்லை. அந்தச் சமயத்தில், அவருக்கு வடிகாலாக இருந்தது, ஆங்கில இலக்கியங்கள்தான். ஆம், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவை மேக்கப் இல்லாமல்கூட பார்க்க முடியும். ஆனால், அவரது கரங்களில் புத்தகம் இல்லாமல் பார்க்க முடியாது.

பள்ளியும், அவர் படித்த ஆங்கில இலக்கியங்களும் அந்தச் சமயத்தில் அவருக்கு இன்னொன்றையும் கற்றுத் தந்து இருந்தது. அது, தேவையற்ற போலி மரியாதைகளைத் துறப்பது...! ஆனால், வெற்று மரியாதைகளால் கட்டமைக்கப்பட்டத் திரைத்தொழிலுக்கு இது உதவாதுதானே...?

‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு. ஜெயலலிதா தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்ததும், தளத்தில் அமைதியாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து புத்தகம் படித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் வந்ததைக்கூட அவர் கவனிக்காமல், மொத்த கவனத்தையும் புத்தகத்தில் குவித்து இருக்கிறார். இதைப் பார்த்தவுடன் தளத்தில் இருந்த மூத்த கலைஞர்களுக்குச் சங்கடமாக ஆகிவிட்டது. அவர்கள் சந்தியாவை அழைத்து, “சந்தியா... அம்முவுக்குப் படப்பிடிப்புத் தளத்தில் சீனியர்கள் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடு...” என்று கடிந்துகொண்டிருக்கிறார்கள்.

சந்தியா, அம்முவிடம் இதைச் சொன்னவுடன்... அம்மு கொதித்து எழுந்துவிட்டார். “ஏன் இந்த வெற்று மரியாதைகள் எல்லாம்...? என்னால் இதுபோன்ற வெற்றுச் சட்டங்களுக்குக் கீழ்படிய முடியாது. அதற்குக் கீழ்படிய வேண்டுமென்றால், என்னால் இனி படப்பிடிப்புக்குச் செல்ல முடியாது” என்று கடிந்திருக்கிறார். சந்தியா நிகழ்த்திய ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்பே அம்மு இதற்குச் சம்மதித்து இருக்கிறார்...!

இதைப் படிக்கும்போது, ஜெயலலிதா வாகனத்தின் முன்பு சாஷ்டாங்கமாகப் படுத்துவணங்கும் அமைச்சர்கள்  உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70488-from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-jaya-sells-saree--episode-9.art

Link to comment
Share on other sites

எம். ஜி.ஆராக விருப்பப்பட்ட ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 10

 

Jayalalithaa%20banner%2010_14154.jpg

 

Jayalalithaa%2010%20ano_14161.jpg

ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாகச் சொன்னார், “நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவேயில்லை” என்று. அத்தகைய பேரன்பைத்தான் புத்தகங்களின்... வார்த்தைகளின் இடுக்குகளில் தேடினாரோ, என்னவோ...? ஆம்... எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் அவர் திரைத் துறையின் தொடக்கக் காலத்திலிருந்து இருந்திருக்கிறார். புத்தகம் அவர் தேடிய, ஏங்கிய பேரன்பை வழங்கியதா என்றெல்லாம் தெரியவில்லை... ஆனால், அவருக்குக் கட்டற்ற உலக ஞானத்தை வழங்கியது. ‘‘அவரிடம், அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம்... மாசேதுங் பற்றியும் பேசலாம்’’ என்கிறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகம் பேட்டி கண்ட திரைஞானி. அவரே, அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

‘‘நான் அரசியலுக்கு வந்திருப்பேன்!’’

Jayalalithaa%2010%20anoo_15464.jpgஅந்தச் சம்பவம் இதுதான். “அயர்லாந்தில் நடந்த தேர்தலில் ஒரு பெண் வெற்றி பெற்றார். அயர்லாந்து குறித்தெல்லாம், நமக்குத் தெரியாதுதானே...? ஆனால், ஜெயலலிதா தேர்தல் நடக்கும் சில தினங்களுக்கு முன்பே.... ‘அந்தப் பெண்தான் வெற்றி பெறுவார்’ என்று சரியாகக் கணித்துச் சொன்னார். உண்மையில், நான் வியந்துதான் போனேன்..!” என்கிறார் திரைஞானி. அந்தச் சமயத்தில் திரைஞானி இன்னொன்றையும் எழுதி இருந்தார், “நான் நினைக்கிறேன். ஜெயலலிதா, சினிமாவுக்கு வரவில்லையென்றால் அரசியலுக்குத்தான் வந்திருப்பார்” என்று. ஆம், அதுதான் நிகழ்ந்தது. ஜெயலலிதா, சினிமாவுக்கு வந்தது வேண்டுமானால் ஏதேச்சையானதாக இருக்கலாம்... விதியின் பாதை என்று சொல்லலாம். ஆனால், அவருடைய அரசியல் பிரவேசம் அவ்வாறானது இல்லை. அவருக்கு எப்போதுமே ஆழ்மனதில் அரசியல் குறித்து அலாதி விருப்பம் இருந்திருக்கிறது. அதை, ஜெயலலிதாவே பின்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

இதோ ஜெயலலிதா சொல்கிறார்,

“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை, நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால்... இன்று தேர்தலுக்காக அல்லது உபதேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன். இப்படிச் சினிமாவுக்கு வந்து நடிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் தலைவிதிதான். ஆனால், கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி’’ என்று.

அவர் செல்லமாகக் கடிந்துகொண்ட இந்த அதிர்ஷ்டமான தலைவிதிதான், அவரின் அரசியல் பிரவேசத்தைச் சுலபமாக்கப்போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘‘நான் எம்.ஜி.ஆர் ஆகப்போகிறேன்...!’’

அம்முவாக ஜெயலலிதா பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோதே அவருக்கு விருப்பமான நடிகராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். அவருடைய படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதுபோல வீட்டில் நடித்துப் பார்த்து இருக்கிறார். ஜெயலலிதாவே சொல்கிறார், “நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆர் நடித்த அனைத்துப் படங்களையும் நானும், என் சகோதரரும் பார்த்துவிடுவோம். அந்தப் படங்களில் வரும் சண்டைக்காட்சிகள்போல, வீட்டில் ஆளுக்கொரு கம்பை எடுத்துக்கொண்டு சண்டைபோடுவோம். ‘நான்தான் எம்.ஜி.ஆர்... நீதான் வீரப்பா’ என்று நான் சகோதரனிடம் சொல்வேன். ஆனால், அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். ‘நான்தான் எம்.ஜி.ஆர்... நீதான் வீரப்பா’ என்பான். இதனால், எங்களுக்குள் பலத்த சண்டை வந்துவிடும். அம்மா வந்து சண்டையை விலக்குவார். சண்டையின் காரணத்தை அம்மாவிடம் சொல்வோம். உடனே அம்மா, ஒரு காசை எடுத்துச் சுண்டி மேலேபோட்டு, ‘பூவா... தலையா’ என்று எங்களைக் கேட்டு, எங்களில் ‘யார் எம்.ஜி.ஆர்... யார் வீரப்பா’ என்பதைப் பற்றி முடிவுசெய்வார். பிறகும், நான் விட்டுத் தரமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹூம்... ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிப்பதற்கு ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியனை மட்டும் ஓரங்கட்டவில்லை, இளம் வயதில் தன் சகோதரனையும்தான் ஓரங்கட்டி இருக்கிறார்...!


ஜெ-வுக்காகப் படப்பிடிப்பை ரத்துசெய்த எம்.ஜி.ஆர்...!

கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா? நீண்ட போராட்டத்துக்குப் பின், ஜெயலலிதா படப்பிடிப்புத் தளத்தில், சந்தியா Jayalalithaa%2010_15264.jpgசொல்வதுபோல் நடக்கத் தொடங்கிவிட்டார். மூத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வந்தால் எழுந்து வணக்கம் சொல்வது என அதன் அனைத்து விதிகளையும் பழகிவிட்டார். இவற்றை எல்லாம் அவர் பிடித்துச் செய்தாரா என்றெல்லாம் தெரியாது... ஆனால், இதனால் அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம், அனைவரின் விருப்பமான நடிகையாக ஆகிவிட்டார். அவருக்கு படங்கள் வந்து குவியத் தொடங்கின. குறிப்பாக, எம்.ஜி.ஆர் படங்கள். அந்தச் சமயத்தில், அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

‘அடிமைப்பெண்’ படப்பிடிப்பு அப்போது தார் பாலைவனத்தில் நடந்துகொண்டிருந்தது. சினிமாவுக்கென சில விதிகள் இருக்கின்றன அல்லவா.... மைனஸ் டிகிரி குளிரில் கதாநாயகர்கள் ஆடை மேல் ஆடை போட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது, கதாநாயகிகள் மட்டும் மெலிதான உடை அணிந்து சிரமப்பட்டு நடித்துக்கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்திலும் அதுதான் நிகழ்ந்தது. ஆம், தார் பாலைவனம் மிகக் கடுமையான வெப்பம். அனைவரின் கால்களிலும் தடிமனான செருப்புகள் அணிந்திருந்தபோது... அந்தக் காட்சியின் தேவை கருதி ஜெயலலிதாவுக்கு மட்டும் செருப்புத் தரவில்லை..

முதலில் ஜெயலலிதா எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார்... ஆனால், நேரம் ஆக ஆக வெப்பம் கூடிக்கொண்டே போனது. அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. இதை யாரிடம் சொல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை...? ஆனால், இதை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். எங்கே ஜெயலலிதாவின் செருப்பு என்று கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டிருக்கிறார். அது வாகனத்தில் இருக்கிறது என்று தெரிந்ததும், அதை எடுக்க ஒரு நபரை அனுப்பி இருக்கிறார். வாகனம் வெகுதொலைவில் இருந்ததால், சென்றவர் வரத் தாமதமாகி இருக்கிறது. கோபமடைந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு, ஜெயலலிதாவை வாகனம்வரை தூக்கிச் சென்றிருக்கிறார்.

இதைப் பின்னர் ஒரு நிகழ்வில் நினைவுகூர்ந்த ஜெயலலிதா... “எம்.ஜி.ஆர் திரையில் மட்டும் அல்ல, நிஜத்திலும் நாயகன்தான்...!” என்றார்.

அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என நீளும் பட்டியலில்... அந்த கதாநாயகன் பெயரை ஏதாவது ஒன்றுக்காவது வைத்து இருந்திருக்கலாம்...!


(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70596-from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-jaya-wants-to-be-mgr--episode-10.art

Link to comment
Share on other sites

மயங்கிய ஜெ... பதறிய எம்.ஜி.ஆர்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 11

11_15315.jpg

 

Jaya%20cover_15320.jpg

 

“அன்பும், தனிமையும் ஒருவரை வதைக்கும்போது... ஆன்மாவின் வெற்றிடத்தை அகங்காரம்  நிரப்பும்.” - இது கேரளாவில் நான் சந்தித்த பழங்குடி சொல்லியது.“நான் வாழ்க்கையில் என்றுமே நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை” - இது ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியது. இந்த இரண்டு வரிகளையும் பொருத்திப் பாருங்கள்... ஏன் ஜெயலலிதா,“ என் தலைமையிலான, என்னால், நான்...” என்ற வாசகங்களை தன் பேச்சில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் என்று புரியும். இந்த அகங்காரம், அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அதிகாரத்தின் சுவையைக் கண்ட பிறகு உண்டானது இல்லை. அவர் நடிகையாக இருந்தபோதும் இவ்வாறாகதான் இருந்திருக்கிறார்.

எழுபதுகளில் ஒரு வார இதழ், திரைப்பட பிரபலங்களை தாழ்வாக பறக்கும் சிறு ரக விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் அனுபவங்களைத் தொடராக எழுதத் திட்டமிட்டது. அவர்கள் முதலில் ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சந்தோஷமாக சம்மதித்து இருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போய் விட்டது. அதனால் நடிகர் சுருளியையும், மனோரமாவையும் அழைத்துச் சென்று, முதல் வாரத் தொடரை எழுதி இருக்கிறார்கள். இரண்டாம் வாரம்தான் ஜெயலலிதா சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு முதல்வாரத்தில் இன்னொருவரை அழைத்து சென்றது தெரியாது. பின்னர், இதழ் வந்தவுடன்  கோபமாக , அந்த பத்திரிக்கையாளரிடம் “முதல் பயணம் என்னுடையதாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முதல் பகுதியில் வேறொருவரை வைத்து எழுதி இருக்கிறீர்களே... இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை..?” என்று கோபமாக கூறியிருக்கிறார்.
இதை மேலோட்டமாக பார்த்தால், இது சாதாரணமானது தானே...? எப்போதும் பிரபலங்களிடம் இருக்கும் ஈகோதானே என்று தோன்றும். ஆனால், ஜெயலலிதா எந்த ஒரு சிறு விஷயத்திலும் ஈகோவுடன் இருந்ததற்கு, அன்புக்காக ஏங்கிய அவரின் தனிமையும் கூட காரணமாக இருந்திருக்கலாம்...!

நிலைக்குலைந்த ஜெ...!

இப்போது அசாத்திய முடிவுகளை எடுக்கும் ஜெயலலிதா... திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்கக் கூட அவ்வளவு திணறியிருக்கிறார். இதை அவரே சொல்லியிருக்கிறார். “எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்குப் புறப்பட எண்ணும் நான், எந்தப் புடவையைக் கட்டிக் கொள்ளலாம் என்று அலமாரியில் உள்ள அத்தனை புடவைகளையும் வைத்துக் கொண்டு பரிதவிப்பேன். ‘அம்மு, ஏன் இப்படி உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய்...? ஒரு சிறு காரியத்தில் கூடக் கவனம் செலுத்த முடியாத நீ, எப்படி பெரிய காரியங்களைக் கவனிக்கப் போகிறாய்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, அவரே ஒரு புடவையை எடுத்து தருவார். ஆம், அவருக்கு எல்லாம் அம்மாவாகதான் இருந்திருக்கிறார்.

கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் இன்னொருவர் எடுக்கிறார்... நீங்கள் அணியும் ஆடையைக் கூட உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் உங்களுக்கான முடிவுகளை எடுப்பவர் இறந்து போகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? நிலைக்குலைந்துதானே போவீர்கள்... ஆம், ஜெயலலிதா தன்னுடைய 23-வது வயதில், தன் அம்மாவை இழந்தவுடன் வெறுமை அவரை கவ்வியது... திசைவழி தெரியாமல் தான் நின்றார்...!

