Jump to content

சூரியனை நோக்கி ஒரு பயணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை நோக்கி ஒரு பயணம்!

MAY 5, 2016 / மீராபாரதி

 

east-coast-canada-353.jpg?w=300&h=225

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் (பிரின்ஸ் எட்வேட் ஹைலன்ட்) சூரியன் எழுந்தபோது

 

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பல நாடுகளினுடான ஒரு வருடத்திற்கான பயணம்.

கனடாவில் வாழ்ந்த கடந்த இருபது வருடங்களில் இந்தியா, நேபாளம், ஐரோப்பா (சுவிஸ், ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து) மற்றும் கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நாம் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்திருக்கின்றோம். இம் முறை இருவரும் ஒரு வருடத்திற்கு பயணம் செய்யத் தீர்மானித்திருக்கின்றோம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கின்றோம். ஆகவேதான் சூரியனை நோக்கிய பயணம் எனத் தலைப்பிட்டுள்ளோம். இப் பயணத்தில் சூரியனினால் நாம் எரிந்து போகலாம் அல்லது சூரியனுடன் நாம் ஒன்று கலக்கலாம். எதுவெனிலும் இது புதியதொரு அனுபவத்தை நமக்குத் தரலாம். இவ்வாறு பயணித்த பலரின் அனுபவங்கள் ஆச்சரிப்படும் வகையிலும் நம்பமுடியாத வகையிலும் அவர்களது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இம் முறை பயண நாட்களில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒரு மணித்தியாலங்களை ஒதுக்கிப் பயணம் தொடர்பான நமது அனுபத்தை சிறியளவிலாவது பதிவு செய்வது என முடிவு செய்திருக்கின்றோம். இது நமது பயண அனுபவத்தை அனைவருடனும் பகிர்வதற்கான ஒரு முயற்சியாகும்.

east-coast-canada-033.jpg?w=300&h=225

புலம் பெயர்ந்து அல்லது பெயர்க்கப்பட்டு முதலாளித்து நாடு ஒன்றில் வாழ்வது இவ்வாறான பயணங்களை மேற்கொள்வதை நமக்குச் சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாடுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு நிறைய பணம் செலவாகும். ஒவ்வொருமுறையும் நாம் இவ்வாறு பயணம் செய்யும் பொழுது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு ஆச்சரியம். இவர்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அல்லது எப்படி இவ்வாறு பயணிப்பது சாத்தியப்படுகின்றது எனக் கேட்பார்கள். நாம் பெரும்பான்மையான புலம் பெயர்ந்தவர்களைப்போல மத்தியதர அல்லது கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். இந்த வர்க்க நிலையை ஒருவருக்கான வருமானத்தைக் கொண்டே அளவிடுகின்றார்கள். இந்தடிப்படையில் நாம் அதிகளவான வருமானத்தைக் கொண்டவர்கள் அல்ல. ஆகவே இவர்களின் கேள்வி நியாயமானதே. ஆனால் நாம் இதைச் சாத்தியப்படுத்த நமது வாழ்வு முறையில் சில மாற்றங்களை செய்தோம். அதுவே நம்மை இவ்வாறு பயணிப்பதைச் சாத்தியப்படுத்தி உள்ளது எனலாம்.

east-coast-canada-184.jpg?w=300&h=225

முதலாவது பெரும்பான்மையானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளரும்வரை அவர்கள் எங்கும் அசைய முடியாதபடி அவர்களது வாழ்வை குறைந்தது இருபத்தைந்து வருடங்களையாவது  கட்டிப்போட்டுவிடும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகியவுடன் அவர்கள் தம் வழியில் சென்றுவிடுவார்கள். பெற்றோருக்கு வயதுபோய்விடும். அதன்பின் பணம் இருந்தாலும் ஊர்சுற்றி அலைவதற்கான உடல் வலு பெற்றோருக்கு காணமல் போய்விடும். உண்மையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் வழங்கினாலே போதும். அவர்கள் தம் வாழ்வை பார்த்துக் கொள்வார்கள். ஆனால் சில பெற்றோர்கள் தம்மை வருத்தி அதிகமாகவே செய்கின்றார்கள். இதனால் குழந்தைகள் பயனடைந்தபோதும் பெற்றோர் தமது வாழ்வை அழித்துக் கொள்கின்றார்கள் என்றால் மிகையல்ல.

2012-hawai-095.jpg?w=300&h=225

இரண்டாவது வீடு வாங்கிக் கொள்வார்கள். ஒருவர் வீடு வாங்குவதாக இருந்தால் அவரின் வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு மாதாந்த வீட்டுக் கடனை அடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கமைய பெரும்பான்மையானவர்களால் அவர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தால் வீடு வாங்க முடியாது. ஆனால் வீடு வாங்குவார்கள். பின் அதற்காக ஓடி ஓடி உழைத்து தம் வருமானத்தின் பெரும் பகுதியை வீட்டுக்கு முதலீடு செய்கின்றனர். இது இவர்களை மேலும் இறுகக் கட்டிப்போட்டுவிடும். சிலர் ஆடம்பரமான பெரிய வீடுகளை வாங்குவார்கள். இவர்களால் வேறு எதையும் நினைத்துப்பார்க்கவே முடியாது. அல்லது வேறு வருமானங்களைக் கொண்டவர்களாக வியாபாரிகளாக இருப்பார்கள்.

2012-hawai-048.jpg?w=300&h=225

மூன்றாவது நூகர்வு கலாசாரத்திற்குள் அகப்பட்டு தமக்கும் குழந்தைகளுக்கும் விலை உயர்ந்த ஆடைகளையும் பொருட்களையும் வாகனங்களையும் வாங்குவார்கள். இக் கடன்களை அடைப்பதிலையே இவர்களின் வாழ்நாள் கழிந்துவிடும். இதனால் இவர்களின் வாழ்வு இயந்திரமயமாகி விடுகின்றது. அதேநேரம் சிலருக்கு இதுவே ஆனந்தமான வாழ்வாகவும் இருக்கின்றமையும் உண்மைதான்.  இருப்பினும் நாம் மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பின்வரும் சில முடிவுகளை எடுத்தோம். இது நாம் தொடர்ச்சியாக பயணம் செய்வதற்கு வசதியாகவும் உதவியாகவும் இருக்கின்றது.

east-coast-canada-090.jpg?w=300&h=225

குழந்தைகள் அழகானவர்கள். அவர்களுடன் நேரம் கழிப்பது ஆனந்தமானது. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிகமான பொறுப்பும் பொறுமையும் அவசியம். பல பெற்றோர்கள் தமது தெரிவுக்கு அப்பால் ஒரு சமுதாய எதிர்பார்ப்பிற்காக அல்லது  கடமைக்காக அல்லது தமது காமத்தின் விளைவாக குழந்தைகளைப் பெறுகின்றார்கள். குழந்தைகளுக்காக குழந்தைகள் பெறுவதும் அவர்களை அவர்களாக வளர்ப்பதும் ஒரு தவம். ம்!… எங்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைகளை நாமாகப் பெறாது முடிவு எடுத்தோமா அல்லது எங்களிடம் அதற்குரிய உடல் ஆற்றல்கள் இல்லையா என்பதை நாம் இங்கு கூறவில்லை. இதற்கு காரணம் நாம் தான் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம் எனக் கூறினால் அதில் ஒரு கௌரவம் ஆணவம் தொங்கு நிற்கும். எங்களால் பெறமுடியாது எனக் கூறினால் எமக்கு அந்த ஆற்றல் இல்லை என்பதாக கருதப்படும். இவ்வாறன ஆற்றலின்மை உடற் குறையல்ல. இது இயல்பான ஒன்று. ஆகவே குழந்தைகள் பெற்றவர்கள்  உயர்வானவர்களோ பெற முடியாதவர்கள் தாழ்ந்தவர்களோ அல்ல. இப் பிரச்சனைகள் தொடர்பாக சமூகத்தில் காணப்படுகின்ற நோக்கு நிலைகளினால் இதற்கான காரணத்தை நாம் கூறவில்லை. இது தொடர்பாக மீராபாரதியின் பதிவொன்றை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் குழந்தைகள் இல்லாமை நாம் பயணிப்பதற்கு பெரும் வசதியாக இருப்பதுடன் அதற்கான சந்தர்ப்பத்தையும் இந்த வயதில் நமக்கு வழங்கியுள்ளது.

east-coast-canada-110.jpg?w=300&h=225

இரண்டாவது நாம் ஆடம்பர செலவுகளை அதிகமாக செய்வதில்லை. அதிகமான உடுப்புகளோ பொருட்களோ கொள்வனவு செய்வதில்லை. சில ஆடைகளை இருபது வருடங்களாகவும் பயன்படுத்துகின்றோம். நேம் பிரான்ட் சமான்களை வாங்குவதில்லை. வாங்கிய வீடும் சிறிய வீடு. அதை நாம் வரும்வரை Shirleyயின் தாயும் தங்கைகளும் பொறுப்பெடுக்கின்றனர். இவ்வாறு உறவினர்கள் இல்லாதவர்கள் ஒரு வருட வாடகைக்கும் விடலாம். மேலும் நமது காரையும் விற்கின்றோம். இவ்வாறான தெரிவுகளும் வாய்ப்புகளும் நாம் பயணம் செய்வதை மேலும் இலகுவாக்குகின்றன.

2012-hawai-1077.jpg?w=300&h=225

இப் பயணம் Shirleyயின் கனவு. Shirley கனடாவிற்கு வந்ததிலிருந்து பல வேலைகளை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பாரதியை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்து தனது வாழ்வை தானே செப்பனிட ஆரம்பித்தார். கணக்காளருக்கான தொழிற்துறைசார் சான்றிதழலை (CGA) வேலை செய்து கொண்டு படித்து முடித்தார். இதன் பயனாக அத் துறையில் 12 வருடங்களாக வேலை செய்கின்றார். கடந்த எட்டு வருடங்களாக ஒரு வங்கியில் வேலை செய்கின்றார். தனது கனவுப் பயணத்தை மேற்கொள்வதற்காக அந்த வேலையை ஒரு வருடம் விடுவதற்கு தீர்மானித்தார். அவரது அதிர்ஸ்டம் மட்டுமல்ல அவர் நல்ல ஒரு வேலையாள் என்பதை தனது வேலைக் காலங்களில் நிறுபித்ததால் ஒருவருடம் விடுமுறையாக கொடுக்க முன்வந்துள்ளனர். வந்தபின் வேலை இருந்தால் தரலாம் என உறுதி அளித்துள்ளனர். இதை நாம் எந்தளவிற்கு நம்பலாம் என்பது கேள்விக்குறியானது. இருப்பினும் இது நாம் எதிர்பார்க்காதது. எமது பயணத்திற்கு கிடைத்த நேர்மறையான முதல் ஆதரவு இது. நாம் நமது வாழ்வை முடிவு செய்ய வேண்டும். பல விடயங்கள் இதற்கு எதிராக இருந்தாலும் சில விடயங்களாவது சாதகமாகவும் பயனுள்ளதாகவும் கிடைக்கும். நமக்கு இது மகிழ்ச்சியானது மட்டமல்ல. ஊக்கம் தருவதுமாகும்.

2012-hawai-2-214.jpg?w=300&h=400

மீராபாரதி கனடாவில் கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்தபோதும் நிரந்தர வேலைகளை எதுவும் செய்ததில்லை. இது அவரது தெரிவு. எந்த தொழிற்துறை சார்ந்தும் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. தனது துறையில் தொழில் செய்வதாயின் அத் துறையில் மேற்படிப்பு படிக்க வேண்டும். இவ்வாறான வாய்ப்புகளை தேடினார்.. ஆனால் அவை அவரது விருப்பத்திற்கு ஏற்றவையாக இருக்கவில்லை என்பதால் அந்த முயற்சியை கைவிட்டார். மேலும் குறிப்பிட்ட தொழிற்துறையில் தேர்ச்சி பெற்றவராக வர ஒரு இடத்தில் நிரந்தரமாக குறிப்பிட்ட காலமாவது தங்கி வாழ்வதுடன் அத் துறையில் கற்றுப் பயிற்சியும் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு இடத்தில் தன்னைக் கட்டிப்போட்டு வாழ அவருக்கு விருப்பமோ ஆர்வமோ இல்லை. மேலும் பணம் உழைப்பதற்காக மட்டும்  ஏதாவது ஒரு துறையில் விருப்பமில்லாமல் ஆர்வமில்லாமல் கல்வியைக் கற்று தொழிலை செய்யவும் விரும்பவில்லை. இதனால் அப்பப்ப கிடைக்கின்ற தொழில்களை ஒப்பந்தடிப்படையில் செய்தார். இது கஸ்டமானதுதான். ஆனால் சுதந்திரமானது. இதுவே அவர் தொடர்ச்சியாக தனியாகவும் கூட்டாகவும் பயணம் செய்வதை சாத்தியமாக்கியது. இப்பொழுது அவரது நோக்கமும் விருப்பமும் பயணம் செய்வதல்ல. அது வேறு ஒன்று. ஆனால் இந்தப் பயணத்தை சில காரணங்களுக்காகத் தொடர்கின்றார்.

2012-hawai-776.jpg?w=331&h=248

வாழ்க்கை நிரந்தரமானதில்லை. நமது வீடுகள் சொத்துகள் நிரந்தரமானதில்லை. இதை நாம் பயணம் செய்தும் பொழுது அனுபவபூர்வமாக உணரலாம். இதுவே பயணம் நமக்கு கற்பிக்கும் கல்வி. இவ்வாறு பயணங்களை மேற்கொள்வது தொடர்பாக சிந்திப்பது என்பது ஒரு மனநிலை. பயணத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். அறியாதவர்கள் அல்லது அவசியமற்றது என நினைப்பவர்கள் நம்மை முட்டாள்கள் என்பார்கள். இந்த விடயத்தில் சமூகத்தின் பார்வையில் நாம் முட்டாளாக இருப்பதையே விரும்புகின்றோம். ஏனெனில் வாழ்வது முக்கியமானது. அதுவும் நாம் விரும்பியபடி வாழ்வது மிக முக்கியமானது. வேலைக்காக மட்டும் வாழ்வது வாழ்வல்ல.

2012-hawai-1660.jpg?w=338&h=451

எமது பயணம் குறைந்த பணத்தில் அதிகளவிலான நாடுகளுக்குப் பயணம் செய்கின்ற வகையைச் சார்ந்தது. அதாவது ஆங்கிலத்தில் budget back bag traveler’s என்று சொல்வார்கள். இப் பயணத்திற்கான பணம் மட்டுமட்டாகத் தான் சேமித்துள்ளோம். உண்மையில் சேமித்துள்ளார் எனக் குறிப்பிடுவதே சரியானது. குறிப்பாக ஐரோப்பாவில் பயணம் செய்வது கனடாவில் வாழும் எங்களுக்கு இரட்டிப்பு செலவு. பணமாற்றம் செய்யும் பொழுது நமது பணம் அரைவாசியாகிவிடும். இதைவிட அந்த நாடுகளில் விலைவாசிகளும் உயர்வானவை. இதிலிருந்து தப்புவதற்காக இதுவரை செய்யாத வேறு சில விடயங்களை புதிதாக முயற்சிக்க உள்ளோம். உதாரணமாக http://www.wwoof.net/ மூலமாக தோட்டங்களில் உழைப்பதன் மூலம் தங்குமிடத்திற்கும் உணவிற்குமான செலவுகளை சரிசெய்து கொள்வது. சில நாடுகளில்http://www.hostelworld.com/ மூலமாக விடுதிகளில் தங்க தீர்மானித்துள்ளோம். இது ஐரோப்பாவில் பிரபல்யமானதும் மலிவானதுமாகும். ஆகவே இடம் பிடிப்பதும் கஸ்டமானது. மேலும்https://www.airbnb.ca/ இன் மூலமாக ஆடம்பர உல்லாசப் பயணத் துறை சூழல்களைத் தவிர்த்து சதாரண மனிதர்களுடன் வாழலாம். இவ்வாறான வழிமுறைகள் அந்தந்த நாட்டு சதாரண மக்களுடன் வாழ்ந்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதை அதிகரிக்கும். மேலும் போகின்ற வழிகளில் குறிப்பிட்ட நாடுகளுக்கான பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதினுடாக குறிப்படளவு பணத்தை சேமிக்காவிட்டாலும் பயணத்தை நாம் விரும்பியபடி தீர்மானிக்கலாம் என முடிவெடுத்துள்ளோம்.

2012-hawai-1599.jpg?w=319&h=239

நமது பயணம் ஜூலை மாதம் முதல் வாரம் இலண்டனிற்கு செல்வதில் இருந்து ஆரம்பிக்கின்றது. அங்கு நான்கு நாட்கள் தங்கிய பின் அங்கிருந்து ஸ்பைனுக்கு செல்கின்றோம். இங்கு ஒரு வாரம் தங்கிய பின் மொரோக்கோ செல்கின்றோம். இங்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் தங்குகின்றோம். பாலைவனங்களையும் பழைமை வாய்ந்த இடங்களையும் பார்ப்பதே இதன் நோக்கம். இங்கிருந்து நோர்வேக்குப் பயணமாகின்றோம். நண்பர்களுடன் சந்திப்பும் நூல்கள் அறிமுகமும் நடைபெறலாம். இங்கு மூன்று நாட்கள் தங்கிய பின் சுவிடனுக்குப் பயணம் செய்கின்றோம். சுவிடனில் இயற்கை விவசாயம் செய்கின்ற இடத்தில் இரண்டு கிழமைகள் தங்கி வேலை செய்வதனுடாக கற்கவும் போகிறோம். இந்த இடங்களை http://www.wwoof.net/ என்ற இணையத்தளத்தில் பணம் கட்டி அங்கத்தவராக இணைந்ததனுடாகப் பெற்றுக் கொண்டோம். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் பணத்தைக் கட்டி பெறலாம். ஆனால் சில நாடுகளில் இருக்கும் நண்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை தாமாகவே தந்ததால் அவசியப்படவில்லை. சுவிடனிலிருந்து பின்லாந்து சென்று அங்கும் இருவாரங்கள் ஒரு இடத்தில் தங்கி வேலை செய்யப்போகின்றோம். இவ்வாறு இரஸ்சியாவில் சென் பீட்டர்ஸ்பேக் மற்றும் மொஸ்கோ ஆகிய இடங்களில் ஒவ்வொரு வாரம் தங்கி நின்று வேலை செய்யப் போகின்றோம். இந்த இடங்களில் எல்லாம் மேற்குறிப்பிட்டவாறு ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்கள் அவர்களுக்குத் தேவையான வேலைகளுக்கு பங்களிப்பு செய்வதனுடாக நமது தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளை ஈடுசெய்கின்றோம். மேலும் இதனுடாக அந்த நாட்டு மக்களுடன் நெருக்கமாக பழகும் சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன. வேலையில்லாத நேரங்களில் அந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம். இவ்வாறு செய்வது நமது கடந்த கால பயணமுறைகளிலிருந்து மாறுபடுகின்றது.

இரஸ்சியாவிலிருந்து ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு முக்கியமாக இத்தாலிக்குப் போய் பின் அல்லது நேராக கீரிசுக்குப் போகின்றோம். இந்தியாவைப் போல கீரிஸ் நம் கனவு நாடுகளில் ஒன்று. சோக்கிரட்டிஸ் போன்ற மாபெரும் மனிதர்கள் பிறந்து வாழ்ந்த நாடு. இங்கும் இரண்டு கிழமைகள் தங்கிய பின் இந்தியாவிற்கு குறிப்பாக காஸ்மீருக்குச் செல்கின்றோம். இங்கிருந்து நேபாளம், பூட்டான், பர்மா, தாய்லாந்து. பிலப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இறுதியாக மீண்டும் இந்தியாவிற்கு வந்து நமது தேனிலவு இடமான கேரளாவில் சில நாட்கள் தங்குகின்றோம். இதன்பின் 2017ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் இலங்கையில் பயணத்தை முடிப்பதாக திட்டம். மேற்குறிப்பிட்டவாறு நாட்களை தெரிவு செய்தற்கு குறிப்பிட்ட நாடுகளில் உல்லாசப் பயணங்கள் உச்சமாக இருக்கின்ற நாட்களை தவிர்ப்பதனுடாக நமது செலவுகளை கட்டுப்படுத்துவதும் ஒரு நோக்கமாகும். உண்மையில் நாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே பயணத்தை ஆரம்பித்திருந்தால் அது மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பயணத்தைப் பிற்போட வேண்டி ஏற்பட்டது.

2012-hawai-2013.jpg?w=300&h=225

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் (ஹவாய்) விழுந்த சூரியன்

இப் பதிவின் நோக்கம் நமது அனுபவங்களைப் பகிர்வதுடன் இவ்வாறு பயணம் செய்கின்ற சக நண்பர்களின் தொடர்புகளை பேணுவதும் அவர்களது அனுபவங்களை பெறுவதுமாகும். இது எமது பயணத்தை இலகுவாக்கும். வாழ்க்கை ஒரு பயணம். அதில் இவ்வாறு பயணம் செய்வது என்பது மேலதிக அனுபவமாகும். மேலும் நமது திட்டத்தை நமது நண்பர்களிடம் கூறியபோது அவர்களது வேண்டுகோளும் இவ்வாறான பதிவுகளை தொடர்ச்சியாகவும் தவறாதும் செய்யும்படி கேட்டார்கள். இதனுடாக அவர்களின் விருப்பதையும் நிறைவு செய்ய முயற்சிக்கின்றோம். நாம் நமது பயணத்தை ஆரம்பிக்கும் வரை இதுவரை நாம் செய்த பயணங்கள் தொடர்பான நமது அனுபவங்களை இந்த வலையில் பதிவு செய்ய முயற்சிப்போம். என்றும் இதனுடாகத் தொடர்பில் இருக்க முயற்சிப்போம்.


உங்கள் வாழ்த்துகளுடனும் ஆதரவுடனும் நமது பயணம் இனிதாக நடைபெறும் என நம்புகின்றோம். நமது பதிவுகள் பயணங்கள் தொடர்பான உங்கள் ஆலோசனைகள் ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

pinery-beach-070.jpg?w=321&h=241

நாம் இதுவரை சென்ற பயணங்களில் ஒரே ஒரு பயணத்தைத் தவிர மற்ற எல்லாப் பயணங்களிலும் சண்டை பிடித்து கோவித்துக் கொண்டிருப்போம். ஹாவாய்க்கு சென்ற பயணத்தில் மட்டும் பாரதி சண்டை பிடிப்பதில்லை என எடுத்த முடிவாலும் Shirleyயின் பயண முடிவுகளுடன் உடன்பட்டு பின்பற்றியமையாலும் சண்டையில்லாத கோவப்படாத ஒரு பயணமாக முடிந்தது. இந்தப் பயணமும் அவ்வாறு நடைபெறும் என நம்புகின்றோம்.


நட்புடன் Shirley & மீராபாரதி

-- தொடரும் --

https://ajourneytowardssun.wordpress.com/2016/05/05/சூரியனை-நோக்கி-ஒரு-பயணம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12வது நாள் – “ஓலா”விலிருந்து “சலாமி’ற்கு..

பயணக் குறிப்புகள்

12வது நாள் – “ஓலா”விலிருந்து “சலாமி’ற்கு..

IMG_0582நாம் பயணம் ஆரம்பித்த பின் இன்றுதான்  இருவரும் காலையில்  நேரத்திற்க்கு எழுந்து குளித்து வெளிக்கிட்டோம்.. ஏனெனில் சிவிலி (Spain-Seville)  நகரத்திலிருந்து தரிவ்வா (Spain-Tarifa) என்ற நகரத்திற்கு செல்வதற்கு  காலையிலையே பஸ் எடுக்க வேண்டும். பிளாசா நோவா (Plaza Nueva) என்ற இடத்திற்கு நடந்து சென்று டராம் (Ram) எடுத்து சென்.செபஸ்தியான் (San Sebastian) பஸ் நிலையத்தை பத்து நிமிடத்தில் (8.30 மணிக்கு) அடைந்தோம். 9.30 மணிக்குத்தான் பஸ் உள்ளது எனக் கூற அதற்கான பயணச் சீட்டை 40 ஈரோக்கள் கொடுத்து வாங்கிவிட்டு வெளியில் வந்து ஒரு கடையில் தேநீரையும் வாங்கி நேற்று வாங்கிய இனிப்பு பனிசையும் சாப்பிட்டோம். மர நிழலில் இருந்த எங்களை மெல்லிய தென்றல் காற்று வருடிச் சென்றது. அது சரி தென்றலும் காற்றும் ஒன்றா?

IMG_0583தரிவ்வாவிற்கு (Tarifa) மதியம் 12.30 மணிக்கு பஸ் வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்திலிருந்து துறை முகத்திற்கு 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்து செல்லும் வழியில் ஒரு கடையில் கடலைக் கறியும் சோறும் உள்ள படத்தைப் பார்த்தோம். அழகாக இருந்தது.  விலையும் 5 ஈரோ என்றிருந்தது. எங்களுக்கு பசியும் எடுக்க வாயும் ஊற உள்ளே சென்றோம். இன்னுமொரு பயணி ஒரு சட்டியில் பருப்பு நிறைந்திருக்க நடுவில் சோறு கொஞ்சம் இருக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இப்படி நமக்குப் பரிச்சயமான முட்டை மற்றும் மரக் கறிகள் எனப் பல நம் நாட்டு வகைக் கறிகள் இருந்தன. இக் கடையின் உரிமையாளர் ஜெர்மனியில் இருந்து வந்தவர். இப்பொழுது இங்கு வசிக்கின்றார்.

நேற்று முந்தினம் மலக்காவில் சாப்பாடு கிடைக்காத அனுபவத்தினாலும் மொரோக்கோவில் இன்று நோன்பு ஆரம்பிப்பதாலும்  சாப்பிட்டு விட்டு துறைமுகத்திற்கு செல்வது எனத் தீர்மானித்தோம். பின் நமது நடைப் பயணத்தை ஆரம்பித்தோம். பலமான காற்று நம்மை எதிர் திசையில் தள்ள பலரிடம் துறை முக இடத்தை விசாரித்தபடி சென்றோம். நம்மிடம் வரைபடம் இல்லாததாலும் நமக்கு பிரஞ்சும மற்றம் ஸ்பானிய மொழி தெரியாததாலும் சைகை மொழியும் தனித் தனி சொற்களையும் பயன்படுத்தினோம். நாம் சென்ற வழியில் துறைமுகத்திற்கு அருகாமையில் பயணிகள் தகவல் மையம் இருந்தது. அதில் விசாரித்தபோது இன்று பலமான காற்று வீசுவதால் கப்பல்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்கள். சில நேரம் முழு நாட்களுமே இடைநிறுத்தப்படலாம் என எச்சரித்தார்கள். இருப்பினும் துறைமுகத்திற்குச் சென்று விசாரிக்கச் சொன்னார்கள். இரண்டு கப்பல் நிறுவனங்கள் இப் போக்குவரத்துச் சேவையை செய்கின்றன எனவும் அவர்களே நிலைமையைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்ற மேலதிக தகவல்களையும் தந்தார்கள்.

முழுமையாக இடை நிறுத்தினால் இங்கு தங்குவதற்கு இடம் தேட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த பணம் வீணாகிவிடும் என்ற மனக் கலக்கம் நமக்குள் உருவாகியது. இவ்வாறான பயணத்தில் எவ்வாறான சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

IMG_0585இப்பொழுது மொரோக்கோ (Morocco- Tanger) செல்வதற்காக தரிவ்வா (Spain-Tarifa) என்ற நகரத்தில் காத்திருக்கின்றோம். இன்று காற்று அதிகமாக இருப்பதால் காலையிலிருந்து மொரோக்கோ செல்கின்ற கப்பல்கள் (Ferry) இடை நிறுத்தப்பட்டுள்ளன எனவும் மூன்று மணிக்கு காற்றின் வேகம் குறையும் பொழுது மீள ஆரம்பிப்பார்கள் என்றும் அறிவித்துள்ளார்கள். இதனால் காலையிலிருந்து பலர் குழந்தைகளுடனும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் அவர்களுடன் இணைந்து காத்திருந்தோம். பின்பு மூன்று மணிக்குச் செல்வதையும் இடைநிறுத்தி 5 மணிக்கு சாத்தியம் என அறிவித்தார்கள்.

IMG_0591இந்த இடைவெளியில் அமெரிக்காவிலிருந்த வந்த பயணிகள் இருவருடன் உரையாடினோம். ஒருவர் லெபனானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆனால் அமெரிக்காவில் வாழ்பவர். மற்றவர் அமெரிக்கர் (?). முதலாமவர் தானும் ஒரு பயணி எனவும் ஆனால் தொடர்ச்சியாகப் பயணம் செய்ய சாத்தியப்படவில்லை எனவும் அதேநேரம் நாம் செல்லவிருக்கின்ற பல நாடுகளுக்கு எற்கனவே பயணம் செய்திருப்பதாகவும் கூறினார். தனது பயணத்தின் போது அவுஸ்ரேலிய பயணி ஒருவர் தனக்கு கங்காரு சாவி கொழுவியை நினைவாக தந்ததாகவும் அன்றிலிருந்து தானும் சந்திக்கும் பயணிகளுக்கு நினைவுப் பொருளொன்றை அளிப்பதாகவும் கூறி சாவி கொழுவி ஒன்றைத் தந்தார்.

IMG_0593பாரதிக்கு இப் பயணத்தில் எழுதுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் கஸ்டமாக இருக்கின்றது. இப்படி அருமையாக கிடைத்த இந்த நேரத்தில் இப் பதிவை எழுத ஆரம்பித்தார்.  3.30 மணிபோல்  இரண்டு கப்பல்களில் ஒன்று நான்கு மணிக்குப் புறப்பட ஆரம்பிக்கின்றது எனக் கூறினார்கள்.

கடந்த பன்னிரென்டு நாட்களில் நான்கு நேர மாற்றங்களை மட்டும் எதிர்கொண்டோம். மேலும்நாம் இப் பயணத்தை  ஆரம்பித்தபின் எமது அடுத்த கண வாழ்க்கைப் பயணம் நம் கைகளில் இல்லை. பல சூழ்நிலைகளிலும் பலரது கைகளிலும் தங்கியிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டோம்.  ஏனெனில் இன்று என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தது. அல்லது எற்கனவே பதிவு செய்த விடுதிக்கான கட்டணம் வீணாகிவிடும். மொரோக்கோ செல்வதற்கான பயணச் சீட்டை 73 ஈரோ கொடுத்து வாங்கினோம். மொரோக்கோவில் நோன்பு என்பதால் அங்கு சென்று உண்பதற்காக கை காவலாக  இரண்டு பனிஸ் வாங்கினோம். இறுதியாக ஸ்பைன் நாட்டை விட்டு நமது பயணத்தின் மூன்றாவது நாடான மொரோக்கோ செல்ல கப்பலில் எறினோம்.

IMG_0605முதன் முதலாக ஒரு சமுத்திரத்தை ஒரு கரையிலிருந்து இன்னமொரு கரைக்கு கப்பலில் கடந்தோம். ஒரு பக்கம் வட அந்திலாந்திக் சமுத்திரம். மறுபக்கம் அல்பொரன் கடல். கப்பலில் வைத்து விசா குத்தி மொரோக்கோ குடிவரவு பரிசோதகர்கள் வரவேற்றார்கள். எற்கனவே மொரோக்கோ வாகன சாரதிகள் தொடர்பாக வாசித்ததினால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் உறுதியாகவும் இருந்தோம். ஒரு சாரதி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு 100 டிராம்கள் கேட்டார். நாம் 50 டிராம்கள் தருவோம் என்றோம். எற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் 20 டிராமுக்கு 50 டிராம்கள் வாங்கி எம்மை மடக்கி விட்டார் என்பதை நாம் தங்கியிருந்த விடுதிக்கு வந்தபோது அறிந்து கொண்டோம்.

