Jump to content

ஆரம்பமானது எழுக தமிழ்


Recommended Posts

ஆரம்பமானது எழுக தமிழ்
 
 

article_1474691908-3que7juz.jpgதமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, யாழ் முற்றவெளி நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணியான எழுக தமிழ், சற்று முன்னர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/182513/ஆரம-பம-னத-எழ-க-தம-ழ-#sthash.p2WrBBVh.dpuf

எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

ezhuka_CI_zpsohddm3wk.jpgindex_zpsngm6dciw.jpg

 

 

index.jpg11_zpsf0dx60hu.jpg

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136287/language/ta-IN/article.aspx

index.jpg111_zpse69q2mos.jpg

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
“எழுக தமிழ்” பேரணி ஆரம்பம்
“எழுக தமிழ்” பேரணி ஆரம்பம்
எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில்  ஆரம்பமாகியது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஒருசாராரும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்னொரு அணியினரும்  ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்
1474694696_download.jpg
.யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.  இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் இரண்டும் ஒன்றோடு இணைந்து கே.கே.எஸ் வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறவுள்தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
14442701_768359916636426_1090231514_n.jpg
இவ் ஆர்பாட்ட பேரணியில் இந்து கிறிஸ்தவ மதகுருமார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
14459765_768359783303106_886027294_n.jpg
 
14445871_768359833303101_2146329896_n.jpg
 
14483655_768359806636437_1586659558_n.jpg

http://onlineuthayan.com/news/18020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிட்பது மக்கள் மாதிரி தெரியவில்லை ............
எதோ கிராபிக்ஸ் செய்து படம் போட்டிருக்கிறார்கள் 

சம்மந்தன் ஐயா 
சுமந்திரன் ஐயா 
ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 
மக்கள் இதட்கு போயிருப்பார்கள் என்பது 
இந்த வருட சிறந்த பகிடியாகத்தான் இருக்கும். 

Link to comment
Share on other sites

சமவுரிமை, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி 'எழுக தமிழ்' பேரணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

14457537_630293203803865_136118084779290

14479714_630293207137198_434910884848053

14364619_630293200470532_351444260176311

14358777_630293243803861_796675098155417

14449067_630293290470523_269235172877545

14446078_630293287137190_796342685382496

14440957_630293323803853_680090187259865

 

உரிமைகளுக்காய் உணர்வாய் ஒன்று சேர்ந்த எம் உறவுகள்.

Sooriyan FM

 

 

எழுகதமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு : முற்றவெளியை வந்தடைந்தது பேரணி

 

எழுகதமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, பலகோரிக்கைகளையும் முன்வைத்தவாறு முற்றவெளியை வந்தடைந்தடைந்தனர்.

14466864_10205733373448303_545479677_o.j

இப் பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் உணர்ச்சிபூர்வமாக இதில் கலந்துகொண்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் சிங்­கள, பௌத்த மய­மாக்­கலை உடன் நிறுத்­தக்­கோ­ரியும் தமிழ் தேசி­யத்தின் இறைமை, சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யி­லான ஒரு சமஷ்டித் தீர்வை வலி­யு­றுத்­தியும் யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கும் இனப்­ப­டு­கொ­லைக்­கு­மான சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் அர­சியல் கைதிகள் விடு­தலை காணாமல்­போனோர் வி­வகாரம் மீள்­கு­டி­யேற்­றத்தில் காணப்­படும் தாமதம் காணி அப­க­ரிப்பு, இரா­ணுவ பிர­சன்னம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழும் உரிமை ஆகி­ய­வற்­றுக்கு உட­னடித் தீர்­வொன்றை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்து தேசிய அரசாங்கம், சர்வதேச சமூகம் ஆகிய வற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான 'எழுக தமிழ்' மாபெரும் கவனயீர்ப்பு  பேரணி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. 

வலிவடக்கு, வலி.மேற்கு, யாழ்.நகரத்தை அண்மித்த பகுதிகள், ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா தரப்புக்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்  ஆகியன யாழ்.பல்கலைக்கழக பிரதான  வாயில் முன்றலில் அணி திரண்டன. 

அதேபோன்று வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, வவுனியா, மன்னார். முல்லைத்தீவு  மற்றும் ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்,  நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் ஒன்று கூடின. 

 

 

 

இரண்டு இடங்களிலும் ஒன்றுகூடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நல்லூர் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனையொத்த நேரத்திலேயே பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் பேரணி ஆரம்பமாகியது. 

 

நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி கந்தர்மடத்தை நோக்கி நகர்ந்து சென்றது. அதேநேரம் யாழ்.பல்கலைகழக முன்னறிலில் ஆரம்பிக்கும் பேரணி பலாலி வீதியூடாக கந்தர்மடம் நோக்கி நகர்ந்து சென்றது.

