Jump to content

ஜெமோவும் சமந்தாவும் - பரதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் .
காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது .
முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “
“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "
“ அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார் "
“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "
“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "
“ தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம் .பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம் "
“ உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல "
“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல்
அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன "
மனைவியிடம் உமா இறந்த செய்தியை சொல்லிவிட்டு கோண்டாவில் சந்தியை நோக்கி இறைச்சி வாங்க சயிக்களை உழக்குகின்றான் வசந்தன் .
காலை காற்று முகத்தில் வீச பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வந்துபோகின்றது ,
வசந்தனுக்கு நம்பியுடன் தனக்கான உறவை நினைக்க வியப்பாக இருந்தது.
ஆறாம் வகுப்பில் உரும்பிராயில் ஒன்றாக படித்தது ,
பின் எட்டாம் வகுப்பில் யாழ் இந்துவில் படித்தது,
பின்னர் 80 ஆம் ஆண்டு பிரான்சில் சந்தித்து ஒன்றாக தண்ணி அடித்தது ,
84 ஆம் ஆண்டு தான் இயக்கத்தில் போய் சேர்ந்து புதுக்கோட்டை பயிற்சி முகாமிற்கு சென்ற போது நம்பி அங்கு கிணறு வெட்டிக்கொண்டு நின்றது ,
இயக்கத்தில் இருக்கும் போது முதல் முதல் நம்பியுடன் தான் களவாக "கீதாஞ்சலி ' படம் உதயம் தியேட்டரில் பார்த்தது,
இயக்கம் முரண்பாடுகளால் நிரம்பியிருந்த நேரம் ஓடி சென்ற தோழரை தேடி பம்பாயிற்கு வேறு சிலருடன் நம்பியை அனுப்பியதற்காக உமாவுடன் வாக்குவாதப்பட்டது
கடைசியில் இலங்கை -இந்திய ஒப்பந்தத்துடன் மற்றைய அமைப்புகளுக்கு கிடைத்த அதிகாரம் போல எதுவித பங்கும் அதில் கிடைக்காமல் இந்தியாவால் கைவிடப்பட்டு கப்பலில் உமா உட்பட அனைத்து உறுப்பினர்களும் மன்னாரில் இறக்கிவிடப்பட்ட போது நம்பியுடன் தான் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் வசந்தன் .
அதன் பின் அரசியலில் இருந்து ஒதுங்கிய வசந்தன் மக்கள் வங்கியில் வேலையும் எடுத்து ரேவதியை கல்யாணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகிவிட்டான் .
கிரேக்க கப்பலில் வேலை கிடைத்து நம்பியும் பத்துவருடங்கள் உலகம் எல்லாம் சுற்றி நல்ல பணத்துடன் நாடு திரும்பி ஊரெழுவில் செட்டிலாக்விட்டான் .
மன்னார், வவுனியாவில் இருந்து அரசியல் செய்த அவன் சார்ந்த அமைப்பு இரண்டு தடவைகள் மட்டும் சில உறுப்பினர்களை வெல்லவைத்தது .அதன் பின் உமாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் .
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை முதல் இரண்டு தடவைகளும் திலீபன் தலைமையிலான புலிகளின் அரசியல் கட்சியாலும் பின்னர் மூன்று தடவைகள் மாவையின் தலைமையிலான கூட்டணியாலும் ஆட்சி செய்யப்பட்டு கடைசியாக நடந்த தேர்தலில் மீண்டும் புலிகளின் அரசியல் கட்சி வெற்றியடைந்ததால் நம்பியின் கடைசி தம்பி திலீபன் தான் இப்போ மாகாண முதலமைச்சர் .