ஒரு சமூத்திரம் இரண்டு நாடுகளைப் பிரிக்கின்றது. இடைப்பட்ட தூரம் 20 மைல்கள் (32 கி,மீ) மட்டுமே. ஆனால் எவ்வளவு வேறுபாடுகள். வாழ்க்கைத் தர வித்தியாசங்கள். எப்படி இது சாத்தியம்? யார் காரணம்?

IMG_0626நாம் தங்கியிருந்த விடுதிக்கு மிகவும் குறுகிய பாதைகளினுடாக வந்தபோது ஒருவர் நமது காருடன் ஒடி வந்தார். நாம் காரை விட்டு இறங்கியவுடன் இதுதான் விடுதி எனக் காட்டி தான் செய்த உதவிக்காக பணம் கேட்டார். விடுதியின் வரவேற்பறையிலிருந்த பெண் எம்மை மொரோக்கோ பண்பாட்டுடன் தேநீர் தந்து வரவேற்றார்.

இதுவரை நாம் “கிராசியஸ்” சொன்னோம் இனி சில நாட்களுக்கு “சுக்கிரியா” சொல்லப் பழக வேண்டும்;.

“கிராசியஸி”லிருந்து “சுக்கிரியா”விற்கு நாமும் மெல்ல மாறினோம்.

வணக்கம் – ஓலா – சலாம்
நன்றி – கிராசியஸ் – சுக்கிரியா

மொரோக்கோ பிரன்ஞ் காலனியத்திற்கு உட்பட்டிருந்த நாடு. பிரஞ்சு மொழியை சாராளமாகப் பேசுகின்றனர். ஆனால் “பொஸ்ஸொவா” அல்லது “மசி” என்ற சொற்களை சாதாரணமாக சொல்வதில்லை.

அடுத்த பதிவில் ;முதன் முதலாக ஒரு முஸ்லிம் நாட்டில் பயணிகளாக நாம் பயணித்த அனுபவத்தைப் பகிர முயற்சிக்கின்றோம்..

10.06.2016

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/06/10/12வது-நாள்-ஓலாவிலிருந்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.

18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.

தொலைந்துபோக…

IMG_2305நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே  நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும்  நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.

IMG_1058இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும்  தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின்  மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.

IMG_0711இந்த வசிப்பிடங்களுக்கான வீதிகள் மிகவும் குறுகியவையாகவும் சுற்றிச் சுற்றி செல்பவையாகவும் திடிரென்று முடிபவையாகவும் இருக்கும். இக் குறுகிய வீதிகளின் மேலாலும் வீடுகள் விஸ்தரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும். ஆகவே பல இடங்களில் இக் குறுகிய வீதிகள் இருட்டாக இருக்கும். சில  சந்திகளில் மட்டுமே வெளிச்சங்கள் உள்ளன. ஆகவே இதனுடாக நடந்து திரிவதற்கு ஒரு மனப்பயம் தயக்கம் உள்ளது. இந்த மதீனாக்களைச் சுற்றி உயரமான பெரிய சுவர்கள் கட்டப்படிருக்கின்றன. ஒவ்வொரு மதீனாக்களுக்கும் பல வாசல்கள் இருக்கின்றன. இவை முக்கியமான சந்திகள். அடையாளங்கள். இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி செல்லும் குறுகிய பாதையால் தொடர்ந்து சென்றால் எதாவது ஒரு வாசலை அடையலாம். காலை வேளைகளில் ஒரு வாசலினுடாகப் பயணித்து மீண்டும் அதே வீதியால் வருவது என்பது மிகவும் சவாலான விடயம்.IMG_1031 ஏனெனில் பத்து மணியின் பின் பல கடைகளை திறக்கப்பட்டு புதிய பாதையாக காட்சியளிக்கும். மீள வருவதற்கு நாம் வைத்திருந்த குறிப்புகளை கண்டுபிடிப்பது மிகவும் கஸ்டமானதாக இருக்கும். இப்படி காலை மதியம் மாலை இரவு என ஒவ்வொரு நேரத்திற்கும் வித்தியாசமான ;தோற்றத்தை தருபவையாக இந்த் மதீனாக்கள் இருக்கின்றன. இதற்குள் கார்கள்  தடை  செய்யப்பட்டுள்ளன. தள்ளு வண்டில்களும் கழுதைகளும் மட்டுமே; பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் நீர் விநியோக தாங்கிகள் அழகாக கட்டப்பட்டு நீர்ப்பாசனத் திட்டம் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து வரும் நீரையே அனைவரும் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர்.

IMG_1177

குடிநீர்

பல மாற்றங்கள் இவர்கள் வாழ்வில் ஏற்பட்டபோதும் இன்னும் பழங்கால நடைமுறை வாழ்வுடன் குறிப்பாக மதீனாக்களின் உள்ளே  வாழ்கின்றார்கள். பார்பர்களின் தான்ஜீர் (tagine) உணவு வகைகளே பிரபல்யமாக இருக்கின்றன. இதைவிட இனிப்பு பண்டங்களும் மாலை நேரத்தில் வீதியோரத்தில் பெண்கள் விற்கின்ற தோசை ரொட்டி போன்ற உணவு பிரபல்யமானவை. அதேநேரம் கடந்த கால வாழ்வுமுறைகள் இன்று வெறுமனே சான்றுகளாக மட்டுமே உள்ளன. உதாரணத்திற்கு முன்பு இவர்களின் வீடுகளில் இரண்டு விதமான அழைப்பு மணிகள் உள்ளன. ஒன்று குடும்பத்தாருக்கு. மற்றது வெளியாருக்கு. இந்த அழைப்பு மணியின் ஒலிக்கு ஏற்ப வீட்டினுள் இருக்கின்ற பெண்கள் உள்ளறைகளுக்குச் செல்வார்கள். அல்லது அப்படியே இருப்பார்கள். இந்த அழைப்பு மணி உள்ள கதவுகள் இன்றும் உள்ளன. ஆனால் யாரும் பயன்படுத்துவதில்லை.

IMG_1142இந்த நாடு பிற்காலங்களில் ஸ்பானியர்களாலும் பிரான்சினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 1956ம் ஆண்டு  விடுதலையடைந்தது. அராபிய மொழி உத்தியோக பூர்வ மொழியாகப பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் பிரஞ்சு மொழியைப் பெரும்பாலானவர்கள் சாராளமாகப் பேச சிலர் ஸ்பானிய மொழியையும் பேசுகின்றார்கள். இந்த மூன்று மொழியும் தெரியாமல் இந்த நாட்டில் பயணிப்பது என்பது கொஞ்சம் கஸ்டமான காரியம். ஏனெனில் ஆங்கிலம் பேசுகின்றவர்கள் மிக மிகக் குறைவு.

IMG_1077இன்று ஒரு மொரோக்கோ பிரஜையாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டில் சக மத பிரஜைகளாக யூதர்கள் மட்டுமே இருக்கின்றனர்.  மற்றும் படி எந்த சக மதத்தினரும் பிரஜைகளாக முடியாது என்கின்றது சட்டம் எனக் கூறுகின்றார்கள். இந்த நகரங்களில் பல திசைகளில் இருக்கின்ற பல பள்ளிவாசல்களில் இருந்து ஐந்து தொழுகைக்கான நேரங்களின் போதும் ஒரே நேரத்தில் பாங் ஒலி கேட்கும். இதுவே இது ஒரு முஸ்லிம் நாடு என்பதை பறைசாட்டிக் கொண்டிருக்கும்.

IMG_2294பயணத்தின்போது பாதுகாப்பாக பயணிக்கலாம். அதிகம் பிரச்சனையில்லை;.  பெண்கள் தனியாக பயணிப்பது கொஞ்சம் கஸ்டம். கவனமாகப் பயணிக்க வேண்டும். முடிந்தளவு அதிக மனிதர்கள் கூட்டமாக இருக்கின்ற இடங்களில் சுற்றித் திரிவது நல்லதும் பாதுகாப்பானதுமாகும். இருப்பினும் சில பெண்கள் தனியாகச் சுற்றித் திரிகின்றார்கள்.

உல்லாசப் பயணிகள் என அடையாளம் கண்டால் பலர் பல சமான்களை விற் ஓடிவருவார்கள். சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை மதீனாக்களை சுற்றிக் காட்ட முன்வருவார்கள். தாம் உதவி செய்ய விரும்புவதாக கூறுவார்கள். நாம் வழியைத் தவறவிட்டவர்கள் என அறிந்தால் தாம் வழிகாட்டுவதற்கு முண்டியடிப்பார்கள். இவர்களது உதவியை ஏற்றுக் கொண்டு சென்றால் இறுதியில் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆகவே ஆரம்பத்திலையே கேட்பதற்கு நன்றி எனக் கூறி  தவிர்த்துவிட வேண்டும். முதல் முறை ‘சுக்கிரான்’ என நன்றி தெரிவிக்கலாம். அல்லது இன்னும் உறுதியாக கூறுவதாயின் ‘லா சுக்கிரா’ சொன்னால் மீளவும் கேட்கமாட்டார்கள். மேலும் குறிப்பாக  பாலைவனங்கள் அல்லது நகரை அல்லது மதீனாவைச் சுற்றிப் பார்க்க யாரையாவது நியமித்தால்  அவர்களுடன் தெளிவான உடன்பாட்டிற்கு எழுத்து மூலம் வாருங்கள். மேலும் அவர்கள் கூறுகின்ற பணத்திலிருந்து ஒன்றில் மூன்று பங்கை கேட்கலாம். அரைவாசிக்கு கூட செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பதிவில் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரங்களிலும் நாம் பெற்ற அனுபவங்களை எழுத முயற்சிக்கின்றோம்.IMG_2124

https://ajourneytowardssun.wordpress.com/2016/06/20/18-நாட்கள்-மொரோக்கோ-மதினாக/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நான்கு நாட்கள்

ஸ்பெயினிலிருந்து நோர்வேக்குப் பயணமானோம். நாம் வருவது நோர்வேக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ நன்றாக மழை பெய்தது. மப்பும் மந்தாரமுமாகவே இருந்தது. நோர்வேயில் நம்மை அழைத்துச் செல்ல (தங்கையின் கணவரின்) உறவினர் ஒருவர் வந்ததினாலும் அவர் வீட்டில் தங்கியதாலும் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. கத்திரிக்காய் பிரட்டல் மற்றும் பருப்புக் கறியுடன் நல்ல தமிழ் சாப்பாடு. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம்.

IMG_3283நோர்வே வந்தவுடன் சஞ்சயன் தன்னை அழைக்கும் படி கூறியிருந்தார். மதிய சாப்பாட்டின் பின் அவரை அழைத்தேன். அவர் தனக்கு வேலை முடிந்து விட்டதாகவும் தான் அழைத்துச் செல்ல வருவதாகவும் கூறினார். நோர்வேயிலுள்ள முக்கியமான மிக உயரமான ஸ்கேட்டிங் செய்கின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். பின் தமிழ் கடை ஒன்றில் சூசியமும் சாப்பிட்டு தேநீரும் குடித்தோம். இரவு வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.

நாம் தங்கியிருந்தது ஒஸ்லோவின் எல்லைக்கு அருகாமையில் இருந்த கிராமம் ஒன்றில். காலை எழும்பி நாமாகவே பஸ் பிடித்து ஒஸ்லோ நகருக்குச் சென்றோம். திங்கட்கிழமை எவ்வாறு சுவிடனுக்கு செல்வது என விசாரித்தோம். புகையிரதத்திற்கு 1500 குரோணரும் பஸ்சிற்கு 500 குரோணரும் சொன்னார்கள். இப்படிச் செல்வதா அல்லது பணத்தைச் சேமிப்பதற்காக  றிட்சக்கில் (Hitchhik) செல்வதா என யோசித்தோம். மற்றவர்களுடன் உரையாடிவிட்டு முடிவெடுப்போம் எனப் பிற்போட்டோம்.

IMG_3486ஒஸ்லோவின் முக்கியமான ஒரு இடமான ஒபேரா கவுஸ் பார்க்கச் சென்றோம். மழையில் நனைத்து சென்ற எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அன்று அது முடியுள்ளதாக கூறினார்கள்.  மீண்டும் மழையில் நனைந்தவாறு நடந்து வந்து பெரும் மழைக்கு ஒதுங்கி காத்திருந்தோம்.  நன்றாக பசி எடுக்க பக்கத்தில் இந்தியன் கடைகள் இருக்கா என நம் தொலைபேசியில் தேடினோம். பக்கத்தில் பஞ்சாபி கடை இருப்பதாக கூறியது. அதை நோக்கி செல்லும் பொழுதே சஞ்சயனுக்கு அழைப்பு விடுத்தோம். அவர் தான் கொஞ்சம் பிந்தி வருவதாக கூறி எங்களைச் சாப்பிடச் சொன்னார். 90 குரோணருக்கு ஒரு தாளி இருந்தது. இரண்டு தாளிகள் எடுத்தோம். நல்ல சாப்பாடு. சாப்பிட்டு முடிய சஞ்சயனும் தனது மகளுடன் வந்தார். மகளை கடை ஒன்றில் இறக்கிவிட்டு நாம் நோர்வே தமிழர்கள் “தூசனப் பார்க்” (Vigeland /Frogner Park) என அழைக்கின்ற ஒரு பார்க்கிற்கு சென்றோம்.

IMG_3346நமக்கு எல்லாவற்றையும் எதிர்மறையாகவும் தவறாகவுமே பார்த்துப் பழக்கம். அது “தூசனப் பார்க்” இல்லை. ஒரு சிற்பக் கலைஞர் (Gustav Vigeland) மனித உறவுகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமல்ல உணர்வுகளையும் மிக அழகான சிற்பங்களாக வடித்திருக்கின்றார். இருபது வருடங்களுக்கு மேலாக இந்த சிலைகளை செதுக்கியுள்ளார். அனைத்து சிற்பங்களும் நிர்வாணக் கோலத்தில் இருப்பதால் அவை “தூசனப் பார்க்” என நம் தமிழர்களால் அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்த சிற்பங்கள் நிர்வாணத்திற்கும் அப்பால் மிக நுண்ணுணர்வுடன் செதுக்கப்பட்டவை. முள்ளந் தண்டின் எலும்புகள் மட்டுமல்ல அதிலிருக்கின்ற ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மனிதரின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடல்களில் ஏற்படும் மாற்றங்களையும் மிக நூணுக்கமாக செதுக்கி வடிவமைத்த சிலைகள் இவை..

IMG_3386மாலை தமிழர்கள் நிர்வகிக்கும் அழகான கடை ஒன்றில் தேநீரும் நல்ல வடையும் சாப்பிட்டோம். றிப்னாட்டிசம் மூலமாக மன நோய்களைத் தீர்க்கும் நல்லையா பத்மநாதன் அவர்களும் எம்மைச் சந்திக்க வந்தார். இச் சந்திப்பை  முடித்துக் கொண்டு சரவணனின்  வீடு நோக்கி சென்றோம். சராவுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு 12 மணிபோல வெளியே வந்தால் அப்பொழுதுதான் இருள ஆரம்பித்ததுபோல மெல்லிய இருட்டு சூழ்ந்திருந்தது. சஞ்சயன் நாம் தங்கியிருந்த வீட்டில் எம்மைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.

IMG_3285காலை எழும்பி நமது உடைகளை கழுவிவிட்டு 12 மணிபோல ஒஸ்லோ நகரை நோக்கி பஸ்ஸில் சென்றோம். ஒருவருக்கான பயணச் சீட்டின் விலை 75 குரோணர். சாப்பாடு, பயணச் செலவுகள் மட்டுமல்ல தண்ணீரும் விலை கூடிய நாடு. ஆனால் இவர்களது குழாயில் வரும் நீர் குடிப்பதற்கு நூறு வீதம் உத்தரவாதமானது. இன்று இன்னுமொரு இந்தியன் கடையில் சாப்பிட்டோம். ஒருவருக்கு 99 குரோணர் கொடுத்தோம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்குப் பரவாயில்லை. மரக்கறி உண்பவர்களுக்கு பயனற்றது.

IMG_3493சாப்பிட்டுவிட்டு சிறிது தூரம் நடக்க இளவாளை விஜேயேந்திரன் ஏற்கனவே கூறியபடி அழைத்தார். தான் இன்னும் 10 நிமிடங்களில் வந்து ஏற்றுவதாக கூறி வந்தார். அவருடன் கற்காலத்தில் பயன்படுத்திய கற்கள் இருந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். இது இன்னுமொரு முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பார்க் (Ekebergparken). இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் சுற்றி நடக்க வேண்டும். மழையும் தூரிக் கொண்டிருந்தது. பெரும் மழை பெய்யும் சாத்தியமும் தெரிந்தது. பெரும் மழை பெய்தால் திரும்பி வருவோம் எனத் தீர்மானித்துக் கொண்டு சென்றோம்.

IMG_3503இங்கு ஒளியில் ஒரு படைப்பை ஒருவர் உருவாக்கியிருக்கின்றார். குகை போன்ற இடத்தினுள் செல்ல  நமது வல மற்று இடப் புறங்களில் ஒளியின் நிறங்கள் மாறும். அதன் அருகில் சென்றுபார்த்தால் அது ஒரு பாதாளம் போல தோன்றும். அல்லது அண்ட வெளிபோல தோன்றும். அதைக் கடந்து இன்னுமொரு இடத்திற்குச் செல்ல மேலே வட்டமாக ஒரு வெளி. கீழே நாம் இருப்பதற்கு வட்ட வடிவிலான இருக்கை. அதில் இருக்கும் பொழுது அந்த அமைதியில் தியானம் தானாக நடைபெறுகின்றது. நாமாக அமைதியாகவில்லை. அந்த சூழல் அமைதியை உருவாக்க நாமும் அதை உள்வாங்கி அமைதியாகின்றோம். மிக இனிமையான வித்தியாசமான அனுபவம். ஒஸ்லோவின் அருகில் இருந்தும் பலர் சென்று பார்க்கவில்லை எனக் கவலைப்பட்டார்கள்.

IMG_3479இந்த இடத்திலிருந்து விஜேயின் வீடு நோக்கிச் சென்றோம். அவரது துணைவியார் ஆறு கறிகளுடன் சோறு சமைத்திருந்தார். பசியில் படம் எடுக்க மறந்துவிட்டோம். நல்ல வெட்டு ஒன்று வெட்டிவிட்டு உதைப்பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். விஜேயேந்திரன் அதிபர் கனகாசபாபதி மீது மிக அதிகம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்றார். அவர் நான்கு வருடங்கள் மட்டுமே அதிபராக இருந்தபோதும் பாடசலையிலும் மாணவர்களின் கல்வியிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் கூறினார். அதிபரைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தால் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பார் என அவரது துணைவியார் கூறினார்.

IMG_3498இரவு 12 மணிபோல நமது வீட்டில் அவரும் அவரது மகனும் கொண்டுபோய் விட்டார்கள். காலை எழுந்து சுவிடனுக்குப் பயணமானோம். றிட்சக் செய்வோம் என யோசித்தோம். ஆனால் நமது தோலின் நிறத்திற்கு அது சவால் நிறைந்த பயணம். இவ்வாறு சிந்தித்தனால் காலை  பஸ்ஸை தவறவிட்டு மதியத்திற்கே பதிவு செய்ய முடிந்தது. விஜேயேந்திரன் நாம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து நம்மை அழைத்துச் சென்றார்.

IMG_3400நோர்வேயில் ஒஸ்லோ நகரில் தங்குவதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் சங்கர், சஞ்சயன், மற்றும் விஜேயேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு கிடைத்திருக்காவிட்டால் நன்றாக கஸ்டப்பட்டிருப்போம். முகநூலில்  அறிமுகமாகி உட்பெட்டியில் உரையாடி உருவான உறவிது. அவர்களே முன்வந்து நம்மை அழைத்துச் சென்று பங்களித்தனர். நாம் சென்ற அன்றுதான் சங்கர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் ஒன்றாக கண்டோம். அதன்பின் அனைவரையும் ஒன்றாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் படம் ஒன்று எடுக்க தவறிவிட்டோம்.

கடந்த ஒரு மாத காலமாக நமது  பணத்திலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பங்களிப்பிலும் தங்கிப் பயணம் செய்தோம். இனிவரும் ஒன்றரை மாதங்கள் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் நிற்கின்ற இடங்களில் வேலை செய்யப் போகின்றோம். பாரதிக்கு ஏற்கனவே இவ்வாறன அனுபவங்கள் இருந்தபோதும் shirleyக்கு இதுவே முதல் முறை. இதுபற்றிய அனுபவத்தை எழுதும் வரை காத்திருங்கள்.IMG_3514

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/08/நோர்வேயில்-நான்கு-நாட்கள/

Link to comment
Share on other sites

58 minutes ago, கிருபன் said:

இந்த இடத்திலிருந்து விஜேயின் வீடு நோக்கிச் சென்றோம். அவரது துணைவியார் ஆறு கறிகளுடன் சோறு சமைத்திருந்தார்.

நல்ல வடையும் பச்சை மிளகாய் சம்பலும் கிடைத்திருக்குமே !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4.9.2016 at 10:51 AM, கிருபன் said:

சூரியனை நோக்கி ஒரு பயணம்!

MAY 5, 2016 / மீராபாரதி

 

east-coast-canada-353.jpg?w=300&h=225

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் (பிரின்ஸ் எட்வேட் ஹைலன்ட்) சூரியன் எழுந்தபோது

வெளிநாட்டு.... வாழ்வைப் பற்றி,   அழகாகாக விமர்சித்துள்ளார், மீரா பாரதி.
இந்தப் பதிவு, இன்று தான்... என் கண்ணில் பட்டது. 
மிகுதியை... நேரம் கிடைக்கும் போது, நிச்சயம் வாசிப்பேன்.
நல்லதொரு... இணைப்பை, எம்முடன்... பகிர்ந்து கொண்ட, கிருபன்ஜீக்கு, நன்றிகள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சுவாரஸ்யமாகப் போகின்றது. மேலும் இந்தப் பயணம் எப்படித் தொடருமோ என்னும் ஆவலைத் தோற்றுவிக்கின்றது ....!

தொடருங்கள் கிருபன்ஜி ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்

5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்

IMG_3980முதன் முதலாக எந்த ஒரு நாட்டிற்குப் போகும் பொழுது எப்பொழுதும் ஒரு பயம் தயக்கம் இருக்கும். புரியாத மொழி தெரியாத மனிதர்கள். பரிட்சயமில்லாத இடம். இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய தயங்கியதில்லை. அப்படித்தான் இலன்டனிலிருந்து ஸ்பெயினுக்கான நமது பயணம் ஆரம்பமானது. இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் குடிவரவு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் வரவேற்க வெளியே வந்தோம். மலக்கா விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு பஸ்ஸில் அரை மணித்தியாலத்தில் செல்லலாம் என அறிந்தோம். ஆனால் அடுத்த பஸ் 12 மணிக்கு என்பதால் வாடகைக் காiரை விசாரித்தோம். அவர்கள் 25 ஈரோக்கள் சொன்னார்கள். ஆகவே அதைத் தவிர்த்து ஆறு ஈரோக்களுடன் பஸ்சில் 12.30 மணிக்கு நகரத்தைச் சென்றடைந்தோம்.

IMG_3993எங்களுக்கு ஸ்பானிய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் தமது டேட்டாவை (data) பயன்படுத்தி நாம் எங்கு இறங்க வேண்டும் என்ற தகவலை தேடி விரிவாக தந்தார்கள். பஸ் சாரதியும் நாம் இறங்க வேண்டிய இடத்தைக் காட்டி உதவினார். மலக்கா நகரில் இறங்கியவுடன்  தங்குமிடத்திற்கு எந்த வழியில் செல்வது எனத் தெரியவில்லை. பஸ் நிலையத்தில் நின்ற ஒருவரைக் கேட்க அவரும் தனது டேட்டாவைப் பயன்படுத்தி பக்கத்தில் தான் இருக்கின்றது எனக் கூறி குறிப்பிட்ட சந்தியில் சென்று விசாரிக்கும் படி சைகையால் காட்டினார். அந்த சந்தியில் நின்று நாம் தேடியபோது  அதில் நின்றவர்கள் தாமாக வந்து எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் உதவி செய்திருக்காவிட்டால் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் கஸ்டப்பட்டிருப்போம். ஏனெனில் தொடர்மாடிக் கட்டிடத்தின் ஒரு தளத்தை தங்குமிடமாகப் பயன்படுத்துகின்றார்கள். அது ஒரு ஓடைக்குள் சிறிய அடையாளத்துடன் இருந்தது.

IMG_4007நாம் மனிதர்களிடம் ஒரிடத்திற்கு செல்வதற்கான வழி கேட்க வேண்டிய காரணம் வழமையாக நாம் பயணங்களின் போது பயன்படுத்தும் புத்தகத்தை (Lonely Planet) வாங்கவில்லை. இந்த நூலைப் பற்றி முதன் முதலாக நாம் சென்ற இந்தியப் பயணத்தின் போதுதான் அறிந்தோம். அதுவும் ஒரு கதை. பின்பு அதைப் பதிவு செய்கின்றோம். அன்றிலிருந்து பயணங்களின் போது நமது உடலின் இன்னுமொரு அங்கமாக இருந்தது. இம் முறை அதன் இழப்பை ஒவ்வொரு கணமும் உணர்ந்தோம். ஆனால் அதை வாங்கி வைப்பதற்கு நம் பொதியில் இடமில்லை. அதேவேளை இரண்டு நாட்களுக்கு மட்டும் டேட்டா வாங்குவதில் பயனில்லை என்பதுடன் வீண் செலவு என்பதால் அந்தப் பயன்பாட்டையும் தவிர்த்திருந்தோம். இவையே நாம் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு கஸ்டத்தை ஏற்படுத்தியது.  நடுயிரவில் ஒரு நாட்டிற்கு வந்த டேட்டா வாங்க முடியுமா?.

IMG_4032நமது தங்கும் விடுதி நான்காவது மாடியில் இருந்தது. shirleyக்கு அங்கிருந்த லிப்டில் மேலே செல்ல தயக்கம். மனப் பயம் உள்ளது.  ஆகவே களைப்பாக இருந்தபோதும் பசி வயிற்றைப் புடுங்கியபோதும் படிக்கட்டுகளில் ஏறி சென்றோம். நமது பதிவு வேலைகளை முடித்துவிட்டு முதல் வேலையாக ஏதாவது கடையில் சென்று சாப்பிடுவோம் என்று அந்த நடு நசியிலும் தேடிச் சென்றோம். நடு நசி என்பது எங்களுக்கும் அந்த நேரத்திற்கும் தான். ஆனால் அந்த நகரம் இந்த நேரத்திலும் விளக்கின் ஒளிகளாலும் உல்லாசமான மனிதர்களாலும் நிறைந்திருந்தது. ஐஸ் கீரிம் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் எங்களின் பசியை ஆற்ற ஒரு இந்தியன் மெக்சிகன் கடை திறந்திருந்தது. அதிகாலை ஒரு மணிக்கு நான்கு சப்பாத்திகளும் ஒரு பன்னீர் கறியும் ஓடர் செய்து சந்தோசமாக சாப்பிட்டோம். சாப்பிட்டபின் உடல் உறம் பெற்றது. நகரத்தின் அழகில் நித்திரை பறந்து சென்றது. மத்தியதரைக் கடலிலிருந்து குளிர்மையான மெல்லிய காற்று வீசி நம்மைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் மாபில்கள் பதித்த நிலத்தில் நடந்து திரிந்தோம். ஆண்கள் மட்டுமல்ல  சிறுவர்களும் அழகான இளம் பெண்களும் அழகிய விதவிதமான ஆடைகள் அணிந்து திரிந்தார்கள். பாரதிக்கு பெண்கள் அழகாக இருந்தார்கள். shirleyக்கு அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அழகாக இருந்தன. பல ஜஸ் கீரிம் கடைகளில் பல விதமான ஜஸ் கீரிம்கள் நம்மை வரவேற்க அந்த அதிகாலையிலும் வாங்கிக் குடித்தோம். மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.

IMG_0069மலக்கா மிக அழகிய நகரம். முக்கியமான இடங்களில் கார்கள் பாவனையில் இல்லை. மிக மிக சுத்தமான நகரம். பார்க்க வேண்டிய இடங்களை நடந்தே பார்க்கலாம். கிரிஸ்தவ நாடாக இருந்தபோதும். கடந்த கால முஸ்லிம் அரசர்களின் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமிய பண்பாடுகள் பாதிப்புகள் நிறைந்த நகரம். கட்டிடக்கலை, உணவு மற்றும் பாத்திரங்களில் இதன் பாதிப்புகளைக் காணலாம். இந்த நகரத்தின முக்கிய அடையாளமே  முஸ்லிம் அரசர்களின் அரண்மனையும் கோட்டையுமாகும். மழை நீரை எவ்வாறு சேமித்துப் பயன்படுத்தலாம் என்பதையும் மற்றும் வடிகாலமைப்பையும் அந்தக் காலத்திலையே சிறப்பாக நிர்மானித்திருக்கின்றார்கள். ஈழத்தைப் போல வறண்ட பிரசேங்களில் இருந்து வந்த நமக்கு கற்பதற்கு இவ்வாறான பல விடயங்கள் உண்டு.

IMG_0076அதிகாலையில்  இரண்டு மணிக்குப் பின்பே படுக்க சென்றதால் காலையில் 9 மணிக்குப் பின்பே எழும்பினோம். வெளிக்கிட்டு ஒரு பேக்கரியில் தேநீருடன் இனிப்பு பன் சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம். சாதாரண மனிதர்களைப் போல உல்லாசப் பயணிகளுக்கான தகவல் நிலையத்தில் இருந்தவர்கள் உதவ முன்வரவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமைகளில் சில இடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக விடுவார்கள் என்ற தகவலை அறிந்தோம். இதனால் சிறப்பான கட்டிடக் கலை கொண்ட தேவாலயத்தையும்  இந்த தேவாலத்தில் சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்த முக்கியமான கலைஞர்களின் ஓவியங்களையும் பார்வையிட்டோம். இவற்றைப் பார்த்து முடிய மதியம் ஆகிவிட்டது. சாப்பிட கடைக்குச் சென்றால் நமக்கான உணவுகள் கிடைப்பது கஸ்டம். இரவு இந்திய உணவு சாப்பிட்டதால் இன்று ஸ்பானிய உணவு வகை ஒன்றை சுவைத்துப் பார்க்க விரும்பினோம்.

