Jump to content

ஒரு கதை


Recommended Posts

ரசிகை..என்னாச்சு??

Link to comment
Share on other sites

ஓ மன்னிக்கவும் நான் தட்டச்சு செய்திட்டு அப்லோட் பண்ணீட்டு போட்டன் திரும்ப வர முடியலை நெட் கட்டா போச்சு. சோ தட்டின கதையும் போட்டுது. :huh:

சீக்கிரம் மீண்டும் தட்டச்சு செய்து இணைக்கிறேன். அதுவரையும் பொறுங்கோ என்னைத்திட்டாதீங்கோ பாவம் நான்.

Link to comment
Share on other sites

கதையை ரைப் பண்ணிட்டு அதை ஏன் சேவ் பண்ணாம விட்டனீங்கள்? முதல் ரைப் பண்ணின மாதிரி அவ்வளவு கற்பனையும் திரும்ப அப்பிடியே வருமா?

Link to comment
Share on other sites

மழைக்காலம்!

உண்மையாத்தான் சொல்றீராப்பா!..... சந்தேகத்துடனே அவனது கண்களை உற்று நோக்கினாள் தாரகா

ஓம்! தாராகா! என்னைப்பற்றி நீ முழுமையாக தெரிய வேண்டும். அதற்காக நான் செய்தது எல்லாம் தப்பு அப்படி எண்டு உன்னட்ட மன்னிப்பு கேட்கிறதுக்காக சொல்லலை. நீ இப்படி ஒன்றைச் செய்திட்டு வந்து என்னட்ட சொல்லி இருந்தா அதை நான் எப்படி எடுப்பேன் என்றும் எனக்குத் தெரியாது. ஆனா உன்னை மாதிரி இப்படி அமைதியாக் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். இதுக்குக் காரணம் நான் ஆண் எண்ட திமிர் இல்லை. உன்னைப் போல என் மனசு பக்குவப்படலை தாரகா. சுரேஸ் அடுக்கிக் கொண்டே போக தாரகாவின் முகம் கலவரப்பட்டுக் கொண்டே போனது!

அமைதியாகக் கடலில் எழும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரகா! அவன் நினைவலைகளும் கடலலைகள் போல எழுந்து அடங்கின.

ரொம்பப் பிடிக்குமா? தாரகா மெளனம் கலைத்தாள்.

ஹீம்

சாந்திக்குமா?

ஓம்..

அப்புறம் ஏன்! என்னாச்சு?

வீட்ல சம்மதிக்கலை வேற சாதி! பொருளாதார நெருக்கடி! வாழ்க்கைக்கு அத்திவாரம் போடாம பல்கலைக்கழகத்தில் அப்பா காசில படிக்கேக்கை இதெல்லாம் தெரியலை. வெளியே வந்து ஒரு வருசமா வேலை கிடைக்கலை. ஏறு வெயில் எப்படி நேரம் ஆக ஆகச் சுடுமோ, அப்படிச் சுரீர் எண்டு உண்மை சுட ஆரம்பிச்சுது. பொண்ணுக்கு வயசாகிட்டே போறதுன்னு அவங்க வீட்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வச்சிட்டினம்.

அவ ஒன்றுமே சொல்லலையா?

போராடினோம் தாரகா! முடியலை. ஷ்ஷ்! வாழ்க்கையோட சவால்களுக்கு முன்னால் காதல் வெறு,ம் இலூசன் தானே!

அதுக்கப்புறம் அவவை பார்த்தீங்களா?

இல்லை! கல்யாணம் முடிஞ்ச கையோட லண்டன் போனதாக கேள்விப்பட்டேன். அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நான் படிச்ச பல்கலைக்கழகப் பக்கமே போகலை! அவமானம். காதல் தோல்வி, வேலை இல்லை! கண்கள் அவனை அறியாமலே கலங்கின!

மனசுக்கு கஷ்டமாயிருக்கு சுரேஸ்!

பரவாயில்லை! தாரகா காலம்தான் எல்லாக் காயத்துக்கும் நல்ல மருந்தாச்சே!

அப்போ அவ நினைப்பே இப்ப உங்களுக்கு வராதா??

எப்போவாவது வாறது. அதோ அந்த அலைகள் போல! எழும்! விழும்!. முதல் தடவை கடலைப் பார்த்தால் இருக்கிற எக்சைட்மெண்ட் கொஞ்ச நாள்ல போறதில்லையா? அது போலத்தான் எல்லாம் அடங்கிப் போச்சு! இப்பவும் நல்லா யோசி தாரகா! நீ என்னைக் கல்யாணம் பண்ண முழு மனசோட ஒத்துக்கிறியா?

ஓம்! சுரேஸ் ஜஸ்ட் பீ பிரக்கிடிக்கல். யார் லவ் பண்ணலை சொல்லும்! எனக்கு உம்மில காதல் வந்திச்சு. உம்மட்ட காதலை சொல்லாம உம்மைக் கல்யாணம் பண்ணாம நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா அது பிழையா?