கந்தர்மடம் சந்தியில் இரண்டு பேரணிகளும் சந்தித்து, பின்னர் நாவலர் வீதி வழியாக இலுப்பையடிச்சந்தியை அடைந்து கஸ்தூரியார் வீதி வழியாக வைத்தியசாலை வீதியை பேரணி அடைந்தது. பின்னர் வைத்தியசாலை வீதி யூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து காங்கேசன் துறை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்துள்ளது.

 

 

 

முற்றவெளி மைதானத்தில் பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் சங்கமிப்புடன் பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள், தேவைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டும் தற்போது நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள், நிரந்தரமான அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்ட தரப்புக்கான  உரிய பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் ஆகிய அனைத்து விடயங்களையும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும், சர்வதேச சமுகத்திற்கும் எடுத்துரைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/11710

Link to comment
Share on other sites

எழுகதமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு : முற்றவெளியை வந்தடைந்தது பேரணி (படங்கள் இணைப்பு)

Published by Priyatharshan on 2016-09-24 12:06:45

 

எழுகதமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, பலகோரிக்கைகளையும் முன்வைத்தவாறு முற்றவெளியை வந்தடைந்தடைந்தனர்.

14466864_10205733373448303_545479677_o.j

இப் பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் உணர்ச்சிபூர்வமாக இதில் கலந்துகொண்டுள்ளனர்.

CtGMTSVUIAAcy2L.jpg

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் சிங்­கள, பௌத்த மய­மாக்­கலை உடன் நிறுத்­தக்­கோ­ரியும் தமிழ் தேசி­யத்தின் இறைமை, சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யி­லான ஒரு சமஷ்டித் தீர்வை வலி­யு­றுத்­தியும் யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கும் இனப்­ப­டு­கொ­லைக்­கு­மான சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் அர­சியல் கைதிகள் விடு­தலை காணாமல்­போனோர் வி­வகாரம் மீள்­கு­டி­யேற்­றத்தில் காணப்­படும் தாமதம் காணி அப­க­ரிப்பு, இரா­ணுவ பிர­சன்னம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழும் உரிமை ஆகி­ய­வற்­றுக்கு உட­னடித் தீர்­வொன்றை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்து தேசிய அரசாங்கம், சர்வதேச சமூகம் ஆகிய வற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான 'எழுக தமிழ்' மாபெரும் கவனயீர்ப்பு  பேரணி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. 

CtGMWQOUkAA9XII.jpg

வலிவடக்கு, வலி.மேற்கு, யாழ்.நகரத்தை அண்மித்த பகுதிகள், ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா தரப்புக்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்  ஆகியன யாழ்.பல்கலைக்கழக பிரதான  வாயில் முன்றலில் அணி திரண்டன. 

CtGMZTDUEAA5JR9.jpg

அதேபோன்று வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, வவுனியா, மன்னார். முல்லைத்தீவு  மற்றும் ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள்,  நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் ஒன்று கூடின.

14466937_10205733376328375_1119959993_o.

இரண்டு இடங்களிலும் ஒன்றுகூடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நல்லூர் ஆலய முன்றலிலிருந்து கவனயீர்ப்பு பேரணி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

14455907_10205733365568106_653678172_o.j

இதனையொத்த நேரத்திலேயே பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் பேரணி ஆரம்பமாகியது. 

14455814_10205733374768336_1131311666_o.

நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி கந்தர்மடத்தை நோக்கி நகர்ந்து சென்றது. அதேநேரம் யாழ்.பல்கலைகழக முன்னறிலில் ஆரம்பிக்கும் பேரணி பலாலி வீதியூடாக கந்தர்மடம் நோக்கி நகர்ந்து சென்றது.

14453917_10205733381248498_1172356762_o.

கந்தர்மடம் சந்தியில் இரண்டு பேரணிகளும் சந்தித்து, பின்னர் நாவலர் வீதி வழியாக இலுப்பையடிச்சந்தியை அடைந்து கஸ்தூரியார் வீதி வழியாக வைத்தியசாலை வீதியை பேரணி அடைந்தது. பின்னர் வைத்தியசாலை வீதி யூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து காங்கேசன் துறை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்துள்ளது.

14446257_10205733380888489_1635814423_o.

முற்றவெளி மைதானத்தில் பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் சங்கமிப்புடன் பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள், தேவைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டும் தற்போது நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள், நிரந்தரமான அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்ட தரப்புக்கான  உரிய பொறுப்புக்கூறலும், நீதி வழங்கலும் ஆகிய அனைத்து விடயங்களையும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும், சர்வதேச சமுகத்திற்கும் எடுத்துரைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14446257_10205733380888489_1635814423_o.

14438776_10205733378448428_1229467036_o.

14424238_10205733370848238_308810396_o.j

14424122_10205733369528205_2052537918_o.

14424060_10205733382608532_1067089961_o.

14429282_10205733403009042_495503058_n.j

14442830_10205733402969041_1460279813_n.

