Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சலி – சிறுகதை


sathiri

Recommended Posts

அஞ்சலி – சிறுகதை

வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டுப் பத்திரிகை போடுபவன்  எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன்.  நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை  சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “.  “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”.  .”காணவில்லை.  அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச் செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அனைத்துக் காவல் நிலையங்களும்   தீயணைப்பு நிலையங்களும்,  கடலோரக் காவல் நிலைகளும்  உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவியுங்கள்’.என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம்.

உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே…… தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின்  இலக்கத்தைத் தேடினேன் .  ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால்  நோக்கியாவிலிருந்து  ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும் சிறியண்ணாவின்  கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன்.

பிட்சா போடுகிறவன்  ஒரு நாள் லீவு வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும்  வேலைக்கு வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும்  லீவு தரமுடியாது என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை.  அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும்    நான்தான் கவனிக்க வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி விட்டேன்.

*******************************

காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல் வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று  அவனை லேசாய் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது .

‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத் தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான்.  லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து  அதற்குப் பணமும்   கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர்  பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான  குய்னேசில் நடந்தது. வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில் நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில்   இரவு வீடு திரும்பியபோது  அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வைத்துவிட்டு   “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ் தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது.  காதல் மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில் தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான்.

*******************************

நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும் ஒருவர்.  சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு திருமணமாகியிருந்தது,  கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும் திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில்  கதைத்துப் பேசவும் அவரது கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார். கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு வாங்குவதுண்டு.  அவர்களுக்கு அஞ்சலி  பிறந்த பின்னர்  அவர் நகர மத்தியில் பெரிய கபே பார்  ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும் வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம் கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன் பின்னர்  கடைதான் அவர்களுக்கு வீடு .  அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள் செல்லப் பிள்ளையானாள்.

Angel bar நகர மத்தியில் அமைந்திருந்ததால்  அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை,   அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள்.    லீவு நாட்களில் சிறி  அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள்.    ஒரே செல்ல மகள் என்பதால் அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும் மாறிவிட்டிருந்தாள்.   நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம்  “டேய் மாமா  டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப் பிடுங்கிவிடுவாள்.  “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன்.  பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து விட்டிருந்தது.

“டேய்  புகையிது புகையிது”  என்று பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன்.  ஓம குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த பிட்சா.  எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து  “என்ன யோசனை”?  என்றான்.

நான்    “இல்லை அஞ்சலி” என்று   சொல்லவும்

“ஓ …அஞ்சலினா ஜோலியா”  ஒழுங்கா வேலையைப் பார் என்று முறைத்து விட்டுப்போனான்.  எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான   மாவை உருட்ட ஆரம்பித்தேன்….

*******************************

மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது    அவனுக்கு   யாரையும் தெரியாது.  மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது.  கிராமசபை உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது.  வேலை வாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு   உணவு விடுதி ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது.

ஆனால் இரவு நேரத்தனிமையையும்   மகனின் நினைவுகளையும்  போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.  மனைவி லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து  குடித்து முடித்த பியர் கேனை ஆத்திரம்   தீர நசுக்கி எறிவான்.  எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும்  மறக்க நினைத்த அத்தனையும் மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத்  தலை சுற்றிச்  சுய நினைவிழந்துபோய் விடுவான்.

நினைவுகளை கொல்வதற்காக அடுத்த  தெரிவாக கஞ்சா  என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில் நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு  இப்போதெல்லாம் வேலை முடிந்ததும் இரவில்  இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான்.

அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து  இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து பொத்திப் பிடித்து  கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில் கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி ஆழமாக உள்ளே இழுத்தான்.   பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம் அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது  கொஞ்சம் சிறியதாக  உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு குனிந்து பார்த்தான்.  தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது .  அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை.    அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது.  “என்னைப் போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை அணைத்துத் தூக்கியவன்   உனக்கு என்ன பெயர் வைக்கலாம்  என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின் முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு   எல்லாமே லொக்காதான் .

