Jump to content

பேராதனைப் பல்கலைக்கழகம் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடையங்கள்..


Recommended Posts

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக......

அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் ஹந்தானை மலைச்சாரலில் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது.

இயற்கையிலேயே அழகிய சூழலையும், 18 - 30 செல்சியஸ் வரையிலான இதமான குளிருடன் கூடிய வெப்ப நிலையிலும், மகவலி ஆற்றை ஊடருத்துச் செல்லும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், 1942 இல் university of ceylon என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் திறந்து வைக்கும் நிகழ்விற்கு இஙகிலாந்து இளவரசி இலங்கை வந்ததும் இதன் ஒரு சிரபபம்சமே. இது இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்டதும், மிகப் பெரியதுமான பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 1730 ஏக்கர்கள் ( 700 ஹெக்டயர்கள்) நிலப்பரப்பில் அமைக்கப் பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லா பீடங்களையும் ஒரே இடத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகமாகும்.

இங்கிலாந்தில் Cambridge பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நீதியரசர் அக்பர், Cambridge பல்கலைக்கழகமானது thames நதியின் ஒரு பக்கம் பொறியியல் பீடமும், அடுத்த பக்கத்தில் ஏனைய பீடங்களும் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள முறைப்படி இங்கும் இடத்தைத் தேர்வு செய்து மகவலி ஆற்றின் ஒரு பக்கத்தில் பொறியியல் பீடத்தையும், மறு புறத்தில் ஏனைய பீடங்களையும் அமைக்கப் பரிந்துறைத்தார்.

"Garden university of srilanka" எனப் புனைப்பெயர் கொண்டழைக்கப்படும் இப் பல்கலைக்கழகம், மாணவர் கல்விக்கென பொருத்தமான சூழலொன்றில் அமையப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் எனறால் அது மிகையாகாது. உலகில் காணப்படும் அழகான பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகமும் ஒன்றே. வசந்த காலங்களில் இங்கு பூக்கும் பூக்களும், எப்போதும் மிதமான வெப்பநிலையைக் கொண்டதுமான, அழகிய இயற்கைச் சூழலையும் கொண்ட இப் பல்கலைக்கழகம் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 3700 கல்விசார், கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டமைந்துள்ளது.

தெற்காசியாவில் மிகப் பெரிய நூலகம், இலங்கையில் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளினதும் கன்னி நிகழ்ச்சிகளை நடாத்தும் கலையரங்கம், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட தூண்களால் ஆன செனட் கட்டடம், 9 பீடங்கள், 15 மாணவ விடுதிகள், பல்கலைக்கழகத்திற்கென தனியான ரயில் நிலையம் என ஒரு பல்கலைக்கழக சூழலுக்குள்ளேயே அனைத்தும் அமையப் பெற்றுள்ள, தன்னகத்தே பல தனியம்சங்களைக் கொண்டது இப் பல்கலைக்கழகம், இன்னொரு வகையில் சொல்லப் போனால் ஒரு கிராமத்தையே பல்கலைக்கழகமாக அமைத்துள்ளார்கள்.

வாழநாளில் ஒரு தடவையேனும் போய்ப் பார்த்துவிட வேண்டும் என என்னும் நெஞசங்களுக்குள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பசுமையான நான்கு வருடங்களை வாழ்க்கையாக வாழந்து ஒரு பட்டதாரியாக வெளியேறியதில் எனக்கிருக்கும் சந்தோசம் வேறெவருக்கும் வந்து விடப் போவதில்லை.....

குறிப்பு :- சில தகவல்கள் இணையத்திலிருந்து திரட்டப்பட்டது.

14355709_1879235142300476_1157659318008302665_n.jpg

14358887_1879235868967070_2726200475079332895_n.jpg

 

 

14355801_1879480378942619_6105273954871459022_n.jpg

 

14448802_1879234842300506_4992070908478193779_n.jpg

 

14440995_1879235022300488_8398717792441535849_n.jpg

14462758_1879235275633796_3884160687038100836_n.jpg

 

14462723_1879234748967182_4940818603866214868_n.jpg

 

http://www.najatv.com/2016/09/blog-post_91.html

para

 

para01

 

 

para02

para03

para04

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.