August 6 2016 Friday . Toronto
வெள்ளிகிழமை வேலைமுடிய வீடு திரும்பும் சந்தோசமே தனிதான் என்று மனதில் நினைத்தபடி காரை கராஜில் தரித்துவிட்டு வீட்டுக்கதவைத்திறந்தால் ,
“என்னப்பா இப்படி வெய்யில் விடாமல் அடிக்குது "
சமையலறையில் இருந்தபடியே மனைவியின் குரல் வருது .
தோட்டத்திற்கு தண்ணி அடிக்கசொல்லி மனுசி சொல்லாமல் சொல்லுது, உண்மையில் விடாமல் ஒருமாதமாக அடிக்கும் இந்த வெய்யில் டொராண்டோவிற்கு புதிதுதான் .
“அப்பா பிளீஸ் சாப்பிட்டிட்டு விட்டு கணணி முன் குந்தியிருந்து அவனவன் வேலை வெட்டி இல்லாமல் எழுதும் பதிவுகளுக்கு ஒரு விரலால் கீபோர்டை குத்திக்கொண்டு இருக்காமல் ஒரு நடை போட்டுவந்து தோட்டத்திற்கு தண்ணியை அடியுங்கோ "
மனுசிக்கு தெரியும் கணணி முன் குந்தினால் வசந்தன்அ சையமாட்டார் என்று, எனவே வாரவிடுமுறையை சண்டையுடன் தொடங்காமல் மனுசி சொல்வதை கேட்பம் என்று நல்ல பிள்ளையாக அனைத்து அலுவல்களையும் முடித்துவிட்டு கணணி முன் வந்து குந்துகின்றான் வசந்தன் .
முப்பது வருடங்களுக்கு முதல் கனடா வந்த வசந்தன் வாழ்கையில் ஓரளவு செட்டிலாகிவிட்டான் .இரண்டு வளர்ந்த பெடியங்கள் மூத்தவன் ஆதவன் படிப்பை முடித்துவிட்டு வேலைசெய்கின்றான் சின்னவன் பிரணவன் பல்கலைக் கழகத்தில் கடைசி வருடம் படிக்கின்றான் . மனைவி ரேவதி வேலை வீடு பிள்ளைகள் என்று வாழ்பவள் .
கனடா வந்த புதிதில் கணனிக்கும் வசந்தன் செய்யும் வேலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லாததால் கணணியை கண்ணால் கண்டதுடன் சரி என்று இருந்தவனுக்கு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலையே நிரந்தராமக வைத்திருக்க அடிப்படை கணணி பற்றிய அறிவு தேவைப்பட்டது .
வேலைக்கு தேவை என்று கணணியை தொட்ட வசந்தன் இப்போ கணணியுடன் தான் வாழ்க்கை . கணனியில் அரசியல் ,விளையாட்டு ,சினிமா ,இலக்கியம் என்று மெல்ல மெல்ல வாசிக்க தொடங்கி இப்போ முகபுத்தகம் ,யுடியுப் ,டுவிட்டர் என்று ஒரே பிஸி .
பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் , தான் டிவி பார்க்கவும் நண்பிகளுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசவும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் காணும் என்று ரேவதியும் வசந்தனை தொந்தரவு செய்வதில்லை .
கணணி முன் குந்திய வசந்தன் முக புத்தகத்தை திறந்தால் பக்கம் பக்கமாக ஜெயமோகன் தடம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி பற்றி திட்டி பதிவுகள்வ வந்துகொண்டேயிருக்க வசந்தனுக்கு வெறுப்பேறி விட்டது.
முகபுத்தகதை விட்டு வேறு தமிழ் இணையங்களுக்கு போனால் அங்கும் அதே பிரச்சனை தொடருது .
புலம்பெயந்த அநேக தமிழர்கள் போல வசந்தனுக்கும் இலங்கை அரசியல் என்றால் காணும், மணிகணக்காக அவனவன் எழுதும் கருத்துகளை வாசித்துக்கொண்டே இருப்பான் .விடுதலை என்று தொடங்கிய விடுதலை போராட்டம் திசை மாறி யுத்தம் வருடக்கணக்காக இழுபட்டு தமிழர்கள் வாழ்வில் அனைத்துவித நாசங்களையும் அந்த யுத்தம் செய்துவிட்டு போய்விட்டது என்று முற்றிலும் நம்புவவன் வசந்தன் .
தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று எவ்வளவு அழிவுகள் வந்தால் என்ன எவ்வளவு வருடங்கள் சென்றால் என்ன என்று கோர யுத்தத்தை ஆதரித்தவர்கள் யுத்தம் அவர்களின் எதிர்பாப்பை ஏமாற்றி தோல்வியில் முடிந்தபின் யுத்தம் விட்டுசென்ற அழிவுகளை மீள் கட்டியெழுப்புவதை விட்டு யுத்தம் தோற்றத்திற்கு இல்லாத காரணங்களை தேடுவதிலும் தம்முடன் உடன்படாதவர்களை திட்டி தீர்ப்பதிலுமே குறியாக இருப்பதை நினைத்து,