Jayalalithaa%20Sandhya_15129.png

“அம்மா தான் எனக்கு எல்லாம். அவர் தான் எனக்காக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். எனக்கு அந்த சமயத்தில் எதுவுமே தெரியாது... என் வங்கி கணக்கு, என் சம்பளம், கால்ஷீட், காசோலை கையெழுத்து, வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்... வீட்டில் பணியாளர்கள் எவ்வளவு என எதுவும் தெரியாது.... கையறு சூழலில் நின்றேன். ஒரு குழந்தையைக் கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டது போல இருந்தது...” என்று அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இருள் பூசிய இந்தத் தனிமையிலிருந்து தம்மை மீட்பார்கள்... அம்மாவின் பேரன்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம் அன்பாவது தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிய உறவினர்களும் அவருக்குக் காயத்தைதான் பரிசாகத் தந்தனர். ஆம், ஒரு நெருக்கடி சமயத்தில், அவர்களுக்கு ஜெயாவின் நலனைவிட... அவரின் சொத்து மீதுதான் முழு கவனமும் இருந்திருக்கிறது.

மயங்கிய ஜெ... பதறிய எம்.ஜி.ஆர்...!

MGR%20Jayalalithaa_15310.pngசென்ற அத்தியாயத்தில், அடிமை பெண் படப்பிடிப்பின் போது, வெயிலில் இருந்து ஜெ-வை காக்க எம்.ஜி. ஆர் அவரைத் தூக்கி சென்றார் என்று பார்த்தோம்தானே...? அதுபோல, இன்னொரு சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது. ஆம், ஜெயலலிதா ஒரு சமயம் கடுமையான டயட்டில் இருந்தார். அதன் பின் விளைவாக, வீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் உள்ள வேலையாட்கள், உறவினர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் அவர் எழவே இல்லை. அவர்களுக்குப் பதற்றமாகிவிட்டது... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் மேனேஜருக்கு தகவல் போகிறது... அவர் உடனடியாக எம்.ஜி. ஆருக்கு தகவல் தெரிவிக்கிறார். எம்.ஜி.ஆர் உடனடியாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை செய்தார்.

இந்த பதற்றமான சூழலிலும் ஜெயலலிதாவின் உறவினர்கள் சிலர், வீட்டில் உள்ள முக்கிய பீரோ சாவியை யார் வைத்துக் கொள்வது என்று தங்களுக்குள் சண்டையிட்டு இருக்கிறார்கள். இதில் தலையிட்ட எம்.ஜி.ஆர், சாவியைதான் கைப்பற்றி, ஜெயலலிதா குணமடைந்த பின் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார். நடந்த சம்பவங்களைக் கேட்ட ஜெயலலிதா நொந்துதான் போய்விட்டார்...!
இந்த சம்பவம் தான், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முழுமையாக நம்பியதற்கும், தன் உறவினர்களைத் தள்ளி வைத்ததற்கும் முதல் காரணமா இருந்திருக்க வேண்டும்...!

படப்பிடிப்புத் தளத்திலும் சரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது அதிக அக்கறையாக இருந்திருக்கிறார். அதை ஜெயலலிதாவே, தான் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

ஜெயலலிதா வார்த்தைகளிலிருந்தே,“ ‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலை அவருக்கான காட்சிகள் முடிவடைந்துவிட்டதால், காரில் ஏறப் போனவர் (எம்.ஜி.ஆர்), “மத்தியானம் என்ன எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஜெயலலிதா மாடிப் படியில், சக்கர நாற்காலியில் உருண்டு விழும் காட்சி...!” என்றார் இயக்குநர். உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கிவிட்டார். “அதை எடுக்கும் போது, நானும் இருக்கிறேன். அது கொஞ்சம் ரிஸ்கானது...! அந்த பெண் விழுந்துவிட்டால்...?” என்று சொல்லிக்கொண்டே அன்று எங்களுக்கு உதவி செய்ய வந்துவிட்டார். அன்று முழுவதும், படப்பிடிப்பு முடியும் வரை எங்களுடனேயே இருந்தார்...”

அன்புக்காக ஏங்கிய ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு, உண்மையில் இந்த அக்கறை அளவற்ற சந்தோஷத்தை தந்திருக்க வேண்டும்.

இதனால்தான் பின் தான் அளித்த ஒரு பேட்டியில் ஜெயலலிதா இவ்வாறாக சொன்னார், “அவர் (எம்.ஜி.ஆர்) தான் எனக்கு எல்லாம். அவர் தான் என் தந்தை, என் தாய், என் நண்பர், என் வழிக்காட்டி, என் ஆசான்... எல்லாம் அவர் தான்” என்று.

ஆனால், அதே எம்.ஜி. ஆர் தான், பின் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு குடியேறிய போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்தார். ஆம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வீட்டு கிரகபிரவேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை, அவர் அளித்த பரிசு பொருள் மட்டும் தான் சென்றது...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70702-from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa---jaya-faints-mgr-helps----episode-11.art

Link to comment
Share on other sites

திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு, ஜெயலலிதா கொடுத்த பதிலடி...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 12

Jaya%2012%20Series_16264.jpg

 

Jayalalithaa%20600_16430.jpg

மிகவும் உறுதியாக இருப்பது எந்த பலனையும் தராது...அதிக காயங்களும், துன்பங்களும்  வேண்டுமானால்  பரிசாக கிடைக்கலாம் என்பார் தென் ஆஃப்ரிக்க கலைஞர் கயோஸ்.  அவர் தன்  எந்த வலியிலிருந்து வார்த்தைகளை எடுத்து இதை வடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த சொற்கள், ஜெயலலிதாவின் வாழ்வுக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. ஆம், ஜெயலலிதா, தன் திரை உலக வாழ்வில் அனுபவித்த எல்லா வலிகளுக்கும், அவருடைய உறுதியான பண்புதான் காரணம். ஆனால், அதே உறுதிதான் அவர் தன் வலிகளில் இருந்து மீண்டு வரவும் உதவியது.

ஆளுமை செய்த எம்.ஜி.ஆர்... வெகுண்டெழுந்த ஜெ...!

திரை உலகமே திரண்டிருந்த ஜெயலலிதாவின் புதுமனை புகுவிழாவுக்கு  எம்.ஜி.ஆர் வரவில்லை என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா....? அதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார்,  தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை  மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.   

http---photolibrary.vikatan.com-images-gஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்ததா அல்லது எம்.ஜி.ஆரின் திட்டமிட்ட ஏற்பாடா என்றெல்லாம் தெரியாது...? ஆனால், இதுதான் நிகழ்ந்தது. எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை... கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே...? அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.  விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள்.  காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்.

காஷ்மீரில் ஜெயலலிதாவுக்கு வேறொரு இடத்தில் படப்பிடிப்பு, எம்.ஜி,ஆருக்கு வேறொரு படத்தில் படப்பிடிப்பு. ஜெ, நடித்த படத்தின் கதாநாயகன் சிவாஜி. அந்த படப்பிடிப்பு தளம், எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்திலிருந்து ஏறத்தாழ 60 மைல் தொலைவு. ஆனால், எம்.ஜி.ஆர் தன்னுடன் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியவில்லை. தினமும் ஏறத்தாழ 60 மைல் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பயணம் செய்துதான், ஜெ படப்பிடிப்பில் கலந்து கொண்டார், இதை ஜெயலலிதா விரும்பித் தான் செய்தாரா... அல்லது எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலை மீறி, ஜெயாவால் எதுவும் செய்ய முடியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் முடிவு தான், ஜெயாவின் வழியானது. அது தான் அவருக்கு வலியாகவும் அந்த சமயத்தில் ஆனது.

தனியாக ஒரு நாடக அணியை உண்டாக்கி, ஜெயலலிதா நாட்டிய நாடகம்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அந்த நாடகக்குழு மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த நாடகத்தை தங்கள் ஊரில் அரங்கேற்றச் சொல்லி உலகெங்கிலும் இருந்து அவருக்கு அழைப்புகள் வரத் துவங்கியது. ஜெயலலிதாவும் இதற்கு இன்முகத்துடன் சம்மதித்தார். அதற்கான முன் பணத்தையும் பெற்றார்.

அந்த சமயத்தில், உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு எம்.ஜி.ஆர் தான், சிறப்பு விருந்தினர். எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவையும் தன்னுடன் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஜெயலலிதா எனக்கு நாடக அரங்கேற்றம் இருக்கிறது. என்னால் வர முடியாது என்று மறுத்தார்.  ஆனால், எம்,ஜி. ஆரின் அழைப்பு  கட்டளையானது. சிங்கப்பூரிலிருந்து நீ நாட்டிய அரங்கேற்றத்துக்கு செல் என்று வற்புறுத்தினார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, தன் மொத்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, வாங்கிய முன்பணத்தையும் திரும்ப தந்து விட்டார்.  அது மட்டுமல்ல, தன் நாடக குழுவையும் இதனால் கோபமடைந்து கலைத்து விட்டார்.  

ஆம்... தம் முடிவுகள் அனைத்தையும் இன்னொருவர் எடுக்கிறார் என்றால், ஒருவருக்கு கோபம் வரத் தானே செய்யும்... வெகுண்டெழுந்து விட்டார் ஜெயலலிதா... ஆனால், இந்த கோபமும் வெகுநாட்கள் நீடிக்கவில்லை.  தனக்கு யாருமே இல்லை என்று உணரும் ஒருவர், இருக்கிற ஒரு உறவையும் இழக்க துணிய மாட்டார் அல்லவா...? அத்தகைய மனநிலையில் தான் அப்போது ஜெயலலிதா இருந்திருக்கிறார். நெகிழ்ந்திருக்கிறார்.

வாக்கு தவறாதவராக இருக்க வேண்டும்...!

நமக்கு இப்போது மிகவும் இறுக்கமானவராக தெரிகிறார் அல்லவா ஜெயலலிதா...? ஆனால், திரைப்படத்துறையில் உச்சத்தில் இருந்தhttp---photolibrary.vikatan.com-images-g போது இவ்வாறானவராக இல்லை. நகைச்சுவை உணர்வு அவரிடம் ததும்பி இருந்திருக்கிறது.

எழுபதுகளில் ஜெயலலிதா, ' ஆனந்த விகடனில்' ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்... மீண்டும் அதே புராணம்... “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்...” என்று மீண்டும் ஒரு தேதியைக் குறிப்பிடுகிறார்.  இப்போதும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.... நாட்கள் நகர்கிறது... மீண்டும் அதே நபரிடமிருந்து கடிதம் வருகிறது...  “என்னை திருமணம் செய்ய சம்மதியுங்கள்... இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று.

அவருக்கு பதில் கடிதத்தை, இவ்வாறாக ஜெயலலிதா எழுதி இருக்கிறார், “எனக்கு கணவராக வர வேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இது தான் முக்கியம்...சொன்ன வாக்கை மீண்டும் மீண்டும் மீறும் உங்களை எப்படி நான் மணக்க முடியும்...?”

ஆம்... அப்போது இது தான் ஜெயலலிதா...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70825-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---jaya-hilarious-reply-to-man-who-proposed-to-her---episode-12.art

Link to comment
Share on other sites

“ஜெயலலிதா கூறிய அழகு குறிப்பு...!” மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 13

 

Jaya%2013_10143.jpg

Jayalalithaa%20cover_19110.png

“நீங்கள் ஒரு புது மொழியை கற்கும் போது, மீண்டும் பிறக்கிறீர்கள்” - இது செக் குடியரசு பழமொழி. உண்மை தானே...? நம் தாய் மொழியை தாண்டி இன்னொரு மொழியை கற்கும் போது, அந்த மொழி பேசும் மக்களின் வாழ்வியலை, அவர்களின் பண்பாட்டை, அவர்களின் இலக்கியத்தை நம்மால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். அதன்மூலம் நமக்கு  இன்னொரு பார்வை கிடைக்கும்... இன்னொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். அதேநேரம், அந்த இன்னொரு பிறப்பு என்பது நம் விருப்பத்தினால் நிகழ வேண்டும்.   இன்னொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேடல் நம் ஆன்மாவுக்கு இருக்க வேண்டும். இவ்வாறாக இல்லாமல், நம்மிடம் இன்னொரு வாழ்க்கையை கொண்டு வந்து திணித்தால், இயல்பாக நமக்கு அந்த வாழ்க்கையின் மீது வரும் காதலும்  இல்லாமல் போகுமே அன்றி நிச்சயம் எந்த நன்மையும் பிறக்காது.

கத்திக் கத்தி கற்றுக்கொண்ட தெலுங்கு!

001_19325.pngஜெயலலிதா குறித்து எல்லோரும் வியக்கும் விஷயம் அவரின் மொழி ஆளுமை. தமிழ் தவிர்த்து, அவரால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச முடியும்.  2007-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மிக சரளமாக இந்தி பேசிய போது, அந்த மேடையில் இருந்த முலாயம் சிங்கே வியந்து தான் போனார். அதுபோல ஒரு முறை, ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார். பெரும் எண்ணிக்கையில் கூடி இருந்த பாமர மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதை உணர்ந்த அவர்,  சட்டென்று தெலுங்கில் உரையாற்றத் துவங்கி விட்டார்.

சிறுவயதில் மெட்ரிக் பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் சுலபமாக வந்தது. இன்னும் சொல்லப்போனால் சர்ச் பார்க் பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் பேசத்தான் தடுமாறினாரே தவிர, ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். பிறகு கன்னடம்... தான் பால்ய வயதை மைசூரு மற்றும் பெங்களூரில் கழித்ததால் அவருக்கு அந்த மொழியும் இயல்பாக வந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளை எல்லாம், அவர் திரை உலகிற்கு வந்த பிறகு தனது தேவையின் கருதி கற்றவை. அதே நேரத்தில் மற்ற மொழிகள் மீதிருந்த விருப்பத்தினாலும் கூட...!

தாம் மொழிகள் கற்ற பின்னணியை அவரே முன்பொருமுறை அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அவரது வார்த்தைகளிலிருந்தே  - “தமிழ் எனது தாய் மொழி. மைசூரில் சிறு வயதில் சில காலங்கள் வரை இருந்ததால் அங்கு வீட்டில் வேலையாட்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளுடனும் பேசிப் பேசி கன்னடத்தைக் கற்றுக் கொண்டேன்.”

