Jump to content

இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு

சென்னை, ஜன.25-: இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கும், மொழிக்கும் சேவை செய்வேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

முத்தமிழ்ப் பேரவை 31ஆம் ஆண்டு இசை விழா சென்னையில் நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில், நான் நீண்ட நாளாக நிறைவேற்றாமல் இருந்த ஒரு நிகழ்ச்சி இனஞறைக்கு நிறைவேறியிருக்கின்றது. அதுதான் நம்முடைய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு ``இயல் செல்வம்'' விருது வழங்கப்பட்டிருப்பதாகும்.

தமிழகத்திலே ஆன்மீகத்திற்கு ஒரு புதுப் பொலிவை, ஒரு தனி வலுவை, ஒரு தனி கீர்த்தியை உருவாக்கிக் காட்டியவர் பெரிய குன்றக்குடி அடிகளார். அவரிடம் நான் கொண்ட அன்பு, அவர் என்னிடம் கொண்ட அன்பு சிறிதும் மாறாமல் பழகி வந்தோம். அவ்வழியிலேயே இங்கு வந்துள்ள நம்முடைய இளம் அடிகளார் எப்படி இருப்பாரோ என்று நாங்கள் கருதிய நேரத்தில், அவர் தன்னுடைய வாழ்க்கையின் மூலம், தன்னுடைய கருத்துக்களை எடுத்துத் தருகின்ற செயலின் மூலம் நானும் அப்படித் தான் இருக்கிறேன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் இங்கே வாழ்த்தும்போது சொன்னார் - நான் நீண்ட காலம் இருந்து நாட்டிற்கு, மொழிக்கு என்னென்ன நன்மைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்றார். நீங்கள் எல்லாம் இருந்தால், இன்னும்கூட ஒரு பத்து, இருபதாண்டு காலம் ஆயுள் எனக்கு நீண்டு அவைகளை எல்லாம் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படும். இந்த நம்பிகஞகை எனக்கு இருக்கின்றது.

எத்தனையோ பேர் நான் நூறாண்டு காலம் வாழப் போகிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் தங்களை நம்பிச் சொன்னார்கள். நான் உங்களை நம்பிச் சொல்கிறேன். எனவே, இதில் எந்தவிதமான தவறும் இருக்க முடியாது.

பொள்ளாச்சி மகாலிங்கம் செல்வச் சீமான் மாத்திரமல்ல, அருட்செல்வர், வடலூர் வள்ளலாருடைய புகழைப் பரப்புகின்றவர். இவரைப் போலவே சி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் கட்சியிலே மாத்திரமல்ல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலே பெரும் பொறுப்புகளிலே இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு உற்ற தொண்டராக, தோழராக, துணைவராக இருந்தவர்.

அப்படிப்பட்ட சி.சுப்பிரமணியம் தமிழக சட்டப்பேரவையிலே நிதி அமைச்சராக இருந்த போது, 1957ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவும், நானும், பேராசிரியர் அன்பழகனும் சட்டமன்றத்திற்குள் தழைந்தோம். அன்றைக்கு தழைந்த நாங்கள், இன்றைக்கும் அங்கே தான் இருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் என்ற கணக்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் கணக்கிலே கொஞ்சம் ‘வீக்’.

‘தமிழாயஞந்த தமிழன் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராய் இருத்தல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே, அந்த வரிகளை மறந்துவிடவில்லை, நாங்களும் மறந்துவிடவில்லை, தேர்தல் நேரத்தில் வாக்களிக்கும் தமிழர்களும் மறந்துவிடாத காரணத்தினால் தமிழாயஞந்த தமிழன் இந்தத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஒரு விழாவிலே இயல் செல்வம், ராஜ ரத்னா, இசைச் செல்வம், நாட்டியச் செல்வம், தவில் செல்வம், மிருதங்க செலஞவம் போன்ற இந்தச் செல்வங்களை மாத்திரமல்ல, என்றைக்கும் வற்றாத செல்வத்தை, பகுத்தறிவு செல்வத்தை, தன்மான செல்வத்தை தமிழர்களுக்கு அளிக்க இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க முடியும். அப்படி துணையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு முறை இந்த ஆட்சி ஓட்டை விழுந்த ஆடஞசி என்று தி.மு.க. ஆட்சியைப் பற்றி சொன்னார்கள். அப்போது அண்ணா திருவாரூர் கூட்டத்தில் சொன்னார். திருவாரூர் தான் சங்கீத விஷயங்களை உதாரணமாகச் சொல்வதற்கேற்ற ஊர். ஏனென்றால், எந்த ஒரு வித்வானும் திருவாரூரில் வந்து நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்றால்தான், அவன் தமிழ்நாட்டிலே புகழ் பெற முடியும் எனஞற அளவிற்கு திருவாரூர் அத்தகைய ரசிகத் தன்மை வாயஞந்த ஊர்.