IMG_4092கடல் வாழ் உயிரினங்களினதும் (கடற்புஸ்பங்கள் – நன்றி நுஃமான சேர்) மற்றும் தரை வாழ் உயிரினங்களினதும் உணவு வகைகளை அழகாக படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். இவற்றிக்கு Paella  எனப் பெயர். ஆனால் நாம் உண்பதற்கு இந்த ஸ்பானிய வகையைச் சேர்ந்த உணவில் ஒரே ஒரு மரக்கறி உணவு வகை இருந்தது.  shirleyக்கு இறால் வகை உணவை சுவைத்துப் பார்க்க விருப்பம். ஆனால் shirley ஒன்று இரண்டு இறால்களை மட்டுமே சாப்பிடக்கூடியவராகையாலும் மேலும் அந்தச் சாப்பாடு 10 ஈரோக்களுக்கு மேல் என்பதால் வீண் செலவு என்றும் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். இறுதியாக இருவரும் சாப்பிடக்கூடியவகையில் மரக்கறி உணவைக் காட்டி எடுத்தோம். சோற்றுடன் மரக்கறியைப் போட்டு ஒருவகையான தட்டையான சட்டியில் அவித்திருந்தார்கள்.  இது மரக்கறி Paella. இச் சட்டியில் போடப்படும் உணவின் பெயருடன் Paella என்பது சேர்க்கப்படும். உப்புச்சப்பில்லாத உணவு. ஆனாலும்  பசிக்களையில் உண்டு முடித்தோம். இப் பிரதேசம் மத்தியதரைக் கடற்கரை ஓரத்தில் இருப்பதால் கடல் வாழ் உயிரினங்களில் செய்யப்படும் உணவுகள் சுவையானவை எனக் கூறுவார்கள்..IMG_4093

இப்பொழுது shirleyக்கு வைனை சுவைத்துப் பார்க்க விரும்பினார். இலசவமாக வைன் சுவைக்கும் இடம் இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தோம். இந்த இடத்தையும் மனிதர்களின் உதவியைக் கேட்டு கண்டுபிடித்தோம். அவித்த இறால்களை சாப்பிட்டுக் கொண்டு பலர் வித விதமான வைன்களை குடித்துக் கொண்டிருந்தார்கள். shirley ஒருவாறு தனது தேவையையும் விருப்பத்தையும் விளக்கி நடுத்தர இனிப்பு சுவையுள்ள வைனை வாங்கிக் குடித்தார். மிகவும் சுவையாக இருந்தமையால் இன்னுமொரு சொட் அடிக்க விரும்பினார். ஆனால் பின் வெறித்துவிடும். இடங்களைப் பார்க்க முடியாது படுக்கத்தான் வேண்டிவரும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

IMG_4098இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பல இடங்களைப் பார்க்க இலவசமாக குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் விடுவார்கள். மலக்காவின் முக்கியமான அடையாளமான கோட்டையையும் அரண்மனையையும் பார்க்கச் சென்றோம். அரண்மனை ஒரு நூதனசாலையாக இருந்தது. அழகிய பூந்தோட்டங்கள், மழை நீர் சேமிப்பு முறைகள்,  சிறந்த வடிகாலமைப்பு, மற்றும் கடந்தகால மட்பாண்டங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதைப் பார்த்து முடிய களைத்துவிட்டோம். இருந்தாலும் பக்கத்தில் மலை உச்சியிலிருந்த கோட்டையையும் பார்க்கச் சென்றோம். கோட்டையிலிருந்து மலக்கா நகரத்தைப் பார்ப்பது ஒரு அழகிய தோற்றம். அதன் பாதுகாப்பு சுவர்களின் வழியாக சுற்றி வரும் பொழுது நகரத்தினதும் கோட்டையினதும் பல பகுதிகளைப் பார்க்கலாம். கோட்டையிலிருந்து கீழே இறங்கினோம். அப்பொழுது ஒன்றைக் கவனித்தோம். புதிய புனரமைப்புகளை செய்தபோதும் மரங்களை வெட்டாமல் பாதுகாத்துள்ளார்கள். பழையநகரங்களை புனரமைக்கின்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கற்க வேண்டிய விடயம் இது. மலையடிவராத்திற்கு வந்தபோது ஆறு மணியாகிவிட்டது. கடைசி இரண்டு மணித்தியாலங்களை பிக்காசோவின் ஓவியங்களை இலவசமாக பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் எங்களுக்கு அதைப் பார்க்க ஒரு மணித்தியாலங்களே இருந்தது. மிகவும் களைப்பாக இருந்தபோதும் சென்று பார்த்தோம். பிற ஓவியங்களிலிருந்து அவரின் ஓவியங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. இவர் மனித மனங்களைப் பற்றியா, அல்லது தனது மனதில் உள்ளவற்றையா, அல்ல சக மனிதர்களின் மனதில் என்ன இருக்கின்றது என இவரது மனதில் தோன்றுவதையா ஓவியங்களாக வடிக்கின்றார் என்பது ஆய்வுக்குரியது. ஆனால் அதை ஆழமாக அறிவதற்கு அதிக நேரம் தேவை. ஆகவே முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஏழு மணிக்கு வெளியே வந்தபோது களைப்பு மட்டுமில்லை பசியும் எடுத்தது. ஒரு கடையில் அழகான பீட்சா படம் 5 ஈரோக்கள் என்ற தகவலுடன் இருக்க வாங்கி சாப்பிட்டோம்.  சிறிய சமையலறைக்குள் கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு துணைவரும் துணைவியும் சமைக்கின்றார்கள். ஆகவே அவர்களால் தமது கவனத்தை முழுமையாக சமைப்பதில் செலுத்தமுடியவில்லை என நினைக்கின்றோம். பெரிய பீசா. ஆனால் சுவையேயில்லை. சாப்பிடமுடியாமல் அப்படியே அரைவாசியை வைத்துவிட்டு எழும்பி கடற்கரையை நோக்கி நடக்க  ஆரம்பித்தோம்.IMG_0092

கடற்கரையின் துறைமுகம் இருக்கின்ற பக்கத்தில் விதவிதமான சாப்பாட்டுக் கடைகள். சனம் நிறைந்து வழிந்தது. அப்படியே நடந்து வெளிச்ச வீட்டையும் கடந்து சென்றால் நீளமான நீலமான கடற்கரை. கடற்கரையிலிருந்து வீதியை நோக்கி காலில் மண்படாமல் வருவதற்கு பல பாதைகள் அமைத்து அதன் முடிவுகளில் குளிப்பதற்கான வசதிகளையும் செய்து வைத்திருக்கின்றார்கள். அப்படியே நடந்து பெரும் வீதியைக் கடந்து நாம் தங்கியிருக்கின்ற பிரதான இடத்திற்கு செல்லும் பாதை முழுக்க நீளமான அடர்த்தியான கிளைகள் படர்ந்த உயரமான மரங்கள். பாதசாரிகள் நடப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏற்ப நிழல்  தரும் மரங்கள் அதற்கருகாமையில் குழந்தைகள் விளையாடுவதற்கும் காதலர்கள் சுற்றுவதற்குமான் பூங்கா. இப்படி மக்களின் நலன்களுக்கு ஏற்ப பல விடயங்களை அரசு செய்திருக்கின்றது. ஸ்பானிய அரசு இப்படி மக்களின் நலன்கள் எல்லாவற்றிலும் அக்கறையாக இருக்கின்றதாக என்பது ஆய்வுக்கு உரியதே. இருப்பினும் இதை நாம் வரவேற்க வேண்டும். செழிப்பான நகரம் மட்டுமில்லை மக்கள் ஆனந்தமாக இருப்பதுடன் புதியவரைகளையும் மகிழ்வுடன் வரவேற்கின்றனர். ஸ்பெயின் நாட்டின்   சிவிலி மற்றும் பசலோனா நகரங்களிற்கும் பயணம் செய்தோம். இந்த இரண்டு அழகிய நகரங்களைப் பற்றி தொடர்ந்து பதிவு செய்வோம்.

 

7ம் நாள் சிவிலி நோக்கிப் பயணம்.

IMG_0208
IMG_0212

 

IMG_0108
IMG_0140
IMG_0172
IMG_0181
IMG_4102
IMG_0088
IMG_0089
IMG_0128
https://ajourneytowardssun.wordpress.com/2016/07/12/5ம்-நாள்-ஸ்பெயின்-மலக்கா/
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை- பகுதி ஒன்று

சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை

நமது பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து முதல் ஒரு மாதமும் காலையில் எழுந்தால் இரவு பத்து மணிக்குப் பின்புதான் அறைக்கு வந்து படுக்கப் போவோம். அதுவரை நடை … நடை… நடை. நான் ஒரளவு நடக்கக்கூடியவன். விரைவில் களைக்க மாட்டேன். களைத்தாலும் நடப்பேன். அப்படியான நானே “இனி நடக்க முடியாது” எனக் கூறுமளவிற்கு நடப்போம். இடங்களைப் பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும்…. பின் இடங்கள் தெரியாமல் அலைவது என நமது நடை தொடரும். சுவிடனில் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்காகவும் வேலை செய்ய ஆரம்பித்ததுடன் நடப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பயணம் செய்யும் பொழுது இவ்வாறு வேலை செய்வது எனக்குப் புதிதல்ல.

osho12006ம் ஆண்டு இரண்டு மாதங்கள் இத்தாலியில் புளொரன்ஸ் மாகாணத்திலுள்ள சிறிய மலைக் கிராமம் ஒன்றில் குறிப்பிட்ட தொகை பணம் கட்டி ஒரு  பயிற்சியில் இணைந்தேன். இப் பயிற்சியானது எவ்வாறு மூச்சை  மன அழுத்தம் மற்றும் போரினால் வன்முறைகளால் ஏற்பட்ட ஆறாவடுக்களை களைவதற்குப் பயன்படுத்தாலம்  என்பதை அடிப்படையாகக் கொண்டது. நூறு பேர்கள் கொண்ட குழுவில் உலகின் பல நாடுகளிலிருந்து பலர் வந்து கலந்து கொண்டனர். இப் பயிற்சியின் பின்பு ஜெர்மனியில் ஒரு மாத காலம் தங்கவேண்டியிருந்தது. அப்பொழுது ஜெர்மன் நாட்டிற்குள் பத்து நாட்களுக்குள் சுற்றக்கூடியவாறு ஒரு புகையிரதப் பயணச் சீட்டை வாங்கி கொண்டு பயணம் செய்தேன்.

osho2ஜெர்மனின் புகையிரதங்கள் மிகவும் தரமானவை மட்டுமல்ல சொன்ன நேரத்திற்கு நிலையத்திற்கு வரும். ஒரு நகரத்திலிருந்து இன்னுமொரு நகரத்திற்கு இரண்டு மூன்று மணித்தியாலங்களில் பயணம் செய்யலாம். அந்தளவு விரைவாக செல்லக்கூடிய புகையிரதம். இத்தாலியிலிருந்து பிராங்போட் போய் அங்கிருந்து கனுவோருக்கு சென்று பின் இன்னுமொரு உள்ளுர்ப் புகையிரம் எடுத்து சிறிய கிராமம் ஒன்றிக்கு சென்றேன். இது சொந்தக்காரர்களின் வீடு. இங்கு சில நாட்கள் தங்கிவிட்டு ஒரு நாள் பார்த்தீபனைப் பார்க்க டொட்மன் சென்றேன். அவரை அவர் வந்திறங்கும் புகையிரத நிலையத்தில் சந்தித்தேன். களைத்துப் போய் வந்தார். கை கொடுத்தேன். உள்ளங்கை காய்ந்து போயிருந்தது. கடும் உழைப்பாளி. அருடன் ஒரு நாள் தங்கிவிட்டு அங்கிருந்து வெளிக்கிட்டேன்.இதன் பின் ஜெர்மனியில் எங்காவது தங்கி வேலை செய்வோம் என்பதே எனது நோக்கமாக இருந்தது.

1929116_5753040323_3317_nமுன்னால் கிழக்கு ஜெர்மனிச் சேர்ந்த மிகச் சிறிய கிராமத்திற்கு பயணம் செய்தேன். அழகிய பச்சளைப் பசேல் என்ற நிலம். ஆனால் பாழடைந்து போயிருந்த  பழைய புகையிரம் நிலையம். நான் மட்டுமே இறங்கினேன். புகையிரதம் சென்றுவிட்டது. சுற்றிவர மலையும் காடும். மலை மேடுகளிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆபத்திற்கு கூப்பிடக் கூட வீடுகள் மட்டுமல்ல மனிதர்களும் அருகில் இல்லை. மனித நடமாட்டங்கள் அதிகம் இல்லாத பிரதேசம். அந்தளவு அமைதி. இனி என்ன செய்வது? அவர்கள் எழுதியபடி குறிப்பின்படி மெல்ல மெல்ல நடந்து தங்குமிடத்திற்குப் போய் சேர்ந்தேன். அது ஒரு பழங்கால கட்டிடம். அந்தக் கட்டிடத்தின் முன்னால் பழைய இரும்புகளை வளைத்து செய்த  சிற்பங்கள் அல்லது ஓவியங்கள். எல்லாமே பார்ப்பதற்கு பயத்தை தந்தன. இங்கு சிலர் தங்கி நின்று ஓசோ தியானம் செய்வதுடன் தாமே மரக்கறிகளை உற்பத்தி செய்து சமைத்து உண்டு வாழ்கின்றனர். இவர்கள் மட்டுமே அந்த சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்றார்கள். இந்த இடத்தில்தான் நான் தோட்ட வேலை செய்தேன்.  இதேபோல இன்னுமொரு  கிராமத்திற்கும் நீண்ட தூரம் நடந்துசென்று அங்கும் வேலை செய்தேன். இவர்களின் வாழ்வு முறைகளுடன் என்னால் ஒட்ட முடியவில்லை. விரைவில் அந்த இடங்களை விட்டு வெளியேறினேன்.

இந்த இடங்களில் செய்த வேலைகள் எனது தன்முனைப்புக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தன. என்னால் நிலைத்திருக்க முடியவில்லை. இதற்கு எனது மனம், தன் முனைப்பு முக்கிய காரணங்களாக இருந்தாலும் எனது உடலும் அதன் ஆற்றலும் ஒரு காரணம். நாம் ஏழைகளாக இருந்தபோதும் உதாரிகளாக திரிந்தவர்கள். தோட்ட வேலை செய்ய சொந்த நிலங்கள் இருக்கவில்லை. ஆகவே உடல் உரமாகவில்லை. செய்ததெல்லாம் கற்றது மட்டுமே. அதுவும் அரைகுறையாக. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.  அடுத்த வருடமும் மூச்சுப் பயிற்சியுடாக உடல் உள நலத்தைப் பேணுவதற்கான பயிற்சிப்பட்டறைக்கு வந்தேன். இத் துறையில் வேலை செய்ய மேலதிகமாக கற்போம் என நினைத்தேன். இதன் விளைவுதான் 2008ம் ஆண்டு யோர்க் பல்கலைக்கழத்தில் உளவியல் படிக்க ஆரம்பித்தமையாகும். இது சில விடயங்களை அறிந்து கொள்ளவும் பிரக்ஞை என்ற நூலை எழுதவும் பங்களித்தது. ஆனால் இத் துறையில் வேலை ஒன்றை எடுக்க முடியவில்லை. அதற்கு மேலும் படிக்க வேண்டுமாம். அதேநேரம் படிப்பை முடித்தவுடன் இலங்கைக்கு பயணம் சென்றேன். தொடர்ந்தும் இலங்கைக்கு செல்லும் நோக்கம் இருந்ததால் இத் துறையில் நிரந்தர வேலை செய்வது தொடர்பாக சிந்திக்க முடியவில்லை. வாழ்வும் நோக்கமும் மாறிவிட்டது. சரி இனி விடயத்துக்கு வருகின்றேன்.

IMG_3555இம் முறை ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கு பயணம் செய்வதாக முடிவெடுத்ததால் சில கூட்டுப் பண்ணைகள் அல்லது கம்யூன்களில்  வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். அப்பொழுதுதான் பணத்தைச் சேமித்து மேலும் நமது பயணத்தை தொடரலாம்.  அத்துடன் கூட்டுப் பண்ணைகளை நிர்வகிப்பது தொடர்பான அனுபவங்களையும் பெறலாம் என ;நினைத்தோம். முதலாவதாக  சுவிடனின் தலைநகர் ஸ்டொக்லொமிலிருந்து 200km தூரத்திலுள்ள ஸ்கின்ஸ்பேர்க் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கம்யூனில் சாப்பாட்டிற்காக வேலை செய்ய woofing பயன்படுத்தி விண்ணப்பித்தோம். இவர்கள் சிறு குழுவாக செயற்படுகின்றனர்.. பல வகையான தியானம் மற்றும் யோக பயிற்சிகளை செய்பவர்களுக்கு தமது இடங்களை வழங்கி சமைத்தும் கொடுக்கின்றனர். நாம் நமது சாப்பாட்டிற்கும் தங்கும் இடத்திற்குமான செலவுகளை இவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பதனுடாக ஈடுசெய்கின்றோம்.

IMG_3576காலை, மதிய, இரவு உணவுகள் தயாரித்தல்,  சமையலின் பின் பாத்திரங்கள் மற்றும் மலசலகூடங்கள் கழுவுதல், தோட்டத்தில் களை புடுங்குதல் மற்றும் சுத்தம் செய்தல் என பல வேலைகள் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்கள் என்றுதான் கூறினார்கள். காலை உணவு தயாரிக்க இரண்டு மணித்தியாலங்கள், மதிய மற்றும் இரவு உணவு தயாரிக்க மூன்று மணித்தியாலங்கள். சாப்பாட்டின் பின் பாத்திரங்கள் கழுவ ஒரு மணித்தியாலம், துப்புரவு செய்ய இரண்டு மணித்தியாலங்கள் என நேரம் எடுக்கும். சாப்பாடு செய்பவர் அந்த நேரத்திற்கு கழுவத் தேவையில்லை.  கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்களிற்கு வேலை செய்ய வேண்டிவரும். ஆனால் தேவையான அளவு சாப்பிடலாம். வேண்டிய நேரம் எடுத்தும் சாப்பிடலாம். பிரச்சனை எப்பொழுது உருவாகும் என்றால் தமற்குரிய பொறுப்புகளை செய்யாமல் தட்டிக்கழிப்பவர்களால் உருவாகும். ஆனால் நமது இயக்கங்களில் இருந்ததைப் போல ஒருவரும் பிரச்சனைகளை நேரடியாக கதைப்பதில்லை.

IMG_3603தமக்குரிய பொறுப்புகளை ஒவ்வொருவரும் புரிந்து உணர்ந்து பங்களித்தால் ஒருவரின் மீது அதிக சுமை விலாது. ஆனால் அவ்வாறான புரிந்துணவு நம்மத்தியில் மிக மிக குறைவு. இதனால் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் வேலை செய்பவர்களுக்கு சுமையும் களைப்பும் சோர்வும் அதிகமாகும். இது சில நேரங்களில் அலுப்பையும் எதிர்மறைத்தாக்கத்தையும் உருவாக்கிவிடும். இந்த நிலைமை இந்த வேலையில் மட்டுமல்ல கடந்த கால அரசியல் செயற்பாட்டிலும் சரி நண்பர்களுடனான செயற்பாட்டிலும் சரி பொது விடயங்களில் செயற்படும் பொழுதும் சரி இவ்வாறுதான் நடைபெறும். ஒரு சிலர் மட்டுமே எல்லாவற்றையும் பொறுப்புடன் செய்வார்கள். சிலர் நேரம் கடத்துவார்கள். சிலர் கடமைக்குச் செய்வார்கள். சிலர் கள்ளமடிப்பார்கள்.  இவ்விதமான போக்குகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்தப் பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகளையும் கடந்து சக்கரம் ஓடும். நாமும் ஓடுகின்றோம். எல்லாமே மூன்று நேரம் ஒழுங்காக சாப்பிடுவதற்காகத்தானே…. சாப்பிட்டபின்தானே கலை இலக்கியம் எல்லாம்…..இதன் முக்கியத்துவம் தெரிந்த சிலர்  அடுத்த நேர பசியை வைத்தே பலரை சுரண்டுகின்றார்கள்….. பலர் தம் பசியைப் போக்கு எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர்……  இதுதான நாம் அரசியல் செயற்பாட்டில் இறங்குவதற்கும் சமூகமாற்றத்தின் தேவைக்கமான அடிப்படை.

நாளை மிகுதியைப் பதிவிடுகின்றேன்.IMG_3592

.

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/15/சுவிடன்-சாப்பாட்டிற்காக/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவிடன்: கம்யூன் வாழ்வு-பகுதி இரண்டு

சுவிடன்: கம்யூன் வாழ்வு அல்லது கூட்டுச் செயற்பாடு – பகுதி இரண்டு

நான் ஒரு சர்வதேசி

IMG_3687சுவிடனில் ஒரு சிறு கிராமத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த வேலையை வெறுமனே கடைமைக்காக செய்வதா அல்லது நமது வீட்டுத் தோட்டத்தில் செய்வதுபோல மனம் ஒன்றித்து வேலை செய்வதா என சிந்தனை ஓடியது. மனித மனம் ஏமாற்றவே கூறும். ஆனால் எனது வீட்டில் எப்படி செய்வேனோ அப்படி செய்வதுதான் பொருத்தமானதும் சரியானதும் என என் அறிவு உள்ளுணர்வு கூறியது. ஆகவே ஒன்றித்து வேலை செய்தேன்

இலங்கை மண்!  கனடா மண்! ஜெர்மன் மண்! சுவிடன் மண்!

மண் எங்கிருந்தாலும் ஒரே மண்.

அவற்றைத் தொடும் பொழுது அவ்வாறான உணர்வே எழுகின்றது.

நாடுகளின் பெயர்கள் தான் அவற்றைப் பிரிக்கின்றன.

சமுத்திரங்களும் கடல்களும் மண்ணைப் பிரிப்பதுபோல தோன்றுகின்றன.

ஆனால் ஆழத்தில் அவை இணைந்துதான் இருக்கின்றன.

எந்த மண்ணில் வேலை செய்தாலும்

இது எனது தோட்டம்.

எனது மண்.

.நான் ஒரு சர்வதேசி!

தேசியவாதியாகவும் உணரும் தருணங்கள் உள்ளன.

எனது மண் ஆக்கிரமிக்கப்படும் பொழுது

எனது தோலின் நிறம் இழிவு செய்யப்படும்பொழுது

எனது மொழி நிராகரிக்கப்படும்

சிரிப்பு

மனிதர்களின் சர்வதேச மொழி.

இந்தச் சிரிப்புக்கூட புறக்கணிக்கப்படும் பொழுது….

நான் ஒரு தேசியவாதியாகின்றேன்.

சர்வதேசியவாதியாக உணர்ந்தாலும்

தேசியவாதியாவும் உணர்வது தவிர்க்க முடியாதது.

ஏனெனில் சர்வதேசத்திற்குள் தேசமும் உள்ளடக்கம்.

IMG_3670சுவிடனில் நாம் வேலை செய்த இடத்தில் பல நாடுகளில் இருந்து வந்து பலர் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் இளம் வயதினர். தமது உயர்தர அல்லது பல்கலைக்கழ கல்வியை முடித்துவிட்டு தமது துறையை தெரிவு செய்வதற்கு முதல் இவ்வாறு பயணித்து புதிய அனுபவங்களையும் அறிவையும் பெற்றக் கொண்டு தமது துறையை தெரிவு செய்கின்றனர்.  சிலருக்கு இவ்வாறு வேலை செய்வதும் பயணிப்பதுமே வாழ்வு. சிலர் தமது வாழ்க்கை, உறவுகள் மற்றும் வேலை அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். நாம் வேலை செய்த குழுவில் இலண்டனிலிருந்து மூவர்,  ரொமேனியாவிலிருந்து ஒருவர் (இவர் சுவிடனையும் ஸ்பெயினையும் வாழ்விடமாக கொண்டவர்), மற்றும் இத்தாலி,  இஸ்ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மன் எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்தனர். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணி உள்ளது. இவ்வாறு வேலை செய்வதிலுள்ள பல நன்மைகளில் ஒன்று இவர்களைப் போன்ற பலவிதமான மனிதர்களை சந்திப்பதாகும். மற்றும்படி சும்மா பயணம் செய்யும் பொழுது கட்டிங்களைப் பார்ப்பதுடன் சரி. மனிதர்களை சந்திப்பதும் சந்திப்பவர்களுடன் நட்புக்கொள்வதும் மிக அரிதாகவே கிடைக்கும். அந்தவகையில் இது பயனுள்ள ஒரு செயற்பாடே.

IMG_3653நாம் இந்த இடத்திற்கு வந்தபோது ஒரு குழு யோகா பயிற்சிகள் செய்து கொண்டிருந்தது. நாற்பது பேரளவில் இருந்தார்கள். அவர்களுக்காக நாம் நமது வேலைகளைச் செய்தோம். அந்த சக்தி நேர்மறையானதாக ஆனந்தமானதாக இருந்தது. ஒரு வாரத்தின் பின் புதியதொரு குழு வந்தது. இவர்கள் ஐம்பது பேர்களுக்கு மேல். எம்முடன் சேர்த்து மொத்தமாக 65 பேரளவில். இந்தக் குழு மிக அமைதியாக தியானம் செய்பவர்கள். கதை குறைவு. இல்லை என்றே சொல்லலாம். ஆகவே நாமும் கதைக்க முடியாது. கிட்டத்தட்ட “விபாசனா” தியானம் செய்வதைப் போல. விபாசனா தியானம் தொடர்பான எனது அனுபவத்தை எழுது வேண்டும். மிக முக்கியமான பயனுள்ள இலகுவான ஆனால் கஸ்டமான தியான முறை. குறிப்பாக மேற்குலகத்தினருக்கு சவாலானது. அதுவும் தியானங்கள் தொடர்பாக பரிச்சயமில்லாதவர்களுக்கு இவ்வாறான சூழலை எதிர்கொள்வதே மிகவும் கஸ்டமானது. ஆகவே பலர் மனதுக்குள் தமது எண்ணங்களுடன் போராடுவார்கள். இது மனச் சுமையை உருவாக்கவல்லது. இதனால் இவ்வாறான சூழுலில் வேலை செய்யும் பொழுது நடைமுறையில் பல முரண்பாடுகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த முரண்பாடுகளைக் களைவதும் சவாலான ஒரு விடயமே.

IMG_3555இந்த இடங்களில் வாழ்வதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதும் முக்கியமானதும் எவ்வாறு ஒரு கம்யூன் வாழ்வை மேற்கொள்வது என்பதைக் கற்பதாகும்.. நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது. இவ்வாறான வாழ்வுமுறை மூலம் அதைப் பூர்த்தி செய்யப் பங்களிக்கலாம். உதாரணமாக  சிலருக்கு சமையல் ஒரு கலை. அவ்வாறானவர்களே சமையல் பொறுப்பை எடுப்பது பொருத்தமானதும் சரியானதுமாகும். இதுவே கம்யூனுக்கான அவர்களது பங்களிப்புமாகும். அதேநேரம்  சமைப்பது பாத்திரங்களையும் மலசலகூடங்களையும் கழுவி சுத்தம் செய்வது என்பது அனைவரும் பங்களிக்க வேண்டிய ஒன்றாகும். ஆகக் குறைந்தது வாரத்தில் ஒருதரமாவது இந்த வேலைகளில் பங்களிக்க வேண்டும். ஏனெனில் பலருக்கு இந்த வேலைகள் தொடர்பாக மனதில் எதிர்மறையான பார்வைகள் ஆழமாகப் பதிந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான ஆண்களுக்கு சமையல் செய்வது பாத்திரங்கள் கழுவுவது தொடர்பாக எதிர்மறையான உணர்வே உள்ளது. இதேபோல உயர் சாதி மற்றும் வர்க்க ஆண் பெண் இருபாலருக்கும் மலசலக்கூடங்கள் கழுவுவது என்பது கௌரவ குறைச்சலான ஒரு செயற்பாடு. அதேநேரம் இவர்கள் முற்போக்கான வர்க்க தேசிய அரசியல் எல்லாம் கதைப்பார்கள்.. இதுவே தத்துவத்திற்கும் நடைமுறைக்குமான முரண்பாடாகும்.  இவ்வாறான மனத்தடைகளிலிருந்து வெளியேறுவதற்கு இந்த வேலைகளை செய்வது மட்டுமே ஒரே வழி. மேலும் இந்த வேலைகளை செய்யும் பொழுதுதான் இதிலுள்ள கஸ்டங்களையும் இவ்வாறான வேலைகளையே தமது வாழ்வாக கொண்டிருப்பவர்களையும் புரிந்து கொள்ளலாம்..

IMG_3657மலசலகூடங்களை கழுவுவது தொடர்பாக எண்ணங்கள் வந்தால் இரண்டு நினைவுகள் ஆழ்மனதிலிருந்து மேலேழும். முதலாவது  எனக்குப் பத்து வயது இருக்கும் பொழுது கண்ணால் கண்டதும் பாதித்ததுமான காட்சி. அப்பொழுது நானறிய அட்டன் நகரில் மலசல சுத்திகரிப்பவராக அவரை மட்டுமே கண்டிருக்கின்றேன். காலைவேளையில் மலசல வாளிகள் கொண்ட வண்டியைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு வீடுகளிலுமுள்ள மலசலகூடங்களுக்குச் சென்று அள்ளிக் கொண்டு போவார். இவர் ஒரு நகரசபை ஊழியராக இருந்தபோதும் வீடில்லாதவர். இவரது வாழ்விடம் அட்டனில் பிரபலமாக இருந்த தெய்வம் தந்த வீடு திரைப்பட தயாரிப்பாளர் வீகே.டி பொன்னுசாமி (இவர் 83 கலவரத்தில் கொல்லப்பட்டவர்.) அவர்களின் மின்சாரக் கடையின் முன் வாசல். இதன் ஒரு மூலையில் தான் குடியிருப்பார். யாருடனும் கதைக்கமாட்டார். ஆடைகள் கிழிந்து காணப்படும். ஆடைகளும் உடலும் கரிபிரண்டு ஊத்தையாக இருக்கும். தனது வேலைகளை முடித்துவிட்டு பகல் பொழுதுகளில் அந்தக் கடையின் முன்னால் போகின்ற கழிவுக் காணில் (வாய்கால்) தண்ணீர் அள்ளி சோறு சமைப்பார். இவருக்கு ஒரு அழகான கருத்த “மொழு மொழு”வென்ற உடலும் முட்டைக் கண்களும் கொண்ட  குழந்தை ஒன்று இருந்தது. ஐந்து அல்லது ஆறு வயது இருந்திருக்கும். அந்தச் சிறுவன் இப்பொழுது எப்படி இருப்பான் என்று எப்பொழுதும் நினைப்பதுண்டு.

IMG_3635இரண்டாவது நாம் அட்டன் லிபர்ட்டி சினிமா கட்டிடத்தில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்தபோது நமக்கான மலசலக்கூடம் பொதுவானது. அந்தக் கட்டிடத்திலுள்ள தொழில் நீதிமன்றம், தொழிற்சங்கங்கள் மற்றும் வருவோர் போவோருக்கு என பொதுப் பயன்பாட்டிற்கு ஊரியது. சிலர் வழமையைப்போல் பொறுப்பில்லாமல் கண்ணடபடி அசுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். ஏழைகளின் வீட்டில் சிறுவர்களும் உழைப்பாளிகளே. நாம்  கட்டிடத்தின் கீழேயிருந்து தண்ணீர் கொண்டுவர அம்மாதான் அதை ஒவ்வொரு நாளும் கழுவி சுத்தமாக வைத்திருப்பார். இறுதியாக இலங்கை சென்றபோது நாமிருந்த அறையும் மலசலக்கூடாமாக மாற்றப்பட்டிருந்தது.