அதே நேரம் அவர் தெலுங்கு கற்ற கதை மிக சுவாரஸ்யமானது. அதையும் அவரே சொல்கிறார்.

“ நான் ‘மனசுலலு மமதலு’ என்ற தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தமானேன். அப்போது தயாரிப்பாளர்களிடம், ‘எனக்குத் தெலுங்கு தெரியாதே!’ என்றேன். அவர்கள் உடனடியாக தெலுங்கு ஆசிரியரை எனக்கு மொழி கற்பிக்க பணியமர்த்தி விட்டார்கள்.  தினமும் காலை சரியாக ஆறு மணிக்கு அந்த தெலுங்கு ஆசிரியர் வருவார். நான் அந்த சமயத்தில் தான் நல்ல தூக்கத்தில் இருப்பேன். என்னை வீட்டில் எழுப்புவார்கள். தூக்க கலக்கத்தில் தான் வகுப்புக்குச் செல்வேன். அது மட்டுமல்லாமல், அப்போதெல்லாம் நான் மிகவும் சங்கோஜி. யாராவது நாலு வார்த்தை பேசினால், நான் ஒரு வார்த்தை தான் பதில் பேசுவேன்.  தெலுங்கு பண்டிட் ஏதாவது எனக்கு கோபம் வரும்படி சொல்லிச் சீண்டி விடுவார். நானும் அதற்குப் பலமாக பதில் அளிப்பேன். தெலுங்கில் அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி, மேலும் சீண்டுவார். நான் கத்த, அவர் கத்த, பெரிய ரகளையாகி விடும். நான் இப்படிக் கத்தி கத்திக் கற்றுக் கொண்டதுதான் தெலுங்கு. இதனால் இரண்டு மாதத்தில் கற்க வேண்டிய தெலுங்கை சுமார் நாற்பது நாட்களிலேயே கற்றுக் கொண்டேன்” என்று தான் தெலுங்கு கற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
    
ஜெவின் அழகு குறிப்பு!

004_19245.pngஇப்போது வேண்டுமானால் ஜெயலலிதா தன்னை மிகவும் இறுக்கமானவராக காட்டிக் கொள்ளலாம். இயல்பான தன் விருப்பங்களை தனக்குள்ளேயே வைத்து பூட்டிக் கொள்ளலாம். ஆனால், தன் பதின்ம வயதில், அந்த வயதிற்கே உரிய அபிலாஷைகளுடன் தான் ஜெயலலிதா இருந்தார். அவருக்கு விருப்பமான நடிகராக ஷம்மி கபூரும், பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட் வீரராக நாரி காண்டிராக்டரும் இருந்திருக்கிறார்கள்.

அவரே சொல்கிறார், “அறுபதுகளில் ஏதோ ஒரு பொது நிதிக்காக வட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், தென்னிந்திய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நேரு ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது, திலீப் குமார், ஷம்மிகபூர், ராஜ்கபூர், மாலா சின்ஹா போன்ற பிரபல நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஒரு ரூபாய் என்று அறிவித்திருந்தார்கள். அப்போது நானும் என் தோழியும் சேர்ந்து ரூபாய் கொடுத்து நட்சத்திரங்களிடம் கையெழுத்து வாங்கினோம். இதை எப்படி என்னால் மறக்க முடியும்...?”

ஜெயலலிதாவுக்கு தன் சிறு வயதிலேயே தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பம் இருந்திருக்கிறது. சிறு வயதில் சந்தியாவுக்கு தெரியாமல், அவரின் மேக்கப் பாக்ஸை திறந்து தன்னை அலங்கரித்து இருக்கிறார். இதற்காக, சந்தியாவிடம் அடியும் வாங்கி இருக்கிறார். ஆனால், காலம்  அவரையும், மேக்கப் கிட்டையும் நெருக்கமாக்கி அழகு பார்த்தது. ஆம், நடிப்பில் பிஸியான பின், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ... தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்ளத் தானே வேண்டும்...!

ஜெயலலிதாவே ஒரு முறை தன் அழகு குறிப்பை பகிர்ந்திருக்கிறார். அந்த அழகுக் குறிப்புக்கு அவர்  ‘கிளியோபாத்ரா ஸ்டைல்’ என்று பெயரும் வைத்தார். அந்த அழகு குறிப்பை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம், “கிளியோபாட்ரா பாலில் குளித்தது போல நான் உடம்பு முழுவதும் வெண்ணெயைத் தேய்த்து, அது சிறிது ஊறிய பிறகு பயித்தம் மாவை தேய்த்துக் குளிப்பேன். அதுபோல, முகம் பொலிவுடன் விளங்க விளக்கெண்ணெயைத் தேய்த்துச் சிறிது நேரம் ஊறின பிறகு பச்சை பயிரை அரைத்து தேய்த்துக் கழுவுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல... அவர் அப்போது இன்னொரு அழகுக் குறிப்பையும் பகிர்ந்திருக்கிறார்.  அது மிகவும் எளிமையான அழகுக் குறிப்பு தான். ஆண், பெண் என எந்த பேதங்களும் இல்லாமல் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட...  அந்த அழகுக் குறிப்பு இது தான், “மனதை அழுக்கில்லாமல், குழப்பமில்லாமல்... தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் முகம் மிளிரும்...”

உண்மைதானே...?

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70905-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---beauty-tips-given-by-jaya---episode-13.art

Link to comment
Share on other sites

‘ஜெயலலிதா மீது கோபம் கொண்ட எம்.ஜி.ஆர்’ மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 14

 

Episode%2014_11577.jpg

Jayalalithaa%20003_10325.jpg

மீண்டும் ஒரு பழங்குடி சொல்லாடலில் இருந்தே துவங்குகிறேன். “உங்களது ஆழ் மனது விருப்பங்கள்தான் உங்களை இயக்குகிறது. அதுதான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது. ஆழ் மனது விருப்பங்கள் விளக்கு அல்ல... அது தான் பாதை” - இது பரம்பிக்குளம் பகுதியில் நான் சந்தித்த பழங்குடி ஒரு மிக நீண்ட உரையாடலுக்குப் பின் கூறியது. இந்த சொல்லாடல் மிகச் சரியாக ஜெயலலிதாவுக்கு பொருந்திப் போகிறது. ஆம், ஜெயலலிதாவுக்கு எப்போதுமே அரசியல் மீது ஆழ் மனதில் விருப்பம் இருந்திருக்கிறது. அந்த விருப்பம்தான் அவரை இயக்கி இருக்கிறது. அதுதான் அவர் ஆளுமையை வடிவமைத்திருக்கிறது. அந்த விருப்பம் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணித்து தான் அரசியலில் அவர் இந்த உயரங்களைத் தொட்டு இருக்கிறார்.

அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் சினிமாவுக்கு வராவிட்டால், அரசியலுக்குத் தான் வந்திருப்பேன்...” என்றார். சினிமாவில் பிஸியாக இயங்கியபோதும், அரசியல் மீதான அவரது காதல் உயிர்ப்புடன் தான் இருந்திருக்கிறது. ‘நீங்கள் அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடப் போவதாகக் கேள்விப்பட்டோம் உண்மையா...?’ என்று நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த மழுப்பலும் இல்லாமல் இவ்வாறாக பதில் அளித்திருக்கிறார். “நாள்தோறும், படப்பிடிப்பு, உடற்பயிற்சி, நாட்டியப் பயிற்சி இவற்றை எல்லாம் முடிப்பதற்குள் பாதி மூச்சு காணாமல் போய் விடுகிறது. இன்னும் இதற்கு மேல் ‘தம்’ சேர்த்துக் கொண்டு முழு மூச்சுடன் அரசியலில் குதிக்க எவ்வளவு காலம் ஆகுமோ?” என்று தன் அரசியல் அபிலாஷைகளை நயமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சந்திப்பு!

நாம் ஏற்கெனவே பார்த்தோம் தானே... எம்.ஜி.ஆருக்கும் - ஜெயலலிதாவுக்கும் அவ்வப்போது மனக்கசப்புகள் வருமென்று...! எழுபதுகளின் Jayalalithaa%20001_10350.jpgமத்தியில் எழுந்த கருத்து வேறுபாடு, ஒரு பெரிய இடைவெளியையே இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நடித்த படங்களை பார்த்தாலே இது புரியும்.  ஜெயலலிதா அவன் தான் மனிதன், சித்ரா பெளர்ணமி என நடித்துக் கொண்டிருக்க.... எம்.ஜி.ஆர், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன என வெவ்வேறு கதாநாயகிகளுடன் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள், இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று தான் நம்பினார்கள். ஆனால், அனவரும் ஆச்சர்யப்படும்படி இருவரும் மீண்டும் இணைந்தார்கள். இருவருக்கும் இருந்த நட்பு முன்பைவிட இன்னும் இறுக்கமானது.

எப்படி இது நிகழ்ந்தது? என்று அனவரும் குழம்பிக் கொண்டிருக்க... இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது, அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பு தான் இதற்குக் காரணமென்று. ஆம், எம்.ஜி.ஆர், அப்போது ஒரு பணியாக அமெரிக்கா சென்றிருந்தார். அதே சமயத்தில் ஜெயலலிதாவும்...!  காஷ்மீர் செல்லும்போது இருவரும் எதேச்சையாக ஒரே விமானத்தில் சென்றார்களே...? அது போல எதேச்சையான சந்திப்பா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அந்த சமயத்தில் ஜெயலலிதா அமெரிக்காவில் உடல் பருமனை குறைப்பதற்கான சிகிச்சைக்காக சென்று இருந்திருக்கிறார். அங்கு இருவருக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறார்கள். மனம் விட்டு இருவரும் அங்கு வெகுநேரம் பேசியிருக்கிறார்கள். இந்த சந்திப்பு இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடுகள் களைய காரணமாக இருந்திருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்தான் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார்... பொறுப்புக்கு வந்தார், ராஜ்யசபா எம்.பி ஆனார். ஆனால், இதை கட்சியில் அப்போது, எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் ரசிக்கவில்லை... இருவரையும் மீண்டும் பிரிக்க ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். அந்த வாய்ப்பை ஜெயலலிதாவே ஏற்படுத்தியும் தந்தார்.

மீண்டும் முளைத்த கருத்து வேறுபாடு!

Jaya_10151.jpg

 

1984 -ம் ஆண்டு மார்ச் மாதம் 24 -ம் தேதி ராஜ்ய சபா உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். அவருக்கு ராஜ்யசபாவில் ஒதுக்கப்பட்ட இருக்கை 185. இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்கிறீர்களா...? இதே இருக்கை தான் 1963- ம் ஆண்டு, அண்ணாதுரை எம்.பி யாக இருந்தபோது ஒதுக்கப்பட்டு இருந்தது. இருக்கை மட்டும் ஒன்று போல இருக்கவில்லை... ஆங்கிலப் புலமையும் ஒன்றுபோலத் தானே இருந்தது. அந்தப் புலமைதான் ஜெயலலிதாவுக்கு உதவியது. சரளமான ஆங்கிலத்தில் பேசி அங்கு எல்லோரையும் திகைக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்தியும் அவருக்கு கைகொடுத்தது. இந்தியை தீவிரமாக எதிர்த்த பகுதியிலிருந்து வந்த ஒருவர் சக வட இந்திய எம்.பி.க்களுடன் அவர்களது மொழியில் பேசியது, அவர்களுக்கு இவரை நெருக்கமாக்கியது. “நான் அழகும், அறிவும், ஆற்றலும் ஒரே இடத்தில் இருப்பதை காண்கிறேன்” என்று அந்த சமயத்தில் எம்.பி-யாக இருந்த குஷ்வந்த் சிங் மனம்விட்டு புகழவும் செய்தார். இந்த மொழி ஆற்றல் ஜெயலலிதாவை இந்திரா காந்தியிடம் நெருக்கமாக்க உதவியது.

அந்த சமயத்தில் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. எம்.ஜி.ஆர் அந்த கூட்டணியை பிரித்து காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பினார். எவ்வளவு முக்கியமான விஷயம் இது....? இதுகுறித்துப் பேச அவர் அனுப்பியது ஜெயலலிதாவை. ஆம், அந்தளவுக்கு அப்போது ஜெயலலிதா கட்சியிலும், மத்தியிலும் செல்வாக்காக இருந்தார். சரி விஷயத்துக்கு வருவோம். இந்திரா காந்தி இந்த பேச்சுவார்த்தைக்காக ஒதுக்கியது வெறும் பத்து நிமிடங்கள் தான். ஆனால், ஜெயலலிதாவின் சாதுர்யத்தால் அந்தப் பேச்சுவார்த்தை முப்பது நிமிடங்கள் வரை நீண்டது. இந்திரா காந்தி முழுவதுமாக, ஜெயலலிதாவின் பேச்சால் கவரப்பட்டு, இந்தக் கூட்டணி குறித்து பேச ஜி.கே. மூப்பனாரை அனுப்பி வைத்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ஜெயலலிதாவின் உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சோலையும் உடன் இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது, இதுகுறித்து உடனே எம்.ஜி.ஆருக்கு தகவல் கூறச் சொல்கிறார். சொல்லி விடுகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா சொல்லவே இல்லை. விமானத்தில் வரும்போது மீண்டும் சோலை கேட்கிறார், “தலைவரிடம் சொல்லி விட்டீர்களா...?”. ஜெயலலிதா மிக அலட்சியமாக, “நாம் தான் அவரை நேரில் சந்திக்கப் போகிறோமே... அப்போது சொல்லி விடலாம்” என்கிறார். ஆனால், அப்போது இந்த பேச்சுவார்த்தை குறித்த தகவலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இன்னும் தகவல் வராதது எரிச்சலூட்டுகிறது... சென்னை வந்த பின், ஜெயலலிதா டெல்லியில் நடந்த விஷயங்களை பகிர்கிறார். ஆனால், இப்போது அந்த விஷயத்தை விட, ஏன் டெல்லியிலிருந்தே இந்த விஷயத்தை பகிரவில்லை..? என்ற கோபம் பிரதானம் ஆகிறது.   