14445545_10205733403169046_937504612_n.j

14445611_10205733403249048_2046297488_n.

14459688_10205733403129045_1295456209_n.

14463788_10205733403329050_1187873626_n.

14469403_10205733403289049_1289676433_n.

14470700_10205733403089044_1862378965_n.

14470834_10205733403369051_1375199315_n.

http://www.virakesari.lk/article/11710

Link to comment
Share on other sites

கடையடைத்து பேரணிக்கு ஆதரவு
 
24-09-2016 12:33 PM
Comments - 0       Views - 7


article_1474700861-bbbbbbbbbbbbb.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  'எழுக தமிழ்' பேரணிக்கு, யாழ். நகர முழுவதிலும் உள்ள கடைகள் பூட்டப்பட்டு, மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதன்படி யாழ் நகரபகுதியில் உள்ள வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்தும் பூட்டப்பட்டப்பட்டுள்ளன.

 

- See more at: http://www.tamilmirror.lk/182534/கட-யட-த-த-ப-ரண-க-க-ஆதரவ-#sthash.7oxmuYum.dpuf

article_1474700870-cccccccccccccc.jpg

Link to comment
Share on other sites

எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது

எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்..

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, பெருமளவிலான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

 

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/118635?ref=home

Link to comment
Share on other sites

 

 
14462734_1261397910576976_3123667221576986837_n.jpg
இன்றைய எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அவர்களது சிறப்புரை காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி யாருக்கும் எதிரானதல்ல குறிப்பாக தமிழரசுக்கட்சிக்கு எதிரானது அல்ல என்றும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு? மற்றும் நாம் எதற்காக இந்த பேரணியை நடாத்துகின்றோம் என்றும் முதல்வர் விரிவாக உரையாற்றினார். முழுமையான எழுத்துவடிவம் பின்னர் இணைக்கப்படும்.
 

யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
இதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.
 
 
1044618_302101713498205_8176267738697548553_n.jpg
 
14212615_302101500164893_5812689099943774392_n.jpg
 
14440928_302101140164929_5904985359162486725_n.jpg
14442660_302102266831483_1991744714_n.jpg
 
14442740_302102273498149_750736389_n.jpg
 
14445382_302102260164817_1001200075_n.jpg
 
14445652_302102270164816_97653974_n.jpg
 
 
 
14469215_302102256831484_1590563483_n.jpg
 
14469380_302102216831488_782006083_n.jpg
 
14470805_302102240164819_780404736_n.jpg
 
14470822_302102283498148_1562834365_n.jpg
 
14470950_302102276831482_2017800114_n.jpg
 
 
 
14483492_302102220164821_248666629_n.jpg
 
14469720_302101373498239_6605227082631455728_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.tamilkingdom.com/2016/09/a24.html

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

14442830_10205733402969041_1460279813_n.

Tamils’ Major Demands

(Against Sinhala-Buddhist Government Terrorists, which carried out ruthless genocide for the past 7 decades, and massacred more than 500,000 Tamils)

  • Stop Sinhala-Buddhisization of Tamil Home Land

  • Federal solution recognizing the Tamil Nation, its sovereignty and its right to self-determination

  • International Investigations for Genocide

  • Remove occupying armed forces

  • Ensure safety, security and dignity of Tamil Women and Children

  • Stop harassing former combatants! Let them live with dignity

  • Return our lands

  • Stop plundering our marine resources

  • Prevent unlawful & forcible encroachment and fishing by southern fishermen on our coasts and lands! Remove existing encroachments!

  • Prevent forcible & arbitrary entry of southern fishermen into our sea   

  • Release political prisoners unconditionally

  • Ensure Justice for forcibly disappeared

  • Stop seizing our traditional lands

  • Stop destroying our culture

  • Stop subjecting us to total economic deprival  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10 அயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டதாக

அதில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர்தெரிவித்திருக்கிறார்

 

Link to comment
Share on other sites

இணைப்பு2 - எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

24 செப்டம்பர் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

இணைப்பு2 - எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

எழுக தமிழ் நிகழ்வு  நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டுள்ளனர்.


 