IMG_3629எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு கம்யூன் அதாவது கூட்டுறவு வாழ்வுமுறையை பரிட்சித்துப் பார்ப்பதற்கு இந்த அனுபவங்கள் பயனிளிக்கும் என நம்புகின்றேன். மேம்பட்ட சமூக கட்டமைப்பை விரும்புகின்றவர்கள் இவ்வாறான பரிட்சாத்த முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெறுவதே  சிறந்த வழிமுறையாகும். அப்பொழுதான் “எனது இடம்”, “எனது பொருள்” என்ற சிந்தனை முறைகள் சவால்களை எதிர்கொள்ளும். சிலநேரம் இவ் வழிமுறைகளே எதிர்காலத்தில் புரட்சிகளை உருவாக்கலாம். மாறாக புரட்சி ஒன்று நடைபெற்றபின் இந்த வாழ்வுமுறைக்கு மாறுவோம் எனக் கனவு காண்பவர்கள் சிலநேரம் இறுதிவரை கனவு மட்டுமே காண்பவர்களாக இருப்பார்கள். முக்கியமாக எழுத்தாளர்கள் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் குறைந்தது ஒருவருடமாவது இவ்வாறான  அனுபவங்களைப் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த இடத்தில் கற்ற இன்னுமொரு விடயம் எவ்வாறு சூற்றுச் சுழலைப் பாதுகாப்பது மற்றும் தோட்டங்களுக்கான உரத்தை நாமே உருவாக்குவதுமாகும்.. முதலாவது தோட்டங்களிலுள்ள களைகளையும் சுற்றுப் புறங்களிலுள்ள புல்லுகளையும் புடுங்கி ஒரிடத்தில் குமித்து மூடிவைக்க வேண்டும். அவை நன்றாக காய்ந்த பின் சமையல்கழிவுகளை ஒரிடத்தில் கொட்டி இந்த காய்ந்த புல்லுகளை அதன் மேல் போட்டு முடிவிடவேண்டும். இப்படி அதன் மேலே தொடர்ந்து செய்து வரும் பொழுது தோட்டத்திற்கான நல்ல பசளைகள் கிடைக்கும். இரசாயண பசளைகளைத் தவிர்க்கலாம். இது ஒரு சுழற்சி முறையாகும்.

IMG_3662சுழற்சி முறை இயற்கையின் இயல்பான இயக்கம். ஆனால் மனிதர்களின் சிந்தனை மட்டுமே நேர்கோட்டில் பயணிக்கின்றது. ஆகவேதான் அழிவுகளை மட்டும் சந்திக்கின்றது. சுழற்சி என்பது ஒரு வட்ட இயக்கம். பசளைகள் உணவுகள் கழிவுகள் என்பவற்றின் வட்ட சுழற்சி இயக்கம் போல நாமும்  சில விடயங்களை சுழற்சி முறையில் வட்டவடிவில்தான் செய்ய வேண்டும். அதுவே அதியுயர் ஜனநாயத்தைதையும் சரியான பாதையையும் சம அதிகாரத்தையும் வழங்கும். குறிப்பாக இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளில் பலர் சுத்தம் செய்தல் மற்றும் மலசல கூடங்களை கழுவுவதை தவிர்க்கவே விரும்புவார்கள். இவர்கள் தமது குறிப்பான சிறப்பான ஆற்றல்களினுடாக பங்களிப்பதற்கு அப்பால் சுழற்சிமுறையில் இவ்வாறான வேலைகளில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் இவ்வாறான கம்யூன் வாழ்வில் நடைமுறைப்படுத்தபடுகின்றன. இவை திட்டமிட்டமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும். அல்லது  விருப்பமில்லாத மனிதர்கள் தட்டிக்கழிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

மறுபுறம் நாம் ஒருவர் மீது அன்பாகவும் அக்கறையாகவும் இருந்தால் அவர் அதிகம் வேலை செய்வதை விரும்பமாட்டோம். நாமும் சேர்ந்து வேலை செய்வோம். அல்லது அதிகம் வேலை செய்யாது தடுப்போம். இவ்வாறுதான் நானும் shirleyயும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக இருக்கின்றோம்.  இந்த அக்கறையும் அன்பும் பரஸ்பரம் ஒருவர் மீது  ஒருவருக்கு இருந்தால் இவ்வாறான பல பிரச்சனைகள் இலகுவாக தீர்க்கப்படும். ஆனால் அவ்வாறான அன்பை எவ்வாறு உருவாக்குவது? இதுவும் ஒரு தேடலே.

இங்கு சமைக்கப்படும் சாப்பாடுகளில் சலாட்டைத் (இலை குழைகள்) தவிர  ஒன்றையும் பெரும்பாலும் இதுவரை சாப்பிட்டதில்லை. எல்லாமே மரக்கறி சாப்பாடுகள். காய்கறிகள், தானியங்கள், கடலைகளை, விதைகள், மற்றும் பழங்கள் இவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட வித்தியாசமான சாப்பாடுகள். கலவைகள் செய்முறைகள் எல்லாவற்றையும் ஒழுங்காக பதிவு செய்து வைத்துள்ளார்கள். நாம் அதைப் பார்த்து செய்ய வேண்டியதுதான். முடிந்தால் நாம் நமது படைப்பாற்றலைக் கொண்டு சிறு மாற்றங்களை செய்து மேலும் சுவையாக்கி அழகாக்கி அளிப்போம். சாப்பிடுகின்றவர்கள் பெரும்பாலும் சுவிடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் புகழ்ந்துவிட்டு நன்றி கூறிச் செல்வார்கள்.

நாம் பசிக்காக இவற்றை சாப்பிட்டாலும் நமது புட்டும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்த சின்ன வெங்காயப் பொறியல், முருங்கங்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்ப் பிரட்டல், தோசை, இடியப்பம், சொதி, சம்பல்…. இப்படி பல சாப்பாடுகளை அடிக்கடி நினைத்து வாயூறிக்கொள்வோம்.

இவற்றைச் சாப்பிட்டு வளர்ந்த உடம்பல்லவா இது!

IMG_3652நாம் முதலில் பலருடன் தங்கியிருந்தோம். ஆனால் நமது குரட்டை எங்களுக்கு சிறிய குடில் ஒன்றைப் பரிசளித்து நீர் ஏரிக்கு அருகில் தங்க வழிசமைத்தது. இந்த நீர் ஏறிய சிறியது ஆனால் ஆழமானது. இரவு பகலாக பலர் இதில் குதித்து நீந்தி நீராடுவார்கள். முதலில் தமது உடம்பை சூடேத்தி பின் ஏரியில் குதிப்பார்கள். எங்களுக்கு குளிர். வெய்யிலுக்காக காத்திருப்போம். வெய்யில் எப்பொழுது வரும் எனத் தெரியாது. மழை எப்பொழுது வரும் எனத் தெரியாது. இரண்டும் மாறி மாறி வரும்.எப்பொழுதாவது ஒரு நாள் வெயிலாகவே இருக்கும். அப்பொழுது மட்டுமே நாம் நீராடி நேரமிருந்தால் படகை எடுத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றிவருவோம். அழகான இடம்.IMG_3683

நாளை செவ்வாயக் கிழமை பின்லாந்தில் செல்கின்றோம். அங்கு மேலும் இரண்டு வாரங்கள் தங்கி வேலை செய்யப் போகின்றோம். அந்த அனுபவத்தை எதிர்பார்த்தபடி…..

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/17/சுவிடன்-கம்யூன்-வாழ்வு/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

12ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

IMG_0681தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

IMG_0645நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

IMG_0649எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

IMG_0650இரவு எட்டு மணிக்கு அனைவரும் நோன்பு திறப்பதற்கு தம்மை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நாம் சிம்காட் வாங்க ஒரு கடைக்கு சென்றோம். அந்த முதலாளி இளம் பொடியன். அதிசயமாக நன்றாக ஆங்கிலம் கதைத்தார். விபரங்களைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் காலை வருவதாக கூறி சாப்பாட்டுக் கடையை நோக்கி வந்தோம். எமக்கான தெரிவுகள் அதிகம் இருக்கவில்லை. ஆகவே மரக்கறி தான்ஜின், முட்டைப்பொறியல் மற்றும் ஒரேஞ் பானம் ஆகியவற்றைச் சொன்னோம். முட்டைப் பொறியல் மஸ்ரூம் தான் இருந்தது. நாம் அது வேண்டாம் எனக் கூறி மிளகாய் வெங்காயம் தக்காளி என்பவற்றைக் கலந்து செய்ய சொன்னோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு செய்து தந்தார்கள்.  கடைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தான்ஜின் சாப்பாட்டை மிகச் சூடாக மண் சட்டியில்  இன்னுமொரு மண் சட்டியால் மூடிபடி கொண்டுவந்தார்கள். மூடியைத்  திறந்தபோது ஆவி பறந்தது. மண் சட்டியில் மரக்கறி மற்றும் ஒலிவ் ஒயில் என்பவற்றை கலந்து  மண் சட்டி மூடியால் மூடி அவித்திருந்தார்கள். நமது நாக்குக்கு பெரிய சுவையாக இருக்கவில்லை. இனி 18 நாட்களுக்கு இதுதான் நமது உணவு என்று அப்பொழுது நாம் உணரவில்லை. ஆனாலும் முதல் நாள் என்பதால் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டோம். இவ்வாறு சாப்பாடு ஒன்றை ஓடர் செய்தால் பாணும் பயறுக் கறியும் ஒலிவ் அச்சாறும் நம்மை வரவேற்க கொண்டு வந்து வைப்பார்கள். இது இவர்களின் பண்பாட்டின் ஒரு அம்சம்.

IMG_0669தான்ஜின் வட அந்திலாந்திக்கும்  மத்தியதரைக் கடலும் சந்திக்கின்ற இடத்திலுள்ள மலைப்பிரதேசம். மெல்லிய குளிர் காற்று அடிக்க நாம் தொடர்ந்தும் நடக்காமல் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். கொண்டு வந்த உடைகள் எல்லாம் அழுக்காகியதால் ஒவ்வொரு ஆடைகளாக கழுவி அறைக்குள் காயப்போட்டோம்.  குறைந்த எண்ணிக்கையான ஆடைகளையே கொண்டுவந்திருக்கின்றோம். நாள் முழுவதும் நடப்பதால் ஆடைகள் அழுக்காகும் வீதம் அதிகம். ஆகவே அடிக்கடி கழுவ வேண்டி ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக நமது ஆடைகளை இயந்திரமே கழுவியது. ஆகவே நமது ஆடைகளை கழுவுவதும் இப் பயணத்தில் புதிய ஒரு அனுபவமாக இருந்தது.

IMG_0678காலையில் தங்கிய இடத்தில் உணவு கிடைத்தது. வீச்சு ரொட்டி, கேக், ஓரேஞ் பானம்.  தேநீர். மற்றும் பாண். சாப்பிட்டுவிட்டு சிம் காட் வாங்க சென்றோம்.நேற்று மாலை உரையாடிய கடை மூடியிருந்தது.  ஆகவே இன்னுமொரு கடையில் அந்த வியாபாரிக்கு ஆங்கிலம் தெரியாதபோதும்  ஒருவாறு விளங்கப்படுத்தி வாங்கினோம். இப்படியான கடைக்காரர்கள் தமது கடைக்கு ஆட்கள் வருவதை வரவேற்பவர்களாக இருக்கவில்லை. ஏனோதானோ என்றுதான் பதிலளிப்பார்கள். நாம் சிம் காட்டின் உதவியுடன் நகரத்தின் வரைப்படத்தைப் பயன்படுத்தி அடுத்த நாள் சேவ்செவோன்  செல்வதற்கான பஸ்ஸிற்குப் பதிவு செய்ய நடந்து சென்றோம். மத்திய பஸ் நிலையத்தில் பல பதிவு செய்யும் இடங்கள் இருந்தபோதும் shirleyயின் தகவல் சேகரிப்புகள் சிடிஎம் (CTM) பஸ் நல்லம் எனக் கூறியதால் அதைப் பதிவு செய்தோம். அங்கிருந்து பத்து டினாருக்கு வாடகை வாகனம் பிடித்து  மதீனாவில் உள்ள நல்ல கடை என்று சிபார்சு செய்யப்பட்ட ஒன்றுக்கு வந்தோம். அதைத் தேடி தேடி களைத்ததபோது  இன்னுமொரு பயணி உதவி செய்தார்.

IMG_0674அது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கார பெண்ணினது கடை. கடையில் வேலை செய்பவர் மட்டுமே இருந்தார். நாம் நீண்ட நேரம் காத்திருந்தும் நம்மை வந்து ஒன்றும் கேட்கவில்லை. நமக்கோ பசிக்களை. என்ன சாப்பாடு இருக்கின்றது எனக் கேட்டோம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. கடையில் பெரிதாக ஒன்றையும் காணவில்லை. நாம் பக்கத்துக் கடைகளில் சாப்பிட என்ன இருக்கு என்று தேடினோம். இனிப்பு பண்டங்களே இருந்தது. அதில் சிலவற்றை வாங்கி சாப்பிட்டோம். வெளியில் வந்தபோது முதல் சென்ற கடையிலிருந்து ஒரு பெண்மணி அழைத்தார். கடையின் சொந்தக்கார பெண்மணியை தொலைபேசி அழைத்து வரும்படி கூறியிருக்க வேண்டும். நாம் மரக்கறி சாப்பாடு என்ன உள்ளது எனக் கேட்டோம். அவர் இரண்டு சாப்பாடுகளை சொன்னார். நாம் விலையைக் கேட்டோம். அது பயங்கர விலையாக இருந்தது. பசித்தபோதும் அவ்வளவு காசு கொடுத்து சாப்பிட விரும்பவில்லை. சில நேரம் சாப்பாடு பிடிக்காவிட்டாது அநியாயம். என்பதால் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றோம். போகின்ற வழியில் ஒரு நுதன சாலை இருப்பதாக தொலைபேசியில் காட்டியது. அதை காட்டிய கட்டிடத்தை சுற்றி சுற்றி தேடியபோது எல்லாப் பக்கமும் மூடியிருந்தது. ஒரு வீட்டிலிருந்த ஆணிடம் கேட்டபோது அவர் வீட்டுக்கார பெண்ணை அழைத்தார். அவர் நல்ல ஆங்கிலம் கதைத்தார். இன்று அணைத்தும் மூடியுள்ளது. எல்லோரிடமும் கேட்காதீர்கள் ஏமாற்றுவார்கள் என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். நேற்றிரவு சாப்பிட்ட கடையில் சென்று சாப்பிடுவோம் என்று வரைபடத்தின் உதவியுடன் மதீனாவினுடாக தயங்கி தயங்கி சென்று கண்டுபிடித்தோம். ஏனெனில் மதீனாவிற்கு உள்ளட்டால் வெளியே வருவது என்பது மிகப் பெரிய பிரச்சனை. இங்குதான் எங்கள் முதல் அனுபவம் ஆரம்பமாகியது.

IMG_0662வெய்யில் எரி்த்தபோதும் பார்ப்பதற்கு இரண்டு இடங்கள் இருக்கின்றது என அறிந்தோம். அந்த இடத்திற்கு சென்றால் அது நாம் நேற்று மாலை சென்ற இடம். காய்ந்து போயிருந்த இடம் ஒன்றை பார்ப்பதற்கு அழகான பூந்தோம் மற்றும் நீர்த் தாடகம் என்று எழுதியிருந்தார்கள். அந்த ஏமாற்றத்தினால் இனி ஒன்றையும் பார்ப்பதில்லை எனத் தீர்மானித்து பக்கத்திருந்த மரங்கள் இருந்த சரிவொன்றில் சென்று நிழலில் இளைப்பாறினோம். ஆண்கள் மட்டுமே மர நிழல்களில் நித்திரை கொண்டோ அல்லது சுற்றிவர இருந்து உரையாடிக் கொண்டோ இருந்தார்கள். சிறிது நேரத்தின் பின் என்ன செய்வது எனத் தெரியவில்லை. மொரக்கோவின் அனைத்து நகரங்களிலும் பழைய நகரம் மதீனாவாகும். இப்பொழுது புதிய நகரம் ஒன்றையும் அமைக்கின்றார்கள். அங்கு மோல் இருக்கின்றது. அங்கு செல்வோம் என முடிவெடுத்து வாடகை வாகன சாரதியுடன் விவாதித்து பணத்தை உறுதி செய்து கொண்டு சென்றோம். அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். பல கடைகள் மூடியிருந்தன. சாப்பாட்டுக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. சீன ஜப்பானிய உணவகம் ஒன்றிருந்தது. அவர்களிடம் மரக்கறி சாப்பாடு இருக்கின்றதா எனக் கேட்டோம். இல்லை என்றார்கள். மரக்கறிகளையும் சோற்றையும் பிரட்டி பிரைட் ரைசாக தரமுடியுமா எனக் கேட்டோம். சரி என்றார்கள். மேலும் ஒரு விண்ணப்பம் செய்தோம். மரக்கறிகளை சின்னதாக வெட்டிப் போடுங்கள் என. அதற்கும் அவர்கள் உடன்பட்டு சிறிது நேரத்தில் செய்து தந்தார்கள். நல்லதொரு சாப்பாடு சாப்பிட்ட திருப்பதியில் பல தடவைகள் நன்றி கூறிவிட்டு பக்கத்திலிருந்து கடற்கரைக்கு நடந்து சென்றோம்.

IMG_0692இப்ொழுதுதான் கடற்கரை பாதைகளை செப்பனிட்டு புனரமைக்கின்றார்கள். இப்படியே நடந்து சென்று நேற்று மாலை சென்ற தொலைபேசிக் கடைக்குச் சென்றோம். அந்த இளைஞனிடம் இன்று காலை வாங்கிய சிம்காட் நல்லதா எனக் கேட்டோம். ஏனெனில் அது ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவர் நல்லது என்றார். அவரிடம் இன்னுமொரு பெயரில் ஒரு சிம் காட் இருந்தது. அதை வாங்கவா எனக் கேட்க வேண்டாம் நீங்கள் வாங்கியது நல்லது என நேர்மையாக சொன்னார். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியை தந்தது. நாம் எதற்கும் பயன்படட்டும் என மற்ற சிம் காட்டையும் வாங்கினோம். பின்புதான் கண்டுபிடித்தோம் நாம் வைத்திருந்த ஒரு தொலைபேசியில் ஏதோ ஒரு பிரச்சனையால் ஒழுங்கா வேலை செய்யவில்லை என. இன்னுமொரு தொலைபேசி இருந்தமை நமக்கு நன்மையளித்தது.

IMG_0688அடுத்த நாள் காலை சாப்பிட்டுவிட்டு வீதிக்கு வந்து பஸ் நிலையத்திற்கு கார் பிடித்து சென்றோம். இலங்கை இந்தியாவில் இருப்பதை போல பஸ் நிலையம். பயணிகளை கூவிக் கூவி அழைத்தார்கள். சீடிஎம் பஸ்சிற்கான கட்டணம் சதாரணமாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணங்களை விட ஒரு மடங்கு அதிகம். சொகுசு வாகனம். அதிவிரைவாகவும் செல்லக்கூடியது. ஆனால் நமது சுமைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைப்பதற்கும் 5 டினார்கள் பணம் எடுப்பார்கள். நமது பயணம் மலைப்பாதைகளினுடாக செவ்செவ்வோனை நோக்கி சென்றது.

 

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/25/12ம்-நாள்-தான்ஜீர்-மொரக்கோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வது நாள்: ஸ்டொக்லமிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…

50 வது நாள்:  ஸ்டொலொக்மிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…
IMG_3549நாம் தங்கியிருந்த சுவீடன் கிராமத்திலிருந்து (skinnskatteberg) அங்கு சந்தித்த சுவீடன் நாட்டவருடன் அவரது காரில் ஸ்டொக்லம் (Stockholm) பயணமானோம். இவர் ஒரு பயணி. மாலை ஏறுபவர். நமக்கு கற்றுத்தந்த மொழியில் “பீத்தப்பறங்கி”. தான் ஸ்டொக்லோம் செல்வதாகவும் எம்மை ஏற்றிச்செல்வதாகவும் அவரே சொன்னார். இவர் சுவீடனில் பிறந்த போதும் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்தவர். இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்பவர். இலங்கைக்கும் இரண்டு தரம் பயணம் செய்துள்ளார். அவரை நான் சுவீடிஸ் இந்தியன் என்றே கூறுவேன். அவருடன் சுவீடனின் வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை தொடர்பாக உரையாடிக் கொண்டு வந்தோம். அவரது தொழில் மரவேலை.  இப்பொழுது நம்மை இறக்கவிட்டு தமது சொந்தக்காரர் ஒருவருக்கு மரங்களைப் பயன்படுத்தி வீட்டின் பின் இளைப்பாற நிழல் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக செல்கின்றார்.

IMG_3739நாம் ஸ்டொக்லம் நகரின் மாநகர புகையிரதநிலையம் ஒன்றில் முழு நாள் கடவுச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொண்டு நகரின் மத்திக்கு சென்றோம். சிறந்த புகையிரத வலைப்பின்னலைக் கொண்ட நகரம். புகையிரத நிலையத்தில் வேலைசெய்வோர் நமது கேள்விகளுக்கு அலுப்புப்பாராமல் விளக்கமாக கூறி வழிகாட்டினார்கள். இந்த நாட்டில் அனைத்தும் நெருப்பு விலை. தங்குமிட விலையும் அவ்வாறே. வழமையாக இரண்டு பேர் ஒன்றாக ஹொஸ்டலில் தங்கும் செலவிற்கு ஒரு ஹொட்டலை பதிவு செய்யலாம். ஆனால் சுவிடனில் அவ்வாறும் செய்யமுடியவில்லை. ஆகவே ஒரு ஹொஸ்டலில் இரண்டு படுக்கைகளைப் பதிவு செய்தோம்.  வழமையைப் போல மதியம் 12 மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம்.

IMG_3741இணைய வசதி இல்லாததால் சாப்பாட்டுக் கடைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்களிடம் கேட்டு சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு இடத்தில் இலவச இணையவசதி இருக்க அதனுடாக தேடிப்பார்த்தோம். பத்து நிமிட நடை தூரத்தில் மூன்று இந்தியன் கடைகள் இருந்தன. அங்கு சென்றால் இரண்டு கடைகள் மூடியிருந்தன. மூன்றாவது கடை திறந்திருந்த மகிழ்ச்சியில் உள்ளே சென்றால் சமைப்பவர் சென்றுவிட்டார் . மூன்று மணியாகிவிட்டது கடையை மூடுகின்றோம் என்றார்கள். வேறு வழியின்றி போகும் வழியில் தாய் உணவகம் ஒன்றில் முட்டை மரக்கறி சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கினோம். மிகவும் கொஞ்ச சாப்பாடு. அரை வயிறு தான் நிறைந்தது. அதன் பிறகு ஸ்டக்லொம் மத்திய பஸ் நிலையத்தை நோக்கி நடந்தோம். வானம் இருட்டியது. மழை அடித்துப் பெய்தது. கடைகளுக்குள்ளாள் நடந்து தரிந்தோம்.

IMG_3743மழைவிட்டபின் ஸ்டக்லொமின் பழைய நகருக்கு பஸ் எடுத்தோம். அது ஒரு சிறிய தீவு. நடந்தும் செல்லலாம். ஆனால் நாம் களைத்துவிட்டபடியால் பஸ்சில் சென்றோம். பழைய நகரங்கள் எல்லாம் கல்லுப்பதித்த ஒடுங்கிய வீதிகளாகவே இருக்கின்றன. இதன் சின்ன மாறுதல்தான் மொரக்கோவின் மதினாக்கள். வீட்டுத் தயாரிப்பான  ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டோம். அதற்கான கோனை நமக்கு முன்னாலையே உருவாக்கினார்கள். இரண்டும் மிக சுவையாக இருந்தது. அழகான பேக்கரிகள் பல இருந்தன. ஆனால் சின்ன சின்ன பன்கள் கூட அதிகம் விலை. சுவையாக இருக்கலாம் ஆனால் அந்தளவு காசு கொடுத்து வாங்க மனமில்லை. ஆகவே மலிவான கடைகளில் அதே பன்னை வாங்கி சாப்பிட்டோம். நண்பர் யாழினி இங்கு கல்வி கற்றபோது எப்படி வாழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டோம்.

IMG_3754பின்லாந்து தீவுகளின் நாடு. ஸ்டொக்லொம் தீவுகளின் நகரம். இதன்பின் பஸ் எடுத்து பக்கத்தில் இருந்த இன்னுமொரு தீவுக்குச் சென்றோம். அதன் முடிவிடம் வரை சென்று அங்கிருந்து இன்னுமொரு பஸ்ஸை எடுத்து உட்கார்ந்தோம். ஒரு நாள் பஸ் பாஸ் (day pass) இருப்பதன் நன்மை இது. போகும் வழியில் இரண்டு இந்தியன் உணவகங்களைக் கண்டோம். இந்த பஸ் போகும் இடமெல்லாம் சென்று மீண்டும்  இந்தியன் உணவகம் இருந்த இடத்திற்கு வந்தோம். ஒரு கடையில் அதிக விலையாக இருக்க மற்றக்கடையும் விலையாக இருக்கும் என நினைத்து தவிர்க்கப் பார்த்தோம். ஆனால் கொண்டு செல்வதற்கு (take out) மலிவாக போட்டிருந்தார்கள். 8 டொலருக்கு பன்னீர் புரியாணி ஒன்றை வாங்கி வீதியிலிருந்து சாப்பிட்டோம். அதன் பின் சிறிது தூரம் நடந்து விட்டு பஸ் எடுத்து மத்திய புகையிரத நிலையத்திற்கு வந்தோம். அதிகாலையில் விமான நிலையம் செல்ல இந்த ஒரு நாள் பயணச்சீட்டில் எந்தப் புகையிரதத்தை எங்கே இருந்து எடுக்க வேண்டும் என விசாரிக்க சென்றோம்.

IMG_3752நமக்கு பின்லாந்துக்கு செல்வதற்கான விமானம் காலை 7 மணிக்கு உள்ளது. ஆகவே விமான நிலையத்தில்  ஆறு மணிக்கு முதல் நிற்க வேண்டும். இதற்கு  மராஸ்ட (Marsta) புகையிரத நிலையத்திற்கு அதிகாலை 4.45ற்கு செல்கின்ற முதல் புகையிரதத்தில் ஏறவேண்டும்.  அந்த நேரத்திற்கு பஸ் இருக்காது. ஆகவே நடந்து தான் வரவேண்டும். இப்பொழுது நாம் தங்கும் இடத்திற்கு நடந்தே சென்று பார்த்தோம். பத்து நிமிடங்கள் தேவை. இப்பொழுது சுமையில்லாமல் நடப்பதால் விரைவாக வந்துவிட்டோம். சுமையுடன் சென்றால் இன்னும் கொஞ்ம் அதிக நேரம் தேவை என நினைத்தோம். அதிகாலையில் நேரத்ததுடன் எழும்புவதற்காக இப்பொழுது படுக்கச் சென்றோம்.

IMG_5448நாம் தங்குமிடம் ஒரு ஹொஸ்டல். நமது அறை எட்டுக் கட்டில்கள் உள்ள இடம். பெட்சீட்க்கும் 50 குரோணா (krona) மேலதிகமாக எடுத்தார்கள். அடுத்த நாள் விமானத்திற்கான இருக்கையை உறுதி செய்துவிட்டு நித்திரை கொண்டோம். இங்கு நித்திரை கொள்ள பல நிபந்தணைகள் உள்ளன. அதில் ஒன்று  குறட்டை விடக்கூடாது என்பது. குறட்டை என்ன நாம் விரும்பி விடுகின்ற ஒன்றா? அது தானாக வருகின்றது. நம்முடன் சேர்த்து இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அந்த அறையில் நித்திரை கொண்டோம். ஆனால் அதிகாலை 3.45 எழும்பினோம். சத்தம் போடாமல் பின்லாந்திற்கான நமது பயணத்தை ஆரம்பித்தோம். வெளியே வந்தால் காலை ஆறு மணிபோல வெளிச்சம். புகையிரத நிலையத்திற்கு நடந்து சென்றபோது பஸ் ஒன்று வந்தது. அதில் ஏறினோம். அடுத்த தரிப்பில் இறங்க வேண்டுமாயினும் சுமையுடன் செல்லும் பொழுது இது வசதி. பஸ்ஸிலிருந்து இறங்கி புகையிரத நிலையத்தை நோக்கி சென்றபோது விமானத்தில் பணி செய்யும் பெண் ஒருவர் விரைவாக நடந்து சென்றார். அவரிடம் விமான நிலையத்திற்கான புகையிரதத்தைப் பிடிக்க எப்படி செல்ல வேண்டும் எனக் கேட்டோம். அவர் தன்னைப் பின்தொடரச் சொன்னார். அவர் ஏறிய புகையிரதததில் நாமும் ஏறினோம். அது உப்சலா (Uppsala) செல்கின்றது. விமானநிலையத்திற்கும் செல்லும் ஆனால் நாம் ஆளுக்கு 100 குரோணர் பணம் மேலதிகமாக கட்டவேண்டும். நமக்கான பயணச் சீட்டில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்ய அடுத்த புகையிரதத்தையே எடுத்திருக்க வேண்டும். ஆகவே அடுத்த புகையிரத நிலையத்தில் இறங்கி காத்திருந்து ஐந்து நிமிடங்களின் பின்பு அந்தப் புகையிரதத்தை எடுத்தோம். இதில் சென்றால் இடையில் ஒரு புகையிரதநிலையத்தில் இறங்கி மீண்டும் ஒரு பஸ் எடுக்க வேண்டும். அந்த பஸ் நிலையம் வயல்கள் அதைச் சுற்றிவர காடுகளும் நிறைந்த ஒரு வெளியில் இருந்தது. IMG_5446அதை நோக்கி நடந்தோம். அப்பொழுது காலை ஐந்தரை மணியாக இருந்தபோதும் ஏழு மணிபோல வெய்யில் எரித்தது. அந்த வெட்ட வெளியில் வயல்களின் மேல் பனி படர்ந்திருந்தது. உடனடியாக சேரனின், “பண்ணை வெளிகளில் பனி படர்ந்த காலை வேiளையில்” என்ற கவிதை பாடல் நினைவுக்கு வந்தது. அப் பாடலை நினைவுபடுத்திய  காட்சியை கமராவுக்குள் சிறைபிடித்தேன். எந்தளவிற்கு ஒரு பாடல் ஒரு காட்சியுடன் நம் ஆழ்மனதிற்குள் பதிந்து இருக்கின்றது…..ம்….. என்ற எண்ணங்கள் மனதில் ஓட நாம் பஸ்சில் விமான நிலையம் நோக்கிப் பயணமானோம்.

IMG_5450

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/28/50-வது-நாள்-ஸ்டொலொக்மிலிரு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயணக் கட்டுரை , தொடருங்கள் கிருபன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து – இரசியாவின் வாசல்

பின்லாந்து – இரசியாவின் வாசல்
IMG_3758பின்லாந்திற்கு (finland) காலை எட்டு மணிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம். நோர்வேஜியன் விமானம் மிகவும் மலிவாக பயணச் சீட்டு கிடைத்தது. குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டிருப்பின் பயணச் சீட்டை மிக மலிவாக வாங்கலாம். ஐரோப்பாவிற்குள் நோர்வேஜியன், ரையன் ஏயார் போன்ற சில விமானங்கள் முன்கூட்டி பதிவு செய்தால் மிக மலிவாக பயணச் சீட்டுகளை தருகின்றார்கள். இல்லாவிடினும் மற்ற விமானங்களுக்கான விலைகளுடன் ஒப்பிடும் பொழுது மலிவானது. விமான நிலையத்திலிருந்து  புகையிரதமும் பஸ்சும் உள்ளது. நாம் புகையிரதத்தை எடுத்தோம். புகையிரத நிலையத்தில் நமது சுமைகளை 4 ஈரோக்கள் கட்டி பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். நமது முதல் வேலை இரசிய தூதுவர் ஆலையத்திற்கு செல்வது. ஆனால் எப்படிச் செல்வது எனத் தெரியவில்லை. உல்லாசப் பயணிகளுக்கு தகவல்கள் கூறுவோர் வாசலில் நின்றனர். அவர்களிடம் கேட்டபோது வரைபடத்தையும் தந்து எங்கே உள்ளது எப்படி போக வேண்டும் என்பதையும் காண்பித்தார்கள்.