இந்த விரிசலுக்காக காத்திருந்த கட்சியின் மூத்த தலைவர்கள்... ஜெயலலிதாவுக்கு எதிராக தூபம் போடுகிறார்கள்... அந்த புகைமூட்டம் விரைவில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆருக்கு இடையே மீண்டும் ஒரு இடைவெளியை உண்டாக்குகிறது.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71019-mgr-angry-over-jayalalithaa---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---episode-14.art

Link to comment
Share on other sites

‘அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்ட ஜெயலலிதா’ : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 15

 

epidode%2015_11423.jpg
Jayalalithaa%20001_10256.png

னிமை பேரழகு கொண்டதுதான். அந்தச் சமயத்தில் அமைதியை உள்வாங்கி நமக்குள் படரவிடலாம்; நல்ல இசையைக் கேட்கலாம்; பிடித்தவற்றைப் படிக்கலாம். ஆனால், அதே தனிமை, பசியுள்ள ஓர் ஓநாயாக உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால்... எப்படி இருக்கும்? எத்தனை நாட்கள்தான் தனிமையின் கரம்பிடித்து நடக்க முடியும்? தனிமை நம்மைச் சிதைக்கும்தானே... உடலின் ஒவ்வொரு செல்லும் துடித்துப்போகும்தானே?  தனிமையைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால், தனிமையிலிருந்து உங்களை மீட்கிறோம் என்று வரும் ரட்சகர்களும் ஏமாற்றினால்... முற்றாக உடைந்து போவோம்தானே? அதுதான் நிகழ்ந்தது ஜெயலலிதாவுக்கு...

அவரே சொல்கிறார்,

“என்னை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும், எல்லாக் கஷ்டக்காலங்களிலும் எனக்குத் துணையாக நின்று ஊக்குவித்து உதவி செய்யவும், என் தாயைப்போல் யாரும் இல்லாவிட்டாலும், உறவினர் என்ற முறையில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களிடம் மனம் ஆறுதல் பெற்று என் கவலையையும் இழப்பையும் மறந்து கலையுலகில் பயணம் செய்ய முயன்றேன். ஆனால், எண்ணியபடி முடியவில்லை. ஏற்கெனவே மன நிம்மதியை இழந்திருந்த எனக்கு மற்றொரு பேரிடி. நம்பியிருந்த அந்த உறவினர்கள் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்.  நான் மிகவும் குழம்பிப் போனேன். பகவானே! யாரை நம்புவது... எப்படி நம்புவது?” - இது அவர் 1979-ம் ஆண்டு பகிர்ந்தது. இந்தச் சமயத்தில் மனதளவில் அவர் உருக்குலைந்துதான் போய் இருந்தார். அதனால்தான், அவரே முற்றாக உடைந்துபோன எம்.ஜி.ஆருடனான நட்பைப் புதுப்பித்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தன. அடுத்து அவர் என்ன செய்வதென்று யோசித்தபோதுதான், அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்தது அரசியல். அக்டோபர் 17, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து ஜூன் 4, 1982-ம் ஆண்டு, கடலூரில் நடந்த கோலாகலமான விழாவில், ஒரு ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்தி இணைந்தார். அந்த மாநாட்டில் அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கடலூர் வீதியெங்கும் அவர் ஊர்வலமாகத் தேரில் அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கெனவே, அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு. அதுவும் இல்லாமல், இப்போது அவரை எம்.ஜி.ஆர் வேறு முதன்மைப்படுத்துகிறார். கேட்கவா வேண்டும்? அ.தி.மு.க-வின் அனைத்து முக்கியத் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கட்சியில் இணைந்த முதல் நாளே முன்னணித் தலைவர் ஆனார்.

செய்வீர்களா... செய்வீர்களா?

Jayalalithaa%20002_10423.pngஎம்.ஜி.ஆர் இவருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதாவை சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர் ஆக்கினார். தான் கலந்துகொள்ள முடியாத அனைத்துக் கூட்டங்களிலும் இவரைப் பங்கேற்கச் செய்தார். இவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆம், அப்போது முதல்வராகப் பதவியில் இருந்த எம்.ஜி.ஆரை, கருணாநிதி பொதுக் கூட்டங்களில் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அ.தி.மு.க-வில் அந்தச் சமயத்தில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தாலும், கூட்டத்தை வசீகரிக்கக்கூடிய அளவுக்கு கரிஷ்மா நிரம்பிய தலைவர்கள் இல்லை. அதனால், ஜெயலலிதாவை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். ஜெயலலிதாவும் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவர் பேசும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

சென்னையில், மயிலை மாங்கொல்லையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அப்போது நிலவிவந்த குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கத் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து விரிவாகப் பேசினார். அந்தக் கூட்டத்தை ஒரு வார இதழ் இவ்வாறாகப் பதிவு செய்திருக்கிறது,  “குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கத் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை எடுத்துக்காட்ட, அவர் எடுத்தப் போட்ட புள்ளி விவரங்களும், கணக்குகளும்... அடேயப்பா...! சத்துணவுத் திட்டக்குழுவின் உறுப்பினரான அவர் கொடுத்த புள்ளிவிவரங்களை, காவல் துறையைச் சேர்ந்த சிலரே ஜீப்பில் அமர்ந்துகொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டார்கள்...!” என்று சிலாகித்து எழுதி இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் அவர் உரையாற்றும் போதெல்லாம்... ‘செய்வீர்களா... செய்வீர்களா...’ என்று மக்களுடன் கேள்வி கேட்டு பதில் வாங்கி உரையை முடிக்கிறார் அல்லவா...? இந்தப் பாணியைத்தான், அவர் தொடக்கக் காலத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறார். அப்போது நடந்த கூட்டங்களில், “நீங்கள் கருணாநிதியின் தீங்கிழைக்கும் பேச்சை நம்புகிறீர்களா...? அவர் சொல்வதை எல்லாம் ஆமோதிக்கிறீர்களா...?” என்று மக்கள் முன் கேள்வியை வைத்துப் பேசி இருக்கிறார். இந்தப் பாணி அவருக்கு நன்கு கை கொடுத்திருக்கிறது.

நடிகை என்ற பிம்பத்தைத் தாண்டி, ஓர் அரசியல் தலைவராக மக்கள் மனதில் பதியத் தொடங்கினார். கொள்கை பரப்புச் செயலாளர், ராஜ்ய சபா எம்.பி என அவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் மேலே போகத் தொடங்கியது. கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களுக்கும் இவரைச் சாதாரணமாக எடுத்துக் ொள்ள முடியாது என்று புரியத் தொடங்கியது. எப்படியாவது அவரை வீழ்த்த வேண்டும் என்று காய் நகர்த்தியபோதுதான், நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த அந்த டெல்லி சம்பவம் நடக்கிறது. ஜெயலலிதாவைப் பற்றி பக்கம் பக்கமாக புகார் வாசிக்கத் தொடங்குகிறார்கள். மீண்டும் எம்.ஜி.ஆருக்கும் - ஜெயலலிதாவுக்கும் இடையே முரண்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

இதே காலகட்டத்தில், அதாவது அக்டோபர் 5, 1984-ம் நாள், எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அப்போலோவில் அனுமதிக்கப்படுகிறார்.

 

அனுமதி மறுக்கப்பட்ட ஜெ.!

Jayalalithaa%20003_10358.png

ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்த தலைவர்களுக்கு இந்தச் சம்பவம் வசதியாக அமைகிறது. ஜெயலலிதா அப்போலோவுக்குள் வர அனுமதி மறுக்கிறார்கள். அவர் அப்போலோவுக்குள் வந்தால், அவரைத் தாக்கவும் திட்டமிடுகிறார்கள். அப்போது அப்போலோ தலைமை மருத்துவராக இருந்த பி.சி. ரெட்டியிடம், “ப்ளீஸ்... டாக்டர். அவர் தூங்கும் போதாவது ஓரிரு நிமிடங்கள் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று மன்றாடியதாக அவரே பின்னொரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இதற்கு மத்தியில் அக்டோபர் 16-ம் தேதி, இந்திரா காந்தி சென்னை வந்து மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்துச் செல்கிறார். அடுத்த நாள் அக்டோபர் 17-ம் தேதி, இந்திரா காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார் ஜெயலலிதா. அதில், “அம்மா! நீங்கள் சென்னைக்கு வருகிறீர்கள் என்று ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி இருந்தால், நான் விமான நிலையத்துக்கே ஓடோடி வந்திருப்பேனே! என்னிடம் யாருமே சொல்லவில்லையே!  என் தலைவரைப் பார்க்க நீங்கள்தான் அம்மா ஒரு வழி செய்ய வேண்டும். நான் வேறு யார் உதவியை நாட முடியும்...? என் அன்னையாகிய உங்களைத் தவிர, இந்தச் சோதனையான நேரத்தில் எனக்கு உதவிட வேறு யாருமில்லை அம்மா...!” என்று எழுதுகிறார். இரண்டு நாட்கள் கழித்து டெல்லியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்.கே.தவானும், ஜி.பார்த்தசாரதியும் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறுகிறார்கள்.

“அம்மா (இந்திரா காந்தி) சென்னைக்கு வருவது குறித்து திடீரென முடிவு எடுக்கப்பட்டதால் யாருக்குமே தெரிவிக்கவில்லை. உங்களுக்குச் சொல்லவில்லையே என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று அம்மா சொல்லச் சொன்னார்கள். முதல்வரை (எம்.ஜி.ஆர்) பார்ப்பது குறித்து டாக்டர் சொல்படி நடந்துகொள்வது நல்லதென்று அம்மா சொன்னார்கள்.” என்று தவானும், பார்த்தசாரதியும் கூறியதாக ஜெயலலிதா ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

சில தினங்களில், எம்.ஜி.ஆர் அமெரிக்கா புரூக்லின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71114-jayalalithaa-denied-entry-into-apollo--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---episode-15.art

Link to comment
Share on other sites

“சிறையில் எம்.ஜி.ஆர்.!” ஜெயலலிதா கிளப்பிய அதிர்வலை! - : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 16

 

Epi%2016_12131.jpg

Jayalalithaa%20002_12464.jpg

 

“மதியாதார் தலைவாசல் மிதியாதே...!” - இது அவ்வை பாட்டி சொன்னது. சரிதான்... நம்மைப் புறக்கணிப்பவர்களை, நம் இருப்பை விரும்பாதவர்களை, நம்மைப் புழுவாக நினைப்பவர்களை... நாம் கண்டுகொள்ளாமல், அவர்கள் வாசலை மிதியாமல் இருப்பதுதான் சரி. மறுப்பதற்கில்லை. அவ்வையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், நம்மை மதியாதார் வாசலில்தான், நம் எதிர்காலம் இருந்தால்.... நம் வாழ்வு இருந்தால்... எப்படி மிதிக்காமல் இருக்க முடியும்? சரி, வாசலை மிதிக்காமல் இருந்துவிட்டுப் போவோம்.... ஆனால், வீட்டைக் கைப்பற்றலாம் அல்லவா...? ஆம், இதை... இதைத்தான் செய்தார் ஜெயலலிதா. அவரை புழுவாக மதித்தார்கள், அப்போதைய அ.தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள். புழுதான் கடுமையான நிலத்தையும் ஊடுருவும் என்பது அவர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது. அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டவர்... பொறுத்துப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார், அழுதும் பார்த்தார். இனி இது எதுவும் உதவாது என்ற முடிவுக்கு வந்தார். ‘சிவாஜி’ பட ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால்... இனி ‘பூ’ பாதை உதவாது. ‘சிங்க’ப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். வெகுண்டெழுந்தார்.

‘வெகுண்டெழுந்த ஜெ...!’

Jayalalithaa%20ano_12397.jpgஇதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஜெயலலிதா தன் அம்மா ஸ்தானத்தில் வைத்து மதித்த இந்திரா காந்தியின் மரணமும், அவரை மிகவும் கவலையுறச் செய்தது. இந்திரா காந்திதான் அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை. இந்திராவுக்கும் பிடித்தமான இளம் தலைவராக ஜெயலலிதா இருந்தார். அதனால்தான் அப்போதைய யூகோஸ்லாவியா நாட்டு அதிபருக்குக் கொடுத்த விருந்தில், ஜெயலலிதாவையும் அழைத்தார். அந்த விருந்தில் மொத்தம் 16 பேர்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஜெயாவும் ஒருவர். விருந்துக்கு அழைத்தது மட்டுமல்லாமல், அவரை தனிப்பட்ட முறையில் அதிபருக்கும் அறிமுகப்படுத்திவைத்தார். இதுவெல்லாம், ஜெயலலிதா மனதில் பெரும் நம்பிக்கையை விதைத்திருந்தது. இக்கட்டான சூழலில் நம்மை அவர் காப்பார் என்று நம்பினார். ஆனால், அதிலும் பேரிடி விழுந்தது. இனி தன் இருப்பைக் காக்க எந்தத் தேவ தூதனும் வரமாட்டான்... நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

பத்திரிகையாளர்களும் ஜெயலலிதாவைக் கட்சியிலிருந்து ஒதுக்குவதைக் கவனித்தே வந்தனர். தமிழக ஊடகவியலாளர்கள் மட்டும் அல்ல... டெல்லியிலும்தான். ஏனெனில், எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பின், ஜெயாவின் நாடாளுமன்றத் துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல், டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி அறையிலும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்...? ஏன் ஜெயலலிதா ஒதுக்கப்படுகிறார் என்று தெரிந்துகொள்ள டெல்லி பத்திரிகையாளர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் எல்லோரையும் அழைத்தார்...  ஓர் அதிர்ச்சிகரமான பேட்டியைச் சர்வ சாதாரணமாக டெல்லியில் அளித்தார். அந்த பேட்டி இதுதான்,
“நான் என்ன சந்தேகிக்கிறேன் என்றால்.... நான் எம்.ஜி.ஆரின் மனத்திறன் சரியாக இல்லை என்று. அது மட்டுமல்ல... கட்சியில் உள்ள சில சுயநலவாதிகளால் எம்.ஜி.ஆர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் சந்தேகிக்கிறேன்...” என்று திரியைக் கொளுத்திப் போட்டார்.

டெல்லியில் கொளுத்திப் போட்ட திரி... தமிழகத்தில் வெடித்தது. தலைவர்கள் கோபமுற்றார்கள். அவரது பேச்சை அப்படியே புரூக்லினுக்கு ஃபேக்ஸ் செய்தார்கள். அவர்கள் ஜெயாவை வீழ்த்த மும்முரமாக இருந்தபோது... ஜெயாவும் தன் மீட்சிக்காக டெல்லியில் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்தார். ‘‘தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது’’ என்றார். இது, நன்கு வேலை செய்யத் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கினார்கள்.

‘தலைவர் நலமாக இருக்கிறார்!’