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மற்றையதொரு பேரணியும் யாழ் முற்றவெளி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் தமிழ் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக  யாழ். நகரப்பகுதியில்   அமைந்துள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் . மற்றும்  தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், என்பனவும்  மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136287/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுறவுகளே தலைவணங்குகின்றேன். மீளெழுச்சிகாணும் வரலாற்று நிகழ்வாகவும் தமிழினத்தை அடகுவைத்து அரசியல் செய்ய முனையும் தமிழரசியல் சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் எழுகதமிழ் அமைந்துள்ளது. வழமைபோல் தமக்கேற்றவாறு இதனையும் அறிக்கையூடாக மலினப்படுத்துவார்கள் என்பது திண்ணம். ஆனால் தமிழினத்தின் உரிமைகளோடு விளையாடவோ நியாயமான விடயங்களில் விட்டுக்கொடுப்போ செய்ய முடியாதென்பதை ஒன்றிதிரண்டு தமிழினம் சொல்லியுள்ளதை அரசோ அதற்கு காவடிதூக்கும் தமிழர்தலைமைகளோ உதாசீனம் செய்யமுடியாதென்பதை புரிந்துகொள்வார்களா என்பது தொக்கிநிற்கும் வினாவாகும்.  
அதேவேளை புலத்தமிழர்கள்26.09.16 அன்று எப்படித்தமது தார்மீகக்கடைமையிலே இணைகின்றார்கள், எப்படி இந்த எழுக தமிழுக்கு வலுவூட்டப்போகிறார்கள் என்பதும் முக்கியத்தவம் வாய்ந்த வினாவாகும். எமது தியாக தீபம் தன்னை வருத்தி அர்பணித்த நாளிலே புலத்தமிழர் நாம் என்ன செய்யப்போகிறோம்.... ஐநாமுன்றலிலே அலைஅலையாக அணிதிரள்வோமா?     
 

Link to comment
Share on other sites

மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம்
 

article_1474708078-aaaaaaaaaaaaaaaa.jpgஇந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி. இது ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாலோ மாகாண சபைகளுக்குத் தெரியப்படுத்துவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிகழ்வில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இந்தப் பேரணியை நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை சிங்கள சகோதர சகோதரிகளை எதிர்த்து நடாத்தவில்லை பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை. கொள்கையளவில் அவர்கள் எம்மை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பலர்  எம்முடன் இங்கு வந்தும் இருக்கின்றார்கள். அவர்கள் இச்சந்தர்ப்பம் சரியானதா என்றுதான் கேட்கின்றார்கள். அதில் எமக்குள் கருத்து வேறுபாடு.  அவ்வளவுதான். இது பற்றி நான் பின்னர் குறிப்பிடுவேன்.

மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் ஏற்றேன். 2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கெனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன. அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே சில அடிப்படைக் கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக் கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது.

2001ஆம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்றுபடுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்தபோது சிவில் சமூகம் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் அரசியலில் அப்போது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதளை அப்போதே வரவேற்றேன்.  மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்தால்தான் எங்களுக்கு மதிப்பு.

தமிழ்ப் பேசும் மக்களின் கரிசனைகளை, கவலைகளை ஆகக்கூடியது எமது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடாத்தியுள்ளோம் என்றார்.

வடக்கு - கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் பலத்த சந்தேகங்களிலும் ஐயப்பாடுகளிலும் மனச் சஞ்சலத்திலும் இருக்கின்றார்கள். அவர்களின் அந்த மனோநிலையை, ஊரறிய, நாடறிய, உலகறிய உரத்துக் கூறவே இங்கு கூடியுள்ளோம்.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா? என்பது எமது முதலாவது கரிசனை.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்கும் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா? போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றது. புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கும் அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகின்றது.

காணாமல் போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமற் போனவர் காரியாலயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்டமா? போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னரே இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச நெருக்குதல்களின் காரணமாக. இன்னமும் எவ்வளவு காலம் சென்றால் படையினரிடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள் கிடைக்கப் பெறலாம்? எனவும் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். இதற்கான விளக்கங்களை யார் தருவார்கள்? அவற்றைக் கோரியே இந்தப் பேரணி.

நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இது எதற்காக? எமது தனித்துவம் பேணப்படும், எமது உரித்துக்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறி வரும் இவ்வேளையில், இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக இலங்கை பூராகவும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்கள் அடித்து துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போக பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பிரதேசங்களில் அவர்கள் தஞ்சம் புக, இங்கும் வந்து எமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால், இக் குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா என்று கேட்டு வைக்கவே இந்தப் பேரணி.

இது யாருக்கும் எதிரானதல்ல? ஆனால்  வடமாகாணத்தில் நடைபெறும் பல நடவடிக்கைகள் பற்றி நாம் அறிய விரும்புகின்றோம். அவற்றுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

கேரதீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசாங்கம் வடமாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதன் சூட்சுமம் என்ன? என்றார்.

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் இராணுவம் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்களை அனுபவிப்பதன் அர்த்தம் என்ன? உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தனியார் வாசஸ்தலங்கள் தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நியாயம் என்ன? ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும் பல ஏக்கர் மக்கள் காணிகளை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் இராணுவத்தினரின் நடவடிக்கை எம் மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது 2015ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாத சர்வதேச எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர், வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச போர்க்குற்ற சட்டத்தை உள்ளேற்றல் போன்றவை இல்லாது கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமது நல்லாட்சி அரசாங்கம் நாடுவது எமக்குச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமற் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவை மட்டுமல்ல. எமது வடக்கு, கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள். கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந் நடவடிக்கைகளால் எமது வடக்கு - கிழக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவற்றை உலகறியச் செய்யத்தான் இந்தப் பேரணி எனவும் குறிப்பிட்டார்.