IMG_3760கையில் வரைபடம் இருந்ததால் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்துச் சென்றோம். அங்கு சென்றபோது அவர்கள் நம்மை உள்ளே விடமால் முடிய வாசலின் சுவரிலிருந்த தொலைத் தொடர்பினுடாக உரையாடினார்கள். முன்கூட்டிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என்றார்கள். நமது நல்ல காலம் ஆங்கிலம் தெரிந்த இரசியர்கள் உள்ளேயிருந்து வந்தார்கள். அவர்களிடம் எங்களை இரசிய விசா நிலையத்திற்கு (visa center) செல்லச் சொல்லி தொலைத் தொடர்பிலிருந்தவர் கூறினார். இரஸ்ய விசா எடுக்கும் நிலையம் காம்பி (Kamppi) என்ற இடத்தில் இருக்கின்றது. வரைபடத்தின் உதவியுடன் காம்பிக்கு நடந்து சென்றோம். அது ஒரு மோல் (Mall). நேற்றிரவு வாங்கிய மூன்று பன்களை அதிகாலையிலையே சாப்பிட்டுவிட்டோம். இப்பொழுது பசித்தது. ஒரு  கடையில்  மரக்கறி சன்விச் ஒன்றை ஐந்து ஈரோக்களுக்கு வாங்கிச் சாப்பிட்டோம். அதன்பின் இரசிய விசா நிலையத்திற்கு சென்று விசாவுக்குரிய விபரங்களை கேட்டோம். அவர்கள் விளக்கமாக பல விடயங்களைக் கூறினார்கள்.

IMG_3764நாம் சகல ஆவணங்களையும் கொடுத்தால் 7 வேலை நாட்களில் விசாவைப் பெறலாம் என்றார்கள். ஒரு ஆளுக்கு 81 ஈரோக்கள். இதில் 21 ஈரோக்கள் இவர்களது சேவைக்கானது. பாஸ்போட் மற்றும் விண்ணப்பத்தை தவிர நாம் தங்குகின்ற ஹோட்டலிலிரு்ந்து ஒரு உறுதிப் பத்திரமும் வழங்க வேண்டும். ஆனால் நாம் விசாவைப் பெறாமல் எந்த ஒரு ஹோட்டலையும் இன்னும் பதிவு செய்யவில்லை. மேலும் நாம் அங்கு வேலை செய்வதற்காக ஒரு இடத்தில் தங்கப் போகின்றோம். அவர்கள் தர மாட்டார்கள். ஏனெனில் தனிநபர்களிடம் இவ்வாறன உறுதிப் பத்திரத்தை வாங்கினால் குறிப்பிட்ட தனிநபர்களுக்கு அரசாங்கத்தால் பிரச்சனைகளை உருவாகலாம். இப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக இணையத்தில் பல சேவைகள் இருக்கின்றன. அதில் நமது விபரங்களை கொடுத்தால் நாம் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்குவதாகவும் கூறி அதற்கான உறுதிப் பத்திரத்தை ஒரு இலக்கத்துடன் தருவார்கள். இதற்காக அவர்கள் ஒருவருக்கு 30 ஈரோக்கள் பெறுகின்றார்கள். இது ஒரு வகையான சுத்துமாத்துதான். இதை இரசிய அரசாங்கமும் அறியும் என்றே நம்புகின்றேன். ஆனால் நமது சந்தேக மனதுக்கு இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. பணத்தைக் கட்டியபின் ஏமாத்தி விட்டால் என்ன செய்வது?

IMG_3768நாம் இரசிய விசா நிலையத்தில் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தபோது இரண்டரை மணி. இந்தியன் உணவகம் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து சாப்பிட்டோம். நாம் விரும்பிய கறிகள் இல்லாவிட்டாலும் ஒன்பது ஈரோக்களுக்கு புவே (Buffet) இருந்தது. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம். இன்று இரவு நாம் தங்கும் இடத்திற்கு செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று மாலை நாம் வரலாம் வந்து ஏற்ற முடியுமா என தகவல் அனுப்பினோம். அதேநேரம் அவர்களிடத்திற்கு போவத்திற்கு இருவருக்கும் சேர்த்து 50 ஈரோக்கள் செலவாகும். மீண்டும் விசா எடுக்க வருவதானால் மேலும் போய் வர என 100 ஈரோக்களை செலவு செய்ய வேண்டும். ஆகவே இன்று இங்கு தங்கி நாளை விசாவிற்கு விண்ணப்பித்து விட்டு செல்வோம் என முடிவு செய்தோம். நாம் செல்லவிருக்கின்ற இடத்திற்கும் தகவல் அனுப்பினோம் நாளை மாலை வரலாம் என தகவலை அனுப்பிவிட்டு உல்லாசப் பயணிகள் தகவல் (Tourist information center) நிலையத்திற்கு சென்றோம். இவர்கள் சிறப்பான பங்களிப்பை செய்தார்கள்.

IMG_3769நாம் தங்கும் இடத்தில் உள்ளவர்களுடன் நேரடியாக உரையாடினால் நல்லது என்பதால் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா எனக் கேட்டோம். அதற்கு 3 ஈரோக்கள் என்றார்கள். அதேநேரம் 7 ஈரோக்களுக்கு சிம் காட் ஒன்று உள்ளது. அதைப் பயன்படுத்தியும் கதைக்கலாம் என்றார்கள். நாம் சிம் காட் வாங்குவதே நல்லது என நினைத்து அதை வாங்கினோம். இப்பொழுது எங்களுக்கு இன்னுமொரு மூளை கிடைத்த மாதிரி. நாம் தங்கப் போகின்ற இடத்திற்கு நமது புதிய தொலைபேசி இலக்கத்தை அறிவித்து விட்டு இங்கு தங்குவதற்கான ஒரு ஹோஸ்டலைத் தேடினோம். இதுவே கொஞ்சம் விலை கூடத்தான் ஆனால் வேறு வழியில்லை. அதைப் பதிவு செய்து விட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம். சின்ன சின்ன கடைகள் திறந்து காலையிலிருந்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் இப்பொழு மூட ஆரம்பித்தார்கள். நாம் அதைப் பார்த்துக் கொண்டு பெரிய தேவாலையம் ஒன்றைப் பார்க்கச் சென்றோம். அப்படியே நடந்து புகையிரநிலையத்தில் நமது பொதிகளையும் எடுத்துக் கொண்டு தங்குமிடத்திற்கு சென்றோம். தங்குமிடம் மாணவர் ஹோஸ்டல். இப்பொழுது விடுமுறைக்காலமாததால் உல்லாசப் பயணிகள் தங்குவதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.

IMG_3770சுமைகளை அறையில் வைத்துவிட்டு மீண்டும் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போனோம். இப்பொழுது நகரம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகிக் கொண்டிருக்கின்றது. ஏழு மணியான போதும் வெளிச்சம் இருந்தபோதும் மனிதர்கள் குறைவாகவே இரு்ந்தார்கள். சில இடங்களில் மட்டும் இசைஞர்கள் இசைத்து நகரத்தையும் மாலைப் பொழுதையும் அழகாக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் ஒரு பீசா மற்றும் பலாவல் கடையைக் கண்டுபிடித்தோம். இன்று மாலை அனைத்தும் 5 ஈரோக்கள் என்றார்கள். ஒரு பீசாவையும் மூன்று ஈரோக்களுக்கு உருளைக்கிழங்குப் பொரியலையும் வாங்கினோம். நல்ல சாப்பாடு. சாப்பிட்டு விட்டு மெல்ல மெல்ல நடந்து இரவு தங்குமிடத்திற்கு சென்றோம். அறையில் வந்து இரசியாவில் தங்குவதற்கான உறுதிப் பத்திரத்திற்கு (visahouse) இணையத்தினுடாக விண்ணப்பித்தோம். பணத்தைக் கட்டிய இரண்டு நிமிடங்களில் நாம் தங்கும் ஹொட்டலின் பெயர், விலாசம். நம்மை அழைப்பவர்கள், மற்றும் அதற்கான உறுதி எண் என்பவற்றை அனுப்பி இருந்தார்கள். (உண்மையில் இந்த ஹொட்டலில் நாம் தங்கப் போவதில்லை. வெறுமனே விசாவிற்கான பொய்யான தகவல்கள்). இது எந்தளவு நம்பகத்தன்மை என்பது தெரியாததால் ஒருவரின் பெயரில் மட்டுமே பதிவு செய்தோம். மற்றவரின் பெயரை சேர்த்தபோது அது இன்னுமோரு விண்ணப் படிவத்தை நிரப்பும்படி கூறியது. அதற்கு மேலும் பணம் கட்ட வேண்டும் என்பதால் நாளை விசா நிலையத்தில் கதைத்துவிட்டு வி்ண்ணப்பிக்கலாம் என முடிவு செய்தோம்.

IMG_3782இரவு தாமதாக படுத்ததாலும் நேற்று அதிகாலையிலையே எழும்பியதாலும் நல்ல நித்திரை கொண்டு காலை ஒன்பது மணிக்குத் தான் எழும்பினோம். எழுப்பி குளித்து விட்டு சுப்பர் மார்க்கட்டில் பனிசையும் தேநீரையும் வாங்கி சாப்பிட்டுக் குடித்துவிட்டு விசா நிலையத்திற்கு சென்றோம். விசா நிலையத்தில் விசாரி்த்தபோது ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்றார்கள். ஆகவே மீண்டும் இணையத்தினுடாக விண்ணப்பிக்க ஐந்து நிமிடங்களில் உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இரசியாவில் இரண்டு நகரங்களுக்குப் போகின்றோம். ஆகவே இரண்டு நகரங்களிலும் தங்குமிடம் தொடர்பான தகவல்களை விசா விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்கள். நேற்றிரவு விண்ணப்பித்தபோது ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி மற்ற இடத்தையும் சேர்த்து அனுப்ப முடியுமா எனக் கேட்க சில நிமிடங்களில் புதிய உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இது நிம்மதி அளித்தபோதும் விசா வி்ண்ணப்பத்தை நிரப்புவது எரிச்சலைத் தந்து.

IMG_3788நாட்டின் அதிபர் முன்னால் (கேஜிபி) உளவுத்துறைத் தலைவராக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டிற்கு விருந்தாளிகளாக உல்லாசப் பயணம் வருபவர்களை இப்படி கேள்வி கேட்டு துன்புறுத்த வேண்டுமா? நாம் ஏற்கனவே செய்த இரண்டு வேலை இடங்களின் சகல விபரங்களையும் கேட்டிருந்தார்கள். பல்கலைக்கழக படிப்பும் படித்த இடங்களின் விலாசமும். மற்றும் கடந்த பத்து வருடங்களில் நாம் சென்ற நாடுகளின் விபரங்களையும் கேட்டிருந்தார்கள். இதைவிட வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள், சிறைச் சாலை சென்ற விபரங்கள், குற்றம் புரிந்த விபரங்கள், அம்மா அப்பாவின் விபரங்கள். இதை எல்லாம் எழுதி முடித்து அவர்களிடம் சமர்பித்து உறுதி செய்ய இரண்டறை மணியாகிவிட்டது. ஒருவகையான மன அழுத்தத்தை உருவாக்கியது. இப்பொழுது, “அப்பாடா” பெரிய மூச்சொன்றை விட்டுக்கொண்டு வெளியே வந்து கட்டிடத்தின் முன்னால் இருந்த சீன உணவகத்தில் மரக்கறி முட்டை கலந்து செய்த சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து வெளியே இருந்து சாப்பிட்டோம்.

IMG_3789காம்பியின் கீழ் தளத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு சென்று நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ்சிற்குப் பதிவு செய்தோம். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ் மாலை 4.30ற்கு இரு்ந்தது. அதற்குள் நாமிருந்த ஹொஸ்டலுக்குச் சென்று நமது சுமைகளைத் தூக்கி கொண்டு வரவேண்டும். இதை எல்லாம் செய்து விட்டு நிம்மதியாக பஸ் நிலையத்திற்கு 4 மணிக்கு வந்தோம். இதற்கிடையில் கடையில் எதாவது சாப்பிட வாங்கி வர Shirley  சென்றார். பஸ் 4.25 வந்து அனைவரும் ஏறிவிட்டனர். Shirleyயைக் காணவில்லை. எனக்குப் பதட்டமாகிவிட்டது. ஏற்கனவே சுமைகளை பஸ்சிற்குள் வைத்துவிட்டேன். ஆனால் பற்றுச்சீட்டுகள் shirleyயிடம்.  அவர் மெதுவாக நடந்து வந்தார். ஏன் தாமதம் என்று கேட்டதற்கு தான் இன்னும் நேரமிருப்பதாக நினைத்ததாக கூறினார். ஒருவாறு நிம்மதியாக பஸ்சில் ஏறி உட்கார்ந்து நமது அடுத்த புதிய அனுபவத்தைப் பெறுவதற்காக கிராமத்தை நோக்கிப் பயணித்தோம். அவர்களும் இன்று வரும்படியும் தாம் சந்தியில் வந்து ஏற்றுவதாகவும் நேற்று உறுதி செய்தார்கள்.

சரியாக ஒர வாரத்தின் பின்பு நமக்கு விசா கிடைத்ததாக உறுதி செய்தார்கள். ஒரு காலத்தில் கனவு கண்ட ஒரு நாட்டிற்கு செல்வது உறுதியாகியது.

அடுத்த பதிவில் பின்லாந்தில் நமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்வோம்.

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/07/31/பின்லாந்து-இரசியாவின்/

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

60ம் நாள்: பின்லாந்து: ரஸ்பெரியும் புளுபெரியும்

பின்லாந்து: ரஸ்பெரியும் புளுபெரியும்

IMG_3855ஹெல்சிங்கி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ் ஒரு மணித்தியாலத்தின் பின்பு யாருமேயற்ற விரைவான வீதி ஓரத்திலிருந்த பஸ் நிலையத்தில் நின்றது. நாம் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்த பொழுது விரைவான வீதியை குறுக்காக மேலாக வெட்டிச் செல்லும் வீதியில் ஒரு கார் நின்றது. இதுதான் நம்மை ஏற்ற வந்தவரின் காராக இருக்கும் என நினைத்துக் கொண்டு சென்ற பொழுது அவரும் காரை விட்டு இறங்கி நமக்கு கை அசைத்தார். மனம் அமைதியடைந்தது. கார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக தார் போட்ட காட்டுப் பாதைகளினுடாக போய் மண் பாதை ஒன்றுக்குள் திரும்பியது. அந்த சந்தியில் வாகனத்தை நிற்பாட்டி தமக்கான கடிதங்களை தபால் பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டார். மேலும் கிட்டத்தட்ட பத்து தாபால் பெட்டிகள் இருந்தன.. வாகனம் தொடர்ந்தும் மண் பாதையில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பயணித்தது. பதை முழுவதும் காடுகளும் வயல்களும் நீர் ஏரிகளும் இருந்தன.

IMG_3804நாம் கரலோஜா (Karjalohja ) என்ற இடத்திலுள்ள இளந்துலி (http://elontuli.fi/en/) என்ற  தங்குமிடத்திற்கு வந்தபோது ஒரு குழு தனது பயிற்சி ஒன்றை முடித்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நாம் அனைவரும் போகும் வரை காத்திருந்தோம். சிலர் நம்முடனும் வந்து விசாரித்த பின் வாழ்த்திவிட்டுச் சென்றனர். இரவு குழுவை வழிநாடாத்தியவர்களுக்கு இருந்த சாப்பாடுகளை மீளுருவாக்கம் செய்து வழங்கி எனது வேலையை ஆரம்பித்தேன். நாமும் இருந்ததை சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டோம். குழுவை வழி நடாத்தியவர்களுக்கு காலை சாப்பாடும் செய்து கொடுக்கலாமா எனக் கேட்டார்கள். நான் காலையில் எழும்புகின்றவன் என்பதால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்.

IMG_3819காலை எழும்பி பழங்களைத் துண்டு துண்டாக வெட்டிவிட்டு ஓட்மில்லை அவித்தும் வைத்தேன். நாம் பானும் வாழைப்பழமும் சாப்பிட்டோம். குழு நடத்தியவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டனர். இனி இரண்டு கிழமைகளுக்கு எந்த குழுச் செயற்பாடும் இல்லாததால் மலசல கூடங்கள் அனைத்தையும் பயன்படுத்த தேவையில்லை. ஆகவே மேல் தளத்திலிருந்த மூன்று மலசலக் கூடங்களையும் சுத்தம் செய்து அதற்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவித்தலையும் தொங்விட்டோம். இதைச் செய்து முடிக்க 11.30 மணியாகிவிட்டது. நன்றாக களைத்துவிட்டோம். குளித்துவிட்டு ஏற்கனவே சமைத்து செய்து குளிருட்டிக்குள் வைத்திருந்த பழம் சூப்பையும் சோற்றையும் ஒன்றாக போட்டு சூடாக்கி சாப்பிட்டோம்.

IMG_3839மதியமளவில் பக்கத்திருந்த சலோ கிராமத்திற்கு நம்முடன் வேலை செய்கின்ற பின்லாந்து பெண் சென்றதால் நம்மையும் அழைத்துச் சென்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் அந்த சிறிய கிராமத்திற்கு சென்றடைந்தோம். இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சந்தை கூடுவார்கள். நாம் போனவுடன் ஒரு பன்னும் தேநீரும் குடித்தோம். பின் அந்த இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஒரிடத்தில் நீண்ட வரிசையில் மனிதர்கள் தமது குழந்தைகளுடன் பெரிய பைகள் நிறைய சமான்களுடன் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் வாகனங்கள் தரிக்கும் இடத்தை நோக்கி வரிசை குழையாமல் ஓடி இடம் பிடித்தார்கள். தமது பைகளிலிருந்த சமான்களைப் பறப்பி குழந்தைகள் அதன் முன் உட்காந்திருந்தார்கள். சில சிறுவர்கள் தமது பெற்றோருடன் வந்து விற்கப்போட்டிருந்த சாமான்களைப் பார்த்து தமக்குப் பிடித்தமானதை வாங்கினார்கள். பெரியவர்களும் இச் சிறுவர் சந்தையில் சமான்களை வாங்கினார்கள். இதுவே இந்தச் சந்தையில் விசேசமான நிகழ்வு. இதைவிட மீன் பொறியலும் மாவில் சுட்ட தோசையில் ஜாமும் கலந்து விற்றார்கள். வித விதமான பாண் வகைகள் விற்பனைக்கு இருந்தன. மாலை வீட்டுக்கு வந்து மீண்டும் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டை சூடாக்கி சாப்பிட்டோம்.

IMG_3866இரண்டாம் நாள் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு கீழ் தளத்திலுள்ள இரண்டு மலசலக்கூடங்களையும் மேலே நாம் பயன்படுத்துகின்ற இரண்டு மலசல கூடங்களையும் கழுவி சுத்தம் செய்தோம். கீழ் தளத்திலுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவித்தலை தொங்கவிட்டோம். இதன் பின் குளித்துவிட்டு சோறும் சம்பாறும் செய்தோம். அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டோம். மகிழ்ச்சியாக இருந்தது. மற்றவர்கள் சாப்பிட்ட களையில் நித்திரை கொள்ள செல்ல நான் எழுத ஆரம்பித்தேன். மாலையில் பக்கத்திலிருந்த நீர் ஏரிவரை நடந்து சென்றோம்.  மதியம் சமைத்த சோற்றையும் சம்பாரையும் ஒன்றாக குழைத்து சூடாக்கி உருளைக்கிழங்கு பொறியலுடன் இரவு சாப்பிட்டோம்.

IMG_3881மூன்றாம் நாள் கீழ் தளத்திலுள்ள அறைகளை சுத்தம் செய்தோம். பின் குளித்துவிட்டு நேற்று சமைத்த சோற்றை மரக்கறிகளை போட்டு பிரட்டி சலாட்டும் செய்து சாப்பிட்டோம். மாலை பக்கத்திலிருந்த காட்டிற்குள் புளுபெரி புடுங்குவதற்கு சென்றோம். இது ஒரு முதல் அனுபவம். வழமையாக பாதைகள் இருக்கின்ற காடுகளுக்குள் நடந்துதான் பழக்கம். இது பாதையில்லாத பாதைகளை உருவாக்கி சென்றோம். புளுபெரி புடுங்குவதற்கு வித்தியாசமான உபகரணம் உள்ளது. கன்றுகளை மென்மையாகப் பிடித்து உபகரணத்தை பழங்களின் கீழாக கன்றுகளினூடு செலுத்தி ஒரு குலுக்கு குலுக்க பழுத்த பழங்கள் கொட்டும். அல்லது அப்படியே மெல்ல இழுத்து எடுத்தால் பழங்கள் வரும். கிட்டத்தட்ட அம்மாக்கள் குழந்தைகளின் கண்ணங்களைப் பிடித்துக் கொண்டு தலையை வாறுவதைப் போல செய்ய வேண்டும். அப்படியே தொடர்ந்து செய்து உபகரணம் நிறைந்தவுடன் பெரிய வாளில் கொட்டுவோம். இப்படி இரண்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து செய்தோம். ஒரு மணித்தியால வேலையில் நமது உபகரணம் பாதியளவே நிறைந்தது. மழை தூர ஆரம்பித்தபோதும் சிறிது நேரம் செய்துவிட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம். இரவு நாங்கள் இருவர் மட்டுமே. பின்லாந்துப் பெண் தனது அறையில் ஒதுங்கிக் கொண்டார். நாம் பழைய குக்குஸ் போன்ற ஒரு தானியத்திற்கு வெங்காயமும் தங்காளியும் கலந்து தூள்களையும் போட்டு பிரட்டி எடுத்தோம். அந்த அவித்த தானியத்தில் இன்னும் கொஞ்சத்தை எடுத்து கடலைகள் சிலவற்றுடன் சேர்த்து நெய்யும் ஊற்றி சிறிது வருத்தெடுத்தோம். ஷேளி உருளைக் கிழங்குகளைப் பொரித்தார். நேற்று சமைத்த சம்பாரையும் சோற்றையும் கலந்து சாப்பிட்டோம்.

IMG_5536நான்காம் நாள் காலை எழும்பி குளித்து சாப்பிட்டு விட்டு இன்னுமோரு காட்டுப் பிரதேசத்திற்கு சென்றோம். இங்கு நம் இருவருடன் மேலும் நான்கு பேர்கள் சேர்ந்து ரஸ்பேரி புடுங்கினோம். இதை நின்று கொண்டு புடுங்கலாம். ஆனால் பற்றைகளை விலத்தி விலத்தி செல்ல வேண்டும். மேலும் உண்ணி போன்ற ஒருவகை உயிரினம் நமது உடலில் ஒட்டி இரத்தத்தை ஊறிஞ்சும் என்றும் தொடர்ந்து ஊறிஞ்சினால் நமக்கு அன்டிபயட்டிக் அடிக்க வேண்டி வரலாம் என்றார்கள். நம்மிடம் இவ்வாறு வருத்தங்கள் வந்தால் நம்மைப் பாதுகாப்பதற்கு பயணக் காப்புறுதியும் இல்லை. இந்த உண்ணி நமக்கு பயத்தை உருவாக்கியதால் நாம் விரைவில் களைத்துவிட்டோம். இருந்தாலும் ஒரளவு புடுங்கினோம். மதியமளவில் எனக்குப் பசிக்கின்றது என்று கூற புடுங்கிற வேலையை விட்டுவிட்டு வந்தோம். மற்றவர்களுக்கும் நான் அவ்வாறு கூறியது மகிழ்ச்சியைத் தந்திருக்க வே்ண்டும்.

IMG_5564வரும் வழியில் ஒரு கடையில் பனிஸ் வாங்கி உடனையே கொஞ்சம் சாப்பிட்டு பசியாறினேன்.. தங்குமிடத்திற்கு வந்தபின் நாம் இருவரும் சேர்ந்து கரட் மற்றும் பச்சைக் கறிமிளகாய் சேர்த்து தங்காளிச் சாறுடன் பாஸ்தா செய்தோம். அதிசயமாக சுவையாக இருந்தது நமக்கே ஆச்சரியமாக இருந்தது. சாப்பிட்டு முடிய 2.30 மணியாகிவிட்டது. ஏனோ உடல் களைப்பாக இருக்க அறைக்குச் சென்றோம். பகலில் நான் நித்திரை கொள்வதில்லை. ஆனாலும் என்னை மீறி நித்திரை வர கொண்டேன். அரை மணித்தியாலங்கள் நல்ல நித்திரை. எழும்பியபின் சிறு  வேலைகளை செய்து கொடுத்துவிட்டு நடக்க சென்றோம். வயல்களும் வயல்களின் முடிவில் காடுகளும் உள்ள இடம். வயல்கள் பச்சையாகவும் மஞ்சளாகவும் பரந்து கிடந்தன. வெட்டியவற்றை வெள்ளை பிளாஸ்சிட் போன்ற ஒன்றால் சுற்றி அழகாக அடுக்கியிருந்தார்கள். நடை பாதைகளில் இருந்த ரஸ்பெரிகளை ஷேளி புடுங்கினார். வழமையாக கண பணம் கொடுத்து வாங்கும் இந்தப் பழங்களை அவரே புடுங்கி சாப்பிடுவது அவருக்கு ஆனந்தமாக இருந்தது. ஆனால் தங்குமிடத்திற்கு சென்று கழுவித்தான் சாப்பிடுவார். மதியம் செய்த பாஸ்தாவை இரவுக்குச் சாப்பிட்டோம். 9 மணியளவில் புளுபெரி புடுங்கப்போன இருவர் திரும்பி வந்தனர். அவர்கள் கொண்டு வந்த புளுபெரியை ஒரு மணித்தியாலாமாக துப்புரவு செய்துவிட்டு இஞ்சித் தேநீருடன் அறைக்குச் சென்றோம்.12 மணிவரை எழுதிவிட்டு நித்திரைக்கும் போனேன்.

IMG_5571ஐந்தாம் நாள் காலையில் எழும்பி நீண்ட நாட்களுக்குப் பின் நான்கு பேருடன் சக்கரா மூச்சுத் தியானம் செய்தோம். இது பல காரணங்களுக்கான நான் விரும்புகின்ற தியானம். ஒவ்வொரு தியான முறைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடு பயன் மற்றும் எனது அனுபவங்கள் தொடர்பாக எழுத வேண்டும் என நீண்ட நாட்களால் கனவு காண்பதுண்டு. பயணத்தை முடித்த பின் எழுத வேண்டும். நாம் தியானப் பயிற்சி செய்த அறையை சுத்தம் செய்துவிட்டு புளுபெரி புடுங்குவதற்குப் போனோம். இவ்வாறு ஒவ்வொறு நாளும் இந்தப் பழங்களைப் புடுங்குவதற்கு காரணம் அடுத்த கோடைக் காலம்வரை சேமித்து வைப்பதற்காகும். இதைக் கொண்டு பல குளிர்பானங்களையும் உணவு வகைகளையும் இவர்கள் சமைப்பார்கள். வீட்டுக்கு வந்தபோது இரண்டு மணியாகியிருந்தது. நல்ல பசி. குனிந்து குனிந்து புடுங்குவதால் இடுப்பு நோவும் ஏற்பட்டது. நேற்று செய்த பாஸ்தாவை சூடாக்கி சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. பின் ஏரியில் மூவரும் நிர்வாணமாக குளித்தோம். நிர்வாணமாக வானத்திற்கு கீழே சூரிய ஒளிக் கதிர்கள் நம்மைச் சூடாக்க தென்றல் மெல்லத் தடவிச் செல்ல ஏரி நம்மைத் தாளாட்ட குளிப்பது எவ்வளவு சுந்திரமானது. ம்…!

IMG_5592குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து மிச்சமிருந்த பாஸ்தாவை நான் சாப்பிட்டேன். Shirley சாலாட் செய்து சாப்பிட்டார். நாம் புளுபெரியை துப்பரவாக்கி அடைத்து வைக்க பின்லாந்து பெண் புளுபெரியில் பை செய்து நேற்று ஊறவைத்த பயறையும் அரிசையும் சேர்த்து அவித்து கிச்சடி செய்தார். இவர் இரண்டு முறை ஆறு மாதங்களாக தனது முன்னால் காதலனுடன் இந்தியாவில் மோட்டார் பைக்கிள் பயணம் செய்தவர். இந்த அனுபவத்தினுடாக இந்திய உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொண்டார். நான் சாப்பிட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். இரவு கிச்சடியை சூடாக்கி சாப்பிட்டோம். சுவையாகவே இல்லை. இன்று இரவு நாம் மூவரும் மட்டுமே. இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ஒரு குழு நிகழ்வுகளும் இல்லாததால் நீண்ட காலத்திற்குப் பிறகு சில நாட்கள் விடுமுறையில் சென்றனர்.

IMG_5550ஆறாம் நாள் காலை எழும்பி நடன தியானம் ஒன்றை செய்தோம். இது ஓசோவின் அடிப்படையில் இன்னுமோருவரால் உருவாக்கப்பட்ட தியான முறை. எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்ல. இதற்கு மாறாக ஓசோவின் நடன தியானங்கள் பல அழகான இசையுடன் உள்ளன. காலை சாப்பிட்டுவிட்டு ஆறு அறைகளையும் அங்குள்ள படுக்கைகளையும் சுத்தம் செய்தோம். பின் நேற்றுப் பிடுங்கிய புளுபெரிகளை சுத்தம் செய்துவிட்டு குளித்து சாப்பிட்டோம். மாலைவரை கம்யூட்டருடன் இருந்துவிட்டு ஆறு மணி போல முட்டை பொறித்து பாணுடன் சாப்பிட்டோம். அதன் பின் பின்லாந்து பெண்ணின் நண்பர் ஒருவர் ஹெல்சிங்கியிலிருந்து வந்தார். அவரையும் கூட்டிக் கொண்டு புளுபெரி புடுங்கப் போனோம். இரவு ஒன்பது மணிவரை இரண்டறை வாளிகள் நிறைய புடுங்கினோம். நாமும் இப்பொழுது காடுகளுடன் கொஞ்சம் ஐக்கியமாகின்றோம். மனத் தடைகள் குறைந்து செல்கின்றன. பல விடயங்கள் பழக்கத்தில் இயல்பாகிவிடுகின்றன. சூரியன் இப்பொழுதுதான் அடிவானத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கின்றது. இன்னும் வெளிச்சம் இருந்தது. வீட்டுக்கு வந்து அவற்றை வைத்துவிட்டு ஏரியில் நால்வரும் நிர்வாணமாக அரையிருட்டில் குளித்து விட்டு வீட்டுக்கு வர பத்து மணியாகிவிட்டது. பாணை சாப்பிட்டு தேநீர் குடித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் நான்.

IMG_3869ஏழாம் நாள் காலை எழுந்து சாப்பிட்டுவிட்டு புளுபெரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். இரண்டு வாளிகளையும் செய்து முடிய 12.30 ஆகிவிட்டது. அதன் பிறகு குளித்து விட்டு கிச்சடியை வெங்காம் தக்காளி தூள் போட்டு மீள்உருவாக்கம் செய்து சாப்பிட்டேன். சாப்பிட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். மாலை அறைகளையும் விறாந்தைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்தோம். பின் ஒரு மணித்தியாலம் குண்டலினி தியானம் செய்தோம். உடலிலுள்ள சக்திகளை சமப்படுத்தவும் மன அழுத்த சக்திகளை வெளியேற்றவும் நல்ல தியானமுறை இது. நீண்ட நாட்களுக்குப் பின்பு செய்வதால் மூட்டுக்கள் வலியை ஏற்படுத்தின. மூட்டுகளில் தான் நமது சக்திகள் தேங்கி நிற்கின்றன. இத் தியானத்தை செய்யும் பொழுது அவை அதிலிருந்து வெளியேறுவதால் இந்த வலி ஏற்படுகின்றது. இதன் பின் நாம் நடக்க சென்றோம்.