MGR%20at%20Broklyn%20Hospital_12059.jpg

இந்திரா காந்தி மரணத்துக்குப் பின், நாடாளுமன்றத் தேர்தலும்... தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வருகிறது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வும், காங்கிரஸும் கூட்டணி. நிச்சயம் ஜெயித்துவிடுவோம் என்பது இரண்டு கட்சிகளுக்கும் நன்கு தெரியும். இந்திரா இறந்தது மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருப்பது... இந்த இரண்டும் அனுதாப அலைகளை உண்டாக்கும். நாம் அறுதிப்பெரும்பான்மையைக் கைப்பற்றலாம் என்று அ.தி.மு.க தலைவர்கள் நினைத்தார்கள். ஹூம்... அவர்கள் இன்னொன்றுக்கும் திட்டமிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜெயலலிதாவை பிரசார கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது. இந்தத் தேர்தலோடு அவர் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.

ஆனால் காங்கிரஸ், தி.மு.க-வை எதிர்கொள்ள கடுமையான பிரசாரம் வேண்டும் என்று நினைத்தது. ராஜிவ் காந்தி அந்தப் பிரசாரத்தை மேற்கொள்ள ஜெயலலிதா வேண்டும் என்று நினைத்தார். தமிழக அ.தி.மு.க தலைவர்களுடன் பேசினார். அதற்குப் பின்தான் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. உண்மையில், அந்த எளிய தொண்டர்கள் கூடியது ஜெயலலிதாவைப் பார்க்க அல்ல... அவர், எம்.ஜி.ஆர் குறித்து என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துகொள்வதற்காக. ஜெயலலிதாவும் அதை நன்கு உணர்ந்திருந்தார். டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியதுபோல் எல்லாம் பேசவில்லை... அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும்விதமாக... “தலைவர் நலமாக இருக்கிறார்... மீண்டும் வருவார்” என்றார் கம்பீரமான தொனியில். இந்த ஒரு வாக்கியத்தைக் கேட்க... ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் கூட்டம் கூடியது. தேர்தலில் மகத்தான வெற்றியும் கிடைத்தது.

தேர்தல் முடிந்த ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப் பின் எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து வருகிறார். அவரைச் சந்திக்க மீனம்பாக்காம் விமானநிலையத்தில் ஜெயலலிதா காத்துக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு எந்த முன்னணித் தலைவர்களும் இல்லை... இது, ஜெயலலிதாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆம்... ஜெயலலிதா மீனம்பாக்கத்தில் காத்துக்கொண்டிருக்க... செயின்ட் தாமஸ் ராணுவப் பயிற்சி மைய ரன்வேயில் வந்து இறங்கினார் எம்.ஜி.ஆர்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71242-mgr-is-being-held-by-clique-of-people-says-jaya--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---episode-16.art

Link to comment
Share on other sites

‘எம்.ஜி.ஆரிடம் கெஞ்சிய ஜெயலலிதா...!’ : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 17

 

Epi%2017_14182.jpg

MGR%20Jayalalithaa%20Janaki_14353.jpg

ந்த முன்முடிவுகளும் இல்லாமல், அகங்காரம் அற்ற வார்த்தைகளை தன் ஆன்மாவிலிருந்து பொறுக்கி எடுத்து உரையாடும்போது  எவர் மனதையும் வென்றெடுக்க முடியும் தானே...? இங்கு எவரையும் வென்றெடுத்து எதுவும் ஆகப் போவதில்லை. ஆனால், அதுபோன்ற உரையாடல்களால், ஒரு இணக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தலாம் தானே...?  அதுபோன்ற ஒரு உரையாடலுக்காகத் தான், ஜெயலலிதா கண்ணீரால் வார்த்தைகளை ஈரப்பிசுபிசுப்பாக்கி வைத்து காத்திருந்தார். அந்த ஈரத்தில் எம்.ஜி.ஆரின் மனதை கரைத்துவிட வேண்டும்... மீண்டும் அவர் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கட்சியிலும் முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால், அது நிகழ அல்லது அதை நிகழ்த்த ஜெயலலிதா பெரும்பாடுதான் பட்டார்.


‘கோபமடைந்த எம்.ஜி.ஆர்’

அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திப்பதைத் தவிர்த்தார்.  அமெரிக்காவிலிருந்து அவர் திரும்பியதும், அவரிடம் இங்கு நிகழ்ந்தது அனைத்தையும் சொல்லி, தனக்கு ஏற்பட்ட அநீதியை விவரித்து முறையிடலாம் என்று நினைத்திருந்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர் தன்னை தவிர்ப்பது விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.

 

Jaya%20cover_14345.jpg

எம்.ஜி.ஆர் எப்போதும்  தன் அனுமதி இல்லாமல் கட்சிக்காரர்கள், பத்திரிகையாளர்களை சந்திப்பதை விரும்பியதில்லை. ஊடகங்களை அவரே கையாண்டார். ஆனால், ஜெயலலிதா இந்த விதியை மீறினார். பத்திரிகையாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார்.   இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “நான்  உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது. பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து இருந்தால்  பரவாயில்லை... குழப்பங்களை விதைத்து இருக்கிறார். அது மட்டுமா? தன் மனைவி ஜானகியைப் பற்றியும் தவறாகப் பேசி இருக்கிறார்...  இனி, ஜெயலலிதாவை தொலைவிலேயே வைக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.   

சென்ற அத்தியாயத்தில் ஜெயலலிதா டெல்லியில் பேட்டி கொடுத்தார் என்று பார்த்தோம் அல்லவா...? அந்த பேட்டியில், ஜானகி - எம்.ஜி.ஆர் திருமண பந்தம் குறித்தும் சில வார்த்தைகளை பேசி இருந்தார். இதுதான்  எம்.ஜி.ஆரை, மிகவும் கோபப்படுத்தியது. எதை மறந்தாலும், மன்னித்தாலும்... ஜானகியை தவறாகப் பேசியதை மன்னிக்க அவர் தயாராக இல்லை.  

ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஓரம்கட்டியதைப் பார்த்து, கட்சியின் முன்னணி தலைவர்கள் அகம் மகிழ்ந்துதான் போனார்கள். இனி எப்போதும், ஜெயலலிதா - எம்.ஜி. ஆர் சந்திப்பு நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டார்கள். ஆம், அவர்களுக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது, மீண்டும் இருவரும் சந்தித்தால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மனதை கரைத்து விடுவார் என்று... இறுதியில் அதுதான் நிகழ்ந்தது.

‘டெல்லியில் நிகழ்ந்த சந்திப்பு’

Jayalalitha_Rare_8_1_14570.jpgஅமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர் குரல் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்றிருந்தார். டெல்லி வழியாக தமிழகம் திரும்புவது தான்  திட்டம். ஜெயலலிதா எம்.ஜி.ஆரை  டெல்லியில் சந்திக்கத் திட்டமிட்டார். அங்குதான் மற்றவர்கள் தொல்லை இல்லாமல் சந்திக்க முடியும் என்பது அவரது எண்ணம். அவரது எண்ணமும், திட்டமும் வீண் போகவில்லை. இருவரும் சந்தித்தார்கள். தன் கண்ணீருடன் கூடிய வார்த்தைகளால், எம்.ஜி.ஆரின் மனதைக் கரைத்தார். மீண்டும் கட்சியில் காட்சிக்கு வந்தார். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின், மீண்டும்  அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஜெயாவை உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய எம்.ஜி.ஆர் அனுமதிக்கவில்லை. அவரும் பிரசாரம் செய்யாததால், கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

அ.தி.மு.க-வின் வேர்களே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தானே...கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால், வேர்களை பலப்படுத்த  வேண்டும் அல்லவா...? எம்.ஜி.ஆர் இதனை உணர்ந்தார். மதுரையில் மாபெரும் ரசிகர் மன்ற மாநாட்டை ஒருங்கிணைத்தார். அந்த மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். அந்த மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், ரசிகர் மன்ற ஆட்கள் இருக்கும்போது... தனக்கு ஆறடி செங்கோலை விழா மேடையில் ஜெயா பரிசாக அளிக்க, எம்.ஜி. ஆர் இசைவு தந்தார். இது எதையும் ஜானகி ரசிக்கவிலை.  

அந்த மேடையில்  தன்னை  ‘எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற’ தலைவராக நியமனம் செய்வார். அதற்கான அறிவிப்பை எல்லோர் முன்பும் அறிவிப்பார் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். ஆனால், அதை எம்.ஜி.ஆர் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல், மதுரையிலிருந்து திரும்ப வரும்போது, ஜெயலலிதாவை அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஆம், அவரை தனியாக விட்டு...  ஜானகியுடன் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர், இதை ஜெயலலிதா சற்றும் எதிர்பார்க்காவில்லை.... ரசிகர்கள் முன் இவ்வாறு நடந்தது, அவருக்கு மிகவும் அவமானமாகி விட்டது.  கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பினார்களோ இல்லையோ... ரசிகர்கள் அப்போதே நம்பி விட்டார்கள் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா தான் என்று...அவர்கள் முன் எம்.ஜி.ஆர் இப்படி தன்னை அவமானப்படுத்திவிட்டாரே என்று தவித்துப் போனார்.

அதற்கான காரணத்தையும் அவர் உணர்ந்தே இருந்தார்... எல்லாவற்றையும் மன்னித்தாலும், ஜானகி குறித்து தான் பேசியதை எம்.ஜி.ஆர் மன்னிக்கத் தயாராக இல்லை என்று...தனியாக  சென்னை திரும்பிய ஜெ, எம்.ஜி.ஆருக்கு நீண்ட கடிதத்தை எழுதினார். அதில், “நான் உங்களை காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்... இனி நான் எப்போதும் ஜானகி குறித்து பேச மாட்டேன்...என்னை மன்னித்து விடுங்கள்... மதுரையில் நடந்தது என்னை மிகவும் காயப்படுத்தியது... எனக்கென்று யார் இருக்கிறார்? நீங்களும் என்னை காயப்படுத்தினால், நான் எங்கு செல்வேன்...? என்னை  மன்னித்து விடுங்கள்..” என்று எம்.ஜி.ஆரின் அன்புக்காக கெஞ்சியே இருந்தார்...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71371-jayalalithaa-pleads-mgr--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-17.art

Link to comment
Share on other sites

"விளையாடவா வந்திருக்கிறோம்!? ஜெயலலிதாவைக் கடிந்த எம்.ஜி.ஆர்!" மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 18

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17

Epi%2018_15125.jpg

018_15274.jpg

ல்லோருக்கும் சில விருப்பங்கள் இருக்கும்... அது, நிகழவே நிகழாது. அதை, நிகழ்த்த முடியாது என்று நமக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அதற்காக நாம் ஏங்குவோம். அதுபோல ஓர் ஏக்கம், ஜெயலலிதாவுக்கு தன் சிறுவயது முதலே இருந்தது. அது, ‘தான் ஆணாகப் பிறக்கவில்லையே...’ என்பதுதான். இதுகுறித்து அவர் எழுதியும் இருக்கிறார். “எனக்கு விவரம் புரியத்தொடங்கிய நாள் முதலே, என் உள்ளத்தின் அடித்தளத்தில் நீங்காமல் இருந்துவரும் பெரிய மனக்குறை - நான் ஆணாகப் பிறக்கவில்லையே என்பதே ஆகும். கூடுமானவரையில் பிள்ளைப்பிராயத்திலேயே ஓர் ஆண் பிள்ளையைப்போலவே நடந்துகொள்ள முயல்வேன். திரைப்படத் துறையில் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப காலத்திலும் அதே உணர்வு தொடர்ந்து இருந்தது...” என்று பின்னாளில் எழுதி இருக்கிறார். இனி ஆண் பிள்ளையாக மாற முடியாது. ஆனால், ஆண் பிள்ளை போன்ற வேஷத்தில் நடக்க முடியும்தானே...?  Tom - Boy போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஏங்கியவருக்கு, தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் அப்படியான வேஷம்.

‘கடிந்துகொண்ட எம்.ஜி.ஆர்!’

jaya2_15382.jpg‘ரகசிய போலீஸ் 115’ திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு டாம் பாய் மாதிரி ரவுடித்தனமாக அட்டகாசம் செய்து நடிக்கும் வேஷம். அந்தப் படத்தின் இயக்குநர் பந்தலுவுக்கு, ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால், அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர் இயக்கி இருக்கிறார். அன்று, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஏறத்தாழ ஆண் பிள்ளையைப்போலவே இருந்திருக்கின்றன. இதைக்கண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தனியாக அழைத்து, “அம்மு... ஒரு விஷயத்தை மறந்துவிடாதே! நீ அணிந்திருக்கும் உடை மட்டுமே ஆணின் உடையே தவிர, நீ ஏற்றி இருக்கும் வேஷம் கதாநாயகியின் வேஷம்தான்....” என்று அறிவுறித்தி உள்ளார். இதைப் பின்னாளில் பகிர்ந்த ஜெயலலிதா, ‘‘ஆண் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையை, நான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், இவ்வாறாக வெளிப்படுத்தி இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் அவருக்குத் திரைத்துறையில் நிகழ்ந்திருக்கிறது. அந்தச் சம்பவத்தின் பின்தான் தன் துடுக்குத்தனம் மாறியதாக ஜெயலலிதாவே குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு மிகுந்த கோபம் வரும் என்பதையும் அந்தச் சம்பவம்தான் தனக்கு உணர்த்தியது என்று பின்னாளில், ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’ என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் அந்தச் சம்பவம். அது, ‘முகராசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு. அதன் இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஏதோ சில காரணங்களால் ஒரு நாள் படப்பிடிப்புக்கு வரவில்லை. அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர் இயக்கி இருக்கிறார். அன்றைய காட்சியில், எம்.ஜி.ஆர் கோபமாக நடந்துசெல்ல, ஜெயலலிதா அவர் பின்னால், ‘அத்தான்... நில்லுங்கள்! போகாதீர்கள்...’ என்று அழுதவாறே அவரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் அந்தக் காட்சியை இயக்க ஆயத்தமாகிறார். அந்தக் காட்சிக்கான ஒத்திகை நடக்கிறது. மாரிமுத்து என்ற உதவி இயக்குநர் எம்.ஜி.ஆராக ஒத்திகையில் நடிக்க... அவர் பின்னால் ஜெயலலிதா வசனங்களை உச்சரித்துக்கொண்டு போக வேண்டும். ஆனால், ஜெயலலிதா, விளையாட்டாகச்  சிரித்துக்கொண்டே அந்த ஒத்திகையில் நடித்துள்ளார். இதைக் கண்ட எம்.ஜி.ஆர் மிகவும் கோபமாக, “என்ன சிரித்தாகிவிட்டதா... விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டதா... இனிமேல் ஒழுங்காக ஒத்திகை பார்க்கலாமா... இங்கே வேலை பார்க்க வந்தோமா, இல்லை விளையாட வந்தோமா...” என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

முதன்முதலாக எம்.ஜி.ஆர், இந்த அளவுக்குக் கோபப்பட்டது ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம், “கோபமா பேசிட்டேன்லே...? எனக்குத் தெரியும் வேணும்னு நீ அப்படி நடந்துக்கலை. நீ சின்னப் பொண்ணு... காலேஜ்ல தோழியரோடு சிரித்து விளையாட வேண்டிய வயசுல இங்க வந்து கஷ்டப்படுற” என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

இதை ஏன் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறேன் என்றால்... ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு இத்தகையானதாகத்தான் இருந்திருக்கிறது. மற்றவர்களிடம் கோபப்படுவதுபோல, அவரால் முழுமையாக ஜெயலலிதாவிடம் கடிந்துகொள்ள முடியவில்லை. ஜெயலலிதாவே தவறு செய்திருந்தாலும், இவர் இறங்கி வந்திருக்கிறார். இல்லை, ஜெயலலிதா கண்ணீர்விட்டால் துடித்துப்போய் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது.

சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்தானே...? ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினார் என்று. அதன் பின்னால் எம்.ஜி.ஆரின் மனம் கரைந்திருக்கிறது. ஜெயலலிதாவிடம் சகஜமாகப் பேசத் தொடங்கி இருக்கிறார். ஆனால், ஜெயாவுக்கு கட்சியில் எந்தப் பெரிய பொறுப்பையும் வழங்கவில்லை.

இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க... அ.தி.மு.க-வில் தனக்குப் பின்னால் யார் என்று குறிப்பிடாமலேயே டிசம்பர் 24, 1987 எம்.ஜி.ஆர் மரணிக்கிறார்.

‘அவமானங்களை சந்தித்த ஜெ.!’

 

MGR%20Funeral_15189.jpg

தகவலறிந்த ஜெயலலிதா ராமாவரத் தோட்டத்துக்கு விரைகிறார். ஆனால், அவர் வாசலைத் தாண்டி உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. அதற்குள் எம்.ஜி.ஆரின் உடல், மக்களின் பார்வைக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. அவர், உடனே அங்கு விரைகிறார். அங்கும் இதே நிலைதான். எப்படியோ... உள்ளே  நுழைகிறார். எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகே அமர்ந்துகொள்கிறார். ஏறத்தாழ 21 மணி நேரம் எங்கும் நகராமல், அங்கேயே அமர்ந்துகொள்கிறார். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மனவருத்தங்கள் இருந்தது எதுவும் ரசிகர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதனால், எம்.ஜி.ஆரின் தலைமாட்டிலேயே உட்கார்ந்துகொள்கிறார்.

ஆனால், அவரை அங்கிருந்து வெளியே அனுப்பச் சிலர் தங்களால் ஆன அனைத்து கைங்கர்யங்களையும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஜெயலலிதாவைக் கிள்ளுகிறார்கள்; அவர், பாதங்களை கீறுகிறார்கள். ஆனால், ஜெ கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை. அவர், எம்.ஜி.ஆரையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். இனி தன் நிலை என்ன... என்பது மட்டும் அவர் சிந்தனையாக அப்போது இருந்திருக்க வேண்டும்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71641-mgr-scolds-jayalalithaa---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa---episode-18.art

Link to comment
Share on other sites

"தாக்கப்பட்ட ஜெயலலிதா...!" மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 19

 

Epi%2019_11270.jpg

Jayalalithaa%20001_11330.png

 

"உன்னை மதிப்பிடுகிறார்களா...? கொட்டாவி விடு
உன்னை தவறாக நினைக்கிறார்களா...? புன்னகைத்து விடு
உன்னை குறைவாக எடை போடுகிறார்களா...? பலமாக சிரித்து விடு
உன் மீது குற்றம் சுமத்துகிறார்களா...? புறந்தள்
உன் மீது பொறாமை கொள்கிறார்களா...? உற்சாகம் கொள்
உனக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா...? முன்னேறிச்  செல்”
                -  தத்துவஞானி மத்ஷோனா
.  

இவ்வரிகளில் உள்ளவாறே ஜெயலலிதா செய்தார். அவரைக் குறைவாக மதிப்பிட்ட போது, குற்றம் சுமத்திய போது, பொறாமை கொண்ட போது... தன் நடவடிக்கைகளின் மூலம், தன்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று புரியவைத்தார்.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர்,  முன் எப்போதும் இல்லாததை விட கட்சிக்குள் பலமான எதிர்ப்பு. ஜெயலலிதாவின் இருப்பை  இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற அளவிற்கு எதிர்ப்பு.  ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் ஆபத்பாந்தவனாக இருந்த எம்.ஜி. ஆர் இப்போது இல்லை. என்ன செய்தார்... இந்த எதிர்ப்புகளுக்கு என்ன பரிசளித்தார்...?  மத்ஷோனா சொல்லியதை தான் ஜெயலலிதா செய்தார்..  ‘முன்னேறிச் சென்றார்..!’

‘அவமானப்படுத்தப்பட்ட ஜெ!’

MGR%20Funeral_11569.jpg

1987, டிசம்பர் 25. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர், எம்.ஜி. ஆர் ரசிகர்கள், ஏழை, பணக்காரர்கள், சாமானிய மக்கள் என்ற பேதமில்லாமல் எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையில் முற்றுகையிட்டு இருந்தனர். ராஜாஜி அரங்கத்திலிருந்து எம்.ஜி.ஆரின் உடல்  ராணுவ வண்டியில் முழு அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கூட்டம். காணும் இடமெங்கும் மனித தலைகள்... அழுகை சத்தம். இது எதையும் ஜெயலலிதா உள்வாங்கவில்லை. அழுகையின் அதிர்வுகளை உடலெங்கும் பரவவிட்ட... அமைதியாக அந்த ஊர்வல வண்டியில் அமர்ந்து இருக்கிறார். அன்று மட்டும் அவரை அமைதியாக அந்த ஊர்வலத்தில் செல்ல அனுமதித்து இருந்தார்கள் என்றால்... சொல்ல முடியாது தமிழகத்தின் அரசியல் வரலாறு முற்றாக மாறி இருந்தாலும், மாறி இருக்கும்...!   ஆனால், அதிமுகவின் அப்போதைய முன்னணி தலைவர்கள் அதற்கு இடம் தரவில்லை. காலமும், இடமும் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிறது தொல்காப்பியம்... பெளதீகமும் இதை வழிமொழிகிறது. அன்று அந்த தலைவர்கள் தொல்காப்பியத்தையும் நினைக்கவில்லை... பெளதீகத்தையும் நினைக்கவில்லை. ஆம், சூழல் தெரியாமல் ஜெயலலிதாவை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர்... அதோடு விடவில்லை ஜானகியின் உறவினர்கள் அவரை தாக்கவும் செய்தனர். மோசமான வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர்.

அன்று அவர்களின் நாட்குறிப்பில் இரண்டு நிகழ்ச்சி நிரல் இருந்தது. ஒன்று எம்.ஜி. ஆரை மெரினா கடற்கரையில் புதைக்க வேண்டும், அத்தோடு சேர்த்து ஜெயலலிதாவின் அரசியல் அபிலாஷைகளையும்! அப்போது அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை? சில ராணுவ வீரர்கள் உதவி செய்தனர்... அவரை அங்கிருந்து மீட்டு... பத்திரமாக அவர் வீடு வரை சென்று விட்டனர்.

ஜெயலலிதா வீட்டுக்குச் செல்வதற்கு முன் அந்த செய்தி காட்டுத்தீயாக தமிழகம் முழுவதும் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்திருந்தது. அப்பாவி அதிமுக தொண்டனுக்கு, இந்த அரசியல் உள்சண்டைகள் எதுவும் தெரியாது தானே... அவன் ஜெயலலிதாவை அண்ணியாகத் தான் பார்த்தான்...! அவன் துடிதுடித்துப் போனான். எம்.ஜி.ஆர் வேண்டுமானால், தனக்குப் பின் அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா தான் என்பதைச் சொல்லாமல் சென்றிருக்கலாம். ஆனால், அவன் அடுத்த தலைமையாக ஜெயலலிதாவைத் தான் பார்த்தான். தொண்டர்களின் மனநிலையைப் புரிந்த சில எம்.எல்.ஏக்களும், எம்.பி-க்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றனர். அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் துடிதுடித்த ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் நீட்டிய கரம், புதிய தெம்பைக் கொடுத்தது. அவர்களின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார். ஆனால், உடனடியாக இப்போது எதுவும் செய்ய முடியாது. அதிமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது.

‘களேபரமான சட்டமன்றம்!’

0210Insight_11165.jpgஜானகிக்கு 97 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து ஆளுநர் குரானாவிடம் மனு அளித்தனர். அவர் ஜானகியை அரசமைக்க அழைத்தார். ஜானகி தமிழக முதல்வராக ஜனவரி 7, 1988 - ல் பதவியேற்றார். ஜனவரி 28-ம் தேதி அவர் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... தமிழக சட்டமன்ற வரலாறு இந்த நாளை ஒரு கருப்பு தினமாகக் குறித்துக் கொள்ளப் போகிறது என்று. ஆம், அந்த நாள் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்த சில அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அவைத் தலைவர் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார். அவர் நடுநிலையுடன் இல்லாமல் ஜானகிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று ஆட்சேபம் தெரிவித்தனர். சிலர் சட்டமன்றத்துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்தனர். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சில குண்டர்கள் சட்டமன்றத்துக்குள் புகுந்து ஜெயலலிதா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தாக்கத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் பேரவை வளாகத்துக்குள் போலீஸ் புகுந்தது... லத்திகள் கொண்டு எம்.எல்.ஏக்களை தாக்கியது... ஆனால், இது எதையும் அவைத் தலைவர் கண்டுகொள்ளவில்லை... சட்டமன்றம் கலவரச் சூழலில் இருக்கும் போது... அவர், “ஜானகி அணி, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று விட்டது” என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு தகவல் போகிறது. அவர் தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது. உடனடியாக ஆளுநர் ஜானகி, அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். அவருக்கு காங்கிரசும் ஆதரவளிக்கிறது. ஜெ ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து, அன்று என்ன நிகழ்ந்தது என்று விளக்குகிறார்கள். மத்திய அரசாங்கத்திற்கு தமிழகத்தில் நடந்ததை ஆளுநர், ஒரு அறிக்கையாக அனுப்புகிறார். அத்துடன் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.

மத்திய அரசு, ஆளுநரின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறது. இதை உண்மையில் ஜெயலலிதா எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை....? இந்த களேபரங்கள் நிகழாமல் போயிருந்தால்... அவர் கட்சியை... அதன் பின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வேறு ஏதாவது பெருந்திட்டம் தேவைப்பட்டிருக்கும். ஆனால், இந்த களேபரங்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக்கியது... இலகுவாக்கியது...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71723-jayalalithaa-was-assaulted--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-19.art

Link to comment
Share on other sites

"ஜெயலலிதாவும், மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்...!" மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 20

 

Jaya%2020_15500.jpg

Jayalalithaa

விதை விருட்சமாக நீரின் தீண்டல் தேவைப்படுகிறது. ஆகாயத்திலிருந்து விழும் நீர், மண்ணை ஊடுருவி, விதையை முத்தமிட்டால்தான் விதை உயிர்த்தெழும். இந்த பிரபஞ்சத்திலிருந்து மனிதன் தனித்தவன் இல்லை என்னும் போது, இந்த விதி அவனுக்கும் பொருந்தும்தானே...? இங்கே எல்லோருக்குள்ளும் திறமை கொட்டிக் கிடக்கிறது, அந்த திறமையைக் கண்டறிந்து அவனுக்கு வாய்ப்பளிக்க... அவனை கைதூக்கி விட, யாரோ ஒருவர் ஊக்கியாக இருக்க வேண்டி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அப்படியானவராக இருந்தவர் தான் ஸ்ரீதர். ஜெயலலிதாவை ஸ்ரீதர் தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லவில்லை... ஆனால், அவர்தான் ஜெவுக்கு  ‘ஜெ... ஜெ...’ என பெரும் வெற்றியைப் பரிசாக தந்தார்.

 ‘அன்று சிந்திய ரத்தம்’ என எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ஸ்ரீதர் ஒரு படம் துவங்கி இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் முதல் ஷெட்யூலோடு நின்று விட்டது. அந்தப் படம் ஏன் நின்றது? என்ற எந்த காரணமும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஸ்ரீதரினால் தான் படம் நின்றது என்று நினைத்து விட்டனர். அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் தான், ‘வெண்ணிறை ஆடை’ படம் வெளியாகிறது. கடும் கோபத்தில் இருந்த ரசிகர்கள், அந்தப் படம் வெளியான தியேட்டர்களை எல்லாம் தாக்கத் துவங்கினர்... பதாகைகளை எல்லாம் கிழிக்கத் துவங்கினர்.  பின்னர் இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் நேரடியாக தலையிட்டார். ரசிகர்களுக்கு ‘அன்று சிந்திய ரத்தம்’  திரைப்படம் குறித்த பிரச்னையை விளக்கி, அமைதிப்படுத்தினார். ஜெ-வுக்கு உண்மையில் தமிழ் சினிமாவில் அதிரடியான அறிமுகம் தான்...!

ஸ்ரீதர் - ஜெ கருத்து வேறுபாடு:

ஸ்ரீதர் துவக்கத்தில் ஜெயலலிதா மீது அதிக ப்ரியம் கொண்டவராகத் தான் இருந்தார். அதற்குக் காரணம் ஜெயாவின் நடிப்புத் திறன். Sridhar_16248.jpgஇதுகுறித்து ஸ்ரீதரே பின் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அவர் வார்த்தைகளிலிருந்தே, “காதல், இன்பம், துன்பம், சிரிப்பு, அழுகை இப்படி பல வகையான பாவங்கள் உள்ள கேரக்டராய் இருந்தாலும், ஒரே தடவை சொல்லிக் கொடுத்தால் போதும். நாம் நினைத்தை விடவும் நன்றாக நடித்து விடுவார். நல்ல திறமையுள்ள, எல்லா வகையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் ஆற்றல் உடையவர் என்பதை பல படங்களில் அவர் நிரூபித்து வருகிறார்” என்று ஜெ பற்றி பகிர்ந்திருக்கிறார்.