வடக்கு - கிழக்கில் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் போதைப் பொருள் பாவனை இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் படையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு - கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையினப் பொலிஸாரை எமது பொலிஸ் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான கிலோகிராம் கஞ்சா வட பகுதியை வந்தடைகின்றது.

மேலும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் வந்தடைகின்றன. அதிகப்படியான மதுசாரமும் விற்பனையாகின்றன. இது எப்படி? சட்டமும் ஒழுங்கும் எங்களின் கைவசம் இல்லை. அப்படியானால்  இவை எவ்வாறு சாத்தியமாகியுள்ளன அல்லது இவை ஏன் நடக்கின்றன? இவை எமது இளஞ் சந்ததியினரைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்?

இதனை தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நடை பயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகின்றோம். மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம் என்றார்.

அடுத்து அரசியல் யாப்புக்கு வருவோம். தொடர்ந்து தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் அதிகாரங்களை உள்ளுர்வாசிகளுக்கு வழங்கப் போகின்றார்கள் என்று தெரிந்ததும் 1919ஆம் ஆண்டில் இருந்தே அதிகாரத்தைத் தம் கைவசம் வைத்திருக்கப் பெரும்பான்மையின மக்ககள் தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். அதிகாரம் முழுமையாக பெரும்பான்மையின மக்களிடம் சென்றுவிட்டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது 'இவ்வளவு தருகின்றோம்', 'இன்னும் கொஞ்சம் தருகின்றோம்', 'சரி! இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவும் கேட்கப்படாது' என்றெல்லாம் பேரம் பேசி வருகின்றார்கள்.

இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் தாயகம். அவர்களுக்குச் சுயாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம். இந்த நாடு சமாதானத்துடனும் நல்லுறவுடனும் அரசியல், சமூக, பொருளாதார விடிவை நோக்கிப் பயணிக்க விரும்பினால் சமஷ்டி அரசியல் முறையொன்றே அதற்குத் தீர்வாக அமையலாம். இதில் கட்சிகளும் மக்களும் உறுதியாக இருக்கின்றனர். ஒற்றையாட்சியானது அதிகாரங்களைத் தொடர்ந்து பெரும்பான்மையின மக்களின் கைகளிலேயே தேக்கி வைக்கச் செய்யும். தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் சுமூகமாக சம அந்தஸ்துடன் நல்லுறவுடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு - கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து சுயாட்சி வழங்குவதே ஒரே வழி. அதனால்த்தான் நாங்கள் சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கேற்றவாறு அரசியல் யாப்பு பற்றிய நகர்வுகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஏனோ தானோ என்று மூடி மொழுகி ஓர் அரசியல் தீர்வைத் தரலாம் என்று தெற்கு நினைப்பதாக எமக்குத் தோன்றுகின்றது. எமக்குத் தரவேண்டிய உரித்துக்கள் எமது குழுமம் ரீதியான உரித்துக்களே அன்றி தனிப்பட்டவர்களுக்கு அளிக்கும் உரித்துக்கள் அல்ல.

வடக்கு - கிழக்கை இணைக்க வேண்டும் என்று நாம் கேட்பதை ஏதோ கேட்கக் கூடாததை நாம் கேட்பதாகத் தெற்கில் நோக்கப்பட்டு வருகின்றது. பல தமிழ்ப் பேசும் மக்களால் கூட அவ்வாறே நோக்கப்படுகின்றது என்றார்.

தமிழ்ப் பேசும் எமது பிரதேசங்களில் இன்னமும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன. வடக்கு - கிழக்குப் பிராந்தியங்களில் எமது பாரம்பரிய மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை. எமது காணிகள் பறிபோகின்றன. இராணுவம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை இங்கு குடியிருக்கச் சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். எனவே வடக்கு - கிழக்கைச் சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருவதால்  எமது மொழியையும் மதங்களையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்க வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு கிழக்கு இணைப்பு அத்தியாவசியம் ஆகின்றது. அதனை சிங்கள மக்கள் ஏற்பார்களா என்றதொரு சந்தேகம் எம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உண்மையைச் சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எமது வாதம்.

ஆகவே, இந்தப் பேரணி மூலமாக தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கரிசனைகளை நாம் வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியை கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மத்தியின் மேலாதிக்கம் தற்பொழுதும் தொடர்கின்றது. இந்த நேரத்தில் எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும். புதிய அரசியல் யாப்புத் தயாரித்தலானது எமது கரிசனைகளை உள்ளேற்க வேண்டும். இணைந்த வடக்கு - கிழக்கு சமஷ்டி அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும்.