IMG_5617எட்டாம் நாள் புளுபெரிகளை சுத்தம் செய்துவிட்டு குசினியை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தோம். தனது நண்பியை பயணம் அனுப்பிவிட்டு வந்தார் பின்லாந்து பெண். நாம் மலையளவில் புளுபெரி புடுங்கச் சென்றோம். ஷேளி இப்பொழுது இந்தப் பழங்களைப் புடுங்குவதில் சேர்ச்சி மட்டும் பெறவில்லை கழுவாமல் சாப்பிடுமளவிற்கு முன்னேறிவிட்டார். பின்லாந்தில் சூழல் பெரிதாக மாசடையவில்லையாம். ஆகவே பயப்பிடாமல் கழுவாமல் சாப்பிடலாம் என்றார்கள். நமது பழக்கதோசம் கொஞ்சம் தடையாக இருந்தாலும் அதையும் கடந்து சாப்பிட ஆரம்பித்தார். ஸ்கன்டிநேவியன் நாடுகளிலுள்ள தண்ணீரும் மிகவும் சுத்தமானவை. கடைகளில் தண்ணீர் போத்தல்கள் வழமையான பானங்களை விட அதிகமான விலையாகும்.

IMG_3878ஒன்பாதாம் நாள் காலை எழுந்து குளித்துவிட்டு சாப்பிட்டேன். இன்று நாம் தங்கும் இடத்தை நிர்வகிப்பவரின் பிறந்த நாள். என்ன செய்யலாம் என ஆசோசனை செய்தோம். நான் ஒரு நாள் வாங்கிவந்த வெள்ளை அரிசியில் பால் சோறு சமைத்து முந்திரியவத்தலால் பிறந்த நாள் எழுதி அழகுபடுத்தினேன். பின்னாலந்து பெண் பழங்களை கொண்டு கேக் செய்தார். அவர் சோறு அவிக்க நாம் பருப்பு பால் கறியும் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து குழம்பும் வைத்தோம். மதியம்போல 2007ம் ஆண்டு இத்தாலியில் மூச்சுப் பயிற்சி ஒன்றில் சந்தித்த நண்பர் என்னைச் சந்திக்க வந்தார். அவருக்கும் சாப்பிடக்கொடுத்தோம். பின் சுற்றியுள்ள இடங்களை காண்பிக்க செல்வதாக அழைத்துச் சென்றார். போகும் வழியில் தனக்கு இன்று பிறந்த நாள் என்பதைக் கூறினார்.

IMG_3897நூறாண்டுகளுக்கு முன்பு இரும்பு உற்பத்தி செய்த பிஸ்காஸ் என்ற கிராமத்திற்கு நாம் சென்றோம். இது முக்கியமான உல்லாசப் பயணிகள் இடம். பொருட்கள் அனைத்தும் வானத்து உயர விலை. எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உற்பத்தி செய்தவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் வேலை செய்து அந்த இடத்திலையே சில மணிநேரம் நித்திரை கொண்டு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறை பெற்று கடுமையாக உழைத்ததை அறிந்தோம். இன்று நமது நண்பருக்குப் பிறந்த நாள் என்பதால் மூவருக்கும் விருப்பமான மூன்று வகையான கேக்குகளை வாங்கி ஆனந்தமாக பங்கிட்டு உண்டோம். மாலை வீட்டுக்கு வந்தவுடன் ரவையில் நெய் ஊற்றி உடனடியாக கேசரி செய்து அதில் அப்பிள் பழத்தால் பிறந்த நாள் வாழ்த்துகள் எழுதி அழகுபடுத்தினோம். இதையும் மதிய சாப்பாடுகளையும் குழைத்து ஒன்றாக சாப்பிட்டோம். இன்று பிறந்த நாளுக்குரிய மற்றவர் வரவில்லையாததால் பால் சோற்றை சாப்பிடாமல் அவருக்காக வைத்தோம். இரவு பதினோரு மணிவரை ஆனந்தமாக நடனமாடினோம்.

IMG_3874பத்தாம் நாள் காலையில் எழுந்து நேற்று நண்பர்கள் புடுங்கிய கரன் பழங்களையும் நாம் முதல் நாள் புடுங்கிய பழங்களையும் துப்பரவு செய்தோம். மதியம் எனது நண்பரும் வர அவருடன் இருந்து இருந்த பழம் சாப்பாடுகளை சூடாக்கி நால்வரும் சாப்பிட்டோம். அதன்பின் பால்டிக் கடலருகில் இருக்கின்ற இரண்டு கிராமங்களைச் சுற்றிப் பார்க்க  கூட்டிச் சென்றார். பின்லாந்துப் பெண்ணையும் அழைத்துச் சென்றோம். அங்கு ஒரு கிராமத்தில் ஐஸ்கீரிம் குடித்து இன்னுமொரு கடையில்  திண்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த கிராமத்திற்கு (Hanko) சென்றோம். இக் கடலின் எதிர் எதிர் முனைகளில் ஒரு பக்கம் சுவிடனும் மறுபக்கம் எஸ்தோனியா நாடுகளும் இருக்கின்றன. அமைதியான நீண்ட தூரத்திற்கு ஆழமில்லாத களப்பு போன்ற பால்டிக் கடலின் ஒரு பகுதியில் நீந்தினோம். வடமுனையின் ஏரி நீரும் சமுத்திர உப்பு நீரும் சேருவதால் தண்ணீர் கடலைப் போல அதிக உப்புச் சுவையாக இருக்கவில்லை. நீந்தி முடிய அந்த இடங்களிலுள்ள கற்பாறைகளின் மீது ஏறி நடந்தோம் நடனமாடினோம். சத்தம் போட்டோம். அமைதியாக இருந்தோம். சூரியன் இரவு எட்டு மணிக்கு கீழ் வானத்தை நோக்கிச் செல்ல நாம் அங்கிருந்த கடையில் இருந்த சில உணவுகளை வாங்கி சாப்பிட்டபின் நம் இருப்பிடத்தை நோக்கிப் பயணித்தோம். நண்பருக்கு நாம் முதன் முதலாக சந்தித்ததிலிருந்து என் மீது ஒரு விருப்பம். சிரிப்பு தியானத்தின் போது நான் சிரிப்பது தனக்குப் பிடிக்கும் எனக் கூறினார். பத்து மணியளிவில்தான் சூரியன் மறைய ஆரம்பித்தது. நமக்கும் நித்திரை வர ஆரம்பித்தது. இருப்பினும் முகநூலில் இன்றைய படங்களை ஏற்றிவிட்டு சிறிது எழுதிவிட்டு நானும் நித்திரை கொள்ளச் சென்றேன்.

IMG_3981பதினொராம் நாள் காலையிலையே முட்டை பொறித்து சாப்பிட்டோம். என்ன வேலை செய்வோம் எனத் தெரியாது. ஆகவே கொஞ்சம் நன்றாக சாப்பிட்டால் நல்லது எனச் சாப்பிட்டோம். ஷேளி நமது அடுத்த பயணத்திற்கான பதிவுகளை செய்யச் சென்றார். நான் மிகுதியிருந்த பழங்களைச் சுத்தம் செய்தேன். மதியம் போல உருளைக்கிழங்கையும் இனிப்பு உருளைக்கிழங்கையும் வெட்டி சில மணம் நிறைந்த பொருட்களைத் தூவி எண்ணையில் பிரட்டி அவனில் வைத்தோம். இன்று அனைவரும் சாப்பாட்டுக்கு சமூகமளித்தனர். இன்றுதான் அவர்களுக்கு வைத்த பால்சோற்றையும் மற்றும் உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டோம். மாலை ஒரு வேலையும் இருக்க வில்லை. எழுதிக் கொண்டிருக்கின்றேன். பெரிதாக ஒன்றையும் சமைக்கவில்லை. இருந்த பழம் சாப்பாடுகளை சாப்பிட்டோம். இரவு அனைவரும் பதினோரு மணிவரை நடனமாடிவிட்டு நித்திரைக்குச் சென்றோம். நான் இப் பதிவை திருத்திக் கொண்டிருக்கின்றேன். இப்பொழுது நடுநசி 12.30 ஆகிவிட்டது. இன்றுடன் இரண்டு மாதங்களை வெற்றிகரமாக முடித்துவிட்ோம். ம்…இன்னும் எவ்வளவு காலம் தொடர் ோம்.

IMG_3982நாளை காலை இங்கிருந்து புறப்படுகின்றோம். இளமையில் கனவு கண்ட பல கதைகளை வாசித்த அதனுடாக அந்த மண்ணுடனும் மனிதர்களுடன் வாழ்ந்த இரசிய நாட்டிற்கு நாளை இரவு பயணமாகின்றோம். இன்று இரசிய மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வு தொடர்பாக நாம் கேள்விப்படுபவை எதிர்மறையானவையாகவே இருக்கின்றன. அது உண்மையா என அடுத்த பதிவில் எழுதுகின்றோம்.

இம் முறை ஒரு நாட்குறிப்பாகவே எழுதியுள்ளேன். எதை எழுதுவது எனத் தெரியவில்லை. ஆனால் பதிவு செய்வது முக்கியமானது என்பதால் எழுதுகின்றேன். உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எனது எழுத்தை செப்பனிடும். ஆகவே தயங்காது உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.

இன்று shirleyயின் அப்பா சாமிநாதன் அவர்கள் மரணித்த தினம். அவரை நினைவு கூரி இக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம்

IMG_3948

மேலும் படங்களைப் பார்க்க…..click here

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/01/பின்லாந்து-ரஸ்பெரியும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசியாவை பார்க்க ஆவலாக இருக்கிறோம்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

IMG_4383இரசியாவிற்கு செல்வது என முடிவெடுத்தவுடன் செயின் பீட்டர்ஸ்பேக்கிலும் மாஸ்கோவிலும்  ஒவ்வொரு வாரம் நமது சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். 2007ம் ஆண்டு இத்தாலியில் சந்தித்த ஒரு இரசிய நண்பருடன் தொடர்பு கொண்டபோது அவர் இரண்டு இடங்களிலும் இருவரின் தொடர்பைத் தந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வரலாம் என்று கூறினார்கள். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. இரசியாவைப் பற்றி வாசித்த தகவல்களில் அடிப்படையில் நாம் சிலவற்றை உறுதி செய்து கொண்டு போகவேண்டியிருந்தது. ஆகவோ ஹோட்டல் ஒன்றை செயின் பீட்டர்ஸ் பேர்க்கில் பதிவு செய்தோம். இதேநேரம் செயின்பீட்டர்ஸ் பேர்க்கிலிருந்து அலெக்ஸ் என்பர் தம்முடன் வந்து வேலை செய்யலாம் என எழுதியிருந்தார்.

IMG_4389செயின் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாட்கள் நின்றுவிட்டு இரசியர்களுடன் காட்டில் வாழ சென்றோம். ஆரம்பத்தில் ஒரு வாரம் நிற்பது நோக்கம். ஆனால் இப்பொழுது மூன்று இரவுகள் நிற்பதுதான் நோக்கம். இதற்காக ஒரு இடத்தில் நித்திரை கொள்கின்ற பைகளை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள நகரப் புகையிரதம் எடுத்து பின் ஒரளவு தூரம் நடந்து சென்றோம். போகின்ற வழியில் “மோல்” போன்ற ஒரு இடம் இருக்க அதிலிருந்த கடை ஒன்றில் மரக்கறி “பிரைட்” சோறு வாங்கிச் சாப்பிட்டோம்.

IMG_4390நித்திரை கொள்கின்ற பைகளை வாங்கும் இடத்திற்கு சென்றபோது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது நான்கு பக்கமும் மதில் சுவர்கள் இருக்க உள்ளே பழைய சமான்கள் இரும்புகள் விற்கின்ற மற்றும் வாகனங்கள் திருத்துகின்ற இடங்கள் போலவும் இருந்தது. நமக்கு வாடகைக்கு தருகின்ற மனிதர் நம்மை ஒதுக்குப்புறமாக இருந்த அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்றார். உள்ளே பெட்டிகளில் பல வகையான “காம்பிங்” சமான்கள் இருந்தன. ஒரு பெட்டிக்குள் நித்திரை கொள்கின்ற பைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவற்றை எப்ப கழுவினீர்கள் எனக் கேட்டோம். மாதத்தில் ஒரு தரம் கழுவுவோம் என்றார்கள். ம்…. நமது முடிவு இங்கு தீர்மானிக்கப்பட்டது. 800 ரூபில்களைக் இரண்டு இரவுகளுக்கு கொடுத்து இருந்தவற்றில் நல்லதாக இரண்டு பைகளைப் பெற்றுக் கொண்டோம்.  மேலும் ஒரு நாள் தேவைப்பட்டால் வந்து மிகுதிப் பணத்தை தருகின்றோம் எனக் கூறினோம். பாதுகாப்புப் பணமாக 2000 ரூபில்களையும் கட்டினோம். பொருட்களை திருப்பி ஒப்படைத்தபின் தருவதாக கூறினார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு நம்மை அழைத்துச் செல்கின்ற நண்பரை சந்திக்க பக்கத்திலிருந்த தீவிற்கு செல்ல வேண்டும். இன்னும் ஒரு மணித்தியாலங்களே இருந்தன. பஸ்சில் சென்றால் மட்டுமட்டாக நேரம் இருக்கும் என்பதானால் வாடகை வாகனத்தைப் பிடித்தோம்.

IMG_4395நாம் காட்டிற்கு புகையிரதத்தில் செல்வது நோக்கம். இருப்பினும் யாராவது மாஸ்கோவிலிருந்து வருகின்றார்களா என கேட்டபோது நண்பர் சேக்கிரோவை தொடர்புபடுத்தினார். அவர் குறிப்பிட்ட இடத்தில் சென்று காத்திருந்தபோது சொன்ன நேரத்திற்கு நண்பர் வந்தார்.. அந்த நண்பர் மிகவும் மென்மையானவர். பணிவானவர். இரண்டு குழந்தைகளின் தந்தை. நம்மை நன்றாக உபசரித்தார். ஓரிடத்தில் முகாமையாளராக வேலை செய்கின்றார். ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரியும். இத்தாலியில் பல இரசிய நண்பர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் இவரைப் போல மென்மையான ஒருவரைக் கண்டதில்லை. காட்டிற்கு நண்பரின் காரில் பயணமானோம். நகரத்திலிருந்து வெளிக்கிட்டு லெனின் சதுக்கம் இருந்த தீவினுடாக சென்று ஏங்கல்சின் வீதியில் பயணித்து பின் ஒன்றரை மணித்தியாலங்கள் விரைவான வீதியில் சென்று ஒரு காட்டுப் பாதைக்குள் சென்றோம்.

IMG_4394மழை பெய்து மண் பாதை சகதியும் பள்ளமுமாக இருந்தது. சரியான பாதையில் வாகனங்கள் வருவதற்கு குறிகள் இட்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களும் சிறிய ஆறும் ஒடுகின்ற இடத்தின் மத்தியில் பல கூடாரங்கள் அமைத்திருந்த இடத்தில் நின்றோம். மேகங்கள் கறுத்திருந்தபோதும் சிறிது வெளிச்சம் இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்த சூரியன் உயர்ந்த மரங்களின் உச்சியில் மஞ்சள் வெளிச்சத்தைப் பாச்சிக் கொண்டிருந்தது. நாம் சென்றபோது இரவு சமையல்  செய்து கொண்டிருந்தார்கள். இந்த முகாமை ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்கின்ற அலெக்ஸ் தன்னை அறிமுகம் செய்தார். இதன்பின் ஒவ்வொரு இடங்களாக கூட்டிச் சென்று காட்டினார்.

IMG_4402கடந்த பத்து வருடங்களாக இன்னும் சிறிது தூரத்தில் வடக்கு நோக்கி செல்கின்ற காட்டில் செய்தார்களாம். ஆனால் இப்பொழுது அரசாங்கம் அந்தக் காட்டை தேசிய காடாக அறிவித்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இக் காட்டை தெரிவு செய்துள்ளார்கள். வழமையாக எந்த ஒரு காட்டிற்கு அனுமதி பெறாமல் உள்ளே சென்று இருக்கலாமாம். இந்தக் காட்டிற்கும் அனுமதி ஒன்றும் பெறத் தேவையில்லை. கிழமை நாட்களில் 30 பேரளவிலும் வார இறுதி நாட்களில் 50 பேர்களுக்கு மேற்பட்டவர்களும் ஒன்று கூடி சமைத்து பின் தியானம் செய்கின்றனர்.

IMG_4404பக்கத்தில் ஒடுகின்ற சிறிய ஆற்றில்தான் அனைவரும் குளிக்கின்றனர். இரசியாவில் பிரபல்யமாக இருக்கின்ற சூட்டு அறை ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மலசலக் கூடம் ஒன்றை தற்காலிகமாக உருவாக்கியுள்ளார்கள். நாம் முன்பு நமது நாட்டில் அகதி வாழ்க்கையின் போது அல்லது நெருக்கடியான காலங்களில் செய்ததைப் போல ஒரு குழியை கிண்டிவிட்டு அதற்கு மேல் இரண்டு மரங்களைப் போட்டுவிட்டால் அதுதான் மலசலக்கூடம். கடந்த ஒன்டரை மாதங்களாகப் பயன்படுத்துகின்றார்கள். மணம் முக்கைப் பிழந்தது. ஆனாலும் சிறிது தூரத்தில் ஒன்றாகக் கூடி சமைத்து தியானம் செய்து ஆடிப் பாடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு கோடையிலும் ஒன்றரை மாதங்கள் காட்டில் வாழ்கின்றனர். எட்டு மணியளவில் ஓசோவின் உரை போடப்பட்டு இடை இடையில் நிற்பாட்டி அதை இரசிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். உரை முடிய அனைவரும் சாப்பிடச் சென்றோம். சில மரக்கறிகளைப் போட்டு சூப்போல ஏதோ ஒன்றை செய்திருந்தார்கள். ஒருவகையான தானிய அரிசியில் சோறு சமைத்திருந்தார்கள். கமைத்த பாத்திரங்கள் எல்லாம் கறியாக இருந்தது. நாம் கோப்பைகளை கழுவி அதில் இரண்டு சாப்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு சாப்பிட்டோம். கொஞ்சம் குளிராக இருந்தது. நிறைய நுளம்புகள் இருந்தன.

IMG_4406நாம் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு டென்டாக சுற்றிப் பார்த்தோம். ஒரிடத்தில் இரண்டு மனிதர்கள் தமது கொட்டிலுக்குள் நெருப்பு எரித்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நாமும் போய் இருந்தோம். நன்றாக இந்திய சினிமா பார்ப்பார்கள் போல. அதைப் பற்றி ஒருவர் சிரித்து சிரித்து கதைத்துக் கொண்டிருந்தார். சிறுவன் ஒருவன் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்பது மணிபோல ஆட ஆரம்பித்தார்கள். ஷேளி குளிராக இருப்பதாலும் நிறைய நுளம்புத் தொல்லையாலும் டென்டுக்குள் படுக்கச் சென்றார். நான் சிறிது நேரம் ஆடிவிட்டு படுக்கச் சென்றேன். ஆடிக் கொண்டிருந்தவர்கள் பதினொரு மணிபோல படுக்கச் சென்றார்கள். ஷேளி இரவு முழுக்க படுப்பதற்கு கஸ்டப்பட்டார். முக்கியமாக ஷேளிக்கு நித்திரை பையிலிருந்து வந்த மணம் சகிக்க முடியாமல் இருந்தது. நமக்கு கஸ்டமாக இருக்கும் என நண்பர் ஒருவர் கீழே விரிப்பதற்கு சில சமான்களையும் மேலும் இரண்டு நித்திரை பைகளையும் தந்தார். ஆனாலும் படுப்பதற்கு கஸ்டமாக இருந்தது. கடைசியாக ஷேளி எனது கைகளிலும் பின் மார்பிலும் தலையை வைத்து நித்திரையானார். நானும் நித்திரை கொண்டேன். வெளியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது.

IMG_4410காலை ஏழரை மணிபோல டைனமிக் தியான இசை சத்தம் கேட்க எழும்பினோம். காலையில் டைனமிக் தியானம் செய்வது பல வகைகளில் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. எனக்கு குறைந்தது மூன்று நாட்களுக்காவது தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது உடல் நோகும். ஆகவே செய்வதை தவிர்த்தேன். நாம் இருவரும் டென்டை  விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து சென்று சலம் பெய்தோம். பின் ஆற்றங்கரைக்கு வந்து முகத்தைக் கழுவினோம். தண்ணீர் குளிராக இருந்தது. கிழக்கின் அடி வானத்திலிருந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் மரங்களின் உச்சியில் பட்டு தண்ணீரில் தெரிந்தன. பனி தூரத்து மரங்களில் கீழ்ப் பகுதியில் படர்ந்திருந்தது. டைனமிக் முடித்து வந்தவர்கள் ஆற்றில் இறங்கி நிர்வாணமாக குளித்தார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

IMG_4444நாம் சமையலறையை நோக்கி சென்றோம். எரிந்த அடுப்புக்கு அருகிலிருந்து குளிர் காய்ந்தோம். ஒன்பது மணியளவில் ஓட்மில் உணவும் பானும் பட்டரும் தேநீரும் செய்து தந்தார்கள்.அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருடனும் இருந்து அரைகுறை ஆங்கிலத்தில் உரையாடினோம். பின் காடுகளில் சுற்றித் திரிந்தோம். சிறுவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்கள். நெருப்புடன் விளையாடினார்கள். மண்ணில் பிரண்டார்கள். மரங்களுக்குள் ஓடித் திரிந்தார்கள். ஒருவரும் அவர்களைத் தடுக்கவில்லை.  ஒன்பரை மணியளவில் நாதபிரம்மா தியானம் செய்தார்கள். நானும் பங்கெடுத்தேன். அமைதியான நல்லதொரு தியானம். நமது சக்திகளை இயற்கைக்கு வழங்கி புதிய சக்திகளைப் பெறுகின்ற தியான முறை இது. ஷேளி ஆங்கிலம் ஒரளவு உரையாடக்கூடிய இன்னுமொரு பெண்ணுடன் சுற்றித் திரிந்தார். தியானம் முடிய IMG_4476சமைப்பதற்கு ஆயத்தமானர்கள். நாமும் உருளைக் கிழங்கு கரட் மற்றும் வெங்காயம் என்பவற்றை கழுவி சுத்தம் செய்து வெட்டிக் கொடுத்தோம். பதினோரு மணிக்கு ஓசோவின் “மீண்டும் பிறத்தல்” தியானத்தை செய்ய ஆரம்பித்தார்கள். நமது குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்வது. நாம் விரும்பியதை செய்யலாம். குழந்தையாக இருக்கும் பொழுது நமக்குத் தடுக்கப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரம் இது. சிரிக்கலாம் அழலாம். துள்ளலாம் பாடலாம். குதிக்கலாம். இவ்வாறு எதையும் ஒரு மணித்தியாலம் செய்துவிட்டு இன்னுமொரு மணித்தியாலங்கள் ஏற்பட்ட உணர்வுகள் எண்ணங்களுடன் அமைதியாக தியானத்தில் இருக்க வேண்டும். நல்லதொரு தியானம். ஒரு வகையான தெரப்பி. இரசிய காட்டில் மீண்டும் பிறந்தோம்.

IMG_4482 தியானம் முடிய நமது சமான்களை அடுக்கினோம். நேற்று இரவு படுக்க கஸ்டப்பட்டதால் இன்று செல்வோம் எனத் தீர்மானித்தோம். மாஸ்கோவிலிருந்து வந்த ஜோடி ஒன்று ஒரு கிழமையாக தங்கியிருந்தார்கள். அவர்களும் இன்று புகையிரதத்தில் செல்வதாக கூறினார்கள். நாமும் காட்டுக்கால் நடந்து புகையிரதத்தில் செல்ல விரும்பினோம்.  அவர்களுடன் வருவதாக கூறினோம். இரண்டறை மணியளவில் சமைத்து முடித்திருந்தார்கள். சோறும் சூப்பும். அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றோம். எல்லோரும் நிற்கும்படி கூறினார்கள்.

IMG_4523காடுகளுக்குள்ளால் நடந்து சென்றோம். ஜோடி ஏற்கனவே இந்தப் பாதையால் வந்தவர்கள். அவர்களுக்கு பாதை தெரிந்திருந்தது வசதியாக இருந்தது. இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. இதைக் கடப்பதற்று ஒரே ஒரு மரத்தை ஆற்றுக்கு குறுக்கால் போட்டிருந்தார்கள். அந்த மரத்துடன் ஒட்டியவாறு சிறு தடிகளை நட்டும் குறுக்காக தடிகளை கட்டி ஆணி அடித்தும் வைத்திருந்தார்கள். அதை இறுக்கிப் பிடித்து நமது பாரத்தை அதற்கு சுமத்தினால் அதையும் விழுத்தி நாமும் தண்ணீருக்குள் விழலாம். மாறாக அதை மெதுவாகப் பிடித்தும் பிடிக்காமலும் ஒற்றடியப்பாதையில் நடப்பது போல மெதுவாக நடக்க வேண்டும். நான் முதலில் சென்று பின்னால் வருபவர்களைப் படம் பிடித்தேன். நால்வரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தால் பாலம் தாங்காது. ஒவ்வொருவராக மெதுவாக வந்து சேர்ந்தனர். இதன் பின் சிறிய பாலம் ஒன்றை மரத்தினால் கட்டியிருந்தார்கள்.  அதையும் கடந்து சிறிது தூரம் வந்தபோது புகையிரதப் பாதையைக் கண்டோம்.

IMG_4525புகையிரதப் பாதையை அடைந்து அதனருகால் நிலையத்தை நோக்கி நடந்தோம். மாஸ்கோவிலிருந்து ஒரு புகையிரதம் வந்து நின்று நம்மைக் கடந்து சென்றது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி நம்மை நோக்கி நடந்து வந்தார். தானும் காட்டுக்குள் தியானம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார். நாம் நால்வரும் புகையிரதத்திற்காக காத்திருந்தோம். விரல் விட்டு எண்ணக்கூடிய சில மனிதர்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து வந்து காத்திருந்தார்கள். நாம் நேற்று வாங்கி வந்த வாழைப்பழத்தில் இரண்டில் ஒன்றை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றதை நாம் சாப்பிட்டோம். குறிப்பிட்ட நேரத்திற்கு புகையிரதம் வந்தது. இது மாஸ்கோவின் புற நகர்களுக்கு செல்கின்ற புகையிரதம். நீளமாக கதிரைகளைக் கொண்டவை. பெரும்பாலும் வயது போனவர்கள் களைத்துப் போய் அமைதியாக இருந்தார்கள். கடந்த எழுபது வருட கால களைப்பு அல்லது புதிய வாழ்க்கை முறையின் கஸ்டங்களை எதிர்கொள்கின்ற கவலை அவர்கள் முகங்களில் தெரிந்ததுபோல ஒரு உணர்வு. கொஞ்ச நேரத்திலையே பரிசோதகர் வந்தார். பற்றுச்சீட்டு இல்லாதவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்கினார். நமது நண்பர் நாம் வாங்குவதற்கு உதவி செய்தார். இரண்டு பெண்கள் பான் பழ வகைகளை விற்றுக் கொண்டு வந்தார்கள். வாசலில் நின்று கத்தி கூறிவிட்டு ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு நம்மைக் கடந்து சென்றார்கள். சிலர் அவர்களிடம் வாங்கிச் சாப்பிட்டார்கள். நாம் முயற்சிக்கவில்லை.

IMG_4532ஒன்றரை மணித்தியாலங்களின் பின்பு புகையிரம் லெனின் சதுக்கத்திலிருந்த புகையிரத நிலையத்தில் நின்றது. நண்பர்கள் மாஸ்கோ புகையிரதம் எடுப்பதற்காக வேறு ஒரு நிலையத்திற்கு சென்றார்கள். நாம் வெளியில் வந்து தேநீர் கேக் வாங்கிக் குடித்துவிட்டு அக் கடையில் இலவசமாக இருந்த வைபையைப் பயன்படுத்தி இரவு தங்குவதற்கான ஒரு ஹோட்டலை மிகவும் கஸ்டப்பட்டு நாம் செலவு செய்யக்கூடிய பணத்திற்குள் பதிவு செய்தோம். இப்படி அன்று தங்குவதற்கு பதிவ செய்யும் பொழுது அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டி வரும்.

IMG_4667லெனின் சதுக்கத்திலிருந்த லெனினின் சிலையை பார்க்கச் சென்றோம். இதுவே இரசியாவில் நாம் பார்த்த முதலாவது லெனின் சிலை. சுற்றிவர பூந்தோட்டங்களாலும் தண்ணீர் தாடகங்களாலும் நிறைந்திருந்தது. வழமையான கூட்டங்களில் கையை உயர்த்தி உரையாற்றிக் கொண்டிருந்த லெனினின் உருவம் அந்த சிலை. இவர்களின் கடந்த எழுபது வருட காலங்கள் அனைத்தும் இவ்வாறு சிலையாகவே இன்று உறைந்து போய் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவரது சிலை தீவிற்கு அப்பால் பெரும் நிலத்திலிருந்த புரட்சிக்கு முந்திய அரசர்களின் அகலமான உயரமான குளிர்கால அரண்மணையைப் பார்த்த படி தனித்து இருந்தது. பெரும் திரளான மக்கள் இந்த அரண்மனையையும் அங்கிருக்கின்ற அரசர்களின் சிலைகளையுமே பார்க்கச் செல்கின்றனர். ம்…!IMG_4550

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/14/இரசியா-காட்டில்-மீண்டு/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Sweden: Shambala Gatherings – A Commune life

Sweden: Shambala Gatherings – A Commune life

IMG_3514

As we all know, Scandinavian countries are very expensive to travel to, so we decided to work for our food and lodging. It is a better way to manage our budget as well, as a great way to meet people and learn their culture and customs.  We looked in to the Sweden woofing website and found few places which we liked. We sent our profiles and inquired about their availabilities and got an acceptance from Shambala gathering in Skinnskatteberg, a small village a hundred km away from Stockholm.

IMG_3542

We came to Sweden from Norway by traveling by bus for 7 hours. Unfortunately, it was 10 minutes late when we came to Vasteras around 7pm  and we missed the bus from there to the village,   Skinnskatteberg. The other bus is around 9pm and it would take around 2 hours to reach the village. We did not know what to do and no one was helping us; not even the bus drivers. There was a railway station close to the bus station and we went inside and looked for some information. We found an electronic timetable and a regular chain shop where two women were busy with their customers. We asked them how we could get to Skinnskatteberg. She looked at her data and found out that there was a train from there to Koping station and we could take a bus from there. Also we informed the place that we would be there around 10 pm by using her phone. We bought tickets and took the train around 7:45pm and got down at Koping.

