Jump to content

ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று:


Recommended Posts

ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று:

 

ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று:

 

 
சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில்  உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். 
 
இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார். அங்கே இருந்தபடி    The Carthaginian Clergy என்கிற தலைப்பில் இறையியலில்  முனைவர் பட்டம் பெற்றார். வடக்கன்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் குருசாமி என்பவரிடம் தமிழ் பயின்றார்.
 
அவருக்கு லத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு,ஜெர்மன், போர்த்துகீஸ் முதலிய பல்வேறு மொழிகளில் தனித்த புலமை இருந்தது. ஆனாலும்,தன்னுடைய அன்னைத்தமிழின் இலக்கியங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற எண்ணம் அவரை செலுத்தியது. அண்ணாமலைப்பல்கலையில் அவர் முதுகலை படிப்பில் இளங்கலையை பயிலாமலே  இணைய  அண்ணாமலை செட்டியார் அனுமதி கொடுத்தார்.   முப்பத்தி இரண்டு வயதில் தமிழ் மொழியை முறையாக அவர் பயின்று இன்பமுற்றார். எம்.லிட் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில் இயற்கை என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். ரிக் வேதப்பாடல்களை படித்துவிட்டு ,"இந்தப்பாடல்களை விட சங்க இலக்கிய பாடல்கள் பல மடங்கு அற்புதமானவை !" என்று மெய்சிலிர்த்து சொன்னார்.
 
1948 ஆம் ஆண்டு  தமிழ் இலக்கியக் கழகத்தை  தூத்துக்குடியில் நிறுவி பல்வேறு தமிழ் நூல்களை பதிப்பித்தார். அங்கே "Tamil Culture" என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார். தமிழின் பெருமையை உலகறிய செய்ய எண்ணிய அவர் பிற மொழிகளில் தமிழ் பற்றி வந்திருக்கும் குறிப்புகளை  'Reference Guide to Tamil Studies" என்ற நூறுக்கு சற்றே கூடுதலான குறிப்புதவி நூலில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பத்தி ஐந்து பிற மொழி நூல்களில் வழங்கி வரும் குறிப்புகளை பதிவு செய்தார்.  ஒன்பது வருடங்கள் இலங்கையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் லண்டன் பல்கலையில் தமிழ் இலக்கியம் வழியாக கல்வியியல் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து இரண்டாம் முறையாக முனைவர் பட்டம் பெற்றார். 
 
பின்னர் மலேசியாவில் உள்ள பல்கலையில் இந்தியத்துறையில் தலைவராக இணைந்து தமிழ் பேராசிரியாக பணியாற்றினார். அப்பொழுது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழறிஞர்களை இணைத்து உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழக அரசின் உதவியைக் கோரினார். அப்பொழுதைய பக்தவச்சலம் அரசு பெரிய ஈடுபாடு காட்டாமையால்  உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை  (International Association for Tamil Research, IATR)  பல்வேறு தமிழறிஞர்களோடு இணைந்து நிறுவினார்.  முதல் உலகத்தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் மலேசிய அரசின் உதவியோடு வெற்றிகரமாக அடிகள் நடத்தினார். அந்த அமைப்பே எட்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியது. அதிலும் நான்கு உலகத்தமிழ் மாநாடுகள் அடிகளார்வாழ்நாள் காலத்திலேயே நடந்தது.
 
"இலத்தீன் சட்டத்தின் மொழியென்றால்,பிரெஞ்சை ராஜதந்திரத்தின் மொழி என்போம் என்றால்,ஜெர்மன் அறிவியலின் மொழி மற்றும் ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றால் தமிழ் பக்தியின் மொழி !" என்று முழங்கிய அடிகளார் தமிழின் பண்டைய இலக்கியங்கள் எப்படி வடமொழி இலக்கியங்களை போல அல்லாமல் சமயச்சார்பற்று விளங்கின என்பதை நிறுவினார். தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செறிவையும்  ஜப்பான்,சிலி,பிரேசில்,அமெரிக்கா முதலிய நாடுகளில் இருநூறு சொற்பொழிவுகள் மற்றும் பாடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.  தாய்லாந்தில் தங்கியிருந்த பொழுது அங்கே மன்னரின் முடிசூட்டு விழாவின் பொழுது பாடப்படுவது திருவெம்பாவை பாடல் என்பதை கண்டறிந்து உலகுக்கு சொன்னார்.
 
