Jump to content

Recommended Posts

கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த‌ மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய முன்றலில் மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தமை ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும், வரலாற்றுப் புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில் மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி வெளியிட வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ. வி விக்னேஸ்வரன் தமிழரின் நிலைப்பாட்டை மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் கூறியமையானது,

தமிழர் நாம் எவ்வேளையிலும் எமது தியாகங்களை வீண்போக விடப்போவதில்லை என்ற செய்தியையும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கத்தயார் இல்லை என்ற செய்தியையும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறி நிற்கின்றது.

இம்மாபெரும் எழுச்சிக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அலைகடலென திரண்டு வந்த மக்களின் உணர்வுகளுக்குத் தமிழ் மக்கள் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.

இப்போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றிய மதகுருமார்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி நிற்கின்றோம்.

மேலும், இப்பேரணிக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியது மட்டுமின்றிப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரதும் எழுச்சி கண்டு இறும்பூதெய்துகிறோம்.

நேரடியாகப் பல அழுத்தங்கள் வந்த வேளையிலும், தாமாக முன்வந்து தமது வர்த்தக நிலையங்களை முற்றாக மூடி எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட எமதருமை வர்த்தகப் பெருமக்களின் உணர்வு மிக்க செயல் எங்கள் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாகும்.

இதேபோல் தமது நாள் தொழிலைத் தியாகம் செய்து தமது உணர்வுகளை வெளிக்காட்டிப் பேரணியில் பங்குகொண்ட கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் ஏனைய நாள் தொழில் செய்பவர்களையும், மற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள், தனி நபர்கள், மகளிர் அமைப்புக்கள், கழகங்கள், பொது அமைப்புக்கள் என அனைவரதும் எழுச்சி கண்டு தமிழ் மக்கள் பேரவை பெருமை அடைகின்றது.

மேலும், இப்பேரணிக்குப் பல‌ இடர்கள் மத்தியிலும் போக்குவரத்து வசதிகள் மேற்கொண்ட போக்குவரத்துச் சங்கங்கள் அனைத்தினதும் இனப்பற்றை நன்றி உணர்வோடு தமிழ் மக்கள் பேரவை நோக்குகின்றது.

அதேவேளை, இப்பேரணியின் வெற்றிக்கு அயராது உழைத்த தேசியப்பற்றுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நாம் என்றும் தலை வணங்கி நிற்பதுடன் அவர்களின் தேசப்பற்று எமது எதிர்காலச் செயற்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்களுமில்லை என்பதனையும் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

இதேபோல், அரசியல் சுய இலாபம் கருதிய ஒரு சில‌ சக்திகள் பேரணியை குழப்புவதற்காக பல வழிகளிலும் முயன்றபோதும் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்து தடைகளெல்லாம் கடந்து வந்து தமது எழுக தமிழ் கோஷம் வானதிர முழங்கிய எம் தமிழ் உள்ளங்களையும், அவர்களின் தேசப்பற்று, மற்றும் தமிழ்ப் பற்றையும் பார்க்கும் போது எம்தேசத்தில் எத்தகைய இடர்கள் வரினும், இம்மண் ஒருபோதும் தியாகங்களை மறந்து அடங்கிப் போய்த் தமது உரிமைகளைக் கைவிடாது என்ற செய்தியை மிகத்தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

http://www.tamilwin.com/politics/01/119050?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி.... நடாத்தப் பட்ட  பேரணி.
இதன் மூலம்... சம். சும் கும்பலுக்கு குட்டு வைக்கப் பட்டுள்ளது.
இனியாவது.... அவர்களின், அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் வர வேண்டும்.
இதில் கலந்து கொண்ட... அனைத்து உறவுகளுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

14442830_10205733402969041_1460279813_n.

 

Tamils’ Major Demands

(Against Sinhala-Buddhist Government Terrorists, which carried out ruthless genocide for the past 6+ decades,
and massacred more than 500,000 Tamils)

  • Stop Sinhala-Buddhisization of Tamil Home Land
  • Federal solution recognizing the Tamil Nation, its sovereignty and its right to self-determination
  • International Investigations for Genocide
  • Remove occupying armed forces
  • Ensure safety, security and dignity of Tamil Women and Children
  • Stop harassing former combatants! Let them live with dignity
  • Return our lands
  • Stop plundering our marine resources
  • Prevent unlawful & forcible encroachment and fishing by southern fishermen on our coasts and lands! Remove existing encroachments!
  • Prevent forcible & arbitrary entry of southern fishermen into our sea   
  • Release political prisoners unconditionally
  • Ensure Justice for forcibly disappeared
  • Stop seizing our traditional lands
  • Stop destroying our culture
  • Stop subjecting us to total economic deprival  

14469403_10205733403289049_1289676433_n.

1474694696_download.jpg

ezhuka_CI_zpsohddm3wk.jpgindex_zpsngm6dciw.jpg

index.jpg11_zpsf0dx60hu.jpg14442701_768359916636426_1090231514_n.jpg

14483655_768359806636437_1586659558_n.jpg14483655_768359806636437_1586659558_n.jpg

14462981_1119366634807773_60561013911766

14446135_1119366668141103_57601971148978

14469505_1119366734807763_56740451103376

14457537_630293203803865_136118084779290

14364619_630293200470532_351444260176311

14446078_630293287137190_796342685382496

14440957_630293323803853_680090187259865

CtGMTSVUIAAcy2L.jpg

CtGMWQOUkAA9XII.jpg

 

 

14466937_10205733376328375_1119959993_o.

14455814_10205733374768336_1131311666_o.

14453917_10205733381248498_1172356762_o.

14446257_10205733380888489_1635814423_o.

14470834_10205733403369051_1375199315_n.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

  14440928_302101140164929_5904985359162486725_n.jpg

14442660_302102266831483_1991744714_n.jpg

14445382_302102260164817_1001200075_n.jpg

14469215_302102256831484_1590563483_n.jpg

14470805_302102240164819_780404736_n.jpg

article_1474709498-eeeeeeeeeeeeeee.jpg

article_1474709519-ggggggggggggg.jpg

article_1474709529-hhhhhhhhhhhhh.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.