*******************************

அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம்  கிடைத்துமிருந்தது.  அவரது கடையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது.  என்னைப் போலவே அவர்களும் புதினம் அறிய வந்திருக்கலாம்.  யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். சிறிய   வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று  “ஏதாவது அருந்துகிறீர்களா” என்றவளிடம்  ஒரு கோப்பிக்குச்  சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன்.  சிறி அண்ணா பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை.   என்னைக் கண்டதும் வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார்.   அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை நோக்கியே திரும்பின.

“அண்ணை என்ன இது குழந்தை மாதிரி”    என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் .   என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர்.

“தம்பி நீ  மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை  அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும்  நம்பிக்கையாலையும்   உன்னைக்   கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “.

”சரியண்ணை  நடந்தது நடந்து போச்சு,  விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்”

”அவங்களும்  அந்தப் பெடியன் ரெமியையும் அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” .

”கடைசிவரை அந்த ரெமியோடை தான்  சினேகிதமா …….?”

”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப் பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும் களவாய்ப் பத்துவாள்.  எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.”

”அப்போ என்னதான் நடந்தது .?”

”முந்தா நாள்  காலமை ஒரு சினேகிதியைப் பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை.   இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”.

“பேப்பரிலை இளம் தாய் எண்டு போட்டிருக்கே”  என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப் போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே தொட்டிலில்  சாயலில் அஞ்சலியைப் போலவே  ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது .

இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை   ஏழு மாசம் .

பணிப்பெண் கோப்பியை நீட்டினாள்,  அதனை அவசரமாக விழுங்கியபடி…  “எங்கை சுமதியக்கா”?

”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.”

“சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது”  என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து

“அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப் பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி”  என்றவரிடம் விடை பெறும்போது  வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும் பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி.

“தம்பி   சில நேரங்களிலை  உங்களிட்டை    5 … 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன்,  என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின.

“போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை”  என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து  முதல் நாள் பேப்பரில் அஞ்சலியின்  “காணவில்லை” என்கிற அறிவித்தலை வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய பேப்பரை எடுத்துப் புரட்டினேன்.  அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா  போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன்.  போன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சரி இன்றைக்கும்   நான்தான் பிட்சா போடவேண்டும்.

*******************************

மதியத்துக்கு  தேவையான உணவு, தண்ணீர்,  நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை பார்ப்பதுமாக இருந்தது.  அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான்.

வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ் துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது,  வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல்  மூத்திரம் பெய்து விட்டு வந்தது.

யாருமற்ற காடு, காற்று மரங்களில் மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை. பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான்.  மெதுவாகவே நடந்து சென்ற லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து   அவனது காலடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது.  அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு மீண்டும் பந்தை எறிந்தான்.  இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது.

“களைத்துப்போய் விட்டாயா…. சரி”  என்றபடி அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து  வைன் போத்தலை எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை எடுத்து விட்டுப் பார்த்தான்.  பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக் கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது .

*******************************

நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து  வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள்.  சில காலங்களின் பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள்  “மாமா இவன்தான் ரெமி  என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள்.

வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய போது  அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி   பதில் வணக்கம் சொன்ன விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின்  தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை.  வேண்டா வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன்.

சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன்.  அது மட்டுமல்ல இரயில் நிலையத்தின் பின்னால் உள்ள   கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு அமர்ந்திருப்பாள்.  “இந்தக் காலத்து பிள்ளைகள்”  என்கிற ஒரு பெரு மூச்சோடு   கார் ஒலிப்பானை ஒலிக்காமலும்   காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு .

அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு அவதானித்துக்கொண்டிருந்தேன்.   திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து தள்ளிவிட  நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி நின்றிருந்தான்.  கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச் செல்ல  அனைவரும் ஓடி விட்டார்கள்.

தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத் தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன்.    கண்கள் சிவந்து, வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும்   “ஒண்டுமில்லை” என்றபடி சீற்றில் சாய்ந்து கொண்டாள்.   ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

“எங்கை மாமா போறாய்? ”

”உங்கடை கடைக்கு”

”எதுக்கு? ”

”உன்ரை  அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்”

”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ”

“பேசாமல்   வா”

”காசு தர முடியுமா முடியாதா ?”

“முடியாது ”  என்றதும் அவள்  ஆசனப்பட்டியை எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே,  நான்  சட்டென்று பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை  ஒலிக்கத் தொடங்கின. ஒருவன்  “ஏய் …பைத்தியக்காரா”  என்று சத்தமாகவே கத்தினான்.

எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள்.   “எடியே நில்லடி ” என்று நான்  கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப் போய்விட்டாள்.   எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு  இரண்டு அடி  போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும்.    பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின்  சத்தம் எதுவும் செய்ய முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய் அவரிடம் விபரத்தை சொன்னதும்  அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார்.  கோபத்தோடு எனக்கு அவமானமும் சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன்.   அதுதான் நான் அவரோடும் அஞ்சலியோடும் பேசிய   இறுதி நாட்கள்.

*******************************

அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கொள்ள, அதிலிருந்து இறங்கியவன்  காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான தடித்த  பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான்.     காரிலிருந்து ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா”  என்று அழைத்தபடியே  பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த அஞ்சலியிடம் நீட்டினான்.

அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம் அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல்  அமர்ந்துகொள்ள,  அவளருகே அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான்.   இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி யிருந்தனர்.    போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன் இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது.

சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக்   கொக்கெயின் பொட்டலத்தையும்  எடுத்தவன் சினிமா  டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து  கொட்டி சிகரெட் பெட்டியில் மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை  எடுத்து  “இந்தா அஞ்சலி” என்று நீட்டினான்.

”இல்லையடா  எனக்கு வேண்டாம்”

”ஏன் ?”

”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்”

”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை”

”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்”

“ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய்  இதெல்லாம் ஒரு காரணமா?”

”வேண்டாம்  விட்டிடேன்”

“சரி எனக்கும் வேண்டாம்”  என்றபடி பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப் போத்தலை எடுத்துச் சட்டென்று   தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி  உடைந்த போத்தலால் அதைக் கிழித்து   இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய்  எதுக்கடா இப்பிடி” என்றாள்.

“அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ? எனக்கு நீ வேணும்”  என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத் துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த  தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு நிமிந்தவளின் கண்கள் சிவந்து,  கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன.

அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன் சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண் மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்”   என்று இழுத்து விட்டிருந்தான்.  அவள் கைகளை ஓங்கி  நிலத்தில் அடித்த சத்தத்தில்  மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று  அலறிப் பறந்து போனது.  இறுதியாய் உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன்  முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது.

எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன் கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை   ஒட்டிக்கொண்டு இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல் பக்குவமாக  அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன் கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் .

*******************************

வைனைக் குடித்துமுடித்துவிட்டு  சிறிய சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி குட்டித்தூக்கம்  போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக் கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான்.  மாலை மூன்று மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம் நிற்கவேண்டும்.  எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு முன்னர் லொக்கவோடு  செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள் வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது   அதே வேகத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தது.

“இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான் அவசரமோ ” என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான்.  லொக்கா அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது.

கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள் நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து மருந்தை இழுத்தெடுத்தவர்  இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில் அழுத்தியபடி மருந்தை செலுத்தினார்.  மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல் வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல் ஒற்றையும் வாங்கிச் சென்றவன்  லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில் தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன் இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு   இரண்டாவது   கிளாஸில்  விஸ்கியை நிரப்பத் தொடங்கியிருந்தான் .

*******************************

யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள்  வைத்திருக்கும் சிறிய கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான்.  இரத்தம் உறைந்துபோயிருந்த  ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த தால்  சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது.

ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து  கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு  மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன்    “என்னடி முறைக்கிறாய் ”  என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித் தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை   அரிந்து முடித்து இயந்திர வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான்.  ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுவிட்டு வெட்டும்போது    சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில் போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு  தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப்  பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி விழுந்த  நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் .

*******************************

அன்றும் வழமைபோல பத்திரிகையைத் தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப் போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான்.   “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி  கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”.. என்றதுக்கு  கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன்  “லொக்காவுக்கு வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது.  அதுக்கு வயசாகி விட்டதால்  கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர் சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்து கண்கள் கலங்கின.

“சரி சரி கவலைப் படாதே”  என்று அவனது தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும்   “ஏய், இந்தப் பெண், அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான்.

“ச்சே  என்ன இவன்…. மணிரத்தினம் படம் எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி “தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில் இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின் பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது.

”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர் இந்தக்  காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாகப் போய் விட்டான்.

ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.  மறுநாள் பத்திரிகையில்  “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன்  தொடர்பாக ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன்  விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான்.  அவன் கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப் பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.   உடலின் சில பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர்  கண்டெடுத்தனர்.  அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான்.

அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது”

’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப் பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின் கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான்.  எனக்கு வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன்.

அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின் செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்”  என்றிருந்தது.  நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய மலர்க்கொத்து  ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர்.

பல மெழுகுவர்த்திகள் இன்னமும் எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது  “ச்சே  சிறியண்ணர் இவளுக்கு அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன்  “காதலே ஏன்  இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய கடதாசியில்  ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது.  அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் .

ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய எனக்கு  “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது.  அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி வீதிக்கு இறக்கியபோது தான்  நான் போட்ட சில்லறைகளை ஒருவன் பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.  கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு  “ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான்.  அதற்கிடையில் பின்னால் ஒரு வண்டிக்காரன் ஒலிப்பனை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன்.  ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம்.  நெற்றியில் விரல்களை அழுத்தி யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.

 

 

Link to comment
Share on other sites

20 hours ago, கலைஞன் said:

இப்படி ஓர் கதை எழுதியதற்கு ஏதும் விஷேட காரணம் உண்டோ அல்லது சும்மா கற்பனை கிறுக்கலோ சாத்திரி?

நான் வசிக்கும் நகரத்தில் நடந்த சம்பவம் என்பதால் அதனை சில மாற்றங்களோடு எழுதியுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலையை செய்தவன் மனநிலை சரியில்லை என்று சொல்லி தப்பி வந்து விட்டானா?

Link to comment
Share on other sites

On 05/10/2016 at 9:35 PM, ரதி said:

கொலையை செய்தவன் மனநிலை சரியில்லை என்று சொல்லி தப்பி வந்து விட்டானா?

அப்படியும் இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கும் மீள்வரவுக்கும் நன்றி சாத்திரியாரே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமுதாயம் புலம்பெயர் தேசத்தில் அழிந்துகொண்டிருக்கும்  நிலைமையை விளக்கும் சம்பவத்தை கதையாகத் தந்த சாத்திரியாருக்குநன்றி.
கதையை எழுதிய விதம் தொடர்ந்து வாசிக்க வைத்தது.
உங்கள் ஆக்கங்களை மட்டும் தந்துவிட்டுச் செல்லாமல்
கருத்துக்களத்திலும் இடைக்கிடையாவது உங்கள் கருத்துக்களை பதியுங்கள் சாத்திரியார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் சாத்திரியின் கதையை வாசித்தது...அதுவும் 'யாழில்' மிக்க மகிழ்ச்சி!

தொடர்ந்தும் இணைந்திருங்கள் சாத்திரி!

உங்கள் எழுத்துக்களில் ஒரு 'தனித்துவம்' எப்போதும் இருக்கும்!

பரந்த நிலப்பரப்பில்...துருத்திக் கொண்டிருக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல அது தன்னை எப்பவும் அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும்!