காணி, பொலிஸ், நிதி போன்ற அதிகாரங்கள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும். இதனை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இராணுவம் படிப்படியாக குறிப்பிட்ட காலத்தினுள் வாபஸ் பெற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக புத்த விகாரைகள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக நடைபெற வேண்டும். காணாமல் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்திவே இந்தப் பேரணி. இவ்வாறான எமது கரிசனைகளைக் கருத்தில் கொள்ளாது அவற்றிற்குத் தீர்வைக் காணாமல் நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது கரத்தையைக் குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/182545/மக-கள-சக-த-எமத-அரச-யல-பயணத-த-க-க-அவச-யம-#sthash.RUflMBz6.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாற்றம் ஒன்றிற்காய் தோற்றம் கொண்ட 'எழுக தமிழ்" எழுச்சி.
யாழ் நகரில் முளைவிட்ட கடந்தகாலத்து தொடர்ச்சி. இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியின் காட்சிகள். (நன்றி, ஊடகங்கள்)

 

 

https://www.facebook.com/puratchi2100?hc_ref=NEWSFEED

 

“எழுக தமிழ் பேரணி”– பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உரை-


விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கும், முப்பதினாயிரம் மக்களுக்கும் தனித்தனியாக முகம் கொடுத்து சிரம்தாழ்த்த முடியாத காரணத்தினால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்றே கூறவேண்டும், நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள். எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் இங்கு நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய குரல்கள், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், அரசுக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும். எங்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும்வரை ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில், ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும். அப்படியான ஒரு வெற்றியை எடுப்பதன்மூலம்தான் ஆயிரக்கணக்கான தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் மிகப்பெரிய அஞ்சலியை செலுத்தியவர்களாக இருப்போம். அதை நாங்கள் எல்லாரும் தொடர்ந்து சென்று செய்வோம் என்றுகூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

 

Link to comment
Share on other sites

'இந்தப் போராட்டம் வெற்றி பெறும்'
 
24-09-2016 03:03 PM
Comments - 0       Views - 2

article_1474709899-aaaaaaaaaaaaaaaa.jpgசாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிகழ்வில்இ உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள்.

 உங்களுடைய குரல்கள் சர்வதேசத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கத்துக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும். எங்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும் வரை ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும்.

அப்படியான ஒரு வெற்றியை எடுப்பதன்மூலம்தான் ஆயிரக்கணக்கான தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் மிகப்பெரிய அஞ்சலியை செலுத்தியவர்களாக இருப்போம் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/182549/-இந-தப-ப-ர-ட-டம-வ-ற-ற-ப-ற-ம-#sthash.nzC5dvhg.dpuf
Link to comment
Share on other sites


எழுக தமிழ் பேரணி
 
24-09-2016 02:49 PM
Comments - 0       Views - 7

article_1474709425-bbbbbbbbbbbbb.jpg

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்

வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் உணர்வு பூர்வமான 'எழுக தமிழ்' பேரணி இன்று சனிக்கிழமை (24) இடம்பெற்றது.

article_1474709465-ccccccccccccc.jpg

article_1474709474-dddddddddddd.jpg

article_1474709498-eeeeeeeeeeeeeee.jpg

article_1474709509-fffffffffffff.jpg

article_1474709519-ggggggggggggg.jpg

article_1474709529-hhhhhhhhhhhhh.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/182548/எழ-க-தம-ழ-ப-ரண-#sthash.84sheUu6.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகள்

September 23, 2016
0
30
s181-696x341.png
*யாழ்.சின்மயமிஷன்
*யாழ்.கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதானக்குழு
*வீணாகான குருபீடம்
*சைவமகாசபை
*யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,
*யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,
*யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள்
*இலங்கை ஆசிரியர் சங்கம்,
*இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
*தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
*தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
*அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
*ஜனநாயக மக்கள் காங்கிரஸ்
*ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
*தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
*வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம்
*வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சம்மேளனம்.
*வலிவடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு சங்கம்,
*முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்
*யாழ் மாவட்ட மரக்காலை உரிமையாளர்
*கூட்டுறவு சங்கம்,
*சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம்
*திருநெல்வேலி பொதுசந்தை வியாபாரிகள் சங்கம்
*மல்லாவி வர்த்தகர் சங்கம்
*தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை,
*தமிழ் சிவில் சமூக அமைப்பு
*யாழ்.மாவட்ட பிரஜைகள் குழு
*வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
*மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு
*மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்
*அரசியல் மனித உரிமைகளுக்கான தமிழ்  சட்டத்தரணிகள் அமைப்பு
*வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒருங்கிணைப்பு குழு
*தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு
*வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தொழிற்சங்கம்
*மகளிர் அமைப்புகள்
*வடபகுதியில் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கம்,
*வடகிழக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒன்றியம்
*மக்கள் சக்தி அமைப்பு,
*தமிழக வாழ்வுரிமைக் கட்சி
*மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்
*திராவிடர் விடுதலைக்கழகம்,
*தமிழ்த் தேசிய பேரியக்கம்,
*சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்
*இந்து மக்கள் கட்சி
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
*தந்தை பெரியார் திராவிடர் கழகம்
(மேலதிக பேரணி ஆதரவுகள் நாளை) (செ-9)

http://www.velichaveedu.com/s181-png/

•“எழுக தமிழ்” பேரணி சொல்லும் சேதி என்ன?

