Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளையும் பயிர்...

லா சப்பலிலிருந்து  கடைக்கு வருவதற்காக  Bus க்காக காத்திருந்தேன்.

நான் எடுக்கவேண்டிய Bus வந்து பயணிகள் ஏறக்கூடியவாறு வந்து திரும்பியது

அம்மா

பாருங்கள்

முன் சில்லுகள் திரும்ப மட்டுமே

பின் சில்லுகள் தான் Bus யை தள்ளும் என்று ஒரு சிறு குரல் கேட்டது

ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தேன்.

சொன்னவருக்கு ஆகக்கூடியது  6 வயதிருக்கலாம்.

அவரது தாயார் இவருடன் இன்னும் ஒரு ஆண்பிள்ளை மற்றும் தள்ளுவண்டியில் ஒரு பெண்பிள்ளை

அவர்களுக்கு முறையே நாலு மற்றும் 2 வயதிருக்கலாம்.

எனக்கே  பல வண்டிகளை ஓட்டியும் பல காலம்வரை தெரியாத இந்த விடயத்தை இந்த வயதில் புரிய ஆரம்பித்திருக்கும் அவனை

வாழ்த்தவேண்டும் என்று நினைத்தேன். அவனது இந்த திறமை  சார்ந்த கல்வியை ஊட்டுங்கள் என சொல்லவேண்டும் என விளைந்தேன்.

அறிமுகமில்லாதவர்களோடு பேசிப்பழக்கமில்லாத தன்மை தாமதப்படுத்திவிட

அவர்கள் தமது தரிப்பிடம் வந்தவுடன் இறங்கிச்சென்று விட்டனர்.

ஆனால் அவனை நான் மறவேன்.

ஒரு நாள் பெரிய ஆளாக வருவான்.

சந்திப்பேன்.

அன்று இந்த பதிவு சாட்சி சொல்லட்டும்....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் அவதானம்....உங்கள் வாக்குடன் எனது வாழ்த்தும்  உரித்தாகட்டும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களுக்கு... சிந்திக்கும் சக்தி அதிகம்.
அதனை, பெற்றோர் அறிந்து... அந்தத் துறைகளில் சிறிது ஊக்கம் கொடுத்தாலே போதும். 
அவர்கள் தங்கள் வாழ்க்கை மிகுதியை, பார்த்துக் கொள்வார்கள்.
பல பெற்றோர்... தாம் விரும்பியதை, பிள்ளைகளும் செய்ய வேண்டும் என நினைப்பதால், 
பிள்ளைகள் தமது துறையில் ஆர்வம் காட் டாமல் இருப்பதை, பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.