Jump to content

நட்புத் தேவதையே...


Recommended Posts

நட்புத் தேவதையே...

"நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?"

"ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"

நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு.

"சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்."

நித்யா...என்னோடு வேலை செய்யும் அன்புத் தோழி. அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரி. எல்லாம் இருந்தும் அடக்கத்தை மட்டும் ஆட்சி செய்யும் இளவரசி.

என்னை போன்ற ஒருவனுக்கு கிடைத்த அபூர்வ தோழி. உண்மைதான். நித்யாவைப் பற்றி எதைச் சொல்வது!! என் கவிதை எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..? இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொடுத்ததை சொல்வதா..?

என்னோடு வேலை செய்யும் நண்பர்களின் கேலியான பார்வைக்கும், பேச்சுக்கும் கொதித்தெழுந்து சாட்டையடி கொடுத்ததை சொல்வதா..? இல்லை...வண்டியில் செல்லும்போது விபத்து ஒன்றில் அடிபட்டு கிடக்கும்போது, ஓடோடி வந்து இரத்தம் கொடுக்க ஆளாய் பறந்ததைச் சொல்வதா..?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் இதயத்தில் படமாய் ஓடியது. ஆனால் இன்று தன் தந்தையின் சுமை இறக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. நினைவுகள் என்னுள் ஓடிக்கொண்டிருக்க இடமறித்தாரள் நித்யா.

"சந்துரு...என்னோட சித்தப்பா வெளிநாட்டில் இருக்கிறார். எல்லாம் அவருடைய ஏற்பாடுதான். அப்புறம் ஒரு விசயம்..."

நித்யாவை கூர்ந்து கவனித்தான் சந்துரு.

"சந்துரு...நீங்க மனச தளர விடக்கூடாது. எப்பவும் தைரியமா இருக்கணும். ஆபிசுல யார் என்ன சொன்னாலும் அதைப் பத்தி கவலைப் படாதீங்க. நிறைய எழுதுங்க. நீங்க பெரிய ஆளா வரணும். என்னோட ஆசை அதுதான். திரும்பவும் நாம் சீக்கிரம் சந்திக்கலாம்"

நித்யா சொல்லச் சொல்ல கண்ணீர் பெருக்கெடுக்க சந்துருவிற்கு காட்சிகள் மங்கலாய் போக...

"ப்ளிஸ்! அழுகாதீங்க..." எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியாது தடுமாறினாள் நித்யா கண்ணீரோடு.

நிறைய...நிறைய பேச வேண்டுமென துடித்தான். ஆனால், ஏதோ ஒரு பாரம் அவனுள் அழுத்தியது. பிரியாவிடை கொடுக்க மனமில்லாமல் விடை கொடுத்துவிட்டு வந்தான்.

வண்டியை நிறுத்திவிட்டு நிதானமாய் அறைக்குள் சென்றவன் ஒரு தாளை எடுத்து எழுதத் துவங்கினான்.

"இனி

உன் காலடிச் சுவடுகளைக் கூட

நான் காண இயலாது."

இதயத்தில் அழுத்திய எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே போனான். முற்றுப் புள்ளி வைத்துத்தானே ஆக வேண்டும். இறுதியாய்...

"அன்புத் தோழியே...

இனியொரு பிறப்பு உண்டெனில்

நீ உருவெடுக்கும் கருவறையில்

எனக்கோர் இடம் கொடு.

இல்லையெனில்...

உன் கருவறையில்

ஓர் இடம் கொடு

ஊனமில்லாமல் பிறக்க..."

இரண்டரை வயதில் தாக்கிய போலியோவால் நடக்க முடியாமல் சுருங்கிய கால்களோடு, ஒரு கண் பாதிக்கப்பட்ட சந்துருவின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் துளிகள் அவனது எழுத்துக்களை அவசரமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

முற்றும்

(புதியவன்)

கதை எனதல்ல :huh:

கதை பற்றிய உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!!!

நமது கருத்து எழுதுபவருக்கு உற்சாகபானமாக இருக்கும்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மவனே யார் என்றாலும் கதையெலுதுங்கள் கவிதை எழுதுங்கள்.. கண்ணால காணாத உருவங்களையெல்லாம் வைச்சு அதுதான் தேவதை பிசாசு பேய் என்று எழுதினீர்கள் நடக்கிறதே வேற..! :huh::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.