ஆயிரக் கணக்கில் தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

வியாபாரிகள் கடையைப் பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் கூட பலர் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பேரணி மூலம்

பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படப் போவதில்லை

சர்வதேச விசாரணை நடைபெறப் போவதில்லை

சமஸ்டித் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை

இது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால் இந்தப் பேரணி மூலம் தமிழ் மக்கள் உலகிற்கு முக்கிய சேதி சொல்லியிருக்கிறார்கள்.

ஒரே நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று அழித்தால் அந்த இனம் மீண்டும் போராட துணியாது என்று இலங்கை அரசு நினைத்தது.

ஆனால் பல்லாயிரம் மக்களை பறிகொடுத்த நிலையிலும் தமிழ் மக்கள் மீண்டும் எழுவர் என்பதை இந்த பேரணி மூலம் நிரூபித்து இருக்கிறார்கள்.

1971ம் அண்டு அழிக்கப்பட்ட ஜே.வி.பி இயக்கம் மீண்டும் 1989ல் எழுவதற்கு 18 வருடங்கள் பிடித்தது.

ஆனால் 2009ல் 40 அயிரம் மக்களை பறிகொடுத்த தமிழ் இனம் 7 வருடத்தில் மீண்டும் எழுந்து உலகிற்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்த பேரணியில் இன்னொரு அதிசயமும் நடந்துள்ளது.

தமிழ் மக்களின் தலைமை என கூறப்பட்ட தமிழரசுக்கட்சி முற்றாக ஒதுங்கிய நிலையில் தமிழ் மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒன்று திரண்டுள்ளனர்.

ஒரு இனத்தின் தலைமையை பதவி கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டால் அந்த இனம் போராடுவதை தடுத்துவிடலாம் என நம்பிய இலங்கை அரசிற்கு பலத்த அடியை தமிழ் மக்கள் கொடுத்துள்ளார்கள்.

இலங்கை அரசிற்கு மட்டமன்றி இலங்கை அரசிற்கு உதவி வரும் இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுகளுக்கும் தமிழ் மக்கள் இந்த பேரணி மூலம் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

தமக்குரிய உரிமைகள் தராமல் மறுக்கப்பட்டால் தாம் போராட தயங்கமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த செய்தியானது உலகில் போராடும் இனங்களுக்கெல்லாம் மகிழ்வும் உறுதியும் அளிக்கும் செய்தியாகும்.

அந்தளவில் இந்த பேரணி ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

https://www.facebook.com/Balan-tholar-1528490507422676/?hc_ref=NEWSFEED&fref=nf

 

Link to comment
Share on other sites

முற்றவெளியில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியின் பிரகடனம் வெளியிடப்பட்டது

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

முற்றவெளியில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியின் பிரகடனம் வெளியிடப்பட்டது

 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை) காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து  மாபெரும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.



இந்த  பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உரிமை கோசங்களை எழுப்பினர்கள்.

முற்றவெளியில் நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர்  தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்கள் உரையாற்றினார்கள்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136304/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

VIVA EZUKA THAMIZ PERANI. 
வெல்க எழுக தமிழ் பேரணி

- வ.ஐ.ச.ஜெயபாலன் கலைஞன்
*
எழுக தமிழ் பேரணி தமிழ் பேசும் மக்கள் நீதியும் சமாதானமும் சமத்துவமும் உள்ள சமாதானத்தையும் இணைபாட்சியைக் கோர அனிவகுக்கும் அறவழிப் பேரணியாகும். நீதியும் உண்மையும் சுயவிமர்சனமும் உள்ள நல்லிணக்கத்துக்கான பேரணியாகும். அநீதியாக தடுத்து வைக்கபட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளின் விடுதலைகுமான பேரணியாகும். பறித்தெடுக்கப் பட்ட மக்களின் வீடு கானி நிலங்களை மீழ அடைவதற்க்கான பேரணியாகும். 
*
சகல தமிழ் அமைப்புகளும் சகல தமிழ் கட்சிகளும் சம்பந்தர் ஐயா உட்பட சகல தமிழ்த் தலைவர்களும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அறப் போராட்டமான எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென கோருகிறேன்.

தமிழகமும் இந்தியாவும் சர்வதேசமும் ஒடுக்கப் பட்ட தமிழர்களின் துயர் துடைக்க எழுந்த எங்கள் மக்களின் எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன். 
*
எரிக்கப்பட்ட காடுநாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்.

*
We are a charred forest

But our song continues

From the roots that remain.

Our Song will continue

As a dirge for the dead

A call for the lost

A reclaiming of home

Again and again, a living dream

A longing for freedom.