ஆனால், எல்லாவற்றையும் சுழற்றி அடிக்கும் காலம்... இந்த அன்பையும்... ப்ரியத்தையும் சிதைத்துப் போட்டது. ஆம், இவர்கள் இருவரும் பின்னாளில், மிக மோசமாக பொது வெளியில் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

1996-ம் ஆண்டுதான் அந்த சம்பவம் நடந்தது. ஸ்ரீதர் உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார். அவரை திரைக் கலைஞர்கள் எல்லோரும் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். ஆனால், ஜெயலலிதா செல்லவில்லை. இந்த வருத்தங்களை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார்...
“தெரிஞ்சவங்களுக்கு உடல்நிலை சரியில்லைன்னா, நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்ட எதிர்பார்த்தேன்... ஏமாற்றி விட்டார்... கான்வென்ட் படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்கு போல.... அவங்க நடிச்ச அந்த கன்னட படத்தோடு அப்படியே விட்டிருந்தா... அவங்க தமிழக முதல்வர் ஆகி இருப்பாங்களா..?” என்று பகிர்ந்து விட்டார் ஸ்ரீதர்.

ஜெயலிதாவுக்கு கோபம் காட்டாற்று வெள்ளமாக வந்தது.... அந்தக் கோபத்தை வார்த்தைகளாக மாற்றி ஒரு கடிதம் எழுதினார். அதில், “திரு. ஸ்ரீதர்தான் என்னை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். மறுக்கவில்லை மறக்கவும் இல்லை... ஆனால், அதனால்தான் நான் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.  திரு. ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகைகளில் எத்தனை பேர் முதலமைச்சராகி இருக்கிறார்கள்... எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்து இருக்கிறார்கள்...?” என்று காட்டமாகவே அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார்.  இப்படியாக இருவருக்குள்ளும் பெரும் விரிசல் வந்தது.

 

Jaya_16349.jpg

“இப்போது ஏன் இந்த வரலாறு.” என்கிறீர்களா... ? ஜெயலலிதாவை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்களாயின், ஜெ. ஏன் அரசியலில் தடாலடியாக முடிவுகளை எடுக்கிறார் என்று கேட்பீர்களாயின்... நீங்கள் இந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  ஆம், இதுதான்  ‘ஜெ...!’. தன்னை தமிழில் அறிமுகப்படுத்தினார் என்பதற்காக ஸ்ரீதரிடம், அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கவில்லை. தான் என்ன நினைத்தாரோ அதைப் பேசினார். அதன் விளைவுகள் குறித்து கவலை அவர் கொள்ளவில்லை... இந்தப் பழக்கம்தான் அவர் அரசியல் வாழ்க்கையிலும் தொடர்ந்தது.

இது சரியா? தவறா? என்று தர்க்கம் செய்ய இதை பகிரவில்லை... ஜெயலலிதா எப்போதுமே இப்படியாகத் தான் இருக்கிறார், பிம்பங்கள் எதுவும் இல்லாமல் அவரை அவர் சுயத்துடன் புரிந்துகொள்ள தான் இந்த நிகழ்வு.

ஹூம்... சொல்ல மறந்து விட்டேன்... ஜெயலலிதா 'வெண்ணிற ஆடை' படத்துக்காக சம்பளமாக பெற்றது மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.... ஆம், தமிழ் சினிமாவில் அவர் பயணம் இந்த மூன்றாயிரத்திலிருந்து தான் துவங்கியது. இதிலிருந்து துவங்கியவர்தான் பின்னர், எம்.ஜி. ஆர் துவங்கிய சத்துணவுத் திட்டத்துக்கு சர்வ சாதாரணமாக நாற்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னாளில், அவரே முதல்வராகப் பொறுபேற்ற பின்னர் வெறும் ஒரு ரூபாயை சம்பளமாக பெற்றார்.

 ‘சேவல் - புறா மோதல்’

Jaya%20-%20Janaki_16005.pngசென்ற அத்தியாயத்தில் எங்கு விட்டோம்... ம்ம்ம்ம்..... தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்ட இடத்தில் தானே...?  குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்டவிதி. அதன்படி 1989-ல், அ.தி.மு.க இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்தித்தது. ஜானகி தலைமையில் ஒரு அணியும்... ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும்...  தேர்தல் சின்னமாக ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும், ஜெ. அணிக்கு சேவலும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜானகி அணியில் பெரும் தலைகள் எல்லாம் இருந்தனர். ஜெயலலிதா அணியில் அப்படி யாரும் இல்லை. ஜெயலலிதாவுக்கு இது வாழ்வா... சாவா யுத்தம்...? அவர் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் தன் இருப்பு இங்கு நீடித்திருக்கும். இல்லை என்றால் மீண்டும் துவங்கிய புள்ளியிலேயே நிற்க வேண்டும்... இதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்...  சென்ற இடங்களில் எல்லாம் திரண்ட கூட்டம் அவருக்கு உற்சாகத்தைத் தந்தது. எம்.ஜி.ஆர் ரசிகனும்... தொண்டனும் தன் பக்கம் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தார். இது அவர் நம்பிக்கைக்கு உரமேற்றியது.

ஜானகி அணிக்கு இது அச்சத்தை விதைத்தது. அவர்கள் பிரசார மேடையில் மோசமான வார்த்தைகளால் ஜெயலலிதாவை விமர்சிக்கத் துவங்கினர். ஜெயலலிதாவும் ஜானகியை விமர்சித்தார். அது எல்லைமீறிச் சென்றது... ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, “எம்.ஜி,ஆரை, ஜானகிதான் மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றார்” என்றார். இது பல அதிர்வுகளை கிளப்பியது. உடனடியாக அப்போது ஆளுநராக இருந்த பி.சி. அலெக்ஸாண்டர் தலையிட்டார்.... “நான் மருத்துவர்களிடம் விசாரித்தேன்... விஷத்தால் எம்.ஜி.ஆர் மரணிக்கவில்லை" என்று தெரிவித்து, ஜெ - ஜா அணியினரின் வார்த்தை யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேவலுக்கும் - இரட்டைப் புறாவுக்கும் நடந்த யுத்தத்தில்.... சேவல் வென்றது...!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/71911-jayalalithaa-and-three-thousand-rupees---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-20.art

Link to comment
Share on other sites

“திமுக வெற்றிக்கு உதவிய ஜெயலலிதா...!” : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 21

 

Jayalalithaa

Jayalalithaa_16274.jpg

 ‘அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் ஹிலரி’. சில தினங்களுக்கு முன் சென்னையில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்த போஸ்டர் இது. ஹிலரி தோற்று விட்டார். அப்போலோவில்  சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு இது தெரியுமா? இல்லை தெரியாதா ? என்று நமக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் வருந்தி இருப்பார்.  அமெரிக்காவின் அரசியல் மாற்றத்துக்கு...ஹிலரி தோற்றதற்கு ஏன் ஜெயலலிதா வருந்த வேண்டும்...? ஹிலரிக்கும், ஜெயாவுக்கும் அவ்வளவு சிநேகமா...? இல்லை ஹிலரி என்ன ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியா...? இல்லைதான். எந்த தனிப்பட்ட பந்தமும் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் இயல்பு அது. அவர் எல்லாவற்றிலும் பெண்கள் முட்டி மோதி முன்னேற வேண்டும் என்று விரும்பினார். தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் தான் ஜெயலலிதாவை இந்திரா காந்தி ஈர்த்தார்.

‘இற்றுப்போன இதயங்கள்’

Jayalalithaaஅரசியல் வாழ்வின் துவக்க காலத்திலேயே பெண்கள் பல மேடைகளில் சமத்துவம், முன்னேற்றம் குறித்து பேசவும் செய்திருக்கிறார். அதில் ஒன்று அவர் ‘திரு.வி.க ஒரு பல்கலைக் கழகம்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரை.

“பெண்கள் சமத்துவம் என்பதை ஏற்காத இற்றுப்போன இதயங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதர்கள் நாடோடியாக வாழ்ந்து குடும்பமாகக் கூடியபோது, தலைவி தான் இருந்தாள்; தலைவன் இல்லை. இதை தாய் வழிச் சமுதாயமென்று மனித இன வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் கிராமங்களில் காளியம்மன், மாரியம்மன், காமாட்சியம்மன் போன்ற பெண் தெய்வங்கள் உண்டு. இவர்கள் தாய் வழிச் சமுதாய காலத்து குலத் தலைவிகள்.

பூமி மாதா பொதுவுடமையாக இருந்தாள். இவளுக்கு எல்லாக் குழந்தைகளும் சொந்தக் குழந்தைகள்தான். ஆனால், இந்த நிலை மாறி சொத்துடமை, தனியுடைமை என எப்போது ஏற்பட்டதோ, அன்று ஆணுக்குப் பெண் அடிமை என்ற முரட்டுத் தத்துவம் எழுந்தது” என்று அவர் அந்த விழாவில் பொதுவுடமையும், பெண்ணியத்தையும் கலந்து பேசினார்.

ஆனால்,  பெண்களுக்கான சமஉரிமை கோரிய ஜெயலலிதா ஆட்சியில்தான், முழுமையான மதுவிலக்கு கோரியதற்காக, மதுரை நந்தினி மீது காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.  தத்துவங்கள் நிர்வாகத்திற்கு பொருந்தாது என்று நினைத்து இருப்பாரோ என்னவோ...?

 ‘படுதோல்வி அடைந்த ஜானகி அணி’

Jaya_16163.jpgசரி, வாருங்கள். சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து துவங்குவோம்.   

அதிமுக ஜெயலலிதா அணி, 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி, அ.தி.மு.க. ஜானகி அணி,  தி.மு.க, காங்கிரஸ்,  மூன்றையும் வீழ்த்த வேண்டும்  காங்கிரஸையும், திமுகவையும், வீழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம்  ஜானகி அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். அப்போது தான் அரசியலில் எதிர்காலம். ஆனால், அது துவக்கத்தில் சுலபமான ஒன்றாக இருக்கவில்லைதான். அந்த அணியில்தான் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 1988- ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியும் ஜானகி அணியைத் தான் ஆதரித்தது. ஆம், “நீ தங்கச் சிலைபோல் இருக்கிறாய்... எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாய்” என்று ஜெயலலிதாவின் 12-வது வயதில், அவரின் நாட்டிய அரங்கேற்றத்தில் தலைமை தாங்கிப் பேசிய சிவாஜி... இப்போது, தேர்தல் களத்தில் அவருக்கு எதிர் அணியில் இருக்கிறார். அது மட்டுமல்ல,  ஜெயலலிதாவை வீழ்த்த அவருக்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் நிறுத்தப்பட்டவர், ஜெயலலிதாவுடன் சேர்ந்து தமிழில் அறிமுகமான நடிகை 'வெண்ணிற ஆடை' நிர்மலா. காலம் எல்லாவற்றையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி இருந்தது.

இத்தனை தடங்கல்களையும் தாண்டி ஜெயலலிதா வெற்றி பெற்றார். போடியநாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் சில காலம் இடைக்கால முதல்வராக பதவி வகித்த ஜானகியே, ஆண்டிப்பட்டி தொகுதியில் படுதோல்வி அடைந்தார். திருவையாற்றில் போட்டியிட்ட சிவாஜியும் மோசமான தோல்வியை அடைந்தார்.  தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின்  ஆட்சியைப் பிடித்தது.

மனதுக்கு நெருக்கமான தலைவர் இறந்து விட்டார். தலைவனாக மட்டும் அவரை ரசிகர்கள் பார்க்கவில்லை. தங்கள் கடவுளாகத் தான் பார்த்தார்கள். அத்தகைய தலைவன் இறந்த பின் எத்தகைய அனுதாப அலையை உண்டாக்கி இருக்க வேண்டும்...? அனுதாப அலையெல்லாம் உண்டாகத்தான் செய்தது. ஆனால், அந்த பாமர ரசிகன் தன் தலைவன் உண்டாக்கிய கட்சி இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்திப்பதை ரசிக்கவில்லை.  எல்லோரும் பிரிந்து நின்றதால்,  ஓட்டுகளும் சிதறியது... உதயசூரியன் வென்றது.

 சொல்லப்போனால், அப்போது திமுக வெற்றி பெற்றதற்கு, அதிமுக  ‘ஜா’ அணியாகவும், ‘ஜெ’ அணியாகவும் உடைந்திருந்ததும் ஒரு காரணம். ஆம், 12 ஆண்டுகளுக்கு பின் உதயசூரியன் ஆட்சியைப் பிடித்ததற்கு ஜெயலலிதாவும் ஒரு முக்கிய காரணம்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72036-jayalalithaa-helps-for-dmk-victory---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-21.art

Link to comment
Share on other sites

“ராஜினாமா செய்கிறேன் - சபாநாயகருக்கு ஜெயலலிதாவின் கடிதம்” : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 22

 

Jayalalithaa

Jayalalithaa%2022_15042.jpg

ழக்கமான திங்கட்கிழமை காலைப் பொழுது அது.  கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள், மிகவும்  உற்சாகமாக தமிழக தலைமைச் செயலகம் இயங்கும்  புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர். கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, பள்ளி மாணவர்கள் வந்திருப்பதை அறிந்து, அவர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்வாக உரையாடி, இனிப்பு வழங்கினார்.  முதல்வரைச் சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சிக்காரர்கள் என பலர் காத்துக் கொண்டிருக்கும் போது, அவர் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குழந்தைகளுடன் மகிழ்வாக சிறிது நேரத்தைச்  செலவிட்டார்.  இது முதல் நிகழ்வு அல்ல... அவர் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறார். குழந்தைகளுடன் பேச, அவர்களுடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவராக ஜெயலலிதா இருந்திருக்கிறார்.   

1980-களில் அவர் மதுரையில்  நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். கூட்டம் முடிந்ததும், மறுநாள்  மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் சில குழந்தை நல மையத்தை பார்வையிட்டு, அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறார். இது குறித்த நிகழ்வுகளை அவர் பின்னர் எழுதும் போது, “குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நிறைய இனிப்புகளை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன்.  ஒவ்வொரு மையத்திலும் இருந்த குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளை பரிமாறினேன்... சாக்லெட்டைக் கண்டதும் முகம் மலராத குழந்தை இவ்வுலகில் உண்டா...?”