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

கதைக்கும் மீள்வரவுக்கும் நன்றி சாத்திரியாரே....

நன்றி கு ..சா

16 minutes ago, வாத்தியார் said:

எமது சமுதாயம் புலம்பெயர் தேசத்தில் அழிந்துகொண்டிருக்கும்  நிலைமையை விளக்கும் சம்பவத்தை கதையாகத் தந்த சாத்திரியாருக்குநன்றி.
கதையை எழுதிய விதம் தொடர்ந்து வாசிக்க வைத்தது.
உங்கள் ஆக்கங்களை மட்டும் தந்துவிட்டுச் செல்லாமல்
கருத்துக்களத்திலும் இடைக்கிடையாவது உங்கள் கருத்துக்களை பதியுங்கள் சாத்திரியார்.

 

நன்றி வாத்தியார் ..தொடர்ந்தும் யாழில் இணைந்திருப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சாத்து சிறுகதை என்று தொடங்கி பெரிசாக போகிறதே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை நான் வேறொரு தளத்தில் ஏற்கனவே வாசித்தேன்.இங்கு இணைத்தமைக்கும் நன்றி சாத்து அண்ணே:grin:

Link to comment
Share on other sites

7 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் சாத்து சிறுகதை என்று தொடங்கி பெரிசாக போகிறதே.

 

உண்மையில் இது பெருங்கதை தான் ..

 

Link to comment
Share on other sites

22 hours ago, நந்தன் said:

இக்கதையை நான் வேறொரு தளத்தில் ஏற்கனவே வாசித்தேன்.இங்கு இணைத்தமைக்கும் நன்றி சாத்து அண்ணே:grin:

நடுவுக்காக எழுதினது ...கரையிலையும் தூக்கிப் போட்டிருக்கிறன்

Link to comment
Share on other sites

On 07/10/2016 at 0:01 AM, புங்கையூரன் said:

நீண்ட நாட்களின் பின்னர் சாத்திரியின் கதையை வாசித்தது...அதுவும் 'யாழில்' மிக்க மகிழ்ச்சி!

தொடர்ந்தும் இணைந்திருங்கள் சாத்திரி!

உங்கள் எழுத்துக்களில் ஒரு 'தனித்துவம்' எப்போதும் இருக்கும்!

பரந்த நிலப்பரப்பில்...துருத்திக் கொண்டிருக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல அது தன்னை எப்பவும் அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும்!

மிக்க நன்றி .நீண்ட நாளின் பின்னர் மீண்டும் யாழில் சந்தித்தது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்தேன்! சாத்திரியார் எழுதும் பாணியை மாத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். முன்னைய கதைகளின் வடிவமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, sathiri said:

நடுவுக்காக எழுதினது ...கரையிலையும் தூக்கிப் போட்டிருக்கிறன்

குருவே நடுவா கரையா ஒசத்தி .....tw_tounge_wink:கதையை இணைத்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவம் போல்  இருக்கிறது சாத்திரியாரை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி யாழ் களத்தில்  

பெண் பிள்ளையின் சுதந்திரம் அவர்கள் வாழ்வின் எதிரே தெரியும் கேள்வி குறியோடே கடந்து போகிறது 

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

நானும் வாசித்தேன்! சாத்திரியார் எழுதும் பாணியை மாத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். முன்னைய கதைகளின் வடிவமாக இருந்தது.

நன்றி இனி வருங்காலங்களில் கவனமெடுக்கிறேன்

Link to comment
Share on other sites

19 hours ago, putthan said:

குருவே நடுவா கரையா ஒசத்தி .....tw_tounge_wink:கதையை இணைத்தமைக்கு நன்றிகள்

நடு ,கரை இரண்டுமே எனக்கு ஒன்றுதான் ..வரவுக்கு நன்றி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார்...! இப்போதுதான் சாவகாசமாய் உங்களின் கதையை வாசித்தேன் .... மிகவும் நன்றாக இருந்தது . ஒருத்தன் எவ்வளவுதான் தடயங்களைத் தவிர்த்து குற்றம் புரிந்த போதிலும் எங்காவது ஒரு தடயம் குறுக்கீடு செய்வதை தடுக்க முடிவதில்லை...! இங்கு தற்செயலாய் எடுக்கப் பட்ட ஒரு செல்ஃபீ  அவனை செல்லுக்குள் போட்டு விட்டது....!