எதிர்பார்ப்புகள் சாத்தியமாகாமல் போகும் போது இவ்வாறு ஏற்படுவது மனித இயல்புதான் என்ற புரிதல் வசந்தனுக்கு இருந்தது .
இருந்தாலும் இந்த ஜெமோ விடயம் சற்று ஒவராகவே பட வெறுப்பின் உச்சத்திற்கு போய் மனுசியின் அண்ணர் ஜெர்மனியில் இருந்து கொண்டுவந்த கொனியாக்கை பச்சையாக அடித்துவிட்டு படுக்கபோய்விட்டான் .
கட்டை டெனிம் காற்சட்டையுடன் பட்டன் பூட்டாமல் திறந்துவிட்ட சேர்ட்டை நுனியில் முடிந்து விட்டபடி சமந்தா காலால் மண்ணை எத்தியபடி வசந்தனை நோக்கி வருகின்றார் . அட சமந்தா பாட்டுடன் வருகின்றார் என்ன பாட்டு என்று தெரிந்தால் சேர்ந்தேபாடலாம் என்று யோசிக்க
“என்னை நினைச்சோ நித்திரை வராமல் கிடந்து கட்டிலில் உருளுகின்றீர்கள் "
“அது போன வருடம் இப்ப கீர்த்தி சுரேஷ் என்று வாயில் வந்ததை மெல்ல முழுங்கிவிட்டு இல்லை சமந்தா இது வேற பிரச்சனை "
“அப்படி என்ன பிரச்சனை "
“முகபுத்தகத்தை சும்மா பிரட்டி பார்த்துவிட்டு படுக்க போவம் என்றால் அவனவன் வந்து ஜெமோ வை திட்டி முகப் புத்தகம் நிரம்பி வழியுது "
“ஜெமோ ? யார் அது ?”
“உங்கட ஆள்தான் ,கமலின்ரை பாபனாசம் படத்திற்கு வசனம் எழுதியவர் "
“ அவரை யார்? ஏன் திட்டுகின்றார்கள் "
"எங்கட ஆட்கள் தான் . இலங்கை தமிழர்கள் . படத்திற்கு வசனம் எழுதுவதை விட்டுவிட்டு எங்கட இனப்பிரச்சனைக்கு வசனம் எழுதினதால் வந்த பிரச்சனை "
“எனக்கு எதுவும் தெரியாது , முடிஞ்சா ஒரு பாட்டு சீனுக்கு உங்களோட ஆடலாம் "
“பாட்டு ஒண்டும் வேண்டாம் , நான் விடிய முகபுத்தத்தை திறந்தால் ஜெமோ பற்றிய பதிவு எனது கண்ணில படக்கூ டாது. அதுக்கு ஒரு உதவி செய்தால் காணும் "
“ம்ம்ம்ம்ம்ம் சொல்லுங்கோ "
“24 படத்தில சூர்யா உங்களை லவ் பண்ண ஒரு கடிகாரத்தை வைத்து நேரத்தை முன்னால பின்னால ஓடவிடுவார் அல்லோ அந்த கடிகாரத்தை சூரியாவிடம் இருந்து மெல்ல அடிச்சு கொண்டுவந்தா காணும் "
“அது என்னால ஏலாது ,வேணுமென்றால் என்ன நேரத்திற்கு மணிக் கூ ட்டை மாத்தவேண்டும் எண்டு சொல்லுங்கோ சூரியாவிற்கு தெரியாமல் மெல்ல மாத்திவிடுகின்றேன் . இது ஒருமுறை மட்டும் தான் எனவே நேரத்தை சரியா சொல்லுங்கோ "
“ஒரு செக்கன் நில்லுங்கோ சொல்லுறன் "
ஜெமோ எப்போ ஈழப்பிரச்சனையில் வாயை திறந்து முதன் முதலில் வாங்கி கட்டிகொண்டார் என்று யோசிக்க ,
இந்தியன் ஆமி இலங்கைக்கு போய் செய்த வெறியாட்டத்தை நியாயப்படுத்தியதுதான் நினைவு வருகின்றது வசந்ததனுக்கு ,
சிங்கள அரசு தமிழர்களுக்கு எதையும் தராது என்ற நிலை தொடர இலங்கைக்குள் தனது மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்த இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைக்காக என்று தமிழர்களை பகடைகாய்களாக்கி முதல் அடியை வைக்க முனைந்த அந்த காலகட்டம் . சிங்கள அரசு ஓரளவு அடிபணிந்த அந்த நேரம் தான் இலங்கை தமிழர்களுக்கான ஒரு விடிவும் கிடைத்திருக்கவேண்டிய காலம் அது .
1 - "On April 2nd., 1985 Customs officials seized a container as big as a train car that was unloaded from a ship at the Madras Port. When they examined it they were in for a rude shock. It contained at least 1,400 rifles of 1945 model, 300 sten guns, 5 wireless sets of Japanese origin and an electronic radio set with an amplifier. The Captain and the crew had no idea about the contents in the container, which had been marked "used newspapers". The arms bought for 3 lakhs US Dollars from a Taiwanese Arms agent were meant for the PLOT."