உண்மைதான். சாக்லெட்டுகளைக் கண்டு குழந்தைகள் முகம் மலர்வார்கள்தான். அது  போலத்தான் அவரும்... குழந்தைகளைக் கண்டால், இவரும் முகம் மலர்வார்.  எப்போது யார் நம்மை கவிழ்ப்பார்கள்? யார் நமக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவார்கள் என்று மனதளவில் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் ஒருவர்...குழந்தைகளிடம் மட்டும்தானே எதையும் யோசிக்காமல்  மனதிலிருந்து பேச முடியும்...?

‘அதிகாரங்களை கைப்பற்றுதல்’

Jaya%2022_15514.jpg1989, தேர்தலில் ஜெயலலிதா அடைந்த வெற்றி அவரை மிகுந்த உற்சாகம் கொள்ள வைக்கிறது. ஆட்சியைப் பிடிக்கவில்லைதான்.. ஆனால், கட்சியில் தாம்தான் எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்று தொண்டர்களிடத்தில் உறுதிப்படுத்தியாகி விட்டது. இனி கட்சியை முழுவதும் தனதாக்க வேண்டும் 'இரட்டை இலை' சின்னத்தைத் திரும்பப் பெறவேண்டும். இதுவும் நிகழ்ந்து விட்டால், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து விடலாம் என்பதை உணர்கிறார். அவர் விரும்பியதும் அவரை விரும்பியதுபோல. ஆம், அவர் விரும்பியதுபோலவே, எல்லாம் நிகழ்ந்தது.  தேர்தலில் அடைந்த படுதோல்வி ஜானகியிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருகிறது. அவர் அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துவிட்டு, அவர் அணியையும், ஜெ. அணியுடன் இணைக்கிறார். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகிறார்.  இழந்த இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் பெறுகிறார்.

அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்த நிருபர்கள்,  “மோரில் விஷம் கலந்து  எம்.ஜி.ஆரை ஜானகிதான் கொன்றுவிட்டார் என்றீர்கள். இப்போது அவருடன் இணைந்து விட்டீர்களே..” என்கிறார்கள். ஜெயலலிதா கிஞ்சிற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. “எனக்கு அப்போது வந்த தகவலை வைத்து நான் அப்படிச் சொன்னேன்” என்று அந்த கேள்வியை சுலபமாக கடந்து செல்கிறார்.

அ.தி.மு.க-வின் அனைத்து அதிகாரங்களையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர் ஏற்படுத்தி வைத்திருந்த வாக்கு வங்கியை பாதுகாக்க 37 பேர் கொண்ட அரசியல் விவகாரக் குழுவை ஏற்படுத்தினார். அந்தக் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தன் கைக்குள் வைத்துக் கொண்டார். ஒரு ஆக்டோபஸாக அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா கட்டுப்படுத்துவது சில முன்னணி நிர்வாகிகளை கோபம் கொள்ளச் செய்தது.  கட்சிக்குள் முணுமுணுப்பு கேட்கத் துவங்கியது. ஆனால், ஜெயலலிதா அது எதையும் கண்டு கொள்ளவில்லை.

‘சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’

இப்போது தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, சட்டமன்றத்துக்குள் முதன்முதலாக எம்.எல்.ஏ -வாக நுழைகிறார், அதுவும் எதிர்க்கட்சித் தலைவர்.  பன்னிரண்டுJaya%2022%20ano_15065.jpg ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்துக்குள் முதல்வராக நுழைந்த கருணாநிதிக்கு, துவக்கத்திலேயே புரிந்து விட்டது. ஜெயலலிதாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று. ஜெயலிதாவை முடக்க நினைத்தாரோ என்னவோ... ஜெயலலிதா மீதும் அந்த சமயத்தில் அவருக்கு உற்ற நண்பராக இருந்த நடராஜன் (சசிகலா கணவர்) மீதும் வழக்கு தொடுக்கிறார்.  தேர்தலில் சீட்டு வழங்குவதாக கட்சிகாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், ஏமாற்றப்பட்டவர்கள் பணத்துக்காக முறையிட்ட போது, கொலை மிரட்டல் விட்டதாகவும் வழக்கு. போலீஸ் வழக்கை விசாரிக்கத் துவங்குகிறது.  

ஜெயலலிதா கிளர்ந்தெழுந்தார். இது புனையப்பட்ட வழக்கு என்றார். ஒரு கட்டத்தில் இது அடக்குமுறை, நான் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று, சபாநாயகருக்கு கடிதம் எழுதுகிறார்.  ஆனால் பின் என்ன நினைத்தாரோ, அந்த கடிதத்தை அவர்  சபாநாயகருக்கு அனுப்பவில்லை. நடராஜன் வசம் அந்த கடிதம் இருந்தது, ஆனால் போலீஸ்,  மேற்கூறிய வழக்குக்காக நடராஜன் வீட்டில் நடத்திய ரெய்டின்போது இந்த கடிதம் சிக்க, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அதனை கைப்பற்றி பத்திரிகைகளுக்கு வெளியிட்டுவிட்டது.

ஊடகங்களில் இந்த விஷயம் வெளியானவுடன், ஜெயலலிதா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இப்போது கருணாநிதி மட்டும் கோபமில்லை, நடராஜன் மீதும்தான். ஏன் நடராஜன் அந்த ராஜினாமா கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்...? தனக்கு எதிராக அவர் ஏதேனும் சதித்திட்டம் தீட்டுகிறாரா என ஜெயலலிதாவின் சந்தேகம் வலுக்கிறது.

இந்த புள்ளியில்தான் நடராஜனும் ஜெயலலிதாவும் பிரிகிறார்கள். நடராஜனை வேதா இல்லத்தைவிட்டு வெளியே அனுப்பினாலும், சசிகலாவை தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

ஜெயலலிதா, தனது கடிதத்தை திமுக அரசு  திருடி வெளியிட்டுவிட்டதாக குற்றம் சுமத்துகிறார். இதனையடுத்து திமுக அரசு மீது விமர்சனங்கள் எழுகின்றன.   உடனடியாக சபாநாயகர் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கிறார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இப்படியாக துவங்கிய உராய்வுகள், அடுத்த சில தினங்களிலேயே  மோசமான கட்டத்தைக் எட்டியது.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72140-im-going-to-resign-jaya-writes-speaker--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-22.art

Link to comment
Share on other sites

‘துணை முதல்வரை நியமியுங்கள்!’ - ஜெயலலிதா கோரிக்கை : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 23

Jayalalithaa%2023_09414.jpg

Jayalalithaa%20600_19166.jpg

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும், ஒரு கோஷம் கேட்டதுதானே... “முதல்வர் பூரண நலம் பெற்றுத் திரும்பும்வரை இடைக்கால முதல்வரையோ அல்லது துணை முதல்வரையோ நியமியுங்கள்” என்று. இந்தக் கோஷத்துக்காக நாஞ்சில் சம்பத் முதல் பொன்னையன் வரை கோபப்பட்டார்கள். பொன்னையன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், “எல்லா முடிவுகளும் ஜெயலலிதாவிடம் விவாதித்தே எடுக்கப்படுகின்றன. துணை முதல்வர் எதுவும் தேவையில்லை” என்றார். ஜெயலலிதா விவாதிக்கும் நிலையில் இருப்பது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெலுக்கே தெரியாத ரகசியம். சரி... விஷயத்துக்கு வருவோம். இந்தத் துணை முதல்வர் கோரிக்கை எதுவும் அ.தி.மு.க-வுக்குப் புதிதல்ல... எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கும் ராமாபுரம் தோட்டத்துக்குமாக அலைந்துகொண்டிருந்தபோது, இதே கோரிக்கையை ஜெயலலிதாவும் வைத்திருக்கிறார்.

‘துணை முதல்வரை நியமியுங்கள்!’

jaya_18_19286.jpgஆம். அது 1986-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர் உடல்நலம் சரியில்லாமல் அப்போலோ, அமெரிக்கா என்று அலைந்துகொண்டிருந்தார். அரசியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அந்தச் சமயத்தில்தான் அ.தி.மு.க-வில் ஜெயலலிதா கட்டம்கட்டி வைக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவை சந்திப்பதைத் தவிர்த்துவந்த காலம் அது. இதுபோன்ற சூழலில், ஜெயலலிதா அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். அதில், “எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். எனக்கு 42 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி என்னைத் துணை முதல்வராக நியமிக்க அழுத்தம் தாருங்கள்...” என்ற பொருளில் அந்தக் கடிதம் இருந்திருக்கிறது.

ராஜிவ் காந்தியோ, அதை தன் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து... எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்துவிடும்படி சொல்லிவிடுகிறார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அதிர்ந்தே போய்விட்டார். தன் ஆட்சிக்கும், தனக்கும் எதிராகச் செயல்பட ஜெயலலிதாவுக்கு இந்த அளவுக்குத் துணிவு வந்துவிட்டதா என்று நினைத்த அவர்... சில தினங்களில், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘அண்ணா’வில், “ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இனி அவருடன் கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது” என்ற செய்தியை வெளியிடுகிறார்.

நாளிதழைப் பார்த்த ஜெயலலிதா, தான் அனுப்பிய பூமராங் தன்னையே மோசமாகத் தாக்கிவிட்டதை உணர்கிறார். அடுத்து என்ன செய்யலாம்...? எம்.ஜி.ஆரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது... ராமாவர தோட்டத்து வீட்டுச் சுவரில் ஆணி அடிக்கப்படுகிறது. ஆம், இந்தத் துரோகச் செயல் நினைவிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை ஃப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுகிறார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சம்பவம் குறித்து இன்னொரு விதமாகவும் சொல்கிறார்கள், ‘‘அந்தக் கடிதத்தையே அவர் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் எழுதினார்’’ என்று. அதாவது, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது கொல்லைப்புறம் வழியாக, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது’’ என்கிறார் அல்லவா ஸ்டாலின். அதுபோல அப்போது காங்கிரஸ், எம்.ஜி.ஆரின் உடல்நலக் கோளாறைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது என்கிறார்கள். அதாவது, ஜெயலலிதாவைத் தூண்டிவிட்டு, அவரை துணை முதல்வராக்கி, பின் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வரவிரும்பியது. ராஜிவ் காந்தியும் இதற்காக அழுத்தம் தந்தார்  என்கிறார்கள். இதுகுறித்து 1988-ம் ஆண்டு அட்டர்சந்த் எழுதி வெளிவந்த, ‘M.G.Ramachandran : My Blood Brother’ என்ற புத்தகமும் விரிவாகப் பேசுகிறது.

ஜெயலலிதா அந்தக் கடிதத்தை, காங்கிரஸ் அழுத்தம் தந்து எழுதினாரா... இல்லை, சுயமாகவே எழுதினாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ..? ‘துணை முதல்வரை நியமியுங்கள்’ என்ற கோஷம் தமிழக அரசியலுக்கு புதிதல்ல... அதுவும் குறிப்பாக அ.தி.மு.க-வுக்கு!

‘களேபரமான சட்டமன்றம்!’

Jayalalithaa%20Assembly_19525.jpg

ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக, ஜெ-வுக்கும், தி.மு.க-வுக்கும் ஏற்பட்ட உரசல்களைப் பார்த்தோம்தானே... அது, அடுத்தகட்டத்தை எட்டியது. 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி, நிதித்துறையைத் தன்னிடம் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி பட்ஜெட் உரையைப் படிப்பதற்காக எழுந்தார். அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பே... ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து, ‘‘ஜெயலலிதா விஷயத்தில், தமிழக காவல் துறை ஜனநாயகமற்ற முறையில் செயல்படுகிறது. இது, சட்டமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறுவதாகும். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் கருணாநிதிதான் இதற்குக் காரணம். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும்’’ என்கிறார். ஜெயலலிதாவும் உடனே எழுந்து, ‘‘என் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. முதல்வர், தன் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார். அரசு, தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும்’’ என்று சட்டமன்றத்தில் கோஷமிடத் தொடங்கினார்.

சபாநாயகர், “இன்று பட்ஜெட் விவாதம் இருக்கிறது. இதுகுறித்து இன்று விவாதிக்க வேண்டிய தேவையில்லை” என்கிறார். சட்டமன்றத்தில் உஷ்ணம் பாய்கிறது. அ.தி.மு.க உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் மையத்துக்கு வந்து கோஷம் போடத் தொடங்குகிறார்கள். ஜெயலலிதா, “கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யக் கூடாது” என்கிறார். தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாகக் கத்தத் தொடங்குகிறார்கள். ஓர் அ.தி.மு.க உறுப்பினர் கருணாநிதி மீது மோத, அவரின் மூக்குக் கண்ணாடி கீழே விழுகிறது. உடனடியாக தி.மு.க உறுப்பினர்கள் கருணாநிதியைச் சூழ்ந்து காக்கிறார்கள்.  இருபக்கமிருந்தும் மைக்குகளை, சேர்களைத் தூக்கி எறிவது என சண்டை தொடங்குகிறது. ஓர் அ.தி.மு.க உறுப்பினர் கருணாநிதி கையில் வைத்திருந்த பட்ஜெட் உரையைக் கைப்பற்றிக் கிழிக்கிறார். தி.மு.க உறுப்பினர் புத்தகங்களை ஜெயலலிதா மீது எறிகிறார். சட்டமன்றம், ‘சண்டை’மன்றம் ஆனது. சபாநாயகர், அவையைத் தள்ளிவைக்கிறார்.

சட்டமன்றத்துக்கு வெளியே ஜெயலலிதா கண்ணீரும் கம்பலையுமாக வெளியே வருகிறார். ‘‘தி.மு.க உறுப்பினர்கள் என் புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றம் எப்போது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ... அப்போதுதான் சட்டமன்றத்துக்குள் வருவேன்” என்கிறார் கண்ணீருடன்.

அடுத்தநாள் எல்லா நாளிதழ்களிலும், இதுதான் தலைப்புச் செய்தியாகிறது. ஜெயலிதாவை தன் அண்ணியாகப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகன், வெகுண்டெழுகிறான். பெண்கள், இதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பார்க்கிறார்கள். தமிழகமெங்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு பெருகத் தொடங்குகிறது.

முதலில் கட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, அடுத்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கிறார். முன்பே கருணாநிதி, ‘ஜெயலலிதாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்று கணித்திருந்தார். இப்போது அவருக்கு, தன் கணிப்பு எவ்வளவு சரி என்று புரியத் தொடங்குகிறது.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72298-appoint-deputy-chief-minister--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-23.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.