அங்கே தான் அண்ணா சொன்னார், ``ஆமாம், இது ஓட்டைகள் நிறைந்த ஆட்சி தான் என்று சொல்லிவிட்டு, ஆனால், இந்த ஓட்டைகள் எல்லாம் ஏனோதானோ என்று விழுந்த ஓட்டைகள் அல்ல, நாதஸ்வரத்திலே இருக்கின்ற ஓட்டைகளைப் போன்றது, புல்லாங்குழலிலே இருக்கின்ற ஓட்டைகளைப் போன்றது, எந்தத் துவாரத்தை அடைத்தால் எனஞன நாதம் வரும் என்று எனக்கு தெரியும். ஆகவே, எத்தனை ஓட்டைகள் இருந்தாலுமஞ இருக்கட்டும், அந்த ஓட்டைகளை அடைக்க எனக்கு தெரியும்'' என்று அண்ணா சொன்னார்.

அண்ணாவின் தம்பிகளாகிய நாங்கள் இன்றைக்கு இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, நடத்த வேண்டிய வேட்டைகளையும் நடத்தி வெற்றிகரமாக இயல், இசை, நாடகம் என்கிற இந்த முத்தமிழை வளர்ப்போம், வாழ்த்துவோம் என்று இங்கே வீற்றிருக்கினஞற கலைஞர்கள் சார்பாக நான் உறுதி எடுத்துக் கொண்டு சூளுரைத்து இந்தப் பேரவை மேலும் பல ஆணஞடு விழாக்களை கொண்டாடுகின்ற அளவிற்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ......................இன்னும் 20 வது ஆண்டுகள் வாயை திறக்கவேண்டியது தான்

Link to comment
Share on other sites

கருனாநியின் வாழ்க்கையில் அரசியலுடன் சுயமரியாதைக் கழகம் என்ற ஒன்றை கடைப்பிடிப்பதன் காரணமாக அவரது நெஞ்சுருதி, தன்னம்பிக்கை <_< இவற்றின் காரணமாக 90 வயதிலும் பய உணர்வென்பதே தெரியாது முடியும் என்ற நம்பிக்கையில் அவரால் சாதிக்கமுடியும். அவர் சொன்ன ஒரு வரிகள் அவரின் அனுபவ சேகரிப்பு. தமிழர் ஒற்றுமையாக ஒரு விசயத்தை செய்தாலும் கன காலம் பிரச்சனைப்படாம இருக்க மாட்டீனம் என்று சொல்கிறார். அப்படி என்றால் எம் தலைவர் கடந்த 30 வருடங்களாக போராளிகளை அணைத்து இப்புனித போராட்டத்தை எடுத்துச்செல்லிறார் என்றால் அவரும் அவரது மன உறுதியும் 100 அல்ல 1000 வருடங்களுக்கு நின்றுபிடிக்கும்.

கருணாநிதியே சொல்கிறார்...

தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். :blink:

Link to comment
Share on other sites

எல்லாம் சாய்பாபாவின் ஆசிதான்.

இனித்தான் இவருக்கு நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமென்று ஆசை வந்திருக்கு.

Link to comment
Share on other sites

ஆ, என்ன 20 வருடமா? 2 ஐ தான் 20 என்று பிழையாகச் சொன்னாரோ

பாவம் தமிழ் மொழியும், தமிழ்நாட்டு மக்களும் !!

படா பேஜாராப் போச்சய்யா இவனுங்களோட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.