IMG_3534

The bus came around 9 pm and we were very happy and got on the bus. An old woman was the driver and she did not respond to our smile and the question which we asked her. However, we knew this was the bus and we seated ourselves and enjoyed the travel by looking out at the lake and sunlight after 9 pm. It was very beautiful and I took some pictures as per usual. After some time, one passenger got on to the bus. Since we were late we wanted to inform the place where we were going. We would reach there around 10 pm and by then it would be dark and we did not want to get lost in the dark. Without hesitation, we asked the other passenger, the only passenger, using our hands to communicate, whether we could use his phone. He gave us his phone and we called the place but no one answered. We could not do anything. IMG_3548

When the bus arrived at our stop, surprisingly the lady driver asked us to get down. We said bye to her with a smile, but she did not respond to it, once again. We got down and still we can see the sun light and found the sign “Borntorpet” to go to the place. On the way, we saw a car coming towards us and we thought they were coming to pick us up. The car stopped and a man got down from the car and introduced himself as Ola, with a beautiful smile and helped us get into the car. He was from Germany. When we were in the Shambala gathering, the place was silent and the lake was too. As they promised, they kept aside some soup and bread for us to eat for dinner.

 

IMG_3549

 The bread is something new and we had never seen anything like it.

Johan Svanborg, Alessia Green and Carin Carbonnier introduced themselves and welcomed us with joy. It was a pleasant moment and went to the dormitory, where we saw all the beds were full with volunteers, except for two. It was around 11pm and we had only two upper beds in different places and managed to get up and slept very fast.

IMG_3550

 

Early the next morning, when we went to breakfast, everyone came to us and introduced themselves.  Melissa Núñez Brown who runs the place with Johan, his partner Jean-Casimir Morreau, Harry West-Taylor,  Katie Lund and Catherine Kinsella  from London, England Luca Pierabella from Italy, Estefania Morales, Ana Casanovas Bermejo, Mariadel Ba from Spain, Elad Rabinovich from Israel, Ioana Bacanu from Romenia but living in Sweden and Spain and another person from Netherland. We stayed for two weeks in this place. By the time we were there, there was a group of 50 participants, doing some kind of yoga training. Our job is to prepare food and keep the place clean. Carin is the volunteer coordinator and she is very good at her job. It doesn’t matter what our backgrounds are, every day we have to help in the kitchen, clean bathrooms, toilets, halls and bedrooms in rotation. Each time everyone had to work with the different group or alone. There is a time table and we have to look for our responsibilities for the day and week and have to work for a minimum of 4 hours – maximum 5 hours per day. People who cooked do not need to wash the dishes. If we have worked for 6 days, then we are off on the 7th and do not need to do any work. Just eat and rest or we can do our own thing. They have a small garden and we have to do the weeding. They used waste-food as fertilizer. We practiced organic farming and recycled everything without wasting it.

 

IMG_3559

 

IMG_3589

 

Harry is in charge of the kitchen and he is very creative with his cooking and also well at managing the kitchen efficiently.  Especially in revamping left over dishes, so as to not waste any of the food. They don’t keep any cooked food for more than three days.  He also encourages others to cook their own traditional foods, in creative ways. One day, every week there would be a sharing activity and when a participant is sharing his/her experience, others had to listen to them without passing any judgement or arguing. It was a great experience and felt like living in a commune. It is a lesson for how to live and establish a commune life than just talking about it.

IMG_3724

 

Most of the participants swim in the lake, whenever they have time, at least more than three times a day. Ola, from Germany, swims even at midnight and Kate, from London, always swims for a long time.  We also swim, but don’t stay too far from the shore.  When we were swimming in nude, it felt like we were free birds.  It was a beautiful experience. They have many bikes for us to use. It is little different to the bikes we are used to; the brakes are a part of the pedal, but we managed to ride them around town. Sometimes we walk around in the forest.

IMG_3635

 

Some of the volunteers in the dormitory began complaining about the snoring, and how they were finding it hard to sleep. As two of the many volunteers who do snore, we decided to camp out for our last two days and we are grateful that we did. We got to enjoy a beautiful lake view with the sunrise.

In the last week, we had a new group and they were doing meditation without talking. It was a very difficult meditation and some volunteers of the other volunteers, were not used to it and did not know how to response. However, everyone supported each other and helped the group do their work. Since we were all were silent for one week, I wanted to give them a gift, by facilitating an acting meditation with laughing. Most of them enjoyed it.

IMG_3739

 

We met Johnny Gunpowder, who was visiting a friend, and offered us a ride to Stockholm in his car. He is a very interesting person.  He is originally from Sweden and lived in the U.S for some time. He loves to travel and had mentioned that he has visited Sri Lanka and India quite a few times, each time staying in a small facilities with minimum accommodations.

When we left the place we felt like we were leaving our home.

IMG_3729

Thank you everyone. It was a wonderful experience and learning.

I am an internationalist.

We are in a small village in Sweden, working for our food and lodging at a yoga retreat center.

When I was weeding in the garden, a thought came to my mind…

Do I have to work just for time pass or

Should I be enjoying this as I do in “my home” garden with love and care.

Which is my home?

When I touch the soil in the garden, it felt like the same soil like in “my garden” in Canada.
Then another thought came to my mind,
It is the same soil as Sri Lanka where I was born and played for 25 years.

It is the same soil in Germany where I was working like this, in a small village.

Everywhere the soil is the same, but the landscape and weather are different

Even though the landscape is divided by sea and ocean, underneath, the soil is connected.

Only on the surface there are different names for this soil.

If I feel the same wherever I work in this world,

Then I could call myself an internationalist…
In the meantime,

If someone….

Insult my language,

Discriminates me based on my skin colour,

Does not respect or respond to my gesture such as a smile,

Then I will be a (Tamil) nationalist…

Being a nationalist is also internationalist

Because without being a nationalist, one cannot be an inter-“nationalist”

IMG_3730

thank you Nish for your Editing.

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/20/sweden-shambala-gatherings-a-commune-life/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

இரசியா – கனவு பூமி- இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

IMG_4155

 

1987ம் ஆண்டு உயர்தர பரிட்சை முடிந்தபின் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்து ஈரோசின் மாணவர் இயக்கமான கைசில் இணைந்தேன். இணைந்த காலத்திலிருந்து அங்கிருந்த ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்களை எடுத்து வாசிப்பதே எனது பிரதான செயற்பாடானது. காலை, மாலை, இரவு என தொடர்ந்து வாசித்த காலங்கள். பெரும்பாலும் இரசிய நாவல்களும் வரலாறுகளும் ஆகும். கார்ல் மார்க்சின் வரலாற்றிலிருந்து லெனினின் வரலாறுவரை கிட்டத்தட்டப் பாடமாக்கியதைப் போன்று வாசித்தேன். மார்க்சிம் கோர்க்கியி்ன் தாய் நாவலை மட்டும் மூன்று தடவைகளுக்கு மேல் வாசித்திருப்பேன். இப்படிப் பல நாவல்கள். இந்த நாவல்களில் வந்த பல மனிதர்களும் அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் ஆழ்மனதில் பதிவாகின. அவர்களும் அவர்களைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களும் வாழ்ந்த மண்ணும் அந்த மண்ணில் ஓடிய ஆறுகளும் உயர்ந்த மரங்களும் காடுகளும் என் கனவுலகில் ஒவ்வொரு நாளும் சஞ்சரித்தன. இதை எல்லாம் நேரில் பார்க்கச் செல்வேன் என்ற நோக்கத்தில் ஒரு நாளும் இவற்றை வாசிக்கவில்லை. நமது தமிழ் தேச விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்கும் எவ்வாறு இந்த அனுபவங்களையும் அறிவுகளையும் உள்வாங்கிப் பங்களிக்கலாம் என்பதே பிரதான நோக்கம். ஆனால் காலம் மாறியது. சோவியத் யூனியன் உடைந்தது. அவர்களது கடந்த காலம் தொடர்பான பல கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தன. நமது நாட்டு யதார்த்த அரசியலிலிருந்து நானும் ஒதுங்கிச் சென்றதுபோல அவர்களுடன் வாழ்ந்த எனது கனவுலகமும் மெல்ல மெல்ல மங்கிச் சென்றது. ஆனால் இன்று அந்தக் கனவுலகை நேரில் தரிசிக்கும் காலம் ஒன்று வந்தது கனவா நனவா என நம்பமுடியாதுள்ளது. இரசியாவின் முன்னால் லெனின்கிராட்டி (செயின் பீட்டர்பேர்க்) லிருந்து இப் பதிவை எழுதுவது கனவல்ல.  மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.

IMG_5675

 

நேற்றுக் காலை பின்லாந்தின் கிராமத்திலிருந்து அங்கு வாழ்ந்த பின்லாந்து பெண்ணின் காரில் ஹெல்சிங்கி நகருக்கு வந்தோம். இரசிய விசா நிலையத்தில் ஒரு பிரச்சனையுமில்லாது விசாவைப் பெற்றுக்கொண்டு இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மாலைவரை கணணியுடன் அந்த உணவகத்திலையே இருந்தோம். இரசிய நாட்டிற்கு செல்வதற்கு இரவு 10.30 மணிக்குதான் பஸ் உள்ளது. செயின் பீட்டர்ஸ்பேர்க் பின்லாந்திற்கு அருகில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு செல்வதற்கு விமானச் சீட்டும் புகையிரதச் சீட்டும் விலை மிக அதிகமாக இருந்ததால் பஸ்சில் பயணம் செய்யத் தீர்மானித்தோம். இது மிக மலிவாக இருந்தது. இந்த மூன்றில் ஒன்றில் மலிவாகப் பயணிப்பதற்கு சில காலத்திற்கு முன்பு திட்டமிட்டு செயற்பட்டு பதிவு செய்திருந்தால் மலிவான பயணச் சீட்டுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இரவுச் சாப்பாட்டை ஐந்து ஈரோ பீட்சாவுடன் முடித்துக் கொண்டு காம்பி (Kamppi) நிலையத்தில் போய் பஸ்சிற்காக காத்திருந்தோம்.

IMG_5713

பஸ் 10.20விற்கு வந்து பயணிகளை ஏற்றி சரியாக 10.30க்குப் பயணமானது. பெயர்தான் பஸ்தான். விமானத்தைப்போல இன்டநெட் இணைப்பு உட்பட அனைத்து வசதிகளும் சொகுசுகளும் இருந்தன. ஆனால் நாம் ஒன்றையும் பயன்படுத்தவில்லை. நேற்றிரவு 11.30 வரை நாமும் இன்னும் சிலருமாக நன்றாக நடனமாடி களைத்துப் போயிருந்தோம். படுத்தது பிந்தி ஏழும்பியது முந்தி. ஆகவே நித்திரை கண்ணை மயக்கியது. அயர்ந்தோம். சரியாக ஒரு 12.00 மணிபோல ராஜா மார்க்கட் என்ற இடத்தில் நின்றது. 12.30 க்கு குடிவரவளார்களின் பரிசோதனை நிலையம் என இரசிய மொழியில் சொல்லியிருக்க வேண்டும். அனைவரும் இறங்கிச் செல்ல நாமும் இறங்கிச் சென்றோம். ஏற்கனவே இரசிய குடிவரவு பரிசோதகர்கள் தொடர்பாக எதிர்மறையான தகவல்கள் பலவற்றை வாசித்ததால் தயக்கத்துடன் சென்றோம். ஒருவரும் தமது பொதிகளை கொண்டு செல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இந்த இடத்திலும் ராஜா என ஏதோ எழுதியிருந்தது. வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எல்லை நகரங்களில் இருக்கின்ற குடிவரவாளர்களின் பரிசோதனை நிலையம்போல சகல வசதிகளுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. குடிவரவு பரிசோதகர்களும் சிரித்துக்கொண்டு அனைவரது கடவுச்சீட்டுக்கும் கடகட என முத்திரை குத்தி அனுப்பினார்கள். நமக்கு நல்ல சந்தோசம். இவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்து விட்டது. இரசிய குடிவரவு பரிசோதகர்கள் கடுமையானவர்கள் என்பதை இவர்கள் பொய்பித்துவிட்டார்கள் என நினைத்துக் கொண்டு பஸ்சில் ஏறி நிம்மதியாக நித்திரை கொண்டோம்.

 

IMG_4156

பஸ் ஒரு மணிக்குப் புறப்பட்டு மீண்டும் அதிகாலை 1.30 மணிபோல நிறுத்தியது. மீண்டும் சாரதி இரசிய மொழியில் மட்டும் ஏதோ கூறினார். இம் முறை அனைவரும் தமது பொதிகளுடன் மீண்டும் இறங்கினார்கள். இப்பொழுதுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. நாம் முதல் நின்ற இடத்தில் நின்றவர்கள் பின்லாந்திலிருந்து வெளியேறியதை உறுதிப்படுத்திய குடிவெளியேறிகளைப் பரிசோதிக்கும் பின்லாந்து உத்தியோகத்தர்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். பொதிகளுடன் சென்ற அனைவரும் ஒரு சிறிய அறையினுள் வரிசையாக நின்றோம். பலகையால் செய்யப்பட்ட நான்கு வழிகள் இருந்தன. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெளிச்சமும் பெரிதாக இருக்கவில்லை. சிறிது நேரத்தின்பின் ஒரு சிறிய பெண் ஒருவர் வயது குறைவான இளம் பெண் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கின்ற ஒருவர் வந்து ஒரு கதவை திறந்துவிட்டு தனக்குரிய பலகையால் அடைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார். சிலரது கைகளிலும் கடவுச்சீட்டுகளும் பல கடிதங்களும் இருந்தன.  நாம் மட்டுமே மண் (பிறவுன்) நிறமானவர்கள். இன்னுமொரு சீன முகச் சாயலுடைய மூவர் கொண்ட குடும்பம். மற்ற அனைவரும் “வெள்ளையர்கள்”. இருப்பினும் சிலருக்கு உடனடியாக முத்திரை குத்தி அனுப்பினார். சிலருக்கு கொஞ்சம் அதிக நேரம் எடுத்தார். சிலரது மூக்குக் கண்ணாடியை கழட்டச் சொன்னார். சிலருக்குப் போடச் சொன்னார். கடவுச் சீட்டில் எப்படி இருக்கின்றதோ அப்படி நேரிலும் குறிப்பிட்டவர் இருக்க வேண்டும் போல. இப்படியே நேரம் போனது. நாம் வரிசையில் கடைசி மனிதருக்கு கொஞ்சம் முன்னுக்கு இருந்தோம்.

IMG_4328

நமக்கு முன்னுக்கு இருந்த சீன முகம் கொண்டவர்கள் குடும்பமாக சென்றார்கள். உத்தியோகத்தர் மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிக நேரம் எடுத்தார். நமது நேரம் வர நாமும் ஒன்றாகப் போய் நின்றோம். எங்களைப் பார்த்தார். நாம் சிரித்துக் கொண்டு கடவுச்சீட்டுகளையும் ஏற்கனவே பஸ் சாரதி தந்த குடிவரவு பத்திரங்களையும் நிரப்பிக் கொடுத்தோம். அவர் சிரிக்கக்கூடாது என்பதற்காக சிரிப்பைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு கடவுச்சீட்டில் கண்ணாக இருந்தார். தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். ஷேளியை அடிக்கடி பார்த்து கடவுச்சீட்டையும் பார்த்தார். எழும்பி நின்றும் பார்த்தார். ஏற்கனவே தங்குமிடம் மற்றும் அழைப்பவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்துதான் விசாவைப் பெற்றிருக்கின்றோம். இதைவிட ஷேளியின் கடவுச்சீட்டில் தலைமயிர் வளர்ந்திருக்கின்றது. விசாவிற்கு விண்ணப்பித்தபோது எடுத்த படத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார். இப்பொழுது தலைமயிர் கொஞ்சம் வளர்ந்தவாறு இருக்கின்றார். இவ்வாறான வேறு வேறு தோற்றங்கள் அவருக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மீண்டும் தொலைபேசியில் உரையாடிவிட்டு இறுதியாக கடவுச்சீட்டில் நாட்டிற்குள் செல்வதற்கான அனுமதி முத்திரையை குத்தினார். இப்பொழுது எனது முறை. கொஞ்சம் குறைய நேரம் எடுத்து முத்திரையை குத்தினார். எனக்கு எல்லாவற்றிலும் தலைமயிரும் தாடியும் இருப்பதால் பிரச்சனையில்லை. ஆனால் என் மண்டைக்குள் என்ன இருக்கின்றது என அவருக்குத் தெரியாது.

IMG_4318

இரசிய குடிவரவு தொடர்பான சில தகவல்களை வாசித்த போது, “நாம் எப்பொழுது இரசியாவிலிருந்து வெளியேறுவோம்” என்ற தகவலைக் கேட்பார்கள் என எழுதியிருந்தார்கள். ஆகவே இரசியாவிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்ப ஒரு நாளுக்கு விமானத்தை ஏற்கனவே அவசர அவசரமாக பின்லாந்திலிருந்து பதிவு செய்தோம். ஆனால் அவர் எம்மிடம் இந்தத் தகவலைக் கேட்கவில்லை. இதன் அர்த்தம் அவசியமற்றது என்பதல்ல. இது அந்த இடத்திலிருக்கின்ற குடிவரவு உத்தியோகத்தரின் மனநிலையையும் கடமையை எந்தளவு செய்கின்றார் என்பதையும் பொறுத்தது என நினைக்கின்றோம். ஆகவே வெளியேறுவதற்கான பயணச்சீட்டை வைத்திருப்பது நல்லது. இவரைக் கடந்து சென்றபோது இன்னுமொரு பெண் பரிசோதகர் தனது கைகளால் நமது பொதிகளை பரிசோதிக்கும் இடத்தில் வைக்கும்படி சைகை செய்தார். அவரும் நம்மைப் பார்த்து சிரிக்காமலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையெல்லாம் கடந்து பஸ்சில் ஏறி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரம் அதிகாலை 2.45 ஆகியிருந்தது. இனி எல்லாம் முடிந்து விட்டது என நிம்மதியாக நித்திரை கொண்டோம். ஆனால் பஸ் மீண்டும் நிற்க தலையை சரிந்து சாரதியைப் பார்த்தேன். அவருக்கு அருகில் ஒரு பொலிஸ் அல்லது காவற்துறை உத்தியோக பெண் ஒருவர் நின்று சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரும் தனது தலையை சரித்து உள்ளே பார்த்துவிட்டு உள்ளே வந்து பயணிகளின் கடவுச் சீட்டுகளை மேலோட்டமாக பார்த்துக் கொண்டு சென்றார். சீன முகம் கொண்டவர்களினதும் நம்முடைய கடவுச் சீட்டுகளையும் மட்டுமே வாங்கி நன்றாகப் பார்த்தார். அதன்பின்பே பஸ் பயணம் ஆரம்பமானது. நாமும் நிம்மதியாக நல்ல நித்திரை கொண்டோம்.  இவ்வாறான கஸ்டங்களைத் தவிர்ப்பதற்கு புகையிரதத்தில் பயணம் செய்வது நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறான குடிவரவு பரிசோதனைகளை புகையிரத பயணத்தின் போதே பார்த்துவிடுவார்களாம். ஆனால் நமக்கு அது வாய்க்கவில்லை.

IMG_4167

அதிகாலை ஐந்தரை மணியளவில் செயின்ட் பீட்டஸ்பர்க்கிலுள்ள நதிகளைக் கடந்து பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நாம் கண் விழித்துப் பார்த்தபோது சூரியனும் கீழ் வானிலிருந்து பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. இது நகரத்திலிருந்த உயர்ந்த முக்கோண மற்றும் உருண்டையான கோபுரங்கள் மீது  மெல்லிய மஞ்சள் நிறத்தைப் பூசி அழகு காட்டியது. ஏதோ நான் பிறந்த ஊருக்கு வந்த ஒரு உணர்வு. பஸ் நிற்கும் வரை ஆவலுடன் காத்திருந்தேன் இறங்குவதற்காக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

படைப்(பாளிகள்)புகள் விதைத்த அன்பு!

IMG_4565

இரசியாவில் நாம் கட்டிடங்களைப் பார்ப்பதற்கு அதிகம் முக்கியத்துவமளிப்பதில்லை என முடிவு செய்தோம். மாறாக மனிதர்களின் உள்ளே சென்று மேலும் பல விடயங்களை அறிவதில் ஆர்வமாக இருந்தோம். இதற்கு இரசியாவின் இதயங்களுக்குள் நூழைவதே சரியான வழி. இரசியாவில் நடந்த அரசியல் நிகழ்வுகள் (அதை முன்னெடுத்தவர்கள்) நம்மில் (அல்லது என்னில்) ஒரளவு பாதித்ததைப் ஏற்படுத்தின(னார்கள்) என்றால் மிகையல்ல. இதேபோல நம்மைப் பாதித்தவர்கள் இரசிய இலக்கியப் படைப்பாளர்களும் அவர்களது படைப்புகளும். ஆகவே இவர்களது நினைவு இல்லங்களுக்குச் செல்வோம் என்பது நமது நோக்கமாக இருந்தது..

IMG_5004

முதலாவதாக செயின்பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த டொட்சவோட்சிகியின் இல்லத்திற்கு சென்றோம். இந்த இல்லத்தைக் கடந்த மூன்று நாற்களாக இங்கு இருந்தபோது கடந்து சென்றிருக்கின்றோம். நாம் தங்கியிருந்த இடத்திலிருந்து அரை மணித்தியால் நடை தூரத்தில்தான் இருக்கின்றது. ஆனால் சதாரணக் கட்டிடங்கள் போல இருந்தாலும் தகவல்கள் பெரும்பாலும் இரசிய மொழியில் இருந்தமையாலும் கவனிக்கத் தவறிவிட்டோம். இவர் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கும் அதன் அருகில் இருக்கின்ற நகர சுரங்கப் புகையிரத நிலையத்திற்கும் இவரது பெயரையே வைத்திருக்கின்றார்கள். புகையிரத நிலையத்திற்கு அருகில் இவரது பெரிய சிலை ஒன்றும் உள்ளது. இதை எல்லாம் கடந்து இரண்டு வீதிகள் சந்திக்கும் ஒரு மூலை வீட்டை நமது தொலைபேசி கூகுள் வரைபடம் காட்டியது. கதவைத் திறந்து உள்ளே சென்றோம்.

IMG_5091

வாசலில் உள்ளே செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்களை விற்றார்கள்.  அவரது நூல்கள் இரசிய மொழியிலும் மற்றும் அவரது முகத்தை ஓவியமாக வரைந்த ஆடைகளும் விற்பனைக்கு இருந்தன. ஒருவருக்கு 200 ரூபில்களை வழங்கி அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு கீழ் தளத்திலிருந்து படிகளில் ஏறி முதல் தளத்திற்குச் சென்றோம். இங்கும் ஒருவர் நூல்களையும் அவரது முகம் பதிவு செய்யப்பட்ட ஆடைகளையும் விற்பனைக்கு வைத்திருந்தார். நமது அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துவிட்டு அதற்கு மேலே உள்ள தளத்திற்கு செல்லச் சொன்னார்கள். இந்த அருட்காட்சியகம் தொடர்பாக பல மொழிகளில் விளக்குகின்ற தொலைபேசி போன்ற உபரணம் ஒன்றை வைத்திருந்தார்கள். நாம் மேலும் 100 ரூபில்களை வழங்கி அதையும் பெற்றுக் கொண்டு படிகளில் ஏறினோம்..

IMG_5017

வலது பக்கமாக இருந்த வாசலில் இலக்கம் ஒன்று என குறிக்கப்பட்டிருந்தது. நமது உபகரணத்தில் அந்த இலக்கத்தை அழுதிய போது அது அந்த அறை தொடர்பான தகவல்களை ஆங்கிலத்தில் கூறியது. அவர் பயன்படுத்திய குடைகள், கைப்பிடி, தொப்பி என்பன நம்மை வரவேற்றன. இதைக் கடந்து மற்ற அறைக்கு சென்றோம். இதுவே அவரது வாசிப்பறையும் தனது படைப்புகளை உருவாக்கிய இடமுமாகும். அவர் பயன்படுத்திய பென்சில்கள் பேனைகள் போன்ற உபகரணங்களும் அவரது குழந்தைகள் இருவது படங்களும் இருந்தன. இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிக எளிமையான அறை.

IMG_5042

அடுத்த அறை அவரது துணைவியார் அனாவினது. அவர் தனது வாழ்நாட்கள் முழுவதையும் தனது கணவருக்காகவே அர்ப்பணித்ததாக குறிப்பிடுகின்றார்கள். குழந்தைகளை வளர்ப்பது, வீட்டை நிர்வகிப்பது மட்டுமல்ல அவரது படைப்புகளின் பிரதிகளை தட்டச்சு செய்வது மீண்டும் திருத்தங்கள் செய்த பின் அவற்றைத் தட்டச்சு செய்வது, பதிப்பிடுவது, விற்பனை செய்வது என பல்முனைகளில் தனது பங்களிப்புளை அர்ப்பணித்துள்ளார். டொட்ஸ்வோஸ்கியின் மரணத்தின்பின் இவரைச் சந்தித்த டொல்ஸ்டோய் உங்களைப் போன்ற ஒரு மனைவி பல இரசிய படைப்பாளர்களுக்கு கிடைத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என கூறியுள்ளார். டொஸ்டோவோஸ்கியும் தனது இறுதிப் படைப்பை தனது துணைவியாருக்கே சமர்ப்பணம் செய்து அவரது பங்களிப்பை அங்கீகரித்தாக கூறுகின்றார்கள். டொஸ்டோவோஸ்கியின் மரணத்தின் பின்பு அவருடன் வாழ்ந்த நினைவுகளை ஒரு படைப்பாக துணைவியார் எழுதி வெளியீட்டுள்ளார். இது ஒரு முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றது.

IMG_5033

இதன் தொடர்ச்சியாக சாப்பாட்டு அறை, விருந்தினர்களை சந்திக்கின்ற அறை, மற்றும் சிறிய நூலகமும் இருந்தன. இந்த அறைகளில் இவரது குடும்பங்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து வெளியேறி எதிர்புறத்திலுள்ள அறைக்குச் சென்றோம். அங்கு அவரது வாழ்வுடன் தொடர்புபட்ட அனைத்துப் படங்களும் அவை தொடர்பான தகவல்களும் அழகாகப் பதிவு செய்யப்பட்டு கண்ணாடிகளுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவர் புரட்சிக்கு முந்திய அரசினால் கட்டாய இராணுவத்திற்கு சேர்க்கப்பட்டது அதில் அவருக்கு ஆர்வமில்லாமை மற்றும் அதிலிருந்து வெளியேறி அரச அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவாக பணியாற்றியது என்பவற்றையும் அரசுக்கு எதிராகப் “பயங்கரவாத” (புரட்சிகர) நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்காக சிறை வைக்கப்பட்ட தகவல்களும் நிறம்பியிருக்கின்றன.

IMG_5058

ஒரு அறையில் சிறிய மேசை ஒன்றுள்ளது. அதில் இவர் குடித்ததாக கூறப்படுகின்ற சிக்கரட்டும் அதன் பெட்டிகளும் உள்ளன. இவரது குடிப்பழக்கம் இவரது மரணத்திற்கு முக்கியமான காரணமாகும். இவரது மரண நாள் அன்று இவரது மகள் புகையிலைப்பெட்டி ஒன்றின் மீது “இன்று பப்பா இறந்த நாள்” என எழுதியுள்ளமையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது சமாதிக்கு இந்த இடத்திலிருந்து பஸ்சில் அரை மணி்த்தியாலங்கள் பயணம் செய்யவேண்டும். அதற்கான நேரம் கிடைக்காமை வருத்தமாக இருக்கின்றது. இங்கிருந்து வெளிக்கிட்டு அனா அக்மதேவாவின் நினைவிடத்திற்கு நடந்து சென்றோம்.

IMG_4871

அனா அக்மதேவா வாழ்ந்த இடம் செயின் பீட்டர்ஸ்பேர்கிலுள்ள பிரதான வீதி ஒன்றில் அமைந்துள்ள ஒரு கட்டித்தின் உள்ளாக செல்லும் பொழுது வருகின்றது. சுற்றிவர கட்டிடங்களும் நடுவில் பூந்தோட்டங்களும் உள்ள பகுதியில் ஒரத்தில் காணப்படுகின்ற சிறிய தொடர்மாடிக் கட்டிடம் இவர் வாழ்ந்த இடமாகும். பூந்தோட்டம் உயர்ந்த மரங்களைக் கொண்ட அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. இங்கு செம்பினால் செய்யப்பட்ட அவரது சிலை ஒன்றும் இவர் வழமையாக இருக்கின்ற மரத்திலான இருக்கை ஒன்றில் செம்பில் வடிக்கப்பட்ட கவிதையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு அனுமதிச் சீட்டுப் பெறும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கு 100 ரூபில்களைப் பெற்றுக் கொண்டு அனுமதிச் சீட்டுக்களைத் தந்தார்கள். நாம் இரண்டாவது மாடியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றோம்.

IMG_5166 

அனா அக்மதேவாவின் மேற்குளிராடை, குடை, தொலைபேசி, முகம் பார்க்கும் நிழற் கண்ணாடி, பழைய இறங்குப் பெட்டி என்பன முதல் அறையில் நம்மை வரவேற்றன. இதை கடந்து சென்றபோது அவரது படுக்கையறை. நீண்ட காலமாக தனிமைச் சிறையில் தானாக அடைபட்டுக்கிடந்த இடம் இது. இந்தறையில் மிகக் குறைவான பொருட்களே காணப்பட்டன. ஒரு மேசையில் அவரதும் உறவினர்களினதும் சில படங்கள். இன்னுமொரு மூலையில் இருவர் மட்டும் இருந்த உரையாடக் கூடியவாறான இரண்டு கதிரைகளும் ஒரு சிறிய மேசையும் காணப்பட்டன. தன்னைச் சந்திக்க வருகின்றவர்களுடன் இருந்து உரையாடும் இடம் எனக் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த அறையில் சிறிய நூலகம். ஒரு மேசை. அதில் அவர் பயன்படுத்திய பொருட்கள் காணப்பட்டன. சுவரில் சில படங்கள். மேசையில் அவர் வாசித்த நூல்கள். அலுமாரியில் சேகரித்த நூல்கள் காணப்பட்டன. அதனருகில் ஒரு புத்தர் சிலையும் இருந்தது. ஒரு பழங்காலத்து கமராவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகி்ல் நீண்ட இருக்கை ஒன்று. ஒவ்வொரு அறையும் ஒவ்வொறு விதமான நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதற்கு அடுத்த அறை உணவு உட்கொள்கின்ற அறை. அந்த மேசையில் இவர் சேகரித்த படங்கள் கொண்ட அல்பம் ஒன்று. சுவரின் அருகில் பழைய இசை கேட்கும் உபகரணம்.

IMG_5158

இந்த அறைகளைக் கடந்து சென்றபோது ஒரு நீண்ட அறை. இது சமையலறைக்குச் செல்கின்ற பகுதியை இணைத்திருந்தது. இப் பகுதியில் இவரது நூல்கள் எழுத்துப் பிரதிகள் மற்றும் சிறு சிலைகள் என்பன ஒழுங்குபடுத்தப்பட்டு காண்ணாடியால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனூடாக சமையலறைக்குச் செல்கின்ற சிறு ஓடையில் பழைய புத்தகங்களை அவர் கட்டிவைத்தவாறே வைத்துள்ளார்கள். இதன் அருகில் அவர் பயன்படுத்திய பழைய பொருட்கள். பெட்டிகள் அப்படியே இருக்கின்றன. இவற்றைக் கடந்து சமையலறைக்கு வந்தபோது அங்கு பயன்படுத்திய சமையற் பாத்திரங்கள், அடுப்பு, சிறிய ரேடியோ என்பவற்றிலிருந்து கை துடைத்த துணிகளைக் கூடப் பாதுகாக்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கின்றபோது அவர் எப்பொழுது பயணிப்பதற்கான தயார் நிலையில் இருந்திருக்கின்றார் என்பதை உணர முடிந்தது. தனது நண்பரிடம் ஐந்து ரூபில்கள் கடன் தரும்படி எழுதி அவரது அறையின் கதவில் ஒட்டிய துண்டு ஒன்றை இப்பவும் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். நம்பிக்கையான கனவுக்கும் சிதறுண்ட நம்பிக்கைகளுக்கும் இடையில் அலைந்த ஒரு படைப்பாளியின் சாட்சியாக இவை இருக்கின்றன. இங்கிருந்து வெளியே வந்தபோது மனதில் வெறுமையும் அவநம்பிக்கையும் சூழ்ந்திருந்தது. அதிகாரங்கள் படைப்பாளர்களை காலம் காலமாக எவ்வாறு கட்டிப் போடுகின்றது என்பது மனக் கண்ணில் படமாக ஓடியது.