நேரத்தை மாற்றி இந்த ஆயுதங்களை பிடிபாடாமல் செய்யாலாமா ? ஏற்கனவே உள்முரண்பாடுகள் நிரம்பி வழியுது .ஆளுக்கு ஆள் சுடுபடுவது மாத்திரம் இல்லை மற்ற இயக்கங்களையும் அழிக்க முனைவார்கள் . இவர்களை நம்பி நேரத்தை மாற்ற சமந்தாவை கேட்க வேண்டாம் .
2- Thimpu Talks In July–August 1985
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
recognition of the Tamils of Ceylon as a nation
recognition of the existence of an identified homeland for the Tamils of Ceylon
recognition of the right of self determination of the Tamil nation
recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils of Ceylon
நேரத்தை பின் கொண்டுபோய் இந்த பேச்சுவார்த்தையை வெற்றிபெறவைக்கலாம் ஆனால் இது தமிழர்களுக்கான
தீர்வு இல்லை இது தமிழர்களுக்கான தீர்வின் அடிப்படை நியாயங்கள் மட்டுமே .இதன் பின்னரும் கூ ட இந்திய ஆர்மி இலங்கை செல்ல வேண்டி வந்திருக்கும் . இதுவும் வேண்டாம் .
3 - July 1987 Delhi
இலங்கை -இந்திய ஒப்பந்தம் தயார் .
சென்னையில் அனைத்து இயக்க பிரதிநிதிகள் ,கூ ட்டணி தலைவர்களுக்கு ஒப்பந்தந்ததின் சாரம் தனித்தனியே கொடுக்கப்படுகின்றது .அனைவரும் தமக்கு திருப்தி என்கின்றார்கள் .நாட்டில் இருக்கும் பிரபாகரன் ,சென்னையில் இறங்கி தமது பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு டெல்கியில் பாலசிங்கத்துடன் அசோகா கொட்டேலில் நிற்கின்றார் .இது இலங்கை -இந்திய ஒப்பந்தம் தங்கள் தரப்பு சம்பந்த படாத தீர்வு எதிலும் தனக்கு சம்மதம் இல்லை என்கின்றார் . எம்ஜிஆரை இந்திய தரப்பு டெல்கிக்கு வரவழை த்து பிரபாகரனை இணங்கவைக்க முயற்சித்தும் பிரபாகரன் தனது முடிவை மாத்த மறுத்துவிட்டார் . எவரது ஒப்புதல் பற்றியும் தனக்கு அக்கறையில்லை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு அமுலுக்கு வரும் என்று ராஜீவ் அறிவிக்கின்றார் .
இதுதான் சரியான நேரம் . 25 July 1987.
சமந்தாவிடம் வசந்தன் நேரத்தை சொன்னவுடனே சமந்தா மறைந்துவிட்டார் .
டெல்லி அசோகா கொட்டேல் லோபியில் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி வலதுகையால் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் கையையும் இடது கையால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையை உயர்தியபடியும் நிற்கின்றார் .
July 29 1987 வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை -இந்திய ஒப்பந்தம் இலங்கையில் கையெழுத்தாகின்றது .
பத்மநாதன் தலைமையில் பன்னிரெண்டு அங்கத்தவர்கள் கொண்ட வடக்கு -கிழக்கு இணைத்த ஒரே இடைகால நிர்வாகம் .
இரண்டு முஸ்லிம்களை உள்ளடக்கி ஏழு விடுதலைப்புலிகள் ,தமிழர் விடுதலை கூட்டணி மூன்று பேர்கள் .ஈ பி ஆர் எல் எப் இரண்டுபேர்கள் .
சரித்திர புகழ் பெற்ற வாக்குபதிவில் வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு மாகாணம் உருவாகின்றது .பிரபாகரனின் ஆசியுடன் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன் முதல்வர் ஆகின்றார் .
தமிழ் நாட்டில் இருந்து அனைத்து இயக்கங்களும் அகதிகளும் இலங்கைக்கு கப்பலில் அனுப்பபடுகின்றார்கள்