அது வேற இது வேற தாரகா!

சரி விடுமப்பா! முடிஞ்சு போனதைப் பற்றிப்பேசி என்ன ஆகப்போறது. வாரும் சுரேஸ் போகலாம். ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணல் துகள்களை தட்டி விட்டுக் கொண்டே எழுந்தான் சுரேஸ்.

சே! பழைய நினைவுகளும் இது போல சிம்பிளா விழுந்திட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.

சாந்தியுடனான காதல் நினைவுகள் வந்து வதைத்தன!

அவனுக்குப் பிடித்த கவிதைகளும், அவளுக்குப் பிடித்த பாடல்கள் இருவருக்கும் பிடித்த பாரதியும் அவர்களுக்குப் பிடித்துப் போயினர்.

உனக்கு மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?

ஹ்ம்ம்ம்! உனக்குப் பிடிச்சிருக்கா?

அதனால தான் கேட்கறேன்!.....(எண்ணக்குதிரைகள் அதி வேகமாய் ஓடின)

ஹேய்! சுரேஸ் என்னாச்சு! என்ன செய்திட்டு இருக்கிறீங்க! காரில் ஏறி இன்னமும் ஸ்டார்ட் பண்ணாமல் அமர்ந்திருந்த தன்னை தாரகா உலுக்கிய பின் தான் நிஜவுலகிற்கு வந்தான் சுரேஸ்.

ஒண்டுமில்லை தாரகா!

என்ன்! பீலிங்கா??

சேச்சே! நான் அதெல்லாம் மறந்தாச்சு!

ஒரு சுபதினத்தில் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. காதல் தோல்விக்குப் பின் அவர்கள் இருவருக்கும் பிடித்தவை சுரேஸ் ஒதுக்கியே வைத்திருந்தான். சாந்தியை மறந்து நாட்களாகி விட்டிருந்தன. சாந்தியின் நினைவுகள் இப்பொழுது வருவதில்லை. அவர்களின் வாழ்க்கை வசந்தமாகத்தான் போனது! மழைக்காலம் வரும் வரை... சில்லென்று அடித்த காற்று எங்கோ பூத்திருந்த மல்லிகைப் பூ வாசனையைக் கொண்டு வந்து சேர்த்தது. சாந்தியையும் சேர்த்துத்தான். சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும் நுகராமலே உணரும்படி!

கதையை ரைப் பண்ணிட்டு அதை ஏன் சேவ் பண்ணாம விட்டனீங்கள்? முதல் ரைப் பண்ணின மாதிரி அவ்வளவு கற்பனையும் திரும்ப அப்பிடியே வருமா?

ம்ம் வராது தான் நான் சும்ம ஒரு சின்ன கதை தான் எழுதினான் அது போட்டுது இப்ப வேற கதை போட்டு இருக்கிறன் :rolleyes:

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு ரசி அக்கா அதுவும் அந்தக் கடைசி வரி "சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும் நுகராமலே உணரும்படி". சும்மா அது அழிஞ்ச உடனே அடுத்த கதை ரெடி...எப்பிடிங்கோh?

Link to comment
Share on other sites

சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும் நுகராமலே உணரும்படி!

யதார்த்தத்தை சொல்லுற கதை அக்கா, நல்லா இருக்கு..இன்னும் தொடர்ந்து எழுதுங்கோ.

கதை நல்லாயிருக்கு ரசி அக்கா அதுவும் அந்தக் கடைசி வரி "சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும் நுகராமலே உணரும்படி". சும்மா அது அழிஞ்ச உடனே அடுத்த கதை ரெடி...எப்பிடிங்கோh?

ஏற்கனவே எழுதி வைச்ச கதையாக்கும் சினேகிதி.. B)

Link to comment
Share on other sites

ரசிகை அக்கா, கதை நல்லா இருக்குது.

"பழைய நினைவுகளும் இது போல சிம்பிளா விழுந்திட்டா எவ்வளவு நல்லா இருக்கும்."

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் .

Link to comment
Share on other sites

ஒரு சுபதினத்தில் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. காதல் தோல்விக்குப் பின் அவர்கள் இருவருக்கும் பிடித்தவை சுரேஸ் ஒதுக்கியே வைத்திருந்தான். சாந்தியை மறந்து நாட்களாகி விட்டிருந்தன. சாந்தியின் நினைவுகள் இப்பொழுது வருவதில்லை. அவர்களின் வாழ்க்கை வசந்தமாகத்தான் போனது மழைக்காலம் வரும் வரை... சில்லென்று அடித்த காற்று எங்கோ பூத்திருந்த மல்லிகைப் பூ வாசனையைக் கொண்டு வந்து சேர்த்தது. சாந்தியையும் சேர்த்துத்தான். சில வாசனைகள் மனதோடு ஒட்டியே இருக்கும் நுகராமலே உணரும்படி!

கதை இந்தளவும் தானா இல்லை தொடருமா??? :rolleyes: எனக்கு பாக்க இன்னும் தொடரும் போல இருக்கே......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.