நிறைய எழுதுங்கள் யாழிலும் ....!  tw_blush: 

Link to comment
Share on other sites

On 09/10/2016 at 7:26 AM, முனிவர் ஜீ said:

நடந்த சம்பவம் போல்  இருக்கிறது சாத்திரியாரை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி யாழ் களத்தில்  

பெண் பிள்ளையின் சுதந்திரம் அவர்கள் வாழ்வின் எதிரே தெரியும் கேள்வி குறியோடே கடந்து போகிறது 

நான் வசிக்கும் நகரத்தில் நடந்த சம்பவத்தை கதையாக்கினேன் ..உங்கள் கருத்துக்கு நன்றி

On 11/10/2016 at 8:59 PM, suvy said:

வணக்கம் சாத்திரியார்...! இப்போதுதான் சாவகாசமாய் உங்களின் கதையை வாசித்தேன் .... மிகவும் நன்றாக இருந்தது . ஒருத்தன் எவ்வளவுதான் தடயங்களைத் தவிர்த்து குற்றம் புரிந்த போதிலும் எங்காவது ஒரு தடயம் குறுக்கீடு செய்வதை தடுக்க முடிவதில்லை...! இங்கு தற்செயலாய் எடுக்கப் பட்ட ஒரு செல்ஃபீ  அவனை செல்லுக்குள் போட்டு விட்டது....!

நிறைய எழுதுங்கள் யாழிலும் ....!  tw_blush: 

மிக்க நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரை..... மீண்டும்.யாழ் களத்தில் கண்டது சந்தோசம். :)
ஆனால்.... அவரின், சிறு கதையை....  வாசிக்க, பொறுமையும், நேரமும் இல்லை என்பதனை, 
கவலையுடன்... அறியத்  தருகின்றேன். 

உங்களுடைய... கதையை, நான் வாசிக்காததால், குறை நினைக்க மாட்டீகள்  என நம்புகின்றேன்...  சாத்ஸ். :grin:

Link to comment
Share on other sites

அமைதியாகப் பேணப்படவேண்டிய உலக வாழ்க்கையை மனிதர்கள் எப்படி அவலமாக்கி உள்ளனர் என்பதற்கு உதாரணமான ஒருகதை.

கதையின் பந்திகளுக்கு உரிய பாத்திரங்களை வாசகர்களைக்கொண்டே தேடிக்கொள்ள வைத்துள்ள எழுத்துநடை,

கதை நீண்டதாகத் தெரிவதால் வாசிப்பதற்கான நேரம் அமைவது அவசரமான உலகத்தில் கடினமாக உள்ளது. இருந்தும் வாசித்தபின்பு ஒரு நல்ல கதை வாசித்த அனுபவம். சாத்திரி அவர்களுக்கு ஒரு பச்சை. :D:             

Link to comment
Share on other sites

3 hours ago, Paanch said:

அமைதியாகப் பேணப்படவேண்டிய உலக வாழ்க்கையை மனிதர்கள் எப்படி அவலமாக்கி உள்ளனர் என்பதற்கு உதாரணமான ஒருகதை.

 

கதையின் பந்திகளுக்கு உரிய பாத்திரங்களை வாசகர்களைக்கொண்டே தேடிக்கொள்ள வைத்துள்ள எழுத்துநடை,

 

கதை நீண்டதாகத் தெரிவதால் வாசிப்பதற்கான நேரம் அமைவது அவசரமான உலகத்தில் கடினமாக உள்ளது. இருந்தும் வாசித்தபின்பு ஒரு நல்ல கதை வாசித்த அனுபவம். சாத்திரி அவர்களுக்கு ஒரு பச்சை. :D:             

 

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
    • புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
    • பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.   பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.   படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.   பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
    • இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ?  😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?  😏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.