சமந்தா -என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா !!!

 
Parathan Navaratnam's photo.
Parathan Navaratnam's photo.
 

 

 

 

 

 

 

 

 

எழுத்து - பரதன்

மூலம் - பதிவு இணையம்

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கண்டுபிடிச்சிட்டியள் tw_blush:

Link to comment
Share on other sites

செம கதை ஒன்று நீண்டநாளுக்குப் பிறகு, எங்க அர்ஜுன் அண்ணை 

கையை கொடுங்கோ 

Link to comment
Share on other sites

மேல  என்ன  எழுதி  இருக்கு  புரில்ல :rolleyes:

Link to comment
Share on other sites

18 hours ago, அஞ்சரன் said:

மேல  என்ன  எழுதி  இருக்கு  புரில்ல :rolleyes:

ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.

மேலே உள்ளதை நீங்களே பதிந்துவிட்டு....... அதற்கும் மேல் உள்ளது புரியவில்லை என்றால் எப்படி....... ???? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... அந்தக் கடிகாரத்தை  3 , மாசி  1948 க்கு சுத்தி விட்டிருக்கலாம் ....., நாடும் நல்லா இருந்திருக்கும் ......!

நிஜம் தோய்ந்த கற்பனை நல்லாயிருக்கு சகோதரி....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை..

அதை வடித்த விதமும் அருமை

ஆனால் கருவில்...

இன்னும் 40 ஆண்டு கால கனவுலகிலிருந்து திரும்பாமை தெரிகிறது...

 

போராட்டம் என்றால் யாரோ வைத்துக்கொண்டு பிச்சை போடுவதற்கு தயாராக இருந்தது போலவும்

அதை போராளிகள் தான் தட்டிவிட்டது போலவும்

நாலு அரசியல் புத்தகம்

அத்துடன் சோறு...

இவற்றுடன் போராட்டம் வெல்லும் என்ற மாயை இன்றும் மாறியதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.