IMG_5238

மாஸ்கோவிலுள்ள மாயாகோவோஸ்கியின் நினைவில்லத்திற்கு மதியமளவில் சென்றோம். அது நகரத்தில் முக்கியமான ஒரு சந்தியில் இருந்தது. அந்த இடத்திற்கு சென்றபோது அதிலிருந்தவர்கள் ஏதோ கூறினார்கள். எங்களுக்கு விளங்கவில்லை. அதன் முன்னால் படிக்கட்டுகளில் இருந்த வயோதிபர்களில் ஒருவர் இது கடந்த இரண்டு வருடங்களாக முடியிருக்கின்றது என்றார். புனரமைப்பு செய்கின்றார்களாம். இவரின் பின்னால் மாயோகோவோஸ்கியின் நினைவில்லத்தில் நடந்த பழைய செய்திகள் ஒட்டப்பட்டிருந்தன. அதனைப் படம் பிடித்துக் கொண்டு திரும்பினோம். நினைவில்லத்திற்கு அருகில் கட்டிடங்களுடன் கட்டிடமாக அவரது சிலை ஒன்றும் இருந்தது. அதையும் படப்பெட்டியினுள் உள்வாங்கிக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

IMG_5370

ஒரு நாள் காலை மார்க்சிம் கோர்க்கியின் நினைவிடத்திற்குப் போகலாம் என தீர்மானித்தோம். தொலைபேசியில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் கிரம்ளின் செந்சதுக்கத்திலிருந்து அந்த இடத்தை நோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்தோம். அவரது வீட்டுக்கு அருகில் வந்தபோது அவரது செதுக்கிய படம் ஒன்று சுவரில் இருந்தது. ஆனால் வாசல் கதவுகள் சங்கிலிகளால் பூட்டியிருந்தன. அந்த வழியால் வந்த ஒருவரிடம் இந்த விலாசம் சரியானதா என நமது தொலைபேசி விலாசத்தையும் சுவரிலிருந்த விலாசத்தையும் சுட்டிக் காட்டினோம். அவர் இரண்டும் ஒரே விலாசம் என்றார். இணையத்திலும் இதே விலாசத்தைக் காட்டியதுடன் திறந்திருப்பதாகவும் கூறியது. சரி வீட்டைச் சுற்றிப் பார்ப்போம் என நடந்தோம். வீடு இருந்த வளவின் இன்னுமொரு மூலையில் வாசல் ஒன்று திறந்திருந்தது. அதன் வழி பயணித்தோம்.

IMG_5382

வீட்டினுள்ளே வாசலில் இருந்தவர் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றார். வழமையாக இவ்வாறான நினைவில்லங்களில் 100 -350 ரூபில்களை வரை அறவிடுகின்றார்கள். இந்த நினைவில்லத்தைப் பார்ப்பதற்கு பணம் அறவிடுவதில்லை. விரும்பியதை அன்பளிப்பாக கொடுக்கலாம். ஆனால் படம் பிடிப்பதற்கு கட்டணம் உண்டு என்றார். நாம் அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு வீட்டின் தளங்களைப் பாதிக்காத வகையில் பாதணிகளுக்கு பாதுகாப்பு கவசத்தை போட்டு ஒவ்வொரு அறையாக பார்வையிட்டோம். அறைகளில் இருக்கின்ற பொருட்கள் தொடர்பான விபரங்களை பல மொழிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள். முதலாவது அறை அவரது உத்தியோகபூர்வ அறை. பல எழுத்துப் பிரதிகள் மற்றும் கடிதங்கள் என இருந்தன. அடுத்தது அவரது படுக்கையறை. இதைக் கடந்து சென்றபோது அவரது எழுதும் அறை. இங்கு எழுத்துப் பிரதிகள் மற்றும் அவர் பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி, பேனாக்கள், கலர் பென்சில்கள் எனப் பல இருந்தன. மேலும் டொல்ஸ்டோய் அன்பளிப்பாக வழங்கிய மரக் கதிரைகளும் இருந்தன.

IMG_5402

இதைக் கடந்து வந்தபோது அவர் பயன்படுத்திய குளிர்கால நீளமான ஆடையை வைத்திருந்தார்கள். அடுத்த அறை அவரது நூலகம். பல நூல்கள் இருந்தன. ஆனால் அவற்றிக்கு அருகில் நாம் செல்லமுடியாது. இந்த நூல்களில் எல்லாம் அவரது குறிப்புகள் இருப்பதாக குறிபிடப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் தனது சேகரிப்பிலிருந்த நூல்களை நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் வழங்குவாராம். நூலகத்திற்கு அருகிலிருந்த அறையில்  நண்பர்களையும் விருந்தினர்களையும் சந்திப்பார். ஒவ்வொரு காலங்களில் சந்தித்தவர்களின் படங்களையும் வைத்திருக்கின்றார்கள். நூல்களை வாசி்ப்பது இவரது பிரதான பணி எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வீடு இவருக்கு சொந்தமானதல்ல. தனக்குச் சொந்தமாக எதையும் வைத்திருக்க இவர் விரும்பவில்லை. ஆகவே சோவியத் அரசு இவரது இலக்கியப் பங்களிப்பை மேலும் பெருவதற்காக ஒரு வீட்டை வழங்கியிருந்தது. அந்த வீடே இது.

IMG_5467

அன்டன் செக்கோவின் நினைவு இல்லம் கார்க்கியின் நினைவில்லத்திலிருந்து மேலும் பத்து நிமிடங்கள் நடக்க வந்தது. மதிய உணவின் பின்பு மாலை நான்கு மணிபோல இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒருவருக்கு 150 ரூபில்கள் அனுமதிச் சீட்டு மற்றும் படம் எடுக்க 100 ரூபில்கள் கட்டிவிட்டு உள்ளே சென்றோம். சகல நினைவிடங்களிலும் இருந்ததைப் போல அவர் பயன்படுத்திய உபகரணங்கள், பிரதிகள், நித்திரை கொண்ட, வேலை செய்த அறைகள் மற்றும் அவரது துணைவியாரின் அறை என இரண்டு மாடிகளில் இருந்தன. மேல் மாடியில் சிறிய அரங்கமும் இருந்தது. தனது காலத்தில் மேடையேற்றிய இவரது நாடகங்களின் சுவரொட்டிகளையும் வைத்திருந்தார்கள்.  இவர் ஒரு வைத்தியராக இருப்பதனால் மனிதர்களின் பல பிரச்சனைகளையும் அறியக்கூடியவராகவும் அதைக் கலைவடிமாக மாற்றக்கூடியவராகவும் இருந்துள்ளார். இவரது துணைவியாரும் இவருக்கு முக்கியமான பங்களிப்பை செய்துள்ளதுடன் ஒரு ஓவியராகவும் இருந்து தனது துணைவரின் வாழ்வின் முக்கியமான சில அம்சங்களை ஓவியமாக்கியுமுள்ளார்.

IMG_5560

டொல்ஸ்டோய், அன்டன் செக்கோ மற்றும் மார்க்சிம் கார்க்கி மூவரும் சம காலத்தவர்கள். வயது வேறுபாடுகள் இருந்தபோதும்  மூவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகமான மதிப்புகளை வைத்திருந்தார்கள் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. ஒவ்வொருவரது வீட்டிலும் மற்றவர்கள் வருகைதந்த படங்கள் மற்றும் அன்பளிப்பு செய்த பொருட்களும் இருந்தன. ஒரு முறை அன்டன் செக்வோவும் டொல்ஸ்டோய் மட்டும் சந்தித்த படத்தை இவர்களது நண்பர் ஒருவர் எடுத்து அதில் மார்க்சிம் கோர்க்கியையும் நடுவில் செயற்கையாக இணைத்து வெளியிட்டுள்ளார். அந்தளவிற்கு மூவரும் சந்திக்கும் படங்கள் மிகவும் வரவேற்பை பெற்றதாகவும் நல்ல விலைக்கும் போனதாக குறிப்பிடப்படுகின்றன. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அன்டன் செக்வோவும் டொல்ஸ்டோயும் குடும்பத்தினருடன் சந்தித்த படத்தை ஒருவர் எடுத்து அதிலிருந்த குடும்பத்தினரை அழித்துவிட்டு இவர்கள் இருவர் மட்டும் சந்தித்ததைப் போல வெளியிட்டுள்ளார். இந்தளவிற்கு இந்த இலக்கிய படைப்பாளிகளின் சந்திப்புக்கள் அன்றை இரசிய சமூகத்தில் முக்கியத்துவமுள்ளவையாக விளங்கியுள்ளன. மேலும் அவர்கள் மீது அதீத மதிப்பை இன்றும் வைத்துள்ளார்கள் என்பதை குறிப்பாக டொலஸ்டோய் வாழ்ந்த இரண்டு வீடுகளுக்குச் சென்ற போது காணக்கூடியதாக இருந்தது

.IMG_5562

நாளை டொல்ஸ்டோயின் வீட்டிற்கான பயணப் பதிவுகள்.
இது தொடர்பான ஒளிப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/25/இரசியா-இதயம்-விதைத்த-இலக/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி இரண்டு

IMG_5245

டொல்ஸ்டோய் இறுதியாக வாழ்ந்த வீடு மாஸ்கோவில் கோர்க்கிப் பூந்தோட்டம் இருக்கின்ற இடத்தில் உள்ள மாஸ்கோ நதிக்கு அப்பால் இருக்கின்றது. ஒரு சிறிய வீதியால் நடந்து உயர்ந்த மரங்கள் இருந்த ஒரு சோலைக்குள் செல்ல வேண்டும். அங்கு இரண்டு மாடிக் கட்டிட வீடு ஒன்று உள்ளது. நாம் உள்ளே செல்வதற்கான பணத்தைக் கட்டிவிட்டு பார்ப்பதற்குச் சென்றோம். இந்த வீட்டை புனர்நிர்மாணம் செய்யும் வரை தற்காலிகமாக சிறியதொரு வீ்ட்டைக் கட்டி வாழ்ந்தார். அந்த வீடு அந்தக் காணியின் ஓரத்தில் இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டு பிரதான வீட்டிற்குச் சென்றோம். ஒவ்வொரு அறையிலும் அவருடன் தொடர்புபட்ட தகவல்களை பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். வாசலிருந்து உள்ளே சென்றால் முதலில் இருந்தது உணவு சாப்பிடுகின்ற மேசை இருக்கின்ற அறை.

 IMG_5254

இவரது குடும்பம் சாப்பிடுகின்றபோது எடுத்த படம் ஒன்றும் இருந்தது. சுவரின் ஒரு பக்கத்தில் அவர் பயன்படுத்திய ஜெர்மன் மணிக்கூடு ஒன்று ஆடிக் கொண்டும் சத்தம் எழுப்பிக் கொண்டுமிருந்தது. ஒரு தடவை நான் அங்கிருந்த ஜன்னல் வழியாக உயர்ந்த மரங்கள் இருந்த அவரது தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மணிக்கூட்டிலிருந்து டிக் டாக் என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வேறு எந்த சத்தமுமில்லை. அதிசயமாக அந்தக் கணங்கள் உல்லாசப் பயணிகள் ஒருவரும் சத்தம் போடவில்லை. இக் கணங்கள் எனது உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சில கணங்கள் அசையாது வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

IMG_5249

சாப்பாட்டு அறைக்கு அருகில் அவர்களது படுக்கையறை, அதற்கப்பால் கடைசி மகளின் அறை, அப்படியே கீழ் நோக்கி செல்ல சமையலறையும் அவரது மகள்மாரின் அறைகளும் வரிசையாக இருந்தன. ஒரு மகள் ஓவியங்கள் வரைவதிலும் சிலைகள் வடிப்பதிலும் சிறந்து விளங்கியதுடன் தந்தையின் எழுத்துக்களை மீள எழுதியும் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துமுள்ளார். இவரது படைப்புகளையும் பார்த்துக் கொண்டு மீள வாசலுக்கு வந்து மேலே சென்றோம். இங்கு விருந்தினர்கள் சந்திப்பதற்கான பெரிய அறை ஒன்று இருந்தது. இங்குதான் இவர்களின் குடும்ப ஒன்று கூடல்களும் மற்றும் மார்க்சிம் கோர்க்கி, அன்டன் செக்கோவ் போன்ற படைப்பாளர்களையும் சந்திக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடது பக்கத்தில் துணைவியாரின் தனிப்பட்ட அறை இருந்தது. வலது பக்கதிலிருந்த படிக்கட்டுகளால் நடந்து செல்ல அவர் கடைசியாக எழுதிய நாவல்களின் அறையும் அவர் 67வயதில் பழகி ஓடிய சைக்கிளும் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்தபோது ஏனோ மனம் கனதியாக இருந்தது. வெளியே வந்து அவர் நடந்து திரிந்த தோட்டத்தில் சிறிது நடந்தோம். அழகாகப் பராமரிக்கப்படுகின்ற உயர்ந்து வளர்ந்த மரங்கள் மற்றும் மண் பாதைகள். இவை நம் மனதை இலகுவாக்கியன.

 

IMG_5258

IMG_5695

இந்த நினைவிடங்களைப் பார்த்தபின்பு டொல்ஸ்டோய் பிறந்து வளர்ந்த, நீண்ட காலமாக வாழ்ந்த நினைவில்லத்திற்கு செல்ல விரும்பினோம். இது மாஸ்கோவிலிருந்து 200 கி.மீ தூரத்திலுள்ள துவா நகரத்திற்கு அருகிலுள்ளது. இந்த நகரத்திலிருந்து 20 நிமிடங்கள் வாகனம் ஒன்றில் பயணம் செய்தால் யசனாயா பொல்யானா என்ற இடத்திற்கு செல்லலாம். இரண்டு ஏரிகளைக் கடந்தபின் வருகின்ற பஸ் நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் உள் நோக்கி நடக்க வேண்டும். மழை நன்றாகப் பொழிந்து கொண்டிருந்தது. இம் முறை மழையை நேர்மறையாக ஏற்றுக் கொண்டு நடந்தோம். இவரது இல்லம் உல்லாசப் பயணிகளுக்கான ஒரு இடமாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இரசியர்கள் மட்டும் பல நூறு பேர் வருகின்றார்கள். அந்தளவிற்கு அவர் மீது மதிப்பு வைத்திருக்கின்றார்கள். இவர்களைக் குழுவாக அழைத்துச் சென்று இரசிய மொழியில் சகல தகவல்களையும் விளக்குகின்றனர். ஆங்கிலத்தில் கேட்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு அனுமதி பெறவேண்டும். நாம் வாசலில் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். இதுவரை நாம் சென்ற நினைவிடங்களில் இந்த இடத்தில் மட்டும் தான் ஒருவரைத் தவிர அனைவரும் ஏதோ கடமைக்காக செயற்படுபவர்கள் போல இருந்தார்கள். முகத்தில் சிரிப்பில்லை. ஆர்வமாகவோ அன்பாகவோ வரவேற்கும் பண்போ உதவும் பண்போ இல்லை. மிகவும் இயந்திரத்தனமாக செயற்பட்டமை அந்த இடத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது. மழை மனிதர்களையும் இயற்கையையும் சுத்தம் செய்ய முயற்சித்தது. இயற்கை அதை ஏற்றுக் கொண்டது. மனிதர்களாகிய நாம் நம் உடல் உள அசுத்தங்களை சுத்தம் செய்ய மறுத்தவர்களாக மழையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டு நடந்தோம்.

IMG_5709 - Copy

 

IMG_5730

மண் பாதையின் அருகில் நீர் ஏரி அல்லது குளம் அதில் வாத்துகள் நீத்திக் கொண்டிருந்தன. மழை “சோ” எனக் கொட்டிக் கொண்டிருந்தது. பாதையின் இருபுறமும் வளர்ந்து உயர்ந்திருந்த மரங்களினுடாக நடந்து சென்றோம். ஒரளவு பெரிய வீடு. ஆனால் மாளிகையல்ல. இவரது தாய் மற்றும் தந்தை வழிக் குடும்பம் சிறிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாசலுக்குச் சென்றவுடன் மேல் மாடிக்குச் செல்லும்படி பணிக்கப்பட்டோம். அது சாப்பாட்டு அறை. பெரிய அறையில் நீண்ட சாப்பாட்டு மேசை. சுவரில் அவரதும் அவரது முதாதையர்களின் படங்களும் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக அவரது படுக்கையறை, வாசிக்கும், எழுதும் அறைகள் மற்றும் நூலகம் என்பன “ட” பட வரிசையாக இருந்தன. கீழே இறங்கி வந்து ஒரு வழியால் சென்றால் மகள்மாரினதும் வீட்டு வேலை செய்பவர்களினதும் அறைகள். இன்னுமொரு வழியால் சென்றால் அவரது வைத்தியரினதும் மகளினதும் அறைகள். இந்த அறைகளுக்குத்தான் அவர் கடைசியாக வந்து தனது மகளிடமும் வைத்தியரிடமும் தான் “யசனாயா பொல்யானா” வைவிட்டு வெளியேறுவதாகக் கூறிச் சென்றார். மேலும் இந்த அறையிலையே போரும் சமாதானமும் என்ற படைப்பு பிறப்பதற்கான விதைகள் இளைமைக் காலத்தில் முளைத்தன எனக் குறிப்பிடுகின்றனர். சக நினைவில்லங்களைப் போலல்லாது இந்த இடத்தில் நிறைய பார்வையாளர்கள் வந்திருந்ததுடன் அவர்களுக்கு குழு குழுவாக இரசிய மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் அந்த இடத்தின் உணர்வுகளை உள்வாங்கி செல்வதற்குத் தடையாக இருந்தது.டொல்ஸ்டோயிற்கும் அவரது துணைவியாருக்கும் இறுதிக் காலங்களில் நடைபெற்ற விவாதங்கள் ஏற்பட்ட முரண்பாடுகள் இரு பக்கத்தினருக்கும் கேட்காததைப் போல பல விடயங்களை எம்மாலும் உள்வாங்க முடியவில்லை. ஆனால் இப் படைப்பாளர்களின் துணைவியார்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த மனிதப் பண்பு உள்ளவர்களே என்பதற்கு அவர்களது பொறுப்பான பணிகள் சாட்சியாக இருக்கின்றன.

IMG_5734

வெளியே வந்தோம். மழை நிற்பதாகத் தெரியவில்லை. நாம் நமது பயணத்தை தொடர்ந்தோம்.  விவசாயிகளின் குழந்தைகளுக்கு அவர் நடாத்திய பள்ளிக்கூடத்தையும் பார்வையிட்டுக் கொண்டு அவரது சமாதியை நோக்கி நடந்தோம். மண் பாதையின் இரு மருங்கிலும் பச்சைப் பசேல் என்ற இடம். அப்பில் தோட்டங்கள். உயர்ந்த மரங்கள். ஒரு சோலையாகக் காட்சியளித்ததது. சமாதிக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். சமாதியை அடைந்தபோது நாம் நாளைந்து பேர் மட்டுமே இருந்தோம். அமைதியான இடம் இது என வழியில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஒருவரும் உரையாடவில்லை. மீறி உரையாடியவர்களும் குசு குசுத்தார்கள். இறுதிச் சடங்குகள் அவரது விருப்பப்படி எந்தவிதமான சமயச் சடங்குகளும் இல்லாது நடைபெற்றுள்ளது. நாம் ஒரு மண் மேட்டில் நின்றோம். சுற்றி வர வானுயர்ந்த மரங்கள். இதன் நடுவில் பச்சையாக ஒரு சமாதி. வெறுமனே மண்ணினால் செய்து அதன்மேல் பச்சைப் புற்களை (வெட்டி வெட்டி) வளர்க்கின்றனர். அருகில் பள்ளத்தில் சிறிய அருவி. இச் சமாதி (அவரது விருப்பப்படி) அவரைப் போல எளிமையாக இருக்கின்றது.

IMG_5736

 

அனைவருள்ளும் ஒரு சோகம் குடிகொள்ள அந்த இடத்தில் அமைதியாக சிறிது நேரம் இருந்து அஞ்சிலி செய்தோம். நாம் நீண்ட தூரத்திலிருந்து வந்திருந்தால் நமது நிலையைப் பார்த்து மழையும் அழுதது. அல்லது நம்முடன் சேர்ந்து அதுவும் அஞ்சலி செய்தது. பின் மெதுவாக நடந்து வாசலை அடைந்தோம். மழை கொட்டிக் கொண்டிருந்ததால் வாசலில் முன்னால் இருந்த சாப்பாட்டுக் கடையில் ஏதாவது சூடாகச் சாப்பிட்டு தேநீர் குடிக்கச் சென்றோம். அங்கு அனைத்தும் இரசிய மொழியில் இருந்தது. பரிசாரகிகளுக்கும் (நன்றி மைக்கல்) ஆங்கிலம் தெரியாது. என்ன செய்வது? அருகில் இருந்த நான்கு இளம் பெண்களிடம் ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டோம். கொஞ்சம் தெரியும் எனக் கூறி உதவி செய்தனர். நாம் நமது தெரிவுகளைக் கூற நமக்கு ஏற்ற உணவுகள் என்ன இருக்கின்றது என்பதைக் கூறினார்கள். இந்த மழைக்கு தேசிக்காயும் இஞ்சியும் கலந்து தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அதையும் கேட்டோம். பரிசாரகிகள் வரும்வரை இருந்து நமக்கான உணவுகளை அவர்களிடம் உறுதி செய்து விட்டே அந்தப் பெண்கள் சென்றார்கள். அதுவரை அவர்களுடன் உரையாடினோம். மாஸ்கோவில் இருந்தபோதும் இப்பொழுதுதான் முதன் முறையாக வருவதாகவும் மிகவும் இரம்மியமான இடம் என்றார்கள். நாம் வேறு எங்கு சென்றோம் என விசாரித்தார்கள். டோஸ்டோவோஸ்கியின் இடத்திற்கும் சென்றோம் எனக் கூறியபோது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வராத குறையாக அவரைப்பற்றி உரையாடினார். டோல்ஸ்டோயைவிட அவரின் மீது அவருக்கு கொஞ்சம் மதிப்பு அதிகமாக இருந்தது. செயின் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள அவரது நினைவில்லத்திற்கு செல்வது தனது கனவு என்றார்.

IMG_5737

பெரும்பாலான இரசியர்கள் மற்றும் (சோவியத் நாடுகளிலில் இருந்த) பாடசாலைகளில் இந்த இலக்கியங்களை பிடிப்பில்லாமல் படிப்புக்காக கட்டாயமாக கற்றுள்ளார்கள். கற்பிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் காலோட்டத்தில் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவர்கள் இப் படைப்பாளர்களுக்கும் அவர்களது படைப்புகளுக்கும் மதிப்பளிக்கின்றனர்.

IMG_5753

நாம் சந்தித்த மற்றும் கண்ட இரசிய மக்கள் ஒரு வகையான இறுக்கமான மனிதர்கள். இதற்கு இவர்களின் மூடுண்ட கடந்த காலம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த மனிதர்களிடம் சிறிது நெருங்கிச் சென்று பழகினால் அவர்கள் தம் இதயம் திறந்து அன்பைப் பொழிகின்றார்கள். நாம் இன்னுமொரு இடத்தில் சந்தித்த பெண் கூறினார் இவ்வாறு இரசியர்களிடம் அன்பு பொங்கி வழிவதற்கு காரணம் இரசிய படைப்புகள் என்றார். இலக்கிய படைப்புகள் இவர்களிடம் அன்பை விதைத்துள்ளன. ஆகேதான் இந்தப் படைப்பாளர்களை இன்றும் போற்றி மரியாதை செலுத்துகின்றனர். இதுதான் இலக்கியத்தின் பணி. சிறந்த இலக்கியங்கள் காலம் கடந்தும் வாழும் என்பதற்கு இவை சான்றுகள்.

இந்த நினைவில்லங்களுக்கான பயணங்கள் மீண்டும் இவர்களது படைப்புகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இறுதியாக இப் படைப்பாளர்களுக்கும் இரசிய இலக்கியத்திற்கும் தந்தையான புஸ்கினின் நினைவில்லத்திற்கு மற்றும் பலரின் சமாதிகளுக்கும் செல்ல முடியாமை மனவருத்தமாக இருந்தது. இருப்பினும் இரசியாவிற்கான நமது பயணம் திருப்பதியானதாக இருந்தது

.IMG_5687

இப் படைப்பாளர்களின் நினைவில்லங்களை ஒளிப்படங்களாகவும் இங்கு அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/26/இரசியா-இதயம்-விதைத்த-இலக-2/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் இலங்கைப் பெண்

IMG_6554

இன்று இத்தாலியின் தஸ்கான் மாகாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறிய பழைய நகரான சியான பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். ஒரு பெண் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு வந்தார். அவரது தோல் எங்களின் நிறமாகவே இருந்தது. அவரைப் பார்ப்பதற்கும் இலங்கையர் போல இருந்தார்.

நீங்களும் இலங்கையா எனக் கேட்டோம்.

அவர் ஆம் என்றார்.

நாமும் இலங்கை என்றோம்.

நீங்கள் இலங்கையில் எவடம் என்று கேட்டோம். அவரும் கேட்டார்.

எங்கட வீட்டிற்கு வாங்கோவன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார்.

இல்ல பஸ்சிற்கு காத்து நிற்கின்றோம். நாளைக்கு விமானமும் ஏற வேண்டும் என்றோம்.

நீங்கள் இத்தாலி வந்து கன காலமோ என்றோம்.

இருபது வருடங்கள் ஆகிவிட்டது…. ஒரு மகனும் மகளும் இருக்கின்றார்கள் … இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்…

இப்படியே வந்து எங்களுடன் தங்கிவிட்டு செல்லுங்களேன் எனத் தொடர்ந்தார்.

எங்களுக்கு வர விருப்பம் தான். ஆனால் நாளைக்கு விமானம் ஏற வேண்டும் அதுதான் யோசிக்கின்றோம் என்றோம்.

எப்ப கடைசியாக இலங்கைக்குப் போனீர்கள் எனக் கேட்டோம்.

IMG_6558.JPG

எங்கே போவது. இஞ்ச ஒரு வீட்டில வேலை செய்கின்றேன். நிறைய வேலை. கொஞ்ச சம்பளம். இலங்கைக்குப் போவதற்கு வருமானம் காணாது. கணவரின் குடும்பமும் சரியில்லை… நான் தனியத்தான் பிள்ளைகளையும் வளர்த்து குடும்பத்தப் பார்க்கின்றேன்.

சரி நீங்கள் இப்படியே என்னுடன் வீட்ட வாங்கோவன். சாப்பிட்டு ஒரு நாள் தங்கிவிட்டு எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று தொடர்ந்தார்.

ம்…. உண்மையில் நீங்கள் எங்களை அழைத்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன் வரமுடியாதமை வருத்தமாக உள்ளது. கோவிக்காதீர்கள் என்றோம்.  அவரது அழைப்பை மறுப்பதற்கு எங்களுக்கு கஸ்டமாகப் ோய்விட்டது.

எனக்கு புகையிரதத்திற்கு நேரமாகவிட்டது. எனது தொலைபேசியைத் தருகின்றேன். எப்ப வேண்டுமானாலும் அழைத்துவிட்டு வாருங்கள் என்றார்.

அவருடன் சென்று அவரைப் புகையிரதத்தில் ஏற்றிவிட்டு தொலைபேசி இலக்கத்தையும் வாங்கிக் கொண்டு வந்தோம்.

நமது பஸ்சும் வர ஏறி ரோமுக்கு மாலை போல வந்தோம். நமது தங்குமிடத்தை தேடிச் சென்றோம். நமது பெயரை விசாரித்துவிட்டு நீங்கள் நாளைக்கு அல்லவா பதிவு செய்திருக்கின்றீர்கள் என்றார் உரிமையாளப் பெண்.

இல்லை எங்களுக்கு நாளைக்கு விமானம் ஏறவேண்டும். இன்றுதான் பதிவு செய்தோம் என்றோம்.

இன்று 29ம் திகதி. நாளை 30ம் திகதிக்குத்தான் பதிவு செய்திருக்கின்றீர்கள் என்றார்.

நமக்கு குழப்பம் உண்டாகியது. மீண்டும் நாம் விமானம் ஏறும் திகதியை உறுதி செய்தோம். அது 31ம் திகதி என்று இருந்தது. அப்பொழுதுதான் எங்களுக்கு ஒரு விடயம் புரிந்தது. வழமையாக இடங்களைப் பதிவு செய்தும் பொழுது வெளியேறும் நாளைக் குறிப்பிட வேண்டும். கடைசியாக தங்கிய இடத்திலிருந்து 29ம் திகதி வெளியேற வேண்டும் எனப் பதிவு செய்தோம். ஆகவே 30ம் திகதிக்கு நமது அடுத்த தங்குமிடத்தைப் பதிவு செய்தோம். ஆனால் நமது மனதில் இன்றும் 30ம் திகதி எனப் பதியப்பட்டுவிட்டது. தூரதிர்ஸ்டவசமாக இருவரும் அவ்வாறே நினைத்துக் கொண்டே பயணித்தோம். ஆனால் உண்மையில் இன்று 29ம் திகதி. நாம் தங்குவதற்கு ஒரு இடத்தையும் பதிவு செய்யவில்லை. நமது நல்ல நேரத்திற்கு அவரிடம் ஒரு வெற்றிடமிருக்க அதை நாம் தங்குவதற்கு தந்தார்.

IMG_6572.JPG

இப்பொழுது நாம் சந்தித்த பெண் நம்மை அழைத்ததை நினைத்துக் கொண்டோம். அவர் உண்மையான நட்புணர்வில் அழைத்திருக்கலாம். தனிமையில் இருப்பதால் அழைத்திருக்கலாம். மன நோயாளராகவும் இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் நமது மனதின் எண்ணங்களே. அவரைப் பற்றிய மதிப்பீடுகளே.

இது இயற்கை நமக்கு தந்த அழைப்பா?

நமது மறுப்பு இயற்கை அளித்த புதிய அனுபவங்களுக்கு தடையாகிவிட்டது.

இப்படித்தான் இயற்கையின் அழைப்பை பல நேரங்களில் நம் மனதின் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கத்தால் தட்டிக் கழித்து விடுகின்றோம்.

அவர் ஒரு சிங்களப் பெண். களனியைப் சேர்ந்தவர். நாம் அவருடன் சிங்களத்திலையே உரையாடினோம். இங்கு இவரைப் போல பல இலங்கைப் பெண்கள் வீடுகளில் பணி செய்கின்றார்கள். கஸ்டமான பணி. குறைவான ஊதியம்.

ஆனால் பெயர் வெளிநாட்டு வாழ்வு.

 

https://ajourneytowardssun.wordpress.com/2016/08/29/இத்தாலியில்-இலங்கைப்-பெண/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.