ஆசிய மொழிகளிலேயே முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் வெளியான மொழி தமிழ் என்பதை கார்த்திலியா  (1556),தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்தியானி வணக்கம் (1579) முதலிய அரிய அச்சு நூல்களின் மூலப்பிரதிகளை தேடிக்கண்டெடுத்து பதிப்பித்து நிரூபித்தார். தமிழின் ஆய்வுமுறையில் வரலாறு, பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றை இணைத்து ஆய்வு செய்யும் போக்கை ஏற்படுத்தியதில் அவர் முன்னோடியாக இருந்தார்.
 
தன்னுடைய இறுதிக்காலத்தில்  ஈழத்தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அதில்  "தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச் சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கைகளையும் அவர்கள் கடைபிடித்தே வந்தனர், இன்றும் கடைபிடித்தே வருகின்றனர்''. என்று பெருமை பொங்க சொன்னார். 'உலகெங்கும் உலாவும் தமிழ் மொழியின் தூதர்' என்று அறியப்பட்ட தனிநாயகம் அடிகளை நினைவில் நிறுத்துவோம்.
 
- பூ.கொ.சரவணன்
 

அரசாங்கத்தின் கைது - தடுப்புக் காவலில் இருந்து தனிநாயகம் அடிகளாரைக் காப்பாற்றியவர் ராஜன் கதிர்காமர் 

அரசின் தடுப்புக் காவல் பட்டியலில் தனிநாயகம் அடிகளார் இருக்கும் தகவலை லக்ஸ்மன் கதிர்காமர் ஊடாக அப்போதய கடற்படைத்தளபதி தெரியப்படுத்தினார் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஆ.தேவராஜன் வழங்கிய செவ்வி

சேவியர் தனிநாயகம்

 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவியர் தனிநாயகம் அடிகளார்
FrThaninayagam.jpg
பிறப்பு ஆகத்து 2, 1913
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு செப்டம்பர் 1, 1980 (அகவை 67)
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி

முனைவர் பட்டம் (லண்டன்)
முதுகலை இலக்கியப் பட்டம் (MLitt) (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
பிஏ(சென்ட் பேர்னாட் செமினறி, கொழும்பு, 1934)

புனித பத்திரிசியார் கல்லூரி் (யாழ்ப்பாணம், 1920-22)

பணி பேராசிரியர்
அறியப்படுவது உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர், தமிழறிஞர்
சமயம் கத்தோலிக்கர்
வலைத்தளம்
http://thaninayagamadigalar.com/

தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam, ஆகத்து 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.[1] பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.[2]தமிழ்க் கல்ச்சர் என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.

பிறப்பு

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார்.

கல்வி

தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.[1][3][4]. இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் நான்காண்டுகள் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்[1]. இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.

ஆசிரியப் பணி

1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதழியலில்

தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.

உலக நாடுகளுக்குப் பயணம்

250px-Luso_Tamil_Catechism_Lisbon_1554.J

 
1554 ஆம் ஆண்டில் லிசுபனில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha) நூல். 1950களில் தனிநாயகம் அடிகளாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு சப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார்.[2]. அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.

தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.[5] இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.[6]

தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்

1963 ஆம் ஆண்டளவில் தமிழக அரசில் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகளவிலே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உருவாக வழி பிறந்தது.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கோலாலம்பூர் மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார்[2]. சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆய்வு நூல்கள்

தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.

தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, செருமனி, உருசியம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.[1]

அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

  • The Carthaginian Clergy
  • Nature in the ancient poetry
  • Aspects of Tamil Humanism
  • Indian thought and Roman Stoicism
  • Educational thoughts in ancient Tamil literature
  • தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.
  • தமிழ்த்தூது
  • ஒரே உலகம்
  • திருவள்ளுவர்
  • உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.
  • Reference guide to Tamil studies
  • Tamil Studies Abroad
  • Tamil Culture and Civilization

மறைவு

அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்துஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.

கௌரவம்

  • 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது[7][8][9].
  • நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர்.
  • 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

நூற்றாண்டு விழா

சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது[10][11]

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135469/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.