 

 

Link to comment
Share on other sites

'கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்'
 

article_1474712570-suresh.jpg-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (24) யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவைக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா? ஏன் இப்போது இந்தப் பேரணி தேவைதானா? இப்பேரணிக்கு 500 பேர் வருவார்களா? மக்கள் இதனை ஏற்பார்களா? வெற்றிபெறுமா என அனைவரது கேள்விக்கும் இன்று ஒன்று கூடி தமது உரிமைகளை வென்றெடுக்க அலைகடல் என திண்ட மக்களே பதிலாவார்கள். இது மக்களின் போராட்டம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக ஒன்று திரண்ட பேரணி. இதனை யாராலும் குறை கூறவும் முடியாது. இழிவுபடுத்தவும் இயலாது.

இந்தப் பேரணியினை புறந்தள்ளி குழப்புவதற்கு மக்கள் பிரிதிநிதிகள், தலைவர்கள் மட்டுமன்றி ஒரு சில ஊடகங்களும் மும்முரமாக செயற்பட்டனர். அதற்கு எல்லாம் இன்று இடம்பெற்ற பேரணியின் வெற்றி பதிலாகும்.

இந்த பேரணி மூலம் மக்கள் கூறும் செய்தி நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குச் சென்றடைதற்கு மேலாக குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சென்றடைய வேண்டும்.

மக்கள் இனியும் ஏமாறத்தயார் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசை நம்பி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை இந்த அரசாங்கமும் என்னை ஏமாற்றிவிட்டது எனக் கூறப்போகிறார்.

ஏனென்றால் தந்தை செல்வா, பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டோரே. ஆகவே, மக்கள் இனியும் எமாறத்தயார் இல்லை. மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள தாமே முன்வந்துவிட்டனர் என்பதற்கான ஆரம்பமாக இந்தப் பேரணி அமைந்துள்ளது என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/182552/-க-ல-ச-ய-தவர-கள-க-க-ஒன-ற-த-ரண-ட-மக-கள-பத-ல-ஆக-னர-#sthash.ReDBn8dH.dpuf
Link to comment
Share on other sites

பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள பேரணி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரணி யாழ். முற்றவெளி மைதானத்தை சென்றடைந்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் வெயிலுக்கு மத்தியிலும் பெருமளவில் இன்றைய பேரணியில் ஒன்று கூடியிருக்கிறோம் என்றால் நாங்கள் எங்களுடைய உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. எங்களது உரிமைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் .

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நாங்கள் இன்றைய பேரணியில் சொல்லும் செய்திகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிரொலிக்க வேண்டும். இந்தச் செய்திகள் ஐ.நா பொதுச் சபைக்குக் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலம்பெயர் உறவுகளுக்கும் எமது செய்திகள் சென்றடைய வேண்டும். அது மாத்திரமல்ல இன்றைய பேரணி ஒரு ஆரம்பம் தான். பொங்கு தமிழும், எழுக தமிழும் எமது ஒண்றிணைவின் ஒரு ஆரம்பம் மாத்திரமே. வன்னியில், மட்டக்களப்பில், திருகோணமலையில், இன்னும் புலம்பெயர் தேசங்களில் இந்த எழுக தமிழ் வீறு கொண்டு எழும். அவ்வாறான சூழலில் தான் எமது உரிமைகளைப் பெறும் நிலை உருவாகும் எனவும் கூறியுள்ளார்.

எழுக தமிழ் பேரணியின் செய்தி இந்த நாட்டை ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, இந நல்லிணக்கக் குழுவின் தலைவியாகவிருக்கின்ற சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் காதுகளுக்குக் கேட்க வேண்டிய செய்தி ஆகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தமிழ் மக்கள் தோற்றுப் போனவர்களல்ல.ஆகவே, தமிழ் மக்களுடைய உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்ய முடியாது. தமிழ் மக்களின் கலாசாரத்தை அழிக்க முடியாது.

தமிழ் மக்க்களின் நாகரீகம், பண்பாடு போன்றவற்றை அழிக்க முடியாது. இவ்வாறான பாதிப்புக்களுக்கு எதிராக நாம் இறுதி வரை போராடுவோம். இதுவே, தமிழ்மக்கள் பேரவையினது முடிவாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆகவே, அமையப் போகிற அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, வடகிழக்கு இணைந்த, தமிழ் மக்களுடைய இறையாண்மை, தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதொரு அரசியல் சாசனமாக, சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் சாசனமாக அமையப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சம்பந்தன் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு அவர் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் தங்களையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி விட்டதென அவர் சொல்ல வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஐ. நா சபையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் முன்னர் அமிர்தலிங்கத்தை, தந்தை செல்வா போன்ற தமிழ் அரசியல் தலைவர்களை முன்னரும் ஏமாற்றியது. ஆகவே, நாங்கள் இனியும் ஏமாற்றுவதற்குத் தயாராகவில்லை எனவும் எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/118672?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.